வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, January 07, 2010

வெறுக்கத்தக்கதே பார்பனியம் (பார்ப்பனப் ப்ரோகிதன் கூறும் மந்திரம் என்ன? ) - 2


மணமகளை பார்த்து பார்ப்பனப் ப்ரோகிதன் கூறும் மந்திரம் என்ன?

"ஸோம :ப்ரதமோ விவித
கந்தர்வோ விவித
உத்தர :த்ருதீயோ அக்ஞிஷ் டேபதி;
துரியஸ்தே மனுஷ்யஜா "

இதன் பொருள்

"சோமன் முதலில் இவளை அடைந்தான் பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான்.உன்னுடைய மூன்றாவது கணவன் அக்னி.உன்னுடைய நான்காவது கணவன் மனித சாதியில் பிறந்தவன்."

ப்ரோகித கல்யாணத்தில் ஒரு பெண் விபசாரியாகப்படுகிறாள் என்பதற்கு இது ஒன்று போதாதா.?ஆரிய கலாசாரத்தில் ஐவர்க்கும் தேவி அழியாத பத்தினி என்பது வேறு கதை!அதை தமிழர்கள் ஏற்கமுடியுமா ?

புரோகித பார்பான் சொல்லும் மந்திரத்துக்கு பொருளாவது புரியுமா?

பன்மொழிப் புலவர் நாவலர் சோமசுந்தர பாரதியார் பங்கேற்ற ஒரு புரோகித திருமணத்தில் புரோகித பார்ப்பன் கருமாதி மந்திரத்தை சொல்லி கொண்டிருக்க -அதே இடத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் குரல் கொடுத்து தடுத்த நிகழ்ச்சிகள் எல்லாம் உண்டே!

ஆரிய கலாசாரத்தில் பிரமம்,பிரசபதியம்,அருஷம்,தெய்வம்,காந்தர்வம்,ஆசுரம் இராக்கதம்,பைசாசம் என்று திருமணங்கள் எட்டு வகைப்படும்.

இந்த எண்வகை திருமணத்துப் பெண்ணுக்கென்று எந்தவித மான உரிமையும் கிடையாது .பெண் என்பவர் ஒரு ஜடப் பொருள்.

அதிலும் பைசாசம் மணம் என்பது ஒரு கன்னிகை தூங்கும் பொது ,மது மயக்கத்தால் மயங்கி இருக்கும்போதும்,அல்லது புத்தி சுவாதினம் இல்லாமலிருக்கும்போதும் ,அவளை மனச் சம்மதம் இல்லாமலே வலுவில் புணர்ச்சிசெய்வதுதானாம்.

(நூல்:வெறுக்கத்தக்க பிராமணியம்-கி.வீரமணி-பக்கம் 84)

யன்மேமாத பிப்ர மமாத

யச் சாரான்னுவ் ரதம்;
தன்மே ரேத பிதாவ்ருஞ்க்த
மாபூரன் யோப பதய தாம்:
பித்ருப்ய ஸ்வதா விப்ய: ஸ்வதா

இதன் பொருள்:-

"எனது தாய் பதிவிரதா தருமங்களை முழுவதுமாக அனுச்டிக்காமல் அதன் காரணமாக நான் பிறந்திருந்தால், இந்த நெருப்பில் நான் இடும் பிண்டத்திற்கு உரிமை கோரி எனது சொந்த தகப்பனார் வருவார். அப்படி அவர் வராமல் தடுத்து நான் எந்த தகபனாருக்கு இந்த சிரார்த்தத்தை செயிகிறேனோ அவர் அதாவது எந்த தாயின் கணவர் இந்த பிண்டத்தை பெறவேண்டும்"

தந்தைக்கு மகன் சிரார்த்தத்தை செய்யும்போது தாயை விபச்சாரி யாக்கும் இந்த பார்பனியம் வெறுக்கத்தக்கதா - இல்லையா? அறிவுடையோர் சிந்திக்கட்டும்.

வெறுக்கத்தக்கதே பார்பனியம்.....

1 comment:

அறம் அறிவு அடக்கம் said...

பகுத்து அறிதலே பகுத்தறிவு. மேல் கண்ட விளக்கம் பகுத்து அறிந்தது போல தோன்றவில்லை, எங்கிருந்தோ எடுத்த மூட விளக்கம் மறுபதிவு செய்தது போல் இருக்கிறது.

பதி துரீயஸ் தே மனுஷ்யஜா என்றால் "பதியான என்னை மனித ஜென்மத்தில் வந்தடைந்தாய்" என்று பொருள்.

முதல் மூன்றுக்கும் பதி என்ற வார்த்தை வரவில்லை மனித ஜென்மதத்திற்கு தான் பதி என்று மந்திரம் சொல்கிறது. "தெய்வங்கள் உன்னை காத்த பிறகு இனி கணவனான என் பொறுப்பு உன்னை காக்க."

அதுவும் அக்கினியிடம் இருந்து இராமன் சீதையை தூயவளாக பெறுவது போல அக்கினியிடம் இருந்து கணவன் மனைவியை தூயவளாக பெறுகிறான் என்ற பொருளும் புலப்படுகிறது.

பார்ப்பனர்களை வெறுப்பது தவறல்ல ஆனால் தானே பகுத்து அறியாமல் மூடமாக வெறுக்க கூடாது. உண்மையான பகுத்தறிவாளனுக்கு விருப்பு வெறுப்பு கிடையாதே நண்பரே.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]