வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, January 27, 2010

ஏன் நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக்கொள்கிறோம்....

நாம் யாருக்கும் மேலல்ல! யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் ஐயர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது, தாயையும் ஆகாது, சேரியும் கூடாது, அக்ரகாரமும் ஆகாது, யோக யாக புரட்டுகள், புரோகித பித்தலாட்டம், மனுக்கொடுமை வேண்டாம். மனிதர் யாவரும் சரி நிகர் சமமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படி தம்மை இந்து என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித்தான் மனம் இடம் தரும்? எப்படித்தான் துணியும்? இந்து மதம் என்பதிலே உள்ளக் கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதைமுறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப்பார்த்த பிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் இந்து என்று கூறிக்கொள்ள மனம் இடம் தரும்? பாம்பை எடுத்து படுக்கையில் விட்டுக்கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக் குப்பையை வீட்டுக்குள் கொண்டுபோய்ச் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களைவிட்டு மதிகெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீளாமார்க்கம் தேடுவதைவிட்டு, மாளவழி தேடிக் கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்ப மிடுவரா? கண் தெரியும்போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு, திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் இந்து மார்கத்தில் போய்ச் சேர இசைவாரா? வீரத்திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கிப் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!!


ஆள் நடமாட ஓர் உலகம். ஆவி உலவ மற்றோர் உலகம். இந்திரன் இருக்க ஓர் உலகம். நான் தங்க ஓர் உலகம், மேலே ஏழு, கீழே ஏழு, எனப் பதினான்கு உலகங்களாம். அதல, விதல,சுதல தராதல, இராசாதல, மகாதல பாதாளம் என ஏழாம்! பூலோக, மகாலோக, சத்யலோக என மேல் உலகம் ஏழாம்! இத்தனை உலகங்கள் இந்துவுக்கு உண்டாம், ஓட்டிலே, நமக்கு இவை வேண்டாம் நாமிருக்கும் நாடு நமக்கு இருந்தால் போதும் நான் செய்யும், புன் செய்யும், சாலையும், சோலையும், வாவியும், நதியும் மக்களுக்கு சுபீட்சமும் இருக்கட்டும். காமதேனும், கற்பக விருட்சமும் ரம்பையும், ஊர்வசியும் உலவும் உலாம் வேண்டாம். நாமிருக்கும் நாட்டிலே நாம் கீழ் ஜாதி என்ற கொடுமை இன்றி நாமார்க்கும் குடியல்லோம் என்று நாம் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்திலேதான், நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக்கொள்கிறோம்.

(ஆரிய மாயை - கட்டுரை - 26.04.1943)

10 comments:

ஸ்ரீநி said...

ஆரிய மாயை - தோழர் ஒரு நிறவேரியனின்[BRITISH] ஒரு பொய்யான கருத்தை இப்படி நம்புவது எப்படி பகுதரிவகும்
ஆரியர்கள் என்றும் திராவிடர்கள் என்றும் BRITISHன் பகுப்பு பொய் என்பதை பதிவுகள் நிருபிக்கப் பட்டுவிட்டன
அதை எப்படி நீங்கள் இன்னும் நம்புகிறீர்கள் என்று தெரிய வில்லை
இல்லையேல் அரசியலுக்காக வோடேக்காக திராவிடம் பெசுபவர்கில் நீங்களும் ஒருவரா ???

வேண்டுமானால் ஒரு சவால் முன்பு வந்த இலக்கியங்களில் எங்காவது ஆரியம் திராவிடம் என்ற பகுப்பு உள்ளதா என்று பாருங்கள் -
இல்லை //////

இதை முன்மொழிந்த MAX MULLER, தன வாழ்நாளில் ஒரு முறை கூட இந்தியா வந்ததே இல்லை
அவருக்கு சமக்ரிடத்தில் பரிச்சயம் உண்டு, அவர் தமிழை திராவிடம் என்று கூறுவதற்கு அவருக்கு அவரால் பகுக்கப் பெற்ற எந்த திராவிட மொழிகளும் தெரியாது.

ஸ்ரீநி said...

அடுத்து
இன்றய அறிவியல் hydrosphere, BIOSPEHERE, LITHOSPHERE, ATMOSPHERE, PEDOSPHERE, GEOSPEHERE, ANTHROSPHERE, CRYOSPHERE, NOOSPHERE, AESTHENOSHPERE ஆங்கிலத்தில் போதிக்க படும் ஆம் வகுப்புப் பாடம் ///////////
தொன்மையான நமது அறிவியல் - - - - -அதல, விதல,சுதல தராதல, இராசாதல, மகாதல பாதாளம்

ஸ்ரீநி said...

யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம் - -- தி . க கூட்டணியில் உள்ள தி. மு க ஆட்சியை கலைத்து விடுவோமா ??????

ஸ்ரீநி said...

சில கடமைகளை செய்தால்தான் நீங்கள் இஸ்லாமியர், சில முறைகளை செய்தால்தான் நீங்கள் கிறிஸ்தவன், எதையுமே செய்ய வேண்டாம்,- நீங்கள் ஹிந்து .
கோயிலுக்கு போ என்று வற்புறுத்தும் ஒரு முறை, தொழுதல் கட்டுப்பாடு என்று போதிக்கும் நம்பிக்கை ஹிந்து என்ற நம்பிக்கையில் இல்லை. மொகலாயப் படையெடுப்பிற்கு முன்னாள் இந்தியாவில் வழ்தவர்கள் பின்பற்றிய ஒரு நம்பிக்கைக்கு ஆங்கிலேயன் இட்ட பெயர் ஹிந்து. உண்மையில் ஹிந்து என்பது உங்களுடைய நம்பிக்கை, நல வாழ்வு , அதை சமயமாக ஏற்பது உங்கள் இஷ்டம் இல்லையேல் அதை இம்சிக்காமல் விட்டு விடுவதும் உங்கள் இஷ்டம்

ஸ்ரீநி said...

தோழர், மேலும் விவரங்களுக்கு -vikky66@gmail.com

Unknown said...

Dear third rate son of a bitch sangamithran,

it is good that bastards like you have confessed that you twits are not Hindus.Hindus can therefore feel elated that their community/society dosesnt include punks and swines like sangamithran and the late bearded twit.

ஸ்ரீநி said...

தோழர்
என்னுடைய பின்னூட்டங்கள் உங்களை எங்காவது காயப் படுத்தி இருந்தால் என்னை மன்னிக்க.
உங்களை காயப் படுத்தும் நோக்கில் நேற்று நான் அவற்றை எழுதவும் இல்லை.
ஒரு பகிரலாகத்தான் அவற்றை எழுதினேன்
முடிந்தால் மன்னியுங்கள்

ஸ்ரீநி said...

தோழர்
சின்னபெண் போன்றோர் பின்னூட்டங்களை பதியாதீர்கள் என்று வேண்டுகோள் வெயக்கிரேன்

ஸ்ரீநி said...

தோழர்
சின்னபெண் போன்றோர் பின்னூட்டங்களை பதியாதீர்கள் என்று வேண்டுகோள் வெயக்கிரேன்

நம்பி said...

//ஆரியர்கள் என்றும் திராவிடர்கள் என்றும் BRITISHன் பகுப்பு பொய் என்பதை பதிவுகள் நிருபிக்கப் பட்டுவிட்டன
அதை எப்படி நீங்கள் இன்னும் நம்புகிறீர்கள் என்று தெரிய வில்லை
இல்லையேல் அரசியலுக்காக வோடேக்காக திராவிடம் பெசுபவர்கில் நீங்களும் ஒருவரா ???//

அப்படி "பொய்" என்று ஒரு சாரார் கூறியதை மட்டும் ஆரியர்கள் கையில் தூக்கி கொண்டு நம்புவது ஏன்? ஆரியர் நுழைவுகளை ஆதாரத்துடன் நிருபித்ததை மட்டும் பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்? இதை பார்ப்பனர்கள் மட்டுமே திரும்ப திரும்ப வலியுறுத்துகின்றனர், அதுவும் ஏன்? என்று தெரியவில்லையா? என்ன? எல்லாமே நன்றாக தெரிகிறதே?

இன்னும் இந்த பார்ப்பன புராண பித்தலாட்டத்தையும், பார்ப்பன மனுதர்மத்தையும் திராவிடர்கள் மேல் திணிக்கலாம் என்று தானே?

இந்த இழிவுகள் திராவிட மக்களோடு சம்பந்தப்பட்டது, அவர் சம்மதத்தோடு தான் இவைகள் எல்லாம் உருவாக்கப்பட்டது என்று கூறிக்கொள்வதற்காகத்தானே!

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]