வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, January 20, 2010

முட்-டாள்கள் என்ன இந்தியாவுக்கு மட்-டுமே சொந்தமா, என்ன?

அவினாசி மற்றும் திருமுருகன்பூண்டி சிற்பக் கூடங்களில் உருவாக்கப்-பட்ட அர்த்த நாரீஸ்வரர் சிலை லண்டனுக்கும், பிரித்யங்கரா தேவி சிலை தூத்துக்குடிக்கும் அனுப்-பப்படுகின்றன என்றும், இந்தியாவில் தயாரிக்கப்-படும் சாமி சிலைகள் பல நாடுகளுக்கும் அனுப்பப்-படுகின்றன என்றும் படங்-களோடு சாங்கோபாங்க-மாக ஒரு நாளேடு செய்தி வெளியிட்டுக் கூத்தாடு-கிறது.


கடவுள் இல்லை, இல்லவேயில்லை என்று நீங்கள் என்னதான் கரடி-யாகக் கத்தினாலும் வெளி-நாடுகளுக்குக்கூட இங்கி-ருந்து கடவுள் சிலைகள் அனுப்பி வைக்கப்படுகின்-றன என்று குத்திக்காட்டு-வதுதான் இப்படி செய்தி-களை வெளியிடுவதன் நோக்கமாகும்.

தந்தை பெரியார் அவர்-கள் ஒருமுறை சொன்னது-போல, முட்-டாள்கள் என்ன இந்தியாவுக்கு மட்-டுமே சொந்தமா, என்ன?

ஒன்றை இந்த இடத்-தில் சுட்டிக்காட்டியாக-வேண்டும். இந்தச் சிலை-கள் கலைவண்ணத்துடன் உயரிய திறனுடன் உரு-வாக்கப்பட்டுள்ளன என்பது-தான் உண்மையே தவிர, இந்தச் சிலைகளுக்-குச் சக்தியுண்டு; இவை வெறும் உலோகங்கள் அல்ல _ கடவுள்கள்தான் என்று சத்தியம் செய்வார்-கள் பக்தக்கோடிகள்.

இதுபற்றி பிரபல சிற்பி கணபதி ஸ்தபதி என்ன கூறுகிறார் என்று பார்க்க-லாமா? குமரிமுனையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையை உருவாக்கிக் கொடுத்த மேதையவர் _ அத்தகையவரே என்ன சொல்லுகிறார்?

ஒரு கடவுள் சிலையை வடிவமைக்கிற-துன்னா சும்மாவா? யார் பார்த்திருக்காங்க கட வுளை? அவர் எப்படி யிருப்பார்னு யாருக்குத் தெரியும்? எங்களால் மட்-டும் எப்படி அத்தனைத் தத்ரூபமா ஒரு கல்லுல அவரைக் கொண்டுவர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனைப் பரவசப்-படறீங்க?

நீங்க அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டு வரணும்னா ஒரு கல்லு, சிலையா மாற-ணும். அந்தக் கல்லுக்கு உயிர் வரணும். அப்பத்-தான் கையைக் கூப்பி வணங்க முடியும். அந்த உயிரை யாரு கொடுக்-குறாங்க? நாங்கதானே? எங்ககிட்ட அப்படி என்ன-தான் வித்தை இருக்-குன்னு தெரிஞ்சுக்கவேண்-டாமா?

(கல்கி பேட்டி, 11.6.2006).

இதன் பொருள் என்ன?

ஒரு கல்லை சிலை-யாக்கி, அதில், தன்னிடம் உள்ள கலைத் திறனால் ஈர்ப்புக் கவர்ச்சியை ஏற்-படுத்துபவர் சிற்பி _ அவ்-வளவுதானே தவிர, அதில் கடவுள் சக்தியாவது _ வெங்காயமாவது! எதுவும் கிடையாது என்பது இப்-பொழுதாவது விளங்கு-கிறதா? இல்லையா?

ஆக, கடவுளை க(ல்)-பித்தவர் சிற்பிதானே _ மனிதன்தானே!

- மயிலாடன் விடுதலை (20.01.10)

8 comments:

ஸ்ரீநி said...

Periyaarukku silai irukkiradhey adhai patriya ungal karuthu yenna ?

smss said...

ஸ்ரீநி

அய்யா ஸ்ரீநி.............

சிலை என்பது ஞாபக மார்க்கமாகச் செய்வது........... அது வாழ்ந்த/ இயற் நிலையில் இருந்தவர்களை கெளரவிக்கும் வகையில் நிறுவுவது.........

"இது எப்படி இருக்கிறது என்றால்.........."விபச்சாரிகளைப் பற்றி பேசும் போது............. நீங்களும் இரவில் படுப்பது பற்றி கேட்பது" போல் உள்ளது.,,,......... ஒரு உதாரணத்திற்காக கூறினேன்..... தவறாக எடுத்து கொள்ளாதீர்கள்

சங்கமித்திரன் said...

நான் கொடுக்க வேண்டிய பதிலை அய்யா smss அவர்கள் கொடுத்துவிட்டார்கள். பகுத்தறிவோடு பார்த்தல் இந்த கேள்வியை அவர் முன் வைக்க மாட்டார். பாவம் சாமி சிலையில் பிழைப்பு நடத்தும் கூடத்திற்கு அதை பற்றி கூறினால் பொத்துக்கொண்டு வந்துவிடும்.

ஸ்ரீநி said...

sangamithran/SMSS,

kadantha nootrandin oru varalatru mukkiyathuvam vaindha oru mandiharukku silayendraal, yendro oru vazhdha ramanin ninaivaaga oru silai vaippadhu thavara raaman kadavul illai oru manidhan..

who is said...

காஞ்சிபுரம் கோவில் பார்ப்பான் தேவநாதனின் கருவறை திருவிளையாடல் பதிவிறக்கம் செய்து பார்த்து மகிழுங்கள்DOWNLOAD VIDEO
அல்லது இந்த இணைய முகவரியை பயன்படுத்துங்கள்

http://cid-5bb4a696064102c6.skydrive.live.com/self.aspx/.Public/$Temple.avi?lc=16393

yasir said...

சிலையைப் பற்றி பேசினால் உடனே பொத்துக் கொண்டு வந்துவிடுகிறது மதகும்பலுக்கு. சிலைக்கும் படத்திற்கும் மாலை மரியாதை செய்வதால் அது அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற அறிவுபூர்வமான(?) கேள்வியைக் கேட்டுவிடுவார்கள். எந்த சிலைகளும் படங்களும் மாலை மரியாதைகளை ஏற்றுக் கொள்ளாது என்பது சிறுபிள்ளைகளுக்கும் தெரிந்த ஒன்று. அந்தச் சிலையை வேண்டிக்கொண்டும்,நேர்ந்துக் கொண்டும்,சுற்றி வலம் வந்தும்,பலியிட்டும்,மொட்டைபோட்டும் காட்டுமிராண்டிகாலத்து ஓலமிட்டும் நடத்தப்படும் சடங்குகள் தான் மூட நம்பிக்கையாகும்.

"வெறும் சிலையானது அர்ச்சகரின் மந்திர பாவனை மற்றும் கிரியைகளாலேயே சிவமாக.. சங்கரனாக (இறைவனாக) மாற்றம் பெறுகிறது"

என உளறிவைத்திருப்பவர் நீர்வை.தி.மயூரகிரிசர்மா என்பவர் ' மகத்துவமிக்க மகா கும்பாபிசேகம்' என்ற தலைப்பில் தமிழ் ஹிந்துவில். எனவே சிலையை வைத்து வியாபாரம் செய்யும் குறிக்கோல் பெரியார் சிலைக்கு இல்லை என்பதை உணரவேண்டும்.

அப்படி இறைவனாக மாற்றம் பெற்ற சிலையைத்தானே கடத்திக் கொண்டு போகிறார்கள்! சங்கரனான சக்தி எங்கே போனது?

yasir said...

சிலையைப் பற்றி பேசினால் உடனே பொத்துக் கொண்டு வந்துவிடுகிறது மதகும்பலுக்கு. சிலைக்கும் படத்திற்கும் மாலை மரியாதை செய்வதால் அது அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற அறிவுபூர்வமான(?) கேள்வியைக் கேட்டுவிடுவார்கள். எந்த சிலைகளும் படங்களும் மாலை மரியாதைகளை ஏற்றுக் கொள்ளாது என்பது சிறுபிள்ளைகளுக்கும் தெரிந்த ஒன்று. அந்தச் சிலையை வேண்டிக்கொண்டும்,நேர்ந்துக் கொண்டும்,சுற்றி வலம் வந்தும்,பலியிட்டும்,மொட்டைபோட்டும் காட்டுமிராண்டிகாலத்து ஓலமிட்டும் நடத்தப்படும் சடங்குகள் தான் மூட நம்பிக்கையாகும்.

"வெறும் சிலையானது அர்ச்சகரின் மந்திர பாவனை மற்றும் கிரியைகளாலேயே சிவமாக.. சங்கரனாக (இறைவனாக) மாற்றம் பெறுகிறது"

என உளறிவைத்திருப்பவர் நீர்வை.தி.மயூரகிரிசர்மா என்பவர் ' மகத்துவமிக்க மகா கும்பாபிசேகம்' என்ற தலைப்பில் தமிழ் ஹிந்துவில். எனவே சிலையை வைத்து வியாபாரம் செய்யும் குறிக்கோல் பெரியார் சிலைக்கு இல்லை என்பதை உணரவேண்டும்.

அப்படி இறைவனாக மாற்றம் பெற்ற சிலையைத்தானே கடத்திக் கொண்டு போகிறார்கள்! சங்கரனான சக்தி எங்கே போனது?

நம்பி said...

//ஸ்ரீநி said...

sangamithran/SMSS,

kadantha nootrandin oru varalatru mukkiyathuvam vaindha oru mandiharukku silayendraal, yendro oru vazhdha ramanin ninaivaaga oru silai vaippadhu thavara raaman kadavul illai oru manidhan..//

கடந்த நூற்றாண்டு மனிதருக்கு ஆதாரங்கள் இருக்கும்பொழுது, "கடந்த நூற்றாண்டு" என்று நன்றாக தெளிவாக அனைவராலும் கூறப்படும் பொழுது, அவருக்கு சிலை வைப்பது ஒன்றும் தவறு இல்லையே!

இராமன் எந்த நூற்றாண்டு என்று கூறுவதற்கு கூட ஒரு ஆதாரமும் இல்லையே. இராமன் ஆண்டதாக கி.மு விலும் இல்லேயே! ஆதாரமே இல்லை என்று நீதிமன்றமே கைவிரித்து விட்டதே!

அசோகர் வாழ்ந்ததற்கான, ஆட்சி புரிந்ததற்கான மற்றும் புத்தர் வாழ்ந்ததற்கான சான்றுகள், ஆதாரங்கள் இருக்கும் பொழுது ராமன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எங்கே? வரலாற்று பாடப்புத்தகங்களில் இடம் பெற்வில்லையே!

நிஜத்துக்கு முக்கியத்துவமா? கற்பனைக்கு முக்கியத்துவமா? அந்த கற்பைனையை வைத்து மதக்கலவரம் பண்ணுவது, உயிர்களை கொல்வது மனிதநேயமாகுமா?

இராமனுக்கு ஏதாவது ஒரு ஆதாரமாவது இருக்கிறதா?

பெரியார் வாழந்ததற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கிறது. அவருடன் வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

இராமனுக்கு ஒன்னுமேயில்லையே! பார்ப்பன பித்தலாட்டம் தான் இருக்கிறது.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]