வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, December 31, 2009

கைபர் கணவாய் வழியாக வந்த பார்ப்பனர்களின் திராவிட வெறுப்பு...


தமிழ் செம்மொழிபற்றி முதலமைச்சர் கலைஞர் அவர்கள் முரசொலியில் அரிய தகவல்களைக் கொண்ட தொடர் கட்டுரை-களை எழுதி வருகிறார். ஆறாவது கட்டுரையில் ஒரு முக்கிய வரலாற்றுக் கருத்-தினைப் பதிவு செய்துள்-ளார்.


மத்திய ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரும்பங்கு வகித்து வந்த பா.ஜ.க.வில்; முரளி மனோகர்ஜோஷி போன்ற முன்னணித் தலை வர்கள் சிலர், திராவிட மொழிக் குடும்பத்தின்மீது இருந்த தீராத வெறுப்பின் காரணமாக, தமிழ் செம் மொழியென அறிவிக்கப் பட வேண்டுமெனும் கோரிக்கை தொடர்பாகக் கொண்டிருந்த எதிர் மறை யான அணுகுமுறையும், காட்டிய தாமதமும் தமிழ் செம்மொழி அறிவிப்பைத் தள்ளிப் போடச் செய்தன என்ற நிகழ்வினை வர லாறு கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது என்பதை மறுத்திட இயலாது (முர-சொலி, 30.12.2009) என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

தமிழை நீச்ச பாஷை என்று சொல்லும், கருதும் கூட்டத்தினைச் சேர்ந்த-வர்கள் இவர்கள். அதன் காரணமாகவே இந்த வெறுப்பும், எதிர்ப்பும்!

திராவிட மொழிக் குடும்-பத்தின் மீது இவர்களுக்கு இருந்த தீராத வெறுப்பு என்று கலைஞர் அவர்கள் குறிப்பிட்டது ஏதோ ஒரு கோப உணர்வாலோ, குற்றம் சாற்றவேண்டும் என்ற எண்ணத்தாலோ, மேம்-போக்காகவோ கூறப்பட்ட-தல்ல.

இது ஒரு துல்லியமான வரலாற்று ரீதியான கருத்து என்பதற்கு ஒரே ஒரு எடுத்-துக்காட்டை எடுத்துக்கூறி-னாலே போதுமானது.

உலகளாவிய திராவிட மொழியியற் பள்ளி (International School of Dravidian Linguistics) திருவனந்த-புரத்தில் இயங்கி வருகிறது. இதன் தோற்றுநர் திராவிட மொழிப் பேரறிஞரும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணை-வேந்தருமான டாக்டர் வி.அய். சுப்பிரமணியம் ஆவார். 2000_2001 ஆம் ஆண்டில் மனிதவள மேம்-பாட்டுத் துறை அமைச்சரும், பார்ப்பனருமான முரளி-மனோகர் ஜோஷியைச் (பா.ஜ.க.) சந்தித்து, திரா-விடியன் என்சைக்ளோ-பீடியா என்ற நூலை அன்பளிப்பாகத் தந்தார்.

நூலைப் பெற்றுக்-கொண்ட ஜோஷி, இந்-நூலின் பெயரில் உள்ள திர விடியன் என்ற சொல்லை நீக்கிவிடலா-மன்றோ என்றார்.

இதற்குப் பேராசிரியர் டாக்டர் வி.அய். சுப்பிர-மணியம் அவர்கள் அளித்த பதில்தான் மிகமிக மிக முக்கியமானதும், அவரின் அறிவு நாணயத்துக்கும், அஞ்சாமைக்கும் கட்டியம் கூறுவதும் ஆகும்.

ஜனகனமன நாட்டுப் பண்ணிலிருந்து திராவிடம் என்ற சொல்லை நீக்கி விடுங்கள்; நானும் திராவிடக் களஞ்சியம் என்பதிலிருந்து திராவிடம் என்ற பெயரை நீக்கிவிடுகிறேன் என்றாரே பார்க்கலாம். (ஞிலிகி ழிமீஷ், பிப்ரவரி 2003).

மானமிகு கலைஞர் அவர்கள் பா.ஜ.க.வினர்மீது வைத்த குற்றச்சாற்று மிகமிக மிகச் சரியானது என்பது இப்-பொழுது விளங்க வில்-லையா? -

- விடுதலை (31.12.09) மயிலாடன்

Wednesday, December 30, 2009

ஹி... ஹி.... ஹி..... தினமணி-யின் பூணூல் பாசம்

ஆந்திர மாநிலத்தின் ஆளுநராகயிருந்த என்.டி. திவாரி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக சட்டீஸ்கர் மாநில ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் நியமிக்கப்பட்-டுள்ளார்.


இதுபற்றி தினமணி (29.12.2009, பக்கம் 9) செய்-தியை எப்படி வெளியிடு-கிறது?

ஆந்திரத்தில் ஆளுந-ராகப் பதவி வகித்த நாரா-யண் திவாரி உடல்நலக் குறைவு காரணமாக திடீ ரென விலக நேர்ந்ததால் ஆந்திர மாநில ஆளுநர் பொறுப்பையும் சேர்த்து வகிக்குமாறு நரசிம்மன் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.

இதுதான் தினமணி வெளியிட்ட செய்தி.

எப்படி செய்தி? புரி-கிறதா? உடல்நலம் சரியில் லாமல் திவாரி பதவி விலக நேர்ந்ததாம்!

தினமணி என்னும் பூனை கண்களை மூடிக்-கொண்டு விட்டது. அதனால் அதன் கண்களுக்குப் பூலோகமே இருண்டு விட்டதாகத் தெரிகிறது. இந்தத் தினமணி பூனை தன் கண்களை மூடிக்கொண்டது மட்டுமல்ல, திறந்திருக்கும் பொதுமக்களின் கண்-களிலும், வாசகர்களின் கண்-களிலும்கூட மிளகாய்ப் பொடியைத் தூவப் பார்க்-கிறதே _ அதனை நினைத்-தால் விலா நோக சிரிப்பு-தான் வெடித்துக் கிளம்பு-கிறது!

86 வயது நிறைந்த என்.டி. திவாரியின் தேவ-நாதன் லீலைகள் விலாவாரி-யாக ஏடுகளில் வெளிவந்-துள்ளன; தொலைக்காட்சி-களும் ஒளிபரப்பி மானத்தை வாங்குகின்றன.

காஞ்சிபுரம் மச்சேஸ்-வரன் கோயில் அர்ச்சகன் தேவநாதனின் கோயில் கர்ப்பக் கிரக (ஃபுளு பிலிம்) சேட்டைகள் _ லீலைகள்-பற்றி பொதுமக்கள் காரித் துப்புகின்றனர். காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு வந்த தேவநாதனுக்கு தமிழினப் பெண்மணிகள் துடைப்பத்-தாலும், காலணிகளாலும் அபிஷேக ஆராதனைகள் (கோயில் அர்ச்சகர் அல்லவா!) செய்தனர்.

அந்தச் செய்தி ஆடி அடங்குவதற்குள் 86 வயதான ஒரு மாநில ஆளு-நரே மன்மத லீலைகளில் அன்றாடம் குளியலாடினார், நீச்சலடித்தார் என்ற செய்தி அங்கு இங்கு எனாதபடி எங்கு பார்த்தாலும் பிர-வாகித்துவிட்டது.

ஒரு புரோக்கர் ஒரு ஆளுநரை வெளியேற்றி-னார் என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்றே!

இவ்வளவு நடந்திருக்-கிறது _ ஊர் உலகமே சிரிக்-கிறது. ஆனால், தினமணி-யின் வைத்தியநாதய்யரோ உடல்நலக் குறைவு காரண-மாகப் பதவி விலக நேர்ந்தது என்று செய்தி வெளியிடு-கிறார்.

இதன்மூலம் தினமணி-யின் நம்பகத்தன்மையை இதுவரை தெரிந்து-கொள்-ளாதவர்களும் இப்பொழுது தெரிந்து கொண்டுவிட்டனர். தினமணி இப்படி ஏன் மூடி மறைக்கிறது?

காரணம் என்ன தெரி-யுமா? சம்பந்தப்பட்டவர் திவாரி என்பதுதான்.

ஹி... ஹி.... ஹி..... ஹி..... பூணூல் பாசம் எவ்வளவு பொல்லாதது பார்த்தீர்களா? -

விடுதலை (30.12.09) மயிலாடன்

Monday, December 28, 2009

"கடவுள் ஒரு பொய் நம்பிக்கை’’ (The God Delusion by Richard Dawkins)

“கடவுள் ஒரு பொய் நம்பிக்கை’’ (The God Delusion by Richard Dawkins) என்ற ஒரு அறி-வியல் பூர்வமான அற்புத நூலை ரிச்சர்டு டாகின்ஸ் என்ற ஆக்ஸ்போர்டு பல்-கலைக் கழகப் பேராசிரி-யர் மிகச் சிறப்பாக எழுதியிருக்கின்றார்.


இந்த நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளி-யிடுவதற்கு ரிச்சர்டு டாகின்ஸ் அவர்களிடமி-ருந்து நமது இயக்கத்தின் சார்பில் அதிகாரபூர்வ-மான அனுமதியைப் பெற்று இன்றைக்கு நாம் இந்த இந்திய பகுத்தறி-வாளர்கள் மாநாட்டில் வெளியிட்டிருக்கின்றோம். அதற்காக ரிச்சர்டு டாகின்ஸ் அவர்களுக்கு இந்த மாநாட்டு நிகழ்ச்-சியின்மூலமாக நமது முதலாவது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்-றோம்.

ரிச்சர்டு டாகின்ஸ் அவர்களுக்கும், நமக்கும் நேரடியாக அறிமுக-மில்லை. இந்த நூலுக்கு மொழி பெயர்ப்பு அனு-மதியை டாக்டர் இன்-னய்யா அவர்களது மூல-மாகத்தான் பெற்றோம். அவருக்கும் இந்த நிகழ்ச்சி-யின் மூலமாக நமது இயக்கத்தின் சார்பிலே நன்றியறிதலை தெரிவித்-துக் கொள்கின்றோம்.


ரிச்சர்டு டாகின்ஸ் ஆங்கில நூலை தமிழில் மொழி பெயர்த்த பேரா-சிரியர் கு.வெ.கி. ஆசான் அதேபோல அவருக்கு உதவியாக இருந்த கு.வெ.கி. ஆசான் அவர்களின் வாழ்விணையர் திருமதி சாரதா மணி அவர்க-ளுக்கும், அதேபோல மொழி பெயர்ப்புக்கு உதவிய சென்னை பல்-கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் அ.இளங்கோவன் அவர்களுக்கும் இந்த நேரத்திலே நமது நெஞ்-சம் நிறைந்த பாராட்டு-தல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் (கைதட்-டல்). இந்த நூலை ஏறத்-தாழ ஒன்றரை ஆண்டு-களில் மொழி பெயர்த்தி-ருக்கிறார்கள்.

நூலில் மட்டுமல்ல, கருத்திலும் கனம்

கடவுள் ஒரு பொய் நம்பிக்கை என்ற நூல் எடையில் கனமோடு இருப்பது மட்டுமல்ல, கருத்தாழத்திலும் கன-மான மிகச் சிறந்த அறி-வியல் நூல். ஏறத்தாழ 583 பக்கங்களைக் கொண்ட நூல்.

நாத்திகக் கருத்துகளின் தொகுப்பு இந்த நூல். இந்த நூலில் நாத்திகக் கருத்துகளை முக்கிய அறிஞர் பெருமக்கள் யார் யாரெல்லாம் சொல்லி-யிருக்கிறார்கள் என்பது இடம் பெற்றிருக்கிறது.

மேலும்  http://www.fixed-point.org/index.php/video/35-full-length/164-the-dawkins-lennox-debate

(ஆசிரியர் அவர்கள் வெளியிட்டு ஆற்றிய உரையின் ஒரு பகுதி)

‘சொர்க்கவாசல்’ ...சொர்க்-கத்துக்குப் போகவில்-லையா?


நாடு முழுவதும் 108 வைணவக் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்-கள் அனைத்திலும் இன்று இரவு கண் விழித்து ஏகாதசி விரதம் இருந்து விடியற்காலை சொர்க்க-வாசல் திறப்பு.


ஸ்ரீரங்கநாதன் ஸ்தோத்-திரத்தை 1008 முறை சொல்-பவர்களுக்கு இப்பிறவி-யில் எல்லா க்ஷேமங்-களும் பேஷாகக் கிடைக்-குமாம்.

மத்திய, மாநில அரசு-கள் எதற்காக தேவை-யில்லாமல் கோடிக்கணக்-கில் பணத்தைக் கொட்டி திட்டங்களை வகுக்கின்-றன என்று தெரிய-வில்லை. அய்ந்தாண்டு திட்டங்கள் எல்லாம் எதற்காக?

பேசாமல் இந்தியா-வின் குடியரசுத் தலை-வரும், பிரதமரும் இன்று இரவு ஸ்ரீரங்கநாதர் ஸ்தோத்திரத்தை 1008 முறை சொன்னால் தீர்ந்-தது கதை. 110 கோடி மக்-களுக்காக ஒரு இரவு கண் விழித்து இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்லவேண்டியதுதானே!

பக்தியின் பெயரால் மக்களை எந்த அளவுக்கு முடமாக்கி வைத்திருந்-தால் இந்த 2009 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற தெருப் புழுதிக் கூத்து-களை அரங்கேற்றுவார்-கள்?

இந்த ஸ்ரீரங்கநாதன் ஸ்தோத்திரத்தில் ஒரே ஒரு பாடல்; ஒரு பானை சோற்-றுக்கு ஒரு பருக்கை-தானே பதம்?

‘தேவேந்திரனின் அமர லோகத்தில் வாசம் செய்து தேவாமிர்தத்தைப் பருகும் பாக்கியம் எனக்கு வேண்-டாம் ஸ்ரீரங்கநாதா! உம் பட்டணத்து வீதியில் திரியும் நாயாகப் பிறக்-கும் பாக்கியம் எனக்குக் கொடுப்பீராக!’ எப்படிப்-பட்ட சுலோகம்!

அரிது அரிது மானிட-ராகப் பிறப்பது அரிது என்ற கருத்தையும் படித்-திருக்கிறோம். இப்படி நாயாகப் பிறக்கவேண்-டும் என்று கூறுவதையும் படிக்கும்பொழுது ஆறறி-வுள்ள ஒரு மனிதனின் புத்தியை எப்படியெல்லாம் நாசமாக்கி விட்டனர்! நாயாகப் பிறக்கவேண்டும் என்று ஒரு வேண்டு-கோளை ஒரு கல் சிலைக்கு முன் வைக்கும் அளவுக்கு அறிவின் தரத்தை பக்தி என்னும் ஆபாசக் குழியில் தள்ளி மிதித்து அசிங்கப்படுத்தி விட்டனரே!

பக்தி வந்தால் புத்தி போகும் என்ற தந்தை பெரியாரின் அறிவு மொழி, ஆகா, எவ்வளவு வானளாவியது! வையத்து அறிவுக் கண்ணின் ஊற்-றைத் திறக்கக் கூடியது!

கடைசியில் ஒன்று:

இன்று இரவு கண் விழித்து ஸ்ரீரங்கநாதர் ஸ்தோத்திரங்களை 1008 முறை ஓதி, விடியற்-காலையில் கோயிலில் டிக்கெட்டும் வாங்கிக் கொண்டு சொர்க்க வாசல் நுழைந்த பக்தர்களே, மீண்டும் வீட்டுக்குத் திரும்-புகிறீர்களே, சொர்க்-கத்துக்குப் போகவில்-லையா? (சாகவில்லையா) இது என்ன நியாயம்? வடலூர் இராமலிங்கனார் சொன்னதுபோல இது என்ன பிள்ளை விளை-யாட்டு!

யாரை ஏமாற்றுகிறீர்-கள்? அல்லது உங்க-ளையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளவில்லையா!

-விடுதலை (28.12.09) மயிலாடன்

Sunday, December 27, 2009

பார்ப்பனர்களுக்குப் போகும் பிச்சைக் காசை ஒழிப்பது பிராமணீயத்தை ஒழிப்பது ஆகாது



கும்பகோணத்து பிராமணனின் லஜ்ஜையும் சீற்றமும்


பிராமணீயத்தை ஒழிப்பது என்பதில் பார்ப்பனர்-களை ஒழிப்பது என்பதும் அவர்களுக்குப் போகும் பிச்சைக் காசையும் பிச்சைச் சாமான்களையும் நிறுத்து-வதும் என்பதே நமது கருத்து என்பதாகப் பலர் அபிப்பிராயப் படுவதாகக் கற்பனை செய்து கொண்டு பார்ப்பனரினால் வயிறு வளர்க்கும் சில பார்ப்பனரல்லாதாரும், சில பார்ப்பனரும், பார்ப்பனப் பத்திரிகைகளும், பிராமணன் என்கிற பார்ப்பன வருணாசிரம தர்ம பத்திரிகையும் கூச்சல் போடு-கின்றதுகள். பிராமணீயத்தை ஒழிப்பது என்பதை நாம் எந்தக் கருத்தின் பேரில் தொடங்கினோம் என்றால் நம்மைவிடப் பார்ப்பனன் உயர்ந்தவன் என்று எண்ணுவதும், அவன் பிழைப்புக்காக ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கும் வஞ்சக சாஸ்திரங்களையும், பொய்ச் சுருதிகளையும், புரட்டு ஆகமங்களையும் நம்புகிற மூடநம்பிக்கையையும் நமது மனதை விட்டு அகற்றுவதும், நம்மை விடப் பஞ்சமன் என்பவன் தாழ்ந்தவன் என்று எண்ணுவதை ஒழிப்பதுமாகிய தத்துவத்தைத்தான் முதன்மையாகக் கருதித் தொடங்கினோமேயல்லாமல் வேறல்ல.

உதாரணமாகப் பார்ப்பனனை நாம் ஏன் சுவாமி என்று கூப்பிட வேண்டும்? அவனைக் கண்டால் நாம்தான் முதலில் கும்பிட வேண்டும் என்கிற மனப்பான்மை நம்மிடத்தில் ஏன் இருக்க வேண்டும்? பார்ப்பனரும் ஏன் அதை எதிர்பார்க்க வேண்டும்? அவனுக்குப் பணம் கொடுப்பதும் சாப்பாடு போடுவதும் புண்ணியம் என்று ஏன் நாம் நினைக்க வேண்டும்? இது போன்ற பல உயர்வுகள் நம் போன்ற நம்மிலும் பல வழிகளில் தாழ்ந்தவான-யிருக்-கிறவனுக்கு பார்ப்பனனாகப் பிறந்தான் என்கிற காரணத்திற்காக ஏன் கொடுக்க வேண்டும்? அல்லா-மலும் நம்மை விட எந்த விதத்திலும் தாழ்மை-யில்லாதவனையும் நம்மிலும் பல விதத்தில் உயர்குணங்கள் கொண்டவனையும் போலிப் பிறவிக் காரணமாக நாம் ஏன் தாழ்ந்தவன் என்று சொல்ல வேண்டும்? அவன் நம்மைக் கும்பிடும்படி ஏன் நாம் எதிர்பார்க்க வேண்டும்? ஒருவனை நாம் தொட்டால் தோஷம் என்று நாம் ஏன்நினைக்க வேண்டும்? ஆகிய இப்பேர்ப்பட்டதான அஞ்-ஞானத்தை, மூட நம்பிக்கையை, கொடுமையை, அகம்பாவத்தை, கொலை பாதகத்தை, வஞ்கத் தத்துவத்தை ஒழிப்பதல்லாமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர் மேல் துவேஷங் கொண்டு செய்வதல்ல என்பதை உறுதியாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம். உதாரணமாக, பார்ப்பனனுக்குப் பிச்சைக் கொடுப்பதை நாம் வேண்டாமென்று சொல்ல வரவில்லை.


ஆனால் அவனுக்குக் கொடுப்பது புண்ணியம்; மோட்சத்திற்குக் கொடுக்கும் விலை என்கிற மூடநம்பிக்கையின் பேரில் கொடுத்து ஏமாறாதீர்கள் என்றுதான் சொல்லுகிறோம். கஞ்சிக்கில்லாமல் கஷ்டப்படுகிறான், பாடுபட்டுத் தின்பதற்கு யோக்கியதை இல்லா நிலையில் இருக்கிறான் என்று காணப்பட்டால் கண்டிப்பாய் அவனுக்கு உதவ வேண்டியது மனித தர்மமென்றே சொல்லுவோம். இந்நிலை பிராமணனிடம் கண்டாலும் சரி பஞ்சமனிடம் கண்டாலும் சரி உடனே உதவ வேண்டியது மனிதனின் ஆண்மையிலும் சுயமரியாதையிலும் பட்டதென்று கூடச் சொல்லுவோம். உப்பற்ற கஞ்சி கண்டு 8 நாள் ஆன மனிதன் தெருவில் உயிர் போகுந் தருவாயில் இருக்கும் போது பாயாசத்திற்கு குங்குமப்பூ போதவில்லை; அக்கார-வடிசிலுக்குப் பச்சைக் கற்பூரம் போதவில்லை என்ன சமாராதனை செய்து விட்டான் உலோபிப் பயல் என்று சொல்லுகிற காளைத் தடியர்களுக்கு சாப்பாடு போடுவது தர்மம் என்று எண்ணுகிற முட்டாள்தனத்தை விட வேண்டும் என்பதையும்தான் பிராமணீயத்தில் இருந்து விடுபட்டதென்று சொல்லுகிறோம்.

பிராமணன் என்கிற ஒரு பத்திரிகை பஞ்சாங்கப் பிராமணர்களை உண்மைப் பிராமணர்கள் தாழ்வாய்க் கருதுவதாவும் அவர்களுக்கு அவ்விழிதொழில் கூடாதென்றும், அவர்கள் வேறு தொழிலில் பிரவேசிக்க வேண்டுமெனறே தான் விரும்புவதாகவும் ஜம்பமாய் எழுதிவிட்டுப் பார்ப்பனர் இவ்விழிதொழில் செய்வதற்குப் பார்ப்பனரல்லாதார் காரணதராயிருக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளும் தமிழ்நாடு பத்திரிகை மீது சீறி விழுவதன் காரணம் இன்னதென்று தெரியவில்லை.

தவிர பார்ப்பனர்களில் இவ்விழி தொழிலில் ஜீவித்து வருபவர்கள் பதினாயிரத்தி லொருவர்கூட இல்லை என்றும், மற்றவர்கள் எல்லாம் கவுரவமான தொழிலில் வாழ்கிறார்கள் என்றும் ஜம்பம் பேசிக் கொள்ளுகிறது. ஆனால் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளோ ஏதோ பதினாயிரத்தில் ஒருவர்தான் உத்தியோகம், காப்பி ஓட்டல் முதலிய இழி தொழில்களில் இருக்கிறார்கள்; மற்றவர்கள் எல்லாம் மகா பரிசுத்த பிராமணீயத் தொழிலாகிய பஞ்சாங்கத் தொழிலில் இருக்கிறார்கள்; அவர்களிடத்தில் பார்ப்பனரல்லாதாருக்குத் துவேஷம் ஏன் இருக்க வேண்டும்? என்று பேசியிருக்கிறார். ஆதலால், உத்தமமான தொழில் இன்னது, இழி தொழில் இன்னது என்பவைகளிலேயே இவ்விரு பார்ப்பனர்-களுக்கும் வித்தியாசமிருப்பதால் நாம் இதில் கலந்து கொள்ள இஷ்டமில்லை. ஆனாலும் பதினாயிரத்தில் ஒருவன்தான் பஞ்சாங்கப் பிராமணன் என்பதை மாத்திரம் நாம் மறுக்கிறோம்.

இன்றைய தினம் உத்தியோக முறையில் உயர்ந்த ஸ்தானம் வகித்தும், மாதம் பதினாயிரம் இருபதினாயிரம் சம்பாதித்து வரும் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவரான ஸ்ரீமான்கள் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள், நரசிம்மேஸ்வர சர்மா அவர்கள், சி.பி.இராமசாமி அய்யர் அவர்கள், எ.சீனிவாசய்யங்கார் அவர்கள், டி.ஆர்.வெங்கிட்டராம சாஸ்திரிகள், மகாமகாகனம் பட்டம் பெற்ற ஸ்ரீனிவாச சாஸ்திரிகள், சர்.சிவசாமி அய்யர் அவர்கள் முதலியவர்கள் உட்பட அநேக சாதாரண உத்தியோகப் பிராமணர்களும், அரசியல் பிராமணர்களும், சன்னிதானங்கள், மடாதிபதிகள், மகந்துகள் என்று சொல்லத்தகுந்த பல வைதீகப் பிராமணர்களும், சிலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் சந்ததிகள், சிலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் பிள்ளைகள், பலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் சகோதரர்கள், பலர் உத்தியோகத்திலும். வைதீகத்திலும், பஞ்சாங்கத்திலுமாக மூன்றிலும் வயிறு வளர்க்கிறவர்கள் என்பதை மாத்திரம் தெரியப்படுத்திக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

பிராமணன் உண்மையிலேயே இந்த இழி தொழிலாகிய பஞ்சாங்கத் தொழிலைச் செய்வதிலிருந்தும் மூட நம்பிக்கையில் பார்ப்பன ரல்லாத மக்களை இறக்கி அவர்களால் வயிறு வளர்க்கும் தொழிலிலிருந்தும் பிராமணர்களைக் கடைத் தேற்றி பிராமணன் சொல்லுகிறபடி அவர்களை கவுரவமான வாழ்க்கையில் நடக்கும்படிச் செய்யும் பிரச்சாரத்திற்கு நம்மையும் அழைத்தால் நாமும் ஒத்துழைக்கத் தயாராயிருக்-கிறோம்.

நாம் பிராமணீயத்தை விட்டவர்கள் பெயர்-களைப் போட்டு வருவது போலவே பஞ்சாங்கத் தொழிலாகிய இழிதொழிலை விட்ட பிராமணர் பெயர்களையும், வாரா வாரம் பிராமணன் பத்திரிகை கொண்டு வெளி வருவானானால் நாம் பிராமணனை மிகுதியும் போற்றுவோம். அதில்லாமல் எழுத்தில் மாத்திரம் காட்டுவதில் என்ன பயன்? தாசிகளைக் கேட்டால்-கூட அவர்கள் தங்கள் தொழில் இழி தொழிலென்று ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால் இருட்டான-வுடன் தெருவில் நடப்பவனைப் பார்த்துக் கண்ணடிப்பதில் பின் வாங்குவதில்லை. வக்கீல்களும் அது போலவே தங்கள் தொழிலை இழி தொழில் என்று ஒப்புக் கொள்ளுகிறார்கள்.

ஆனால் தாசிகள் புருஷர்களைத் தேடுவது போல் வாயிற்படியிலும் ரயில்வே பிளாட்பாரத்திலும் காத்திருந்து கட்சிக்காரர்களைத் தேடுவதில் குறைவில்லை. அதுபோல பிராமணனும் பஞ்சாங்கத் தொழில் இழி தொழில் என்று வாயில் ஒப்புக் கொண்டதைப் பற்றி நாம் மிகுதியும் சந்தோஷப்பட முடியவில்லை. அது காரியத்தில் காட்டி தனது சமூகத்தாருக்கு அத்தொழில் இல்லாமல் செய்ய பிரயத்தனப் படுவானானால் அத்தொழிலின் பலனாய் மூட நம்பிக்கையில் ஈடுபட்டுச் சுயமரியாதை இன்றிக் கிடக்கும் கோடிக் கணக்கான பார்ப்பனரல்லாத மக்களுக்குச் சுயமரியாதைக்கு வழிகாட்டின பலன் பார்ப்பனர்களுக்குக் கிடைக்குமென்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- ‘குடிஅரசு’. கட்டுரை, 19.09.1926

எம்.என்.ராய் - எனது நாத்திக ஆசான் பெரியார்

எம்.என்.ராய் உலகப் புகழ் பெற்ற நாத்திகர், மேற்கு வங்கம் அம்பாலி-யாவில் 1887ஆம் ஆண்டு பிறந்தார். இயற் பெயர் நரேந்திரநாத். ஆனால் அதனைமாற்றி இவர் தமக்குச் சூட்டிக் கொண்ட பெயர் மனோ-பந்திரநாத் ராய் (எம்.என். ராய்) என்பதாகும்.


உலகைச் சுற்றியவர், லெனினின் நண்பர், அவ-ரோடு பல விஷயங்களில் எதிர்த்து விவாதம் புரிந்தவரும்கூட!

ஒரு முறை காந்தி-யாரைப் புரட்சியாளர் என்று லெனின் சொன்ன -போது அதனை மறுத்தார் ராய். “அரசியல் செய்கை-களிலே எவ்வளவு புரட்-சியாளராகத் தோன்றி-னாலும், பழைய சனாதன தருமங்களையும், சமய வழிபாடுகளையும் வர-வேற்பவர்கள் சமுதாயப் புரட்சிக்குத் தடைக் கற்-களாகவே இருக்க முடி-யும்” என்று முகத்துக்கு முகம் லெனினிடம் அடித்-துக் கூறிய அஞ்சா நெஞ்சர் - _ கருத்துத் தெளி-வின் சின்னம்.
 
1944 டிசம்பர் 27_ஆம் நாள் (இந்நாள்) அன்றைய கல்கத்தாவில் எம்.என்.-ராய் கூட்டிய ஜனநாயகக் கட்சி மாநாட்டிற்குத் தந்தை பெரியார் அவர்-களை அழைத்திருந்தார். அம்மாநாட்டிற்கு அண்ணா அவர்களையும் அழைத்-துக் கொண்டு போனார் தந்தை பெரியார்.

அந்த மாநாட்டில் எம்.என். ராய், தந்தை பெரியார்பற்றி கூறிய கருத்தும், கணிப்பும் மிக-வும் குறிப்பிடத்தக்கதாகும் எனது நாத்திக ஆசான்” பெரியார் என்று பெரு-மிதத்தோடு குறிப்பிட்டார்.

நாத்திகத்தைப்பற்றி அதிகமாகப் பேசி, எழுதி, நூல்கள் அதிகம் வெளி-யிட்டதில் பெரியார் போல உலகில் எவருமே கிடை-யாது என்று உண்மையின் அடிப்படையில் புகழாரம் சூட்டினார்.

“முழு மூடநம்பிக்-கையை மேலான ஆன்-மீக நிலை என்று விளம்-பரப்படுத்துவதை உதறித் தள்ளினாலன்றி இந்தியா இழிவும், பழியும், இன்ன-லும், அவல நிலையும் விட்டு மீளவே வழி-யில்லை நம்பிக்கைக்கு எதிராக நல்லறிவும், ஆணைக்கு எதிராகப் பகுத்தறிவும், பண்பும், பாரம்பரியப் பழக்கங்-களைத் தூக்கி எறியும் துணிவும் உருவானால் அல்லாது இந்தியாவில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவது அரிது’’ என்கிறார் எம்.-என்.ராய்.

இவை தந்தை பெரி-யாரின் கருத்துகளை உரித்து வைத்தது போல் இல்லையா?

- விடுதலை (27.12.09) மயிலாடன்

Saturday, December 26, 2009

“அறுத்தெறி பூணூலை’’ என்று அண்டம் நடுங்க ஆவேசக் குரல் கொடுக்க வேண்டாமா ஆரியப் புத்திரர்கள்?




பாரதீய ஜனதாவா? அது தேசியக் கட்சி! அதன் பார்வை ஏகப் பாரதம்! மாநிலங்கள் என்ற அமைப்பே கூடத் தேவையில்லை; கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை ஒரே தேசம்! பாகிஸ்தான் _ பர்மாவைக்கூட இணைத்து அகண்ட பாரதத்தை உருவாக்குவதுதான் அவர்-களின் கட்டுக்கடங்கா ஆர்வம்.


காந்தியாரைப் படுகொலை செய்ததால் தூக்கலிடப்பட்ட நாதுராம் கோட்சே-யின் அஸ்திகூட கலசத்தில் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருவது எதற்காக? பாகிஸ்தானை இந்தியாவோடு இணைத்த பிறகு அந்தப் பகுதி சிந்து நதியில் அதனைக் கரைப்பதற்குத்தானாம்.

இப்படியெல்லாம் பேசுவதற்கு இவர்களுக்கு அருகதையுண்டா? இந்தியா ஒரே நாடு _ ஏகப் பாரதம் என்று பிலாக்கணம் பாடும் இவர்கள் இந்திய மக்கள் அனைவரும் ஒரு தாயின் மக்கள் என்று நெஞ்சார நினைப்பவர்கள்தானா?

பாரதத் தாயின் புதல்வர்கள் என்றால் இங்கு எல்லோரும் சகோதர சகோதரிகள்தானே! சரிசமம்தானே! அப்படியென்றால் எங்கிருந்து வந்து குதித்தது வர்ணாசிரமம் என்னும் நாகம் _ ஜாதி என்னும் புற்றுநோய்?

பதிலளிக்க வேண்டாமா _ பாரதீய ஜனதாவையும் ஆர்.எஸ்.எஸையும் ஆட்டிப் படைக்கும் பார்ப்பனர்கள்?

“அறுத்தெறி பூணூலை’’ என்று அண்டம் நடுங்க ஆவேசக் குரல் கொடுக்க வேண்டாமா ஆரியப் புத்திரர்கள்?

சங்கராச்சாரி மடத்தில் ஒரு சாம்பானை நியமிப்போம் என்று சங்கநாதம் செய்ய வேண்டாமா?

இதிகாசங்களை எரி தீயில்! வாட்டிட எழுச்சி கொள்ள வேண்டியதுதானே? மனுதர்மம் ஒழிப்பு மாநாடு கூட்ட வேண்டியதுதானே?

ஏன் செய்யவில்லை? ஏன் எழுத-வில்லை?
ஏன் குரல் கொடுக்கவில்லை?

ஏடுகள் என்ன இவர்களுக்குப் பஞ்சமா? ஊடகங்களும் இவர்களின் கையிருப்புதானே? உண்டு இல்லை என்று ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதானே?

ஏன் தயக்கம்? ஏன் மயக்கம்? இன்னும் புரியவில்லையா? எல்லாம் வெளி வேடம்தான் _ ஊராரை ஏமாற்றத்தான். உள்ளுக்குள். ஓங்கி ஒலிக்கும் நாதம் எல்லாம் “நாங்கள் பிராமணாள்!’’ ‘‘நீங்கள் எல்லாம் சூத்திராள்!’’ என்பதுதான்.

ஆர்.எஸ்.எஸை உருவாக்கிய-வர்கள் அத்தனைப் பேரும் பார்ப்-பனர்களே! மூத்த குரு-நாதரான பாலகங்காதர திலகரே பச்சைப் பார்ப்பனர்தான்

பிளேக் நோயை ஒழிக்க அதற்கு மூலாதாரமான எலியை வேட்டையாடினால், எலி விநாயகரின் வாகனம் என்று கூறி எலியை ஒழித்த வெள்-ளைக்-கார அதிகாரிகளை சுட்டுக் கொல்லத் தூண்டிய சூட்சும மனிதர் அவர்.

இவ்வளவு எழுச்சிக்குப் பிறகும்கூட.. இன்றளவில்கூட நிலைமை என்ன?
பாரதீய ஜனதா கட்சியின் புதிய தலைவர் நிதின் கட்காரி யார்? ஒரு பார்ப்பனர்.
நாடாளுமன்றத்தில் மக்கள-வை-யின் தலைவர் சுஷ்மா சுவராஜ் யார்? ஒரு பார்ப்பனர்.
நாடாளுமன்றத்தின் மாநிலங்-களவைத் தலைவர் அருண்-ஜேட்லி யார்? ஒரு பார்ப்பனர்.
பாரதீய ஜனதா என்ற கட்சியின் மூன்று முக்கிய பதவி-களின் மும்மூர்த்திகள் மூவரும் பார்ப்பனர்களே!
ஆர்.எஸ்.எஸின் அகில இந்-தியத் தலைவர் மோகன் பகவத் யார்? ஒரு பார்ப்பனர்
விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலகத் தலைவர் அசோக் சிங்கால் யார்? ஒரு பார்ப்பனர்.
அகில இந்திய விசுவ ஹிந்து பரிஷத்தின் செயல் தலைவர் வேதாந்தம் யார்?

ஒரு பார்ப்பனர் இப்படி சகலமும் பார்ப்பனமயமாகித் திமிரிக் கொண்டிருக்கும் ஒரு கட்சிதான் பாரதீய ஜனதாவும் அதன் பரிவாரங்களும்.

இந்த அமைப்புகளில் உள்ள பார்ப்பனர் அல்லாதார் குறிப்பாக “சூத்திரர்கள்” “பஞ்சமர்கள்’ இப் பொழுது இவர்களை அடையாளம் காணாவிட்டால் வேறு எப்போது?

கிலுகிலுப்பையைக் குழந்தைகளி டம் காட்டி கழுத்துச் சங்கிலியைக் களவாடும் திருடர்களுக்கும், சிறுபான்மையினர்களைக் காட்டி, இந்தியாவில் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை வருணா சிரமத்தின் பெய ரால் ஆதிக்கம் செலுத்தும் இந்தப் பார்ப்பனர்களுக்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு?

பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் ஒன்றும் தந்தை பெரியாரின் சீடரல்லர் _ ‘வகுப்புத் துவேஷியும்’’ அல்லர். அவரே என்ன கூறுகிறார்? ‘‘முன்னாள் ஜனசங்கம் மற்றும் பா.ஜ.க.வின் அனைத்துக் கூட்டங் களையும் கருத்தரங்குகளையும், பேச்சுகளையும் கடந்த நாற்பதாண்டு காலமாக நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இந்த இந்துக்களின் கட்சி ஏன் எப்போதுமே தீண்டாமைபற்றிய கேள்வியை எழுப்பியதேயில்லை? இந்துக்களிடையே உள் ஜாதி நடைமுறை மிகவும் அடக்குமுறை நிறைந்த ஒன்றாக உள்ளது. பா.ஜ.க.வைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ். பார்ப் பனர்களின் அமைப்பு என்பது இதன் காரணங்களுள் ஒன்றாக இருக்க லாம்.’’

(‘டெக்கான் கிரானிக்கல்’ 4.2.2008)

உமாபாரதி யார்? பாரதீய ஜனதா கட்சியின் அனல் பறக்கும் பேச்சாளர் ஆயிற்றே! கட்சியின் இளைஞர் பிரிவின் செயலாளராகவும் இருந்தவர் ஆயிற்றே! பாபர் மசூதி இடிப்பில் துள்-ளிக் குதித்து ஆனந்த வெள்ளத்தில் நீந்தியவராயிற்றே!

பா.ஜ.க.,வைப்பற்றி அவரைவிட அதிகம் தெரிந்தவர் வேறு யாராவது இருக்க முடியுமா? அவர் என்ன சொல்லுகிறார்?

“பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தங்கள் கொள்கைகளில் நிலையற்றவர் களாக இருக்கிறார்கள். கட்சியின் தலைமை மேல்ஜாதி பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்குள்ளேயே இருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த தலைவர்கள் கட்சியில் புறக்கணிக்கப்படுகிறார்கள். தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சரியாக வழங் கப்படவில்லை. வேறுபாட்டுக் கண்ணோட் டத்தோடு பார்ப்பனர் மற்றும் முன்னேறிய ஜாதியினருக்கே அதிக வாய்ப்புகள் தரப்படுகின்றன. இது மிகப் பெரிய சமூக அநீதியாகும். தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமா?’’

(பா.ஜ.க.வின் இளைஞர் பிரிவு செயலாளராக விருந்த உமாபாரதி மத்தியப் பிரதேசம் போபால் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி -_25.4.1996) இதற்கு என்ன பதில்?

கல்யாண்சிங் யார்?

பாரதீய ஜனதா கட்சி யின் சார்பில் உத்தரப்பிரதேச மாநில முதல் அமைச்சராக யிருந்தவர், பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அம்மாநில முதல் அமைச் சரும் அவர்தான். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கள் பட்டியலிலும் இடம் பெற்றவர். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

அவர் என்ன சொல்லுகிறார்?

‘‘பாபர் மசூதிக்கு ஒன்றும் ஆகாது என என்னிடம் பா.ஜ.க., தலைவர்கள் தெரி வித்தனர். அயோத்தியில் அடையாள கரசேவை மட்டுமே செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள். இருவர் எழுத்துப் பூர்வ மாகத் தெரிவித்தனர்.

அவர்களது வாக்குறுதியை நம்பியே மசூதி பாதுகாக்கப்படும் என நானும் உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி அளித் தேன். நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால் என்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்க பா.ஜ.க., தலைவர்கள் இந்த விஷயத்தில் சதி செய்தனர் என்றே தோன்றுகிறது’’

(‘தினமணி’ 3.5.2009)

இதற்கு என்ன பதில்?

பங்காரு லட்சுமணன் யார்?

பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலை-வ-ராக கொண்டு வரப்-பட்ட தாழ்த்-தப்-பட்ட சமூ-கத்தைச் சேர்ந்-தவர் அதுகூட பா.ஜ.க. என்பது பார்ப்பனர் கட்சி என்ற முத்திரை விழுந்-துள்ளதே _ அதைத் திசை திருப்புவ-தற்கான _ ஒரு தற்காலிக ஏற்பாடுதான் _ அவரை வெளியேற்றிய விதமும் அத்தன்-மையைச் சேர்ந்ததுதான் _ அவர் ஒரு முறை (1.4.2002) சொன்ன கருத்து மிகவும் முக்கியமானது.

“அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் பி.ஜே.பி. மரண அடி வாங்கியதற்குக் காரணம் _ தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்-பட்டவர்கள், சிறுபான்மையினர்-களைக் கட்சி அலட்சியப்படுத்தியது-தான்’’ என்று கூறினாரே _ இதற்கு என்ன பதில்?

கிருபாநிதி யார்?

தமிழ்நாட்டு மண்ணில் தந்தை பெரியார் ஊன்றியிருக்கும் உணர்-வின் அலைகளிலிருந்து தப்பிக்க, பா.ஜக.. என்ன செய்தது? ஒரு தாழ்த்-தப்பட்டவரை தமிழகத் தலைவராக நியமித்தது. அவர்தான் டாக்டர் கிருபாநிதி.

அவரின் கண்ணீர்ப் பேட்டி இதோ:

“தேசிய கவுன்சில் கூட்டம் இந்தூரில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காகச் சென்றேன். இல. கணேசனும் வந்திருந்தார். கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, நான் தங்கியிருந்த தாஜ் ரெசிடென்-சியல் ஹோட்டலுக்குக் கிளம்ப வேண்டும். காருக்காக போர்டிகோ அருகில் காத்திருந்தேன்.

அப்போது அங்கு இல. கணேசன் அவசரமாக வந்தார். ‘நீ என்ன பெரிய ஆளா? உன்னை ஒழிச்சுடுவேன்’ என்றெல்லாம் பேசியவர் ஜாதி ரீதியாகவும் என்னை இழிவாகப் பேசினார்.

நான் அவர்கிட்ட பொறுமையா பேசுங்கன்னு சொன்னேன். ஆனா அவர் எதையும் கேட்கிற நிலையில் இல்லை. நிதானம் இழந்து காணப்-பட்டார். யார்கிட்டப் பேசறோம், என்ன பேசறோம்னு உணருகிற நிலை-மையில் இல்லை. ஒரு கட்டத்துல என் கையைப் பிடிச்சு முறுக்கி அடிச்சுட்டார்.

கேள்வி: இல. கணேசன் உங்கள்மீது அவ்வளவு கோபமாவதற்கு என்ன காரணம்?

டாக்டர் கிருபாநிதி: என் பதவிக் காலம் முடியப் போகிறது. அதற்குமுன் கட்சி கணக்கு வழக்குகளை ஒப்படைக்கணும். அதனால் கணக்கு வழக்குகளை ஆராய்ந்தபோது பல இழுப்படிகள் நடந்திருப்பது புரிந்தது. மாநிலச் செயலாளராக இருந்த இல. கணேசன் தேசிய செயலாளராக ஆன பிறகும் மாநிலக் கட்சி நிதியைக் கையாண்டு கொண்டிருந்தார். இதை நான் தடுத்ததால்தான் ஆத்திரப்பட்டு என்னை அடிக்கும் அளவுக்குப் போய்விட்டார்.

கேள்வி: நீங்கள் தமிழகத் தலை-வராகப் பதவியேற்றதிலிருந்தே பலவித அவமானங்களை சந்தித்து வந்தீர்கள் அல்லவா?

டாக்டர் கிருபாநிதி: ஆமாம் _ தலை-வர் என்கிற முறையில் கட்சிப் பணிகளைக் கவனிக்க எனக்கு அடிப்படை வசதிகள்கூட செஞ்சுத்-தரலை ஃபேக்ஸ் மிஷினை நானே சொந்தமா வாங்கினேன். டைப் அடிக்கணும் என்றால் வெளியில் கொடுத்து அடிச்சுக்கிட்டேன். இப்படிக் கட்சிப் பணிகளுக்கு சொந்த பணத்தைச் செலவழித்தேன். கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்திலேயே (கமலாலயம்) ரங்கநாதன் மற்றும் ராஜசிம்மன் ஆகிய இருவரும்தான் ஆட்டிப் படைக்கிறார்கள்.

இவர்களை இயக்கும் சூத்திரதாரி இல. கணேசன் தான். கமலாலயத்துக்கு வரும் கட்சிக்காரர்கள் தலைவர் இருக்கிறாரா என்று கேட்டால் சரியான பதில்கூட சொல்ல மாட்-டார்கள். எவ்வளவோ அவமானங்கள்.

கேள்வி: உங்கள் கட்சியில் சாதீய உணர்வுகள் தலை விரித்து ஆடுகிறது என்று பலகாலமாக செய்திகள் வருகின்றன. நீங்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதால் தான் அவமானப்படுத்துகிறார்களா?

டாக்டர் கிருபாநிதி: (சற்று மவுனத்திற்குப்பிறகு) நடக்கிறதை எல்லாம் பார்க்கும்போது அப்படித்-தான் நினைக்க வேண்டியிருக்கு. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருத்தன் தலைமைப் பதவியில் இருக்கிறதை அவங்களால் ஜீரணிக்க முடியலை. (“தமிழா தமிழா’’ ஏப்ரல் 2003). இந்தத் தகவல்களை கட்சியின் அகில இந்தியத் தலைமைக்கும் டாக்-டர் கிருபாகரன் எழுதியிருப்ப-தாகவும் இதே பேட்டியில் வெளி-யாகியுள்ளது.

இதற்கு என்ன பதில்?

‘‘தமிழ்நாட்டில் கூட மிக வெளிப்-படையாக நடந்த ஒரு தகவல். அப்பொழுது மாநில பா.ஜ.க., தலை-வராக இருந்தவர் கே. நாராயணராவ். மாநில பா.ஜ.க., செயலாளராகவும், மாநில விவசாயி அணித் தலைவ-ராகவும் தேசியப் பொதுக்குழு உறுப்-பினராகவும் இருந்தவர் பொ. நந்த-குமார், கோவை மாவட்ட பா.ஜ.க., இளை-ஞரணி தலைவராகயிருந்தவர் ந. லட்சுமணகுமார் இருவரும் பா.ஜ.க.வை விட்டு விலகியபோது மாநிலத் தலைவர் நாராயணராவுக்-கும், அகில இந்திய பா.ஜ.க,. தலைவர் ஏ.பி. வாஜ்பேயியிக்கும் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விவரம் மிக முக்கியமானது. ‘‘தமிழக பாரதீய ஜனதா தொடர்ந்து மற்றொரு பிரா-மணர் சங்கமாக செயல்படுவதை எதிர்த்து வெளியேறுகிறோம்’’ என்று எழுதினார்களே _ இதற்கு என்ன பதில்? பாரதீய ஜனதா கட்சித் தலை-வர்-களின் பார்ப்பன மனப்பாங்கு எத்தகையது? தாழ்த்தப்பட்ட மக்கள்மீது அவர்களின் பார்வை எந்தத் தரத்தைச் சார்ந்தது?

முரளி மனோகர் ஜோஷி, பவுதி-கத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்-தானே _ அக்கட்சியின் தலைவராக அலங்கரித்தவர்தானே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தவர்தானே!

படிப்பும் பதவியும் வளர்ந்த அளவுக்குப் பார்ப்பனர்களின் மனப்-பாங்கு பக்குவப்பட்ட ஒன்றுதானா? வளர்ச்சியை நோக்கிப் பயணம் செய்வதுதானா?

ஒரு தகவல்: நாடாளுமன்ற மக்கள-வைத் தலைவர் தேர்தல், காங்கிர-சுக்கும், பா.ஜ.க.வுக்கும் தொடக்கத்தில் உடன்பாடு எட்டப்படாத நிலை; பா.ஜ.க., சார்பில் வேட்பாளர் நிறுத்-தப்-படுவார் என்ற அறிவிப்பும் வெளிவந்தது. இந்த நிலையில் முரளி மனோகர் ஜோஷி அளித்த பேட்டி ஒன்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்-டில் வெளிவந்தும் உள்ளது (11.7.1991)

Nobody can take the BJP as a pariah and then expect it to support you’’

“பாரதீய ஜனதாவை தங்கள் வசதிக்கேற்ப யாரும் பயன்படுத்திக் கொள்ள முடியாது. பா.ஜ.க.வை நீங்கள் ஒரு பறையனைப் போல் நடத்தக் கூடாது. இதைச் செய்து-விட்டு நாங்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது’’ என்று ‘மெத்தப் படித்த மேதாவி’ ஒருவர் -_ பேசுகிறார் என்-றால் அவர் படித்த படிப்பும்கூட அவ-ரின் பார்ப்பனத் திமிருக்கு முன் மண்-டியிடுகிறது என்றுதானே பொருள்!

ஜோஷியின் இந்தச் சொல் பிரயோகத்தை எதிர்த்து பல அமைப்புகள் குடியரசு தலைவருக்குத் தந்திகளைக்கூட அனுப்பின என்-பதும் மறக்காமல் சுட்டிக் காட்டப்-பட வேண்டிய ஒன்றாகும்.

இந்தப் பார்ப்பன ஜனதா (பா.ஜ.க.,) கட்சியில் பாதந்தாங்கிக் கிடக்கும் பஞ்சமர்களே விழிமின்!

அடியாள்களாக சேவகம் செய்யும் பிற்படுத்தப்பட்டோரே விழிமின்! விழிமின்!

-விடுதலை (26.12.09) ஞாயிறு மலர்

அய்யப்பன் கோயில் பஞ்சாமிர்தம்.....




அய்யப்பனும் தெய்வமா? மகர சோதியும் உண்மையா? என்ற துண் டறிக்கை வினியோகித்ததாகவும், அதைப் பெற்றுக் கொண்ட வக்கீல் நாகராசன் என்பவர் மனம் புண்பட்டு இதைப் பற்றிக் கேட்டதாகவும் அதில் தள்ளு முள்ளு ஏற்பட்டதாகவும், எனக்கெதிராக வழக்கொன்று பதிவு செய்தார். அந்த வழக்கு கடந்த மூன் றாண்டாக எந்தவித முன்னேற்றமும் இன்றி அப்படியே இருக்கிறது.


குற்றப் பத்திரிகை தரவோ, சாட்சி விசாரணையோ ஏதுமின்றி வழக்குத் தள்ளிப் போடப்பட்டுவருகிறது. வாய்தாவிற்கு வாதி பல நாட்கள் வருவதில்லை. அதனாலேயே வாய்தா மாற்றி வைக்கப்பட்டு, வருடங்கள் போய்க் கொண்டே இருக்கின்றன. இவ்வழக்கில் பிரதிக்கு தண்டனை கிடைக்காது, அவரை நீதிமன்றத்திற்கு அலைய விடுவதுதான் தண்டனை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவென் றால், துண்டறிக்கை வினியோகம் செய்ததாகச் சொல்லப்பட்ட நாளில், பகுத்தறிவாளர் கழக மாநாட்டிற்காக சென்னைக்கு நான் இரயிலில் சென்று கொண்டிருந்தேன்.

அய்யப்பப் பக்தரும் வக்கீலுமான ஒருவர் பொய் வழக்குப் போட்டுள் ளார். இதில் ஆச்சரியப்பட ஒன்று மில்லை. ஏனெனில் அவர் குமரி மாவட்ட இந்து முன்னணி பொறுப் பாளர்களில் ஒருவர்.

வாய்தாக்களுக்கு நீதிமன்றத்திற்கு அலைய வைப்பது தான் தண்டனை என அவர் எண்ணிக் கொண்டிருக் கிறார். ஆனால் நானோ வாய்தா நாள்களில் நீதிமன்ற வளாகத்தில், கருப்புச் சட்டைத் தோழர்களுடன் கொள்கை பரப்பும் துண்டறிக்கை வினியோகம், பத்திரிகை சந்தா சேர்த்தல், புத்தக விற்பனை போன் றவற்றை செய்து வருகிறோம். அவர் தண்டனை என்று எண்ணுவதைப் பயனுள்ளதாக மாற்றிவிடுகிறோம் வாழ்வியல் சிந்தனை பயின்று வரும் கழகத் தோழர்கள்.

சென்ற வாய்தாவிற்கு நீதிமன்ற அறையின் முன் நின்று கொண்டி ருந்தபோது எனக்குத் தெரிந்த அன்பர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். நீதிமன்றம் வருபவர்கள் வயதான வரானாலும், நோயாளியானாலும் நிற்கத்தான் வேண்டும். பெண்களெல் லாம் நிழல் உள்ள தரை, படிக்கட்டு களில் அமர்ந்திருப்பதைக் காண வருத்தமாயிருக்-கும்.

அன்பர், மிகவும் நல்ல மாதிரி, வம்பு தும்பு எதற்கும் செல்வதில்லை. அவருண்டு அவரது வியாபாரமுண்டு என்றிருப்பவர். அவரிடம் மெதுவாக, ‘என்ன இங்கு நிற்கிறீர்களே?’ என்று கேட்டேன். அவர், அய்யோ! அதை ஏன் கேட்கிறீர்கள்? என் கடையி லிருந்து மிட்டாய்களை, சுகாதாரத் துறையினர் எடுத்துச் சென்றனர். “சோதனைக்கு பின் அதில் செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்டுள்ளது என்று குறிப் பிடப்படவில்லை என வழக்குத் தொடர்ந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அலைந்து கொண்டி ருக்கிறேன். இது வியாபாரம் நன்கு நடைபெறுகிற நேரம். இங்கு காத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது என வருத்தப்பட்டார்.

மிட்டாய் கம்பெனிகளிலிருந்து வாங்கி, அய்ந்து அல்லது பத்து லாபத் திற்கு விற்கும் கடைக்காரர் மீது வழக் குத் தொடர்வது என்ன நியாயமோ தெரியவில்லை.

இது மாதிரி வழக்குகள் கோயில் பிரசாதத்திற்கு பொருந்தாது போலும். பல கோயில்களில் தின்பண்டங்கள் பிரசாதம் என்ற பெயரில் டின்களில் அடைத்து விற்கப்படுகின்றன. அவற் றில் எதுவுமே குறிப்பிடப்படுவ தில்லை. சுகாதாரத் துறையும் அதனை கண்டு கொள்வதில்லை. கடவுள் மீதுள்ள பக்தியினாலா? பயத்தி னாலா? என்பது தெரியவில்லை.

எனக்குத் தெரிந்தவர் ஒருவர் வங்கியில் பணி புரிந்து வருகிறார். அவர் சபரிமலைக்கு, உண்டியல். பணம் எண்ணுவதற்காக அனுப்பப் பட்டுள்ளார். அவருக்கு அங்கு ஒரு வாரம் பணி. அதை முடித்து விட்டு வரும்போது அய்யப்பன் பிரசாதம் வாங்கி வந்துள்ளார். அதில் ஒரு டப்பா எங்களுக்கும் தந்தார். அதில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, சரணம் அய்யப்பா, சபரிமலை தேவவஸ்வம் அரவணை பிரசாதம் 250 என டப்பாவின் இரு பக்கங் களிலும் அய்யப்பன் படத்துடன் கூடிய அச்சடித்த தாள் ஒட்டப்பட்டி ருந்தது. அந்த டப்பாவின் பக்கங்கள் மேல் கீழ் என டப்பாவைச் சுழற்றி சுழற்றி பார்த்தேன். ஒரு இடத்தில் கூட தயாரிக்கப்பட்ட நாளோ முடிவுறும் காலமோ, எண்களோ, சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களின் பெயர்களோ எதுவும் இல்லை, எந்த சுகாதாரத்துறை அதிகாரிக்கும் சோதிக்கத் தோன்ற வில்லையே.

பக்தர்களைப் பாதுகாக்க சுகா தாரத் துறை பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. காவல்துறை வேறு கண்ணும் கருத்துமாய் செயல்படுகிறது. ஆனால் தேவஸ்வம் போர்டு விற்பனை செய்யும் தின் பண்டங்கள் பற்றி யாரும் எண்ணிப் பார்க்க வில்லையே.

அய்யப்பப் பக்தர்களை நோய் நொடிகளிலிருந்தும், திருடர்களிட மிருந்தும் விபத்துக்களிலிருந்தும் காப்பாற்ற பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ள அரசு, உணவுப் பண்டங் கள் விற்பனையில் கவனம் செலுத்த வேண்டாமா? ஏற்கெனவே அய்யப் பன் பிரசாதத்தில் ஈ., கரப்பான் பூச்சி கள் கிடந்ததாக குற்றச்சாற்றுகள் உண்டே!

 -விடுதலை ஞாயிறு மலர் 26.12.09 ப.சங்கரநாராயணன் தலைவர், திராவிடர்கழகம்,
கன்னியாகுமரிமாவட்டம் அவர்கள் எழுதியது

இதுதான் அர்த்தமுள்ள இந்து மதம் என்று கதைப்பார்களோ!

பிகார் மாநிலம் பெகு-சாராய் மாவட்டத்தில் பச்-வாரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது பக்ருல் இஸ்லாம் என்பவர். இந்தக் கிராமம் முஸ்லிம்கள் அதி-கம் குடியிருக்கும் பகுதி-யாகும்.


இத்தகைய ஊரில் வாழும் இந்துக்கள் சிவன் கோயில் ஒன்றைக் கட்ட விரும்பினார்கள். இதற்காக நிலம் கொடுத்த பெரிய மனதுக்காரர்தான் முகம்-மது பக்ருல்.

இந்துக்கள் “கோயில் கட்டுவதற்கு நீ ஏன் நிலம் கொடுக்கவேண்டும்?’’ என்று முஸ்லிம்களும் கேட்கவில்லை.

இந்துக்களாகிய நாம் சிவன் கோயில் கட்டு-வதற்கு எதற்காக முஸ்-லிம் ஒருவரிடம் நிலம் கேட்க-வேண்டும் என்று அந்த ஊரைச் சேர்ந்த எந்த இந்துவும் போர்க்கொடி தூக்கவில்லை.

கடவுள் இருக்கிறதா? கோயில் தேவையா? என்பது வேறு பிரச்சினை.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடத்தில் மதத்-தின் காரணமாக ஏற்படும் மாச்சரியம் _ அதனால் ஏற்-படும் கலவரம். உயிரிழப்பு, சிறைவாசம் என்ற நடை-முறைக் கண்ணோட்டத்-தோடு இந்தப் பிரச்சினை-யைப் பார்த்தால் பச்வாரா கிராம மக்களைப் பாராட்-டத்தானே வேண்டும்? அதுவும் மதக் கலவரத்-தைத் தூண்டுவதற்காகவே சதா கத்தியைத் தீட்டிக் கொண்டு அலையும் சங் பரிவார்க் கும்பலின் வேட்-டைக்காடான வட மாநிலம் ஒன்றில் இந்த அணுகு-முறை என்கிறபோது தூரத்-தில் நாம் இருந்தாலும் ஒரு “சபாஷ்’’ போடத்-தானே வேண்டும் _ மனித-நேயத்தையும், சமத்துவத்-தையும் விரும்புகின்ற நாம்.

இந்து, முசுலிம் என்பது இரு வேறுபட்ட மதங்கள் _ அவை தோற்றுவிக்கப்-பட்டதும் வெவ்வேறு நாடு-களில் _ ஆனால், ஒரே இந்து மதத்தில் உள்ளவர்-களிடையே இங்கு என்ன வாழ்கிறது?

சைவ ஸ்தல கோயில்-களின் திருப்பணிகளுக்கு உதவி செய்வீர்களா என்ற ஒரு கேள்வியை ‘கல்கி’ இதழ் (11.4.1982) அகோ-பில மடத்து ஜீயரிடம் கேட்டது. அதற்கு ஜீயர் என்ன பதில் சொன்னார்? “நான் சிவன் கோயிலுக்-குச் செல்லமாட்டேன். ஏன்னு கேட்டா... ஸ்ரீமத் நாராயணன்தான் எல்லா தெய்வங்களுக்கும் மேற்-பட்ட தெய்வம். என்-னோட சித்தாந்தம் சிவ-னுக்கு நாராயணன் பாட்-டன். பிரம்மா, சிவன் எல்-லாம் தபஸ்பண்ணி தெய்-வத் தன்மைக்கு உயர்ந்த-வர்கள். ஆனால், நாராய-ணன் எப்பொழுதும் உள்-ளவர். பாக்கிப் பேருக்குப் பலன் கொடுக்கிறவர். அவரை வழிபடற நாங்கள் வேறு தெய்வத்தை வழி-படமாட்டோம். அப்படி வணங்கினால் புத்தி கெட்-டுப் போகும். அதனால் சிவன் கோயில் திருப்-பணிக்கு பணம் இருந்தா-லும் தரமாட்டோம்’’ என்று ஜீயர் கூறினாரே.

சிவன் கோயில் கட்ட முஸ்லிம்கள் நிலம் தரும் நிலை எங்கே? ஒரே இந்து மதத்தில் வைணவத் தலைவர் ஜீயர், சிவன் கோயில் திருப்பணிக்குப் பண உதவி செய்யமாட்-டோம் என்று கறாராகக் கூறும் நிலைமை எங்கே?

கேட்டால் இதுதான் அர்த்தமுள்ள இந்து மதம் என்று கதைப்பார்களோ!

- விடுதலை (26.12.09) மயிலாடன்

பெரியாரியம்! தத்துவமும் விளக்கமும்..



உண்மை - நேர்மை - நியாயம் - நீதி இவற்றுக்காக பகுத்தறிவுடன் தொடர் போராட்டம் நடத்திய பெரியார் எந்த வெறிதனத்திர்க்கும் ஒத்துப்போகதவராக இருந்தார். தமிழர்களின் மொழியை சீராக்குவதிலும், எளிமைப்படுதுவதிலும் காட்டிய அக்கறையில் அவர் தமிழை தெயிவமாக்கவில்லை. வளர்ச்சியடையாத, மாற்றமும் முன்னேற்றமும் அடையாத எதுவும் காட்டுமிரண்டிதனமானவையே என்பதுதான் அவரது தத்துவ அணுகுமுறை.


தமிழர்கள் என்பதாலேயே கரிகார்ச்சோழனும்,நரசிமபல்லவனும்,ராஜராஜ சோழனும் போற்றுவதர்க்குரியவர்களாக பெரியார் ஏற்றுகக் கொண்டதில்லை.

தமிழ் என்பதாலேயே தேவாரமும்,திருவாசகமும்,கந்தபுராணமும் அவருக்கு பெருமிதமாக படவில்லை, அவர்களாலும் அவைகளாலும் மனுதர்மம் தழைத்ததா,சமதர்மம் தழைத்ததா என்பதுதான் அவரது அளவுகோல். சமத்துவத்தை மறுக்காத சமநீதி சொன்ன திருக்குறளை ஏற்றுக்கொண்டதும் தமிழன் மீதான பற்றினால் அல்ல சமதர்மத்திர்க்காகதான்.

ஒப்பற்ற மனிதப் பற்றாளரான பெரியார் எப்போதும் பாதிக்கப்படவர்களுக்காக சிந்தித்தார்,செயல்பட்டார் போராடினார். போலித்தனம் ஏதுமின்றிப் போராடினார்.

ஆதிக்க ஆரியத்திற்கு எதிராக
பாதிக்கப்பட்ட திராவிடர்களுக்கான விடுதலை.

தன்னல பார்ப்பனியத்திற்கு எதிராக
பார்பனரல்லதொரின் விடுதலை.

தேவமொழி சமஸ்கிருதத்திற்கு எதிராக
மக்கள் மொழி தமிழுக்கான விடுதலை.

மடமை மதவாதத்தின் கொடுமைகளிலிருந்து
பகுத்தறிவின் மூலம் பாமரர்களுக்கு விடுதலை.

ஆணாதிக்க மரபுகளிலிருந்து
பெண் விடுதலை.

மூடநம்பிக்கயிளிருந்து பகுத்தறிவுக்கு விடுதலை.

வன்மைங்களிருந்தும் வெறிதனன்களிருந்தும் விடுதலை
(வன்முறையின் - பயங்கரவாதத்தின் விதையே வெறித்தனம் அல்லவா?)

இவ்வாறு தந்தை பெரியாரின் சிந்தனைகளுக்கும் நெடிய போராட்டங்களுக்கும் உணர்வாக,உயிரோட்டமாக இருப்பது அவரது விடுதலை தத்துவமே.

அது வெறும் அரசியல் விடுதலை தத்துவம் அல்ல. சமுக விடுதலை தத்துவமல்ல

அது மனவிடுதலை முதல் சமுக பொருளாதார அரசியல் விடுதலை என அனைத்தையும் தழுவிய முழுவிடுதலை தத்துவம்.

அத தத்துவத்தின் பன்முகப் பரிமாணங்களையும், பரிணாமங்களையும் விவாதிப்பதும்,ஆராய்வதும் ஆரோக்கியமான சமுக மாற்றங்களுக்கு உதவிடும்.இளந்தளைமுறையினருக்காகவும் வருங்கால சமுகத்திர்க்காகவும் பெரியாரியத்தை தத்துவப்படுத்திநாம் தரவேண்டும்

வாழ்க பெரியாரியம்!
(பெரியாரின் 131 பிறந்தநாள் ஆண்டுமலரிலிருந்து.....)

Friday, December 25, 2009

வெறுக்கத்தக்க பார்பனீயம்

சில பார்பனர்கள் மற்றும் பார்பனரள்ளதவர் சிலரே சொல்லுகிறார்கள், எந்த பார்ப்பானும் யாரையும் அடிமை படுத்தவில்லை . இல்லாத ஒன்றை கூறி உங்களை நீங்களே தாழ்த்தி கொள்கிறீர்கள். இதனை ஒரு பார்ப்பான் சொன்னால் அவன் வசதிக்காக சொல்லுகிறான் என்று விட்டு விடலாம். இதே ஒரு பார்பனரள்ளதவன் இந்த கூற்றை நம்பி ஏமாந்து விடக்கூடாது. பார்பான் தந்திரம் எப்போதும் அவர்கள் சுய இன நன்மை ஒன்றை பின்பற்றியே இருக்கும்.
நம்மை நாமே தாழ்த்தி கொள்ளகிறோம் என்பது உண்மையா இல்லை பார்பனியத்தை பின்பற்றுகிற பார்பான் நம்மை அடிமை படுத்துகிரான என்றால் பார்பனியம் தான் நம்மை தாழ்த்தி இந்த சமுகத்தில் ஒரு சூத்திர பட்டம் கட்டி அடிமையாகி வைத்துள்ளது.

இந்தியாவில் ஆதிக்க சக்திகளுக்கு சாதகமான தத்துவங்கள் ஆரிய-பிராமண வேதங்களை ஆதாரமாக கொண்டவை. அவற்றிலிருந்து உருவானவை தான் ஆரிய பார்பனியம். எனவே வேதன்களில்ருந்து உருவான தத்துவங்களும் சாத்திரங்களும்,நீதிகளும், பார்பனியதீர்க்கு சாதகமானவை. பார்பனீயத்தை நியாயபடுதவும்,நிலைபடுதவும்,மேம்படுத்தவும் உருவானவை. பார்பனரள்ளதொருக்கு பாதகமானவை, இழிவுபடுத்துபவை, இழிவுபடுத்துவதை நியாயபடுதுபவை. இதோ பார்பனியத்தின் மனுதர்மம் என்ன சொல்லுகிறது....

சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்

1 யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்
2 யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்டவன்
3 பிராமணனிடத்தில் பக்தியால் ஊழியன்ச் செயிகிறவன்
4 விபச்சாரி மகன்
5 விலைக்கு வங்க பட்டவன்
6 ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
7 தலைமுறை தலைமுறையாக ஊழியம் செயிகிறவன் (அத்.8 . சு.415)

பிராமணன் உண்டு மிகுந்த உணவு (எச்சில்),உடுத்தி கிழிந்த ஆடை, சாரமற்ற தானியம் (பதர்) இவைகளைப் பிராமணன், சூத்திரன் ஜீவனத்திற்கு கொடுக்க வேண்டும். (அத்.10. சு.125)

சூத்திரனை கூலி கொடுத்தோ , கொடமலோ பிராமணர் வேலை வாங்கலாம். பிராமணனுக்கு தொண்டு செய்யவே சூத்திரனை பிரம்மா படைத்திருக்கிறார் (அத்.8. சு.413)

சூத்திரன் பிராமணர்களை திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும் (அத்.8. சு.270)

சூத்திரன், பிராமணன் பெயர் சாதி இவைகளை சொல்லி திட்டினால் அவன் வாயில் பத்து அங்குல நீளமுள்ள இரும்பு கம்பியை காய்ச்சி எரிய எரிய வைக்க வேண்டும் (அத்.8 .சு.271)

சூத்திரன் தன் தொழிலை விட்டு உயர்குலத்தொனுடைய தொழிலை செயிதால் அவன் பொருள் முழுவதையும் பறித்துக்கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திடவேண்டும் (மனு அத்.10. சு.96)

இப்படி கடவுளின் பேரால் மதத்தின் பேரால் பார்பனர்கள் தங்களை உயர்த்திக்கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்து, அதனை நம்வர்களிடம் வேதம் சொல்லுது மனுதர்மம் சொல்லுது கீதை சொல்லுது என்று பார்பனிய பாம்பு விஷம் கக்குகிறது. இப்படி பட்ட பார்பனியம் என்ன விரும்ம்ப தக்கதா? சமுதாயத்துக்கு தேவையா? இப்பொழுது புரிகிறதா யார் பூணூல் போட்டுக்கொண்டு வருணாசிரம் பேசுகிறார்கள் என்று. தயவு செய்து சிந்தியுங்கள். இப்படிப்பட்ட பார்பனியம் வெறுக்கத்தக்கதே.

எனவே பார்பனீயத்தின் அடிபடையாக இருப்பது ஆன்ம தத்துவம் - பிறவி சுழற்சி தத்துவம். இன்னும் தொடரும் சாதி கொடுமைகளுக்கு ஆணிவேராக இருப்பவை வேதமும், வேதாந்தமும் ஆகும். இவை அனைத்தையும் பார்பனர்கள் நம்மிடத்தில் பரப்ப பயன்படுத்துவது கடவுளின் பேரால் மதத்தின் பேரால். எனவே பார்பனியம் விரட்ட பட்டாள் தானாகவே வேதம்,மனுதர்மம் எல்லாம் ஒழிந்து விடும். வெறுக்கத்தக்க இந்த பிராமணியத்தை (கடவுள்,மதம்) ஒழித்தால் தான் சூத்திர பட்டம் ஒழியும்.

Thursday, December 24, 2009

பகுத்தறிவு பகலவனுக்கு மறைவு உண்டா?


தந்தை பெரியாரின் நினைவு நாள் இன்று. அவர் இறந்து 36 வருடங்கள் ஆகியும் இன்னும் அவரின் கொள்கைக்கு எதிர்ப்புகள் எவலோவ வந்து கொண்டுதானிருக்கிறது. எனவே பெரியார் இறந்தும் நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார், அவரின் கொள்கை வழியாக எல்லா தமிழரின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பெரியார் சிந்தனைகள் முழுவதும் படித்து சுவைக்க ஏட்டில் எழுத பட்டவை மட்டும் அல்ல அவர் தான் சொன்ன சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்க பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல.

பெரியாரின் அரிய சிந்தனையில் உதித்த சில திட்டங்களைப் பார்ப்போம்.

சாதிமுறை அடியோடு களையப்பட வேண்டும். கோயில்கள் கூடாது. பொதுவாக பிராத்தனை மண்டபங்கள் கட்டலாம்.

பெற்றோர்கள் பெண்களை 21 வயதுவரை நன்கு படிக்க வைக்க வேண்டும். அந்தப் பெண் வேலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

பிறக்கின்ற குழந்தைகளை அரசே ஏற்றுக்கொண்டு அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

எல்லோரும் ஒரே மாதிரி ஆடை அணிய வேண்டும்.

அதிக மதிப்புள்ள தங்க நகைகளைப் பெண்கள் அணிவதை தடை செய்ய வேண்டும்.

அரசாங்க வேலை வாய்ப்புகிளல் பெண்களுக்கு (பார்ப்பன பெண்களும் அடங்குவர்...இதனை ஏன் சொல்லுகிறோம் என்றல் பார்ப்பன எதிரி பெரியார் என்று சொல்லி திரியும் அன்பர்களுக்கு) சம உரிமை வழங்க வேண்டும்.

கோயில் திருவிழாக்களை நிறுத்தி, சமூகவியல், அறிவியல், பொருளியல் கண்காட்சிகள் நடத்த வேண்டும்.

பெரியாரின் புரட்சிக் கருத்துகள் அன்று பலருக்கு எரிச்சலை அளித்தது. ஆனால், இன்று அவரது சிந்தனைகள் படிப்படியாக செயல் வடிவம் பெற்று வருகிறது என்பதையும் நாம் அறிவோம்.

மேலும் பெரியார் என்றவுடன் அவரது கடவுள் மறுப்புக் கொள்கைதான் நினைவுக்கு வரும். அதே போல் பெரியார் என்றவுடன் நமக்கு அவரது சிக்கனமும் நினைவுக்கு வரும். வர வேண்டும்.

பொதுவாழ்வில்…. பணிபுரிபவர்கள் அனைவரும் இதை (சிக்கனம்) எண்ணிப்பார்க்க வேண்டும். பொதுப் பணத்தை தண்ணீராகச் செலவழிப்பவர்கள் இன்று பெருகிவிட்டார்கள். பெரியார் சிக்கனக்காரர் மட்டும் அல்ல. வரவு செலவுக் கணக்கு எழுதி வருபவர். ஐந்து பைசா என்றாலும் கணக்கு எழுதிவிடுவார் பெரியார்.

பயணத்தின்போது விலை குறைந்த உணவுப் பண்டங்களைத்தான் வாங்கிச் சாப்பிடுவார்.

உடைகள்பற்றிக் கவலை கொள்ளமாட்டார். முடிவெட்டுவதோ, முகம்மழிப்பதோ அவருக்கு பிடிக்காது. நேரமும், காசும் வீணாகும் என்பார். எப்பொழுதும் தாடிதான். வெற்றிலைப்பாக்கு பழக்கம் கூடக் கிடையாது. சோப்பு, பவுடர் தொடவேமாட்டார். குளிப்பது கூட வார்ம ஒருமுறைதான். தன் உடல் நலம் குறித்து அக்கறையே கொள்ளமாட்டார்.

கழகக் கூட்டங்கள்பற்றிய “வால்போஸ்ட்”களை விடுதலை அலுவலகத்திலேயே அச்சடிப்பார். வண்ணத்தில் போஸ்டர்கள் அடிக்க சம்மதிக்கமாட்டார்.

அலுவலகத்திற்கு வரும் பார்சல் கள்ளிப் பெட்டிகளைக் கொண்டே மேஜை, நாற்காலிகள் செய்யச் சொல்வார்.

அலுவலகத்திற்கு சுண்ணாம்பு அடிப்பதைக்கூட குறைந்த கூலியில் செய்து முடித்து விடுவார்.

எடைக்கு எடை பெரியாருக்குப் பரிசுகள் வழங்குவார்கள். அதையெல்லாம் அவர் கட்சி நிதியில் சேர்ந்து விடுவார். அவருக்கு அளிக்கப்படும் கறுப்புத் துணிகளைத் தொண்டர்களுக்கு கொடுத்து விடுவார்.

அலுவலகத்திற்கு வரும் தபால் உறைகளை குப்பைத் தொட்டியில் போடமாட்டார். அலுவலகப் பையன்களைகொண்டு அவற்றை மீண்டும் பிரித்து ஒட்டி புதிய உரை தயார் செய்து விடுவார்.

இப்படி எல்லா வகையிலும் மிகவும் சிக்கனத்தை கடைப்பிடித்தவர் பெரியார். அதனால்தான் இன்று திராவிடர் கழகம் விழுதுகள் ஓடி மிகப் பெரிய ஆலமரமாக ஓங்கி வளர்ந்து நிற்கிறது.

பல கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள்… ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்…. என கல்விப் பணியில் கழகம் கடமை ஆற்ற முடிகிறது.

பின்தங்கிய மாணவர்களின் அறிவுக் கண்களை திறக்க பெரியாரின் சிக்கனமே உறுதுணையாயிற்று என்பதை நாம் உணரலாம்.

பெரியார் மிகுந்த கோபக்காரர். வாய்மையும், தூய்மையும் நமது இரு கண்கள் என போற்றினார். நேர்மையில்லாதவர்களைக் கண்டால் கடுமையாகக் கோபிப்பார். ஆனால், அதே சமயம் அடுத்தவர்களின் சுயமரியாதையை மிகவும் மதிப்பார்.

பண்பாட்டின் சிகரமாகத் திகழ்ந்த பெரியார் தனது இறுதி மூச்சுவரை ஓயெவுன்றித் தொண்டாற்றினார்.

பெரியாரின் புரட்சிகரமான போராட்டங்கள் தொடர்ந்தன.

26-1-70 இல் தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்; 22-1-71இல் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு; 30-9-73இல் கறுப்புச் சட்டை மாநாடு; என தொடர்ந்து மக்கள் விழிப்புணர்வு போராட்டங்களைப் பெரியார் நடத்தினார்.

18-11-72 முதல் 28-11-1973 வரை நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். சாதி ஒழிப்புப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இதற்கா மதுரையில் மாபெரும் மாநாட்டைக் கூட்டினார். பெரியாரின் உடல்நிலையும் மோசமாகி வந்தது. ஆனால், பெரியார் அவர்கள் தனது நோய்பற்றியோ உடல் பலவீனம் ஆவது குறித்தோ கடுகளவும் அஞ்சவில்லை.

சென்னையில் 19-12-1973 இல் தியாகராஜா நகரில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பெரியார் நீண்ட நேரம் சொற்பொழிவாற்றினார். அடுத்த நாள் பெரியாரின் உடல் நலம் மிகவும் நலிவடைந்தது. உடனடியாக வேலூர் கிறித்தவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலன் தரவில்லை.

தந்தை பெரியார் 24-12-1973 காலை ஏழரை மணி அளவில் மறைந்தார். மானிட சமுதாயம் சமத்துவமாக வாழ-தன்னையே அர்ப்பணித்த அந்தப் பகுத்தறிவு பகலவன் மறைந்தது.

பகலவனுக்கு மறைவு உண்டா?

“சிவந்த மேனி, தடித்த உடல், பெருந்த தொந்தி, நல்ல உயரம், வெளுத்த தலைமயிர், நரைத்த மீசை, நடுத்தரமான தாடி, திரண்டு நீண்ட மூக்கு, அகன்ற நெற்றி, உயர்ந்த மயிர் அடர்ந்த புருவங்கள், ஆழமான கண்கள், மெதுவான உதடுகள், செயற்கைப் பற்கள், ஒரு சாதாரண மூக்குக் கண்ணாடி.

இடுப்பில் எப்போதும் ஒரு நான்கு முழத்துணி. காலில் செருப்பு. முக்கால்கை வெள்ளச்சட்டை. சட்டைக்கு ‘மேல் ஐந்து முழப் போர்வை. காப்பி நிறக்கலர். கையில் எப்போதும் மொத்தமான தடி.

இவர்தான் பெரியார். தமிழரின் தலைவர் என்று பெரியாரை நம் மனக்கண்முன் படம் பிடித்துக்காட்டுவார் சாமி சிதம்பரனார்.

“வயதில் அறிவில் முதியோர் - நாட்டின்
வாய்மைப் போருக்கென்றும் இளையார்!
உயர் எண்ணங்கள் மலரும் சோலை!”

என்று பாடுவார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

தந்தை பெரியார் -
பகுத்தறிவுப் பெட்டகம்
 தந்தை பெரியார் -

மூடநம்பிக்கைகளை வேரோடு களைந்த சமூகச் சிந்தனையாளர்.
பெரியாரின் தத்துவங்களைப் பின்பற்றினால், சிறியார் எல்லாம் பெரியார் ஆவார்....

தொகுப்பு உதவி: தந்தை பெரியார் இணையத்தளம்

தாழ்த்தப்பட்டவர்களும் இந்துக்கள்தான்...

தந்தை பெரியாரின் தமிழ் மண்ணில்_- 21 ஆம் நூற்றாண்டில் 10 ஆண்டுகள் காலடி எடுத்து வைக்கப்-பட்ட இந்தக் கால கட்டத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களின் தெருக்களில் தேரோட்டம் நடத்தலாமா? நடத்தக்கூடாதா? என்ற கேள்வி எழுந்திருப்பது வெட்கப்-படத் தக்கதாகும்.


தாழ்த்தப்பட்டவர்கள் பொது வீதிகளில் நடக்கக்கூடாது, உணவு விடுதிகளில் நுழையக் கூடாது, பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது; பேருந்துகளில் பயணம் செய்யக்கூடாது; பள்ளிகளில் அமர்ந்து படிக்கக்கூடாது; கோயிலுக்குள் செல்லக்கூடாது என்கின்ற தடைகள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டு, சட்ட ரீதியாகவே இந்த உரிமைகள் எல்லாம் அனைவருக்கும் உண்டு என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. தந்தை பெரியாராலும், நமது இயக்கத்தாலும், கோயில் கருவறைக்குள் சென்று தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட அனைவருக்கும் அர்ச்சனை செய்ய உரிமை உண்டு என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதற்காகப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு, அனைத்து ஜாதி-யினருக்கும் அர்ச்சகர் உரிமை கிடைத்திட்ட ஒரு கால கட்டம் இது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பொட்டைக்காடு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பு வீதிகளில் கோயில் தேர் சென்றிட கோயில் நிருவாகிகள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்பது - எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றாகும். இதுவும் ஒரு வகையான தீண்டாமைக் கண்ணோட்டம் என்பதால், தடை செய்பவர்களைத் தீண்டாமை ஒழிப்புக் குற்றத்தின் கீழ் தண்டிக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது.

அந்த நிலையை எட்டுவதற்கு முன் மாவட்ட வருவாய் அதிகாரி இரு தரப்பிலும் பேசி ஒரு சுமுகமான சூழலை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் ஜாதி ஆணவக்காரர்களுக்கு, கோயில் நிருவாகிகளுக்கு உயர்நீதிமன்றம் வாய்ப்பு ஒன்றை தாராளமாகக் கொடுத்திருக்கிறது என்றே கருதவேண்டும். இந்த வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால் அவர்களுக்கும் நல்லது; - ஊரின் பொது அமைதிக்கும் உகந்தது.

வேறு சில ஊர்களில் இது போன்ற பிரச்-சினைகள் எழுந்ததுண்டு; பிறகு சமாதானமான முறையில் காரியங்கள் நடைபெற்றதும் உண்டு.

இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று அடிக்கடி அழைக்கும் இந்து முன்னணிக்காரர்களும், ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகளும் இந்த இடத்திற்கு வராமல் எங்கு போய் ஒளிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.

தாழ்த்தப்பட்டவர்களும் இந்துக்கள்தான். அவர்கள் குடியிருக்கும் பகுதியில் கண்டிப்பாகத் தேரோட்டம் நடைபெறவேண்டும் என்று குரல் கொடுக்க ஏன் முன்வரவில்லை? இல்லாவிட்டால் அவர்களுக்கு கைவந்த யாகங்களை நடத்தி, ஆண்டவன் அனைவருக்கும் நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்று இறைவனிடம் இறைஞ்சலாமே! அந்த வகையிலும் ஏன் அவர்கள் முயற்சிக்கவில்லை என்ற இரண்டாவது கேள்வியும் எழுகிறது.

இந்து மதம் 2010 பிறக்கும் தருணத்திலும் தன்னுடைய நஞ்சு உமிழ்தலை நிறுத்தவில்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

இதற்கு மேலும் மூல காரணத்தை இந்த இடத்தில் ஆராய்வது அவசியமாகும். கிராமங்களில் இன்றும் இரு பகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒன்று தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதி; இன்னொன்று மேல்-ஜாதி என்று கருதப்படுவோர் வாழும் பகுதியாகும். இந்தத் தனித்தனி இருப்பிடங்கள் என்ற நிலை மாற்றப்பட வேண்டும். இந்தத் தனித்தனி முறை என்பது பழைய சமூக அமைப்பை நிலை நிறுத்தும் அடையாளங்களாகும். இதில் இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால், சேரியில் வாழும் மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும், வேறு இடத்தில் வாழும் மக்கள் குடியானவர்கள் என்றும் அழைக்-கப்படுவதாகும். அப்படியென்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் குடி மக்கள் இல்லையா? எவ்வளவு ஆழ-மாக, பேதங்கள் என்ற காயங்கள் ஊடுருவியி-ருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

வேறு எப்பொழுதும் சிந்திக்க மறந்தாலும், தந்தை பெரியார் அவர்கள் நினைவு நாளான இன்று இது குறித்து சிந்திக்கவேண்டும். சேரிகளும் கூடாது; மேட்டுக் குடியிருப்புகளும் கூடாது. இரு கூறுப் பகுதிகள் கூடவே கூடாது.

இந்த அடையாளங்கள் மிச்சசொச்சமின்றி முற்றிலும் அழிக்கப்பட்டாக வேண்டும். சமநிலைக் குடியிருப்புகளை அரசே முன்னின்று உருவாக்க வேண்-டும். இந்த வகையில் தீர்வு காணப்படாத வரை பொட்டைக் கிராமங்கள் விழுந்து விழுந்து முளைத்துக் கொண்டேதானிருக்கும்.

மூல பலத்தை நோக்கிப் போர் புரிவதுதான் தந்தை பெரியார் முறை என்றார் அறிஞர் அண்ணா. அது இந்த நாளில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நல்ல சிந்தனையாகும்.

விடுதலை தலையங்கம் (24.12.2009)

Wednesday, December 23, 2009

சிவனைப் பூஜிப்-பதன் மூலம் கடன் தொல்லை நீங்கும்...

நாளிதழ்கள் வாரந்-தோறும் ஆன்மிகச் சிறப்பு இதழ்களைப் போட்டி போட்டுக்-கொண்டு வெளியிடுகின்-றன. பண்டிகைகள் வந்து-விட்டால் அவற்றின் பெய-ராலும் சிறப்பிதழ்கள் வந்துவிடும். புத்தாண்டு பிறக்கிறதா? உடனே “புத்-தாண்டுப் பலன்கள்’’ என்ற தலைப்பில் தலை-காட்டும்.


இதில் என்ன வேடிக்கை என்றால், ஆங்-கிலப் புத்-தாண்டுக்கும்கூட இது-போன்ற சிறப்பிதழ்கள்; ஆங்கிலப் புத்தாண்டுக்-கும், இந்து மத ராசி பலன்-களுக்கும் என்ன சம்பந்தம்?

சங்கராச்சாரியார்கள்கூட சொல்லிப் பார்த்தார்கள் ஆங்கிலப் புத்தாண்டுக்-காக கோயில் நடையைத் திறக்காதீர்கள்; இரவில் இந்து மதக் கோயில்-களைத் திறந்து வைப்பது, சாஸ்திர விரோதம் -_ ஆகம விரோதம் என்று அவர்கள் கத்திப் பார்த்து என்ன பிரயோசனம்?

கோயில் நடைகள் திறக்கப்பட்டன; பட்டர்-களுக்கும், பார்ப்பனர்-களுக்-கும் வருவாய்க் குவியல்; சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடுவார்-களா, என்ன?

ஆன்மிக இதழில் கை சரக்குகளை அவிழ்த்துக் கொட்டுபவர்கள் சர்வ ஜாக்-கிரதையாக சில வார்த்-தைகளைப் பயன்படுத்து-வதைக் கவனிக்கவேண்-டும்.

மக்கள் நம்பிக்கை; .... என்பது புராணம்; ..... என்பது அய்திகம்; .... என்பது புராணம் என்று கழுவும் மீனில் நழுவும் மீனாக வார்த்தைகளைக் கையாளுவார்கள்.

இவர்கள் எழுதுவதை நம்பி பக்தர்கள் கடை-பிடித்து காரியம் ஆகா-விட்டால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாமே _ அல்-லது ‘நீ வெளியிட்டதை நம்பித் தானே இந்தக் காரியத்தில் இறங்கினேன்; கடைசியில் காரியம் கெட்டுப் போய்விட்டதே’ என்று பக்தர்கள் சண்-டைக்கு வந்தால் என்ன செய்-வது? அதற்காகத்தான் இத்தகைய ஏமாற்று வார்த்தைகள்.

ஒரு மாலை ஏட்டின் புத்தாண்டு சிறப்பிதழில் ஒரு செய்தி:

கடன் வாங்கி திரும்-பக் கொடுக்க முடியாமல் தவிப்பவர்களுக்கென்றே தஞ்சை மாவட்டம் திருச்-சேறையில் சாரபரமேஸ்-வர் கோயில் உள்ளது. இவர் ரண ருண ஈஸ்வரர் என்று அழைக்கப்படு-கிறார். ரணம் என்றால் நோய், ருணம் என்றால் கடன் என்று பொருள்.

இந்த சிவனைப் பூஜிப்-பதன் மூலம் கடன் தொல்லை நீங்கும் என்-பது பக்தர்களின் நம்-பிக்கை.

இப்படியாக எழுது-கிறது அந்த இதழ்.

கடன் தொல்லை எப்படி நீங்கும்? கடன் கொடுத்தவன் கேட்கமாட்-டானா? அல்லது கடன் வாங்கியவன் திருப்பிச் செலுத்த அவன் பீரோவுக்-குள் நோட்டுக் கத்தை-களை கொண்டு வந்து சிவன் திணித்துவிட்டுப் போய்விடுவாரா? (சிவன், கள்ள நோட்டு அடிப்-பாரோ!).

இன்னொரு வகையில் பார்த்தால், துணிந்து கடனை வாங்கிக்கொண்டு, திருப்பிச் செலுத்த வேண்-டியதில்லை; சிவன் பார்த்-துக் கொள்வான் என்கிற மோசடி எண்ணத்தைத்-தானே இந்த ஆன்மிகம் கற்றுக் கொடுக்கிறது? மக்-களை மோசடி செய்யத் தூண்டும் இதுபோன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்படவேண்டாமா?

- விடுதலை (23.12.09) மயிலாடன்

Monday, December 21, 2009

திருமணத்தில் தேவாரம் ஒன்று பாடுவார்களா?


கேவலமான பழக்கங்களையும், அர்த்தமற்ற திருவிழக்களையும், பொருத்தமற்ற சடங்குகளையும் விட்டொழித்தால்தான், நாம் உண்மையிலேயே முன்னேறமுடியும். ஆகவேதான் சீர்திருத்த திருமணங்கள் நடப்பதின் மூலம் அறிவுப்பணி நன்கு வேரூன்றி நிலைத்துப் பரவ வழியிருக்கிறதென்று குறிப்பிடுகிறோம். சுயமரியாதைத் திருமணங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கத் தொடங்கிவிட்டால், நாட்டிலே பரவி கிடக்கும் மூடக் கொள்கைகளை தாமாகவே சீந்துவாரற்றுப் போய்விடுமே! . . . .


இந்தத் திருமணத்தில் தேவாரம் ஒன்று பாடுவார்களா? ஒரு திருவாசகமாவது பாடக் கூடாதா? என்று சிலர் கேட்டதாக நண்பர்கள் குறிப்பிட்டார்கள். இப்படிப்பட்ட திருமணங்களிலே அப்படிப்பட்ட பாடல்களைப் பாடத்தான் மாட்டோம்; பாடவும் கூடாது என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்துவிடுகிறேன். அந்தக் காலத்தில் ஊசி முனையில் நின்றும் ஒற்றைக் காலில் நின்றும் பற்பல விதமாக அகோரத் தவம் செய்த முனிவர்கள் அனைவரும் ஆண்டவனைப் பார்த்து எதைக் கேட்டார்கள்? மற்ற ஆழ்வார்களும் சரி, நாயன்மார்களும் சரி கடவுளிடம் எதைக் கோரினார்கள்.

மக்கள் வாழவேண்டும், உலகம் உருப்படவேண்டும், வறுமை ஒழியவேண்டும், உலகத்தில் உண்மை தழைக்கவேண்டும் என எந்த முனிவராவது எந்த பக்தனாவது, எந்த நாயன்மாராவது கேட்டிருக்கிறார்களா? இல்லையே! பொது நன்மைக்காகக் கடவுளை வரம்கேட்ட பக்தர்களை யாராவது காட்ட முடியுமா? ஒருவரும் கிடைக்கமாட்டார்கள்.

வைகுந்த பதவியும், சிவலோக வாசத்தையும் தங்களுக்காகக் கேட்ட அந்த முனிவர்களையும் அவர்கள் பாடிய பாடல்களையும், இந்தத் திருமணத்தில் அழைப்பதும், பாடுவதும் பொருத்தமற்றது.

இராமர் காலத்தில் இரயில் கிடையாது, ஆகவே ரயில் கூடாது என்று இந்த நாளில் தள்ளிவிட முடியுமா? அல்லது இராமரே ஏறாத ரயிலில் நாம் ஏறுவதா? என்று ரயிலில் ஏறாமல் எத்தனை இராமபக்தர்கள் இருக்கிறார்கள், இருக்க முடியும்! இராமர் காலத்தில் இல்லாத இரயிலில் ஏறித்தானே இராமேசுவரம் போகிறார்கள். அதைப் போலவே அரிச்சந்திரன் காலத்தில் ஆகாய பிமானம் இல்லையென்று ஆகாய விமானம் ஏறாமலா இருக்கிறார்கள். தர்மராசா காலத்தில் தபால்கார்டு இல்லை, தந்தி கிடையாது என்றா தள்ளிவிடுகிறார்கள், கிடையாதே!

எனவே அந்தக் காலம், அந்தக்காலம் என்று பேசுவதும் அந்தக்காலப் பழக்கங்கள் என்று கூறி அவைகளை அப்படியே பின்பற்றவேண்டும் என்று பிடிவாதம் செய்வதும், பொருத்தமற்றவைகள் என்பது நன்கு விளங்குகிறது.

எந்தக் காலத்துப் பழக்கமானாலும் சரி, அது இந்தக் காலத்துக்குப் பொருந்துகிறதா? வாழ்க்கைக்குத் தோயானதுதானா? அறிவுக்கு ஏற்றதா? என்றுதான் நாம் பார்த்துப பின்பற்றவேண்டுமே தவிர, அந்தக் காலப்பழக்கம் என்பதற்காகவும் கண்ணை மூடிக் கொண்டு எதையும் அர்த்தமற்றும் பொருத்தமில்லாமலும் பின்பற்றக் கூடாது.

(அறிஞர் அண்ணா - சுயமரியாதைத் திருமணம் ஏன்?)

மார்கழி மாதத்தில்..வைகுண்ட ஏகாதசி உற்சவம் ...


சிறீரங்கத்தில் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி என்கின்ற ஒரு உற்சவம் ஆண்டுதோறும் நடக்கிறது.


அதற்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் சென்று, உற்சவத்தில் கலந்து சொர்க்கவாசல் புகுந்து, மோகினி அவதாரத்தைக் கண்டு களித்து, தங்கள் பாவத்தைத் தொலைத்துவிட்டுத் திரும்புவது என்பது வெகுகாலமாய் நடந்து வரும் காரியமாகும். இந்த ஏகாதசி என்பது 15 நாள்களுக்கு ஒரு முறை வரும் நாளாகும்.

இப்படிப்பட்ட ஏகாதசி ஒரு ஆண்டில் மாதத்துக்கு 2 வீதம் 12 மாதங்களுக்கு வரும் 24 ஏகாதசிகளில் மார்-கழி மாதத்தில் வரும் இரண்டு ஏகாதசிகளில் ஒன்றுக்குப் பெயர் வைகுண்ட ஏகாதசி என்பது. இது வைண-வர்களுக்கு ஒரு முக்கிய நாள். அதாவது சைவர்-களுக்கு சிவராத்திரி வருவது போன்ற ஒரு நாள்.

இந்த ஏகாதசியை ஒரு உற்சவமாக ஆக்கி அதற்கு பகல் பத்து, இராப் பத்து என்று இருபது நாட்களை ஒதுக்கி தினம் ஒரு சடங்கு போல் உற்சவம் கொண்-டாடுவார்கள். இந்த வைகுண்ட ஏகாதசி அன்று மக்கள் நாள் முழுவதும் பட்டினி கிடக்கவேண்டும். அதற்கு ஏகாதசி விரதம் என்று பெயர். அடுத்த நாளைக்குப் பெயர் துவாதசி என்பது.

ஏகாதசி என்றால் 11 ஆவது திதி; துவாதசி என்றால் 12 ஆவது திதி என்பது பொருள். 11 ஆவது நாள் முழுவதும் பட்டினி கிடந்து 12 ஆவது நாள் பாரணை என்னும் பெயரால் வயிறு புடைக்கச் சாப்பிடுவதுதான் இந்த ஏகாதசி, துவாதசி சடங்கு.

இதில் மற்றொரு விஷயம்என்னவென்றால், இந்த ஏகாதசி நாள் முழுவதும் பட்டினி கிடப்பது மாத்திர-மல்லாமல் அன்று இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்துக் கொண்டு இருக்க வேண்டும். தூங்கினால் ஏகாதசி விரதத்தின் பலன் வீணாகிவிடும். அதாவது பலன் இல்லாமல் போகும்!

அறிவுக்கு ஒவ்வாத சடங்குகள்

இந்த ஏகாதசி நாள் உற்சவங்கள் தமிழ் நாட்டில் சீரங்கத்தில்தான், பலமாக, ஆடம்பரமாக, ஆயிரம், பதி-னா-யிரம் மக்கள் வந்து கூடும்படியாக மிகப் பிரபலமாய் நடக்கும். 20 நாள்களுக்கு பல சடங்குகள், சாமி ஊர்-வலங்கள் முதலியவை நடக்கும்.

ஏகாதசி உற்சவங்களுக்கு சீரங்கம் போனவர்கள்

1. சுவர்க்கவாசல் புகவேண்டும்.
2. மோகினி அவதார தரிசனம் பார்க்கவேண்டும்.
3. முத்தங்கி சேவை பார்க்க வேண்டும்.

சுவர்க்கவாசல் புகுவது என்பது கோயிலில் மற்ற நாளெல்லாம் மூடிக் கிடந்து ஏகாதசி அன்று காலையில் திறக்கப்பட்ட வாசல் வழியில் முட்டி அடித்துக் கொண்டு புகுந்து வெளியில் வருவதுதான்.

மோகினி அவதாரம் என்பது சீரங்கம் கடவுளை பெண் வேஷம் போட்டு -பெண்ணாகச் சிங்காரித்துக் காட்டுவதுதான்.

முத்தங்கி சேவை என்பது சீரங்கம் கடவுளுக்கு முத்துக் கோத்துத் தைத்த ஒரு சட்டையைப் போட்டுக் காட்டுவதுதான்.

இதுதான் ஏகாதசி உற்சவத்தின் காட்சி!

இந்தக் காட்சியினால் மக்களுக்கு என்ன பயன் ஏற்படும்?

பெரும்பாலும் அங்கு செல்கிற மக்களின் கருத்-தெல்லாம் பெரிய ஜனக் கூட்டத்தைப் பார்க்கலாம் என்-பது-தான். செல்பவர்களில் 100_க்கு 90 ஆண், பெண்-களின் கருத்தாகும். அறிவு கெடுவதே உற்சவ பலன்

மக்களுக்கு சினிமா பார்ப்பதில் உள்ள ஆர்வம், உணர்ச்சி, பயன் என்னவோ அதுதான் இந்த உற்சவங்-களைக் காண்பதிலும் இருந்து வருகிறது. சினிமா வந்த-பிறகு உற்சவங்களின் பெருமை மோகம் நல்ல அள-வுக்குக் குறைந்துவிட்டது. என்றாலும், அதைப் பழைய-படி ஆக்க பார்ப்பனர்களும், அரசாங்கமும் இப்போது அதிகமுயற்சி செய்கிறார்கள்! சினிமாவால் ஒழுக்கம் கெடும்; உற்சவத்தால் அறிவே கெடும்! இதுதான் பலன்.

(‘விடுதலை’, 8.1.1966)

Sunday, December 20, 2009

பகுத்தறிவாளர் கழகத்தில் பார்ப்பானைச் சேர்க்காதீர் என்று கூறுவது ஏன்?



வெற்றி பெற்றவர்களைப் பாராட்டுவதோடு வெற்றி பெற ஓட்டளித்த வாக்காளர் பெரு-மக்களையும் பாராட்ட வேண்-டும். இத்தேர்தலில் பார்ப்-பனர்களின் பெரும் எதிர்ப்புக்--கிடையே அவற்றை எல்லாம் இலட்சியம் செய்-யாமல் ஓட்ட-ளித்து வெற்றிபெறச் செய்தது பாராட்டிற்-குரியதாகும். இத்-தேர்தலில் மட்டுமல்ல; எல்லா தேர்தல்-களிலுமே பார்ப்பனர்-கள் நமக்கு எதிராகவே பாடு-பட்டு வந்திருக்கின்றனர். இந்த நாட்டில் பறையனாக, சூத்தி-ரனாக இருப்பதைவிட துலுக்-கன் நாட்டில் வாழ்வதில் பெரு-மைப்படுகின்றேன். கிறிஸ்தவன் நாட்டில் வாழ்வதில் பெரு-மைப்-படுகிறேன்.
 சுதந்திரநாடு என்றால் அங்கு பார்ப்பான், பறையன், சூத்திரன், மற்ற எந்த ஜாதி-யுமே இருக்கக் கூடாது. மனி-தன் தான் இருக்க வேண்டும். எப்படிக் கடவுளும், மதமும், கோயிலும் நம்மை மடையர்-களாக்கி இழிமக்-களாக்கி வைத்திருக்கிறதோ, அது போன்று தான் சுய-ராஜ்யம், சுதந்திரம், ஜனநாயகம் என்பது நம்மை இழிவு-படுத்தி வைத்தி-ருக்கிறது. இதனை நான் சாதா-ரணமாகச் சொல்லவில்லை, 50 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டே சொல்கிறேன். உங்களிடம் மட்டும் சொல்ல-வில்லை. காந்தி, நேரு ஆகிய-வர்களிடமே சொல்லி இருக்-கின்றேன். அவர்கள் உணர ஆரம்பித்தது மிக மிகப் பின்னாலேயே ஆகும்.

கடவுள், மதம், ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் என்பவை யாவும் மனிதனை மடையன் ஆக்கு-வ-தற்காகப் பார்ப்பானால் கற்-பிக்கப்பட்டவையே ஆகும். கடவுள் நம்பிக்கையுள்ள முஸ்-லிம்கள் 50 கோடிக்கு மேலிருக்-கிறார்கள், அவர்கள் கடவு-ளுக்கு உருவ-மில்லை. அதே-போல் 100 கோடி கிறிஸ்த-வர்கள் இருக்கிறார்கள். அவர்-கள் கடவுளுக்கும் உருவ-மில்லை; அவர்கள் கடவுளை வணங்குவது நம்மைப்போல் காட்டு-மிராண்டித்தனமாக அல்ல. மனத்தால் நினைப்ப-தோடு சரி. நம்மைப் போல் பூசை- படையல்கள் செய்வது கிடையாது.

இந்த உலகில் சுமார் 20 கோடி மக்களாகிய இந்-துக்கள் என்று சொல்லப்படுகிற நம் மக்கள் தான் கடவு-ளுக்கு உருவம் செய்து அதற்கு 6 கால பூசை, திரு-மணம், திருவிழா என்று சொல்லி விழாக்கள் கொண்-டாடி மக்களை மடை-யர்களாக்கிக் கொண்டிருக்-கிறார்கள்.

நமது கடவுள்கள், புராணங்-கள், அவதாரங்கள் என்பவை யாவும் நம் மக்களைக் கொல்-வதற்காக ஏற்பாடு செய்யப்பட்-டவையே ஆகும். நம் கடவுள் கதைகளும், பெருமைகளும் எத்தனை கோடி பேரைக் கொன்றது என்பதில் தானிருக்-கிறது. கொன்றதை விழாவாகக் கொண்-டாடுகிறார்கள், கதா காலட்சேபம் செய்கிறார்கள். கடவுள் அவதாரங்கள், அழித்-தது எல்லாம் நம் மக்களையே என்-பதற்குப் பலஆதாரங்கள் இருக்கின்றன. பல அறிஞர்-கள் ஆராய்ச்சி செய்து எழுதியுள்-ளனர். நேருவே தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் இராமாய-ணம் என்பது தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெற்ற போராட்-டமே ஆகும் என எழுதி இருக்கிறார்.

கடவுள், மதம், ஜாதி, புராணம், ஆகிய இக்கற்பனை-கள் அனைத்தும் பார்ப்பான் மேல் ஜாதியாக இருப்-பதற்கும், நாம் கீழ் ஜாதியாக இருப்ப-தற்கும் கற்பிக்கப்-பட்டவையே ஆகும். இதை எல்லாம் நாங்-கள் ஒழிக்க வேண்டும் என்பது திமிரினால் அல்ல. இவை தான் நம்மை இழி மக்களாக, சூத்-திரர்களாக ஆக்கி வைத்திருக்-கின்றன. அதனால் தான் நம் இழிவைப் போக்க இவற்றை ஒழிக்க வேண்டும் என்கின்-றோம்.

இந்த நாட்டில் நாங்கள் ஒருவர் தான் பார்ப்பானைப் பார்ப்பான் என்றழைக்கின்-றோம். மற்றவன் பார்ப்பா-னைப் பிராமணன் என்று தான் கூப்பிடுகின்றான்? ஒருவனைப் பிராமணன் என்றால் மற்றவன் யார்? சூத்திரன் தானே! ஒரு பெண் இன்னொருத்தியைப் பார்த்து பதிவிரதை என்று சொன்னால் அவள் யார்? பதிவிரதைத் தன்மையற்ற விப-சாரி என்று தானே பொருள்.

நம் மந்திரிகள் கூட பார்ப்-பானைப் பார்ப்பான் என்று சொல்லத் தயங்குகின்றார்கள். மடாதிபதிகள் முதல் பார்ப்-பான் என்று சொல்ல தயங்கு-கிறார்கள்.

கடவுளை ஒழித்த கோயில்-களை, இடித்த பார்ப்பனர்-களை (கடவுள் பிரசாரகர்களை, மதப் பிரசாரகர்களை) எல்லாம் வெட்டி வீழ்த்திய நாடுகள் பல இருக்கின்றன. அந்நாடுகளில் எல்லா மனிதர்களும் சம அந்தஸ்துள்ளவர்களாக இருக்கி-றார்கள். பணக்காரன் ஏழை என்கின்ற பேதமில்லை.

முதலாளி, தொழிலாளி என்கின்ற பேதமில்லை. அந்த நாட்டில் போலீஸ் அய்.ஜி.க்குள்ள மதிப்பு சாதாரண கான்ஸ்-டேபிளுக்கும் உண்டு. கலக்டெரும், பியூனும் ஒரே மதிப்புடையவர்கள் என்கின்ற மதிப்போடு வாழ்-கின்றார்கள். எந்தப் பேதமும் அவர்களுக்-கிடையில் இல்லை. இவ்வள-வுக்கும் காரணம் அந்த நாட்-டில் கடவுள் இல்லாததா-லேயே ஆகும்.

நம் நாட்டில் பேதங்களிருப்-பதற்குக் காரணம் கட-வுளே-யாகும். இந்தப் பேதங்கள் ஒழிய இன்று கடவுளைச் செருப்பால் அடிக்கின்றோம். இவற்றில் மாறவில்லை என்றால் நாளைக்கு மனிதர்களையே கொல்ல நேரலாம். சமுதாய மாற்றம் என்றால் கொலை, கொள்ளை, தீவைப்பு, நாசம் யாவும் நடந்து தான் தீரும்.

இன்று நாம் எல்லாம் சூத்தி-ரர்களாக பறையன், சக்-கிலி-களாக இருப்பதற்குக் காரணம் கொலை. சித்திரவதை, கழு-வேற்றல் முதலிய காரியங்-களைச் செய்து தான் ஆகும். இதிலிருந்து மாற நாமும் இக்காரியங்களைக் கையாள வேண்டியது தான். அறிவான காலமாக இருப்-பதால் அடிப்-படையிலிருந்து ஆரம்பித்து இருக்கிறோம். அதாவது கட-வுளைச் செருப்பால் அடிப்பதி-லிருந்து துவக்குகின்றோம். இது வளர்ந்து நாளை அவர்கள் செய்த காரியத்தை நாமும் செய்யும் படி நேரலாம்.

இன்றைக்கு இருப்பதை விட மோசமான நிலை 2500 ஆண்டுகளுக்கு மேலிருந்து அப்போது ஒரே ஒரு மனிதன் சித்தார்த்தன் என்பவன் தோன்றி, தற்போது நாம் செய்வது போன்று அறிவுப் பிரசாரம் செய்த மக்கள் யாவ-ரையும் மாற்றிவிட்டான். வேதங்களை எல்லாம் நெருப்-பில் இட்டுக் கொளுத்தினான். அவன் கொள்கை நாடு முழு-வதும் பரவி மக்கள் எல்லாம் அவன் கொள்-கையைப் பின்-பற்ற ஆரம்பித்தனர். பார்ப்ப-னர்களை எல்லாம் கொலை செய்ய ஆரம்பித்தனர்.

இதைக் கண்டு பார்ப்பான் புத்த கொள்கையை ஏற்றவன் போல் நடித்து, அதில் சேர்ந்து பிரசாரகனாகி புத்த மடங்-களை எல்லாம் கொளுத்தி-னார்கள். பவுத்த கொள்கை-களை ஏற்றவர்களை எல்லாம் நாசம் செய்து அக்கொள்கை-களைத் தடுத்து விட்டனர். அதனால் தான் இன்றைக்குப் பார்ப்பானை பகுத்தறிவாளர் கழகத்தில் சேர்க்கக் கூடாது என்று சொல்கிறேன். அவனைச் சேர்த்-தால் புத்த இயக்கத்தில் சேர்ந்து புத்த கொள்கையைப் பரவவிடாமல் தடுத்தது போல் தடுத்து விடுவான். எனவே நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பார்ப்பானை நுழையவிடவே கூடாது.

பார்ப்பான் எந்த விதமான பாதகமும், அக்கிரமும் செய்-வான். அதற்கு அவன் சாஸ்தி-ரத்தில் அவனுக்கு இடமிருக்-கிறது. பார்ப்பான் தன் தரு-மத்தைக் காப்பாற்றிக் கொள்ள எந்த விதமான அக்கிரமும் செய்யலாம், அது பாவமல்ல என்பது சாஸ்திரமாகும். எனவே பார்ப்பான் நம்மை ஒழிக்க எந்தப் பலாத்காரமான காரியத்திலும் ஈடுபடலாம். அதற்கு எல்லாம் நாம் தயா-ராகத்தான் இருக்க வேண்டும். நம்மில் சிலர் உயிர் விட நேர-லாம். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் போராட வேண்டியதுதான்.

இப்போதைய காலம் மிகவும் பகுத்தறிவுக் காலம். உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டு போகிறது. உல-கில் நாம் ஒருவர் தான் இன்னமும் முட்டாள் தன-மாக, மூடநம்பிக்-கைக்காரர்களாக இருக்கின்-றோம். இதி-லிருந்து நாம் விடுதலை பெற்று மற்ற உலக மக்களைப் போன்று இழி-வற்று, அறிவு பெற்று வாழ வேண்டும். இனி நீங்கள் எந்தக் காரியத்தையும் நடுநிலையிலி-ருந்து சிந்திக்க வேண்டும்.

(`விடுதலை’, 22.5.1971) (12.5.1971 அன்று அரூரில் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் ஆற்றிய சொற் பொழிவு)

சோ ராமசாமி தேடும் பிராமணன் இதோ இங்கே....


‘‘எங்கே பிராமணன்’’ ‘‘எங்கே பிராமணன்?’’ என்று திருவாளர் சோ ராமசாமி அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கிறார். ‘துக்ளக்’கில் எழுதி ஒரு புத்தகமாக-வும் போட்டு விட்டார். “ஜெயா’ தொலைக்காட்சியிலும் தோன்றி விளக்கங்களை விஸ்தாரமாக அள்ளியும் கொட்டினார். 

அதற்கெல்லாம் பெரிய விளக்கங்கள் தேவைப்-படாது “எங்கே பிரா-மணன்’ என்ற அவரின் கேள்விக்கு முகவரியுடன் மிக எளிமையாகப் பதில் சொல்லிவிடலாம்.

காஞ்சிபுரம், காஞ்சி-புரம் என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கே மச்சேஸ்வரர் மச்சேஸ்வரர் என்று ஒரு கோயில் இருக்கிறது. அந்தக் கோயி-லில் தேவநாதன் _ தேவ-நாதன் என்று அர்ச்சகன் இருக்கிறான் _ அவன்-தான் “பிராமணன்” அந்த முகவரியைத் தேடி இப்-பொழுது அலைய வேண்-டாம் சோ.

அவன் மச்சேஸ்வரன் கோயில் கர்ப்பக்கிரகத்-திலேயே பல பெண்-களைக் கெடுத்திருக்கிறான். ‘கிருஷ்ண பகவானின்’ காமலீலைகளை நடத்தி-யிருக்-கிறான்.

இப்பொழுது அந்த ஆசாமி வேலூர் ஜெயி-லில் இருக்கிறான். இனி நீதிமன்றத்துக்கும் அவ-னால் வரவே முடியாது. காரணம் நீதிமன்றம் வந்தால் _ அந்த அர்ச்-சகப் பார்ப்பானைப் பார்த்த மாத்திரத்திலேயே தமிழச்சிகள் கையில் செருப்பையும், துடைப்பத்-தையும் எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்கள். அத-னால் அவன் இருக்கும் வேலூர் ஜெயிலுக்கு திரு-வாளர் சோ ராமசாமி மனுப் போட்டுப் பார்க்க-லாம்; பட்சணங்களையும் கொண்டு போய் கொடுக்--கலாம்.

இன்னொரு கொசுரு ‘பேஷா’ இருக்கிறது -_ அந்தத் தேவ-நாதனின் தோப்பனார் ஒன்-று சொல்லியிருக்-கிறார்.

‘‘சின்ன வயதிலிருந்தே வேத சாஸ்திரம், ஸ்மிருதி-களையெல்லாம் சொல்லிக் கொடுத்து வளர்த்தேனே _ அவனா இப்படி ஆகி விட்டான்’’ என்ற கண்ணீர் வடித்திருக்கிறார்.

பிரச்சினையே அது-தான். வேதங்களும், உபநிஷத்துகளும் இந்தச் சமாச்சாரங்களைத் தானே சொல்லிக் கொடுக்கின்றன.

உடம்பு முழுவதும் நெய்யைத் தடவிக் கொண்டு ஒரு பெண்-ணானவள் யாருடன் புணர்ந்தாலும் விபச்சார தோஷம் இல்லை என்று யாக்ஞவல்யர் எழுதி வைத்து விட்டுப் போயி-ருக்-கிறாரே (நூல்: சுவாமி தயானந்த சரஸ்வதியின் ‘‘ஞானசூரியன்’’)

ஓர் அழகிய பெண்-ணின் குறியைப் பார்த்துக் கொண்டு பத்தாயிரம் மந்திர செபம் பண்ணு-கிறவன் தேவகுருவுக்குச் சமமானவன் (நூல்: ஞான-சூரியன்).

தேவகுரு என்றாலும் தேவநாதன் என்றாலும் (என்னே பெயர் பொருத்-தம்!) ஒன்றுதானே! இவற்-றையெல்லாம் தன்மகன் தேவநாதனுக்குச் சிறு வயதி-லேயே சொல்லிக் கொடுத்தால் அவன் இப்படித் தானே நடந்து கொள்-வான்?

-விடுதலையில் (20.12.2009) மயிலாடன் எழுதியது

Saturday, December 19, 2009

கடவுள் - நம்பிக்கையற்றவன் பார்வையில்



கடவுளின் படைப்பு


ஒரு நல்ல தகப்பன், தன் வீட்டுப் புறவடையில் ஒரு கிணற்றை வெட்டி, அதற்குக் கைப்பிடிச் சுவர் கட்டாமல் தன் குழ்ந்தை - புத்தி இருந்தால் சாக்கிரதையாய் நடக்கட்டும் இல்லாவிட்டால் விழுந்து சாகட்டும் என்று சொல்லுவானா? அதுபோலவே, ஒரு நல்ல கடவுள், சாத்தானை (தீமைகளை) உண்டாக்கி விட்டுத் தனது பிள்ளைகளான குழந்தைகள் - புத்தி இருந்தால் சாத்தானுக்குத் தப்பிப் பிழைக்கட்டும், இல்லாவிட்டால் சாத்தானால் நரகத்தில் வீழட்டும் என்று சொல்லுவானா?

கடவுள் அறிவுத் தெளிவு இல்லாத இடத்திலிருந்தே தோற்றுவிக்கப்படுகிற ஒரு யூகப் பொருளாகவே - அதாவது முடிந்த முடிவாய் இல்லாமல் நினைத்துக் கொள்கிற பொருஆகவே - கண்டு பிடித்தவனாகிறான். இதனாலேயே எந்த மனிதனும் தனது சாதாரண அறிவுக்கும், காரணம் தெரிய முடியாத விசயங்களுக்கும் மேற்கொண்டு ஆராய்ச்சி அறிவைப் பயன்படுத்த அவசியமில்லாதவனாகிச் சவுகரியமான முடிவுக்கு வர வசதி கிடைத்துவிட்டபடியால் மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கும் ஆராய்ச்சி முயற்சிக்கும் அவசியமில்லாமல் போய் மனிதரில் பெரும்பாலானவர்களின் அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சி முயற்ச்சியும் தடைப்பட்டு விட்டது.

கடவுட் கோட்பாட்டில் உள்ள அடிப்படைக் கோளாறு

உலகிலே பாழாய்ப் போன எந்தக் கடவுளும்; உலகத்தில் மக்களுக்குக் கேடு செய்த எப்படிப்பட்ட அயோக்கியனையும் மன்னிக்கவும், மன்னிக்க முடியாவிட்டால், கேடு செய்தவனைத் தண்டிக்கவும் தான் தகுதி உடைய கடவுளாக இருக்கின்றனவே தவிர, எவனையும் எந்த ஜந்துவையும் மற்ற மனிதனுக்கு மற்ற ஜந்துவுக்குக் கேடு செய்யாமல் துன்பம் செய்யாமல் இருக்கும்படியான சக்தி இல்லாதவைகளாகத்தானே இருக்கின்றன!

மற்ற நாட்டில் கடவுளைச் சிருட்டித்தவன் கடவுளுக்கு நல்ல குணங்களைச் சிருட்டித்தான். நம நாட்டில் கடவுளைச் சிருட்டித்தவன் மனிதனையே தான் கடவுளாகச் சிருட்டித்தான். அதுவும் நல்ல மனிதனை அல்ல. கெட்ட மனிதனுடைய குணங்களையே கடவுளுக்கு ஏற்றிச் சிருட்டித்தான். மினதன் மாதிரியே சோறு, சாறு வேண்டும். வைப்பாட்டி வேண்டும் என்று இப்படியாகப் பித்தலாட்டமாகத்தான் உண்டு பண்ணினான். மக்களும் இதுவெல்லாம் கடவுள் செயல் என்று தான் எண்ணிக் கும்பிடுகின்றனரே ஒழிய கடவுளுக்கு ஒழுக்கம் இருக்க வேண்டும் என்று கருதவே இல்லை.

கடவுளை நம்புவோரின் சிந்தனையற்ற தன்மை

கோயிலில் குழவுக்கல்லில் போய் முட்டிக் கொள்ளுகின்றானே, எவனாவது அது கல் என்று உணருகின்றானா? உண்மையில் அதற்குக் கடவுள் சக்தி இருக்குமானால் ராத்திரியில் திருடன் சாரியைக் குப்புறத்தள்ளி அதன் பெண்டாட்டியின் தாலியையும் சீலையையும் அறுத்துக் கொண்டு போகின்றானே, எந்தச் சாமியாவது ஏண்டா அப்படி என் மனைவியின் தாலியையும் துணியையும் அவிழ்த்துக் கொண்டு போகின்றாய் என்று கேட்கின்றதா? அப்படித் தன் மனைவியின் சேலையையும் தாலியையும் காப்பாற்றாத கடவுள் மனிதனுக்கு என்ன செய்ய முடியும்? இதை எவனாவது எண்ணிப் பார்க்கின்றானா?

கடவுட் கோட்பாட்டில் காணப்படும் சிக்கல்

கடவுளை உண்டாக்கினவன் என்ன சொல்லி உண்டாக்கினான்? கடவுள் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு உருவமில்லை. அவன், உன் கண், காது, மூக்கு, செவி, மெய் என்கின்ற அய்ம்புலன்களுக்கும் எட்டாதவன்; ஆனால் அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. அவனால் தான் இந்த உலகமே நடக்கிறது என்கிறான். மனம், வாக்கு, காயங்களுக்கு எட்டாதவன், அவன் மனத்திற்கு மட்டும் எப்படி எட்டியது? சர்வவல்லமையுள்ளவனுக்குத் தான் இருப்பதை ஏன் தன்னால் காட்டிக் கொள்ள முடியவில்லை.

கடவுள் நன்மை செய்தவனுக்கு நன்மை செய்வார்; கடவுள் தீமை செய்தவனுக்குத் தீமை செய்வார்’ என்று கடவுள் பிரச்சாரகர்கள் சொல்லுகிறார்கள். அப்படியானால் மனிதனை நன்மை செய்யச் செய்தவன் யார்? தீமை செய்யச்செய்தவன் யார்? ஒரு மனிதனைத் தீமை செய்யாமல் இர்க்கச் செய்ய முடிய வில்லையானால் கடவுள் எப்படி சர்வசக்தி உள்ளவராவார்?

‘கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்து விட்டார்; அந்த அறிவைப் பயன்படுத்துவதில் தீமை ஏற்பட்டால் கடவுள் தண்ட்க்கிறார்’ என்றால் கடவுளுக்குப் புத்தியிருக்க வேண்டாமா? இவனுக்கு அறிவைக் கொடுத்தால் தீமை செய்வான். ஆதலால் இவனுக்கு அறிவும் சுதந்திரமும் கொடுக்கக்கூடாது என்று அறிவுள்ள கடவுள் சிந்திக்க வேண்டாமா?

கடவுளின் இருப்பு

உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தான் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது? பஞ்சேந்திரியங்களுக்கும், மனதுக்கும் எட்டாமல் ஒரு கடவுள் ஏன் பயந்து கொண்டு மறைந்து கொண்டு இருக்க வேண்டும்? சர்வசக்தி உள்ள கடவுள் என்று சொல்லி உற்பத்தி செய்துவிட்டு, அது நமக்கு விளங்கும்படிச் செய்யாவிட்டால் அது எப்படு சர்வ சக்தி உடையதாகும்.

பிரார்த்தனை

கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் இழிவு நீங்காது. நீங்கி விடும் என்று நினைப்பது முட்டாள் தனம். அது இவனுடைய முயற்சியைத்தான் தடை செய்யும்; பிரார்த்தனை செய்வ தென்பதை பெரிய முட்டாள் தனம். பெரிய அக்கிரமத்தைச் செய்து விட்டுப் பிரார்த்தனை செய்து விட்டால் போதுமென்று எவனும் துணிவுடன் அக்கிரமம் செய்ய ஆரம்பித்துவிடுகிறான். பிரார்த்தனையில் உள்ள நம்பிக்கையால் கொலை பாதகனும் கூடத்தான் கடவுளைப் பிரார்த்தித்து விட்டுக் கொலை செய்யச் செல்கிறான். பிரார்த்தனை எங்காவது அவனது கொலை பாதகத்திற்குப் பரிகாரம் ஆகிவிடுமா? பிரார்த்தனையால் ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்ள முடியுமானால், தகுதியும், அறிவும் தேவையே இல்லையே! ஆகவே பிரார்த்தனையின் மூலம் நீங்கள் முட்டாள் ஆவதோடு கடவுளையும் முட்டாளாக்கி விட்டவர்களாகிறீர்கள்

நன்றி: பெரியார் இணையத்தளம்

டிசம்பர் 19 இதே நாளில்....பெரியார் இறுதி முழக்கம்....


இதே நாளில், டிசம்பர் 19 இல் தான் (1973) தந்தை பெரியார் இறுதி முழக்கத்தை வழங்கினார். அதுவும் பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் என்னும் நீதிக்கட்சியின் முக்கிய தோற்று-நர்களுள் ஒருவரான தியாகராயர் பெயரில் வழங்கும் சென்னை தியாகராயர் நகரில் அந்த இறுதி முழக்கத்தை, மரண சாசனத்தை அளித்தார்.


‘மரண சாசனம்’ என்று குறிப்பிடுவது ஏதோ சம்பிரதா-யமான தன்மையில் அல்ல; அந்தவுரையை இப்பொழுது படித்தாலும், நாளை சாகப் போகும் மனிதன் கடுமையாகச் சிந்தித்து தயாரித்த ஆவணம்போல் இருப்பதை அறிய முடியும். ஒவ்வொரு சொல்லும், கருத்தும், தகவலும் அப்படி ஒளிவீசுகின்றன.

இன்றைக்கு இராமனைப்பற்றிப் பேசவேண்டிய அவசியம், தன்மான இயக்கத்தை, ‘திராவிட இயக்கத்-தைத்’ தாண்டிய மற்றவர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

2400 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்ட, மக்கள் வளர்ச்சிக்கு, பொருளாதார உயர்வுக்கு, வேலை வாய்ப்புக்குப் பெரிதும் உதவிடும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை, தொழில்நுட்ப விற்பன்னர்கள் ஆய்வு செய்து கொடுத்த அறிக்கையின் அடிப்படை-யிலான ஒரு திட்டத்தை_ 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ராமன் என்றவன் குதிரைக்கும், பெண்ணுக்கும் பிறந்தான்; அவன் குரங்குகள், அணில்கள் உதவியால் ஒரு பாலம் கட்டினான்; அந்தப் பாலத்தை இடித்துவிட்டு சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று சந்து முனைகளில் மட்டுமல்ல; உச்சநீதிமன்றம்வரை சென்று வழக்குத் தொடுக்கிறார்கள்; உச்சநீதிமன்றமும் அதனைப் பரி-சீலிக்கிறது என்றால், இன்றைக்கு 36 ஆண்டுகளுக்கு-முன் தந்தை பெரியார் கொடுத்த அந்த இறுதி முழக்கத்-தின் அருமையை அவசியத்தை எளிதில் புரிந்து-கொள்ளலாம்.

அந்த உரையின் ஒரு பகுதி இதோ:

‘‘ராமாயணத்தைப்பற்றி, ராமனைப்பற்றி இன்று எல்லோரும் சிந்திக்கிறார்கள்; கடவுள் என்று நினைக்கிறார்கள். அந்த ராமாயணத்திலே எழுதியிருக் கிறான். ராமன் யாருக்கடா பிறந்தான்? அந்த அப்பனுக்கு பிள்ளை இல்லாமல் போய் ராமனுடைய அப்பன் தசரதன், அவனது பெண்டாட்டியைப் பார்ப்பனர்கள் மட்டுமல்ல; முதலில் குதிரையைவிட்டு, அவளுக்கு உணர்ச்சியை உண்டாக்கிப் பிறகு பார்ப்பனர்களை விட்டான். அவன் கலவி செய்தான். பாலகாண்டத்தில் பாருங்கள். யாகம் செய்த உடனே அந்தப் பொம்பளையிடம் குதிரையை விட்டான். உயிருள்ள குதிரையாய் இருந்தால், ஏதாவது வம்பு செய்யும் என்று குதிரையைச் சாகடித்து, பிறகு குதிரையினுடைய குறியை எடுத்து அவளிடம் பொருத்தி உணர்ச்சி உண்டாக்கினான் என்று எழுதி வைத்திருக் கிறான். “ஞானசூரியன்’’ என்ற புத்தகம் இருக்கிறது. அதை வாங்கிப் படியுங்கள். பிறகு பார்ப்பானைக் கலவி செய்ய அனுமதித்தான்.

இதைப்பற்றி சொல்லவேண்டியிருக்கிறது. ராமனுடைய மனைவியை என்ன செய்தான்? ராவணன் அவளை கர்ப்பமாக்கி அனுப்பினான். அதைப் புருஷன் ஒத்துக்கொண்டான். அவளும் ஒத்துக்கொண்டாள். இதிலே ரகசியம் ஒன்றுமே இல்லையே. சாமி பெண்டாட்டியைப் பற்றித்தானே இப்படி எழுதியிருக் கிறான். மற்ற மற்ற கடவுள்களைப்பற்றிச் சொல்ல வேண்டுமா? ஆகவே, நாங்கள் சொல்வது சுயநலத் துக்காகச் சொல்லவில்லை; உங்களை ஏய்ப்பதற்காகப் பொய்யும், பித்தலாட்டமும் இட்டுக்கட்டிக் கூறவில்லை. எல்லா ஆதாரங்களையும் கையில் வைத்துக்கொண்டு தான் பேசுகிறோம். உள்ளபடியே அவர்கள் 2000 வருடத்திற்குமுன்பு மடையராக இருந்தார்கள். சிந்திக்க வாய்ப்பு இல்லை, அன்றைக்கு, உண்டாக்கினான் இந்தக் கதையை! அன்றைக்கு அவனுக்கு அக்காள், தங்கை இல்லை; இந்த சிந்தனை இல்லை; அதற்கு ஏற்றாற்போலக் கடவுளையும் உண்டாக்கினான். பிரம்மாவை உண்டாக்கியவன் என்ன நினைத் திருப்பான்?’’ என்று பேசினார் அய்யா.

மீண்டும் தந்தை பெரியார் அவர்களின் இறுதி முழக்கத்தில் ஒளிவிடும் கருத்து விளக்கங்களை ஆளுக்கொரு மெழுகு வத்தியாக ஒவ்வொரு தமிழரும் ஏந்திச் சென்று, கடைகோடி மனிதனின் அறியாமை இருளை அலறியடித்து ஓடச் செய்யவேண்டாமா?

இன்னும் அதைவிடக் கூடுதலாக, வட இந்திய மக்கள் மத்தியிலே, மதச் சார்பற்ற சக்திகள், இடதுசாரிகள் எடுத்துச் சென்று கொடுக்கவேண்டாமா?

எதை எடுத்தாலும் ஆன்மிக, மதச் சிந்தனையோடு பிரச்சினையை அணுகினால் நாடு எந்த யுகத்தில் உருப்பட்டு முன்னேறுவது?

மதமும், கடவுளும், வழிபாடும் அவரவர் பூஜை-யறையில் எப்படியோ இருந்துவிட்டுப் போய்த் தொலையட்டும்!

அது மக்களின் வாழ்க்கை ஆதாரப் பகுதிகளில், முன்னேற்ற திசையில் முட்டுக்கட்டை போடுமே-யானால், “மூர்க்கத்தனமாக’’ அதனை நொறுக்கித் தள்ளி முன்னேற வேண்டாமா?

தந்தை பெரியார் அவர்களின் அந்த இறுதி முழக்கம், மரண சாசனம் அதைத்தான் நமக்குச் சொல்கிறது. இன்னும் ஒருமுறை, ஒருமுறை ஏற்கெனவே அதனைப் படித்தவர்கள்கூட படிக்கவேண்டும்; ஒவ்வொரு முறையும் அதனைப் படிக்கும் பொழுதெல்லாம் நமது அறிவுப் பக்குவத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, மேலும் கூர்மையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. வாழ்க பெரியார்!

காஞ்சிபுரத்து அர்ச்சகர்...சிரியாய் சிரிக்கிறது


காஞ்சிபுரத்து அர்ச்சகர்

கதைதான்
சிரியாய் சிரிக்கிறது

அவனின்றி ஓர்
அணுவும் அசையாது என்றான்
தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான் என்றான்
கொட்டிக் கொடு கோயிலுக்கு
என்றான்
கட்டிக்கொடு கோயிலை
என்றான்
கட்டி விடு பொட்டுக்கு
பொட்டைப்பிள்ளையை என்றான்
உங்கள் வீட்டுப்பிள்ளைகளை
கொஞ்ச நாள்
பொட்டுக்கட்ட அனுப்புங்கடா
என்றவுடன் அம்முறையே
வேண்டாம் என்றான்
கடவுள் பற்றி
எத்தனை கதை சென்னான்
பார்ப்பான்
உன்னிடமும்
என்னிடமும்
ஒன்றுமில்லை என்பதை
அவனே நிரூபித்து விட்டானே
அனைத்து சாதியினரும்
அர்ச்சகர் ஆனால்
கோவிலின் புனிதம்
கெட்டுவிடுமாம்
கோவிலுக்கு வரும்
அனைவருக்கும்
புண்ணியம் கிட்டாதாம்
பெண்கள் அர்ச்சகர்
ஆனால் தீட்டால்
தீட்டாகி விடுமாம்
எத்தனை கதை சென்னான்?
உன்னிடமும்
என்னிடமும்
ஒன்றுமில்லை என்பதை
அவனே நிரூபித்து விட்டானே


தமிழில் பாடினால்
தீட்டாம்! கோயிலை
எட்டு நாள் கழுவணுமாம்
தமிழன் தெட்டால்
தீட்டாம் ! கோயிலை
பத்து நாள் கழுவணுமாம்
இவ்வளவு நாறியபின்பும்
கோயிலைக் கழுவிவிடத்
தோணலையே !
கேட்டாரே கவிஞர்
‘‘விடுதலை’’யில்!


கடவுளுக்கு முன்னால்
காமம் செய்தால்
சொர்க்கத்துக்கு நேரடி
டிக்கெட்டாம்
எல்லாம் அர்ச்சகர்
தேவநாதன் உபயம்
பிரச்சார உத்தியாய்
மதம் பரப்ப
மற்றவரும்
பயன்படுத்தலாம்


ஒரு பார்ப்பான்
செய்யும் தவறுக்கு
அர்ச்சகர்
அனைவரையும் பழிப்பதா ?
பால்குடி பாலகர்கள்போல்
அப்பாவியாய் சில
பார்ப்பனர்கள் எழுதுகிறார்கள் !
அனைத்து ஜாதியினரும்
அர்ச்சகர் ஆகலாம் என்று
எத்தனை பார்ப்பனர்கள்
எழுதுகோலை எடுத்தார்கள் ?
எந்தெந்த பார்ப்பன ஏடுகள்
எழுதின ?
புனிதம் கெட்டுவிடும்
புராணம்தானே
பத்திரிகைகள்முதல்
நீதிமன்றம்வரை
எங்கள் கேள்வி


தெள்ளத்தெளிவாய்!
அனைத்தும் அறிந்தவன்
ஆண்டவன் என்றாயே?
அர்ச்சகன்
தேவநாதன் செய்த
செயலெல்லாம்
ஆண்டவனுக்குத்
தெரிந்து நடந்ததா?
தெரிந்தே நடந்தால்
தண்டனை அர்ச்சகருக்கு
மட்டும்தானா?
அல்லது
அங்கு அமைதியாய்
இருந்து நீலப்படம் பார்த்த
ஆண்டவனுக்கும்
சேர்த்துத்தானா ?


தெரியாமல் நடந்தது
என்றால்
அவனின்றி
ஓர் அணுவும் அசையாதென்பது
பொய்தானே?
தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான்
என்பது பொய்தானே?
பார்ப்பனர்கள்
தீர்மானம் போடலாமா?
அவனின்றி அசையுமென்று
நாங்கள் சொல்லிவைத்தவை
அனைத்தும்
அபத்தக் குப்பைகள்
என்று!

வா.நேரு எழுதியது விடுதலை ஞாயிறு மலர் 19.12.09

தினமணி வைத்தியநாதய்யர் என்ற -‘சோ’ தயாரிப்புப் பானம்


திருவாளர் வைத்தியநாதய்யர் என்ற _ -‘சோ’ தயாரிப்புப் பானம் _ - ஆர்.எஸ்.எஸ். பேர் வழி “தினமணி”யின் ஆசிரியராக வந்த நிலையில், பார்ப்-பனியப் பாம்பு ஆயிரந்தலைகளைக் கடன் வாங்கித் தமிழர்களைக் கொத்தித் தீர்க்கிறது!

27.11.2009 நாளிட்ட “தினமணி”யின் வெள்ளி மணி தமிழர்களைக் கொச்-சைப்படுத்தும் வெறிமணியாக ஒலிக்-கிறது.
“அருமறையின் உட்பொருளே அண்ணாமலை’’ என்ற கட்டுரை ஒரு முழுப்பக்கத்திற்கு வெளியிடப்பட்-டுள்ளது.

தமிழர்களின் சமய வழிபாடு மற்றும் தமிழகத்திருமுறைகள் மூலம் வழிபாடு நடத்தும் தமிழர்களுக்கு அக்கட்டுரை பல நாம கரணங்களைச் சூட்டியி-ருக்கிறது:

நவீன பண்டிதர்
துன்மார்க்கர்
கீழோர்
பொறாமைக்காரர்
குரு துரோகி
மரண தண்டனைபெறுவர்
நரகம் போவார்கள்

கோபமும், சாபமும் கொந்தளிக்கிறது. மரத்துப் போன தோலை உடைய தமிழர்களுக்கும்கூட கொஞ்சம் சொரணையை ஊட்டும் தார்க்குச்சிகள் அவை.

பக்திப் போதை ஏறிக் கிடப்பவர்கள்-தானே _ இந்தச் சூத்திரஆசாமிகள் _ எப்படி எழுதினால் என்ன? ஏறி மிதித்தால் என்ன ‘ரோஷம்’ பொத்துக் கொண்டா கிளம்பப் போகிறது என்கிற பொல்லா நினைப்பு இந்தப் புரோகிதக் கூட்டத்துக்கு!

அதனால்தான் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டே தமிழ்மீது சாணி வாரி இறைக்கிறார்கள்.

வேதத்தின் இருகண்கள் சைவம், வைணவம் என்று நிலை நிறுத்த வருகின்றனர். எல்லாவற்றிற்கும் மூலம் வேதம் என்பதுதான் இவர்கள் நிரூபிக்க முயலும் விவகாரம்.

சிவன்தான் எல்லோருக்கும் மூலக்-கடவுள் _ அந்த வேதக்கடவுள்தான் திருமுறைகள் கூறும் சிவனும் என்று சாதிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம். தமிழ்க் கடல் மறைமலை அடி-களார் போன்றவர்கள் கால்களால் இடறித் தள்ளிய குப்பையைக் கும்பத்-தில் வைத்துகும்பிடச் சொல்லுகிறது இந்தக் குடுமிகள் கூட்டம்.

தாருகாவனத்து ரிஷிப் பத்தினிப் பெண்களின் கற்பைச் சூறையாடினான் சிவன் என்று ஆரியம் கூறும் அந்த வேதியச் சரக்கை, வேதத்தின்மூலத்தை சைவம் ஏற்றுக் கொள்கிறதா?

“நம்முடைய சநாதன தருமத்துக்கு வேதங்களே அடிப்படை. இன்று நவீனப் பண்டிதர்களாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் சிலர், ‘மறைகளே தேவை யில்லை’ என்று கூறிக் கொண்டு, ஆனால் வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள சில கிரியை களை சைவத் திருமுறைகளின் மூலம் ஆற்றி, அதன் மூலம் வாழ்ந்து வருகின்றனர். இது சைவ சமயக் குரவர்கள் நால்வரும், ஏனைய சைவப் பெரியோர்களும் காட்டி யருளாததால் துன்மார்க்கம்’’ என்று இவ்வளவு பச்சையாகச் சாடுகின்றது அந்தக் கட்டுரை.

சைவ சமயக் குரவர்களும் சேர்த்துத்-தான் சாடப்பட்டுள்ளனர்.

நமது தமிழன்பர்கள், சைவப் பெருமக்கள், சைவப் பக்தர்கள், நமது ஆதீன கர்த்தர்கள் “சிவசிவ’’ என்று கூறி, தீயவற்றைக் கேட்கக் கூடாது என்று கண்களை மூடிக் கொள்ளப் போகி-றார்களா என்று தெரியவில்லை.

மூலம் என்று இவர்கள் சொல்லுகிற வேதங்களின் யோக்கியதை என்ன? தந்தை பெரியாரும் திராவிடர் இயக்-கமும் அவற்றை நார் நாராகக் கிழித்து எறிந்திருக்கின்றனவே!

சோமபானம் குடித்து கும்மாளம் போடும் தேவர்கள், தேவாதி தேவனான இந்திரன் -_ இவர்களின் யோக்கியதை-களை வேதங்கள் நிர்வாணமாகக் காட்டவில்லையா?

“அக்னியே! ஒரு தேரிலோ அல்லது பல தேர்களிலோ ஏறி எங்கள் முன்னே வரவும், உன் குதிரைகள் மிக்க ஆற்றல் உள்ளவை. வேள்வியில் சமைத்த சமையல் உணவுக்காக முப்பத்து முக்கோடி தேவர்களுடனும், அவர் களுடைய மனைவியர்களுடனும் நேரில் வரவும். சோமபானத்தால் முப்பத்து முக்கோடி தேவர்களையும், அவர்களின் மனைவி களையும் போதை ஏற்றவும்’’_ (ரிக் வேதம்: 2515)

இந்திரனே, குதிரைகளின் தலைவனே!, இதைக் குடி, அன்றும் சரி, இன்றும் சரி, சோமக்குடிக்கு முதன்மையான ஆதர வாளன்தானே! உனது உணவே சோம ரசந்தானே’’-_ (ரிக் வேதம்: 4737)

வேதத்தின் யோக்கியதைக்கு வேறு என்ன எடுத்துக்காட்டு தேவை?

எப்படி பசுக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணிகளை சந்தோஷப்படுத்துகிறதோ, அப்படியே நல்ல ஸ்திரீகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும், மற்ற ஆண்களையும் சந்தோஷப்படுத்து வார்களாக! _ (யஜுர்வேதம்: 17 _ -3)

ஆடு, மாடு போல உறவுகளைப் பற்றிக்கூட கவலைப்படாமல், கலவி விஷயத்தில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டுமாம். தங்கள் கணவன்களை மாத்திரம் அல்ல; எந்த ஆண்களையும் சந்தோஷப்படுத்த வேண்டுமாம். அப்படி சந்தோஷப்பமித்துகிற பெண்கள்தாம் நல்ல பெண்களாம் (ஸ்திரீகள்)

இந்த யோக்கியதையில் உள்ள வேதத்தை அடேயப்பா, ‘தினமணி’ எப்படி எல்லாம் உச்சிமோந்து சப்புக் கொட்டுகிறது.

ஆரிய மொழி தமிழகக் கோயில்-களில் குடி புகுந்தது எப்போது? ராஜராஜசோழன் காலத்தில்தானே! அது பத்து நூற்றாண்டுகளுக்கு முன்புதானே! அதற்குமுன் தமிழ்நாட்-டில் கோயில்கள் இல்லையா? வழிபாடு கிடையாதா? அந்த வழிபாடு தமிழில்-தானே நடந்தது? வேதம் வந்துதான் கிழித்தது என்பதெல்லாம் யார் காதில் பூ சுற்ற?

தமிழ்மொழி என்றாலே பார்ப்-பனர்களுக்கு ஒரு “இனம் தெரியாத’’ வெறுப்பு. ‘‘தமிழை நீசப் பாஷை’’ என்று சொன்னவர்தானே சங்கராச்சாரியார் _ பூஜை வேலைகளில் இப்பொழுதுகூட அவர்கள் தமிழில் பேசுவது கிடையாதே!

“சது மறை ஆரியம் வருமுன்
சகம் முழுதும்
நின தாயின்,
முதுமொழி நீ அநாதி என
மொழிவதும் ஓர் வியப்பாமோ!’’

என்று தமிழைப் பற்றிக் கூறுகிறார் மனோன்மணீயம் சுந்தரனார்.

அவரையும் “தினமணி”யின் வெள்ளி-மணி துன்மார்க்கர் பட்டியலில் சேர்த்து விட்டதே!

வெள்ளிமணி கட்டுரையில் சிவனைத் தூக்கி வைத்துக் கூத்தாட வேண்டும் என்பதற்காக வைணவத்-தையும் வம்புக்கு இழுத்துள்ளது.

பஸ்ம ஜாபால உபநிடதத்தில் காசியின் பெருமையைக் கூறும் சிவபொருளாகிய விசுவநாதர், “இம் மாநகரில் கிழக்கில் கூப்பிய கரங்களோடு அல்லும் பகலும் பிரம்மா என்னைத் தியானிக்கின்றார். மேற்கில் இந்திரன் என்னை வழிபட்டுக் கொண் டிருக்கிறார்! தெற்கில் தலையின்மீது தனது கரங்களைக் கூப்பிய வண்ணம் திருமால் “என்னைத் தியானம் செய்து கொண்டிருக் கிறார்’’ என்று விளக்கியருளியுள்ளார் என்கிறது “தினமணி’’க் கட்டுரை.

இதன் மூலம் பிர்ம்மா, விஷ்ணு இவர்களுக்கு மேலாக உயர்ந்த பீடத்தில் உள்ள கடவுள் சிவபெருமானே என்பதுதான் “தினமணி’யின் கருத்து

ஒரு 17ஆண்டு 8 மாதங்களுக்கு முன் பயணம் செய்வோம். ‘கல்கி’ இதழை (11.4.1982) கொஞ்சம் புரட்டுவோம்.

அகோபில மடத்து ஜீயரின் (இவர்தான் வைஷ்ணவர்களுக்கான மடாதிபதி _ஸ்மார்த்தர்களுக்கு சங்கராச்சாரியார்போல) பேட்டி ஒன்று அதில் வெளியாகியிருக்கிறது.

“நான்சிவன் கோயில்களுக்கு உதவி செய்ய மாட்டேன். ஏன்னு கேட்டா.. ஸ்ரீமத் நாராயணன் தான் (திருமால் என்னும் விஷ்ணுதான்) எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம். பிரம்மாவை நாராயணன் (விஷ்ணு) தன் நாபியிலிருந்து (தொப்பூழ்) படைத்தான். அந்தப் பிரம்மா சங்கரனைப் (சிவனை) படைத்தான். என்ற கதை இருக்கு. அதுபடி பார்த்தா சங்கரனுக்கு (சிவனுக்கு) நாரா யணன் பாட்டன் ஆகிறார். பிரம்மா பிள்ளைஆகணும். அவங்களும் தெய்வம் தான். தபஸ்பண்ணி தெய்வத்தன்மைக்கு உயர்ந்தவர்கள். ஆனால் நாராயணன் எப்போதும் உள்ளவர். பாக்கிப் பேருக்கு பலன் கொடுக்கிறவர். அவரை வழிபடற நாங்கள் வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம். நாராயணனைத் தெய்வமாகக் கொண்டு வழிபட்டு மோட்சத்துக்கு போக வழி செய்து கொண்டவர்கள், நான்தான் தெய்வம் என்று சொல்லிக் கொள்கிற வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது. அப்படி எங்களுக்குச் சட்டம் இருக்கு. ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும். அதனாலே சிவன் கோயில் திருப்பணிக்கு பணம் இருந்தாலும் தர மாட்டோம்’’ என்று ஜீயர் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக வெட்டித் தள்ளிவிட்டார்.

“தினமணி’’ வெள்ளிமணி கட்டுரை-யாளரைவிட அகோபிலமட ஜீயர் தகுதி குறைந்தவராக இருக்க முடியாது.

தலையின்மீது திருமாலாகிய விஷ்ணு கரங்களைக் கூப்பிய வண்ணம் சிவனைத் தியானித்துக் கொண்டு இருப்பதாக தினமணி கூறுகிறது ஜீயரோ, சிவனா? அவன் பொடியன்; எங்கள் விஷ்ணுவுக்குப் பேரன்; அவனைக் கும்பிட்டால் புத்தி கெட்டுப் போகும் என்கிறார்.

‘தினமணி’யார் ‘கல்கி’யாருக்குப் பதில் சொல்லிவிட்டு எங்கள் தமிழர்மீது, தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்று கூறுகிற சைவ அன்பர்கள்மீது ஆக்ரோசமாகப் பாயட்டும்!

அதுசரி, தமிழர்கள் என்ற முறையில் நாத்திகர்களாகிய நாங்கள் தமிழர்கள்-மீது விழுந்து பிராண்டும் தினமணிக்குச் சூடு கொடுக்கிறோம்.

சைவ மெய்யன்பர்களே, தமிழ்க் கீர்த்திகளே, சைவ மடாதிபதிகளே! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

விடுதலை ஞாயிறு மலர் 19.12.09

Friday, December 18, 2009

ஜோதிடப் பட்டயமாம்! பா.ஜ.க ஆறாண்டு காலம் ஆண்டதன் விளை-வாகப்....

பாரதீய ஜனதா கட்சி ஆறாண்டு காலம் ஆண்டதன் விளை-வாகப் பலவித மூடத்தனங்கள் வளர்க்கப்பட்டன. ஜோசியம் ஒரு அறிவியல் எனக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டது. அது எப்படி அறிவியல் ஆகும் என்கிற கேள்வி நாட்டின் பலதரப்பு-களாலும் கேட்கப்பட்டதால், மந்திரி முரளி மனோகர் ஜோஷி அதனை ஒரு கலை என்ற அளவில் கற்றுக் கொடுக்கப்போகிறேன் என்று அறிவித்தார். இதனைப் பாடமாக வைத்தால் 5 கோடி ரூபாய் நிதி அளிக்கப்படும் என்றெல்லாம் கூட ஆசை காட்டினார். மய்ய அரசின் புதுவைப் பல்கலைக் கழகத்தில் அது பாடமாக உள்ளது.

மதுரையில் ஒரு பல்கலைக் கழகத்தில் அது பட்டயப் படிப்பாகக் கற்றுத் தரப்படுகிறது. இந்த ஆண்டு முதல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டயப்படிப்பு சொல்லித் தரப் போகிறார்களாம். விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்

பார் கெடுக்கும் எண்ணமுடன் பார்ப்பனர்.
அறிவற்ற ஜோதிடத்தைப் போற்றி
வேரில் வெந்நீர் வார்த்தனர், அய்யா.
செறிவுற்ற கருத்தால் அதை ஒழித்தார்.
பார் இன்றைய நிலை பாடமாம் அது.
பட்டமாம் பட்டயமாம் ஜோதிடத்தில்!

என்று நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லையா?

ஜோசியனுக்கு ஜெயில்

1930_க்கு முன் நம் நாட்டில் நடந்த உண்மைச் சம்பவம் இது. நூற்றுக் கணக்கான சமஸ்தானங்களில், கபுர்தலா சமஸ்தானமும் ஒன்று. இதன் மன்னர் ஜகத்சிங். இவரின் மகன் இளவரசர் பரம்ஜித்-சிங். அவரின் மனைவி ஜப்பால் சமஸ்தான இளவரசி பிருந்தா. இவர்களுக்கு மூன்றும் பெண் பிள்ளைகள். தனக்குப் பிறகு தன் மகன், அவருக்குப் பிறகு ஆள்வதற்கு ஆண் வாரிசு இல்லையே என்கிற குறை மகாராஜாவுக்கு இருந்தது.

அரண்மனை ஆஸ்தான ஜோசியர் சிறீராம் பண்டிதர் மாமன்-னரிடம் அடித்துச் சொன்னார் - இளவரசரின் நான்காம் குழந்தை மகன் என்று! மாமன்னர் மகிழ்ந்தார். அவரின் மகனுக்கு நான்காம் குழந்தையை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். குழந்தை பிறக்கும் நாள் நெருங்கியது. அரச குடும்பத்தினரைத் தவிர்த்து, அரசாங்க அதிகாரிகள் மத்தியிலும் பெருத்த எதிர்பார்ப்பு, பிறக்கப்-போவது நாட்டின் எதிர்கால மன்னராயிற்றே!

குழந்தை பிறந்தவுடன் அரச மரியாதை அளித்து வரவேற்றிட வேண்டும் என்று தளபதி பக்சி பூரன் சிங் பகதூருக்குக் கட்டளை. அரண்மனை, ஊர் முழுவதும் வண்ண விளக்கு அலங்காரங்கள். பட்டாசு வகைகளை கல்கத்தா நகரத்திலிருந்து வரவழைத்துத் தயாராக வைத்திருந்தனர். 101 குண்டுகள் முழக்கத்துடன் குழந்தை பிறந்ததை நாட்டு மக்களுக்கு அறிவித்திட அனைத்தும் தயார். எல்லா வகைச் செலவுகளுக்காகவும் 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப் பட்டது அந்தக் காலத்திலேயே!

1926 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி, விடியற்காலை 3.30 மணிக்கு பிருந்தாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. லேடி டாக்டர் பெனாரா குழந்தை பிறந்த சேதியைக் கண்களில் நீர் வழிய அறிவித்தார். எதிர்கால மன்னர் பிறக்கவில்லையே என்கிற வருத்தம் வெள்ளைக்கார டாக்டர் அம்மணிக்கும் இருந்தது.

ஆஸ்தான ஜோசியர் சிறீராம் பண்டிதர் எவ்வித விசாரணையும் இல்லாமல் 9 ஆண்டு காலச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளே தள்ளப்பட்டார். திவான் ஜர்மனிதாஸ் என்பார் எழுதிய மகாராஜா என்ற நூலில் எழுதப்பட்டிருக்கும் செய்தி இது! இதுதான் ஜோசியத்தின் யோக்தை! சிறீராம் பண்டிதரை சிறைக்குள் தள்ளிய கபுர்தலா மகாராஜாவைப் போல, இன்றைய அரசுகள் இருந்தால் இத்தகைய மோசடிகள்நடக்குமா?

- சு.அறிவுகரசு கட்டுரை விடுதலையில் (18.12.09) எழுதியது

புராணங்கள் புகட்-டப்படும் வரை நாடு முன்-னேறுமா? சிந்திப்பீர்!


குருவாயூர் கிருஷ்-ணன் கோயிலில் குசேலர் தினம் கொண்டாடப்பட்ட-தாம். நைவேத்தியத்துக்காக மட்டும் ரூ.2 லட்சம் செலவு செய்யப்பட்டதாம்.


பிரசாதத்தைப் பெற சிறப்பு ஏற்பாடுகள் (சிஷீuஸீtமீக்ஷீ) உண்டாம். நீண்ட வரிசையில் நின்று இதற்-கான சீட்டுகளைப் பணம் கொடுத்துப் பக்தர்கள் பெற்றார்களாம்.

எதற்காக இந்தக் குசேலர் விழாவாம்? வறு-மையில் வாழ்ந்த குசேலர். தனது வறுமையைப் போக்க பால்ய நண்ப-னான கிருஷ்ணனைத் தரி-சிக்க துவாரகை சென்றா-னாம். கிருஷ்ணன் தன் நண்-பன் குலேசனின் வறு-மையைத் தீர்க்க ஆவன செய்தானாம்!  
இந்தக் குசேலர் கதையை நினைத்தால் ஒரு பக்கம் சினமும், இன்-னொரு பக்கம் சிரிப்பும்-தான் வருகிறது. இது-குறித்து தந்தை பெரியார் குறிப்பிடுவது மிகவும் சிந்-திக்கத் தக்கதாகும். இதோ பெரியார் பேசுகிறார்:

‘‘குசேலர் கதையில் குசேலருக்கு 27 பிள்ளை-கள் என்றும், 27 பிள்ளை-கள் பெற்று குசேலர் தரித்-திரத்தில் துன்பப்பட்டு, 27 பிள்ளைகளை அழைத்துக்-கொண்டு கிருஷ்ணன் (கடவுள்) இடத்தில் சென்று பிச்சை கேட்டதாக-வும், கடவுள் ஏராளமாகச் செல்வம் கொடுத்ததாக-வும் கதை சித்தரித்த ஆசி-ரியர் சிறிதுகூடப் பகுத்-தறிவைப் பயன்படுத்த-வில்லை. ஒருவனுக்கு 27 குழந்தைகள் இருந்தால், அவன் வருஷத்துக்கு ஒரு குழந்தை பெற்றிருந்-தால், இருபது வயதும், அதற்கு மேற்பட்ட வய-தும் நிறைந்த குழந்தைகள் எட்டாக இருக்கவேண்-டும். இந்தக் குழந்தை-களும் சோம்பேறித் தடி-யன்கள்போல் ஒரு வேலைக்கும் இலாயக்கில்-லாத மாமிசப் பிண்டங்-களாகவா இருந்திருக்கக் கூடும்? இப்படி 20 வய-துக்கு மேற்பட்ட மக்-களை வீட்டில் வைத்துக்-கொண்டு ஒருவன் பிச்சைக்குப் போயிருந்தால், அந்த நாட்டில் மற்றவர்களும் இதுபோல் இருந்திருக்க-வேண்டாமா? அப்படியி-ருந்-தால் அந்த நாடு எப்படி உருப்படியாகி இருக்கும்? இப்படிப்பட்ட சோம்பேறித் தடியன்க-ளுக்கு கடவுள் செல்வம் கொடுக்கலாமா?

இப்படி ஒரு கூட்டம் நம்மிடம் வந்து பிச்சை கேட்டால், நாம் என்ன சொல்லுவோம் என்பதைச் சிந்தியாது, இவ்வளவு முட்-டாள்தனத்தை கடவுள் மீது ஏற்றிய ஆசிரியர் எவ்வளவு அறிவற்றவராக இருக்கவேண்டும்?’’ என்று வினாக்களை அடுக்கிக்-கொண்டே போகிறார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

குலேசன் தினத்தைக் கோயிலில் ஆண்டு-தோறும் கொண்டாடு-வதன் தாத்பரியம் என்ன?

சோம்பேறியாகக் கிடந்தாலும் கடவுளிடத்-தில் சென்றால் சோறு கிடைக்கும், செல்வம் கிடைக்கும் என்றுதானே சொல்ல வருகிறார்கள்? அதாவது உண்மையா? கடவுளிடம் சென்றால் கிருஷ்ணன், குலேசனுக்-குக் கொடுத்ததுபோல், இப்-பொழுதும் கொடுப்பானா? அப்படி ஒரு நிலை ஏற்-படின் நாட்டில் அரசுகள் எதற்கு? திட்டங்கள் எதற்கு? இந்தப் புராணங்கள் புகட்-டப்படும் வரை நாடு முன்-னேறுமா? சிந்திப்பீர்!

- விடுதலை 18.12.09 மயிலாடன்

Tamil 10 top sites [www.tamil10 .com ]