வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, March 13, 2011

கணினியில் ஆரியச் சூழ்ச்சி...

தமிழில் மிக மிகுதியாக  வட மொழிச் சொற்களைக் கலப்பது மணிப் பிரவாளம் எனப்பட்டது.  சமற்கிரு தமே தெய்வமொழி மக்களுடைய  தாய்மொழி தாழ்ந்தது  என்று ஆரிய  பிராமணர்கள்  பரப்பிய கருத்து மணிப்பிரவாள நூல்கள் தோன்றக் காரணமாகும். மணிப்பிரவாளத்தில் சமண மதத்தின் சார்பில் தோன்றிய சீபுராணமும்  வைணவ மதத்தில் தோன்றிய ஈட்டுரைகளும் வெற்றிபெற முடியவில்லை. 

தமிழில் கலந்த  அரபு உருது சமற்கிருத சொற்கள் படிப்படியே நீங்கி மறைமலையடிகளாரின் தனித் தமிழ் இயக்கத்தால் செந்தமிழ் ஆகியது. ஜாஸ்தி, கச்சேரி, வக்கீல்,  ஜமீன், சர்க்கார்,  வாயிதா முதலிய அராபிய பாரசீக உருதுச்  சொற்கள் நீங்கின. ஆனால் கலெக்டர், கவர்மென்ட்,  ஸ்கூல், எனப் பல சொற்கள் ஆங்கி லத்தில் இருந்து தமிழுக்குள் புகுந்து இயல்பான  வழக்குச் சொற்களையும் அகற்றித் தமிழைத் தமிங்கலம் ஆக்கி வருகின்றன இந்நிலையில்  மேலும் கிரந்த எழுத்துகளைச் சேர்த்து தமிழில் மிக அதிகமான சமற்கிருதச் சொற்கள் புகவேண்டும் என்றும் சிலர் விரும்பு கின்றனர்.

வேதங்கள் சமற்கிருதம் ஆரியம் இவையே உயர்ந்தன,  தமிழும் தமிழ் இலக்கியங்களும் ஆரியத்துக்குக் கீழானவையே என்று  ஆரிய பிரா மணர்களும் ஆரியக் கருத்து உடையோ ரும் பரப்பி வருகின்றனர்.          தமிழ் தாழ்ந்தது அல்ல சமற்கிருதத்திற்கு  நிகரானது என்று கம்பரும் பின் வந்தோரும் அடிக்கடிக் கூறித் தமிழை உயர்த்திப் பிடிக்க முயன்றனர். ஆதி சிவன் சமற்கிருதத்தையும் தமிழையும் சமமாகப் படைத்ததாகப் பாரதி பாடினார். 

சிவனின் வலக்கண்ணும் இடக்கண்ணும் இவ்விரு மொழிகளும் என்று பாடி தமிழ் தாய்க்கு வாழ்த்தும் எழுதினார் மனோன்மணியம் சுந்தர னார். ஆயினும் ஆரிய பிராமணர்களும்  அவர்களுடைய கருத்து மனதில் பதிந்துவிட்ட  ஈசானதேசிகர், வையா புரிப் பிள்ளை முதலியோரும் வட மொழியையே உயர்த்திப் பேசினர். 

இன்றும் சிலர் பேசி வருகின்றனர். சமற்கிருதத்தில் பற்றும் தமிழைத் தாழ்வாகக் கருதும் மனப்பான்மையும் கொண்ட குலம் என்று  மு.சி.பூரண லிங்கம் பிள்ளை கூறியது உண்மைதான். வணக்கம் என்று சொன்னவர்களிடம்  நமஸ்காரம் என்று சொல்லுங்கள்  என்றார் உ.வே.சா. சாப்பாடு ஆயிற்றா என்று கேட்கக்கூடாது போஜனம் ஆயிற்றா? என்றுதான் கேட்க வேண் டும்  என்றார்  அவர்.

மேலும் தமிழில் மெய்யெழுத்து தனித்து முதலில் வரக்கூடாது என்ற விதியை மீறி கையெழுத்து இடும் போது  உ.வே.ச்  என்று போட்டவர் அவர். ஓலைச் சுவடிகளை ஒப்புநோக்கிப் பதிப்பிக் கும்போது தமக்கேற்றவாறு மாற்றிப் பதிப்பிக்கக் கூடாது என்ற அறத்தைமீறி,   குரவர் தப்பிய என்ற வரியைப் பார்ப் பார் தப்பிய  என்று மாற்றி பதிப்பித்த உ.வே.சா.-வின் செயலைப் பார்ப்பனக் குசும்பு என்று மறைமலை அடிகளார் குறித்தார். வடமொழிப் பற்றாளர்களா கிய பிராமணர்கள்  வடசொற்களைக் கலந்தே தமிழைப் பேசி வருகின்றனர்.

தமிழ்ச் சொற்களையும் கிரந்த எழுத்துகளைக் கலந்து வடமொழிச் சொல்போல் பேசுவது அவர்களது வழக்கம். சுரம், வேட்டி, கோட்டி, பூசை முதலிய தமிழ்ச் சொற்களை  ஜுரம், வேஷ்டி,  கோஷ்டி, பூஜை  என்று ஒலிப்பார்கள். சோறு, குழம்பு, வீடு, நாள், அய்யா என்றுத் தமிழ்ச் சொற்களை பேசினால் அது இழிவு என்பதாகக்  கூறி சாதம், சாம்பார், கிரகம், தினம், சாமி  என்று வடசொற்களையே கூறு வது அவர்களது வழக்கம்.

தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி முதலிய இனிய, தூய தமிழ்ப் பாடல்களை வடமொழிபோல் ஒலிப்பதும் வடசொல் கலந்து மணிப்பிரவாள நடையில் உரை செய்வதும் இவையும் கூடப் பிடிக் காதவர்கள் சமற்கிருதத்தில் மட்டுமே  பூசை செய்வதும் ஆரியர்களின் குண மாகும். முன்னரே தமிழில் இருந்த பல கலை அறிவியல் நுட்ப நூல்களைப் புராணங்களோடு சேர்த்து வட மொழியில் மொழிபெயர்த்துக் கொண்டு  தமிழில் வழக்கற்றுப் போகும்படியாக வும், தவறியது ஏதேனும் இருந்தால் வடமொழியில்தான் முன்னர் தோன் றியது என்று கூறியும் ஆரியச் சார்பினர் கருத்து பரப்பி வந்தனர்.

தமிழர் களுடைய கோயிற் கட்டடக் கலை யையும் நடனக் கலையையும் இசைக் கலையையும்  வழிபாட்டு முறையையும் கடவுட் பெயர்களையும் ஊர்ப் பெயர்களையும் வடமொழியாக்கி விட்டனர். பழந்தமிழ் இலக்கியங்களை அழிக்க ஆடிப் பதினெட்டாம் பெருக்கில் ஆற்றில் விடவேண்டும் என்றும்  பொங்கலுக்கு முதல் நாள் தீயில் இட வேண்டும் என்றும் மக்க ளிடம் பரப்பி தமிழ்க் கலை இலக்கியச் செல்வங்களை அழித்தனர். சிவகாசி கோயில் கோபுரத்தில் வைக்கப்பட்டு  இருந்த தமிழ் ஓலைச்  சுவடிகளை அழிப்பதற்கு இலுப்பைக் கட்டை களைக் கொண்டு கொளுத்திவிட்டனர்.

இதனால் இன்றுவரை கோபுரம்கூட பிளந்துதான் நிற்கிறது. இலங்கையில் ஈழத்தமிழர்களை அழிக்கும் முயற்சியில் முதற்கட்டமாக பழந்தமிழ் இலக் கியங்களைக் கொண்டிருந்த யாழ்ப் பாணம் நூலகத்தைதான் சிங்களர்கள் கொளுத்தி விட்டனர்.  ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால்  அம் மொழியை அழிக்க  வேண்டும் என்பதை ஆரியர்கள் பின்பற்றினர்.

இவ்வாறு ஆரியச் சூழ்ச்சிகளாலும், சமற்கிருதமொழிக் கலப்பாலும்  கிரந்த வருக்க எழுத்துக் கலப்பாலும் தமிழ் பலமொழிகளாக்க் கிளைத்துப் போய் விட்டது; தமிழ் மக்கள் தொகையாலும் நாட்டின் அளவாலும் சுருங்கினர். இன்றுவரை தமிழுக்கு எதிரான கருத்துகளைப் பார்ப்பனர்கள் சிலர் தங்கள் தமிழ்ப்பணிகளின் நடுவிலேயே தேனில் ஒருதுளி நஞ்சு போல் குழைத்துப் பரப்பி வருகின்றனர்.

அவர்க்குத் துணையாகத் தமிழர் சிலரும் அந்நஞ்சு கலந்த தேனே தமிழ் வளர்க் கும் நன்மருந்து என்று கூறித் தமிழ் அறிஞர்களையும் தமிழ் ஆர்வலர்களை யும் கடுமையாகத் தாக்கிப் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

(தொடரும்), -----------விடுதலை, ஞாயிறு மலர் (12-03-2011)


Saturday, March 05, 2011

காங்கிரசின் பிடிவாதம்..தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காகவே!

தஞ்சை, மார்ச் 5- தி.மு.க., தலைவர் கலைஞர் அவர்களின் அறிக்கை நியாயமானது. காங்கிரசின் நிபந் தனைகளுக்கு உட்பட்டுதான் தேர் தலைச் சந்திக்க வேண்டும் என்கிற நிலையில் திமுக இல்லை. காங்கிரசின் நிபந்தனைகளுக்கு பணிந்து போக வேண்டிய அவசியமில்லை  என்பதை திமுக தலைவர் கலைஞர் அவர்களையும், திமுக உயர்நிலைக் குழுவினரை யும் கேட்டுக் கொள்கின்றோம். தி.மு.க. பெரு உருவெடுத்து (விஸ்வரூபம்) வெற்றி பெறும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை என்று தாய்க் கழகத்தின் சார்பில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் கனி வான வேண்டுகோள் விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:
 
அனைவருக்கும் அதிர்ச்சி
இன்று காலை தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களது அறிக்கை - நியாய உணர் வும் சுயமரியாதை உணர்வும் உடைய அனை வரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருப்பதை போன்றே நமக்கும் அதே எண்ணம் ஓடியது.

காங்கிரசின் பிடிவாதம்
தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம் பெற காங்கிரஸ் கட்சி மிகவும் அதிகமான - நடைமுறைக்கு சாத்தியமற்ற - தொகுதிகளை பிடிவாதமாகக் கேட்பதும், கூட்டணி நெறிமுறை களிலேயே கேள்விப்படாத வகையில், தாங்கள்தான் அத்தொகுதிகளையும்கூட தேர்வு செய்வோம் என்று நிபந்தனை விதிப்பதும் என்ற நிலை காங்கிரஸ் கட்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கட்சியாகவும், தி.மு.க. அவர்கள் தொடுக்கும் நிபந்தனை ஏற்கும் ஒரு கட்சியாகவும் உள்ளது போன்ற ஒரு தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது.

தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காகவே!
தி.மு.க. தனித்த பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காக மறைமுகமாக அதற்கு போதிய அளவு போட்டியிட வாய்ப்பற்ற ஒரு நிலையை உருவாக்கவே இக்கோரிக்கை என்பது சற்று நிதானமாகச் சிந்திக்கும் எவருக்கும் - நடுநிலையாளருக்கும் தெளிவாகவே புரியும்.

தி.மு.க. இப்படிப்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு தேர்தலை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் தி.மு.க. இருக்கவில்லை.

மக்களுடைய பேராதரவினைப் பெற்று பட்டி தொட்டியெல்லாம் கிளைகளுடன் கட்டுப்பாடு மிக்க தொண்டர்களை, தோழர்களைக் கொண்ட - பல்வேறு சோதனைகளைச் சந்தித்து கரையேறி வெற்றி கொண்ட இயக்கமாகும்.

நிபந்தனைகளுக்குப் பணியத் தேவையில்லை
எனவே, தமிழர்களின் இன உணர்வு, சுயமரியாதை காக்கவே தந்தை பெரியார் கொள்கை லட்சியப்படி அறிஞர் அண்ணா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, இன்று அந்தக் கொள்கைப் பாரம்பரியத்தை விடாமல் தொடரும் மானமிகு கலைஞர், இனமானப் பேராசிரியர் போன்றவர்களால் நடத்தப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற நிபந்தனைகளுக்குப் பணிந்து போகாமல் பெரும்பான்மை வரும் அளவுக்கு தி.மு.க. செயல் வீரர் - வீராங்கனைகளுக்கு அவ்வாய்ப்பினை அளித்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காக்கும் இயக்கம் மீண்டும் பெரு உரு (விஸ்வரூபம்)க் கொள்ள வேண்டும்.
சுதந்திர முடிவெடுங்கள்!

சுதந்திரமாக, முடிவு எடுக்க வேண்டுமென சாதனைச் செம்மல் கலைஞர் அவர்களுக்கும், தி.மு.க.வின் உயர்நிலை, அரசியல் செயற்குழுத் தோழர்களுக்கும் தாய்க் கழகம் சார்பில் கனிவான வேண்டுகோளை முன் வைக்கிறது.

(source: http://viduthalai.in/new/e-paper/4783.html)
கி. வீரமணி
தலைவர்,
                                                                                                                                 திராவிடர் கழகம்


தினமணி, தினமலர்.. அவிட்டுத் திரியை அவிழ்த்து விட்டு ஆடிப்பார்க்கின்றன

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 13 என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.இ.அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்ட ணியும் அமையப் போகிறது.

இதில்  அகில இந்திய ஆரிய தி.மு.க.வின் தலைமைப் பொறுப் பில் இருக்கும் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்து விட வேண்டும், மானமிகு சுயமரியாதைக்காரரான கலை ஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி அமைந்துவிடக்கூடாது  என்பதிலே பார்ப்பனர்கள் பத்தியமாக இருக்கிறார்கள்.

தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க உள்ள கட்சிகளி டையே மித்திரபேதம் செய்து பார்க்கலாம். சிண்டு முடிவதில் தங்களுக்கே உரித்தான சிங்காரக் கலையைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்பதிலே பார்ப்பன ஏடுகள் (குறிப்பாக தினமணி, தினமலர்) அவிட்டுத் திரியை அவிழ்த்து விட்டு ஆடிப்பார்க்கின்றன.

எல்லாவற்றையும் பக்கத்தில் இருந்து பார்த்தது போல எழுதுகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் வார்த்தை களைப் படிக்கும்பொழுது, அது .அவர்களின் ஜென்மத்துடன் பிறந்தது _  அதனை எது கொண்டு அடித்தாலும், அவர்களை விட்டுப் போகாது என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்திருக் கும் ஒவ்வொரு கட்சியின் மீதும் ஒரு சந்தேகத்தை உண்டாக்கவேண்டும் என்னும் எத்து வேலையில் ஈடுபடு கின்றன இந்த அக்கிரகார ஏடுகள். தி.மு.க.வுடன் காங்கிரஸ் உறவு முறியப் போகிறது. அணி மாறுகிறதா விடுதலைச் சிறுத்தைகள்?

பா.ம.க.வின் தயக்கம், - தி.மு.க.வின் வியூகம்;- அதிமுகவுடன் கூட்டணி வைத் தால் மட்டுமே எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பா.ம.க.வினர் கருது கிறார்கள்.

இப்படியெல்லாம் எழுதுகிற தினமணி என்னும் ஆர்.எஸ்.எஸ். ஏடு இவற்றிற்கு ஏதேனும் ஆதாரத்தைத் தருகின்றதா என்றால்... என்று தெரிய வருகிறது என்கிறார் ஒரு மூத்த பத்திரிகையாளர்.

தில்லி வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன. காங்கிர சின் எண்ணம் என்கின்றனர் பார்வையாளர்கள்.

அமைச்சர் எ.வ. வேலு இல்லத் திருமணத்தில் கமெண்ட்  அடித்ததாகத் தெரிகிறது. குமுறு கிறார்கள் அண்ணா காலத்திய தி.மு.க. மூத்த தலைவர்கள்.

போட்டு உடைத்தார் ஒரு முன்னாள் ஜனதா கட்சித் தலைவர்.

- இவைதான் தினமணி உள்ளிட்ட பார்ப்பன ஏடுகளில் அசைக்கவே முடியாத உலக்கைக் கொழுந்து ஆதாரக் குவியல்கள்!

இந்த வகையறாக்களின் மூக்கை உடைக்கும் வகையில் பா.ம.க. -_ தி.மு.க. வுடன் கூட்டணியை உறுதிப்படுத்தி விட்டது.

பார்ப்பன ஏடுகளின் பம்மாத்து முகத்திரையைக் கிழிக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகளும் திமுகவுட னான கூட்டணி அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்தத் தில்லுமுல்லுக் கூட்டம் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனிமேல் தேர்தல் ஆரூடம் சொல்லப் போகிறது?

ஊர் பேசுகிறது, - ஊரார் பேசிக் கொள்கிறார்கள் என்று இந்தப் பார்ப் பனக் கூட்டம், அவற்றின் ஊடகங்கள் பேசுகின்றனவே -_ எழுதுகின்றனவே _- இதைப் படிக்கும் பொழுது புகழ் பெற்ற பொறியாளர் பா.வெ. மாணிக்க நாயக்கர்தான் நினைவுக்கு வருகிறார்.

அவரைப் பற்றிய ஒரு தகவலை இதோ தந்தை பெரியார் கூறுகிறார்:

சுமார் 70 வருடங்களுக்கு முன் திரு. பா.வெ. மாணிக்க நாயக்கர் அவர்கள் ஈரோடு கரூர் டிவிஷனில் அஸிஸ் டெண்ட் இன்ஜினீயராக நியமிக்கப் பட்டபோது, ஒரு ஓவர்சீயரிடம் வேலை கற்க அமர்த்தப்பட்டார்.

பிறகு அவர் அஸிஸ்டெண்ட் இன்ஜினீயர் வேலை ஏற்றுக்கொண்டார். அப்போது அந்த ஓவர்சீயர் மாணிக்க நாயக்கரின் கீழ் வேலை பார்க்க வேண்டியவரானார். இவரின் நடத்தையை மாணிக்க நாயக்கர் வேலை பழகும்போது தெரிந்து இருந்ததினால், சந்தேகப்பட்ட ஒரு காரியத்தைக் கண்டித்தார்.

இது அந்த ஓவர்சீயருக்குப் பிடிக்கவில்லை. நம்மிடம் வேலை பழகின பையன் நம்மைக் கண்டிக்கிறானே! என்று கருதி மாணிக்க நாயக்கருக்குப் புத்தி சொல்லுகிற மாதிரி,

நீங்கள் சிறுவயது; உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். உடனே மாணிக்க நாயக்கர், என் பெயர் ஏன் கெடும்? என்று கேட்டார்.

உங்களைப் பற்றி மக்கள் கண்டபடி பேசுகிறார்கள். இதற்கு இடம் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று ஓவர்சீயர் சொன்னார்.

என்ன பேசுகிறார்கள்? சொல் லுங்கள் என்று மாணிக்க நாயக்கர் கேட்டார்.

நீங்கள் பணம் வாங்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று பேசுகிறார்கள் என்றார் ஓவர்சீயர்.

அந்தப்படி யார் சொன்னார்? சொல்லுங்கள் என்று சற்று கோப மாகக் கேட்டார் மாணிக்க நாயக்கர். அதற்கு ஓவர்சீயர், ஜனங்கள் அப்படி பேசிக் கொள்கிறார்கள் என்று சொன்னார்.

உடனே மாணிக்க நாயக்கர், வாழாமல் உன் வீட்டிற்கு வந்திருக்கும் உன் மகளுக்கும், லஸ்கர் நாராயண சாமிக்கும் சம்பந்தம் உண்டு என்று ஊரெல்லாம் பேசிக் கொள்ளு கிறார்களே? அப்படி நீ வைத்துக் கொள்ளலாமா? என்று கேட்டார்.

உடனே அந்த ஓவர்சீயர் கோபப்பட்டு, எந்த அயோக்கியப் பயல் அப்படிச் சொன்னான்? சொல்லு; முட்டாள் தனமாகப் பேசாதே என்றார்.

உடனே மாணிக்க நாயக்கர் தன் காலில் இருந்ததைக் கழற்றி அந்த ஓவர்சீயரின் தலையில் இரண்டு, மூன்று போட்டார்; பக்கத்திலிருந்தவர்கள் தடுத்து, ஓவர்சீயரைப் பார்த்து, நீங்களும் ஊரில் பேசிக்கொள்கிறார்கள்  என்று சொன்னீர்கள்; அவரும் ஊரில் பேசிக் கொள்ளுகிறார்கள்; என்று சொன்னார். இதில் தப்பென்ன?

உங்களைச் சொன்னதால் உங்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. நீங்கள் அவரைச் சொன்னது அவர் வேலைக்கே ஆபத்தாய் முடியுமே என்று சொல்லி ஓவர்சீயரை மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும்படி செய்தார்கள். இது, கரூர் அக்கால  ஜி.ஙி., யில் நடந்த நிகழ்ச்சி.

இதை ஏன் எழுதுகிறேன் என்றால், அரசியலில் எதிர்க் கட்சி மீது, எதிரிகள் மீது குறை கூறுவதற்காகச் சிலர் எதையும் சொல்லிவிட்டு, அழுத்திக் கேட்டால், மக்கள் அப்படிப் பேசிக் கொள்ளுகிறார்கள் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளுகிறார்கள். அவர்களுக்குப் புத்தி வருவதற்காக உண்மையாய் நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டேன்.

ஊரில் பேசிக்கொள்ளுகிறார்கள் என்பது மிகக் கீழ்த்தரமான மக்கள் தன்மையாகும் என்று எழுதியுள்ளார் தந்தை பெரியார்.

(அறிக்கை - விடுதலை 26-.3.-1969)

இதைவிட எந்த எடுத்துக் காட்டைச் சொல்லி இந்தப் பார்ப்பன மந்தைக்குச் சூடு போட முடியும்?

நடக்க இருக்கும் தேர்தலில் மானமிகு கலைஞர் ஓர் அணியின் தலைவர். எதிர் அணியின் தலைவர் செல்வி ஜெயலலிதா.

கலைஞர் யார்?

தந்தை பெரியாரின் தொண்டர்.

அண்ணாவின் தம்பி.

பதினைந்து வயது முதற்கொண்டு தன்மானக் கொடியை ஏந்தியவர்.

பொது, வாழ்வில் பல களங்களைக் கண்டவர். கஷ்ட, நஷ்டம் என்னும் விலையைத் தந்தவர்.

உழைப்பால் உயர்ந்தவர்
பகுத்தறிவாளர்;
இனவுணர்வாளர்.
ஜெயலலிதா யார்?
தமிழரா?
திராவிடரா?
பகுத்தறிவாளரா?
தன்மான இயக்க வழி வந்தவரா?
களம் கண்டவரா?
காராக்கிரகம் சென்றவரா?
தந்தை பெரியார் கொள்கையை உணர்ந்தவரா?

அறிஞர் அண்ணாவின் இலட்சி யங்களை அறிந்தவரா? - ஏற்றுக் கொள்பவரா?

இந்த இரு தலைமைகளுள் எது வேண்டும்? தோழனே சொல்!

மனுதர்மத்துக்கு மறு பிறவி கிடை யாது என்று கூறும் கலைஞர் எங்கே?

மனுதர்மத்திற்கு மகுடம் சூட்டு வோம் என்று மமதையுடன் செயல்படும் ஜெயலலிதா எங்கே?

ஒரு தகவல் தெரியுமா தோழர்களே?

திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று சொல்லிக் கொண்டு அண்ணா பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் பொறித்துக் கொண்டுள் ளார்;- திராவிட என்ற சொல்லையும் சேர்த்துக் கொண்டு அண்ணா தி.மு.க. வின் அதிகாரப் பூர்வமான நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் நாள்தோறும் இராசி பலன் வெளியிட்டு வருகிறார்களே -_ தெரியுமா உங்களுக்கு?

புத்த மார்க்கத்தை ஆரியம் ஊடுருவிச் சிதைத்தது.

திராவிட இயக்கத்திலே ஆரிய மாது ஊடுருவி உருக்குலைத்திருக்கிறாரே?

இதனை ஏற்கலாமா? ஆட்சி பீடத்தில் அமர வைக்கலாமா?

அய்யாவை நினைத்து முடிவு செய்யுங்கள்.

அண்ணாவை எண்ணி ஒரு முடிவுக்கு வாருங்கள்.

கலைஞரை ஜென்ம விரோதி என்கிறாரே ஜெயலலிதா, இதன் பொருள் என்ன? ஆம், ஜென்ம விரோ தம்தான்! பார்ப்பனர்கள் தமிழர்களுக்கு ஜென்ம விரோதிகள்தானே!

அந்த ஜென்ம விரோதி ஆட்சி சிம்மாசனம் ஏற அனுமதி கேட்கிறார்.

தமிழர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்.?

சாதாரண தேர்தல் அல்ல இது.

ஆரியர் -- திராவிடர் போராட்டம்.

நீங்கள் ஆரியர் பக்கமா? திராவிடர் பக்கமா?

இதுதான் இன்றைய கேள்வி

-------- மின்சாரம்,ஞாயிறு மலர் (05-03-2011)


Friday, March 04, 2011

சோ ராமசாமி தன் மூஞ்சியை எங்கே கொண்டு போய்ப் பதுக்கிக் கொள்வார்?

அழகிரியும் ஸ்டா லினும் ராவணன் - கும்ப கர்ணன் மாதிரி வாழட் டும்! என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் - திமுக தலைவர் மானமிகு மாண் புமிகு கலைஞர் அவர்கள் குமுதம் பேட்டியில் கூறி விட்டாராம். பொறுக் குமா துக்ளக் திருவாளர் சோ ராமசாமி அவர்களுக்கு?

அட்டைப் படத்துக்கு ஒரு கார்ட்டூனுக்கான சமாச்சாரம் கிடைத்து விட்டது - பிழைக்க வேண்டும் அல்லவா!

ஸதுக்ளக்கை நடத் துவதால் எந்தப் பலனும் இல்லை என்று எப்படிச் சொல்வது? எனக்குப் பிழைப்பு நடந்திருக்கிறதே!

(துக்ளக் 24.10.2007 பக்கம் 26)

என்ன  எழுதுகிறார்?

இந்த நேரத்திலே இப்படி   அபசகுனமா வாழ்த் தனுமா? ராவணன் - கும்பகர்ணன் மாதிரி ஆட்சியை இழக்கப் போற மோன்னு கவலையா இருக்குது (துக்ளக் கார்ட்டூன் 9.3.2011)

கும்பகர்ணன் - இரா வணன் என்று கலைஞர் அவர்கள் கூறியது எந்தப் பொருளில்? சோ அதனை திசை மாற்றிக் கூறுவது எந்தப் பொரு ளில்?

பெரிய விவாதப் புலி என்று பார்ப்பனர்கள் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு நிலாச் சோறு ஊட்டுகிறார்களே,   கொஞ்சுகிறார்களே, அந்த அறிவாளியின் அறிவுத் திறன் எந்தத் தரத்தில் உள்ளது என்ப தற்கு இது ஒன்று போதுமே!

மணமக்களைப் பார்த்து இராமனும் சீதை யும் போல வாழவேண்டும் என்று சோ திருக்கூட்டம் சொல்லுகிறதே - அதற் கும் இதுபோல வியாக் கியானம் செய்ய முடியுமே!

அட பாவமே, ஒரு நல்ல மங்கலகரமான நேரத்தில் இப்படி அபச குனமாகப் பேசலாமா?

14 வருஷம் காட்டில் திரிந்து வாழ வேண்டிய பரிதாபத்துக்கு ஆளான வர்களைக் கூறியா ஆசீர்வதிப்பது?

கணவனை விட்டுப் பிரிந்து, மாற்றானால் கடத்தப்பட்டு, அல்லல் பட்ட ஒரு பெண்தானா போயும் போயும் ஆசீர் வாதத்துக்குக் கிடைத் தார்?


தனது கர்ப்பம் கண வனால் சந்தேகிக்கப் பட்டு, அதன் காரண மாகக் காட்டுக்குள் கொண்டு போய் விடப் பட்ட பெண்தானா இவர் களுக்குக் கிடைத்த உதாரணம்?

கடைசியில் ராமன் சரயு நதியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான்.

சீதை பூமி பிளந்து தற்கொலையானாள் என்று தானே வால்மீகி சொல்கிறார்?

இந்த மணமக்களும் தற்கொலை செய்து கொண்டுதானா சாக வேண்டும்? இப்படி அபச குனமா ஆசீர்வதிக்க லாமா? சீ... ச்சீ, இவர் களுக்கு ஏன் இந்த அற்பப் புத்தி? என்று கேட்டால் திருவாளர் சோ ராமசாமி தன் மூஞ் சியை எங்கே கொண்டு போய்ப் பதுக்கிக் கொள் வார்?

---------- மயிலாடன், விடுதலை (04-03-2011)


Wednesday, March 02, 2011

திராவிடர் கழக உறுப்பினர் ஏன் கறுஞ்சட்டை அணிதல் அவசியமாகும்..

20.9.1945 அன்று திராவிடர் கழக 17 ஆவது மாநில மாநாடு திருச்சிராப்பள்ளியில் தந்தை பெரியார் தலைமை யில் கூடியது. அம்மாநாட்டில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் வரலாற்று ரீதியான மிக முக்கிய முடிவு - இயக்கத் தோழர்கள் கறுப்புச் சட்டை அணிவது பற்றியதாகும்.

இயக்கத் தொண்டர் களாயிருப்போர் இயக்கக் காரியங்களைக் கவனிக்கும் போதும், கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதும், கூடுமானவரையில் முழு நேரமும் கறுஞ்சட்டை அணிந்திருக்கலாம். கழக உறுப்பினர்கள் அனைவருமே சமயம் வாய்க்கும்போதெல் லாம் கறுஞ்சட்டை அணிதல் அவசியமாகும் என்று அறி வித்தார் தந்தை பெரியார்.

கறுப்புச் சட்டைப்படை அமைக்கப்படுவதற்கான தற்காலிகப் பொறுப்பாளர் களாக ஈ.வெ.கி. சம்பத், எஸ். கருணானந்தம் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
இந்தப் படையைப் பற்றி குடிஅரசு (17.11.1945) தலையங்கம் இவ்வாறு கூறுகிறது:

கறுப்புச் சட்டைப் படை அரசியலில் ஏதாவது தீவிரக் கிளர்ச்சி செய்யவோ, ஓட்டுப் பெறவோ அல்லது ஏதாவது ஒரு வகுப்பு மக்கள் மீது வெறுப்புக் கொண்டு யாருக் காவது தொல்லை கொடுக் கவோ அல்லது நாசவேலை செய்து நம் மக்களையே பலி கொடுக்கவோ, நம் பொரு ளையே பாழாக்கிக் கொள் ளவோ அல்ல என்பதைத் தெளி வாக வலியுறுத்திக் கூறு வோம். மற்றபடி அடிப்படை எதற்காக என்றால், இழிவு கொண்ட மக்கள் தங்கள் இழிவை உணர்ந்து வெட்க மும், துக்கமும் அடைந்திருக் கிறார்கள் என்பதைக் காட் டவும், அவ்விழிவை நீக்கிக் கொள்ள தங்கள் வாழ்வை ஒப்படைக்கத் தயாராய் இருக் கிறார்கள் என்பதைக் காட்ட வும், அதற்கான முயற்சி களைச் செய்ய தலைவர் கட்டளையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் என்ப தைக் காட்டவுமே ஏற்படுத் தப்பட்டிருப்பதாகும் என்று குடிஅரசு தலையங்கம் பேசு கிறது.

இப்படி ஒரு படை அமைக்கப்பட்டது என்ற வுடன், ஆரியர்களின் வட்டா ரத்தில் கிலி பிடித்துவிட்டது. அதனுடைய தீய விளைவு தான் - மதுரையில் வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் நடைபெற்ற கறுப்புச் சட்டைப் படை மாநாட்டுப் பந்தல் - வைத்திய நாதய்யர் என்ற பார்ப்பனரின் தூண்டுதலால் காலிகளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாகும்.

20 ஆயிரம் கறுப்புச் சட்டைத் தொண்டர்கள் அணிவகுத்து ஊர்வலத்தில் சென்ற அந்த மிடுக்கான அணிவகுப்பு, ஆரிய ஆதிக் கக் கோட்டையை நொறுங் கச் செய்யக் கூடிய ஒரு படையை ராமசாமி நாயக்கர் உண்டாக்கி விட்டார் - அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று திட்டமிட்டு அந்தக் கேவலத்தை அரங்கேற்றினர்.

அரசையும் கவனிக்கச் செய்தது. அதன் விளைவு தான் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் கறுஞ் சட்டைப் படையைத் தடை செய்யப்படுவதாக உத்தர விட்டார்.

அந்த நாள்தான் இந்த மார்ச் 2 (1948). கிரிமினல் சட்டத் திருத்தத்தின் 16 ஆவது பிரிவின்கீழ் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஒரு சட்டத்தினால் இந் தப் படையை அழித்துவிட முடிந்திருக்கிறதா? இன் றைக்கு லட்சோப லட்ச கறுஞ் சட்டைத் தொண்டர்கள் நாட்டில் வீர நடை போட்டுக் கொண்டிருக்கிறார்களே!

இந்த மார்ச் 2 - நம்மை எழுச்சி கொள்ளச் செய்ய வேண்டும் - பெரியார் பிஞ்சு களுக்குக்கூட கறுப்புடை தைத்துக் கொடுக்கவேண் டும். வீடெல்லாம் கழகக் கொடி பட்டொளி வீசிப் பறக்கவேண்டும்.

வாழ்க பெரியார்!

- மயிலாடன்,விடுதலை (02-03-2011)


திராவிடர் கழகத்திற்கு தன்னிலைத் திரிபு என்பது அதற்கு என்றுமே கிடையாது.

(தினமலர், 2.3.2011 பக்கம் 9) தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டாலும் வெளியிட்டார் (விடுதலை, 28.2.2011), தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளில் இருந்தும் அருமையான எதிரொலியை ஏற்படுத்திவிட்டது.

எங்கள் உணர்வின் அலைகளை  உங்கள்  அறிக்கை  வழியாக வடிகாலுக்கு வழி செய்துவிட்டீர்கள் என்ற கருத்தை அனேகமாக அனைவருமே பிசிறு சிறிதும் இல்லாமல் ஒருமித்த முறையில் பாராட்டுகிறார்கள்.

தொலைப்பேசி வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் தங்கள் உள்ளக் கண்ணாடியைத் திறந்து காட்டுகிறார்கள்.

டில்லியில் அதிர்ச்சி என்ற ஒரு ஏடு தம்  சொந்த சரக்கைக் கொட்டுகிறது.
இன்றைய தினமலர் ஏடோ மேற்கண்ட கார்ட்டூனை வெளியிட்டுள்ளது.
யார் யாருக்கு என்னென்ன தோன்றுகிறதோ, அவரவர்களும் அவரவர்கள் கண்ணோட்டத்தில் ஆலாபரனை செய்கிறார்கள்.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவு. திராவிடர் கழகத் தலைவர் வெளியிடும் ஒரு கருத்து, ஓர் அறிக்கை பல தளங்களிலும் அதிர்வை உண்டாக்கக் கூடியது என்பதுதான் அது.

தமிழர் தலைவர், தந்தை பெரியார் அல்லர் - அப்படிச் சொல்லுவதையும் ஏற்றுக் கொள்பவரும் அல்லர் - அதனைக் கண்டிக்கவும் செய்வார்.

அதே நேரத்தில் தந்தை பெரியார் இடத்தில் இருந்து, அய்யா அவர்களின் கண்ணோட்டத்தில், எந்தவித நிர்பந்தங்களும் தன்னிடம் கிட்டே நெருங்க முடியாது என்ற அளவுக்குத் தனித்த முறையில் கருத்தினைத் துணிவுடன் கூறும் தகைமையாளர் என்பது மட்டும் உலகறிந்த உண்மை

அந்த வகையில் வெளியிடப்பட்டதுதான் அந்தச் சுயம் பிரகாசமான அறிக்கை. தேர்தலில் ஈடுபடாத ஒரு இயக்கத் தின் தலைவர் என்பதால் தயக்கமின்றி, தன் மனதில் பட்டதை அழுத்தமாகக் கூறிட முடிகிறது. மானமிகு - மாண்புமிகு கலைஞர் அவர்களின் கருத்தும் அதுதான் என்று தினமலர் கருதுமேயானால் அதுகூட மகிழ்ச்சிக்கு உரியதுதான்.

மானமிகு சுயமரியாதைக்காரர்கள் ஒன்றாகவே சிந்திக்கக்கூடாதா?

கன்னியாகுமரிப் பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால், காஷ் மீரத்தில் உள்ள
பார்ப்பானுக்கு நெறி கட்டுகிறதே, அது எப்படி?
அந்த உணர்வு தமிழர்களிடத்தில் வரக்கூடாதா?

திராவிடர் கழகம் எந்தக் கட்சியை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு. தன்னிலைத் திரிபு என்பது அதற்கு என்றுமே கிடையாது.

பி.ஜே.பி. எதிர்நிலையில், திராவிடர் கழகம் ஒரு முடிவு எடுத்தபோது மக்கள் தலைவர் மதிப்பிற்குரிய ஜி.கே.மூப்பனார், அவர்கள்கூட தமிழர் தலைவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, எங்கள் ராஜகுருவே! என்று விளித்ததுண்டே! இந்த நிலை என்றைக்குமே உண்டு கழகத்துக்கு.
 
பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதெல்லாம் கழகத்திற்கு ஒரு பிரச்சினையே அல்ல!

------- நன்றி விடுதலை, (02-03-2011)


Tamil 10 top sites [www.tamil10 .com ]