வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, February 28, 2010

சோ ராமசாமி! அவசரத்தில் மறந்துபோய்ட்டாளோ!

நீங்கள் ஒரு பழைமைவாதியா என்ற கேள்வி ஒன்றுக்கு திருவாளர் சோ ராமசாமி இவ்வார துக்ளக்கில் கீழ்க்கண்டவாறு பதிலை எழுதியுள்ளார்.

ஆமாம், உண்மைதான். பல பழைய விஷயங்கள் திரும்பவேண்டும் என்று விரும்புகிறவன்தான் நான். ஊழல் இல்லாத நிலை; நீதித்துறை உள்பட எல்லாத் துறைகளிலும் நேர்மை; அரசு அதிகாரிகள் ஆளும் கட்சி ஊழியர்களாகவும், போலீஸார் ஆளும் கட்சியின் அடியாட்களாகவும் செயல்படாத நிலை; மாணவர்கள் ஒரு கட்டுப்பாட்டோடு நடந்துகொண்ட நிலை; ஆசிரியர்கள் பணியைப் புனிதமாகக் கருதிய நிலை.... இப்படி பல பழைய விஷயங்கள் திரும்பி வந்தால் எனக்கு மகிழ்ச்சிதான்.

(துக்ளக், 3.3.2010).ஏன் அதோடு நிறுத்திவிட்டார் அக்கிரகாரத்தின் ஸ்வீகார புத்திரர்?

பழைய வர்ணாசிரமப்படி, மனுதர்ம சாஸ்திரப்படி சூத்திராள் படிக்கக் கூடாது; பிராமணாளுக்குத் தொண்டூழியம் செய்து கிடப்பதே அவாளின் மோட்சத்திற்கு மார்க்கம்.

ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படவேண்டும்.

பழைய சென்னை மவுண்ட் ரோடில் பிராமணாள் உணவு விடுதிகளில் தொங்கிய விளம்பர போர்டுகள் மறுபடியும் இடம்பெறவேண்டும்.

பஞ்சமர்கள், தொழுநோயாளிகள், நாய்கள் உள்ளே நுழையக்கூடாது என்ற அந்தப் பழைய வாசகங்கள் அதில் இடம்பெறவேண்டும்.

ரயில் நிலையங்களில் பிராமணாள், சூத்திரா ளுக்குத் தனித்தனி உணவுக்கான இடங்கள்.

உயர்ஜாதிக்காரர்கள் வீதியில் பஞ்சமர்கள் நடக்கக்கூடாது.

கல்லூரி விடுதிகளிலும், நீதிமன்றங்களிலும் பிராமணாள், சூத்திராளுக்குத் தனித்தனி தண்ணீர்ப் பானைகள் வைக்கப்படவேண்டும்.

மனைவியைப் புருஷன் அடிப்பது குற்றமல்ல என்று தீர்ப்பு சொன்னாரே நீதிபதி முத்துசாமி அய்யர் வாள் _ அதெல்லாம் சட்ட ரீதியாகக் கொண்டு வரப் படவேண்டும்.

தமது பிறந்த வயதைத் திருத்தி தலைமை நீதிபதியாக பதவியை நீட்டித்துக் கொண்டாரே ஜஸ்டிஸ் ராமச்சந்திர அய்யர் _ நீதித்துறைக்கு அத்தகைய வரைத்தான் எடுத்துக்காட்டாகக் கொள்ளவேண்டும்.

கொலைக்குற்றம் சாற்றப்பட்ட மட்டப்பாரை வெங்கட்ராமய்யர் மீதான வழக்கை ஆச்சாரியார் வாபஸ் வாங்கியதுபோல பார்ப்பனர்கள் எந்தக் குற்றம் செய்தாலும் அவர்கள்மீது வழக்கு _ கிழக்கு என்று போடப்படக்கூடாது.

சங்கராச்சாரியார் கொலை செய்திருந்தாலும், அவாளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று சொல்ல வேண்டும்.

ஆச்சாரியார் ஆட்சியில் (1937_39) அமைச்சர் டி.எஸ்.எஸ். ராஜன் அய்யங்கார் 200 மூட்டை நெல்லை வெளி ஜில்லாவுக்குக் கொண்டு போய் விற்பனை செய்தார். அதையும் அமுக்கினார். பிரதம அமைச்சர் ஆச்சாரியார்; நேர்மை என்றால், இப்படித்தான் இருக்க வேண்டும்.

முந்திரா ஊழல் போன்ற பெரிய பெரிய ஊழல் களில் அல்லவா அமைச்சர்கள் ஈடுபடவேண்டும். அதை விட்டுவிட்டு அற்ப சொற்ப ஊழல்களில் ஈடுபட லாமா?

அதனால்தான் பழைமை என்பது எப்பொழுதுமே நல்லது.

பழைமை விரும்பி என்று தம்மீது முத்திரை குத்திக் கொள்ளும் திருவாளர் சோ ராமசாமி இவற்றையெல் லாம் சேர்த்துக் கொள்ளவேண்டியது தானே _

அவசரத்தில் மறந்துபோய்ட்டாளோ!

- கருஞ்சட்டை விடுதலை (28 .02 .10 )

Saturday, February 27, 2010

வாஸ்துவைப் பற்றிப் பேசுபவர்களை மனநல மருத்துவமனையில் சேர்க்கவேண்டியதுதான்

ஜன்கித் மஞ்ச் என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பகவான்ஜி ரயானி என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.


வாஸ்து ஜோதிடத்துக்குத் தடை விதிக்க-வேண்-டும் என்பதுதான் அந்த வழக்கு. அறிவியலுக்கு விரோதமான வாஸ்துவை அனுமதிக்கக் கூடாது என்பதுதான் வழக்கின் சாரமாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்-பெற்றுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க-வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதைச் சுட்டிக்காட்டி, விஞ்ஞான பூர்-வமானதை மட்டுமே அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று தனது மனுவில் சுட்டிக்-காட்டியும் உள்ளார்.

இதில் எதிர் வழக்குதாரர்களாக முக்கிய ஜோதிடர்களை தம் மனுவில் சேர்த்துள்ளார். வேஜன் தாருவாலா, வாஸ்து ஆலோசகர்கள் டாக்டர் ரவிராஜ், ராஜேஷ் ஷா, சந்திரசேகர் குருஜி, பவிக்சங்கவி, பிரம்மார்ஷி, சிறீகுமார் சுவாமிஜி ஆகியோர் எதிர் வழக்குதாரர்களாகக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் சார்பில் வழக்குரைஞர் அத்வைத்சேதனா என்பவர் ஆஜர் ஆனார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் ஜோதிடம் இருந்து வருவதாக அவர் சமாதானம் கூறினார்.

நீண்ட காலமாக ஒன்று இருந்து வருவதா-லேயே அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்-றும் நியாயப்படுத்த முடியாது என்றும் வழக்கைத் தொடுத்த பகவான்ஜி ரயானி அடித்துக் கூறினார்.

மகாராட்டிர மாநில அரசு மற்றும் மத்திய அரசுகளிடம் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் எப்.அய். ரெபெல்லோ, ஜே.எச். பாட்டியா ஆணையிட்டுள்ளனர்.

வாஸ்து சாஸ்திரம் என்பது ஒருபுறம் இருக்-கட்டும். முதலில் இந்த வாஸ்து யார் என்பதை முதலில் முடிவு செய்யவேண்டும்.

ஒருமுறை ஆண்டகாசுரன் என்னும் அசுரனுக்கும், சிவபெருமானுக்கும் பல்லாயிரம் ஆண்டு சண்டை நடந்ததாம். போரில் களைத்துப்-போன சிவன் வியர்வையை வழித்து எறிந்-தானாம் _ சிவனின் வியர்வையும், பூமாதேவியும் ஒன்று கலந்து ஒரு பிள்ளை பிறந்ததாம் _ அந்தப் பிள்ளைதான் இந்த வாஸ்துவாம்.

வாஸ்துவின் பிறப்பே ஆபாசமானதாகவும், அறிவுக்குப் பொருத்தமற்றதாகவும் இருக்கும்போது அவன் பெயராலே சொல்லப்படும் சாஸ்திரமும் வேறு எந்தக் கதியில் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

புகழ்பெற்ற இந்திய அறிவியலாளர் ஜெயந்த் நர்ஸிகர் வாஸ்து என்பது மூட நம்பிக்கையைச் சார்ந்தது. பழைய புராண கருத்துக்களை புதிய கருத்துகளோடு பொருத்திப் பார்க்கக் கூடாது. அறியாதவர்களால் அறிவியல் என்று சொல்லப்-படுகின்ற ஜோதிடம் போன்ற மூட நம்பிக்கைகள் மக்களிடம் பரவாமல் தடுக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

வாஸ்து சாஸ்திரமும், உள்நாட்டுக் கட்ட-டக்கலையும் எனும் தலைப்பில் அய்தராபாத் ஜே.என். தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய கட்டடக் கலைத் துறைப் பேராசிரியர் ஆர்.வீ. கோல்ஹ் தாட்தார் அவர்கள், கட்டடக் கலைபற்றிய வரலாற்றைப் படிப்பவர்கள் வாஸ்து சாஸ்திரம் என்ற ஒன்று இருக்கிறது; கட்டடம் கட்டுவோர் சிலர் அதனைப் பின்பற்றிக் கட்டடங்களை எழுப்பினர் என்கிற அளவுக்கு அறிந்து கொள்ளலாமே தவிர, வாஸ்து சாஸ்திரத்தை இன்னும் பின்பற்றுவதும், அதன் அடிப்படையில் இருக்கின்ற கட்டடத்தை இடித்துப் புதிதாகக் கட்டுவதும் அறிவுடைமை ஆகாது என்று கூறினாரே!

ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்த என்.டி. ராமராவ் வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ளவர். தலைமைச் செயலகத்தின் நுழைவுவாயிலையே மாற்றினார். அதனால் கண்ட பலன் என்ன?

5 ஆண்டு முழுவதுமாக ஆட்சி புரிய முடியவில்லையே _ உயிருடனும் இருக்க முடியவில்லையே! இதற்குப் பிறகும் வாஸ்துவைப் பற்றிப் பேசுபவர்களை மனநல மருத்துவ-மனையில் சேர்க்கவேண்டியதுதான்.

விடுதலை தலையங்கம் (27.02.10)

வியர்த்து விறுவிறுத்துப் போய்விட்டார் சாய்பாபா..

இந்தியாவின் புகழ்பெற்ற தந்திரக்கலை (மேஜிக்) நிபுணர் பி.சி. சர்க்கார். அவருக்கு மத்திய அரசு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டுப் பெரு-மைப்-படுத்தியிருக்கிறது. இதற்குமுன் பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. அவர் மறைந்து எட்டாண்டு-களுக்-குப்பின் கொல்கத்தா நகராட்சி ஒரு தெருவுக்கு இவரின் பெயரைச் சூட்டிச் சிறப்பு செய்தது. 


இவர் செய்த தந்திரக் கலை என்பது மூட நம்பிக்-கை-களைச் சார்ந்ததல்ல; அறிவியல் பூர்வமாகவே நடத்தி வந்தார்.

இவரது நிகழ்ச்சி என்பது _ இசை, நடனம் உள்ளிட்ட பல கலை வண்ணங்கள் ஒளிரும் கலவையாகக் கண்-டோரை ஈர்க்கும் சிறப்புத்-தன்மை உடையது.

பணம் கொடுத்து அனு-மதிச் சீட்டு வாங்கி மக்கள் ஆர்வத்தோடு ஓடோடிப் பார்க்கும் ஒரு நிலையை ஏற்படுத்தினார். அத்தகைய தந்திரக்கலை மன்னருக்கு நடுவண் அரசு இத்தகைய சிறப்பு செய்தது பாராட்டத்-தக்கதாகும்.

கடவுள் சக்தியென்று கூறி, கையசைப்பில் பொருள்களை வரவழைப்பதாகக் கூறும் சாய்பாபாவை சந்திக்க பி.சி. சர்க்கார் விரும்பினார். ஒவ்-வொரு முறையும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தன்னை அசாம் வியாபாரி என்று கூறிக்கொண்டு, தனக்கு ஆஸ்துமா நோய் நெடுநாளாக இருப்பதாகவும், சாய்பாபா-விடம் குணப்படுத்திக் கொள்கிறேன் என்று கூறிக்-கொண்டு சாய்பாபா ஆசிர-மத்துக்குள் நுழைந்துவிட்டார் பி.சி. சர்க்கார். ஒவ்வொரு-வராகத் தரிசனத்துக்காக அழைத்தார் சாய்பாபா.

பி.சி. சர்க்காரும் அழைக்-கப்பட்டார். சாய்பாபாவைச் சுற்றி அவரைச் சேர்ந்த சீடர்கள் உட்கார்ந்திருந்தனர்.

அசாம் மொழி, இந்தி மொழி ஆகியவற்றைக் கலந்து பேசினார் சர்க்கார். சாய்-பாபா-வால் அதனைப் புரிந்து-கொள்ள முடியவில்லை. மொழி பெயர்ப்பாளரை அழைத்துக்கொண்டு வந்தனர் (அவர்தான் பகவான் ஆயிற்றே _ அசாம் மொழி தெரியாதது ஏனோ?)

உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டார் சாய்பாபா. ஆஸ்துமா வியாதி இருக்கிறது; அதைக் குணப்-படுத்திக்கொள்ளவே இங்கு வந்தேன் என்றார் சர்க்கார். மந்திரத்தால் விபூதி கொடுத்து ஆசீர்வதிக்குமாறு வேண்டி-னார். கைவசம் வைத்திருந்த விபூதி தீர்ந்துவிட்ட நிலையில், ஒரு நிமிடம் சாய்பாபா திகைத்தார்.

சூ போட்டு சந்தனம் கொடுத்து ஆசீர்வதித்தார். பி.சி. சர்க்காரே கடைந்-தெடுத்த தந்திரக்கலை நிபுணர் ஆயிற்றே _ நடந்தது என்ன என்பதை நுனிப்பொழுதில் தெரிந்துகொண்டார்.

பலகாரத் தட்டு ஒன்றை எடுத்து வந்து சாய்பாபாவின் சீடர் அதில் சந்தனத்தையும் போட்டார்; அதை சர்க்காரும் கவனித்துவிட்டார் (பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா!) அவ்வளவுதான் பி.சி. சர்க்கார் திடீரென்று சாய்பாபா செய்த அதே தந்திரத்தைக் கையாண்டு, ரசகுல்லா ஒன்றை வரவழைத்து சாய்-பாபாவிடம் கொடுத்தாரே பார்க்கலாம் (பக்கத்தில் பலகார தட்டு இருந்தது அல்லவா!).

அவ்வளவுதான் வியர்த்து விறுவிறுத்துப் போய்விட்டார் சாய்பாபா; சீடர்கள் கூச்சல் போட்டு என்ன பயன்? பக-வானின் வேடத்தைக் கலைத்-தெறிந்து கம்பீரமாக வெளியில் வந்தார் பி.சி. சர்க்கார் (ஆதாரம்: இம்பிரிண்ட், ஜூன் 1983) என்ன, பி.சி. சர்க்காருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது சரிதானே!

மயிலாடன் விடுதலை (27.02.10)

Thursday, February 25, 2010

செவ்வாய் கிரகமும் செவ்வாய் தோஷமும்

"செவ்வாய் கிரகமும் செவ்வாய் தோஷமும்" என்ற நூலை படித்தேன். பல ஜோதிட புளுகளுக்கு கேள்விகள் மற்றும் பதில்கள் அறிவியல் ஆதரங்களுடன்  விளக்கங்களுடன் எழுதி உள்ளார் இந்த நூலின் ஆசிரியர் ஏற்காடு இளங்கோவன். அதனை தொகுத்து ஒரு பதிவுதான் இது.

மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது திருமணம் ஆகும். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் திருமணத்தின் போது ஜாதக பொருத்தம் பார்கிறார்கள். செவ்வாய் தோஷம் உள்ள ஒரு ஜாதகத்திற்கு அதே தோசம் உள்ள ஒருவருடன் திருமணம் செய்ய வேண்டும். இல்லையேல் ஆபத்து. பெண்ணாக இருந்தால் கணவருக்கும் மாமியாருக்கும் ஆபத்து. மேலும் விவகாரத்து, பிரிவு மரணம் போன்ற பல நடக்கும், பிறக்கும் குழந்தைக்கு ஆபத்து எனவும் சொல்லுகிறார்கள். இதனை நம்பவும் ஒரு கூட்டம்.


கிலோ கணக்கில் தங்கமும், டன் கணக்கில் சீர்களும் செய்யத் தயாரானால் அதே செவ்வாய் தோஷம் கொண்ட பெண்ணை திருமணம் செய்துகொண்டு போவது எப்படி? நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, பார்பனர்கள் வேதம் ஓத நடந்த கண்ணகி கோவலன் வாழ்வில் சோக முடிவுகள் ஏற்படவில்லையா? நடந்த எல்ல விவகாரதுகளும் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதக காரர்களுடயாத? விதவைகள் எல்லோருன் செவ்வாய் தோசம் உடையவர்களா? உடல் ஆரோக்கியம் குடும்ப சூழல் என பல காரணிகளால் பிரச்சனைகள் ஏற்படலாம். அதற்கும் செவ்வாய் தோஷம் என முடிச்சு போடுவது அறிவீனம் இல்லையா?

அதாவது ஜாதகத்தில் லக்கனம், ஜென்மராசி மற்றும் சந்திரன் இருக்கும் இடம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் உள்ள சாதகம் ஆகும். உதாரணமாக மேஷ லக்கன ஜாதககாரருக்கு ரிசபம்,கடகம்,துலாம்,விருச்சிகம்,மீனம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருப்பின் அவர் செவ்வாய் தோஷம் உடையவராவர்.

இப்படி பார்க்கும்போது 12 ராசிகளில் 6 ராசிகள் செவ்வாய் தோஷம் உடையதாகி விடுகிறது. அப்படி என்றால் பிறப்பதில் பாதிப் பேர் (50 சதவீதம்) தோஷம் உடையவர் ஆகிவிடுகிறார்கள். இப்படி பாதிப் பேர் தோஷம் உடையவர் என சொல்லிவிட்டால் ஜோதிடத்தின் மீது உள்ள நம்பிக்கை போய்விடும் அல்லவா? ஆகவே இதில் விதிவிலக்குகள் கொடுக்கிறார்கள். சனி,ராகு,கேது,குரு,சூரியன் செவ்வாயுடன் இருந்தால் அந்த ஜாதகம் செவ்வாய் இல்லாதது என்பர். மேலும் சிம்மம்,கடகம் ஆகிய வீடுகள் தொசமற்றதாகி விடுகின்றன. இது போல் இன்னும் பல பரிகாரங்கள் உள்ளன. அனால் இதையும் மீறி செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பிறக்கீரார்கள்.

எப்படி பார்த்தாலும் தினமும் இரண்டு மணி நேரத்தில் பிறக்கிற குழந்தைகள் செவ்வாய் தோஷம் உடயவர்கலகா பிறக்கின்றனர். எப்படி என்றால் சூரியன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டுமணி நேரம் இருப்பார். அவர் 12 ராசியை கடக்க 24 மணி நேரம் ஆகிறது. ஆக பல நிவர்த்திகள் கிடைத்தாலும் குறைந்தது இரண்டு மணிநேரத்தில் செவ்வாய் தோசம் உடைய குழந்தைகள் பிறப்பார்.


2007 ம் ஆண்டு இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 30 குழந்தைகள் பிறந்தன. ஒரு மணிக்கு 1815 குழந்தைகளும், ஒரு நாளைக்கு 43560 குழந்தைகளும் பிறந்தன. இதில் குறைந்தது தினமும் 3630 குழந்தைகள் தோசமுடைய குழந்தைகளாகும். ஆனால் உண்மையில் மிக அதிகமானவர்கள் செவ்வாய் தோசம் உடயவர்கலகின்றனர். இதனை பார்க்கும் போது செவ்வாய் தோஷம் இவர்கள் வாழ்கையை கேள்விக்கு உள்ளக்கி விடுகிறது. ஆனால் உண்மையில் செவ்வாய் தோஷம் பற்றி எல்ல ஜோதிட சாஸ்திரங்களும் வலியுறித்தி சொல்லப்படவில்லை என சோதிட ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஜோதிட புளுகுகள் இத்துடன் விட்டுவைக்கவில்லை R .H நெகடிவ் ரத்தத்துடன் இந்த தோசத்தை இன்னைத்து வலு சேர்க்க பார்கிறார்கள். புளுகு மூட்டைகள்.


இரத்த வகைகளில் R.H நெகடிவ் இரதம் உடையவருக்கு அதே இரத்த வகையை சார்ந்தவருடன் தான் திருமணம் செய்ய வேண்டும்.அப்படி இல்லை என்றால் குழந்தை பிறக்காது .அல்லது பிறந்த குழந்தை இறந்து விடும் .ஆனால் தற்போது இதற்க்கு ஊசி மருந்து கண்டு பிடித்து விட்டார்கள்.இந்த பிரச்சனைக்கு முடிவு ஏற்பட துடன்கிவிட்டது.

ஆனால் ஜோதிடர்கள் ஜோதிடம் உண்மை எனக் கூறுவதற்காக R.H நெகடிவ் இரத்த வகிக்கும்,செவ்வாய் தோசத்திற்கும் தொடர்பு உள்ளது என கூறி வருகிறார்கள்.செவ்வாய் கிரகம் இரத்த நிறம் கொண்டது இதற்கும் இரத்தத்திற்கும் தொடர்பு உண்டு செவ்வாய் தோஷம் உடையவர்களுக்கு R.H நெகடிவ் இரத்த வகை உள்ளது என்கிறார்கள்.

ஆனால் அதற்க்கான ஆதாரம் எதுவும் கூறவில்லை .ஆனால் இதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தியாவில் சுமார் 3 முதல் 4 சதவிதம் பேர் R.H நெகடிவ் ரத்த வகை கொண்டவராக உள்ளனர்.செவ்வாய் தோஷம் உடையவர்களோ யார் யார் என ஜோதிடர்கள் கூறினார்களோ அவர்களின் ஜாதகத்தை பெற்று அவர்களுக்கு இரத்த வகையை பரிசோதித்து பார்த்துள்ளனர்.இதில் 99 சதவீதத்திற்கு மேலானவர்களுக்கு RH இரத்த வகை இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பல்வேறு பிரச்சனைக்கு காரணம் சமுக பொருளாதார பிரச்சனைகள் தாம் என்பது நன்கு ஆலோசனை செய்பவர்களுக்குப் புலனாகும்.நோய்க்கு காரணம் கிருமிகள் தான் என்பதை ஏற்கனவே விஞ்ஞானிகள் நிருபித்துள்ளனர்.அதனால் தான் நோய் வந்தவுடன் மருத்துவரை நாடுகிறார்கள்.

வளர்ந்திருக்கும் அறிவியல் வளர்ச்சியை கொண்டு மனிதனின் பிரச்சனைகளை தீர்க்க முடியும். பிரச்சனைக்கான காரண காரியங்களை கண்டறிந்து அதனை தீர்ப்பதற்கு முயற்சிமேர்க்கொள்ள வேண்டும். எந்த செவ்வாய் கிரகத்தால் ஆபத்து, தோஷம் என்கிறோமோ அதே செவ்வாய் கிரகத்தில் மனிதன் தன் கால்களை விரைவில் பதிக்கப்போகிறான். அங்கெ தங்கி ஆய்வு செய்ய ஆய்வகமும் கட்டப்போகிறான். இந்த மூட நம்பிக்கையில் இருந்து விடுதலை பெற்று பகுத்தறிவோடு சிந்தித்து ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்போம்

Wednesday, February 24, 2010

பவளவிழா இந்த ஜென்மத்துக்கு ஒரு கேடாம்!

உலகத் தமிழ் செம்மொழி மாநாட் டிற்கு சமயச் சான்றோர்களையும், மடாதிபதிகளையும் அழைக்க வேண் டும்; ராம. கோபாலன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.


ஹிந்து தர்மம் தீண்டாமையை ஆதரிக்கவில்லை.

அனைத்துப் பிரிவு மக்களும் தங் களுக்குள் ஜாதி பாகுபாடு பார்க்கக் கூடாது.
ஹிந்து தர்மத்தை நிலைநாட்ட சாத்வீகமான முறையில் நாம் முயற்சி செய்தாலே நம்மை தீவிரவாதிகள் என்கிறார்கள். தீவிரவாதிகளை நல்லவர்களாகப் பார்க்கிறார்கள் - இன்றைய அரசியல்வாதிகள்.- இவ்வளவையும் தம் திருவாயிலிருந்து (?) அருளியிருப்பவர் வேறு யாருமல்லர். இ.பி.கோ. 302, 120-_பி, 34, 201 ஆகிய குற்றப் பிரிவுகளில் கைதாகி, 61 நாள்கள் வேலூர் சிறையில் கம்பி எண்ணி, இப்பொழுது ஜாமீனில் வெளி வந்து திரிந்து கொண்டிருக்கும் சாட்சாத் மாஜி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதிதான். (பேட்டி காமகோடி பிப்ரவரி 2010)

கொலை வழக்கில் மட்டுமல்ல; - அரு-வருப் பான வகையில் பாலியல் சமாச்சாரங்-களிலும் கேவலமாகப் பேசப்பட்டவரும் இவரே!

பவளவிழா என்று சொல்லி ஊருக்கு ஊர் விழாவும். இந்த ஜென்மத்துக்கு ஒரு கேடாம்!

பெரிய அறிவாளி என்ற நினைப்பில் பேட்டி வேறு கொடுக்கிறார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்குச் சமயச் சான்றோர்களையும், மடாதிபதிகளையும் அழைக்க வேண்டுமாம்.

இவர் கூற்றுப்படி தவத்திரு குன்றக்குடி அடிகளார் அழைக்கப்பட்டால் போதும்-தானே? ஏற்றுக்கொண்டு முடங்கிக் கிடக்க வேண்டியதுதானே?

தமிழ்ப் பற்று, தமிழில் புலமை, அருவி போல வெண்கல நாதத்தில் பேசும் திறன் உள்ள இவரை விட எந்த மடாதிபதி அழைக்கப்-படவேண்டும்?

கண்டிப்பாக காஞ்சி வகையறா சங்கராச்சாரி யார்களை அழைக்க முடியாது -_ கூடாது காரணம், பூஜை வேளையில் அவாள் தமிழ் பேசமாட்டார். காரணம் தமிழ் நீஷப்-பாஷையாம். அப்படி தமிழில் பேசிவிட்டால் ஒவ்வொரு முறையும் ஸ்நானம் செய்ய வேண்டும். அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார் இந்தக் குட்டைப் போட்டு உடைத்து-விட்டாரே!

2) ஹிந்து தர்மம் தீண்டாமையை ஆதரிக்க வில்லை என்று கூறியுள்ளார். இதாவது உண்மையா? தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்னவர் யார்? இவரின் மூத்தார் சாட்சாத் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற மறைந்த சங்கராச்சாரியார்தானே?

(ஆதாரம்: சிறீ ஜெகத்குருவின் உபதேசங்கள் (2ஆம் பாகம்)

அவரை விட்டுத் தள்ளுவோம். தீண்டா-மைக்கு எதிராக காஞ்சிபுரத்துக்கும் கல்கத்தாவுக்கும் வாயை அகலத் திறக்கும் இதே ஆசாமி எப்படி நடந்து கொண்டிருக்கிறார்?

10.-11.2002அன்று மதுரை மாவட்டம் தும்பைப் பட்டிக்குச் சென்றார் ஜெயேந்திரர். அவ்வூர் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த ஊர். அவ்வூர் வீரகாளியம்மன் கோயிலில் வந்து இறங்கினார். அக் கோயில் பூசாரி தாழ்த்தப்-பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர். அவர் தீப ஆராதனை காட்டினார். அதனைக் கும்பிட்ட ஜெயேந்திரர் அவர் கொடுத்த பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ள-வில்லை. அவரை யாரும் நெருங்கிவிடாதபடி கவனித்துக் கொண்டனர் அவரின் பாது-காவலர்கள். சுவாமிகளை யாரும் தொட்டு-விடக்கூடாது என மைக்கில் திரும்பத் திரும்ப அறிவித்துக் கொண்டேயிருந்தனர். ஜெயேந்-திரரும் தன் தோளில் அணிந்திருந்த சால்-வையை எடுத்து தலித்துகள் தன்னைத் தீண்டி விடாதபடி கால்களை மறைத்துக் கொண்டார்.

கோயில் நிகழ்ச்சிக்குப் பின் கக்கன் நினைவு மண்டபத்துக்கு வந்து ஜெயேந்திரர் மாலை-யிடுவார் எனத் திட்டமிடப்பட்டு இருந்ததால், மக்களும் அங்கு காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அங்கு செல்லாமல் புறப்பட்டு-விட்டார். (நக்கீரன் 19-11-2002)

ஹிந்து மதத்தில் தீண்டாமைக்கு இடம் இல்லை என்பதற்காக இலட்சணம் இதுதானா?

ஜாதி பாகுபாடு பார்க்கக் கூடாது என்று பறைசாற்றுகிறாரே -_ பூணூல் என்பது ஜாதியின் சின்னம்தானே _ அந்த ஜாதியின் சின்னமான பூணூலை மூன்று கிலோ எடையுள்ள தங்-கத்தில் செய்து திருப்பதி ஏழுமலையானுக்கே அணிவித்த (கடவுளையே தம் ஜாதிக்குள் அடைத்த) மாபெரும் ஜாதி ஒழிப்பு வீரர் ஆயிற்றே இவர்?  (ஆதாரம் - மாலைமலர் 16-3-2002)

தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பைப் பற்றி யார்தான் பேசுவது என்ற லஜ்ஜையே இல்லாமல் போய்விட்டதே!

(3) ஹிந்து தர்மத்தை நிலைநாட்ட சாத்வீகமான முறையில் நாம் முயற்சி செய்தாலே நம்மைத் தீவிர வாதிகள் என்கிறார்களே என்று மிகவும் தான் ஆதங்கப்படுவதாக அலட்டிக் கொள்கிறார். அடடா, இவர்களின் சாத்வீகம் பற்றி மக்களுக்குத் தெரியாதா?

1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதே இந்த இந்துத்-துவாவாதிகளால் _ அதல்லவா சாத்-வீகத்துக்கான சாட்சாத் எடுத்துக்-காட்டு?

இந்தப் பெரிய மனுஷர் ஜெயேந்-திரர் என்ன சொன்னார் தெரியுமா? அயோத்தியில் கட்டடத்தை இடித்-தது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக மத்திய அமைச்சர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகி-யோர் பதவி விலகத் தேவையில்லை.  (தினமணி 27-11-2000)

அயோத்தியில் அயோக்கியர்கள் கூட்டம் இடித்தது முசுலிம் மக்களின் வழிபாட்டுத் தலம் அல்ல-வாம் _ வெறும் கட்டடம்தானாம்.

இப்படி சொல்பவர்கள்தான் சாத்வீக வாதிகளாம். அடேயப்பா, இவர்களின் வாயில் தப்பித் தவறிக்-கூட உண்மை என்பது பிரசவம் ஆகாதா?

21 ஆம் நூற்றாண்டின் பகுதியி-லும் மனித சமத்துவத்துக்கு எதிரான ஒரு கூட்டம் -_ அதற்கு ஒரு தலைவர் - அவருக்குப் பெயர் லோக குரு - _ அவர் கொலைக் குற்றவாளி என்ற பட்டியலிலும் இருப்பார் _ காம கே()டிகளாகவும் இருந்தாலும் பவளவிழா நாயகராக உலா வர முடிகிறது என்றால்,

இந்த ஆபாசத்தை என்ன சொல்ல? இந்தக் கூட்டத்தை என்ன பெயர் சொல்லி அழைக்க?

நன்றி: விடுதலை ஞாயிறு மலர் (20.02.10)

Tuesday, February 23, 2010

பல்துலக்கப் பயன்படும் பசை பாத்திரம் துலக்க பயன்படுத்தினால்.....

ரயிலேறி ராமேசுவரம் போவதும் ரோட்டரிமிஷினில் ரமணர் நூல் அச்சாவதும் ரேடியோவில் சங்கராச்சாரி பேசுவதும், காமிராகொண்டு கருட சேவையை படம் பிடிப்பதும் டெலிபோன் மூலம் தெப்ப உற்சவ நேரத்தை விசாரிப்பதும் இவை போன்றவை இங்கு அநித்ய நிகழ்ச்சிகள் அல்லவா? இது சரியா? பல்துலக்கப் பயன்படும் பசை பாத்திரம் துலக்க பயன்படுத்தினால், கல் உடைக்கும் கருவியைக்கொண்டு எலியைச் கொல்லக் கிளம்பினால் என்ன எண்ணுவர்? என்ன கூறுவர்? அது போல புத்தறிவு, புது வாழ்வுக்கு வழி செய்ய ஏற்பட்டிருக்கும் அந்த புத்தறிவு தரும் சாதனங்களைக் கொண்டு பழைய வாழ்க்கையை நடத்த முற்படுபவர்களைப் பற்றி என்ன எண்ணுவது? என்ன கூறுவது?

(அறிஞர் அண்ணா கட்டுரையில் இருந்து.... திராவிடநாடு 21.12.1947)

Monday, February 22, 2010

அக்கிரகாரத்து அம்மிக்குழவி ஆகாயத்தில் பறப்பது ஏன்?

கேள்வி: தமிழ்ச் சமு-தாயம் முன்னேற ஜாதி உணர்வை அகற்றவேண்டும் என்ற கருணாநிதியின் யோசனை குறித்து?


பதில்: நீதிபதி தினகரன் முதல் மத்திய அமைச்சர் ராஜா வரை குற்றம் சாற்றப்-பட்டவர்களின் ஜாதியை முன்-னிறுத்தி வாதம் புரிகிற-வருக்கு,

இப்படியும் பேச மனம் வருவது ஒரு விசித்திரம் தான். தான் என்ன பேசினா-லும் மக்கள் ஏற்பார்கள் என்ற நினைப்பு முதல்-வருக்கு முழுமையாக வந்து-விட்டது.

_(துக்ளக் 24.2.2010)

இப்படி எழுதுகிறவர் யார் தெரியுமா? ஆண்டு-தோறும் பூணூலைப் புதுப்-பித்துக்கொள்கிற சோ ராமசாமி தான்.

தாழ்த்தப்பட்ட சமூகத்-தைச் சேர்ந்த நீதிபதி தின-கரன் சென்னை உயர்நீதி-மன்ற நீதிபதியாக இருந்த நேரத்திலும், கருநாடக மாநிலத் தலைமை நீதிபதி-யாக இருந்த நேரத்திலும் அவர் மீது பாயாத குற்றச்-சாற்று, அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் போகிறார் என்றவுடன் அக்கிரகாரத்து அம்மிக்குழவி ஆகாயத்தில் பறப்பது ஏன் என்பதுதான் நமது கேள்வி.

சென்னை உயர்நீதிமன்-றத்தின் தலைமை நீதிபதி-யாக இருந்த ராமச்சந்திர அய்யர் வயதைத் திருத்தி பதவியை நீட்டிக்கொண்ட-போது, நேர்மையான முறையில் பார்ப்பனர்கள் எதிர்த்திருந்தால் அவர்-களுக்கு ஜாதிப் புத்தி இல்லை போலும் என்று நினைத்திருக்கலாம், கண்டு கொள்ளவில்லையே.

கொலைக்குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு 61 நாள் சிறையில் இருந்தவர் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதி, அவ-ரைப் பற்றி ஊரு உலகத்-துக்கே தெரியும்.

இருந்தும் கொலை வழக்கில் சங்கர மடத்துக்கு அநீதி நடந்துள்ளது என்று இந்தியா டுடேக்கு (9.2.2005) பேட்டி கொடுத்தாரே, திரு-வாளர் சோ_ இதற்குப் பெயர் ஜாதிப் புத்தி இல்-லாமல் வேறு என்ன புத்தியாம்?

வீரமணியிடம் சோவை நான்தான் அனுப்-பினேன். நான் தயாரித்த கேள்விகளைத் தான் சோ வீரமணியிடம் கேட்டார் என்று சின்னக்குத்தூசியிடம் ஜெயேந்திர சரஸ்வதி சொன்ன குட்டை எதிரொலி ஏட்டிலே (3.4.1983) சின்-னக்குத்தூசி போட்டு உடைத்து-விட்டார். மற்றவர்களுக்குக் கையா-ளாக செயல்படக் கூடியவர் சோ என்று அம்பலமான-தும், உயிர் நாடியில் தேள் கொட்டியது போல துடி-துடித்தார் சோ.


நியாயமாக சோ என்ன செய்திருக்க வேண்டும்?. சங்கராச்சாரி சொன்னது உண்மைக்கு மாறானது என்-றால் அவரிடம் சண்டைக்-குத் தானே போயிருக்க வேண்டும்?.


அவாளின் ஆதர்ஷப் பெரியவாளாயிற்றே! என்ன எழுதினார் சோ?.

இப்பொழுது நான் ஒரு தர்மசங்கடமான நிலையில் இருக்கிறேன். சுவாமிகள் சொன்னது சரியல்ல என்று நான் மறுத்தே ஆக வேண்டும். பட் அய் ஹேவ் ரெஸ்பெக்ட் ஃபார் தட் இன்ஸ்ட்டிட்யூஷன் என்றாரே பார்க்கலாம்.

மறுக்க வேண்டிய இடத்-தில் மறுக்காததோடு அந்த மடத்தினிடத்தில் மரியாதை வைத்துள்ளேன் என்றாரே! இதற்குப் பெயர் என்னவாம்?.

இந்த ஜாதிப் புத்தியும், இனவெறியும் கொண்ட-வர்தான் தாழ்த்தப்பட்ட மக்-களுக்காக வக்காலத்து வாங்-கும் கலைஞரைத் தூற்று-கிறார்.

-விடுதலை (22.02.10) மயிலாடன்

Saturday, February 20, 2010

சோ கூட்டம் சங்கராச்சாரியார் விஷயத்தில் என்ன எழுதுகிறது

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் படுகொலை வழக்கில் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, ஜூனியர் விஜயேந்திர சரஸ்வதி முக்கியக் குற்றவாளி பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.


இதில் 370 சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டியுள்ளன. இதுவரை 59 சாட்சிகள் விசாரிக்கப்பட்டதில் 30 சாட்சிகள் பிறழ்-சாட்சி யாக -_ பல்டி அடித்துள்ளனர் என்பது அதிர்ச் சிக்குரியதாகும்.

மிக முக்கியமான வழக்கில், இந்தியா முழு-மையும் அறியப்பட்ட வழக்கு ஒன்றில் இத்-தனைப் பேர் பிறழ் சாட்சியாக அமைந்திருப்-பது இதுதான் முதல் தடவை என்று கூறப்படுகிறது.

அதுவும் படுகொலை செய்யப்பட்ட சங்கரராமன் துணைவியார் மற்றும் குடும்-பத்தினர் இந்தப் பிறழ்சாட்சிப் பட்டியலில் இடம் பெறுவது மேலும் அதிர்ச்சிக்குரிய-தாகும்.

தொடக்கத்தில் இவர்கள் ஜெயேந்திரர் மீது எத்தகைய குற்றச்சாற்றுகளை எல்லாம் பகிரங்கமாகத் தெரிவித்தனர் என்பது பொது மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்தப் பல்டிகளுக்கான காரணங்கள் ஆரா-யப்பட வேண்டும். இல்லாவிட்டால் பரவ-லாக மக்களால் பேசப்படும் ஒரு வழக்குக்கே இந்தக் கதி என்றால், மற்ற மற்றவைபற்றி மக்கள் மத்தியில் எத்தகைய மதிப்பினைப் பெறும் என்பது மிகவும் முக்கியமாகும். பிறழ் சாட்சி சொன்னால் தண்டனையும் உண்டு; அந்தக் கண்ணோட்டத்திலும் இது அணுகப்பட வேண்டும். கொலை வழக்கு மட்டுமல்ல; பாலியல் தொடர்பான சமாச்-சாரங்களும் உண்டு; அவற்றின் மீதும் வழக்-குத் தொடுக்க அதிக வாய்ப்புகள் உண்டு. பாதிக்கப்பட்டவர்களே பட்டாங்கமாய் செதிர்-காயைப் போல உடைத்துக் காட்டியிருக்-கிறார்கள்.

பொது மக்கள் மத்தியில் இவ்வளவு அவமானப்பட்டும்கூட கொஞ்சமும் அதுபற்றி வெட்கப்படாமல் லோகக் குருக்கள் ராஜநடை போட்டுத் திரிகிறார்கள். இதில் பவள விழாவாம். பதாகைகள் ஊரெங்கும்.


ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் சோ கூட்டம் சங்கராச்சாரியார் விஷயத்தில் அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது என்று எழுது-கிறது. பார்ப்பனப் பாசம் பட்டுத் தெறித்தது போல் பளிச் சென்று தெரியவில்லையா?

எவ்வளவுக் கேவலமாக நடந்து கொண்-டாலும், ஊர் சிரித்தாலும் தங்களவாளை எப்படியெல்லாம் பார்ப்பனர்கள் தூக்கி நிறுத்து-கிறார்கள் என்பதைப் பரிதாபத்துக்குரிய பார்ப்-பனர் அல்லாதார் புரிந்து கொள்வது எக்காலமோ!

விடுதலை ஞாயிறு மலர் (20.02.10)

சமூக நீதிக்குச் சாவுமணியா?

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட இருப்ப-தாகக் கூறப்படும் உயர் கல்விக்கான தேசிய உயர்கல்வி மசோதா நாட்டில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.


தமிழ்நாடு அரசின் கருத்து இதில் உடனடி-யாகத் தெளிவுபடுத்தப்பட்டு இருப்பது ஒரு புறம்; சமுதாய இயக்கமான திராவிடர் கழகத்தின் கருத்தினைத் தெளிவாக, காலந்தாழ்த்தாது பட்டுத் தெறித்தாற் போல செய்தியாளர்களை அழைத்து விரிவாகக் கூறிவிட்டார்_ திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கலைஞர் தொலைக்காட்சியிலும் பிரத்யேக-மாக அளித்த பேட்டியிலும் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து காட்டியுள்ளார்.

உத்தேச சட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு புயலைச் சந்திக்கக் கூடிய சூழல்தான். மத்திய அரசோடு மாநிலங்களை மோதவைக்கும் ஒரு நிலையை இது தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், இட ஒதுக்கீடு பிரச்சினை மிக முக்கியமானது. கல்வி-யிலும், வேலை வாய்ப்பிலும் தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

இந்தப் புது சட்டத்தில் இது குறித்துப் பேசப் படவில்லை. சமூக நீதியில் கை வைக்கும் பொழு-தெல்-லாம் தந்தை பெரியார் அவர்களின் தமிழ் மண் எரிமலையாகத் தீக் குழம்பைக் கக்கும் என்பதை வரலாறு தெரிந்தவர்களும், அரசியல் தெரிந்த-வர்களும் கண்டிப்பாக அறிவார்கள்.

இந்தப் பிரச்சினையில் கைவைத்த கட்சிகள் தேர்தலில் மண்ணைக் கவ்வியுள்ளன.. சமூக நீதியில் ஆதரவுக் கரம் நீட்டும் கட்சிகள் நிலைத்து நீடித்து இருக்கின்றன.

இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு ஆணை-யைக் கொண்டு வந்த எம்.ஜி.ஆர். அவர்கள் 1980 இல் மக்களவைத் தேர்தலில் முதன்முத-லாகத் தோல்வியைத் தழுவினார் என்பதை மறந்து-விடக் கூடாது. தமிழ்நாட்டில் 39 இடங்-களில் 37 இடங்களில் தோல்வியைத் தழுவினார்.

தோல்விக்கான காரணம் இட ஒதுக்கீட்டில் தவறான அணுகுமுறையைப் பயன்படுத்தியது-தான் என்பதை உணர்ந்த நிலையில், தவறினைத் திருத்திக் கொண்டு, அதுவரை 49 விழுக்காடாக இருந்த இட ஒதுக்கீட்டு சதவிகிதத்தை 68 ஆக உயர்த்தினார். (பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 விழுக்காடு).

மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு கல்வியில் 27 சதவிகித இட ஒதுக்-கீட்-டுக்கான சட்டம் இயற்றப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில், புதிய சட்டத்தின்மூலம் கல்வியில் 27 விழுக்காடு இடத்தை பிற்படுத்தப்பட்டோருக்கு அளிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் கூட, அப்பொழுதும் தமிழ் மண் அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை; காரணம் ஏற்கெனவே தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறதே!

எந்த வகையில் பார்த்தாலும் இந்தச் சட்டம் தமிழ்நாட்டில் நல்ல அளவுக்கு அடிவாங்கும் என்பதில் அய்யமில்லை. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலும் இதன் காரணமாகப் பெரும் பிளவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

அதன் காரணமாக மத்திய ஆட்சிக்கே நெருக்-கடி ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்-கில்லை.

அதுவும் இப்பொழுது மனித வள மேம்-பாட்டுத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய கபில்-சிபல் சமூகநீதியில் உயர்ஜாதி மனப்பான்மை கொண்டவராகவே இருந்து வருகிறார்.

திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகத் தொடக்க விழாவில் அவர் பங்கு கொண்டபோது, முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள், தமிழ்-நாட்-டுக்கு 50 விழுக்காட்டு இடங்கள் அளிக்க-வேண்டும் என்றும், சமூக நீதிக்கு இடம் இருக்கவேண்டும் என்றும் கூறினார்.

அதனை அந்த இடத்தில் மறுக்க முடியாத மத்திய அமைச்சர் கபில் சிபல் செய்தியாளர்-களிடம் பேசுகையில், மத்தியப் பல்கலைக் கழகத்தில் இட ஒதுக்கீட்டுக்கு இடமில்லை என்று சொன்னதை இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.

புதிய சட்டம் சமூக நீதிக்குச் சாவு மணி அடிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கூறிய கருத்து இந்தியா முழுமையிலும் பெரும் அலையை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தாலும், காங்கிரஸ் கட்சியும் கூட இந்தத் திட்டத்தை எதிர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

உள்ளபடியே இது கட்சிகளையும் தாண்டிய சமூகநீதிப் பிரச்சினையாகும்

விடுதலை தலையங்கம் (18.02.2010)

Friday, February 19, 2010

இல.கணேசன்கள் ஏற்றுக்கொள்வார்களா?

மூடநம்பிக்கைகளை எதிர்ப்பது தமிழகத்தின் ஒரு சாராருக்கு மட்டும் உரித்-தானது அல்ல_என்று சொல்-லியிருப்பவர் ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்று அதன்பின் பா.ஜ.க.-விற்குச் சென்ற தமிழக பா.ஜ.க.-வின் முன்னாள் தலைவர் திரு இல.கணேசன் என்பார் (கல்கி 21.2.2010 பக்கம் 90,91).


அவர் யாரை, எந்த இயக்-கத்தை நினைத்துக் கொண்டு இப்படிச் சொல்லியிருக்கிறார் என்பது வெளிப்படை.

பரவாயில்லை, காலந்தாழ்ந்-தாவது மூடநம்பிக்கைகள் நாட்டில் இருப்பதை ஒப்புக்-கொண்டு அவை ஒழிக்கப்-படத்தான் வேண்டும் என்ற நினைப்பது கூட _ ஒரு அடி முன்னேற்றம்தான்_பாராட்டுகள்

அந்த மூடநம்பிக்கை-களை எதிர்த்தவர்களுள் பாரதியார் இல்லையா? கல்கி கிருஷ்ணமூர்த்தி இல்லையா? விவேகானந்தர் இல்லையா என்று எடுத்துக்காட்டியும் உள்ளார்.

அப்படிதான் சிந்திக்க வேண்டும். சிந்திக்கும் வேளை-யில் அவர்கள் எவற்றையெல்-லாம் மூடநம்பிக்கைகள் என்று கூறியிருக்கிறார்களோ அவற்றையெல்லாம் முண்டா தட்டித் தூக்கி எறிவதுதானே புத்தி சாலித்தனம்?

பாரதியாரையே எடுத்துக்-கொள்ளலாம்.

கடலினைத்தாவும் குரங்-கும்_ வெங்
கனலிற் பிறந்ததோர்
செவ்விதழ்ப் பெண்ணும்
என்று ஆரம்பித்து கடைசி-யில் எப்படி முடிக்கிறார்?
கவிதை மிக நல்லதேனும்
அக்கதைகள் பொய்-யென்று
தெளிவுறக் கண்டோம்

_என்று பாடியிருக்கிறாரே பாரதியார்.

இராமாயணத்தில் குரங்கு கடலைத் தாண்டியதாகவும், பாலம் கட்டியதாகவும் கூறி, ராமன் பாலத்தை இடிக்காதே என்று போர்க்கொடி தூக்குவது ஏன் இல.கணேசன்கள்?
எந்த பாரதியார் மூடநம்-பிக்கைகளை எதிர்த்தவர் என்று பெருமையாகப் பேசு-கிறாரோ அந்தப் பாரதியார் மூடநம்பிக்கை என்று சொல்-லுவதைக் கட்டியழுவது ஏன்?
இரண்டாவதாக கல்கி கிருஷ்ணமூர்த்தி மூடநம்பிக்-கைகளை எதிர்த்தவர் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு கல்கியிலிருந்தே (4.10.2009) எடுத்துக்காட்டி கேள்வி கேட்க முடியும்.

இராகு காலம் பார்ப்பது, அலகு குத்திக்கொள்வது, தீ மிதிப்பது போன்றவை கல்-கிக்குப் பிடிக்காது என்று கூறிவிட்டு, இறை உணர்வு என்பது வேறு, மதம் என்பது வேறு, பகுத்தறிவு என்பது வேறு, இவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் குழப்பிக் கொள்ளக்கூடாது. இதேபோல அறநெறி நூல்கள் வேறு, இதிகாசங்கள் வேறு, புராணக்கதைகள் என்பன வேறு என்று கல்கியிலேயே வெளிவந்துள்ளது. (4.10.2009),

இதையாவது இல.கணே-சன்கள் ஏற்றுக்கொள்வார்-களா? இறை உணர்வு வேறு, மத உணர்வு வேறு என்று பிரித்துக் கூறியுள்ளாரே! இவர்கள் மதவுணர்வை மட்டுமல்ல, வெறியையல்லவா தீமூட்டிக் குளிர்காய்கிறார்கள்? அறநெறி நூல்கள் வேறு, இதிகாசங்கள் வேறு என்று சொல்லும்போது இதிகாசமான இராமாயணம் புறந்தள்ளப்பட்-டுள்ளதே! அந்த இராமாயண ராமனைப் பிடித்துக்கொண்டு தானே இல.கணேசன் கூட்டம் தொங்கிக்கொண்டிருக்கிறது!. மூடநம்பிக்கைகளை எதிர்ப்-பது ஒரு சாராருக்கு மட்டும் உரித்தானதல்ல என்று உரிமை முழக்கம் இடும் இவாள் எடுத்துக்காட்டும், பிர--முகர்கள் எடுத்துக்காட்டும் மூடநம்பிக்கைகளை விடத் தயாரா?

- விடுதலை (19.02.2010) மயிலாடன்

Thursday, February 18, 2010

சி.நடேசனார், ம.சிங்கரவேலனார் - நன்றியுடன் நினைவு கூர்வோம்.

திராவிட இயக்கத்திற்குக் கால்கோள் நாட்டிய சின்னக்காவனம் (சி) நடேசனார் அவர்கள் நினைவுநாள் இந்நாள் (1937).


1912ஆம் ஆண்டு மெட்-ராஸ் யுனைட்டெட் லீக் என்னும் அமைப்பு உரு-வாக்-கப்பட்டு அதன் செயலாள-ராகவும் அவர் இருந்தார்.

தன்னுடைய சொந்த முயற்சியில், சொந்த செல-வில், சொந்த இடத்தில் இத்தகைய அமைப்பு நடத்தியவர் இவர். 1913 இல் அந்தச் சங்கத்தின் பெயர் திராவிடர் சங்கமாக மாற்றப்பட்டது.

பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் சென்னையில் தங்கிப் படிக்க வேண்டுமா-னால் அவர்களுக்கு விடுதி-கள் கிடையாது. பார்ப்பனர்-கள் நடத்தும் விடுதிகளில் பார்ப்பனர் அல்லாதார் தங்கிட அனுமதியில்லை. வேண்டுமானால் எடுப்புச் சாப்பாடு வாங்கிக்கொள்-ளலாம்.

(அன்றைய மவுண்ட் ரோடு, ஜியார்ஜ் டவுனில் உள்ள பார்ப்பனர் உணவு விடுதிகளில் தொங்கும் விளம்பரப் பலகையில் பஞ்சமர்களும், நாய்களும், பெருவியாதியஸ்தர்களும் உள்ளே பிரவேசிக்கக்-கூடாது என்று எழுதப்பட்டு இருந்தது என்பதை நினைக்-கத் தக்கதாகும். குடிஅரசு, 25.5.1935)

இந்த நிலையில் பார்ப்-பனர் அல்லாதார் சென்னை-யில் தங்கிப் படிக்க ஒரு விடுதியினை (திராவிடர் சங்க விடுதி (DRAVIDIAN ASSOCIATION HOSTEL) ஒரு-வர் தொடங்கினார்_நடத்தி-னார் என்றால் அது சாமானிய மானதுதானா? பார்ப்பனர் அல்லாத படித்த மக்கள் மனம் என்னும் மேடையில் சிம்மாசனம் அமைத்து, அவரை அமர வைத்துப் போற்ற வேண்டும் அல்லவா!

சென்னை சட்டமன்றத்-தில் அவரால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை (5.2.1921) இன்று நினைத்துப் பார்த்தாலும், அவரின் சமூக-நீதிச் சாசனம் மணியாய் ஒலிக்கும்.

அவரவர்களுக்குக் கிடைக்க வேண்டிய விகி-தாச்சார உரிமை கிடைக்-கும் வரையில் இனிமேல் அரசாங்க உத்தியோகங்-கள் யாவும் பார்ப்பனர் அல்லாதாருக்கே கொடுக்க வேண்டும் என்-றும், எல்லா டிபார்ட்டு-மென்-டுகளிலும், எல்லா-வித-மான கிரேடு உத்தி-யோகங்களும் பார்ப்பனர் அல்லாதாருக்கு கொடுக்-கப்பட வேண்டும் என்றும் இந்தக் கவுன்சில் அரசாங்-கத்திற்கு சிபாரிசு செய்-கிறது என்பது தான் அந்தத் தீர்மானம்.

நடேசனார் சட்டமன்றத்-தில் 1920_26, 1935_1937 கால கட்டங்களில் இறக்கும் வரை உறுப்பினராக இருந்த பெருமைக்குரியவர் ஆவார்.

சி.நடேசனார் அவர்-களின் நினைவுநாள்தான் சிந்தனைச் சிற்பி ம.சிங்கார-வேலரின் பிறந்தநாள் (1860).

இந்தியாவில் பொது-வுடைமைக் கட்சிக்கு வித்-திட்டவர். தந்தை பெரியாரின் நண்பர் அவரின் சிந்தனை-மிகு கட்டுரைகளை தாம்-நடத்திய குடிஅரசு இதழ் மூலம் எழுதும் வாய்ப்பினை தந்தார் தந்தை பெரியார். தமது கருத்துக்கு மாறாக அவரால் எழுதப்பட்ட கட்டுரைகளையும் குடிஅர-சில் இடம் அளித்த சான்-றாண்மை தந்தை பெரியார் அவர்களுக்கு உண்டு.

பொருளாதார ஏற்றத் தாழ்வு ஒழிக்கப்பட ஜாதி ஒழிப்பு அவசியம் என்ற கருத்தைச் சொன்ன பொது-வுடைமைவாதி அவர்.

மே தினத்தை 1923ஆம் ஆண்டிலேயே அறிமுகப்ப-டுத்-தியவரும் அவரே.

இவ்விரு பெருமகனார்-களையும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.

- விடுதலை (18.02.2010) மயிலாடன்

Wednesday, February 17, 2010

ஈழத் தமிழர் பிரச்சினை: தமிழர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடாதா?

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை வேண்டி திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையில் நேற்று (16.2.2010) திராவிடர் கழகத் தலைமையில் ஆர்ப்பாட்டம் வெகு எழுச்சியுடன் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெரிவித்த கருத்துகள் மிக முக்கியமானவை.
தீவிரவாதத்தினை எதிர்ப்பதுதான் எங்களின் நோக்கமே தவிர, ஈழத் தமிழர்களை சங்கடப்-படுத்தும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது என்று ராஜபக்சே சொன்னாரே_ அது உண்மை-யென்றால், அவர்களின் கூற்றுப்படியே - தீவிர-வாதிகளைத்தான் ஒழித்துக் கட்டிவிட்டார்களே. அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, போரி-னால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான நலத் திட்டங்-களை மேற்கொண்டிருக்க வேண்டாமா?
முள்வேலி முகாமுக்குள் சிறை வைக்கப்பட்ட தமிழர்-களை அவர்களின் சொந்த வாழ்விடங்-களில் மீள் குடியேற்றம் செய்திருக்க வேண்-டாமா?
இராணுவத் தீர்வுக்குப் பின் அரசியல் தீர்வை நோக்கி அடியெடுத்து வைத்திருக்க வேண்டாமா?
உலகம் பூராவும் போர் நடந்து முடிந்தவுடன், மக்களின் சுமூக வாழ்க்கைக்கான முயற்சிகளில், நலத் திட்டங்களில்தானே எந்த அரசும் ஈடுபடும். ஆனால் இலங்கையில் நடப்பது என்ன? போர் முடிந்தும் அம் மக்களைப் பழிவாங்கும் வேலை-யில்-தானே அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழர்களில் இளைஞர்களாக இருக்கக் கூடிய-வர்களை விடுதலைப் புலிகள் என்று முத்திரை குத்தி, அவர்களை யுத்த நெறிமுறைகளுக்கு மாறாக நிர்வாணப்படுத்தி சுட்டுக் கொல்லுவது எந்த நியாயத்தில் ஏற்றுக் கொள்வது?
இரண்டாவதாக இந்தப் பிரச்சினையில் இந்திய அரசின் கடமை என்ன? அரசியல் தீர்வு காண வேண்டும் என்று வெறும் வார்த்தையளவில் இந்திய அரசு சொன்னால் போதுமா? போதுமான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டாமா?
சீனா அளிக்கும் தைரியத்தில், பாகிஸ்தானின் பக்க பலத்தில் இந்திய அரசின் குரலை, இலங்கை அரசு கேட்கத் தயாராக இல்லை என்பதையாவது இந்தியா காலந்தாழ்ந்தாவது உணருமா?
இலங்கைக்கு இந்திய அரசைவிட அதிக உதவி செய்தவர்கள் வேறு யார்? எவ்வளவு ஆயு-தங்களை இந்திய கொடுத்து உதவியது? இவ்வளவும் கொடுத்து உதவிய நாடு என்ற முறையில், இலங்கையை வற்புறுத்த இந்தியாவுக்கு உரிமை இருக்கிறதே.
ஏன் வலியுறுத்தவில்லை? இந்தியாவுக்கு மனமில்லை என்ற முடிவுக்குதானே தமிழர்கள் முன்வருவார்கள்?
அப்படியானால் இந்தியாவின் தென்கோடியில் உள்ள தங்களின் தொப்புள்கொடி உறவு கொண்ட ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற இந்திய அரசுக்கு விருப்பம் இல்லை என்று பொருள்படாதா?
இந்தியா என்றால் அங்கு தமிழர்களுக்குப் பாதுகாப்பு கிடையாது என்ற எண்ணம் தமிழர்-களிடத்தில் உருவாக இடம் கொடுப்பது புத்தி-சாலித்தனம்தானா?
மற்ற மற்ற நாடுகள் ஈழத் தமிழர் பிரச்சினை-யில் காட்டும் அக்கறை கூட இந்தியா காட்டு-வ-தில்லையே,- ஏன்?
போர் முடிந்த பிறகு கூட அந்த மக்களின் அடிப்-படை வாழ்வுரிமை பற்றி இந்தியாவுக்கு அக்-கறை பிறக்கவில்லை என்பது கண்டனத்திற்கு உரியதாகும். இந்த வகையில் தமிழர்களின் உணர்வு-களை இந்திய அரசுக்கு உணர்த்தவே இந்த ஆர்ப்பாட்டம்.

தமிழர்கள் மத்தியில் ஈழப்பிரச்சினை என்பது கூட அரசியலாக்கப்படுவது வேதனைக்குரிய-தாகும். அதனால்தான் வேண்டாம், -வேண்டாம்_ -அரசியல் வேண்டாம்;- ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசியல் வேண்டாம் என்ற முழக்கம் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டது.
இந்த அரசியலும் கூட ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டதற்கான காரணங்களுள் முக்கிய-மானது என்பதை ஒதுக்கி விடமுடியாது.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படு-கொலைக்கு ஆளான பிறகும் கூட, இன்னும் நமக்குத் தமிழர்கள் என்ற இனவுணர்வு, - பொறுப்-புணர்வு வரவில்லை என்றால் _ அதிலும் அர-சியல்-தான் என்றால், தமிழர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடாதா? இந்த ஆர்ப்பாட்டத்-தின் மூலம் தமிழர்களின் சிந்தனைக்கு திராவிடர் கழகம் இந்த வினாக்களை முன்வைக்கிறது.

- விடுதலை (17.02.10) தலையங்கம்

Tuesday, February 16, 2010

பெண்களை அடிமையாக்க ‘கலியாணம்'

மதமும் கடவுள் சங்கதியும் மனித சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்து நிறுத்தி விட்டன. குறிப்பாக, பெண்கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப்பான் நம்மை எப்படிக் கீழ்சாதி என்று கூறி அடிமை வேலை வாங்குகிறானோ, அதைப் போலத்தான் மக்களில் சரிபகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை நடத்தி வருகிறோம். பெண்கள் என்றால் வெறும் குட்டிப்போடும் கருவி என்றுதான் நடத்தி வருகிறோம். பெண்களும் கணவன்மார்கள் நகை, நட்டு வாங்கிக் கொடுத்தால் போதும் என்கிற அளவுக்குத் தங்களைக் குறுக்கிக் கொண்டு விட்டார்கள்.


பிராமணன் - சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும், புருஷன் - பெண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! உலகத்திற்குப் பயன்படும்படியான பேர் பாதி மனித சக்தியை, பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான்தான். சாஸ்திரங்களில் சூத்திரனுக்கு கல்யாண முறையே இல்லையே!

தொல்காப்பியத்திலே கூறப்பட்டு இருக்கிறதே ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப' என்று இருக்கிறதே. "மேலோர் இவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காதிய கரணமும் உண்டே' என்றும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் இருந்ததெல்லாம், சூத்திரர்களுக்குத் திருமணம் என்ற அமைப்பே இல்லாதிருந்தது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது.

பெரும் பகுதி மக்களைச் சூத்திரனாக்க உடலுழைப்புக்காரனாக்க எப்படிப் பார்ப்பான் சாத்திரங்கள் செய்தானோ அதைப் போலத்தான் பெண்களை அடிமையாக்க ‘கலியாணம்' என்ற முறையும் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நாட்டிலே ஒரு பெண்ணானவள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்றால், அவள் எவ்வளவுக்கு எவ்வளவு அடிமை உணர்வோடு இருக்கிறாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவள் உயர்ந்த பதிவிரதையாகப் பாவிக்கப்படுகிறாள். இதைத்தான், நமது இதிகாசங்களும் புராணங்களும் சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன.

வள்ளுவனிலிருந்து ஒவ்வொரு பெரிய மனிதனும் பெண்ணை அடிமைப் பொருளாகத்தான் கருதியிருக்கிறானே தவிர, ஆண்களோடு சரிசமானமான உரிமையுடையவர்களாகக் கூறவில்லையே. ஆணும் பெண்ணும் சம உரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?

முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?

நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே.
பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா? சிங்காரிப்பது - ஜோடித்துக் கொள்வது - சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர வேண்டாமா?

"நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, "Proposed Husband and Wife" என்கிறார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். "நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்." என்றார்கள். "எவ்வளவு காலமாக' என்று கேட்டேன். "எட்டு மாதமாக' என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? "பதிவிரதம்' பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?

----- பெண்ணடிமை பற்றி பெரியார் எழுதிய கட்டுரை 'விடுதலை' 28.6.1973

Monday, February 15, 2010

கழுதைத் திருமணம் - இந்து முன்னணி ராம.கோபாலன் தலைமை

காதலர் தினத்தைக் கேவலப்படுத்திட_ இந்து முன்னணியினர் கழுதைக்-கும் _ கழுதைக்கும், நாய்க்-கும் _ நாய்க்கும் கல்யா-ணத்தைக் கட்டி வைத்துள்-ளனர். கழுதைத் திரு-மணத்தை இந்து முன்னணி ராம.கோபாலன் தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.


பலே, பலே இந்து மதப் பக்தர்களா கொக்கா! இதோடு சீதா கல்யாணத்தையும் நடத்தலாம். ரெங்கநாதனைக் காதலித்து ஆண்டாள் கல்யாணம் கட்டிக் கொண்-டாரே _ அதையும்கூட சேர்த்துக் கொள்ளலாம்.

காதல் கடவுளான கிருஷ்ண பரமாத்மா கோபீ-காஸ்திரிகளுடன் கொஞ்சிக் குலவுவதையும் இணைத்துக் கொள்ளலாம்.

கழுதையைக் கேவலப்-படுத்துகிறார்கள் இந்து முன்னணியினர். காங்கேய முனிவன் கழுதைக்குப் பிறந்தான் என்று இந்து மதப் புராணங்கள் கூறுகின்றன.

அசுவத்தாமன் குதி-ரைக்குப் பிறந்திருக்கிறான். கலைக்கோட்டு முனிவர் மானுக்குப் பிறந்தார் என்று எழுதி வைத்துள்ள இந்து மதத்தின் சிரேஷ்டப் புத்-திரர்கள் வெட்கம் சிறிது-மின்றி மனித உணர்வின் மெல்லிய இழையான காதலைக் கொச்சைப்படுத்-துவதாக நினைத்துக்கொண்டு நாய்க்கும் _ நாய்க்கும், கழுதைக்கும் _ கழுதைக்கும் கல்யாணத்தைப் பண்ணி வைக்கிறார்களாம்.

நாயும்கூட இந்து மதத்-தில் சாதாரணமா? வேத உருவமாம்; கடவுளின் வாக-னமாம் (பைரவர்); அதைக் கேவ-லப்படுத்துகிறார்-களே, இவர்கள் நாத்தி-கர்களாகி-விட்டார்களோ!

5.2.2010 நாளிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டில் ஒரு செய்தி வெளி-வந்ததே. வேலூரையடுத்த சோளிங்கூரில் காதலர்-களுக்கான கிருஷ்ணன் கோயில் (க்ஷிணீறீமீஸீவீஸீமீ ஷிக்ஷீவீ ரிக்ஷீவீலீஸீணீ ஜிமீனீஜீறீமீ) ஜெகன் அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்டு வருகிறதே _ ஏப்ரலில் திறப்பு விழாவாமே!

இந்து முன்னணி வகை-யறாக்கள் பாபர் மசூதியை இடித்ததுபோல, கடப்பாறை-களையும், மண் வெட்டி-யையும் எடுத்துக்கொண்டு அவர்கள் பாஷையில் கரசேவையை ஜாம்ஜா-மென்று நடத்தவேண்டி-யதுதானே!

பதினாறாயிரம் கோபி-காஸ்திரீகளுடன் லார்டு கிருஷ்ணன் கொஞ்சி விளையாடலாம். அதற்கு அவாள் கொடுத்த தலைப்பு லீலைகள். கடவுள் செய்-தால் லீலை; மனிதன் அன்-பைப் பரிமாறிக் கொண்டால் கலாச்சார சீர்கேடா?

குளிக்கும் பெண்களின் ஆடைகளைக் கவர்ந்து சென்று மரத்தின் கிளையில் ஓடிப்போய் உட்கார்ந்து கொண்டு நிர்வாணமாகக் கரைக்கு வந்து இரு கைகளையும் தூக்கிக் கும்பிட்டால்தான் ஆடை-களைக் கொடுப்பேன் என்று கூறும் காமவெறியனைக் கடவுளாகக் கும்பிடும் இந்து முன்னணிகள் அன்பின் அடையாளமான காதலர் தினத்தைக் கொச்சைப்-படுத்தத் தகுதி உடைய-வர்கள்தானா?

- நன்றி விடுதலை (15.02.2010) மயிலாடன்

Friday, February 12, 2010

நமது கர்ச்சனைகள் கடலைத் தாண்டி எதிரொலிக்கட்டும்!

இலங்கைத் தீவிலே ஈழத் தமிழர்களின் மறு வாழ்வு சீரமைக்கப்படும் என்ற நம்பிக்கையின் முனை-கூடத் தெரியவில்லை. அதுபற்றிய ஒரு சிந்தனைப் போக்கு அதிபர் ராஜபக்சேவுக்கு இருப்பதற்கான அறிகுறியும் தென்படவில்லை.


நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, அடுத்து நாடாளுமன்றத் தேர்தலையும் சந்தித்து, ஏக-போகமாகக் கொடியேற்றி சர்வாதிகாரத் தாண்டவம் போடுவதில்தான் அவர் குறியாயிருப்பதாகத் தெரிகிறது.

அதற்குத் தடையாக பொன்சேகா இருப்பார்; அதிபர் தேர்தலில் கணிசமாக வாக்குகளையும் பெற்றுள்ள அவரை வெளியில் நடமாடவிட்டுத் தேர்தலைச் சந்திப்பது புத்திசாலித்தனமல்ல என்று கணக்கு போட்டு, தமது ஆட்சியின்போது இராணுவத் தளபதி என்ற உயர்ந்த பீடத்தில் இருந்தவரை நாயை அடித்து இழுத்துச் செல்வது போல கைது செய்து இழுத்துச் சென்றுள்ளனர்.

ராஜபக்சேயின் நாகரிகமும், அணுகுமுறையும் எந்தத் தரத்தில் உள்ளன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டுதான். உலகம் முழுவதிலும் இதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அய்.நா. செயலாளரும் ராஜபக்சேயுடன் இது குறித்து பேசியுள்ளார்; தமது அதிருப்தியையும் தெரி-வித்துள்ளார். விரைவில் அய்.நா.வின் அரசியல் பிரிவு தலைவர் வெய்ன் போஸ்கா இலங்கை சென்று நிலைமைகளை நேரில் ஆய்-வார் என்றும் அய்.நா. பொதுச்செயலாளர் பான் கீ முன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் எச்சரித்துள்ளது. இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரசாத் தெரிவித்துள்ள கருத்தும் கவனிக்கத் தக்கதாகும். சரத் பொன்-சேகா மீதான குற்றச்சாற்றுகள் குறித்து சட்டப்-பூர்வமான விசாரணை நடைபெற வேண்டும் என்ற கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

அதிபர் ராஜபக்சே இவற்றுக்கொல்லாம் நாகரிகமான முறையில் செவி கொடுத்து, ஜனநாயக முறையில், சட்ட ரீதியான ஒழுங்குடன் நடந்து கொள்வார் என்று எதிர்பார்ப்பது கடினமே.

தமிழர்களை அழிப்பதில் ராஜபக்சேவும், பொன்-சேகாவும் போட்டிபோட்டுக் கொண்டு செயல்-பட்டவர்கள் என்பதை அறிந்தவர்கள்தான் நாம். என்றாலும் பொன்சேகா மாறுபாடான கருத்து-களைக் கூறத் தொடங்கிவிட்டார் என்று தெரிந்த-வுடன் கண்மூடித்தனமான தாக்குதலை தொடுக்க தொடங்கி விட்டார் ராஜபக்சே.

ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும், மீள் குடியமர்த்தம் நடைபெறும் என்று சொன்னதெல்லாம் உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவத்தான் என்பது தெரிகிறது.

அதிபர் தேர்தலில் கூட தமிழர்களின் பகுதி-களில் அதிக வாக்குகள் பதிவாகிவிடக்கூடாது என்பதற்காக வாக்குப் பதிவு அன்று குண்டு வெடிப்புகளை நடத்திய கொடூரன்தான் ராஜபக்சே.

மழைவிட்டும் தூவானம் நிற்கவில்லை என்பது போன்ற நிலைதான். நேற்று மாலை ஏடுகளில் வெளிவந்த ஒரு செய்தி நம் குருதியை உறையச் செய்கிறது.

சிங்கள ராணுவத் தாக்குதலில் உடல் ஊனமுற்ற யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒரு-வரும், மாணவி ஒருவரும் இடுபாலைப் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டனர் என்ற செய்தி எதைக் காட்டுகிறது?

ஊனமுற்ற நிலையில் நாம் படித்துதான் என்ன செய்யப்போகிறோம்? நம் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் என்ன? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காமல், அப்படியொரு முடிவை மேற்கொண்டனர் என்றே கருதவேண்டும்.

இரு மாணவர் தற்கொலை செய்து கொண்-டனர்; தற்கொலை செய்து கொள்ளாத தமிழர்-களும் கிட்டத்தட்ட இந்த எண்ணத்தில்தான் தத்தளித்துக் கொண்டுள்ளனர்.

30 கல் தொலைவில் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பத்தைத் துடைத்திட தமிழர்களே, தமிழர்களே! நாம் வீறுகொண்டு எழ வேண்டாமா?

தமிழ்நாட்டு மண்ணில் கொந்தளிக்கும் உணர்வை வெளிப்படுத்த தமிழர் தலைவர் அறிவித்துள்ள ஆர்ப்பாட்டம்தான் பிப்ரவரி 16 ஆம் தேதி மாலை சென்னையில் நடைபெற இருப்பதாகும்.

கழகப் பொறுப்பாளர்களே, முனைப்புக் காட்டுங்கள். நமது கர்ச்சனைகள் கடலைத் தாண்டி எதிரொலிக்கட்டும்!

ஆயத்தமாவீர்! ஆயத்தமாவீர்!!

விடுதலை தலையங்கம் (12.02.2010)

Thursday, February 11, 2010

வந்த பாதையை நினைப்போம் போகும் பாதையைத் தீர்மானிப்போம்!

இந்த நாள் தமிழ் நாட்-டின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சோகநாள். சேலம் சிறையில் இருந்த கம்யூனிஸ்டுத் தோழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட ரத்தக்கறை படிந்த கறுப்பு நாள்!

கைதி எண் அணிய மறுத்ததுதான் அவர்கள் செய்த ஒரே குற்றம்! அவர்-கள் ஒன்றும் கிரிமினல் கைதிகள் அல்லர்! அரசி-யல் கைதிகள்தான். இதற்-காக காக்கை, குருவி-களைச் சுடுவதுபோல் சுட்டுத் தீர்த்தனர். 17 பேர்-கள் பிணமாக வீழ்ந்தனர். 5 பேர்கள் அடித்தே கொல்-லப்பட்டார்கள். 105 கம்யூனிஸ்டுகள் படுகாயம் அடைந்தனர். ஆம், அந்த பிப்ரவரி 11 ரத்த நாள் என்று சேலம் சிறையில் கல்வெட்டாகப் பொறிக்கப்-படவேண்டும்.

சிறைச்சாலைதான் பாது-காப்புக்குரிய இடம். அங்கே ஆளவந்தார்கள் ரத்த வேட்டை நடத்தி-னார்-கள் என்பது எவ்வளவு பெரிய கொடுமை!

(1976 நெருக்கடி நிலை நேரத்திலும் மிசா கைதி-கள் சென்னை மத்திய சிறையில் தமிழர் தலைவர் வீரமணி, தளபதி மு.க. ஸ்டாலின் முதலியோர் அடித்து நொறுக்கப்பட்ட-தையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியதுதான். சென்னை சிறையில் சிட்டி-பாபு என்ற தி.மு.க. தோழரும், மதுரை சிறை-யில் சாத்தூர் பாலகிருஷ்-ணன் என்ற தி.மு.க. தோழ-ரும் பலியானார்-களே!)

சேலம் சிறையில் கம்யூ-னிஸ்டுத் தோழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட-போது அதனைக் கண்டித்-துப் போர்க்கோலம் பூண்-டது திராவிடர் கழகமே_-தந்தை பெரியாரே -விடு-தலை என்னும் போர்-வாளே!

ஊரெங்கும் 144 தடையும், ஊர்வலத்திற் குத் தடையும், தொழிலா ளர் வாய்களில் அடக்கு முறை துணி முடிச்சும் இல்லாதிருந்தால் சேலம் நிகழ்ச்சிக்கு நாள் தோறும் கண்டனம் சர மாரியாகக் கொட்டு வதைக் காண லாம். இன்று பேச்சு, மூச்சு இல்லை. தமிழ் நாட்டில் சுடுகாட்டு அமைதி நிலவிக்கொண்டி ருக்கிறது. நினைக்க நினைக்க நெஞ்சம் துடிக் கிறது என்று விடுதலை ரத்தக் கண்ணீர் வடித்தது (15.2.1950).

திராவிடர் கழகம் கம்யூனிஸ்டுகளுக்காக மிகவும் பாடுபட்டிருக்-கிறது. நாம் அனைவரும் சர்க்காரின் அடக்கு முறைக்கு ஆளாகி சிறைச் சாலைகளில் அவதியுற்ற பொழுதும், நம் தோழர் கள் சிறையில் சுட்டுக் கொல்லப்பட்ட பொழு தும், இந்தியாவில் உள்ள எல்லாக் கட்சிகளும் நம்-மைப் பற்றிக் கவலைப்-பட்ட-தில்லை. ஆனால் தென்னாட்டின் திலகம், திராவிடத்தின் தந்தை பெரியாரும் விடுதலை பத்திரிகையும் மட்டிலும் நம்மைக் கைவிடாமல் காப்பாற்றியது. ஆகையால்-தான் நாம் திராவிடர் கழகம் உண்மையான மக்கள் கழகம் என்பதை உணருகிறோம்.

தோழர் எஸ்.ஏ.டாங்கே.

(பார்ப்பனக் கோட்டையான பம்பாய் மாதுங்காவில் ஆற்றிய உரை 16.11.1951).

வந்த பாதையை நினைப்-போம்_ போகும் பாதை-யைத் தீர்மானிப்போம்!

-விடுதலை (11.02.2008) மயிலாடன்

Wednesday, February 10, 2010

மகா சிவராத்திரியின் மகா யோக்கியதை!!ஒரு வேடன். அவன் தன் உணவுக்குத் தினமும் பல பிராணிகளை வேட்டையாடி கொன்று தின்பது வழக்கம், அந்தப்படி ஒரு நாள் காட்டில் வேட்டையாடி இரை தேட சென்றதில் அவனுக்குக் கொல்ல ஒரு பிராணியும் கிடைக்கவில்லை. அவன் மனக் கலக்கமடைந்து சோர்ந்து திரிந்தான். அந்நேரத்தில் அந்தக் காட்டில் ஒரு புலி, அவன் கண்ணுக்குத் தென்பட்டது. நேரமும் சற்று இருட்டி விட்டது. என்றாலும் வேடன் புலியைக் கண்டு ஓடினான். புலி விரட்டிற்று. வேடன் உடனே அங்கு இருந்த ஒரு மரத்தின்மீது அவசரமாக ஏறிக் கொண்டான்.

புலி அவனைப் பார்த்த வண்ணமே மரத்தடியில் சிறிது நின்று கொண்டிருந்து படுத்துக் கொண்டது. வேடன் அந்தப் புலியை விரட்டுவதற்காக ஆக மரத்திலிருந்த சிறு கிளைகள் தழைகள் முதலியவற்றைப் பிடுங்கி கீழே எறிந்தான். அப்போது சிறு மழைத்தூரல் விழுந்து கொண்டு இருந்ததால் அத்தழைகள் சிறிது நனைந்து விழுந்தன. இப்படியே பயந்து கொண்டு இரவு முழுதும் தூங்காமல் செய்து கொண்டு இருந்தான். சிறிது வெளிச்சம் படும்படி வானம் வெளுக்க ஆரம்பித்தவுடன் புலி ஓடிவிட்டது. இந்த நிலையில் வேடன் கீழிறங்கி வீட்டிற்குப் போய்விட்டான். பிறகு அதேதொழிலாக இருந்து சில நாள் பொறுத்துச் செத்தான். சிவன் உடனே அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுத்துவிட்டார். காரணம் என்னவென்றால்,

அந்த வேடம் தினம் உயிர்களைக் கொன்று வதை செய்து சாப்பிடுபவனாகவும், விற்பவனாகவும் இருந்தாலும், அவன் அன்றிரவு தான் பறித்துப் போடுகின்ற தழை, வில்வத்தழை என்று அறியாதிருந்தாலும், அப்போது அந்த மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது விழுகிறது என்பது தெரியாமல் போட்டிருந்ததாலும், அவனுக்குச் சிவ பக்தி, ஒழுக்கம் என்பவை சிறிதும், இல்லாமல் இருந்தாலும், அவனுக்குத் தெரியாமல் வில்வத்தழை நீரில் நினைந்து சிவலிங்கத்தின் மீது பட்டிருப்பதால், அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுக்க வேண்டியது அவசியம் என்று சிவன் கருதி மோட்சம் கொடுத்தான் என்பது இதன் கருத்து.

எதற்கு ஆக இக்கதை கற்பிக்கப்பட்டது என்றால், எவ்வளவு அயோக்கியனானாலும் இந்த விரதத்தை கொண்டாடினால் மோட்சம் கிடைக்கும் என்று மக்கள் கருதி இந்த விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்பதேயாகும். இதனால் நாம் அறியக்கிடப்பது என்னவென்றால், எவ்வளவு அயோக்கியனும் ஆரியமதத்தில் சேர்ந்தால் நன்மை அடைவான் என்கின்ற அளவுக்கு இது மதப்பிரசாரமாகும் என்பதுதான்.

இப்படியானால் ஆரிய (இந்து) மதம் காரணமாக எவனுக்காவது ஒழுக்கமேற்பட முடியுமா? எவனாவது ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்பட முடியுமா?

ஆரிய மதமும் ஒன்றே தான் என்பது அறியத்தக்கது. ஆதலால் திராவிட மக்கள், இந்த முட்டாள் தனமானதும் அயோக்கியத் தனமானதுமான இப்படிப்பட்ட மதம், சாஸ்திரம், கடவுள், பக்தி, விரதம், பூசை முதலியவற்றை நன்றாய் வெறு:கக வேண்டுமென்பது, இதனால் விளங்குகிறது.

- தந்தை பெரியார் (விடுதலை, 9.2.1953)

Tuesday, February 09, 2010

மகா சிவராத்திரி! பார்பனர்கள் புனைந்த கதையோ மகா ஒழுக்கக்கேடு!!

சிவராத்திரிக்காக ஆரியர்கள் புனைந்த கதைகள் மிக அற்பமான கருத்தை உடையவையே ஆகும். இதிலிருந்தே அக்கால ஆரியர்களின் புத்தியின் போக்குத் திறத்தை ஒருவாறு அறியலாம்.
சிவராத்திரி கதை, ஆரியர்களின் புராணங்களில் உள்ளபடியும், பண்டிகை, உற்சவம், விரதங்களுக்காக என்று பார்ப்பனர்கள் தொகுத்த ஓர் ஆதாரமான புத்தகத்திலிருந்தும் இது தொகுக்கப்படுவதாகும்
அதாவது, ஒரு பார்ப்பன வாலிபன் பஞ்சமா பாதக_- அக்கிரமங்கள் பல செய்து கொண்டிருந்தான். அதனால் அவன் நாட்டை விட்டு விரட்டப்பட்டான். இந்த நிலையில் ஒரு நாள் அவன் பட்டினியோடு காலை முதல் இரவுவரை அலைந்து திரிந்து கொண்டி-ருந்தான். இரவு அவன் ஒரு சிவன் கோயிலை அடைந்து கர்ப்ப கிரகத்திற்குள் சென்று பார்த்தான். அப்போது கோயில் பூசாரி சிவன் சிலைக்குமுன் பிரசாத வகைகளை வைத்துவிட்டு எங்கோ சென்றி-ருந்தான். பிரசாதங்களைக் கண்டதும் அந்த வாலிபன் அவற்றைக் கவர்ந்து சென்று உண்ண எண்ணினான். அப்போது அந்தச் சிலைக்குப் பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கு மங்கலாக இருந்ததால் பூசைக்கு வைக்கப்பட்டிருந்த பலகாரங்களைத் தெளிவாகக் காண முடியவில்லை. எனவே அவன் விளக்கைச் சிறிது தூண்டிவிட்டு அதிக வெளிச்சம் ஏற்படும்படிச் செய்தான். அப்போது அங்கு வந்த பூசாரி இந்த வாலிபன் பிரசாதங்களைத் திருடுவது கண்டு சீற்றமடைந்து அந்த வாலிபனை வெட்டிக் கொன்றுவிட்டான்.
அன்றைய நாள் சிவனுக்கு இரவு நாளாகும். அன்று பகல் முழுவதும் அந்த வாலிபன் பட்டினியாக இருந்தது சிவராத்திரி விரதம் இருந்தது போலாகிறதாலும், மற்றும் சிலையின் முன் வைத்திருந்த விளக்கைத் தூண்டிவிட்டு, அதிக ஒளியுடன் பிரகாசிக்கச் செய்தது போலாகிறதாலும், அந்த வாலிபனுக்குச் சிவன் மோட்சத்தை அருளி-னான். ஆதலால் அந்த வாலிபனைப் போல், பகலில் பட்டினி கிடந்து இரவில் கண்விழித்து அதிகாலையில் உணவு கொண்டால் எவ்வளவு அயோக்கியனுக்கும் மோட்சமளிக்கும் என்பதாக சிவராத்திரி விரத நாள் கொண்டாடப்படுகிறதாம்.
(பாரததேவி 8.2.1953)
இதுதான் மகா சிவராத்திரியாம்.
இந்தக் கதையை நம்பினால், இதை நம்பி மகாசிவராத்திரியைக் கொண்டாடினால் மனிதனுக்கு ஒழுக்கம் வளருமா?
பஞ்சமாபாதகம் செய்தவனாம். அவனும் சிவனுக்குத் திட்டமிட்ட வகையில பக்தியின் அடிப்படையில்கூட பூஜை செய்யவில்லை. அத்தகைய கயவனுக்கு மோட்சமாம்!
அந்தப் பாதகன் சிவனுக்குத்தான் இவ்வளவும் செய்தான் என்று இட்டுக் கட்டி திணிக்கப்பட்டுள் ளது. எப்படியாக இருந்தாலும் சிவனைப் பூஜை செய்ய வேண்டும் என்ற வறட்டுத் தனம்தான் இதில் தொக்கி நிற்கிறது.
மகாசிவராத்திரி கொண்டாடும் பக்தர்களே, நீங்கள் எந்த பஞ்சமா பாதகத்தைத் செய்துள்ளீர்கள்? ஒரு கணம் சிந்திப்பீர்!

நன்றி விடுதலை

Monday, February 08, 2010

பெரியார் பல பரிமாணங்களிலும் ஜொலிக்கிறார்

தமிழர்களின் தன்மானத்தை வளர்ப்பதற்கும், தமிழர்களுக்கு அறிவு ஊட்டுவதற்கும், தமிழர்கள் மனிதத் தன்மை அடைவதற்கும் பயன்படாத இயலோ, இசையோ, நடிப்போ எதற்காக வேண்டும்? அது என்ன மொழியில் இருந்தால் என்ன?


(குடிஅரசு, 22.1.1944)

என்று வினா எழுப்பினார் வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார்.

இந்த உணர்வு ஊட்டப்பட்டதற்குப் பிறகு, இந்த எழுச்சி தமிழர்கள் மத்தியில் உண்டாக்கப்பட்டதற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் ஓரளவிற்குக் கலைத் துறையில் மறுமலர்ச்சி மொட்டு வைக்க ஆரம்பித்தது.

தமிழ்நாட்டு மேடைகளில் சமஸ்கிருதம், தெலுங்கு கீர்த்தனைகள்தான் இடம்பெற்றன. தப்பித் தவறிப் பாடப்படும் பாடல்களுக்கு துக்கடா என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.

தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு இவைகளுக்கு எதிராக ஒரு கூட்டம் தொடர்ந்து வந்து கொண்டி-ருக்கிறது. அந்தக் கூட்டத்தின் ஆதிக்கத்தில்தான் அனைத்துத் துறைகளும் மண்டியிட்டுக் கிடந்தன.

நாயும் வயிற்றை வளர்க்கும்
வாய்ச் சோற்றைப் பெரிதென்று
நாடலாமோ!
போய் உங்கள் செந்தமிழின்
பெருமையினைப் புதைப்பீரோ
பாடகர்காள்!

என்று தமிழியக்கத்தில் பாடினார்_ சாடினார் புரட்சிக்கவிஞர்.

சுயமரியாதை இயக்க மாநாடுகளில் எல்லாம் தமிழிசை வற்புறுத்தப்பட்டது. பாடு பொருள் பகுத்தறிவு அடிப்படையிலும் மக்கள் முற்போக்குத் திசையில் அமைந்திட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அப்படியெல்லாம் கருத்துகள் வலியுறுத்தப்பட்டு மக்கள் மத்தியில் எழுச்சி வெடித்துக் கிளம்பிய நேரத்-தில்-தான் இசைக்கு மொழியில்லை என்று பார்ப்பனர்கள் பம்மாத்துப் பாடினார்கள். அப்படி சொன்னவர்கள்தான் பாடல்களில் எல்லாம் மறந்தும்கூட தமிழில் இடம்-பெறாத-வாறு _ அதாவது மொழி வெறிக் கண்-ணோட்டத்தோடு நடந்துகொண்டார்கள் _ நடந்துகொண்டும் வருகிறார்கள்.

அதேபோல, தமிழர்களையும் இந்தத் துறையில் தலையெடுக்கவொட்டாமல் செய்துவந்தனர் _ தமிழர்-களைப் பாடகர்களாகக் கூட அவர்கள் அங்கீ-கரிப்-பதில்லை.

யேசுதாஸ் போன்றவர்கள் மனங்குமுறிச் சொல்லும் அளவுக்கு, மியூசிக் அகடாமி போன்ற இடங்களில் பாட வாய்ப்பு அளிக்கப்பட்டதில்லை. இதற்குமேல் தடுக்க முடியாது என்று வந்த நிலையில்தான் அவர்-களுக்-கெல்லாம் அங்கு பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

காஞ்சி சங்கராச்சாரியார் இந்து சமய கலை விழா என்று சென்னையிலே 1983 மே மாதத்தில் நடத்தினார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் புரட்சிக்கவிஞர் விழாவை தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழாவாக திராவிடர் கழகம் அறிவித்தது. அவ்வாண்டுமுதல் தொடர்ந்து தலைநகரிலே அவ்விழாவை நடத்திக் கொண்டும் வருகிறோம். திராவிடர் கழகத்தின் எதிர் நடவடிக்கையின் காரணமாக இந்து சமயக் கலை விழா என்பதை இந்திய சமயக் கலை விழா என்று பெயர் மாற்றினார்; பெயர் மாற்றிக் கொண்டாலும் அவர்களின் உள்ளடக்கம் பார்ப்பனர்களின் கலாச்சாரத்தைக் கலையின் பெயரால் நிமிர்த்துவதே!

புரட்சிக்கவிஞர் விழா, தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழா ஆகியவை கலைத் துறையிலே ஆரிய எதிர்ப்பு _ தமிழர் பண்பாட்டு மறுமலர்ச்சிக் கண்-ணோட்டத்தில் செயலாற்றிக் கொண்டு வருகிறது.

இவ்விழாக்களில் தமிழ் அறிஞர்கள், கலைத் துறையினர் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்தோங்கும் தமிழர்களை அடையாளம் கண்டு, விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

இவ்வாண்டு (நேற்று 7.2.2010) சென்னை பிலிம் சேம்பரில் மரண கானா விஜி குழுவினரின் எழுச்சியிசை நடத்தப்பட்டது.

எடுத்த எடுப்பிலேயே ஜெய ஜெய சங்கரர் என்று ஆரம்பித்து, ஜெயேந்திர சரஸ்வதியின் காமக் களி-யாட்டத்தை, கொலைக் குற்றத்தை விளித்துப் பாடியது புதுமையானதாக இருந்தது. தெய்வத்தைத் துறந்து மரணத்தைப் பாடுகிறேன்! என்ற தலைப்பில், கம்பீரமான குரலில் பாடினார். தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அவ்விழாவில் பேசியபோது இசையில் ஒரு புரட்சிக் குரல் கிளம்பியிருக்கிறது என்றார்.

மரபுகளை உடைக்கும் கோடரியாக அவர் காணப்-பட்டார். அரவாணிகள் என்று ஒதுக்கப்பட்ட திரு-நங்கைகளையும் தம் இசைக் குழுவில் இணைத்தது உள்ளபடியே புரட்சியே!

கடவுளைப் பாட மாட்டேன்; இரு பொருளில் பாட-மாட்டேன்; வேற்று மொழி சொற்களைப் பயன்-படுத்த-மாட்டேன்; போதை அருந்திப் பாடமாட்டேன் என்று சொன்னதும், கருப்புச் சட்டையே தன் அடையாளம் என்று கூறியதும், அவரைத் தனித்த முறையில் அடையாளம் காட்டுகிறது.

உடல் ஊனமுற்றவர் என்றாலும், அவர் வாயி-லாகவும் தந்தை பெரியார் உயிர்த் துடிப்புடன் ஒலிக்கிறார் _ தந்தை பெரியார் பல பரிமாணங்களிலும் ஜொலிக்-கிறார் என்பதில் அய்யம் ஏது?
விடுதலை தலையங்கம் (08.02.2010)

Sunday, February 07, 2010

பாரதியார் பார்வையில் இராம-இலட்சுமணர்கள்!

1. பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்து விட்டதற்காக தன் தந்தையான தசர-தனை எதிர்த்து இராமன் கலகம் செய்தான்.


2. அதனால் கோபமுற்ற தசரதன் இராமன், இலட்சுமணன் ஆகிய இரு-வரையும் நாட்டை விட்டே துரத்தி அடித்து விட்டான்.

3. அப்படி துரத்தி அடிக்கப்பட்ட இராமனும் -_ இலட்சுமணனும் மிதி-லைக்-குப் போய் ஜனக மகாராஜனிடம் சரணடைந்தார்கள். அவன் இவர்-களைக் காப்பாற்றி வருகையில் அவனுடைய மகள் சீதையின் அழகில் மயங்கிய இராமன் சீதையை திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு இலட்சுமணனுடன் தண்டகாரண்யம் வந்து சேர்ந்தனர்.

4. அங்கு இருந்த முனிவர்களுக்கும் _ ரிஷிகளுக்கும் இராமன் _ இலட்சுமணன் இருவரும் மிகுந்த தொல்லை கொடுத்தனர். அவர்களின் யாகங்களைக் கெடுத்தனர்.

5. இதை அறிந்த சூர்ப்பனகை இராமன் -_ இலட்சுமணன் இருவரையும் _ பிடித்துக் கட்டிக் கொண்டு வரும்படி தன் படைகளுக்கு உத்தரவு போட்டாள். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவர்கள் அரச குமாரர்கள் என்ப-தாலும் -_ சிறு வயதினர் என்பதாலும் சூர்ப்பனகை மன்னித்து விட்டாள். அவர்களுடன் வந்த சீதை சூர்ப்பன-கையுடன் தனிப்பட்ட முறையில் இராமன் தன்னை வலிமையாலே தூக்கிக் கொண்டு வந்து விட்டதாகவும். தான் மீண்டும் தந்தையிடமே போய் விட விரும்புவதாகவும் சொன்னதன் பேரில் அவ்வாறு மிதிலைக்கு அனுப்பும் எண்ணத்துடன் -_ சீதையை இராவண-னிடம் அனுப்பி வைக்கிறாள்.

இராவணனும் அவ்வாறே சீதையை மிதிலைக்கு அனுப்ப நல்ல நாள் பார்த்-தான். ஆனால் அந்த ஆண்டு நல்ல நாளே இல்லாமல் போனதால் சீதையை அனுப்பும் நிகழ்ச்சி தள்ளிப் போனது.

6. சூர்ப்பனகையிடம் இராமன் சீதை எங்கே என்று வினவினான். அவளோ சீதையை மிதிலைக்கு அனுப்பி விட்ட-தாக கூறினாள். அதைக் கேட்ட இலட்-சு-மணன் நீ எப்படி சீதையை மிதி-லைக்கு அனுப்பலாம் என பலவாறு நிந்திக்கலானான். அதனால் கோபமுற்ற சூர்ப்பனகை தன் இடுப்பில் செருகி வைத்திருந்த கத்தியை எடுத்து இலட்சுமணனின் இரண்டு காது-களையும் - _ கால் சட்டை விரல்களை-யும் நறுக்கி விட்டாள். அதைக் கண்ட இராமன் சூர்ப்பனகையின் வீரத்தை மெச்சி இராமன் இவள்மேல் மோகம் கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்கிறாயா எனக் கேட்டான். அவள் தன் அண்ணன் இராவணன் கோபித்துக் கொள்வானே என மறுத்துவிட்டாள்.

என்ன தோழர்களே, படித்ததும் தலை சுற்றுகிறதா? ஆம் எனக்கும் அப்படித்தான் ஏற்பட்டது. எழுதி இருப்பது பாரதியாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டு பல முறை பார்த்து உறுதி செய்து கொண்டேன்.

சில வேடிக்கைக் கதைகள் என்ற முறையில் ஒரு புராணீகன் - _ வக்காமுகி சாஸ்திரி என்பான் சொன்ன கதை என கூறப்பட்டிருப்பினும் முழுக்க முழுக்க இது பாரதியாரின் எழுத்துகளே ஆகும். அவதார புருஷன் இராமன் என இந்த தேசமே கொண்டாடிக் கொண்டிருக்-கும் போது அந்த இராமன் பற்றிய மாற்றுக்கதையை இராமனை மட்டமாக சித்தரிக்கும் நிகழ்வுகளை பாரதியார் எழுதியதற்கு ஏதாவது ஒரு காரணம் இருந்-திருக்க வேண்டும். கடலினைத் தாவும் குரங்கும் - _ வெம்

கனலிடைப் பிறந்த செவ்விதழ்பெண்ணும்
வடமலை தாழ்ந்ததி னாலே -_ வந்துசமன் செய்த குட்டை முனியும்
நதியினிலே நீந்திப் போய் _ ஒரு
நாகர்குல பாம்பின் மகளை
விதியுறவே மணம் முடிந்த வெந்திரல்


எனக் கூறி இராமாயணமும் _ பாரதமும் இன்ன பிற புராண நிகழ்வுகளும் கற்பனையே என்றும் கூறியிருக்கிறார் பாரதியார்.
எத்தனையோ இராமாயணக் கதைகள் பலரால் எழுதப்பட்டுள்ளன. அவரவர்கள் தன் கற்பனைக்கு ஏற்ற வகையில் பலவாறாக எழுதப்பட்-டுள்ளன. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட நிலைகூட உள்ளது. இதையெல்லாம் பல மொழி அறிந்த பாரதியாருக்கு தெரிந்தே இருக்கும். எனவே அவர் தன் பங்கிற்கு ஒரு கற்பனை. இராமாயணத்தைக் கூறி இருக்கலாம். இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் _ எல்லோரும் நினைப்பதுபோல இராமன் கதை நடந்த கதை அல்ல. அப்படியே இராமன் என ஒரு மனிதன் இருந்-திருந்தாலும் அவனைப்பற்றி _ அவன் செயலைப்பற்றி மனித சக்திக்கு மீறிய செயலைப்பற்றி செய்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படி இல்லாத ஒன்றுக்காக இன்று நம் நாட்டிலே மதச் சண்டை-களும் _ குரோத உணர்வுகளும் ஏற்படு-வது சரியாகுமா? மணல் திட்டை _ இயற்கையாக உள்ளதை _ இராமன் பாலம் எனக் கூறி சேது சமுத்திரத் திட்-டத்தையே முடக்குவது எவ்வகையில் நியாயம்?

ஆதாரம்: பாரதியார் கதைகள் _ (வர்த்தமானன் பதிப்பகம்) பக்கம் 334 முதல் 339 வரை) (தகவல்: வேலை பொற்கோவன் _ வேலம்பட்டி)
நன்றி விடுதலை ஞாயிறு மலர் (06/02/2010)

Saturday, February 06, 2010

தள்ளாடும் மார்க்ஸியம்

அரசியல் ரீதியாக மேற்கு வங்காளம், கேரளாவில் பெரும் நெருக்கடி முட்டுச் சந்தில் சிக்கிக் கொண்ட மார்க்ஸிஸ்ட். கம்யூனிஸ்-ட் கட்சி, சித்தாந்த நெருக்கடியிலும் மாட்டிக் கொண்டு விழிபிதுங்கி நிற்கிறது.
கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ்காரத் மத-சம்பந்தமான கட்சியின் நிலைப்பாடு என்று ஒரு பரிதாபகரமான விளக்கத்தைக் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்க் கட்சியின் நாடாளுமன்ற முன்-னாள் உறுப்பினர் டாக்டர் கே.எஸ். மனோஜ் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்-தார்.
அதற்கு அவர் கூறும் காரணம் என்ன?
கட்சி தனது நெறிப்படுத்தும் இயக்க ஆவணத்தில் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என்று கட்சி உறுப்பினர்களுக்கு வழிகாட்டியுள்ளது. இது தாம் கொண்டி-ருக்கும் உறுதியான மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி கட்சியிலிருந்து விலகியுள்-ளார். இதற்காகத்தான் முழு கட்டுரை ஒன்றை கட்சியின் அகில இந்திய செயலாளர் தோழர் பிரகாஷ்காரத் மூச்சுப் பிடித்துக் கொண்டு எழுதுகிறார். (தீக்கதிர் 27.1.2010)
கடவுள் நம்பிக்கை மத நம்பிக்கை உள்ள-வர்கள் கட்சியில் தாராளமாக சேரலாம் _ அதில் ஒன்றும் அட்டியில்லை என்று கட்சி-யின் கதவைத் தாராளமாகவே திறந்து விட்-டுள்ளார்.
கட்சியில் உள்ளவர்களை இரு பிரிவு-களாகப் பிரித்துக் காட்டுகிறார்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்-பினர்களிடையே மத நம்பிக்கை கொண்ட சிலர் இருக்கலாம். அவர்கள் தொழி-லாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். விவசாயிகள் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் உழைக்-கும் மக்களின் இதர பிரிவு-களைச் சேர்ந்த-வர்கள். அவர்களிடையே சிலர் கோவிலுக்குச் செல்லலாம், மசூதிக்குச் செல்லலாம்; அல்லது தேவாலயத்திற்குச் செல்லலாம்.
இன்னொரு பிரிவினர் கட்சியில் இருக்கிறார் கள். கட்சியின் முன்னணி ஊழியர்கள், மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் செயல் பாடுகள் தொடர்பானது.
அவர்கள் மத நிகழ்ச்சிகளையோ அல்லது தனிப்பட்ட முறையிலான மதச் சடங்கு-களையோ நடத்தக் கூடாது என்றும் வலி-யுறுத்தப்பட்டுள்ளது. கட்சியின் மாநிலக் குழு, மாவட்டக் குழு, மண்டலக் குழுக்கள் போன்ற மட்டங்களில் செயல்படும் தலைவர்-களைப் போன்ற கட்சியின் முன்னணி ஊழியர்கள் தங்களது சொந்த வாழ்விலும், சமூக வாழ்விலும் முற்போக்கான மாண்பு-களை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுகிறார் தோழர் பிரகாஷ்காரத் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதில் இரண்டு வகையானவர்கள் என்ற விசித்திரத்தை மார்க்ஸியவாதிகள் ஏற்படுத்திக் கொண்டி-ருப்பதாகத் தெரிகிறது. அது ஒருபுறம் இருக்-கட்டும். தோழர் பிரகாஷ்காரத் கூறியுள்ள அந்த அளவுகோல்படி கட்சியைவிட்டு விலகுவதாகக் கூறியுள்ள டாக்டர் மனோஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் இருந்தவராயிற்றே!
அவர் கண்டிப்பாக மார்க்ஸிய கொள்-கையைக் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டவர்-தானே! மத நம்பிக்கைகளைத் துறந்தவராக இருக்க வேண்டியது அவசியம்தானே! அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இதனைக் கடைப்பிடிக்கவில்லையா? அல்லது கட்சியின் நெறிப்பாட்டு முறைகளைத் தெரிந்து வைத்திருக்கவில்லையா?
நாடாளுமன்றத்தில் கட்சியின் சார்பில் அவர் தேர்வு செய்யப்பட்டபோது கட்சியின் நெறிமுறை பற்றிய ஆவணத்தில் கையொப்-பம் பெறப்படவில்லையா? அந்த விதிமுறை கட்சியில் இருக்கிறதா இல்லையா என்கிற கேள்வி எழுகிறது. இவரைப்போலவே இதற்குமுன்பும்கூட கண்ணனூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அப்துல்லாகுப்பு இதே காரணத்தைக் கூறி கட்சியிலிருந்து வெளியேறியதுண்டு.
இவர்களாவது முன்னாள் உறுப்பினர்கள். மாநில அமைச்சர்களின் கொள்கை _ கோட்பாடு எந்த லட்சணத்தில் இருக்கிறது.
படத்தோடு வெளியிட்டதே டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு (30.12.2009 பக்கம் 9).
கேரளாவில் சாஸ்தம் கோட்டா என்ற இடத்தில் உள்ள சாஸ்தா கோயிலில் உள்ள குரங்கு ஒன்று செத்துப் போய் விட்டதாம். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள மாநிலத்தின் நீர்ப்பாசனத்-துறை அமைச்சர் என்.கே. பிரேமச்சந்திரன் மற்றும் சி.பி.எம். சட்டப் பேரவை உறுப்பினர் கோவூர் குஞ்சுமோன் ஆகியோர் செத்துப் போன குரங்குக்கு செங்கொடி போர்த்தி புரட்சி வணக்கத்தைத் தெரிவித்துள்ளனரே -_ இதற்கு என்ன சமாதானமாம்?
தோழர் பிரகாஷ்காரத் அளவுகோல்படி கட்சியின் நெறிப்படுத்தும் ஆவணத்துக்கு உட்பட்ட நிலையில் உள்ளவரா _ இல்லையா?
தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் கட்சியின் நெறிப்படுத்தும் ஆவணத்துக்குக் கட்டுப்பட்டவர் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் ஒருவரும், சட்டப் பேரவை உறுப்பினர் ஒருவரும் குரங்குக்குச் செங்கொடி போர்த்தி புரட்சியின் சின்னத்-தைக் கொச்சைப்படுத்தியுள்ளனரே _ இவர்-கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
மேற்குவங்கத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராகயிருந்த சுபாஷ் சக்ரவர்த்தி காளி கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் கழித்தாரே! உண்டியலில் காணிக்கை செலுத்-தினாரே! (2006 செப்டம்பர்)
அவர் கட்சியின் நெறிப்படுத்தும் ஆவ-ணத்துக்குக் கட்டுப்பட்டவர் இல்லையா?
கட்சியின் மூத்த தலைவர் மறைந்த ஜோதிபாசு அதுபற்றிக் கடுமையாக விமர்சித்தபோது அந்த அமைச்சர் அளித்த பதில் என்ன?
நான் முதலில் ஒரு இந்து, அடுத்து பிரா-மணன், மரபுகளை என்னால் மீற முடி-யாது. அடுத்துதான் நான் ஒரு கம்யூ-னிஸ்ட் என்று கூறினாரே _ எவ்வளவு பெரிய அதிர்ச்சிக்குரியது? கடவுள், மதம் மட்டுமல்ல ஜாதிய உணர்வும் அல்லவா தலை கொழுத்துத் துள்ளு-கிறது. இதையும்கூட விட்டுத் தள்ளு-வோம். சோம்நாத் சட்டர்ஜி ஒரு காலத்தில் எப்படிப்பட்ட மார்க்ஸிஸ்ட்- தலைவர்! அந்தக் கால கட்டத்-திலேயே தன் பேரனுக்கு அழைப்புப் போட்டுப் பூணூல் கல்யாணம் நடத்-தினாரே!
இந்தியத் துணைக் கண்டத்தில் பார்ப்பனியத்தை சரியாக அடையாளம் கண்டு புரட்டித் தள்ளாத எந்தக் கட்சிக்-கும் இந்த விபத்து ஏற்பட்டே தீரும்!
தேர்தல் அரசியல் என்ற நிலை வந்து விட்ட பிறகு சறுக்கல்களுக்கு சமா-தானம் சொல்ல முயற்சிக்கும் ஒரு நிலை ஏற்பட்டே தீரும். அதற்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விதிவிலக்கல்ல என்பதே உண்மை!

விடுதலை மின்சாரம் (06.02.2010)

சோவின் கீழ்க் குணம்!

கேள்வி: ரிமாண்ட் கைதிகள் மற்றும் சிறைக் கைதிகளுக்கு கிராமியக் கலைகளில் பயிற்சி அளிக்கலாம் என்று கனிமொழி எம்.பி., யோசனை தெரிவித்துள்ளதுபற்றி?
பதில்: சரி தான் சொன்னபடி நடக்க வேண்டிய, அடிமை நிலையில் இருக்கிறவார்கள்தான் இந்தப் பயிற்சியை ஏற்பார்கள் என்று அவரே தீர்மானித்து விட்டார் போலிருக்கிறது. கல்லுடைக்கச் சொன்னால் உடைக்க வேண்டியவர்கள் இதைச் செய்ய மாட்டார்களா என்ன? கலை, கைதி சங்கமம்!
(துக்ளக் 3.2.2010)
கிராமியக் கலைகள் என்றால் இந்த மண்ணுக்-குரியது. தமிழர்களுக்குரியது. அதனை அழித்துவிட்டு அதன் மேல் ஆரியப் பார்ப்பனக் கலாச்சார சங்கதி-கள் அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கின்றன. ஆத்திரம் வராதா அக்கிரகார சிகா-மணிகளுக்கு?
ஆத்திரத்தை ஏதோ ஒரு வகையிலே வெளி-யேற்றாவிட்டால் அவாளுக்கு ரத்தக் கொதிப்பு வந்து விடுமே. அந்தப் பாணிதான் சோவின் பதிலும்.
சரி, அவர் விவாதப்படியே வருவோம்.
கலையைக் கற்றுக் கொள்ளும்போது குரு சொன்ன-படி நடந்தால் அதில் என்ன தவறு இருக்கிறது? அதற்கு பெயர் பார்ப்பன சோக்களின் அகராதியில் அடிமை நிலை என்று பெயரா? ஆசிரியர் சொன்ன-படி நடக்காமல் கல்வி பயின்ற அடங்காப் பிடாரிகளா இவர்கள்?
கலை -_ சதி _ சங்கமம் என்று இவாள் சொல்லும் முறை கிராமியக் கலையைக் கொச்சைப்படுத்தும் மேல் ஜாதி ஆணவச் சிந்தனைப் போக்கு என்பதை உணர வேண்டும். சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடி வாலிப வயதில் பெண்ணைத் திருடியக் கிருஷ்ண-னைப்பற்றி நாட்டியம் ஆடினால் தானே அவாளுக்கு இனிக்கும்!
கேள்வி: ஆண்களுக்குப் போட்டியாக பெண் அதிகாரிகளும் துணிந்து லஞ்சம் வாங்க ஆரம்பித்-திருக்கிறார்களே! பெண்களின் துணிச்சலை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறதே?
பதில்: ஒரு வியப்பும் இல்லை. பேசாமல், ஆண்கள் வாங்குகிற லஞ்சத்தில் 33 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து சட்டம் கொண்டு வரலாம். அது பெண்-மைக்கும் பெருமை; நாட்டிற்கும் கவுரவம்; சமநீதி; சம உரிமை... எல்லாம்.
(துக்ளக் 3.2.2010 பக்கம்13)
எப்பொழுதுமே பெண்களை மட்டம் தட்டி எழுதுவதில் குறியாக இருப்பவர்தான் இந்த சோ ராமசாமி. காரணம் அவாளின் மனுதர்மச் சிந்தனை.
படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் (மனுதர்மம் அத்தியாயம் 9; சுலோகம் 17)
_ இந்த மனுதர்மத்தை அடேயப்பா, எப்படி-யெல்லாம் தூக்கிப் பிடித்து எழுதியிருக்கிறார் இந்த சோ.. வெறுக்கத்தக்கதா பிராமணீயம்? என்ற சோவின் தொடரைப் படித்தால் இந்த உண்மை விளங்கும். அவாள் வீட்டுப் பெண்களை-யும் இப்படி ஆபாசமாகத்தான் நடத்து-வார்கள் போலும்!
சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் பெண்ணுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வேண்டும் என்று எழுந்திருக்கும் கோரிக்கையைக் கொச்சைப்படுத்துவ-தற்காகவே லஞ்சம் வாங்குவதில் 33 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யலாமே என்று பேனா பிடிக்கிறார்.
பெண்களையும் மட்டம் தட்ட வேண்டும் _ இடஒதுக்கீட்டையும் கொச்-சைப்-படுத்த வேண்டும் _ ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்த வேண்-டும் என்ற அக்கிரகாரக் கீழ்ப்புத்தி-தான் சோ-வின் இந்தப் பதிலில் வழிகிறது.

நன்றி விடுதலை (06.02.10)

Thursday, February 04, 2010

ஜி.டி. நாயுடுவை நட்பு முறை-யில் கிராக் என்பேன்! பெரியார்

இன்று தொழில் மேதை கோவை ஜி.டி. நாயுடு அவர்-களின் நினைவு நாள் (1974).
தந்தை பெரியார் அவர்-களின் நெருங்கிய நண்பர். உரிமையோடு தந்தை பெரியார் அவர்களுடன் நகைச்சுவை-யோடு உரையாடக் கூடியவர்.
பள்ளிப் படிப்பு அதிகம் இல்லை. தனது தந்தையார் உருவாக்கிய தோட்டத்தில் ஒரு காவலர் போலிருந்து பணியாற்றினார். மோட்டார் தொழிலில் கிளீனர், நடத்துநர், ஓட்டுநர் என்று அனைத்துப் பணிகளையும் செய்து கடைசியில் மோட்டார் மன்னர் என்ற பட்டப் பெய-ரும் பெற்றார். உழைப்பால் உயர்ந்து 230 பேருந்துகளுக்கு உரிமையாளர் ஆனார். படிப்பறிவில்லாத இந்த அதிசய மனிதர் நூற்றுக்கும் மேற்பட்ட புதியவைகளைக் கண்டு-பிடித்தார்.
ஒரே வாழைத் தாரில் ஆயிரம் காய்கள் காய்க்கும் வகையில் புரட்சி செய்த வேளாண் விஞ்ஞானி அவர்.
தன்னிடம் பணியாற்றும் ஓட்டுநருக்கு ஒரு பேருந்-தையே பரிசாகக் கொடுத்தவர். உலகம் சுற்றியவர். ஹிட்-லரையும், முசோலினியையும் நேரில் சந்தித்து தமது கேமிராமூலம் படம் பிடித்தவர்.
திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு மாநாடுகளிலும் பங்குகொண்டவர். தனித் தமிழ்நாடு கோரிக்கையில் நம்பிக்கை உள்ளவர்.
தமது கண்டுபிடிப்பு-களுக்கு மத்திய அரசு ஆத-ரவு காட்டாததைக் கண்டித்-தும், அதிகமான அளவில் வரி போட்டதை ஏற்காமலும் இருந்த நிலையில், ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை சென்னை எஸ்.அய்.ஏ.ஏ. திடலில் ஏற்பாடு செய்தார் (13.1.1954).
வேலையில்லாத் திண்டாட்-டம் என்று கூட்டத்திற்குப் பொருள் கொடுக்கப்பட்டு இருந்தது.
உண்மையில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் பொருட்டு, தம்மால் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களை பொது மக்கள் மத்தியில் உடைப்பதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி அது.
தந்தை பெரியார், டாக்டர் வரதராசுலு நாயுடு, ஆர்.வி. சாமிநாதன், ஏ.கோவிந்தசாமி, முன்னாள் அமைச்சர் எஸ். இராமநாதன், சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. சின்ன-துரை, முன்னாள் முதல்வர் டாக்டர் சுப்பராயன், மோகன் குமாரமங்கலம், வி.கே.கே. ஜான் எம்.எல்.சி., கே.டி. கோசல் ராம், அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி முதலியோர் பங்கு கொண்டனர்.
பேசியவர்கள் அனை-வரும் மத்திய அரசை எதிர்த்து அந்தப் பொருள்-களை உடைக்க வேண்டும் என்று பேசினார்கள்.

தந்தை பெரியார் பேசு-வதற்கு முன்பே பொருள்-களை உடைக்குமாறு ஏற்பாடு செய்துவிட்டார் ஜி.டி. நாயுடு.

இறுதியாகப் பேசிய தந்தை பெரியார் நீங்கள் செய்த காரியம் பைத்தியக்-காரத்தனமான காரியம் _ முட்டாள்தனமானது என்று கடுமையாகப் பேசினார்.
முட்டாள்தனம் என்ற சொல்லை வாபஸ் வாங்குமாறு கூட்டத்தினர் கூச்சல் போட்-டனர். ஆனால், தந்தை பெரியார் அவர்களோ அதற்கு மேலும் சென்று மாபெரும் மடத்தனம் _ முட்டாள்தனம் என்று ஓங்கியடித்தார்.

எதை உடைக்கவேண்-டும்? இதற்குக் காரணமான டில்லி ஆட்சியையல்லவா உடைக்கவேண்டும் என்று கர்ச்சித்தார் தந்தை பெரியார். ஜி.டி. நாயுடுவை நட்பு முறை-யில் கிராக் என்பேன், இன்று மெய்யாகவே அவர் ஒரு கிராக் என்று தந்தை பெரியார் கூறினாரே பார்க்கலாம்!

-விடுதலை (04.02.10) மயிலாடன்

Wednesday, February 03, 2010

அறிவுப்பூர்வமான ஒரு வெடிகுண்டு! ‘Who Killed Karkare’ நூல்....

நேற்று நடை பெற்ற who killed karkare நூல் அறிமுக விழாவிற்கு பெரியார் திடல் சென்றேன். நல்ல கூட்டம். ராத மன்றமே நிரம்பியது. அதனை பற்றிய தொக்கு இன்று விடுதலையில் மின்சாரம் தொகுத்து கொடுத்துள்ளார்கள்....ஊன்றி படியுங்கள் உண்மை அறிந்துகொள்ளுங்கள் தோழர்களே........................இதோ ......

இந்தியாவை இந்துராஷ்டிரமாக உருவாக்க-வேண்டும் என்று நினைப்பது இந்துக்கள்கூட அல்ல _ இந்து மதப் போர்வையில் மதங் கொண்டு திரியும் மூன்று சதவிகிதப் பார்ப்பனர்களே!


பார்ப்பனர்கள் வெளிப்படையாக நாங்கள் தான் அரசாளத் தகுந்தவர்கள் என்று மார்தட்டி-னால், மார்பும் இருக்காது, மண்டையும் இருக்காது.

அதற்காக அவர்கள் திசை திருப்பும் யுக்திதான் முஸ்லிம்கள் எதிர்ப்பு _ முஸ்லிம் தீவிரவாதம் என்ற பூச்சாண்டி!

தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்கள் என்று முத்திரை குத்த இந்த நாட்டில் பார்ப்பனர்கள் இருக்-கிறார்கள். அதனைப் பெருக்கிட, பதாகை பிடித்-துக் காட்ட பார்ப்பன ஊடகங்கள் இருக்-கின்றன.
இந்தியாவில் புலனாய்வுத் துறை இருக்கிறது _ நிருவாக வர்க்கம் இருக்கிறது.
இவற்றை எல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் ஒரு நூல்தான் who Killed Karkare?.
நூலின் ஆசிரியர் மகாராட்டிர மாநிலத்தின் முன்னாள் அய்.ஜி. _ காவல்துறை அதிகாரி எஸ்.எம். முஷ்ரிஃப் அய்.பி.எஸ்.
ஓய்வு பெற இன்னும் பல ஆண்டுகள் இருந்-தும், இதற்குமேல் பெரும் பதவிகளுக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தும், அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு தானாகவே முன்வந்து விருப்ப ஓய்வு (VRS) கொடுத்துவிட்டு, பார்ப்பனப் பாசிசக் கும்-பலால் திட்டமிட்ட வகையில் பலியாக்கப்படும் உண்மை-களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வீர சாகச பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.
மாலேகான் குண்டுவெடிப்பின் பின்னணியில் இருந்த ஒரு சதிகார கும்பலின் சிண்டைப் பிடித்து இழுத்து வந்து முச்சந்தியில் நிறுத்தியவர் கர்கரே என்னும் காவல்துறை அதிகாரியாவார்.

மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாலேகான் என்னும் இடத்தில் சிமி அலுவலகத்தின்முன் குண்டுவெடிப்பு 29.9.2008 அன்று நிகழ்ந்தது. 5 பேர் பலி; 90 பேர் படுகாயம்.
மோட்டர் பைக்கில் டைமர் கருவி பொருத்-தப்பட்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது.

அந்த மோட்டர் காருக்கு உரிமையானவர் ஒரு பெண் சந்நியாசி. அவர் பெயர் சாத்வி பிரக்யா தாக்கூர். மாணவர் பருவந்தொட்டு பல்வேறு இந்துத்துவா அமைப்பில் இருந்தவர்.


குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர்.
பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங்கின் ஆதரவும் உண்டு.

இந்தக் குண்டுவெடிப்பில் முதல் குற்றவாளி இராணுவத்தில் புலனாய்வுத் துறையில் பணி-யாற்றிய சிறீகாந்த் புரோகித் என்பவர்; மகாராட்டிர மாநிலம் நாசிக் என்னும் இடத்தில் இராணுவக் கல்லூரி ஒன்றை நடத்தி வருபவர்.

வெடிகுண்டுகளைத் தயாரிப்பது எப்படி? கையாளுவது எவ்வாறு? என்பன போன்ற பயிற்சிகளை இந்துத்துவாவாதிகளுக்கு அளிக்கும் இராணுவ அதிகாரி இவர்.
இவர்கள் பயன்படுத்திய வெடிகுண்டு தயாரிப்புக்-கான வெடிமருந்தோ இராணுவத்தைத் தவிர வேறு எங்கும் கிடைக்க முடியாதது. மேலும் பல இராணு-வத்-தினர் இந்த வெடிகுண்டு குற்றத்தில் தொடர்புடையவர்கள்.

பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணுவத்தை இந்து மயமாக்கும் ஒரு திட்டம் அமல்படுத்தப்பட்டது.

விமானப்படைத் தளபதியாக இருந்து விடுபட்ட விஷ்ணுபகவத் இந்த உண்மையைப் பட்டாங்கமாய்ப் போட்டு உடைத்தார்; ஊடகங்களிலும் வெளிவந்தது.
நாசிக் இராணுவத்தில் பயிற்சி பெற்ற இந்துத்துவா-வாதிகள் இந்திய இராணுவத் துறையில் ஆயிரக்கணக்-கானோர் ஊடுருவியுள்ளனர் என்பது அதிர்ச்சியூட்டக் கூடிய, அதிரும் தகவலாகும்.

இந்தியாவை இந்து மயமாக்கு!, இந்திய இராணு-வத்தையும் இந்து மயமாக்கு! என்பது இந்துத்துவா-வாதிகளின் ஏற்றப் பாட்டாகும்.
அவர்கள் அதிகாரத்தில் இருந்த நேரத்தில், அத-னைத் திட்டமிட்டுச் செய்துவிட்டனர். இராணுவத்-திலிருந்து ஓய்வு பெற்ற 96 உயர்மட்ட அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

பி.ஜே.பி.யின் செயற்குழுக் கூட்டத்திற்கு இராணுவ அதிகாரிகள் அழைக்கப்பட்டனர் என்பதையும் இந்த நேரத்தில் நினைவூட்டிக் கொள்ளவேண்டும்.
மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.
மாலேகானில் மட்டுமல்ல; பரிதாபாத், போபால், ஜெய்ப்பூர், இந்தூர், நாசிக் முதலிய இடங்களில் அரங்கேற்றப்பட்ட குண்டுவெடிப்புகளிலும் இதே கும்பலுக்குத் தொடர்பு உண்டு என்பதெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டது.

இராணுவ அதிகாரி புரோகித் தயாரித்து வைத்திருந்த திட்டமோ வெகு பயங்கரமானது. இசு-ரேலில் தஞ்சம் அடைந்து அங்கிருந்து இந்தியாவில் ஒரு போட்டி அரசை, இந்துத்துவா அரசை நடத்திட-வெல்லாம் திட்டமிட்டு இருந்தனர். வரைபடம், அர-சமைப்புச் சட்டம், கொடி முதலியவை முதற்கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன.
மடிக் கணினி (லேப்டாப்)யில் இருந்த பதிவுகள் அவர்களைக் காட்டிக் கொடுத்தன.
இவற்றையெல்லாம் கண்டுபிடித்தவர், விரிவாகக் குற்றப்பத்திரிகை தயாரிக்கக் காரணமாக இருந்தவர்-தான் கார்கரே என்னும் காவல்துறை அதிகாரி.
4000 பக்கங்களைக் கொண்ட தகவல் அறிக்கை-யாக அது உருவாக்கப்பட்டு இருந்தது.
அவை வெளியில் வந்தால் ஆரிய ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பூர்வோத்திரமான அத்தனை அங்க மச்ச அடையாளங்கள் எல்லாம் பளிச் பளிச்சென்று மக்கள் மத்தியிலே அம்பலமாகியிருக்கும்.

இப்படிப்பட்ட ஓர் அதிகாரியை ஆரியம் விட்டு வைக்குமா? இதற்குமுன் விட்டு வைத்ததுதான் உண்டா?
ராமராஜ்ஜியத்தை உருவாக்குவேன் என்று சொன்னவரை மகாத்மாவாக்கியவர்களும் அவர்-களே. நான் சொல்லும் ராமன் வேறு; இராமாயண இராமன் வேறு என்று காந்தியார் சொல்ல ஆரம்-பித்ததும், அவரை துர் ஆத்மாவாகக் கருதி மார்பில் குண்டு பாய்ச்சி ரத்தம் குடித்த கும்பலாயிற்றே!
திட்டமிட்டார்கள், தீர்த்துக் கட்டிவிட்டார்கள்_ காவல்துறை அதிகாரி கர்கரேயை.
அதைப்பற்றிய நூல்தான் மகாராட்டிர மாநில முன்னாள் காவல்துறை அய்.ஜி. எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்களால் எழுதப்பட்ட ‘‘Who Killed Karkare?’’ என்ற நூலாகும். 2009 இல் முதல் பதிப்பாக வெளி-வந்து, 2010 இல் மூன்றாவது பதிப்பாகவும் வெளி-வந்துவிட்டது.
அந்த நூலைப் பற்றிய அறிமுக விழாதான் திராவிடர் கழகத்தின் சார்பிலும், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பிலும் நேற்று (2.2.2010) மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றதாகும்.
336 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 300. நேற்றைய விழாவில் ரூபாய் 250_க்கு அளிக்கப்பட்டது.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட, திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் பேராசிரியர் பி.ஆர். அரங்கசாமி, தணிக்கையாளர் ஆர். இராமச்சந்திரன், அப்துல் காதர், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா. நேரு, பொதுச்செயலாளர் வடசேரி இளங்கோவன், புதுச்சேரி மு.ந. நடராசன் முதலியோர் பெற்றுக்கொண்டனர்.
பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ. குமரேசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.


வேர்கள் பதிப்பக உரிமையாளர் எம். குலாம் முகம்மது அவர்கள் தன் உரையில் பார்ப்பனியத்தின் பயங்கரத் தன்மையை எடுத்துக் கூறினார்.
பார்ப்பனர்களால் இந்தியாவுக்கே பேராபத்து சூழ்ந்துவிட்டது.
இவர்களிடமிருந்து இந்தியாவை மீட்கவேண்டும்.
பெரியார் தமிழ்நாட்டிலிருந்து மகாராட்டிரத்திற்குச் சென்றுள்ளார். இந்நூலில் பெரியார்பற்றி நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய தலைமுறையினருக்குப் பெரியார் பற்றி சரியாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், வரப்போகும் தலை-முறையில் நடக்க இருக்கும் புரட்சிக்கு பெரியார்தான் கட்டியம் கூறுவார் என்று அவர் சொன்னபோது கலகலப்பான கைதட்டல்.
பார்ப்பனர்களின் கைக்குள் இருக்கும் உளவுத் துறையை விமர்சிப்பது என்பது சாதாரணமானதல்ல. முஷ்ரிஃப் அவர்கள் மிகவும் விரிவாகவே உளவுத் துறையை விமர்சித்திருக்கிறார்.
குடியரசுத் துணைத் தலைவர் அமீர் அன்சாரி அவர்-கள்-கூட அண்மையில் ஒரு கருத்தைக் கூறியுள்ளார். உளவுத் துறை என்பது யார் ஒருவருக்காவது பதில் சொல்லக் கடமைப்பட்டதாக (Accountability) இருக்கவேண்டும் என்று கூறியிருப்பது இந்நூலுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நூலுக்குப் பிறகுதான் பாதுகாப்புத் துறை ஆலோசகராக இருந்த பாலக்காட்டுப் பார்ப்பனரான எம்.கே. நாராயணனும் அந்தப் பொறுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளார்.
திராவிட இயக்கப் பாரம்பரியம் உள்ள பெரியார் அவர்களுக்குப் பிறகு அந்தப் புரட்சியைத் தொடர்ந்து நடத்திச் செல்லும் வீரமணியார் தலைமை வகித்து நடத்தும் இந்த நிகழ்ச்சி புதிய தொடக்கத்தின் வீச்சு என்று குறிப்பிட்டார் குலாம் முகம்மது அவர்கள்.
வி.டி. ராஜஷேகர் ஷெட்டி
தலித் வாய்ஸ் ஆசிரியரும், சமூகநீதித் தளத்தில் தடம் பதித்து வருபவருமான பெங்களூரு வி.டி. ராஜஷேகர் அவர்கள் தம் உரையில் சுருக்கமாகக் குறிப்பிட்டதாவது:
இந்நாட்டில் பார்ப்பனர்களின் முதல் பலி முசுலிம்களே; ஆனால், இந்த உண்மையை எந்த அளவுக்கு முஸ்லிம்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று தமது ஆதங்கத்தைத் தெரியப்படுத்தினார்.
இந்தியா முழுமையும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை முஸ்லிம்கள் சிறையில் இருந்து வருகின்றனர். அவர்கள் விடுவிக்கப்படவேண்டும். முஸ்லிம்கள் முஷ்ரிஃப் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.
தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்த-போதே 1925 ஆம் ஆண்டில் சேலத்தில் பேசிய பொதுக்கூட்டம் ஒன்றில் தொலைநோக்கோடு ஒரு கருத்தைக் கூறியுள்ளார். மவுண்ட் ரோடு மகா-விஷ்ணு-வான இந்து ஏடே, தான் வெளியிட்ட மலரில் பெரியார் அவர்களின் கருத்தை வெளியிட்டுள்ளது.
வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் இருக்கும்-போதே பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்கு ஒரு முடிவை ஏற்படுத்தவேண்டும். இல்லாவிட்டால், இந்நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பார்ப்பனர்களின் வல்லாண்மைக் கொடுமையின்கீழ் துன்பப்பட நேரிடும் என்று எச்சரித்தார்.
அதுதான் இன்றுவரை நடந்துகொண்டிருக்கிறது.
முஷ்ரிப் அவர்களால் எழுதப்பட்ட இந்த நூல் அறிவுப்பூர்வமான வெடிகுண்டாகும். இந்த நூல் வெளிவந்த பின் இந்தியாவின் ரா, அய்.பி. போன்ற அமைப்புகள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார்.
தமிழர் தலைவர் கி.வீரமணி
நூலினை அறிமுகப்படுத்திய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரும் அளவு ஆங்கிலத்தில் உரையாற்றினார். இடையிடையே தமிழிலும் விளக்கினார்.
இங்குள்ள முசுலிம்கள் கைபர் கணவாய் வழியாக இந்த நாட்டிற்கு வந்தவர்கள் அல்லர். இங்குள்ளவர்கள் இங்கே பிறந்தவர்கள்தாம். அவர்களை அந்நியர்கள் என்று கூறக் கூடியவர்கள் தான் உண்மையிலே அந்நியர்கள்.
முஸ்லிம் தீவிரவாதி என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். தீவிரவாதிகளில் என்ன முஸ்லிம் தீவிரவாதிகள் _ இந்து தீவிரவாதிகள்? முஸ்லிம் தீவிரவாதி என்று சொல்பவர்கள் இந்து தீவிரவாதி என்று சொல்கிறார்களா?
இங்கு இந்து ராஷ்டிரத்தை உருவாக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் துடிக்கிறது. விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவராக இருந்தவர் கரண் சிங். ஏன் அவர் அந்த அமைப்பிலிருந்து விலகினார்? அதற்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறியிருக்கிறாரே.
அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மத்தைக் கொண்டு வர விரும்புகிறார்கள் என்று சொல்லித்தானே கரண்சிங் அந்த அமைப்பிலிருந்து வெளியேறினார் என்ற ஓர் அரிய தகவலை மன்றத்தில் தெரிவித்தார் ஆசிரியர்.
கர்கரேயை அவர்கள் கொல்லவில்லை, உண்மையை, நீதியைக் கொன்று இருக்கிறார்கள். அந்த உண்மைகளையும், மறைக்கப்பட்ட நீதிகளையும் வெளியில் கொண்டு வரும் முயற்சியில் நூலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.
நம் எதிரிகள் நாணயமானவர்கள் அல்லர். என் உயிருக்கே மூன்று முறை குறி வைத்தனர். நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று குறிப்-பிட்டார். (உரை முதல் பக்கம் காண்க). எஸ்.எம்.முஷ்ரிஃப்
நூலாசிரியர் எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்கள் ஏற்-புரையாகக் கூறியதாவது.
நான் இந்த அளவு பெரிய கூட்டத்தில் கலந்து கொண்டதில்லை. இந்தப் பிரச்சினைக்காக இவ்வளவு பெரிய கூட்டம் இங்கே கூடியிருக்கிறது என்றால், அதற்குக் காரணமான பெரியார் ராமசாமி அவர்களை நினைத்துப் பார்க்கிறேன் (கைதட்டல்).
இதனை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த வீரமணி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மும்பையில் தீவிரவாதிகளால் தாக்குதல் தொடுக்கப்பட்டது. முன்கூட்டியே அய்.பி.க்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதை மாநில அரசுக்கு அய்.பி. தெரிவிக்காதது ஏன்?
மராட்டியத்தில் குண்டு வெடிப்பை நடத்தியவர்-கள் இந்துப் பயங்கரவாதிகள். அவர்களின் சதித் திட்-டம் அவர்களிடம் இருந்த லேப்டாப் மூலம் கண்டு-பிடிக்கப்பட்டது. அவற்றையெல்லாம் வெளியில் கொண்டு வந்த காவல்துறை அதிகாரி தான் கார்க்கரே.
அவரைத்தான் திட்டமிட்ட வகையில் படு கொலை செய்துள்ளார்கள். வேறு வகையில் இதனைச் செய்திருந்தால் அது வெளிச்சத்துக்கு வந்துவிடும். இது போன்ற சந்தர்ப்பத்தில் கொலை செய்வது அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.
அபிநவ் பாரத் என்பதும் ஆர்.எஸ்.எஸ்.தான். பார்ப்பனர்கள் அதிக ஆதிக்கம் கொண்ட அமைப்பு இது. இஸ்ரேல் நாடுவரை தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர்.
நாக்பூர், புனே போன்ற இடங்களில் 53 இடங்களில் கூட்டங்கள் நடத்தியிருக்கின்றனர்.
காமா மருத்துவமனைக்கு இராணுவத்தினரை அனுப்புமாறு கர்க்கரே கேட்டுக் கொண்டும், அதனைச் செயல்படுத்தத் தவறியுள்ளனர். இந்த நிலையில் கர்க்கரே அங்கே சென்றபோது சுட்டுக் கொன்றுள்ளனர்.இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளியில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த நூலை எழுதினேன். இந்த நூலை வெளியிட்டபோது பார்ப்பனர் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டனர். புனே மிரர் என்னும் ஓர்ஏடு மட்டும் விமர்சித்திருந்தது.
எனக்குக் கொஞ்சம் சோர்வுகூட இருந்தது. ஆனால் இந்தப் பெரியார் மண்ணுக்கு நான் வந்த பிறகு அந்தக் சோர்வு எல்லாம் ஓடோடிவிட்டது. எனக்குப் புதுத்தெம்பே ஏற்பட்டு விட்டது!
பார்ப்பனர் அல்லாதார் விழிப்புணர்வு பெற வேண்டும்.
பார்ப்பனர் அல்லாதாரின் எழுச்சியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இசுலாமியர்களை பயங்கரவாதிகள் என்று காட்ட முயற்சிக்கின்றனர். இந்தச் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும் என்று கூறினார்.
தென்சென்னை பகுத்தறிவாளர் கழக செயலாளர் சி.செங்குட்டுவன் நன்றி கூறினார்.
இரவு 9.30 மணிக்கு விழா நிறைவுற்றது. மன்றம் நிரம்பி வழியும் அளவிற்குப் பலதரப்பட்ட மக்களும் கூடியிருந்தனர்.

நன்றி விடுதலை

Tuesday, February 02, 2010

வாக்காளர் அடையாள அட்டையிலும் மதம்...

வாக்காளர் அடை-யாளப் பட்டியலில் ஒளிப்-படம் (Photo) இடம்பெற்றி-ருப்பதில்கூட மத சாயம் பூசப்படுவது வேடிக்கை-தான்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அஜ்மல்கான் என்பவர் தமிழகத் தேர்தல் ஆணை-யத்துக்கு எதிராக உச்சநீதி-மன்றத்தில் வழக்கு ஒன்-றைத் தாக்கல் செய்துள்-ளார்.
முசுலிம் சமூகத்தில் பெண்கள் பர்தா அணி-வதும், முகத்தை மறைக்க ஹிஜாப் அணிவதும் மத சம்பிரதாயமாம். பெண்-களை அவர்களின் கண-வன் மற்றும் உறவினர்கள் மட்டுமே பார்க்கவேண்-டும் என்பது அய்தீகமாம்.
ஆனால், முசுலிம் பெண்கள் பர்தா அணியா-மலும், ஹிஜாப் அணியா-மலும் உள்ள ஒளிப்படங்-கள் வாக்காளர் பட்டிய-லில் அச்சிடப்பட்டுள்ள-தாம்! இது அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்-றுள்ள சட்டப் பிரிவு 25 இன்படி மதப் பாதுகாப்புப் பிரிவுக்கு எதிரானது என்பதுதான் வழக்கு.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்-ணன் மற்றும் நீதிபதி தீபக்வர்மா ஆகியோர் வாக்காளர் அட்டையில் படம் வெளிவந்ததற்கே இப்படி வருத்தப்படுகிறீர்-களே, தேர்தலில் போட்டி-யிட்டால் என்ன ஆகும்? வேட்பாளர்களின் படத்தை வீதிக்கு வீதி ஒட்டுவார்களே, அப்-பொழுது என்ன செய்வீர்-கள் என்ற பொருள் பொதிந்த வினாக்களை எழுப்பியுள்ளனர். வேண்-டு-மானால், வாக்களிப்பதா, வேண்டாமா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் முடிவு செய்துகொள்-ளட்-டும் என்று பந்தை அவர்-கள் பக்கமே தள்ளிவிட்-டனர் நீதியரசர்கள்.
சென்னை உயர்நீதி-மன்-றத்தில் இதே மனுதாரர் 2006 இல் இதே வழக்-கைத் தொடுத்தபோது, அது தள்ளுபடி செய்யப்-பட்டு விட்டது.
இந்தியா முழுமையும் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது; அங்-கெல்லாம் இதுபோல ஒளிப்படங்கள் அச்சிடப்-பட்டுதான் உள்ளன. இங்கு மட்டும் இப்படி ஒரு வினோத வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதை நீதிமன்றத்தில் தமிழகத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் எடுத்துக் கூறவும் பட்டது.

வாக்காளர் உண்மை-யானவரா, போலியா என்று அறிந்து கொள்ளத்-தான் ஒளிப்படம். அதிலும் முகத்தையும், கண்களை-யும் மறைத்துள்ள படத்தை வெளியிட்டால் எப்படி உண்மையை அறிய முடியும்?

மத நம்பிக்கைகள் உலகம் முழுவதும் மாறி வருகின்றன. முசுலிம் மதத்தைச் சேர்ந்த பெண்-களிலும் பல மாற்றங்கள் பல நாடுகளிலும் ஏற்-பட்டே வருகின்றன.

மாறுதல் என்பதுதான் மாறாதது என்பது இன்-னும் ஒரு சிலருக்குப் புரிய-வில்லையே! -

- விடுதலை (02.02.10) மயிலாடன்

Monday, February 01, 2010

துக்ளக்குக்கு சோ பார்பானுக்கு ஒரு கடிதம்

துக்ளக் இதழிலும், ஜெயா தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகள் மூலம் சோ பெண்கள் அடிமைத் தனத்தையும் மூட வழக்கங்களையும் பிரசாரம் செய்து வருகிறார். பலமுறை விளக்கம் கொடுத்தும், வினா எழுப்பியும் எழுதிய கடிதங்களை பிரசுரிக்கவோ, தொலைக் காட்சியில் விளக்கம் அளிக்கவோ இல்லை. இத்துடன் துக்ளக் இதழுக்கு எழுதிய கடிதத்தின் நகலை அனுப்பியுள்ளேன். விடுதலை இதழில் பிரசுரிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

_ப. தமிழ்மணி, திருநெல்வேலி- -_ 7.


இதோ அவரின் கடிதம் விடுதலையில் வெளிவந்தது.......என்ன அய்யோக்கியதன் மொட்டை சோவுக்கு....

ஜெயா டிவி_யில் சென்ற வாரம் எங்கே பிராமணன் நிகழ்ச்சியில்,

சுயமரியாதைத் திருமணம் நடத்துபவர்கள் அதை பதிவுத் திருமணமாக நடத்தினால் போதாதா ஏன் ஒரு விழாவாகக் கொண்டாட வேண்டும் என கேட்டீர்கள்.

திருமணத்தைப் பதிவு செய்தால் மட்டும் போதுமானதே.

விழாவாக உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரையும் அழைத்து நடத்துவதன் முக்கிய நோக்கம் சுயமரியாதைத் திருமணம் என்றால் என்ன? சம்பிரதாய திருமணத்தில் நமது சுயமரியாதை எப்படி கொடுக்கப்படு-கிறது, வடமொழியில் சொல்லும் மந்திரத்தின் பொருள் என்ன-? அக்னிக்கும், சோமனுக்கும் கந்தர்வனுக்-கும் மனைவியாக இருந்த இப்பெண் உனது மனைவியாகிறாள் போன்ற கருத்துக்களை விளக்கிக் கூறவும்.

சுயமரியாதைத் திருமணம் தந்தை பெரியாரால் அறிமுகம் செய்யப்பட்டு அறிஞர் அண்ணா ஆட்சியில் சட்ட வடிவம் பெற்றது, சட்ட பாதுகாப்பு உள்ள திருமணம் போன்ற கருத்துக்களை விளக்கவும்.

மணமக்களை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யவும், அவர்களுக்கு விருந்து படைக்கவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ளவே விழாவாக நடத்தப்படுகிறது.

அக்னி சாட்சியாக அய்யர் திருமணம் நடத்தி வைக்க அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஏழு அடி எடுத்து வைத்து நடந்த திருமணங்கள் விவாகரத்து ஆகின்றனவே. அக்னி சாட்சி சொல்ல வருவதில்லையே அதை யாரும் எதிர்பார்ப்பதுமில்லை. அக்னி சாட்சியாக நடந்த திருமணத்தை ஏற்று வெளிநாடு செல்ல விசாகூட தருவதில்லையே. பதிவுத் திருமணம் செய்திருந்தால் அக்னி சாட்சி கூட தேவையில்லை விசா பெற்று விடலாமே. இந்தக் கருத்துகளை யெல்லாம் மக்களிடம் விளக்கவே விழாவாக நடத்தப்படுகிறது. பெண்கள் கூடியிருக்கும் நிகழ்ச்சியில் அவர்களுக்கும் இக் கருத்துக்கள் போய்ச் சேரும்.

சுமரியாதைத் திருமணம் செய்பவர்கள் சுயமரியாதை சாவு நடத்துகிறார்களா என வினவி உள்ளீர்கள்; அதுவும் நடைபெறுகிறதே இறந்தவர் வீட்டில் ம(ட)த சம்பந்தமான எந்த மூட நிகழ்ச்சிகளையும் செய்யாமல் குடம் உடைப்பது, கொள்ளி வைப்பது எதுவும் இல்லாமல் எரியூட்டப்படுகிறதே.!

சமீபத்தில் மரணமடைந்த மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் திரு. ஜோதிபாசு அவர்களுக்கு நடைபெற்றது சுயமரியாதை மரண நிகிழ்வுதானே. சொர்க்கத்திற்கு போக வேண்டி காரியங்கள் செய்யாமல் இறந்த உடம்பை மருத்துவ மாணவர்கள் பயன்படும்படி மருத்துவக் கல்லூரிக்குக் கொடுத்தார்களே!

கதையின் நாயகன் அசோக், கடவுள் படைத்த தரையில்தான் படுத்து தூங்குவேன்; மனிதன் படைத்த கட்டிலை பயன்படுத்த மாட்டேன் என கூறுகிறார். கடவுள் படைத்ததாக வைத்துக் கொண்டாலும் அவர் படைத்தது பஞ்சும் நெல்லும்தானே. அசோக் மனிதன் நெய்த ஆடையும் மனிதன் பக்குவம் செய்த சாதத்தையும் பயன்படுத்துவது அவர் வாதப்படி நியாயமாகுமா?

- ப. தமிழ்மணி, திருநெல்வேலி- -_ 7

பார்ப்பனரைத் தாங்கிப்பிடிக்கும் பார்ப்பனர்கள்!

காஞ்சிபுரத்திலே வரதராஜ பெருமாள் கோயில்_ அதன் மேலாளர் ஆனந்த-சர்மா மகன் சங்கர்ராமன்.


இரவில் அல்ல, பட்டப் பகலிலேயே கொலை செய்யப்படுகிறார். ஊரே நடுங்குகிறது.

வரதராஜப் பெருமாள் கோயிலி-லேயே இப்படி ஓர் அபவாதமா? என்று பக்தர்கள் குமைந்தனர். ஊர் மக்கள் பொரிந்து தள்ளினர். ஏடுகள் எல்லாம் பக்கம் பக்கமாக எழுதின.

யார் இதைச் செய்திருப்பார்? ஆசாமி சாதுவாயிற்றே_ அவருக்குக் கூட எதிரிகள் உண்டா என்று கூடிக் கூடிப் பேசினார்கள்.

கடைசியில் பார்த்தால்... அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியாக சங்கர மடத்துக்கு மோப்ப நாய் வரவில்லை-தான் என்றாலும் _ கொலையாளி அந்த மடத்துக்குள் தான் இருக்கிறார் என்ற தகவல்கள் கசிந்தன.

ஜெகத் குரு வாம் _ சங்கராச்சாரி-யாராம் _ நானே கடவுள் என்று கூறிக் கொள்பவர்களாம். கொலையின் பீடம் அதுதான் என்று கண்டுபிடித்து ஒரு தீபாவளி நாளில் (11.11.2004) ஜெயந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்டார்.

ஆந்திரா சென்று அங்கிருந்து கம்பியை நீட்டி விடலாம் என்று திட்டம் போட்டிருந்தார் போலும்! காஞ்சிபுரம் கொண்டு வந்து, நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டு 15 நாள் வேலூர் மத்திய சிறையில் தள்ளப்பட்டார்.

அவர் மீதுள்ள உள்ள குற்றச்-சாற்றுகளோ சாதாரணமானவை அல்ல. இ.பி.கோ. 302, 120 பி, 34,201 கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுசதி, பொய்யான சாட்சியங்கள் சமர்ப்பித்தல் கொலை _ வழக்குகளில் ஆசாமி சிக்கிக்கொண்டார், 61 நாள்கள் வேலூர் சிறையில் கம்பி எண்ணினார் ஜெகத் குரு. எங்கு சென்றாலும் ஜாமீன் கிடைக்காது என்று உச்ச நீதி மன்றம் சென்று பெற்றுக் கொண்டு வந்தார்.

சின்ன பெரியவாள் விஜயேந்திர சரஸ்வதியும் கைது செய்யப்பட்டு (10.01.2005) 31 நாள் கம்பி எண்-ணினார்.

நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் மூன்று வாரம் நாள்தோறும் கையொப்பம் சாற்ற வேண்டும். கேடி லிஸ்டில் ஜூனியர் சங்கராச்சாரியார் இடம் பெற்றார்.

ஆடிட்டர் ராதா கிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜெயேந்திர சரஸ்வதி கைது (23.11.2004). அக்கிரகாரத்தில் இடிவிழுந்தது மாதிரி ஆகிவிட்டது, வெளியில் தலைகாட்ட முடியாத பரிதாபம்!.

இந்த யோக்கியதை உள்ள ஆசாமி, கொஞ்சம் காலம் ஓடிவிட்டது என்கிற தைரியத்தில் துள்ளித் திரிகிறார்.

ஆங்காங்கே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பு _ வரவேற்பு வைபவங்கள்! நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் அவரை வரவழைத்து அவரை பெரிய மனிதராக ஆக்கிக் காட்டுகிறார்கள்.

அவர்மீது படிந்துள்ள அசிங்கங்-களை மறைக்க புதிய ஜோடனைகளை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்பது தனியாரின் வங்கி அல்ல _ நாட்டுடை-மையாக்கப்பட்ட ஒன்று. சென்னை காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட் மருத்துவமனைக்கு கருவிகள் வாங்க ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள பொருள்களை இலவசமாக வழங்குகிறார்களாம்.

அந்த மருத்துவமனைக்கான சோதனை மய்யத்தை கொலை குற்றவாளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஜெயந்திர சரஸ்வதி திறந்து வைக்கிறாராம். யார் வீட்டுப் பணத்தை யாருக்குக் தூக்கிக் கொடுப்பது? நாட்டில் காஞ்சி மடம் நடத்தும் ஒரே ஒரு மருத்துவ-மனைதான் இருக்கிறதா?

மற்ற மற்ற மருத்துவமனைக-ளெல்லாம் கண்களுக்கே தெரியாதா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேல்மட்டமெல்லாம் ஒரே அக்கிரகார மயம். அவர்கள் நினைத்தால் எதுவேண்டு-மானாலும் செய்யலாம் என்ற தோரணையில் கொலை மடம் என்று பெயர் பெற்றுவிட்ட சங்கர மடத்தின் அதிபதியை அழைத்து வாரி வழங்கு-கின்றனர் என்றால், இதன் பொருள் என்ன?

இந்த இடத்தைத்தான் சூத்திரத் தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கொலைக் குற்றவாளியாக இருந்-தாலும் தங்களவாள் என்றதும் கோபுரத்-திற்கு உயர்த்தும் அந்தக் குணப்-போக்கைக் கவனிக்க வேண்டாமா?

ஒரு நண்டு இன்னொரு நண்டின் காலை கவ்விப் பிடித்து இழுப்பது போல, ஒரு தமிழன் இன்னொரு தமிழன் காலை வாரிவிடுவதில்தானே கண்ணும் கருத்துமாக இருக்கிறான்?

அவர்களின் பீடத்திற்கு ஹானி ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலே எத்துணை உணர்வுகள் அக்கிரகாரத்-திடம் ?

கொலைக் குற்றம் மட்டுமா?

பெண்கள் விஷயத்தில் இந்தக் காமகோடி ஆடிய ஆட்டங்கள் சிரிப்பாய்ச் சிரிக்கவில்லையா?

அனுராதா ரமணன் என்ற அம்மை-யார் அக்கிரகாரப் பெண்மணிதானே!
கண்ணீரும் கம்பலையுமாக பேட்டி கொடுத்தாரே_ தொலைக்காட்சி ஒளிபரப்பியதே, -_ தன் கையைப் பிடித்து இழுத்தான் அந்தப் பெரிய மனுஷன் என்று குமுறினாரே!
நிர்வாணமாக நின்று என்னை பலவந்தப்படுத்தினார் என்று அந்தப் பார்ப்பனப் பெண் கதறினாரே_ தொலைக்காட்சிகள் அதனை ஒளிபரப்பினவே.
இப்படி ஒரு கழிசடை பேர்-வழியைத்தான் அரசுடைமையாக்கப்-பட்ட ஒரு வங்கி பூர்ணகும்பம் கொடுத்து வரவேற்பு கொடுக்கிறது.

தன் எதிரிலேயே ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டார் ஜெயேந்திரர் என்று வெட்கத்தை விட்டு அந்த எழுத்தாளர் குமுறினாரே!

வாரத்துக்கு அய்ந்து நாள்கள் சிறீரங்கத்தில் உள்ள உஷா என்ற பெண்-ணுடன், சங்கராச்சாரி ஜெயேந்-திரரும் காலை நேரத்தில் சரசலீலைகள் பேசியதை அந்தக் கைபேசிகள் மூலம் காவல்துறை உறுதிப்படுத்தியதே!

ஜெயேந்திரருக்கு பெண்களை சப்ளை செய்தேன் என்று ரவி சுப்-பிரமணியம் ஒப்புக்கொண்டிருக்-கிறாரே!

இப்படிப்பட்ட ஓர் அசிங்கமான மனிதருக்குத்தான் இந்தியன் வங்கி-யிலுள்ள தலைமைப்பீ()ட அக்கிர-காரத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அம்பாரி வைத்துப் பூஜை செய்-கிறார்கள்.

ஜெயேந்திரரை விட பிரேமானந்தா எங்கே கெட்டுப் போய்விட்டார்? பிரேமானந்தாவை அழைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் மரியாதை செய்வார்களா?

காஞ்சிபுரத்தில் ரயில்வேதுறை சம்பந்தப்பட்ட அரசு விழாவில் (25.11.1998) சங்கராச்சாரியார் கலந்து-கொண்டதைக் கண்டித்து திராவிடர் கழகம் மறியலில் ஈடுபட்டதே _ அதனைத் தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார்கள் _ அவ்விழாவில் பங்கேற்கவில்லை. அப்போது அவர்மீது கொலை வழக்குக் கூட இல்லை.

ஓர் அரசு விழாவில் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஒருவர் எப்படி பங்கேற்கலாம் என்று போர்க் கொடி உயர்த்தியதே திராவிடர் கழகம்.

அப்படி இருக்கும்பொழுது அரசுக்-குச் சொந்தமான வங்கி இந்து மத மடத் தலைவரை அழைத்து எப்படி சிறப்பு செய்யலாம்? அதுவும் ஒரு கொலைக் குற்றத்தில் ஜாமீனில் வெளிவந்த நிலையில் எப்படி அழைக்கலாம்?

இதைப் பற்றி எந்த ஏடுகள் எழுதுகின்றன? எந்தத் தொலைக்காட்சி விமர்சனம் செய்கிறது? எந்தத் தலைவர்-கள் பிரச்சினை செய்கிறார்கள்?

பஞ்சமா பாதகம் செய்தாலும் தங்கள் இனத்தவரை பார்ப்பனர் எப்படி-யெல்லாம் கட்டிக் காக்கும் வேலையைச் செய்கிறார்கள்?

தமிழர்கள் சிந்தித்துப் பார்க்கட்டும்_ இனஉணர்வை வளர்த்துக் கொள்ளட்டும்!

- நன்றி விடுதலை (30 . 01 . 2010 )

Tamil 10 top sites [www.tamil10 .com ]