வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label பார்பனர். Show all posts
Showing posts with label பார்பனர். Show all posts

Saturday, February 06, 2010

சோவின் கீழ்க் குணம்!

கேள்வி: ரிமாண்ட் கைதிகள் மற்றும் சிறைக் கைதிகளுக்கு கிராமியக் கலைகளில் பயிற்சி அளிக்கலாம் என்று கனிமொழி எம்.பி., யோசனை தெரிவித்துள்ளதுபற்றி?
பதில்: சரி தான் சொன்னபடி நடக்க வேண்டிய, அடிமை நிலையில் இருக்கிறவார்கள்தான் இந்தப் பயிற்சியை ஏற்பார்கள் என்று அவரே தீர்மானித்து விட்டார் போலிருக்கிறது. கல்லுடைக்கச் சொன்னால் உடைக்க வேண்டியவர்கள் இதைச் செய்ய மாட்டார்களா என்ன? கலை, கைதி சங்கமம்!
(துக்ளக் 3.2.2010)
கிராமியக் கலைகள் என்றால் இந்த மண்ணுக்-குரியது. தமிழர்களுக்குரியது. அதனை அழித்துவிட்டு அதன் மேல் ஆரியப் பார்ப்பனக் கலாச்சார சங்கதி-கள் அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கின்றன. ஆத்திரம் வராதா அக்கிரகார சிகா-மணிகளுக்கு?
ஆத்திரத்தை ஏதோ ஒரு வகையிலே வெளி-யேற்றாவிட்டால் அவாளுக்கு ரத்தக் கொதிப்பு வந்து விடுமே. அந்தப் பாணிதான் சோவின் பதிலும்.
சரி, அவர் விவாதப்படியே வருவோம்.
கலையைக் கற்றுக் கொள்ளும்போது குரு சொன்ன-படி நடந்தால் அதில் என்ன தவறு இருக்கிறது? அதற்கு பெயர் பார்ப்பன சோக்களின் அகராதியில் அடிமை நிலை என்று பெயரா? ஆசிரியர் சொன்ன-படி நடக்காமல் கல்வி பயின்ற அடங்காப் பிடாரிகளா இவர்கள்?
கலை -_ சதி _ சங்கமம் என்று இவாள் சொல்லும் முறை கிராமியக் கலையைக் கொச்சைப்படுத்தும் மேல் ஜாதி ஆணவச் சிந்தனைப் போக்கு என்பதை உணர வேண்டும். சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடி வாலிப வயதில் பெண்ணைத் திருடியக் கிருஷ்ண-னைப்பற்றி நாட்டியம் ஆடினால் தானே அவாளுக்கு இனிக்கும்!
கேள்வி: ஆண்களுக்குப் போட்டியாக பெண் அதிகாரிகளும் துணிந்து லஞ்சம் வாங்க ஆரம்பித்-திருக்கிறார்களே! பெண்களின் துணிச்சலை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறதே?
பதில்: ஒரு வியப்பும் இல்லை. பேசாமல், ஆண்கள் வாங்குகிற லஞ்சத்தில் 33 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து சட்டம் கொண்டு வரலாம். அது பெண்-மைக்கும் பெருமை; நாட்டிற்கும் கவுரவம்; சமநீதி; சம உரிமை... எல்லாம்.
(துக்ளக் 3.2.2010 பக்கம்13)
எப்பொழுதுமே பெண்களை மட்டம் தட்டி எழுதுவதில் குறியாக இருப்பவர்தான் இந்த சோ ராமசாமி. காரணம் அவாளின் மனுதர்மச் சிந்தனை.
படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் (மனுதர்மம் அத்தியாயம் 9; சுலோகம் 17)
_ இந்த மனுதர்மத்தை அடேயப்பா, எப்படி-யெல்லாம் தூக்கிப் பிடித்து எழுதியிருக்கிறார் இந்த சோ.. வெறுக்கத்தக்கதா பிராமணீயம்? என்ற சோவின் தொடரைப் படித்தால் இந்த உண்மை விளங்கும். அவாள் வீட்டுப் பெண்களை-யும் இப்படி ஆபாசமாகத்தான் நடத்து-வார்கள் போலும்!
சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் பெண்ணுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வேண்டும் என்று எழுந்திருக்கும் கோரிக்கையைக் கொச்சைப்படுத்துவ-தற்காகவே லஞ்சம் வாங்குவதில் 33 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யலாமே என்று பேனா பிடிக்கிறார்.
பெண்களையும் மட்டம் தட்ட வேண்டும் _ இடஒதுக்கீட்டையும் கொச்-சைப்-படுத்த வேண்டும் _ ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்த வேண்-டும் என்ற அக்கிரகாரக் கீழ்ப்புத்தி-தான் சோ-வின் இந்தப் பதிலில் வழிகிறது.

நன்றி விடுதலை (06.02.10)

Wednesday, January 27, 2010

ஏன் நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக்கொள்கிறோம்....

நாம் யாருக்கும் மேலல்ல! யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் ஐயர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது, தாயையும் ஆகாது, சேரியும் கூடாது, அக்ரகாரமும் ஆகாது, யோக யாக புரட்டுகள், புரோகித பித்தலாட்டம், மனுக்கொடுமை வேண்டாம். மனிதர் யாவரும் சரி நிகர் சமமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படி தம்மை இந்து என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித்தான் மனம் இடம் தரும்? எப்படித்தான் துணியும்? இந்து மதம் என்பதிலே உள்ளக் கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதைமுறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப்பார்த்த பிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் இந்து என்று கூறிக்கொள்ள மனம் இடம் தரும்? பாம்பை எடுத்து படுக்கையில் விட்டுக்கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக் குப்பையை வீட்டுக்குள் கொண்டுபோய்ச் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களைவிட்டு மதிகெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீளாமார்க்கம் தேடுவதைவிட்டு, மாளவழி தேடிக் கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்ப மிடுவரா? கண் தெரியும்போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு, திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் இந்து மார்கத்தில் போய்ச் சேர இசைவாரா? வீரத்திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கிப் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!!


ஆள் நடமாட ஓர் உலகம். ஆவி உலவ மற்றோர் உலகம். இந்திரன் இருக்க ஓர் உலகம். நான் தங்க ஓர் உலகம், மேலே ஏழு, கீழே ஏழு, எனப் பதினான்கு உலகங்களாம். அதல, விதல,சுதல தராதல, இராசாதல, மகாதல பாதாளம் என ஏழாம்! பூலோக, மகாலோக, சத்யலோக என மேல் உலகம் ஏழாம்! இத்தனை உலகங்கள் இந்துவுக்கு உண்டாம், ஓட்டிலே, நமக்கு இவை வேண்டாம் நாமிருக்கும் நாடு நமக்கு இருந்தால் போதும் நான் செய்யும், புன் செய்யும், சாலையும், சோலையும், வாவியும், நதியும் மக்களுக்கு சுபீட்சமும் இருக்கட்டும். காமதேனும், கற்பக விருட்சமும் ரம்பையும், ஊர்வசியும் உலவும் உலாம் வேண்டாம். நாமிருக்கும் நாட்டிலே நாம் கீழ் ஜாதி என்ற கொடுமை இன்றி நாமார்க்கும் குடியல்லோம் என்று நாம் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்திலேதான், நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக்கொள்கிறோம்.

(ஆரிய மாயை - கட்டுரை - 26.04.1943)

Monday, January 25, 2010

பார்ப்பனர் எவ்வளவு இழிந்தவராயினும் புகழ்தற்கு இச்சென்னைப் பத்திரிகைகள் அஞ்சுகின்றனவல்ல



பார்ப்பனரல்லாதார் ஒருவர் எத்துணை அறிவிற் சிறந்தவராயினும், பேசுவதில் வல்லவராயினும் அரும் பெருந்தியாகம் செய்தவராயினும் அவரைச் சென்னைப் பத்திரிகைகள் புகழமாட்டா! ஆனால் ஒரு பார்ப்பனர், எவ்வளவு இழிந்தவராயினும் அவரை வானமளாவப் புகழ்தற்கு இச்சென்னைப் பத்திரிகைகள் அஞ்சுகின்றனவல்ல. அதற்குக் காரண மென்னையெனின், சென்னையில் இருக்கும் பத்திரிகைகளில் பெரும்பாலன அய்யர், அய்யங்கார்கள், பத்திரிகைகள், அவைகள் இந்தியர் பணத்தில் வெளிநாடு சென்று, இந்தியர்கள் பிறப்புரிமைகளை விற்ற கனம் சாஸ்திரிகளை வானமளாவப் புகழும்.



அவைகள் சர்.சி.பி. இராமசாமி அய்யர் ஆகாயக் கப்பலில் போனார், இங்கே விருந்துண்டார், அங்கே விருந்துண்டார், என்று தனி நிருபர்களின் தந்திகளைப் பத்தி பத்தியாய் வெளியிடும். அம்மட்டோ! ஒரு விஜயராகவாச்-சாரியார் அமெரிக்காவுக்குச் சென்று தன்மகள் வெள்ளைக்காரப் பெண்களைப் போன்று மயிர் கத்தரித்துக் கொள்ள விரும்புகின்றாள்; இந்தியாவில் தென்னை மரமிருக்குமட்டும் குடியை நிறுத்த முடியாது என்று பேசுவராயின், உடனே இப்பார்ப்பனப் பத்திரிகைகள் மனமகிழ்ச்சியுடன் இவைகளை எல்லாம் வெளி-யிடு-கின்றன. சாஸ்திரிகளைக் குறித்தும், ஆச்சாரி-களைப் பற்றியும் இவ்வளவு புகழ்ந்தெழுதிய பார்ப்பனப் பத்திரிகைகள் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று அங்கு இந்தியர்கள் சம உரிமையுடன் நடத்தப்படல் வேண்டுமென வாதாடிய திரு.-ஆர்.கே. சண்முகம் செட்டியார் பயணப்பட்டதைக் குறித்தும், அவர் அங்கு நிகழ்த்திய அரும்பெரும் சொற்பெருக்குகளைக் குறித்தும் யாதொன்றும் வெளியிட்டனவல்ல. திரு. சண்முகம் செட்டியார் கனம் சாஸ்திரிகளைப் போன்று இந்தியர்கள் பணத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று, இந்தியர்கள் பிறப்புரிமையை விற்றனரல்லர். அவர் ஆஸ்திரேலியாவுக்குத் தம் சொந்தச் செலவில் பயணப்பட்டு, அங்கு இந்திய மக்களின் நாகரிகத்தை எடுத்துரைத்து,

பொதுவாக கறுப்பு மனிதர்கள் தாழ்ந்த-வர்களென்றும், அதிலும் முக்கியமாக இந்தியர்கள் தாழ்ந்தவர்களென்றும் பேசுகின்றவர்களுக்கு எங்களுடைய புராதனமான நாகரிகத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. தாழ்ந்தவர்கள் என்று சொல்வதைக்கூட எங்கள் ஜனங்கள் எவ்வளவு பலமாக வெறுக்கிறார்கள் என்பதை நீங்கள் உணரவில்லை போலும். பக்தி வாய்ந்த கிறிஸ்தவர்களடங்கிய கூட்டத்தில் பேசுவதாக நான் நம்புகிறேன். ஏசுநாதர் கறுப்பு மனிதரைப் பற்றி என்ன கூறினார் என்பதை உங்களுக்கு நான் எடுத்து ஞாபக மூட்டட்டுமா? இப்படியிருக்க ஒரு தனிப்-பட்ட நபர் அல்லது ஜாதியார் இவர்களின் நிறத்தால் எப்படி ஏற்றத் தாழ்வு வந்துவிடுமென்று நீங்கள் கூறக்கூடும்? 3 கண்டங்களின் போர்க்-களங்களில் எங்களுடைய தீரர்கள் உங்களுடைய தீரர்களுடன் தோளோடு தோள் கொடுத்து நின்று எதிரிகளுடன் தீரமாகப் போராடி மடிந்திருக்-கிறார்கள். (கரகோஷம்) உங்களுடன் மடிவதற்குச் சமமாக இருக்க இலாயக்குள்ள நாங்கள் உங்-களுடன் சமமாக வாழ்வதற்கும் தகுதியுடையவர்-களல்லவா?

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பல பெரிய பெரிய காரியங்களைச் சாதித்திருக்கின்றது.

கலைகளிலும் நாகரிகங்களிலும் வித்தியாசப்பட்ட பல ஜாதியர்களிலும் ஒருங்கு சேருவதற்கு அது சந்தர்ப்பத்தை அளித்ததே என் மனதிற்கு எல்லாக் காரியங்களையும் விடச் சிறந்ததாகும் என நான் நினைக்கின்றேன். (சபாஷ்! சபாஷ்!!) ஏகாதிபத்தியத்-திற்குள் இந்தியா இருந்தால்தான் அத்தகைய சந்தர்ப்பம் ஏற்படும். ஆட்சி பெற்றுத் திருப்தியுடன் இருந்துவரும் இந்தியாதான் ஏகாதிபத்தியத்திற்கு மிக்க பலத்தை அளிக்கக் கூடியதாக இருக்கும். ஏகாதிபத்தியமானது உன்னதமான இலட்சியங்-களுக்காக ஏற்பட்டிருக்கின்றது. அதற்குச் சிறந்த சம்பிரதாயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தச் சிறந்த இலட்சிகளையும் இப்புனிதமான சம்பிரதாயங்-களையும் ஏற்றுப் பாதுகாக்கின்றவர்கள் என்ற பெருமை எங்களுக்கு உண்டாகும்படி செய்யுங்கள். இதுதான் எங்களுடைய பெரிய அவா. இது விஷயத்தில் நீங்கள் அனுதாபம் கொண்டு யோசிக்க வேண்டும். நான் உங்கள் நாட்டைவிட்டு இந்தியா-விற்குச் சென்று அன்பும் சுதந்திர தாகமும் கொண்ட ஆஸ்திரேலியர் இந்தியர்களுடன் சினேகமாக வரத்தயாராக இருக்கிறார்கள் என்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் அங்கத்தினராக இருப்பதற்குரிய பொறுப்புகளை ஏற்பதுடன் அதற்குள்ள உரிமைகளில் கலந்து கொள்ளவும் சந்தோஷமாக அழைக்கிறார்கள் என்றும் இந்தியரிடம் கூறி, உங்கள் நல்லெண்ணத்தைத் தெரிவிக்கலாம் என்று இந்திய மக்கள் சமத்துவமாய் நடத்தப்படல் வேண்டுமெனப் பேசியிருக்கின்றார். அவரைப் பற்றி ஆஸ்திரேலியா பத்திரிகைகள் புகழ்ந்து பேசியிருக்க, இத்தென்னாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகள் ஒன்றும் எழுதினவல்ல. திரு.ஆர்.-கே.சண்முகம் செட்டியார் சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்தவராய் இருந்தும், பார்ப்பனப் பத்திரிகைகட்கு அவரைக் குறித்து எழுத மனமில்லை. காரணமென்? திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியார் பார்ப்பனரல்ல; அவர் பார்ப்பனரல்லாதார்.

_- குடிஅரசு, 05.12.1926

Thursday, January 21, 2010

இப்போ தெரியுதா பெரியார் தாக்கம்?

நடிகர் சிவகுமார் ஓவி-யக் கல்லூரியில் படித்துத் தேர்ந்த முழுமையான ஓவியர். அதனைத் தொழி-லாகக் கொள்ளாமல் திரைப்படத் துறையிலே அடியெடுத்து வைத்து உன்-னத நிலையை அடைந்-துள்ள அருமையான பண்பாளர். தமிழ்ப் பற்றும், இனப்பற்றும் மிகுந்த சீலர்.


ராணி இதழில் உங்க-ளோடு பேசுகிறேன் என்ற தொடரை எழுதி வருகி-றார். இவ்வார ராணியில் (24.1.2010, பக்கம் 22) ஒரு செய்தி.

பார்ப்பனர்களைக் குறை கூறுவதுதான், எதிர்ப்பதுதான் தி.க.காரர்-களின் வேலை என்று பொறுப்பில்லாமல் பேசும் பேர்வழிகளின் செவிப்-பறை-யில் அறைந்து கண்-களைத் திறக்கச் செய்யும் தகவல் அது.

அவர் ஓவியர் ஆத-லால் பல கோயில்களுக்-கும் சென்று நேரிடையாக ஓவியம் தீட்டுவது அவ-ரது வழக்கம். அந்த வகை-யில் தஞ்சாவூர் பெருவு-டையார்கோயில், திருச்சி மலைக்கோட்டைக் கோயில்-களுக்குச் சென்று கோபு-ரங்-களின் ஓவியங்களைத் தீட்டினார். பலரும் அதற்கு உதவி செய்தனர்.

சிறீரங்கம் கோயில் கோபுரத்தையும் நேரில் சென்று ஓவியம் வரைந்-திட விரும்பி அங்கு சென்ற போது ஓர் அவ-மதிப்பு அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தது.

கோபுரத்தில் சூரிய வெளிச்சம் நேரிடையாகப் படுகிற கோணம் புஷ்ப-கரணி தெப்பக்குளம் பக்-கம்-தான் கிடைக்கிறது என்பதால் அந்தப் பக்கம் சென்றார் இளைஞரான ஓவியர் சிவக்குமார்.

என்ன நடந்தது?

கோயில் அர்ச்சகப் பார்ப்பனர் ஒருவர் அந்த இடத்துக்கு வந்தார். உடனே, நீ யார்? உன் குலகோத்திரம் என்ன? என்ற கேள்விக் கணை-களை அவர்முன் எறிந்-தார். பேச்சு, உடை, முக பாவனைகளை வைத்து வந்தவர் பார்ப்பனர் இல்லை என்று தெரிந்து-கொண்டதும் அர்ச்சகர் முகம் போன போக்கே சரியில்லையாம். முறையா அனுமதி வாங்காம கோயி-லுக்குள்ள படமெல்லாம் வரையக்கூடாது என்று முகத்தில் அடித்ததுபோல் கூறினாராம்.

நான் ஓர் ஓவியக் கல்லூரி மாணவன் என்று சொல்லிப் பார்த்திருக்-கிறார். மசியவில்லை அர்ச்-சகர்.

இத்தனை சொன்ன பிறகும் நீங்கள் கோபப்படு-வது நியாயமில்லை என்று பணிவாக சொன்-னா-ராம். ஓ, நீ நியாய தர்மம் வேறு பேசுறீயா? என்று கூறி உள்ளே போய் வேறு சில அர்ச்-சகப் பார்ப்பனர்களையும் அழைத்து வந்தாராம்.

அடிக்காத குறைதா-னாம் _ அவமதிப்புடன் திரும்-பினேன் என்று கூறும் சிவ-குமார் ஒன்றைக் கூறுகிறார்:

இந்த இடத்தைக் கொஞ்-சமென்ன, அதிகமாகவே கவ-னிக்கவேண்டும்; நெஞ்-சில் நிலை நிறுத்தியும் கொள்ளவேண்டும்.

தந்தை பெரியார் மீது எனக்கு அப்பொழுது தான் பெரிய மரியாதை வந்தது இப்படி எழுதியுள்ளார் மானமிகு சிவகுமார்.

தலைவலியும், திருகு-வலி-யும் அவரவர்களுக்கும் வந்தால்தானோ!

-விடுதலை (21.01.2010) மயிலாடன்

Sunday, December 06, 2009

சிறைப்பறவை சிரித்துக் கொண்டே பெல்லாரி சிறைக்-குச் சென்றது


‘1938 டிசம்பர் 5,6 ஆகிய நாள்கள் தமிழ்நாட்-டின் வரலாற்றில் குறிப்பிடத்-தகுந்த நாள்கள்! ஆம். இந்-நாளில்தான் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்-புக்காக நீதிமன்-றத்தில் தோன்றி வழக்கு-களைச் சந்தித்தார்.


நவம்பர் 13-_இல் சென்-னையில் பெண்கள் மாநாடு கூட்டி “பெரியார்” என்ற பட்-டத்தை வழங்கி _ வரலாற்-றில் இடம் பெற்றனர் மாதர் குல மாணிக்கங்கள். இந்தி எதிர்ப்-புக்களத்தில் பெண்-களை மறியல் செய்யத் தூண்டினார் என்ற குற்றச்-சாற்றின் பேரில் தந்தை பெரியார்மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

1938டிசம்பர் 5,6 நாள்-களில் சென்னையில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு நடை-பெற்றது. சர். ஏ.டி. பன்னீர்-செல்வம், ராஜா சர். முத்தையா செட்டியார் போன்ற வர்கள் எதிர் வழக்காட வேண்டும் என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டும் தந்தை பெரியார் மறுத்து விட்டார். எழுத்து மூலம் நீதிபதியிடம் ஓர் அறிக்கை கொடுத்ததோடு தமது கடமையை முடித்துக் கொண்டார். அது வாக்கு மூலமா? தண்டனையைக் கொடுக்-கச் சொல்லித் தூண்-டக்கூடிய சொற்றொடர்களா? இதோ தந்தை பெரியார் பேசுகிறார்.

“”இந்தக் கோர்ட் காங்-கிரஸ் மந்திரிகள் நிர்வாகத்-திற்கு உட்பட்டது.

நீதிபதியாகிய தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்-தவர்கள்; இவை தவிர, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் மந்திரிகள், அதி தீவிர உணர்ச்சி கொண்டி-ருக்-கிறார்கள். அது விஷயத்-தில் நியாயம், அநியாயம் பார்க்க வேண்டியதில்லை-யென்-றும், கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து உப-யோகித்து ஒழித்தாக வேண்-டுமென்றும், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை திடீரென்று வந்து புகுந்த திருடர்களுக்கு ஒப்பிட்டு கனம் முதல் மந்திரியார் இந்தி எதிர்ப்பு விஷயமாய் மந்திரி-கள் எடுத்துக் கொள்ளும் நட-வடிக்கைகள் அடக்கு-முறையே என்பது எனது கருத்து. அடக்கு முறைக் காலத்தில் இம்மாதிரி கோர்ட்-டுகளில் நியாயத்தை எதிர்-பார்ப்பது பைத்தியக்காரத்-தனம்.

ஆகவே கோர்ட்டார் அவர்கள் தாங்கள் திருப்தி அடையும் வண்ணம் எவ்-வளவு அதிக தண்டனை கொடுக்க முடியுமோ, அவை-களையும், பழி வாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும், எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து, இவ்-வழக்கு விசாரணை நாட-கத்தை முடித்து வைக்கும்-படி வணக்கமாகக் கேட்டுக் கொள்-கிறேன். எவ்வளவு நியா-யமான லட்சியத்தை அடைய வேண்-டு-மானாலும் அதற்காகக் கஷ்ட நஷ்டங்-களடைதல் என்னும் விலை கொடுக்க வேண்டுமா-தலால் அவ்வளவு வேண்டிக் கொள்கிறேன்” என்றார். தந்தை பெரியார்.

நீதிமன்றத்தில் இப்படி-யெல்-லாம் கூறிய தலைவர் தந்தை பெரியாரன்றி வேறு ஒரு வரும் உண்டோ!

நீதிபதி தீர்ப்புக் கூறினார்:

செய்த குற்றங்கள் இரண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோராண்டு கடுங்காவல், ஒவ்வோராயிரம் ரூபாய் அபராதம், அபராதம் செலுத்-தாவிடில் மீண்டும் அவ்வாறு மாதம் தண்டனை; இரண்டு தண்டனைகளையும் தனித்-தனி காலத்தில் அடைய வேண்டும்.

சிறைப்பறவை சிரித்துக் கொண்டே பெல்லாரி சிறைக்-குச் சென்றது.

-விடுதலை  மயிலாடன் 06.12.09

Tamil 10 top sites [www.tamil10 .com ]