வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, August 29, 2010

காமராசரை உயிரோடு எரிக்க முயன்ற காவிக்கூட்டம் - உள்துறை அமைச்சரை பதவி விலகசொல்வதா?

காவி பயங்கர வாதத்தைப் பற்றி உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் குரல் கொடுத்தார் என்பதற்காக லிபரான் கமிஷன் குற்றவாளிகள், காமராசரை உயிரோடு எரிக்க முயன்ற காவிக்கூட்டம், காந்தியாரைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்.காவிக் கூட்டத்தினர் அவரைப் பதவி விலகச் சொல்வதா? அத்துணை முற்போக்கு கட்சியினரும் காவிக் கூட்டத்தின் திமிர்வாதப் போக்கைக் கண்டித்து குரல் எழுப்ப வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டு கோள் விடுத்து அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
காவி பயங்கரவாதம் குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளதாம்!
இதைவிட முழுப் பூசணியை சோற்றில் மறைக்கும் மோசடி வேலை அண்மைக்கால அரசியலில் வேறு எதுவும் இல்லை!
காவி பயங்கரவாதம் பற்றி ப. சிதம்பரம்
உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் கடந்த புதன்கிழமை டில்லியில் நடைபெற்ற, மாநில காவல் துறைத் தலைவர்கள் மாநாட்டில், காவி பயங்கரவாதம் புதிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது என்று கூறியதோடு, பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கு காவி பயங்கரவாதம்தான் காரணம் என்று விளக்கியுள்ளார்!
இதுபற்றி விடுதலையில் கடந்த இரண்டு நாள்களாக விவரமான ஆதாரங்களுடன் தலையங்கமே தீட்டியுள்ளோம்.
ஆத்திரம், பொத்துக் கொண்டு வருவானேன்!

உள்துறை அமைச்சர், காவி பயங்கரவாதம்! என்று சுட்டிக்காட்டியவுடன், ஆர்.எஸ்.எஸ்., அதன் அரசியல் வடிவமான பா.ஜ.க., அதன் சுற்றுக் கோளான சிவசேனா போன்ற கட்சிகளுக்கு ஆத்திரம் பொங்கி, பொத்துக் கொண்டு வருவானேன்?
ஊறுகாய் ஜாடியில் போட்டதன் விளைவு
பாபர் மசூதி இடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு வரை இராணுவத்திற்கு சப்ளை செய்யப்பட்ட ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து, துப்பாக்கிகள், அபிநவ பாரத் என்ற பயங்கரவாதிகள் காவி உடை அணிந்து பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள் என்பதை உலகே அறியும் உண்மையாயிற்றே! வழக்குகள் இன்னும் இருக்கிறது! நீதிபதி லிபரான் கமிஷனின் அறிக்கையை, ஆளும் காங்கிரஸ் கூட்டணி ஊறுகாய் ஜாடியில் போட்டு வைத்ததால், பா.ஜ.க., மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் இப்படி கொக்கரிக்கின்றன.
பதவி விலக வேண்டுமாம்!
உண்மையைக் கூறியதால் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பதவி விலக வேண்டுமா? இதைக் கேட்க, குற்றவாளிகள் பட்டியலில் வழக்குமன்றத்தில் உள்ள இவர்களுக்கு எந்த உரிமையும் - தார்மீக உரிமையும் கிடையாதே!
பாம்புக்கும் நோகாமல் பாம்படித்த கோலுக்கும் நோகாமல்...
இந்தக் காவிக் கூட்டத்தை மென்மையாக, பாம்புக்கும் நோகாமல் பாம்படித்த கோலுக்கும் நோகாமல் மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு - மன்மோகன்சிங் அரசு - நடத்துவதால் தான், சட்டம் அதன் கடமையைச் செய்வதில் உள்ள மெத்தனம் மேலோங்கியிருப்பதால்தான், இப்படி உண்மையைக் கூறும் உள்துறை அமைச்சரை பதவி விலகச் சொல்லிக் கேட்கிறார்கள்!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றவர் கோட்சே என்பதை அவரது தம்பி கோபால் கோட்சே ஒரு பேட்டியில் கூறியதோடு, கோட்சே வரலாறே கூறுமே - அவர்தானே காந்தியைக் கொன்ற மதவெறி கொலை பாதகன்? அதுதானே காவி பயங்கரவாத துவக்கம்?
3 முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 3 தடவை தடை செய்யப் பட்டதே எதற்காக? அதன் அதீதமான நடவடிக்கைக்குத் தானே!
இந்தியாவில் மூன்றுமுறை தொடர்ந்து மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பு -ஆர்.எஸ்.எஸ். காவி அமைப்பு.
காமராசரை கொளுத்த முயன்ற கூட்டம்
பச்சைத் தமிழர் காமராசர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, அவர் வீட்டையே தீவைத்துக் கொளுத்தி, உயிரோடு கொல்ல முயற் சித்தகூட்டம் இந்த நிர்வாண காவிச் சாமியார் கூட்டம் அல்லவா?
கண்டனம் தெரிவிக்க வேண்டும்
இவர்கள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தைப் பதவி விலக, அல்லது பிரதமரை நோக்கி விலக்குங்கள் என்று கூற எந்த வகையில் யோக்கியதையோ, உரிமையோ, உடையவர்கள்?
இதனை அத்துணை முற்போக்குக் கட்சிகளும் - நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அத்துணை பேரும் - காவியின் இந்த திமிர்வாதப் பேச்சை எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்ப உடனடியாக முன்வர வேண்டும்.
அனுமதிக்கக் கூடாது!
இது சிதம்பரம் என்ற தனிநபர், தனி அமைச்சரைப் பொறுத்த விஷயம் அல்ல; மதவெறிச் சக்திகளின் குரல் ஓங்குவதை, மதச் சார்பற்ற- செக்யூலர் சக்திகள் அனுமதிக்கலாமா என்கிற பிரச்சனையாகும்!
லாலுபிரசாத் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங்தளம் போன்ற அமைப்புகளுக்குத் தடையே விதிக்க வேண்டும் என்று முழங்கியுள்ளார்!
அப்படிப்பட்ட நடவடிக்கைகள் வந்தால் ஒழிய, இந்தக் காவி பயங்கரவாதம் பாபர் மசூதி இடிப்பு முதல் மாலேகான் குண்டு வெடிப்புவரை தொடரும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திட முடியாது.
சமரசம் கூடாது!
பயங்கரவாதத்தில் முஸ்லிம் தீவிரவாதம், இந்து தீவிரவாதம், காவி தீவிரவாதம் என்ற எந்த தீவிரவாதத்துடனும் அரசுகள் சமரசம் செய்துக் கொள்ளக் கூடாது.
உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களை, உண்மை விளக்கத்திற்காகப் பாராட்டுகிறோம்.

தலைவர்,
திராவிடர் கழகம்.
29.8.2010 
      


Wednesday, August 25, 2010

அவிட்டத்தில் பூணூலை புதுப்பித்ததும் தினமணிக்கு முறுக்கு ஏறிவிட்டது

 தினமணியின் இன்றைய தலையங்கத்தில் "எதிர்ப்பு தேவைதானா?" என்று மருத்துவ கல்விக்கு நாடு தழுவிய நுழைவு தேர்வு தேவை என்று தன் பூணூல் பாணியிலேயே கொடிபிடித்துள்ளது. அதில் தினமணி வைக்கும் வாதம் என்ன என்றால்....ஏழை மாணவர் யாரும் மருத்துவம் படிக்கவில்லையாம்...அப்புறம் தமிழ்நாட்டில் மட்டும் 69 % என்று சட்டத்தை மீறி இடஒதிக்கீடு அதிகபடியாக உள்ளதாம்....பாவம் தினமணி, ஆவணி அவிட்டத்தில்  பூணூல் புதிபித்ததும் முறுக்கு ஏற்றி பார்க்கும் போலிருக்கு.......அது நடக்காது தமிழ்நாட்டில்....இந்த ஆரிய பத்திரிக்கைகளை படிக்கும் நம்மவர்கள் கொஞ்சம் உசாராக இருங்கள்....நம்மவர்களே கலாரசிகன் என்று தினமணியை  ரசிக்கிறார்கள்... அவர்களுக்கு நாம் சொல்லுவது...இதோ அண்ணா கொடுத்த அறிவுரையை தான் ....
புலியின் தோல் ஆசனத்துக்கு உதவும்; அதற்காகப் புலியை வீட்டிலே வளர்த்து - பூஜை நேரத்திலே அதன் மீது சவாரி செய்துகொண்டு - சர்வேசுவரனைத் தியானம் செய்ய யாரும் இசையமாட்டார்கள்; இசைந்தால், அவர்கள், இறைவனுடன் உடனே இரண்டறக் கலப்பர்!

அதுபோல ஆரிய மத போதனைக்காகப் புனையப்பட்ட ஏடுகளிலுள்ள கவிதை அழகு, தமிழ் வளர்ச்சிக்கு - இலக்கியச் சுவை ஆக்கத்துக்குப் ...பயன்படும்; அதற்காக அந்த ஏடுகளைப் போற்றிக் கண்களில் ஒற்றிகொண்டு களிப்பது - தோல் வேண்டிப் புலி வளர்ப்போன் கதைபோல முடியும்!

புலியைக் கொன்று தோலை ஆசனமாக்குவதுபோல் - சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் - ஆரிய ஏடுகளைக் கொளுத்துவதன் மூலம், அதிலே புதைந்துள்ள ஆரிய நச்சுக் கொள்கைகளை நாட்டு மக்கள் கைவிடவேண்டுமென்பதை வலியுறுத்துகிறோம்!

எமது செயலின் விளைவாக, அந்த ஆரிய நச்சுக் கொள்கை அழிந்தொழிந்திடின் - புலி செத்தவின் தோலை உபயோகிப்பதுபோல், நாங்கள் - ஆரியம் அழிக்கப்பட்ட பிறகு - ஏடுகளின் இலக்கண இலக்கிய எழிலை எடுத்துத் தழுவிக்கொண்டு பூரித்து வாழுங்கள் - தடுப்பர் இல்லை! (அறிஞர் அண்ணா, திராவிடநாடு - 09.05.1943)
தமிழர்களே  எச்சரிக்கை ! தமிழில் எழுதும் எல்லாம் தமிழன் பத்திரிக்கை அல்ல..


Tuesday, August 24, 2010

ஆர்.எஸ்.எஸ். நெய்யில் பொரித்த பண்டம் தினமணி ஆசிரியர்

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து நேற்றைய தினமணியில் (23.8.2010) அன்புள்ள ஆசிரியருக்கு பகுதியில் இது தேவையா? எனும் தலைப்பில் கீழ்க் கண்ட பெட்டிச் செய்தி ஒன்று இடம் பெற்றுள்ளது.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பால் என்ன ஆகப் போகிறது? அமைச்சரவை (பிரதமர் தலைமையில்) ஜாதி வாரிக் கணக் கெடுப்புக்கு ஒப்புதல் தந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில் காடுகளில் புலிகள் எத்தனை? சிங்கங்கள் எத்தனை? யானைகள் எத்தனை? எனக் கணக்கிட்ட செய்தி வெளியாகியது. நல்லவேளை நரிகள் எத்தனை? நாய்கள் எத்தனை? பூனைகள் எத்தனை? என்ற கணகெடுப்பு ஒன்றுதான் நடக்கவில்லை!

அதிகமான ஜாதிகள் உள்ளவர்கள் விகிதாசாரப்படி, முன்னுரிமை கோரி நாங்கள்தான் ஜாதியில் அதிகமாக உள்ளோம் என போராட மைனாரிட்டி ஜாதிகள், அதெல்லாம் சரியல்ல. பன்றி பல குட்டிகள் போட்டு என்ன பிரயோஜனம்? நாங்கள் ஜாதியில் குறைந்தாலும் சிங்கம் என்பார்கள்.

ஆக, இப்படி போராட்டம் பெரிதாகி வெடிக்க அதில் பலர் சாக, அதற்கு ஆதரவாக இப்போது காஷ்மீரில் நடக்கும் அராஜகம் போல் அராஜகம் வெடிக்க வருங்கால இந்தியாவுக்கு இது தேவையா?

எவன் திறமை மிக்கவனோ - அவனே உயர்ந்த ஜாதி! எவன் தேசபக்தி மிக்கவனோ அவனே பெரிய சக்தி! இறைவா! இந்தத் தலைவர்களின் பொய் முகங்களை நீதான் உலகுக்கு உணர்த்த வேண்டும்!

இதனைப் படிக்கும்போது ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிராக உள்ளவர்களின் மனப்பான்மை எந்த உஷ்ணத்தில் கொழுந்துவிட்டு எரிகிறது என்பதை எளிதில் உணரலாம்.

நல்லவேளை, நரிகள் எத்தனை? நாய்கள் எத்தனை? பூனைகள் எத்தனை? என்ற கணக்கெடுப்பு ஒன்றுதான் நடக்கவில்லை என்று தனது ஆத்திரத்தின் மூலம் அவரது கீழ்மையான குரைச்சல் இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நாய்கள் கணக்கை- ஜாதிவாரிக் கணக்கெடுப்போடு ஒப்பிட்டு எழுதியிருப்பதைக் கவனித்தில் கொள்ள வேண்டும்.

மைனாரிட்டி ஜாதிகள் - பன்றி பல குட்டிகள் போட்டு என்ன பிரயோஜனம்? நாங்கள் ஜாதியில் குறைந்தாலும் சிங்கம் என்பார்கள்- என்பதன் மூலம் பெரும்பான்மை மக்கள் பன்றிக் குட்டிகளோடு ஒப்பிடப்பட்டுள்ளனர்.

அசல் ஆர்.எஸ்.எஸ். நெய்யில் பொரித்த பண்டமாக இருக்கக்கூடிய ஒருவர் ஆசிரியராக இருக்கும் இந்த ஏட்டில் இதைத்தான் எதிர்பார்க்க முடியும் என்று சமாதானம் அடைந்துவிட முடியாது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக தினமணி தனது தீய, ஆலகால நஞ்சினைக் கக்கிக் கொண்டு திரிகிறது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் வருண வெறி நாகங்களை அடையாளம் காணக் கடமைப் பட்டுள்ளனர்.

ஜாதியை ஒழித்துக் கட்டியே தீரவேண்டும் என்ற ஜாதி ஒழிப்பு ஆவேசத்தில் எழுதப்பட்ட கடிதமா இது? அல்ல, அல்ல. ஆவணி அவிட்டமாகிய இன்று பழைய அழுக்குப் பூணூலை அப்புறப்படுத்தி விட்டு, தடித்த புது முறுக்குடன் புதிய பூணூலைத் தரித்துப் பலமுறை இழுத்துவிட்டு அழகு பார்க்கும் கூட்டம்தான் இந்த வகையில் மூக்கணாங்கயிறு இல்லாத பொலி காளை போல துள்ளுகிறது.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடந்தால் காஷ்மீரில் நடப்பது போல அராஜகம் வெடிக்க ஆரம்பிக்குமாம். இந்தியாவுக்கு இது தேவையா என்று மூக்கை ரத்தம் கசியக் கசிய சிந்துகிறது.

உரிமை பாதிக்கப்பட்ட மக்கள், அந்த உரிமை எந்த வகையிலாக இருந்தாலும் அதற்காகப் போர்க் கோலம் பூணத்தான் செய்வார்கள்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளைப் புரிந்துகொண்டு அதற்கான வாய்ப்புகளை சட்ட ரீதியாக அளிக்கத் தவறினால், அந்த மக்களின் குமுறல் எரிமலையாகி ஒரு நாள் வெடிக்க ஆரம்பித்தால், ஆதிக்கவாதிகளின் கதி என்னவாகும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகம் முழுமையும் உரிமையின் கூர் வாட்கள் கடந்த காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி, ஆதிக்க வாதிகளை எப்படியெல்லாம் சிதைத்துள்ளன என்ற வரலாறு தரும் பாடத்தைப் படித்துக் கொள்ளவில்லையானால், புத்திசாலித் தனமாக அதன் வீரிய வீச்சைப் புரிந்துகொண்டு செயல்பட முன்வரவில்லையானால் வட்டியும் முதலுமாக - அதற்கு எதிர்ப்பாக இருப்பவர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்று எச்சரிப்பது நமது கடமையாகும்.

இட ஒதுக்கீடு வந்தால் தகுதி, திறமை தற்கொலை செய்துகொண்டுவிடும் என்று கூறிப் பார்த்தனர்; அது எடுபடவில்லை; இட ஒதுக்கீடு அடிப்படையில் படித்துத் தேர்ந்தோர் தங்களின் திறமைகளைச் சாதனைகள் மூலமாகப் பட்டொளி வீசிப் பறக்கிறார்கள்.

கடைசியில் தங்களுக்கும் இத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு தேவை என்ற மனு போடும் நிலைக்கு வந்தார்கள் இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் என்பதை மறந்துவிட்டு, தினமணி தன் ஆவணி அவிட்டப் புத்தியைக் காட்டலாமா?

எவன் திறமை மிக்கவனோ, அவனே உயர்ந்தவன் - எவன் தேசபக்தி மிக்கவனோ அவனே பெரிய சக்தி என்று மகரிஷி மாதிரி உபந்நியாசம் ஒரு பக்கத்தில்.

திறமைக்கும், தேச பக்திக்கும் அளவுகோல் என்ன? மனப்பாடம் செய்து தாள்களில் வாந்தி எடுத்துப் பெறும் மதிப்பெண்கள்தானா? வகுப்பில் மக்குப் பையன் என்று கூறப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன்தான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதியனவற்றைக் கண்டுபிடித்துத் தந்தவர் என்பதை யெல்லாம் தினமணிகள் வசதியாகச் சாமர்த்தியமாக மறந்து விடும்.

இறைவா! இந்தத் தலைவர்களின் பொய் முகங்களை நீதான் உலகுக்கு உணர்த்த வேண்டும் என்று இறுதியாக மங்கலம் பாடிக் கடிதம் முடிக்கப்பட்டுள்ளது.

இறைவனன்றிதான் ஒன்றும் அசையாதே. அப்படியானால் இப்பொழுது நடைபெற்று வரும் (ஜாதி வாரிக் கணக்கெடுப்பு உள்பட) அனைத்தும் அவனால்தான் நடைபெறகிறது என்று ஒப்புக்கொண்டு கிருஷ்ணா, ராமா என்று முணுமுணுத்து பஜனை செய்துகொண்டு கயிற்றுக் கட்டிலில் படித்துக் கிடக்க வேண்டியதுதானே! அதற்குப் பிறகு என்ன ஜாதி முறுக்கும் - பூணூல் கொழுப்பும்?

---------- நன்றி விடுதலை (24.08.2010)
                                                                                      Saturday, August 21, 2010

ஆடுவோமே பள்ளு பாடுவோமே... ஊரடங்கு உத்தரவு போடுவோமே

63ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட பள்ளிகளில் எல்லாம் மாறுவேடப்போட்டிகள் நடைபெறும். பள்ளிகளில் மட்டுமல்லாது பொது இடங்களில் கூட போட்டியில்லாத மாறுவேடங்கள் காணக் கிடைக்கும். நெற்றி நிறைய பட்டையடித்து பக்திக் காட்சி அளிப்பதுபோல, நமது தேசபக்த சிகாமணிகள் எல்லாம் நெஞ்சில் கொடியைக் குத்திக் கொண்டால் பீட்டர் இங்லாண்டு சட்டையில் பொத்தல் விழுமே என்ற கவலை காரணமாக பிளாஸ்டிக் உறையிட்ட கொடிகளுக்காக ஆர்டர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிக்னல்களில் கொடி விற்பனை முன்பை விடப் பிச்சுக்கும் என்று பத்திரிகைகள் சொல்லும். சிறப்புத் திரைப்படம் மற்றும் அய்ஸ்வர்யா ராயோ, லட்சுமிராயோ அவரவர் தரத்துக்கு ஏற்ப நடிகர், நடிகைகள் பேட்டியுடன், குண்டு துளைக்காத கூண்டுக்குள் இருந்தபடி பிரதமரின் சுதந்திர நாள் உரையோடு அமர்க்களமாக விழா நடைபெறும்... ஆனால், இதெல்லாம் எத்தனை மாநிலங்களில் என்பது தான் கேள்விக்குறி.

நாடெங்கும் எழும் உரிமைப் போராட்டங்களுக்கு மத்தியில் இவர்களின் சுதந்திர நாள் கொண்டாட்டங்கள் ஏப்ரல்1ஆம் தேதியை விடக் கேலிக் கூத்தாகத் தான் இருக்கும். தெலங்கானா தனி மாநிலம் கோரிப் பல ஆண்டுகளாகப் போராடி வரும் மக்கள் கடந்த ஆண்டு தொடங்கி பெரும் எழுச்சி பெற்று தொடர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். மாணவர்களின் எழுச்சியும், தெலங்கானா மக்களின் போராட்டமும், இந்திய ஆளும் சக்திகளை கலக்கியிருக்கிறது. வடகிழக்கு மாநில மக்களின் உரிமைப் போராட்டம் நாளும் வலுவடைந்து வருகிறது. அதற்கு முக்கியக் காரணங்களாக இந்தியாவின் ராணுவக் கட்டுப்பாடும், அத்துமீறலும், மனித உரிமை மீறலும் இருக்கின்றன. போலி எதிர்த் தாக்குதல்கள், பாலியல் கொடுமைகள், வழிப்பறி, திருட்டு முதலியவற்றை ராணுவமே முன்னின்று நடத்துகிறது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இதுவரை இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கூவிக் கூவி விற்றுவந்த இந்திய அரசு, ஒட்டுமொத்தமாக நியமகிரி என்ற கனிம வளம் நிறைந்த மலையையே முதலாளிகளுக்கு விற்றுவிட்டது. கோடிகோடியாய்க் கொட்டப்போகும் சுரங்கங்களை வெட்ட வேண்டுமானால், அதற்குத் தடையாக இருக்கக் கூடுமெனக் கருதிய அம்மண்ணின், மலையின் மைந்தர்களை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என முடிவு செய்த அரசு, தனது மக்களுக்கெதிரான போரை, இயற்கைக்கு எதிரான போரை அவர்கள் மீது திணித்திருக்கிறது.

தங்கள் வளத்தைக் காக்க ஆயுதம் ஏந்தியோரை மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தி அழிக்கவும், அவர்களைக் காட்டிக் கொடுக்கவும், முடிந்தால் போட்டுத் தள்ளவும் சல்வார் ஜுடும் என்ற கூலிப் படையை அரசே உருவாக்கி அவர்கள் கையில் ஆயுதத்தையும் தந்து அனுப்பியிருக்கிறது. இந்த வேளையில், இந்தியாவின் 63 ஆண்டு கால சுதந்திர (?) வரலாற்றுக்கும் மேலாக, இந்தியாவுக்கு அடிமையாக்கப்பட்ட காஷ்மீரின் சுதந்திரப் போராட்ட வரலாறு இருக்கிறது. பாதுகாப்புக்கு ஆதரவு தேடி வந்தவனின் அடிக்கோவணத்தையும் உருவிய கதையாக காஷ்மீரைக் கைப்பற்றிய இந்தியா, தொடர்ந்து அம்மக்களை ராணுவத்தின் கோரப் பிடியில் அழுத்தி வைத்திருக்கிறது.

எங்களுக்கு பாகிஸ்தானும் வேண்டாம்; இந்தியாவும் வேண்டாம்; காஷ்மீர் தான் வேண்டும் என்று காஷ்மீரிகள் முழக்கம் எழுப்பும் போதெல்லாம் தீவிரவாத, அதிலும் அண்டை நாட்டு தீவிரவாத பூச்சாண்டி காட்டி அவர்களின் குரல் வளையை நெறித்த இந்திய அரசு, இப்போது என்ன செய்வதென்று புரியாமல் மக்களை வேட்டையாடி வருகிறது. பதவி உயர்வுக்காக அப்பாவி இளைஞர்களைக் கடத்தி சுட்டுக் கொன்று, ராணுவ அதிகாரிகள் நடத்திய போலி எதிர்த்தாக்குதல் அம்பலப்பட்டு, கொதித்துப் போன காஷ்மீர் மக்கள் இந்தியாவே வெளியேறு என்று உரக்கக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆயுதம் தாங்கிப் போராடுவோரை பயங்கரவாதிகள் என்று பட்டம் சூட்டிவிடலாம். ஆயிரக்கணக்கில் வீதிக்கு வந்து போராடும் மக்களை என்ன செய்ய முடியும்? ஊரடங்கு உத்தரவு போட்டுப் பார்த்தார்கள். அதையெல்லாம் துச்சமெனக் கருதிய மக்கள் துப்பாக்கிச் சூடுகளுக்கு அஞ்சாத நெஞ்சுரத்தோடு போராடுகிறார்கள். இதுவரை நூற்றுக்கணக்கானோரை கடந்த 3 மாதங்களில் மட்டும் சுட்டுக் கொன்றிருக்கிறது இந்தியா. இப்படி மக்களின் விடுதலைப் போராட்டங்களை நசுக்க நினைத்து, அரசு பயங்கரவாதத்தினை ஏவி விட்டிருக்கும் ஒரு அரசு கொண்டாடும் சுதந்திர தினம் கேலிக்கூத்தாக இல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும்? இலங்கையின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகும் தமிழக மீனவனைப் பற்றிக் கவலையில்லாமல் இறையாண்மையைக் காப்பாற்றும் இந்தியா இந்த ஆண்டும் சுதந்திர நாள் கொண்டாடும்.

இந்த வருசம் சுதந்திர தினத்துக்கும் பாட்டெல்லாம் போட்டு டான்ஸ் ஆடுவார்களே... என்ன பாட்டு போடலாம். ஆடுவோமே பள்ளு பாடுவோமே... ஊரடங்கு உத்தரவு போடுவோமே

அதை மீறும் எம்மக்களைக் கொன்று போடுவோமே என்று ஆடுவோமே.....

------------------ "உண்மை" மாத இதழ் (ஆகஸ்ட் 16-30)

எதற்காக இந்தப் பூணூல்? அவர்கள் பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்களாம்

வரும் 24 ஆம் தேதி (ஆடி 8 அன்று) ஆவணி அவிட்டமாம். அந்த நாளில் பார்ப்பனர்கள் தங்களின் பழைய பூணூலைக் கழற்றி எறிந்து புதிய பூணூலைப் போட்டுக் கொள்வார்கள்; அதாவது பூணூலைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள்.

எதற்காக இந்தப் பூணூல்? அவர்கள் பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்களாம் உயர்ஜாதியாம். இந்தப் பூணூலைத் தரித்த பிறகுதான் துவி ஜாதியாம். அதாவது இரு பிறவியாளர்களாம்.

இந்த உலகத்தை பிரம்மா பிராமணர்களுக்காகவே படைத்ததாகவும், மற்றவர்கள் அவர்களுக்குத் தொண்டு செய்வதே தர்மம் என்றும், பார்ப்பனர்கள் சாத்திரங்கள் ரீதியாக ஏற்பாடு செய்து கொண்டுள்ளனர்.

அந்தப் பிரம்மா ஆனவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறு மைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித் தனியாகப் பகுத்தார் (மனுதர்மம் அத்தியாயம் 1, சுலோகம் 87).

பிராமணன் முதல் வருணத்தான் ஆனதினாலும், பிரம்மாவின் உயர்ந்த இடத்தில் (முகத்தில்) பிறந்த தனாலும் இந்த உலகத்தில் உண்டாகி இருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான். (மனுதர்மம் அத்தியாயம் 1: சுலோகம் 100).

தானம் அதாவது பிச்சை வாங்குகிறவன் பிரபு என்ற சீலத்தை உலகத்தில் எந்த மதத்திலாவது கேள்விப்பட்டதுண்டா?

இந்த உயர்ஜாதி ஆணவத்தைக் காட்டுவதற்காகத் தரிப்பதுதான் இந்தப் பூணூல்!

பூணூல் அணிவதிலும் மனுதர்மம் கட்டளையிட் டுள்ளது.

பிராமணனுக்கு மிஞ்சிப் புல்லினாலும், க்ஷத்திரி யனுக்கு வில்லின் நாணை ஒத்த முறுவற் புல்லினாலும், வைசியனுக்கு க்ஷணப்பன் நாரினாலும் மேடுபள்ள மில்லாமல் மெல்லியதாகப் பின்னி மூன்று வடமா மேலரை நாண் கட்டவேண்டியது (மனுதர்மம், அத்தியாயம் 2, சுலோகம் 42).

பார்ப்பனர்களைத் தவிர்த்த மற்ற இரு வர்ணத் தாரும் தருமங்களை சரியாக அனுஷ்டிக்காத கார ணத்தால் சூத்திரத்தன்மை அடைந்துவிட்டார்களாம்.

சரி, சூத்திரர்கள் சிலர் ஆசாரியார், பத்தர், செட்டியார் முதலியோர் பூணூல் தரித்துக் கொள்கி றார்களே ஆவணி அவிட்டத்தன்று பூணூல் புதுப் பித்துக் கொள்கிறார்களே என்ற சந்தேகம் வரலாம்.

சாஸ்திர சம்மதம் அவற்றிற்குக் கிடையவே கிடையாது. முதல் மூன்று வருணத்தாருக்குத்தான் பூணூல் தரிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்பதுமேலே, எடுத்துக்காட்டப்பட்ட மனுதர்ம சுலோகம் கூறுகிறது.

மேலும் விளக்கமாக இன்னொரு சூத்திரத்தில் (மனு அத்தியாயம் 9 சுலோகம் 224) தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.

சூத்திரன் பிராமண ஜாதிக் குறியை பூணூல் முதலியதைத் தரித்தால் அரசர் அந்தச் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும். இந்த நிலையில், ஆசாரியாரோ, பத்தரோ, செட்டியாரோ பூணூல் தரித் தால் மனுநீதி சோழன்கள் ஆட்சியில் அங்கங்கள் வெட் டப்பட்ட முண்டங்களாகத்தான் இருந்திருப்பார்கள்.

இட ஒதுக்கீட்டுக்காக ஜாதி அளவுகோல் என்றால், இந்தக் காலத்தில் ஜாதியா? இட ஒதுக்கீடு ஜாதியை வளர்க்கிறது என்று துண்டைப் போட்டுத் தாண்டிக் குதிக்கும் பார்ப்பனர்கள் தவறாமல் இந்த ஆவணி அவிட்டத்தன்று பூணூலைப் புதுப்பித்துக் கொள் கிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது. ஆபேடூபே சொன்னதுபோல பார்ப்பனர்கள் இரட்டை நாக்குக்காரர்கள் பல வேடக்காரர்கள் என்பதை உறுதியாக எண்ணவேண்டும்.

பூணூல் தரிப்பது தனி மனித உரிமையல்ல அவர்கள் பூணூல் தரிப்பதன்மூலம் பார்ப்பனர் அல் லாதாரை சூத்திரர்கள் என்று இழிவுபடுத்துகிறார்கள் பரிகாசம் செய்கிறார்கள் இதனை இந்த 2010லும் அனுமதிப்பது என்பது அவமானம் அல்லவா!

தந்தை பெரியார் அவர்கள் சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வாழ்நாளின் இறுதி உரையில் கூறியது என்ன தெரியுமா?

பார்ப்பானைக் கண்டால், வாப்பா தேவடியாள் மகனே! எப்ப வந்தே? என்று கேட்கவேண்டும்.

ஏண்டா அப்படிக் கேட்கிறாய்? என்றால்,

நீ எழுதி வைத்ததடா என்னைத் தேவடியாள் மகன் என்று! எனவே, உன்னைத் தேவடியாள் மகன் என்று கூப்பிடுகிறேன் என்றுசொல்லவேண்டும்! என்ன தப்பு? என்று கேட்டாரே, அந்த உணர்ச்சி தமிழர்களிடம் வலுத்துவிட்டால், கேட்கும் நிலை வீறிட் டால், பார்ப்பனர்கள் பூணூல் தரிக்கும், புதுப்பிக்கும் துணிவு வருமா? சிந்திப்பீர் சூத்திரத் தமிழர்களே!

--------- விடுதலை தலையங்கம் (21.08.2010)
                                                              

Thursday, August 19, 2010

அறிவு ஆசான் பெரியாரை என்றும் நினைவில் வைத்திருக்கும் பார்ப்பனர்கள்

அய்யா தந்தை பெரியாரின் பார்ப்பனிய வேரருப்பினால் தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் குய்யோ முறையோ என்று அந்தகாலம் தொட்டு இந்தக்காலம் வரை அய்யாவை நினைவில் வைத்துகொண்டுள்ளர்கள். அது முதல் மகிழ்ச்சி. தமிழ் நாட்டில் பிறந்த பார்ப்பனர் வீட்டில் பெரியார் படம் இருக்கோ இல்லையோ அவர்கள் உள் மனதில் அவர் நினைவு நீண்டுகொண்டுதான் இருக்கிறது  என்பது மட்டும் நன்கு விளங்குகிறது.அவர்கள் மூச்சுக்கு 32 தடவை ராமசாமி..ராமசாமி என்று கூறும்போதே..அய்யாவின் தாக்கத்தை நன்கு உணரமுடிகிறது. அய்யாவை என்றும் நினைவில் வைத்திருக்கும் பார்ப்பனர்களுக்கு பாராட்டுகள்....அறிவு ஆசானின் அடி எப்பேர்பட்ட அடி....அய்யாவை மறக்ககூடாது பார்பனர்கள்.... சரி ஆஸ்திகம் நாஸ்திகம் பற்றி அண்ணா என்ன கூறியுள்ளார் என்பதை பார்ப்போம்....

1. ஆஸ்திகம் என்று உண்டானதோ, அன்றே நாஸ்தீகமும் உண்டாயிற்று.

2. ஆஸ்திகம் அறியாமை, பயம், சுயநலம் இவற்றில் முளைத்து; நாஸ்திகம் அறிவின் விசாரணைகளில் முளைத்தது.

3. ஆஸ்திகம் அறிவைப் பாழ்படுத்துகிறது. நாஸ்திகம் அறிவை ஓங்கச் செய்கிறது.

4. ஆஸ்திகம் உலகை மிருகநிலைக்கு அழைத்துச் செல்கிறது; நாஸ்திகம் அதை நாகரிக நிலைக்கு அழைத்துச் செல்கிறது.

5. ஆஸ்திகம் மக்களை அவமதிக்கிறது. நாஸ்திகம் மக்களை மேன்மைப்படுத்துகிறது.

6. ஆஸ்திகம் மக்களை அழியவைக்கும் நாஸ்திகம் மக்களை வாழவைக்கும்.

7. ஆஸ்திகத்தால் வறுமை, பிணி முதலியன ஓங்கும் நாஸ்திகத்தால் அவை அழியும்.

8. ஆஸ்திகமும நாஸ்திகமும் என்றும் தீராப்பகை கொண்டன.

9. ஆஸ்திகத்திற்கு அறியாமையும் அரசாங்கமும், முதலாளித்வமும் துணை. நாஸ்திகத்திற்குப் பகுத்தறிவே (விஞ்ஞானம்) துணை.

10. ஆஸ்திகம் அழியக் கூடியது நாஸ்திகம் என்றும் அழியாதது.

11. ஆஸ்திகம் சில சமயம் சாஸ்திகத்தைப் புறம்பே அழிக்கும் ஆனால், நாஸ்திகமோ ஆஸ்திகத்தை உள்ளும் புறமும் அழிக்கவல்லது.

12. ஆஸ்திகத்தின் வெற்றி தற்காலிக வெற்றியாகும் நாஸ்திகத்தின் வெற்றியோ நிலைபெற்ற வெற்றியாகும்.

13. ஆஸ்திக நாஸ்திகப் போராட்டத்தின் லாப நஷ்டக் கணக்கு. ஆஸ்திகத்திற்குத் தோல்வியும், நாஸ்திகத்திற்கு வெற்றியும் சரித்திர முறைப்படி இதுவரை உண்டு, இனியும் உண்டு.

14. ஒரு மதத்தின்படி அதனை நம்பாத மற்ற மதங்கள் நாஸ்திகமானபடியால், எல்லா மதத்தையும் நம்பாத முழு நாஸ்திகமோ நன்மையளிக்கும் பெருமையளிக்கும், ஆகையால், அம்முழு நாஸ்திகமே எங்கும் பரவுக! ஓங்குக!! (--------அறிஞர் அண்ணா, திராவிட நாடு 31.10.1943)
                                                                                                                                                    

தெலுங்கு மொழி பெரியார்திரைப்படம் பெயர்...விமர்சித்தவர்களுக்கு மூக்கறுப்பு

பெரியார் திரைப்படம் தெலுங்கில் மொழியாக்கம் பெற்று ஆந்திர மக்களுக்கு அறிமுகம் ஆகியுள்ள நிலையில் தெலுங்கு படத்திற்கு பெரியாரராமசாமி நாயக்கர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது குறித்து சில விமர்ச னங்கள் எழுந்துள்ளன. பெரியாருக்கு தமிழ் நாட் டில் முளைக்காத நாயக்கர் பட்டம் ஆந்திராவில் மட்டும் முளைத்தது எப்படி? எனும் விமர்சனப் போக்கு நிலவுகிறது. விமர்சனங்களை படிப்பவர் களுக்கு நியாயம்போலக்கூட அது தோன்றலாம்.
 
தமிழில் பெரியார் திரைப்படத்தினை லிபர்ட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தினர் தயாரித்தனர். தெலுங்கு மொழியாக்க படத்தினை நாக் எண்டர் பிரைசஸ் எனும் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. அம்பேத்கர் தெலுங்கு மொழியாக்க படத்தினை ஏற்கெனவே ஆந்திரத் தில் தயாரித்து வெளியிட்ட நிறுவனம் இது. மற்ற திரைப்பட தயாரிப்பாளர்களிட மிருந்து சற்று வேறுபட்டு லாபநோக்கினை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படும் நிறுவனம் அல்ல இது. பெரியார் தெலுங்கு பட முன்னோட்ட நிகழ்ச்சி அய்தராபாத் நகரில் நடைபெற்ற பொழுது தெலுங்கு படத்தின் பெயர் குறித்து விளக்க மளிக்கப்பட்டது.

படத்தின் இயக்குநர் ஞான.ராஜசேரன் அய்.ஏ.எஸ் உடன் இருந்தார். வெளிமாநிலங்களில் ஜாதிப் பெயரைப் போடாமல் ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிடுவது மரியாதை குறைவாகவே கருதப்படும் நிலை இன்றும் நீடித்து வருகிறது. தந்தை பெரியாரைப் பற்றி பிற மாநிலங்களில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று குறிப்பிடும் வழக்கம் இன்றும் நீடித்து வருவது எதார்த்தமான நிலையாகும். பொதுமக்களுக்கு யாரைப் பற்றிய படம் என்பது எளிதில் விளங்க வேண்டும் என்ற நோக்கில் தெலுங்கு பட தயாரிப்பாளர் பெரியார் இராமசாமி நாயக்கர் எனும் பெயரில் படத்தினை உருவாக்கியுள்ளதாக கூறினார்.
நாயக்கர் என குறிப்பிட்டது மரியாதை நிமித்தம் என்றார். பெரியார் திரைப்படத்திலேயே செங்கல் பட்டு முதல் சுயமரியாதை மாநாடு நடைபெறும் காட்சியில், அதில் பெரியார் உட்பட பல தலைவர்கள் தங்களது பெயருடன் ஜாதிப் பட்டத்தை போட்டுக்கொள்ளும் பழக்கத்தினை விட்டுவிடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. பெரியார் ஜாதியினை எதிர்த்துப் போராடியவர் என்ற செய்தியெல்லாம் படத்தில் வருகிறது. தெலுங்கு படம் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பெரியார் ராமசாமி நாயக்கர் எனும் பெயரினை தயாரிப்பாளர் சூட்டி இருந்தாலும், நாயக்கர் எனும் பெயரினை நீக்கி வெளியிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
நடைபெற்றது படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி மட்டுமே. படம் இன்னும் வெளியிடப் படவில்லை. தெலுங்கு படம் ஆந்திரா முழுவதும் வெளியிடப் படும்பொழுது நாயக்கர் எனும் ஜாதிப் பெயரினை பெரியார் விட்டுவிட்டார் எனும் செய்தியினைத் தெரிவிக்கும் முகமாக
எனும் பெயரிலேயே படம் வெளியிடப் படும். பெரியார் ராமசாமி எனப் பெயரிடுவதை விட என வெளியிடுவது பெரியாருடைய கொள்கையினை அழுத்தமாக வெளியிடும் அணுகுமுறை என்பது ஊடகப் பார்வையில் உள்ளவர்களுக்கு உண்மையிலே புரியும்.

ஒரு திரைப்பட பெயரிலேயே திரிபு நிலைகள் தோன்றி அது மாற்றப்படும் நிலை உருவாகும் சூழலில், திரைப்படம் பெயர் பற்றி விமர்சனம் கொடுப்பவர்கள், பெரியாரது எழுத்துகளின் பதிப்பு தாராளமயமாக்கப்பட்டால் ஏற்படும் கொள்கை திரிபு நிலைகளை அறிவார்களா? அடுத்து நிச்சயம் அறிவார்கள்! பெரியாரது எழுத்துப் பதிப்பின் தாராளமயம் பற்றி அவர்கள் கூற வேண்டிய அவசியம் என்ன? அவர்களது நோக்கம் பெரியாரது எழுத்துகளைப் பரப்புவது என்பதல்ல. காலப்போக்கில் அதை சிதைப்பது என்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? நடுநிலையாளர்கள், நல்லெண்ணம் கொண்ட மக்கள் சிந்திப்பார்களாக!

---------- விடுதலை (19.08.2010)

Wednesday, August 18, 2010

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் பயன்கள்


அனைத்து மக்களின் நலன்களையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்கத் தேவையான ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வல்லுநர் குழு விவாதங்களின் சுருக்கம்

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் பயன்கள்:

 1. ஜாதி பேதமற்ற சமத்துவம் நிறைந்த ஒரு சமுதாயத்தை நோக்கிச் செல்ல நமக்கு அது உதவுகிறது.

நமது சமூகத்தில் சலுகைகளை அளிப்பதையும், மறுப்பதையும் தொடர்ந்து ஜாதி அமைப்பு முறை பாதித்து வருகிறதா? - ஆம் என்றால், எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்ந்தறிய அனைத்து ஜாதி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நம்மை அனுமதிக்கும். சில குழுக்களுக்கு மட்டும் இந்த ஜாதி அமைப்பு முறை பயன்களை எவ்வாறு அளிக்கிறது என்பதைக் கண்டறியவேண்டியது, மற்ற குழுக்களுக்கு எவ்வாறு அது பயன்களை அளிக்க மறுக்கிறது என்பதை கண்காணிக்க மிகவும் இன்றியாமையாதது ஆகும். இது போன்ற புள்ளி விவரங்கள் 1931 க்குப் பின் நம்மிடம் இல்லை. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் தவிர மற்ற ஜாதியினர் கணக்கிடப் படாத நிலையில் ஜாதிகளிடையே சமத்துவமின்மை, ஜாதிய உணர்வு இரண்டும் அதிக அளவில் நிலவுவதால், ஜாதிபேதமற்ற, சமத்துவம் நிறைந்த ஒரு சமுதாயத்தை அடைவதற்கான மாற்றுப் பாதைகளை நாம் கண்டறிய வேண்டியது அவசியமாகிறது.

2. ஆதாரத்தின் அடிப்படையில் சமூகக் கொள்கைகளை உருவாக்க அது உதவுகிறது.

சரியான புள்ளி விவரங்கள் இல்லாதது, ஜாதி தொடர்பான கொள்கைகளை வடிவமைக்கும் விவாதங்களைப் பயனற்றதாகச் செய்துவிடுகிறது. ஜாதி மற்றும் சமூகப் பொருளாதார சூழ்நிலையிடையே உள்ள தொடர்பு போன்ற பிரச்சினைகளை அறிந்து கொள்ளத் தேவையான ஒரு நம்பத் தகுந்த ஒருங்கிணைந்த புள்ளிவிவர அடிப்படையை ஜாதிவாரிக் கணக்கெடுப்பு உருவாக்கும். மாதிரி ஆய்வு அல்லது குறிப்பிட்ட பிரச்சினைகள் பற்றி பின்னர் மேற்கொள்ளப்படும் ஆய்வு ஆகியவற்றுக்கும் கூட இத்தகைய ஓர் அடிப்படை மிகவும் இன்றியமையாதது.

3. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நீதித்துறைக்கு மிகவும் தேவையானது.

நம்பத்தகுந்த புள்ளி விவரங்கள் இல்லாத நிலையில், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு போன்ற ஜாதி அடிப்படையிலான கொள்கைள் பற்றி தாக்கல் செய்யப்படும் மனுக்களின் மீது உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் எளிதாக முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளன. இத்தகைய ஜாதிவாரி மக்கள் தொகைப் புள்ளி விவரங்கள் நீதித்துறையின் இத்தகைய முக்கியமான தேவைகளை நிறைவு செய்வதாக இருக்கும்.

4. பல்வேறுபட்ட ஜாதி சமூகங்களின் வாழ்க்கை நிலைகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ள அது உதவுகிறது.

பாலினம், வயது, இனப்பெருக்கு ஆற்றல், இறப்பு விகிதம், படிப்பறிவு, தொழில் மற்றும் வீட்டு சொத்துகள் போன்ற முக்கியமான புள்ளிவிவரங்களை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொகுக்கிறது. இதே புள்ளிவிவரங்களை ஜாதிவாரியாகத் தொகுப்பதன் மூலம் இந்த முக்கியமான விஷயங்களில் பல்வேறுபட்ட ஜாதி மக்களின் வாழ்க்கை நிலை எவ்வாறு உள்ளது என்ற மிகவும் தேவையான கொள்கை அளவிலான ஆய்வை மேற்கொள்ள அது உதவுகிறது.

5. இந்தியாவின் சமூகப் பன்முகத் தன்மையை, வேற்றுமைகளைப் பற்றிய தோற்றத்தை அளிக்க அது உதவுகிறது.

இந்திய சமூகத்தின் பன்முகத் தன்மையை, வேற்றுமைகளைப் பற்றிய ஒரு நம்பத்தகுந்த தோற்றத்தை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அளிக்கிறது. சமூகங்களின் பொருளாதார நிலை, அறிவியல் அடிப்படையிலான மக்கள் தொகை இயல், அவர்களின் கல்வி, பொருளாதார நிலை பற்றி அறிந்துகொள்ள ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நம்மை அனுமதிக்கிறது. தொடர்ந்து எடுக்கப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள், இத்தகைய சமூகத் தோற்றங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து நம்மை அறிந்து கொள்ளச் செய்கிறது.

6. பிற்படுத்தப்பட்டோர் சமூகப் பட்டியலில் சேர்ப்பது, நீக்குவது ஆகியவற்றிற்கான ஒரு கொள்கையை உருவாக்க அது அனுமதிக்கிறது.

தாங்களும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படவேண்டும் என்று புதியதாக எழுப்பப்படும் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து மதிப்பீடு செய்ய, அனைத்து ஜாதிகளின் ஒருங்கிணைந்த அடிப்படைப் புள்ளி விவரங்கள் அரசுக்கு உதவுகின்றன. மேலும், பின்னர் ஒரு சமூகம் அடைந்த பிற்படுத்தப்பட்ட தன்மை அல்லது முன்னேறிய தன்மை பற்றி முடிவெடுக்கவும் அவை உதவுகின்றன. 1993 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட சமூக தேசிய ஆணைய சட்டத்தின் 11 ஆவது பிரிவு பிற்படுத்தப்பட்ட ஜாதி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அவசியத்தைப் பற்றி இவ்வாறு தெரிவிக்கிறது: மத்திய அரசினால் ஒவ்வொரு கால இடைவெளியிலும் பட்டியலை மாற்றியமைப்பது: எந்த நேரத்திலும், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டுகள் கழிந்த பின்னும், அதன் பின் ஒவ்வொரு பத்தாண்டுகள் கழிந்த பின்னும், பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் பட்டியலை மாற்றியமைக்கும் பணியை அரசு மேற்கொள்ளலாம். பிற்படுத்தப்பட்ட தன்மையில் இருந்து முன்னேறியவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கவும், புதிய ஜாதியினரை இப் பட்டியலில் சேர்க்கவும் தகுந்த பரிசீலனைக்குப் பின் அரசு செய்யலாம்.

7. இந்திய அரசியல் நடைமுறையை மேலும் ஜனநாயகம் மிக்கதாக வளர்க்க அது உதவுகிறது.


அனைத்து ஜாதி மக்கள் தொகையைக் கணக்கெடுப்பது மற்றும் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையினருக்கும் ஓர் ஒருங்கிணைந்த ஜாதி வாரியாக சமூகக் கலாச்சாரப் புள்ளிவிவர ஆதாரத்தை உருவாக்குவது, இதுவரை அரசியல் களத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இருந்த சமூகங்கள் மற்றம் குழுக்களைக் கண்ணுக்குத் தெரியச் செய்வதுடன், அவற்றிற்கு பிரதிநிதித்துவம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசுக்கு உதவுகிறது.

----------------- விடுதலை (18.08.2010)
                                                                                                                       

திராவிடர் கழகத் தலைவர் என்றாலே தினமலருக்கு வேப்பங்காய்....

தினமலருக்கு திராவிடர் கழகமும் அதன் தலைமையும் என்றால் வேப்பன்காயிதான்...... இதோ இன்றைய டவுட் தனபாலு பகுதியில் தினமல(ம்)ர் அதன் வேகத்தை மிகவும் பரிதாபத்துடன் கூறியுள்ளது.....இதோ அந்த பகுதி

முதல்வர் கருணாநிதி: நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, என்னை விழுப்புரத்துக்கு அழைத்துச் சென்று தனியாக நாற்காலி ஒன்றைப் போட்டு, நான் முதல்வராக வந்தால்தான், சமூக நீதியைக் காப்பாற்ற முடியுமென்று முழக்கமிட்ட ராமதாஸ், தற்போது, "சமூக நீதியைப் பற்றி கருணாநிதி பேசலாமா' என்று கேட்கிறார்.

டவுட் தனபாலு: ஏதோ அவர் மட்டும் தான் இப்படிப் பேசறது மாதிரி சொல்றீங்க... ஜெயலலிதாவுக்கு, "சமூக நீதி காத்த வீராங்கனை'ன்னு பட்டம் கொடுத்த ஒரு தலைவர் இப்ப உங்க கூட ஒட்டிட்டு, நீங்கதான், சமூகநீதி காத்த வீரர்னு மாத்தி சொல்லலையா...!

எப்ப சமூகநீதி காத்த வீரர்ன்னு மாத்தி சொன்னாருன்னு மட்டும் தினமலத்திடம் கேட்காதிர்கள். அது அப்படித்தான்....ஆதாரம் இல்லாமல் மொட்டை தாதன் குட்டையில் விழுந்தான் நெட்டை கையன் வேடிக்கை பார்த்தான் என்று தான் எழுதும்...

ஆசிரியர் அவர்கள் தன்னுடைய அறிக்கையிலேயே அந்த அம்மாவின் பேரை சொல்லி அவர்கள் ஆட்சியில் தான் 69 %இடஒதிக்கீடு நிறைவேற்றப்பட்டது என்று கூறி விட்டு இப்போதுள்ள ஆட்சி அந்த இடஒதிகீடை பாதுகாக்க தக்க நடவைக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.   திராவிட இயக்க தலைவர்கள் அனைவரும் சமூக நீதி காத்தவர்கள் இன்றும்  சமூக நீதிக்கொடி கிழே விழாமல்  பாதுகாத்து வருபவர்கள். அனால் அந்த அம்மாவுக்கு ஏன் அந்த பட்டம் என்றால் ஒரு பார்ப்பனர் 69 % இடஒதிக்கீடுக்கு ஒத்துழைத்தார் என்ற ஒரே காரணத்தால் தான். உண்மை இப்படி இருக்க தினமலர் ஏதேதோ உளறுகிறது.

எப்படியோ மகிழ்ச்சி...பார்ப்பனர்களும் அவா பத்திரிக்கையும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை புகழ்ந்தால் தான் நாங்கள் சந்தேகப்படவேண்டி  வரும்...ஆசிரியர் என்றும் எங்கள் கொள்கை வழிகாட்டிதான்.
                                                                                                                                                        

Tuesday, August 17, 2010

தினமணியின் பூணூல் பாசமும்... அடடே மதியின் கார்டூனும்

 தினமணி அடடே மதியின் இன்றைய (17.08.2010) கார்டூனில்.....சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து அடுத்து சாதி வாரி மாநிலம் ஆயிடபோகுதுன்னு தினமணி ரொம்ப பூணூலை முறிக்கி கொண்டு கார்டூன் போட்டுள்ளது.

உண்மையிலேயே தினமணி சாதி ஒழியனுமுன்னு நினச்சா ஏன் பார்பனர்கள் முதுகுல பூணூல் தொங்குது?...நெத்தியில வடகலை தென்கலை ராமம் எதற்கு? என்று சித்தரித்து கார்ட...ூன் போடணும்.... இதற்க்கு தினமணி பார்ப்பனரிடம் ஏதும் பதில் உண்டா? என்றால் ஒன்றும் கிடையாது.

அதன் நோக்கம் எல்லாம் 69 % இடஒதிக்கீடை எப்படி தமிழ்நாட்டில் இருந்து அகற்றுவது என்பதுதான். அதற்க்கு சாதி வாரி கணக்கெடுப்பு பெரிய துணையாக இருக்கும் என்பதால் பூணூல் கூட்டமும் அதன் அதரவு பத்திரிக்கைகளும் இப்படி குதிக்கின்றன. இதுல அடடே மதி கடந்த வார ஆனந்த விகடனில் ஒரு பேட்டி அவர் பெரிய கொள்கை வாதியாம். தமிழக மக்கள் பிரச்சனையை கார்டூன போடுராராம்? 69 % இடஒதிக்கீடுக்கு எதிரா கார்டூன் போடுவதுதான் மக்களுக்கு இவர் செய்யும் நன்மை....இதனை ரசிக்க ஒரு கூட்டம்............. கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்துகொள்ளும் தமிழா...புரிந்து கொள் யார் இடஒதிக்கீட்ரிக்கு எதிரானவர்கள் என்று....

இன்னொரு விஷயம் என்னன்னா...இந்த கார்டூனிஸ்ட் எல்லாம் ஆளும் கட்சிய எதிர்த்து கார்டூன் போட்ட பிரபலம் ஆகி காசு நிறைய பார்க்கலாமுன்னு ஒரு நப்பாசை....
                                                                                                                                             

Monday, August 16, 2010

ஆன்மிகத்துக்கும் சமத்துவத்துக்கும் தொடர்பு உண்டா?

கேள்வி: போட்டியும், பொறாமையும் நிறைந்த உலகத்தைத் திருத்த ஏற்றது ஆன்மிகமா சமத்துவமா?

பதில்: சமத்துவம்தான் என நினைத்து செயல்பட்ட இடங்களில் நாடுகளில் எல் லாம் அக்கொள்கை அடிபட்டு பொடி, பொடியாகிவிட்டதே!

(தினமலர், வாரமலர் கேள்வி பதில் பகுதி 15.8.2010).

தினமலர் வகையறா சொல்லுவதைப் பார்த்தால் ஆன்மிகம்தான் போட்டி, பொறாமையற்ற சமத்துவத் துக்கான அடித்தளம் அப்படிதானே!

உலக வரலாற்றை எடுத் துக்கொண்டால் மதக் கார ணங்களுக்காக மனித ரத்தம் சிந்தப்பட்டதுபோல் வேறு எதற்காகவும் சிந்தப்பட வில்லை என்பதுதான் வரலாறு.

பார்ப்பனர்கள் போற்றும் மனுதர்மம் என்ன சொல்லு கிறது?

சூத்திரன் மற்ற மூன்று வருணத்தாருக்கும் பொறா மையின்றி பணி செய்வதை முக்கியமான தர்மமாக ஏற்படுத்தினார் (மனு அத்தி யாயம் 1 சுலோகம் 91).

சூத்திரனின் கெதியைப் பார்த்தீர்களா? மற்ற மூன்று வருணத்தாருக்கு பொறாமையின்றிப் பணி செய்ய வேண்டுமாம். பொறா மையின்றி என்பதுதான் மிக முக்கியம். அப்படி பொறாமை யின்றிப் பணி செய்வதுதான் அவனுக்குத் தர்மமாம்.

இந்த யோக்கியதையில் போட்டியும், பொறாமையும் உள்ள உலகத்தைத் திருத்த ஆன்மிகம்தான் உதவுமாம்.

பொறாமையின்றிப் பணி செய்வதை தர்மம் ஆக்கிய வெட்கம் கெட்டவர்கள் பொறாமை பற்றிப் பேசுவது தான் வேடிக்கை!

அடிமைப் பணியைப் பொறாமையின்றி ஆற்றுவது தருமம் என்று ஆணி அடித் துச் சொன்ன பிறகு பொறா மையற்ற உலகைப்பற்றிப் பேசுவது அசல் வஞ்சகம் அல்லவா!

தினமலர் தூக்கிப் பிடிக் கும் இந்து மத ஆன்மிகத்தின் கொள்கை என்ன? சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்! தானே. நான்கு வகையான வருணங்களையும் உண் டாக்கியது நானேதான் அதனை மாற்றியமைக்க நானே முயற்சித்தாலும், அது முடியாத காரியம் என்று சொல்லப்படவில்லையா? (கீதை அத்தியாயம் 4, சுலோகம் 13).

என்ன அந்த வருண தருமம்? பிறப்பின் அடிப்படை யில் உயர்ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பதுதானே! மனிதன் செத்தாலும் ஜாதி சாகாது சுடுகாடு வரை அந்தப் பேதம் உண்டு என்பதை மறுக்க முடியுமா?

ஏன், இவர்கள் தலையில் கரகமாக வைத்து ஆடும் இந்து மதத்துக்குள்ளேயே சைவ வைணவ சண்டை சாதாரணமானதுதானா?

வைணவத்துக்குள்ளும் வடகலை, தென்கலை சண்டை காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்ற சர்ச்சை லண்டன் பிரிவி கவுன்சில்வரை சென்று சிரிப் பாய்ச் சிரித்ததே! இதற்குள் போட்டிகளும், பொறாமை களும் கொப்பளித்துக் கொண் டிருக்கவில்லையா?

அர்த்தமுள்ள இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவரும் அர்ச்சகராக உரிமை உண்டு என்ற சட்டத்தை உச்சநீதி மன்றத்தில் இன்றுவரை வழக்குப் போட்டு முட்டுக் கட்டை போட்டுக் கொண்டி ருக்கும் முப்புரி கூட்டமா ஆன்மிகம்தான் சமத்துவத் திற்கான தாய்ப்பால் என்ப தைவிட அதிகபட்சப் பித்த லாட்டம் வேறு ஒன்று இருக்க முடியுமா?

--------- விடுதலை (16.08.2010) மயிலாடன்
                                                                                                                                                      

Sunday, August 15, 2010

இந்துத்துவ வெறியரான வேளுக்குடி கிருஷ்ணன் பேச்சும் பார்பனர்களின் குதி ஆட்டமும்...

சென்னையில் நடந்த போர்வாளும் பூவிதழும்என்ற நாட்டிய நாடக விழா மியூசிக் அகடமி அரங்கத்தில் ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் நடந்தது. இதில் இந்துத்துவ வெறியரான பார்ப்பனர் திரு.வேளுக்குடி கிருஷ்ணன் உரையாற்றினரோ இல்லையோ தமிழ் நாட்டுப் பார்பனர்கள் குதி ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டர்கள்.

தினமலரில் வெளிவந்துள்ள செய்தியின்படி “முதல்வர் விழாவில் வெளுத்துக்கட்டிய வேளுக்குடி கிருஷ்ணன்” என்று தினமலம் செய்தி வெளியிடுகிறது. மற்றும் சில பார்பனர்கள் அவர் பேசிய ஆடியோவை எல்லோரிடமும் கொடுத்து "தமிழை வளர்த்தவர்கள் பார்ப்பனர்கள்தான்" என்று புலன்காயிதம் பாடுகிறார்கள். பார்பனர்கள் என்றுமே வெட்கம் இல்லாதவர்கள் என்பதற்கு இது போன்ற பல நிகழ்சிகள் உதாரணமாக சொல்லலாம். பூணூல் கூட்டம் அடிக்கடி இப்படி ஆட்டம் போடுவது வழக்கம் தானே. சங்கர மடத்தினால் வீழ்ந்த மானத்தை என்ன பண்ணினாலும் தூக்கி நிறுத்த முடியாது என்பது மட்டும் ஏனோ பார்ப்பனியத்துக்கு புரியவே மாட்டேங்குது.

பார்பனர்கள் தமிழை வளர்த்த விதம் பற்றி தான் நமக்கு நன்றாக தெரியுமே..தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் கொண்டு வரும்போது முட்டுக்கட்டையாக இருந்தது யார்? பார்ப்பனர் ராஜாஜி. நாடு என்று வராமல் பார்த்துக்கொள்ளுங்களேன் என்று அறிவுரை வேறு. ஆரிய மாயை கண்ட அறிஞர் அண்ணாவிடம் பழிக்குமா...அய்யாவின் சீடர்.. நாடு கேட்டு இயக்கத்திற்கு வந்தவர்... தமிழனனின் தன்மானம் காத்து தமிழ்நாடு என்று பெயர் வைத்தார்...அங்கு தான் திராவிடத்தின் வெற்றி முதன் முதலில் தமிழுக்காக உன்றப்பட்டது....இதில் பார்ப்பான் எங்கே வந்தார்கள்.

பார்பனர்கள் தமிழை வாழவைத்த விதம் தான் தெரியுமே...தியாகய்யர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் இவர்கள் தான் ஆதி மும்மூர்த்திகள் என்று பார்பனர்கள் சொல்லுவார்கள். ஆனால் உண்மை வரலாறு மறைக்கப்பட்ட வரலாறாக இருந்தது. முத்துத்-தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசல கவிராயர் ஆகிய தமிழிசை முன்னோடிகளின் வரலாறு வந்திருக்கிறதா? வரலாறு மறைந்தி-ருக்கிறதா? இதுதான் பார்ப்பான் தமிழை வளர்த்த லட்சணம்.இதோ பார்ப்பன பாரதி....சுதேசமித்திரனின் 1906ல் “எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்” என்ற தலைப்பில் தமிழை வளர்த்தம் விதம் பாருங்கள்,

“ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே

--- --- --- --- --------------------------
வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய்ப்
பேதக் கதைகள் பிதற்றுவாரிந் நாட்டினிலே” (2)

எனக் கூறி, இங்கு “ஆரியர்கள் வாழ்ந்த நாடு அற்புத நாடென்றும், அவர் எழுதிய வேத உபநிடதங்களெல்லாம் மறைந்து போயினவே” என்றும் மிகவும் வருத்தப்படுகிறார். பார்பனர்கள் தமிழ் வளர்த்த லட்சணம் இப்படித்தான். எங்கு போனாலும் தன் இனப்பற்று ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ள பார்பனர்கள்.. தமிழ், தமிழன் என்பது பிழைப்பு நடத்ததான் என்பதை நம்மவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


“செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே

--- --- --- --- ---

வேதம் நிறைந்த தமிழ்நாடு-உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு”

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்” (6)

என்று தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் புகழ்ந்து பாடியுள்ளார் பாரதியார். இப்பாடல்களை இயல்பான தன்னுணர்ச்சியுடன் பாரதி பாடவிலை என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

1915இல் சுதேசமித்திரனில் ‘தமிழ், தமிழ்நாடு’ முதலியவற்றின் சிறப்பைக் குறித்து, எழுதும் சிறந்த கவிதைக்கு மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பில் பரிசளிக்கப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இதைப் பாரதியார் பார்த்தும் பார்க்காததுபோல் விட்டுவிட்டார். ஆனால் இதைப் பார்த்த பாரதியின் புதுவை நண்பரான வாத்தியார் சுப்பிரமணி அய்யரும் மற்றும் சில நண்பர்களும் விளம்பரத்தைக் கூறி, கவிதை எழுதும்படி வேண்டினர். அவர்களின் கட்டாயத்தின் பேரிலேயே இப்பாடல்களைப் பாரதியார் எழுதியதாக பாரதியின் நண்பர் எஸ்.ஜி.இராமானுஜலு நாயுடு கூறியுள்ளார். (7)

இதே கருத்தைப் பாரதிதாசன் அவர்களும் கூறியுள்ளார்.

“தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப் பாக்கள் தந்தால்
அமைவான பாட்டுக் களிப்போம் பரிசென்று
சான்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் உரைத்தார்
தேன்போற் கவியொன்று செப்புகநீர் என்றுபல
நண்பர் வந்து பாரதியாரை நலமாகக் கேட்டார்

--- --- --- --- ---

செந்தமிழ் நாடெனும் போதினிலே யின்பத்
தேன்வந்து பாயுது காதினிலே என்றெழுதித்
தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால் எழுதி முடித்தார்” (8)

என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறுகிறார். இவ்வாறாகப் பாரதி நண்பர்களுடைய வேண்டுதலாலும், கட்டாயத்தாலும் தான், “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலையும், “யாமறிந்த மொழிகளிலே” என்ற பாடலையும் எழுதினார். இந்தப் பாடல்களுக்காக அவருக்கு மதுரைத் தமிழ்ச் சங்கம் பரிசாக ரூ.100 அளித்தது. (9) (பாரதியார் பற்றிய இந்த செய்தி உதவி கீற்று இணையத்தளம்)பார்ப்பன பாரதி இப்படி என்றால் வேளுக்குடி கிருஷ்ணன் என்ன வெண்டக்காய். செந்நாயின் நிறம் மாறினாலும் மாறுமே தவிர பார்ப்பனரின் பிறவி புத்தி மாறவே மாறாது என்று அறிஞர் அண்ணா சொன்னதை இங்கு நினைவு கூறவேண்டும்..


புதுவைக் குயில் பாவேந்தர் பாடிய வரிகள் தான் நினைவுக்கு வருகிறது 

வீட்டிலே தூத்தம் என்பார். 

வெளியிலே தண்ணீர் என்பார் பிழைப்புக்காக.
உன் போல் கிள்ளாய்!


அடடா! வைர வரிகள்; ஒவ்வொரு எழுத்தும் கோடி பெறும்...

அண்ணாவே சொன்னாரே - தமிழ் பேசுவோரெல்லாம் தமிழராக முடியாது!

சரி இது இப்படி என்றால் பார்ப்பனர்களின் தலைமை பீடமாகிய  காஞ்சி மடம் தமிழை எப்படி ஏசுகிறது. தமிழ் நீசபாசை என்று தானே சொல்லுகிறது. இதோ "இந்து மதம் எங்கே போகிறது" என்ற நூலில் ராமானுச தாத்தாச்சாரி என்ன சொல்லுகிறார் பாருங்கள்..


"அந்த நாளுக்கான மாலை நேர பூஜைக்கான மடம் தயாராகி கொண்டிருந்ததது. மகா பெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால் கூட 'மடி' அதாவது ஆச்சாரம் போய் விடும். மறுபடியும் குளித்தாக வேண்டும். அந்த வகையில்..குளித்து முடித்துவிடிருந்தார் மகா பெரியவர்.
  
அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தே தீருவது, அருளாசி பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில்..நாட்டுக்கோட்டை செட்டிநாட்டிலிருந்து வந்திருந்த அருணாச்சலம் என்ற பக்தர்..மகா பெரியவரை பார்த்து அவரிடம் அருள் மொழிகள் வாங்கி விட்டுதான் போவது என்ற உறுதியோடு இருந்தார்

அந்த நேரம் நானும் மடத்தில் இருந்ததால், அருணா சலத்திடம் சொன்னேன்... 'இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகா பெரியவரை பார்க்க முடியாது. நாளை வாயேன்' என்றேன்.

'இல்லை சாமி இப்பவே அவரை பார்க்கணும்' - என்றார் பக்தர்

எங்கள் பேச்சு சத்தத்தை கேட்ட சிலர்..விஷயத்தை மகா பெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத்தார்

போனேன் கேட்டார்.சொன்னேன். 'இதோ பாரு தாத்தாச்சாரி அவரை பார்க்குறத்துக்கு நேக்கு ஒண்ணுமில்லை..பார்த்தால் எதாவது கேட்ப்பார், பதிலுக்கு நான் தமிழில் பேசவேண்டி வரும் நோக்குதான் தெரியுமே..தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணனும். பூஜைக்கு நேரமயிடுத்துல்லையோ..அதனால் நான் மௌனம் அனுச்டிக்கிறேன் என்று சொல்லி அனுப்பிச்சிடுங்கோ' 

என என்னோடு சம்ஸ்கிருத சம்பாசனை நிகழ்த்தினார் "


பார்த்தீர்களா பார்ப்பான் தமிழை வளர்த்த விதம். இதனை நான் சொல்லவில்லை எல்லா வேதங்களும் நன்கு படித்த, சங்கர மட மற்றும் மகா பெரியவர் என்று சொல்லுவார்களே அவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த தாத்தாச்சாரியார் சொல்லுகிறார்.


இதுல வெங்காய வேளுக்குடி கிருஷ்ணன் என்ன வேறுபடவா போகிறார்?.


வேளுக்குடி கிருஷ்ணனோ வெங்காயமோ... சவால் விட்டு கேக்கிறோம் கீதையை புறந்த்தள்ளி திருக்குறளை பொது நூலாக ஏற்க தயாரா? பார்ப்பனக் காவிக் கூட்டம். அதுதான் தமிழை வளர்ப்பது. ஏதோ இந்து வெறியர் திரு. வேளுக்குடி கிருஷ்ணன் தமிழ் மொழி பற்றி பேசினாராம் அதனை எடுத்து போட்டுகொண்டு நாங்களும் தமிழர்.. நாங்களும் தமிழர்...(நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்....பார்துகங்கோ) என்று கூச்சல் போட்டால் தமிழன் ஆகிவிட முடியுமா? இந்த பார்பனர்கள் விஷமம் புரிந்து தானே அறிவு ஆசான் அய்யா தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் என்று வைத்தார். பார்பனர்களே நீங்கள் என்ன குதி ஆட்டம் போட்டலும் உங்கள் விஷமம் பலிக்காது.

குறிப்பு: தேவைப்பட்டால் பார்ப்பான் தமிழ் வளர்த்த விதம் பற்றி மேலும் எழுத நேரிடும். சரக்கு நிறைய இருக்கு.                                                                                                                                                              

Saturday, August 14, 2010

கம்பன் யாத்த இரமாயண காவியத்தின் மீது 'தீ பரவட்டும்'

கம்பன் யாத்த இரமாயண காவியத்தின் மீது தீ பரவட்டும் என்று எழுச்சிப் போர் முரசு கொட்டினார் அறிஞர் அண்ணா.

மிகப் பெரிய பண்டிதர்களான ரா.பி.சேதுப் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்களின் கருத்துகளை மறுத்துப் பேசி, கம்பராமாயணம் தமிழர்களை எப்படியெல்லாம் இழிவுபடுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டு களுடன், அண்ணா அவர்களுக்கே உரித்தான நளினத்துடனும், கம்பீரத்துடனும் விவாதக் கணைகளைத் தொடுத்தார்.

மறுத்துப் பேசியவர்களில் ஒருவர் எனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி நழுவினார். இன்னொருவர் தோல்வியையும் நாகரிகத்தோடு ஏற்றுக் கொண்டார்.

காடேக ராமன் கிளம்பும்போது உடன் வரப் புறப்பட்ட சீதையுடன் வாதிடுகையில், சீதை கூறும் மொழியின் பகுதியையும், சீதையை இராவணன் எடுத்துச் சென்ற விதத்தையும் வால்மீகி கூறியுள்ளபடியே கம்பர் எடுத்து எழுதியிருப்பின், அந்த ஆரியப் பாத்திரங்களிடம் ஆபாச குணங்கள் கிடந்ததைத் தமிழர் கண்டு, அவர்களை தெய் வங்களென்று போற்றும் கீழ் நிலைக்கு வந்திருக்க மாட்டார்கள். கம்பரோ, கவித் திறமையினால் ஆரிய இராமனைக் குற்றங்குறையற்ற சற்பாத்திரனாக்கிக் காட்டி வழிபாட்டுக்குரிய தெய்வமாக்கிவிட்டார்.

என்பதுதான் அறிஞர் அண்ணாவின் விவாதம். கம்பனின் கவித் திறனை அவர் எந்த இடத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை.

ஒரு சமயம் தஞ்சாவூரில் ஒரு வாலிபர் சங்கக் கூட்டத்துக்கு தந்தை பெரியார் தலைமை வகித்தார். அந்தக் கூட்டத்தில் பேசிய தமிழன்பர் ஒருவர், பெரியார் இராமாயணத்தைக் குறை கூறுவது தவறு; கலை உணர்ச்சிக்காகவும் அதனைப் போற்ற வேண்டும் என்று கூறினார். அதற்கு அந்த மேடையிலேயே தந்தை பெரியார் மிக அழகாகப் பதில் சொன்னார்.

நான் கலை உணர்ச்சியையும், தமிழ் உணர்ச்சியையும் வேண்டாம் என்று கூறவில்லை. தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்) இருந்தால், தங்கக் கிண்ணம் என்பதற்காக அமேத்தியத்தைப் புசிக்க முடியுமா? அதுபோல் கம்ப ராமாயணப் பாட்டுகள் சிறந்தவைதான். அதில் உள்ள மூட நம்பிக்கைக்கும், தமிழர் இழிவுக்கும், ஆரியர் உயர்வுக்கும் ஆதாரமானவற்றை வைத்துக் கொண்டு எப்படி அவற்றைப் பாராட்ட முடியும்? என்று பதில் சொன்னார்.

கம்ப இராமாயணத்தை தன்மான இயக்கம், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், தமிழர் தலைவர் வீரமணி போன்றவர்கள் இனக் கண்ணோட்டத்தில் அது இழிவைத் தருகிறது என்ற காரணத்தால் அதனைக் கொளுத்தவேண்டும் என்றனர்- ஏன், கொளுத்தியும் காட்டினர்.

இராமாயணம் தீட்டிய கம்பனே கூட வையகம் என்னை ஏசுமோ, மாசு வந்து எய்துமோ என்றுதான் குற்றவுணர்வுடன் தொடங்குகிறான். அவனுக் கிருந்த கற்பனைத் திறனுக்கும், காவியப் புலமைக்கும் தேர்ந்த ஒரு இலக்கியத்தைப் படைத்திருக்க முடியும். போயும் போயும் ஒரு தழுவல் இலக்கியமாகவா படைக்க வேண்டும்? ஆனால் வரலாறு நெடுக இன்றுவரை நடந்து வந்து கொண் டிருக்கும் ஆரியர் - திராவிடர் போராட்டத்தில், எதிரியின் பக்கம் நிற்க தனது அளப்பரிய திறமையை அர்ப்பணித்து, ஆழ்வார் என்ற துரோகப் பட்டத்தை ஏன் சுமக்க வேண்டும்?

1948 இல் ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக சிறப்பு மாநாட்டில் உரையாற்றிய அறிஞர் அண்ணா அவர்கள் எந்த அளவுக்குச் சென்று கருத்துரை புகன்றார் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

திருவள்ளுவர் படத்தைத் திறக்கிறோம் என்றால், அதற்கு முன் கம்பன் படத்தை எரித்து விட்டு, அதனைச் செய்ய வேண்டும் என்று கூறு கிறார் என்றால், அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டிருப்போர், திராவிட பாரம்பரியம் என்பதில் பெருமை கொள்வோர், சென்னையிலே கம்பனுக்கு விழா எடுக்கின்றனர். ஆண்டுதோறும் அதனை ஒரு திட்டமிட்ட வகையில் செய்து கொண்டு இருக் கின்றனர் என்றால், அது சரியானதுதானா? அய்யாவையும், அண்ணாவையும் மதிக்கும் செயல்தானா? இனமானத்துக்கு ஏற்றதுதானா? என்பதை சீர்தூக்கிப் பார்ப்பார்களாக!

அண்ணாவின் அந்தத் தீ பரவட்டும் கொள்கையை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துரைப்பதை முன்னெடுப்போம்!

-------- விடுதலை தலையங்கம் (14.08.2010)
                                                                                                                                                        

அன்றில் இருந்து பெரியாரின் டிரஸ்டுகள் மீது குறிவைக்கும் துரோகிகள்

பெரியாரின் டிரஸ்டுகள் ஒரு திறந்த புத்தகம் என்கிற இந்த நூலின் 6,7,8 பக்கங்களில் இருந்து
--------------------------------------------------------------------------
தந்தை பெரியார் மறைவுக்கு பின் அன்னை மணியம்மையார் மறைவு காலத்தில் ,இந்த வருமான வரி பாக்கி 17 லட்சத்திலிருந்து 57 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது . 1978 (மார்ச்) அம்மா அவர்கள் மறைந்த ,என்னை செயலாளராக ஆக்கிய பிறகு இந்த வருமான வரி பாக்கி சுமார் 80 லட்சமாக உயர்த்தப்பட்ட கொடுமைக்கு ஆளானோம். அது மட்டுமா தந்தை பெரியார் காலத்தில் இந்த வருமானவரி துவங்கி நடைபெற்றது. அவர்கள் மறைவுக்கு பின்னர் "எமெர்ஜென்சி " முழுமையாக பயன்படுத்தி ,இலாகாவின் பார்ப்பன மேல் அதிகாரிகள் "சாமி ஆடி " பழிவாங்கும் தன்மையில் ஆட்டம் போட்டனர் . சொத்துக்கள் மீது அட்டாச்மென்ட் ,டிரஸ்ட் சொத்துகளிலிருந்து வரும் வாடகை வருமானத்தை முடக்கியும் ,வங்கி கணக்குகளில் உள்ள தொகைகள் பறிப்பு - முடக்கம் இவளவும் பெரியார் திடலிலே பகிரங்கமாக அட்டாச்மென்ட் நோட்டீஸ் ஒட்டல் வேலை ,-இவளவும் நடந்தன. அதை எதிர்த்து மீண்ட நிலையில் அம்மா(மணியம்மையார்) மறைந்து ,நான் பொறுப்பேற்ற பிறகு கழகத்தினை விட்டு விலக்கப்பட்ட மூவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ,டிரஸ்டினை எதிர்த்து வழக்கு போட்டனர்.(திருவாரூர் கே.தங்கராசு,டி.எம்.சண்முகம்,கு.கிருட்டிணசாமி). அரசே தலையிட்டு வருமானங்களை எல்லாம் பெறுபவர் (official receiver) போட வேண்டும் என்றும்,அரசே இந்த அறக்கட்டளையை எடுத்து கொள்ள வேண்டும் என்றும் கோரினர்.

அன்று திராவிடர் கழகம் கலைஞர் கருணாநிதிக்கு ஆதரவாக இருக்கிறது என்ற நினைப்பில் ,எம்.ஜி.ஆர். அவர்கள் ,அம்மாவால் விளக்கபட்டவர்களுக்கு முதலில் திரை மறைவிலும் பிறகு வெளிப்படையாகவும் ஆதரவு தந்து இம்மாதிரி செயல் களுக்கு வழக்கறிஞர் உதவி - உபயம் கூட செய்தது! நான் பொறுப்பேற்று ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் உயர் நீதி மன்ற வழக்கு ,அதோடு கூட ஒரு சில மாதங்களில் வருமான வரித்துறை மேல் முறையீட்டு (Icome Tax Appellate Tribunal) மன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது. அதற்க்கு முதலில் வருமான வரித்துறை அதிகாரி ,அதற்கடுத்து மேல் அதிகாரி,அதற்கடுத்த நிலையில் (Icome Tax Assistant Commissinar) இப்படி பலரும் பழைய பாக்கியை உறுதி செய்து விட்ட நிலையில் தான்,மூன்றாவது கட்டமாக இந்த அப்பீல் (அதற்கடுத்து இருண்டு மேல்படிகள் உயர்நீதிமன்றம்,உச்ச நீதி மன்றம் என்பவையே !) அதில் இரண்டு "மேல் ஜாதி " நீதிபதிகள் என்பவர்கள் விசாரித்தனர். மேல் சாதி உணர்வுக்கு ஆட்படாமல் ,அப்பெருமக்கள் நல்ல தீர்ப்பு 1978 இல் வழங்கினர்

1.ரூ.80 லட்சம் வருமானவரி போட்டது செல்லாது என்ற நமது வாதம் ஏற்கப்பட்டது.

2 .பெரியாருடையது "அறக்கட்டளை தான் " என்று வருமான வரித்துறையினர் ஏற்று கொள்ள வேண்டும் என்பது இரண்டு முக்கிய வெற்றிகளாகும். அதன் பிறகு சுமார் 10 ஆண்டுகள் பின்னோக்கி (with retrospective effect) இதை அறக்கட்டளையாக (public charitable trust) ஆக வருமான வரித்துறை அங்கிகரித்த ஆணைகளையும் பெற்றோம்.
-------------------------------------------------------------
பெரியாரின் டிரஸ்டுகள் ஒரு திறந்த புத்தகம் என்கிற இந்த நூலின் 12 ஆம் பக்கத்தில் இருந்து
-------------------------------------------------------அதற்க்கு பிறகு 1997 இயக்க கட்டுப்பாட்டை மீறிய காரணத்தால் கழகத்திலிருந்து நீக்கிவைக்கப்பட்ட திரு.பாலகுரு என்பவரும் அவருடைய கோஷ்டியினரும் அவர்களுக்கு மறைமுகமாக தொடர்ந்து உதவி வந்த வழக்கறிஞர் திரு.துரைசாமி யும் நமது டிரஸ்டுகளின் மீது வழக்கினை மற்றொரு ரூபத்தில் "ரிட்" ஆக சென்னை உயர்நீதி மன்றத்தில் போட்டனர் .அதை விசாரித்து தீர்ப்பு கூறிய நீதிபதி பத்மநாபன் இவர்களது வாதங்கள் ஏற்க்க கூடியவை அல்ல என்பதை சுட்டிக்காட்டி அந்த வழக்குகளை தள்ளுபடி செய்ததோடு ,அதற்க்கு முந்தைய நீதிபதி கனகராஜ் அளித்த அனுமதியையும் கூட தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறினார். இது 1996-97 நடைபெற்றது தீர்ப்பு வெளிவந்தது. தொல்லைகள் வந்தாலும் வளர்ச்சி பணிகள் தொடர்கின்றன. இந்த வழக்குகளின் தொல்லை ஒருபுறம் தொடர்ந்து கொண்டே இருந்தாலும்,நமது இரு அரகட்டளைகளின் சார்பில் துவக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்ற அமைப்புகள் நல்ல வளர்ச்சி பெற்று ,சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளன.

Thursday, August 12, 2010

நாயக்கர் சேர்த்ததில் பார்பனர்களுக்கு என்ன கவலை?


பெரியார் பெயர் முன்னாடி நாயக்கர் சேர்த்ததுக்கு  பெரியாரால் பாதிக்க பட்டவர்களுக்கு  என்ன கவலை?. ஒரு வேலை  அவர்களோட  கவலை தற்போது பார்ப்பனியத்தை வேரறுக்கும் ஆசிரியர் வீரமணிக்கு ஏதோ ஒரு வகையில் அவப்பேறு ஏற்படுத்த முடியதன்னு நப்பாசை. சோ கூட்டத்துக்கே அதானே வேலை. இதில் ஒன்றும் புதுமை இல்லை. அய்யா தந்தை பெரியவர் அவர்களை ராஜாஜி நாயக்கர் ன்னு கூப்பிட்டார். சில பேரு ராமசாமி ன்னு கூப்பிட்டார்கள். ஒரு சிலர் வந்து சாமியே இல்லன்கிருன்கே அப்புறம் ஏன் உங்க பேருல சாமின்னு வருதுன்னு கேட்டாங்க. உனக்கு ராமசாமின்னு கூப்பிட புடிக்கலன்ன மசுருன்னு கூப்பிடுன்னு  சொன்னவர் தான் பெரியார். இப்போவும் அததான் சொல்லுறோம் உங்களுக்கு நாயக்கர் வச்சது தப்ப இருந்த எப்படி வேணுனாலும் கூப்பிடுக்கோ அய்யா சொன்ன மாறி.
 
இதோ இந்த வருடத்தில் மே-2010 இந்தியன் சிவில் சர்வீஸ் பரிட்சையில் வினாத்தாளில் கேட்ட கேள்வியை பாருங்கள். அதில் அய்யாவின் பெயருடன் நாயக்கர் (E.V.R naicker periyar) சேர்த்து அய்யாவின் பெயரை அடையாளப் படுத்தி உள்ளனர். மிகவும் பெரியார் பற்றாளர் போல கேள்வி கேட்பவர்கள் என்ன சொல்ல போகிறார்கள். எனவே ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலை கொள்ள வேண்டாமே.
 
பெரியார் கடைசி வரை சாதியை எதிர்த்து போராடிய மாமனிதர் என்பதை எக்காலத்திலும் பொய்யாக்க முடியாது. பெரியார் ஒரு மானுட பற்றாளர். ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு தெரியும் எதனை எப்படி செய்ய வேண்டும் என்று. பார்பனிய புத்தியோடு கேள்வி கேட்பவர்களே, முதலில் உங்கள் வடகலை, தென்கலை பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டுங்கள். பெரியார் திரைப்படம் எல்லா மொழிகளிலும் வந்தால் பிரச்சனை என்ன என்பது பார்ப்பனியத்துக்கு நன்றாக தெரியும். அதனை பொறுத்துக்கொள்ள முடியாத பார்பனர்கள் இப்படி கூச்சல் போட்டு சமதானம் தேடிக்கொள்ள முயல்வது வழக்கம் தானே.


சடங்கே உனக்கொரு நாள் இறுதி சடங்கு செய்ய மாட்டோமா?

அக்னி கோத்திரம் ராமானுஜ தாத்தாசாரியார் ஒரு பார்ப்பனர்.நான்கு வேதங்களும் இவரக்கு அத்துபடி.நேரு,காந்தி போன்றவர்களோடு பழகியவர்.மறைந்த காஞ்சிமட தலைவர் சந்திரசேகரரின் நெருங்கிய நண்பர் ஆலோசர்கரும் கூட.இவர் நக்கிரனலில் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது என்ற தொடரில் இந்து மதத்தின் விலா எலும்பை முறித்தவர்.அதனுடைய தொடர்ச்சியாக 2 ஆம் பாகமாக "சடங்குகளின் கதை" என்ற இந்த நூல் வெளி வந்து இருக்கிறது .
---------------------------------------------------------------------------------------------

இந்தநூலின் இறுதியில் அதாவது 149,150,151,,ஆகிய பக்கங்களில்  உள்ள செய்தியை  அப்படியே கீழே தருகிறேன்
-------------------------------------------------------------------------------------------------
 ஒரு மகன் ஒரு தாயை இழந்து தவிக்கிறான் .தனக்கு பால் ஊடியவருக்கே ..பால் ஊற்றும் நிலைமைக்கு வந்து விட்டோமே என கண்கள் அழுது அழுது பெருகுகிறது .

இதயம் உடைந்து அம்மா அம்மா என கதறுகிறது .எல்லாருக்குமே வாழ்க்கை என்பது அவர்களின் அம்மா போட்ட பிச்சை அம்மாவின் புடவையில் காட்டிய தூளியின் கட்டில்தான் சின்ன குழந்தையில் நாம் தூங்கி இருப்போம் .

நாம் வளர வளர அதைபார்த்து மலர்கிறவள் தாய் மட்டும் தான்.

"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோனென  கேட்ட தாய்."
என வள்ளுவரே தாய்மையின் உயர்வை ..மகனை வைத்து சொல்கிறார் .

தாய்தான் உலகத்தின் ஆதாரம் .பெருமாளின் மனைவியை கூட "தாயார் தாயார் ' என மரியாதையாக அழைப்பவர்கள் நாம்..அப்படிப்பட்டவள் தாய்.இன்றும் பூமியில் எக்கச்சக்க அழுக்குகள் இருந்தாலும் ..ஒவ்வொரு தாய் உருவாகும்போதும் மீண்டும் மீண்டும் புனிதமாகிகொண்டே வருகிறது பூமி .

அப்பேற்பட்ட தாயை இழப்பதே எவளவு பெரிய துன்பம் ?அந்த துன்பத்தை தனித்து கொள்வதற்காக ...தாய்க்கு திவசம் செய்ய போகிறான் ஒரு பாமரன் .
அப்போது ப்ரோகிதன் சொல்கிறான்
----------------------------------------------------
"என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா
பிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்ய நாம..."
------------------------------------------------------------
"எங்க அம்மா ராத்திரி வேலைகள்ல யார்கிட்ட படுத்துக்கொண்டு என்னை பெற்றாலோ தெரியாது.ஆனால் ...நான் ஒரு உத்தேச நம்பிக்கையில் தான் அவளை என் அப்பாவின் மனைவியாக கருதுகிறேன் .அவளுக்கு என் சிரார்த்ததை செய்கிறேன் ..."

என்பது தான் அந்த மந்திரத்தின் அர்த்தம் .உன் தாயை நடத்தை கெட்டவள் என சொல்வது தான் ..அதையும் உன்னை வைத்தே மறுபடி உச்சரிக்க வைப்பதுதான் இந்த மந்திரத்தின் நோக்கம்.இப்படிப்பட்டதுதான் இறுதி சடங்கு.

நேருஜி இறந்த பொது கவி சக்கரவர்த்தி கண்ணதாசன் "சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதா?.. தீயே உனக்கொரு நாள் தீமூட்டி பாரோமோ .. என்று கேட்டான் .
அதே போல் அம்மாக்களை இழிவு படுத்தும் இறுதி சடங்கே உனக்கொரு நாள் இறுதி சடங்கு செய்ய மாட்டோமா?

------------------------------இவ்வாறு முடித்திருக்கிறார் தாத்தாசாரியார்

Wednesday, August 11, 2010

பொன்னியின் செல்வன் பள்ளிகளில் துணைப் பாடம் ஆகணுமாம்..தினமணி சொலுகிறது


தஞ்சை பெரிய கோவிலின் 1000 ஆண்டு நிறைவை ஒட்டி   கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை பள்ளிகளில் துணை பாட நூலக வைக்க வேண்டுமாம். இன்றைய (12.08.2010) தினமணி தலையங்கம் தீட்டி உள்ளது. தினமணி அடிக்கடி தன் ஆர்.எஸ்.எஸ் பாணியை நமக்கு நினைவு படுத்தும். அதுபோல இதுவும் ஒன்று.  இன்னும் கொஞ்சம் நாளில், ஜெயந்திரனின் 100 வது விழா வரும்போது மகா பெரியவாளின் "தெய்வத்தின் குரல்" நூலினையும் துணைப் பாடமாக வைக்க சொல்லி அரசுக்கு பரிந்துரை செய்து  தலையங்கம் எழுதினாலும் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு மாணவர்களுக்கு அறிவியலை வளர்க்க வேண்டும் பகுத்தறிவை புகட்ட வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் சொல்லுகிறது.  இதெல்லாம் தினமணிக்கு தெரியாதோ? தெரிந்தாலும் அவாளின் பூணூல் பாசம் இப்படி தலையங்கம் எழுத சொல்லுகிறது. அந்த தலையங்கம் நடுவே பாருங்க, 1000 ஆண்டு நிறைவு விழா  தஞ்சை பெரிய கோவில் என்றதும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லையாம். அதே தாஜ்மகால் என்றால் அப்படி இருக்குமா? என்று ஒரு கேள்வி. ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர் தான் இப்படி சிந்திக்க முடியும். 
 
பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி அப்படியே பக்கத்துக்கு பக்கம் பகுத்தறிவை  உதிர்த்து வைத்திருக்கிறார். அதனை மாணவர்களுக்கு புகட்ட வேண்டும். என்ன கொடுமை. இதெல்லாம் கேட்பார் யாரும் இல்லை என்ற நினைப்போ?  இதெல்லாம் ஒரு பொது பத்திரிகை என்று தமிழன் நம்பி ஏமாற்றம் அடைகிறானே? அவனை என்ன சொல்ல. தமிழா இன உணர்வு கொள்.


Tuesday, August 10, 2010

எல்லோரும் இந்து என்றால் ராமகோபாலன் முதுகில் பூணூல் ஏன்?

மனிதத் தன்மைக்கே விரோத மான ஒரு மதம் இருக்கிறதென்றால் அதுதான் ஆரிய மதம்இந்து மதம் என்று வாலாஜா மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

8.8.2010 அன்று வாலாஜாவில் நடைபெற்ற மண்டல திராவிடர் கழக மாநாட்டில் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

தமிழனை இயற்கை தட்டி எழுப்புகிறது

நான் பேசுவதற்கு முன்னாலே மழை வரக்கூடிய ஆயத்தம் இருக்கிறதென்று நீங்கள் எல்லாம் சற்று நேரத்திற்கு முன்னால் எழுந்தீர்கள். பிறகு தமிழனைத் தட்டி எழுப்புவதற்குப் பதிலாக தானே இயற்கை எழுப்புகிறது என்று மகிழ்ச்சியோடு இருந்த நேரத்திலே இயற்கையையும் வெல்லக் கூடியவர்கள் பகுத்தறிவாளர்கள், பெரியார் பெருந்தொண்டர்கள் என்ற அளவிலே கொட்டும் மழையாக இருந்தாலும், கொளுத்தும் வெயிலாக இருந்தாலும் குடி செய்வார்க்கில்லை பருவம் என்ற முறையிலே, செயல்படக்கூடியவர்கள் நாம் என்ற முறையிலே உங்கள் எல்லோருக்கும் அன்பையும், வணக்கத் தையும், பாராட்டையும், மகிழ்ச்சியையும் தெரி விக்கின்ற இந்த நேரத்திலே பல ஊர்களிலே மழை வரவில்லை என்று கழுதைக்கும், தவளைக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் செய்து வைக்கின்றான்.

மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி

ஆனால் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடத்தி அதற்குப் பிறகு மழை வருகிறது இங்கே என்று சொன்னால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால் மழை பெய்வதற்கும், இவைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது பருவத்தினுடைய நிலை என்ற பகுத்தறிவு சிந்தனைக்கு இங்கே நாம் ஆளாக வேண்டும் என்பதைத்தான் எடுத்துக்காட்டியிருக்கின்றார்கள்.

அதுமட்டுமல்ல, நண்பர்கள் இங்கே சுட்டிக்காட்டினார்கள். தொடர்ந்து துணைப் பொதுச்செயலாளர், பொதுச்செயலாளர் மற்ற நண்பர்கள் எல்லாம் சொன்னார்கள். உள்ளத்தால் ஒருவர்மற்றுடலினால் பலராய்க் காண்பர். அந்த உணர்வு இந்த இயக்கத்திற்கு உண்டு.

பெரியார் திராவிடர்கள் என்றார்

யார் என்ன மதம்? என்ன ஜாதி? யார் என்ன கட்சி என்றுகூட பார்க்காமல் தமிழர்கள் என்று சொன்னால் கூட பல நேரங்களிலே பார்ப்பனர்கள் உள்ளே புகுந்துகொண்டு நானும் தமிழ் பேசுவதால் தமிழன்தான் என்று ஏமாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிற காரணத்தால்தான் எச்சரிக்கையாக நம்முடைய அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள், நாமெல்லாம் திராவிடர்கள் என்று சொல்லக்கூடிய உணர்வை உருவாக்கி னார்கள்.

எனவே இஸ்லாமிய சகோதரர்களாக இருந்தாலும், அல்லது இந்து என்ற பொருளைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களை இந்து என்று அழைத்துக்கொள்வதில் பெருமைப்படக் கூடியவர் களாக இருந்தாலும், அதேபோல கிறித்துவ நண்பர்களாக இருந்தாலும், அல்லது எங்களைப் போன்றவர்கள் எந்த மதத்தையும் ஏற்காதவர்களாக இருந்தாலும் நாம் எல்லோரும் இனத்தால் திராவிடர்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

நாம் யாரையும் வெறுப்பவர்கள் அல்லர்

மனிதநேயத்தால் மனிதர்கள் அவ்வளவு தானே தவிர, நாம் யாரையும் வெறுக்கக்கூடியவர்கள் அல்லர். நம்மை வெறுக்கக் கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள்.

நேரம் அதிகமாகிவிட்டது. மழையும் அச்சு றுத்திக்கொண்டிருக்கிறது. சுற்று வட்டாரத்தில் உள்ள பல ஊர்களிலிருந்தும் ஏராளமாக வந்தி ருக்கின்றீர்கள். என்றாலும் ஆர்வத்தோடு நீங்கள் கலையாமல் அமர்ந்திருக்கின்றீர்கள்.

புதிய அவதாரம் எடுத்திருக்கின்ற ஒருவர்

சுருக்கமாக மட்டும் சில கருத்துகளை நான் எடுத்து வைக்க விரும்புகின்றேன். இந்து முன்னணி என்ற பெயராலே இந்துக்களை ஒன்று சேர்ப் பதற்காகவே புதிய அவதாரம் எடுத்திருக்கின்ற ஒருவர் இங்கே மாநாடு போட்டு, பிறகு வேலூரிலே மாநாடு போட்டு அவர் கருத்தைச் சொன்னதை நண்பர்கள் சொன்னார்கள்.

சில பேருக்குக் கூட மேலெழுந்த வாரியாகக்கூட ஓர் எண்ணம் தோன்றும். என்னவென்று சொன்னால் ஓகோ, ஜாதியை ஒழிக்க இவர்களே கிளம்பி விட்டார்கள் போலிருக்கிறது என்று நாம் எண்ணக்கூடிய அளவிற்கு பேசியிருக்கிறார்களாம். ஜாதிவாரியாகக் கணக்கெடுப்பு கூடாது அது எங்களுடைய கருத்து என்று அவர்கள் பேசி யிருப்பதாகச் சொன்னார்கள்.

ஜாதி வாரியான கணக்கெடுப்பு தேவை

நாங்கள் ஜாதி வாரியான கணக்கெடுப்பு தேவை என்று இங்கே தீர்மானம் போட்டிருக் கின்றோம். இரண்டு அணியையும் அடையாளம் காண்பதற்கு, புரிந்து கொள்வதற்கு யாருக்கு சமூகநீதியிலே அக்கறை இருக்கிறது என்பதற்கு இதைவிட நல்ல எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியாது.

ஜாதி இருக்கவேண்டும் என்று இவர்கள் நினைக்கிறார்களா? என்றுகூட நம்முடைய தோழர்களே கூட நினைப்பார்கள். என்னய்யா, ஜாதி ஒழியவேண்டும் என்பதற்காகத்தானே பெரியார் பாடுபட்டார். ஜாதி ஒழிப்புத்தானே இவர்களுடைய கொள்கைகள்.

அப்படி இருக்க, ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பு இருக்கவேண்டும் என்று சொல்லுகின்றார்களே என்று கூட நினைக்கலாம். இங்கேதான் சிந்திக்க வேண்டும்.

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு கூடாது

ஜாதி வாரியாக கணக்கெடுப்பு கூடாது என்று சொல்லுகின்ற இராம.கோபாலன் சட்டையைக் கழற்றட்டும். ஜாதி வாரியான கணக்கெடுப்பு தேவை என்று சொல்லுகின்ற நாங்களும் சட்டையைக் கழற்றுகிறோம். சண்டைக்காக அல்ல. சட்டையைக் கழற்ற வேண்டும் என்று சொன்னவுடன் ஏதாவது கோதாவில் இறங்கி குஸ்தி போட வேண்டும் என்பதற்காக அல்ல. அவரசப்பட்டு அப்படி நினைக்காதீர்கள். நாங்கள் எப்பொழுதுமே அறவழியில் நம்பிக்கை உடையவர்கள். சட்டையை எதற்கு கழற்ற வேண்டும்? சட்டையைக் கழற்றி, வா என்று சவால்விட்டார் என்று பத்திரிகைக்காரர்கள் யாரும் நாளைக்குப் போட்டு விடக்கூடாது.

சட்டையைக் கழற்றினால் அவர் முதுகில் தொங்குவது பூணூல். எங்கள் முதுகு வெறும் முதுகாக இருக்கும். இதற்கு என்ன அர்த்தம்? அதாவது அவரும் இந்து. நாங்களும் இந்து.


இந்துக்களை எது ஒன்று சேர்க்காமல் இருக்கிறது? அவருடைய கோஷம் என்ன? இந்துக்களே, ஒன்று சேருங்கள் என்பதுதான். இந்துக்களே, ஒன்று சேருங்கள் என்று சொன்னால் அவர் என்ன செய்ய வேண்டும்? என் முதுகும், அவர் முதுகும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். என் நெற்றியும், அவர் நெற்றியும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். உலக முழுவதிலும் இருக்கிற கிறிஸ்த வர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் எல்லாம் சிலுவையைப் போட்டிருக்கின்றார்கள்.

இந்துக்களே ஒன்று சேருங்கள்!

அதேமாதிரி இஸ்லாமியர்களுக்கு சில அடையாளம் உண்டு. ஆனால் ஒன்று சேருங்கள் என்று சொல்லுகின்ற உங்களுக்கு முதலில் நெற்றி சுத்தமாக இருக்கிறதா? நெற்றியில் குறுக்கே கோடு போடுகிறார்கள். இன்னும் சில பேர் நெடுக்குக் கோடு போடுகிறார்கள்.

தந்தை பெரியார் சொன்னார்நெற்றி சுத்தமாக யாருக்கு இருக்கிறதோ, அவனுக்குப் புத்தி சுத்தமாக இருக்கும் என்று சொன்னார். இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று சொல்லுகின்றீர்களே, ரொம்ப தூரம் போக வேண்டாம். காஞ்சிபுரம் பக்கத் தில்தான் இருக்கிறது.

யானைக்கு நாமம் போடுவதில் சண்டை

அந்த காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில் யானைக்கு எந்த நாமம் போடுவது என்று சண்டை வரதராஜ பெருமாளுக்கு அல்ல. பாதம் வைத்த நாமமா? பாதம் வைக்காத நாமமா? வடகலை நாமமா? தென் கலை நாமமா? என்கிற வழக்கு இருந்து வருகிறது.

இந்து மதத்தில் ஒரு பிரிவு வைஷ்ணவம், வைஷ்ணவத்திலாவது ஒன்றாக இருக்கிறார்களா, என்றால் இல்லை. அதிலே இரண்டு பிரிவு. ஒன்று வடகலை, இரண்டாவது தென்கலை. பாதம் வைத்த நாமம், பாதம் வைக்காத நாமம். இவர்களுக்குள் சண்டை போட்டால் கூட பரவாயில்லை. ஆனால் யானையைக் கூட இவர்கள் விட்டுவைக்கவில்லை. யானை, எனக்கு இந்த நாமம் போடு என்று எங்காவது சொல்லுமா?

வழக்கு 150 வருடங்களாக நடக்கிறது

யானைக்கு எந்த நாமம் போடுவது? என்று 150 வருடங்களாக வழக்கு நடக்கிறது. இதுதான் அர்த்தமுள்ள இந்து மதம். இந்த வழக்கு லண்டன் கோர்ட்டுக்கு வெள்ளைக்காரனிடம் சென்று விட்டது. இலண்டனில் பிரிவி கவுன்சில் என்று இருந்தது. இப்பொழுதுதான் நமக்கு உச்சநீதி மன்றம் இருக்கிறது, சுதந்திரம் வந்த பிற்பாடு. 1947க்கு முன்னால் வரையில் பிரிவி கவுன்சில்தான் விசாரணைக்கூடம்.

அப்பீலுக்கு இங்கே உச்சநீதிமன்றத்திற்கு எப்படி செல்லுகின்றோமோ அதேமாதிரி பிரிவி கவுன் சிலுக்குச் செல்ல வேண்டும். நம்முடைய யானை வழக்கு அங்கே போனது.

வடகலை - தென்கலை

யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்று வழக்கு. இந்த வழக்கை விசாரிப்பவர் வெள்ளைக்காரர். வாதாடு கிறவன்வக்கீல் வெள்ளைக்காரன். அவர்களுடைய நெற்றியில், இந்த மாதிரி கோடு போட்டு அவர்களுக்குப் பழக்கம் கிடையாது. 

தொடரும்...
-------- விடுதலை (10.08.2010)

Saturday, August 07, 2010

குடுமிகளின் நையாண்டி தர்பார்!

கேள்வி: பெங்க ளூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவ தன் மூலம் கன்னடர் தமிழர் இடையே நல் லுறவு, நல்லிணக்கம் ஏற்படும் என்று கரு நாடக முதல் வர் எடியூ ரப்பா கூறியுள் ளாரே?

பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான். யாரா வது கன்னட வெறியர் கள் ஒரு சமயம் பார்த்து, அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தாலே போதுமே!
துக்ளக், 19.8.2009, பக்கம் 9

இது பதிலா? கன்னட வெறியர்களைத் தூண்டிவிடும் பூணூல் தனமா?
துக்ளக் பார்ப்பனர் ஏடு இப்படி தூபம் போடு கிறது என்றால், தினமலர் சிண்டு விரைத்துக் கொண்டு கீழ்க்கண்டவாறு எழுதுகிறது.

தமிழக பொதுப் பணித்துறைச் செயலாளர் ராமசுந்தரம் தமிழகத்திற்கு கருநாடகா ஆண்டுக்கு 201 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும். மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். கருநாடக அரசு, குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடாததால், இந்த ஆண்டு தாமதமாக கடந்த 7 ஆம் தேதிதான் திறந்துவிட்டோம்.

டவுட் தனபாலு: அதனால் என்னங்க... பெங்களூருவுல திருவள்ளுவர் சிலை திறந்து விட்டோமே இல்லையா? அதுக்கப்புறம் டெல்டா பகுதிகள்ல முப்போகம் விளையாதா என்ன...?
(தினமலர், 18.8.2009)

எது எதையும் முடிச்சுப் போடுகிறார்கள் பார்த்தீர்களா இந்த முப்புரிக்கும்பல்?
திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதால் இரு மாநிலங்களுக்கும் நல்லுறவு ஏற்படும் என்று கருநாடக மாநில முதலமைச்சர் கூறுகிறார். இவ்வளவுக்கும் திருவாளர் சோ விழுந்து விழுந்து ஆதரிக்கும் பி.ஜே.பி.யின் முதலமைச்சர்தான் அவர்.
அதையும் தாண்டி திருவள்ளுவர்மீது அவாளுக்கு இருக்கும் எரிச்சல் பொத்துக் கொண்டு கிளம்புகிறதே!

தினமலரோ திருவள்ளுவர் சிலை திறந்தாச்சு தமிழ்நாட்டில் டெல்டா முப்போகம் விளையாதா என்ன என்று கிண்டல் கேலி செய்கிறது.
யாருக்கு எதன்மீது என்ன அபிப்ராயம் இருக்கிறதோ, அந்தப் பாணியில்தானே புத்தி மேயப் போகும்?

கும்பமேளா நடந்துவிட்டதோ இல்லையோ, இனி பாருங்கோ இந்தியாவில் பாலும், தேனும் பெருக்கெடுத்து ஓடப் போகுது.

காஞ்சி ஜெயேந்திரருக்கு பவள விழா நிறைவு ஜெயந்தி நடக்கிறதோ இல்லையோ, நீங்க பாக்கத்தான் போறீங்க கங்கையும், காவிரியும் யாருடைய சிரமும் இல்லாமல் ஒன்றாக இணையப் போகின்றன.

அழகர் பச்சை உடை உடுத்தி ஆற்றில் இறங்கினாரோ இல்லியோ, வைகையில் கரைபுரண்டு ஓடப்போகும் காட்சியை மதுரை மக்கள் பார்த்து மகிழ்ச்சிக் கூத்து ஆடத்தான் போகிறார்கள் என்று கும்மாங்குத்து நம்மால் கொடுக்க முடியாதா?
மூன்று சதவிகித உச்சிக்குடுமிகள் தமிழ் நாட்டில் உட்கார்ந்துகொண்டு தமிழ்ச் செம்மொழி என்றால் கிண்டல் வள்ளுவர் சிலை திறப்பு என்றால் ஒரு சீண்டல்; உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்றால், நையாண்டி செய்கிறார்கள் என்றால்...
தமிழர்களின் சுரணையைச் சீண்டுகிறார்கள் சூடு கிளப்புகிறார்கள் என்று தானே பொருள்!
தமிழா தன்மானங் கொள்! என்று சூளுரைத்துக் கிளம்பத்தான் வேண்டுமோ!

----- நன்றி விடுதலை நாளிதழ்
                                                                                                                                                               


Wednesday, August 04, 2010

தினமணியின் வயிற்றெரிச்சல்........

 அண்ணன் எப்போ காலி யாவன் திண்ணை எப்ப கிடைக்கும் என்று இருந்திருக்கும்
போல தினமணி. அதான் அதன் பார்ப்பன பாணியிலேயே இன்றைக்கு(04.08.2010) ஒரு தலையங்கம் முதல் கலைஞர்...அவர்களை ஏன் கலைஞர் என்று அழைக்கவேண்டும் என்று தீட்டியுள்ளது.

அய்யா தந்தை பெரியார் சொன்னார், காமராஜரை கூப்பிடும் பொது கல்வி வள்ளல் காமராஜர் என்று கூப்பிடுங்கள், அண்ணாவை அறிஞர் அண்ணா என்றே சொல்லுங்கள். நம்மவர்களை நாம் புகழாமல் வேறு யார் புகழ்வார்கள்? என்று அய்யாவின் அடியொற்றி
பேசப்படுவதுதான். இதனை தினமணி பூணூல் பாணியிலேயே வெளி மாநில காரர்கள்
இகழ்கிறார்கள் என்று பெரிதும் கவலைகொண்டுள்ளது. ஒரு வேலை உள்நாட்டு
பார்ப்பனர்கள் வேண்டுமானால் வயிற்றெரிச்சல் படலாம். அந்த
வய்ற்றேரிச்ச்சலில் வெளிப்பாடு கூட இந்த தலையங்கமாக இருக்கலாம்.

இந்தத் தமிழனை உலகில் வசிக்கும் பெரும்பான்மையான தமிழர்கள் ஆசையுடன்
கலைஞர் என்று அழைப்பது கைபர் கணவாய் வழியாக வந்த சிலருக்கு பிடிக்காது.
திருக்குவளை கிராமத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த இந்த
சாமான்யனுக்கு இவ்வளவு மரியாதையா என்று சில அறிவிலிகள் பொறுக்க முடியாமல்
புலம்புகிறார்கள். அவர்கள் யார் என்பது உனக்கு நன்றாகத் தெரியும். இந்த
நாட்டின் மிகப் பெரிய அரசியல் இயக்கத்தின் தலைவரே என்னை கடற்கரைக்
கூட்டத்தில் கலைஞர்ஜி என்று குறிப்பிட்டதை உனக்கு நான் நினைவு படுத்த
வேண்டியது இல்லை. 1969 ஆம் ஆண்டில் நமது இதயத்தில் நீங்காது இடம் பெற்ற
என் சுவாசக் காற்றாகிய பேரறிஞர் அண்ணாவே , அமெரிக்க நாட்டில் சிகிச்சை
பெற்று வந்த நிலையில், தம்பி உன்னை உலகம் என்றென்றும் கலைஞர் என்று தான்
அழைக்க வேண்டும் என்று தனது இறுதி விருப்பத்தை என்னிடம் கூறியது இப்போது
எனது நினைவிற்கு வருகிறது. அதே போன்று தந்தை பெரியார் அவர்களும் என்னிடம்
இறப்பதற்கு முன் "தம்பி உன்னை கலைஞர் என்று அழைக்காதவர்கள் அறிவிலிகள்,
தரம் கெட்டவர்கள், அவர்களைப் பற்றி கவலைப்படாதே.... (தினமணி இணையதளத்தில் ஒரு தோழரின் பின்னூட்டத்திலிருந்து..உதிர்த்தவை)

சுப்பிரமணியன் என்று கூறாமல் ஏன் சங்கரச்சாரி, ஜெயந்திரர் என்று
கூறவேண்டும். மகா பெரியவர் என்று கூறவேண்டும்? அப்புறம் லோக
குருவாம்..இந்த அடைமொழிகள் எல்லாம் எங்கே போய் சொல்லி முட்டிகொள்வது. இதனை பார்த்து தமிழ்நாட்டு தமிழர்களே காரி துப்ப வேண்டுமே. அனால் மற்ற
அடைமொழிகளை பார்த்து அண்டை நாட்டுக்காரன் கேலி செய்கிறானாம். என்ன கவலை
தினமணிக்கு. மருமகள் உடைத்தால் மண்குடம்...மாமியார் உடைத்தால் பொன்குடமா?


Sunday, August 01, 2010

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திரன் பேசுகின்றேன்!காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதிமீது கொலைக் குற்றம் இருந்தும், காமவெறியர் என்று மக்களால் தூற்றப்பட்டும்கூட அவருக்கு 76ஆம் ஆண்டு பிறந்த நாளை ஜெயந்தியை வெகு விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த ஆசாமியும் கொஞ்சமும் லஜ்ஜையின்றி

ராஜ நடை போட்டுத் திரிந்து கொண்டு இருக்கிறார்.

சங்கை கெட்டுப் போன சங்கராச்சாரியாரை பார்ப்பனர்கள் தூற்றுவதில்லை; விட்டுக் கொடுப்பதில்லை. காரணம் இனவுணர்வுதான். தமிழர்களின் நிலை என்ன?

உண்டகலத்தில் ரெண்டுக்குப் போகும் மனிதர்கள் தானே!(தந்தை பெரியார் கூறிய உவமை இது.) நான் யார் தெரியுமா?

இதோ காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஸ்ரீலஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பேசுகிறார்:

1) என்மீதுள்ள வழக்குகள் குற்றப்பிரிவு 302, 120பி,34, 201 ஆகிய பிரிவுகள் கொலை செய்யத் தூண்டுதல் கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை இந்தப் பிரிவுகளில் என்னைக் கைது செய்துள்ளனர். (11.11.2004). என்மீதுள்ள முக்கிய குற்றச்சாற்று. காஞ் சிபுரம் வரதராஜ பெருமாள்கோயில் மேலாளர் ஆனந்த சர்மா மகன் சங்கரராமனைக் கொலை செய்தது. (3.9.2004)

2) என்மீதுள்ள இன்னொரு குற்றச்சாற்று சென்னை மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணனைத் தாக்கியது (இ.பி.கோ. 120பி, 307).

3) மற்றொரு குற்றச்சாற்றும் உண்டு. சென்னை திருவல்லிக்கேணி மாதவன் என்பவரைத் தாக்கியது (31.8.2004) நெல்லை மாவட்டம் திருக்கருக்குடி பெருமாள் கோயிலில் இருந்த சிவன் கோயிலை நான் இடித்தேன். இடித்தது தவறு என்றுகூறி இந்த மாதவன் மறுபடியும் சிவன் கோயிலைக் கட்ட முயற்சி செய்தான். அதனால் மாதவனைத் தாக்கியது.


4) 1987இல் (23.8.1987) காஞ்சிபுரம் சங்கர மடத்தை விட்டு இரவோடு இரவாக தண்டத்தை விட்டு விட்டு தலைக் காவேரிக்கு ஓடினேன் (நேபாள பெண்மணி ஒருவருடன்)

5) தண்டத்தை மடத்தில் விட்டு விட்டு ஓடியதால் மடத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்றாகி விட்டது. காமத்தைத் துறந்த நிலையிலிருந்து விடுபட்டு, காதல் உலகில் சஞ்சரித்ததாக இதன் பொருள். நான் தண்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு மடத்தைவிட்டு ஓடியதால், காஞ்சிப் பெரியவாள் அவசர அவசரமாக விஜயேந்திரனுக்கு அடுத்த பட்டத்தைச் சூட்டி விட்டார்.

6) அன்றைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் முயற்சியால் மீண்டும் காஞ்சி மடத்துக்குக் கொண்டு வரப்பட்டேன். தண்டத்தைத் துறந்து மடத்தைவிட்டு நான் வெளியேறி விட்டதால், மடத்துக்கும் எனக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லை என்று சொன்னதை மகா பெரியவாள் கடைசி வரை வாபஸ் வாங்கவேயில்லை. ஆனாலும் விவஸ்தைகெட்டு மடத்தில் இருந்தேன் இருக்கிறேன். 7) என்மீது வேறு குற்றச்சாற்றுகளும் உண்டு.


திருப்பதி தோமலை சேவையின்போது குலசேகரன் படியில் அமர்ந்து ஒரு முகூர்த்த நேரம் (ஒன்றரை மணி) அர்ச்சனை செய்தேன். கோயில் அர்ச்சகரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது என்று தெரிந்தும் அதனைச் செய்தேன். அர்ச்சகர் என்னைத் தடுத்தார்; நான் அதைச் சிறிதும் சட்டை செய்யவேயில்லை. (3.11.2000). 8) பெண் விஷயத்திலும் என்மீது ஏகப்பட்ட புகார்கள். இந்த வகையில் பிரேமானந்தா. நித்யானந்தாக்களுக்கு முன்னோடி நான். அனுராதா ரமணன் என்ற பிராமணப் பெண்ணை, கையைப் பிடித்து நான் இழுத்ததாக டி.வி.யில் கண்ணீரும், கம்பலையுமாக எடுத்துக்கூறி என் மானத்தைக் கப்பலேற்றிவிட்டார்.

9) திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்று கிலோ தங்கத்தில் பூணூல் செய்து அணிவித்தேன் (5.4.2002) இதன் மூலம் கடவுளையும் என் பிராமண ஜாதிக்குள் கொண்டு வந்து விட்டேன்.

10) தாம்ப்ராஸ் என்னும் பார்ப்பன சங்கத்தின் மூலம் வெளியிடப்பட்ட அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் நூல் வெளியீட்டு விழாவில் கடவுளுக்கும் மேலே உயர்ந்தவன் பிராமணன் என்று பேசினேன் (9.10.2002). இதன்மூலம் என் ஜாதி ஆணவத்தை வெளிப்படுத்தினேன். (மும்மலத்தையும் அதாவது ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் கடந்தவர்கள் தான் காமகோடி என்று சொல்லப்பட்டாலும், என்னைப் பொறுத்தவரை இவற்றிற்கு ஆட்பட்டவன் தான்).

11) மதுரை மாவட்டம் தும்பைப்பட்டிக்குச் சென்றேன், (10.11.2002). கக்கன் பிறந்த ஊர்அது. ஹரிஜன்கள் என்னைத் தொட்டு விடாதபடி தோளில் தொங்கிய துணியை எடுத்துக் காலில் சுற்றிக் கொண்டேன்.

இதன் மூலம் நான் தீண்டாமையை ஆதரிக்கும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டேன்.

12) எல்லா ஜாதியாருக்கும் ஒரே சுடுகாடு கூடாது என்ற கருத்தைச் சொன்னவன் நான் (விடுதலை 8.3.1982). இதனால் ஜாதி வெறியன் என்று தூற்றப்பட்டேன்.

13) பா.ஜ.க., ஆட்சியின் போது அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதற்கு எனது பாராட்டுதலை வெளிப் படையாகத் தெரிவித்தேன் (தினமணி 16.5.1998).

இதன் மூலம் உலகில் சாந்தம் தழைக்க வேண்டும் ஹானி நீடிக்கக் கூடாது என்கிற பொதுவான மனிதப் பண்புக்கு எதிரியாக அடையாளம் காட்டப்பட்டேன்.

14) ரஜினியுடன் சேர்ந்து கட்சி ஆரம்பிக்கலாம் என்று விஜயகாந்துக்கு அட்வைஸ் செய்தேன்.

(குமுதம் 18.1.2001)

இதன் மூலம் ஒரு மதத் தலைவர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற கட்டுப்பாட்டை உடைத்தவன் ஆனேன்.

15) அயோத்தியில் கட்டடத்தை இடிப்பது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை என்று கூறினேன் தினமணி (27.11.2000). இதன்மூலம் வன்முறைக்கு வித்திட்டவன்; சட்டத்தை மதிக்க மறப்பவன் என்று விமர்சிக்கப்பட்டேன்.

16) தமிழில் குடமுழுக்கு கூடாது என்றேன்.(இந்தியா டுடே 2.10.2002).

இதன் மூலம் தமிழ் நீஷப்பாஷை என்று என் குருநாதர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்தில் உறுதியாக நான் இருந்ததால் தமிழர்களால் நான் தூற்றப்பட்டேன்.

17) பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்றேன் (தி பயனீர் 17.3.1997)

பெண்களால், எதிர்க்கப்பட்டேன். விதவைப் பெண்களைத் தரிசு நிலத்துக்கு ஒப்பிட்டுப் பேட்டி அளித்தேன். வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்றும் கூறினேன்.

மகளிர் உண்டு இல்லை என்று எதிர்ப்புச் சூட்டைக் கிளப்பினார்கள். தி.க. மகளிர் அணியினர் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டமே நடத்தினர் (9.3.1998).

18) கொலை செய்யப்பட்ட சங்கரராமன் என் வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றி விட்டான். எனது இன்னொரு பக்கமான ஆபாச நடவடிக்கைகளை எல்லாம் வண்டி வண்டியாக ஏற்றி விட்டான். (தனிப் பட்டியல் கீழே)

19) குற்றமற்றவன் என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படும்வரை மடத்தின் பதவியிலிருந்து நான் விலக வேண்டும் என்று துவாரகா பீடம் ஸ்வரூபானந்துகூட கூறினார். (தி இந்து 3.12.2004) நான் சட்டை செய்யவில்லையே! ஆனாலும் பார்த்தேளா, எனது 76ஆவது ஜெயந்தி விழா ஜாம்ஜாமென்று நடக்கிறது. பத்திரிகைகளில் எல்லாம் பக்கம் பக்கமாக விளம்பரங்கள்! பிராமணாள் ஒரு பக்கம் சூத்திராள் இன்னொரு பக்கம் ஜமாயிக்கிறார்கள். எவ்வளவு கேவலமாக எங்கள் நடத்தை இருந்தாலும் எங்களவாள் விட்டுக் கொடுக்க மாட்டவே மாட்டாள். இவ்வளவு நடந்திருக்கே... எங்க மனுஷாள் என்மீதோ, மடத்தின் மீதோ கரித்துக் கொட்டியதுண்டா?

உங்களவாள் மாதிரியா? உண்ட வீட்டுக்கே ரெண்டகம் என்பதெல்லாம் எங்களைப் பொறுத்தவரை இல்லாத ஒன்று. ஆயிரம் பெரியார் தான் வரட்டுமே உங்களில் விபீஷணன்களை நாங்கள் உற்பத்தி செய்து கொண்டே இருப்போம்!

அந்தக் கைத்தடிகள் அனுமார்கள் இனாமாக எங்களுக்குக் கிடைக்கும் போது எங்களுக்கு ஏது பயம்?

ஹி... ஹி....

-------------- விடுதலை (31.07.2010) மின்சாரம் எழுதியதுTamil 10 top sites [www.tamil10 .com ]