வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, August 12, 2010

நாயக்கர் சேர்த்ததில் பார்பனர்களுக்கு என்ன கவலை?


பெரியார் பெயர் முன்னாடி நாயக்கர் சேர்த்ததுக்கு  பெரியாரால் பாதிக்க பட்டவர்களுக்கு  என்ன கவலை?. ஒரு வேலை  அவர்களோட  கவலை தற்போது பார்ப்பனியத்தை வேரறுக்கும் ஆசிரியர் வீரமணிக்கு ஏதோ ஒரு வகையில் அவப்பேறு ஏற்படுத்த முடியதன்னு நப்பாசை. சோ கூட்டத்துக்கே அதானே வேலை. இதில் ஒன்றும் புதுமை இல்லை. அய்யா தந்தை பெரியவர் அவர்களை ராஜாஜி நாயக்கர் ன்னு கூப்பிட்டார். சில பேரு ராமசாமி ன்னு கூப்பிட்டார்கள். ஒரு சிலர் வந்து சாமியே இல்லன்கிருன்கே அப்புறம் ஏன் உங்க பேருல சாமின்னு வருதுன்னு கேட்டாங்க. உனக்கு ராமசாமின்னு கூப்பிட புடிக்கலன்ன மசுருன்னு கூப்பிடுன்னு  சொன்னவர் தான் பெரியார். இப்போவும் அததான் சொல்லுறோம் உங்களுக்கு நாயக்கர் வச்சது தப்ப இருந்த எப்படி வேணுனாலும் கூப்பிடுக்கோ அய்யா சொன்ன மாறி.
 
இதோ இந்த வருடத்தில் மே-2010 இந்தியன் சிவில் சர்வீஸ் பரிட்சையில் வினாத்தாளில் கேட்ட கேள்வியை பாருங்கள். அதில் அய்யாவின் பெயருடன் நாயக்கர் (E.V.R naicker periyar) சேர்த்து அய்யாவின் பெயரை அடையாளப் படுத்தி உள்ளனர். மிகவும் பெரியார் பற்றாளர் போல கேள்வி கேட்பவர்கள் என்ன சொல்ல போகிறார்கள். எனவே ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலை கொள்ள வேண்டாமே.
 
பெரியார் கடைசி வரை சாதியை எதிர்த்து போராடிய மாமனிதர் என்பதை எக்காலத்திலும் பொய்யாக்க முடியாது. பெரியார் ஒரு மானுட பற்றாளர். ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு தெரியும் எதனை எப்படி செய்ய வேண்டும் என்று. பார்பனிய புத்தியோடு கேள்வி கேட்பவர்களே, முதலில் உங்கள் வடகலை, தென்கலை பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டுங்கள். பெரியார் திரைப்படம் எல்லா மொழிகளிலும் வந்தால் பிரச்சனை என்ன என்பது பார்ப்பனியத்துக்கு நன்றாக தெரியும். அதனை பொறுத்துக்கொள்ள முடியாத பார்பனர்கள் இப்படி கூச்சல் போட்டு சமதானம் தேடிக்கொள்ள முயல்வது வழக்கம் தானே.


6 comments:

dondu(#11168674346665545885) said...

//உனக்கு ராமசாமின்னு கூப்பிட புடிக்கலன்ன மசுருன்னு கூப்பிடுன்னு சொன்னவர் தான் பெரியார்.//
ஆக, வீரமணி ஐயா பெரியார் மசுராக நினைத்த சாதிப் பெயரை அவருக்கே வைத்து விட்டார் அப்படித்தானே?

ஐயோ பாவம். பெரியாரை இதைவிட யாரால் அவமானப்படுத்த முடியும்?

//முதலில் உங்கள் வடகலை, தென்கலை பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டுங்கள்//
இது சம்பந்தமாக தமிழ் ஓவியா இட்ட இடுகைக்கு எதிர் மரியாதைதான் எனது பதிவு.

வீரமணி அவர்கள் நாயக்கர் பெயரை அனுமதித்ததன் காரணமே பெரியாரால் அடையாளம் காணப்பட்ட திராவிட நாட்டில் தமிழகத்துக்கு வெளியே அவரது சாதி எதிர்ப்பு செல்லுபடியாகவில்லை என்பதுததான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பரணீதரன் said...

/********** ஆக, வீரமணி ஐயா பெரியார் மசுராக நினைத்த சாதிப் பெயரை அவருக்கே வைத்து விட்டார் அப்படித்தானே?

ஐயோ பாவம். பெரியாரை இதைவிட யாரால் அவமானப்படுத்த முடியும்?************/

அய்யா ராகவன் அவர்களே, மசுரா நினைத்த பெயரை ஆசிரியர் அவர்கள் வைத்தாற? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள். இன்னும் படம் முழுமையாக முடிவடையாத நிலையில் உள்ளது. படம் வெளி வரும்போது மூக்கறுபட போவது இப்போது விமர்சனம் செய்பவர்கள்தான். அதுவரை நீங்க எப்படி வேணாலும் வைத்து கொள்ளலாம்.

பெரியாரை பாதுகாப்பது பற்றி யாரும் திராவிடர் கழகத்திருக்கும் அதன் தலைமைக்கும் சொல்லிதர தேவை இல்லை. ஆசிரியர் எப்பொழுது எதனை செய்யவேண்டும் என்று தெரியும். இது ஒன்றும் காஞ்சி சங்கரமடம் இல்லை. பெண்களை கையை பிடித்து இழுத்து ஆசைக்கு இணங்க வைத்து அவமானப்பட்டு நிக்க. உங்கள் ஆலோசனைகளை ஜெயந்திரரிடமும், விஜயேந்திரரிடம் சொல்லுன்கள். வேண்டுமானால் துணைக்கு தேவனாதனையும் அலைத்துகொளுங்கள். அவாள் தான் உங்கள் பார்ப்பன இனத்தையே அவமானப்படுத்தி பாதாளத்தில் கொண்டு போய் செர்த்துள்ளால். பாவாம் உங்கள் நிலைமை.

பரணீதரன் said...

/* இது சம்பந்தமாக தமிழ் ஓவியா இட்ட இடுகைக்கு எதிர் மரியாதைதான் எனது பதிவு.*/

சரி சரி அது முடிவுக்கு வராது. இந்த மாறி எதாவது பதிவே போட்டு மனசே தேத்திகங்க. உங்கள் பாசையில சொல்லணுமுன்னா, கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைபட்டனாம். அந்த கதைதான். சரிதானே.

பரணீதரன் said...

/* வீரமணி அவர்கள் நாயக்கர் பெயரை அனுமதித்ததன் காரணமே பெரியாரால் அடையாளம் காணப்பட்ட திராவிட நாட்டில் தமிழகத்துக்கு வெளியே அவரது சாதி எதிர்ப்பு செல்லுபடியாகவில்லை என்பதுததான்.*/

சாதி எதிர்ப்பு செல்லு படி ஆகலன்னே நீங்க ஏன் குதிக்கணும். மேலே சொன்ன பதில் தான் சங்கர மடத்தை எப்படி வெளியில் இனி நல்ல பேரு வாங்க வைப்பது என்று யோசிங்கள். அதுவது கைகொடுக்கும் உங்கள் இனத்தின் மீது விழுந்துள்ள அவமானம் மறைக்க முடியுமா?

Thamizhan said...

எனக்கு விளம்பரம்பே எனது எதிரிகள்தான் என்று பெரியார் சொன்னார்.அது இன்றும் உண்மை.

இறைகற்பனைஇலான் said...

அய்யன்மீர்,சாதிஒழிப்பு வீரரான தந்தை பெரியார் அவர்களைச் சாதிப்பெயர் வைத்து அழைக்க்கக்கூடாது என்று பகுத்தறிவாளர் கழகம் கோரி அதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு பெரியார் ஈ.வே.ரா. என்றே அழைக்க்ப்படும் என்று அறிவித்தப்பின்பும் வணிக நோக்கத்தில் கம்பெனி நினைப்பில் சாதிப்பெயரை வைத்திருப்பதை நியாயப்படுத்துவது முற்யல்ல.ஏன் தமிழில் வைக்காததை தெலுங்கில் வைத்தது தவறு என்று ஒப்புக்கொள்ள்வேண்டும்.இனி எடுத்தால் பிரச்சினை வரும் என்பதற்காக இப்படி சிந்திக்க வேண்டாம்.இனியாவது சுதாரித்துக்கொள்ள்வேண்டும்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]