வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, August 11, 2010

பொன்னியின் செல்வன் பள்ளிகளில் துணைப் பாடம் ஆகணுமாம்..தினமணி சொலுகிறது


தஞ்சை பெரிய கோவிலின் 1000 ஆண்டு நிறைவை ஒட்டி   கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை பள்ளிகளில் துணை பாட நூலக வைக்க வேண்டுமாம். இன்றைய (12.08.2010) தினமணி தலையங்கம் தீட்டி உள்ளது. தினமணி அடிக்கடி தன் ஆர்.எஸ்.எஸ் பாணியை நமக்கு நினைவு படுத்தும். அதுபோல இதுவும் ஒன்று.  இன்னும் கொஞ்சம் நாளில், ஜெயந்திரனின் 100 வது விழா வரும்போது மகா பெரியவாளின் "தெய்வத்தின் குரல்" நூலினையும் துணைப் பாடமாக வைக்க சொல்லி அரசுக்கு பரிந்துரை செய்து  தலையங்கம் எழுதினாலும் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு மாணவர்களுக்கு அறிவியலை வளர்க்க வேண்டும் பகுத்தறிவை புகட்ட வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் சொல்லுகிறது.  இதெல்லாம் தினமணிக்கு தெரியாதோ? தெரிந்தாலும் அவாளின் பூணூல் பாசம் இப்படி தலையங்கம் எழுத சொல்லுகிறது. அந்த தலையங்கம் நடுவே பாருங்க, 1000 ஆண்டு நிறைவு விழா  தஞ்சை பெரிய கோவில் என்றதும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லையாம். அதே தாஜ்மகால் என்றால் அப்படி இருக்குமா? என்று ஒரு கேள்வி. ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர் தான் இப்படி சிந்திக்க முடியும். 
 
பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி அப்படியே பக்கத்துக்கு பக்கம் பகுத்தறிவை  உதிர்த்து வைத்திருக்கிறார். அதனை மாணவர்களுக்கு புகட்ட வேண்டும். என்ன கொடுமை. இதெல்லாம் கேட்பார் யாரும் இல்லை என்ற நினைப்போ?  இதெல்லாம் ஒரு பொது பத்திரிகை என்று தமிழன் நம்பி ஏமாற்றம் அடைகிறானே? அவனை என்ன சொல்ல. தமிழா இன உணர்வு கொள்.


3 comments:

Twilight Sense said...

துணை பாடம் தவறில்லை என்று எனக்கு தோன்றுகிறது நண்பரே.
பொன்னியின் செல்வனில் கல்கி மத போதனை செய்யவில்லை.

பரணீதரன் said...

/******** பொன்னியின் செல்வனில் கல்கி மத போதனை செய்யவில்லை. *********/

புது வெள்ளம் - அத்தியாயம் 47
"இனிமேல் அப்படியெல்லாம் பேச மாட்டான். நான் புத்தி சொல்லித் திருத்தி விடுகிறேன். அவனிடம் நல்ல வார்த்தையாகச் சொன்னால் கேட்கிறான்!" என்றாள்.
"நல்ல வார்த்தையும் ஆயிற்று; பொல்லாத வார்த்தையும் ஆயிற்று. அவன் இராமேசுவரத்துக்கு உடனே போகட்டும். இராமர், பூஜை செய்து பாவத்தைப் போக்கிக் கொண்ட சிவலிங்கத்தை இவனும் பூஜை செய்து விட்டு வரட்டும். அதுதான் இவனுக்குப் பிராயச்சித்தம். அப்படிச் செய்யும் வரையில் நான் இவன் முகத்திலேயே விழிக்க மாட்டேன்!" என்றார்.

மேற்கண்டவாறு கல்கி எழுதியுள்ளார்..இது மதம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையா தோழரே ?

அ.முத்து பிரகாஷ் said...

காலை வணக்கங்கள் தோழர் !
சுடச் சுட தினமணிக்கு எதிர்வினையாற்றிய தோழருக்கு நன்றிகள்!எனது பள்ளி நாட்களில் நானும் தினமணியை பொது பத்திரிகை என்று தான் நம்பித் தொலைத்தேன். விடுதலை எனது மயக்கத்தை போக்கியது.உங்களுடைய இந்த பதிவும் பலரின் மயக்கம் போக்க பேருதவி புரியும்.நன்றி தோழர் !

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]