வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, February 26, 2011

னமணி வைத்தியநாதய்யர்களோ, சோ இராமசாமிகளோ ஆவணி அவிட்டம் கொண் டாடுகிறார்களா, இல்லையா?

தினமணி ஏடு ஜாதி அரசிய லைப்பற்றி எழுதுகிறது. பல கட்சி களுக்கும் இப்பொழுதுதான் தங் களது சுயமரியாதை நினைவுக்கு வரும். ஜாதி பலமும், வாக்கு பலமும் வாக்கு வங்கிப் புள்ளி விவரங்களும் பயன்படும் என்றெல்லாம் தினமணி ஆவர்த்தனம் பாடுகிறது (7.2.2011). எந்தெந்தத் தொகுதிகளில் வன்னியர் கள் ஓட்டு இருக்கிறது என்றெல்லாம் முடி பிளந்து ஆய்வுக் கட்டுரை எழுதுகிறது.

ஜாதியைப் பற்றி எழுதட்டும். சுயமரியாதைப் பற்றியும் தாராளமாக எழுதித் தள்ளட்டும். காகிதம் இருக் கிறது _ எழுதுகோல் இருக்கிறது _ கணினி இருக்கிறது _ அச்சு இயந் திரம் இருக்கிறது _ அடித்துத் தள் ளட்டும்.

இதைப்பற்றியெல்லாம் எழுதுவதற் கான தகுதி தினமணிக்கு உண்டா என்ற ஒரு கேள்வி எழுகிறதே.

ஜாதி வேண்டாம் அது கூடாது _  என்பது தினமணியின் கருத்தா _ தினமணி வக்கீலாக இருக்கும் -_ வைத்தியநாதய்யர்கள் மாய்ந்து மாய்ந்து தூக்கிப் பிடிக்கும் இந்து மதத்துக்கோ, சங்கர மடத்துக்கோ ஜாதி பற்றிய கருத்து என்ன என் பதை முதலாவதாகத் தெரிவித்து விட்டல்லவா கோதாவில் குதிக்க வேண்டும்?

தினமணி வைத்தியநாதய்யர்களோ, சோ இராமசாமிகளோ,  கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை குருமூர்த்திகளோ, சு.சாமி களோ ஆவணி அவிட்டம் கொண் டாடுகிறார்களா, இல்லையா? பூணூல் அணிந்து கொண்டு இருக் கிறார்களா, இல்லையா? என்ற கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு, ஜாதியைப்பற்றி என்ன வேண்டு மானாலும் எழுதித் தொலையட்டும் -_ நமக்கு ஒன்றும் அட்டியில்லை.

ஜாதியையும் தாண்டி தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் சங்கராச்சாரியாரை லோகக் குரு என்று துதிபாடுவதற்கு வெட்கப் படாதவர்கள் ஜாதி வாக்கு வங்கி பற்றி எழுதுவதற்கு என்ன யோக் கியதை இருக்கிறது? ஒரு பெரியார் தோன்றாமல் இருந்திருந்தால், திராவிடர் கழகம் என்ற ஒன்று உருவெடுக்காமல் இருந்திருந்தால், விடுதலை போன்ற ஏடுகள் விழிப் புணர்வை உண்டாக்காமல் இருந் திருந்தால் இந்தக் கேள்விகள்கூட பிராமணோத்தமர்களை நோக்கி எழுந்திருக்க வாய்ப்பில்லை.

பூணூல் போட்ட பார்ப்பனர் களைப் பார்த்து கும்பிடுகிறேன் சாமி, தோப்புக்கரணம் இதோ, சாமி! என்று கூப்பாடு போட்ட கால மும் துண்டை எடுத்துச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு சேவகம் செய்த காலமும் மலையேறி விட்டது என்று தினமணிகளுக்குத் தெரியாதா?

ஜாதி வாக்கு வங்கி என்றெல்லாம் குறைகூறும் தினமணி, ஆச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் 1967 தேர்தலில் பூணூலைப் பிடித்துக் கொண்டு உதய சூரியனுக்கு ஓட்டளியுங்கள் என்று பார்ப்பனர்களுக்குக் கட்டளையிட் டாரே - _ அதற்கு என்ன பெயராம்? அதற்குப் பெயர் ஜாதி அரசியல் இல்லையா?

ஒவ்வொரு தேர்தலிலும் பார்ப்பனர் சங்கம் மாநாடு கூட்டி அல்லது சங்கக் கூட்டம் நடத்தி பிராமணர் கள் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு என்றும், பி.ஜே.பி.க்கு என்றும் தீர்மானம் போடுகிறார்களே _ அப்பொழுது இந்த உலக்கைக் கொழுந்துகள் எங்கே தீவட்டிகளைத் தூக்கிக் கொண்டு திரிந்தன?

அக்ரகாரவாசிகளே, இது ஆகாது, ஆகாது; கூடாது, கூடாது. இதுபோல் தீர்மானம் போட்டு உங்களைத் தனியே பிரித்துக் காட்டிக் கொள்ளா தீர்கள். அது ஆபத்தில்  போய் முடி யும்! என்று மண்டையில் அடித்தது போல தினமணி தலையங்கம் தீட்டி யிருந்தால் அல்லது ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருந்தால் ஜாதி வாக்கு வங்கி பற்றி எழுதிட அதற்கு அருகதை உண்டு.

காலமெல்லாம் பார்ப்பனர்களின் தாசானு தாசராகவும், திராவிட இயக்க வீராதி வீரருமாக விளங்கிய தொங்கு மீசைக்காரர் ம.பொ.சிவ ஞான கிராமணியார் 1971-இல் மயி லாப்பூர் தொகுதி சட்டமன்ற தேர் தலில் போட்டியிட்டபோது கற்ப காம்பாள் கோயிலில் அர்ச்சனை செய்யுமாறு அர்ச்சகரை வேண்டிக் கொண்டபோது, அந்த அர்ச்சகப் பார்ப்பான் அவரை எதிர்த்து நின்ற வேட்பாளரான டி.என். அனந்தநாயகி அம்மையாருக்காக மாற்றி அர்ச் சனை செய்தார் என்று ம.பொ.சி. புலம்பினாரே! ஆரிய தம்பிரானுக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை என்ன? கோயில் அர்ச்சகர்ப் பார்ப்பானுக்குக்கூட இனவுணர்வு _ ஜாதி உணர்வு இருக்கும்போது மற்றவர்களுக்கு இருக்கக் கூடாதா?

வெகு தூரம் போக வேண்டாம் _ நடந்து முடிந்த மக்களவைத் தேர் தலில் திருச்சித் தொகுதியில் என்ன நடந்தது?

திருச்சி மக்களவைத் தொகுதியில் திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும் பூர், கந்தர்வக்கோட்டை, புதுக் கோட்டை, சிறீரங்கம் ஆகியவை அடங்கியவை.

சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக காங்கிரசும், அ.இ.அ.தி.மு.க. வும் பெற்ற வாக்குகள் விவரம்:

திருச்சி கிழக்கு காங்கிரஸ் - _ 51340 அ.தி.மு.க.,  -_ 48,954
திருச்சி மேற்கு காங்கிரஸ்  _ 50,890
அ.தி.மு.க., _ 50,698
திருவெறும்பூர்
காங்கிரஸ் _ 56,312
அ.தி.மு.க., _ 49,657
கந்தர்வக்கோட்டை
காங்கிரஸ் _ 41977
அ.தி.மு.க., _ 41236
புதுக்கோட்டை
காங்கிரஸ் _ 42,228
அ.தி.மு.க., _ 37,095
சிறீரங்கம்
காங்கிரஸ் --_  50,767
அ.தி.மு.க., -_ 70,949
இந்தப் புள்ளி விவரத்தைக் கவனமாகப் பார்க்க வேண்டும். ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பா ளர் சாருபாலா தொண்டமான் அதிமுக வேட்பாளர் திரு ப. குமாரை விட அதிக வாக்குகள் பெற்றுள் ளார்.

சிறீரங்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்குக் கிடைத்த அதிக வாக்குகள் - _ மேற்கண்ட அய்ந்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வாக்குகளையும் கீழே தள்ளி, அதற்குமேலும் 4335 வாக்குகளை அதிகமாக அளித்து வெற்றி பெறச் செய்ததே -_ இதற்குப் பெயர் என்னவாம்? எல்லோருக்கும் தெரிந்த செய்திதானே? அக்கிரகார வாசிகள் அதிகம் நிறைந்த தொகுதி அல்லவா? சிறீரங்கம் தொகுதி உணர்த்தும் பாடம் என்ன?

ஒன்று திரண்டு ஒரே அடியாக வாக்குகளை அதிமுகவுக்கு அள்ளிப் போட்டுள்ளதில் ஜாதி உணர்வு கிடையவே கிடையாது என்று தினமணி சத்தியம் செய்யப் போகி றதா? துண்டை விரித்துத் தாண்டப் போகிறதா?

இதைப்பற்றி அப்பொழுது தினமணி எழுதியதுண்டா?

தமிழர்களே, தமிழர்களே!

பார்ப்பனர்களைப் பார்த்தாவது இனவுணர்வு கொள்ளுங்கள் என்ப துதான் கருஞ்சட்டை தொண்டர் களின் கனிவான வேண்டுகோள்.

நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைகூட ஆரியர் _ திராவிடர் போராட்டமாகத்தான் அமையப் போகிறது.

தினமணி, துக்ளக் கல்கி வகையறாக்கள் அதற்கான யாகக் குண்டத்தை வளர்க்க குச்சிகளைப் பொறுக்க ஆரம்பித்துவிட்டனர்; தூபக்கால் தயாராகி விட்டது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

கலைஞரைப் பார்த்து ஜென்மப் பகைவர் என்று சொன்ன ஆரியகுலத் திலகம் எதிர் அணியில். மீண்டும் ஆரியம் அரியணை ஏறலாமா? அதனை அனுமதிக்க லாமா?

மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்தாரே, நினைவிருக் கிறதா?

ராமன் கோயிலை அயோத்தியில் கட்டாமல் வேறு எங்கு போய் கட்ட முடியும் என்று வினா தொடுத்தாரே அந்த அம்மையார் _ அதனை மறுந்துவிடலாமா?

ஆரிய கலாச்சாரங்களான யாகம், யோகம் இவற்றைப் புதுப்பிக்கும் போக்குக்குச் சிகப்புக் கம்பளம் விரிக்கலாமா?

ஆமாம், நான் பாப்பாத்தி தான்! என்று சட்டப் பேரவையிலே ஆடித் தீர்த்தாரே ஆரிய குல மங்கை _  நெஞ்சில் நிறுத்துங்கள்.

அன்று புத்த மார்க்கத்தை ஊடுருவி ஆரியம் அழித்தது _ இன்று திராவிட இயக்கத்திலே ஊடுருவி திராவிடத் தத்துவத்தைக் கபளீகரம் செய்கிறது. மீண்டும் மனு தர்மமா?

தந்தை பெரியார் உழைத்ததும், அறிஞர் அண்ணா பிரச்சாரம் செய்ததும், தன்மான உணர்வுத் தீயை வளர்த்ததும் எல்லாம் பாழுக்குப் போய் விடலாமா?

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

இந்தத் தேர்தலில் திரண்டெழுகிற தமிழர்களின் இனவுணர்வு எரிமலை யால் காலா காலத்திற்கும் காகப்பட் டர் பரம்பரை எழுந்திருக்கக் கூடாது.

உணர்வு பெறுவீர்! உறுதி கொள்வீர்!

ஓங்கட்டும் இனமானம்!
ஒழியட்டும் ஆரியம்!

------------ விடுதலை மலர்,26-02-2011


Friday, February 25, 2011

தினமணி என்னும் ஆர்.எஸ்.எஸ். ஏடு - பார்ப்பனர் சங்க ஏடு...

வாசகர் அரங்கம் என்ற பெயரில் தினமணி என்னும் ஆர்.எஸ்.எஸ். ஏடு - பார்ப்பனர் சங்க ஏடு, திராவிட இயக்கங்களை, தலைவர்களைக் கொச்சைப்படுத்தி எழுதுவோர்க்கு விஸ்தீரமான இடத்தைக் கொடுத்துக் குதூகலிக்கிறது.

தமிழ்நாட்டில் அரசியல் நாகரிகம் மட்டும் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப் பதுபற்றி... என்ற கடிதத்துக்கு வாசகர்களிட மிருந்து வந்த கடிதங்களில் சில என்று கூறி அக்கடிதங்களை வெளியிட்டுள்ளது (தினமணி 23.2.2011)

அண்ணா, கலைஞர் போன்றவர்கள்தான் எதிர்க் கட்சிக்காரர்களைக் கேவலமாக எழுதினர், கொச்சைப்படுத்தி எழுதினர் என்று ஆசிரியரின் கடிதங்களோ, ஆசிரியருக்குக் கடிதங்களோ இடம் பெற்றுள்ளன.

இப்படியெல்லாம் எழுதுவதற்கோ அல்லது மற்றவர்கள் எழுதுவதற்கு ஏட்டில் இடம் கொடுத்து எழுதச் செய்வதற்கோ பார்ப்பனர்களுக்கு அடிப் படைத் தகுதி கிடையாது.

இன்றுவரை பார்ப்பனரல்லாத மக்களைச் சூத்திரர்கள் என்று கூறும் சாத்திரங்களை, சுருதி களை, ஸ்மிருதிகளை, கீதை போன்ற நூல்களைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு கூட்டம் அரசியல் நாகரி கத்தைப் பற்றிக் கூற கிஞ்சிற்றும் அருகதை உடை யதுதானா என்பது நமது முதற் கேள்வியாகும்.

சூத்திரன் என்றால் பொருள் என்னவாம்? பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்றுதானே பொருள்? மறுக்க முடியுமா தினமணிகள்? திராவிடர்களைக் கரடிகள் என்றும், குரங்குகள் என்றும் பார்ப்பனர்களின் இதிகாசங்கள் கேவலப் படுத்தவில்லையா?

அப்படிக் கேவலப்படுத்தும் இராமாயணம் போன்ற நூல்களைப் பக்திப் பரவசம் சொட்டச் சொட்ட தினமணிகள் பரப்புரை செய்வ தில்லையா?

நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே என்று சொல்லும் முக்கால் நிர்வாணப் பேர்வழிதானே தினமணி பார்ப்பனர் வட்டாரத்தின் ஜெகத் குரு? இவர்களின் மூதறிஞர் ராஜாஜியின் யோக்கியதை தான் என்ன?

மதுரை டி.வி.எஸ். கட்டடத் திறப்பு விழாவில் பேசிய ராஜாஜி சூத்திரன் செய்ய வேண்டிய மோட்டார்த் தொழிலை பிராமணராகிய டி.வி.எஸ். அய்யங்கார் செய்கிறார் என்று பேசவில்லையா? அவர் பேச்சைத் தொடர்ந்து பேசிய காமராசர் அவர்கள் ஆச்சாரியாரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கவில்லையா?

(ஆதாரம்: முருகு தனுஷ்கோடி எழுதிய காமராசர் ஒரு சரித்திரம்)

நாகர்கோயில் மக்களவை  இடைத் தேர்தலில் போட்டியிட்ட காமராசர்பற்றி ராஜாஜியின் வியாக் கியானம் என்ன?

அகில இந்திய காங்கிரஸ் ஆபீசில் ஒரு குமாஸ்தா வேலைக்குத்தான் காமராஜர் லாயக் கென்று சொன்னாரே - அதுதான் தரமிக்க விமர்சனமா?

ஒரு நாட்டின் பிரதமரையே  உருவாக்கக் கூடிய ஆற்றல் படைத்த  ஒரு பச்சைத் தமிழரைக் கேவலப் படுத்துவதுதான் அரசியல் நாகரிகமோ!

சென்னைக் கடற்கரையில் உரையாற்றிய ராஜாஜி இந்தியாவிலேயே ஒரு கருப்புக் காக்கை இங்குதான் இருக்கிறது; அதனைக் கல்லால் அடித் துக் கொல்ல வேண்டும் என்று காமராஜரை ஜாடை காட்டிப் பேசியதன் கண்ணியம் என்னவாம்?

இவர்களின் ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த சுதர்ஷன், உமாபாரதியின் குடிப் பிறப்புப் பற்றிக் கொச்சைப்படுத்திப் பேசியதில்லையா? அதை எதிர்த்து, உமாபாரதியின் சகோதரர் கண்டனக் கணைகளை  வீசவில்லையா?

காமராசர் மறைந்த நிலையில் அவர் உடலை அடக்கம் செய்யும் இடத்தினை இரவோடு இரவாகத் தானே நேரில் சென்று ஆய்வு செய்து, ஏற்பாடு செய்து அரசியலில் தமது எதிர்ப்புறத்தில் இருந்த கட்சியின் தலைவரான காமராசருக்கு மணி மண்டபம் கட்டினாரே கலைஞர் - அதில் கலைஞர் அவர்களின் கண்ணியத்துடன் கூடிய கடமை உணர்வு பளிச்சிடவில்லையா?

குல்லுகப்பட்டர் என்று திராவிடர் இயக்கத் தவரால் வருணிக்கப்பட்ட இன எதிரியான ராஜாஜிக்கேகூட - ராஜாஜி விரும்பும் ராமன் மணி மகுடத்துடன்கூடிய மணிமண்டபம் எழுப்பியவர்தான் மானமிகு கலைஞர் அவர்கள்.

இதுபோல எத்தனை எத்தனையோ எடுத்துக் காட்டுகளைக் குவிக்க முடியும். வாய்ப் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்ற போக்கில், அடக்க முடியாத பார்ப்பன இனவெறி உணர்வோடு திராவிட இயக்கத்தவர்களைக் கொச்சைப்படுத் தும், இழிவுபடுத்தும் வேலையில் தினமணி எழுதுமேயானால், அவாளின் சங்கராச்சாரியாரின் திருவிளையாடலிலிருந்து பலவற்றையும் அம்பலப் படுத்த நேரிடும் என்று எச்சரிக்க விரும்புகிறோம்.

----- விடுதலை தலையங்கம், 25-02-2011


Wednesday, February 23, 2011

அத்வானிகளும், மோடிகளும், ஜெயேந்திரர்களும் நடமாடுவது எப்படி?


கொலை செய்தல், கொலை செய்யத் தூண்டுதல், கலவரம் செய்தல் (இபிகோ 147, 153 (ஏ), 153(பி), 295 (ஏ), 505, 102 (பி))

இந்தப் பிரிவுகளின் கீழ் குற்றஞ் சாற்றப்பட்டவர்களை நினைவில் இருக்கிறதா?

சாதாரணமானவர்களா அவர்கள்? இந்தியாவின் உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர் உள்ளிட்ட பதவி களை வகித்தவர்கள் ஆயிற்றே!

மத்திய தணிக்கைத் துறை அறிக்கை கொடுத்துவிட்டது, அறிக்கை கொடுத்துவிட்டது என்று இன்று அலறுகிறார்களே, நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அறிவிக்காவிட்டால் நாடாளுமன்றத்தையே நடத்தவிட மாட்டோம் என்று முஷ்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பி இருக்கிறார் களே _ அவர்கள் ஒன்றை சாமர்த்திய மாக மறைக்கப் பார்க்கிறார்கள்.

லிபரான் ஆணையத்தின் அறிக் கையை ஜமக்காளம் போட்டு மறைக்கப் பார்க்கிறார்கள்.

68 பேர்கள் குற்றவாளிகள் என்று லிபரான் ஆணையம் பட்டியல் போட்டுக் கொடுத்து விட்டது.

மிகப் பெரிய மனிதராகத் தூக்கிக் காட்டப்படும் அடல் பிஹாரி வாஜ் பேயும் அந்தப் பட்டியலில் அடங் குவார்.
எப்படி வாஜ்பேயியை இதில் சேர்க்கலாம் என்று காட்டுக் கூச்சல் போடுகிறார்கள்.

சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு வாஜ்பேயியை எப்படி குற்ற வாளி என்று கூறலாம் என்று கேட்பது எந்த ஊர் நியாயம் என்றே விளங்க வில்லை.

19 ஆண்டுகளாக குற்றவாளிகள் ராஜ நடைபோட்டுத் திரிகிறார்கள். அரசு நியமித்த ஆணையமும் அவர்கள் குற்றப் புரிந்தவர்கள்தாம் என்று அறுதியிட்டுக் கூறிவிட்டது.

ஆ. இராசாமீது வழக்கைப் பதிவு செய்து வேகவேகமாக  வழக்கை நடத் தும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, உலக நாடுகள் முன் இந்தியாவை தலைகுனிய வைத்த பாபர் மசூதியை இடித்தவர்கள் மீதான வழக்கை வேகமாக நடத்த முன் வராதது ஏன்?

19 வருடங்களா ஒரு முக்கியமான வழக்குக்குத் தேவைப்படும்?

நீதிமன்றங்கள்தான் ஆகட்டும்; மற்ற மற்ற வழக்குகளை விரைவாக நடத்திட வேண்டும் என்று சாட்டையை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்களே. இதில் மட்டும் ஏன் பாம்பும் நோகாமல் கொம்பும் நோகாமல்   மந்திரித்துக் கொண்டு இருக்கிறார்களாம்?

கொலை குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்ட காஞ்சிபுரம் சங்கராச்சாரி யார்கள் கொஞ்சம்கூட வெட்கமின்றி ஆனை நடைபோட்டுத் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். சாட்சியங்கள் எல்லாம் பிறழ்சாட்சியங்களாக ஆகிக் கொண்டு இருக்கின்றன.

நீதிமன்றங்களுக்கு வராமல் வெளியில் ஆட்டம் போட்டுத் திரிகிறார்கள். இந்த வழக்கு விசாரணையை வேகப்படுத்தச் சொல்லி எந்த நீதிமன்றமும் சாட் டையை எடுத்துக் கொண்டு புறப்பட வில்லையே, ஏன்?

காலம் கடத்த கடத்த அத்தனை சாட்சிகளும் அந்தர் பல்டி அடிக்கும் நிலைதான்! அதுவரை காவல்துறையும், நீதித்துறையும் காவி வேட்டி சங்கராச் சாரியார்களை விட்டு வைக்கும் என்றே நம்பலாம்.

சங்கரராமன் கொலை மட்டும் தானா? ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டது, திருக்கோட்டியூர் மாதவன் தாக்கப்பட்டது, காஞ்சிபுரம் சங்கராச்சாரியாருக்குச் சொந்தமான பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவியின் மர்ம மரணம், 1994-இல் சங்கர மடத்தில் வேதம் பயின்று வந்த 15 வயது மாணவன் நாக சுப்பிரமணியம் பிணமாகக் குளத்தில் மிதந்தது, ஜெயேந்திரர் சென்றால் தங்கும் இடமான சூர்யலட்சுமி காட்டன் மில் ஓய்வு விடுதியில் ஜெயேந்திரர் தங்கி இருந்தபோது (18.3.1998) அந்த மில்லில் பணியாற்றிய நிர்மலம்மா (வயது 18) தம்மம்மா (வயது 16) ஆகியோர் கொலை - _என்று ஒரு பட்டியலே உண்டு. சங்கர மடம் சம்பந்தப்பட்டது என்பதால் வழக்கையும் தண்ணீரில் மூழ்கடித்து விடக் கூடாது.

பாபர் மசூதி காவிக் கும்பலால் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பையில் பால்தாக்கரே தலைமையில் வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப் பட்டது. நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தலை மையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சிவசேனா தலைவர் பால்தாக்கரேமீது பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியது.

அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் வற் புறுத்தியிருந்தது. அவர்மீது ஒரு துரும் பையாவது அரசு தூக்கி எறிந்ததுண்டா? மாநிலத்தை ஆண்டு வந்த சிவசேனா - பா.ஜ.க. அரசு 1371 வழக்குகளை  ஊற்றி மூடியது. 112 வழக்குகளை மட்டுமே சிறப்புக் குழு மறு ஆய்வு செய்தது என் றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நிலுவையில் இருக்கும் வழக்குகளை யாவது நாணயமாக நடத்தியிருக்க வேண்டாமா? சிவசேனா தலைவர் என் றால் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா?

ஊருக்கு இளைத்தவர் ஆ. இராசா மட்டும்தானா?

2002-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் முசுலிம் மக்கள் மீது நரேந்திர மோடி தலைமையில் மாநில அரசு நரவேட்டையாடியதே -_ உச்சநீதிமன்றமே முதல் அமைச்சர் மோடியை நீரோ மன்னன் என்று சாடி யதே -_ குஜராத் கலவரம் குறித்த விசா ரணை, அவருக்கு எதிராக இருக்கிறதே -_ அவர் எப்படி முதல் அமைச்சராகத் தொடருகிறார்?

தெகல்கா ஏடு கொலைகாரர்களைக் கூட, பேட்டியளித்து வெளிச்சத்தில் வாரி இறைத்ததே - _ ஏன் இதுவரை நடவடிக்கை இல்லை?

டில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார், புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்த திராய் போன்றவர்கள் மோடியின்மீதும், நிருவாகத்தினர்மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பகிரங்கமாக சொன்னார்களே, எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மத்தியஅரசின் செயல்பாடுதான் என்ன?

ஆ.கே. இராகவன் தலைமையிலான மோடி மீதான சிறப்பு விசாரணைக்குழு மோடியின் முகமூடியைக் கிழிந்து எறிந்து விட்டது. பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்துவிட்டன. சோ ஒரு வரிகூட இதைப்பற்றி எழுதாதது _ ஏன்?

அரைகுறையாக விசாரணை அறிக்கையிலிருந்து கிடைத்திட்ட தகவல்களை வைத்துக் கொண்டு அத்வானி என்ன சொன்னார் தெரியுமா? வெகு நீண்ட காலத்திற்குப் பிறகு நான் படித்த மிகவும் மகிழ்ச் சியான செய்தி என்று ஆனந்தமய மாகிக் குதித்தாரே!

ஆனால் உண்மையோ வேறு வித மாக இருக்கிறது. சிறப்பு விசாரணைக் குழுவில் இடம் பெற்ற மோடிக்கு எதிரான தகவல்களை பெரும்பாலும் ஊடகங்கள் வெளியிடாத நிலையில் தெகல்கா இதழ் மட்டும் உண்மையான தகவல்களை வாரிக் கொண்டு வந்து கொட்டிவிட்டது.

சிறப்புப் புலனாய்வுக் குழு உச்சநீதி மன்றத்தின் உத்தரவுப்படி அமைக்கப் பட்டது. அது 600 பக்கங்களையும் கொண்ட ஓர் அறிக்கையை உச்சநீதி மன்றத்தில் அளித்துள்ளது.

கலவர காலத்தில் காவல்துறையின் கம்பியில்லாத் தந்தி போக்குவரத்துப் பற்றிய ஆவணங்களை மோடி அரசு முற்றிலுமாக அழித்துவிட்டது. கலவரங் களின் போது சட்டம் ஒழுங்குபற்றி நடத்தப்பட்ட முக்கியமான கூட்டங்கள் பற்றி எந்த ஓர் ஆவணமும், குறிப்பு களும் கிடையாது (அறிக்கை பக்கம் 13)

ஏன் ஆவணங்களை அழித்தார்கள்? அந்த ஆவணங்கள் கிடைக்கப் பெற்றால் மோடி அரசு எப்படி எப்படி யெல்லாம் முசுலிம்களை வேட்டை யாடியது, அவர்கள் தொழில் நிறுவனங் களையெல்லாம் தீயிட்டு எரித்தனர் என்ற விவரங்கள் தெரிந்து விடுமே.

கலவரங்களுக்கு ஒத்துழைத்த அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுகளும், சட்டப்படி, நடுநிலையோடு நடந்து கொண்ட கண்ணியமான அதிகாரி களுக்கு முக்கியத்துவம் அற்ற துறை களும், தண்டனைகளும் கொடுக்கப் பட்டன என்றால் மோடி அரசின் மோசகரமான, மூர்க்கத்தமான நர வேட்டை எப்படி நடந்திருக்கும் என்று எளிதில் தெரிந்து கொள்ள முடியுமே!

கலவரங்களின்போது காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் களுக்கு இடம் ஏன்? அசோக்பட் மற் றும் ஜடஜா ஆகிய இரு அமைச்சர் கள்தான் அவர்கள்.

எந்தவித குறிப்பிட்ட செயல் திட் டமும் இன்றியே இந்த இரு அமைச்சர் களும் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைகளில் இருக்கச் செய்யப்பட்டனர். காவல்துறையின் பணியில் குறுக்கிட்டு,  அலுவலகங்களுக்கு தவறான முடிவு களை, கட்டளைகளை அளிக்கவே அமைச்சர்கள் காவல்துறைக் கட்டுப் பாட்டு அறைகளில் இருக்கச் செய்யப் பட்டனர். (சிறப்புப் புலனாய்வுக் குழு வின் தலைவரின் குறிப்பு -_ பக்கம் 12)

இதற்குப்பின்னாலும் குஜராத்தில் நரேந்திரமோடி ஆட்சி தொடருவ தற்குக் கிஞ்சிற்றும் நியாயப்படியான - _ சட்டப்படியான தகுதி இருக்கிறதா?

இந்த ஆட்சி ஏன் கலைக்கப்பட வில்லை? இந்த முதல்வர்மீது ஏன் சட்டப்படியான நடவடிக்கை இல்லை?

இராசாதான் இளக்காரமா? நாடு எங்கே சென்று கொண்டு இருக்கிறது? மனுதர்மம் நடக்கிறதா என்ற செங்குத்துக் கேள்வி மக்கள் மன்றத்தில் கிளர்ந்து எழ வேண்டாமா? சிந்திப்பீர்! சிந்திப்பீர்!!

------ மின்சாரம், விடுதலை மலர் (19-02-2011)


Tuesday, February 22, 2011

திராவிட நாகரிகமும் ஆரிய நாகரிகமும்

திராவிட நாகரிகத்தின் வரலாறு:

ஆரிய நாகரிகத்தின் தோற்றத்தை பல வரலாற்று ஆசிரியர்கள் வரை-யறுத்துக் கூறியுள்ளனர்.  ஆரிய நாகரி-கத்தின் வரலாற்றுத் தடயங்கள் மிட்-டனி நாட்டில் கிடைத்துள்ளன.  அதன்-படி ஆரியர்கள் மிட்டனி நாட்டில் இருந்து தங்கள் மேய்ச்சல் (Steppe) வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினர் என்று அறியலாம் அதன் பின் பார-சீகத்தில் தங்கி அவெஸ்தன் மொழியி-னுடன் உறவு கொண்டு அவெஸ்தன் வேத புராணத்தின் கருத்துகளைச் சுமந்து-கொண்டு ஆரியர்கள் இந்தியா-வில் கி.மு. 1500 இல் நுழைந்தபோது ரிக்-வேதமாக பரிமளித்தது. 

இந்தரிக் வேதம் நூல் வடிவாக மாற்றம் பெற்ற காலத்தைத்தான் சமஸ்கிருதத்தின் முன்னோடி மொழியான வேத மொழியின் தோற்றமாக அறிஞர்கள் கூறுவது கி.மு. 1200 முதல் 1000 வரை.  இந்தத் தகவலை மேலை நாட்டு மொழி அறிஞர் T.Burrow தன் நூலில் (“The sanskrit Language”) கூறுகிறார்.  எனவே வேதகால நாகரிகத்தை நிலைபெற்ற ஆரியர் கலாச்சாரமாக கருதலாம்.


ஆனால் இந்திய நாகரிகம் மிகவும் தொன்மையானது.  இந்திய நாகரிகத்-தின் வரலாற்றுத் தடயங்கள் சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியில் வெளிப்-பட்டன.  சிந்து சமவெளி நாகரிகத்தின் கால அளவு கி.மு. 3000 முதல் 1700 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சிந்து சமவெளி நாகரிக சின்னங்களில் கிடைத்துள்ளவற்றில் முக்கியமானவை _ பெண் தெய்வத்தின் சிலை, பசுபதியின் சிலை, காளையின் வடிவம் எழுத்து வடிவங்கள், எடைக்கற்கள் ஆகியன. இத்தகைய நாகரிகத்துக்கு சொந்தக்-காரர்கள் இந்தியர்கள் சிந்து சமவெளி-நாகரிகத்தை ஆரிய நாகரிகமாக சித்-திரிக்கும் முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டன.

சிந்து சமவெளி நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் இந்தியாவின் பூர்விக குடிமக்கள் ஆவார்கள்.  அத்தகைய பூர்-விக குடிமக்களின் மிகவும் தொன்மை-யானவர்கள் தமிழர்களே ஆவர்.  ஏனென்றால் அப்போது இந்தோ ஆரிய மொழிகள், மற்றும் திராவிட மொழிகள் எதுவும் தோன்றவில்லை. 

எனவே சிந்துசமவெளி நாகரிகத்துக்கு உரிமை கொண்டாடும் நிலையில் இருப்பவர்கள் இந்திய நிலப்பரப்பில் தமிழர்கள் மட்டுமே உள்ளனர்.  இதை உறுதிப்படுத்தும் வகையில் பல ஆதாரங்கள் சொல்லலாம்.  அவற்றில் சிலவற்றை சொல்லுகின்றேன்.

கடல் கொண்ட தென்னாடு எனும் நூலில் கா. அப்பாத்துரையார், கடலில் மூழ்கிய லெமுரியா கண்டம் ஆஸ்தி-ரேலியா கண்டத்தினையும், ஆப்பிரிக்-காக் கண்டத்தினையும் இணைத்து ஒரே நிலப்பரப்பாக விளங்கியது.  இது நடந்தது 40000 ஆண்டுகளுக்கு முன்னர். மேற்கண்ட கண்டங்களில் ஆஸ்திரேலி-யாவின் பூர்விகக் குடி மக்களின் முன்னேற்றம் வெள்ளையர்களின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டது.

இதே போல் ஆப்பிரிக்க கண்டத்திலும் பல காலம் மனித உரிமைகள் பறிக்-கப்பட்டு அய்ரோப்பிய இன மக்களால் நசுக்கப்பட்டனர்.  இதன் தொடர்ச்-சியாக இந்திய மற்றும் ஆசியக் கண்டமும் ஆரியர் படையெடுப்பு முதல் வெள்-ளையர் படையெடுப்புவரை அடக்கு முறைக்குப் பலியாகின.  எத்தனையோ படையெடுப்புகளுக்குப் பின்னரும் தமிழும் அதன் அடிப்படையான தமிழர் நாகரிகமும் தொடர்ந்து சீரும் சிறப்புடன் விளங்குகிறது. 

இதனையே டாக்டர் மு. வரதராசன் அவர்களும், கி.ஆ.பெ. விசுவநாதன் அவர்களும் தங்கள் நூ-ல் களில் தமிழ்மொழி பற்றிய கருத்தினை கீழ்க்கண்டவாறு வெளியிட்டுள்ளார்கள்.  இந்த உலகில் 3000 ஆண்டுகளாக தொடர்ந்து இளமை குன்றாது மக்கள் பேச்சு வழக்கில் உள்ள ஒரே மொழி தமிழ் மொழி ஆகும்.

மேலும் பழங்காலத்திலேயே தமி-ழர்கள் கடல் வாணிகம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடல் வாணிகத்திற்கு படகுகளைப் பயன்படுத்-தியதை உறுதி செய்யும் சொல் நாவாய், இந்தச் சொல் Navy எனும் ஆங்கிலச் சொல்லாக மாறியதாக சொல்வதில் தவறில்லை. 

ஏனென்றால் ஆங்கிலம் பிற்காலத்தில் தான் கிரேக்க மொழியில் இருந்து தோன்றியது.  இதை விளக்க Fank Joseph எழுதிய கடல் அகழ்வா-ராய்ச்சி குறித்த Atlantis and Lost civilization எனும் நூலிலிருந்து சில பகுதிகள் தரப்பட்டுள்ளன.

“The lemurians developed their own written language and carried it with them as they travelled east and west, where it became the Indus Valley script at Mohen Jo Darao, Indias first civilization”

“.............. about the only thing they shared with Atlantis was maritime skills”

லெமுரிய நாகரிகமே சிந்து சமவெளி நாகரிகமாக பரிமளித்தது என்பதனை அறியலாம்.  இந்த சிந்து சமவெளி நாகரி-கத்தின் வரலாற்று சின்னங்கள் தமிழ-கத்தில், பூம்புகாரில், செம்பியன் கண்டியூரிலும், கேரளாவில் எடைக்கல் என்ற இடத்திலும் சென்ற ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது என்ற செய்திகள் தமிழரின் தொன்மையான நாகரிகத்தை வெளிப்படுத்துகின்றன.

நாகரிகத்தின் சிறந்த வெளிப்பாடு -மொழிகள்:

வரலாற்று ஆசிரியர்கள் நாகரிகங்-களை ஒப்பிடும் போது உடைகளைப்-பற்றியும், உறைவிடங்களைய் பற்றியும், உணவு வகைகளைப் பற்றியும், உலோ-கங்களின் பயன்பாட்டையும் விவரிப்-பார்கள்.  மேலே விவரித்த பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியது மொழியும், அதன் வளர்ச்சியும் ஆகும்.  அந்த வகையில் இந்தியாவில் நுழைந்த ஆரியக் கலாச்சாரத்தையும், ஆரிய மொழிகளைப்பற்றியும் சில கருத்து-களைச் சொல்ல விரும்புகிறேன்.

ஆரியர் கலாச்சாரம்: ஆரியர் கலாச்சாரம் “Steppe” என்ற இனத்தைச் சார்ந்ததாகும்.  இது ரஷ்யாவின் தென்பகுதிகளில் மிகுந்து காணப்பட்-டது.  மேய்ச்சல் கலாச்சாரம் நாடோடி வாழ்க்கை ஆகும்.  கூடாரம் அடித்துத் தங்குவதும், கொள்ளையடிப்பதும், ஒரே இடத்தில் தங்காமல் பசுமையான இடங்களைத் தேடி கால்நடையுடன் செல்வது ஆகும். 

இத்தகைய ஆரியர்கள் இந்தியாவில் பல குழுக்களாகப் பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டனர். (ரிக்வேதம்)  வெற்றி பெற்றவர்கள் பாரத-வம்சம், குருவம்சம், பாஞ்சால வம்சம் எனப் பலபிரிவுகளாக கங்கைக் கரையில் வாழ்ந்தார்கள்.  இங்கே குறித்துக்-கொள்ள வேண்டியது என்னவென்றால், ஆரியர்கள் வரும்போது கங்கை நதி இருந்-தது.  கங்கை உருவானதற்கும் ஆரியர்-களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

மேலும் வால்மீகி இராமா-யணத்தில் சொல்லப்படும் கதை ஆதார-மற்றது.  கங்கைக் கரையில் குடியேறிய ஆரியர்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்-தார்கள்.  ஆனால் பின்னர் உயர்ந்த வர்ணத்தினர் விவசாயம் செய்வது தடைசெய்யப்பட்டது.  இருந்தபோதி-லும் உணவு தானியங்களை தானமாகப் பெறுவது, பிச்சை எடுப்பது தடை-செய்யப்படவில்லை.

எனவே, ஆரிய கலாச்சாரம் வேதம் ஓதுவதிலும், தானம் பெறுவதிலும் அடங்கிவிட்டது.

இவ்-வாறு ஆரிய நாகரிகம் வெளிப்பட்டது, யாகத்தில் ஈடுபட்டதால்தான் பல கால்நடைகள் அழிக்கப்பட்டன.  இத-னால் விவசாயம் பாதிக்கப்பட்டது.  விவசாயிகள் கொதித்து எழுந்தனர்.  எனவே, புதிய மதங்கள் உருவாகின. புத்த மதங்கள் இந்தியாவின் வட-கிழக்கே உருவானவை இந்த மதமும் சமண மதமும் ஆகும். 

வடமேற்கே இருந்து வந்த ஆரிய மதத்திற்கு எதிர்ப்பு வடக்கிழக்கே இருந்து வந்தது.  இந்த மதங்கள் அசோகர் காலத்தில் தெற்கே பரவின.  எனவே ஆரியர்கள் தங்கள் வலு-விழந்து தெற்கே வந்த போது புத்த, சமண மதங்கள் வலுவான நிலையில் இருந்தன.

இந்திய அய்ரோப்பிய மொழிக் குடும்பமும்  - சமஸ்கிருதமும் இந்தோ ஆர்யமொழிகளும் -சமஸ்கிருதமும்.

1786இல் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பவர் வங்காளத்தில் கவர்னராகப் பணியாற்றினார்.  அப்போது அவர் சமஸ்கிருதம் படித்து, அதனை அய்-ரோப்பிய மொழிகளுடன் ஒப்பிட்டார்.  அதன் அடிப்படையில் இந்தோ _ ஆரியமொழிக் குடும்பத்தையும், இரானிய மொழிக் குடும்பத்தையும் உருவாக்கினார்.  இதில் இந்திய மொழிகளைச் சேர்ந்த அஸ்ஸாமி தொடங்கி மராத்தி வரை சேர்த்தார்.  இதில் திராவிட மொழிகளைச் சேர்க்கவில்லை.  இந்த மொழிக்குடும்பம் அமைப்பு மொழி ஆராய்ச்சியில் இன்று-வரை முக்கியப் பங்கு வகிக்கிறது. 

அதில் உள்ள குறைபாடு:

(1) பல வட இந்திய மொழிகள் சமஸ்கிருதத்தின் அடிப்-படையில் உருவானதாக ஒரு தோற்றம் தருகின்றது

(2) இந்திய மொழிகளான திராவிட மொழிகளைச் சேர்க்காதது தவறு.

சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லாத மொழி, எந்த மாநிலத்திலும் ஆட்சி மொழியாக இல்லாத மொழி.  2001 கணக்கீட்டின்படி சில ஆயிரம் மக்களே பேசக்கூடிய மொழி:  இது எவ்வாறு இந்திய மொழிகள் உரு-வானதற்கு காரணமாக இருக்க முடியும்? 

மேலும் பாலி மொழியும், பிராகிருதமும் அசோகப் பேரரசர் காலத்தில் சிறந்து விளங்கின.  அப்போது சமஸ்கிருதம் வளர்ச்சி பெறவில்லை.  சமஸ்கிருதம் வளர்ந்த கதையை மேலைநாட்டு அறிஞர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

1) தனது சொற்களை சில முன்/பின் இணைப்புகளை சேர்த்து புதிய சொற்களை உருவாக்குதல்.

2) பிராகிருதம், பாலி போன்று சாதாரண மக்களால் பேசப்பட்ட மொழிகளில் இருந்து கடன் வாங்குதல்.

3) திராவிட மொழிகளில் இருந்து கடன் பெறுதல்.

4)  Austral Asiatic மொழிக் குடும்பத்-தில் இருந்து கடன் பெறுதல்.

5) கிரேக்கர், பாரசீகர் படையெடுப்-புகளால் ஏற்பட்ட கலப்புச் சொற்கள்.

6) புத்த, சமண சமயங்களின் இலக்கியங்களில் இருந்து பெறுதல். இப்படி பல வகையிலும் இந்தியாவில் நுழைந்த பின் ஆரியர்கள் தங்கள் மொழியை வளர்த்தனர். 

இந்தியாவி-லிருந்து சொற்களை பெற்ற ஒரு மொழி, மார்த்தி, பெங்காலி போன்ற மொழி-களை உருவாக்கினதாக சர் வில்லியம் ஜோன்ஸ் கூறுவது சரியல்ல (இந்திய தேசிய மொழிகளின் பட்டியல் தனியே தரப்பட்டுள்ளது).

மேலும் பாலி மொழி இந்திய மக்களால் பேசப்பட்டது ஆகும்.  இந்த மொழி தற்போது வழக்கில் உள்ள தமிழ்ச் சொற்களை உள்ளடக்கியது.  உதாரணம்:_ அம்மா, ஆமாம், அய்யா, குமுதம், குவளை (பாலி சொற்களின் பட்டியல் தனியே இணைக்கப்பட்டுள்-ளது.

திராவிட மொழியும், நாகரிகமும்

மொழியும், அதன் எழுத்துகளும் ஓர் இனத்தின் நாகரிகத்தை வெளிப்படுத்து-கின்றன.  தமிழ் தொன்மையானது.  அதன் எழுத்துகள் கண்ணெழுத்து, கோல் எழுத்து, ஆப்பு எழுத்து (கண்டுபிடித்தவர்  Sir. Henry Raulinson), சித்திர எழுத்து, (சிந்து சமவெளி அகழ்-வாராய்ச்சி), பிரம்மி எழுத்து (அசோகர் காலம்) என பல நிலைகளைக் கடந்து தற்போதுள்ள வட்டெழுத்து என்ற நிலையை சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் அடைந்தது (ஆதாரம் மு.வரத-ராசனார்). 

இத்தகைய தமிழ்மொழி திராவிட மொழிக் குடும்பமாக மாறியது. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 12 மொழிகளை ஒப்பிட்டு ஒப்பிலக்கணம் எழுதினார், 1856 இல்  Bishop Cald Well.  அந்த திராவிட மொழிக் குடும்பத்தில் தற்போது 23 மொழிகள் உலகெங்கும் உள்ளதாக  Stanford B. Steever தனது நூலில் கூறுகிறார்.  (பட்டியல் இணைக்-கப்பட்டுள்ளது).

அதன்படி உலகெங்-கும் திராவிட மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை 220 மில்லியன் (ஆதாரம்  World Atlas 1991).  இதில் பெரும்பகுதி இந்தியாவில் வசிக்கிறார்கள் இவர்களின் நகரிகம் தொன்மையானது.  திராவிடர் நாகரிகத்தால் இந்தியா சிறப்பு பெற்றது.

உதாரணம், சிந்து சமவெளி நாகரிகம்.  இந்தியாவிற்கு வெளியே இருந்துவந்த பல மொழி-களுக்கும், பல நாகரிகங்களுக்கும் தனது மொழியையும், நாகரிகத்தையும் தந்து உதவியவர்கள் திராவிடர்கள். 

இந்தத் திராவிடர்மொழி வடமேற்கே பலுசிஸ்தானில் பிராகுயி என்ற மொழியாகவும், வடகிழக்கே ராஜ்கமல் என்ற மொழியாகவும் பேசப்பட்டு வருகின்றது.  திராவிட நாகரிகத்தின் தோற்றம் பற்றி இதுவரை எந்த வரையறையும் நிர்ணயிக்கப்படவில்லை.  இந்திய தீபகற்பத்தின் தோற்றம் வரையறுக்கப்படும்போது திராவிட நாகரிகத்தின் தோற்றம் வரையறுக்-கப்படும்.

ஆரிய மொழிகளில் இருந்து உரு-வானதாகச் சொல்லப்படும் அஸ்ஸாம், வங்காளம் போன்ற மாநிலங்களில் எடுக்கப்பட்ட பல கணக்கீடுகளின்படி மூலமொழியான சமஸ்கிருதத்தில் பேசுபவர் எவரும் இல்லை.  அதே சமயத்தில் திராவிட மொழி பேசுபவர்-கள் பல ஆயிரக்கணக்கில் உள்ளனர்.  மேலும் தென்னிந்தியாவில் சமஸ்-கிருதம் பரவும் முன்பே புத்த சமண மதங்கள் வலுவடைந்துவிட்டன.  எனவே சமஸ்கிருதத்தின் தாக்கம் அதிகம் இல்லை.  இதை விளக்கப் பாலி மொழியில் உள்ள சொற்களில் சில தென்னாட்டில் பயன்படுத்தப்படும் சொற்களாக உள்ளன.  அவை:  கத்தரிக்-கோல், பரிகாசம், அனேகம், அதிதூரம், அதிபதி, நிலையம், நகரம், அங்காடி, கரிசல், கலகம், புஷ்பவதி, கர்ப்பிணி, கூனி (பட்டியல் இணைக்கப்பட்-டுள்ளது).

திராவிடர் எழுச்சி மற்றும் ஆரிய நாகரிகத்தின் வீழ்ச்சி

ஆரியரின் நாகரிகமான வேதகால நாகரிகத்தின் வீழ்ச்சி புத்த சமண மதங்-களால் உருவானது.  இந்த மதங்கள் இந்தியர்களால், இந்தியர்களுக்காக இந்திய மொழிகளில் நடத்தப்பட்டன.  இவை கடவுளை ஆராதிக்கும் பணியை விடுத்து, மக்கள் நலனைப் போற்றின.  அன்பு, அஹிம்சை போன்ற கொள்கை-களை வலியுறுத்தின. 

புத்த மதத்தைப் பரப்பிய அசோகர் எனும் இந்தியாவின் முதல் பேரரசர், யுத்தத்தினைத் தவிர்த்து, தன் குடிமக்களை தனது சொந்த மகன், மகள் போல நடத்தினார் (ஆதாரம் கல்வெட்டு). தருவது  History எனும் நூல் ஆசிரியர்  Adam Hart - Davis)  ஆரியக் கலாச்சாரத்தின் வீழ்ச்சியானது சிந்து சமவெளி அகழ்வராய்ச்சிகளுக்குப் பிறகு மேலும் தீவிரமடைந்தது.  அதை கீழே காண்போம்.

சிந்து சமவெளி நாகரிகமும், திராவிடர்களும்

1) பண்டைய காலத்தில் சிறந்த நாகரிகங்களாக சொல்லப்படுபவை எகிப்தியநாகரிகம், சுமேரிய நாகரிகம், லெமுரிய நாகரிகம், தமிழர்/திராவிடர் நாகரிகம் ஆகும்.  இந்த நாகரிகங்களின் மய்யப்பகுதியாக சிந்து சமவெளி அமைந்துள்ளது.  எனவே 1922 இல் ஜான் மார்சல் அகழ்வாராய்ச்சி செய்த கண்டுபிடிப்புகள் ஆதிமனிதன் பிறந்த இடத்தையும், அவன் பெற்ற நாகரிகத்தையும் வெளிப்படுத்த உதவும்.

2) இதில் லெமுரிய கண்டம் கட-லால் மூழ்கடிக்கப்பட்டபோது அதில் வசித்த மனிதர்கள் மற்ற நிலப்பரப்பு-களுக்கும், உயர்ந்த மலைப்பகுதிகளுக்-கும் தப்பிச் சென்றுவிட்டனர் என்று வரலாறு கூறுகிறது.

ஆதாரம்: கடல் கொண்ட தென்னாடு  By கா. அப்பா-துரையார்,  Atlantis and other Lost Civilisation By Frank Joseph.

3) எஞ்சியுள்ளவற்றில் திராவிடர் நாகரிகமும், சுமேரிய நாகரிகமும் சமகாலத்தவை, ஒன்றான இயல்பு உடைய-வையும் ஆகும். Cambridge History of India Vol. 1 என்னும் நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது: 

திராவிட இனத்திற்கும், சுமேரிய இனத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை சந்தேகத்-திற்கு இடமில்லாதது. சுமேரியர்கள் கூட (திராவிடர்களைப் போல) சப்பையான மூக்கினை உடையவர்-களாக இருந்தார்கள்.

டாக்டர் குகா கூறுவது: மெசப-டோமியா அருகில் உள்ள  Ur  (ஊர்) என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மண்டையோடும், மதராஸ் இராஜ-தானியில் ஆதிச்ச நல்லூரில் கண்டெ-டுக்கப்பட்ட மண்டையோடும், இலங்-கையில்  Veddah (வேடன்)இல் கண்டெ-டுக்கப்பட்ட மண்டையோடும் ஒன்றுக்-கொன்று தொடர்பு உடையவை.

4) மேலே கூறிய கருத்துகள் முற்போக்கு மற்றும் ஒற்றுமை உண்டாக்-கும் மனம் கொண்டவர்களின் நேரான அணுகுமுறை ஆகும்.  அதற்கு எதிராக பிளவு சக்திகளின் தீய அணுகுமுறையால் சுயநலத்தோடு சிந்துவெளி நாகரிகத்தை ஆரியநாகரிகம் என சித்திரிக்க செய்த முயற்சிகள் தோல்வியடைந்தன.  விவரம் பின்-வருமாறு:

அ) ஆரியர்களின் வாதங்களை சிந்து சமவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய சர்.ஜான் மார்ஷல் நிராகரித்தார்.

ஆ) வேத காலத்தை சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முற்பட்டதாக காண்-பிக்க முயற்சித்தார்கள்.  ஆனால் அவர்-களின் வேதமே அனுமதிக்கவில்லை. 

வேதத்தில் சொல்லப்பட்ட செய்திகள், கருத்துகள், வேதகாலத்தை பின்னோக்-கித் தள்ள அனுமதிக்கவில்லை.  வேதங்களில் ஒருசில மனிதர்களின் எண்ணத்தில் உதித்த மாயத்தோற்றம், சிந்து சமவெளி நாகரிகம் சூரிய ஒளியில் மின்னும் உண்மையானபருப்பொருள்.

இ) வேதகால நாகரிகம் கிராம நாக-ரிகம்; சிந்து வெளி நாகரிகம் நகர நாக-ரிகம்.
ஈ) ஆரியர்கள் மாமிசம் சாப்பிட்-டார்கள். ஆனால் மீன் சாப்பிட-வில்லை.  சிந்து வெளிமக்கள் மீன் சாப்-பிட்டார்கள்.

உ) ஆரியர் குதிரையைப் பயன்-படுத்தினர்:  சிந்துவெளி மக்கள் குதிரை உபயோகம் அறியாதவர்கள்.

ஊ) சிந்துவெளியினர் லிங்கத்தை, பெண்களை, வணங்கினார்கள்.  ஆரியர்-கள் இந்திரனை வணங்கினார்கள்.

எ) சிந்துவெளியினர் எழுதத் தெரிந்தவர்கள், வணிகர்கள் ஆரியர்கள் எழுதத் தெரியாதவர்கள்.

ஏ) ஆரியர்கள் பசுவை வணங்-குபவர்கள். சிந்து சமவெளியினர் காளையை வணங்குபவர்கள். காளையை குதிரையாக சித்திரிக்க முயன்றது தோல்வியுற்றது (செய்தி:  ஜனவரி 2010 தேதியிட்ட  Frontline ஏடு).

இந்த வேறுபாடுகள் சிந்துசமவெளி நாகரிகத்திற்கு சொந்தக்காரர்களாக ஆரியர்கள் இருக்க முடியாது என்பதை வெளிப்படுத்துகின்றது.

முடிவுரை:

வேதந்தான் இந்த உலகத்தின் தோற்றத்திற்குக் காரணம்:

வேத கால நாகரிகந்தான் இந்தியாவின் நாகரிகம்; இந்திய மொழிகளின் தாய்மொழி சமஸ்கிருதந்தான்; என பல வகையான மாயத் தோற்றங்களை உருவாக்கியி-ருந்தார்கள், ஆரியர்கள்.  அந்த ஆரியர்-களின் எண்ணங்களுக்கு சம்மட்டி அடி தரும் வகையில்,

சிந்த சமவெளி நாகரிகம், அகழ்வாராய்ச்சிகளால் உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டது, 1922 இல்  Sir John Marshal என்பவரால்.  வேதகால நாகரிகத்தைவிட பலமடங்கு உயரிய நாகரி-கத்துக்குச் சொந்தக்காரர் _ ஆரியரின் வருகைக்கு முன் இருந்த இந்திய பூர்விகக் குடி மக்கள்.  அந்த பூர்விகக் குடி மக்களில் தொன்மை-யானவர்கள் தமிழர்களே என்பதை அறிவோம். 

இதை வலுப்படுத்தும் வகை-யில் ஒரு ஆதாரம் கிடைத்துள்ளது. 

இது உலகத்தில் முதல் மனிதன் தோன்-றிய, ஆப்பிரிக்காவில் _ எத்தியோப்பி-யாவின் நாகரீகத்தை சொல்கின்ற நூலில் காணப்படுகின்றது _ நூலின் பெயர்  “Ethiopia and the Origin of Civilization, Page -12)

அதனை இங்கு தருகிறேன். Ethiopia and the origin of civilization by John G. Jackson (Page12)

“The opinions of Sir Henry Rawlison are reinforced by the researches of his equally distinguished brother Professor George Rawlison in his essay “On the Ethnic Affinities of the Races of Western Asia” which directs our attention to - “The uniform voice of primitive antiquity, which speak of Ethiopians as a single race, dwelling along shores Southern Ocean From India to the Pillars of Hercules (Herodotus Vol.I, Book I, Appendix Essay XI-Section 5).  Rawlin adds in explanation notes, which we here reproduced: “Recent linguistic discovery tends to show the Casthite or Ethiopian race did, in the earliest times, extent itself from the Indus along the sea coast along the shores of the Southern Ocean from Abissinia to India.  The while Peninsula to India, was peopled by a race of this character before the influx of the Aryans, it extended from the Indus along the sea coast through the modern Baluchistan and Kerman.....”

Franck Joseph தனது நூலில் தெரிவித்தபடியும், அப்பாத்துரையார் தனது நூலில் தெரிவித்து இருந்தபடியும், நமக்கு தெரிவது எத்தியோப்பியா, சிந்து வெளிப்பகுதிகள், இந்திய பகுதி, லெமுரியாக் கண்டம் முதலானவை ஒரே இன மக்களை ஆரியர்கள் வரு-கைக்கு முன் கொண்டிருந்தன என்பது ஆகும்.  அந்த இனத்தின் தடயங்கள் சிந்து சமவெளி குறித்து ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.  அதை இந்தியா-விற்குத் தந்தவர்கள் திராவிடர்கள் ஆவர்.

உலகத்திலேயே மிகப் பலம் பொருந்-திய நாடான இங்கிலாந்தி கப்பல் படைக்கு  Navy என்ற பெயர் தந்தது தமிழ்சொல் நாவாய்

இந்திய நாட்டிற்கு ஜம்புகத்தீவு என்ற பெயர் இருப்பதாக பாலிமொழி கூறுகிறது.  இந்த  Jambu என்ற வார்த்-தைக்கு  rose apple  என்று பாலி மொழி-யில் பெயர் அதாவது நாவல் பழம்; ஆங்கிலத்தின் Jamun fruit என்று பெயர். இந்தியில் ஜாமுன். எனவே வடமொழி-களில் குறிப்பிடும் ஜம்புத்தீவும் தமிழில் குறிப்பிடும் நாவலந்தீவும் ஒன்றே எனக் கொள்ளலாம். 

எனவே இந்தியாவின் உண்மையான பெயர் ஜம்புத்தீவு அல்லது நாவலந்தீவு.  எனவே தற்போது இந்தியில் பாரத் என்றும் உருதில் இந்துஸ்தான் என்றும் அழைக்கப்படும் இந்தியாவை நாவலந்தீவு எனப் பெய-ரிடப்பட, செம்மொழி கண்ட தமிழக முதல்வர் கோரினால் அது சால சிறந்-தது.

முதல்வரைத் தந்தது திருக்குவளை:  இந்தத் திருக்குவளைதான் இந்தியா-விற்கு வழிகாட்டுகிறது.  இந்தக் குவளை மலர் பாலிமொழியில் குவலயா என்று சொல்லப்படுகின்றது.  இது வடக்கும் தெற்கும் இணைந்ததைக் காட்டுகின்றது.

எனவே, திராவிடர்கள் தமிழர் என்று அழைக்கப்பட்டாலும், மதராஸி என்று அழைக்கப்பட்டாலும், அரவாடு என்று அழைக்கப்பட்டாலும் அவர்கள் நாவலந்-தீவில் உள்ள இந்தியரே!

---------P. கோவிந்தராசன் B.E., M.B.A.,(M.A.) அவர்கள் விடுதலை (13.02.2011) மலரில் எழுதியது


Thursday, February 17, 2011

நான்தான் அண்ணா பேசுகிறேன்! நீங்கள் ஆரியரா? ஆரியதாசரா? திராவிடரா?


(அறிஞர் அண்ணா அவர்கள் இன்று இருந்தால் என்ன பேசுவார்?) 

என் பெயரால் ஒரு கட்சி அண்ணா திமுக; என் உருவம் தாங்கிய கொடி  அ.இ.அ.தி. மு.க. கொடி; அதற்கென்று ஒரு பத்திரிகை டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.

தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதை கண்டு திடுக்கிட்டுப் போனேன். மண் சோறு சாப்பிட்டீர்கள். மாள முடியாத பசி போலும் என்று நினைத்தேன். யாகம் நடத்தியதாகக் கேள்விப்பட்டேன். தோட்டத்துக்குள்தானே _ தனி நபர் பிரச்னை என்று தள்ளி விட்டேன்.

சித்ரா பவுர்ணமியன்று வீட்டில் விளக் கேற்றி இருளை விரட்டுங்கள் என்று வெளி வந்த ஓர் அறிக்கையைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டேன்.

விநாயக சதுர்த்திற்கு வாழ்த்துத் தெரி வித்தாய்; நான் எழுதிய களி மண்ணும் கையுமாக (திராவிட நாடு 12.9.1942) என்ற கட்டுரையைப் படிந்திருந்தால் அல்லவா - இந்த வாழ்த்தை எழுதும்போது  தயக்கம் ஏற்பட்டு இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்காக எத்தனை எத்தனைக் கூட்டங்களில் பேசி இருப்பேன், எத்தனை எத்தனை கட்டுரைகளை எழுதித் தள்ளியிருப்பேன்! - மாநாடுகள் கூட்டித் தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பேன், பேரணி களை நடத்தியிருப்பேன் - போராட்டங்களை நடத்தியிருப்பேன்!

அந்தச் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்ற என் பெயரை வைத்துக் கொண்ட கட்சியின் பொதுச் செய லாளர் உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கு கிறார் என்றால் தலையில்தான் அடித்துக் கொள்ள வேண்டியவன் ஆனேன். ராமர் பாலமாம். அதை இடித்தால் இந்துக்கள் மனம் புண்படுமாம். அட தங்கச்சி! என் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக் கொண்டா இந்த மோசடியைச் செய்ய வேண்டும்?

இராமாயணத்தைப் பற்றி தந்தை பெரியாரும், நானும் எழுதியதை, பேசியதைப் படித்து பார்த்ததுண்டா, அந்த நூல்களைக் கையால் தொட்டதுதான் உண்டா?

இரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோருடன் இராமாயணத்தைக் கொளுத்துவது குறித்து நான் விவாதம் செய்த வரலாறு உமக்குத் தெரியுமா? நீதிதேவன் மயக்கம் _ கேள்விப்பட்டதுண்டா?

வரலாறு தெரிந்தவர்கள் யாராவது உமது பக்கத்தில் வைத்துக் கொண்டதுண்டா?

இராமாயணம் என்பது ஆரியர் _ திராவிடர் போராட்டம் என்பதுபற்றியெல்லாம் ஏதாவது தெரியுமா?

உமக்கு எப்படித் தெரியும்? அப்படியே தெரிந்தாலும் நீ ஆரியத்தின் பக்கத்தில்தானே நிற்பாய்? அந்த அடிப்படையில் தான் இராமன் பாலத்தை இடித்து சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று வழக்குத் தொடுத்திருப்பாயோ?

தங்கச்சி, உன் அறிக்கை ஒன்றை உமது கட்சி ஏட்டில் (29.10.2009 _ நமது எம்.ஜி.ஆர். பக்கம் 1-9)   படித்துப் பார்த்தேன்.

ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு அர்த்தம் உண்டு. ராமர் பிறந்தார். ராமரின் பிறவிப் பயன் என்ன? தீய சக்தியான ராவணனை அழிப்பது தான். ராமனின் பிறவிப் பயன் கிருஷ்ணன் பிறந்தார். கிருஷ்ணனுடைய பிறவிப் பயன் என்ன? கம்சன் என்னும் அரக்கனை ஒழிப்பது தான் _ அழிப்பதுதான். கிருஷ்ணரின் பிறவிப் பயன். சத்ய பாமாவின் பிறவிப் பயன். என்ன? நரகாசுரனை வதம் செய்வதுதான் சத்ய பாமாவின் பிறவிப்பயன் அதைப்போலவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிறவிப் பயன் என்ன? கருணாநிதி என்னும் தீய சக்தியை அழிப்பதும், ஒழிப்பதும்தான் அண்ணா தி.மு.க.வின் பிறவிப் பயன் என்று அந்த அறிக்கையைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

திராவிடர் இயக்கத்தின் ஆணி வேரை வெட்டுவதுபோன்ற வெட்டரி வாள் வீச்சு இது!

அசுரன் என்றும், அரக்கன் என்றும் புராணங்களில், இதிகாசங்களில் கூறப்பட்டிருப்பது எல்லாம் திராவிடர் கள் _ அதில் கூறப்பட்டிருப்பது எல்லாம் ஆரியர் - _ திராவிடர் போரே!

என்பதுதான் திராவிட இயக்கத்தின் அடிநாதம். வரலாற்று உண்மையும்கூட!

இதன் ஆரம்ப எழுத்தைக் கூடப் புரியாத ஒரு சீமாட்டி என் பெயரையும் திராவிட என்ற வரலாற்றுப் பெயரையும் தாங்கிய கட்சியின் பொதுச் செயலாளர் ஆனதால் ஏற்பட்ட விபரீதம்! விபரீதம்!!

புத்தர் இயக்கத்தில் புகுந்து ஊடுருவி ஆரியம் நாசப்படுத்தியதுபற்றி நான் எழுதாததா? பேசாததா? தந்தை பெரியார் கூறாததா?

இப்படியெல்லாம் சொன்ன இயக்கத்திலேயே ஆரியம் புகுந்து தன் விஷம வேலையைச் செய்து விட்டதே என்று எண்ணுகிறபோது, எதையும் தாங்கும் இதயம் படைத்த எனக்கே நெஞ்சம் வெடித்து விடும் போலி ருக்கிறதே!
இதனை ஏற்றுக்கொண்டு உம் கட்சியில் எப்படியிருக்கிறார்கள்? கொள்கை பற்றித் தெரியாத கூட்டம் உமது பின்னால் நிற்கிறது; - பதவி என்ற தீனியைப் போட்டால் போதும் புரட்சித் தலைவியே! என்று போர்ப் பாட்டுப் பாடுவார்கள் போலும்!

இந்த ஒரே ஒரு அறிக்கை ஒன்று போதும் _ நீவிர் யார் என்பதற்கு!

இராமன் பக்கமும் கிருஷ்ணன் பக்கமும் நின்று திராவிடர்களை _ சூத் திரர்களை வீழ்த்துவதற்குப் புறப்பட்ட  அணிக்குத் தலைமை தாங்குகிறாய்.

அதனால்தானே சோ இராம சாமிகளும், குருமூர்த்திகளும், தின மணிகளும் தினமலர்களும் கல்கி களும், இந்துக்களும் உம் தலைமையை ஏற்று அணிவகுத்து நிற்கின்றன.

ஆரிய வெறியின் _ சனாதனத்தின், மூடநம்பிக்கையின் உச்சக்கட்டத்திலே கட்சியை நகர்த்திச் சென்று விட்டாய், மிகவும் வெளிப்படையாக ஆரிய தி.மு.க.வாக மாற்றி விட்டாய் என்பதற்கு அடையாளமாக உமது ஏட்டில் நாள்தோறும் ராசிபலன் வெளியிட ஆரம்பித்து விட்டாய்.

இது ஓர் உச்சக் கட்டமான முடிவு; கட்சியில் இனி தட்டிக் கேட்க யாரா லும் முடியாது என்பதற்கான அறிவிப் பாகத்தான் இதனைக் கருத வேண்டும்.

அப்பட்டமாக அண்ணா தி.மு.க. ஆரிய மயமாகி விட்டது என்பதற்கான பிரகடனமாகத்தான் இதனைக் கருத வேண்டும்.

பார்ப்பனர்களையல்ல _ பார்ப்பனீ யத்தை எதிர்ப்பதுதான் எங்கள் கொள்கை என்று அறிவித்தது உண்மை தான். உம்மைப் பொறுத்தவரை அந்தப் பிரச்சினைக்கு இடம் இல்லை. பார்ப் பனராகவும் பார்ப்பனீயத்தை திராவிட இயக்கத்தில் திணிக்கும் பேர் வழியாக வும் நீர் ஆகிவிட்டாய். திராவிட இயக் கத்துக்கு இப்படி ஒரு விபத்தா? இது சூத்திரர்களின் அரசு? என்று என் தம்பி கருணாநிதி சட்டப் பேரவையில் அறிவித்தார். அவரை ஒழிப்பதுதான் அ.தி.மு.க.வின் பிறவிப் பயன் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டாய். அதற்கொப்ப இராமாயணத்தையும் துணைக் கழைத்து விட்டாய்; ஆரியர் -_ திராவிடர் போராட்டம்தான் அரசிய லாக நடக்கிறது என்பதற்கான அதிகாரப்பூர்வ மான அப்பட்டமான அறிவிப்பு உமது வாயாலேயே வெளிவந்துவிட்டது!

மானமும் அறிவும் உள்ள தமிழர்கள் சிந்திப்பார்களாக! ஆரியத் தலைமையால் உருவாக்கப்பட்ட இந்த அடிப்படை மோசடியை எதிர்த்து, கொள்கை ரீதியில் வினா தொடுக்க அ.இ.அ.தி.மு.க. வில் ஒரே ஒரு தொண்டன்கூட இல் லாது போய் விட்டாரா என்ற கேள்வி யோடு நான் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்

(அண்ணா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் இப்படித்தானே பேசி இருப்பார்?).

இணைப்பு I

சோதிடப் பரீட்சை தாசரதி

தியாகராசனும், வேணுவும் பச்சையப் பன் கல்லூரிச் சிநேகிதர்கள். வெகு நாள் பழக்கம் இல்லாவிட்டாலும் இரு வரும் மிகுந்த நட்புக் கொண்டிருந் தனர். வகுப்பில் இருவரும் சேர்ந்து வாசித்து வந்தனர். அதிகம் வளர்த்து வானேன்? இருவரும் மனமொத்த நண்பர்களாய் இருந்தார்கள்.

ஆனால், ஒரு விஷயத்தில் மாத்திரம் தியாகுவிற்கும், வேணுவுக்கும் அபிப்ராய பேதமிருந்தது. நாரதபுரம் நவீன சோதிட சாத்திரிகள் பேரில் வேணு அபாரமான அபிமானம் கொண்டிருந்தான். ஆனால், சோதிடத் தின் மேல் நம்பிக்கையற்றிருந்த தியாகுவுக்கு வேணுவின் வார்த்தைகள் வேப்பங்காய்களாய் இருந்தன. அடிக்கடி இருவருக்குள் தர்க்கம் நடக்கும்.

வார்த்தைகள் வலுத்தால் சண்டையில் முடியும் என்றறிந்த தியாகராசன் இறுதியில் சோதிட சாத்திரியாரையே பரீட்சிக்க நினைத்தான்.அன்றைய தினசரியில் கண்ட விளம்பரம் அவன் கண்ணைப் பறித்தது.

நாரதபுரம்
நவீன சோதிட சாத்திரியார்
எதிர்காலக் கேள்வி நான்கிற்கு அணா எட்டு.
எழுதும் நேரத்தையாவது எந்தப் பூவின்
பெயரையாவது குறிக்கவும்

இதைக் கண்ட தியாகு எடுத்தான் காகிதத்தை; எழுதினான் பின்வருமாறு;

அய்யா, கீழ்க்கண்ட கேள்விகளுக்குத் தயவு செய்து விடைகளைத் தெரி விக்கவும்.
1. என் தாயார் உடம்பு சீக்கிரம் குணமாகுமா?

2. என் நண்பர் வேணுவுக்கும், அவர் மனைவிக்கும் எப்பொழுது ஒற்றுமை ஏற்படும்?

3. அவருக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? 

புஷ்பம் -_ கனகாம்பரம்

தங்களன்புள்ள,
தியாகராசன்

இதை உடனே தபாலில் சேர்த்து விட் டான். அவசரத்தில் ஸ்டாம்பு (அஞ்சல் தலை) ஒட்ட மறந்து விட்டதால், சாத்திரி யார் இரண்டணா அதிகம் கொடுக்க வேண்டியது ஆயிற்று. தியாகு தன் நண்பன் விலாசத்தையே எழுதியிருந்தான்.

ஒரு வாரம் கழிந்தது. வேணுவுக்கு சாத்திரியாரிடமிருந்து வந்த கடிதத்தில் கண்டிருந்ததாவது:

உங்கள் தாயாரின் உடம்பு இன்னும் ஒரு வாரத்தில் குணமாகும். தங்கள் நண்பருக்கு ஆண் குழந்தை பிறக்கும். அது பிறந்தவுடன்; அவர் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
வேணு ஒன்றும் புரியாமல் விழித்தான். அருகிலிருந்து தியாகு வயிறு வெடிக்கச் சிரிக்காமல் இருக்க முடியுமா? தியாகுவின் தாயார் இறந்து அனேக வருடங்களாயின. வேணுவின் துரதிர்ஷ்டமோ, சாஸ்திரி யாரின் துரதிர்ஷ்டமோ வேணுவுக்கு இன்னும் விவாகம் ஆகவில்லை!

- அறிஞர் அண்ணா (திராவிட நாடு)

_ ராசிபலன் போடும் நமது எம்.ஜி.ஆர். சிந்தனைக்ககாக இது


இணைப்பு II

இராமன் - இராமாயணம்பற்றி அறிஞர் அண்ணா

இராமனும் இராவணனும் - உண்மை உருவங்களா? வரலாற்றுக் காலத்தவரா? அல்ல கற்பனைகள். இதனைக் கூறத் தன்மான இயக்கத்தார் தயங்குவதில்லை. ஆனால், அவர்தம் கேள்விகட்குத் தக்க விடையிறுக்க முடியாத நேரத்தில் மட்டுமே, செந்தமிழை வாணிகம் செய்வோர், இராமாயணம் ஓர் கற்பனைக் கதை என்றுரைப்பரேயொழிய, மற்றைப்போதினில், இராமனை நிஜ புருஷனாகவே எண்ணுவர், - மதிப்பர், - வணங்குவர். ஆராய்ச்சிக் கூடத் தில் மட்டுமே ஓரளவுக்கு அவர்களின் பஜனை மனப்பான்மை குறையும். மற்றப் போதெல்லாம் அவர்கள் இராமதாசர்களே.

இராமதாசர்களுக்கு இராவணதாசர் விடுக்கும் மறுப்புரை அல்ல இந்நூல். இராமதாசர்களுக்கு, தன்மானத் தமிழர் தரும் மயக்க நீக்க மருந்து இது.  தாசர் நிலை கூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா! என்று அறிவுறுத்தவே இந்நூல் வெளிவந்துள்ளது.

திராவிட இன மக்களின் எழில் மிக்க வாழ்க்கையிலே, ஆரிய இனக் கலாச்சாரம் தூவப்பட்டது என்பதை மறுப்பார் எவருமில்லை. நாம், நமது கருத்துக்கு மாறானவர்கள், இருசாராரும் இதனில் மாறுபட்டோமில்லை. ஏனெனில், இது மறைக்க முடியாது உண்மையாகி விட்டது.

இராவண காவியமும், இராமாயணமும் இரண்டும் கற்பனைகளே. முன்னது இராமனைத் தேவனாக்க! இஃது இராவ ணனைத் தேவனாக்க அல்ல - தமிழனாக்க, அதாவது வீரனாக்க.

இராவண காவியத்திலிருந்து தப்ப வேண்டுமென்று விரும்பும் ஆரியர்க்கும், - ஆரிய நேசர்கட்கும் ஒரே ஒரு வழிதான் உண்டு. இராமாயணமே பொய்க்கதை. அதனை நாங்கள் ஏற்கோம் என்று அறிவித்து விடுவதுதான், வேறு மார்க்கம் இல்லை.  - - அறிஞர் அண்ணா.
நூல்: புலவர் குழந்தையின் இராவண காவியம் முன்னுரையாக அண்ணா எழுதி யது இது.

இராமாயணம், இராமன் எல்லாம் கற் பனையே என்றும், ஆரியர் - திராவிடர் பிரச்சினை என்றும் இவ்வளவு தெளிவாக அறிஞர் அண்ணா எழுத்துருவில் கல்வெட் டாகச் செதுக்கியுள்ளாரே, அண்ணா பெய ரால் கட்சி நடத்துபவரின் பதில் என்ன?

நீங்கள் ஆரியரா? ஆரியதாசரா? திராவிடரா?

அ.இ.அ.தி.மு.க. தோழனின் பதில் என்ன?

--- விடுதலை மலர், மின்சாரம் (12-02-2011)
Tuesday, February 15, 2011

மதம் விஞ்ஞானத்தின் முன் மண்டியிட்டுத் தான் தீர வேண்டும்.

மதம் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் கடைசி யில் விஞ் ஞானத்தின் முன் மண்டியிட்டுத் தான் தீர வேண்டும்.


அப்படி மண்டியிடச் செய் தவர் களுள் இத்தாலி நாட் டைச் சேர்ந்த கலிலியோ   என்னும் விஞ்ஞானி மிக மிக முக்கியமானவர். அவரின் பிறந்த பொன்னாள் இந்நாள் (1564).

வானவியலின் தந்தை என்று வருணிக்கப்படுபவர் இவர். இசைக் கலைஞரின் மகனாகப் பிறந்தவர். பைசா நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

கணிதத்துறைப் பேரா சிரியராக பைசா பல்கலைக் கழகத்திலும், படூவா பல் கலைக் கழகத்திலும் பணி புரிந்தார்.

அவருடைய ஆய்வுக் களம் என்பது விண்தான். வியாழன் கிரகத்தின் துணைக் கோள்களை முதலில் கண்டவர் இவர்தான்.

ஏற்கெனவே இருந்து வந்த தொலைநோக்கியைத் தம் ஆய்வுத் திறனால் மேலும் செழுமைப்படுத்தினார். வியாழனைச் சுற்றியுள்ள துணைக் கோள்கள் வியா ழனைச் சுற்றி வருவதைக் கண்டறிந்தார்.

மத உலகைப் பொருத்த வரை இது ஓர் அதிர்ச்சியான தகவலாகும். பூமியைத்தான் எல்லாக் கிரகங்களும் சுற்றிக் கொண்டிருந்தன என்பது தான் மதத்தின் நம்பிக்கை. பைபிள் கோட்பாடும்கூட! சூரியக் குடும்பமும் பூமியைத் தான் சுற்றுவதாக அன் றைக்கு இருந்த அவர்களின் அறிவு அவர்களை நம்ப வைத்தது. அதற்கு முதல் அடி கொடுத்தவர் கோபர்நிக்கஸ். சூரியனை மய்யப்படுத்திய அவரின் கண்டுபிடிப்பை வழிமொழிந்தார் புரூனோ.

மதவாதிகளால் பொறுத் துக் கொள்ள முடியவில்லை. மதம் யானைக்குப் பிடித் தாலும் ஆபத்து - மனித னுக்குப் பிடித்தாலும் ஆபத் தாயிற்றே! கொலைகாரர்கள் கல்லால் அடித்தே கோபர் நிகசைக் கொன்றனர். புரூ னோவோ உயிரோடு கொளுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அதே கருத்துகளைத் தான் கலிலியோவும் கூறி னார். மதம் மருண்டது என் றாலும், உயிருக்கு ஆபத் தில்லை; மாறாக வாழ்நாள் முழுவதும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

விண்ணைப் பார்த்துப் பார்த்து ஆய்ந்து ஆய்ந்து அந்த இரு விழிகளோ படிப்படியாக பார்வையை இழந்து கடைசிக் காலத்தில் முற்றிலும் பார்வையற்றவரா னார்! 1642 சனவரி 8இல் மரணமுற்றார்.

கலிலியோ மறைந்து நூறு ஆண்டுகள் கழித்து 1737 ஆம் ஆண்டு அவரது உடல் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்டு சாண்டா கிளாஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

360 ஆண்டுகளுக்குப் பிறகு 1992 அக்டோபர் திங் களில் ரோமன் கத்தோலிக்க மதப்பீடம் ஓர் உண்மையை ஒப்புக் கொண்டு தலை வணங்கியது. கணித வல்லு நர் வானியல் விஞ்ஞானி கலிலியோ கண்டுபிடித்துச் சொன்ன கருத்து சரிதான் என்று ஒப்புக் கொண்டது. குழு ஒன்றை அமைத்து கலிலியோ சொன்னதுபற்றி ஆய்வு செய்யப் பணித்தது. ஆம், பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது. கலிலியோ கண்டுபிடிப்பு சரியே என்று அவர்கள் தெரிவித்தனர். கலிலியோவுக்கு அளிக்கப் பட்ட தண்டனை தவறு என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டது கத்தோலிக்க மதப்பீடம்! (செய்தி 1992 அக்டோபர் 31)
புரூனோவைக் கொளுத் தியதுபோல கலிலியோவைக் கொல்லாமல் விட்டார்களே, அதுவரை மகிழ்ச்சிதான்.

------------- விடுதலை , மயிலாடன் (15-02-2011)


Saturday, February 12, 2011

ஆர்.எஸ்.எஸ் சே...நாங்கள் தயார்! தயார்!! நீங்கள் தயார்தானா?

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸை வலுப்படுத்த 20 ஆயிரம் தொண்டர்கள் களத்தில் இறங்கப் போகிறார்களாம். இவர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வார்களாம். இதற்காக 16 பக்க கையேடு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாம்.

ஆர்.எஸ்.எஸின் தோற்றம், ஆர்.எஸ்.எஸ்.பற்றி தேசிய தலைவர்களின் கருத்துகள் இடம் பெறுமாம். ஆர்.எஸ்.எஸைக் கடுமையாக விமர்சனம் செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் இராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்  உள்ளிட்டோர் மீதான விமர்சனங்களும் முன் வைக்கப்படுமாம்.

பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வீட்டுக்கு வீடு கையேடுகளையும், துண்டு அறிக்கைகளையும் வழங்குவார்களாம்!

வரட்டும் - அதைத் தான் நாமும் எதிர்பார்க் கிறோம். 1925ஆம் ஆண்டில்தான் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் துவக்கப்பட்டன. சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமை அமைப்புகளும் அதே ஆண்டில்தான் தொடங்கப்பட்டுள்ளன.

இத்தனை ஆண்டுகாலமாக எவ்வளவோ முயற்சி எடுத்துப் பார்த்தும் தமிழ்நாட்டில் அவர்களின் பருப்பு வேகவில்லை. அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களும் அவர்கள் கண்ட தன்மான இயக்கமாம், திராவிடர் கழகமும்தான்!

ஆர்.எஸ்.எஸ். என்பது இந்து மதத்தினைப் பலப்படுத்தும் நோக்கம் கொண்டது. இந்து மதமோ பார்ப்பனர் ஆதிக்கத்தை, மேலாண்மையைக் கெட்டிப் படுத்தும் வெறி கொண்டதாகும்.

பார்ப்பனர் ஆதிக்கம் என்றால் பிறப்பில் அவர்கள் தான் முதன்மையானவர்கள். பிர்மா இந்த உலகத்தைப் படைத்ததே கூட பிராமணர்களுக்காகத்தான். அவர்கள் பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள்; மற்றவர்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்குத் தொண் டூழியம் செய்து கிடக்க வேண்டியவர்கள் என்ற நிலைப்பாடு இருந்து வருகிறது. இந்த நாட்டில் உழைக்கும் மக்கள் பஞ்சமர்கள் என்று ஆக்கப்பட்டார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை இந்து மத - பார்ப்பன மதத்தில் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு காட்டப்பட்டது.

இந்த நிலையை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கிய தலைவர்  தந்தை பெரியார்;  இயக்கம் - திராவிடர் இயக்கமாகும்.

துயரப்படும் மக்கள் உண்மையை உணரும் அளவில் அவர்களுக்குப் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யப்பட்டது. சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்ற உணர்வு உச்ச கட்டத்திற்குச் சென்றது.

பார்ப்பனர்கள் திறந்த மேனியில் தங்களின் உயர் ஜாதி ஆணவச் சின்னமான  பூணூல் அணிந்து வருதல், உச்சிக்குடுமி வைத்துக் கொண்டு நடமாடுதல் என்பது எல்லாம் - அறவே நிற்கும் நிலை உருவாக்கப்பட்டது.

ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, அய்யங்கார் பார்ப்பனருக்கு மூன்றுகொம்பு என்று கோலி விளையாடும் சிறுவன்கூட கேலி பேசும் நிலை உருவாக்கப்பட்டது. எப்படியோ ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் பார்ப்பனீயத்தோடு இணைந்து நின்ற அமைப்புகளாகி விட்டதால் எதிர்ப்பிரச்சாரப் புயலில்  பார்ப்பனீயத்தோடு அதுவும் கட்டுண்டு தாக்குதலுக்கு ஆளானது.

தமிழ் மண்ணில் பார்ப்பன எதிர்ப்பு என்பது கட்சிகளைக் கடந்து நிற்கக் கூடியதாகும்; ஜாதி, மதங்களைத் தாண்டி இது செங்குத்தாக நிற்கிறது. தமிழ்நாடு சட்டப் பேரவையில்கூட ஜெயலலிதாவைச் சேர்த்து இரண்டே இரண்டு பார்ப்பனர்கள்தான் உறுப்பினர்கள். நூற்றுக்கு மூன்று கொடுத்துத் தொலையலாம் என்று நாம் நினைத்தால்கூட அதனைக்கூடக் கொடுக்க தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளோ, பொது மக்களோ தயாராக இல்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்து நின்ற பா.ஜ.க. அத்தனைத் தொகுதிகளிலும் கட்டிய பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை - டெபாசிட் காலியாயிற்று.

இடையில் திராவிட கட்சிகளின் துணையால் கொஞ்சம் துளிர்க்கப் பார்த்தது. அதுவும் நீடிக்க வில்லை. தனி மரமாக நின்று ஒப்பாரி வைக்கும் நிலை தான்.

வீட்டுக்கு வீடு ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரங்கள் வரட்டும்; வீட்டுக்கு வீடு பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை விரும்புகிறோம்.

முதல் கேள்வி - பிறப்பின் அடிப்படையில் ஜாதி - உயர்வு தாழ்வை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆம் என்றால், அத்தோடு அவர்களின் பிரச்சாரம் அஸ்தமனம்தான். ஏற்கவில்லை என்றால், அவற்றை வலியுறுத்தும் இந்துமத வேதங்கள், ஸ்மிருதிகள், சாத்திரங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றை பகிரங்க மாகக் கொளுத்தத் தயார்தானா என்ற கேள்வி எழும்.

சங்கர மடத்தில் அடுத்த  சங்கராச்சாரி யார்? என்ற வினாவும் வெடிக்கும்.

சம்பளம் கொடுத்து அனுப்பப்படும் இந்தப் பேர் வழிகள் என்ன செய்வார்கள்? முடிவைச் சொல்லவோ, முடிவு எடுக்கக் கூடிய இடத்திலோ இவர்கள் இல்லையே! என்ன செய்வார்கள்? கைபிசைந்து நிற்பார்கள்.

கழக இளைஞர்கள், மாணவர்கள், இனவுணர் வாளர்கள், பகுத்தறிவாளர்கள் ஒருங்கிணைந்து ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை முறியடிக்கத் தயாராக இருக்க வேண்டும். இது பெரியார் பிறந்த மண் என்பதை நிரூபிக்க வேண்டும்.

நாங்கள் தயார்! தயார்!! நீங்கள் தயார்தானா? என்று கேட்கும் நிலை உருவாகட்டும்! உருவாகட்டும்!!

------- விடுதலை தலையங்கம்,12-02-2011


முகத்திரை கிழிப்பு....சு.சாமியே, ஓடாதே, நில்! -3

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் திராவிடர் கழகத்தின் தீவிர உறுப்பினர்கள் என்று அபாண்டமாக பழி சுமத்திய சு.சாமியின் உள்ளி மூக்கை உடைத்தது ஜெயின் கமிஷன் என்றால், மூக்கையே முழுவதும் வெட்டி முடித்தது திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்களின் விடுதலை அறிக்கை (10.10.2000)

எல்லாரிடத்திலும் விளையாடிப் பார்க்கலாம் என்று நினைத்த மனிதரின் ஆட்டபாட்டம் திராவிடர் கழகத்திடம் எடுபடவில்லை.

அந்த அறிக்கையிலே சு.சாமியின் அஸ்திவாரத்தையே நொறுக்கித் தள்ளி னார். அதில் ஒரு பகுதி இதோ:

ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கை மீது மத்திய அரசு மேற்கொண்ட அடுத்த கட்ட நடவடிக்கைபற்றிய ஓர் அறிக்கையில், இந்த யோக்கியர் சுப்பிரமணிய சுவாமியின் பங்கு ராஜீவ் காந்தி கொலையில் என்னவென்பது பற்றி என்ன குறிப்பிட்டிருக்கிறது என் பதை நாடு மறந்து விடுமா? நல்லவர்கள் மறந்து விடுவார்கள் என்பது இவரது நினைப்போ? 6 மாதங்களில் 8 முறை விசாரிப்பட்டவர் சு.சுவாமி (20-3-1995. 27-9-1995)

Memorandum of Action on the Final Report of Jain Commission of inquiry.

பக்கம் 17, 31 ஆகிய பக்கங்களில் என்ன கூறியிருக்கிறது - மத்திய அரசின் உள்துறை? இவரது குருஜி சந்திராசாமி, (அவரது டிரஸ்டில் இடம் பெற்றிருந்த டிரஸ்டிகளில் ஒருவர் சுப்பிரமணிய சுவாமி) பற்றி என்ன கூறியிருக்கிறது?

பக்கம் 16 மற்றும் பக்கங்கள் 26,27,28,29,30,31 Taking the entire evidence, material and circumstances brought on record into consideration, a doubt does arise regarding chanrdaswami’s complicity and involvement. so the matter requires further probe. Para 3, Page 232, vol iii) மற்றும் இந்த ATR இல் உள்ளவற்றை அப்படியே தருகிறோம். அதன் தமிழாக் கத்துடன் (தனியே இணைக்கப்பட் டுள்ளது. அது சுப்பிரமணிய சுவாமியின் முகமூடியைக் கிழித்துக் காட்டும்; நாளை வெளி வரும்)

இதன்படி பார்த்தால் ஜெயின் கமிஷன் பரிந்துரைகளை ஆராய்ந்தபின் மத்திய அரசு ((The  Multi Disciplinary Monitoring agency) சுப்பிரமணிய சுவாமி பங்கு பற்றி மேலும் விசாரிக்கச் சொல்லித்தான் ஆணையிட்டிருக்கிறது.

திராவிடர் கழகத்தைப் பற்றியோ, வீரமணி பற்றியோ அல்ல.

அது மட்டுமா?

ஜெயின் கமிஷன் பரிந்துரைப்படி அவர் பல கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காமல் மழுப்பி மறைத்தமைக் காகவும், பொய்யான கருத்துகளையும் இட்டுக்கட்டி கூறியதற்காகவும் இந்திய குற்றவியல் சட்டம் (இ.பி.கோ.) IPC section 179,193 ஆகியவைகளின் படி அவர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளது. வழக்கு நடந்து, இதன்படி சரியான தீர்ப்புக் கிடைத் தால் இவர் பத்தரை ஆண்டு தண்டனை யும், அபராதமும் செலுத்தி ஜெயிலில் தள்ளப்பட வேண்டிய நபர் ஆவார்.

1. இவரது கட்சியில் பொறுப்பில் இருந்தவரே இவரைப்பற்றிய சந்தேகம் கிளப்பி, இவரை அவரது வழக்கில் குறுக்கு விசாரணை ஜெயின் கமிஷனில் செய்தாரே அதற்கு விளக்கமான பதில் அளித்தாரா இவர்? (இதுபற்றிய தகவலும் வெளிவர உள்ளது)

2. அகில இந்திய காங்கிரஸ் கட்சி யின் சார்பில் ஆஜராகிய ஆர்.என்.மிட்டல் என்ற வழக்கறிஞர் கேள்விகளுக்கோ செல்வி ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கேள்வி களுக்கோ இவர் ஒழுக்காகப் பதில் அளித்தாரா? திணறி, திக்குமுக்காடி உளறிக் கொட்டவில்லையா - இந்த உத்தமபுத்திரர்?

3. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இந்தியா அப்ராட் (india Abroad - வாசிங்டன் நாள் 22.10.1990) என்ற ஏட்டிற்கு அளித்த பேட்டியில் விடுதலைப் புலிகள் முதன் முதலாக இஸ்ரேலியர் களிடம் தொடர்பு கொண்டு, மொசாட் என்ற இராணுவ அமைப்பிடம் இராணு வப் பயிற்சி பெற - தான் உதவியதாக கூறியவர் இந்த சுப்பிரமணிய சுவாமி தான். மேலும் சுப்பிரமணிய சுவாமி ஏற்கெ னவே எல்.டி.டி.யிடம் அனுதாபம் காட்டி வந்ததாகவும், ஈழப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆண்டன் பாலசிங்கம் தன்னை (CIA) சி.அய்.ஏ. ஏஜென்ட் என்று கூறிய தால் புலிகள் ஆதரவை தான் விலக்கிக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

ஜெயின் கமிஷனில் முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் வாதாடிய பிரபல வழக்கறிஞரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ராம்ஜெத்மலானி சுப்பிர மணிய சுவாமி பற்றி கமிஷனில் என்ன கூறினார்?

சுப்பிரமணிய சுவாமி நீண்ட கால விடுதலைப் புலிகளின் நண்பர். இந்தியா அப்ராட் பத்திரிகையின் செய்தியே அதற்குச் சான்று.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன் நண்பர்கள் ஊடுருவி இருப்பதாக சுவாமி கூறினார். நான் அடுத்தடுத்து குறுக்கு விசாரணை செய்தபோது, அவர் தன் கருத்தை மாற்றிக் கொண்டார். ராஜீவ் காந்திக்குப் போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்த காலகட்டத்தில் எஸ்.பி.ஜி பாதுகாப்பை மீண்டும் ராஜீவுக்கு வழங்க வேண்டும்; ஆனால் சுப்பிரமணிய சுவாமி அமைச்ச ராக இருந்த போது தக்க ஏற்பாடு எதுவும் செய்யவில்லை.

இந்தப் பாதுகாப்பை ராஜீவுக்கு வழங்க வேண்டும் என்று, அவர் பிரதமர் சந்திரசேகரிடம் விவாதிக்கவில்லை. சுப்பிரமணிய சுவாமி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தான் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். எனவே அவர்தான் இதற்குப் பொறுப்பு. கருணாநிதிக்கோ சுவாமியைப் போன்று பிரதமராக வேண்டும் என்ற ஆசை கிடையாது. பிரதமர் ஆகும் தருணம் ராஜீவைவிட எனக்குத்தான் உண்டு என்று கூறியவரும் சாமிதான்.

இந்தியப் பிரதமராக சுப்பிரமணிய சுவாமி பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ராஜீவ் விரும்பினார் என்று சுவாமியே கூறுகிறார். இப்படி ஒரு வியாதி நமது நாட்டுக்குத் தேவையா? 91 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலகட்டத்தில் அடுத்த பிரதமர் ராஜீவ்தான் என்பதை அனைவருமே பேசினர். இந்த நிலையில் சுப்பிரமணிய சுவாமி பிரதமராக வேண்டும் எனில் என்ன செய்வார்? - என்று ராம்ஜெத்மலானி ஜெயின் கமிஷனிலேயே கூறினார்.

இவ்வாறு அறிக்கையின் மூலம் திராவிடர் கழகத்துடன் மோதிய சு.சாமி பார்ப்பானின் முகமூடியை உடைத்தெறிந் தார் தமிழர் தலைவர்.

அதற்குப் பிறகு இந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை இந்தஆசாமி. இவரைப்பற்றி ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கைமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் என்ன? அதையும் அடுத்துத் தெரிந்து கொள்வோமே!

--------------- விடுதலை,மின்சாரம் (12-02-2011)


Friday, February 11, 2011

சு.சாமியே, ஓடாதே, நில்! ----- 2

விகடகவி, அக்கப்போர் ஆசாமி, அகாசுகா  ஆளு, டுப்பாக்கூர் பேர்வழி, கோமாளிராயன், விளம்பரப் பிரியன்-என்று நாட்டு மக்களால் பட்டம் சூட்டப்பட்ட அக்கிரகார அபிஷ்டுதான் இந்தச் சு.சாமி! கிறுக்கராக இருந்தாலும், அல்லது கிறுக்கர் போல பாவனை பண்ணினாலும் தான் ஓர் அக்கிரகார அம்பி என்பதில் மட்டும் கில்லாடிதான்!

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணா யிருக்கும் ஜாலக்காரர்தான்.

தமிழர்களில் முன்னணியாக இருக்கக் கூடியவர்  மீது திடீரென்று வெடிகுண்டைத் தூக்கிப் போடுவார்.

செல்வாக்கானவர்கள் பற்றி விமர்சனம் செய்தால் செங்கல்லுக்குக்கூட விளம்பரம் கிடைக்குமே!. அந்தக் கலையைக் கற்ற கெட்டிக்காரர்!

தி.மு.க., - பா.ம.க., பிரச்சினை ஒரு புறமிருக்க, ராஜீவ் காந்தி படுகொலையில், வெளிநாட்டுச் சதிவலை தொடர்புகள் உள்ளதா என்பதை விசாரிக்க, சி.பி.அய். யின் டீம் ஒன்று, ஜெர்மன் நாட்டுக்குப் பயணிக்க உள்ளது.

இந்த கே.பத்மநாபன் வேறு யாருமல்ல; சர்வதேச நிதி நிருவாகப் பொறுப்பாளர். கே.பி. என்று புலிகளால் அன்போடு அழைக்கப்படுபவர். அவ்வளவு எளிதில் நெருங்கமுடியாத நபர்!

இப்படிப்பட்ட கே.பி.யைத்தான் டாக்டர் ராமதாஸ் ரகசியமாகச் சென்று சந்தித்துப் பேசினார். தாய்லாந்து சென்று கே.பி.யை டாக்டர் ராமதாசும், திருமாவளவனும் சந்தித்துப் பேசினார்கள். ராமதாசையும், திருமாவள வனையும் சி.பி.அய். விசாரிக்க வேண்டும் என்றார் சு.சாமி. ( குமுதம் ரிப்போர்ட்டர் 22-6-2008 - பக்கம் 10).

இதுபற்றி மானமிகு திருமாவளவனிடம் கேட்டபோது, சுப்பிரமணியன் சுவாமி ஓர் அகாசுகா பேர்வழி என்பதை அவ்வப்போது இப்படித்தான் காட்டிக் கொள்கிறார் என்று முகத்தில் அறைந்தது போல பதில் கூறினார்.  அந்தத் தகவல் முற்றிலும் பொய் என்று முகத்திரையைக் கிழித்தார். (அதே குமுதம் ரிப்போர்ட்டர் இதழில்).

அதெல்லாம் எங்கே உறைக்கப் போகிறது உளுத்துப் போன பேர்வழிக்கு?

ஆதாயம் பெறுவதற்கு அவ்வப்போது சிலருக்கு வலையை வீசுவார் - அவர்களை இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்து தள்ளுவார். அப்படித்தானே ஒருமுறை மதுரைத் தொகுதி எம்பியானார்.

திடீர்னு டீ பார்ட்டிக்கு அழைப்பார். அதில் கண்டிப்பாக வில்லங்கம் இருக்கும்.

அ.தி.மு.க.வின் ஆதரவோடு இரண்டாவது முறை யாகப் பிரதமராகியிருந்தார் வாஜ்பாய். அப்போது முன்னாள் கடற்படைத் தலைவர் விஷ்ணு பகவத் சுமத்திய குற்றச்சாற்றுகளின்படி, பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கும் ஜார்ஜ் ஃபெர்னாண்டசை, இலாகா மாற்றம் செய்ய வேண்டும் என்று நிர்பந்தம் செய்தார் ஜெயலலிதா.

ஆனால் அதற்கு வாஜ்பாய் செவிசாய்க்காததால், ஜெயலலிதா ஆதரவை மறுபரிசீலனை செய்யும் முடிவுக்கு வந்திருந்தார். அப்பொழுதுதான் இந்த சு.சுவாமி குறுக்கே புகுந்து டீ பார்ட்டி நடத்தி அதில் பா.ஜ.க. அல்லாத தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த டீ பார்ட்டிக்குப் பிறகே வாஜ்பாய் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை ஜெயலலிதா வாபஸ் வாங்கினார். ஆட்சியும் கவிழ்ந்தது.  அத்தனையும் சுவாமி புண்ணியம்.

உண்மையில் ஃபெர்னாண்டசை இலாகா மாற்றுவது மட்டுமே ஜெயலலிதாவின் கோரிக்கை அல்ல; மதுரை தொகுதி எம்.பி.யான சுவாமியை நிதியமைச்சராக்க வேண்டும் என்பதுதான். இது முழுமையாக நடக்கா விட்டாலும் வாஜ்பாய் அரசு கவிழ்ந்ததில் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் பரம திருப்தி!

(கல்கி 6-4-2008 பக்கம் 47)

எழுதி இருப்பது விடுதலை ஏடு அல்ல; முர சொலியும் அல்ல. நக்கீரனும் அல்ல. அவாள் ஆத்துக் கல்கிதான் இப்படி உண்மையைக் கக்கியுள்ளது.

பதவிக்காக எந்தப் பித்தலாட்டத்தையும் செய்ய கிஞ்சிற்றும் தயங்காத தரகர் என்பதை கல்கியே கணித்து விட்டதே. அதற்கு மேல் ஆதாரம் எதற்குக் குதம்பாய்?  என்று பாடவேண்டியதுதான்.

மதுரைப் பதிப்பு தினத்தந்தியில் (8-10-2001) ஒரு செய்தி வெளியாகியிருந்தது. பெங்களூரில் அல்சூர் சென்னில்ஸ்ட்ன் சாலையில் நீச்சல் குளத்துடன் கூடிய அடுக்குமாடிக் கட்டடத்தை 1994 இல் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு சு.சுவாமி வாங்கியிருந்தார். அதனுடைய இப்போதைய (1996) மதிப்பு ரூ 60 லட்சம். ஆனால் ரூபாய் 14 லட்சம் 50 ஆயிரத்துக்கு விற்றதாகக் கூறுகிறார்.

பத்திரப் பதிவுக்கான முத்திரைக் கட்டணம் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று அ.இ.அ.தி.மு.க. செயலாளர் வா.புகழேந்தி பெங்களூர் 10 ஆவது கூடுதல் மாஜிஸ்டிரேட் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தாரே!

இதில் கடைந்தெடுத்த பித்தலாட்டம் ஒன்று அரங்கேறியிருக்கிறது - அதுதான் முக்கியம்.
இந்த வீட்டை வாங்கியவர் ஆலன் பிண்டோ. அவர் பெயரில்தான் விற்பனைப் பத்திரமும் தயாரிக்கப்பட்டது.

பிண்டோவுக்குக் குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே அந்தக்  குழந்தை சார்பிலும் முன் பணம் கொடுத்துள்ளதாக விற்பனைப் பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அபார்ட்மென்டை பிரித்து விற்கப்பட முடியாத நிலையில் மூன்று பேருக்கு விற்றதாகக் குறைந்த மதிப்புகளைக் காட்டி அரசுக்குச் சேரவேண்டிய முத்திரைப் பணம் கிடைக்க விடாமல் மோசடி செய்யப்பட்டுள்ளது. விற்பனை செய்யப் பட்ட மூவரில் ஒருவர் யார் தெரியுமா? பிறக்காத - தாயின் வயிற்றுக்குள் இருக்கும் சிசு.

இப்படிப்பட்ட கில்லாடியை இதுவரை யாரும் கேள்விப்பட்டு இருக்கிறோமா?

இந்தச் செய்தியை வெளியிட்ட ஏடு மதுரைப் பதிப்பு தினத்தந்தியும் (8-10-2001) , தி. இந்து ஏடும் (7-10-2001)

முத்திரை ஸ்டாம்பு மோசடி, பிறக்காத பிள்ளைக்கு விற்றதாகப் பொய்த் தகவல் - இப்படிப்பட்ட மோசடி மஸ்தான்தான் மற்றவர்கள் ஊழல் செய்தார்கள் - லஞ்சம் வாங்கினார்கள் என்று கூரை ஏறிக் கொக்கரிக்கிறார்.

தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியாக மனிதனைக் கடித்த கதையாக, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு வீரமணி அவர்களையும் சீண்டிப்பார்த்தார் - விளைவு முதுகுத் தோல் உரிந்தது தான் மிச்சம்.

இந்து ஏட்டில் (5-10-2000) சு.சுவாமியின் பேட்டி ஒன்று வெளிவந்தது. (சு.சுவாமி தும்மினாலும் முதல் பக்கத்தில் மூன்று பத்தியில் செய்தி போட அக்கிரகார ஏடுகள் முண்டியடித்துக் கொண்டு கிளம்பிவிடுமே!)

வீரமணி யாழ்ப்பாணம் போய் பிரபாகரனைச் சந்தித்ததாக வழக்கமாக அவர்  பாணியிலே குண்டைத் தூக்கிப் போட்டார். பிரபாகரனைச் சந்தித்து இருந்தால், ஆமாம், சந்தித்தேன்; அதில் என்ன தப்பு?  என்று கூறக் கூடியவர்தான் தமிழர் தலைவர். ஆனால் உண்மைக்கு மாறாக அவிழ்த்துவிட்ட அந்தக் கரடியின் மூக்கை உடைத்தது போல மறுத்து அறிக்கை வெளியிட்டார் (விடுதலை 10-10-2000)

அந்தப் பேட்டியில் அக்கப்போர் சாமி அதோடு நிறுத்திவிடவில்லை.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் திராவிடர் கழகத்தின் தீவிர உறுப்பினர்கள் என்று கூசாமல் கூறினார்.

அதற்கும் ஆதாரப் பூர்வமாகப் பதில் அடி கொடுத்தார் ஆசிரியர்   - அதுவும் ஜெயின் கமிஷன் அறிக்கையிலிருந்தே எடுத்துக்காட்டி!

திராவிடர் கழகத்தின் பங்கு என்ன என்பது குறித்து  Part III Vol. IV, Chapter VII  என்ன கூறுகிறது?

விடுதலைப் புலிகளை இன்றும் ஆதரிக்கும் திராவிடர் கழகச் செயல் வீரர்கள் (D.K.Activists) பலர் உள்ளனர். ஆனால் திரு. ராஜிவ் காந்தி படுகொலையில் அவர்களில் எவர் ஒருவராவது சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டக் கூடியது எதுவுமே இல்லை என்றுதானே கூறப் பட்டுள்ளது என்று எடுத்துக்காட்டி சு.சுவாமியின் முகத்திலே கரியைத் தடவினார் கருஞ்சட்டை இயக்கத்தின் தலைவர்.

அத்தோடு விடுதலை அறிக்கையை முடிக்கவில்லை. கருஞ்சட்டைப் பட்டாளத்தின் தலைவர். ஓ, சு.சாமியே, உம்மைப் பற்றி ஜெயின் கமிஷன் அறிக்கை என்ன கூறுகிறது தெரியுமா? என்ற வினாவை எழுப்பி விலாவாரியாக எடுத்துக்காட்டி அங்குலம் அங்குலமாகச் சூடு போட்டாரே நினைவிருக்கிறதா?

அடுத்து, அதற்கும் வருவோம் !

------------மின்சாரம், விடுதலை(12-02-2011)


Thursday, February 10, 2011

யார் இந்த சு.சாமி?

யார் இந்த சு.சாமி?

மானமிகு கலைஞர்மீது ஏன் இவர் எகிறிக் குதிக்கிறார்-விழுந்து பிராண்டுகிறார்?

மாவீரன் பிரபாகரன் பற்றி பறையன் என்ற சொல்லை ஏன் பயன்படுத்தினார்?
ஆ.இராசா மீது ஏன் இவ்வளவுத் தூஷணைகள்?

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை எதிர்த்து ஏன் உச்சநீதிமன்றம் செல்கிறார்?
ராமனுக்காக ஏன் வக்காலத்து வாங்குகிறார்?

ராமன்தான் பெரியவன் - மக்கள் நலன் பேணும் சேது சமுத்திரத் திட்டம் முக்கியம் அல்ல என்று ஏன் கருதுகிறார்?

சிதம்பரம் கோயில் தீட்சதர் சுரண்டலிலிருந்து மீட்கப்பட்டு, அரசின் கட்டுப்பாட்டுக்கு வரும் நிலையில், அதனை எதிர்த்து தீட்சதப் பார்ப்பனர் களோடு சேர்ந்து வழக்கில் தம்மை இணைத்துக் கொள்ளத் துடியாய்த் துடிப்பானேன்?

ஜெயலலிதாவுக்கு வாடகை வாயாக ஒலிப்பானேன்? இந்தப் பேர் வழியின் பக்கத்தில் ஈ, காக்கை உண்டா?

இந்தத் தனி மனிதன் வெட்ட வெளியில் சிலம்பாட்டம் ஆடுவதை நாட்டு ஊடகங்கள் தூக்கிச் சுமப்பது ஏன்?

இதற்கெல்லாம் பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை. ஒரு மண்டலம் விரதம் பூணவேண்டியதில்லை. மண்டையை உலுக்கிக் கொண்டு சிந்திக்கவும் தேவையில்லை.
மிக எளிதான பதில், மிக மிக எளிதான விடை என்ன தெரியுமா? இந்தப் பேர் வழி ஒரு பச்சைப் பார்ப்பனர் என்பதால்தான் இவ்வளவுப் பெரிய தடபுடல்!

ஆசாமி அடாடிவடித்தனமாகப் பேசக் கூடியவர் என்பதால் இவ்வளவுப் பெரிய விளம்பரம்.
அடிப்படையில் பார்ப்பனர் என்பதோடு, ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதைப் புரிந்துகொண்டால் இவருடைய சேட்டைகளுக்கான காரணம் சாங் கோபாங்கோமாக பஷ்டமாக பளிச்சென்று புரிந்து விடும்.

இதோ ஓர் எடுத்துக்காட்டு:

கேள்வி: எனக்கு முன்னாள் இருந்த அமைச் சர்கள் என்ன ஃபார்முலாவைக் கடைப்பிடித் தார்களோ, அதையேதான் நான் கடைப்பிடித்தேன். நான் குற்றமற்றவன் என்று ராசா திரும்பத் திரும்ப கூறுகிறாரே?

சு.சாமி: ராசாவுக்கு முன்பு இருந்த பா.ஜ.க அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்பது எனக்குத் தேவையில்லை. ராசா தவறு செய்துள்ளார். அதனால் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன்.

(குமுதம் ரிப்போட்டர் 5.12.2010 பக்கம் 43)

இராசாவுக்கு முன்பு இருந்த பா.ஜ.க., அமைச் சர்கள் என்ன செய்தார்கள் என்பது அவருக்குத் தேவையில்லையாம், ஏன் தேவையில்லை?
விளக்கம் அளித்தாரா?

விவாதம் புரிந்தாரா?

அதெல்லாம் ஒரு வெங்காயமும் கிடையாது.

பா.ஜ.க. அமைச்சர் தவறு செய்தால் அதைப்பற்றி அவருக்குக் கவலையில்லையாம்!
இராசா தவறு செய்தாராம், அதைப் பற்றி மட்டும்தான் பேசுவாராம்.

பா.ஜ.க. வைச் சேர்ந்த அமைச்சர்கள் என்றால் பார்ப்பனர்கள் அவர்களைப் பற்றிப் பேசுவார்களா?

பாரதீய ஜனதா கட்சி என்றால் பார்ப்பனீயத்தைப் பதியம் போட்டு வளர்க்கும் கட்சியாயிற்றே. அதன்மீது தூசு விழலாமா? அப்படி விழுந்தால் அதனைப் பொறுத்துக்கொள்ளத்தான் இவர்களால் முடியுமா?

அதையும் தாண்டி ஆர்.எஸ்.எஸ். காரர் இவர் என்று எழுதுவது ஏனோ தானோ என்ற முறையில் அல்ல. அவரே வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார். அதுவும் எந்த இதழில்? அவாளின் ஆர்.எஸ்.எஸ். ஏடான விஜயபாரதத்தில் (ஏப்ரல் 14, 2006)

ஈரோட்டில் நடந்த வி.இ.பரிஷத் மாநாட்டில் கலந்துகொண்ட ஒரே அரசியல்வாதி நீங்கள்?

அரசியல்வாதியாக நான் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. ஒரு இந்து என்ற முறையில் அரசியலுக்கு அப்பாற்பட்டுதான் கலந்துகொண் டேன். நான் வி.இ.பரிஷத் மேடைகளில் பேசுவது புதிது அல்ல. காஞ்சி சங்கராச்சாரியார் கைதுக்குப் பிறகு கடந்த 2ஆண்டுகளில் 20-க்கும் அதிகமான வி.இ.பரிஷத் மேடைகளில் நான் பேசியிருக்கின்றேன்.

ஆர்.எஸ்.எஸ். பற்றி உங்கள் அபிப்ராயம்?

நான் தீனதயாள் ஆராய்ச்சிக் கழகத்தில் துணைத் தலைவராக இருந்திருக்கிறேன். ஆர்கனைசர் வார இதழில் பல கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். இப்போது மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். இதனால் ஆர்.எஸ்.எஸ். பற்றி என்னால் நன்கு அறிந்துகொள்ள முடிந்தது. நாட்டில் இந்து மனப்பான்மையை ஏற்படுத்துவதில் ஆர்.எஸ்.எஸ். முக்கியப் பங்காற்றி வருகிறது. (விஜயபாரதம், 14.4.2006)

இந்தப் பேட்டி பற்றி விளக்கவா வேண்டும்-விளக்கம் தேவையா இந்த பேட்டிக்கு?

பெயர் - ஜனதா கட்சியின் தலைவர்- ஆனால் அவர் அடிப்படை உணர்வு என்பதோ ஆர்.எஸ்.எஸ். விசுவ ஹிந்து பரிசத் உள்ளிட்ட சங்பரிவார் பக்கம்.

இப்படிப்பட்டவர் எப்படிப் பேசுவார்? எப்படி நடந்து கொள்வார்? அப்படியே பேசுகிறார்- அப்படியே நடந்து கொள்கிறார்.

காஞ்சி சங்கராச்சாரியார் கைதுக்குப் பிறகு அவர் மீது ஆர்வம் பீறிட்டுக் கிளம்பிவிட்டதாம். 2 ஆண்டுகளில் 20 விசுவஹிந்து பரிஷத் கூட்டங்களில் கலந்துகொண்டு முழங்கி இருக்கிறார்.

ஜெயேந்திரர் கைதுக்குக் காரணம் சோனியா வாம்-ஜெயலலிதா இல்லையாம். சோனியாவின் நட்பைப் பெறுவதற்காக ஜெயேந்திரரைக் கைது செய்தாராம் ஜெயலலிதா (ஜெயலலிதாவுக்கே உபயம்!).

சோனியாவின் நட்பைப் பெறுவதற்காக எதற்காக ஜெயேந்திரரைக் கைது செய்ய வேண்டு மாம்? அப்படி எல்லாம் அவரைப் பார்த்துக் கேள்வி கேட்கக்கூடாது. கேட்டால் நான் யார் தெரியுமா, ஹார்வேடு பல்கலைக் கழகத்தில் பாடம் நடத்துபவன் என்று தலைக்கனத்துடன் பேசுவார்.

அமர்த்தியா சென்னுக்கும் நோபல் பரிசு கிடைத்ததே, கிறிஸ்துவ சதி என்று சொன்ன கூட்டம் அல்லவா. அதே ஆர்.எஸ்.எஸ். பாணியில் ஜெயேந்திரரைக் கைது செய்ததற்கும் காரணம் சோனியா காந்தியாம்.

அப்படி யென்றால் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் சங்கரராமன் கொலையே செய்யப்பட வில்லை - கொலை செய்யப்பட்டதாக சொல்வது எல்லாம் சோனியாவின் பிரச்சாரத் தந்திரம் என்று சொல்லுவதற்குக் கூட கூச்சப்படாத ஜென்மம் இது! இவ்வளவுக்கும் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந் திர சரஸ்வதி மீதான குற்றம் சாதாரணமானதா?

இ.பி.கோ. 302, 120-பி, 34, 201 கொலை செய்யத் தூண்டுவது, கூட்டுச்சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை முதலியவை-இவையெல்லாம் குற்றம் இல்லையாம்!

இந்தக் குற்றவாளிக்காக பூணூலை முறுக்கிக் கொண்டு வக்காலத்து வாங்குவாராம்; 20 கூட்டங்களில் பேசினாராம். ஆனால் வெறும் யூகத்தின் அடிப்படையில் ஆ.ராசாவைக் குற்றம் சுமத்தும் விடயத்தில் விண்ணுக்குத் தாவிப் பேசுவாராம். இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் பாசம்! பூணூல் வாதம் என்பது!

கல்லூரியில் படிக்கும்போதே ஆர்.எஸ்.ஸோடு தொடர்பு- ஜனசங்கத்தில் சங்கமம்- குருஜி கோல்வால்கரோடு குசலம். இந்தப் பின்னணி களைத் தெரிந்துகொண்டால் இந்த சு.சாமி பார்ப்பனரின் சூட்சமங்களும், சிண்டு முடியும் நரித்தனங்களும், நஞ்சு தோய்ந்த நாக்கின் நயவஞ்சகங்களும், பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டும் புரட்டுகளும் எங்கிருந்து கிடைத்தன என்னும் விவரங்கள் விவரமாகவே தெரியும்.

முடிந்துவிடவில்லை, இன்னும் இருக்கிறது.

---- மின்சாரம், விடுதலை (10-02-2011)


Wednesday, February 09, 2011

ஓம் ஆல் ரவுண்டராய நமஹ

உலகக் கோப்பை கிரிக் கெட் வரும் 19 ஆம் தேதி துவக்கப்படுகிறது. இந்த முறை இந்தியாதான் கோப் பையைத் தட்டிப் பறிக்கப் போகிறது என்று மூக்கை சொறிந்து விடுகிறார்கள் விமர்சகர்கள்.

அதற்குள் மும்பையில் இந்தியா கோப்பையை வென் றெடுக்க வேண்டும்  என்பதற் காக சித்தி விநாயகர் கோயி லில் விசேஷ பூஜை நடத்தப் பட்டதோடு, சாமி ஊர்வலத் தையும் நடத்தியுள்ளனர்.

இந்துத்துவா மனப் பான்மை என்ற ஒன்று இருக் கிறது. எதிலும் பக்தி ஆஷா டத்தைத் திணிப்பது என்பது அதன் ஆசாரக் குணமாகும். மனிதனின் திறமை, தன் னம்பிக்கை, உழைப்பு இவற் றின் மரியாதையைக் குலைப் பது என்பதுதான் அதன் திரிசூலமாகும்.
கடவுள் சக்தியால் இந் தியா வெற்றி பெறவேண்டும் என்றால், வெற்றி எப்படி விளையாட்டு வீரர்களுக்குச் சொந்தமாக முடியும்?

வெற்றிக்குக் காரணம் கடவுள் சக்தியென்றால், தோல்வி அடையும்போது கடவுளின் தோல்வி என்று ஒப்புக்கொள்வார்களா? அத்தகைய அறிவு நாணயம் எல்லாம் இந்த இந்துத்துவா பார்ப்பனீய மரபில் கிடையவே கிடையாது.

கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாதான் கோப்பையை வெல்லப் போகிறது என்று பிரபல ஜோதிடர்கள் எல்லாம் துண் டைப் போட்டுத் தாண்டினார் கள். தோல்வியில் முடிந்தது என்றவுடன், துண்டைக் காணோம், வேட்டியைக் காணோம் என்று குதிகால் பிடரியில் இடிபட ஓடினார்கள்.

சென்னை அண்ணா நகரில் கடந்த உலகக் கோப் பையின் போது கிரிக்கெட் விநாயகர் கோயிலே உரு வாக்கப்பட்டது. வலது கையில் மட்டை (பேட்) வைத்திருப்பதுபோல ஒரு விநாயகரும், இடது கையில் மட்டை (பேட்) வைத்திருப்பது போல மற்றொரு பிள்ளை யாரும் பிரதிஷ்டை செய்யப் பட்டன.

பிள்ளையாரைத் தோத் தரிக்கும் பாடல்கள் அடங் கிய குறுந்தகடு (சி.டி.) வெளியிடப்பட்டது. இந்தி யிலும், சமஸ்கிருதத்திலும் அந்தப் பாடல்கள் அமைந்த திலிருந்தே பார்ப்பனர்கள் தான் இதன் பின்னணியில் இருக்கின்றனர் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. (கிரிக்கெட்டே பார்ப்பனர்களுக்கான தனி உடைமைதானே!)

குறுந்தகடில் இடம் பெற்ற கிரிக்கெட் பஜன் வருமாறு:

ஏகாதச சிரச கிரிக்கெட் கணபதி
ஸ்வாகதம் சரணாகதம்
தஷிண நான திரிலோச்சன
கிரிக்கெட் கணபதி ஸ்வாகதம்
சரணாகதம்
வாமஹஸ்த திரிலோச்சன கிரிக்கெட்
கணபதி ஸ்வாகதம் சரணாகதம்
ஓம் பவுண்டரி மார்னே வாலே நமஹ
ஓம் சிக்சர் மார்னே வாலே நமஹ
ஓம் ஆல் ரவுண்டராய நமஹ
ஓம் கேட்ச் பக்கட்னே வாலே நமஹ
இந்தி, சமஸ்கிருதத் துக்கு இடையிடையே இங் கிலீஷும் வேறு.
அத்தோடு விட்டார்களா?


சென்னை குரோம் பேட்டை எஸ்.சி.எஸ். மெட்ரி குலேசன் மேல்நிலைப்பள்ளி யில் சிறப்பு யாகம் ஒன்றையும் நடத்தினார்கள். 1500 மாண வர்கள் அதில் கலந்துகொண் டனர். (ஆதாரங்கள்: இந்தியா டுடே, 21.3.2007).

இவ்வளவு செய்தும் இந்திய அணி ஊத்திக்கிட்டது தான் மிச்சம்!

கிரிக்கெட் மட்டுமல்ல, பார்ப்பனிய இந்துத்துவாவின் கடைசி வேர் இருக்கும் வரைக்கும் வீரம், விவேகம், கம்பீரம், தன்னம்பிக்கை அனைத்தும் காயடிக்கப்பட்டு விடும் என்பதை உணர்க!

---------- விடுதலை, மயிலாடன்,09-02-2011


Tamil 10 top sites [www.tamil10 .com ]