வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, May 31, 2010

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்ப்போர் யார்?

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது தமிழர்களின் நீண்ட காலக் கனவுத் திட்டம். ராமன் என்ற இல்லாத கற்பனைப் பாத்திரத்தைக் காட்டி முடக்கியுள்ளனர்.

அண்ணா பெயரால் கட்சி நடத்தும் ஜெய-லலிதா ராமனைக் காட்டி உச்சநீதி மன்றம் சென்-றுள்ளது கண்டிக்கத்தக்கது. இப்பொழுது அந்தத் திட்டமே கூடாது என்கிறார். தமிழர்கள் இவரை அடையாளம் காண்பார்கள்.

மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கை விரைந்து நடத்தக் கோரி அவசர மனுவை (Expedite Petition) தாக்கல் செய்யவேண்டும்.

சேது சமுத்திரத் திட்டத்தில் பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றுள்ள இந்த நிலையில், அதனை முடக்குவது - மக்கள் வரிப்பணத்தை பாழடிப்பதாகும்.
காலதாமதமின்றி திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில்தான் ஜூன் 5 ஆம் தேதி திராவிடர் கழகம் தமிழகம் தழுவிய அளவில் மாவட்டத் தலை நகரங்களில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்திட உள்ளது. ஒத்தக் கருத்துள்ளவர்களை இதில் பங்கேற்க அழைக்கின்றோம்.

எங்கள் போராட்டம் என்றால் அங்கு வன்முறைக்கு இடம் இருக்காது; பொதுச் சொத்துக்குப் பங்கம் ஏற்டாது.

டில்லியில் பெரியார் விழா

தந்தை பெரியார் அவர்களின் 132 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழாவை இந்த ஆண்டு டில்லி பெரியார் மய்யத்தில் நடத்த உள்ளோம்.

செப்டம்பர் 18, 19 ஆகிய இரு நாட்களிலும் சமூகப் புரட்சி விழாவாக பெரியார் பிறந்த நாள் விழா நடைபெறும். தமிழ்நாட்டிலிருந்து ஏராள-மான கழகக் குடும்பங்கள் பங்கேற்று அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பகுத்-தறி-வாளர்கள், சமூக
 நீதியாளர்கள் பங்கேற்பார்கள்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி பற்றிய புள்ளி விவரங்களும் எடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.
திட்டக்குழு இதனை வலியுறுத்தியுள்ளது. நீதி மன்றங்களும் புள்ளி விவரங்களைக் கேட்கின்றன.

மதச் சார்பற்ற அரசாங்கம் என்றாலும் கணக்-கெடுப்பில் மதம் பற்றியும் கேட்கப்படுகிறது. மதத்தைக் கேட்கும்போது ஜாதியையும் கேட்பதுதானே சரியானதாக இருக்க முடியும்?
ஷெட்யூல்டு கேஸ்ட் என்றுதானே சொல்லப் படுகிறது. ஜாதி சட்டப்படி இன்னும் ஒழிக்கப்பட வில்லையே. இந்த நிலையில் ஜாதி வாரியான கணக்கெடுப்பு கட்டாயம் தேவை.

இதில் மிகவும் முக்கியமானது ஒன்று கவனிக்கத் தக்கது. யார் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கிறார்-களோ, அவர்கள்தான் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு கூடவே கூடாது என்கின்றனர். இவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்பதை அடையாளம் காண-வேண்டும்.

இட ஒதுக்கீடு என்பது சலுகையல்ல; யாரும் போடும் பிச்சையும் அல்ல.

செம்மொழி மாநாடு

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. இதுவரை வெறும் உலகத் தமிழ் மாநாடு மட்டும்தான் நடந்துள்ளது. செம்மொழி தகுதி தமிழுக்குக் கிடைத்தபின் நடத்தப்படும் முதல் மாநாடு இது. ஆதலால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாக நடத்தப்பட உள்ளது. எங்கள் பொதுக் குழுவில் இதற்குப் பாராட்டுகளையும், வாழ்த்துக்-களையும் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றி-யுள்ளோம்.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் மேலும் தேவை என்றும் தீர்மானத்தில் கூறியுள்ளோம்.
காலத்துக்கேற்ப மொழியில் மாற்றம் தவிர்க்க இயலாதது.

நாம் வாழுவது எழுத்தாணி காலத்தில் அல்ல. கணினி யுகத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது.

பழைமை மொழி என்பது மட்டுமே மொழிக்குச் சிறப்பல்ல. அது புதுமை மொழியாகவும் மாற-வேண்டும். வளர வேண்டும். மாற்றம் என்பதுதான் மாறாதது; மாற்றம் ஏமாற்றமாக இருக்கக் கூடாது.

மொழி என்பது போராட்டக் கருவி என்று கூறி-யுள்ளார் தந்தை பெரியார். கருவிகள் காலத்துக்கு ஏற்றவைகளாக இருக்க வேண்டாமா?

அணு ஆயுதப் போர் பற்றிப் பேச்சு எழுந்துள்ள ஒரு கால கட்டத்தில் வில், அம்பு வைத்துப் போரிட முடியுமா?

உலகின் பல நாடுகளில் எழுத்துச் சீர்திருத்தம் நடை-பெறத்தான் செய்கின்றன. தமிழிலும் பல காலகட்டங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. செம்மொழி மாநாடு அந்த வகையில் புத்தாக்க மாநாடாக அமைய வேண்டும் என்பதே எங்கள் எதிர்ப்பார்ப்பு!

(உரத்தநாடு _ செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, 30.-5.-2010)

கூடினால் கலையத்தான் வேண்டும் 

செய்தியாளர்: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கூடிக் கலையும் மாநாடு என்று சிலர் சொல்லு கிறார்களே?

தமிழர் தலைவர் பதில்: எந்த மாநாடும் கூடினால் கலையத்தானே வேண்டும். அதே இடத்தில் எத்தனை நாள்கள்தான் கூடிக் கொண்டு இருப் பார்கள். கூடிக் கலைவது என்பது சரியான ஒன்றே!

-------நன்றி விடுதலை (31.05.2010)

                                                                                                                                                                 


ஆரியர்-திராவிடர் பேதம் ஒழிந்து விட்டதா?

பார்ப்பான் என்பவன் தனி ஜாதி என்பது போல சில பார்ப்பனர்கள் கூறுவதை நம்மில் உள்ள சில பார்ப்பன அடிவருடிகள் நம்பி ஏமாறுகிறார்கள். இதன் மூலம்  திராவிடர் என்ற ஒற்றுமை குலையுமா என்றும் பார்பனர்கள் எதிர் பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு நம்மவர்கள் தீனி போடுற மாறி பத்தாம் பசலி தனமாக விவாதம் செய்துகொண்டும் வருகிறார்கள்.

ஆரியம் என்பது என்ன என்றே நம்மில் சிலருக்கு புரியாமல் அவர்கள் மேல் சாதியினர் என்றும் அவர்களை ஏன் நீங்கள் (திராவிடர் கழகம்) இன்னும் எதிர்த்துக்கொண்டு அலைகிறீர்கள் என்றும் சில அதி மேதாவிகள் போகிற போக்கில் பொத்தாம் பொதுவாக கூறி கொண்டு போவர்கள்.

ஆரியம் என்பது நடமாடும் பாசிசம் தம்பி அதனிடம் உனக்கு வேண்டாம் பாசம் தம்பி என்று அறிஞர் அண்ணா அவர்கள் கூறியதை தான் இன்றைய நம் இளைஞர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.
இதோ அண்ணாவே விளக்கம் கொடுக்கிறார் தன்னுடைய ஆரிய மாயை என்ற நூலின் மூலமாக.....அதனை அப்படியே தருகிறேன் படியுங்கள்.

"ஆரியரவாது! திராவிடராவது! எப்பொழுதோ எழுதி வைத்த பழைய சரித்திரத்தை பேசுவதற்கு இது காலமா? இப்பொழுது ஆரியர் இன்னார் என்று யாரால் குறிப்பிட முடியும்? இரு சமூகமும் எவ்வளவோ  ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக கலந்து விட்டன. மறந்து போன இனப்பிரிவை உயிர்ப்பிக்க முனைவது நாட்டுக்கு நலமன்று. அரசியல் முன்னேற்றத்திற்கு அடுத்ததன்று" என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

"இந்த நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் திராவிடர்கள் தாம்; ஆரியர்கள் என்பவர்கள் இந்தநாட்டில் குடியேறினார்கள் என்று சொல்லுவதே தவறு; இது உண்மையான சரித்திரம் அல்ல; இந்திய மக்களை பிரித்து வைக்க வெள்ளைக்காரர்களால் செய்யப்பட சூழ்ச்சி; அவர்களால் செய்யப்பட்டபொய் சரித்திரங்கள்" என்று கூறுவார் நமது காங்கிரஸ் சரித்திர கனிகள்.

இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டு, நம்மவர்களிலும் சிலர் 'ஆமாம்' போடுவர். தங்கள் பகுத்தறிவுக்கு சிறிதும் வேலை கொடுக்காமல் ஆரியர்கள்-பார்பனர்கள் சொல்லுவதை அப்படியே ஒப்புக்கொண்டு, ஐஷ்டீஷ் கட்சியும்,சுயமரியாதை கட்சியும், இக்கட்சிகளின் தலைவராகிய பெரியாரும், அவருடைய தோழர்களும், ஆரியர் ,திராவிடர் என்ற வகுப்பு பிரிவினைப் பிரச்சாரம் செய்கின்றனர் என்று கூறுகிறார்கள். இவர்களுக்கு எத்தனை முறை ஆரியர்-திராவிடர் போராட்ட உண்மையை விளக்கினாலும், அவர்கள் மரமண்டையில் உண்மை குடிபுகுவதேயில்லை. ஆயினும் அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பதை கருதி, நாமும் இது சம்பந்தமாக உண்மைகளை எடுத்துக்காட்டி வருகிறோம். (ஆரிய மாயை: பக்கம் 45)

அண்ணா அவர்கள் 60 வருடங்களுக்கு முன்னால் சொன்ன சேதி அப்படியே இன்றும் பொருந்தி கொண்டுதான் இருக்கிறது. இன்றைக்கு நிறைய கூமுட்டைகள் இப்படி சொல்லித்தான் பார்ப்பன அடிவருடியாக அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் சென்று அவர்கள் எழுதுவதை முற்போக்கு என நம்பி ஒப்புகொள்ளும் நம் இளைய சமுகத்தை என்னவென்று சொல்ல? காரி உமிழ வேண்டும் போல் இருக்கிறது.

இதோ மேலே அப்படி சொல்லிவிட்டு அண்ணா அவர்கள் அதே புத்தகத்தில்,அந்த கால கட்டத்தில் ஆரிய-பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு உதாரணமாக நடந்த ஒரு நிகழ்வையும் நம்மிடம் வைக்கிறார். இதோ அதனையும் தருகிறேன் அப்படியே....

"சென்ற 5 -2 -1946 - ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் செய்த ஒரு முக்கியமான தீர்ப்பை இப்பொழுது எடுத்துக் காட்டுகிறோம்.

நெல்லூரில் வக்கீலாக இருந்த ஜானகிமூர்த்தி என்ற பார்ப்பனர், 16-09-1926 ல் நீலவேங்கடசுப்பம்மா என்ற திராவிடப் பெண்ணைச் சென்னையில் மணந்தார். இப்பெண் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூட உபத்தியாயினி. இவருக்கும் மேற்படி ராமமுர்த்திக்கும் இரு குழந்தைகள் உண்டு. இவர் இரண்டாவது மனைவி . முதல் மனைவி பார்பன மாது.ஜானகி ராமமூர்த்தி இறந்தவுடன், அவருடைய திராவிட மனைவி தன் 2 குழந்தைகளுக்கும் தனக்கும் ஜீவனாம்சம் கொடுக்குமாறு, பார்ப்பன மனைவி மீது வழக்கு தொடர்ந்தாள். ஜில்லா நீதிபதி, திராவிட மனைவிக்கும் அக்குழந்தைகளுக்கும் மாதம் 20 ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்குமாறு தீர்ப்பு செய்தார். பார்ப்பன மனைவி அத்தீர்ப்பை எதிர்த்து, உயர்தர நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாள். இவ்வழக்கை பாண்டுரங்கராவ், சோமையா ஆகிய இரு பார்ப்பன  நீதிபதிகளும் விசாரித்தனர். இறுதியில் இந்த திராவிடர்-ஆரியர் கலப்புமணம் செல்லாது என்று தீர்பளித்து விட்டனர். இது போன்ற ஒரு கலப்புமண வழக்கில், பார்ப்பனரல்லாத நீதிபதி வெங்கடசுப்பராவ் கூறியுள்ள தீர்ப்பையும் தவறானது என்று குறுப்பிட்டுவிட்டனர்.

இந்த நாட்டில் ஆரிய- திராவிடர் வேற்றுமை இல்லை என்று கூறும் சாதுக்களுக்கு, இப்பொழுதாவது புத்தி வருமா என்பது நமக்கு சந்தேகம் தான்.

இந்த தீர்ப்பு கால நிலையை ஆதாரமாக கொண்டு கூறியதும் அல்ல; சட்ட ஆதரவை கொண்டு கூறப்பட்ட தீர்ப்பாக இருக்குமானால், ஜில்லா முன்சீப்பின் தீர்ப்புக்கும், மற்றொரு வழக்கில் நீதிபதி வெங்கடசுப்பராவ் கூறியுள்ள தீர்ப்புக்கும் முரண்பாடு ஏற்பட்டிருக்காது. சட்டமென்றால் எல்லோருக்கும் ஒன்றாகத்தானே அமைந்திருக்க வேண்டும்.

ஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக்கொண்டே இத்தீர்ப்பு கூறப்பட்டிருகிறது. ஆரிய வேத ஸ்மிருதிகளோ, பெரும்பாலும் திராவிடர் கொள்கைக்கு மாறுபட்டவை, திராவிடரை அடிமை படுத்த வேண்டும் என்னும் நோக்கத்துடன் எழுதப்பட்டவை. அவை திராவிட அறிஞர்களால் ஒப்புக்கொள்ள முடியாதவை. இந்த ஆரிய வேத ஸ்மிருதிகள் முக்கிய வழக்குகளை முடிவு செய்வதில் இன்னும் ஆதரவாக இருக்குமானால் ஆரியர்-திராவிடர் பேதம் ஒழிந்துவிட்டதாக கூறுவது எவ்வாறு பொருந்தும்?"

(ஆரிய மாயை: பக்கம் 46 - 47)

50 வருடங்களுக்கு முன்னால் ஆரியர்-திராவிடர் பேதத்திற்கு உதாரணமாக எடுத்துக்காட்டிய வழக்கு..இப்படி ஏராளமான உதாரணங்கள் இருக்கிறது. முடிந்தால் ஆரிய மாயை வாங்கி படியுங்கள்...தெளிவு பெறுங்கள்.

இன்றும் இதே போல நிறைய பேர் பார்ப்பனர்கள் சொல்லுவதை அப்படியே ஏற்றுக்கொண்டு ...பேதம் ஒழிந்துவிட்டதாக கூறுவது அண்ணா கூறுவது போல இன்னும் மரமண்டைகள் இருக்கிறார்கள் என்பதைத்தான் நமக்கு புலப்படுத்துகிறது. இன்று நிறைய பார்பனர்களே (நம்மவர்களும் சேர்த்துதான்) என்ன சொல்லுகிறார்கள் என்றால் இவ்வளவு உயர் சாதியினர் இருக்கும் போது பார்பனர்களை மட்டும் சாடுவது ...பார்ப்பனர்களின் மேலுள்ள வெறுப்பையே காண்பிக்கிறது என்று கூறுகிறார்கள். சில பார்ப்பனர்கள் இந்த சூத்திரத்தை திராவிடர் இனத்தை ஏமாற்ற ஒரு வார்த்தை சாலமாக பயன்படுத்திகொள்கிறார்கள். அந்த காலத்தில் நேரடியாக எதிர்த்தார்கள் இன்று அதற்க்கு வாய்ப்பில்லாமல் போனதும் மறைமுகமாக எதிர்கிறார்கள் இந்த பார்பனர்கள். ஆனால் பார்ப்பனீயம் இன்னும் ஒழிந்தபாடில்லை. அதனை வேரறுக்க வேண்டிய அவசியம் இன்னும் நமக்கு உள்ளது.

முதலில் பார்ப்பான் என்பவன் தன்னை தனியாக தனி இனமாக தான் அடையாள படுத்திக்கொள்கிறான். மற்ற உயர் சாதியினர் எனப்படுபவர் அனைவரும் திராவிடர்களே.....என்றாவது பார்ப்பான் தன்னை திராவிடன் என்று சொல்லி கொண்டதுண்டா? ஏன் இன்றைக்காவது சொல்லுவனா? நாங்களும் தமிழன், பார்ப்பான்-திராவிடர் பேதம் ஒழிந்து விட்டது என்று கூறும் பார்ப்பனர்கள், திராவிடர் என்று ஒப்புக்கொள்ள தயாரா? .

ஏன் மற்ற உயர் வகுப்பினர் என்று கூறப்படுபவர்கள் எல்லோருமே வயலில் இறங்கி உழுகிறார்கள், விவசாயம் செய்கிறார்கள்,கல் உடைகிறார்கள்,சாரம் கட்டுகிறார்கள்....மற்றும் நடைபாதை வியாபாரிகளாக கூட இருக்கிறார்கள்.....ஆனால் இதில் ஏதாவது ஒன்றாவது பார்ப்பான் செய்து பார்த்ததுண்டா? பேதம் ஒழிந்துவிட்டது என்று கூறுபவர்களே?. இன்றும் நம் வீட்டு பிள்ளைகள் தான் பெரிய உணவங்களில் சுத்தம் செய்ய,பாத்திரம் பெருக்க என்று வேலை பார்கிறார்கள் ...நீங்கள் சென்ற எந்த உணவகத்திலாவது பார்ப்பான் வீட்டு பிள்ளைகள் இந்த வேலைகள் செய்து பார்த்ததுண்டா? பேதம் ஒழிந்துவிட்டது என்று கூறுபவர்களே?

பார்ப்பானில் ஏழை பார்ப்பானாக இருக்கும் அவர்களுக்கு இட ஒதிக்கீடு சலுகை இருப்பதால் படிக்க முடியவில்லை என்று கிருமிலேயரை ஆதரிக்கும் பார்ப்பன அடிவருடிகளே.....ஏழை பார்ப்பான் நடை பாதை வியாபாரி ஆவானா? சாரம் கட்டுவானா? கல்லு உடைப்பானா? உணவகத்தில் சுத்தம் செய்யும் வேலை பார்ப்பானா? ஏழையாக இருந்தால் அவர்கள் வறுமையை போக்கிக்கொள்ள இந்த வேலை பார்க்க வேண்டியது தானே? நாமும் நம் வீட்டு பிள்ளைகளும் எவளவு நாளாக இந்த வேலை பார்த்தோம் இப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த இட ஒதிக்கீடு மட்டும் நமக்கு இல்லாமல் இருந்தால் இப்பொழுது ஒரு சில உயர் பதவியில் இருக்கும் பார்ப்பனரல்லதோர் கொஞ்சமும் முன்னேறி மேலே வந்து இருக்க முடியுமா? இந்த இடஒதிக்கீடு வந்து பார்ப்பான் பாதிக்கப்பட்டான் என்று கூறுபவர்களே ...அப்படி பாதிக்கப்பட்டு இருந்தால் அதனால் பாதிக்கப்பட்டு கல்லுடைக்கும் பார்ப்பானை, செருப்பு தைக்கும் பார்ப்பானை, மலக்கழிவு அல்லும் பார்ப்பானை,நடை பாதை வியபாரியாக இருக்கும் பார்ப்பானை,சலவை தொழிலாளியாக இருக்கும் பார்ப்பானை  காண்பியுங்கள் .....நாங்கள்  பார்ப்பனிய எதிர்ப்பை விட்டுவிடுகிறோம்.

பார்ப்பனர்கள் இன்னும் நம்மவர்களை ஏமாற்றலாம் என்று நினைத்துக்கொண்டு அவர்களிடம் இருக்கும் அத்தனை ஊடகங்களின் வாயிலாக பார்ப்பனிய நஞ்சை ஊட்டுகிறார்கள். இந்த பார்ப்பன ஊடகங்களின் செய்திகளை படித்து அதன் மூலம் இப்படி பகுத்தறிவு இழந்து யார் நமக்காக போராடுகிறார்கள் என்று கூட யூகிக்க முடியாமல் திணறும் மரமண்டைகளே இப்போதாவது உணர்வீர்களா?

நம்மில் அனைவரும் திராவிடரே. பார்ப்பனர்கள் "மற்ற உயர்சாதி" என்ற வார்த்தை சாலத்தை கூறியதும் நம்பி ஏமாறும் மரமண்டைகளே! உங்களுக்காக அதனையும் விளக்குகிறேன் கேளுங்கள்.....மற்ற உயர் வகுபினரை கண்டிக்கவில்லை என்று கூறும் இவர்கள் .....எங்கே பிராமணன்? என்று தேடுகிறார்களே ...மற்ற உயர் குலம் என்று பார்ப்பனர்களால் கூறப்படுபவர்கள் யாரும் எங்கே முதலியார்? எங்கே செட்டியார்? என்றா தேடுகிறார்கள்...வெறுக்கத்தக்கதா பிராமணியம்? என்று தொடர் எழுதினார்களே .... மற்ற உயர் குலம் என்று பார்ப்பனர்களால் கூறப்படுபவர்கள் யாரும் வெறுக்கத்தக்கதா முதலியாரியம்? வெறுக்கத்தக்கதா செட்டியாரியம்? வெறுக்கத்தக்கதா நாயுடுவியம்? என்றா எழுதினார்கள்..... இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள் ஆரியம்-பிராமணன்-பார்ப்பான் என்பவன் தனி ஒரு இனம் என்று....மற்ற அனைவரும் திராவிடரே...திராவிடர்களை ஏமாற்றவே இந்த வேடம் போடுகிறார்கள்.

இவை அனைத்தையும் இந்த பார்ப்பன கூட்டம் செய்யும் பொழுது யார் தட்டி கேட்பது ....திராவிடர் கழகமும் அதன் போர் வாளாக இருக்கும் விடுதலையும் அதன் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களும் தானே...உடனே "வேருக்கதக்கத்தே பார்ப்பனீயம்" என்று உண்மையில் அதற்க்கு மறுப்பு தொடர் எழுதினார்களே..வேறு யார் செய்தது? இன்று இந்த பார்ப்பனியத்தை யார் வேரறுப்பது?.. அவர்தானே அந்த பணியினை செய்கிறார். அதோடு அவர் நிழலாக இருக்கும் கவிஞரும் பார்ப்பனிய வேரை அறுக்க மின்சாரம் பாய்ச்சி கொண்டுதானே இருக்கிறார். அப்படியும் இந்த கூட்டத்துக்கு புரியவில்லையே ..யார் நமக்காக போராடிக்கொண்டு இருக்கிறார்கள் என்று.

நான் சில இடங்களில் என்னை யார் என்றே அறிமுகம் செய்து கொள்ளாமல் சில விவாதங்களை, பார்ப்பனிய எதிர்ப்பினை சொல்ல முயலும் போது ஒ நீ வீரமணி கூட்டத்தை சேர்ந்தவனா? என்று ஒரு வினா. எனக்கு அதனை கேட்டதும் மிக மகிழ்ச்சியாக இருக்கும் ...பார்ப்பனிய எதிர்ப்பு என்றாலே எங்களை போன்ற இளைஞர்களுக்கு எல்லாம் அந்த உணர்வினை ஊட்டியது அறிவு ஆசான் அய்யா தந்தை பெரியாரிடம் பயிற்சி பெற்ற ஆசிரியர் வீரமணி தான் என்று அவர்களாகவே ஒப்புகொண்டுவிடுகிறார்கள். பிறகு எதற்கு வெட்டி வேஷம்? பெரியார் விட்டு சென்ற பணியினை திராவிடர் கழகமும் அதன் தலைமையும் ஒழுங்காக எடுத்து செல்லவில்லை என்று நம்மவர்களே பார்பனர்களுக்கு தீனி போடுவது போல ஒரு தவறான பிரசாரம் ஏன் என்று புரியவில்லை.

இதே பார்ப்பானை பாருங்கள் பெரிய சங்கராச்சாரிக்கு பிறகு ...லோககுரு சரியில்லை என்று என்னைக்காவது எந்த பார்ப்பானாவது ஒப்புகொண்டுள்ளான? சங்கரச்சாரியர்களே ஒழுக்க கேடுகளையும்,வருணாசிரமங்களை உயர்த்தி பிடிக்கும் புராணங்களை பேசி பார்ப்பனீயம் வளர்ப்பவர்கள் ஆவர். அவர்கள் இல்லை என்றால் பார்ப்பனீயம் வளர்க்க முடியாது திராவிடர்களை அடிமை படுத்த முடியாது என்று எல்லா பார்ப்பானும் புரிந்து கொண்டு அவர்கள் எந்த குற்றம் செய்தாலும் மூடி மறைத்து அவர்களை பாதுகாக்கிறான்.அனால் இங்கு திராவிடர் கழகமும் அதன் தலைமையும் ராணுவ கட்டுப்பாட்டை போல ஒரு கட்டுப்பாடு விதித்து இளைஞர்களை மிக ஒழுக்கத்துடன் நல்வழிப்படுத்தி பெரியார் வழியினில் பார்பனியத்தினை வேரறுக்க அழைத்து செல்லுகிறது. அதனை விமர்சிக்க நம்மவர்களிலேயே ஒரு கூட்டம் பார்ப்பானுக்கு துணை போகிறது. இதனை என்னவென்று சொல்லுவது? லோககுருவுக்கள் எவளவு கொலை குற்றவாளியாக, பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு அதற்காக 2 மாதம் சிறையில் இருந்தும் அவருக்கு பவள விழா நடத்தும் பார்பன கூட்டத்தை பார்த்தாவது திருந்த வேண்டாமா? யார் நமக்காக போராடுகிறார்கள் என்று....

இறுதியாக ஆரிய கூட்டத்தை நோக்கி ஒரு எச்சரிக்கை விடுகிறோம். ஆரியம் என்பது
வேறு திராவிடம் என்பது வேறு...உங்களுக்கு சமஸ்கிருதம், புராணம் என்றால் அதனை உங்களுடன் வைத்துகொள்ளுங்கள்....ஆனால் தனித்தன்மை வாய்ந்த திராவிடர் இனத்தை சீரழிக்க, ஒழுக்கத்தை கெடுக்க ஏன் அதனுள் உங்கள் ஒழுக்கம் கெட்ட பார்பனிய சிந்தனைகளை புகுத்துகிறீர்கள் என்பதுதான் எங்கள் கேள்வி?

ஆரிய மாயையிலிருந்து விடுபட்ட அன்றே அறியாமையிலிருந்து நம்மக்கள் விடுபடுவர்! ஆண்மை பெறுவர்! உலகின் அணியாவர். ஆரியம் ஒரு மாயை என்பதை விளக்க அறிவாளிகள் தந்துள்ள அறிய உண்மைகளை காண்மின். பிறருக்கு கூறுமின்! அறப்போர் தொடுமின்! வெற்றி நமதே! என்ற அண்ணாவின் கூற்றினை இன்றைய இளைய சமுதாயம் உணர்ந்து ஆரியர்-திராவிடர் பேதம் ஒழிக்க வாருங்கள்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

Saturday, May 29, 2010

எச்சரிக்கை! பெரியாரையும் வீரமணியையும் பிரித்துப் பேச ஆரம்பித்தால் உள்ளே எதிரி புகுந்துவிடுவான்

தமிழ்நாடு என்று சொல்லுவதை விட தந்தை பெரியார் நாடு என்று சொல்லுவதுதான் நமக்கு மிகப் பெரிய பெருமையென்றார் அலைகடல் வெற்றிகொண்டான்.
சென்னை - புரசைவாக்கம் தாணா தெருவில் வட-சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நேற்று (28.5.2010) நடைபெற்ற சிறப்புப் பொதுக்-கூட்டத்தில் பெரியாரும் வீரமணியும் என்ற தலைப்பில் தி.மு.க. சொற்பொழிவாளர் வெற்றி-கொண்டான் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

நான் எனது சொந்த வீட்டில், தாய் வீட்டில் பேசும் உணர்ச்சியோடு பேசுகின்றேன். இங்கு நான் உரையாற்-றும்போது புதுத் தெம்பும், புத்துணர்ச்சியும் பெறுகின்றேன்.
பிரித்துப் பார்க்காதே

தந்தை பெரியாரும் வீரமணியும் என்று சொல்லும்போது இருவரையும் பிரித்துப் பார்க்கக் கூடாது. பெரியார் சிந்தித்தார்_- சொன்னார்_- செயல்பட்டார் - நம்மை மனிதராக்கினார். கொள்கைச் சொத்துக்களை விட்டுச் சென்றார்_-
நமக்கு வீரமணியையும் தந்தார்_- வீரமணியோ பெரியார் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். இதில் ஏன் இவர்களைப் பிரித்துப் பார்க்க வேண்டும்?

பிரித்துப் பேச ஆரம்பித்தால் உள்ளே எதிரி புகுந்துவிடுவான். இதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கருஞ்சட்டைத் தொண்டன் என்பவன் யார்?

இந்திய எல்லையில் இராணுவ வீரர்கள் நாட்டைப் பாதுகாப்பது போல ஒவ்வொரு கருஞ்சட்டைத் தோழனும் இந்த நாட்டைப் பாதுகாத்து வருகிறான்.
இன்றைக்கு நாம் பெற்றிருக்கிற வாழ்வு எல்லாம், வளம் எல்லாம் பெரியார் என்ற தலைவன் கொடுத்துச் சென்றது.

ஒரு காலத்தில் வடநாட்டான் நம்மை ஆண்டான். நம் ஆட்சியை இருமுறை கவிழ்த்தான். இன்றைக்கு இந்திய ஆட்சியைக் கவிழாமல் காக்கும் அதிகாரம் தமிழ்நாட்டிற்கு அல்லவா கிடைத்திருக்கிறது! இந்தப் பலம் நமக்கு எங்கே இருந்து கிடைத்தது? காரணம் பெரியார் அல்லவா!

இந்தியாவின் தலைநகரம் டில்லியா? தமிழ் நாடா? என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளதே! நம்மைப் பெரியார் ஆளாக்கி வைத்து விட்டுச் சென்ற தன்மை-யில் கிடைத்த மரியாதை இது.

பெரியார் நாடு

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நம் நாட்டைத் தமிழ்நாடு என்று சொல்லுவதை விட தந்தை பெரியார் நாடு என்று சொல்லுவதுதான் சரியா-னது, - நமக்குப் பெருமை அளிக்கக்கூடியதும் ஆகும்.

பெரியார் என்ற ஒரு மாமனிதன் நம்மிடம் தோன்றியிருக்காவிட்டால் இந்தத் தமிழ் ஏது? தமிழன் ஏது? எதிரி நம்மை ஏப்பமிட்டிருக்க மாட்டானா?
எதிரியின் கைகளில் இருந்த ஆயுதங்களை யெல்லாம் பறிமுதல் செய்து தந்தவர் பெரியார்தான்.

 சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில், பெரியாரும், வீரமணியும் என்ற தலைப்பில் அலைகடல் வெற்றிகொண்டான் உரை கேட்கத் திரண்டிருந்தோர்...

பெரியாருக்குப் பிறகு வீரமணி

உங்களுக்குப் பிறகு இந்த இயக்கத்துக்கு வாரிசு யார்? என்று பெரியாரைக் கேட்டார்கள். கொள்-கைதான் என்று பளிச்சென்று சொன்னார் . அந்தக் கொள்கைதான் நமக்குக் கிடைத்த ஆசிரியர் வீரமணி.

சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஆதிக்க-வாதிகள் மிரட்டிய போது கூட தம் எழுத்தாலும் பேச்சாலும் அவற்றையெல்லாம் முறியடித்துக் காட்டியவர் பெரியார்.

பெரியார் கொள்கைக்கு அழிவு கிடையாது

உலகில் எத்தனையோ சீர்திருத்தவாதிகள் தோன்றினார்கள்; கருத்துகளை எடுத்துக் கூறினார்கள். அவர்கள் எல்லாம் விரட்டப்பட்டார்கள்_- ஒழிக்கப்-பட்டார்கள். ஆனால் நம் அய்யாதான் எல்லா எதிர்ப்புகளையும் பொடிப்பொடியாக்கிக் கொள்கை-யில் வெற்றி பெற்றார்.

உலகத்தில் எந்த கொள்கை அழிந்தாலும் நம் பெரியார் தந்த கொள்கைக்கு அழிவே இல்லை. அது நம்மிடம் இருக்கும் வரைக்கும்தான் நமக்குப் பாதுகாப்பு.
கடைசிக் கருஞ்சட்டைக்காரன் உள்ளவரை தந்தை பெரியார் கொள்கைக்கு அழிவே இல்லை.

பெரியார் இருந்த காலத்தில் இருந்த எதிர்ப்புக்கும் ஆசிரியர் வீரமணி காலத்தில் இருக்கும் எதிர்ப்புக்கு-மிடையே வேறுபாடுகள் உண்டு.

மூடநம்பிக்கைகளைப் பரப்பும் ஊடகங்கள்

இப்பொழுது இருக்கும் ஊடகங்களும், தொலைக் காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு மூட-நம்பிக்கைகளைப் பரப்பி வருகின்றன. காலை முதல்
இரவு வரை மூடச் சரக்குகள்தான்.

நீ பிரதமராக வேண்டுமா? உன் பெயரோடு இரண்டு எழுத்துக்களைச் சேர்த்துக் கொள் என்-கிறான். அந்த ஜோதிடனை நான் தேடிக் கொண்டி-ருக்கிறேன். அட முட்டாளே! அடுத்தவனை ஏண்டா பிரதமராக்க ஆசைப்படுகிறாய்? உன் பெயரில் இரண்டு எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டு நீ ஜனாதிபதி-யாகப் போகவேண்டியதுதானே? என்று கேட்பேன். என் கண்களுக்கு அவன் சிக்க மாட்டேங்குறான்.

காந்தியைச் சுட்டபோது கடவுள் ஏன் காப்பாற்றவில்லை?

கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்கிறோம். இருக்கு, இருக்கு என்பவனைப் பார்த்து நான் கேட்க விரும்புகிறேன். காந்தியார் மேல்சட்டை கூட இல்-லாமல் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு திரிந்தார். உண்மையான ஆசிரமவாசி போல இருந்தவர். அவரை கோட்சே என்ற பார்ப்பான் சுட்டபோது எங்கேடா போச்சு உன் கடவுள்? எதற்கு எடுத்தாலும் ராம் ராம் என்பவராயிற்றே காந்தியார்!- அந்த ராமன் வந்து காப்பாற்றினானா? ( பலத்த கைதட்டல்)

வேலும் சூலாயுதமும் ஏன்?

எவ்வளவு காலமாக இந்த தெய்வங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். வளரவே யில்லையே! பிள்ளைக் குட்டிகளைக் காணவில்லையே! இது கூட இல்லாமல் எதற்கடா உன் கையில் வேலு, சூலாயுதம் என்று கேட்பதில் என்ன தப்பு?

அது என்ன மரண யோகம்?

இராகு காலம் என்கிறான் _மரண யோகம் என்-கிறான். இப்படியெல்லாம் சொல்லி நாள் ஒன்றுக்கு நம்மை மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் படுக்க வைத்துவிட்டானே!

மரண யோகத்தில் அந்த ஒன்றரை மணி நேரத்தில் என்ன நடக்கிறது? ஒன்றரை மணி நேரத்தில் செத்துப் போய் மீண்டும் பிழைத்துக் கொள்கிறானா? இப்படியெல்லாம் கேட்கக்கூடிய பகுத்தறிவை நமக்குக் கொடுத்துச் சென்ற தலைவர்தான் நம் பெரியார். இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்கக் கூடிய ஒரு கூட்டம் உலகிலேயே தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அதற்குக் காரணம் தந்தை பெரியாரே.

கர்ப்பக்கிரகத்துக்குள் என்னென்ன அக்கிரமங்கள்?

நாம் கோயில் கர்ப்பக் கிரகத்திற்குள் சென்றால் தீட்டு என்கிறான். நீ செய்கிற வேலை என்ன? அந்தக் கடவுளுக்கு முன்னால்தான் எல்லாம் நடக்குது. பிரேமானந்தா என்ற சாமியார் செய்யாத அக்கிரமமே இல்லை. இந்தியாவிலேயே பெரிய வக்கீலைப் பிடித்-தான். அவர்தான் ராம் ஜெத்மலானி. கடைசியில் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்ததே. எங்கே போனான் கடவுள்?

சாமியார் ஆகுமுன் அறுவை சிகிச்சை

நித்தியானந்தாவாம். அடேயப்பா ; என்ன கெட்டிக்காரன்? நான் சட்டப்படி தவறே செய்ய-வில்லை என்கிறானே. இனிமேல் ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும். சாமியார் ஆகவேண்டும் என்றால் அரசின் அனுமதி பெறவேண்டும். சாமி-யா-ரா-வதற்கு முன் அவனை மருத்துவமனையில் வைத்து சில அறுவை சிகிச்சைகளைச் செய்யவேண்டும்.ராமனை செருப்பால் அடித்தாரே பெரியார்!

பெரியார் சேலத்தில் ராமனை செருப்பால் அடித்தார். எவன் எதிர்த்தான்? சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் ராமன்பாலம் என்று குறுக்குச் சால் ஓட்டுகிறார்கள். ராமன் கட்டிய பாலம் என்கிறார்கள். ராமன் என்பவன் என்ஜினீயரா என கலைஞர் கேட்டார். பதில் தெரிந்தால் மரியாதையாகச் சொல். உடனே நாக்கை அறுப்பேன் என்கிறானே! பெரியார் இல்லை என்ற தைரியமா? பெரியார் இல்லை என்றால் என்ன? இதோ கருப்புச் சட்டைக்-காரர்கள் இருக்கிறார்களே, -விட்டு விடுவார்களா? பெரியார் கொள்கை நாளும் வெற்றி பெற்று வருகிறது

டில்லி உச்ச நீதிமன்றத்துக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தலைமை நீதிபதியாக வந்தாரே_ பெரியார் மறைந்து வீரமணி காலத்திலே! - இது பெரியாருக்கும் வீரமணிக்கும் கிடைத்த வெற்றியல்லவா?

542 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையிலே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் தலை-வராக வந்துவிட்டாரே! ராமன் பிறந்ததாகக் கூறும் உத்தரப் பிரதேசத்திலே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல் அமைச்சராக வந்து-விட்டாரே! இது பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியல்லவா? பெரியார் மறைந்திருக்கலாம் - ஆனால் அவர் கொள்கை மறையவில்லை. நாளும் வெற்றி பெற்றே வருகிறது.

இந்த நாட்டிலே முதல் கவர்னர் ஜெனரல் யார் என்றால் ராஜகோபாலாச்சாரி என்ற பார்ப்பனர்தான். கவர்னர் ஜெனரலாக இருந்தவர் தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராகவும் வந்தார்.

பெரியார் கொடுத்த சீதனம்

பச்சைத் தமிழர் காமராசர் பார்த்தார் பெரியார். சுற்றிச் சுற்றிப் பார்ப்-பான்-தானே அதிகாரத்துக்கு வருகிறான். இதற்கொரு முடிவைக் கண்டுபிடித்தார் பெரியார். அந்தக் கண்டு-பிடிப்புதான் பச்சைத் தமிழர் காமராசர். காமராசரை நேருவா கண்டுபிடித்தார்? காங்கிரஸ்காரர்களா கண்டு-பிடித்தார்கள்? கண்டு பிடித்தது பெரியார்தானே?

பெரியார் கொடுத்த சீதனம்தான் காமராசர். காமராசர் தயங்கினார்; - தைரியம் கொடுத்தவர் பெரியார். குடியாத்தம் தேர்தலில் தானாகச் சென்று ஆதரித்தார். பெரியாரைத் தொடர்ந்து அண்ணாவும் ஓடோடிச்சென்று ஆதரித்தார். குணாளா,- குலக்-கொழுந்தே - அஞ்சாதே! என்று தைரியம் கொடுத்து எழுதினார் அண்ணா.காமராசரின் சாதனை தொட்டால் தீட்டு என்று ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பரமேஸ்வரனை அல்லவா இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆக்கினார் பச்சைத் தமிழர் காமராசர்_ காரணம் பெரியார் அல்லவா?

தமிழுக்குச் செம்மொழி தகுதி கிடைத்தது. உலக உயர் மொழிகளின் வரிசையிலே நம் அன்னைத் தமிழ்.கோவை செம்மொழி மாநாட்டிலே
நமது தலைவர்கள் கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலே நமது முதல்வர் கலைஞர் அருகில் ஆசிரியர் வீரமணி அவர்களும் அமர்ந்திருக்கும் அந்த அழகிய காட்சியைக் காணவேண்டுமே!

மனிதாபிமானம் பெரியார் கற்றுத் தந்தது

தலைவர் கலைஞர் ஆட்சியிலே மனிதாபிமானத்-துக்கு முன்னுரிமை. உயிர் காக்கும் மருத்துவம், - அவசர உதவிக்கு 108,- தம் சொந்த வீட்டையே மருத்து-வமனைக்கு அர்ப்பணிப்பு;- தளபதி ஸ்டாலினோ தம் குடும்பத்தோடு மருத்துவ மனைக்கு உடல் ஒப்படைப்பு - இந்த மனிதநேயம் நம் அய்யா கற்றுக் கொடுத்த கொள்கையிலிருந்து கிடைத்த தல்லவா?
நம் உயிரைக் கொடுப்போம்!

திருவள்ளுவர் தோன்றி இரண்டாயிரம் ஆண்டு-களாகிவிட்டது. இன்னொரு திருவள்ளுவர் வரவில்லை.

இன்னொரு தந்தை பெரியார் தோன்ற இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்-டுமோ தெரியவில்லை.

நம்மிடம் வாழும் நமது தலைவர்களை_ கலைஞரை, ஆசிரியர் வீரமணியை - நம் அனைவரின் உயிரையும் தந்து அவர்களின் ஆயுளை நீள வைப்-போம் என்று குறிப்பிட்டார்.

----- விடுதலை (29.05.2010)

பார்ப்பான் நினைத்தால் மாட்டு மூத்திரத்தையும், சாணியையும் பஞ்சகவ்யம் என்று குடிக்கச் செய்துவிடுவானே!

பொதிகை தொலைக்-காட்சியில் திங்கள், செவ்-வாய்க் கிழமைகளில் எப்படிப் பாடினரோ? என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

அதில் ஒரு நிகழ்ச்சி தில்லைவாழ் நடராஜக் கடவுள்பற்றியது. தில்லை-யில் ஆடல் வல்லானின் ஆடல் கூத்து உலகம் இயங்கத் தேவையான படைத்தல், காத்தல், அழித்-தல், மறைத்தல், அருளுதல் என்ற அய்ந்து தொழில்-களையும் செய்துகொண்டே நடனமாடி, பார்ப்பவரை மனம் சுளிக்கச் செய்வதால், பெரும் களிப்பு எனப் பொருள்படும் ஆனந்தக்-கூத்து என்பதையும், திருநீலகண்டருக்கு முக்தி அளித்த கதையும் இடம்-பெறுகின்றன என்று தினமலர் எழுதுகிறது.

நடனமாடுவதுபோல அய்ம்பொன்னால் ஒரு சிலையைச் செய்து, கோயில் என்ற வீட்டைக் கட்டி அதற்குள் கொண்டு வைக்-கப்பட்ட பொம்மைக்கு படைத்தல் உள்ளிட்ட அய்ந்து தொழில்களைச் செய்யும் ஆற்றல் உடைய-தாகக் கதை கட்டியதும், அதனை இந்த 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்-திலும், அறிவியல் கருவி-யான தொலைக்காட்சியைப் பயன்படுத்தி இந்தப் பொய் மூட்டைகளை மக்கள் மத்-தியில் அவிழ்த்துக் கொட்டு-வதும் எவ்வளவுப் பெரிய மோசடி!

அந்த உலோகச் சிலைக்கு உலகத்தையே இயங்க வைக்கக் கூடிய ஆற்றல் இருக்குமேயானால், அந்தக் கோயிலுக்குள்ளேயே ஆண்டாண்டு காலமாகச் சுரண்டிக் கொழுக்கும் அர்ச்-சகப் பார்ப்பனப் பெருச்சாளி-களை எப்படி அனுமதித்து இருக்கும்?
சிதம்பரம் கோயில், தீட்சிதப் பார்ப்பனர்களின் பிடியிலிருந்து விடுவிக்-கப்பட்டு, இந்து அறநிலையத் துறையின்கீழ் கொண்டு-வரப்பட்ட நிலையில், 2009 பிப்ரவரி 5 ஆம் தேதி முதன்முதலாக முறையாக உண்டியல் வைக்கப்பட்டது.

இதுவரை ஆறுமுறை உண்டியல்கள் திறக்கப்பட்ட-தில் வசூலான தொகை ரூ.17 லட்சத்து 2735 ஆகும். இது-தவிர பிரசாதக் கடை ஏலத்திற்கான முன்தொகை உள்ளிட்டவைமூலம் கிடைத்த தொகை ரூ.24.5 லட்சம். ஆக மொத்தம் இந்த 14 மாதங்களில் ரூ.29 லட்சமாகும்.
அதேநேரத்தில், சிதம்-பரம் கோயில்பற்றிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்-தில் நடந்தபோது இந்தத் தீட்சிதப் பார்ப்பனர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல் என்ன தெரியுமா? கோயில் ஆண்டு வருமானம் ரூ.37,199 என்றும், அதில் செலவு போக மிச்சம் ரூ.199 என்றும், பேட்டா செருப்பு விலை போலக் கூறினார்-களே, அப்படியானால், இத்தனை நூறு ஆண்டு-காலமாக இந்தக் கோயில் பூனைகள் ஏப்பமிட்ட தொகை எத்தனை எத்த-னைக் கோடி.

நெஞ்சாரப் பொய் கூறிப் பிழைப்பு நடத்திட இந்த முக்குடுமி தீட்சிதப் பார்ப்ப-னர்களைத் தடுக்காத, தண்டிக்காத இந்த சிதம்பரம் நடராஜர் என்னும் குத்துக் கல்லா ஆக்கல், காத்தல், அழித்தல் உள்ளிட்ட அய்ந்து தொழில்களையும் செய்-கிறது? பார்ப்பான் நினைத்-தால் பிரச்சாரத்தின்மூலம் மாட்டு மூத்திரத்தையும், சாணியையும் பஞ்சகவ்யம் என்று குடிக்கச் செய்துவிடு-வானே!

அப்படியிருக்கும்போது கல்லைக் கடவுளாக்கி நம்பச் செய்ய முடியாதா என்ன?
---- நன்றி  விடுதலை (28.05.2010) மயிலாடன்


Thursday, May 27, 2010

கம்பனையும், அவன் கால் வருடும் கூட்டத்தையும் வீதிக்கு வீதி தோல் உரிப்போம். எச்சரிக்கை! எச்சரிக்கை!!

கம்பனுக்கு இப்பொழுது என்ன கிராக்கி? மதுரை வட்டாரத்தில் கம்பனைக் காவடியாக்கித் தூக்கி ஆட்டம் போடும் ஒரு வேலை கிளம்பியிருக்கிறது. சென்னையில் கம்பன் பேரால் கழகம் வைத்து கம்பனைச் சீராட்டும் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டுள்ளது.


திராவிடர் இயக்கம் கிளம்பி கம்பனை_ காட்டிக் கொடுக்கும் தமிழன் என்று அம்பலப் படுத்தியது. இரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோம சுந்தர பாரதியார் போன்ற விளம்பரம் பெற்ற தமிழ் அறிஞர்-களுடன் திராவிடர் கழகத் தளபதியாக அன்று போர்க்கோலம் பூண்டிருந்த அறிஞர் அண்ணா அவர்கள் விவாதப் போர் நடத்தி, எதிர்வரிசையில் நின்றவர்கள் தோற்றேன்! தோற்றேன்! தோற்றேன்! என்று ஒப்புக் கொள்ளும் வகையில் இனமான உணர்வைக் கட்டிக் காத்தார் _ -தமது வழிகாட்டியான தலைவர் தந்தை பெரியார் அவர்களின் செறிவோடு!

அண்ணாவின் தீ பரவட்டும் என்ற அந்தவுரை பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவி இளைஞர்கள் மத்தியில் தமிழன் என்ற இறுமாப்புப் பீறிட்டுக் கிளம்பியதுண்டு.

கம்ப இராமாயணம் ஆனாலும் சரி, அதன் மூல நூலான வால்மீகி இராமாயணமானாலும் சரி, மக்கள் மத்தியில் தோலுரித்துத் தொங்க விடப்பட்டது. சென்னை போன்ற பெரிய நகரங்களில் கூட, பார்ப்பனர்களின் ஆதார நூல்களைக் கொண்டே தந்தை பெரியார் விளக்கிக் கூறி, பாமர மக்கள் முதற்கொண்டு, பட்டதாரிகள் வரை அறியும் வகையில் இராமாயணம், பாரதம் போன்ற இதிகாச நூல்களைப் பரிகாசத்திற்குரிய இடத்தில் ஒதுக்கித் தள்ளினார்.

ஒரு சமயம் தஞ்சாவூரில் ஒரு வாலிபர் சங்கக் கூட்டத்துக்குத் தந்தை பெரியார் தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில் பேசிய தமிழன்பர் ஒருவர் பெரியார் இராமாயணத்தைக் குறை கூறுவது தவறு என்றும், கலை உணர்ச்சிக்காகவும், அதனைப் போற்றவேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய தந்தை பெரியார் அளித்த பதில் மிகவும் முக்கியமானது. நான் கலை உணர்ச்சியையும், தமிழ் உணர்ச்சியையும் வேண்டாம் என்று கூறவில்லை. தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்) இருந்தால், தங்கக் கிண்ணம் என்பதற்காக அமேத்தியத்தைப் புசிக்க முடியுமா? அதுபோல், கம்ப ராமாயணப் பாட்டுகள் சிறந்தவை-தான். அவற்றில் உள்ள மூடநம்பிக்கைக்கும், தமிழர் இழிவுக்கும், ஆரியர் உயர்வுக்கும் ஆதாரமானவற்றை வைத்துக் கொண்டு எப்படி அவற்றைப் பாராட்ட முடியும்? என்று பதிலடி கொடுத்தார் பகுத்தறிவுப் பகலவன்.

இதே கருத்தை அறிஞர் அண்ணாவும் விவாதப் போரில் விண்டுரைத்தார்.

இன்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்-பட்ட கம்ப இராமாயணத்தையே மக்கள் பெரிதும் அறிவர்; போற்றுவர். அதற்குக் காரணம் அதிலே உள்ள ஆரிய நெறி, தமிழ் மக்களை அடிமைப்-படுத்தியதுதான். கம்ப இராமாயணத்திலே, சங்க நூல்களிலே காணப்படும் அணிகளும், அலங்காரங்-களும், உவமைகளும் நிரம்ப உபயோகிக்கப்பட்டிருக்-கின்றன. குறள் நன்றாக நுழைக்கப்பட்டு இருக்கிறது. கம்ப இராமாயணம் கவிச்சுவை என்று எதைப் பண்டிதர்கள் எடுத்துரைக்கிறார்களோ, அவை கம்பனின் சொந்தச் சரக்குமல்ல; சங்க நூற்கள் தந்த சுவை! அந்த மூலத்தை இழக்கும்படி நாங்கள் சொல்ல-வில்லை. அந்தச் சுவையை ஓர் ஆரியரின் கற்-பனைக்குப் பயன்படுத்தியதால், அந்தக் கற்பனையின் விளைவு கேடு தருவதால், அந்த ஏடு வேண்டாம் என்று கூறுகிறோம்.

காடேக இராமன் கிளம்பும் போது உடன் வரப் புறப்பட்ட சீதையுடன் வாதிடுகையில் சீதை கூறும் மொழியின் தன்மையும், இலக்குவன், கைகேயியை நிந்திக்கும் பகுதியையும், சீதையை இராவணன் எடுத்துச் சென்ற விதத்தையும் வால்மீகி கூறி உள்ளபடியே கம்பர் எழுதியிருப்பின், அந்த ஆரியப் பாத்திரங்களின் ஆபாச குணங்கள் கிடந்ததை தமிழர் கண்டு அவர்களைத் தெய்வங்கள் என்று போற்றும் கீழ் நிலைக்கு வந்திருக்கமாட்டார்கள். ஆனால், கம்பரோ, ஆரிய இராமனைக் குற்றம் குறையற்ற சற்புத்திரனாக்கி, வழிபாட்டிற்குரிய தெய்வமாக்கி-விட்டார் (தீ பரவட்டும்) என்று ஆரிய அடிமையாக இராமாயணம் எழுதிய கம்பனை கண் எதிரே கொண்டு வந்து நிறுத்தினார் அறிஞர் அண்ணா.

அயோத்தி ராமன் பிரச்சினையெல்லாம் தமிழ் மண்ணில் எடுபடாததற்குக் காரணம் தந்தை பெரியார் கண்ட திராவிட இயக்கமே.

மறுபடியும் கம்ப இராமாயணப் பட்டிமன்றங்-களையும் மாநாடுகளையும், கருத்தரங்குகளையும் ஆழ்வார்களான தமிழர்கள் நடத்திட முனைவார்-களேயானால் அவர்களை நேருக்கு நேர் சந்திக்க திராவிடர் கழகம் தயார்! தயார்!!

காலமெல்லாம் கம்பனை இழித்துப் பேசியதால்-தான் சென்னைக் கடற்கரையில் கம்பன் காலடியில் அண்ணா உறங்குகிறார் (அண்ணா சதுக்கத்தில் நுழைவு வாயிலில் கம்பர் சிலை) என்று பேசிய சாலமன்கள் கம்பனைத் தூக்கிக் கொண்டு வந்து தமிழன் தலையில் கட்டி, தமிழர்களை விபீடணர்-களாக ஆக்குவதில் ருசி காண்கின்றார்கள் போலும்.

கம்பனையும், அவன் கால் வருடும் கூட்டத்தையும் வீதிக்கு வீதி தோல் உரிப்போம். எச்சரிக்கை! எச்சரிக்கை!!

------ விடுதலை தலையங்கம் (28.05.2010)


Wednesday, May 26, 2010

அறிவுச் சுரங்கம் அப்பாதுரையார்

எப்பாத் துறைக்கும்
இவனோர் பழம்புலவன்
அப்பாத் துறை யறிஞன்
ஆழ்ந் தகன்ற - முப்பாலே
நூலறிவு நூறு புலவர்கள் சேரினவன்
காலறிவு காணார் கனிந்து -
 என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களால் பாராட்டப்பட்ட பன்மொழிப் பெரும் புலவர் கா. அப்பா-துரையார் நினைவு நாள் இந்நாள் (1989).

திராவிடர் இயக்கம் தமிழுக்கும் தமிழர்களுக்-கும் என்ன சாதித்தது என்று கேட்கும் அறிவுச் செவிடர்-களின் செவிப்பறை கிழியும் அளவுக்கு அறிவு நூல்களை ஆய்ந்து தந்த புலவர் பெருமக்கள் வரிசையில் அப்பாதுரையாருக்குத் தனிச் சிம்மாசனமும் வைர மகுடமும் உண்டு.

தந்தை பெரியாரின் சீடர், திராவிடர் இயக்கத்தின் தூண்களில் ஒருவர்.
ஷேக்ஸ்பியர் கவிதைக் கொத்து (1941) இன்ப மலர் (1945), சிறுகதை விருந்து (1945), விந்தன் கதைகள், புத்-தார்வக் கதைகள், பலநாட்டு சிறுகதைகள், ஆண்டியின் புதையல் (1953) நாட்டுப் புறச் சிறுகதைகள் ( 1954) ஷேக்ஸ்பியர் கதைகள், கட்டுரை முத்தாரம், எண்-ணிய வண்ணம், செந்தமிழ்ச் செல்வம், தளவாய் அரிய-நாதர், குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு, இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு, பிளாட்டோவின் குடியாட்சி, வருங்காலத் தலைவர்-களுக்கு என்ற எண்ணிறந்த நூல்களை யாத்த பெரு-மகன் ஆவார்.

திராவிட இயக்கத்தோடு அப்பாதுரையார் மிகவும் நெருக்கமாக ஆனதற்குப் புரட்சிக் கவிஞர் முக்கிய காரணமாவார்.

விடுதலை, லிபரேட்டர் ஏடுகளுடன் அப்பாதுரை-யார் அவர்களுக்கு நெருக்-கம் அதிகமாகும்.

செந்தமிழ்ச் செல்வம், கலைமாமணி, விருதுகள் தமிழ்நாடு அரசால் இவ-ருக்கு அளிக்கப்பட்டன.

5.6.1983 அன்று சென்னை பெரியார் திடலில், சங்கராச்சாரி_ யார்? என்ற தலைப்பில் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உரையாற்றியனார். அன்று அக் கூட்டத்திற்கு அப்பா-துரையார் தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.

அதில் திடுக்கிடும் ஓர் அரிய தகவலை வெளி-யிட்டார். ஆதி சங்கரர் கடைசியாக எழுதிய நூல் மனேசாப் பஞ்சகம் என்-பதாகும். அதில் ஒரு சுலோ-கம் கடவுளை எதிர்ப்பது. அதன் காரணமாக ஆதி-சங்கரர் உயிரோடு வைத்துப் புதைத்துக் கொல்லப்பட்டார் என்ற தகவலைக் கூறினார். (விடுதலை, 15.6.1983).

அப்பாதுரையார் அவர்-கள் பற்றி அறிவுச் சுரங் கம் அப்பாதுரையார் என்னும் அரிய நூலை முகம் மாமணி எழுதியுள்-ளார். அதனைப் பாராட்டி பேராசிரியர் வெள்ளையன் பகுத்தறிவு இலக்கிய அறக்-கட்டளை சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி ரூ.10 ஆயிரம் பரிசளிக்கிறார்.
- மயிலாடன்


Tuesday, May 25, 2010

எனக்குள்ளதெல்லாம் மனிதப்பற்றுதான் என்று கூறிய புரட்சியாளர் பெரியார்!

மானுடப்பற்று மட்டுமே எனக்குரியது என்று கூறிய மாபெரும் புரட்சி-யாளர் பெரியார் என்றார் மத்திய தொலைத்-தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா.


தந்தை பெரியாரின் பாதையில் கலைஞரைப் போன்ற பகுத்தறிவாளர்கள் ஆட்சிக்கு வரும்-போதுதான் சமூக வளர்ச்சி, சாமான்யனுக்கும் கிடைக்-கிறது என்று அய்தராபாத்தில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்ட பெரியார் திரைப்-படப் பாடல் கேசட் வெளியீட்டு விழாவில் கலந்து-கொண்டு மத்திய அமைச்சர் ஆ. இராசா பேசினார்.

மேலும், வடபுலத்திலும், பெரியார் திரைப்-படத்தை மொழி மாற்றம் செய்து வெளியிடும் பணி-யினை சமூகநீதி ஆர்வலர்கள் மேற்கொள்ள-வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆந்திர மாநில பகுத்தறிவாளர் கழகம் சார்பில், பெரியார் திரைப்படம் தெலுங்கு மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படத்-தின் தெலுங்கு ஆடியோ கேசட் வெளியீட்டு விழா அய்தராபாத்தில் நடைபெற்றது. இந்த கேசட்டை மத்திய அமைச்சர் ஆ. இராசா வெளியிட்டு பேசியது வருமாறு:

இந்த விழாவில் பங்கேற்பதில் நான் அளவற்ற மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய மகிழ்ச்சி இரண்டு கோணத்தில் அமைகிறது.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் எத்தகைய புரட்சிகரமான முன்னேற்றம் அடைய-வேண்டுமென தந்தை பெரியார் அவர்கள் அய்ம்-பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கனவு கண்-டாரோ அந்தக் கனவு நனவாகி இருக்கிறது. பெரி-யாரின் கொள்கை வெற்றியடைந்ததற்கு அடை-யாளம்-தான் இந்த விழா. இது ஒரு மகிழ்ச்சி. இந்த விழாவில் சாதாரண சாமானிய தமிழனாகிய நான், இந்தத் துறைக்கு அமைச்சராக பங்-கேற்றிருப்பது இன்னொரு மகிழ்ச்சியாகும்.

கலைஞரின் தம்பியாக...

இதைவிட, பெருமை அளிப்பது _ பெரியாரின் கொள்கையை அரசியல் களத்திலும், சமூகத்-தளத்-திலும் சாதனைகளாக மாற்றிய மாபெரும் தலைவரான கலைஞரின் தம்பியாக இந்த நிகழ்ச்சி-யில் பங்கேற்றிருப்பது.

தந்தை பெரியார் அவர்கள், திராவிடர் கழகம் திராவிட இயக்கம் என்கிற கட்டமைப்பு-களில் ஆற்றியிருக்கின்ற மகத்தான கொள்கைப் பணிகளை தென்னகம் தாண்டி வட இந்தியா முழுக்க இன்றைக்கு வர-வேற்றுக் கொண்டிருக்-கின்ற சூழலில் அரசு கருவூலத்திலிருந்து, 95 லட்ச ரூபாயை பெரியார் திரைப்படத்திற்குத் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் வழங்கியிருப்பதும், அந்தப் படத்தை தெலுங்கு மொழியில் மொழி பெயர்த்து இங்கே வெளியிடுவதும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

தலைசிறந்த புரட்சியாளர் தந்தை பெரியார்

வடபுலத்தில் இருக்கின்ற சமூகநீதி ஆர்வலர்கள், பகுத்தறிவாளர்கள், அம்பேத்கரிஸ்டுகள், இந்தப் பணியை வடபுலத்திலும் மிகச் சிறப்பான முறை-யில் மேற்காள்ள வேண்டும். கடவுள்பற்றோ, மதப் பற்றோ, ஜாதிப் பற்றோ, ஏன் நாட்டுப் பற்றோகூட எனக்குக் கிடையாது. எனக்கு இருப்பதெல்லாம் மனிதப்பற்று ஒன்றுதான் என்று முழங்கி, ஜாதி பேதம் ஒழியவேண்டும் என்பதற்காக, தன் வாழ்-நாட்களை அர்ப்பணித்த இந்தியாவின் தலைசிறந்த புரட்சியாளர்களில் ஒருவரான தந்தை பெரியாரை அரசியல் எல்லை கடந்து, மாநில மொழி, இன தடை-களைக் களைந்து இந்தியா முழுக்க பெரியாரை-யும், அவருடைய கொள்கைகளையும் பரப்பவேண்-டிய அவசியம் இளைஞர்களுக்கு, பகுத்தறிவாளர்-களுக்கு வேண்டுமென்கிற உணர்வை இந்தப் பெரியார் திரைப்படம் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

வேறு எந்த நாட்டிலும் இல்லாத இந்தியாவில் உள்ள இந்து மதமும், அதன் வைதீகத் தளமும் ஏற்படுத்தியிருக்கின்ற ஜாதி என்கிற கொடிய நோய் தான் இந்தியாவின் வறுமைக்கும், சரிவுக்கும் தரித்திரத்திற்கும், அறியாமைக்கும், அடிப்படைக் காரணங்கள் என்றும் இவற்றைக் களையாமல் இந்தியாவின் வளர்ச்சி அரசியல் துறையாகட்டும், சமூகத் துறையாகட்டும், பொருளாதாரத் துறை-யாகட்டும், எந்தத் துறையிலும் வளர வாய்ப்பில்லை என்று இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பாகவே எச்சரித்தவர் தந்தை பெரியார் அவர்கள்.

அந்த எச்சரிக்கையை மறந்த, மறுதலித்த, பல்வேறு அரசியல் கட்சிகள் இன்றைக்குப் பெரியாரை அவரின் அடையாளமாக திகழ்ந்து கொண்டிருக்-கின்ற ஒப்பாரும் மிக்காருமில்லா தலைவர் கலைஞரை அரசியலிலும், நிருவாகத்திலும், பின்பற்றவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்-டுள்ளனர்.

காரணம் பெரியார்...

1929 இல் செங்கல்பட்டு மாநாட்டில் பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்றார் பெரியார். ஆரம்பப் பள்ளிகளில் பெண்களே ஆசிரியர்-களாக நியமிக்கவேண்டும் என்றார் பெரியார். அரசு அதிகாரங்களில் பெண்கள் பங்குபெறவேண்டும் என்றார் தந்தை பெரியார். 1950_களிலே இதே சீர்திருத்தக் கருத்தை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கிட எல்லா வழிகளிலும் எத்தனித்தார் அம்பேத்கர். அப்போதெல்லாம் மேல்தட்டு வர்க்கத்தினரால் அம்பேத்கரின் முயற்சி முறியடிக்கப்பட்டது.

இந்தச் சட்டங்களை, திட்டங்களை அரசு சட்டத்தில் அரியணை ஏற்றிய தலைவர்தான் எங்களுடைய தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு ஜாதி வாரியாக கணக்கெடுப்பு தேவையா? இல்லையா? என்கிற விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. இதேபோல, 80 ஆண்டு-களுக்குமுன்பு இந்தியாவில் சமூக அமைப்பை ஆராய முற்பட்ட சைமன் கமிஷனை திரும்பிப் போ என்று தேசிய வாதம் என்கிற பெயரில் கூச்சல் எழுந்தபோது, சைமன் கமிஷனே வா என்று வரவேற்று, இந்த நாட்டில் பிற்படுத்தப்-பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி அறிவு இல்லாதவர்களாக, தற்குறி-களாக, சுரண்டப்படுகின்ற மனிதக் கருவிகளாக கொடு-மைப்படுத்தப்படுவதை இந்தியா அறிய-வேண்டும். இவைகளுக்கெல்லாம் கழுவாய் வழங்கப்-படவேண்டும் என்று எதிர்த்துக் குரல் கொடுத்தவர் தென்னிந்தியாவின் பெரியார் ஒருவர்-தான் என்பதை இன்றைய தலைமுறை உணர-வேண்டும்.

இந்தியாவில் இருக்கின்ற மாநிலங்களில் தமிழ்-நாட்டில்தான் உழைக்கின்ற மக்களான சூத்திரர்-களும், பஞ்சமர்களும், அரசியல் அதிகாரத்திலும், அரசு உயர் பணிகளிலும் முன்னேறி இருக்கிறார்-கள் என்றால், அதற்குக் காரணம் பெரியாருடைய இயக்கமும், அந்த இயக்கத்தின் தளபதிகளான அறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் வழங்கிய, வழங்கிக் கொண்டிருக்கின்ற புரட்சிகர-மான திட்டங்களே காரணமாகும்.

கலைஞர் உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்

ஜாதி பேதமற்ற சமுதாயம் காண பாடுபட்ட பெரியாரின் பெயரால் ஜாதியற்ற சமத்துவபுரங்-களை தமிழகத்தில் உருவாக்கி இந்தியாவுக்கே அறிமுகப்படுத்திய சமூகப் புரட்சியாளர் கலைஞர் அவர்கள். தன்னை ஒரு நாத்திகன் என்றும், தன்னு-டைய பாதை பெரியாரின் பாதை என்றும், பிர-கடனப்படுத்திக் கொண்ட தலைவர் கலைஞரைப் போன்ற பகுத்தறிவுவாதிகள் ஆட்சிக்கும், அதிகாரத்திற்கும் வருகிறபோதுதான் சமூகக் கொடுமைகள் களையப்பட்டு, முன்னேற்றமும், வளர்ச்சியும், சமூகநீதியும், சாதாரண சாமானிய உழைக்கும் வர்க்கத்திற்குக் கிடைக்கும் என்பதை இளை-ஞர்களும், குறிப்பாக பொது வாழ்க்கைக்கு வருகின்ற இளம் தலைவர்களும் உணர்வதற்குத் தெலுங்கு மொழியில் வெளிவருகின்ற பெரியார் திரைப்படம் ஓர் அடித்தளமாக அமையும் என்று நம்புகிறேன். _ இவ்வாறு அவர் பேசினார்.

-------- நன்றி விடுதலை (25.05.2010)

Monday, May 24, 2010

மாணவர்கள் மத்தியில் தேவையான கட்டுப்பாடு!

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைந்த 15 மருத்துவக் கல்லூரி-களில் மாணவ, மாணவிகள் உடை அணி-வதற்குக் கட்டுப்பாடு கொண்டுவரப்படுகிறது.


இதன்படி மாணவிகள் பூ வைக்கவும், நகை அணியவும் தடை செய்யப்படுகிறது. மாண-வர்கள் டி ஷர்ட், ஜீன்ஸ் போன்ற உடைகளை அணியவும் தடை விதிக்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் இந்தக் கட்டுப்-பாடுகளை விதித்துள்ளார்.

உடை அணிவது, தலையில் பூ வைத்துக் கொள்வது என்பதெல்லாம் தனிப்பட்ட பிரச்சினை; அதில் தலையிடக் கூடாது என்று சிலர் கூறக்கூடும்.

அந்தத் தனிப்பட்ட உரிமை பொது ஒழுக்கத்துக்கு இடையூறாகவும், ஏற்றுக்-கொண்ட பாத்திரத்துக்குப் பொருத்தமானதாகவும் இருக்கவேண்டுமே!

பொதுவாகவே, பூவும், நகைகளும் பெண்களுக்கு அணிகலன்கள் என்று ஆக்கி வைத்திருப்பதே அவர்களைக் குறிப்பிட்ட வாழ்க்கை வட்டத்துக்குள் அடைக்கும் வசீகரமான தந்திர ஏற்பாடேயாகும்.

இவைதான் பெண்களுக்கு அழகு என்று சொல்லிச் சொல்லி அவர்களின் மனநிலையை அந்தப் போதைக்கு ஆளாக்கி விட்டனர்.

இது ஏதோ பழைய பத்தாம்பசலிக் காலத்தோடு முடிந்துபோனால் சரி; அறிவியல் வளர்ந்த, அதுவும் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் பெண்களுக்கு இந்தப் பத்தாம் பசலி அடையாளம் தேவைதானா?

ஒருவர் ஆணா, பெண்ணா என்பதுகூட அவரவர்களின் தனிப் (றிமீக்ஷீஷீஸீணீறீ) பிரச்சினை! இன்னொருவர் அதைத் தெரிந்துகொள்ள-வேண்டும் என்று நினைப்பதே அதிகப் பிரசங்கித்தனமும், ஒழுக்கக் கேடும் ஆகும்.

தோற்றத்தைப் பார்க்கும்போதே இவர் ஒரு விஞ்ஞானி. மருத்துவத் துறையைச் சார்ந்த அறிஞர் என்ற எடுப்பான தோற்றம் இருக்கவேண்டுமே தவிர, இவர் மருத்துவக் கல்லூரி மாணவி. இவர் ஒரு பெண் _ இந்து சனாதன குடும்ப வழி வந்த பாங்கு உடையவர் என்று காட்டிக் கொள்வது பொருத்தமற்ற-தாகும்.

இதேபோல, காவல்துறையைச் சேர்ந்த பெண்கள் சடை பின்னல் போட்டுக் கொள்வது, பூ வைத்துக்கொள்வது, காலில் கொலுசு போட்டுக் கொள்கிறார்கள் என்றால், அந்தப் பெண்ணை ஒரு காவல்துறை அதிகாரி என்று மதிக்கும், நினைக்கும் எண்ணம் ஏற்படுமா?

அதேபோல, கல்லூரி மாணவர்களும் நவ நாகரிகம் என்ற பெயரில் கோமாளித்தனமாக உடை உடுத்திக் கொள்வது, முழுக்கால் சட்டைகளில் எங்கு பார்த்தாலும் தொங்கும் பைகள், கொத்துக் கொத்தாக நாடாக்கள் தொங்குவது, ஒற்றைக் காதில் கடுக்கன் மாட்டிக் கொள்வது போன்ற கோமாளித்தனமான காட்சிகளில் கல்வி நிறுவனத்துக்குப் போவது உயர் மதிப்பீடுக்கு உகந்ததுதானா?

காவல்துறையினர் என்றால் அவர்களுக்-கென்று ஒரு தோற்றமும், மிடுக்கும், ஆசிரியர்கள் என்றால், அந்த மரியாதைக்குரிய உடையும், போக்கும் இருக்கவேண்டும்.

மாணவர்கள் விருப்பமான உடைகளை, வண்ணங்களைத் தேர்வு செய்வதில் தாம் குறுக்கிடவில்லையென்றும், அதேநேரத்தில் மாணவ, மாணவிகளின் ஒழுங்கைக் குலைக்-கும் வகையில் அவை அமைந்துவிடக் கூடாது என்றும் துணைவேந்தர் கூறியிருப்பது கருத்தூன்றிக் கவனிக்கத்தக்கதாகும்.

துணைவேந்தரின் நன்னோக்கத்தை மனதிற்கொண்டு எந்தவித சர்ச்சையும் செய்-யாமல் மாணவர்கள், மாணவிகள் ஏற்றுக்-கொண்டு செயல்பட்டால் அது ஒரு சிறப்பான _ உயர்வானதோர் முடிவாக இருக்கும்.

-------- நன்றி விடுதலை தலையங்கம் (10.04.2010)

இந்நாள்..பெரியார் அவர்களால் கடவுள் மறுப்பு பிரகடனப் படுத்தப்பட்ட நாள்


1967 ஆம் ஆண்டில் இதே தேதியில்தான் (மே 24) கடவுள் மறுப்பு வாசகங்-கள் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்-களால் உலகுக்குப் பிரகடனப்படுத்தப்பட்டதாகும்.


அன்றைய தஞ்சாவூர் மாவட்டம் (இப்பொழுது திருவாரூர் மாவட்டம்) திரு-மதிக் குன்னம் விடயபுரம் என்னும் குக்கிராமத்தில் உயர்திரு வி.அப்புசாமி (நாயுடு) அவர்களுக்குச் சொந்தமான பூங்குடில் பூங்காவில் சுயமரியாதை _ பகுத்தறிவுப் பிரச்சாரப் பள்ளி தொடக்க விழா நடைபெற்றது (24.5.1967).

திரு.வி. அப்புசாமி (நாயுடு) அவர்கள் வைதி-கர். ஆனாலும், தந்தை பெரியார் அவர்களின்-மீதும் ‘பக்தி’ கொண்டவர். தமது தோட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் தங்குவதற்கென்றே பூங்-குடில் பூங்கா (ஆசிரமம்-போல்) அமைக்கப்பட்டு இருந்-தது. கோடை வெயி-லின் தாக்குதலில் தந்தை பெரியார் சிரமப்படக்-கூடாது என்கிற அள-வுக்கு அந்த நிலழக்கிழா-ரின் நெஞ்சம் தந்தை பெரியார்மீது பற்றும், மதிப்பும் கொண்டது.

முகாம் நடந்த அத்-தனை நாள்களும் (மே 24 முதல் 31 வரை) தந்தை பெரியார் தங்கி இருந்து பயிற்சிப்பள்ளி மாணவர்-களுக்கு வகுப்பு-களை நடத்தினார்.

கடவுள் மறுப்பு, மத மறுப்பு, ஆத்மா மறுப்பு என்பதெல்லாம் தந்தை பெரியார் அவர்களின் நெடுங்காலமாகவே கொள்-கையைச் சார்ந்தே இருந்து வந்தன என்றாலும், அந்-தப் பயிற்சிப் பள்ளியில்-தான் (24.5.1967) கடவுள் மறுப்பு வாசகங்களை முறைப்படுத்தி உலகுக்கே அறிவித்தார். அந்த வகை-யில் விடயபுரமும், இந்த நாளும் வரலாற்றுக் கல்-வெட்டுகளாகும்.

இதுகுறித்து ‘விடுதலை’-யில் (7.6.1967) தந்தை பெரியார் கையொப்ப-மிட்டு அறிக்கை ஒன்-றினை வெளியிட்டுள்ளார்.

“கடவுள் மறுப்பு, என்பதை நமது இயக்க, கழக சம்பந்தமான எந்தக் கூட்ட நிகழ்ச்சிகளிலும்,முதல் நிகழ்ச்சியாக “கடவுள் மறுப்பு’’ என்ற சொல்லைக் குறிப்பிட்டு, பிறகு மற்ற நிகழ்ச்சி-களைக் குறிப்பிடவேண்-டும்.

பகுத்தறிவற்ற மூட நம்பிக்கை மக்கள் தங்கள் நிகழ்ச்சிகளில் முதலாவது நிகழ்ச்சியாக எப்படி “கடவுள் வணக்கம்’’ என்ற சொல்லைப் பயன்படுத்தி, அதை ஒரு நிகழ்ச்சியாக நடத்துகிறார்களோ, அதே-போல், நாம் கூட்டம் தொடங்கப்பட்டவுடன், முதல் நிகழ்ச்சியாக “கட-வுள் மறுப்பு’’ என்று தலைவர் கூறவேண்டும்.

“கடவுள் இல்லை, கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை’’ என்று கூறவேண்டும். கூட்டத்-தில் உள்ள மக்கள் உட்-கார்ந்த-படியே அதுபோலவே பின் ஒலி கொடுத்துக் கூற-வேண்டும்’’ என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்-ளார். அதனைக் கழகம் பின்பற்றி வருகிறது.

இது ஒரு முக்கியமான வரலாற்றுக் குறிப்பாகும்.

- விடுதலை (24.05.2010) மயிலாடன்
Sunday, May 23, 2010

மாணவர்களின் பிறந்த நேரத்தில் குரு மற்றும் சனிகளின் நிலையை ஆராயப் போகிறார்களாம்

உத்தரப்பிரதேசம் லக்-னோவில் ராம் மனோகர் லோகியா பெயரில் உள்ளது சட்டப் பல்கலைக் கழகமா அல்லது சாமியார்கள் கூத்-தடிக்கும் சோம்பேறிகளின் மடமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


அப்பல்கலைக் கழகத்-தில் சேரும் மாணவர்கள் தங்கள் பிறந்த தேதி, நேரம் ஆகிய விவரங்களைக் கொடுக்க-வேண்டும்.

இதுகுறித்து துணை-வேந்தர் பல்ராஜ் சவுகான் கூறியுள்ள கருத்து_ இவர்-களெல்லாம் துணை வேந்-தர்களாக வந்தால் நாடு சுடுகாடாகத்தான் மாறும்.

மாணவர்களின் பிறந்த நேரத்தில் குரு மற்றும் சனி-களின் நிலை குறித்துக் கணிக்கப்படுமாம்_- மாணவர்-களின் கிரக நிலை சரியாக இல்லாமல் இருந்தால், அவர்கள் ஜாதகத்திற்கு ஏற்ப வண்ண மோதிரக் கல் அணியவேண்டும்.

மனோதத்துவ ரீதியாக-வும் மாணவர்களின் நடத்-தையை அறிகிறோம். நகத்-தைக் கடிப்பது, கால் ஆட்டுவது போன்ற சுபாவம் உள்ள மாணவர்களுக்கு நம்பிக்கைக் குறைவாக இருக்கும் என எடை போடு-கிறோம் என்கிறார் துணை-வேந்தர்.

இந்த அடிப்படையில் எல்லாம் அணுகுவதற்கும், எடை போடுவதற்கும் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தவர்கள் யார்?

இதற்கான விஞ்ஞான அடிப்படை என்ன? மக்களிடம் அறிவியல் மனப்பான்மையைத் தூண்ட வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51-ஏ) கூறுகிறதே லக்னோ பல்கலைக் கழகம் அரசமைப்பு சட்டத்துக்கு அப்பாற்பட்டதா?

பா.ஜ.க. மத்தியில் ஆட்சி செய்த காலகட்டத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த முரளி-மனோகர் ஜோஷி பல்-கலைக்கழகங்களில் சோதி-டத்-தைப் பாடமாக வைக்க-வேண்டும் என்று சுற்ற-றிக்கை வெளியிட்டார். அந்த மிச்சசொச்சங்கள் இன்னும் ஒட்டடையாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது போலும்!

மாணவர்களின் பிறந்த நேரத்தில் குரு மற்றும் சனிகளின் நிலையை ஆராயப் போகிறார்களாம்  யார் அந்தக் குரு? இவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த அந்தக் குருவும், சனியும் யாரோ?

இவர்கள் கூறும் கிரகங்-கள் முனிவர்களுக்குப் பிறந்தவை என்பதெல்லாம் எத்தகைய சிறுபிள்ளைத்-தனக் கிறுக்கனின் உளறல்! ஒன்பது கிரகங்களுக்குத்-தானே ஜோதிடம் சொல்லிக் கொண்டுள்ளனர்? இதுவரை மேலும் நான்கு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவே. அவைகளுக்கு சோதிடப் பலன் என்ன? நட்சத்திர-மான சூரியனை கிரகத்தின் பட்டியலில் வைத்துள்ளார்-களே_- இவர்களின் கிரகப்-பலன் சரியில்லையோ!

மாணவர்களுக்கு மனோதத்துவ சோதனை தேவையில்லை தேவை துணை வேந்தருக்கும் பல்கலைக் கழகப் பேராசிரியர்களுக்கும் தான்!

- மயிலாடன் விடுதலை(18.05.2010)

Saturday, May 22, 2010

பெரியார் மண் ..இனவுணர்வு எரிமலையோடு விளையாட ஆசைப்பட வேண்டாம் எச்சரிக்கிறோம்!

தமிழர் கழகம் என்று பெயர் சூட்டாமல் திராவிடர் கழகம் என்று தந்தை பெரியார் பெயர் வைத்ததற்கு என்ன காரணம்?

திராவிடன் என்றால் எந்தக் கிறுக்குப் பிடித்த பார்ப்பானும் உள்ளே நுழைய முடியாது. தமிழர் கழகம் என்றால் நானும் தமிழ் பேசுகிறேன் என்று பார்ப்பனர்கள் ஊடுருவி விடுவார்கள்.

நாம் வைக்கும் பெயர் பார்ப்பனத் தூசுகூட உள்ளே நுழைய முடியாத வசதி இருக்க-வேண்டும் என்று தந்தை பெரியார் திட்டவட்ட-மாகத் தெரிவித்துள்ளார்.

மற்றும் தந்தை பெரியார் கூறும் ஒரு முக்கிய கருத்து அடிக்கோடிட்டுக் கவனிக்கத் தகுந்த-தாகும்.

‘தமிழ்’ என்பதும், ‘தமிழர் கழகம்’ என்பதும் மொழிப் போராட்டத்துக்குத்தான் பயன்படுமே-யொழிய, இனப் போராட்டத்துக்கோ, கலாச்சாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன்படாது. (‘விடுதலை’, 27.1.1950)

திராவிடர் என்பதையும் புறக்கணித்துவிட்டு, தமிழர் என்ற பெயரைத் தாங்கி யார் கட்சி நடத்தினாலும் அது பார்ப்பனர்களின் கைக் கருவியாக, பாதந்தாங்கியாகத்தான் ஆகமுடியும்.

வரலாற்று ரீதியாக ஆரியம் என்பதற்கு திராவிடம்தான் எதிர்ப்பாகும். ஆரியராவது_ திரா-விடராவது? இது வெள்ளைக்காரன் கட்டிவிட்ட கதை என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சொன்ன-தைத் தான் சிலர் இப்பொழுது நகல் எடுத்துப் பேசுகிறார்கள்.

உண்மையான எதிரியைத் தப்பிக்க விட்டு வேறொரு திசையில் தமிழர்களைக் கவனப்-படுத்தும் ஆபத்தான போக்காகும் இது.

பார்ப்பன எதிர்ப்பு உணர்ச்சி இல்லாத தமிழ் உணர்வு எதற்குப் பயன்படும்? பார்ப்பன எதிர்ப்பு உணர்ச்சிதானே தமிழர்களுக்கு இனவுணர்ச்சியை ஊட்டியது?

அந்த உணர்ச்சிதானே பார்ப்பனர்களின் சமஸ்கிருதத்தையும், அந்தக் குடும்பத்தைச் சார்ந்த இந்தியையும் எதிர்க்கச் செய்தது?

திராவிடர் என்ற உணர்ச்சியைக் கொச்சைப் படுத்துபவர்களையும், எதிர்க்கின்றவர்களையும் ஆரியப் பார்ப்பனர்களும், அவர்களின் ஊடகங்-களும் தூக்கிப் பிடிக்கும். தெரிந்தோ, தெரியா-மலோ அந்தக் குழியில் வீழ்பவர்கள், பார்ப்பனர்-களுக்குத் துணை போகிறவர்களும் விபீடணர்-களான குற்றவாளிகளே ஆவார்கள்.

தமிழர் பார்வையில் இந்தி எதிர்ப்பு என்பது ஒரு மொழி ஆதிக்கத்தை எதிர்ப்பதாகும். திராவிடப் பார்வையில் இந்தி எதிர்ப்பு என்பது பார்ப்பனியம்_- அதன் வருணாசிரமம் உள்ளிட்ட அந்நியக் கலாச்சாரத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகும்.

நன்னிலத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டில்கூட இதுபற்றி தீர்மானம் மிகத் தெளிவாகவே இருக்கிறது.

சென்னை மாநிலத்தில் பிரதம அமைச்சராக இருந்து (1937_39) ஆட்சி நடத்திய சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை லயோலா கல்லூரியில் பேசும்போது, சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தவே முதற்கட்டமாக இந்தியைப் படிக்கச் சொல்லுகிறேன் என்று பட்டவர்த்தனமாகப் பேசினாரே!

ஆரிய_ திராவிடப் போராட்டம் என்பது இந்நாட்டின் சமுதாயப் போராட்டமாக_ அரசியல் போராட்டமாக இருந்து வந்திருக்கிறது. பார்ப்பன வரலாற்று ஆசிரியர்களே வேறு வழியின்றி இந்த உண்மையை ஒப்புக்கொண்டு எழுதியுள்ளார்கள்.

ஆரிய திராவிடப் போராட்டத்தை மய்யப்-படுத்தியே இராமாயணம் உருவாக்கப்பட்டது. புராணங்களும் எழுதப்பட்டன என்கிற வரலாறு-களைத் தெரிந்துகொண்டிருந்தால், திராவிடத்தால் தமிழர்கள் மோசம் போய்விட்டனர் என்று புலம்பமாட்டார்கள்.

ஒன்று அறியாமையாக இருக்கவேண்டும்; அல்லது பார்ப்பனர்களுக்குத் துணைபோவதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கவேண்டும்.

இவர்கள் சுற்றிச் சுற்றி_ கடைசியாக எங்கே வந்து நிற்கப் போகிறார்கள்? தந்தை பெரியா-ரையும் அவரால் உருவாக்கப்பட்ட பார்ப்பன எதிர்ப்பு உணர்வையும், அதனால் விளைந்த மறு-மலர்ச்சி-களையும் எதிர்க்க வேண்டிய நிலைக்கு வரும்போது ஒட்டுமொத்த தமிழர்களும் நிராகரித்து ஊதித் தள்ளிவிடுவார்கள் என்பதில் அய்யமில்லை.

இது பெரியார் மண். பெரியார் சித்தாந்தம் விளைந்த மண்_ பக்குவப்படுத்தப்பட்ட மண்-_ இந்த இனவுணர்வு எரிமலையோடு விளையாட ஆசைப்பட வேண்டாம் எச்சரிக்கிறோம்!


தினமலர்,துக்ளக் பார்ப்பனக் கூட்டம் கடப்பாரையால் வயிற்றை இடித்துக் கொள்கிறது

பார்ப்பனர்கள் யார்? இந்த 2010லும் அவர்களின் குணம் எப்படிப்-பட்டது என்பதைத் தெரிந்துகொள்-வதற்கு மிகப் பெரிய முயற்சிகள் தேவைப்படாது.
தமிழ் - _ தமிழர் _ தமிழர் பண்பாடு தளத்தில் அவர்களின் பார்வை எத்தகை-யது என்பதை ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால் பளிச் சென்று புலப்பட்டு விடும்.
மேட்டுக்குடி மக்களை மேலோட்-டமாகப் பார்த்து கவிழ்ந்து போகும் கபோதிகளுக்கு அவர்களின் உண்மை உருவம் புலப்படவே புலப்படாது.

செம்மொழி என்று தமிழுக்கு அங்கீகாரம் கிடைத்து உலகத் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். காலங் கடந்தாவது இந்த அங்கீகாரம் வந்து சேர்ந்ததே என்று ஆனந்தப் பண்பாடினர்; காரணம் அவர்கள் மொழியால், வழியால், விழியால் தமிழர்கள்.
ஆனால் பார்ப்பனர்களின் வயிறு மட்டும் சுடுகாட்டு நெருப்பாக எரிந்து தொலைகிறது.
“தினமலர்’’ (13.6.2004) அந்துமணி பதில்கள் பகுதியில் ஒரு கேள்வி: தமிழ்மொழியைச் செம்மொழியாக்கச் சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்...

பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெச-வாளர் வீட்டுத் தறி, நிற்காமல் இயங்-கும்; ஒரு வேளைக் கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும்; தமிழ் மக்கள் அனைவரும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை மறந்து, தம் பிள்ளை-களைத் தமிழ்ப் பள்ளியில் சேர்ப்பர் சக தமிழர்களுடன் தமிழிலேயே பேசுவர். இவ்வளவும் நடக்கப் போகிறது பாருங்கள்! இதுதான் பதில்.

இதில் பார்ப்பனர்களின் வயிற்றெ-ரிச்சல் தெரிகிறதே தவிர, நியாயமான விவாதங்கள் ஏதாவது உள்ளனவா?

தமிழ் செம்மொழி ஆனால் ஏழை நெசவாளர் வீட்டுத்தறி நிற்காமல் இயங்கும் என்று யார் சொன்னார்கள்? அதே நேரத்தில் அந்த ஏழை நெசவாளி செம்மொழி என்று அறிவிப்பு வந்தது குறித்து அளவற்ற மகிழ்ச்சியில் திளைப்பான்; காரணம் அவன் தமிழன்! இவர்களாகவே ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டு, இவர்களாகவே தங்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்க்கிறார்கள் என்றால் இவர்களை அடையாளம் காண வேண்டாமா?

சக தமிழர்களிடம் தமிழிலேயே பேச வேண்டும் என்பது “தினமலரின்‘ கருத்தாகக் கொள்ளலாமா? அப்படியென்றால் அதற்காக ‘தினமலர்’ எத்தனை கட்டுரைகளை எழுதியிருக்-கிறது? பதில்களை இடித்துக் கூறியிருக்-கிறது?

அடுத்து ‘தினமலரில்’ (18.8.2009 பக்கம் 10) டவுட் தனபாலு பகுதியில் ஒரு நஞ்சு!
தமிழக பொதுப் பணித்துறைச் செயலாளர் ராமசுந்தரம் தமிழகத்-திற்குக் கருநாடகா, ஆண்டுக்கு 20 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும், மேட்டூர் அணையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப் படும். கருநாடகா அரசு குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடாததால், இந்த ஆண்டு தாமதமாக கடந்த 7ஆம் தேதிதான் திறந்து-விட்டோம்.

டவுட் தனபாலு: அதனால் என்-னாங்க.. பெங்களூருவுல திருவள்ளுவர் சிலை திறந்திட்டோமோ இல்லையா...? அதுக்கப்புறம் டெல்டா பகுதிகள்ல முப்போகம் விளையாதா என்ன...? இப்படிஒரு பதில்!

பல வருடங்களாக பெங்களூருவில் திறக்கப்படாமல் கோணிப் பைக்குள் முடங்கிக்கிடந்த திருவள்ளுவர் சிலை மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்-களின் முயற்சியால் திறந்து வைக்கப்-பட்டது. இதுகண்டு தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனும் உவகை அடைகிறான்.

ஆனால், தினமலர் கூட்டத்துக்கு மட்டும் கேலியாகவும், இன்னொரு வகையில் வேதனையாகவும் இருக்கிறது _ கடப்பாரையால் வயிற்றை இடித்துக் கொள்கிறது என்றால், இதன் பொருள். அவர்கள் தமிழர்கள் இல்லை. அத-னால் மகிழ்ச்சியும் இல்லை  இதுதானே உண்மை?

இந்த வாரம் “துக்ளக்’’ இதழில் (19.5.2010 _ பக்கம் 25) ஒரு கேள்வி பதில்.
கேள்வி: “எல்லா உள்ளாட்சி அலு-வலகங்களிலும் இனி “தமிழ் வாழ்க’’ என்ற நியான் விளக்குகள் வைக்கப்-படும்’’ என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளாரே! இதன் பயன் என்ன? இதனால் தமிழ் வாழ்ந்து விடுமா?

பதில்: இதனால்தான் தமிழ் வாழும் என்றால் -_ அதைவிடத் தமிழுக்கு வேறு கேவலம் தேவையில்லை. இது தமிழ் வாழ்வதற்காக அல்ல. நியான் விளக்குக் காண்ட்ராக்ட் எடுப்பவர் வாழ, இது வழி செய்யும். அது போதுமே.

எப்படியிருக்கிறது பதில்! தமிழ், தமிழன் என்ற உணர்வு இருந்திருக்கு-மேயானால் இந்தக் கோணத்தில் இந்தப் பூணூல் எழுதுமா?

“தமிழ் வாழ்க’’ என்று நியான் விளக்குப் போடுவது கான்ட்ராக்ட் எடுப்பவர் வாழ என்கிற திசையில் புத்தி மேயப் போகிறது என்றால் இந்தப் புரோக்கர் கூட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

இதே “துக்ளக்’கில் துர்வாசர் ஒருவர் எழுதுகிறார் _ சமச்சீர் கல்விபற்றி..
இருக்கிற கல்வியே ஒழுங்காக இல்லை. இதில் சமச்சீர் கல்வி என்ன வேண்டிக் கிடக்கிறது?

இரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தை வாசிக்கத் தெரியாத அய்ந்-தாம் வகுப்பு மாணவர்கள், இங்கே மலிந்து கிடக்க, தமிழ் மாநாடு, தமிழ்ச் செம்மொழி மாநாடு எல்லாம் எதற்கு என்று கிறுக்குகிறது.

எங்கே சுற்றி வந்தாலும் தமிழை, தமிழர்களை கொச்சைப்படுத்தியே தீருவது என்ற கொழுப்பில் எழுதுகிறது ஒரு கொம்பேறிக் கூட்டம்.

நம்மால் திருப்பிக் கேட்க முடியாதா? குழவிக் கல்லுக்கெல்லாம் கும்பாபி-ஷேகம் நடத்திக் கொண்டிருக்கிறீர்களே, ஏழை வீட்டுத் தறி தடையில்லாமல் ஓடுமா, ஒரு வேளைக் கஞ்சிக்கே வழிஇல்லாதவருக்கு மூன்று வேளை மட்டன் பிரியாணி கிடைக்குமா?

இந்தக் கேள்விக்கு, இந்தச் சமஸ்-கிருதக் கூட்டம் பதிலைச் சொல்லுமா?
கொலை வழக்கில் சிக்கி ஜாமீனில் நடமாடிக் கொண்டிருக்கும் சங்கராச்-சாரியாருக்கு ஊருக்கு ஊர் பவள விழா கொண்டாடிக் கொண்டு இருக்-கிறார்களே _ இதனால் நாட்டுக்கு என்ன பயன்? அவருக்குப் பவள விழா கொண்டாடினால் மாதம் மும்மாரி பொழியுமா?

பக்திப் பள்ளத்தில் தமிழர்கள் குப்புற விழுந்து கிடப்பதால், கேட்கும் திராணியற்றவர்களாகத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் தமிழர்களைச் சூத்திரர்கள் என்று சொன்னவர்கள், தமிழைத் தரக் குறைவாக கேலிப் பொருளாக விமர்சனம் செய்கிறார்கள் என்பதைத் தமிழர்கள் கவனிக்கத் தவறக் கூடாது.

பார்ப்பனர்களின் இந்த மமதைப் போக்கை அறிஞர் அண்ணா அழகாகப் படம் பிடித்தார்.
“தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ்-மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்-மொழியெனக் கருதுவதில்லை. அவர்-களின் எண்ணமெல்லாம் வடமொழி-யாகிய சமஸ்கிருதத்தின்மீதுதான் (“திராவிடநாடு’’ 2.11.1947).
அண்ணாவின் படப்பிடிப்பைப் பார்த்த பிறகாவது பரிதாபத்துக்குரிய நமது “பஞ்சமர்களும்’’ ‘‘சூத்திரர்களும்’’ அடையாளம் காண்பார்களா பார்ப்-பனர்களை?

-------- விடுதலை ஞாயிறு மலர் (22.05.2010) மின்சாரம் அவர்கள் மூளைக்கு மின்சாரம் பாய்ச்சியது

Friday, May 21, 2010

பார்ப்பனியத்துக்கு வால் பிடிப்பவர்களே..உங்களை விட நன்றி கெட்டவர் இருக்கமுடியாது

தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கங்களுக்கு எதிராக_ திராவிடர் இயக்கத்தால் பலன் பெற்றோர், மரியாதை பெற்றோர், விளம்பரம் பெற்றோர் மண்ணை வாரித் தூற்ற ஆரம்பித்துள்ளனர்.


இது ஒன்றும் புதிதல்ல. சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்பட்ட ம.பொ.சி.யும், அவரைச் சேர்ந்த-வர்களும் திராவிட எதிர்ப்பு மாநாடுகளைப் பல்வேறு இடங்களில் நடத்தியதுண்டு.

திராவிடர் இயக்கத்தினால் பகுத்தறிவும், தன்மான உணர்ச்சியும், வகுப்புரிமையும் பெற்ற தமிழர்கள் ம.பொ.சி.யையும், அவரைச் சேர்ந்த கூட்டத்தாரையும் புறக்கணித்தார்கள். கடைசியில் திராவிட இயக்கத்தின் ஆதரவினால்தான் ம.பொ.சி.க்கு மேலவைத் தலைவர் என்ற பதவியும் கிடைத்தது என்பது வரலாறு நினைவூட்டும் பாடமாகும்.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் தமிழர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கிடைத்து மேன்மை நிலை பெற்று வருவதற்கும், பெயருக்குப் பின்னால் ஜாதி வாலை நறுக்கிக் கொண்டதற்கும், தமிழ் செம்-மொழி என்ற நிலையை எய்தியதற்கும், தை முதல்-நாள்-தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று சட்ட ரீதியாக ஆக்கப்பட்டதற்கும், சென்னை மாநிலத்-திற்குத் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் ஏற்பட்டதற்கும், சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடி ஆன-தற்கும் காரணமே திராவிடர் இயக்கம்தான் என்பது சிறுபிள்ளைகள்கூட அறிந்திட்ட உண்மையாகும்.

இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு, திராவிட இயக்கத்தால் தமிழர்கள் உரிமைகளை இழந்-தார்கள் என்று நாக்கூசாமல் ஒரு சிலர் பேசுகின்றனர் என்றால் இதைவிட நன்றிகெட்டதனமும், பார்ப்பனியத்துக்கு வால் பிடிக்கும் விபீஷணத்தனமும்_ வேறு ஒன்றும் இருக்கவே முடியாது.

திராவிடர் என்ற பெயர் திராவிட இயக்கம் சூட்டிய புதிய பெயர் அல்ல. அது வரலாற்று ரீதியானதாகும். சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர் நாகரிகம் என்று கண்டுபிடித்ததற்குக்கூட காரணம் திராவிடர் இயக்கம் தானே?

திராவிடர் கழகம் என்று தந்தை பெரியார் பெயர் சூட்டிக் கொண்டதால் திராவிடர் இனத்தைச் சேர்ந்த மலையாளிகளின் ஆதிக்கத்தை தந்தை பெரியார் கண்டிக்கவில்லையா?

திருவெறும்பூரில் பெல் நிறுவனம் தொடங்கப்பட்ட போதும் நெய்வேலியில் நிலக்கரி ஆலை உருவாக்கப்பட்ட போதும், பணிகளில் மலையாளிகளின் ஆதிக்கம் தென்பட்டபோது பொதுக்கூட்டம் போட்டு கண்டனம்_- எதிர்ப்புத் தெரிவித்தது தந்தை பெரியார் அல்லவா? திராவிடர் கழகம் அல்லவா?

தமிழ்நாடு, ஆந்திரா, மலையாளம் உள்ளிட்ட மாநிலங்களை இணைத்து தெட்சிணப் பிரதேசம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கும் திட்டம் கருவுற்றபோது, அதனைக் கண்டித்து புயல்குரல் எழுப்பியவர் திராவிடர் கழகத் தலைவர் தந்தை பெரியார் அல்லவா!

அதற்கான ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றபோது, அதனைக் கண்டித்து காமராசருக்கு தந்தி கொடுத்தவர் தந்தை பெரியார் ஆயிற்றே!

மொழிவாரி மாநிலம் உருவாக்கப்பட்ட போது சென்னை எங்களுக்கே என்று ஆந்திரர்கள் குரல் கொடுத்த போது தந்தை பெரியார் கடுமையாக எதிர்க்க-வில்லையா?

24.1.1955 நாளிட்ட விடுதலை ஏட்டில் தந்தை பெரியர் வெளியிட்ட அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளாரே!

இப்பொழுது நான் மந்திரிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துக் கொள்ள வேண்டியவனாய் இருக்கிறேன். அதாவது தமிழ்நாட்டில் பாமர மக்கள் மொழியாகிய தமிழ் மொழியை அரசியல், சமுதாய இயல் காரியங்களில் அரசாங்கம் சிறிதும் இலட்சியம் செய்வதில்லை. இது தவிர இந்தியை நுழைத்துப் பள்ளிக்-கூடங்களிலும், பரீட்சைகளுக்கும் பாடமாக ஏற்பாடு செய்து, படிக்கும் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் தொல்-லைகள் ஒருபுறம் இருக்க, உத்தியோகத் தகுதியைக் கொண்டு வந்து புகுத்திப் பெரும்பாலான தமிழ் மக்களை உத்தியோகத் தகுதியற்றவர்களாக ஆக்குவது மற்றொரு புறமிருக்க, இவையெல்லாம் போதாது என்று கருதியோ, என்னமோ, தமிழ் எழுதப்படிக்க, பேசத் தெரியாத மலை-யாளிகளையும், கன்னடியர் (மங்களூர்க்காரர்)-களையும் தமிழ்நாட்டிலே மாகாணத் தலைமை உத்தியோகம், ஜில்லா தலைமை உத்தியோகம் மற்றும் கெஜட் பதிவு அதிகாரிகள், கமிஷனர்கள் முதலிய உத்தியோகங்களில் நியமிப்பது என்பது சர்வ சாதாரண காரியமாக இருந்து வருகிறது. ஜனநாயக நாடு, சுதந்திர நாடு, மக்கள் ஆட்சி என்கின்ற அலங்காரப் பெயர்-களைச் சொல்லிக்கொண்டு, நடைபெறுகிற ஆட்சியில், 100_க்கு 80 பேர்களுக்கு மேற்பட்டுக் கல்வியறிவில்லாத பாமர மக்கள் நிறைந்திருக்கும் நாடு என்பதைச் சிறிதும் உணராமல், மேற்கண்ட மாதிரியான நாட்டு மொழி தெரியாத அன்னிய மொழியாளர்களை அதிகாரிகளாக நியமிப்பதென்றால் குடிமக்கள் அதிகாரிகளிடம் எப்படிப் பேச முடியும்?

என்ற வினாவைத் தொடுத்தவர் தந்தை பெரியார்தானே!

திராவிடர் இயக்கம் என்பதாலேயே கன்னடர், மலையாளிகளின் ஆதிக்கத்தை தந்தை பெரியார் எதிர்க்கத்தானே செய்தார்?

உண்மை இவ்வாறிருக்க திராவிட இயக்கத்தால் நாம் வீழ்ந்தோம் என்பது பேச்சல்ல_- பிதற்றலே!

---- நன்றி விடுதலை (21.05.2010)

Thursday, May 20, 2010

சிறையில் இருக்கும் பார்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்கள் என்று நீர் நினைக்கிறீர்?

ஒடுக்கப்பட்ட மக்களின் தலை நாயகரும், பவுத்த நெறி பரப்புவதில் தனிமுத்-திரை பொறித்தவருமான அயோத்திதாச பண்டிதரின் பிறந்த பெருமைக்குரிய நாள் இந்நாள் (20.5.1845).

சென்னை_ இராயப்-பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராக இருந்து அரும்பணி ஆற்றியவர். 1907 ஆம் ஆண்டில் ‘‘தமிழ்’’ என்ற வார இதழை நடத்திய பெருமையும் அவருக்கு உண்டு.

பார்ப்பன வேதாந்த விவரம், நந்தன் சரித்திர விளக்கம், நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை, திருவள்-ளுவ நாயனார் பறைச்சிக்-கும், பார்ப்பானுக்கும் பிறந்-தார் என்னும் பொய்க்கதை விவரம் முதலிய நூல்களை எழுதிய சிந்தனையாளர் இவர்.

தோழர் ஒளிச்செங்கோ (கண்கொடுத்தவனிதம்) இவர் குறித்து ‘விடுதலை’ தந்தை பெரியார் மலரில் (1967) தெரிவித்த தகவலும், கருத்-தும் இக்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டி-யவை.

1892 இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் திரு.சிவநாமசாஸ்திரி தலை-மையில் நடந்தது. கூட்டத்-தில் அவர் பேசும்போது, ‘‘வள்-ளுவர் பார்ப்பன விந்-துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடி-னார்;

‘சுக்கல_-சுரோனிதம்’ கலப்பறியாது’’ என்று குறிப்-பிட்ட போது, அக்கூட்டத்-தில் இருந்த அயோத்திதாச பண்டிதர் எழுந்து, நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால் நான் சில கேள்விகள் கேட்கவேண்-டும் என்றார்.

அதற்கு சிவநாமசாஸ்திரி சரி, கேளும் என்றார்.
‘‘நமது நாட்டில் தீண்-டாதவர்கள் என்று இழிவு-படுத்தப்படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணை-யால் எம்.ஏ., பி.ஏ., படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கி-றார்-களே, அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்-கள் என்று எண்ணுகிறீர்?’’ என்று கேட்டார் அயோத்தி-தாசர். அதற்கு சிவநாம சாஸ்-திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்றுகொண்டிருந்தார்.

‘‘தொடர்ந்து, பெருங்குற்-றங்களைச் செய்து சிறைச்-சாலைகளில் அடைபட்டி-ருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்-கள் என்று நீர் நினைக்கிறீர்?’’ என்று அடுத்து வினாக்-களைத் தொடுத்தார்.

திருதிருவென்று விழித்-தார் சாஸ்திரிவாள். ஏன் பதில் சொல்லாமல் நிற்கிறீர்? சொல்லும் என்று சினந்து கேட்டுக் கொண்டிருந்த-போது கூட்டத்தில் இருந்த ஆனர-பிள் திரு.பி. அரங்கையா நாயுடுவும், திரு.எம்.வீரராக-வாச்சாரியாரும் அயோத்தி தாசரை அமைதிப்படுத்தி-னர். கூட்டத்தில் இருந்தவர்களும் சிவநாம சாஸ்திரியை இகழ்ந்து பேச ஆரம்பித்து-விட்டனர். சாஸ்திரிவாள் நைசாக உட்கார்ந்து, சிறிது நேரத்தில் நடையைக் கட்டிவிட்டார்.

அதுமட்டுமல்ல_ - இன்-றும் பார்ப்பனர்கள் பெங்-களூருவில் திருவள்ளுவர் சிலையைத் திறந்தால் மாதம் மும்மாரி பொழியுமா என்று கேட்கும் மனப்பான்மை-யில்தான் உள்ளனர்.

இன்றைக்கு 110 ஆண்டு-களுக்கு முன் தமிழினத் தன்-மான உணர்வோடு உஞ்ச-விருத்திக் கூட்டத்தை உதைக்காமல் உதைத்த அயோத்தி தாசரை நினைவு கூர்வோம்!

-விடுதலை (20.05.2010) மயிலாடன்

Wednesday, May 19, 2010

தேசிய கீதத்திலிருந்து ‘திராவிடம்’ என்ற சொல்லை நீக்கமுடியுமா?

வங்கக் கவிஞர் இரவீந்-திரநாத் தாகூரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் நாடு தழுவிய அளவில் கொண்-டாடப்படுகிறது.

அவர் படைப்புக்காக நோபல் பரிசு பெற்றவர்; அவர் எழுதிய ஜன கன மன பாடல்தான் இந்தியா-வின் தேசியப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் தேசிய கீத-மாகக் கொண்டு வரப்பட-வேண்டும் என்ற கருத்து வந்தபோது, அதனைக் கடுமையாக எதிர்த்தவர்கள் எம்.என். ராய், தாகூர் போன்றவர்கள் ஆவார்கள். அதன் மதவெறி நாற்றம் அவர்களை அவ்வாறு செயல்படத் தூண்டியது.

ஜன கன மன பாடலில் இந்தியத் துணைக் கண்டத்-தில் உள்ள பன்மொழி நாடு-களையெல்லாம் தவறாமல் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஒரு தகவலை இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
திருவனந்தபுரத்தில் திரா-விட மொழியியல் ஆய்வு மய்யம் ஒன்றை நடத்தி வந்தார். அவரின் படைப்பு-களுள் விழுமியது ‘திரவி-டியன் என்சைக்ளோபீடியா’ என்பதாகும்.

அன்றைய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷி-யைச் (பி.ஜே.பி.) சந்தித்து அந்த நூலை அன்பளிப்பாக வழங்கினார் வி.அய். சுப்பிரமணியம். நூலைப் பார்த்த மாத்திரத்திலேயே அமைச்சரான ஜோஷி பார்ப்பனர், ‘திரவிடியன்’ என்ற சொல்லை நீக்கிவிட-லாமே என்று கூறினாராம். சற்றும் தாமதியாமல் அறிஞர் வி.அய். சுப்பிரமணியம் அவர்கள் “நீங்கள் தேசிய கீதத்திலிருந்து ‘திராவிடம்’ என்ற சொல்லை நீக்கி-விடுங்கள்; நானும் ‘திராவிடக் களஞ்சியம்’ என்ற பெயரை நீக்கிவிடுகிறேன்’’ என்று பதிலடி கொடுத்தார். (ஆதாரம்: ஞிலிகி ழிமீஷ்s 2003, பிப்ரவரி)

அந்த வகையில் கவி தாகூர் இந்தியா என்பது பல மொழிகள், பல இனங்கள் கொண்ட ஒரு துணைக் கண்-டம் என்பதை மறைக்காமல் அந்தப் பாடலில் பதிவு செய்துள்ளார்.
மாஸ்கோவில் உள்ள பேராசிரியர் பீரிட்ரோ என்பவர் கவி தாகூருக்குக் கீழ்க்கண்ட தந்தியை அனுப்-பினார் (ஆண்டு 1929).

“ருசியாவில் கைத்-தொழில், விவசாயம், விஞ்-ஞான ஆராய்ச்சி, பல்-கலைக் கழகங்கள், பாடசாலைகள், கலை வளர்ச்சி இவை உயர்ந்த நிலையை அடைந்-ததற்கு நீங்கள் என்ன காரணம் சொல்லுகிறீர்கள்? அடுத்த அய்ந்து வருடங்-களுக்கு உங்களுக்குள்ள வேலைத் திட்டம் என்ன? அவைகளுக்குத் தடை யாது?’’ என்பதுதான் அந்தத் தந்தியின் வாசகம்.
அதற்குத் தாகூர் அனுப்-பிய தந்தி வாசகம் வருமாறு:

“உங்களுடைய வெற்-றிக்குக் காரணம் தனிப்பட்ட நபர்களிடமிருந்த செல்வம், மானிட சமூகத்தினிடம் வந்து சேர்ந்ததாகும். நாங்-கள் கீழ் நிலையில் இருப்ப-தற்கு எங்களுக்குச் சமூகத் துறையிலும், அரசியல் துறை-யிலும் ஏற்பட்டுள்ள

பைத்தியக்காரத்தன்மைகளும், வெறிபிடித்த தன்மைகளும், கல்வியில் முன்னேற்றம் அடையாததும்தான் கார-ணம்.’’ (‘குடிஅரசு’, 29.11.1931).

தாகூர் அன்று கூறியது இன்றும் பொருந்தும்தானே!
- விடுதலை(19.05.2010) மயிலாடன்


என்ன மிரட்டலா? பூச்சாண்டி காட்டுவதா? தினமல(ம்)ர் கூட்டத்துக்கு பொத்துக்கொண்டு வருகிறதோ?

அறிவியலைப் பரப்பினால் மதப் பூச்சாண்டி காட்டி மிரட்டுவதா? இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானவர்கள் மீது சட்டம் பாயவேண்டும். நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தி கூறியுள்ளார்.
அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு அரசின் அறிவியல் துறை

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் பெரியார் அறிவியல் மய்யத்தில் அறிவியல் சிந்தனை-களை மாணவர்களிடையே பரப்பிட ஒரு முகாம் (3 நாள்களுக்கு) தமிழக அரசின் அறிவியல் துறை நடத்திடும் நிலையில், நேற்று பார்ப்பன நாளேடு ‘தினமலரில்’ ‘இந்து மத உணர்வுகளைப் புண்படுத்த ஒரு முகாமா?’ என்று தலைப்பிட்டு, விஷமத்தனமான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இந்து மத ரீதியான அதிசயங்களாம்!

“அதில் உள்ள செய்தியின் ஒரு பகுதியில் இந்து மத ரீதியான அதிசயங்களை, அறிவியல் ரீதியான எதிர்-கால தலைமுறையினர் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக முகாம் நடத்தப்படுவதாக முகாம் ஒருங்-கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்’’ என்று போடப்-பட்டிருக்கிறது.

அந்த ‘பிரகஸ்பதி’மீது நடவடிக்கை

இது சரியான தகவலாக இருந்தால், முகாம் நடத்-துவதுபற்றி கூறிய அந்தப் ‘பிரகஸ்பதி’மீது சட்டப்படி, பள்ளிக் கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்தாக-வேண்டும்.

இந்து மத பெருமைக்காகவா முகாம்?

மத சார்பற்ற அரசில் அதுவும் பெரியார் அறிவியல் மய்யத்தில், இந்து மதப் பெருமைக்காகவா முகாம் ஏற்பாடு செய்திருப்பார்கள்? இது எப்படி சரியாகும்?
அதே செய்தியில்,

கீழே, “மேலும், மத ரீதியான அதிசயங்கள் உண்மை-யில்லை என்றும், பகுத்தறிவைக் கற்றுக்கொள்ள-வேண்டும் என்றும் மாணவ, மாணவியர் இடையே, புரிந்துணர்வு ஏற்படுத்தவே இந்த முகாம் என்றும் விளக்கம் அளித்தார்.’’

திருவிழாக்களில் எடுக்கப்பட்ட படத் தொகுப்பு

ஆனால், திருவிழாக் காலங்களில் நடக்கும் தீ மிதித்தல், கையில் தீப்பந்தங்களை வைத்து உடலில் சுட்டுக் கொள்ளுதல் போன்றவற்றை பல்வேறு திரு-விழாக்களில் எடுக்கப்பட்ட படத் தொகுப்பை திரையிட்டுக் காட்டுவதாகக் கூறி, சில மாணவர்களை மேடையேற்றியும் விளக்கம் அளித்தனர்.

பார்ப்பனர்கள் கொலை மிரட்டல்

இந்த முகாமின்போதே, இதில் கலந்துகொண்ட பள்ளி சிறுவர், சிறுமிகளிடம் பகுத்தறிவை ஏற்படுத்துவதாகக் கூறி, இந்து மதத்தையும், இந்து மதத் தலைவர்களையும் பழிக்கும் விதமாகப் பேசினர். மத ரீதியான உணர்வு-களைப் புண்படுத்திப் பேசியது அங்கிருந்தவர்கள் மத்தி-யில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது!’’ என்று எழுதிய-தோடு, இதை நடத்திட வந்த பேராசிரியர் நரேந்திர நாயக் (கருநாடக அறிவியல் அறிஞர்) அவர்களுக்கு சில பார்ப்பன மதவெறியர்கள் தொலைபேசிமூலம் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாகக் கேள்விப்-படுகிறோம்!

இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதென்ன?

இந்திய அரசியல் சட்டத்தின் 51_ஏ பிரிவு, ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படை கடமைகள் (Fundamental Duties) பற்றி கூறுகையில்,
‘‘It shall be the duty of every citizen of India to develop scientific temper, spirit of inquiry, humanism and reform’’ என்று கூறப்பட்டுள்ளதே!

அடிப்படை உரிமை போன்றதே அடிப்படை கடமைகளும்கூட!
அறிவியல் மனப்பான்மை முக்கியம்

இதன் அறிவியல் மனப்பான்மையை, கேள்வி கேட்டுத் துளைக்கும் பண்பை, மனித நேயத்தை, சீர்-திருத்தத்தைப் பரப்பி வளர்க்கச் செய்வதே அடிப்படைக் கடமையாகும்.
என்ன மிரட்டலா? பூச்சாண்டி காட்டுவதா?

இதனை அரசு, அதுவும் மதச் சார்பற்ற செக்யூலர் அரசு, அதன் அறிவியல் மய்யத்தில் தக்காரைக் கொண்டு நடத்தினால், அது மத உணர்வை _ இந்து மத உணர்வைப் புண்படுத்துகிறது என்று கூறி மிரட்டல் விடுவதா? பூச்சாண்டி காட்டுவதா?

அறிவியல் உண்மைகளைப் பரப்பி, மத, மூட நம்-பிக்கைகளை ஊசிகொண்டு, ஊதப்பட்ட பலூன்களைக் குத்தச் செய்வதுபோல் அவசியமாகச் செய்யவேண்டிய பணி அல்லவா இது?

சைபர் க்ரைம் குற்றப்பிரிவு

இந்த மிரட்டல் விட்டவர்மீது ‘செல்போனில்’ சைபர் க்ரைம் குற்றப் பிரிவினர் உரிய நடவடிக்கையை உடனே எடுக்க முன்வரவேண்டும்!

உலகம் தட்டை என்று கருதப்பட்ட மூட நம்பிக்கை அதனை அடிப்படையாக, இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலுக்குள் ஒளித்து வைத்தான் என்ற கதை, கற்பனை என்று விளக்கம் சொன்னால் தவறு என்ன?

குடும்பக் கட்டுப்பாடு மதத்திற்கு விரோதம்தான்!

அரசின் குடும்பக் கட்டுப்பாடு, கர்ப்பத்தடைகூட மதக் கருத்துக்கு விரோதம்தான். அத்திட்டம் மதவாதிகள் மனதைப் புண்படுத்துகிறது என்று கூறி, அரசைக் கைவிடச் சொல்ல முடியுமா?

கிரகணம் _ ராகு, கேது, பாம்பு விழுங்கும் கதையை அறிவியல், வானவியல் ஏற்குமா? இதை அம்பலப்-படுத்தி மூடநம்பிக்கையை மாணவரிடையே போக்க முயற்சித்தால், அது ‘மனம் புண்படும்’ என்றால், அவ்-வளவு மோசமான மனம் படைத்தோருக்கு சமூகத்தில், நாட்டில் எங்கே இடம் இருக்கவேண்டும்?

இன்னமும் கதை விடுவதா?

மனிதன், நிலா உலகிற்குச் சென்று வந்து பல ஆண்டுகாலம் ஆகிவிட்டது.
இன்னமும் ‘‘தாரை, குருபத்தினி’’, நிலா ஏன் தேய்-கிறது _ சாபம் _ நிலாவுக்கு _ சந்திரனுக்கு 27 மனைவி-கள் கதை கூறிட முடியுமா?

இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைப் போக்கத்தானே அறிவியல்! தி.க., ப.க. உடனே உரிய நடவடிக்கையில் இறங்கும்!

அம்மை குத்திக் கொள்வது ஆத்தாளுக்கு விரோதம் என்று நம்பும் வடிகட்டிய மூடர்கள் மனம் முக்கியமா? நாற்றங்கால் பயிர்களாக உள்ள மாணவர்-களை அறிவியல் ரீதியாகப் பக்குவப்படுத்துவது முக்கியமா?

பகுத்தறிவாளர் கழகமும், திராவிடர் கழகமும் வேடிக்கை பார்க்காது. உடனே உரிய நடவடிக்கைகளில் இறங்கும்!

------ நன்றி விடுதலை(19.05.2010)

Tuesday, May 18, 2010

ஏசுவானவர் எவ்விதத்திலும் மேம்பட்டவர் அல்லர் - பெர்ட்ரண்ட் ரஸல்

உலகப் புகழ்பெற்ற நாத்திகரான பெர்ட்ரண்ட் ரஸல் அவர்களின் பிறந்த நாள் இன்று (18.5.1872). 98 ஆண்டுகள் வாழ்ந்து காட்டி மத நம்பிக்கையாளர்களை பிரமிக்கச் செய்தவர்.


சிறுவயதில் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டு இருந்-தவர்தான். இதுபற்றி ரஸல் கூறுகிறார்:

இளம் பருவத்தில் இருந்தபோது நான் ஆழ்ந்த மத உணர்ச்சி கொண்டவ-னாக இருந்தேன். கணிதம் நீங்கலாகவோ என்னவோ மற்ற எந்த ஒரு துறையைக் காட்டிலும் அதிகமாகவே மத விஷயத்தில் ஆர்வ-முள்ளவனாகவே இருந்-தேன். அப்படிப்பட்ட ஆர்-வமே அதை நம்புவதற்குக் காரணம் உண்டா என்ற கேள்வியை ஆராயச் செய்தது. அதனால் அந்த ஆர்வம் அடிக்கடி அப்-படித் தூண்டுவதில்லை. கடவுள், மரணமற்ற தன்மை பற்றி ஆய்ந்தேன். ஒவ்-வொன்றையும் ஆய்வு செய்-ததில் இவற்றை நம்புவதற்-குக் காரணம் ஏதுமில்லை என்று உணர்ந்தேன் என்று குறிப்பிடுகிறார்.

மரணத்திற்குப் பிறகு நம் நிலை என்ன? மோட்சத்-துக்கா, நரகத்துக்கா? என்ற கேள்வி மனிதனை சஞ்-சலப்படுத்துகிறது. இது குறித்து ரஸல் கூறுகிறார்:

மரணத்திற்குப் பிறகு உடல் சிதைகிறது என்பதை நான் அறிந்துள்ளேன். அவ்-வாறு உடல் சிதைந்து அழிந்த பிறகும் மனம் மட்டுமே செயல்படுகிறது என்று எண்ணுவதற்குக் காரணம் இல்லை என்று கறாராகக் கூறுகிறார் ரஸல்.

நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல? (கீலீஹ் மி ணீனீ ஸீஷீ ணீ சிலீக்ஷீவீவீணீஸீ) என்ற நூல் உலகப் புகழ் பெற்றது. கிறித்துவ உலகத்தில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது.

இந்நூலை தமிழில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளி-யிட்டுள்ளது.

கிறிஸ்துவுக்குப் பசியாக இருந்ததாம். அத்தி மரம் ஒன்று தூரத்தில் தெரிந்ததாம். தின்பதற்கு ஏதாவது பழங்-கள் இருக்கும் என்று அதன் அருகில் போனாராம். ஆனால் இலைகளைத் தவிர அதில் ஒன்றும் இல்-லையாம். உடனே ஏசு என்ன செய்தார் தெரியுமா? உன்னுடைய பழத்தை ஒரு-வருமே இனிமேல் சாப்பி-டாமல் போகக் கடவது... என்று சாபமிட்டார். அந்த அத்தி மரமும் உடனே பட்டுப் போய்விட்டதாம்! எவ்வளவு வேடிக்கைக் கதை பார்த்தீர்களா? பழம் பழுக்கும் பருவ காலம் வராமல் இருந்ததற்காக மரத்தின்மீது கோபித்துக் கொள்வது நியாயமா? இதிலிருந்து ஏசு-வானவர் புத்தியிலாகட்டும், நற்குணத்தில் ஆகட்டும், சரித்திரத்தில் கூறப்பட்ட சில மனிதர்களை விட எவ்விதத்திலும் மேம்பட்டவர் அல்லர் என்று அந்நூலில் கூறுகிறார் ரஸல்.

வளமான சிந்தனை உள்ளவர்கள்தான் இப்படிப் பலமாக சிந்திக்க முடியும்_- அப்படித்தானே!

- விடுதலை(18.05.2010)  மயிலாடன்


Monday, May 17, 2010

ஏன்? ஜாதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்?

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினரைக் கணக்கிட்டால், சமூக நீதிக்கொள்கைத் திட்டங்களைச் செயல்படுத்திட வலுவான ஆதாரங்களைத் தந்து உதவிடும் என்கிறார் சிறந்த அரசியல் நோக்கரும் ஆய்வாளருமான யோகேந்திர யாதவ். தற்போது பெர்லினில் விஸ்சன் ஷாப்ட்ஸ் கோலெக்-இல் இருக்கும் இவர் டெல்லி சிஎஸ்டிஎஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வறிஞர்.


தப்பான காரணங்களுக்காகச் சரியான முடிவுகளை மேற்கொள்ளும் தந்திரம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு இருக்கிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரம் சேகரிப்பது தொடர்பான அறிவிப்பு அவற்றில் ஒன்று. தெலுங்கானா பிரச்சினையைப் போலவே, நீண்ட காலமாகத் தேங்கிக்கிடக்கும் பிரச்சினையில் அவசரப்பட்டு முடிவு எடுத்தாற் போன்ற தோற்றம்தான், இந்தப் பிரச்சினையிலும் ஏற்பட்டுள்ளது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத்திட்டம் போலவே, நாட்டின் நலன் கருதி கையைப் பிசைந்துகொள்ளும் நிலைதான். இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை சென்சசில் கணக்கெடுப்பது தொடர்பான அறிவிப்-பும்-கூட, நீண்ட நாள்பட்ட கோரிக்கை மீது முற்-போக்கான முடிவு எடுத்ததைப் போலத் தோன்றினாலும்,சமூக நீதிக்கான திட்டங்களைச் செயல்படுத்திட இது உதவக்கூடியது என்றாலும், வேண்டாவெறுப்புடன் செய்யப்படுவது போலக்காட்சி அளித்துத் தேவையற்ற கெடுத-லான விமரிசனங்களை வழக்கமானவர்களிட-மிருந்து வரவழைத்துவிட்டது.

என்னதான் முடிவு என்பதுபற்றி அரசின் மவுனம், குழப்பத்தைத்தான் மேலும் ஏற்படுத்தி-யுள்ளது. ஊடகங்களின் செய்தித் தலைப்புகளும், நாடாளுமன்ற விவாதங்களும் ஜாதிக் கணக்-கெடுப்பு என்றே கூறுகின்றன. காலனி ஆட்சிக்-காலத்தில் செய்யப்பட்டது. போன்று, இந்து மதத்தின் எல்லா ஜாதி, உள் ஜாதிப் பிரிவு-களையும் கணக்கெடுத்துத் தரம்பிரிப்பது போன்று பிரமையை உருவாக்கி விட்டது. ஆனால், எஸ்.சி., எஸ்.டி பிரிவுகளுடன், ஓபிசி பிரிவையும் கணக்கெடுப்பது என்கிற அளவில் குறிப்பிட்ட மாதிரி விவரங்கள் சேகரிப்பது மட்டுமே செய்யப்படவிருக்கிறது என பிரணாப் முகர்ஜியின் அறிக்கை தெரிவிக்கிறது. வேறு வகையில் சொன்னால் கணக்கெடுப்பின்போது, எஸ்.சியா, எஸ்டியா எனக்கேட்பதைப் போல ஓபிசியா என்று மட்டுமே கேட்கப்படும். அவர்கள் தெரிவிக்கும் பதிலுக்கேற்ப, ஜாதியின் பெயர் பதிவு செய்து கொள்ளப்படும். மற்றவர்களின் ஜாதி பற்றிய கேள்வி கேட்கப்படமாட்டாது. தற்போதைய சூழலில், இது மிகவும் நாயமான அணுகுமுறை; ஜாதி வாரிக் கணக்கெடுப்புக்குச் சரியான வகையில் பொருள் கொள்ளும் முறை ஆகும்.

சதிஷ் தேஷ்பாண்டே கூறியது போல, ஜாதி வாரிக்கணக்கெடுப்புக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு வாதங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் அவற்றிற்குத் தேவை இல்லை. ஓபிசியினரின் ஜாதி பற்றிய முழு கணக்கெடுப்பை நடத்தினால், 80 ஆண்டுக் காலமாகக் கைக்கொள்ளப்படும் திட்டத்தைத் திருப்பிப் போட்டதாக ஆகாது; என்றாலும் ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்ட அணுகு முறைகளை தர்க்க ரீதியாக மாற்றுவதாகவே அமையும். கடந்த காலங்களில், கருநாடகா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், பிரத்தி-யேகமாக அமைக்கப்பட்ட கமிஷன்களின் மூலம், இம்மாதிரி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கருநாடக மாநிலம் முன்னோடியானாதும் சிறப்பான வகையிலும் அமைந்தது எனலாம். இந்திய அளவில் மாதிரி சர்வே ஒன்று மண்டல் கமிஷனால் நடத்தப்-பட்டது. அவற்றையெல்லாம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்த்து செய்யப்படாதது இவ்வகை ஆதாரங்கள் பகுதியாகவும் சரிபார்த்திடாமலும் அமைந்திடும் நிலையில் உள்ளன.

முக்கிய விவரம்

இம்மாதிரிக் கணக்கெடுப்பினால் நமக்கு என்ன விவரம் கிடைக்கும்? நிறைய கிடைக்கும். பல்வேறு ஜாதியினர் தொடர்பான எண்ணிக்கை, பிற்படுத்தப்-பட்ட தன்மை தொடர்பான சோதனை முடிவுகள் சேகரிக்கப்பட்டு, அவை தொடர்பாக முடிவே இல்லாமல் செய்யப்பட்டுவரும் வாதங்களை முடிவுக்குக் கொண்டுவந்து, சீரமைத்திடும் செயல்களை நடைமுறைக்குக்கொண்டு வர முடியும். ஓபிசியினரின் எண்ணிக்கை தொடர்பான விவாதங்களுக்கு முடிவு கட்டுவதோடு, அவர்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளையும் கணித்திட பெருமளவு உதவும். ஓபிசி தொடர்பான அனைத்து வகையான எண்ணிக்கை பாலின விகிதம், இறப்பு, பிறப்பு கணக்கு, கல்வி, பள்ளி செல்வோர் எண்ணிக்கை, பட்டதாரிகளின் எண்ணிக்கை முதலிய அனைத்து விவரங்களையும் அறிந்திட இயலும். பொருளாதார நிலை, சொத்துகள், தொழிலாளிகளின் தொகை போன்ற பலவற்றை அறிந்திட முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்ட வாரியாக, ஜாதி வாரியாக, இவ்விவரங்கள் கிடைக்கும். இதன்மூலம் இடஒதுக்கீடு முறையைச் செம்மையாகச் செய்திட முடியும். பட்டியலில் சேர்ப்பது, நீக்குவது போன்ற அரசியல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்திடவும் திட்டங்களைச் சீராகச் செயல்படுத்திடவும் முடியும். சீரமைத்திடும் நடவடிக்கைகளை உருவாக்கிட இது உதவாது, சென்சசில் மிகஅதிக ஊதியம் பெறும் வேலைகளையோ, ஏனைய விவரங்களையோ சேகரிப்பதில்லை என்றாலும், இது ஒரு பெரிய முயற்சிதான்.

(ஓபிசி) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கெடுப்பு விருப்புத்திட்டம் அன்று தம்மால் சட்டப்படியும் திட்டப்படியும் அங்கீகரிக்கப்பட்ட சமூகக் குழுக்களைக் கணக்கிடாமல் இருந்திட தற்கால மாநிலங்களால் முடியாது. ஓபிசியினருக்கு அரசு வேலை வாய்ப்புகளிலும் கல்விச்சாலை-களிலும் இடஒதுக்கீடு முதலிய பல்வேறு நலத்திட்டங்களை அவர்களுக்கு அளிப்பதானது அவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்துவதைக் கட்டாயமாக்குகிறது. சரியான, ஆய்வு முறையிலான ஆதாரங்களை நீதித்துறை அடிக்கடி கேட்கிறது. ஓபிசியினர் பற்றிய கணக்கெடுப்பு அவர்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட பிறகு செய்யப்பட்ட 2001 சென்சசிலேயே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். உண்மையில் அப்போதைய சென்சஸ் தலைமைப் பதிவாளர் இதற்கான யோசனையைத் தெரிவித்தார். ஆனாலும் இந்திய உள்துறை அமைச்சகத்தால் அய்க்கிய ஜனநாயக முன்னணி அரசில் புறந்தள்ளப்பட்டு விட்டது.

எது சரியான தருணம்?

சென்சஸ் பணிகள் தொடங்கப்பட்டுவிட்ட இன்றைய நிலையில் இது சாத்தியமா? எல்லா ஜாதிகள் பற்றிய கணக்கெடுப்பை முழுமையாக நடத்திட தற்போது காலம் கடந்திட்ட நிலை என்றாலும், இதுபற்றிய முடிவு முன்னமேயே எடுக்கப்பட்டிருக்க வேண்டும்தான். ஆனாலும், இப்போதைய நிலையிலும், ஓபிசி பற்றிய கணக்கெடுப்பு சாத்தியப்படக்கூடியதே! ஓபிசிகளின் சட்டப்பூர்வப்பெயரான சமூக, கல்வி ரீதியில் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் பட்டியலை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் தேசியக் கமிஷன் ஏற்கெனவே தயாரித்துள்ளது. நாட்டில் உள்ள ஜாதியினரை அடையாளம்காண இப்பட்டியல் அடிப்-படையாக அமையும். ஒவ்வொரு மாநிலத்திலும் மனித இனக் குழு சங்கத்தின் சார்பாக எடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. மாநில வாரியான ஜாதி, இனங்-களின் பட்டியலை இத்துடன் இணைத்துக்-கொள்ளலாம். மாவட்ட அளவில் இப்படிப்பட்ட பட்டியலைத் தயாரிப்பது சிரமமாக இருக்கலாம். ஆனாலும், தொழில், மொழி போன்ற சென்சஸ் புள்ளி விவரங்கள் சேகரிப்பதில் எந்த சிரமமும் இருக்காது. இது தொடர்பான ஆட்சேபணைகள் எல்லாமே தவறாக வைக்கப்பட்டனவே தவிர, விஷமத்தனமானவையல்ல.

கொள்கை அளவிலான எதிர்ப்புகள் என்ன? பொது வாழ்க்கையில் ஜாதிக்கு தரப்படும் முக்கியத்துவம் புரிந்துகொள்ளக்கூடிய சங்கடம்-தான். ஆனால், எஸ்சி, எஸ்.டியினரைக் கணக்-கிடும் போது ஓபிசியினரைக் கணக்கெடுப்பதில் என்ன மாதிரியான சிரமம் வந்துவிடும்? இதை அரைநூற்றாண்டுக்காலமாக நாம் செய்து வந்திருக்கிறோம். எந்த ஒரு பிரிவு பற்றியும்-அதிகாரப் பூர்வமாகக் கணக்கெடுக்கும் போது எல்லைகள் மாறலாம். ஒவ்வொருவரும் சந்தித்து-வரும் பிரச்சினை தொடர்பானவர்கள் அங்கீ-கரிக்கப்படாமல் இருந்துவரும் நிலையோடு, அவர்களின் கணக்கெடுப்பு தொடர்பான சிரமங்கள் கணக்கிட்டுப் பார்க்கப்பட வேண்டும். மதப்பிரிவினர் தொடர்பான கணக்கெடுப்பு கள் மதச்சாற்பற்ற தன்மைக்கு எதிராக இந்தியாவில் அமைந்துவிடாத வரையில், இனவாரிக் கணக்கெடுப்புகள் அமெரிக்க நாட்டை இனவெறி அரசாக ஆக்காத வரையில், இந்தியாவில் மேலும் ஒரு ஜாதிக் குழுவினரைக் கணக்கெடுப்பதானது இந்தியாவை ஜாதிகளின் சிறைச்சாலை என்று ஆக்கிவிட்டது.

எது எப்படியிருப்பினும், ஜாதிகள் தொடர்பான கண்ணோட்டம் நம் கண்களை மூடாமல் அருகில் சென்று பார்த்திடவும், அடையாளம் கண்டிடவும், சிலரைப் பின்னடைவுக்கு ஒதுக்கு வதற்கும் அது காரணமாக அமைந்திருப்பதைக் கண்டறிந்து அந்த ஜாதி முறை எவ்வாறு சமூகப் பிரிவுகளுக்கும் வர்க்க, பாலின பிளவுகளுக்கும் காரணியாக விளங்குகிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. அதுதான் இன்றைக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அவசியம் ஆகும்.

நன்றி: தி ஹிண்டு 15.5.2010
தமிழில்: அரசு

Saturday, May 15, 2010

பார்பனர்கள் எவளவு முற்போக்கானவர்கள் என்றாலும் சேர்ந்தாரை கொல்லிதான்

தந்தை பெரியார் பார்ப்பனர்களைத் தன் இயக்கத்தில் சேர்ப்பதற்குக் கடைசிவரை மறுத்து விட்டார்.


இது சரியா?

பெரியாரின் இச்செயலால் தீண்டாமை இருக்கிறது என்றும், பெரியாரி-டம் வேறுபாட்டுக்கொள்கை இருக்கிறது என்றும் கூறினால் இதுவும் சரியா?

தொடக்கத்தில் தந்தை பெரியார் ஒரு காங்கிரஸ்காரர், காந்தியவாதி, காந்தி-யின் சீடர். தாழ்த்தப்பட்ட மக்களைப்-பற்றிப் பேசும்போது, காந்தியின் அரிஜன் சேவை, காங்கிரஸ்காரர்களுக்கு மகத்தானதாக இருந்தது. ஆனால் உண்மை வேறுவித-மாக இருந்ததை, பெரியார் உணர்ந்தார்.

டாக்டர் நடேசன், தியாகராயர், பொப்பிலி அரசர் போன்ற பெருமக்கள்; பார்ப்பனர்களால், பார்ப்பனர் அல்-லாதவர்கள் சமூக அளவில் பெரிதும் வஞ்சிக்கப்படுகிறார்கள், பார்ப்பனர் அல்லாதவர்களின் ஆதிக்கமே இதற்குக் காரணம் என்பதை அறிந்து பார்ப்பனர் அல்லாதவர்களின் உரிமைகளை மீட்க இயக்கம் கண்டார்கள். இதில் அவர்கள் கையில் எடுத்த முக்கியப் பிரச்னை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம். இன்று இதை இடஒதுக்கீடு என்கிறோம்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த தந்தை பெரியாரும் இதே வகுப்புவாரிப் பிரச்சினையைக் கையில் எடுத்தார். இதை ஒரு தீர்மானமாக இயற்ற-வேண்டும் என்று அக்கட்சியில் பெரி-யார் வாதாடினார்_போராடினார்.

ஆனால், ராஜாஜி, சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனத் தலைவர்கள், இவ்வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் காங்கிரஸ்கட்சி மாநாட்டில் தீர்மான-மாக நிறைவேறுவதற்குத் தடையாக இருந்தார்கள். 1925ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாநாட்டில், இத்தீர்மானத்-தைக் கொண்டு வரபெரியார் முயன்ற-போது, பார்ப்பனர் அல்லாதவரான திரு.வி.கல்யாணசுந்தரத்தை வைத்தே தீர்மானம் நிறைவேறாமல் செய்த ராஜாஜியால் வெகுண்டெழுந்த பெரி-யார் காங்கிரசைவிட்டு வெளியேறினார்.

அதற்கு முன்னர், சேரன்மாதேவி குருகுலம் நடத்திய வ.வே.சு. அய்யர், அந்தக் குருகுலத்தில் படித்த பார்ப்பனக் குழந்தைகளுக்கு ஓர் இடத்திலும், பார்ப்பனர் அல்லாத குழந்தைகளுக்கு வேறோர் இடத்திலும் பிரித்து வைத்து உணவு கொடுக்கப் பட்டதைப் பார்த்த பெரியார் பார்ப்பனியத் தீண்டாமையை அங்கே கண்டார்.

சுயசிந்தனையாளரான தந்தை பெரியார், ஆயிரம் ஆயிரம் ஆண்டு-களாக வந்தேறிப் பார்ப்பனர்களின் கடவுள், புரோகிதம் ஜாதகம், ஜாதி, மதம் போன்ற மூடநம்பிக்கைகளால் திரா-விடர்கள் வீழ்ச்சியடைந்ததை உணர்ந்-தார். கல்வி, பொருளாதார, சமூக ஆதிக்-கம் பார்ப்பனர்களிடத்தில் இருந்ததை-யும், பெண்ணடிமைத்தனம் சமத்துவ-மற்ற சமூக அமைப்புமுறை பார்ப்பனர்-களால் உருவாக்கப்பட்டு அது நிலை-நிறுத்தப்பட்டிருந்த நிலைமையையும் தெளிவாகப் புரிந்து கொண்ட பெரி-யார், ஆரியர்களினால் வீழ்த்தப்பட்ட திராவிடர்களின் எழுச்சிக்காக இயக்கம் கண்டார். அவரது இயக்கம் ஆரியர்-களுக்கு, பார்ப்பனர்களுக்கு, பார்ப்பனி-யத்திற்-கு எதிராக அமையப்பெற்றது. எனவே, அவர் திராவிடர்களைத் தம் இயக்கத்தில் சேரச் செய்தார், அணி-திரட்டினார். எந்தப் பார்ப்பனர்களுக்கு எதிராக பெரியார் இயக்கம் கண்-டாரோ, அதே பார்ப்பனர்களை அவர் எப்படி தன் இயக்கத்திற்குள் அனுமதிப்பார்? பாம்பை நடுவீட்டில் வைக்கக்கூடாது என்பது பெரியாரின் கொள்கை.

பார்ப்பனர்களில் முற்போக்காளர்கள் இல்லையா? ஜாதி, மதச் சடங்குகளைத் தூக்கி எறிந்தவர்கள் இல்லையா? ஏன், தாழ்த்தப்பட்ட பெண்களைக்கூடத் திருமணம் செய்து கொண்ட பார்ப்-பனர்கள் இருக்கிறார்களே! அவர்களை ஏன் பெரியார் தன் இயக்கத்தில் சேர்க்-கக் கூடாது? _ இப்படியும் கேள்விகளை எழுப்பலாம்.

உண்மைதான்! மறுக்கவில்லை. இதற்குப் பெரியாரின் விடை, புத்தத்தை ஒழிக்க வேண்டும் என்று பார்ப்பனர்-கள், புத்தத்திற்கு மாறி அதை ஒழித்தது-போல இங்கேயும் செய்வார்கள். பெரி-யாரின் இந்த விளக்கம் சிந்தனைக்குரிய தல்லவா?

இந்தியாவிற்குள் ஆரியப் பார்ப்-பனர்கள் நுழைந்த பின்னர் ரிக், யசுர், சாம, அதர்வனம், ஸ்மிருதிகள், புரா-ணங்கள் என்று பல கதைகளைச் சொல்லி, சமத்துவமற்ற படிநிலைச் சமு-தாய அமைப்பை அவர்கள் உருவாக்கி-னார்கள். சூழ்ச்சியினால் பார்ப்பனர்கள் பெற்ற அதிகாரம் திராவிடர்களை வீழ்த்தி அடிமையாக்கியது. இதனைக் கண்ட புத்தர் ஆரியத்-திற்கு எதிரான போராட்டத்தை உரு-வாக்-கினார். சமூக எழுச்சியை உருவாக்-கினார். புத்தரின் ஆரிய எதிர்ப்பையும், சமூக எழுச்சியையும் கண்ட பிம்பி-சாரன், அஜாத சத்ரு, அசோகன் போன்ற பேரரசர்கள் பவுத்தத்தை ஏற்றார்கள். அதனால் ஆரியம் பின்தள்-ள-ப்பட்டது. தம் ஆதிக்கத்தை மீண்டும் கைப்பற்ற, புத்தரை நேரடியாக வீழ்த்த முடியாத நிலையில், ஆரியப் பார்ப்பனர்கள் தாமும் பவுத்தர்களாக, புத்தரின் சங்கத்தில் இணைந்தார்கள்.

முதன் முதலாக சாரிபுத்தனும், மவுத்கல்யாயனாரும் புத்தத்தில் சேர்ந்தார்கள். தொடர்ந்து பார்ப்பனர்-கள் பவுத்தர்களாக மாறி புத்தருடன் சேர்ந்தார்கள். விளைவு...?

புத்தர் மறைந்தபின் கூடிய இரண்-டாம் பவுத்தமகா சபையில் பவுத்தத்தை இரண்டாக உடைத்தார்கள் வஜ்ஜியர்-கள் என்ற பார்ப்பன பவுத்தத் துறவிகள். படிப்படியாக புத்தரின் சமூகச் சிந்தனை, பகுத்தறிவு, சுய சிந்தனைக் கொள்கை-கள், கடவுள் மறுப்பு, பூசை, சடங்குகள் புறக்கணிப்பு போன்ற அனைத்தும் மாற்றப்பட்டன.

புத்தரையே கடவுள் ஆக்கினார்கள். புத்தரின் சமூக எழுச்சிக்கான போர்க்-குணத்தை மறைத்து, ஒழுக்கமாக இருப்-பவனே பவுத்தன் என்று சில உபதேசங்-களை நுழைத்து விட்டார்கள்.

பின்வந்த காலங்களில் சங்கமித்திரர், ஆச்சாரிய புத்ததத்தர், கணதாசர், வேணுதாசர், போதி தருமர், தருமபாலர், ஆச்சாரிய திக்நாகர், ஆச்சாரிய தரும-பாலர், தம்மபாலர் போன்ற பலப்பல பார்ப்பனர்கள் பவுத்தத் துறவிகளாக மாறி, புத்தரின் நேரடி பவுத்தத்தை மாற்றி அமைத்தார்கள். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் நாகார்ஜுனர் என்பவர், புத்தருக்கு நேர் எதிரான ஆரியவாதத்-தைச் சூனியவாதமாகச் சொல்லி மகா-யான பவுத்தம் என்றார். பவுத்தம் வீழ்ந்தது. நேரடியாக எதிர்த்து வெல்லமுடியாத பவுத்தத்தை ஒழிக்கத் தாங்களே பவுத்தர்களாக மாறி, பவுத்தத்திற்குள் நுழைந்து பவுத்தத்தை ஒழித்தவர்கள் பார்ப்பனர்கள். இதைக் கருத்தில் வைத்-துத்தான், புத்தத்தை ஒழிக்க வேண்டும் என்று, பார்ப்பனர்கள் புத்தத்திற்கு மாறி அதை ஒழித்தது போல இங்கேயும் செய்வார்கள் என்றார்.

திராவிடர் கழகம் என்றுதான் பெயர் வைத்தார் பெரியார். தமிழர் கழகம் என்று வைக்கவில்லை. ஏனென்றால் நாங்களும் தமிழர்கள்தான் என்று பார்ப்பனர்கள் தமிழர் கழகத்தில் நுழை-வார்கள். பின் அதை ஒழிப்பார்கள். திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தால் பார்ப்பனர்கள் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டு அங்கே வரமாட்டார்கள். அவர்கள் ஆரியர்கள். அதனால்தான் பெரியார் திராவிடர் கழகம் என்று தன் இயக்கத்தை உருவாக்கினார்.

ஒரு இரசாயனப் பொருள் இன்-னொரு இரசாயனத்துடன் சேர்ந்தால் வேதியியலில் மாற்றம் ஏற்படும். ஒரு திரவம் இன்னொரு திரவத்துடன் சேர்ந்தால் அது கலவையாகும். ஒரு திடப்பொருள் இன்னொரு திடப்பொரு-ளுடன் சேர்ந்தால் எதுவும் ஆகாது.

நெருப்பு மட்டும், தான் எந்தப் பொருளுடன் சேர்கிறதோ, அந்தப் பொருளை எரித்து அழித்துவிடும். சேர்ந்-தாரைக் கொல்லும் குணம் நெருப்புக்கு இருப்பதனால் அதைச் சேர்ந்தாரைக் கொல்லி என்றார் வள்ளுவர்.

பார்ப்பனர்களின் குணமும் அதுதான் என்பதால்தான் தந்தை பெரியார் பார்ப்பனர்கள் எவ்வளவு முற்போக்கானவர்களாக இருந்தாலும், தன்னுடன் சேர்க்காமலே இறுதிவரை இருந்தார். இதில் தீண்டாமையும் இல்லை, வேறுபாட்டுக் கொள்கையும் இல்லை.!

நன்றி: கருஞ்சட்டைத் தமிழர்
ஏப்ரல் _ 16-_30 (2010) பக்கம் -3.

Friday, May 14, 2010

சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா?

நாளேடுகளில் இரண்டு வகையான திருமணங்-கள், விளைவுகள்பற்றி தகவல்கள் வெளி வந்துள்ளன.


ஒன்று கருநாடக மாநிலத்தில் நடந்தது. கோலார் தங்கவயலைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்ற 25 வயது -5 அடி 7 அங்குலம் உயரம் உள்ள மண-மகனுக்கும், ஆந்திர மாநிலம் குப்பம் குடிபள்ளி மண்டலத்தில் உள்ள பஜனவாடா கிராமத்தைச் சேர்ந்த 22 வயது_ 2 அடி 4 அங்குலம் உயரமுள்ள ஜி.பாரதிக்கும் நடைபெற்ற திருமணம்.

மணமகனும், மணமகளும் வேறு வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்தாம். இருவரும் சிறுவயது முதலே பழகி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதலித்துத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள்.

பாரதியை மருமகளாக ஏற்க மணமகனின் பெற்றோர் உடன்படவில்லை. மணமக்களின் உறுதிக்கு முன்னால் அவர்கள் உறுதி தளர்ந்து போய்விட்டது. இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் முடிந்தது என்பது வரவேற்கத்தகுந்த நற்செய்தியாகும்.

இன்னொரு தகவல்_ ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வெளிவந்ததாகும். அம்மாநிலம் கோதர்மா பகுதியைச் சேர்ந்தவர் நிருபமா. இவர் பத்திரிகை-யாளர். வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்தவரை தன் மகள் காதலிக்கிறார் என்று அறிந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் தம் மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். முடிவு, பெற்றோர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது! பெண் படித்தவர்_ அதுவும் பத்திரிகையாளர். உலக அனுபவம் அறிந்தவர். அத்தகு ஒரு பெண்ணுக்குத் தனது துணைவரைத் தேடிக் கொள்ள உரிமை இல்லையா?

அப்படியே கோபம் வந்தாலும் பெற்ற மகளையே_ கொலை செய்யும் அளவுக்கு அது வெறி பிடித்துக் கிளம்பவேண்டுமா?

இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணம் அவர்களை ஆட்டிப்படைக்கும் ஜாதி வெறிதானே? எந்த அளவுக்கு ஜாதி என்ற நோய் மனித சமூ-கத்தைச் சீரழித்து இருக்கிறது _ மனித மூளையைக் கொடூரக் கொடுவாளாக மாற்றியிருக்கிறது?

இவ்வளவுக்கும் ஜாதி என்பதற்கு எந்தவிதமான அடையாளம் தான் உண்டா? யாரோ, எந்தக் காலத்திலேயோ உருவாக்கி வைத்து, தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து சொல்லப்பட்டு வந்துள்ளது என்பதைத் தவிர ஜாதிக்கென்று உள்ள தனித்தன்மை என்ன?

ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்துகொள்வதால் குழந்தை பிறப்பதில்லையா? ஒரே ஜாதிக்குள் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கப் போகும் நலன்களும், வளங்களும்தான் என்ன?

மனிதனுக்கும் மாட்டுக்குமா திருமணம் நடந்தது? மனிதர்களுக்குள்தானே நடக்கிறது. போதிய வயது அடைந்த நிலையில் நடக்கும் திருமணத்தைத் தடை செய்ய பெற்றோராக இருந்தாலும் உரிமை ஏது?

இந்த நாட்டில் அரசியல் தலைவர்களுக்குப் பஞ்சமா? ஊடகங்களுக்குத்தான் குறைச்சலா? எழுத்தாளர்கள் கிடையாதா? சிந்தனையாளர்களும் ஒழிந்து போய்விட்டார்களா?

இவர்களுக்கெல்லாம் சமுதாயப் பொறுப்பு என்பது கிடையவே கிடையாதா? அறிவையும், ஆற்றலையும் செயல்படுத்தும் கடமையைச் செய்ய முன்வந்தால் இந்த நோய்கள் மனிதர்களை அண்டுமா?

மதம்,- கடவுள்,- பக்தி, நம்பிக்கை என்னும் சங்கிலி-களால் இவர்கள் கட்டப்பட்டுக் கிடப்பதால் இவற்-றைக் கடந்து சிந்திக்கவோ செயல்படவோ முடியாத கைதிகள் ஆகிவிட்டார்கள் என்றுதானே பொருள்?

இதற்கு என்னதான் விடிவு? தொடக்கப் பள்ளி முதல் மாணவர்களுக்கு நற்சிந்தனை, நற்பழக்கம், நன்னடத்தை, தன்னம்பிக்கை, தர்க்கம், பொதுப் பார்வை, மனித நேயம், பகுத்தறிவு இன்னோரன்ன வளர்ச்சிப் பாதையில் கொண்டு செலுத்தும் பட்சத்தில் இத்தகு கொடூரங்களுக்கு இடமே இருக்க முடியாது.

மதச்சார்பற்ற கல்வி என்பது கண்டிப்பாக-வேண்டும். மதத்தின் துளி கல்விப் பாலில் கலந்து-விட்டால், மனிதனை மதம் கொள்ளவே செய்யும்.

சுதந்திர நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்-கும் பாதுகாப்பு என்பது மிகவும் கேவலமானதாகும்.

சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? என்ற தந்தை பெரியார் அவர்களின் கேள்விக்கு இதுவரை ஆளவந்தார்கள், சட்ட விற்பன்னர்கள் பதில் சொல்லவில்லையே!

ஜார்கண்ட் மாநிலத்தில் பத்திரிகையாளரான, படித்த பெண்ணையே ஜாதி பலி கொண்டுவிட்டதே. இதற்குப் பிறகும் குறட்டையா? மகாமகா வெட்கக்-கேடு!

---------- விடுதலை தலையங்கம் (06.05.2010)

Thursday, May 13, 2010

வானம் உள்ளவரை பூமி உள்ளவரை யார் இங்கு மறப்பார் பெரியாரை


எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றமிகு கருத்தைச் சொன்னார் வள்ளுவர்.
எதையும், ஏன்?, எப்படி?, எதற்காக? என்று வினாக்களைத் தொடுத்து விளக்கம்காணுங்கள் என்றார் சிந்தனைச் செம்மல் சாக்ரடீசு.


இதைப் போல், அறிவார்ந்த சமுதாயம் அமைய, பகுத்தறிவு நெறியே பண்பார்ந்த அரிய நெறி என்றார் வெண்தாடி வேந்தர் ஈரோட்டுப் பெரியார் அவர்கள்.

சாதிபேதமற்ற சமுதாயம்,
 மூடநம்பிக்கைச் சேற்றின் முடைநாற்றம் இல்லாத சமுதாயம்,
 ஆணுக்குப் பெண் அடிமை என்று வீணுக்காய் வீம்பு பேசாத சமுதாயம்,
 ஆண்டை அவன், அடிமை அவன் என்ற தீண்டாமைக் கொள்கையைத் தீவைத்துப் பொசுக்குகின்ற சமுதாயம்,

எனப் புதியதோர் சமுதாயம் உருவாக்கப் புரட்சிக் கனலை மூட்டியவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.

ஏனென்றா கேட்கிறீர்கள்? அதை மழிக்க என் நேரத்தையும் பணத்தையும் செலவழிக்க நான் தயாராக இல்லை! இது தந்தை பெரியாரின் மூடி மறைக்காத பதில்!

அவர்தாம் தம் 94_- ஆம் அகவையிலும் இறுதிநாள் வரை, இந்த மண்ணின் மூலை முடுக்கெல்லாம் சூறாவளியாய்ச் சுற்றிச் சுழன்று வந்து, தான் எண்ணிய பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தோயாமல் துவளாமல் அள்ளி அள்ளி வழங்கினார். கொண்ட கொள்கையில் நிலை குலையாத மலைபோல் நிமிர்ந்து நின்று, கொஞ்சமும் பிறழாமல் கொள்கை வழியில் வென்று காட்டியவர் பெரியார்.

காங்கிரஸ் இயக்கத்தில் பெரியார் இருந்த காலம் அது.
மது விலக்குக் கொள்கைதான் நம் உயிர் மூச்சு, என்று அதி தீவிரமாகக் கூறி வந்தார் காந்தியார்.கேட்ட பெரியார், தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்த அய்நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை ஒரே நேரத்தில் வெட்டி வீழ்த்தினார்.

மரங்கள் இருந்தால்தான் கள் இறக்க முடியும்; மது இறக்க முடியும்; அதனால் வேரோடு வெட்டி வீழ்த்திவிட்டேன் என்று கட்சிக் கடமை போற்றும் திடமான கொள்கைத் துடிப்புடன் உடனடியாகச் செயல்பட்டவர்தான் தந்தை பெரியார்.

எங்கோ கேரள மாநில வைக்கம் பகுதியில், தீண்டாமை எனும் தீய நாகம் சீறிப் படமெடுத்தாடுகின்றது என்று கேள்விப்பட்டவுடன் கிளர்ந்தெழுந்து, அங்கே சென்று மாபெரும் அறப்போர் நடத்திச் சிறைவாசம் ஏற்றவர்தான் கொள்கைக் கோமான் தந்தை பெரியார்.

சமுதாயத்தில் சமத்துவம் தேவை; குறிப்பாகக் கணவனும் மனைவியும் இல்வாழ்வுச் சோலையில் சம நண்பர்களே தவிர, ஆணுக்குப் பெண் ஏது அடிமை? என்று அழுத்தந்திருத்தமாகக் கேட்டவர்தான் அவர்.

அய்யோ, எங்களுக்குப் பெண் குழந்தைகளே வேண்டாம்; ஆண் குழந்தைகள் மட்டுமே வேண்டும்! என்று பிதற்றும் பேதையர்க்குப் பாடம் புகட்ட ஒரு புதுச்சட்டத்தையே உருவாக்க வேண்டும் என்றார் அவர்.

நாட்டில் இருக்கும் வேலை வாய்ப்பில், சொத்துரிமையில் அய்ம்பது சதவிகிதத்தை மகளிர்க்கே ஒதுக்கிவிட்டால், ஏன் இந்தப் பேத உணர்வு இருக்கப் போகிறது? என்று கேட்டார்.

மேடையில் மட்டும் இப்படிப் பேசிக் கொண்டிராமல் செய்கையிலும் புரட்சி செய்தவர்தான் தந்தை பெரியார்.

ஆண்களைப் போல் பெண்களும் உடை அணியவேண்டும் என்ற புதுமைக் குரல் கொடுத்த தந்தை பெரியார், அதைத் தானே நடமுறைப்படுத்த வேண்டி தன் துணைவியார் நாகம்மையார் அவர்கள் அணிந்து கொள்ள லுங்கி வாங்கிக் கொடுத்தாராம். அந்த அம்மையாரும், லுங்கியைக் கட்டிக் கொண்டு, வீட்டிலிருந்து வெளியே வரக் கூச்சப்பட்டு

சில நாட்கள் இல்லத்துக்குள்ளேயே இருந்தாராம்!
ஆடம்பரம் அறவே கூடாது; எளிமைதான் ஏற்றம் தரும் என்பதிலும் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டவர் பெரியார்.

ஒரு முறை அவர் தன் வயதான காலத்திலும், இரயிலில் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்து வந்ததைக் கண்ட அவருடைய இயக்கத் தொண்டர்கள், என்னய்யா இது? மூன்றாம் வகுப்புப் பெட்டியில் வருகிறீர்களே? இது சரிதானா? என்று கேட்டனராம்.
என்ன செய்வது? இப்படி மூன்றாம் வகுப்பில் வருவது எனக்கு மட்டும் பிடிக்கிறதா? நான் புறப்பட்டு இரயில் நிலையம் சென்று நான்காம் வகுப்பு டிக்கட் உள்ளதா? என்று கேட்டேன். இல்லை என்றார்கள். பின்னர் மூன்றாம் வகுப்பு டிக்கட் வாங்கி வந்திருக்கிறேன். அதனால் என் உடம்பு என்ன தேய்ந்துவிட்டதா? என்று திருப்பிக் கேட்டாராம் தந்தை பெரியார். இங்ஙனம் எளிமைக்கும் சிக்கனத்திற்கும் எடுத்துக் காட்டாய்த் திகழ்ந்தார் அவர்.

அந்த வகையில் கொஞ்சம் கொஞ்சமாகச் சிக்கனப்படுத்திச் சேர்த்து வைத்த பெரியாரின் சொத்தெல்லாம் இன்று இலவச மருத்துவ மனைகளாக, அனாதைச் சிறார் இல்லங்களாக, மகளிர் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளாக வடிவமெடுத்து, தமிழ்ச் சமுதாயத்தின் நலிந்த பிரிவினர்க்கு ஒப்பரிய தொண்டாற்றி வருகின்றன. தந்தை பெரியார் அந்தக்

கட்டடங்களின் உருவில் நிரந்தரமாய் நம்முன்னர்ச் சிரித்துக் கொண்டிருக்கிறார்.
நாம் எண்ணிய பின்னர் எண்ணத்தின் முடிவுகளைத் திண்ணிய வகையில் சொல்வதும், நிறைவேற்றுவதும் தந்தை பெரியாருக்கே உரித்தானவை.

சிந்தனைச் செம்மல் ரூசோதான் சொன்னார்: சிந்திக்கத் தெரியாதவன் முட்டாள்; சிந்திக்காமல் இருப்பவன் அறிவிலி; சிந்திக்க மறுப்பவன் கோழை; சிந்தித்ததைத் திரித்துக் கூறுபவன் வஞ்சகன்; சிந்தித்தித்தைச் சிந்தித்தபடி, சிந்தாமல் சமுதாயத்திற்கு விருந்தாக்குபவனே மாமேதை!

பல்கலைக் கழகப் பட்டம் பெறாத அத்தகைய ஒப்பரிய மாமேதைதான் தந்தை பெரியார் அவர்கள்.

-அவரே ஓர் அற்புத சகாப்தம்!

- உழைப்பவர் உலகம்,
ஏப்ரல் 2010Tamil 10 top sites [www.tamil10 .com ]