வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, January 27, 2010

ஏன் நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக்கொள்கிறோம்....

நாம் யாருக்கும் மேலல்ல! யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் ஐயர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது, தாயையும் ஆகாது, சேரியும் கூடாது, அக்ரகாரமும் ஆகாது, யோக யாக புரட்டுகள், புரோகித பித்தலாட்டம், மனுக்கொடுமை வேண்டாம். மனிதர் யாவரும் சரி நிகர் சமமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படி தம்மை இந்து என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித்தான் மனம் இடம் தரும்? எப்படித்தான் துணியும்? இந்து மதம் என்பதிலே உள்ளக் கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதைமுறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப்பார்த்த பிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் இந்து என்று கூறிக்கொள்ள மனம் இடம் தரும்? பாம்பை எடுத்து படுக்கையில் விட்டுக்கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக் குப்பையை வீட்டுக்குள் கொண்டுபோய்ச் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களைவிட்டு மதிகெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீளாமார்க்கம் தேடுவதைவிட்டு, மாளவழி தேடிக் கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்ப மிடுவரா? கண் தெரியும்போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு, திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் இந்து மார்கத்தில் போய்ச் சேர இசைவாரா? வீரத்திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கிப் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!!


ஆள் நடமாட ஓர் உலகம். ஆவி உலவ மற்றோர் உலகம். இந்திரன் இருக்க ஓர் உலகம். நான் தங்க ஓர் உலகம், மேலே ஏழு, கீழே ஏழு, எனப் பதினான்கு உலகங்களாம். அதல, விதல,சுதல தராதல, இராசாதல, மகாதல பாதாளம் என ஏழாம்! பூலோக, மகாலோக, சத்யலோக என மேல் உலகம் ஏழாம்! இத்தனை உலகங்கள் இந்துவுக்கு உண்டாம், ஓட்டிலே, நமக்கு இவை வேண்டாம் நாமிருக்கும் நாடு நமக்கு இருந்தால் போதும் நான் செய்யும், புன் செய்யும், சாலையும், சோலையும், வாவியும், நதியும் மக்களுக்கு சுபீட்சமும் இருக்கட்டும். காமதேனும், கற்பக விருட்சமும் ரம்பையும், ஊர்வசியும் உலவும் உலாம் வேண்டாம். நாமிருக்கும் நாட்டிலே நாம் கீழ் ஜாதி என்ற கொடுமை இன்றி நாமார்க்கும் குடியல்லோம் என்று நாம் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்திலேதான், நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக்கொள்கிறோம்.

(ஆரிய மாயை - கட்டுரை - 26.04.1943)

Tuesday, January 26, 2010

கேக்கிறவன் கேணப்பயலா!

கதையளப்பு என்ற ஒரு சொற்றொடர் உண்டு. அது மற்றவற்றில் உள்ளதை விட கடவுள், மதம், பக்தி விட-யங்களில் மிக அதிகமாகவே உண்டு.


கேக்கிறவன் கேணப்-பயலா இருந்தா எருமை-மாடுகூட ஏரோப்பிளான் ஓட்டுவேன் என்று சொல்லு-மாம்.

சேலம் ஏற்காடு முக்கிய சாலையில், கலைக்-கல்லூரி-யருகே அடர்ந்த மரங்கள் உள்ள பகுதியில் முனியப்-பன் என்ற கோயில் ஒன்று இருக்கிறதாம். 16 வயதுள்ள ஒரு சிறுவன் சாமி கும்பிடச் சென்றானாம். அப்பொழுது அவன் முதுகில் ஏதோ ஒன்று விழுந்ததாம் _ அத-னைத் தட்டி விட்டானாம். அது பாம்பு போன்ற உருவத்தில் மரக்கட்டையாம்.

அவ்வளவுதான் சேதி நாலாத் திசைகளிலும் பரவியது. நம் பெண்களைக் கேட்கவேண்டுமா? சாமி ஆட ஆரம்பித்துவிட்டன-ராம். கிடாவெட்டிப் பூஜை-யாம். மரக்கட்டைக்கு மஞ்சள் தடவி, குங்குமப் பொட்டு வைத்து, பூஜைகள் நடக்க ஆரம்பமாகி விட்-டன-வாம்.

நம் பத்திரிகையாளர்-களுக்கு ஒரு தீனி கிடைத்து-விட்டதே _ சும்மா விடுவார்-களா? அந்தச் செய்திக்கு கை வைத்து, கால் வைத்து, மூக்கு வைத்து இறக்கை-களையும் கட்டிவிட்டனர்.

ஒரு பக்தர் சொல்லு-கிறார், நம்பவும் முடிய-வில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை; என்றாலும் கும்பிட்டு வைப்போமே என்று ஒரு கும்பிடு போட்டு வந்தாராம்.

அடேயப்பா, கடவுளைப்-பற்றி ஆன்மிகவாதிகள் எப்படியெல்லாம் உருகு-வார்கள் தெரியுமா? அவர் அரூபி_ கண்ணுக்குத் தெரி-யாதவர்; வேண்டுதல் வேண்-டாமை என்பதெல்லாம் கிடையவே கிடையாது என்று அப்படியே எண்-சாண் உடம்பை ஒரு சாணாகச் சுருக்கி நெக்குருக மெல்லிய சன்னமான குர-லில் உபந்நியாசம் செய்வார்-கள். அதற்கு முரணாக இது போன்ற சேதிகள் வரும்-போதோ கப்_சிப்பென்று அய்ம்பொறிகளையும் மூடிக்கொள்வார்கள்.

திருப்பதி கோயில் கர்ப்பக் கிரகத்திலே ஒரு பாம்பு நுழைந்தது _ உடனே அது பிராமணன் வடிவில் தோன்றியது (பாம்புக்கும், பிராமண விஷத்துக்கும் உள்ள ஒற்றுமையை இந்த இடத்தில் கவனித்துக் கொள்ளவும்).

நான் கலியுகத்தில் அவதாரம் எடுத்து அதர்மத்தை அழிப்பேன் என்று சொல்லி மறைந்ததாம். இதனைத் துண்டு அறிக்கை-யாகத் தயாரித்து நூறு பேருக்குக் கொடுத்தால் அய்ஸ்வர்யம் பொங்கி வழியுமாம். திருப்பதி தேவஸ்-தானத்துக்கே எழுதிக் கேட்ட-போது, அதெல்லாம் வெறும்-புரளி என்று அதிகாரப்பூர்வ-மாக சொல்லிவிட்டார்கள். இதே கதையை மேல்மருவத்-தூர் கோயிலிலும் நடந்ததாக அடுத்து அவிழ்த்துவிட்-டார்கள். அவர்களும் பிறகு மறுத்துவிட்டனர். அதன்பின் மேல்மலையனூர் கோயி-லிலும் இதே வேலையைச் செய்தனர்.

ஒரு கூட்டத்துக்கு இதே வேலைதான்.

இந்த புரூடாக்கள் எல்-லாம் இரண்டொரு நாள்-களில் தடபுடலாக விளம்-பரத்திற்கு வந்து, அதன்பின் சத்தம் போடாமல் அமுங்கிப்-போகிறதே ஏன்? சிந்திக்கக் கூடாதா?

- விடுதலை (26.01.10) மயிலாடன்

Monday, January 25, 2010

பார்ப்பனர் எவ்வளவு இழிந்தவராயினும் புகழ்தற்கு இச்சென்னைப் பத்திரிகைகள் அஞ்சுகின்றனவல்லபார்ப்பனரல்லாதார் ஒருவர் எத்துணை அறிவிற் சிறந்தவராயினும், பேசுவதில் வல்லவராயினும் அரும் பெருந்தியாகம் செய்தவராயினும் அவரைச் சென்னைப் பத்திரிகைகள் புகழமாட்டா! ஆனால் ஒரு பார்ப்பனர், எவ்வளவு இழிந்தவராயினும் அவரை வானமளாவப் புகழ்தற்கு இச்சென்னைப் பத்திரிகைகள் அஞ்சுகின்றனவல்ல. அதற்குக் காரண மென்னையெனின், சென்னையில் இருக்கும் பத்திரிகைகளில் பெரும்பாலன அய்யர், அய்யங்கார்கள், பத்திரிகைகள், அவைகள் இந்தியர் பணத்தில் வெளிநாடு சென்று, இந்தியர்கள் பிறப்புரிமைகளை விற்ற கனம் சாஸ்திரிகளை வானமளாவப் புகழும்.அவைகள் சர்.சி.பி. இராமசாமி அய்யர் ஆகாயக் கப்பலில் போனார், இங்கே விருந்துண்டார், அங்கே விருந்துண்டார், என்று தனி நிருபர்களின் தந்திகளைப் பத்தி பத்தியாய் வெளியிடும். அம்மட்டோ! ஒரு விஜயராகவாச்-சாரியார் அமெரிக்காவுக்குச் சென்று தன்மகள் வெள்ளைக்காரப் பெண்களைப் போன்று மயிர் கத்தரித்துக் கொள்ள விரும்புகின்றாள்; இந்தியாவில் தென்னை மரமிருக்குமட்டும் குடியை நிறுத்த முடியாது என்று பேசுவராயின், உடனே இப்பார்ப்பனப் பத்திரிகைகள் மனமகிழ்ச்சியுடன் இவைகளை எல்லாம் வெளி-யிடு-கின்றன. சாஸ்திரிகளைக் குறித்தும், ஆச்சாரி-களைப் பற்றியும் இவ்வளவு புகழ்ந்தெழுதிய பார்ப்பனப் பத்திரிகைகள் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று அங்கு இந்தியர்கள் சம உரிமையுடன் நடத்தப்படல் வேண்டுமென வாதாடிய திரு.-ஆர்.கே. சண்முகம் செட்டியார் பயணப்பட்டதைக் குறித்தும், அவர் அங்கு நிகழ்த்திய அரும்பெரும் சொற்பெருக்குகளைக் குறித்தும் யாதொன்றும் வெளியிட்டனவல்ல. திரு. சண்முகம் செட்டியார் கனம் சாஸ்திரிகளைப் போன்று இந்தியர்கள் பணத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று, இந்தியர்கள் பிறப்புரிமையை விற்றனரல்லர். அவர் ஆஸ்திரேலியாவுக்குத் தம் சொந்தச் செலவில் பயணப்பட்டு, அங்கு இந்திய மக்களின் நாகரிகத்தை எடுத்துரைத்து,

பொதுவாக கறுப்பு மனிதர்கள் தாழ்ந்த-வர்களென்றும், அதிலும் முக்கியமாக இந்தியர்கள் தாழ்ந்தவர்களென்றும் பேசுகின்றவர்களுக்கு எங்களுடைய புராதனமான நாகரிகத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. தாழ்ந்தவர்கள் என்று சொல்வதைக்கூட எங்கள் ஜனங்கள் எவ்வளவு பலமாக வெறுக்கிறார்கள் என்பதை நீங்கள் உணரவில்லை போலும். பக்தி வாய்ந்த கிறிஸ்தவர்களடங்கிய கூட்டத்தில் பேசுவதாக நான் நம்புகிறேன். ஏசுநாதர் கறுப்பு மனிதரைப் பற்றி என்ன கூறினார் என்பதை உங்களுக்கு நான் எடுத்து ஞாபக மூட்டட்டுமா? இப்படியிருக்க ஒரு தனிப்-பட்ட நபர் அல்லது ஜாதியார் இவர்களின் நிறத்தால் எப்படி ஏற்றத் தாழ்வு வந்துவிடுமென்று நீங்கள் கூறக்கூடும்? 3 கண்டங்களின் போர்க்-களங்களில் எங்களுடைய தீரர்கள் உங்களுடைய தீரர்களுடன் தோளோடு தோள் கொடுத்து நின்று எதிரிகளுடன் தீரமாகப் போராடி மடிந்திருக்-கிறார்கள். (கரகோஷம்) உங்களுடன் மடிவதற்குச் சமமாக இருக்க இலாயக்குள்ள நாங்கள் உங்-களுடன் சமமாக வாழ்வதற்கும் தகுதியுடையவர்-களல்லவா?

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பல பெரிய பெரிய காரியங்களைச் சாதித்திருக்கின்றது.

கலைகளிலும் நாகரிகங்களிலும் வித்தியாசப்பட்ட பல ஜாதியர்களிலும் ஒருங்கு சேருவதற்கு அது சந்தர்ப்பத்தை அளித்ததே என் மனதிற்கு எல்லாக் காரியங்களையும் விடச் சிறந்ததாகும் என நான் நினைக்கின்றேன். (சபாஷ்! சபாஷ்!!) ஏகாதிபத்தியத்-திற்குள் இந்தியா இருந்தால்தான் அத்தகைய சந்தர்ப்பம் ஏற்படும். ஆட்சி பெற்றுத் திருப்தியுடன் இருந்துவரும் இந்தியாதான் ஏகாதிபத்தியத்திற்கு மிக்க பலத்தை அளிக்கக் கூடியதாக இருக்கும். ஏகாதிபத்தியமானது உன்னதமான இலட்சியங்-களுக்காக ஏற்பட்டிருக்கின்றது. அதற்குச் சிறந்த சம்பிரதாயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தச் சிறந்த இலட்சிகளையும் இப்புனிதமான சம்பிரதாயங்-களையும் ஏற்றுப் பாதுகாக்கின்றவர்கள் என்ற பெருமை எங்களுக்கு உண்டாகும்படி செய்யுங்கள். இதுதான் எங்களுடைய பெரிய அவா. இது விஷயத்தில் நீங்கள் அனுதாபம் கொண்டு யோசிக்க வேண்டும். நான் உங்கள் நாட்டைவிட்டு இந்தியா-விற்குச் சென்று அன்பும் சுதந்திர தாகமும் கொண்ட ஆஸ்திரேலியர் இந்தியர்களுடன் சினேகமாக வரத்தயாராக இருக்கிறார்கள் என்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் அங்கத்தினராக இருப்பதற்குரிய பொறுப்புகளை ஏற்பதுடன் அதற்குள்ள உரிமைகளில் கலந்து கொள்ளவும் சந்தோஷமாக அழைக்கிறார்கள் என்றும் இந்தியரிடம் கூறி, உங்கள் நல்லெண்ணத்தைத் தெரிவிக்கலாம் என்று இந்திய மக்கள் சமத்துவமாய் நடத்தப்படல் வேண்டுமெனப் பேசியிருக்கின்றார். அவரைப் பற்றி ஆஸ்திரேலியா பத்திரிகைகள் புகழ்ந்து பேசியிருக்க, இத்தென்னாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகள் ஒன்றும் எழுதினவல்ல. திரு.ஆர்.-கே.சண்முகம் செட்டியார் சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்தவராய் இருந்தும், பார்ப்பனப் பத்திரிகைகட்கு அவரைக் குறித்து எழுத மனமில்லை. காரணமென்? திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியார் பார்ப்பனரல்ல; அவர் பார்ப்பனரல்லாதார்.

_- குடிஅரசு, 05.12.1926

Sunday, January 24, 2010

திரு. ராஜகோபாலாச்-சாரியாருக்கு ஜனநாயகம் ஏது? வெட்கம் ஏது?

இதே நாளில்தான் 1954இல் ஈரோட்டில் ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்பு மாநாடு நடை-பெற்றது. மிகப் பெரிய ஊர்வலமும் நடைபெற்-றது. மாநாட்டுத் தலைவர் எஸ்.ஜி. மணவாளராமானு-ஜம்_ திறப்பாளர் தினத்-தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்-தனார் -_ மாநாட்டை தந்தை பெரியார் கூட்டினார் -_ திரா-விடர் கழகம் நடத்-தியது.


மாநாட்டைத் திறந்து வைத்த சி.பா. ஆதித்த-னார் புள்ளி விவரங்களுடன் அரிய கருத்துகளை எடுத்து வைத்தார்.

சில தகவல்களையும் எடுத்துக் காட்டினார்.

தமிழ்நாட்டில் ஆண் குழந்தைகள் பாதிப்பேர்-களுக்கு மேல் பள்ளிக்-கூடம் போகாமல் இருக்-கிறார்கள் என்பதும் பெண் குழந்தைகளில் 100-க்கு 70 பேர் பள்ளிக்கூடம் போகாமல் இருக்கிறார்கள்.***

சென்னை சட்டசபை-யில் 29.7.53_இல் இந்தக் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டு-மென்று தீர்மானம் வந்த-போது தீர்மானத்துக்கு ஆதரவாக 139 பேர்-க-ளும், திரு. ராஜ-கோபாலச்-சாரியாருக்கு ஆதரவாக 137 பேர்களும் வோட்டு செய்தார்கள். ஆகவே ராஜகோபாலாச்சாரியாரின் உயிர் நாடி போன்ற கல்வி திட்டம் நிறுத்தி வைக்கப்பட வேண்டு-மென்று சட்டசபை கட்டளையிட்டது. வேறு ஒரு முதலமைச்சராக இருந்தால் உடனே பத-வியை ராஜினாமா செய்-திருப்பார்கள். அதுதான் நேர்மை; அதுதான் ஜன-நாயகம், ஆனால் கவர்-னரின் தயவினால் நிய-மனம் என்ற புழக்கடை வழியாக சட்டசபைக்கு வந்த திரு. ராஜகோபாலாச்-சாரியாருக்கு ஜனநாயகம் ஏது? வெட்கம் ஏது? சுரணை ஏது? என்று மிக அருமையாக ஆச்சாரி-யாரை அடையாளம் காட்டினார் ஆதித்தனார் அம்மாநாட்டில். காங்கேயத்தில் இடைத் தேர்தல் வந்தது. இந்தக் குலக் கல்வித் திட்டம் மக்கள் முன் வைக்கப்பட்-டது. மக்கள் காங்கிரசைத் தோற்கடித்தார்கள். அப்-பொழுதும்கூட ஆச்சாரி-யார் பதவி விலகவில்லை.

மூன்று மாதங்களுக்-குள் குலக் கல்வித் திட்-டத்தை லாபஸ் வாங்கா-விட்டால் தீவிர நட-வடிக்கை என்று ஈரோடு மாநாடு அறைகூவல் விடுத்தது.

தாக்குப்பிடிக்க முடிய-வில்லை ஆச்சாரியாரால்; பதவியை விட்டே ஓடி-னார். இல்லை விரட்டப்-பட்டார்!

அரை நேரம் பள்ளி-யில் படிக்க வேண்டும்; அரை நேரம் அப்பன் தொழிலைப் பிள்ளைகள் செய்ய வேண்டும் என்ற அந்தக் குலக் கல்வித் திட்டம் தொடர்ந்திருந்தால், பார்ப்பனர் அல்லாத பிள்ளைகள் கல்வியில் வளர்ச்சி பெற்று இருப்-பார்களா? இன்றைக்குப் பதவியில் அட்டாணிக் கால் போட்டு அமர்ந்தி-ருக்-கும் தமிழர்கள் கொஞ்சம் நன்றி உணர்ச்சியுடன் சிந்திப்பார்களாக!

-விடுதலை (24.1.2010) மயிலாடன்

Saturday, January 23, 2010

அர்ச்சகப் பார்ப்பனர்கள் இவரை எப்படி அவமதித்தனர்...

அர்ச்சகப் பார்ப்பனர்கள் இவரை எப்படி அவமதித்தனர் அவரே எழுதியிருக்கிறார், படியுங்கள்.


சென்னை அண்ணாசாலையில் விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டி-டியூட் என்கிற கலைப்பொருள் விற்பனை நிலையம் இருக்கிறது. இந்தியா முழுவதும் இருந்து தயாராகும் அற்புதமான கலைப்பொருட்களை விற்பனை செய்வதற்காக அரசு நடத்-துகிற நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள பூம்புகார் கலைக்கூடம் போன்ற அரிய இந்திய கலை அம்சங்களைத் தெரிந்து-கொள்ள வெளிநாட்டவர்கள் அங்கு விரும்பி வருவார்கள். தமது கலைஞர்-களின் படைப்புகளையும் அங்கே விற்பனை செய்வார்கள்.

அழகான ஓவியங்களை வரைந்து பிரேம் போட்டு கொண்டுபோய் அங்கு வைத்து விட்டு வந்தால் யாரா-வது வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படி விற்பனையானால் அந்த நிறுவனத்துக்கு 15 சதவிகிதம் கமிஷன் எடுத்துக்கொள்வார்கள். மீதித் தொகை முழுவதும் உரிய கலைஞர்களுக்கு கிடைத்து-விடும். நமது கோவில் ஓவியங்கள் வெளிநாட்டினரின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் எனக்கு இயல்பாகவே அதில் ஆர்வம் மிகுதியாக இருந்ததால், என் படைப்புகளை அங்கு விற்பனைக்கு வைப்பேன் .அப்படி வைப்பதற்காக உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை வரைய தஞ்சாவூருக்கே புறப்பட்டேன். ரெயிலில் இருந்து இறங்கி ரொம்ப தூரம் ஊருக்குள்ளே நடந்தேன். ரெயிலடிக்குப் பக்கத்தில் இருக்கும் லாட்ஜுகளில் கட்டணம் அதிகமாக இருக்கும் என்பதால் கொஞ்சம் உள்ளே போனதும் மங்களாம்பிகா லாட்ஜ் என மங்கிய பெயர் பலகை ஒன்று இருந்தது. அந்த விடுதி உள்ளே சென்று மானேஜரிடம் அறை வாடகையை விசாரித்தேன் ஒரு நாளைக்கு எட்டு ரூபாய் என்றார் அவர்,

நான், அதைவிட குறைவான தொகைக்கு அறை எதுவும் இல்லையா? என்று கேட்டேன். என்னை மேலும் கீழுமாக நோட்டமிட்ட அவர், நாலு ரூபாய்க்கு ஒரு ரூம் இருக்கு. ஆனா, அது கொஞ்சம் மோசமா இருக்கும் என்று சொன்னார்.

அதைவிட குறைவான வாடகைக்கு அறை இருக்கிறதா? என்று நான் மீண்டும் கேட்க அவருக்கு சுள்ளென்று கோபம் வந்துவிட்டது ஏதோ விளையாடுகிறேன் என்று நினைத்து ஒரு மாதிரியாக பார்த்தார்.

அதை விட குறைச்சல்னா பாத்ரூம் தான் இருக்கு பரவாயில்லையா-? என்று அவர் கேட்டதும் அதை ரெண்டு ரூபாய்க்கு தருவீங்களா? எனக்கு பாத்ரூம் போதும். குளிக்க, டாய்லட் போக ஒரு இடம். ராத்திரி ஏதாவது திண்ணையில் கூட படுத்துக்குவேன் என்று சொன்ன பிறகே என் உண்மை-யான நிலைமை அவருக்குப் புரிந்தது. நாலு ரூபாய் அறையை எடுத்துக்கோ உன்னால என்ன முடியுதோ அதைக் கொடுப்பா என்று சொல்லி விட்டார். அப்போதைக்கு அவர் ஆபத்பாந்தவ-னாகவே என் கண்களுக்னுகுத் தெரிந்தார். ஓவியம் வரைய காலை ஏழு மணிக்-கெல்லாம் கோவிலில் இருந்தால்தான் கோபுரத்தின் லைட்டிங் நன்றாக இருக்கும். மாலை வரை ஒரே அமர்வில் வரைந்து முடிக்கவேண்டும். காலையில் ஆறரை மணிக்கு இரண்டு இட்லி, ஒரு வடையை அவசரமாக சாப்பிட்டுவிட்டு வரைய கிளம்பினால் மாலை ஆறு மணிக்குத்தான் கோவிலைவிட்டு வருவேன். மதிய உணவிற்கு நேரமும் இல்லை.... கையில் காசும் இல்லை!

இரண்டாவது நாள் மாலை ஆறு மணிக்கு ஓட்டலுக்கு சென்று உருளைக்கிழங்கு போண்டா கேட்-டேன். ஆனால், மசால்தோசையை கொண்டுவந்து வைத்தார் சர்வர். நான் சாப்பிடவில்லை. வேறு யாருக்கோ சொன்னது இங்கே வந்திருக்கு. நான் போண்டாதான் கேட்டேன் என்று சொன்னேன். அவரோ, பரவா-யில்லை சாப்பிடுங்க என்றார்.

எனக்கு தோசை வேண்டாம் போண்டாவே போதும் என்றேன் மீண்டும். ஏன் ஒரு மசால் தோசை சாப்பிடவா வயித்துல இடமில்லை-? சும்மா சாப்பிடுங்க என்றார் சர்வர், பிடிவாதமாக ! எனக்கு கோபம் வந்து-விட்டது. அஞ்சு மசால் தோசைகூட சாப்பிடுவேன். என்கிட்ட இப்ப இருக்-கிற காசுக்கு என்ன சாப்பிடணும்னு எனக்குத் தெரியும். போண்டா தர-முடியுமா .... இல்லைன்னா நான் கிளம்-பட்டுமா? என்று ஆத்திரத்தோடே எழுந்தேன். அவரோ, சின்ன முதலாளி என்று அவசரமாக பதறி என்னை தடுத்தார். நான் திகைப்பாக பார்த்தேன். என்னை அடையாளம் தெரியலையா சின்ன முதலாளி? பொள்ளாச்சியில உங்க மாமா ஓட்டல்ல வேலை பார்த்திட்-டிருந்தேன். நீங்க கல்லாவுல வந்து உட்-காருவீங்க. அப்புறம் படிக்க பட்டணத்-துக்கு போயிட்டதா சொன்னாங்க.

நான் இப்ப தஞ்சாவூர்ல இந்த ஓட்டல்லதான் வேலை பார்க்கறேன். பிரியத்துலதான் உங்கள சாப்பிட-சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க என்று நெகிழ்ச்சியோடு சொல்லி, என்னை பிடிவாதமாக உட்கார வைத்தார். எனக்கு சிலிர்த்துப் போய்விட்டது. தர்மம் தலைகாக்கும் என்பார்களே, அது மெத்தவும் சரிதான்! என்று தோன்றியது. நான் மறுக்க முடியாமல், அவர் வைத்த மசால்தோசையை சாப்பிட்டு முடித்தேன்.

திருச்சி மலைக்கோட்டை

நான் எப்பவும் ஒரு ரெயில் என்ஜின் மாதிரி தனித்து இயங்குவேன். என்-னோடு எத்தனை ரெயில் பெட்டிகள் வேண்டுமானாலும் இணைத்துக்-கொள்ள-லாம். பெட்டிகள் இல்லை-யென்றாலும் என்ஜின் தனியாக பய-ணம் செய்வதுபோல் நானும் என் பயணங்களில் யாருக்காகவும் காத்-திருக்கமாட்டேன்.

திருச்சி மலைக்கோட்டையை ஓவியமாக வரைய சில நண்பர்கள் வருவதாக இருந்தார்கள். கடைசி நேரத்-தில் அவர்கள் வரமுடியாமல் போனது. என் பயணத்தைத் தள்ளிவைக்க சொன்னார்கள். ஆனால் அதற்கு நியாய-மான காரணம் எதுவும் இல்-லாததால், நான் மறுத்துவிட்டேன். தனியாகவே திருச்சிக்கு கிளம்பினேன்.

அங்கே அலைந்து திரிந்து கிருஷ்ண பவன் லாட்ஜ் என்கிற தங்கும் விடுதியைக் கண்டுபிடித்தேன். அங்கு தான் திருச்சியிலேயே இரண்டரை ரூபாய்க்கு அறை வாடகைக்குக் கிடைத்தது.

பல இடங்களில் உட்கார்ந்து மலைக்கோட்டையை வரைந்து பார்த்-தேன். எங்கும் சரியான கோணம் (ஆங்கிள்) கிடைக்கவில்லை. மெயின் கார்டு கேட் அருகில் இருந்த கல்வி அதிகாரி (டி.இ.ஓ) அலுவலகத்தில் இருந்து சரியான ஆங்கிள் கிடைக்கும் என்று எனக்கு மனதில் தோன்றியது. அங்கே போனேன். மே மாத உச்சி வெயில் கொளுத்தி எடுத்தது. அந்த அதிகாரியிடம் அனுமதி வாங்கிக்கொண்டு மொட்டை மாடிக்கு போனால். தீக்குழியில் மிதித்தது போல தரை கொதித்தது. ஒதுங்குவதற்கு மருந்துக்கும் கூட நிழலே இல்லை. காலை பத்துமணிக்கு போனவன் தொடர்ந்து மூன்று மணி நேரமாக தகிக்கும் வெயிலில் நின்றபடியே மலைக்கோட்டையை ஓவியமாக வரைந்துகொண்டு திரும்பிய போது அந்த அதிகாரிக்கு நன்றி சொல்லப் போனேன். தம்பி... நீ யாருப்பா? என்று கேட்டார். காலையில உங்ககிட்ட அனுமதிகேட்டுவிட்டு ஓவியம் வரைய மாடிக்குப் போனேனே, அந்தப் பையன்தான் சார் என்றேன், அவர் பதறிவிட்டார்.

வெள்ளை வெளேர்னு பிரிட்ஜில வெச்சிருந்த ஆப்பிள் பழம் மாதிரி மாடிக்கு போன பையனா நீ? இப்படி முகமெல்லாம் வாடி வதங்கி வந்திருக்-கியேப்பா... ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டு வெயில்ல நிக்கணும்? எங்கிட்ட கெட்-டிருந்தா மலைக்கோட்டை போட்டோ வையே தந்திருப்பேனே-? என்று ஆதங்கப்பட்டார். சாமியை நேர்ல பார்க்கிறது நல்லதா-? போட்டோவுல பார்க்கிறது நல்லதா?ன்னு நான் சிரித்துக் கொண்டே கேட்டேன். அவர் நீ நல்லா பேச வேற கத்திருக்கே. யார் பெத்த புள்ளையோ.. உடம்பைப் பார்த்துக்கப்பா என்று அன்பாக அறிவுரையும் வழங்கினார். எனக்கு அதிக வியப்பாக இருந்தது.

ஸ்ரீரங்கத்தில் அவமதிப்பு

அடுத்தோ எனக்கு அவமதிப்பு காத்திருந்தது. ஸ்ரீரங்கம் கோபுரத்தை-யும் ஓவியமாக வரைய நினைத்து, புஷ்கரணி தெப்பக்குளம் பக்கம் போனேன். கோபுரத்தில் சூரிய வெளிச்-சம் நேரடியாக படுகிற கோணம் அங்கிருந்துதான் கிடைத்தது. ஆனால் கோவில் வளாகத்தில் பிரகாரத்திற்கு அருகிலேயே நின்று வரைய வேண்-டியது இருந்தது. அப்போது கோவில் அர்ச்கர் ஒருவர் வந்தார். என்னிடம் குலம் _ கோத்திரங்களை விசாரித்தார். என் பேச்சு, உடை, முக பாவனை-களை வைத்து நான் பிராமணப் பையனில்லை என்று தெளிவாகத் தெரிந்ததும் அவரின் முகம் போன போக்கே சரியில்லை. முறையா அனுமதி எதுவும் வாங்காம கோவிலுக்குள்ள படமெல்லாம் வரையக்கூடாது என்று கடிந்தபடி சொன்னார்.

நான் ஓவியக் கல்லூரி மாணவன். படம் வரைவதைத்தவிர வேறொன்-றும் செய்யப்போவதில்லை என்று பவ்வியமாக சொன்னேன், கெஞ்சிப் பார்த்தேன். அவர் சம்மதிக்கவில்லை.

இத்தனை சொன்ன பிறகும் நீங்கள் கோபப்படுவது நியாயமில்லை என்று பணிவாக பேசிப் பார்த்தேன். அவர் காதிலேயே வாங்கவில்லை; மாறாக அவரது கோபம் கூடியது. ஓ... நீ நியாய தர்மம் வேற பேசுறீயா? இரு வர்றேன் என்று ஆவேசமாக உள்ளே போனவர் வேறு சில அர்ச்சகர்களுடன் வந்தார்.

என்னை அடித்து விரட்டாத குறைதான்! அத்தனை அவமதிப்பு அவர்-களிடம் முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டு ஏமாற்றத்தோடு அங்-கிருந்து கிளம்பினேன். கோவிலை-விட்டு வெளியேறி தெருவில் அமர்ந்து கோபு-ரத்தை படமாக வரைந்து முடிந்தேன்.

பெரியார்மீது மதிப்பு

தந்தை பெரியார் மீது எனக்கு அப்போதுதான் பெரிய மரியாதை வந்தது. அவர் ஏன் இவர் மாதிரியான பிராமணர்களை வெறுத்தார் என்பதன் அர்த்தமும் எனக்கு அனுபவப்-பூர்வமாக விளங்கியது.

அந்தக் கோவிலையும், ஆண்ட-வனையும் அவர்கள் அனுமதியின்றி யாரும் நினைக்கக்கூடாது என்று கருதிய அந்த அர்ச்சகரின் போக்கு என்னைக் கடுமையாகப் பாதித்தது. படிப்பறிவு இல்லாத சாதாரண கிரா-மத்து பாமர மக்கள் கூட எனக்கு படங்-கள் வரைய இடம் தந்து, உண-வளித்து, உபசரித்து அனுப்பிய எத்-தனையோ சம்பவங்கள் உண்டு. ஆனால், மெத்தப் படித்து தமிழ் மண்ணின் முக்கிய கோவிலில் அர்ச்-சகராக இருந்த அவர் தீண்டாமை நோக்கத்தோடு என்னிடம் அப்படி நடந்து கொண்டது புதிய புதிரான அனுபவமாகவே எனக்கு இருந்தது. அதை நினைத்தால் இப்போதும் நெஞ்-சம் கனக்கத்தான் செய்கிறது.

நன்றி:
ராணி 24.1.2010

Friday, January 22, 2010

பலே, பலே! கட-வு-ளுக்கே அய்.எஸ்.ஓ. 9001_2008 அங்கீகாரம்!

கோவை காந்தி-புரத்தில் சித்தி விநாயகர் என்ற ஒரு கோயில்; திருவாச்சி, பார்வை தகடு, மூஷிக வாகனத்துக்கு தங்கக் கவசம் அணியும் பணி நிறைவுறும் நிலை-யில் உள்ளது.


இந்து அறநிலையத்-துறையின் கட்டுப்பாட்-டில் உள்ள இந்தக் கோயிலுக்கு இதுவரை எந்த கோயிலுக்கும் இல்லாத அய்.எஸ்.ஓ. 9001_2008 (International Standard Organisation) தரச்சான்று அளிக்கப்-பட்டுள்ளதாம்.

பலே, பலே! கட-வு-ளுக்கே ஓர் அமைப்-பின் அங்கீகாரம் தேவைப்-படு-கிறது என்-பது நினைத்து நினைத்து நகைக்கவேண்-டிய படு ஜோக்!

தரம் என்றால் அதற்கு விளக்கம் என்னவோ! இந்த சித்தி விநாயகரிடம் எது கேட்-டாலும் அது கறாராகக் கிடைத்துவிடும் என்ற உத்திரவாதமோ! அல்-லது பக்தர்கள் கேட்பதைச் சித்தி விநாயகர் கண்டிப்-பாக கொடுத்தே தீர-வேண்டும் என்ற கட்ட-ளையா? அப்-படி கொடுத்து அரு-ளாவிட்-டால் சித்தி விநா-யகர் மீது ஒழுங்கு நட-வடிக்கை (Discipilinary Action) எடுக்கப்படும் என்ற நிபந்தனையா?

இந்த நிபந்தனை-களுக்கு சித்தி விநாயகர் கட்டுப்படாவிட்டாலோ அல்லது கடமை தவறும் பட்சத்திலோ கொடுத்த அங்கீகாரத்தை ரத்து செய்யும் நிலைப்பாடா?

இவற்றைப்பற்றியெல் லாம் விளக்கினால் நல்லது.

சரி... கோவை காந்தி நகர் சித்தி விநாயகருக்கு இந்த அந்தஸ்து அளிக்-கப்பட்டால் மற்ற கோயில்கள், கடவுள்-களின் நிலை என்ன?

இவையெல்லாம் தரச் சான்றுக்கு லாயக்கு இல்லாத மட்டக் கிளாஸ் கோயில்களா _ கடவுள்-களா? பக்தர்கள் இந்த வகை-யில் சிந்திக்கத்-தானே வேண்டும்.

உலக மயம் என்ற ஒரு விஷயம் வந்தாலும் வந்தது _ கோயில்கள், கடவுள்கள்வரை இது-போன்ற சமாச்சாரங்கள் நுகர்வோர் கலாச்-சா-ரத்தின்கீழ் வரவேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டு விட்டது.

எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர் கடவுள்; அவரை எந்த சக்தி-யாலும் கட்டுப்படுத்த முடி-யாது என்பதெல்-லாம் பழைய கதை.

இனிமேல் எந்தக் கோயில் அய்.எஸ்.ஓ. முத்திரை பெற்றுள்ளதோ, அந்தக் கோயிலுக்குத்-தான் செல்லுவது என்ற நிலை ஏற்பட்டால், ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடவுளைக் கேலி செய்யும் இந்த முறை கூடாது என்று எந்தக் கடவுளிடம் போய் பக்-தர்கள் முறையிடுவார்-களோ தெரியவில்லை.

பக்தி, ஒரு பிசினஸ் என்று சொன்ன பெரிய-வாளின்பெரிய வாய்க்கு ஒரு கட்டுக் கரும்பைக் கொடுத்துத் தின்ன சொல்லலாம், பலே! பலே!!

-விடுதலை (22.01.2010) மயிலாடன்

Thursday, January 21, 2010

இப்போ தெரியுதா பெரியார் தாக்கம்?

நடிகர் சிவகுமார் ஓவி-யக் கல்லூரியில் படித்துத் தேர்ந்த முழுமையான ஓவியர். அதனைத் தொழி-லாகக் கொள்ளாமல் திரைப்படத் துறையிலே அடியெடுத்து வைத்து உன்-னத நிலையை அடைந்-துள்ள அருமையான பண்பாளர். தமிழ்ப் பற்றும், இனப்பற்றும் மிகுந்த சீலர்.


ராணி இதழில் உங்க-ளோடு பேசுகிறேன் என்ற தொடரை எழுதி வருகி-றார். இவ்வார ராணியில் (24.1.2010, பக்கம் 22) ஒரு செய்தி.

பார்ப்பனர்களைக் குறை கூறுவதுதான், எதிர்ப்பதுதான் தி.க.காரர்-களின் வேலை என்று பொறுப்பில்லாமல் பேசும் பேர்வழிகளின் செவிப்-பறை-யில் அறைந்து கண்-களைத் திறக்கச் செய்யும் தகவல் அது.

அவர் ஓவியர் ஆத-லால் பல கோயில்களுக்-கும் சென்று நேரிடையாக ஓவியம் தீட்டுவது அவ-ரது வழக்கம். அந்த வகை-யில் தஞ்சாவூர் பெருவு-டையார்கோயில், திருச்சி மலைக்கோட்டைக் கோயில்-களுக்குச் சென்று கோபு-ரங்-களின் ஓவியங்களைத் தீட்டினார். பலரும் அதற்கு உதவி செய்தனர்.

சிறீரங்கம் கோயில் கோபுரத்தையும் நேரில் சென்று ஓவியம் வரைந்-திட விரும்பி அங்கு சென்ற போது ஓர் அவ-மதிப்பு அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தது.

கோபுரத்தில் சூரிய வெளிச்சம் நேரிடையாகப் படுகிற கோணம் புஷ்ப-கரணி தெப்பக்குளம் பக்-கம்-தான் கிடைக்கிறது என்பதால் அந்தப் பக்கம் சென்றார் இளைஞரான ஓவியர் சிவக்குமார்.

என்ன நடந்தது?

கோயில் அர்ச்சகப் பார்ப்பனர் ஒருவர் அந்த இடத்துக்கு வந்தார். உடனே, நீ யார்? உன் குலகோத்திரம் என்ன? என்ற கேள்விக் கணை-களை அவர்முன் எறிந்-தார். பேச்சு, உடை, முக பாவனைகளை வைத்து வந்தவர் பார்ப்பனர் இல்லை என்று தெரிந்து-கொண்டதும் அர்ச்சகர் முகம் போன போக்கே சரியில்லையாம். முறையா அனுமதி வாங்காம கோயி-லுக்குள்ள படமெல்லாம் வரையக்கூடாது என்று முகத்தில் அடித்ததுபோல் கூறினாராம்.

நான் ஓர் ஓவியக் கல்லூரி மாணவன் என்று சொல்லிப் பார்த்திருக்-கிறார். மசியவில்லை அர்ச்-சகர்.

இத்தனை சொன்ன பிறகும் நீங்கள் கோபப்படு-வது நியாயமில்லை என்று பணிவாக சொன்-னா-ராம். ஓ, நீ நியாய தர்மம் வேறு பேசுறீயா? என்று கூறி உள்ளே போய் வேறு சில அர்ச்-சகப் பார்ப்பனர்களையும் அழைத்து வந்தாராம்.

அடிக்காத குறைதா-னாம் _ அவமதிப்புடன் திரும்-பினேன் என்று கூறும் சிவ-குமார் ஒன்றைக் கூறுகிறார்:

இந்த இடத்தைக் கொஞ்-சமென்ன, அதிகமாகவே கவ-னிக்கவேண்டும்; நெஞ்-சில் நிலை நிறுத்தியும் கொள்ளவேண்டும்.

தந்தை பெரியார் மீது எனக்கு அப்பொழுது தான் பெரிய மரியாதை வந்தது இப்படி எழுதியுள்ளார் மானமிகு சிவகுமார்.

தலைவலியும், திருகு-வலி-யும் அவரவர்களுக்கும் வந்தால்தானோ!

-விடுதலை (21.01.2010) மயிலாடன்

Wednesday, January 20, 2010

முட்-டாள்கள் என்ன இந்தியாவுக்கு மட்-டுமே சொந்தமா, என்ன?

அவினாசி மற்றும் திருமுருகன்பூண்டி சிற்பக் கூடங்களில் உருவாக்கப்-பட்ட அர்த்த நாரீஸ்வரர் சிலை லண்டனுக்கும், பிரித்யங்கரா தேவி சிலை தூத்துக்குடிக்கும் அனுப்-பப்படுகின்றன என்றும், இந்தியாவில் தயாரிக்கப்-படும் சாமி சிலைகள் பல நாடுகளுக்கும் அனுப்பப்-படுகின்றன என்றும் படங்-களோடு சாங்கோபாங்க-மாக ஒரு நாளேடு செய்தி வெளியிட்டுக் கூத்தாடு-கிறது.


கடவுள் இல்லை, இல்லவேயில்லை என்று நீங்கள் என்னதான் கரடி-யாகக் கத்தினாலும் வெளி-நாடுகளுக்குக்கூட இங்கி-ருந்து கடவுள் சிலைகள் அனுப்பி வைக்கப்படுகின்-றன என்று குத்திக்காட்டு-வதுதான் இப்படி செய்தி-களை வெளியிடுவதன் நோக்கமாகும்.

தந்தை பெரியார் அவர்-கள் ஒருமுறை சொன்னது-போல, முட்-டாள்கள் என்ன இந்தியாவுக்கு மட்-டுமே சொந்தமா, என்ன?

ஒன்றை இந்த இடத்-தில் சுட்டிக்காட்டியாக-வேண்டும். இந்தச் சிலை-கள் கலைவண்ணத்துடன் உயரிய திறனுடன் உரு-வாக்கப்பட்டுள்ளன என்பது-தான் உண்மையே தவிர, இந்தச் சிலைகளுக்-குச் சக்தியுண்டு; இவை வெறும் உலோகங்கள் அல்ல _ கடவுள்கள்தான் என்று சத்தியம் செய்வார்-கள் பக்தக்கோடிகள்.

இதுபற்றி பிரபல சிற்பி கணபதி ஸ்தபதி என்ன கூறுகிறார் என்று பார்க்க-லாமா? குமரிமுனையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையை உருவாக்கிக் கொடுத்த மேதையவர் _ அத்தகையவரே என்ன சொல்லுகிறார்?

ஒரு கடவுள் சிலையை வடிவமைக்கிற-துன்னா சும்மாவா? யார் பார்த்திருக்காங்க கட வுளை? அவர் எப்படி யிருப்பார்னு யாருக்குத் தெரியும்? எங்களால் மட்-டும் எப்படி அத்தனைத் தத்ரூபமா ஒரு கல்லுல அவரைக் கொண்டுவர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனைப் பரவசப்-படறீங்க?

நீங்க அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டு வரணும்னா ஒரு கல்லு, சிலையா மாற-ணும். அந்தக் கல்லுக்கு உயிர் வரணும். அப்பத்-தான் கையைக் கூப்பி வணங்க முடியும். அந்த உயிரை யாரு கொடுக்-குறாங்க? நாங்கதானே? எங்ககிட்ட அப்படி என்ன-தான் வித்தை இருக்-குன்னு தெரிஞ்சுக்கவேண்-டாமா?

(கல்கி பேட்டி, 11.6.2006).

இதன் பொருள் என்ன?

ஒரு கல்லை சிலை-யாக்கி, அதில், தன்னிடம் உள்ள கலைத் திறனால் ஈர்ப்புக் கவர்ச்சியை ஏற்-படுத்துபவர் சிற்பி _ அவ்-வளவுதானே தவிர, அதில் கடவுள் சக்தியாவது _ வெங்காயமாவது! எதுவும் கிடையாது என்பது இப்-பொழுதாவது விளங்கு-கிறதா? இல்லையா?

ஆக, கடவுளை க(ல்)-பித்தவர் சிற்பிதானே _ மனிதன்தானே!

- மயிலாடன் விடுதலை (20.01.10)

Tuesday, January 19, 2010

தந்தை பெரியார் ஊட்டிய மொழிமான உணர்வு மறைந்துவிட்டதா?“திராவிட இயக்கத்தின் தாக்கம், தமிழ்ப் பற்று, தமிழ்மீது நாம் கொண்டிருந்த வேகம் இவையெல்லாம் ஒரு காலகட்டத்திற்குத்தான்; அடுத்தடுத்து வந்த தலைமுறையில் மகன், பேரன், பேத்தி என்று இவர்கள் எல்லாம் தாத்தாவினுடைய தமிழ் மொழிப் பற்றை, தமிழ் ஆற்றலை எங்கேயோ தள்ளிவிட்டார் களே!’’ என்று தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவரும், திராவிட இயக்கத்தின் முக்கிய மூத்த தலைவருமான மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற_ மறைந்த சுய-மரியாதைச் சுடரொளி தருமலிங்கம் இல்லத்துத் திருமண விழாவில் ‘சீற்றத்துடன்’ குறிப்பிட்டார். மானமிகு தர்மலிங்கம் அவர்களின் பேரனும், மணமகனுமான பிரதீப் அவர்களின் பெயரை அந்த மணமேடையிலேயே மதிவாணன் என்று மாற்றினார்.


கலைஞர் அவர்களின் ‘சீற்றமும்’, அறிவுரையும் மிகவும் கவனிக்கத்தக்கவையும், சிந்திக்கத்-தக்கவையும், செயல்படுத்தவேண்டியவையுமாகும்.

பெயரைக் கொண்டு, சம்பந்தப்பட்டவர் எந்த மொழிக்குச் சொந்தக்காரர், எந்த இனத்துக்குரிய-வர் என்றுகூட அடையாளம் காண முடியா-விட்-டால், அந்த இனம், அந்த மொழி வெகு-விரைவில் இறந்த காலத்துக்குச் சொந்தமுடைய-தாகவே ஆகிவிடாதா?

தந்தை பெரியார் கண்ட தன்மான இயக்கம் இத்திசையில் சாதித்தவை சாதாரணமானவை-தானா?

தந்தை பெரியார் ஊட்டிய தன்மான, மொழிமான உணர்வின் அடிப்படையில்தானே _ அன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்த நாராயணசாமி நெடுஞ்-செழியன் ஆனார்; இராமையா அன்பழகன் ஆனார்; சோமசுந்தரம் மதியழகன் ஆனார்.

இந்த உணர்வு தொடரப்படவேண்டாமா என்பது-தான் கலைஞர் அவர்களின் அர்த்தம் பொதிந்த கேள்வியாகும். எடுத்துக்காட்டாக, நாரா-யணசாமி நெடுஞ்செழியனாக பெயர் மாற்றப்பட்ட நிலையில், அவரது பேத்திக்கு ஸ்வப்பன விசாலாட்சி என்றல்லவா பெயர் சூட்டப்பட்டது. யாரையோ சங்கடப்படுத்தவேண்டும் என்பதற்காக அல்ல _ இதனை எடுத்துக்காட்டுவது!

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எடுத்துக்-காட்டியது துல்லியமானது _ அவர் சினம் அடைந்ததில் நியாயம் இருக்கிறது என்பதற்காக எடுத்துக்காட்டவே இது.

தன்மான இயக்கமான திராவிட இயக்கத்தின் தொண்டால்தான், ஊட்டிய உணர்வுதான் அக்ரா-சனாதிபதி தலைவர் ஆனதற்கும், உபந்நியாசம் சொற்பொழிவு ஆனதற்கும், நமஸ்காரம் வணக்கம் ஆனதற்கும், வந்தனோபசாரம் நன்றியுரையாக மலர்ந்ததற்கும் அடிப்படைக் காரணமாகும்.

ஆரிய சமஸ்கிருதம் தமிழில் ஊடுருவியதன் காரணமாக, தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்று மருவி ‘வேற்று மொழிகளாக’ உருப்-பெற்றன என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

பொருள் தெரிந்தா பெயர்களைச் சூட்டிக் கொள்-கின்றனர்? கேசவன் என்றும், ஆதி-கேச-வன் என்றும் பெயர் சூட்டிக் கொள்கிறார்களே?

இதன் பொருளை அறிந்திருந்தால், இப்படி பெயர் சூட்டிக்கொள்வார்களா? ‘மயிரான்’, ‘பழைய மயிரான்’ என்றல்லவா பொருள்படுகிறது?

செழியன், நெடுஞ்செழியன், செங்குட்டுவன், இராவணன், இளங்கீரன், நச்சினார்க்கினியன், அறிவுடைநம்பி, பாரி, திருமாறன், இளங்கோவன், வளவன் என்றெல்லாம் செந்தமிழில் அழைக்-கப்பட்ட பெயர்களுக்குச் சொந்தக்காரர்களான தமிழர்களின் இன்றைய நிலை என்ன?

ரமேஷ், ப்ரனேஷ், சுரேஷ், கணேஷ், விக்-னேஷ் என்று கடைசி எழுத்து ‘ஷ்’ வருவது-போல வைத்துக் கொள்வது எனும் இன்றைய நாகரிகம் (திணீsலீவீஷீஸீ) என்ற நோய் தமிழர்களைத் தொற்றிக் கொண்டுவிட்டதே! இன்றைய திரைப்பட உலகமும் இதனை ஊட்டி வளர்க்கிறதே!

இது தடுத்து நிறுத்தப்படவேண்டாமா? தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறும் நிகழ்ச்சி இடம்பெறுவது உண்டு. அந்தப் பெயர்களை எல்லாம் பார்க்கும்-போது நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா _ தமிழ்க் குடும்பத்துப் பிள்ளைகள்தானா இவர்கள் என்ற அய்யப்பாட்டைத்தான் ஏற்படுத்துகிறது.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற-விருக்கும் இந்தக் காலகட்டத்தில், முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எழுப்பியிருக்கும் உணர்வு கூர்தீட்டப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

- விடுதலை தலையங்கம் (19/01/2010)

Monday, January 18, 2010

கடவுள்கள் எப்படி தோன்றினார்கள்...

மக்களின் மனதில் தெய்வங்களை பற்றியும் , பேய் பிசாசுகளை பற்றியும் எழும் எண்ணங்களுக்கு காரணம் என்ன என்பதை நம்மால் அறிய முடியும். அதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. அவைகளை உண்டு பண்ணியவன் மனிதன். தன்னை சுற்றிலும் சூள்ந்துள்ளவைகலையே தான் படைத்த கடவுளுக்கு மனிதன் அமைத்திருக்கிறான். மனிதன் தனக்கு இருக்கும் கை,கால்களை போலவே ,தான் படைத்த கடவுளுக்கும் அமைத்தான் . கண்,காது,மூக்கு முதலியவைகளையும் வைத்திருக்கிறான்.அந்தந்த நாட்டினர் அவரவர்கள் படைத்த கடவுள்களுக்கு அவர்கள் பேசும் மொழியையே கற்பித்தனர். அந்த நாட்டிற்கு எந்த அளவு பூலோக சரித்திரம் தெரியுமோ, எந்த அளவுக்கு வான சாஸ்திரம் திரியுமோ, அந்த அளவுக்குத்தான் அந்தக் கடவுள்களும்,பிசாசுகளும் தெரிந்து கொள்ளமுடிந்தது. எந்த கடவுளும் தன்னைப் படைத்த மனிதனைவிடச் சற்று அதிகமான புதியுள்ளவர்களாய் இருக்கவில்லை.


ஆபிரிக்காவில் நீக்ரோக்கள் தங்கள் கடவுள்களுக்கு தங்களை போலவே கருத்த உடலும், சுருண்ட மயிரும், வைத்து உண்டாக்கினார்கள். மஞ்சள் நிற உடம்புடன், கருமையான பாதம் பருப்பு போன்ற கண்களுடன், மங்கோலியர்கள் தங்கள் கடவுள்களை படைத்தது கொண்டனர். யூதர்கள் தங்கள் கடவுள்களுக்கு உருவம் உண்டாக்க கூடாது என்று எண்ணம் கொண்டார்கள். அப்படி அவர்களுக்கு எண்ணம் இல்லாவிட்டால் அவர்களும், அவர்களது கடவுளான யேகோவாவிற்கு நீண்டு தொங்கும் தாடியும், நீண்ட முகமும் கதியை போன்ற மூக்கும் உண்டக்கியிருப்பர்கள். பாவம்! கிரக்கர்களின் பெரும்தெய்வம் ஜீவ்ஸ். இதை பற்றி நான் சொல்லி தெரிந்து கொள்ளும் நிலைமையில் நீங்கள் இருக்கமாடிர்கள். எவோ - இந்தக் கடவுள் ரோமாபுரியின் சட்டசபையில் ஓர் உறுப்பினர்.

எகிப்பது நாட்டு கடவுள்கள் அந்த நாட்டு அன்பு மக்களை போலவே குளிர்ச்சியான முகமும், அமைதி நிறைந்த பார்வயுமுடயவனவாக விளங்கின. குளிர் பிரதேசமான வடக்கிலோ தங்கள் கடவுள்களுக்கு கம்பளிகளை போர்த்து வைத்தனர். உஷ்ண பிரதேசங்களில் கடவுள்கள் நிர்வாணமாய் நின்றன.இந்திய தெய்வங்கள் யானைகளின் மேல் அமர்ந்து கொண்டு பவனி வரும். தீவுகளில் உள்ள தெய்வங்கள் நீஞ்சலில் தேர்ந்தவைகள்.

இந்த கடவுள்களை அந்தந்த நாட்டினர் செதுக்கியும் , எழுதியும் வைத்திருக்கின்றனர். இந்த பொம்மைகளை பாமர மக்கள் கடவுள் என சொல்லி வழிபடுகின்றனர். அதனாலே தான் இந்த பொம்மை கடவுள்களுக்கு தங்கள் பலிகளையும், வணக்க வழிபாட்டையும் செலுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு நாட்டினரும் தாங்கள் படைத்த கடவுள்களுக்கும் தங்களுடைய குனதிசயன்களே கற்பித்தனர். இதிலிருந்து கடவுள்கள் எப்படி தோன்றினார்கள் என்பதை எளிதாக அறிந்துகொள்ளமுடிகிறது.

-- இங்கர்சால் (கடவுள்கள் கோவில்கள் நூலிலிருந்து)

Wednesday, January 13, 2010

அபசாரம்! அபசாரம்! தண்ணீரின் புனிதத் தன்மை கெட்டே விட்டது..

திருப்பதி மூலஸ்தான பிர-காரத்திற்கு ஒரு கிணற்-றி-லிருந்து தண்ணீர் எடுக்-கப்பட்டு வருகிறது. இந்தக் கிணற்றின் அருகில் சமை-யல் கூடம் உள்ளது. இங்கு-தான் திருப்பதி லட்டு தயாரிக்கப்படுகிறது. கிணற்றுத் தண்ணீரில் கிரு-மிகள் இருக்கும் என்ப-தால், கிணற்று நீரில் குளோ-ரின் தூளைக் கலந்தார்-களாம்.


அபசாரம்! அபசாரம்! தண்ணீரின் புனிதத் தன்மை கெட்டே விட்டது என்று தலையில் அடித்துக் கொண்-டார்களாம் அர்ச்சகர்கள்!

தண்ணீரைத் தூய்மைப்-படுத்த, கிருமிகளை அழிக்க குளோரினைப் பயன்படுத்தினால் புனிதம் கெட்டுப் போய்விடுமாம். அப்படியென்றால் அழுக்க-டைந்து நோய்களை உண்-டாக்கும், கிருமிகள் குடியி-ருக்கும் நீர்தான் புனித-மானதா?

புனிதத்தின் யோக்கி-யதை எந்தத் தரத்தில் இருக்கிறது பார்த்தீர்களா! கடவுளுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படும் அந்தத் தண்ணீரில் உள்ள கிருமிகளைஅழிக்க ஏழு-மலையானுக்கு சக்தி-யில்லை என்றால், கட-வுள் சக்தி உள்ளவரா? கிரு-மிகள் சக்தி உள்ளனவா என்ற கேள்விதான் எழு-கிறது.

திருப்பதியில் லட்டு வாங்கி சாப்பிடும் பக்தர்-களுக்கும் ஒரு தகவல் இதன் மூலம் கசிந்துள்-ளது. திருப்பதி லட்டு கிரு-மிகள் உள்ள தண்ணீரைக் கொண்டு தயாரிக்கப்படு-கிறது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அதன் சுற்றுச் சூழல் பற்றி இந்திரா காந்தி என்ற பெண்-மணி ஓர் ஆய்வு செய்-தார்.

கோயில் கருவறையில் மூல விக்ரகத்திற்கு அபி-ஷேகம் செய்யப்படும் தண்ணீரில், பால், சந்தனம் வகையறாக்கள் ஒரு சாள-ரத்தின் வழியாக வெளியே வரும். பிரகாரத்தைச் சுற்றி வரும் பக்தர்கள் சாமிக்கு அபி-ஷேகம் செய்யப்பட்டு வெளியில் வரும் அந்தத் தண்ணீரைப் புனித நீர் என்று மதித்து கையில் பயபக்தியாக எடுத்து, மொடுக் மொடுக்கென்று குடிப்பார்கள்.

அந்த (சாக்கடை)த் தண்ணீர் தப்பித் தவறிக் கூட கீழே சிந்திவிடக் கூடாது என்பதற்காக (பக-வானைக் குளிப்பாட்டிய ஜலமாயிற்றே!) இரு கைகளை-யும் அப்படியே தலையில் தடவிக் கொள்வார்கள்.

ஆய்வாளர் இந்திரா காந்தி என்ன செய்தார்? அந்தத் தண்ணீரை ஒரு பாட்டிலில் எடுத்து கிண்டி-யில் உள்ள கிங் இன்ஸ்டி-டியூட்டுக்குப் பரிசோத-னைக்-காக அனுப்பினார்.

பல கொடிய நோய்க் கிரு--மிகள் அதில் இருப்ப-தாகத் தெரிவித்தனர் (ஸிமீஜீஷீக்ஷீ).

உண்மை இவ்வாறு இருக்க, அழுக்கடைந்த நீரை சுத்தப்படுத்த குளோ-ரினைப் பயன்படுத்தினால், தண்ணீரில் புனிதம் கெட்டு-விடும் என்று கூச்சல் போடுகிறார்கள் என்றால் இவர்களின் பம்மாத்தை என்னவென்று சொல்ல! பக்தியின் பெயரால் இந்தப் பயங்கரம்! பக்தர்கள் கொஞ்சம் புத்தியைச் செலவழிக்கக் கூடாதா?


-விடுதலை (13.01.2010) மயிலாடன் எழுதியது

Sunday, January 10, 2010

நமது நிலைமையும், பார்ப்பனர் நிலைமையும்


பார்ப்பன ஜாதியில் எண்ணிக்கையற்ற உட்பிரிவுகள் எவ்வளவோ இருக்கின்றன. பார்ப்பன சமூகம் மேன்மையாக இருப்பதற்கு அவற்றிற்கான எல்லா உட்பிரிவுகளும் ஒற்றுமை-யாகச் சேர்ந்து கொண்டு எப்படி மேன்மை கொண்டிருப்பது என்பதைப்பற்றி ஆலோசித்தும் கடைசியாக மூன்று வித தீர்மானங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதாவது ராஜ்ய ஸ்தாபனங்களில் இருக்கும் பார்ப்பனரல்லாத தலைவர்களை விலக்கி, எல்லா ஸ்தாபனங்-களையும் கைப்பற்றுவது. 2ஆவது, தமது ஜாலவித்தையினால் பார்ப்பனரல்லாத மக்களை மூடர்களாக்கி, பஞ்சாங்கம், தர்ப்பை புல்லை வைத்துக்கொண்டு, இறந்துபோன பெற்றோர்களை வைத்துக்கொண்டு இந்த இரண்டு பலமான ஆயுதங்களால், நரகத்திலிருந்து மோட்சத்துக்கு அனுப்புவது. 3ஆவது, பார்ப்பனரல்லாத மக்களால் நிருமானிக்கப்பட்ட தெய்வ ஸ்தலங்-களில் இருக்கும் பார்ப்பனரல்லாத தலைவர்களை விலக்கி சமஸ்கிருத பாஷையில் உயிர் இருப்பதாகக் காட்டி அபகரித்துக்கொள்வது. இந்த மூன்று தீர்மானங்களையும் பலமான ஆயுதமாக வைத்துக்கொண்டு காரியம் செய்ய ஆரம்பித்தார்கள். கொஞ்ச காலத்தில் பார்ப்பனரின் எண்ணத்தின்படி எல்லாக் காரியங்களும் சாதித்துக்கொண்டார்கள். அதன் பயனாக பார்ப்பன சமூகம் உலகத்தில் சீரும் சிறப்புடன் வளர்ந்து வருவதும் அல்லாமல் பார்ப்பன சமூகத்துக்கு ஆதிக்கம் வலுக்கவோ, ராஜ்ய ஸ்தாபனங்களில் இருக்கும் பார்ப்பனர்கள் அவர்கள் படித்த சட்டத்தைக் காட்டி, பார்ப்ப-ன-ரல்லாத மக்களிடத்தில் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்துக்கொள்கிறார்கள். பஞ்சாங்கம், தர்ப்பைப்புல் என இரண்டு பலமான ஆயுதங்கள் வைத்துக்கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் நமது மக்களிடம் பயமுறுத்தி பெற்றோர்களுக்கு மோட்சம், நரகம் என்கிற வார்த்தையினால் நமது மக்களிடத்தில் கோடிக்கணக்கான பணத்தை வரி வசூல் செய்து கொள்கின்றார்கள். சுவாமி கோவிலிலிருக்கும் பார்ப்பனர்களும், லோக குருக்களும் சாமி கோவிலுக்கு வரும் கோடிக்கணக்கான மக்-களிடத்தில், சுவாமி பேரால் மோட்சம் கிடைக்கு-மென்று சொல்லி அர்ச்சனை, அபிஷேகம், சமாராதனை இன்னும் எவ்வளவோ காரியங்களைக் செய்யச் சொல்லியும், நமது மக்களிடத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூல்செய்து கொள்கிறார்கள். அல்லாமலும் அவர்களை நாம் சுவாமி என்று கும்பிடும்படியாகவும் செய்து-விட்டார்கள். தவிரவும் நமது மக்களைத் சூத்திரன், வேசி-மகன், தீண்டாதவன், சண்டாளன், அடிமையிலும் அடிமை இன்னும் எவ்வளவோ சொல்லத்தகாதவை சொல்லி பார்ப்பனர்கள் சட்டமும் செய்து கொண்டார்கள். பார்ப்பனர்கள் இட்டதே சட்டம் என்று நமது மக்கள், அவர்கள் சொல்வதை-யெல்லாம் நம்பி அடிமைப்பட்டு, சுயமரியாதை-யின்றிக் கேவலமாக வாழ்கின்றோம். இப்போது நமது சமூகம் அடிமை சமூகமாகப் பார்ப்பனர்களுக்கு வேலைசெய்து கொண்டு வருகின்றோம். அந்தோ பரிதாபம்! என் மனம் துடிக்கின்றது. கையும் நடுங்குகின்றது. நமது பதிவிரதா ரத்னங்கள், காலையில் பார்ப்பனர்கள் வீட்டுக்குப்போய் வாசல் பெருக்குவதும், சாணம் போடுவதும், பாத்திரங்களைத் தேய்ப்பதும் மலஜலமான துணிகளைத் துவைப்பதும் இன்னும் சொல்லமுடியாத வேலைகள் செய்கின்றார்கள். இவர்களுக்கு சம்பளமோ மாதம் ஒரு ரூபாய்தான். இன்னும் சில நமது பெண்மணிகள், வயல்களுக்கும் தோட்டங்களுக்கும் காடுகளுக்கும் காலையில் போய் சாயங்காலம் வரைக்கும் குனிந்த வண்ணமாகவே வேலை செய்துவிட்டு வரும்போது 3 அனா கூலி வாங்கிக்கொண்டு கிடைக்கும் குருணை அரிசி வாங்கிக்கொண்டு வீடுபோய்ச் சேருகின்றார்கள். ஒரு ஏழைப் பார்ப்பனப் பெண்ணாவது வேலைக்கு போய் வருவது யாராவது பார்த்திருக்கின்றீர்களா? இன்னும் சந்தைக்கூட்டங்களிலும், மார்க்கட்டு-களிலும் வியாபாரம் செய்யவோ வாங்கவோ நமது பெண்மணிகளும் ஆண்மக்களும்தான் அவதிப்-படுகின்றார்கள். இந்தக் கூட்டங்களிலாவது பார்ப்பனப் பெண்ணாவது ஆண்மகனாவது கூலிவேலைசெய்வதைப் பார்க்க முடியுமா?


இன்னும் இயந்திரசாலைகளிலும், காப்பி தோட்டங்களிலும், ரப்பர் தோட்டங்களிலும் கப்பல் துறைமுகத்திலும், சிங்கப்பூர், பினாங்கு, கொழும்பு, மலேயா நாடுகளிலும் எங்கு பார்த்தாலும் நமது ஆண்மக்களும் பெண்மக்களுமே அல்லாமல் இக்-கூட்டத்திலாவது ஒரு பார்ப்பனப் பெண்ணை-யாவது, ஆணையாவது பார்க்க முடியுமா? நமது வருமானம், சராசரி 5 ரூபாய்தான். இதில் நாலுரூபாயைப் பலவழிகளிலும் பார்ப்-பனர்களுக்கு கொடுத்துவிட்டு மீதி ரூபாயில்தான் நாம் காலம் கழிக்கவேண்டும். இதன் பலனாக நமது மக்களுக்குச் சொல்லமுடியாத கஷ்டங்கள் ஏற்படு-கின்றன.

நம்மை ஆளும் இங்கிலீஷ்காரர்கள் என்ன செய்கின்றார்கள். திரேக கஷ்டத்தினாலும், அறி-வினாலும் புதுப் புது கருவிகள் கண்டுபிடித்து அந்தக் கருவிகளின் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். தொழில் செய்யாமல் பார்ப்பனர்களைப் போல் மனிதரிடத்திலிருந்து ஏமாற்றிப் பணம் கொள்ளை அடிக்கமாட்டார்கள். ஆகையால் பார்ப்பனர்-களைவிட இங்கிலீஷ்காரர்கள் எவ்வளவோ நல்லவர்கள். எம்பெருமான் காந்தியடிகளால் சிருஷ்டிக்கப்பட்ட கதரென்னும் குழந்தையை நமது மக்கள் தான் உயிர் கொடுத்து ஆதரிக்கின்றார்கள். கைராட்டையினால் நூல் நூற்பவர்கள் நமது மக்கள்தான் உயிர் கொடுத்து ஆதரிக்கின்றர்கள். கைராட்டையினால் நூல் நூற்பவர்கள் நமது பெண்மணிகளே. நமது ஜில்லாவில் பெருவாரியான கதர் உற்பத்தி செய்யாத நமது பதிவிரதாரத்தினங்-களே ஏது. திருப்பூரில் இருக்கும் கதர் கடைக்-காரருக்கு நூல் நூற்று கொடுப்பது நமது பெண்களே. மேற்படி கடைக்காரருக்கு ஒரு பார்ப்பனப் பெண்ணாவது நூல் நூற்றுக்கொண்டுவந்து கொடுத்து பஞ்சும், கூலியும் வாங்கிக்கொண்டு போகின்றாளா அல்லது ஓர் பார்ப்பனராவது கைத்தறியினால் நெசவு செய்து கதர் துணிகள் உற்பத்தி செய்-கின்றாரா? இல்லவே இல்லை. பார்ப்பனருக்கும் அவர்கள் பெண்களுக்கும் வேலைதான் என்ன? வாய்க்காலுக்கும், ஆறு குளங்களுக்கும் போய் குளித்துவிட்டு வருவதும் நம்மை ஏமாற்றி வயிறு-புடைக்க உண்பதும் தான் வேலை. இதுகளை எல்லாம் பார்த்துதான் நமது தலைவர் வைக்கம் வீரர் சத்தியாக்கிரகி, மனம் பொறுக்-காமல் பார்ப்பன சமூகம் தொழில் செய்யாமல் சும்மா இருந்து கொண்டு சாப்பிடுவதோடு நமது மக்களை ஏமாற்றி அடிமையாகக் நடத்து-கின்றார்கள், என்பதை தெரிந்து எம்பெருமான் காந்தியடிகளால் சிருஷ்டிக்கப்பட்ட ஒத்துழை-யாமை என்னும் சுயமரியதையை பார்ப்பனர்கள் சின்னாபின்னப்படுத்தியும், அதற்கு உயிர் கொடுத்து குடிஅரசின் மூலமாக நமது மக்-களுக்கு ஞானப்பால், ஊட்டிக்கொண்டு வருகிறார். சுயமரியாதை என்னும் குழந்தை நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக குடிஅரசில் சீரும் சிறப்புடன் வளர்ந்து வரு-வதைக்கண்டு பார்ப்பன வலையில் சிக்குண்டு கிடக்கும் பாவலர், நாவலர்களைப்போல் இருக்கும் சில ஆசாமிகள் குடிஅரசைக் கொன்றுவிடுவதற்கு பாடுபடுகின்றார்கள். இதை எல்லாம் பொருட்படுத்தாமல் குடிஅரசு வீர கர்ஜனை செய்து நமது சமூகத்துக்கு இருக்கும் அடிமைத்தனத்தை விலக்கி சுயமரியாதை என்னும் சுயராஜ்ஜியத்திற்காகப் பாடுபடுகிறது.     -குடிஅரசு, 28.11.1926

Saturday, January 09, 2010

இவாளின் (தினமலர்) பத்திரிகா தர்மத்தின் யோக்கியதை...


பாரதிய ஜனதாவில் உமா சேர வழியில்லை என்று தலைப்பிட்டு தினமலர் ஒருசெய்தியை வெளி-யிட்டுள்ளது.


பா.ஜ. கட்சியில் இருந்த உமாபாரதி, கடந்த 2003_இல் நடந்த ம.பி. சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, அம்மாநில முதல் அமைச்சராகப் பதவியேற்றார். பின் போராட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக உமாபாரதி தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

இது உண்மைதானா? போராட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காகத் தான் பதவியை ராஜினாமா செய்தாரா உமாபாரதி?

ஒரு ஆறாண்டுக்குள்ளேயே முரண்பாடான செய்திகளை இவர்களால் அவிழ்த்து விட முடிகிறது என்றால் மூவாயிரம் ஆண்டு செய்திகள்எல்லாம் எப்படியெல்லாம் மூக்கும், விழியும் வைத்து முக்காடு போட்டு செய்திகளை வீதி உலா வரச்செய்திருப்பார்கள்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உமாபாரதி என்னும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் உழைப்பால், மதவாதச் கர்ச்சனையால், அம்மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து; வேறு வழியின்றி உமாபாரதியே அம்மாநில முதல் அமைச்சரும் ஆனார்.

இந்த நேரத்தில் 1994இல் கருநாடக மாநிலம் ஹுப்ளியில் நடைபெற்ற மதக் கலவரம் தொடர்பாக உமாபாரதிமீது கைது வாரண்டு ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்தது _ அதாவது 10 ஆண்டுகள்கழித்து. இந்த நேரத்தில் பி.ஜே.பி.யில் இருந்த உயர்ஜாதி ஆதிக்க சக்திகளும், ம.பி. மாநில சொந்த கட்சி எதிராளி-களும் கூடி உமாபாரதி பதவி விலக வேண்டும் என்று நான்கு கால் பாய்ச்சல் பாய்ந்தனர்.

உமாபாரதி பதவி விலகினார். வழக்கு நடந்தது. அந்த வழக்கில் உமாபாரதி குற்றவாளியல்ல என்று தீர்ப்பும் அளிக்கப்பட்டது.

அந்த நிலையில் பா.ஜ.க., உயர் மட்டம் என்ன செய்திருக்க வேண்டும்? மரியாதையாக மீண்டும் மத்தியப் பிரதேசத்தின் முதல் அமைச்சர் நாற்காலியில் அமர வைத்திருக்க வேண்டுமல்லவா? அதுதானே அறிவு நாணயம்?

என்ன நடந்தது? தற்காலிக முதல் அமைச்சராக உட்கார்ந்த பாபுலால் கவுர் அந்த நாற்காலியை விட்டு விலக மறுத்தார் _ பிஜேபியின் உயர் மட்ட _ உயர் ஜாதி ஆதிக்கவாதிகளின் அந்தரங்க உதவியோடு. (பிற்படுத்தப்பட்டோரையும், பிற்படுத்தப்பட்-டோரையும் மோதவிடும் தந்திரம்)

இவ்வளவுத் தகவல்களும் உள்ளுக்குள் உதிரப் பெருக்கெடுத்துக் கிடக்க தினமலர் கொஞ்சம்கூட கூச்சமில்லாமல், போராட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் என்று எழுதுகிறது என்றால், இவாளின் பத்திரிகா தர்மத்தின் யோக்கியதை எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதை அறியலாம்.

உமாபாரதி என்றால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்; எப்படியும் எழுதலாம் என்ற எண்ணம் அவர்களிடத்தில் எப்பொழுதுமே இருந்திருக்கிறது. உமாபாரதிமீது வழக்கு என்பதற்காக பதவி விலகச் சொன்ன இந்த உத்தமப்புத்திரர்கள் இதே அளவுகோலை கட்சியின் மற்றவர்கள் விஷயத்தில் கடைபிடித்தார்களா?

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முதல் குற்றவாளி-யான அத்வானியும், முக்கிய குற்றவாளியான முரளி மனோகர் ஜோஷியும் முறையே மத்திய அரசில் உள்துறை அமைச்சராகவும் (அதன்பின் துணைப் பிரதமராகவும்), மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்களே, அது எப்படி?

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையான முறையில் நெருக்கடி கொடுத்த நேரத்தில், அத்வானியும் ஜோஷியும் பதவி விலகல் கடிதத்தைக் கொடுக்க முன்வந்த போது, அதனை ஜென்டில்மேன் வாஜ்பேயி ஏற்க மறுத்தது எந்த அடிப்படையில்? அதே நேரத்தில் அ.இ.அ..தி.மு.க. சார்பில் அமைச் சர் பொறுப்பேற்கச் சென்ற சேடப்பட்டி முத்தையா, அதன்பின் மதிமுகவைச் சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரன் (இவர்மீது நேரிடையாகக் கூட குற்றச்சாற்று இல்லை; உதவியாளர்மீது வழக்கு) ஆகியோர் பதவி விலகினார்களே!

பா.ஜ.க. என்றால் பன்னீரில் பூத்தது _ மற்ற கட்சிகள் என்றால் சாக்கடையில் ஜனித்தது என்ற நினைப்போ!

இந்த நேரத்தில் இன்னொன்றும் உண்டு. அயோத்தியில் இடிக்கப்பட்டது வெறும் கட்டடம்தான்; அதற்காக அத்வானியும், ஜோஷியும் பதவி விலகத் தேவையில்லை என்று சொன்ன சொக்கத் தங்கம் யார் தெரியுமா? காஞ்சி சங்கராச்சாரியார் _ ஜெயேந்திர சரஸ்வதி. ஜார்க்கண்டில் இப்பொழுது என்ன நடந்திருக்கிறது? இதே சிபுசோரன் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று கூறி அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தபோது பாரதிய ஜனதா நாடாளுமன்றத்தில் அடேயப்பா, எப்படியெல்லாம் கூச்சல் போட்டார்கள்? ஜனநாயக விரோதம் என்று ஜன-நாயகத்தின் நவீன காவல்காரர்கள் போல எவ்வாறெல்லாம் கத்தித் தீர்த்தார்கள்? அதே சிபுசோரன் ஜார்க்கண்ட் மாநில முதல் அமைச்சர்ஆவதற்குக் அழுத்தங் கொடுக்கிறார்கள் என்றால் பி.ஜே.பி.யின்தார்மீக ஒழுக்கம் என்று தம்பட்டம் அடிப்பதெல்லாம் யாரை ஏமாற்ற?

பார்ப்பனர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு நேரிடையாக வருவதற்கான வாய்ப்பு இல்லை என்ற நிலையில், பாரதிய ஜனதா என்ற அரசியல் முகமூடி அணிந்து அதிகாரத்தைக் கைபிடிக்க வியூகம் வகுத்துள்ளனர் என்பதைப் பார்ப்பனர் அல்லாதார் உணர வேண்டும். அவர்களை உணர்ந்திட வைப்பதே நமது முக்கிய பணியாகும்.

விடுதலை ஞாயிறு மலர்-- மின்சாரம் (09.01.10)

Thursday, January 07, 2010

வெறுக்கத்தக்கதே பார்பனியம் (பார்ப்பனப் ப்ரோகிதன் கூறும் மந்திரம் என்ன? ) - 2


மணமகளை பார்த்து பார்ப்பனப் ப்ரோகிதன் கூறும் மந்திரம் என்ன?

"ஸோம :ப்ரதமோ விவித
கந்தர்வோ விவித
உத்தர :த்ருதீயோ அக்ஞிஷ் டேபதி;
துரியஸ்தே மனுஷ்யஜா "

இதன் பொருள்

"சோமன் முதலில் இவளை அடைந்தான் பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான்.உன்னுடைய மூன்றாவது கணவன் அக்னி.உன்னுடைய நான்காவது கணவன் மனித சாதியில் பிறந்தவன்."

ப்ரோகித கல்யாணத்தில் ஒரு பெண் விபசாரியாகப்படுகிறாள் என்பதற்கு இது ஒன்று போதாதா.?ஆரிய கலாசாரத்தில் ஐவர்க்கும் தேவி அழியாத பத்தினி என்பது வேறு கதை!அதை தமிழர்கள் ஏற்கமுடியுமா ?

புரோகித பார்பான் சொல்லும் மந்திரத்துக்கு பொருளாவது புரியுமா?

பன்மொழிப் புலவர் நாவலர் சோமசுந்தர பாரதியார் பங்கேற்ற ஒரு புரோகித திருமணத்தில் புரோகித பார்ப்பன் கருமாதி மந்திரத்தை சொல்லி கொண்டிருக்க -அதே இடத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் குரல் கொடுத்து தடுத்த நிகழ்ச்சிகள் எல்லாம் உண்டே!

ஆரிய கலாசாரத்தில் பிரமம்,பிரசபதியம்,அருஷம்,தெய்வம்,காந்தர்வம்,ஆசுரம் இராக்கதம்,பைசாசம் என்று திருமணங்கள் எட்டு வகைப்படும்.

இந்த எண்வகை திருமணத்துப் பெண்ணுக்கென்று எந்தவித மான உரிமையும் கிடையாது .பெண் என்பவர் ஒரு ஜடப் பொருள்.

அதிலும் பைசாசம் மணம் என்பது ஒரு கன்னிகை தூங்கும் பொது ,மது மயக்கத்தால் மயங்கி இருக்கும்போதும்,அல்லது புத்தி சுவாதினம் இல்லாமலிருக்கும்போதும் ,அவளை மனச் சம்மதம் இல்லாமலே வலுவில் புணர்ச்சிசெய்வதுதானாம்.

(நூல்:வெறுக்கத்தக்க பிராமணியம்-கி.வீரமணி-பக்கம் 84)

யன்மேமாத பிப்ர மமாத

யச் சாரான்னுவ் ரதம்;
தன்மே ரேத பிதாவ்ருஞ்க்த
மாபூரன் யோப பதய தாம்:
பித்ருப்ய ஸ்வதா விப்ய: ஸ்வதா

இதன் பொருள்:-

"எனது தாய் பதிவிரதா தருமங்களை முழுவதுமாக அனுச்டிக்காமல் அதன் காரணமாக நான் பிறந்திருந்தால், இந்த நெருப்பில் நான் இடும் பிண்டத்திற்கு உரிமை கோரி எனது சொந்த தகப்பனார் வருவார். அப்படி அவர் வராமல் தடுத்து நான் எந்த தகபனாருக்கு இந்த சிரார்த்தத்தை செயிகிறேனோ அவர் அதாவது எந்த தாயின் கணவர் இந்த பிண்டத்தை பெறவேண்டும்"

தந்தைக்கு மகன் சிரார்த்தத்தை செய்யும்போது தாயை விபச்சாரி யாக்கும் இந்த பார்பனியம் வெறுக்கத்தக்கதா - இல்லையா? அறிவுடையோர் சிந்திக்கட்டும்.

வெறுக்கத்தக்கதே பார்பனியம்.....

ஆணிடம் சிக்கியப் பெண்

பல்லியிடம் சிக்கிக் கொண்ட பூச்சியப் பார்த்திருக்கிறேன். உடலில் ஒரு பாகம் பல்லியின் வாயில் சிக்கிவிடும். பூச்சிக்கு அது தெரிந்துவிடும். மரணத்தின் பிடியில் இருப்பதுதான் தெரியுமே தவிர அதிலிருந்து மீண்டு கொள்ளும் வலிவு இராது. அந்த நிலையில் தன்னால் தப்பித்துக் கொள்ள முடியுமா? அதற்கு தகுந்த சக்தி இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எண்ணிக் கொண்டிருக்க முடியும்? எப்படியாவது வாயின் பிடியிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காக துடிக்கும், நெளியும். தலையை தூக்கும் பல்லியன் வாயிலிருந்து வெளிப்படுவதற்காக தன்பலத்தை முழுவதும் உபயோகித்துப் பார்க்கும். உவ்வொரு துடிப்பும் பூச்சியின் வலிமையை நாசமாக்கவும், உயிரை போக்கவும் பயன்படுமே ஒழிய விடுதலைக்கு வழியாக முடியாது, பல்லிக்குபூச்சியைக் கொல்லும் வேலையும் மிச்சமாகும். தன் பிடியை இறுக்கிக் கொண்டு பல்லி அசைவு அற்று இருக்க வேண்டியதுதான். பூச்சி போராடுவதாக கருதிக் கொண்டு சுவரிலே மோதுண்டு தானகச் சாகும். பிறகு பல்லி அதனைத் தின்றுவிடும். அது போன்ற நிலையில் நான் இருந்தேன்.

  (அண்ணாவின் உவமயிளிருந்து)

பெரியார் அவர்களுக்கு அரணாக இருந்து எதிரிகளைப் பந்த்தாடியவர்பணம், காசைப்பற்றியோ தண்டனைகளைப் பற்றியோ, துன்பம் தொல்லைகளைப்-பற்றியோ சிறிதும் கவலை கொள்ளாமல் தலைவரால் எந்த உத்தரவு பிறப்பிக்கப்-படுகிறதோ அதற்கு இசை-யவே படையை நடத்திய தளபதி என்று குடிஅரசு இதழால் பாராட்டு வழங்கப்-பட்ட மாயவரம் சி. நடராசன் அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (1902).


பள்ளிப் படிப்பு அதிகம் கிடையாது. அவர் சென்-னையில் ஒரு ஆங்கிலோ இந்தியன் வீட்டில் தங்க நேரிட்ட சூழ்நிலையில் சரளமாக ஆங்கிலம் பேசக் கூடியவர். ஆங்கிலத்திலி-ருந்து மொழி பெயர்த்து கட்டு-ரைகளை குடிஅரசுக்-குத் தந்தவர்.

அவர் தொண்டின் தனித் தன்மை என்ன? பட்டுக்-கோட்-டையில் தந்தை பெரியார் பொதுக்கூட்டம். அங்கு மாயவரம் நடராசன் வந்திருந்தார். அவரைப் பார்த்து அஞ்சாநெஞ்சன் அழகிரி எதற்காக இவ்-வளவு தூரம் வந்துள்ளீர்-கள்? என்று வினா தொடுக்க, பெரியார் கூட்டம் என்றால் நான் வந்து விடு-வதுதானே வழக்கம் என்று கூறிட, மற்ற ஊர்களில் பெரி-யார் பாதுகாப்புக்காக வரு-வது சரி, பட்டுக்கோட்டை-யில் பெரியாரை எதிர்ப்ப-வர்-களுக்குத்தான் பாதுகாப்புத் தேவைப்படும் என்று அழகிரி சொன்னார் என்பதி-லிருந்து மாயவரம் நடராசன் அவர்களின் பணி எத்தகை-யது என்பதைத் தெரிந்து கொள்ளலாமே!

அந்தக் காலத்தில் தந்தை பெரியார் பேசுகிறார் என்றால், எதிரிகள் பல கல-வரங்களில் ஈடுபடுவார்கள்; அந்த நேரத்தில், எல்லாம் மாயவரம் சி. நடராசன் அவர்-கள் தந்தை பெரியார் அவர்களுக்கு அரணாக இருந்து எதிரிகளைப் பந்-தாடுவார். நாகைமணி, திரு-வாரூர் தண்டவாளம் அரங்-கராசு என்ற ஒரு படையே அவ்வாறு இருந்ததுண்டு.

சர்க்கஸ் கம்பெனியில் ஓராண்டுகாலம் சாசகங்கள் புரிந்து, பின் இராணுவத்-துக்குச் சென்று, நாடு திரும்பி, காங்கிரசிலும் சேர்ந்து, தந்தை பெரியார் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டை விட்டு வெளி-யேறியதையொட்டி தந்தை பெரியாருடன் நடந்தவர் மாயவரம் நடராசன்.

வெற்றி முரசு என்ற ஏட்டையும் நடத்தியுள்ளார். மாயவரத்தில் இம்பீரியல் பிரஸ் இவருக்குச் சொந்த-மானது.

தந்தை பெரியார் அய்-ரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்த நிலையில், அன்னை நாகம்மையார் உடல்நலவுற்ற நிலையில், அவர்களை மாயவரம் அழைத்து வந்து தம் வீட்-டில் தங்க வைத்து வைத்திய உதவிகளைச் செய்தவர்.

மகன் லெனின், மகள் மங்கையர்க்கரசி, துணைவர் மீனாம்பாள்.

மகன் சென்னையில் பிர-பல ஆடிட்டராகப் பணி-யாற்-றிக் கொண்டு இருக்கிறவர்.

35 வயதிலேயே தந்தை பெரியார் அவர்களின் மெய்க்-காப்பாளராக நம்பிக்கை நாயகனாகவும் விளங்கிய மாயவரம் நடராசன் ஒரு தலைவருக்கு ஒரு தொண்-டர் எப்படி என்பதற்கான இலக்கணத்தைச் சமைத்துக் கொடுத்த மாவீரர் ஆவார்! வாழ்க நடராசனார்!

- விடுதலை (07-01.2010) மயிலாடன்

குறிப்பு: மயிலாடுதுறையில் (9.3.2002), மாயவரம் நட-ராசன் அவர்களின் நூற்-றாண்டு விழா தமிழர் தலை-வர் தலைமையில் வெகு-சிறப்பாக திராவிடர் கழகத்-தின் சார்பில் கொண்டாடப்-பட்டது.

Wednesday, January 06, 2010

இராமகோபாலன்-கள் காட்டுக் கூச்சல் போடுகிறார்

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் 2010 ஜூன் மாதம் நடைபெற உள்ளது. தமிழர்கள் என்று தங்களை உண்மையில் கருதிக் கொள்வோர் இதனை ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்-கின்றனர்.


இதன்மூலம் உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்கள் மத்தியில் இனவுணர்வும், தமிழ் உணர்வும், தமிழ் பண்பாட்டு உணர்வும் மேலும் சிறப்பாக மலர்ந்து மணம் வீசும் வாய்ப்பு ஏற்படும்.

தமிழைக் கால வளர்ச்சிக்கு ஏற்ப மேலால் எடுத்துச் செல்ல ஆக்க ரீதியான முடிவுகள் மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது. தமிழ் எழுத்துக்களை மேலும் எண்-ணிக்கையில் குறைக்கும் சீர்திருத்தம் குறித்தெல்லாம் சிந்திக்க முடியும். தமிழ்நாட்டுக்குள்ளும், வெளிநாடு-களில் வாழும் தமிழர்களிடையும் தமிழைத் தவிர்த்து வாழும் ஒரு மனப்பான்மை ஏற்பட்டு வருகிறது. நுகர்வுக் கலாச்சாரம் என்ற ஒன்று நெட்டி முறித்து எழுந்து அடிப்படை உணர்வுகளை மழுங்கடித்து வருகிறது.

தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்கு ஊடகங்கள், பொழுதையே போக்கடிக்கும்_ காவு கொள்ளும் இயந்திரங்களாக மாறிவிட்டன.

இவையெல்லாம் அடிப்படை உணர்வுகளைக் காயடிக்கும் தன்மை கொண்டவைகளாக இருக்கின்றன.

இந்த ஊடகங்கள் தமிழ் உணர்வுக்கும், முற்போக்குச் சிந்தனைக்கும் திருப்பி விடப்பட்டாகவேண்டும்; இதற்கான முயற்சிகளும்கூட செம்மொழி மாநாட்டில் மேற்-கொள்ளப்படவேண்டும். அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் அறிவியல் தமிழாக வார்த்து எடுக்கப்படவேண்டும்.

தமிழ்மீது அக்கறை உள்ளவர்கள் இந்தக் கோணத்-தில் சிந்தித்து செயல்படக் காத்துக் கொண்டிருக்கும்-போது, கிடந்தது கிடக்கட்டும்; கிழவனைத் தூக்கி மனை-யில் வை என்பதுபோல இந்து முன்னணிப் பிரமுகர் திருவாளர் இராம. கோபாலன் காட்டுக் கூச்சல் போடுகிறார்.

கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஒரு குறிப்பிட்ட கட்சி சார்ந்த-தாகவோ, பிரச்சாரம் செய்வதாகவோ இருக்கக்கூடாது. தமிழின் வளர்ச்சியையும், ஆன்மிகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஆற்றிய தமிழ்த் தொண்டை யாராலும் மறந்துவிட முடியாது. எனவே, செம்மொழி மாநாட்டில் சமய சான்றோர்கள் மற்றும் மடாதிபதிகள் ஆகியோரையும் கலந்து-கொள்ளச் செய்யவேண்டும். மேலும் இந்து இயக்-கங்களின் பிரதிநிதிகள் மாநாட்டுக்கு அழைக்கப்பட-வேண்டும் என்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்பட ஆன்மிகத் தலைவர்கள் அழைக்கப்பட்டுதானிருக்கிறார்கள். திராவிட இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் ஏராளமாகக் குழுவில் இடம்பெற்றிருக்கின்றனர்.

திருவாளர் இராமகோபாலன் தன்னை அழைக்க-வேண்டும் என்று நேரிடையாகச் சொல்லியிருக்கலாம்; இதற்கு ஏன் சுற்றி வளைத்து மூக்கைத் தொட ஆசைப்படவேண்டும்?

செம்மொழி மாநாடு திராவிட இயக்கக் கருத்துகளைப் பிரச்சாரம் செய்வதாக இருக்கக் கூடாது என்றும் புலம்பியிருக்கிறார்.

இதுவரை திராவிட இயக்க ஆட்சிகள்தான் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தியிருக்கின்றன. அப்பொழு-தெல்லாம் என்ன நடந்துவிட்டன?

உண்மையைச் சொல்லப்போனால், மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில்தான் பார்ப்பன அம்மையார் பத்மா சுப்பிரமணியம் என்பவர் தேவையில்லாமல் சமஸ்கிருதத்தை உயர்த்தித் தமிழைச் சீண்டினார். அதனால் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

கலைஞர் முன்னின்று உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்துகிறார் என்றவுடன் திராவிட இயக்கம்-பற்றியெல்லாம் குறை சொல்லும் இதே இராமகோபாலன்-கள், காஞ்சி சங்கராச்சரியார் சொல்லித்தான் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினேன் என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சொன்னாரே, அப்பொழுது மட்டும் அவாளுக்கு உச்சிக்குளிர்ந்ததோ!

கலைஞர் என்றதும், ஒரு கூட்டத்துக்குப் பச்சை மிளகாயைக் கடித்ததுபோல் இருப்பானேன்? திராவிட இயக்கம் என்றால் பஞ்சமா பாதகத்தில் ஒன்றா? திராவிட இயக்கம் தமிழுக்குத் தொண்டு செய்யாத கட்சியா? திராவிட இயக்க எழுத்தாளர்கள் தமிழுக்குச் செய்யாத தொண்டா? அவர்களின் படைப்புகள் காலத்தை வென்று நிற்கவில்லையா?

புரட்சிக்கவிஞர் யார்? அறிஞர் அண்ணா யார்? புலவர் குழந்தை யார்? திரைப்பட உலகம் மறுமலர்ச்சி பெற்றதற்கு அண்ணாவும், கலைஞரும் காரணகர்த்-தாக்-கள் அல்லவா! நமஸ்காரம் போய் வணக்கம் வந்ததும், அக்ராசனர் போய் தலைவர் வந்ததும், வந்தனோபசாரம் போய் நன்றி வந்ததும் எந்த இயக்கத்தால்?

மேடைத் தமிழ் மேன்மை பெற்றது எந்தக் கால-கட்டத்தில்? தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்டும் உந்துதலுக்கு யார் காரணம்?

எழுத்துச் சீர்திருத்தம் யார் சொன்னது? செம்மொழி தகுதி வந்தது எந்த ஆட்சிக் காலத்தில்?

பூசை காலத்தில் நீஷ பாஷையில் (தமிழில்) சங்கராச்சாரியார் பேசமாட்டார் என்றும், கோயிலுக்குள் தமிழ் வழிபாட்டு மொழியானால், தமிழ் தீட்டுப் பட்டு-விடும் என்றும் கூறும் கூட்டம்; தமிழுக்கு ஒரு மேன்மை, சிறப்பு வருகிறபோது, உள்ளொன்று வைத்து வெளியில் இன்னொன்று பேசும் கூட்டத்தின் கூச்-சலையெல்லாம் முதலமைச்சர் பொருட்படுத்தவேண்டாம் என்பதுதான் உண்மையான தமிழர்களின் எதிர்பார்ப்பு, மாநாட்டு வெற்றியின்மீது கவனம் செலுத்தவேண்டுமே தவிர, திசை திருப்பும் கோணல் மாணல்கள் பக்கம் கவனம் சிதறத் தேவையில்லை.

விடுதலை தலையங்கம் (05.01.10)

மதவாதிகளே, பதில் சொல்லுங்கள்!-2

(கிறிஸ்டோபர் ஹிட்சின்சின் நூலில் 35 ஆம் கட்டுரை இது) கிறிஸ்துவ மதத்தின் தத்துங்கள் உண்மைகள் என்று கொஞ்சம் கூட நம்பத்தக்கவையாக இல்லை எனத் தெரிந்த பின்பும் கண்களை மூடிக் கொண்டு வெறுமனே இருப்பது முட்டாள்தனம் அல்லவா? பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆதி மனி-தர்கள் உலகம் தட்டையென்றும், சொர்க்கம் மேலே உள்ளது என்றும், இந்த உலகத்தை மிகவும் பேராசை கொண்ட சண்டைக்கார தெய்வம் உண்டாக்கி இயக்கி வருகிறதென்றும், அது சொல்கிறபடி நடந்து கொள்ளா-விட்டால் தண்டிக்கும் என்றும் உளறி-யிருப்பவற்றின் அடிப்படையில் ஒருவர் தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது அடிப்படையான தவறு அல்லவா?


கடவுளுக்கு விடை தருதல் (கி திணீக்ஷீமீஷ்மீறீறீ ஷீ நிஷீபீ) எனும் நூலில் குறிப்பிட்டுள்ள கேள்விகளில் சில மீண்டும் தரப்படுகின்றன. இந்தக் கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

நீங்கள் (எகிப்து நாட்டின்) கெய்-ரோவில் பிறந்திருந்தால் 84 கோடி மக்-களைப் போலவே நீங்களும் முசுலி-மாக இருந்து அல்லாவைத் தவிர வேபறு கடவுள் இல்லை. முகமது அவரின் தூதர் என்று கூறிக் கொண்டிருப்பீர்களா, இல்லையா?

நீங்கள் (இந்தியாவின்) கல்கத்-தாவில் பிறந்திருப்பீர்களேயானால், 65 கோடி இந்துக்களில் ஒருவராக, வேதங்களையும், உபநிஷத்துகளையும் புனிதமாகப் போற்றி, எதிர்காலத்தில் நிர்-வாண நிலையை அடையும் எண்ணத்-தில் இருந்திருப்பீர்களா, இல்லையா?

நீங்கள் ஜெருசலத்தில் பிறந்தி-ருந்தால், 130 லட்சம் யூதர்களில் ஒருவராக, யேவாதான் கடவுள் என்றும் டோரா - தான் கடவுளின் வாக்கு என்-றும் சொல்லிக் கொண்டிருப்பீர்களா, இல்லையா?

நீங்களே (சீனாவில்) பீகிங்கில் பிறந்திருப்பீர்களேயானால் கோடிக்-கணக்கானவர்களைப் போல, புத்தர் அல்லது கன்பூஷியஸ், அல்லது லாவோட்சே ஆகியோர்களின் போதனைகளை ஏற்று அதனைப் பின் பற்றி வாழ்ந்திருப்பீர்கள்,அல்லவா?

உங்கள் பெற்றோர்கள் கிறித்து-வர்-கள் என்பதால்தானே நீங்களும் கிறித்துவராக இருக்கிறீர்கள்? (எழு-தியவர் தம் நாட்டில் உள்ள மதத்-தவர்களைப் பார்த்துக் கேட்கிறார்.)

கடவுள் அன்பானவர் என்றால் - ஏன் அவர் பூகம்பம், வறட்சி, வெள்-ளம், சூறைச் சுழற்காற்று போன்ற இயற்கை இடர்ப்பாடுகளை உற்பத்தி செய்து ஆயிரக் கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒவ்வோர் ஆண்டும் சாகடிக்கப்பட அனுமதிக்-கிறார்?

சர்வசக்தி வாய்ந்த அன்பு மய-மான கடவுள் என்றால் - அவர் ஏன் மூளை அழற்சி, பெரு மூளை முடக்கு நோய், மூளைப் புற்று, குட்டம், அல்-ஜிமர்ஸ் போன்ற பல கொடும் நோய்-களை லட்சக்கணக்கான மக்களுக்குப் பீடிக்கச் செய்து ஆண், பெண், குழந்-தைகள் என்று அமைதியான மக்-களைச் சாகடிக்க வேண்டும்?

வானுலகத்தில் வாழும் அன்பே உருவான கடவுள், ஏன் மதக் கருத்து-களை ஒப்புக் கொள்ள மறுக்கிற மனி-தர்-களைத் தண்டித்துத் தள்ளுவற்-கா-கவே நரகத்தைப் படைக்க வேண்டும்? அப்படி நரகத்தில் தள்ளி கடைசிவரை ஏன் கொடுமைப்படுத்த வேண்டும்?

பைபிள் மீது நம்பிக்கை வைத்-திருக்கும் கிறித்துவ மதத்தில் ஏன் நூற்-றுக்கணக்கான பிரிவுகள்? தனித்-தனி-யான மக்கள் கூட்டம் ஏன்? மற்ற-வரின் நம்பிக்கை பொய்யானது என ஒருவர்க்கொருவர் குற்றம் சாற்றிக் கொள்வதேன்?

கிறித்துவர்கள் எல்லாரும் ஒரே கடவுளைத்தான் வணங்குகிறார்கள் எனும்போது, மதப் பிரிவு சம்பந்தமான வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒருவரோடு ஒருவர் கூட்டுறவு கொள்ளாமல் இருப்பது ஏன்?

கடவுள் அன்புமயமான தந்தை என்றால் - தன் குழந்தைகளின் பிரார்த்தனைகளை நிறைவேற்றாதது ஏன்?

தொடங்கிய காலத்திலிருந்து பல கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பரிணாம வளர்ச்சி பெற்று இன்றைய நிலையை உயிரினங்கள் அடைந்துள்-ளன என்று அறிவியல் அறிஞர்கள் நிரூபித்திருக்கும் நிலையில், இந்த உலகமும் உயிர்களும் ஆறே நாள்களில் படைக்கப்பட்டன எனும் பைபிள் கருத்தை எப்படி நம்ப முடியும்?

ஆதிமனிதனை கர்த்தர் மண்ணைப் பிசைந்து உண்டாக்கினார் என்றும் அவனது விலா எலும்பில் இருந்து பெண்ணைப் படைத்தார் என்றும் கூறப்படுவதை அறிவுள்ள மனிதர்கள் ஏற்க முடியுமா?

தன் மகனை உலகில் ஒரு மனி-தனாக நடமாடச் செய்வதற்காகவே உலகைப் படைத்த கடவுள் ஒரு பாலஸ்தீனப் பெண்ணைத் தாமே பிள்ளைத் தாய்ச்சியாக்கினார் என்பதை நம்ப முடியுமா?

கடவுள் பொறாமை பிடித்-தவர் என்று பைபிள் கூறுகிறது. அந்தக் கடவுள்தான, எங்கும் நிறைந்த, எல்-லாம் வல்ல, எல்லா ஆற்றலும் படைத்-தவராக நிரந்தரமானவராக இருந்து எல்லாவற்றையும் படைத்தவர் என்ற நிலையில் இருக்கும்போது அவர் யாரைக் கண்டு பொறாமைப் பட-வேண்டும்.

உலகில் பல கோடி மக்கள் பட்டினியாலும் துன்பத்தாலும் துய-ருறும் போது, கிறித்துவர்கள் ஏன் தேவாலயங்களுக்காகவும் மடால-யங்களுக்காகவும் பெருந்தொகை-களைச் செலவிட்டு, ஏழை எளியவர்-களை ஏறெடுத்தும் பார்க்காமல் இருப்பது ஏன்?

வறண்டநிலத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்கள், மழை இல்லாத காரணத்தால் பட்டினியால் சாகும் நிலை இருக்கும்போது, சர்வ சக்தி படைத்த கடவுள் ஏன் மழை-யைக் கூடத் தராமல், அவர்களைச் சாகடிக்கிறது?

மனித குலம் முழுமைக்குமான தந்தை எனப்படும் கடவுள், ஏன் தனக்கு என தெரிந்தெடுக்கப்பட்ட மக்-களை (சிலீஷீமீஸீ றிமீஷீஜீறீமீ) பொறுக்கி எடுத்து மற்றவர்களை விட அவர்-களுக்கு மட்டும் சலுகை காட்டுவது ஏன்?

திருமண உறவைத் தாண்டி கள்ள உறவு (கிபீறீமீக்ஷீஹ்) வைக்கக்கூடாது எனக் கண்டிக்கும் கடவுள், 700 மனைவி-களையும் 300 வைப்பாட்டிகளையும் வைத்-திருந்த மன்னரை ஆசீர்வதித்து மேலும் வளமாக வாழ்வதற்கு ஏன் அனுமதித்தார்?

கிறித்துவ தேவாலயங்களில் பணி புரிபவர்கள் முழுவதும் ஆண்களாக மட்டுமே இருந்து கொண்டு, பெண்-களைப் பாதிரியாக, பிஷப் ஆக, ஆர்ச் பிஷப் ஆக, கர்டினல் ஆக, போப் ஆக வருவதற்கு ஏன் அனுமதிப்பதில்லை?

ஏசு தன்னைப் பின்பற்றுபவர்-களி-டம் கடைசிக் காலத்தில் உலகம் முழுவதும் சென்று பைபிளில் கூறப்-படும் வேதக் கருத்தை எல்லா உயிர்களிடத்தும் எடுத்துச் செல்லுங்கள்; நான் எப்போதும் உங்களுடனே இருப்பேன் எனக் கூறி-னாராம். அதன் பின்னும், 2 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், இன்றைய தேதிவரை, கோடிக்கணக்கான மக்கள் கிறித்துவ வேதத்தைக் கேட்காமலேயே இருக்கிறார்களே ஏன்? எப்படி?

(கிறித்துவக் கொள்கைகளைப் பின்பற்றாமல் இந்து, இசுலாமிய, பவுத்த, பார்சி, சீக்கிய, யூத மதங்களைப் பின்-பற்றிடும் கோடானுகோடி மக்கள் இருப்பது ஏன்?)

(கட்டுரையாளர் சார்லஸ் டெம்-பிள்டன் 86 ஆண்டுகள் வாழ்ந்து 2001 இல் மறைந்தவர். உலகத்தில் பிரபலமான கிறித்துவ மதப் பிரச்சாரகரான (அண்மையில் பெங்களூரு வந்துபோன) பில்லி கிரகாம் என்பாரின் நண்பர். (மறைந்த டி.ஜி.எஸ்.தினகரன், நம் தமிழர் தலைவரின் நண்பர் என்பது நினைவு கூரத்தக்கது).

- 05.01.10 விடுதலையில் அய்யா சு.அறிவுகரசு தொகுத்து எழுதியது

Tuesday, January 05, 2010

வக்கிரப் புத்தி சோ அய்யர்வாள் கூறும் வழி!


கழகத் தொண்டர் கள் காந்திய வழியில், பெரியார் வலியுறுத்திய வழியில், அண்ணா வழி யில், காமராஜர் விரும்பிய வழியில் செயல்பட வேண் டும்.

- கலைஞர் பேச்சு.

தலைவர் என்ன சொல்-றாரு? காந்திய வழியிலே, நேர்மையைக் கடைப் பிடிச்சி; பெரியார் வழியிலே, பிடிக்காததையெல்லாம் செருப்பால் அடிச்சு உடைச்சுத்-தள்ளி; அண்ணா வழியிலே, காங்கிரசை எதிர்த்து; காமராஜர் வழி-யிலே, கழகத்தைத் தோக்-கடிக்க முயற்சிக்கணும்னு சொல்றாரா? (கலைஞரின் பேச்சுக்கு பேராசிரியர் இப்-படி விளக்கம் சொல்கிறாராம்) (துக்ளக், 30.12.2009, அட்டைப்படம்)

இப்படி வக்கிரப் புத்தி-யோடு சோவைத் தவிர வேறு யாரால் எழுத முடி-யும்?

கலைஞர் சொன்ன காந்தி வழி, பெரியார் வழி, அண்ணா வழி, காமராஜர் வழி எல்லாம் சரிபட்டு வராது, இது சூத்ராள் வழி.

பிராமணாள் வழின்னு ஒண்ணுயிருக்கு! அதுதான் சோ அய்யர்வாள் கூறும் வழி! அதுதான் பேஷான வழி! பிறப்பிலேயே தான்-தான் உயர்ந்தவன். பிரா-மணன் என்று நிரூபிக்கணும்; அது எப்படி?

அடுத்த மனுஷாளைப் பாத்தா கிட்டே வராதேன்னு சொல்லணும் - தீண்டாமை க்ஷேமகர மா னதுன்னு சங்கராச்சாரி யார் சொன் னதை ஏத்துக்கணும்.

தான் நினைத்த காரி யத்தை சாதிக்கணும். அது எப்படி?

தேவநாதனான இந் திரன் முறையில்; (காஞ்சி புரம் தேவநாதன் நினை வுக்கு வருகிறதா? கவுதம முனிவரின் மனைவியான அகலிகையை கவுதம முனி வர் போல வேடந்தாங்கி ஏமாற்றி கற்பழிக்கவில் லையா - அதுபோலவே வழிமுறைகள்பற்றிக் கவலைப்படாமல் காரியம் சாதிச்சுக்கணும்.

தனக்குப் பிடிக்காத வனைத் தீர்த்துக் கட் டணும்; அது எப்படி? இராமன் வழிமுறையில், சூத்திரனான சம்புகனை இராமபிரான் கசாப்புக் காரன்போல வாளால் வெட்டிக் கொன்றது மாதிரி!

அல்லது தனக்குத் திருகுவலி கொடுத்துக் கொண்டிருந்த சங்கர ராமனை ரூபாய் கத்தை களை அள்ளிவிட்டு, ஆள் களை ஏவித் தீர்த்துக் கட்டிய பெரியவாள் மாதிரி.

(தனக்குப் பிடிக்காத-வற்றைப் பெரியார் செருப்-பாலடித்த காரியம்? எல்லாம் இந்தப் படுகொலை, வன்-முறைக்குமுன் எம்மாத்திரம்!)

சில காரியங்களைக் காதும், கண்ணும் வைத்-தாற்போல அனுபவிக்கணும். அது எப்படி? பெரியவாள் செய்து காட்டியுள்ளபடி அதிகாலையிலேயே சீரங் கம் உஷா, அந்திம நேரத் திலே அசோக் நகர் அனு ராதா, அர்த்தராத்திரியிலே ஆந்திராவைச் சேர்ந்த ஜெயா, சொச்ச நேரத்திலே சொர்ணமாலா என்று கைப்பேசியிலே கொஞ்சிக் குலாவி மனக் குரங்கைக் குஷால்படுத்திக் கொண் டால் அப்-படியே ரெஃப்ரஷ் (ஸிமீயீக்ஷீமீலீ) படுத்திக் கொண்ட மாதிரியிருக்கும். ரிலாஸ்க் பத்தி எல்லாம் அவாள் எழுத ஆரம்பித்திருக்கி றார்களே!

அவாளின் இந்த வழி-முறைகள் இவ்வாறு ஏராள-மாக இருக்கும்போது காந்தி வழி, பெரியார் வழி, அண்ணா வழி, காமராஜர் வழி என்றால் சோ கூட்-டத்திற்குப் பிடிக்குமா? 
-விடுதலை (05.01.2009) மயிலாடன்

Monday, January 04, 2010

மார்க்சிஸ்ட் அரசுக்கு ஏற்புடையதா?

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் செல்லும் பருவம் (ஷிமீணீஷீஸீ) தொடங்கப்பட்டு விட்டது. கேரள மாநிலத்தில் உள்ள இக்கோயிலுக்குத் தமிழ்-நாட்டிலிருந்து செல்லும் பக்தர்களே அதிகம். இப்பொழுது இந்த வியாதி இலங்கைவரைக்கும் பரவி அங்கிருந்தும் வரத் தலைப்பட்டுள்ளனர். 400 பேர் கப்பல்மூலம் சென்னைக்கு வந்து இறங்கியுள்ளனர்.

பொங்கலையொட்டி மகர ஜோதி பிரதானமாக பெரிதாகப் பேசப்படும். அய்யப்பன் கோயில் விஷயத்தில் இந்த மகரஜோதி என்பதே மிகப் பிரதானமான ஒன்றாகும்.

ஆனால், இந்த மகரஜோதி உண்மையானதல்ல _ மோசடியானது. கேரள அரசாங்கமே தமது அதி-காரத்தின்கீழ் பணியாற்றும் மின்சாரத் துறை ஊழியர்-களைப் பயன்படுத்தி செயற்கையாகக் காட்டப்படும் தீபம் என்பது கேரளப் பகுத்தறிவாளர்களால் 1973, 1980, 1982 ஆகிய ஆண்டுகளில் நிரூபிக்கப்பட்டு-விட்டது. கேரளப் பகுத்தறிவாளர்களின் இந்தச் செயல்பாடு குறித்து மும்பையிலிருந்து வெளிவந்த பிளிட்ஸ் ஏடு (16.1.1982) படங்களுடன் வெளியிட்டு அம்பலப்படுத்தி விட்டது. இது குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படவேண்டும் என்று கேரள மாநில அரசுக்கு அம்மாநிலப் பகுத்தறிவாளர்கள் ஒரு வேண்டு-கோளை வைத்தனர்; அரசு அசைந்து கொடுக்கவில்லை.

கேரள மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜோசப் எடமருகு கேரள மாநில முதலமைச்சர் ஈ.கே. நயினார் அவர்களைச் சந்தித்துச் சொன்ன-போது, உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்; அதே நேரத்தில் அதனைத் தடை செய்ய முடியாது என்றும் கூறிவிட்டார்.

இப்பொழுது அடுத்தடுத்து பல தரப்புகளிலிருந்தும் உண்மைகள் ஒப்புக்கொள்ளப்பட்டு வெளிச்சத்திற்கு வந்துவிட்டன. தெகல்கா ஆங்கில இதழ் (21.6.2008) சில உண்மைகளை வெளி உலகுக்குக் கொண்டு வந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி மகர விளக்கு தானாகத் தெரியும் என்றனர். சபரிமலைக் கோயிலின் காப்பாளர் பந்தளம் மகாராஜா குடும்பம் இக்குடும்பத்தின் பி. ரவிக்குமார் சொல்லுகிறார்: எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மூன்று தடவை கொளுத்தவேண்டும் என்று கூறி ஆள்களை அனுப்புவார்கள் என்று ஒப்புக்கொண்டார்.

இந்தியா விடுதலை பெற்ற பிறகுதான் காட்டு இலா-காவும், மின்சாரத் துறையும் சேர்ந்து மோசடி-யைத் தொடங்கினர். கற்பூரத்தை மூட்டை மூட்டை-யாகக் கொட்டி கொளுத்தி மகர விளக்கு என்று காட்டுவார்கள். இதற்கான சைகை மாலை 6.30 மணிக்குக் கோயிலிலிருந்து அனுப்பப்படுகிறது.

பொன்னம்பலமேடு, மோசடியை அம்பலப்படுத்-திடப் பகுத்தறிவாளர்கள் முயன்றனர். 1973 இல் 24 பேர்கள் கொல்லத்திலிருந்து பொன்னம்பலமேட்டுக்கு வந்து குறிப்பிட்ட நாளில் பட்டாசுகளை வெடித்து பக்தர்களின் குழப்பத்தைத் தெளிவிக்க முயற்சித்தனர். கைது செய்து வழக்குத் தொடுத்தது கேரள மாநில அரசு. இந்தியக் குற்றச் சட்டப்படி எந்தக் குற்றமும் பகுத்தறிவாளர்கள் செய்யவில்லை என்று வழக்-கினைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

1980 ஆம் ஆண்டிலும் திருச்சூரிலிருந்து பொன்னம்-பலமேடு வந்து வழக்கமான திசைக்கு எதிர்த்-திசையில் விளக்கைக் கொளுத்திக் காட்டி அம்பலப்படுத்தினர் பகுத்தறிவாளர்கள்.

இப்போது அய்யப்பன் கோயில் தலைமைப் பூசாரி கண்டரேறு மகேஸ்வரரு மகர விளக்கை மனிதன்-தான் இயக்குகிறான் என்று ஒப்புக் கொண்டுள்ளார். தேவஸம் போர்டு தலைவர் சி.கே. குப்தனும் இதனை ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதற்கு மேலாக அற-நிலையத்துறை அமைச்சர் ஜி. சுதாகரன் அவர்களும் மோசடி உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டு விட்டார் என்று தெகல்கா வெளியிட்டது.

இதற்குமேலும் என்ன ஆதாரம் வேண்டும் அய்யப்பனின் மகரஜோதி மோசடி என்பதற்கு? மோசடி என்று தெரிந்த பிறகும் ஓர் அரசு இதனை அனுமதிக்கிறது என்றால், அரசே மோசடிக் குற்றத்திற்கு ஆளாகிவிட்டது என்றுதானே பொருள்?

மதம், கடவுள், பக்தி என்ற பெயரால் கண்ணுக்குத் தெரிந்த ஒரு மோசடியை அனுமதிப்பது என்பது மக்கள் மத்தியில் எத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தும்?

சாமியார்களும், அர்ச்சகர்களும் மோசடி வேலை-களில் ஈடுபடுவதும், ஆபாச லீலைகளில் ஈடுபடுவதும் இந்த அடிப்படையில்தானே! காவி கட்டிக்கொண்டு எந்த காலித்தனத்தில் ஈடுபட்டாலும் அரசாங்கமோ, நீதித்துறையோ கிட்டே நெருங்காது என்ற தைரியத்தில்தானே இவ்வளவு அயோக்கியத்தனமான செயல்களில் துணிந்து ஈடுபடுகின்றனர்?

மோசடி என்று தெரிந்திருந்தும் ஒரு அரசு (அது-வும் மார்க்சிஸ்ட் அரசு) இப்படி நடந்துகொள்வது மிகவும் தரந்தாழ்ந்தது; தலைகுனியத் தக்கது _ நிரு-வாகம், சட்டம், நீதியைக் குழிவெட்டிப் புதைப்பதாகும்.

பகுத்தறிவாளர்கள் இந்த நிலையை ஒவ்வொரு மனிதரிடத்திலும் கொண்டு செல்வதை ஒரு கடமை-யாகக் கருதவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

விடுதலை தலையங்கம் (04.1.10)

Sunday, January 03, 2010

புத்தக கண்காட்சி ...திராவிடன் புத்தக நிலையத்தில்
திராவிடன் புத்தக நிலையத்தில் மக்கள் ஆர்வமுடன் பகுத்தறிவு நூல்களை வாங்கும் காட்சி.

துக்ளக் பார்ப்பன வயிறு எப்படி-யெல்லாம் கொதிக்கிறது?


கேள்வி: மாவோயிஸ்ட்களின் போராட்ட வழிமுறை தவறாக இருக்கலாம்; ஆனால் போராட்டத்தின் காரணங்கள் நியாயமானவையே என்கிறாரே டாக்டர் ராமதாஸ்?


பதில்: இந்த மாதிரி வாதம் அனேகமாக எந்த வன்முறைக்குமே பொருந்தும். இப்படி வாதிட்டு, எல்லா வன்முறைகளையும் நியாயப்படுத்திக் கொண்டிருந்தால், அதற்குப்பின் நாட்டில் அமைதி என்பது அர்த்தமற்ற சொல்லாகி விடும்.

(துக்ளக் 23.12.2009 பக்கம் 13,14)

வன்முறைபற்றி துக்ளக் சோ ராமசாமியின் கருத்து இதுதான் என்றால், இதே கண்ணோட்டம் பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள்மீது பாயாதது ஏன்?

பா.ஜ.க.வும் சங்பரிவார்க் கூட்டமும் பாபர் மசூதியைத் திட்டமிட்டு இடித்தன என்று நீதிபதி லிபரான் ஆணையம் சொன்னால், சாட்சிகள் இருக்கின்றனவா? என்று அதே இதழில் தலையங்கம் தீட்டும் சோ ராமசாமிதான் மாவோயிஸ்ட் விஷயத்தில் அந்தர் பல்டி அடிக்கிறார்.

வன்முறையை எதிர்ப்பது போல் நடிக்கும் திருவாளர் சோ மனுதர்மத்தை மாய்ந்து மாய்ந்து பாராட்டி எழுதுவது ஏன்?

அந்த மனுதர்ம சாஸ்திரம் வன்முறையை எதிர்க்கிறதா _ தூண்டுகிறதா?

வர்ணாசிரமபடி சூத்திரன் நடக்கவில்லையென்றால் பிராமணர்கள் ஆயுதம் எடுத்துப் போராட வேண்டும் (அத்தியாயம் 8, சுலோகம் 348) என்றுதானே மனுதர்மம் கூறுகிறது.

சம்பூகன் தவமிருந்தான் என்றுகூறி ராமன் வாளால் வெட்டிக் கொன்றானே _ அது வன்முறையில்லையா?

இந்து மதக் கடவுள்கள் கைகளில் கொலைகார ஆயுதங்களை ஏந்தி நிற்கின்றனவே _ அவை எல்லாம் அகிம்சையின் சின்னங்களா?

இந்துமதக் கடவுள்கள் சண்டை போட்டுள்ளனவே _ கொலை செய்துள்ளனவே _ கற்பழித்துள்ளனவே அவை எல்லாம் எந்த பட்டியலைச் சேர்ந்தவை?

கேள்வி: குஜராத் கலவர வழக்கில் மோடியை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டதே! விசாரணையின் முடிவு எப்படியிருக்கும்?

பதில்: நடந்தவற்றை எடுத்துக்கூற ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இதைச் சரியாகப் பயன்படுத்தி உண்மையை ஊருக்கு உணர்த்துவோம்! என்ற நினைப்புடன், குஜராத் முதல்வர் இதை அணுகினால் நல்ல பயன் இருக்கும். ஆனால் விசாரணைக் கமிஷன் பாரபட்சமாக நடந்து கொண்டால் அது பிரச்சினையாகத்தான் முடியும். (துக்ளக் 12.8.2009)

எவ்வளவு சாமர்த்தியமான பதில்! ஏற்கெனவே உச்சநீதிமன்றம் மோடியின் மண்டை பொத்துக் கொள்ளும் வகையில் ஆழமாகவே குட்டியிருக்கிறது.

நீரோமன்னன் என்றுகூட விமர்சித்திருக்கிறது. மோடி அரசாங்கம் வேண்டுமென்றே கைவிட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களை பேட்டி எடுத்து டெகல்கா ஊடகம் மோடியின் வன்முறைத் தூண்டுதல்களைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. சிறுபான்மையினர்களைக் கொன்று குவிக்க, அவர்களின் உடைமைகளை எல்லாம் தீயிட்டுப் பொசுக்க முதல் அமைச்சர் நரேந்திரமோடி எப்படியெல்லாம் ஆணை வழங்கினார் _ காவல்துறைக்கு என்னென்ன ஆணைகளைப் பிறப்பித்தார் என்பதை வெளிப்படையாகவே பேட்டிகளில் கூறியிருக்கின்றனர்.

2000 சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டது யார் ஆட்சிக் காலத்தில்? மோடி முதல்வராகயிருந்தபோது தானே! அதற்கான தார்மீகப் பொறுப்பு யாரைச் சார்ந்தது? ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் சோ ராமசாமி அய்யர் மோடி விஷயத்தில் மட்டும் முரண்பட்டு மோதிக் கொள்வது ஏன்? அடி மனத்தில் ஆர்.எஸ்.எஸ். நஞ்சு பாய்ந்து இருப்பதால் தானே இப்படியெல்லாம் ஆளுக்குத் தகுந்தாற்போல விமர்சனம்?

பாபர் மசூதியை இடித்தால் அது வன்முறையல்ல; இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தால் அது வன்முறையல்ல; மற்றவர்கள் இதில் ஆயிரத்தில் ஒன்று செய்தால் அய்யய்யோ, அய்யய்யோ வன்முறை! வன்முறை!! என்ற கூச்சல் என்றால், இந்தப் பார்ப்பனத்தனம் _ இந்தப் பூணூல்தனம் பெரியார் சகாப்தத்தில் எடுபடாது _ எடுபடவே எடுபடாது என்று எச்சரிக்கிறோம்.

விசாரணைக் கமிஷன் என்பது இவர்கள் எதிர்பார்க்கிற மாதிரி வந்தால் பாரபட்சமற்ற தன்மை! மோடி அரசின் சட்ட மீறல்களை அது தோலுரித்தால் _ படுகொலைகளுக்குக் காரணம் மோடி அரசுதான் என்று ஆணையம் சொன்னால் _ அது பாரபட்சமாக நடந்து கொண்டதாக அர்த்தம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது பிரச்சினையாக முடியும் என்று அச்சுறுத்துகிறார் அக்கிரகாரவாசி.

ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மப் புத்தி கொண்ட இந்தப் பார்ப்பனர்களை எது கொண்டு சாற்றினாலும் ஜென்மத்தோடு பிறந்த புத்தி சிறிதும் அசைந்து கொடுக்காது. இதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியம் --_ ஆவணம் தேவை?

கேள்வி: அரிசி, பருப்பு, பூண்டு, சமையல் எண்ணெய் என்று எல்லா சமையல் பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறி விட்டதே! கீழ்த்தட்டு மக்களின் நிலைமை என்னவாகும்?

பதில்: அதனால் என்ன? வயிறாரச் சாப்பிட முடியாததால், லிவர் பாதிக்கப்பட்டால் இருக்கவே இருக்கிறது. தமிழக அரசின் உடல் நலப் பாதுகாப்பு இன்ஸுரன்ஸ் திட்டம் அதன்கீழ் சிகிச்சை பெற்று, பிறகு புதிய தெம்புடன் மீண்டும் பட்டினி கிடக்க லாமே!
(துக்ளக் 12.8.2009 பக்கம் 27)

ஏழை எளிய மக்களுக்கு உதவிகரமான இந்தத் திட்டத்தால், இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட குறைந்த கால அளவிலேயே பெரும் பலன் அடைந்துவருகின்றனர். பலன் பெற்ற மக்கள் வாயார மனமார நன்றியுணர்ச்சியுடன் கலைஞர் அரசைப் பாராட்டுகிறார்கள், வாழ்த்துகிறார்கள்.

ஆனால், துக்ளக் பார்ப்பன வயிறு எப்படி-யெல்லாம் கொதிக்கிறது? ஏழை எளிய மக்கள் பயன் அடைந்தால் அவாளுக்குப் பொறுக்குமா?

ஏழை -_ எளிய மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்-றால், அது அவாள் அவாள் தலையெழுத்து, பூர்வ ஜென்ம பலன் என்றல்லவா கை விட்டுவிட வேண்டும்?

அவாளுக்குப் போய் உதவி செய்யலாமா என்கிற பார்ப்பனத்தனம்தானே இங்கே பதைபதைக்கிறது?

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமா? அது தமிழ்நாட்டுக்கு நன்மை விளைவிக்கும் திட்டம்; அது கூடவே கூடாது. ராமன் என்றால் சாதாரணமாய்? விஷ்ணுவின் அவதாரம் ஆயிற்றே அவன் பெயரால் உள்ள பாலத்தை இடிக்கலாமா? அபவாதம், அபவாதம் என்று துடிப்பு!

ஈழத் தமிழர் பிரச்சினையா? ஈழத் தமிழர்களாவது, ஈனத் தமிழர்களாவது. அவர்கள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன? அவர்களுக்கு உதவக் கூடாது, உதவவே கூடாது என்று கூச்சல் போடும் குடுமித்தனம்.

பார்ப்பான் தமிழினத்தின் பரம எதிரி என்பதற்கு இன்னும் எத்தனை எடுத்துக்காட்டுகள் தேவை?

தேவநாதன்களும், திவாரிகளும் பார்ப்பனக் கலாச்-சாரத்துக்குக் கண் எதிரே தெரியும் எடுத்துக்-காட்டுகள்!

அவாளின் ஜெகத் குரு ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் கதையே கூவத்தைவிட குடலைப் பிடுங்கித் தின்கிறது.

அசோக் நகர் அனுராதா, கும்பகோணம் வனஜா, ஆந்திரா ஜெயா, சென்னை சொர்ணமால்யா சிறீரங்கம் உஷா என்று சங்கராச்சாரியாரின் அந்தரங்க உறவுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

தேவநாதன் கோயிலுக்குள் _ கர்ப்பக்கிரகத்துக்குள் சரசக் கடலில் நீந்தினார் என்றால், அவரது குருநாதரான சங்கராச்சாரியாரோ மடத்துக்-குள்ளேயே காலைக் காட்சி, பகல் காட்சி, மேட்னிக் காட்சி, பகல் _ இரவுக் காட்சி என்று புரண்டு எழு-கிறார்.

இந்த யோக்கிய சிகாமணிகள் பேனா எடுத்து சிலம்பம் விளையாட எத்தனித்தால் எதிரடி எரிமலைக் குழம்பாகவே இருக்கும், எச்சரிக்கை!

- விடுதலை மின்சாரம் (02-01-2010)

Saturday, January 02, 2010

எங்கள் சாமி எவ்வளவு சக்தி வாய்ந்த சாமி பார்த்தீரா

1.வைணவர்களின் புண்ணியதலமான திருவரங்கத்தில் வாழ்ந்த தீவிர வைணவர் ஒருவர் இயற்கை கடன் கழிபதற்க்கு ,அருகில் உள்ள சைவர்களின் புண்ணிய தளமான திருவானைக்கா கோவில் மதிற்சுவரின் அமர்வது வழக்கம் .இதன் மூலம் சைவ சமயத்தை பழி தீர்ப்பதாக அவர் எண்ணினார்.ஒரு நாள் வழக்கம் போல் மதிற்சுவரின் அருகில் அவர் இயற்கை கடன் கழித்து கொண்டிருந்த போது தலையில் ஒரு சிறு கல் வேகமாக வந்து தாக்கியது .வலியுடனும் கோபத்துடனும் அவர் அண்ணார்ந்து பார்த்தார்.கோவி மதிற்சுவரை காக்கை ஒன்று காலால் பிராண்டி கொண்டிருந்தது கண்ணில் பட்டது .உடனே வழியை மறந்து ''அப்படி இடி மதிலை ' என்றாராம்.


2.சைவரும் வைணவரும் ஒன்ற இயற்கை கடன் கழிப்பதற்க்காக ஊருக்கு வெளியே சென்றார்கள்.ஒரு குறிப்பிட இடத்தில சைவர் உட்கார முயன்ற போது ,வைணவர் அதை தடுத்து வேறு பகுதிக்கு இழுத்து சென்றார்.இதற்க்கான காரணத்தை சைவர் கேட்டபோது தனது பெருமாள் சாமிக்குரிய துளசி செடி மிகுதியாக வளர்ந்திருப்பதால் அப்பகுதியை தாம் அசுத்தமாக்க விரும்பவில்லை என்றார்."அப்படியா " என்று கூறிய சைவர் துளசி செடியால் தன் ஆசன வாயை துடைத்து கொண்டார்.வைணவருக்கு ஒரே ஆத்திரம். ஆனால் அதை வெளிக்காட்டாமல் 'ஒங்க சாமிக்கு எந்த செடி பிடிக்கும் ' என்று கேட்டார் .சைவர் ஒரு குறிப்பிட்ட பகுதியை காட்டி அங்கு வளர்ந்துள்ள செடி சிவபெருமானுக்கு உகந்த செடி என்றார்.உடனே வைணவர் அதை அவசரமாக பிடுங்கி சைவர் துளசி செடியை பயன் படுத்தியது போல் பயன் படுத்தினர்.ஆத்திரம் மிகுதியா சற்று அழுத்தமாகவே தேய்த்தார் .சில நிமிடங்களில் வேதனை தாங்க முடியாமல் குய்யோ முறையோ கத்தினார்.பாவம்! சைவர் காட்டிய செடி "'செந்தட்டி' (காஞ்சிரங்காய் ) செடியாகும்.(இதை காஞ்சிராணி என்றும் கிராமங்களில் கூறுவார்).சைவரோ 'எங்கள் சாமி எவ்வளவு சக்தி வாய்ந்த சாமி பார்த்தீரா'என்று கூறி நமட்டு சிரிப்பு சிறிது கொண்டார்.

இக்கதைகளில் இடம் பெற்றுள்ள சமய வெறி கொண்ட சைவ வைணவர்களை போன்று கிருத்தவ,இஸ்லாமிய சமயங்களிலும் சமய வெறி கொண்டவர்கள் உண்டு.இத்தகைய மட்டு மீறிய உணர்வு உடையவர்கள் பிற சமயத்தினருடன் இணக்கமாக வாழ முடியாதென்றாலும் மிகபெரிய அளவில் வகுப்பு மோதல்களை தோற்று விப்பதில்லை.அதே நேரத்தில் இவர்களை மிக எளிதில் வகுப்பு வாதிகளாக மாற்ற முடியும்.இதனால்தான் மத அடிப்படை வாத இயக்கங்கள் முதலில் தீவிரமான சமய உணர்வை தூண்டி விடுகின்றன.

வகுப்புவாத அதிகாரத்துக்கான ஒரு கருவி என்று பார்பவர்கள் சமயங்களை பின்பற்றுவோரிடையே பகை உணர்வை உருவாக்கி ,வளர்த்து வகுப்பு மோதல்களுக்கு வித்திடுகின்றன.கே.எம்.பணிக்கர் குறிபிடுவது போல் இத்தகையவர்களுக்கு,வகுப்பு வாதம் என்பது அடிபடியில் ஆட்சியை பிடிபதற்க்கான ஒரு தந்திரமேயாகும்.

இத் தந்திரத்தின் வெளிப்பாடகவே பிள்ளையார் ஊர்வலம் தமிழ் நாட்டில் அறிமுகப்படுதபட்டுள்ளது.

- பிள்ளையார் அரசியல் என்ற நூலில் இருந்து.....

Friday, January 01, 2010

தந்தை பெரியார் மதித்ததும், போற்றியதும் மானுடம்.ஒரு பகுத்தறிவாளன் என்கிற எனக்கு மதப் பற்றோ, கடவுள் பற்றோ, இலக்கியப் பற்றோ, மொழிப்பற்றோ எதுவும் கிடையாது. அறிவிற்கு ஏற்றது, மக்களுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளர்ச்சி அடையச் செய்வது எதுவோ அதைப் பற்றியே பேசுவேன். (விடுதலை,- 20.4.1965)

என்கிறார் தந்தை பெரியார். மனிதப் பற்றுதான் தந்தை பெரியாருக்கு உரிய-தாகும். மானுடத்தைத் தந்தை பெரியார் மதித்ததும், போற்றியதும் மானுடம் தந்தை பெரியாரைப் போற்றியதும் இந்தத் தன்மையில்தான்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்-டாளி, கூலி, ஏழை மக்கள்தான் எனக்-குக் கண் வலியாய் இருப்பவர்கள். அவர்களைச் சம மனிதர்களாக ஆக்குவதுதான் என் கண்ணோய்க்குப் பரிகாரம்) (விடுதலை,- 15.10.1967)

பிறவியிலேயே பெரும்பான்மை மக்கள், பிறவித் தொழிலாளர்களாக இருக்கிறார்களே என்பதை எண்ணி-னால் எனக்கு ரத்தக் கொதிப்பாக இருக்கிறது என்றும் செல்லுகிறார்.

தன் உடலுக்கு ஏற்பட்டுள்ள உபா-தைகளை நோய் என்று கருதவில்லை அந்த மானுடத் தந்தை; மாறாக குறிப்பிடத்தக்க மக்கள் பகுதியினருக்கு இழைக்கப்பட்டுள்ள தீங்குகளை, உரிமை மறுப்புகளைக் கண்டு கொதிக்கிறார். அந்தத் தீங்குகளை அகற்றி, சமத்துவம் உள்ளவர்களாக மாற்றி அமைப்பதைத்தான் தனது தொண்டறமாகக் கருதுகிறார்.

மனிதன் தானாகப் பிறக்கவில்லை. எனவே தனக்காக வாழக் கூடாதவன் என்னும் அவரின் கூற்றிலே பொதிந்து கிடக்கும் மானுடப்பற்று மகத்தானது.

மானிடத்தின் சமத்துவத்துக்காகத்-தான் தந்தை பெரியார் கடவுள் முதல், ஜாதி, மத, கோத்திரங்கள் வரைக் கடுமையாக எதிர்த்தார்.

1927 குடிஅரசு மே முதல் தேதி இதழில் தந்தை பெரியார் கூறியதைப் படிக்கும் தொறும் படிக்கும் தொறும் மிகவும் மலைப்பாக இருக்கிறது. இதோ அந்த எழுத்துகள்.

பொதுவாக நமது பிரசங்கத்தினா-லும், குடிஅரசுவினாலும் நான் செய்து வந்த பிரச்சாரத்தில் அரசியல் இயக்-கங்கள் என்பவற்றைக் கண்டித்தேன். மதம் என்பதைக் கண்டித்தேன். மதத் தலைவர்கள் என்பவர்களைக் கண்-டித்தேன். மதச் சடங்கு என்பவற்றைக் கண்டித்திருக்கின்றேன். வேதம்என்று சொல்லுவதைக் கண்டித்திருக்கின்றேன். சாத்திரம் என்பதைக் கண்டித்திருக்கின்-றேன். புராணம் என்பதைக் கண்டித்-திருக்கின்றேன். ஜாதி என்பதனைக் கண்டித்திருக்கின்றேன். அரசாங்கம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். உத்தியோகம் என்பதைக் கண்டித்திருக்-கின்றேன். நியாயாதிபதி என்பவர்-களைக் கண்டித்திருக்கின்றேன். நீதி ஸ்தலம் என்பதைக் கண்டித்திருக்கின்-றேன். ஜனப் பிரநிதித்துவம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். தேர்தல் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். கல்வி என்பதைக் கண்டித்திருக்கின்-றேன். சுயராச்சியம் என்பதைக் கண்-டித்திருக்கின்றேன். ஒரே துறையில் வேலை செய்து வந்த நண்பர்களைக் கண்டித்திருக்கின்றேன். இன்னும் என்-னென்னவற்றையோ,- யார் யாரையோ கண்டித்திருக்கின்றேன். கோபம் வரும்படி வைதும் இருக்கின்றேன்.

எதைக் கண்டித்திருக்கின்றேன் ; எதைக் கண்டிக்கவில்லை என்பது எனக்கு ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கிறது. இன்னமும் ஏதாவது எழுத-லாமென்று பேனாவை எடுத்தாலும், பேசலாமென்று வாயைத் திறந்தாலும் கண்டிக்கவும் - வையவும்_- துக்கப்பட-வுமான நிலைமை ஏற்படுகிறதே ஒழிய வேறில்லை. கண்டிக்கத் தகாத இயக்கமோ, திட்டமோ, அபிப்-பிரா-யமோ என் கண்களுக்குப்படமாட்டேன் என்கிறது என்கிறார். விரக்தியின் மேலீட்டால் தந்தை பெரியார் இப்படி எழுதவில்லை. மானுடத்தின் நேர்த்திக்-காக, சமத்துவத்துக்காக, ஏற்றத் தாழ்வு-களைத் தரை மட்டம் ஆக்குவதற்காக, மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கும் பெண்களின் உரிமைக்காகப் போராடும்போது, தொண்டாற்றும்போது யாரெல்லாம் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் என்பதை ஒரு வகையில் பட்டியலிட்டுக் காட்டுகிறார் என்றே கருதவேண்டும். இவர்களை, இவைகளை எதிர்த்துத்தான் தீர-வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்.

ஒரே ஒரு எடுத்துக்காட்டு: சிதம்-பரத்தில் சகஜானந்தாவின் பள்ளியில் ஆண்டு விழா. அதற்குப் பெரியார் அழைக்கப்பட்டார். அந்தப் பள்ளி நிருவாகிகளுக்கும், உள்ளூர் சனாதனி-களுக்கும் பகைமை உண்டு. அதுவும் பெரியார் வருகிறார் என்றவுடன் அது பல மடங்காகப் பெருகியது. பெரியார் வந்தால் கலகம் செய்வது - தாக்குவது என்று முடிவு. அடியாட்கள் தயாரிக்-கப்பட்டனர். கையில் ஆயுதங்களுடன் கூடினர். பெரியார் ரயிலில் வர இருந்-தார். அந்த நிகழ்ச்சிக்குப் போயிருந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நிலை-மைகளை நேரில் பார்த்து அறிந்தார். பெரியாரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் செய்வதே நல்லது என்று முடிவு செய்து, ரயில்வண்டி நிலை-யத்துக்கு விரைந்தார்.

அங்கு என்ன நடந்தது? அதைப் புரட்சிக் கவிஞரின் வாயாலேயே கேட்போம்.

பெரியார் வண்டியில் வந்திறங்-கினார். அங்குள்ள நிலைமையைக் கூறினோம். கேட்டுக் கொண்டே விடுவிடு என்று ஊருக்குப் போனார். போக வேண்டாம் ஆபத்து, ஆபத்து என்று கூறக் கூறக் கேட்டுக் கொண்டே போனார். எந்த வழியில் போகக் கூடாது என்று நினைத்தோமோ அந்த வழியிலேயே போனார். போய் டக் என்று நின்றார். அதுவும் எந்த இடம்? எந்த இடத்தில் நிற்கக்கூடாது என்று பயந்தோமோ, அதேஇடம்! காலிகளின் கூட்டம் எதிர்ப்பை ஆரம்பித்து விட்டது. காலிகளின் ஆயுதம் தாங்கிய கரங்கள் உயர்ந்து விட்டன. இன்று என்ன செய்யப்போகிறோம்? என்று எங்கள் கூட்டில் உயிர் இல்லை.

இந்த நிலையில் பேசவும் ஆரம்-பித்துவிட்டார் பெரியார். எப்படிப்பட்ட பேச்சு? பாமரர் முதல் அனைவருக்கும் புரியும் முறையில் அழகாக உள்ளம் கவரும் விதத்தில்
பேசினார்.

உங்கள் பையன் ஒருவன் படித்திருக்-கிறான், உயர்சாதிப் பையன் ஒருவன் படித்திருக்கிறான். நீங்கள் என்ன விரும்புவீர்கள்? உங்கள் பையனுக்கு வேலை கிடைக்க வேண்டுமென்று-தானே? ஆனால் இன்றைய ஆதிக்க நிலையில் யாருக்குக் கிடைக்கும்?-இதைத்தானே நான் கூறுகிறேன் என்று ஆரம்பித்தார். அவர்கள் மத்தியிலே கருத்து மழை பொழிந்தார். அந்த நேரத்தில் அந்தக் கூட்டம் பெரியார் எதைச் சொன்னாலும் அதைச் செய்யத் துடித்தது; எதிரிகள் மீதுஅதை எளிதாகத் திருப்பி விட்டிருக்கவும் முடியும். அதைப் பெரியார் செய்ய-வில்லை. சாகடிக்கப்படவிருந்த பெரியார், சாவடிக்க வந்தவர்களையே கருத்தால் மாற்றிவிட்டார் என்று புரட்சிக்கவிஞர் கூறுகிறார்.

மக்களுக்குத் தொண்டாற்றுவது, அதுவும் சமூகப் புரட்சியை மேற்-கொள்வது என்பது உயிரைப் பணயம் வைப்பதாகும். இத்தகைய தொண்-டைத்தான் தந்தை பெரியார் செய்தார்.

தந்தை பெரியார் மானுடக் குடும்-பத்தில் தனித் தன்மையானவர், தனி வழி காட்டிய தத்துவ ஒளி விளக்கு!

வழக்கத்தால், செக்கு சுற்றி வந்த மந்தையில் தனிப்பாதையைக் காட்டி தலைகளைத் தூக்க வைத்து, முதுகு எலும்புகளை நிமிர வைத்து, கண்-களைத் திறந்து வைத்து, கால்களுக்கு வலுவூட்டி, மூளை இயந்திரத்தை முடுக்கிவிட்டு கைநீட்டிக் கம்பீரமாக நடக்க வைத்த தன்மான- பகுத்தறிவு மூலிகைத் தோட்டம் அவர்.

அவர்களின் ஒவ்வொரு எழுத்-திலும், சொல்லிலும், அசைவு இயக்-கத்திலும் பகுத்தறிவு மணம் இருக்கும்! தன்மான வெடி இருக்கும்; மனித நேயத் தேன் சுரக்கும்; மனித உரிமைப் பாளை வெடிக்கும்!

அதிர்ச்சி தருகிறதே - ஆபத்தாக முடியுமோ? திடுக்கிட வைப்பதாக இருக்கிறதே - தீங்கு விளையுமோ? நம்பிக்கைகளைத் தகர்க்கப் பார்க்கிறதே - நாசம் விளையுமோ? - என்றுதான் அவரின் புரட்சிக் கருத்துகளை, புதுமை முழக்கங்களைக் கேட்டவர்கள், படித்தவர்கள் அதிர்ந்து போவார்கள். ஆனால் அவையனைத்தும் மானு-டத்தை வாழ வைக்கும் மீட்சிப் படகுகள், முன்னே கசந்து பின்னே இனிக்கும் முது நெல்லிக் கனிகள் என்பதைப் பின்னர் உணர்ந்தனர். வசை-பாடிய வாய்கள் வாழ்க முழக்க-மிட்டன. வாழ்விக்க வந்த தந்தையே என்று வாழ்த்துப் பாடின! கற்களைத் தூக்கியடித்த கரங்கள் கனத்த மாலை-களைத் தூக்கி வந்து அந்த மனித குலச் சிற்பிக்குச் சூட்டி மகிழ்ச்சியில் திளைத்தன!

ஆனால் தந்தை பெரியார் அவற்றை எல்லாம் எப்படிப் பார்த்-தார்? ஆண்டு முழுவதும் அய்யா அவர்களுக்குப் பிறந்த நாள் விழா நடக்கும். இந்த அதிசயம் அய்யா அவர்களுக்கு மட்டும்தான் தமிழ் நாட்டில். ஏராளமான பரிசுப் பொருள்-களைக் கொண்டு வந்து குவிப்பார்கள். அவற்றை எல்லாம் பெற்றுக் கொண்ட அறிவுத் தந்தை கூறுவார் :

இவ்வளவு பரிசுப் பொருள்களை எனக்குக் கொடுத்தீர்கள். இதே ஊரில் இதே இடத்தில் 50, 60 ஆண்டு-களுக்கு முன் வந்து பேசி இருக்கி-றேன். அப்பொழுதெல்லாம் கடும் எதிர்ப்பு! கற்களை வீசுவார்கள்; பன்றிகளை, பாம்புகளைக் கூட்டத்தில் விட்டுப் பொது மக்களைக் கலைப்-பார்கள். இப்பொழுது அதே ஊருக்கு அதே மனிதனாகிய நான் வந்திருக்-கிறேன். அதே மனிதருக்கு இவ்வளவு வரவேற்பு - அன்பளிப்பு என்றால் என்-னவோ நம்ப முடியவில்லை. நான் ஏதாவது மாறிவிட்டேனா? கொள்-கையில் பல்டி அடித்துவிட்டோனா? அல்லது பொது மக்களாகிய நீங்கள்தான் மாறிவிட்டீர்களா? என்று யோசித்துப் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை என் கொள்கையில் மேலும் மேலும் தீவிரத் தன்மை கொண்டுதான் பணியாற்றி வந்திருக்-கின்-றேன். எதிலும் நான் பின் வாங்கி-விடவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

உங்களிடம்தான் மாறுதல் வந்திருப்ப-தாகக் கருதுகிறேன். உங்களை அன்று அழுகிய முட்டைகளைக் கொண்டு வீசிய நாங்கள் இப்பொழுது திருந்தி-விட்டோம். எங்களுக்குப் புத்தி வந்து-விட்டது என்று காட்டிக் கொள்-வதற்-காகத்தான் இந்தப் பரிசுகளை எனக்கு அளிக்கிறீர்கள் என்று கூறுவார்.

தனக்குப் பரிசுகளை அள்ளிக் குவித்த பொது மக்களைப் பார்த்து இப்படிக் கூறும் துணிவு நாட்டில் எவருக்கு வரும்?

தந்தை பெரியாருக்கு அப்போது 40 ஆவது வயது. நாக்கில் புற்றுநோய் ஏற்-பட்டது. தந்தை பெரியார் மருத்துவராகிய டாக்டர் பி.எம்.சுந்தரவதனத்திடம் காட்-டினார். அட சனியனே, உங்களுக்கா இது வரவேண்டும், என்று கூறி சம்-பந்தப்பட்ட மருத்துவரிடம் அனுப்பி வைத்-தார். அந்த நோயும் குணப்படுத்-தப்பட்டது. இதைப் பற்றி தந்தை பெரியார் கூறுவதுதான் முக்கியம்.

நான் கவலைப்பட்டது நாக்கில் புற்று நோய் வந்ததால் சாகப் போகிறோம் என்றல்ல! இந்தப் பாவி கடவுளை, மதத்தைத் திட்டினான், அதனால்தான் நாக்கில் புற்று வந்து செத்தான் என்று என் கருத்துக்கு எதிர்ப்பானவர்கள் அவதூறு பரப்பிவிடுவார்களே. . . அதனால் நமக்குப் பின்னும்இந்த வேலைக்கு எவனும்துணிந்து வரமாட்-டானே - என்ற கவலைதான் எனக்கு என்று பெரியார் கூறுகிறார்.

தனக்கு நோய் வந்தது என்பதை விட, அதனால் கொள்கைக்குக் குந்தகம் ஏற்பட்டுவிடுமோ என்கிற நோக்கும் சிந்தனையும்தான் அவர்களுக்கு! பொதுவாக நோய் வயப்படும் மனிதன் பலகீனமடைவான். ஆனால் அந்த நேரத்திலும் கொள்கைக்கு முன்னிடம் கொடுத்துச் சிந்தித்த மன உறுதிக்குப் பெயர்தான் பெரியார். அந்த நோயை வென்று காட்டியதன் வாயிலாகவும் தந்தை பெரியார் தமக்கு எதிர்ப்பான சக்திகளை முறியடித்து விட்டார்!

அதனால்தான் உடலால் அவர் மறைந்திருந்தாலும் அன்றாடம் பெரியார் பேசப்படுகிறார், போற்றப்படுகிறார்.

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஆம், அவர் மண்டைச் சுரப்பான சிந்தனைகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய அவர் வழி வந்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீமணி அவர்கள் பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் சிகாகோ நகரைத் தலைமை யிடமாகக் கொண்டு பெரியார் பன்னாட்டு மய்யம் உருவாக்கப்பட்டுள்-ளது. லண்டன், பிரான்சு, சிங்கப்பூர், மியான்மா நாடுகளில் எல்லாம் இவைகளைப் பரப்பி செயல்பட்டு வருகிறார்.

சோதனைக் குழாய்க் குழந்தையைப் பற்றி 1938 ஆம் ஆண்டிலேயே தொலை நோக்குப் பார்வையோடு கூறியவரும் அவரே!

அந்த இனி வரும் உலகம் என்ற நூல் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்-கப்பட்டு, பாரிசில் வெளி-யிடப்பட்டுள்ளது. டெல்லியில் பெரியார் மய்யம் - பெரியார் அறக்கட்டளையின் சார்-பில் எழுப்பப்-பட்டுள்ளது. உலகம் முழு-வதும் பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவனின் கருத்துக் கதிர்களை ஊடுருவச் செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

பெரியார் காணும் உலகைக் காண்போம்! வாழ்க பெரியார்!

கவிஞர் கலி.பூங்குன்றன் தந்தை பெரியார் நினைவு நாளான (24.12.2009) அன்று நிகழ்த்திய வானொலி நிலைய உரை

இந்து மதத் தத்துவங்கள் படிப்பவனைக் குழப்பும்...

இந்து மதத் தத்துவங்கள் என்பவை-யெல்லாம் படிப்பவனைக் குழப்பும். எதுவும் தெளிவாக இருக்காது. இந்து மதம் மிகவும் ஆழமாக வலியுறுத்தும் ஆத்மா என்பதற்கான விளக்கங்களைப் பார்த்தால் கற்றாழைச் சாற்றை விளக்கெண்ணெயோடு சேர்த்து அதில் கிரீஸ் போட்டுக் கலக்கினாற் போன்று இருக்கும்.


கேண உபநிசத் கூறுவது போல் இதற்குப் பிறப்புமில்லை, இறப்புமில்லை. எங்கிருந்தும் வரவில்லை, வேறு ஒன்-றாக மாறவில்லை. ஆதிக்கும் முதலான ஆத்மா உடல் அழியும்போது கூடவே அழிவதில்லை என்கிறது. செத்துப் போன-வனின் ஆத்மா வேறொன்றின் உடலுக்குள் புகுந்து கொள்கிறது என்கிறார்களே, அப்படியானால் அந்தப் புது ஆளைப் பொறுத்த மட்டில் ஆத்மா எங்கிருந்தோ வந்ததுதானே! இந்த உண்மைக்கு மாறாக, கேணத்தனமாக கேண உபநிசத் கூறுகிறதே! ஆத்மாவிலிருந்து விண்வெளி தோன்றியது. விண்வெளியிலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து புவியும், புவியிலிருந்து செடி இனமும், செடி இனத்தில் இருந்து உணவுப் பொருளும், உணவுப் பொருள்களி-லிருந்து விந்தும், விந்திலிருந்து மானிட இனமும் தோன்றின என்கிறது தைத்ரிய உபநிசத். உலகமும், உயிர்-களும் எவ்வளவு எளிதாகத் தோன்-றின என்பதை விவரித்துவிட்டது பாருங்கள்! உயிர்கள் தோற்றம் பற்றி உலகத்தின் பாதிப் பகுதியை ஆறு ஆண்டுகள் சுற்றி ஆராய்ந்து அறிவித்தார் டார்வின். இவன் சுலபமாக எல்லாம் வானத்திலிருந்து வந்தவை எனக் கூறிவிட்டான்.

அதனால்தான் சார்வாகர்கள் வானத்தை விலக்கி நான்கு தனிமங்கள் மட்டுமே உள்ளன எனக் கூறினரோ?

யாகத்தில் சாதுவான விலங்கு-களைப் பலியாகத் தருவது இந்து மதப் பழக்கம். குதிரை, பசு, காளை, ஆடு போன்றவை மனித குலத்துக்குப் பயன்படும் விலங்குகள். ஆண்டவ-னைத் திருப்தி செய்கிறேன் எனக்-கூறிக் கொண்டு இவற்றை யாக நெருப்பில் வெட்டிப் போட்டு வதக்கிப் பார்ப்பனர்கள் தின்றனர். உயிர்ப் பலி கூடாது என்று தடுத்தவர்களைச் சமாளிப்பதற்கு பார்ப்பனர்கள் சொன்ன சமாதானம் என்னவென்றால், யாகத்தில் பலி கொடுக்கப்பட்ட விலங்குகள் மோட்சம் (சொர்க்கம்) போகின்றன என்-றனர். சொர்க்க லோக வாழ்வு அவ்-வளவு சுலபத்தில் கிடைக்கக்கூடியதா? எவ்வளவோ உழைத்தாலும், தியாகங்-கள் செய்தாலும், இறப்புக்குப் பின் சொர்க்கம் கிடைக்கும் என்பதற்கு உத்-தர-வாதம் இல்லை. நரகம் கிடைத்து-விடலாம்.

ஆனால், யாகத்தில் பலியிடப்படும் விலங்குகளுக்கு உறுதியாகச் சொர்க்க லோகம் கிடைக்கும். அதைத் தடுக்க-லாமோ என்று சமாளித்துச் சாப்பிட்-டனர் பார்ப்பனர்கள்.

உலக வரலாற்றில் மலிந்திருந்த பல மூட நம்பிக்கைகளில் பலி தருவது ஒரு பெரும் மூட நம்பிக்கை ஆகும். செய்துவிட்ட தவறுக்குப் பரிகாரம் பலி தருவது என்று வலியுறுத்தப்பட்டது. நல்ல விளைச்சல் இல்லையா? மன்-னனின் தவறான ஆட்சிதான் கார-ணம், ஆகவே மன்னனை வெட்டிப் பலி கொடு! என்றெல்லாம் நம்பிக்-கைகள் விதைக்கப் பட்டு மன்னர்களே கூட பலியிடப்பட்டனர். அத்தகைய வலிமை புரோகித வர்க்கத்துக்கு உண்டு.

புத்திசாலியான மன்னர்கள் தாங்கள் பலி இடப்படுவதற்குப் பதிலாக வேறு ஆளை நியமனம் செய்து பலி-யிடுவது நடந்துள்ளது. இப்படிப்பட்ட பதிலிகள் பெரும்பாலும் சிறையில் வாடும் போர்க் கைதிகளாகவே இருந்-தனர். சண்டையில் சாகாமல் தப்பிப் பிழைத்தவர்களைப் பலிகடாக்களாக ஆக்கி விட்டனர்.

பலி கொடுக்கப்பட்ட விலங்கு, சொர்க்கம் போகிறது என்பது உண்-மையானால், உன் தந்தையைப் பலி கொடேன், அவர் நிச்சயம் சொர்க்கம் போவார் அல்லவா? என்று கேட்டு மடக்கினர் சார்வாகர்கள்!

தம் அடிமடியில் கை வைக்கி-றார்-கள் என்றவுடன் பார்ப்பனர்கள் சார்வாகத்தையே ஒழித்து விட்டனர்!

ஆவிகள் (Spirits) உண்டு என்கிற மூட நம்பிக்கை பல மதங்களிலும் குடி கொண்டிருக்கிறது. கிறித்துவப் பிரச்சாரகர்கள், அஞ்ஞானிகளே, நீங்கள் கெட்ட ஆவியின் பிடியில் இருந்து விடுவிக்கப்படவேண்டும்; நான் அதற்காக ஜெபிக்கிறேன் என்றுதான் ஆரம்பிக்கிறார்கள்.

பலவிதமான ஆவிகளை இதற்காக இவர்கள் கற்பித்து உலவவிட்டிருக்-கிறார்கள். சாவு நிகழப் போகிறது என்பதை அறிந்து ஓலமிடும் ஆவி, இதே காரியத்தைச் செய்யும் நாய் வடிவப் பேய், தூங்குபவனை படுக்கையில் அமுக்கி அச்சுறுத்தும் ஆவி, தூங்கிக் கொண்டிருக்கும் ஆணுடன் உடல் உறவு கொள்ளும் பெண் பேய், செத்துப் போனவர்கள் உலவும் ஆவி போன்று பல ஆவிகளை உலவ விட்டிருக்-கிறார்கள்.

ஒரு பெண் ஆவி, குளம் குட்டை-களில் இருக்குமாம். ஆண்களுடன் கூடிக் கலவி செய்து குழந்தை பெற்றுத் தருவதன் மூலம் ஓர் ஆன்மாவை அடையுமாம் அந்த ஆவி. இந்த மூட நம்பிக்கையின்அடிப்படையில் ஓர் ஆங்கில சினிமா கூட எடுக்கப்பட்-டுள்ளது. அந்த ஆவி அன்டைன் (Undine) எனப்படுகிறது.

ஸ்காட்லாந்து நாட்டு ஆவி, நீரில் மூழ்குபவரைக் காப்பாற்றுவதற்காகக் குதிரை உருக்கொண்டு வருமாம். இதனை கெல்பி (Kelpie) என்கிறார்கள்.

ஜெர்மனி நாட்டின் குறும்புக்கார ஆவி, புராதன வீடுகளில் குடிகொண்டு எதையாவது விசமமாகச் செய்து கொண்டு இருக்கும். இதற்கு கோபோல்டு (Kobold) என்று பெயர் வைத்திருக்-கிறார்கள்.

ரோமாபுரியினரின் வீடுகள் ஒவ்-வொன்-றிலும் ஆவி உண்டாம். அவை லார் (லிணீக்ஷீ) எனப்படும். அந்தக் குடும்-பத்தின் இறந்து போனவர்களில் நல்லவர்கள் இந்த வகை ஆவியாகிக் குடும்பத்தவர்க்கு நன்மை செய்வார்-களாம்.

ஆவி, எத்தனை ஆவியடா!

விடுதலை (1.1.2010)

Tamil 10 top sites [www.tamil10 .com ]