வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, January 24, 2010

திரு. ராஜகோபாலாச்-சாரியாருக்கு ஜனநாயகம் ஏது? வெட்கம் ஏது?

இதே நாளில்தான் 1954இல் ஈரோட்டில் ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்பு மாநாடு நடை-பெற்றது. மிகப் பெரிய ஊர்வலமும் நடைபெற்-றது. மாநாட்டுத் தலைவர் எஸ்.ஜி. மணவாளராமானு-ஜம்_ திறப்பாளர் தினத்-தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்-தனார் -_ மாநாட்டை தந்தை பெரியார் கூட்டினார் -_ திரா-விடர் கழகம் நடத்-தியது.


மாநாட்டைத் திறந்து வைத்த சி.பா. ஆதித்த-னார் புள்ளி விவரங்களுடன் அரிய கருத்துகளை எடுத்து வைத்தார்.

சில தகவல்களையும் எடுத்துக் காட்டினார்.

தமிழ்நாட்டில் ஆண் குழந்தைகள் பாதிப்பேர்-களுக்கு மேல் பள்ளிக்-கூடம் போகாமல் இருக்-கிறார்கள் என்பதும் பெண் குழந்தைகளில் 100-க்கு 70 பேர் பள்ளிக்கூடம் போகாமல் இருக்கிறார்கள்.***

சென்னை சட்டசபை-யில் 29.7.53_இல் இந்தக் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டு-மென்று தீர்மானம் வந்த-போது தீர்மானத்துக்கு ஆதரவாக 139 பேர்-க-ளும், திரு. ராஜ-கோபாலச்-சாரியாருக்கு ஆதரவாக 137 பேர்களும் வோட்டு செய்தார்கள். ஆகவே ராஜகோபாலாச்சாரியாரின் உயிர் நாடி போன்ற கல்வி திட்டம் நிறுத்தி வைக்கப்பட வேண்டு-மென்று சட்டசபை கட்டளையிட்டது. வேறு ஒரு முதலமைச்சராக இருந்தால் உடனே பத-வியை ராஜினாமா செய்-திருப்பார்கள். அதுதான் நேர்மை; அதுதான் ஜன-நாயகம், ஆனால் கவர்-னரின் தயவினால் நிய-மனம் என்ற புழக்கடை வழியாக சட்டசபைக்கு வந்த திரு. ராஜகோபாலாச்-சாரியாருக்கு ஜனநாயகம் ஏது? வெட்கம் ஏது? சுரணை ஏது? என்று மிக அருமையாக ஆச்சாரி-யாரை அடையாளம் காட்டினார் ஆதித்தனார் அம்மாநாட்டில். காங்கேயத்தில் இடைத் தேர்தல் வந்தது. இந்தக் குலக் கல்வித் திட்டம் மக்கள் முன் வைக்கப்பட்-டது. மக்கள் காங்கிரசைத் தோற்கடித்தார்கள். அப்-பொழுதும்கூட ஆச்சாரி-யார் பதவி விலகவில்லை.

மூன்று மாதங்களுக்-குள் குலக் கல்வித் திட்-டத்தை லாபஸ் வாங்கா-விட்டால் தீவிர நட-வடிக்கை என்று ஈரோடு மாநாடு அறைகூவல் விடுத்தது.

தாக்குப்பிடிக்க முடிய-வில்லை ஆச்சாரியாரால்; பதவியை விட்டே ஓடி-னார். இல்லை விரட்டப்-பட்டார்!

அரை நேரம் பள்ளி-யில் படிக்க வேண்டும்; அரை நேரம் அப்பன் தொழிலைப் பிள்ளைகள் செய்ய வேண்டும் என்ற அந்தக் குலக் கல்வித் திட்டம் தொடர்ந்திருந்தால், பார்ப்பனர் அல்லாத பிள்ளைகள் கல்வியில் வளர்ச்சி பெற்று இருப்-பார்களா? இன்றைக்குப் பதவியில் அட்டாணிக் கால் போட்டு அமர்ந்தி-ருக்-கும் தமிழர்கள் கொஞ்சம் நன்றி உணர்ச்சியுடன் சிந்திப்பார்களாக!

-விடுதலை (24.1.2010) மயிலாடன்

4 comments:

கபிலன் said...

கல்வித் திட்டத்துக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது உண்மை தான்.நீங்க சொல்றது எல்லாம் சரியாகவே இருக்கட்டும் ஐயா. இவ்வளவு வெட்கம் இல்லாத, சுரணை இல்லாத ராஜாஜி அவர்களின் முன்னிலையில் தான் பெரியாரின் இரண்டாம் திருமணம் நடந்ததாக பரவலாகச் சொல்லுகிறார்களே? கழகக் கண்மணிகளைக் கூட பெரியார் அழைக்கவில்லையாமே?

இது பொய், கழகக் கண்மணிகளின் எதிரில் நடந்த திருமணம் தான் இது என்று சொன்னீர்களானால், ஒரே ஒரு திருமண புகைப்படம் இருந்தால் கொஞ்சம் வெளியிடுங்களேன் ஐயா. எனக்கும் சந்தேகம் தீர்ந்த மாதிரி இருக்கும்.

பரணீதரன் said...

தோழரே,

நன்றாக புரிந்து கொள்ளுங்கள் பெரியார் என்றைக்கும் பார்பனர்களுக்கு எதிரி இல்லை. அவர் பார்பனிய கொள்கைகளுக்குதான் எதிரி. அப்படி பார்பனர்களை எதிரியாக நினைத்து இருந்தால் அவரிடம் இருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களை ஏவி பார்பனர்களை என்ன்ன வேண்டு மானாலும் செய்து இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவே இல்லை. அவர் கூரியாது எல்லாம் எங்களுக்கும் எல்லாத்திலும் உரிமை தாருங்கள் என்ற ஒரே குரல்.

எனவே கொள்கையில் தான் இருவேறு துருவங்கள் அனால் நண்பர்கள் அதன அடிபடயில்தான் இந்த திருமணமும். நீங்கள் கேட்ட இந்த கேள்வியே பெரியார் எந்த அளவுக்கும் மனிதர்களை மதித்து இருகிராரர் என்பதற்கு ஒரு உதாரணம். இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள் பெரியாரும் அவர் தொண்டர்களும் பார்பன எதிரி இல்லை பார்பனிய அடிமை படுத்தும் கொல்ல்கைக்கு எதிரானவர்கள்.

ஸ்ரீநி said...

நன்றாக புரிந்து கொள்ளுங்கள் பெரியார் என்றைக்கும் பார்பனர்களுக்கு எதிரி இல்லை. - ஒப்புக்கொண்டமைக்கு நன்றி / / / / / / / /
பார்பனிய கொள்கைகளுக்குதான் எதிரி. -- பெரியார் நாத்திகர் அல்லர் அவர் சுத்தமான பார்பனிய எதிரி என்று மீண்டும் உடன்பட்டமைக்கு நன்றி

நம்பி said...

ஸ்ரீநி said...
//பார்பனிய கொள்கைகளுக்குதான் எதிரி. -- பெரியார் நாத்திகர் அல்லர் அவர் சுத்தமான பார்பனிய எதிரி என்று மீண்டும் உடன்பட்டமைக்கு நன்றி //

பார்ப்பனீயம் தானே இந்த கற்பனைக் கடவுளை உருவாக்கியது. பார்ப்பனீயம் தானே புராண இதிகாசங்களை உருவாக்கியது. பார்ப்பனீயம் தானே வர்ணாசிரம தர்மத்தை உருவாக்கி, அதை கையில் தூக்கி கொண்டு அலைவது. பார்ப்பனீயம் தானே சகமனிதனை இழிவுடன் நடத்தியது. பார்ப்பனீயம் தானே மனிதநேயமற்ற தீண்டாமைக் கொடூமையை புகுத்தியது.

அந்த பார்ப்பனீயம் யாரிடம் இருக்கிறது?

தலித் பிரிவினரிடமா? சுத்தி சுத்தி அதுகிட்டேயேதான் வரும்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]