வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, May 01, 2015

அவர்கள் பிரச்சனை அவர்களுக்கு...

நாட்டுல விவசாயிகள் மேகதாட்டு ஆணை, காவிரி பிரச்சனை என்று போராடுகிறார்கள். போக்குவரத்து ஊழியர்கள் போதுமான ஊழியர்கள் இல்லை பணி சுமை என்று கூறி போராட்டம் செய்கிறார்கள்.இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான போராட்டம் நடக்கிறது. இது அனைத்தும் மக்கள் நலன் சார்ந்தது.அந்த பணியில் தொய்வு என்றால் மக்களுக்கு பாதிப்பு என்பது அதிகம்.
ஆனா பாருங்க, இன்று(29-04-2015) காலையில் ஒரு செய்தி பார்த்தேன், அர்ச்சக பார்ப்பனர்கள் பூஜைக்கு அனுமதி வேண்டி உண்ணாவிரதம் என்று. இவர்களுக்கு போராட்டம் கூட எந்த ரூபத்தில் வருது பார்த்தீர்களா?
தந்தை பெரியார் ஒன்றை கூறுவார், இந்த நாட்டில் முடி திருத்துபவர் இல்லை என்றால் திண்டாட்டம். சலவை தொழிலாளி இல்லை என்றால் திண்டாட்டம். உழவன் இல்லை என்றால் திண்டாட்டம். துப்புரவு பணி செய்பவர் இல்லை என்றால் திண்டாட்டம். ஆனால், இந்த அர்ச்சக பார்ப்பான் இல்லை என்றால் என்ன நட்டம் வந்துட போவுது என்று கூறுவார்கள். தந்தை பெரியார் இதை குலத்தொழிலை உறுதி படுத்த கூறியதாக எடுத்து கொள்ள கூடாது...பார்ப்பனர்கள் செய்யும் வேலையில் துளி கூட மக்களுக்கு பயன் கிடையாது இருந்தாலும் அவன் தான் உச்சாணி கொம்பில் இருக்கிறான்..உடலுழைப்பை செலுத்தி பணி செய்யும் நம்ம ஆட்கள் மரியாதை குறைவாக நடத்த படுகிறார்கள் என்பதை உணர்த்தவே அய்யா இதை எடுத்து கூறியுள்ளார்கள்.


விகடனின் 'ஏனெனில் அவர் பெரியார்!' கட்டுரை..காவி கும்பலின் வேண்டாத சத்தங்களுக்கு நல்ல பதில்

இந்த வார ஆனந்த விகடனில் (06-05-2015) வெளிவந்திருக்கு திருமாவேலனின் 'ஏனெனில் அவர் பெரியார்!' கட்டுரை காவி கும்பலின் வேண்டாத சத்தங்களுக்கு நல்ல பதில்
இந்த சமுகத்தில் எவ்வளவு உரிமையை எடுத்துகொண்டாரோ, அதே உரிமையை தனது கொள்கை எதிரிக்கும் வழங்கினார். ஆனால், அவர் எந்த மரியாதையை மற்றவர்களுக்கு கொடுத்தாரோ அது அவருக்கு திரும்ப கிடைக்கவில்லை. அதை பெரியார் எதிர்பார்த்தவரும் அல்ல. மனித ஜீவனிடம் நன்றியை எதிர்பார்ப்பது அறிவில்லாத தன்மை. எனச் சொன்ன அவர். எனக்கு யாரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் சொன்னார்.
ஏனெனில் அவர் பெரியார்!
(கட்டுரையில் இருந்து...)

கணவன் என்ற லைசென்ஸ் வாங்கிட்டா போதும்

கணவன் மூலம் மனைவிக்கு ஏற்படும் பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வல்லுறவு போன்ற கொடூரங்களை தண்டிக்க.... ஏற்கனவே இருக்கும் சட்டத்தில் திருத்தம் செய்யுங்கள் என்று மாநிலங்களவையில் கனிமொழி எம்.பி பேசியிருக்கிறார்.அதற்கு பதில் அளித்து பேசிய பாஜக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பர்திபாய் சௌத்ரி, அப்படிப்பட்ட எண்ணமே மத்திய அரசுக்கு கிடையாது. அது நம் இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது என்று பேசியிருக்கிறார்.
கணவன் என்ற லைசென்ஸ் வாங்கிட்டா போதும்...மனைவியை பலாத்காரம், பாலியல் வல்லுறவு செய்யலாம் என்று மத்திய அரசு சொல்லுகிறதா? இதுதான் இந்திய கலாச்சாரமா? பெண் எவ்வளவு அடக்குமுறைக்கு ஆளானாலும் அடங்கித்தான் போக வேண்டும் என்று மத்திய அரசு சொல்லாமல் சொல்லி இருக்கிறது. ஆளும் பாஜக அரசின் யோகிதையை இது போன்ற அமைச்சர்களின் பேச்சுகளின் மூலம் நன்கு உணர முடிகிறது. பெண்கள் என்றாலே ஆணுக்கு அடிமை, சேவகம் செய்யும் வேலைக்காரி என்ற மனோபாவம் கொண்ட இந்துத்துவா ஆட்சியில் வேறு என்ன பதில் வரும்.
இது போன்ற சட்டங்கள் அவசியம் தேவை. இன்றும் பல ஊர்களில் இது போன்று கணவன் மூலம் பாலியல் தொந்தரவுக்கு உட்படும் பெண்கள் ஏராளம் உள்ளனர்.Tamil 10 top sites [www.tamil10 .com ]