Friday, May 01, 2015
கணவன் என்ற லைசென்ஸ் வாங்கிட்டா போதும்
கணவன் மூலம் மனைவிக்கு ஏற்படும் பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வல்லுறவு போன்ற கொடூரங்களை தண்டிக்க.... ஏற்கனவே இருக்கும் சட்டத்தில் திருத்தம் செய்யுங்கள் என்று மாநிலங்களவையில் கனிமொழி எம்.பி பேசியிருக்கிறார்.அதற்கு பதில் அளித்து பேசிய பாஜக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பர்திபாய் சௌத்ரி, அப்படிப்பட்ட எண்ணமே மத்திய அரசுக்கு கிடையாது. அது நம் இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது என்று பேசியிருக்கிறார்.
கணவன் என்ற லைசென்ஸ் வாங்கிட்டா போதும்...மனைவியை பலாத்காரம், பாலியல் வல்லுறவு செய்யலாம் என்று மத்திய அரசு சொல்லுகிறதா? இதுதான் இந்திய கலாச்சாரமா? பெண் எவ்வளவு அடக்குமுறைக்கு ஆளானாலும் அடங்கித்தான் போக வேண்டும் என்று மத்திய அரசு சொல்லாமல் சொல்லி இருக்கிறது. ஆளும் பாஜக அரசின் யோகிதையை இது போன்ற அமைச்சர்களின் பேச்சுகளின் மூலம் நன்கு உணர முடிகிறது. பெண்கள் என்றாலே ஆணுக்கு அடிமை, சேவகம் செய்யும் வேலைக்காரி என்ற மனோபாவம் கொண்ட இந்துத்துவா ஆட்சியில் வேறு என்ன பதில் வரும்.
இது போன்ற சட்டங்கள் அவசியம் தேவை. இன்றும் பல ஊர்களில் இது போன்று கணவன் மூலம் பாலியல் தொந்தரவுக்கு உட்படும் பெண்கள் ஏராளம் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment