வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, July 29, 2010

பித்தலாட்டம் என்ற யானை போட்ட லத்திதான்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் ராதாபுரம் கிராமத்தில் கேழ்வரகில் நெய் வடிகிறது என்கிறார்கள். கேட்பார்க்கு மதியில்லாமல் போய் விட்டதால் ஆங்கே மூட நம்பிக்கை முந்திரிக் கொட்டையாகக் குதித்துத் துள்ளுகிறது.

குளத்தினுள் இருந்த காட்டாமணக்குச் செடியை வெட்டும்போது அங்கு வேலை பார்த்த பெண்கள் சாமி ஆடினார்களாம்.

நான் குடிகொண்டுள்ளேன் என்னை வெட்டாதே! என்று அந்தச் சாமியாடிப் பெண்கள் சத்தம் போட்டார்களாம். இந்த நிகழ்ச்சி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டதாம்.

வெட்கம் கெட்ட ஏடுகள் இதனைப் படம் போட்டு வேடிக்கை காட்டுகின்றன.

சாமி குடியிருக்க காட்டாமணக்குச் செடிதான் கிடைத்ததா? அப்படியே சாமி குடிகொண்டிருந்தால் அதனை வெட்டத்தான் முடியுமா?

வெட்ட முடிந்தது என்றால் அந்தச் சாமிக்குச் சக்தியும் இல்லை, வெண்டைக்காயும் இல்லை என்று நிரூபணம் ஆகவில்லையா?

இதன் பின்னணியில் ஏதோ ஒரு தந்திரம் இருக்கும் - அதுதான் அந்த இடத்தில் கோயில் கட்டவேண்டும் என்கிற தந்திரம்.

அவ்வாறே ஆசாமிகள் ஆரம்பித்துவிட்டார்கள். 1001 விளக்குப் பூஜை போடப்பட்டுவிட்டதாம்.

ஊராட்சித் தலைவர் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டுவிட்டார். அவர் கனவில் சாமி வந்து தனக்குக் கோயில் கட்டச் சொன்னதாம்.

விஷயம் அங்கேதான் இருக்கிறது - சொல்லி வைத்த ஏற்பாடு - நாடகம்தான் இதன் பின்னணியில்!

மயிலாடுதுறை பக்கத்தில் கொல்லுமாங்குடியை யடுத்த பாப்பம்மாள் கோயில் என்ற ஊரில் பல ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் ஒரு திருகுதாளம் நடந்தது.

பூமிக்கு வெளியில் கை தெரிந்ததாம். எனக்கு வளையல் போடு என்று அது சொன்னதாம். வளையல்காரர் வந்து வளையல் போட்டாராம். அவ்வளவுதான், ஆங்கே கோயில் கட்டவேண்டும் என்று ஆரம்பித்தார்கள்.

உடனே உண்டியல் வந்து விட்டது. வசூல் மழை கொட்ட ஆரம்பித்தது.

திராவிடர் கழகத்துக்காரர்கள் சும்மா விடுவார்களா? களத்தில் குதித்தார்கள் - பிரச்சாரப் புயலைக் கிளப் பினார்கள் - மறியல் என்று அடுத்து அறிவித்தார்கள். அவ்வளவுதான் வளையல்கார மாரியம்மாள் கதை புஸ்வாணம் ஆகிவிட்டது.

1970 செப்டம்பரில் அய்யா, அண்ணா பிறந்த மாதத்தில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் தியாகராயர் நகரில் - சிவா - விஷ்ணு கோயில் அருகில் ஒரு திடீர்ப் பிள்ளையாரை உண்டாக்கினார்கள்.

தியாகராயர் நகரைச் சேர்ந்த கே.எம். சுப்பிர மணியம் என்ற பார்ப்பனர் அந்த வேலையைச் செய்தார்.

பூமியைப் பொத்துக் கொண்டு திடீரென்று பிள்ளையார் தோன்றினார் என்று கதை கட்டினார்கள். அப்படி சொன்ன சிறிது நேரத்திலேயே உண்டியல்கள் வந்தன - வசூல் வேட்டை ஆரம்பமாகிவிட்டது.

அந்த இடத்திலேயே பொதுக்கூட்டம் போட்டுப் பேச தந்தை பெரியார் அறிவிப்புக் கொடுத்தார்.

பிரச்சினை பேருரு எடுத்துவிடும் என்ற நிலையை உணர்ந்த முதலமைச்சர் கலைஞர் உண்டியலைப் பறிமுதல் செய்தார். திடீர்ப் பிள்ளையார்பற்றி விசாரிக்க உத்தரவிட்டார்.

செல்வராஜ் என்ற காவல்துறை கான்ஸ்டபுளைப் பயன்படுத்தி அந்த சுப்பிரமணியம் பார்ப்பான் அந்த எத்து வேலையைச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இரவோடு இரவாகக் குழியைத் தோண்டி அதில் ஒரு பிள்ளையார் சிலையை வைத்து, சுற்றிலும் பருத்திக் கொட்டையை நிரப்பி, பூமிக்கும் மேலே ஒரு துவாரத்தை ஏற்பாடு செய்து, தண்ணீரை அதன் வழியாக ஊற்றியவுடன் பருத்திக் கொட்டை உப்பி பிள்ளையார் பொம்மையைப் பூமிக்கு வெளியிலே கொண்டு வந்து பிதுக்கித் தள்ளிவிட்டது.

இதில் கடைந்தெடுத்த வெட்கக்கேடு என்ன தெரியுமா?

சுயம்பு - அது தானாகத் தோன்றும் என்று காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அந்தப் பித்தலாட்டத்துக்கு வக்காலத்து வாங்கினார்.

ஆனந்தவிகடன் ஆம்! ஆம்! பிள்ளையார் தானாகத் தோன்றியது உண்மைதான் என்று ஒத்தும் ஊதியது.

சில நாள்களிலேயே சாயம் வெளுத்துவிட்டது.

அந்த இடத்தில், மசூதி கட்ட அனுமதியளிக்கப்பட்டு இருந்தது - அதனைத் தடுக்கவே இந்தத் திட்டம்; மதக் கலவரத்தை உண்டாக்குவது அதன் நோக்கம். கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் என்று தந்தை பெரியார் ஏன் சொன்னார் என்பது இப்பொழுது விளங்கி இருக்குமே.

இப்பொழுது விழுப்புரம் பக்கத்தில் கிளம்பியிருக்கும் அக்கப்போரும், இதுபோன்ற பித்தலாட்டம் என்ற யானை போட்ட லத்திதான்.

விரைவில் அதனை அம்பலப்படுத்துவோம்!

----------- விடுதலை (29.07.2010)
                                                                                                                                                          

Wednesday, July 28, 2010

வடலூர் வள்ளலாரை கற்பூரத்தை இட்டு எறித்த சமயவாதிகள்

வடலூர் வள்ளலார் என்று பெருமதிப்போடும், அன்போடும் போற்றப்படும் இராமலிங்க அடிகள் தொடக் கத்தில் மூடநம்பிக்கைப் பள்ளத்தில் விழுந்தவர்தான். சிறுதெய்வ வழிபாட்டுக் குழியில் சாய்ந்தவர்தான்.

ஆனாலும் ஆறாம் திரு முறை எழுதிய காலத்தில் அவர் தெளிவு பெற்றார். ஆரியத்தின் வேத, ஆகம, வருணக் கொள்ளிகளை அடையாளம் கண்டார். சாடு சாடு என்று சாடினார்.

தமது வாழ்வின் முதற் பகுதி குறித்து பிற்காலத்தில் அவர் எழுதி இருக்கும் முத்துகள் அவர் பகுத்தறிவு ஒளி பெற்றார் என்பதற்கான சான்றுப் பத்திரமாகும்.

நாம் நாமும் முன் பார்த்தும், கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம். ஏனென்றால் அவைகளில் ஒன்றிலாவது குழுஉக் குறியின்றித் தெய் வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவி யச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்துவிட்டார் கள்... இதுபோல் சைவம், வைணவம் முதலிய சம யங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம் என்று கூறிவிட்டு, கடைசியாக வள் ளலார் சொல்லுகிறார். அப் பொழுது எனக்கு அற்ப அறிவுதான் இருந்தது - அத னால் நம்பினேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

இதன் காரணமாகவே பார்ப்பனர்கள் திட்ட மிட்டு அவரைத் தீர்த்துக் கட்டினார் கள். வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன் அவர்கள் குறிப்பிடுகிறார்,

வள்ளலார் காலத்தில் தென்னாற்காடு மாவட்ட ஆட்சியாளராக விளங்கிய கார்ஸ்டின் என்பவர் , புராணம், சாத்திரம் முதலிய வற்றை வடலூர் இராமலிங் கனார் கண்டித்ததைப் பொறுக்காத சமயவாதிகள் கற்பூரத்தை இட்டு அவர் எலும்புகூடக் கிடைக்காத வண்ணம் எரித்து விட்ட னர் என்றும் கூறுகிறார்.

உண்மையெல்லாம் இவ்வாறு இருக்க, ஆன்மீக மலர் என்று வெளியிடும் தமிழ்நாட்டு ஏடுகள் சிறிது சிறிதாக இராமலிங்கனார் மீது அற்புதங்களைத் திணித்து, அவரை பார்ப்பனிய வைதீ கக் குட்டைக்குள் தள்ளப் பார்ப்பது வெட்கக்கேடு!

கூனன் நிமிர்ந்த அதிச யம் என்னும் தலைப்பில் ஒரு கட்டுக்கதை வெளி யிடப்பட்டுள்ளது. வடலூரில் தைப் பூச விழா நடந்ததாக வும், அதில் அதிர் வேட்டு வெடித்த கூனன் ஒருவன் காயம்பட்டுக் கருகி வீழ்ந்த தாகவும், நீ எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்! என்று வட லூரார் சொன்னதும், கூனன் முதுகு நிமிர்ந்து புத்தொளி பரவி எழுந்ததாகவும் ஆன் மிக இதழ் கதை விட்டுள் ளது.

எந்த மூடத்தனத்தை வள்ளலார் எதிர்த்தாரோ, அந்த மூடத்தனத்தையே அவர்மீது திணிக்கும் சில்ல றைத் தனத்தை எண்ணிப் பார்ப்பீர்!

- விடுதலை (28.07.2010) , மயிலாடன்
                                                                                                      Tuesday, July 27, 2010

கல்யாண வீட்டில் கருமாதி மந்திரம் கூறிய புரோகிதர்..தடுத்தவர் நாவலர் சோமசுந்தர பாரதியார்

நாவலர் சோமசுந்தர பாரதி யார் அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (1876). இவர் சைவ மெய்யன்பர் என்றாலும், தமிழ், தமிழர் இனவுணர்வில் யாருக் கும் சளைத்தவர் அல்லர்.

1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு உற்ற துணை வராக இருந்தவர்.

இந்தியை எதிர்ப்பவர்கள் யார்? ஓர் ஈரோட்டு ராமசாமி நாயக்கரும், ஒரு புலவரும் தானே? என்று அன்றைய சென்னை மாநில பிரதமர் சக் ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி யார் (ராஜாஜி) சட்டப் பேரவை யில் கேலி செய்தபோது ஆமாம் - இந்தியை எதிர்ப்பவர்கள் இவர்கள் இருவர்தான். ஆனால், இந்தியை ஆதரிப்பவர் நீங்கள் ஒருவர் மட்டும்தான்! என்று ஆச்சாரியாரின் முகத்துக்கு முகம் பதிலடி கொடுத்தார் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள்.

ஆச்சாரியார் சொன்ன அந்தப் புலவர் பெருமகன் வேறு யாருமல்லர் - நாவலர் சோமசுந் தர பாரதியார்தான். அந்த அளவுக்கு நாவலர் பாரதியார் இந்தி எதிர்ப்புக் களத்தில் தளகர்த்தராகத் திகழ்ந்தார்.

கம்ப இராமாயணத்தைக் கொளுத்தவேண்டும் என்ற விவாதப் போர் 1948-களில் நடந்தது. சென்னையில் அறிஞர் அண்ணாவோடு விவாதம் புரிந்தவர் ரா.பி. சேதுப்பிள்ளை. சேலத்தில் அண்ணாவோடு மோதியவரோ இதே நாவலர் பாரதியார்தான் (14.3.1948).

அந்த விவாதத்தில்கூட தமது பார்ப்பன எதிர்ப்புணர்வைப் பதிவு செய்யத் தவறவில்லை நாவலர் பாரதியார் அவர்கள்.

என்னுடைய 14 வயதி லேயே எனக்குக் கல்யாணம் நடந்தபோது நேரிட்டதைச் சொல்லுகிறேன். எட்டையபுர சமஸ்தானத்தில் ஓர் கிராமத் திலே நாகரிக உணர்ச்சி பரவ முடியாத ஊரிலே எனக்குக் கல்யாணம். நான் வைதீக உணர்ச்சி உள்ளவன். நல்ல சைவன். இப்போது இருக்கும் சைவம் போன்றதல்ல. என் னுடைய சிவநெறி வேறு. இன்று சைவப் பண்டிதர்கள் கூறும் சைவம் நான் கொள் வதல்ல. உண்மையே எனக் குச் சிவம். எனக்குக் கல்யா ணம் பார்ப்பனரை வைத்துச் செய்வதாகக் கூறினார்கள். அப்படிப்பட்ட கல்யாணம் எனக்கு வேண்டாம் என்றேன். சைவ ஆகமங்களின்படி பார்ப்பனர்களைச் சண்டாளர் கள் என்று கூறப்பட்டிருக் கிறது - கோயில்களிலே அவர் கள் துவஜஸ்தம்பத்துக்கு அப்புறம் நுழையக் கூடாது. வந்தால் தீட்டாகிவிடும் என்று ஆகமம் கூறுவதால், அப்படிப் பட்ட சண்டாளர்களைக் கொண்டு நான் கலியாணம் செய்துகொள்ள மாட்டேன் என்றேன். என் குடும்பத்தார் திருநெல்வேலிக்கும், மது ரைக்கும் போய் பண்டிதர் களைக் கேட்டார்கள். திரு நெல்வேலி பண்டிதர்கள்கூட சரியாகச் சொல்லவில்லை. மதுரையிலிருந்த பண்டிதர் கள் பையன் சொல்லுவது உண்மைதான். ஆகமம் அப் படித்தான் கூறுகிறது என்று சொன்னார்கள் - என்று நாவ லர் பாரதியார் கூறிய கருத்தும், தகவலும் கருத்தூன்றத் தக்க வையே!

நாவலர் பாரதியார் ஒரு முறை நண்பர் வீட்டுத் திரு மணத்துக்குச் சென்றிருந்தார். அது பார்ப்பனரால் நடத்தப்பட் டது. அய்யர் கூறிக் கொண்டி ருந்த மந்திரங்களைக் கவனித் துக் கொண்டிருந்த அவர் (சமஸ் கிருதமும், பாரதியாருக்குத் தெரியும்) திடீரென எழுந்து, ஓ, அய்யரே மந்திரத்தை நிறுத்து! என்றார்.

கூடியிருந்தவர்களுக்கு ஒரே திகைப்பு! அப்பொழுது நாவலர் சோமசுந்தர பாரதியார் சொன்னார்: இந்தப் புரோகிதன் கருமாதி மந்திரத்தை கல்யாண வீட்டில் சொல்லிக் கொண்டிருக் கிறான் என்று சொன்னாரே பார்க்கலாம்.

கூடியிருந்தோர் அனை வரும் அதிர்ச்சி அடைந்தனர். நாவலர் பக்தர்தான் - ஆனா லும், தமிழின உணர்வின் சின்னமாவார்!

- விடுதலை (27.07.2010) மயிலாடன்

Monday, July 26, 2010

இடஒதிகீடுக்கு எதிரானா துக்ளக் சோவும் வழக்கறிஞர் விஜயனும்

விஜயன், விஜயன் என்ற ஒரு வழக் குரைஞர் இருக்கிறார். அவரின் வேலை என்ன தெரியுமா?

சமூக நீதி இடஒதுக்கீடு என்கிற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே ஒவ்வாமை (ஹடடநசபல) என்னும் கிருமி அவரின் ஒவ்வொரு வியர்வைத் துவாரத் திலும் புகுந்து அவரை ஆட்டம் போடச் செய்துவிடும். தானாகவே பேசிக் கொள்வார் சட்டப் புத்தகங்களையெல்லாம் அலமாரியி லிருந்து உருட்டி விடுவார்.

நீதிமன்றத்துக்குச் சென்று ஏதாவது சேட்டை செய்யாவிட்டால், அவரைப் பீடித்த ஒவ்வாமை நோய் அவரை உண்டு இல்லை என்று பார்த்து விடும்.

பார்ப்பனர் அல்லாத அதே நேரத்தில் உயர்ஜாதி மட்டத்தைச் சேர்ந்த இவருக்கு இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர் என்பதால், காதில் பூ சுற்றி ஆடுடா ராமா ஆடு! போடுடா ராமா போடு தோப்புக் கரணம்! என்று பார்ப்பன ஊடகங்கள் விளம்பரக் கோல் எடுத்து ஆட்டும். அவாள் எதிர் பார்ப்புகளுக்குக் கொஞ்சமும் துரோகம் செய்யாமல் குதியாட்டம் போடுவார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தயாரித்துக் கொடுத்த (31சி பிரிவின்கீழ்) சட்டம் அதன் காரணமாக தமிழ் நாட்டில் 69 விழுக்காடு பாதுகாப்பு உறுதிபட்ட நிலையில் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றவர் இட ஒதுக்கீடு ஒவ்வாமை நோய்க்காரரான இந்த விஜயன்.

1994 முதல் ஒவ்வொரு ஆண்டும் உச்சநீதிமன்றத் திற்குப் படை எடுத்துச் சென்ற இந்தத் திருவாளரின் மண்டையில் இந்த முறை உச்ச நீதிமன்றம் ஆழமாகக் குட்டு வைத்துவிட்டது. ஆடிப்போய்விட்டார் மனிதர். ஆனா லும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லாவிட்டால் அவரின் வீரப் பிரதாபம் என்னாவது!


சூ காட்ட இருக்கவே இருக்கிறார் திருவாளர் சோ ராமசாமி அய்யர். விபீடணர்களுக்குப் பூ சூட்டி மேடை கொடுப்பதற்காகவே துக்ளக் இதழை நடத்திக் கொண்டி ருப்பவர் ஆயிற்றே!

இந்த வார துக்ளக்கில் (2872010) திருவாளர் விஜயன் சும்மா பிளந்து தள்ளியிருக்கிறார்.

சமூக நீதிக்கு எதிராக நீதிமன்றங்கள் தீர்ப்பை வழங்கினால், ஆணை பிறப்பித்தால், திராவிடர் கழகம் அதன் தலைவர் போர்க்கொடி தூக்குவதுண்டு இன்னும் சில நேரங்களில் தீர்ப்புகளையே எதிர்த்து தீயிட்டுக் கொளுத்தி சம்பந்தப்பட்ட நீதிமன்றங் களுக்கு சாம்பலை அனுப்புவது எல்லாம் கழகத்துக்குச் சர்வ சாதாரணம். அதற்காக சிறை சென்றதும் உண்டு.

அப்பொழுதெல்லாம் இந்த விஜயன் வகையறாக்களும், சோ ராமசாமி வட்டாரங்களும் எப்படியெல்லாம் தீப்பொறி பறக்க கட்டுரைகளைத் தீட்டுவார்கள் தெரியுமா?

நீதிமன்ற ஆணைகளை விமர்சிப்பதா? நீதிமன்ற தீர்ப்புகளைக் கொளுத்துவதா? இவர்களுக்குச் சட்டம் தெரியுமா? இவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று தரைக்கும் வானத்துக்கும் தாவிக் குதிப்பார்கள்.

இப்பொழுது நிலைமை என்ன தெரியுமா? இந்த வார துக்ளக்கில் திருவாளர் விஜயன் தமது எழுது கோலை வால(ள)கச் சுழற்றித் தீர்த்திருக்கிறார்.

நீதிபதிகளைச் சாடு சாடு என்று சாடுகிறார்.

மறு ஆய்வு செய்ய தமிழக அரசு வேண்டுகோள் வைத்து, அந்த விஷமத்தனமான வேண்டுகோளின் அபத்தத்தை உணராது. அல்லது அறிந்தோ, அறியாமலோ, உச்ச நீதிமன்றம் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு வழக்கில், எந்த ஒரு தீர்ப்பும் கூறாமல், வழக்கையே தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் முடிவுக்கு (மறுபரிசீலனைக்கு) விட்டுவிட்டது. அதற்கு ஒரு வருட காலம் நிர்ணயமாக அளித்துள்ளது.

17 வருடங்கள் நிலுவையில் இருந்த ஒரு முக்கியமான பிரச்சினைக்கு ஒரு வழியாக எந்தத் தீர்ப்பும் சொல்லாமல், மீண்டும் வழக்கை திருப்பி அனுப்பியதன் மூலம், பிரச்னை அதன் முதல் கட்டத்திற்கே வந்து சேர்ந்தது. மீண்டும் நீதிமன்ற பரிசீலனைக்கு எடுத்துச் சென்றால், இன்னும் எத்தனை வருடங்கள் இந்த நிலையற்ற நிலை தொடருமோ? சீர்வாய் கூறியது போல், தீர்ப்பளிக்கத் தயங்கும் நீதிபதிகள் தாங்கள் ஏற்கும் பதவிப் பிரமாணத்திற்குப் புறம்பாகச் செயல்படுகிறார்கள் என்றே அர்த்தம். முடிவெடுக்க வேண் டியவர்கள் முடங்கிக் கிடந்தால், நீதியும், தர்மமும் கண்ணைக் கட்டிக்கொள்ள வேண்டியதுதான்.

இதன் மூலம் வழக்குரைஞர் விஜயன் என்ன சொல்லுகிறார்?

நீதிபதிகள் பதவிப் பிரமாணத்திற்கு முரணாக அதாவது சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளார்கள். முடிவெடுக்கவேண்டிய நீதிபதிகள் முடங்கிக் கிடக்கிறார்கள் நீதியும், தர்மமும் கண்களைக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான் அதாவது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூவரும் (தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, நீதிபதிகள் கே.எஸ். இராதாகிருஷ்ணன், சுதந்திரகுமார் ஆகிய மூவரும்) நீதிக்குப் புறம்பாக நடந்துகொண்டு விட்டனர். தர்மத்துக்கு விரோதமாகச் செயல்பட்டுள்ளனர் என்று குற்றஞ் சாற்றியுள்ளனர்.

கடைசியாக நீதிமன்றத்தின் பொறுப்பற்ற நடவடிக்கை என்று 5 குற்றப்பத்திரிகைகளையும் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் மீது படித்திருக்கிறார்.

தீர்ப்புகளை எதிர்த்து திராவிடர் கழகம் செயல் பட்டால் கழகத் தோழர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது சிறைக்கும் அனுப்பப்படுகின்றனர்.

வழக்குரைஞர் விஜயனோ, நீதிபதிகளை பொறுப் பற்றவர்கள் என்றும், நீதி தவறியவர்கள் என்றும், தர்மத்துக்கு விரோதமானவர்கள் என்றும் மிக வெளிப் படையாக எழுதியுள்ளாரே இவர்மீது எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

நீதிபதிகளைக் குற்றவாளிகள் போல சித்திரிக்கப்பட்ட கட்டுரையை வெளியிட்ட துக்ளக்கின் மீதும் அதன் ஆசிரியர் சோ மீதும் என்ன நடவடிக்கை எடுக்க உத்தேசம்?

சட்டம் எல்லோருக்கும் பொது என்றால், திராவிடர் கழகத்திற்கு ஒரு நீதி இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களுக்கு இன்னொரு நீதி என்று இருக்க முடியாதே!

அரசு என்ன செய்யப்போகிறது? நீதித் துறை என்ன செய்யப் போகிறது?

எங்கே பார்ப்போம் !

------------

நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம்
அவர்களைச் சாடும் விஜயன்

17 வருடம் காத்திருந்ததற்குப் பிறகும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் அடிப்படை உரிமை பிரச்சினையை ஒரு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தீர்த்து வைக்காமல் மீண்டும் அரசியல்வாதிகள் கையில் (பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் தலைவர் முன்னாள் நீதிபதி ஜனார்த்தனம் கூட அரசியல்வாதிதான், பா.ம.க.வினை ஆதரிப்பவர்) கொடுத்துவிட்டது . வழக்குரைஞர் விஜயன் இவ்வாறு துக்ளக்கில் எழுதியுள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளைச் சிறுமைப் படுத்தியதோடு அல்லாமல், தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களை பா.ம.க.வைச் சேர்ந்தவர் என்று முத்திரை குத்தியுள்ளார்.

இது நீதிபதியின் அந்தரங்கத்தைக் கொச்சைப் படுத்துவதாகும். இதன் மீது சம்பந்தப்பட்ட நீதிபதி நடவடிக்கை எடுக்கலாமே!
-------------------

சோ மீதும் நடவடிக்கை உண்டா?

கேள்வி: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது பற்றி?

பதில்: தனது முந்தைய தீர்ப்பை ஒட்டி இப்போது தீர்ப்பு அளிக்க சுப்ரீம் கோர்ட் தயக்கம் காட்டியிருக்கிறது. நீதிமன்றம் தனது பொறுப்பை பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் பக்கம் தள்ளி விட்டிருக்கிறது. வக்கீல் விஜயன் சொல்வது போல, இது இப்போதைக்கு பொறுப்பைத் தட்டிக் கழிக்கிற வேலையாகத்தான் இருக்கிறது. வேண்டாத வாதங்களுக்கும், மேலும் குழப்பத்திற்கும்தான் இது வழி செய்யும்.[துக்ளக் 2872010 பக்கம் 10]

சோவும் என்ன எழுதுகிறார் உச்சநீதி மன்ற நீதிபதிகள் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை தட்டிக் கழித்துள்ளனர். குழப்பத்திற்கு இடம் கொடுத்து விட்டனர் என்று வெளிப்படையாக நீதிபதிகள் மீது பழி சுமத்தியிருக்கிறார் திருவாளர் சோ ராமசாமி அய்யர்.
----------------------- விடுதலை (25.07.2010), மின்சாரம்

இடஓதிக்கீட்டில் திராவிடர் கழகத்தின் பங்கு ஒரு பார்வை

 ஓர் அரிமா நோக்கு

9.10.1987: புதுக்கோட்டையில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு கூட்டத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 31 (சி) பிரிவின்படி தனிச் சட்டம் இயற்றி இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் கருத்து உருவாக்கம்.

16.11.92: டில்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு மண்டல் பரிந்துரை அமல் 50 சதவிகிதத்துக்கு மேல் போகக் கூடாது.

20.11.92: சென்னை பெரியார் திடலில் பொதுச் செயலாளரின் சிறப்புப் பொதுக் கூட்டம்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் 31(சி) பிரிவின்கீழ் தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டுகோள்.

25.8.93: உச்சநீதிமன்ற இடைக்காலத் தடை 50 சதவிகிதத்துக்குமேல் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு கூடாது என்று.

26.8.93: இத்தீர்ப்புக்குப் பொதுச் செயலாளர் கண்டனம். 1.9.93: உச்சநீதிமன்ற இடைக்காலத் தடை ஆணை நகலை எரித்துச் சாம்பலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு திராவிடர் கழகம் அனுப்பிய போராட்டம் 15,000 பேர் கைது.

5.11.93: 31 (சி) பிரிவின்கீழ் தனிச் சட்டம் இயற்றக் கோரி பொதுச் செயலாளர் அறிக்கை.

6.11.93: சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் சமூகநீதி மாநாடு.

9.11.93: தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் அரசியல் சட்டத் திருத்தம் கோரி தீர்மானம்.

16.11.93: தமிழகம் தழுவிய அளவில் முழு அடைப்பு.

17.11.93: சென்னையில் பொதுச் செயலாளர் செய்தியாளர்கள் சந்திப்பு. 31(சி)யின்கீழ் மாதிரி சட்ட முன்வடிவம் தயாரித்து அளிக்கப்பட்டது.. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்.

26.11.93: தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை கோட்டையில்.

31.12.93: தமிழக சட்டப் பேரவையில் 31(சி) சட்டம் நிறைவேற்றம். (சட்டமன்ற பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து நடவடிக்கைகளைத் தமிழர் தலைவர் கவனித்தார்).

7.2.94: தமிழக மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி குடியரசுத் தலைவருக்குத் தந்தி கொடுக்குமாறு பொதுச் செயலாளர் வேண்டுகோள்.

11.3.94: தஞ்சை வல்லத்தில் தமிழக முதலமைச்சருக்கு சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம்.

7.4.94: டில்லியில் சமூகநீதிக்கான தேசிய கவுன்சில் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பங்கேற்பு. தமிழக சட்டத்துக்கு ஒப்புதல் தரக் குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் டில்லியில் சம்பந்தப்பட்ட தலைவர்கள், மத்திய சமூகநல அமைச்சர் சந்திப்பு வற்புறுத்தல்.

17.5.94: திருச்சியில் செய்தியாளர்களை பொதுச் செயலாளர் சந்தித்தல். குடியரசுத் தலைவர் ஒப்புதல் வற்புறுத்தல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்று எச்சரித்தார் பொதுச் செயலாளர்.

14.6.94: உச்சநீதிமன்ற இடைக்காலத் தடையை அகற்றக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பொதுச் செயலாளர் தந்தி.

15.6.94: அனைத்துக் கட்சி தூதுக்குழு சென்று பிரதமரை, குடியரசுத் தலைவரைச் சந்திக்க முதல்வருக்கு பொதுச் செயலாளர் வேண்டுகோள்.

23.6.94: சென்னையில் திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சி மற்றும் அனைத்துச் சமூக சங்கங்களின் கூட்டம்.

25.6.94: முதலமைச்சர் தலைமையில் தூதுக்குழு டில்லி சென்று பிரதமரைச் சந்தித்தல்.

26.6.94: டில்லியில் அனைத்துச் சமூக நீதி சிந்தனை உடைய தலைவர்களைப் பொதுச் செயலாளர் சந்தித்தல்.

16.7.94: ஈரோட்டில் கழகத்தின் சார்பில் சமூகநீதி மாநாடு.

17.7.94: 69 சதவிகித அடிப்படையில் தமிழ்நாட்டில் மாணவர்கள் சேர்க்கை.

19.7.94: தமிழக தனிச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

28.7.94: சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சி மற்றும் அனைத்துச் சமூக சங்கங்களின் கலந்துரையாடல் கூட்டம்.

2.8.94 - 13.8.94 : குமரி தொடங்கி திருத்தணி _ சென்னை வரை திராவிடர் கழகத்தின் சார்பில் சமூக நீதி எழுச்சிப் பயணம்.

14.8.94: 9ஆவது அட்டவணையில் சேர்க்கும் சட்ட திருத்தத்துக்கு ஆதரவு அளிக்கக் கோரி அனைத்துக் கட்சி நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கும் பொதுச் செயலாளர் தந்தி.

16.8.94: பொதுச் செயலாளர் கல்கத்தா செல்லுதல்.

17.8.94; 18.8.94; 19.8.94: டில்லியில் மத்திய சமூக நலஅமைச்சர் மற்றும் தேசிய முன்னணித் தலைவர்கள் சந்திப்பு.

17.8.94: உச்சநீதிமன்றத்தின் தவறான ஆணை.

(50 சதவிகித அடிப்படையில் இடஒதுக்கீடு இருந்தால் திறந்த போட்டியில் எத்தனை இடங்கள் கிடைக்க வேண்டுமோ அத்தனை இடங்களைக் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்ற ஆணை).

22.8.94: சென்னையில் பொதுச் செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தல், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களிலும், இடஒதுக்கீடு அடிப்படையில் நீதிபதிகள் நியமனஅவசியத்தை வலியுறுத்துதல்.

23.8.94: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு சென்னை சிறப்புக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் கண்டனம்.

24.8.94: 25.8.94: மாநிலங்களவையிலும், மக்களவையிலும் 9ஆவது அட்டவணையில் சேர்க்கை.

13.7.2010: தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு தொடரலாம் உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் தீர்ப்பு.

-------------- விடுதலை (17-7-2010) ஞாயிறுமலரில் மின்சாரம் எழுதிய கட்டுரையில் இருந்துSaturday, July 24, 2010

திராவிடர் - தமிழர், பெரியார் ஈ.வே.ரா

ஆரியர் பழக்க வழக்கமும் அவர்களது மதம், கடவுள் ஆகியவைகளும் அவை பற்றிய யோக்கியத் தன்மை, சக்தி, நடப்பு முதலியவைகளும் தமிழர்களாகிய நமக்குப் பெரிதும் பொருத்த மற்றவை என்பது நமது கருத்தாகும்.

இதை மறுத்து அவற்றுள் எதையாவது நமக்கு பொருத்தமுள்ளதென்றும் அவை நம்முடையவையே ஒழிய ஆரியருடைய தல்லவென்றும் நம் சைவப் பண்டிதர்களைப் போல் தமிழர் யாராவது ஆதாரத்தோடு வழக்காடுவார்களே யானால், அப்படி இருந்தாலும் அவை அந்த(அதாவது மக்கள் இன்றைய அறிவுபெறாத அந்த) காலத்தில், அதுவும் ஒரு சமயம் அன்று இருந்த மக்களுக்குப் பொருத்தமாயிருந்தாலும் இருக்கலாமே ஒழிய இந்தக் காலத்திற்கு அவை கண்டிப்பாய் ஒதுக்கித்தள்ள வேண்டியவைகளேயாகும் என்பதும் நமது அபிப்பிராயம்.

அதற்காக வேண்டியே, அதாவது அவைகளை நம் மக்கள் உணர வேண்டுமென்பதற்காகவே அவைகள் பற்றிய ஆதாரங்களை ஆரியர்களாலும், ஆரியர்களின் கொள்கைகளுக்கும் அவர்களது மதம், கடவுள்களுக்கும் அடிமைப்பட்ட நம் பண்டிதர்களாலும், கற்பிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்தே சில எடுத்து, அடிக்கடி குடிஅரசில் எழுதி வரப்படுகிறது.அந்தப்படி இவை சம்மந்தமாக குடிஅரசில்எழுதி வந்ததும், வருவதுமான சேதிகள் கண்டிப்பாக ஆரியர்களால் ஏற்படுத்தப்பட்ட வடமொழி ஆதாரங்களிலிருந்தும், அவைகளை ஆரியர்களாலேயே மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் மொழி பெயர்ப்புகளிலிருந்தும், மற்றும் அவற்றை நம் தமிழ்ப் பண்டிதர்களால் மொழிபெயர்த்தோ அல்லது ஆரியர் மொழி பெயர்த்ததைக் கவிகளாகப் பாடிய கவிகளிலிருந்தோ எடுத்துக் கையாளப்படுபவைகளே யல்லாமல் கற்பனையாக எந்தச் சங்கதியும் குறிப்பிடப்படுவதில்லை என்பதை மறுபடியும் வாசகர்களுக்கு உணர்த்துகிறோம்.

பொதுவாக ஆரிய நாகரிகத்தையோ, அவர்களது பழக்க வழக்கங்களையோபற்றி ஊன்றி ஆதாரங்களைக் கவனித்து சிந்தித்துப் பார்ப்போமானால் அவர்களுக்குள் ஒரு சமுதாயக் கட்டுப்பாட்டு முறையோ, ஒழுக்கமோ, நீதியோ, பகுத்தறிவு உணர்ச்சியோ ஏதும் இருந்ததாகக் காணப்படுவதற்கு இல்லை. அக்கால மானாபிமானத்துக்கும் இக்கால மானாபிமானத்துக்கும் சிறிதும் சம்மந்தமில்லை என்பதாகவும் தெரிகிறது. ஆகவே ஆரியர்கள் சகல துறைகளிலும், அக்காலத்திய ஆரியர் வாழ்வில் பூரண சுயேச்சையோடு எவ்விதக்கொள்கையும் இல்லாமல் அவரவர்கள் இச்சைப்படி விலங்குகள் போல் வாழ்ந்து வந்ததாகவே தெரிகிறது. அதனால்தான் வள்ளுவர்.

தேவரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்

என்று பாடினார் போலும்(தேவர்ஆரியர்). நாளாவட்டத்தில் அவர்கள் இந்தக் கால தேச வர்த்தமானத்திற்குத் தகுந்தபடி எது மேன்மை யாகக் கருதப் படுகிறதோ அதைத் தங்கள் பழக்க வழக்கங்களாக மாற்றி அமைத்துக் கொண்டு வந்து இன்றைய நிலைமைக்கு அவர்கள் வந்திருக்கக் கூடும் என்றாலும் வேத, புராண, இதிகாச காலங்களில் அவர்கள் மிருகப் பிராயத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதே அவற்றிலிருந்து தெள்ளென விளங்குகின்றதாகும்.

நம் பண்டிதர்கள் பெரிதும் அவற்றைத் தங்கள் சமயத்திற்கும், தங்கள் கடவுள் நடப்புக்கும் பொருத்திக்கொண்டதால் அந்தக் கேவலமான சேதிகளை வெறுக்க யோக்கியமற்றவர்களாகி மூடிவைத்துத் தொல்லை கொடுத்துக் கொண்டே வருகிறார்கள். அதனாலேயே அவை நம்மாலும் வெறுக்கப்படாமல் உயர் சமயமாகப் போய்விட்டதெனலாம்.

அந்தக் காலத்தில் கணவன், மனைவி என்கின்ற கூட்டு வாழ்க்கை ஒப்பந்தம் இன்று இருப்பதில் 100இல் ஒரு பங்கு இருந்ததாகக்கூட தெரியவில்லை.

அந்தக் காலத்து நாணயம், ஒழுக்கம், நம்பிக்கை, நல்லெண்ணம், பிறர்நலம் பேணுதல் முதலிய நற்குணங்களும் இக்காலத்தவைகளுக்கு மிகமிக மாறுபட்டதும் தாழ்ந்ததுமாகவே இருந்து வந்திருக்கிறது. அந்தக்கால ஆரியர்களுக்கு ஏதாவது ஒரு சமயம் இருந்திருப்பதாகக்கூடத் தெரியக்காணுவ தில்லை. அவர்களுக்கு அப்போது ஏதாவது ஒரு கடவுளே, பலகடவுள்களோ இருந்திருந்ததாகவும் தெரியவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பஞ்ச பூதங்களையும், சூரியன், சந்திரன் முதலியவைகளையும் மனிதனைப்போல் உருவகப்படுத்திக்கொண்டு தங்களுக்கு வேண்டியதை நல்கும்படி வேண்டிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்படி வேண்டியிருப்பதிலும் ஒரு கவனிக்கத்தக்க விஷயமென்னவென்றால், தங்களுடைய ஒழுக்க ஈனங்களையும், மோசடிகளையும் அவைகளுக்கும் கற்பித்து இருக்கின்றார்கள்.

ஆரியர்களின் முதல் ஆதாரம் வேதம் என்பதாகத்தான் தெரிகிறது. அந்த வேதம் பெரிதும் விபச்சாரம், மதுமாம்சம் அருந்துதல், தாங்கள் அல்லாதவர்களை (ஆரியரல்லாதவர்களை) இழிவாய்ப் பேசுவதும், அவர்களை அடியோடு அழிக்கவும், தங்களுக்கு ஏவலாளாகக் கொள்ளவும், பழிவாங்கும் தன்மைபோல் கொடுமை செய்வதுமான காரியங்களையே கொள்கையாகவும், பிரார்த்தனையாகவும் கொண்டிருக்கின்றன. வேதத்திலும் அதன் பின் ஏற்பட்ட வேதசாரமான புராணக்கதை, காவிய இதிகாசங்களிலும் பார்த்தால் தகப்பன் மகன், அண்ணன்தங்கை என்கின்ற பேத முறைகூட இல்லாமலும், மிருகம், மக்கள் என்கின்ற இன பேதம்கூட இல்லாமலும், ஆணும், ஆணுமாகவும் இன்னமும் எத்தனையோ விதமாக இயற்கைக்கு விரோதமான சேர்க்கையுடன் இருந்து வந்திருப்பதாகப் பல இடங்களில் காணப்படுகின்றன.

இவைகளையெல்லாம் ஏதோகாட்டுமிராண்டி காலத்துக் கொள்கை என்றும், எந்த சமூகத்திலும், மனிதன் மிருகப் பிராயத்தில் இருந்த காலத்தில் இப்படித்தான் இருந்திருக்க முடியும் என்றும், ஒருவிதத்தில் சமாதானம் செய்து கொள்ளலாம் என்றாலும், மேற்கண்ட விஷயங்களைக் கொண்ட ஆதாரங்களை இன்று ஆரியரும், தமிழரும், தங்கள் தங்கள் சமய ஆதாரங்கள் என்றும் தங்களால் போற்றிப் பாராட்டிப் பாதுகாக்க வேண்டிய புண்ணிய சரித்திரங்கள் புண்ணிய காரியங்களில் என்றும் பிரசங்கித்துப் பிரச்சாரம் செய்கின்றார்களே இதற்கு என்ன சமாதானம் என்பது நமக்கு விளங்கவில்லை. சிவன், விஷ்ணு, பிரம்மா, சுப்ரமணியன்,இராமன் கிருஷ்ணன் முதலிய கடவுள்களைப் பற்றிப் பிறகு யோசிப்போம். அக்கினி, வாயு, வருணன் முதலிய பஞ்சபூதக் கடவுள்களைப்பற்றியும் பிறகு யோசிப்போம். இந்திரன் என்கின்ற கடவுளைப்பற்றி ஆரியர்கள்தானாகட்டும், தமிழர்கள்தானாகட்டும் அக்கடவுளின் கதைகளையும், பண்டிகைகளையும் எதற்காக கொண்டாட வேண்டும் என்று கேட்கிறோம்.

இந்திரவிழா சிலப்பதிகாரத்திலேயே கொண்டாடப்பட்டிருக்கிறது. இதிலிருந்து ஆரியர்கள் தவிர தமிழர்களும் ஆதிகாலத்தில் இருந்தே இந்திரவிழாவைக் கொண்டாடி இருக்கிறார்கள் என்றும் ஆதிகாலத்திலிருந்தே தமிழர்கள் தன்மானமிழந்து ஆரியர்களுக்கு அடிமைப்பட்டு வந்திருக்கிறார்கள் என்றும் தெரியவருகிறது. பழந்தமிழ் அரசர்கள் என்று சொல்லி உரிமை கொண்டாடப்படுபவர்களான மூவேந்தர் (சேர, சோழ, பாண்டியர்) எவருமே உண்மைத் தமிழனாக இருந்ததாகச் சொல்லுவதற்கு ஆதாரமே காண முடியவில்லை.

இன்றைய அரசியல் உலகத்தில் ஒரு முத்துரங்க முதலியாரும், பண்டிதர்கள் உலகத்தில் ஒரு கதிரேசன் செட்டியாரும், கலைவாணர்கள் உலகத்தில் ஒரு சிதம்பரநாத முதலியாரும் ஆகிய பெரியோர்கள் இன்று எப்படித் தமிழர்களாக இருந்து வருகிறார்களோ அப்படித்தான் பழங்கால தமிழரசர்கள் உலகத்திலும் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் தமிழர்களாக இருந்திருக்கிறார்களே ஒழிய இன்று தமிழர்களின் உள்ளத்தில் உதித்தெழுந்த உணர்ச்சிப்படியான தமிழன் ஒருவனைக்கூட அக்காலத்தில் இருந்ததாகக் காணமுடியவே இல்லை.

தமிழர்களுக்கு ஆரியர் வேதம், கடவுள், சமயாதாரம் ஆகியவைகள் தவிர்த்த தனித்தமிழ்க் கொள்கையோ முறையோ ஏதும் இருந்ததாகச் சொல்ல நம் ஆராய்ச்சியாளர்களுக்கு இடமில்லாமலே நம் இன்றைய தமிழ்ப் பண்டிதர்களும், பழங்காலப் பண்டிதர்களும் இன்றைய அரசர்களும், பழந்தமிழ் அரசர்களும் செய்து விட்டார்கள். பெரிய புராணத்தையும், பக்த லீலாமிர்தத்தையும், கந்த புராணத்தையும், கம்பராமாயணத்தையும் கட்டிக்கொண்டு அழும் தமிழன் எவனாகட்டும் அவன் தனித் தமிழர் கொள்கை இதுவென எதையாவது காட்ட முடியுமா என்றும், இப்படிப்பட்ட தமிழன் யாராய் இருந்தாலும் அவன் பண்டார சன்னதியாயிருந்தாலும், அவன் நாஸ்திகனல்லாமல் அதுவும் முழு முழு நாஸ்திகனேயல்லாமல், கடுகளவு ஆஸ்திகனாகவாகிலும் இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

அன்பே கடவுள், உண்மையே கடவுள், ஒழுக்கமே கடவுள், ஒப்பு நோக்கே (சமரசமே) கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு தமிழ் ஆஸ்திகன் மேற்கண்ட பெரிய புராணாதிகளையும், அவற்றில் வரும் கடவுளர்களையும், அவர்களது செயற்கைகளையும், பாராட்டி வழிபடுகிறவனாக இருந்தால் அவன் எப்படி தமிழ் ஆஸ்திகனாவான்? என்று கேட்கிறோம்.

தமிழனுக்கு உச்சிக்குடுமி எப்படி வந்தது! தீட்சை எங்கிருந்து வந்தது? பஞ்சாட்சரமேது! முத்திரஸ்தானம், (சமாசனம்) ஏது? அஷ்டாட்சரம் எது? பஞ்சகச்சம், திருநீறு திருநாமம் பூச்சுக்கள் ஏது? என்பன போன்ற எத்தனையோ விஷயங்கள் கவனித்தால் உண்மைத் தமிழன் எவனாவது இருக்கிறானா என்பதும் விளங்காமல் போகாது. தமிழனென்று தன்னை சொல்லிக் கொள்ள வேண்டுமென்றும், தமிழனுக்கு என்று தனிக் கொள்கைகள், அடையாளங்கள் ஒன்றும் இருக்க வேண்டியதில்லை என்றும் கருதிக் கொண்டு தமிழனில் பெரியவனாகத் தன்னைக் கருதவேண்டும் என்றிருப்பவர்கள் நம்மீது கோபித்துத்தான் தீருவார்கள். அதற்கு நாம் என்ன செய்யலாம்? இவர் கோபத்தைவிட, அதனால் ஏற்படும் கேட்டைவிட, தமிழர்களின் மானம் பெரிது என்று எண்ணுவதால் இவர்கள் கோபத்தால் வந்தது வரட்டும் என்கின்ற துணிவு கொள்ளவேண்டி இருக்கிறது.

பெரியார் ஈ.வெ.ரா,குடிஅரசு கட்டுரை _ 13.11.1943
                                                                                                                                                                

அக்மார்க் முத்திரைத் துரோகத்தை அடையாளம் காட்டிக் கொண்டுள்ளனர்.

நேற்று காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு செய்தி ஒளிபரப்பப்பட்டது.

பெரியார்தம் சொத்துக்களை யாருக்கும் எழுதி வைக்கவில்லை; அப்படி எழுதி வைக்கப்படாத நிலையில், அந்தச் சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ளலாம் என்பதுதான் சட்டத்தின் நிலை!

அப்படி அரசு எடுத்துக் கொள்ளவில்லையென்றால், உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடருவோம் என்று கழகத்தால் விலக்கப்பட்ட ஒருவர் பேட்டியளித்ததாக அந்தத் தனியார்த் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

இதன்மூலம் பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது; அவர்களின் ஆற்றாமையும் அப்பட்டமாகவும் தெரிந்து விட்டது.

திராவிடர் கழகம் பெரியார் கொள்கைகளை சரியாகப் பரப்பவில்லை; பெரியார் நூல்களை வெளியிடவில்லை; நாங்கள்தான் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம் என்று சொன்னவர்களால் பெரியார் சொத்துக்களை நாங்கள்தான் கைபற்றுவோம். மிகமிக வேகமாகப் பெரியார் கொள்கைகளைப் பரப்புவோம் என்று கூறும் திராணி நாணயம் தங்களிடத்தில் அறவே இல்லை என்பதை இதன்மூலம் ஒப்புக்கொண்டு விட்டார்களா இல்லையா?

அக்மார்க் முத்திரைத் துரோகம்!

பெரியார் சொத்துக்களை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இதற்கு முன்புகூட சில துரோகிகளும், பார்ப்பன ஊடகங்களும் ஊளையிட்டதுண்டு. வழக்கு மன்றம் சென்று மூக்கறுபட்டதும் உண்டு. மக்கள் குரல் டி.ஆர்.ஆர். அய்யங்கார் போன்றவர்கள் துப்பிய அந்த எச்சிலைக் கையில் எடுத்துக்கொண்டு அவர்களின் சீடர்கள் இப்பொழுது சிலம்பம் ஆட முன்வந்து தங்களது அக்மார்க் முத்திரைத் துரோகத்தை அடையாளம் காட்டிக் கொண்டுள்ளனர்.

இதுவும் ஒரு வகையில் நன்மைதான். பெரியார் கொள்கையை எங்களால்தான் பரப்ப முடியும் என்று மார்தட்டியவர்கள் இப்பொழுது பெரியார் சொத்துக் களை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லுவதன்மூலம் இவர்களின் நோக்கம் பெரியார் கொள்கைகளைப் பரப்புவதல்ல பெரியார் கொள்கை களைப் பரப்பும் உண்மையான அமைப்பைச் சிறுமைப் படுத்தவேண்டும் என்பதுதான் என்பதைப் பொது நிலையில் உள்ளவர்கள் புரிந்துகொள்ளும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்டதே!

காஞ்சிமடமும் கைலாகு கொடுக்கும்

உச்சநீதிமன்றம் வரை செல்லுவார்களாம். அந்த அளவுக்குப் பொருளாதாரப் பின்னணி அவர்களுக்கு இருக்கிறது இப்படி ஒரு முயற்சி மேற்கொண்டால் காஞ்சிமடம் வரை கைலாகு கொடுக்கமாட்டார்களா?

பார்ப்பன ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் காட்டாதா? அந்த விளம்பரத்தால் ஒருவருக்கொருவர் சந்தித்து கைகொடுத்துக் கொண்டு அற்ப சந்தோசம் அடைய லாம் அல்லவா!

தந்தை பெரியார் அவர்கள் கழகத்திற்கு வாரிசு ஏற்பாடு என்று செய்ததையும், அன்னை மணியம்மையார் அவர்கள் தமக்குப் பிறகு பெரியார் அறக்கட்டளையின் ஆயுள் செயலாளர் யார் என்பதையும் திட்டவட்டமாக சட்ட ரீதியாக எழுதி வைத்துத்தான் ஏற்பாடு செய்துதான் சென்றிருக்கிறார்கள். சொத்துக்களைச் சரியாகப் பதிவு செய்துதான் சென்றுள்ளனர்.

இதுபோல புல்லுருவிகள் தீட்டிய மரத்திலேயே கூர் பாய்ச்சுபவர்கள் வரக்கூடும் என்ற தொலைநோக்கோடு தான் அந்த ஏற்பாடுகளை அவர்கள் துல்லியமாகச் செய்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர் போலும்!

தீட்டிய மரத்தில் கூர்பாய்ச்சுவதா?

எந்த இயக்கத்தால், எந்தத் தலைவரால் ஆளாக்கப் பட்டார்களோ, விளம்பரப்படுத்தப்பட்டார்களோ, அந்தத் தலைவர் மீதே கட்டாரியை வீசும்போது குறைந்தபட்சம் கறுப்புச் சட்டையைக் கழற்றிவிட வேண்டும்.

இதே பெரியார் அறக்கட்டளைக்காக ஒரு கால கட்டத்திலே வாதாடியதைக்கூட மறந்துவிட்டு, அதற்கு முரணாக முண்டா தட்டுவது என்றால், கூலிக்காக மாரடிப்பது என்கிற ரகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் என்றுதானே கருதப்படவேண்டும்.

பெரியார் சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ளவேண்டும் அதன்மூலம் தமிழர்களின் மூச்சுக் காற்றான விடுதலை நாளேட்டை நிறுத்தவேண்டும்; பகுத்தறிவு இதழான உண்மையை ஊத்தி மூடவேண்டும்.

கழக வெளியீடுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அதன்மூலம் பார்ப்பனர்கள் வட்டாரத்தில் ஆழ்வார் பட்டத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று துடியாய்த் துடிப்பதை தமிழர்கள் பார்ப்பனர் அல்லாத கோடானு கோடி மக்கள் சமூகநீதி தேவைப்படும் கோடானு கோடி அண்டை மாநில மக்கள்கூடப் புரிந்துகொள்ளமாட்டார்களா?

எத்தனையோ வழக்குகளைச் சந்தித்தவர்தான் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே புதிய சட்டம் ஒன்றை 31சியின் இணைப்பதற்குக் காரணமாக இருந்தவர்.

முதல் திருத்தம் தந்தை பெரியார் அவர்களால் நிகழ்ந்தது என்றால் 76 ஆவது சட்டத் திருத்தம் 31பியின் கீழ் அவரின் நம்பிக்கைக்குரிய சீடர் வீரமணி அவர்களால் ஏற்பட்டது என்பதை வரலாறு கூறிக்கொண்டே இருக்கும்.

ஆணவத்தின் சேட்டை!

ஏதோ ஒன்றில் தற்காலிக வெற்றி பெற்றுவிட்டதால், வானத்தின் கூரையே தங்கள் கைவசம் வந்துவிட்டதாக அதிகம் ஆடுவது ஆணவத்தின் சேட்டைக் குணமே!

ஒருவகையில் மகிழ்ச்சிதான். இவ்வளவு சீக்கிரம் தங்களை அங்க மச்சத்தோடு அடையாளம் காட்டிக் கொண்டு விட்டார்களே என்கிற வகையில் நமக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான்!

---------------------------------------

விநாசகாலே...

பெரியார் சொத்துக்களை அரசு எடுத்துக்கொண்டு விடுதலையை நாள்தோறும் அரசு வெளியிடும்.

கடவுள் இல்லை, இல்லவேயில்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று அரசு பிரச்சாரம் செய்யும் நம்புங்கள்.

ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதுர்லோகம் ஆகியவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன், நம்புகிறவன் மடையன்; இவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகாமகா அயோக்கியன் என்று அரசாங்கம் எழுதும் என்று நம்பித் தொலையுங்கள்!

பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும் புலி வாழும் காடு என்று அட்சரம் பிறழாமல் அப்படியே அப்பட்டமாக தலையங்கம் தீட்டும் இதனையும் அதிகமாகவே நம்புங்கள்! நம்புங்கள்!!

தமிழர்களே, உங்கள் சூத்திரப்பட்டம் ஒழிய, கோயிலுக்குப் போகாதீர்கள்; நெற்றிக் குறிகளை இடாதீர்கள்! மதப் பண்டிகைகளைக் கொண்டாடதீர்! பார்ப்பானை பிராமணன் என்று அழையாதீர்! என்று கண்டிப்பாக கால் புள்ளிகளை மாற்றாமல் அரசு கட்டுரை தீட்டும் என்று கண்டிப்பாக நீங்கள் நம்பியே ஆகவேண்டும்.

அட பைத்தியங்களே, எங்கே தொடங்கி, எங்கே பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

விநாசகாலே விபரீத புத்தி!

---------------------------------------

தங்களுக்குக் கிடைக்காதது நாசமாகப் போக வேண்டும் என்று கருதுகிற பார்ப்பன மனப்பான்மை பார்ப்பனர் அல்லாதாரிடம்கூட தொற்றுநோயாக ஒட்டிக்கொண்டு விட்டதையும் இத்தகைய அனுபவங்கள்மூலம் அறிய முடிகிறது.

தந்தை பெரியார் அவர்களையும், அன்னை மணியம்மையார் அவர்களையும் மறைமுகமாகத் தாக்க ஆரம்பித்துள்ளவர்கள், அவர்கள் ஏற்பாட்டைக் கொச்சைப்படுத்தக் கிளம்பிவிட்டார்கள். அடுத்து வெளிப்படையாகவே களம் இறங்கத் தயாராகி விடுவார்கள் என்பதில் அய்யமில்லை.

பெரியார் சொந்த புத்தியில்லாதவராம்

ஏற்கெனவே கோவையில் அவர்கள் வெளியிட்ட நூலில் அதில் தந்தை பெரியார் சொந்தப் புத்தி இல்லாதவர் என்றும், அன்னை மணியம்மையார் பாண்டிமாதேவி என்னும் சூழ்ச்சிக்காரப் பெண்மணி என்றும் குறிப்பிட்டு ஆழம் பார்த்துள்ளவர்கள்தானே!

பெரியார் கொள்கைகளைத்தானே அவர்களும் பரப்புகிறார்கள் என்று மேம்போக்காக அனுதாபம் காட்டிய பொதுவானவர்கள்கூட இப்பொழுது முகம் சுளிக்கும் நிலைதான் ஏற்பட்டுள்ளது காலங்கடந்த நிலையில் அத்தகைய வர்கள் உண்மையை உணரும் நிலையை ஏற்படுத்தித் தந்தமைக்கு மிக்க நன்றி! (பலரும் தொலைப்பேசி வழியாக இந்த நிலையைக் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க நற்செய்தியாகும்).

பெரியார் சொத்தை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் அதன்மூலம் பெரியார் கொள்கைகள் முடக்கப்படவேண்டும் என்கிற திசையில் வெறிபிடித்துக் கிளம்பி உள்ளவர்கள் தங்களைத் தாங்களே குடலைக் கிழித்துக் கொண்டு அடையாளம் காட்டியதற்கு நன்றி! நன்றி!! நன்றி!!

மன்னிக்கமாட்டார்கள் தமிழர்கள்

பெரியார் நூல்களை அரசுடைமை ஆக்கவேண்டும் என்று கிளம்பி, இப்பொழுது பெரியார் சொத்துக் களையே அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சுவர் ஏறிக் குதிப்பவர்கள் மீது, வன்முறையில் ஈடுபடுபவர்கள்மீது சுயமரியாதைக்காரர்களும், பகுத்தறிவாளர்களும், இனவுணர்வாளர்களும், பொது நிலையில் உள்ள தமிழர்களும் எரிச்சல் கொள்வார்கள், ஏளனமும் செய்வார்கள் ஏன் மன்னிக்கவும் மாட்டார்கள் என்பதில் அய்யமில்லை!

அரசு எடுத்துக்கொண்ட பல அறக்கட்டளைகளின் நிலை கதி என்னவாயிற்று என்பது ஊருக்கும், உலகுக்கும் தெரியுமே!

கலி. பூங்குன்றன்,
பொதுச்செயலாளர்,
திராவிடர் கழகம்.

சென்னை,24.7.2010

Wednesday, July 21, 2010

நாத்திக உலகின் சுடர் விளக்கான கர்னல் ராபர்ட் இங்கர்சால்

நாத்திக உலகின் சுடர் விளக்கான கர்னல் ராபர்ட் இங்கர்சால் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1893).


நியூயார்க்கில் பாதிரி யாரின் மகனாகப் பிறந்து, பைபிளையும், மதத் தொடர் பான நூல்களையும் அவர் கரைத்துக் குடித்ததுண்டு. தன் மகனும் தன் வழியில் மதப்போதகராக மணம் வீச வேண்டும் என்பதுதான் அவர்தம் தந்தையாரின் தணியா வேட்கை.

அந்த முயற்சியும், கற் பித்தலும்தான் இங்கர் சாலை மத எதிரியாகவும், கடவுள் மறுப்பாளராகவும் மாற்றிற்று. முழுவதும் படித் துணர்ந்ததால்தான் முழு ஆற்றலோடு அவற்றை மறு தலிக்க முடிந்தது அவரால்.

அவர் எழுப்பிய வினாக் கணைகள் முன் நிமிர்ந்து நிற்க முடியாத மதவாதிகள் மருண்டு ஓடினார்கள்.

ஏழையாக வாழ்பவன் தான் மேல் உலகில் இன்பம் அடைவான். உணவு இல்லை என்பதற்காக நீ வருந்தாதே! ஏன் எனில் மேல் உலகில் உனக்கு உணவு கிடைக் கும்! என்பது போன்ற கவைக்கு உதவாத கசுமா லங்களைக் கண்டித்து கருத்து மழை பொழிந்தார்.

நாட்டு மக்கள் முன் னேற்றம் அடையவேண்டு மாயின் , சண்டைகளும் துன்பங்களும் ஒழிந்து நாட் டில் நிரந்தர ஒற்றுமையும் நன்மையும் நிலவ வேண்டு மாயின், மக்களைப் பீடித் துள்ள மதவெறி, மூடநம்பிக் கைகள், குருட்டு வழக்கங் கள் மண்ணோடு மண் ணாய் மடியவேண்டும் என்று அரிய சொற்பொழிவு களை நிகழ்த்தினார்.

எல்லையற்ற ஒரு கடவுள் மக்களையும் அவர்களின் சந்ததியினரையும் படைத் தாரா? அப்படியெனில் மூட மக்களை அவர் ஏன் படைத்தார்?

நடைபெற்ற போர்க ளுக்கும், அவற்றில் பெருகி ஓடிய மனித ரத்த ஆறு களுக்கும் இக்கடவுள்தான் பொறுப்பாளியா? அனேக நூற்றாண்டுகளாக நிகழ்ந் திட்ட அடிமை வியாபாரத் துக்கும், சதா சவுக்கடியி னால் தீராத் துன்பத்தில் ஆழ்ந்த மக்களுக்கும், பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளைத் தாயிடம் இருந்து பிரித்துக் கொடிய மாந்தர்கள் விற்பனை செய் ததற்கும் காரணகர்த்தா உங்கள் கடவுள்தானா?

இங்கர்சாலின் எரிமலைப் பொழிவின் முன் மதம் மதப் பிரச்சாரகர்கள் தாக் குப் பிடிக்க முடியவில்லை. அவர் சொற்பொழி வைக் கேட்க ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் திரண்டனர்.

ஒரு நாள் பாதிரியார் ஒருவர் இங்கர்சாலிடம் சிக் கினார். அந்தப் பாதிரியார் ஞானஸ்நானம் பற்றிப் பெரிதாக அளந்து கொட்டி னார்.

இங்கர்சால் ஒரே வரியில், எனது ஞானஸ்நானம் சுத்தமாகக் குளிப்பதுதான் அது உங்கள் ஞானஸ் நானத்தை விட சாலச் சிறந்தது என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். அதற்கு மேல் பாதிரியாரின் பாதம் அந்த இடத்தில் பதியுமா?

வழக்கறிஞராகவும், அட்டர்னி ஜெனரலாகவும் இருந்து ஈட்டிய பொருளை எல்லாம் பொதுப் பணிக்கே செலவிட்ட பெருமகன் அவர். இவருடைய நூல்களையும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளி யிட்டுள்ளது.

- விடுதலை (21.07.2010) மயிலாடன்
                                                                                                                                                                     
Monday, July 19, 2010

31சி - மூன்று பார்ப்பன அதிகார வட்டத்துக்குள் நுழைந்து வெளிவந்தது

1994 ஜூலை 19 ஆகிய இந்நாள் சமூக நீதி வரலாற்றில் வைரக் கீற்றைப் பொறித்த புதுநாள் ஆகும். இன்றுதான் தமிழ்நாட்டின் 31சி _ சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்த ஒரு பொன்னாள்.

எந்த மாநிலத்திலும் இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டை விஞ்சக்கூடாது என்ற ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றம் ஆணி அடித்துக் கூறிவிட்டது. (16.11.1992).

தமிழ்நாட்டில் இருந்து வரும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பெரிய பள்ளத்தில் விழுந்துவிட்டது. இனி எழுவது என்பது இயலாத ஒன்று என்று இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள்_ பார்ப்பன ஆக்டோபஸ்கள் ஆனந்த மலர்ப் படுக்கையில் படுத்துப் புரண்டனர்.

அவர்களுக்கு ஒன்று தெரியாது _ அல்லது ஆத்திரத்தில் மதி மயங்கிவிட்டனர்.

தமிழ்நாட்டில் தந்தை பெரியார் என்ற மாமனிதர் பிறந்தார்_ வாழ்நாள் எல்லாம் சமூக நீதிக்காக சமர் புரிந்தார். தனக்குப் பிறகும் கூட ஓர் இயக்கத்தைக் கட்டுக்கோப்புடன் விட்டுச் சென்றார்.

தளபதிகளைத் தயாரிப்புடன் விட்டுச் சென்றார் என்பதை எப்படியோ மறந்து தொலைத்தனர்.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்_ இந்த நெருக்கடியிலிருந்து சமூக நீதியைக் காக்கத் தயாரித்துத் தந்த சட்ட முன்வடிவுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் 31சி_யின் அடிப்படையில் அமைந்த ஒன்றாகும்.

31 சி என்ன சொல்லுகிறது?

அரசு வழிகாட்டு நெறிகளை, அரசமைப்புச் சட்டத்தில் நான்காம் பிரிவு கூறுகிறது. அதில் உள்ள கொள்கைகளுக்கு ஏற்ப, மாநில அரசு ஒரு சட்டம் செய்து, அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிருந்தால், அந்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் 14 ஆவது மற்றும் 19 ஆவது சரத்துகளுக்கு முரணானது என்ற முறையில் அது செல்லாதது ஆகாது.

இந்திய அரசமைப்புச் சட்டம் நெடுநாளாக இருந்தாலும், இதன் அடிப்படையில் சட்டம் இயற்றி சமூக நீதியைக் காப்பாற்றிடலாம் என்ற எண்ணம்_ செயல் திராவிடர் கழகத் தலைவருக்கு மட்டும்தானே ஏற்பட்டது? இந்தச் சட்டம் மூன்று பார்ப்பன அதிகார வட்டத்துக்குள் நுழைந்து வெற்றிகரமாக வெளிவந்தது என்பது சாதாரணமானதல்ல.

தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதா (பார்ப்பனர்) சட்டத்தை தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றிக் கொடுத்தார். (31.12.1993)

நாடாளுமன்றத்தில் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் (பார்ப்பனர்) இச்சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தார். குடியரசுத் தலைவர் சங்கர்தயாள்சர்மா (பார்ப்பனர்) ஒப்புதல் அளித்தார்.

பார்ப்பனீய மேலாண்மையை வெல்லும் அளவுக்குச் சமூக நீதி வலிமை உடையது என்பதை வலிமையாக நிரூபித்துக் காட்டிய பெருமையும் தலைவர் மானமிகு வீரமணி அவர்களுக்கு உண்டு.

பார்ப்பனர்களிடமிருந்து இடங்களைப் பறிக்கலாமே தவிர, அவர்களின் மூளையைப் பறிக்க முடியவே முடியாது என்று சொன்னவர் சங்கர்தயாள்சர்மா.

அத்தகையவரை எல்லாம் பயன்படுத்தி, சமூக நீதியைக் காப்பாற்றிக் கொடுத்தார் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி. இந்தப் பெருமையும், புகழும், சாதனையும் இன்னும் அதிக அளவில் சீரிய அங்கீகாரத்தையும், மேலான பதிவையும் உலகளவில் பெற்றிருக்க வேண்டும். என்ன செய்வது, ஊடகங்கள் எல்லாம் அவாள் கைகளில் இருக்கிறதே! நாட்டு அரசியலிலும் பொறாமைத் தீ அடை காத்து நிற்கிறதே!

-விடுதலை (19.07.2010), மயிலாடன்
                                                                                                                                                                 

Sunday, July 18, 2010

'ஓ' அந்த ஞானிதானா இவர்?

தோழர் ஞாநி மீண்டும் ஓ போட வந்துள்ளார் எதற்காம்? பெரியாரின் எழுத்து பேச்சு முதலியவற்றை யாரும் வெளியிடலாம் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறி விட்டதாம். அதற்காக ஓ போட முன் வந்துள்ளார். பெரியாரின் எழுத்துகள், பேச்சுகளை யார் வேண்டுமானாலும் வெளியிட்டால்தான் திரிபுவாதங்கள் தலை தூக்கும், புத்தர்பற்றி ஜாதகக் கதைகள்போல் கிளம்பினால்தான் பெரியார் கருத்துகள் திரிபுவாதங்களுக்கு ஆளாகும். அதன் மூலம் நீர்த்துப் போனால் நல்லதாகப் போயிற்று என்ற நச்சு எண்ணங்களை நெஞ்சங்களில் தேக்கி வைத்துள்ளவர்கள் இப்படித்தான் ஓ போடுவார்கள்.

குமுதம் இதழில் எழுதும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை குமுதம் அனுமதியின்றிப் பயன்படுத்தக் கூடாது என்று சொன்னதற்காக குமுதத்திடமிருந்து முறுக்கிக் கொண்டு கிளம்பியவர். இப்பொழுது அதே குமுதத்திடம் சரணம் அடைந்து ஓ போடுகிறார்! ஓ அந்த ஞானிதானா இவர்? இவருக்குச் சுயமரியாதை என்பது தவணை முறையில் தான் வந்து வந்து போகும் போலும். சாமி. சிதம்பரனார் எழுதிய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டது என்றவுடன் அவரால் எழுதப்பட்ட தமிழர் தலைவர் என்ற தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்ட ஒரு பதிப்பகம் தமிழர் தலைவர் (A Life History of Periyar E.V. Ramasamy Naicker) என்று வெளியிட்டுள்ளதே.

ஜாதி ஒழிப்புக்காகத் தம்மையே ஒப்படைத்துக் கொண்ட தலைவரை ஜாதி அடைமொழி போட்டு நூல் வெளியிட்டுள்ளதே. அதற்கு இந்த நூலாரின் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பாதது ஏன்? இவர் யாருக்காக ஓ சபாஷ் போடுகிறாரோ அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடிகவேள் எம்.ஆர். ராதா பெயரால் நூல் வெளியிட்டு, தந்தை பெரியாரை சிறுமைப்படுத்தி எழுதியுள்ளார்களே. அதனைச் சீண்டி எழுதியதுண்டா இந்தத் திருவாளர்?

அவாளுக்கு மிக நன்றாகவே தெரியும். பெரியார் பெயரைச் சொல்லும் மற்றவர்களைப் பற்றி புகழ்ந்து எழுதினாலும் பாதிப்பு ஏற்படப் போவதில்லை. திராவிடர் கழகத்தையும், அதன் தலைவரையும் சிறுமைப்படுத்தினால்தான் தங்கள் ஆத்துக்கு நல்லது என்ற நினைப்புதான் அவாள் ஆழத்தில் உள்ளது; அதன் வெளிப்பாடே இந்த ஓ கூட்டம்.

--------- விடுதலை ஞாயிறு மலர் (17.07.2010)

Saturday, July 17, 2010

ரவிசுப்பிரமணியத்தின் இங்கே பிராமணன் (காஞ்சிமட மர்மங்கள்) - 3

ரவி சுப்ரமணியத்தின் இங்கே பிராமணன் முந்தய ரெண்டு தொடர்களும் படிக்க இந்த சுட்டியை பார்க்க பகுதி-1 மற்றும் பகுதி-2 . அதன் தொடர்ச்சி இந்த பகுதியில்  தொடருவோம். இன்னும் மகா பெரியவளின் அக்கிரமங்கள் போக போக படிக்க வியப்பூட்டும்.இப்பேற்பட்டவாளுக்கு பவளவிழா  ஒரு கேடா என்று நினைப்பீர்கள். அதோடு மட்டும் அல்ல இப்பேர்ப்பட்ட பார்ப்பனர்களை எல்லாம் காஞ்சி சங்கரமடத்தில் வைத்துவிட்டு சோ ராமசாமி எங்கே பிராமணன்? எங்கே பிராமணன்? எபிசோடு போட்டு தேடுவது எவளவு பெரிய கயவாளித்தனம் என்பதும் புலப்படும்....சரி வாருங்கள் இங்கேதான் பிராமணன் என்பதை ரவிசுப்ரிமணித்தின் நானும் அவரும் தொடரில் இருந்து பார்ப்போம். இதோ ரவிசுப்பிரமணியம் பேசுகிறார்...

ஒரு நிமிஷம் ...
       காளிகாம்பாலை வணங்கி நெஞ்சுருகி பிரார்த்தனை செய்யாம நான் எதையும் ஆரம்பிக்கிரதில்லை...
       இப்பவும் அந்த அம்மனைதான் துணைக்கு அழைக்கிறேன்.எத்தனை கஷ்ட்டதுல இருந்தாலும் நான் கூப்பிட்டா....அஞ்சு,பத்து நிமிஷம்
கண்ணை மூடிட்டு அவ சந்நிதியில உட்கார்ந்தா கண்டிப்பா என்னை காப்பாத்துவா...அந்த நம்பிக்கை இப்பவும் எனக்கு இருக்கு.      
       என்ன சிரிக்கிரிங்க?
       என்னடா இது.அப்ருவரயிட்டு அம்பாளை கூபிடரான்னு சிரிக்கிரிங்களா?யாருமே தப்பு செய்யரதுக்காக மண்ணுல பிறக்கரதிள்ளே....
 குழந்தை வளர்ந்து படிச்சு பொறுப்புள்ள வேலை பார்த்து நல்ல மனுஷன்னு பேர் வாங்கனும்னு தானே பெத்தவங்க நினைப்பாங்க?
      எங்க அப்பாவும் அப்படிதான் நினைசாரு....
      அதனால  என்னை ராமகிருஷ்ணா பள்ளியில சேர்த்தார்.மற்ற பள்ளிகளை விட இங்கே படிக்கிற மாணவர்களுக்கு பக்தி
உணர்வு அதிகம்.
      நல்ல கலாசாரதுல வந்த குடும்பம் எங்களுடையது.தெலுங்கு  பிராமண வகுப்பை சேர்ந்தவன் நான்.
      ஏற்க்கனவே சொன்னமாதிரி அப்பாவுக்கு மஹா பெரியவாலை தரிசனம் பண்ணினாலே மனசுல இருக்குற சங்கடம் சுமை எல்லாம்
கரைந்சுடும்க்ற நம்பிக்கை.
      என்னை சின்ன பையனா இருக்குரப்பவே அப்பா மஹா பெரியவாவாள்கிட்ட அழைச்சிண்டு போயிருக்கார்.
      அவரோட கடைக்கண் பார்வை பட்டாலே போதும்னு காதுட்டுநின்னிருக்கோம்.
      அப்ப எல்லாம் கற்பனை செஞ்சு கூட பார்த்ததில்லை.இதே சங்கரமடதுல ஜெயேந்திரர்க்கு இத்தனை நெருக்கமா ஆவேன் என்று...
      ௧௯௯௪ ம் வருஷம் தான் நான் ஜெயேந்திரரை முதல் முறையாக சந்திச்சேன்.இவரோட அறிமுகமும்,அன்பும் கிடச்சப்ப எல்லாமே
மஹா பெரியவாளோட கருணையின்னுதான் நினைச்சேன்.
      அப்படித்தானே   ஒரு சாதாரண மனுஷன் நினைப்பான்?
      இப்படியொரு நிலைமை வரும்னு யார் நினச்சு பார்திருப்பங்க?
      எனக்கு படிப்புல ஆர்வம்  ஜாஸ்தி.நிறைய படிப்பேன்.நல்ல மார்க் வாங்குவேன்.மூணு எம்.ஏ. பாஸ் பண்ணியிருக்கேன்.டிப்ளமோ-இன்-
பிசினஸ் கூட படிச்சேன்.எல்லாமே வீட்டுல இருந்து புக்ஸ் வாங்கி படிச்சு பரீட்சை எழுதினதுதான்.
      அதெல்லாம் ரொம்பவும் சந்தோஷமான காலங்க....இப்ப நினைச்ச கூட கண்ணுல தண்ணி தலும்புது....தி.நகர்-ல ராமநாதன்
தெருவுலேதான் இருந்தோம்.எங்க வீட்டுக்கு படிக்கிற பெண்கள் வருவதும் பேசறதும் உண்டு.எங்க வீட்ல எல்லா சுதந்திரமும் உண்டு.
யாரும் எதுவும் சொல்ல மாட்டங்க.மனசுல குப்பை சேராத காலம் அது.ஹிந்தி பாட்டு,ஸ்போர்ட்ஸ் இப்படி ஜாலியா இருந்தேன்.
       எல்லார்கிட்டயும் நல்ல பழகுவேன்.ஆனாலும் ரொம்ப க்ளோஸ் பிரென்ட்ஒருவன் தான்.
      'ஈஸி கோஇங்கா' இருந்ததால படிக்கிரப்போவும் சரி,வேலைக்கு போகும் காலத்திலேயும் சரி எல்லோருக்கும் என்னை பிடிக்கும்.
      எனக்கு பிராமின் -நான் பிரமின்க்ரா வித்தியாசமெல்லாம் கிடையாது.
      என்னை   பொருத்தவரை உலகத்துல ரெண்டே ஜாதிதான்.கடவுள் நம்பிக்கை உள்ள ஜாதி,கடவுள் நம்பிக்கை இல்லாத ஜாதி.
      எனக்கு பிராமணர்களை விட மத்தவங்கதான்நிறைய  உதவியிருக்காங்க.
     காதல் கல்யாணம் தான் செஞ்சுகிட்டேன்.அவ நாயுடு வகுப்பைச் சேர்ந்தவ.நல்லவ.அவதான் எனக்கு காளிகாம்பாளை அறிமுக
படுதிவச்சா.நாலடைவுல தீவிர பக்தனாயிட்டேன்.கண்ணை மூடி அவ கோயில்ல உட்கார்ந்தா அம்பாள் பக்கத்துல வந்து பெசரமதிரி
இருக்கும்.பெத்த தாயை விட..... இருங்க அழுகயா  வருது .....அவதாங்க எல்லாம்.யார் கைவிட்டாலும் அவ கைவிடமாட்ட.
இது நிச்சயம்.
      ஆனா கோட்டா சிஸ்டம் வந்ததுல தொழில் ஆட ஆரம்பிச்சுடுச்சு...வேற வழியே இல்ல.சென்னை வந்துட்டேன்.
      அதே தி.நகர் ராமநாதன் தெரு......
      இங்கே விசுவநாதன்,லீலா,ரமேஷ் இவங்க எல்லாம் என்னோட பால்ய காலத்து இருந்தே தெரிஞ்சவங்க அநேகம எல்லோரும்
ரெண்டு,மூணு வயசு வித்தியாசத்துல இருந்தோம்.         

மணி,லீலா,ரமேஷ் , விசுவநாதன் ..இந்த நாலு பேர்ல மணிதான் பெரியவர். அவர் காலமாகிவிட்டார். லீலாதான் ஜெயந்திறரின் மறுபக்கத்தை எனக்கு உணர்த்திய முதல் மனுசி..

அந்த நாளுல பெரிய பணக்கார குடும்பம் இது. 22 கிரவுண்டு இருந்தது..இவங்க அப்பா,தாத்தா எல்லாரும் சுதந்திர போராட்ட தியாகிகள்.

இவங்க வீட்டுக்கு மகாத்மா காந்தி, நேரு இன்னும் பெரிய மந்திரிங்க எல்லாரும் வந்திருக்காங்க.

நான்   சின்னப் பையனா இருக்குறப்ப நெல்லிக்கா பொருக்குறத்துக்காகவும், விளையாடவும் இங்கே போவேன்..இவங்க இருந்த ராமேஸ்வரம் தெருவும், நாங்க இருந்த ராமநாதன் தெருவும் பக்கத்து பக்கத்துலதான்...

ஆனா நாளடைவுல மூணு கிரவுண்டு வீட்டை மாத்திரம் வச்சிட்டு, மீதிய வித்துட்டாங்க.

இந்த வீடு கூட, ரொம்பவும் கஷ்ட்ட தசயிலதான் இருந்தது. விசுவநாதனும், அவர் பெண்டாட்டி சரஸ்வதியும்தான் உத்தியோகத்துக்கு போறவங்க...

மீதி பேர் எல்லாம் வீட்டோட..

இந்த வீட்டுக்கு மகாப் பெரியவாள், அந்த காலத்துலேயே வந்து 108 நாட்கள் தங்கி இருந்தார்...

அதுக்கு அப்புறம் தான் சுபிட்சம் வந்தது.

பெரியவர் மனசுல சதா சர்வகாலமும் நல்ல எண்ணங்கள், தெய்வ சிந்தனை ஓடினதாலே...அவரோட குரல் தெய்வத்தின் குரலாயிருந்தது அந்த வீடு சுபிட்சம் வந்தது.

பின்னாலே சின்னவர் - அவர்தான் ஜெயந்திரரும் வந்தார்..அவரது எண்ணங்களுக்கு ஏற்ப எல்லாமே தலைகீழா மாறிடுத்து....
                                                                [ரவிசுப்பிரமணியம் எழுதிய நக்கீரனின் நானும் அவரும் நூலில் பக்கம் 14 - 17]

ஜெயந்திரர் தன் என்னத்துக்கு ஏற்ப, பொம்பிளைன்களை மாத்தினார....இல்லே, இந்த பொம்பிளைங்கதான் அவரை அப்படியெல்லாம் ஆட வச்சாங்களா என்று ரவிசுபிரமனியம் கூறிய தொடர்ச்சியை அடுத்த பகுதில் பார்ப்போம்...கொஞ்சம் காத்திருங்கள்......


            

எது தலைமை? எது கழகம்? சாதிக்கும் சக்தி யாரிடத்தில்?

சமூகநீதியில் கழகம் கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல.

சமூகநீதிக்காகத்தான் தந்தை பெரியார் காங்கிரசை விட்டே வெளியே வந்தார்.

அதே காங்கிரசைக் கொண்டே சமூக நீதிக்காக அரசமைப்புச் சட்டத்தை முதன்முதலாகத் திருத்தவும் செய்தார்.

மத்திய அரசுத் துறைகளிலே இடஒதுக்கீடு கிடையாது; 1940-இல் திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டிலேயே இதுகுறித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றாலும் செயலுக்கு வரவில்லை. ஜனதா அரசு அமைத்த மண்டல் குழு பிற்படுத்தப்பட்ட மக்-களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்-கீட்டைப் பரிந்துரை செய்தாலும் (31.12.1980) அதனை நடைமுறைக்குக் கொண்டுவர பார்ப்பன ஆதிபத்தியம் அனுமதித்து விடவில்லை.

திராவிடர் கழகம் அதற்காக 42 மாநாடுகளை நடத்தவேண்டியிருந்தது; 14 போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. டில்லி வரை சென்று போராடியது திராவிடர் கழகம் -_ தமிழர் தலைவர் மானமிகு வீரமணி தலைமை யில்.

அதன் விளைவாக இந்தியா முழு-மையும் உள்ள அனைத்துப் பிற்படுத்தப்-பட்ட மக்களுக்கும் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு வழி செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் சமூகநீதியின் ஆணி வேரையே வெட்டும் பொருளாதார அளவுகோலைத் திணித்தார். அதனை எதிர்த்தும் திராவிடர் கழகம் போரிட்டது; இறுதி வெற்றி கழகத்துக்கே! மேலும் ஒரு புதிய வாய்ப்பு _ யாரும் எதிர்பார்க்காதவகையில் பிற்படுத்தப்பட்டோருக்கு அதுவரை இருந்து வந்த 31 விழுக்காட்டை 50 ஆக உயர்த்தி ஆணை பிறப்பித்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்.

தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு 69 விழுக்காடு இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் என்னும் நிலை உறுதியாயிற்று.

50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடுப் போகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தன் போக்கில் ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. அதனை எதிர்த்து 69அய் நிலை கொள்ளச் செய்யும் பொறுப்பும் திராவிடர் கழகத்தின் தோள்மீதுதான் விழுந்தது. தமிழர் தலைவர் உருவாக்கிக் கொடுத்த சட்டம்தான் 31-_சி பிரிவு என்பது. அது ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு பாதுகாப்பு வசதி செய்யப்பட்டது.

அதனை எதிர்த்தும் ஆதிக்கவாதிகள் உச்சநீதிமன்றம் சென்றனர். 1994 முதல் இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் உச்சநீதிமன்ற ஆயம் (ஙிமீஸீநீலீ) சமூக நீதியாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. (13.7.2010)

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீடு தொடரப்படுகிறது. அதனை நிலை நிறுத்த சில யோசனைகளையும் உச்சநீதிமன்றம் தந்திருக்கிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நீதியரசர் திரு. எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்கள் தலைமையில் உள்ளது. அதனைக் கலந்து கொண்டு, தக்க புள்ளி விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தந்து வெற்றி பெறும் வைர ஒளி மின்னுகிறது. இதன் மூலம் இந்திய அளவுக்கே நல்வழி காட்டும் பாதை திறந்து விடப்பட்டுள்ளது.

ஒன்றை இந்த நேரத்தில் குறிப்பிடுவது மிக மிக முக்கியம்.

தந்தை பெரியார் இல்லாத கால கட்டத்தில் சமூக நீதித்திசையில் இவ்வளப் பெரிய சாதனை களைச் செய்து வந்தது திராவிடர் கழகம் தான். அதன் தன்னிகரற்ற தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தொலை நோக்குச் சிந்தனைகள், சட்டப் பேரறிவு, நுண்மான் நுழைபுலம் இவற்றிற்கெல்லாம் அடித்தளமாக இருந்து வருகின்றன.

கல்லெல்லாம் மாணிக்கக் கல் அல்ல
கழகம் எல்லாம் திராவிடர் கழகம் அல்ல.
தலைவர் எல்லாம் தமிழர் தலைவர் வீரமணியும் அல்ல.

தந்தை பெரியார் அவர்கள் தந்த சமூகநீதியா கட்டும்; பகுத்தறிவுக் கொள்கையாகட்டும்; எந்த முற்போக்கு எண்ணங்கள் ஆகட்டும்; அவை எல்லாம் இந்தக் கழகத்தாலும், தலைமையாலும் தான் சாத்தியம் என்பது காலத்தின் கல்வெட்டாகும் - நடைமுறை உண்மையுமாகும்.

பெரியார் கொள்கைகளை நாங்களும் சொல்கிறோம் செய்கிறோம் என்று சொல்லக் கூடியவர்களிடத்தில் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருப்பார்களாக!

இவர்களால் இவற்றைச் சாதிக்க முடியுமா என்று ஒரு கணம் ஒரே ஒரு கணம் எண்ணிப் பார்த்தால் எது தலைமை? எது கழகம்? சாதிக்கும் சக்தி யாரிடத்தில்? என்பதில் தெளிவு பெற்று விடலாமே!


---------- விடுதலை ஞாயிறு மலர் (17.07.2010)

Friday, July 16, 2010

சீ... இப்படியும் சில மனிதர்களா? மனிதநேயம் என்றால் கிலோ என்ன விலை?

பொதுவாகவே தமிழர்கள், தமிழ் என்ற சொற்களைக் கேட்டாலே பார்ப்பனர்களுக்குக் கடும் வெறுப்பும், எதிர்ப்பும் ஏற்படும்.

அதிலும் குறிப்பாக ஈழத் தமிழர்கள் என்றால் அவை இரட்டிப்பு மடங்காவதைத் தமிழர்கள் உணரவேண்டும்.

பார்ப்பன ஊடகங்கள், குறிப்பாக இந்து, துக்ளக் போன்றவை கக்கும் நஞ்சு அவாள் மொழியில் சொல்லவேண்டும் என்றால் ஆலகால விஷமாகும்.

இலங்கையில் தமிழர்கள் ஈவு இரக்கமற்ற வகையிலும், யுத்த நெறிகளுக்கு மாறாகவும் இலங்கை இராணுவம் மேற்கொண்ட மனிதப் படுகொலை (நிமீஸீஷீநீவீபீமீ)யைத் தொடர்ந்து, அத்-தீவின் அதிபர் ராஜபக்சே போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்படவேண்டும் என்ற போர்க் குரல் உலகில் பல நாடுகளிலிருந்தும் வெடித்துக் கிளம்பியது.

காலந்தாழ்ந்த நிலையில் அய்.நா. இதுபற்றி விசாரணை நடத்திட மூவர் கொண்ட ஒரு குழுவினை நியமித்தது.

இந்தக் குழுவின் நியமனத்தை எதிர்த்து இலங்கை அமைச்சர் உண்ணாவிரதம் இருந்தார். கொழும்பில் உள்ள அய்.நா. அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கொழும்பில் உள்ள அய்.நா. தூதரைத் திரும்ப அழைத்துக் கொண்ட-தோடு, அங்குள்ள அலுவலகத்தையும் மூடும் நடவடிக்கையை அய்.நா. பொதுச்-செயலாளர் பான் கீ மூன் எடுத்தார்.

ஆனால், இதுபற்றி இவ்வார துக்ளக் (21.7.2010) ஏட்டில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தைப் படிப்போருக்கு சீ... இப்படியும் சில மனிதர்களா? மனிதநேயம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக் கூடியவர்கள் இன்னும் இருக்-கிறார்களே! என்றுதான் எண்ணத் தோன்றும்.

இலங்கையில் நடந்ததைவிட சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மனித உரிமை மீறல்கள் நடக்கவில்லையா? பெரிய நாடுகள் என்றால் ஒதுங்கிக் கொள்வது; இலங்கை போன்ற சிறிய நாடுகள் என்றால் அதிகாரத்தைக் காட்டுவது என்றால் அய்.நா.வின் நடவடிக்கைக்கு என்ன மரியாதை கிடைக்கும்? என்று கேள்வி கேட்கிறார் திருவாளர் சோ ராமசாமி அய்யர்.
இலங்கை அரசு மனித உரிமையை மீறியிருக்கிறது என்பதை சோவாலேயே மறுக்க முடியவில்லை. இவருக்கு உண்மையிலேயே மனித உரிமைகள்மீது அக்கறை இருந்திருக்கு-மேயானால், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மனித உரிமை மீறப்பட்டபோது அதனைக் கண்டித்ததுண்டா? விசாரணை நடத்து-மாறு அய்.நா.வை வலியுறுத்தித் தலையங்கம்தான் தீட்டியதுண்டா?

பொதுவாகப் பார்ப்பனர்கள் தங்கள் இனத்தைத் தவிர வேறு எங்கு அநீதி நடந்தாலும் அதனை வரவேற்கவே செய்யும் பாசிச மனப்-பான்மையைக் கொண்டவர்கள்தானே!

இலங்கையைவிட சீனா போன்ற நாடுகளில் மனித உரிமைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்று தலையங்கத்தின் முற்பகுதியில் குறிப்பிட்ட திருவாளர் சோ தலையங்கத்தின் பிற்பகுதியில் ஈழத் தமிழர்களை சிங்கள அரசு படுகொலை செய்ததற்கான நியாயங்களைத் திணிக்கிறார்.

விடுதலைப்புலிகள் பொதுமக்களை கேடயங்களாகப் பயன்படுத்தியதால் _ வேறு வழியின்றி இலங்கை இராணுவம் அவர்களைப் படுகொலை செய்ய நேர்ந்ததாகக் கூறுகிறார்.

இவர் கூற்றில் உண்மை இருக்கிறதா_ இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இலங்கை இராணுவமே பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, அங்கே வந்துவிடவேண்டும் என்று அறிவித்த நிலையில், அங்கு வந்த மக்களையும் ஒட்டுமொத்தமாகக் கொன்று தீர்த்தார்களே _ அதற்கு என்ன நியாயத்தை வைத்துள்ளார்?

முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வசதிகளையே செய்து கொடுக்காமல் அவதியுறச் செய்ததே இலங்கை அரசு_ அதற்கு என்ன காரணத்தைக் கண்டுபிடித்துச் சொல்லப் போகிறார்?

இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே நேரில் பார்த்து முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கும் ஈழத் தமிழர்கள் குறித்துக் கண்ணீர் வடித்ததற்கு எந்த கெட்ட நோக்கத்தினை துக்ளக் வட்டாரம் திணிக்கத் திட்டமிட்டுள்ளது?

தமிழின இளைஞர்களை கடத்திச் சென்று நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து துப்-பாக்கியால் சுட்டுக்கொன்ற கோரக் காட்சிகளை லண்டன் தொலைக்காட்சி ஒளிபரப்பியதே _ பார்ப்பனக் கூட்டத்திற்குப் பால் பாயாசம் அருந்தியதுபோல் இருந்ததோ! இதற்குமேலும் பார்ப்பனர்கள்பற்றி தமிழர்கள் தெரிந்துகொள்ளா-விட்டால், அது பரிதாபப்பட வேண்டிய துக்க நிலையேயாகும்.

--------- விடுதலை தலையங்கம் (16.07.2010)

Thursday, July 15, 2010

தமிழர்கள் நம்பும் பல கருத்துகளுக்கு ஆரியர் (பார்ப்பனர்கள்) கொண்டுள்ள உண்மையான கருத்து

(தமிழர்கள் நம்பும் பல கருத்துகளுக்கு ஆரியர் கொண்டுள்ள உண்மையான கருத்து)


கோயில்

கோவென மக்களை வெளியே அழ வைத்து வாழ்வதற்காக ஆரியர் தமிழரைக் கொண்டே கட்டிவைத்துக் கொண்ட இல்லங்கள்.

கும்பாபிஷேகம்
கும்பம்= வயது, அபிஷேகம்= ... செய்வது, ஆரியர் வயறு குளிர... வாழ்,ஓர் வழி.

அர்ச்சனை...

ஹர்- சேனை என்பதன் மருஉ. ஹர் என்ற கொள்ளைக் கூட்டத்தாரின் சேனை போல், தமிழரைக் கொள்ளையடிக்க உபயோகமாகும் தந்திரம்.

திராவிட மக்களின் செல்வத்தை வாழ்வையும் இந்த நாட்டிலே கரைக்க உபயோகித்த ஆயுதம். இன்று கொஞ்சம் கூர் மழுங்கிக் கிடக்கிறது.

அரன்.
அரம் என்பதன் திரிபு. தமிழர் வாழ்வைத் துண்டு துண்டாக்க உபயோகிக்கப்பட்ட அரம்= ஒரு ஆயுதம்.

கௌபீனம்.

தமிழருக்கு, அவர்கள் பட்டு பீதாம்பரம். பவுன்புட்டா சேலை முதலிய ஆடைவகைகள் செய்யும் திறமை உள்ளவர்களாக இருந்தாலும், யார் என்ன அணிய வேண்டும் என்பதைக் குறிக்கும் பதம். லகரம், னகரமாகி விட்டது. தமிழர்களுக்கு விஷயம் தெரியாமலிருக்க.

வினாயகன்
வினா- அகன், என்பதன் கூட்டுச் சொல். ஏன் இப்படி எங்களைத் துரத்தினீர் என்ற வினா தமிழர்களுக்கு தோன்றினாலும், அதை மனத்திற்குள்ளேயே முடங்கும்படி செய்வதற் காக ஏற்பட்ட கற்பனைத் தேவன், வினா அகன், என்பதை வினாயகன் என்று தொகுத்துத் தமிழருக்குத் தந்தோம்.

ராவணன்
ரா+வண்ணன், ராவணன் என்றாயிற்று, ரா= இரவு, வண்ணன்= நிறமுடையவன், அதாவது கரிய மேனியன், தமிழன்.

இதிகாசம்
இது, காசம், என்பது தமிழருக்குத் தெரியாதிருக்கும் பொருட்டு, இதிகாசம் என்று கூறப்பட்டது. இது= இந்தக் கதை, காசம்= கேட்டு நம்பினவருக்குக் கருத்து, காசநோய்க்காரரின் உடல் கெடுவது போல் கெட்டு விடும் என்பது புதைந்துள்ள பொருள்.

வேதம்

பேதம், என்பதையே, வேதம் என்று விளம்பினோம். நாட்டிலே பேதம் இருக்கவே, இந்த வேதம் பயன்படுவிதிலிருந்து, இந்த இரகசியம் விளங்கும்.

வைகுண்டம்

வை! முண்டம்! என்பதைத் திரித்து எழுதினோம். எம்மிடம், ஏமாறும் முண்டமே! வை, காசு பணம் என்று நம்மவர், திதி முதலிய காரியங்களின் போது தமிழரைக் கேட்க, வை குண்டம் என்ற இரகசிய கோட் (ஊடினந) உபயோகிக்கிறோம்.

கைலாயம்

தானை முன், என்பது முந்தானை என்று ஆயிற்று, தானை சேலை, முன்= முன்னால் இருக்கும் பாகம். அதுபோலவே லாயம் கை, என்பது கைலாயம் என்றாயிற்று. லாயம்= ஆரியருக்குச் செக்குமாடுகளாக உள்ள ஏமாளி களை அடைத்து வைத்திருக்கும் பட்டி, கை= நம்முடைய கையில் இருக்கிறது என்று, நம்மவர், தமிழரின் சடங்குகளிலே சொல்லுகிறோம். இதுவும் இரகசிய கோட் (ஊடினந) தேசிய சர்க்கார் எங்ஙனம் அமைப்பது, இங்கு மூன்று தேசங்கள் உள்ளனவே என்றுரைத்தாலோ, முப்புரிகள் முணு முணுக்கின்றன. பின்னர் எப்படித் தேசீய சர்க்கார் அமைப்பது! இதுசமயம் தேவை, தேசீய சர்க்காரால்ல, இன்று தேசீயம் என்பது, ஓர் கதம்பக் குழம்பாக இருக்கிறது. நாட்டுப் பிரிவினைக்குப் பிறகே, தெளிவான தேசீயம் தோன்ற முடியும்! இன்று அவசியமானது, போரைத் திறம்பட, வெற்றிகரமகா நடத்தித் தரக்கூடிய, பலமான சர்க்கார்- அதைப் பரிபூரண மாக ஆதரிக்கும் மக்கள்- அம்மக்களைக் சரியான வழியிலே நடத்திச் செல்லும் தலைவர்கள்- இவையே! இவைகட்குக் குறுக்கே நிற்பது, ஆச்சாரியார்ர் போன்றோர், அடிக்கடி விடும் அறிக்கைகள், சில சீமை மகாத்மாக்கள் விடும் யோசனைகள், பேட்டிகள் ஆகிய நிகழ்ச்கிகளே என்போம்.

தேசீய சர்க்கார் தேவை, தேவை என்று இன்று கூறும், ஆச்சாரியார், அதை அமைக்க, அவருக்கு இருந்த அருமையான சந்தர்ப்பங் களைத் தவற விட்டுவிட்டார் என்பதை, தர்க்கத் துக்காக அவர் மறுக்கலாமே தவிர, மனதார மறுக்க முடியாது!! போர் துவங்கிய உடனே, பிரிட்டனுடன் பேரம் பேசும் காரியத்திலே இறங்காது, பிணக்கு தீர, இங்குள்ள கட்சிகளைக் கலந்து சமரசம் உண்டாக்கியிருந்திருப்பின், இன்று ஆச்சாரியார் கோரும் சர்க்கார் இருந்திருக்கும்! அன்று அவரது ஆசை, வாலியை வீழ்த்த வேண்டும் என்பதன்றி வேறில்லை, இன்று விம்மிடுவது வீண் என்போம். இப்போதும், மூன்றாண்டுகட்கு முன்பு பேசியிருக்க வேண்டியதைப் பேசிக் கொண்டிருந்து பயன் இல்லை.

இன்று, ஆச்சாரியார் ஆங்கிலேயருக்கு, வேண்டுகோளோ, எச்சரிக்கையோ விடுவதை விட உண்மையிலேயே நாடு, ஜப்பானியரிடம் சிக்காமலிருக்க வேண்டுமென்ற எண்ணமிருப் பின், போர்க்காலத்திலே பேரம் பேசக்கூடாது என்று கூறிவிட்டு, களத்தை வேவல்கள் கவனிக்கட்டும், மக்களை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு, மற்றத் தலைவர்களுடன் கலந்து பேசி, மக்களிடையே, போரில் வெற்றிபெறுவதற்கான ஆர்வம் பிறக்கும் வேலையைச் செய்தலே, முறை என்போம்.

கல்கத்தாவிலே ஆச்சாரியார் பேசிய போது, தமது காங்கிரஸ் சகாக்களுக்குச் சொன் னார், ``பிரிட்டிஷ் ஆட்சியை இத்தனை வருஷ காலம் பொறுத்துக் கொண்டோம், இனி இரண்டாண்டு பொறுத்துக்கொள்வோம்’’ என்ற அருமையான போதனை! அத்துடன் ஒன்று சேர்த்து ஆச்சாரியாருக்கு நாம் அர்ப்பணம் செய்கிறோம், இந்த மூன்றாண்டுகளாக உமது சகாக்கள் ஒதுங்கி இருந்தது போல், இன்னும் இரண்டாண்டு, வெற்றி கிடைக்கும்வரை, ஒதுங்கி இருக்கட்டும், இந்தச் சமயத்திலே, அவர்களை உள்ளே புகுத்தும் முயற்சி வேண்ண்டாம்.’’

இதனை நாம், எட்டு கோடி முஸ்லீம், நாலு கோடி திராவிடர், ஆறு கோடிக்கு அதிகமான ஆதிதிராவிடர் சார்பாகக் கூறுகிறோம். ``பவதி பிஷாந்தேஹி’ என்று, சியாங்கே ஷெக்கிடமோ, ரூஸ்வெல்ட்டிடமோ சென்று பயனில்லை என்று சீரிய புத்திமதி கூறிய டாக்டர் அம்பேத்காரின் அறிக்கையையும், கண்டவர். காற்றாடியைப் பறக்க விடும் கபடம் வேண்டாம் என்று ஜனாப்ஜின்னா விடுத்த எச்சரிக்கையையும், கவனப்படுத்துகிறோம்.

- அறிஞர் அண்ணாவின் கட்டுரை, திராவிட நாடு, 8-11-1942
                                                                                                                      

பா.ஜ.க தலைவர்களின் நாகரிகமற்ற பேச்சுகள்

பாரதீய ஜனதா கட்சியின் புதிய தலைவரான நிதின்கட்காரி _ தொடக்க நிலையில் பார்ப்பன ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்டவர் _ துடிப்புமிக்க இளைஞர் _ மகாராட்டிர மாநிலத்தில் அமைச்சராக இருந்தவர் _ இவர் தலைமையில் பா.ஜ.க. பெரும் வளர்ச்சி அடையும் என்றெல்லாம் தூக்கி நிறுத்திப் பார்த்தனர்.

என்னதான் செயற்கைக் கால் கொண்டு தூக்கி நிறுத்திப் பார்த்தாலும், உண்மை அறிவுதான் மிஞ்சும் என்பது _ இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

கட்சிக்குள்ளேயேகூட அவரை மதிப்பார் இல்லை என்ற நிலைதான்; மூத்த தலைவர்களைப்பற்றிக் கேட்கவே வேண்டாம்.

கொள்கை அளவிலும் மாற்றம் ஒன்றையும் கொண்டுவர முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ். எப்படியோ இருந்தாலும் தேர்தலில் போட்டியிடும் கட்சியாக பா.ஜ.க. இருப்பதால், அதன் போக்குகளில் மாற்றம் வரவேண்டும் என்ற கருத்து கட்சிக்குள் புகைச்சலாக ஏற்பட்ட நிலையில், புதிய தலைவர் அதற்குப் பொருத்த-மாக இருப்பார் என்றெல்லாம் பேசப்பட்டது.

பழைய கள் புதிய மொந்தை என்ற நிலை-யில்தான் கட்சி இருக்கிறது _ பா.ஜ.க.வைப் பொறுத்தவரையில் அதற்கென்று தொண்டர்கள் கிடையாது. ஆர்.எஸ்.எஸை நம்பித்தான் கட்சியை நடத்த முடியும் என்ற பரிதாப நிலை. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸின் கட்டளைப்-படியும், நோக்கப்படியும், கொள்கைப் படியும் கட்சியை நடத்தியே தீரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் பா.ஜ.க.வுக்கு உண்டு. மீறினால் ஆர்.எஸ்.எஸ். காதைத் திருகிவிடும்.

ஆர்.எஸ்.எஸின் புதிய தலைவரும் சரி, பா.ஜ.க.வின் புதிய தலைவரும் சரி அடிப்-படைக் கொள்கைகளில் மாற்றம் இல்லை என்று ஒருமுறைக்குப் பலமுறை கூறி-விட்டனர்.

தொடர்ந்து பொதுத் தேர்தலில் கட்சி தோல்வியைச் சுமந்து வருகிறது. கட்சிக்-காரர்-களிடம் ஆர்வமற்ற போக்கு; பா.ஜ.க. கவிழும் கப்பல் என்று அவர்கள் உணர்ந்துவிட்டனர்.

வீண் வார்த்தைகளைக் கொட்டி வம்பில் மாட்டிக்கொள்ளும் சிறுபிள்ளைகளாக அவர்கள் நடந்துகொள்வதையும் அடிக்கடி காண முடிகிறது.

நேரு குடும்பத்தைச் சேர்ந்த _ சஞ்சய் காந்தியின் மகன் வருண்காந்தி மக்களவைத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கக்கிய அநாகரிக-மான பேச்சு பி.ஜே.பி.யினரை பெரும் தடு-மாற்றத்திற்கு ஆட்படுத்தியது. சிறுபான்மை-யினரின் நாக்கையும், கரங்களையும் துண்டிப்பதாக எல்லாம் பேசினார்.

பா.ஜ.க.வின் புதிய தலைவரான நிதின் கட்காரியோ நாடாளுமன்றத்தைத் தாக்கிய பயங்கரவாதி அப்சல்குரு காங்கிரஸ் கட்சியின் மருமகனா என்று நாகரிகமின்றிப் பேசினார்.

அவரை நல்ல மருத்துவரிடம் அனுப்பி வையுங்கள் என்று காங்கிரஸ் தரப்பிலிருந்து நாகரிகமான வகையில் விமர்சனம் வந்தது. பா.ஜ.க. தரப்பில் கட்காரியைக் காப்பாற்ற யாரும் முன்வர முடியாத பரிதாப நிலை.

முன்னாள் பா.ஜ.க. தலைவரும், மத்திய அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷி, கட்காரியின் பேச்சுபற்றி குறை கூறியுள்ளார். பா.ஜ.க. கூட்டணி கட்சியைச் சேர்ந்த அய்க்கிய ஜனதா தலைவர் சரத் யாதவ் பேச்சில் ஒழுங்கு தேவை! என்று நாகரிகமாக கட்காரியின் தலையில் குட்டியுள்ளார்.

பா.ஜ.க. விரக்தியின் விளிம்பில் இருக்கிறது. தொடர் தோல்விகள் அக்கட்சியைப் பெரிதும் பாதிக்கச் செய்துள்ளன. சங் பரிவார்கள்மீதான வன்முறைத் தொடர்பான வழக்குகள் அவர்களின் கழுத்தை நெரித்துக் கொண்டும் இருக்கின்றன.

இத்தகைய நிலையில் அவர்கள் உதிர்க்கும் சொற்கள் அவர்களின் விரக்திக்கான வெளிப்-பாடு என்றே கருதப்படவேண்டும்.

----------  விடுதலை தலையங்கம் (15.07.2010)
                                                                                                                                                              

Wednesday, July 14, 2010

69% இடஒதிக்கீடு - நிறைவேற்றப்பட்டபோது அனைவருமே பார்ப்பனர்

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நேற்று (13.7.2010) முற்பகலில் உச்சநீதிமன்றம் ஓர் அரிய தீர்ப்பை அளித்துள்ளது. தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் சட்டம் _ திட்டம் ஒன்றை 1993 இல் திராவிடர் கழகம் அப்பொழுது ஆட்சியிலிருந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் தந்தது.

அதன்படி,

(1) ஏற்கெனவே அரசு ஆணையாக (ஜி.ஓ.) இருந்த இட ஒதுக்கீடு (கம்யூனல் ஜி.ஓ.வை) தனிச் சட்டமாக்கினால், மண்டல் கமிஷன் வழக்குத் தீர்ப்பு வந்து நாள் முதலே இது அமலில் (69%) கொள்ள முடியும். வெறும் ஆணைமூலம் 69 விழுக்-காட்டைப் பின்னோக்கிச் செயல்படுத்த முடியாது. பின்னோக்கி (Retrospective Effect) தனிச்சட்டமானால்தான் அதைச் செய்ய முடியும் என்ற தனித்த (அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் ஆதரவைப் பெற்ற நிலையில்) தீர்வு காண்பது,

76 ஆவது திருத்தம்!

(2) 9 ஆவது அட்டவணை (9th Schedule) பாதுகாப்பு என்ற புது நோக்கு _ சமூக நீதிக்குப் பாதுகாப்பு என்பன இந்திய அரசியல் சட்டத்தின் அரசியல் சட்டத் திருத்தம் கொணர்ந்து, அதன்மூலம் செய்வது.

அதன்படி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனிக் கூட்டம் கூட்டப்பட்டு, சட்டம் இயற்றி, மத்திய அரசுக்கு அதை அனுப்பி, அங்கே நாடாளுமன்றத்தில் 76 ஆவது அரசியல் சட்டத் திருத்தமாக நிறைவேறியது. பிறகு குடியரசுத் தலைவர் சங்கர் தயாள்சர்மா ஒப்புதல் (Assent) கொடுத்து, 9 ஆவது அட்டவணையில் ஏற்றப்பட்டது.

(3) இதை எதிர்த்து வாய்ஸ் என்ற ஓர் அமைப்பின் சார்பில் முன்னேறிய ஜாதியினராகிய வழக்குரைஞர் கே.எம். விஜயன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இச்சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரினார்.

நீதிபதிகள் ஜீவன் ரெட்டி, பரிபூரண அய்யங்கார் ஆகியவர்கள் இச்சட்டத்திற்குத் தடை ஆணை (Stay Order) தராமல், 50 விழுக்காடு அமலில் இருந்தால், எத்தனை இடங்களைப் பொதுப் போட்டிக்கு நிரப்புவீர்களோ அதேபோல், கூடுதல் இடங்களுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று ஆணை பிறப்பித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை நீடித்து வந்தது. முழு விசாரணை _ இறுதி விசாரணை நடந்து முடிந்த பிறகுதான் இச்சட்டம் செல்லுமா? செல்லாதா? 69 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நீடிக்குமா? என்பது முடிவாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இறுதித் தீர்ப்பு

இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் கபாடியா, ராதாகிருஷ்ணன், சுதந்தரகுமார் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் கூடுதல் அட்டர்னி ஜெனரல் கோபால் சுப்பிரமணியன், அட்வகேட் ஜெனரல் பி.எஸ். இராமன் ஆகியோர் இவ்வழக்கில் ஆராய வேண்டிய சட்ட அம்சங்கள் உள்ளன; பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகி இருக்கும் வாய்ப்பு உள்ளது. பல்வேறு பிரச்சினைகளை அலசி இறுதி விசாரணை இது என்பதால் வாதாட வேண்டியுள்ளது என்று விளக்கியதை முழுமையாக ஏற்று, இந்த 69 சதவிகித சட்டம் மேலும் ஓராண்டு நீடிக்கலாம்; இது செல்லுமா, செல்லாதா என்று நாங்கள் இப்போது எந்தக் கருத்தையும் கூறமாட்டோம்.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையத்தின் கருத்து _ மொத்த ஜனத்தொகை, அதில் புள்ளி விவரங்கள், மாறுபட்ட எண்ணிக்கை, பிறகு நிறைவேறியுள்ள சமூகநீதி சம்பந்தமான அரசியல் சட்டத் திருத்தங்கள் இவற்றையெல்லாம் ஆராய்ந்து, எத்தனை சதவிகிதம் (50 சதவிகிதத்திற்கு மேல் என்-றாலும்கூட) இட ஒதுக்கீடு தரவேண்டும் தமிழ்நாட்டில் என்பதை ஓராண்டு அவகாசத்திற்குப் பின் வாதாட-லாம் என்று மிக அருமையான நியாயமான ஆணை-யினை வழங்கி, கோடானுகோடி ஒடுக்கப்பட்டோர் நெஞ்சில் பால் வார்த்துள்ளார்கள். இதற்காக தலைமை நீதிபதி, அவரது சக நீதிபதிகள் அனைவருக்கும் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர்கள் ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து தீர்ப்பளித்துள்ளார்கள்.

தமிழ்நாடு அரசின்
அடுத்தகட்ட நடவடிக்கை

இனி பந்து தமிழ்நாடு அரசிடம்தான் உள்ளது. காலதாமதம் செய்யாமல், தற்போதுள்ள பிற்படுத்தப்-பட்டோர் நலக்கமிஷனின் சரியான வழிகாட்டுதல், ஒத்துழைப்போடு, புள்ளி விவரங்களை, ' Socially and Educationally ' சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை விகிதாச்சாரம் 69 அய் நியாயப்படுத்துவதாக உள்ளது என்பதை அடுக்கடுக்கான ஆதாரங்கள்மூலம் நாம் நிரூபித்து, வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக _ ஒளி மிகுந்து காணப்படுகிறது.

இந்திரா சகானி வழக்கு என்ற மண்டல் கமிஷன் வழக்கின் தீர்ப்பிலேயே (9 நீதிபதிகளைக் கொண்ட வழக்கிலேயே) 50 சதவிகிதத்துக்கு மேற்பட்டு இட ஒதுக்-கீடு போகக் கூடாது என்பது பொது விதி போன்றது என்றாலும்கூட, பல்வேறு மாநிலங்களின் பல்வேறு மக்கள் தொகை இருந்தால் அதற்கு விதிவிலக்குப்போல இருக்கலாம் என்று குறிப்பிட்டு, ஏற்கெனவே வந்த பாலாஜி வழக்கினை ஓரளவு உடைத்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில்
நமது கருத்து

அதைவிட முக்கியம், நமது இயக்கம்_ திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், கலைஞர் ஆட்சிமூலம் அந்தந்த மாநில இட ஒதுக்கீட்டினை, அந்தந்த மாநில நிலைமைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு அளவு இருப்பது அவசியம் என்று வற்புறுத்திய கருத்து, உச்சநீதிமன்றத்தால், கொள்கை அளவில் இவ்வாணை-மூலம் ஏற்கப்பட்டது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

நமது முதல்வர் கலைஞர் அவர்களும், பிற்-படுத்தப்-பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களும், பிற்படுத்தப்பட்டோர் நலத்-துறையின் முக்கிய செயலாளர் உள்பட அதிகாரிகளும், அட்வகேட் ஜெனரல் இராமன் அவர்களும் பாராட்டுதலுக்குரியவர்கள்.

சூத்திரர்களின் ஆட்சியில்...

முதல்வர் கலைஞர் அவர்கள் சூத்திர ஆட்சி _ நாலாந்தர ஆட்சி என்று கூறிய நிலையில், இது தொடர்வதுமூலம் சமூகநீதிக் கொடி தாழாது தமிழ்நாட்டில் என்பது உறுதியாகிறது.

சமூகநீதி வரலாற்றின் விசித்திரங்களில் ஒன்று_

69 சதவிகித இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டபோது முதல்வர் ஜெயலலிதா_ பார்ப்பனர்

பிரதமர் நரசிம்மராவ்  பார்ப்பனர்

குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா _ பார்ப்பனர்

மக்கள் கருத்துக்குமுன் எவரும் தலைவணங்கித்-தான் ஆகவேண்டும் என்பது வரலாற்றுக் கட்டாயம் அல்லவா!.

---------- விடுதலை (14.07.2010)
                                                                                                                                                                  

Tuesday, July 13, 2010

துள்ளும் துரோகத்தின் முதுகெலும்பு தூள் தூளாகும்.

வன்முறையில் ஈடுபடும் துரோகிகள், அவர் களுக்கு விளம்பரம் கொடுக்கும் இன எதிரிகள் - எந்த வகையில் எதிர்ப்புகளும், துரோகங்களும் வந்தாலும் அவற்றை முறியடித்து நம் பணியைத் தொடர்வோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அறிவு ஆசான் தந்தை பெரியார்தம் கொள்கைகள், லட்சியங்கள் உலகளாவிய நிலையில் பரந்து விரிந்து பரவி வருகின்றன.

எதிர்ப்புக் காட்டிய பார்ப்பனராகிய இன எதிரிகள் _ மதவாத சக்திகள் மருண்டோடி ஒளியத் தொடங்கி, தோல்வியைத் தழுவும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள்.

அரசியலிலும் அய்யாவின் கொள்கை லட்சியங்கள் அணிதேர் புரவி ஆட்பெரும் படையுடன் அணி-வகுத்து அய்யிரண்டு திசைமுகத்தும் பாய்ந்து வருகின்றன.

என்றாலும், எப்போதும் எதிர்நீச்சல் அடித்தே வளரும் நம் இயக்கம் இப்போதும் அதனையே அன்றாட அறப்போராகக் கருதி, அலுப்பு சலிப்பின்றி, ஓய்ந்துவிடாமல் தன் பணியை தலை தாழாது செய்து ஆயிரங்காலத்துப் பயிராக இதனை நீடித்து நிலைக்கச் செய்துவிட்டது!

பிரச்சாரக் களங்களோ _ பீரங்கி முழக்கங்களாகவே மக்களின் செவிப்பறைகளைச் சென்றடைகின்றன.

என்றாலும், ஏடுகள், ஊடகங்கள், தொ(ல்)லைக்-காட்சிகள் நம் பணிகளை இருட்டடிப்புச் செய்வதில் திட்டமிட்டுச் செயல்பட்டே வருகின்றன!

சுழன்றடிக்கும் நமது பிரச்சாரம்

மக்கள் இயக்கமான நமது மகத்தான இயக்கம் தனது பிரச்சார சூறாவளியைச் சுழன்று அடித்த-வண்ணமே உள்ளது.

தெருமுனைப் பிரச்சாரம், மக்கள் நலப் பிரச்சினை, மனித உரிமை, சமூகநீதி _ பகுத்தறிவு போன்ற-வற்-றிற்கு வரும் ஆபத்தினைத் தடுத்திட அவ்வப்போது ஆர்ப்பாட்டம், அமைதி வழி மறியல் முதலிய அறப்-போராட்டக் களங்காணுதல், வீதி நாடகப் பிரச்சாரம், தேவைப்படும்பொழுதெல்லாம் மாநாடுகள், கருத்-தரங்-கங்கள், சுழலும் சொற்போர்கள், துண்டறிக்கை விநி-யோ--கங்கள் _ தொய்வின்றி நடைபெற்ற வண்ணம் உள்ளன.

தந்தை பெரியார்தம் உயர் எண்ணங்களின் தொகுப்-பான நூல்கள், அறிஞர் அண்ணா, கலைஞர், புரட்சிக்-கவிஞர், கைவல்யம், சிங்காரவேலர் போன்ற சிறந்த சிந்தனையாளர்கள் தம் நூற்களை வெளியிட்டுப் பரப்புதல் _ நாள்தோறும் நாடெங்கும் நகரும் புத்தகச் சந்தைகள், புத்தம் புதிய வெளியீடுகள் _ அய்யாவின் குடிஅரசு தொகுதிகள் 1933 ஆம் ஆண்டுவரைக்கும் உரியவை வெளியிடப்பட்டுள்ளன. மற்றவை வெகுவிரைவில் வெளியிடப்படும்.

காலவரிசைப்படி பெரியார் களஞ்சியம் 32 தொகுதிகள் கடவுள், மதம், பெண்ணுரிமை, ஜாதி _ தீண்டாமை என்கிற தலைப்புகளில் வெளிவந்து நாடு தழுவிய அளவில் பரப்பப் பட்டுள்ளன!

ஞானசூரியன், இராமாயண ஆராய்ச்சி, பாரத ஆராய்ச்சி, கீதையின் மறுபக்கம், புராணங்கள், மதவெறி அமைப்புகள் பற்றிய ஆதாரபூர்வ விளக்கம் _ சமூகநீதி, வகுப்புவாரி உரிமை; கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள் தொடங்கி வாழ்வியல் சிந்தனைகள் வரை பல்வேறு துறை-களின் கலங்கரை விளக்கமாக _ பல்லாயிரக்-கணக்கில் பரப்பப் பட்டு வருகின்றன.

பெரியார் மய்யம் புதுடில்லி தலைநகரில்; அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரியார் பன்னாட்டு அமைப்பு, வடபுலங்களில் _ தென்புலங்களில் நமது கொள்கை வீச்சு-கள். இவை தவிர பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் மற்றும் பெரியார் கல்வி நிறுவனங்கள்மூலம் ஆராய்ச்சிகள் _ கருத்தரங்குகள், இப்படி கனடாவரை எங்கெங்கும் பெரியார் பிரபலப்பட்டுள்ளார்கள்!


பொறுக்க முடியாத எதிரிகளும் - துரோகிகளும்!

நெஞ்சில் வஞ்சம் அறியாதோர் இதற்காக நம்மை வாழ்த்தாவிட்டாலும்கூட அறிவு நாணயத்துடன் ஒப்புக்கொள்ளவாவது செய்வார்கள்!

இதைக்கண்டு பொறுக்க முடியாத நம் இயக்கத்தின் _ இனத்தின் பிறவி எதிரிகளான பார்ப்பனர்கள், துரோகிகளுக்கு விளம்பர சடகோபம் சாத்தி, தூண்டி விட்டு தொல்லை கொடுத்து, நம் பிரச்சாரப் பணிகளி-லிருந்து நம்மை திசை திருப்பலாம் என்ற ஒரு கூட்டுச் சதித் திட்டத்தில் இறங்கி தலைகால் தெரியாமல் வன்முறை வெறியாட்டம்வரை இறங்கியுள்ளனர்!

ஜூலை 2 ஆம் தேதி தாக்குதல்

அதன் விளைவுதான் என் வீட்டில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி பிற்பகல் நடைபெற்ற தாக்குதல் _ எய்த-வர்கள் எவர், ஏவியவர்கள் எத்திட்டத்துடன் அதைச் செய்தனர் என்பதை அறியாதவர்கள் அல்லர் நாம்; காரணம் நமக்குள்ள பெரியார் தந்த புத்தியாகும்!

அய்யாவின் குடிஅரசு ஏடுகளை வெளியிடுவதில் தடை ஆணை நீக்கம் என்ற ஓர் ஆணை தங்-களுக்குச் சாதகமாக கிடைத்துவிட்டது என்பதைக் காட்டி ஏடுகள், சில தொலைக்காட்சிகள்மூலம் எகத்தாளம் போட்டு, இந்தத் துரும்பைப் பிடித்துக் கரையேறி வெளிச்சம் போட்டு _ வீரப்பன் காட்டில் பெய்த மழையில் நனைந்த-வர்கள் கனவுலகில் இப்போது ஆட்டம் போடுகின்றனர்.

நம்மால் விலக்கப்பட்ட விலாசமிழந்த வீணர்களைத் தேடித்தேடிச் சென்று உதிர்ந்தவைகளை ஒட்ட வைக்க முயலுகின்றனர்.

நமது இயக்கத்தில் உள்ள முதிய இளைஞர்கள் (95, 98 வயது ஆனவர்கள்) தொடங்கி, இளையர், மாணவர், மகளிர், பெரியார் பிஞ்சுகள்வரை எவரும் இந்த துரோகக் கண்ணிவெடியில் சிக்கமாட்டார்கள்.

காரணம் உழைப்பு எங்கே,

பிழைப்பு எங்கே என்பதைப் புரிந்த கொள்கை-யாளர்கள் அவர்கள்!

நயவஞ்சகத்தின் தொடர்கதை!

பெரியார் சொத்துக்களை இவர்கள் மீட்கப் போகிறார்களாம்; இப்படி ஒரு புரூடா மிரட்டல்மூலம் நம் பணிகளைத் தடுக்க, திசை திருப்பும் நப்பாசை கொள்ளும் முகவரி தேடும் முச்சந்தி நிற்போருக்குச் சொல்லுகிறோம்.

வருமான வரித்துறைமூலம் பெரியார் காலத்தி-லிருந்தே தொடங்கி அத்துறையே இதனை கையகப்-படுத்திடவேண்டும் என்று எழுதி, காட்டிக் கொடுத்த நன்றி கெட்ட நயவஞ்சகத்தின் தொடர்ச்சிதான் இது!

அதை உடைத்த வியூகம் இப்போது வேடிக்கையா பார்க்கும்? மக்களிடம் உண்மை போய்ச் சேரும்!


- - - - - - - - - -- -- - -- - -- - - -- - -- - -- - - --

பெரியார் சொத்துக்களை இவர்கள் மீட்கப் போகிறார்களாம்? இப்படி ஒரு புரூடா மிரட்டல்மூலம் நம் பணிகளைத் தடுக்க, திசை திருப்பும் நப்பாசை கொள்ளும் முகவரி தேடும் முச்சந்தி நிற்போருக்குச் சொல்லுகிறோம்.

வருமான வரித்துறைமூலம் பெரியார் காலத்திலிருந்தே தொடங்கி, அத்துறையே இதனை கையகப்படுத்திடவேண்டும் என்று எழுதி காட்டிக் கொடுத்த நன்றி கெட்ட நயவஞ்சகத்தின் தொடர்ச்சிதான் இது!

அதை உடைத்த வியூகம் இப்போது வேடிக்கையா பார்க்கும்? மக்களிடம் உண்மை போய்ச் சேரும்!

பெரியாரின் கொள்கைச் சொத்து- அறிவுசார் உடைமைமுதல் அசையும், அசையா சொத்துக்கள்வரை அத்தனையையும் பெருக்கிட அரணானவர்கள் அமைதியாகவா இதை வேடிக்கை பார்ப்பார்கள்?

துள்ளும் துரோகத்தின் முதுகெலும்பு தூள் தூளாகும்.

- - - - - - - - - -- -- - -- - -- - - -- - -- - -- - - --பெரியாரின் கொள்கைச் சொத்து அறிவுசார் உடைமைமுதல் அசையும், அசையா சொத்துக்கள்-வரை அத்தனையையும் பெருக்கிட அரணானவர்கள் அமைதியாகவா இதை வேடிக்கை பார்ப்பார்கள்?

துள்ளும் துரோகத்தின் முதுகெலும்பு தூள் தூளாகும்.

மீண்டும் ஒருமுறை அறைகூவல்கள் வந்தால்,அதைச் சந்திக்க உண்மைப் பெரியார் தொண்டர்கள் ஒருமுகப்பட்டு, ஓரணியில் திரண்டு மேலும் வேகமாகச் சுழலும் வாள்போல், கொள்கை வீச்சுகளை நடத்திடுவர்!

பழைய இராமாயணம் இப்போது நடக்காது; வாலி வதம் நடக்காது _ சுக்ரீவர்களும், இராமர்களும் மறைந்து நின்றாலும் பறந்தோடிடும்படி எம் பாசறை பாடம் கற்பிக்கும்.

பெரியார் பெயரை வைத்துப் பிழைக்கும் கூட்டம் அல்ல நாம்.

நம் பயணம் தொடரும்!

பெரியாரால் உருவாக்கப்பட்ட இயக்கத்தின் காவல் அரண்கள் _ தற்கொலைப் பட்டாளங்கள் என்பதை மீண்டும் நிரூபிக்க களங்களைச் சந்திக்க கடமை வீரர்களின் பட்டாளங்கள் காத்திருக்கின்றன!

பெரியாரை எதிர்த்தவர்கள் என்றும் வென்றதில்லை! மின்மினிகளுக்கும், மின்சார விளக்குக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்தவர்கள் நம் மக்கள். பிரச்-சினைகள் எந்த வடிவத்தில் வந்தாலும் அவற்றை விவேகத்தோடு சந்திக்க நம்மால் நிச்சயம் முடியும்.

பெரியார் பணி முடிப்போம்!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!
-------- விடுதலை (13.07.2010)

Monday, July 12, 2010

கோடிக்கணக்கான மக்களை மூடத்தனத்தில் மூழ்கடிப்பது எந்த வகையில் நியாயம்?

 உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் மூட நம்பிக்கைகள் எப்படி புகுந்து விளையாடுகின்றன. ஏதோ ஆக்டோபஸாம்; அதற்குப் பால் என்று பெயராம். அது ஆரூடம் கூறுகிறதாம் _ அது பலிக்கிறதாம்.

ஜெர்மன் ஆக்டோபசுக்குப் பதில் இப்பொழுது ஆலந்தில் ஒரு குட்டி ஆக்டோபஸ் கிளம்பியிருக்-கிறது. அந்தப் பெண் ஆக்டோபசுக்குப் பாலின் என்று பெயராம்.

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெறும் என்று பால் ஆக்டோபஸ் கூறியுள்ள நிலையில், இந்த ஆலந்து பாலின் ஆக்-டோபஸோ ஆலந்துதான் வெற்றி பெறும் என்று கூறியிருக்கிறது.

போதும் போதாதற்கு இப்பொழுது கிளிகளும் இந்தக் கோதாவில் குதித்துள்ளன.

சிங்கப்பூரைச் சேர்ந்த 13 வயது பச்சைக்கிளி உலகக் கால்பந்து இறுதிப் போட்டியில் வெற்றி பெறப் போவது ஆலந்துதான் என்று கூறியுள்ளது.

ஸ்பெயின் நாட்டு மக்களும், ஆலந்து நாட்டு மக்களும் மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் இணைந்த கலவையில் உறைந்துவிட்டனராம். இரு நாட்டு விளையாட்டு வீரர்களின் உளவியலைப் பாதிக்கச் செய்யும் இந்த மூடத்தனத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்திக் காட்டுவது மகாமகா வெட்கக்கேடு.

இப்பொழுது சென்னையில் எலி ஒன்று ஆரூடம் கூறியுள்ளதாம் _ போகிற போக்கைப் பார்த்தால் நாய் ஆரூடம், பன்றி ஆரூடம், கழுதை ஆரூடம் என்று மூலைக்கு மூலை கூவிக் கூவி ஆரூடம் சொல்லுவார்கள் போலும்.

தேர்தல் உள்பட, காந்தியாரின் ஆயுள் உள்பட மனிதர்கள் சொன்ன ஆரூடங்கள் எல்லாம் மண்-ணைக் கவ்விய நிலையில், இப்பொழுது பிராணி-களை-யும், பறவைகளையும் கட்டிப் பிடித்து அலைகிறார்கள்.

இந்து போன்ற ஏடுகள் இதுபோன்ற மூடத்-தனத்தை முதல் பக்கத்தில் போட்டு முக்கியத்துவம் கொடுக்கின்றன. தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இந்த முட்டாள்தனத்துக்கு முன்னுரிமை கொடுக்கின்றன.

இந்த ஊடகங்கள் எல்லாம் அறிவியல் கண்டு-பிடித்த சாதனங்களே அல்லாமல், எந்த ஆரூடப் புலிகளாலும், ஜோதிட (அ)சிங்கங்களாலும், பாபாக்-களாலும் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல. இவற்றிற்கு அறிவு நாணயம் இருந்திருக்குமேயானால், அறிவியலுக்கு விரோதமான குப்பைகளை அறிவியல் சாதனங்களின்மூலம் பரப்புரை செய்வார்களா?

விளையாட்டு என்பது வீரர்களின் திறமை, உழைப்பு, சாதுர்யம் இவற்றைச் சார்ந்தது. இதனைக் கொச்சைப்படுத்தும் வண்ணம், சிறுமைப்படுத்தும் வண்ணம் இப்படி நடந்துகொள்வதைக் கண்டிக்க திராவிடர் கழகத்தைத் தவிர_ விடுதலையைத் தவிர யாரும் முன்வரவில்லையே!

உலகக் கால்பந்து போட்டிபற்றி சங்கொலியில் அறிக்கை வெளியிட்டுள்ள ம.தி.மு.க. பொதுச்செய-லாளர் திரு. வைகோ, இந்த ஆக்டோபஸ் கணிப்-பையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஓர் இடத்தி-லாவது இது மூடத்தனம் _ விளையாட்டுத் துறை-யில்கூட இதனைத் திணிப்பதா என்று குறிப்பிடவேயில்லை.

1994 ஆம் ஆண்டில் உலகக் கோப்பைக் கால்பந்து காலிறுதிப் போட்டியில் சுவீடனும், ருமேனியாவும் மோதின. ஆட்ட நேர இறுதியில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் போட்டு சம நிலை அடைந்தன. கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டபோதும், அதே நிலைதான்; பெனல்டி முறையிலும் தலா நான்கு கோல்கள் போட்டன; சடன் டெத் முறை கடைபிடிக்கப்பட்டதில் சுவீடன் வெற்றி பெற்றது. அப்பொழுது ருமேனியாவின் அணித் தலைவர் ஜியார்ஜி ஹாஜி, வெற்றிக்காக நாங்கள் செய்த பிரார்த்தனை பலிக்கவில்லை. கடவுள் சுவீடன் பக்கம் இருந்துவிட்டார் என்றார்.

தன்னம்பிக்கையற்றவர்கள், மூடநம்பிக்கை-யாளர்கள் விளையாட்டு வீரர்களாகவும் இருந்தால், எப்படி வெற்றி பெற முடியும்?

திருஷ்டம் என்றால் பார்வை; அதிருஷ்டம் என்றால் பார்வையற்ற குருடு என்று பொருள். அதிருஷ்டம் அடிக்கவில்லை என்றால், அதன் பொருள் குருடாகவில்லையே என்று ஏங்குவதாகும்.

இப்பொழுது, இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், பால் ஆக்டோபஸ் ஆரூடம் சரியாயிற்று என்று ஆட்டம் போடலாம். ஆனால், பாலின் மற்றும் பச்சைக் கிளி ஆகியவற்றின் ஆரூடம் பொய்த்தும் போயினவே! அதற்கு என்ன சொல்வார்கள்?

போட்டி என்றால் வெற்றி, தோல்விகள் இயல்பு. அணிகளின் திறமை மற்றும் விளையாட்டின் பொழுது அமையும் சூழல் முடிவை நிர்ணயிக்கும். அதில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது என்பதைப் பயன்படுத்திக் கொண்டு கோடிக்கணக்கான மக்களை மூடத்தனத்தில் மூழ்கடிப்பது எந்த வகையில் நியாயம்?

--------- விடுதலை தலையங்கம் (12.07.2010) 

Sunday, July 11, 2010

தங்களுக்கு என்று நாடும், மொழியும் இல்லாத லம்பாடிப் பார்ப்பனர்கள்

 கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவுரையில் முதலமைச்-சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் 16 அம்ச திட்டங்களை அறி-வித்தார். அதில் முக்கியமான ஒன்று_ தமிழில் படித்தவர்-களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்பதாகும்.

சொன்னதைச் செய்வார் கலைஞர் என்பதற்கு அடை-யாளமாக_ - சென்னை சாந்-தோம் மாவட்ட தொழில்-நுட்ப வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமாகப் பரிந்துரைக்கப்பட்டவர்களில், தொடக்கக் கல்வி முதல் தமிழிலேயே படித்த பொ.பேதுரு என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்-தில் நகல் பெருக்கியாளர் (ஜெராக்ஸ் ஆபரேட்டர்) பணிக்கான ஆணையினை முதலமைச்சர் கலைஞர் வழங்கியுள்ளார்.

இது ஒரு தொடக்கம்-தான், - இனி மளமளவென்று இந்தத் திசையில் தமிழ்நாடு அரசு தன் கடமையினைச் செய்யும் என்பதில் அய்ய-மில்லை.

இந்த நேரத்தில் நம் இன எதிரிகளின் மனப்பான்மை எந்தக் கிறக்கத்தில் இருக்-கிறது என்பதை முக்கிய-மாக நாம் தெரிந்து கொள்ள வேண்டுமே!

23.6.2010 நாளிட்ட துக்ளக் இதழ் பக்கம் 23 இல் துர்வாசர் என்பவர் கட்-டுரை ஒன்றைத் தீட்டியுள்-ளார்.

தமிழை நீஷப் பாஷை என்று நாக்கை நீட்டிப் பேசும் கூட்டமாயிற்றே! சொறி பிடித்த கையும்_- இரும்பு பிடித்த கையும் சும்மா இருக்காதே! இதோ எழுதுகிறார்:

தமிழில் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக் குக்கூட லாயக்காக மாட் டோம் என்பதைத் தெரிந்து கொண்டுதான், மாணவர் கள் ஆங்கில வழிக் கல்வி யில் விழுந்து விழுந்து படிக்கிறார்கள் என்று தன் பூணூல் கொடுக்கால் எழுதி-யுள்ளார்.

இன்னொரு இடத்திலோ தமிழ் சோறு போடாது என்று தமது சோற்றுத் துருத்தித் தனத்தையும் வெளிப்படுத்திக் கொண்டி-ருக்கிறார்.

தமிழ் மீது எவ்வளவு ஆத்திரமும், பகை உணர்ச்-சியும் இருந்தால் இத்தகைய வார்த்தைகளைக் கையாண்டி-ருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இவ்வளவுக்கும் இவர்கள் தமிழால் பிழைப்பு நடத்து-பவர்கள்தாம்.

இப்பொழுது தமிழில் படித்தவருக்கு முதல் ஆணையைப் பிறப்பித்து-விட்டாரே, முதல்வர் கலை-ஞர். எந்தச் சுவரில் போய் முட்டிக்கொள்வர் துர்-வாசர்கள்?

இரண்டாம் உலகப் போர் நடந்தபோது இட்லர் வெற்றி பெறுவார் என்ற நிலையில் ஜெர்மன் மொழி படித்ததும், அதன் பின் ஜப்பான் வெற்றி பெறும் என்று பேச்சு அடி-பட்டதும் ஜப்பான் மொழி-யைப் படித்ததும் இந்தப் பார்ப்பனர் கூட்டம்தானே! பார்ப்பனரான கல்கியே தமது அலை ஓசை நாவ-லில் இதனைக் குறிப்பிட்-டுள்ளாரே! தங்களுக்கு என்று நாடும், மொழியும் இல்லாத லம்பாடிப் பார்ப்ப-னர்கள் சீர்கொண்ட செந்-தமிழை நாக்கழுகப் பேசா-திருப்பரோ!

தமக்கு இல்லாதது தமிழர்களுக்கும் கிடைக்கக் கூடாது என்ற தாராள மனப்-பான்மை _ இந்தத் தர்ப்பைப்-புல் கூட்டத்துக்கு!

- விடுதலை (11-07-2010) மயிலாடன்

Tamil 10 top sites [www.tamil10 .com ]