வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label இடஒதுக்கீடு-பெரியார்-பார்பனர்கள். Show all posts
Showing posts with label இடஒதுக்கீடு-பெரியார்-பார்பனர்கள். Show all posts

Monday, July 26, 2010

இடஓதிக்கீட்டில் திராவிடர் கழகத்தின் பங்கு ஒரு பார்வை

 ஓர் அரிமா நோக்கு

9.10.1987: புதுக்கோட்டையில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு கூட்டத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 31 (சி) பிரிவின்படி தனிச் சட்டம் இயற்றி இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் கருத்து உருவாக்கம்.

16.11.92: டில்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு மண்டல் பரிந்துரை அமல் 50 சதவிகிதத்துக்கு மேல் போகக் கூடாது.

20.11.92: சென்னை பெரியார் திடலில் பொதுச் செயலாளரின் சிறப்புப் பொதுக் கூட்டம்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் 31(சி) பிரிவின்கீழ் தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டுகோள்.

25.8.93: உச்சநீதிமன்ற இடைக்காலத் தடை 50 சதவிகிதத்துக்குமேல் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு கூடாது என்று.

26.8.93: இத்தீர்ப்புக்குப் பொதுச் செயலாளர் கண்டனம். 1.9.93: உச்சநீதிமன்ற இடைக்காலத் தடை ஆணை நகலை எரித்துச் சாம்பலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு திராவிடர் கழகம் அனுப்பிய போராட்டம் 15,000 பேர் கைது.

5.11.93: 31 (சி) பிரிவின்கீழ் தனிச் சட்டம் இயற்றக் கோரி பொதுச் செயலாளர் அறிக்கை.

6.11.93: சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் சமூகநீதி மாநாடு.

9.11.93: தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் அரசியல் சட்டத் திருத்தம் கோரி தீர்மானம்.

16.11.93: தமிழகம் தழுவிய அளவில் முழு அடைப்பு.

17.11.93: சென்னையில் பொதுச் செயலாளர் செய்தியாளர்கள் சந்திப்பு. 31(சி)யின்கீழ் மாதிரி சட்ட முன்வடிவம் தயாரித்து அளிக்கப்பட்டது.. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்.

26.11.93: தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை கோட்டையில்.

31.12.93: தமிழக சட்டப் பேரவையில் 31(சி) சட்டம் நிறைவேற்றம். (சட்டமன்ற பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து நடவடிக்கைகளைத் தமிழர் தலைவர் கவனித்தார்).

7.2.94: தமிழக மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி குடியரசுத் தலைவருக்குத் தந்தி கொடுக்குமாறு பொதுச் செயலாளர் வேண்டுகோள்.

11.3.94: தஞ்சை வல்லத்தில் தமிழக முதலமைச்சருக்கு சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம்.

7.4.94: டில்லியில் சமூகநீதிக்கான தேசிய கவுன்சில் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பங்கேற்பு. தமிழக சட்டத்துக்கு ஒப்புதல் தரக் குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் டில்லியில் சம்பந்தப்பட்ட தலைவர்கள், மத்திய சமூகநல அமைச்சர் சந்திப்பு வற்புறுத்தல்.

17.5.94: திருச்சியில் செய்தியாளர்களை பொதுச் செயலாளர் சந்தித்தல். குடியரசுத் தலைவர் ஒப்புதல் வற்புறுத்தல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்று எச்சரித்தார் பொதுச் செயலாளர்.

14.6.94: உச்சநீதிமன்ற இடைக்காலத் தடையை அகற்றக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பொதுச் செயலாளர் தந்தி.

15.6.94: அனைத்துக் கட்சி தூதுக்குழு சென்று பிரதமரை, குடியரசுத் தலைவரைச் சந்திக்க முதல்வருக்கு பொதுச் செயலாளர் வேண்டுகோள்.

23.6.94: சென்னையில் திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சி மற்றும் அனைத்துச் சமூக சங்கங்களின் கூட்டம்.

25.6.94: முதலமைச்சர் தலைமையில் தூதுக்குழு டில்லி சென்று பிரதமரைச் சந்தித்தல்.

26.6.94: டில்லியில் அனைத்துச் சமூக நீதி சிந்தனை உடைய தலைவர்களைப் பொதுச் செயலாளர் சந்தித்தல்.

16.7.94: ஈரோட்டில் கழகத்தின் சார்பில் சமூகநீதி மாநாடு.

17.7.94: 69 சதவிகித அடிப்படையில் தமிழ்நாட்டில் மாணவர்கள் சேர்க்கை.

19.7.94: தமிழக தனிச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

28.7.94: சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சி மற்றும் அனைத்துச் சமூக சங்கங்களின் கலந்துரையாடல் கூட்டம்.

2.8.94 - 13.8.94 : குமரி தொடங்கி திருத்தணி _ சென்னை வரை திராவிடர் கழகத்தின் சார்பில் சமூக நீதி எழுச்சிப் பயணம்.

14.8.94: 9ஆவது அட்டவணையில் சேர்க்கும் சட்ட திருத்தத்துக்கு ஆதரவு அளிக்கக் கோரி அனைத்துக் கட்சி நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கும் பொதுச் செயலாளர் தந்தி.

16.8.94: பொதுச் செயலாளர் கல்கத்தா செல்லுதல்.

17.8.94; 18.8.94; 19.8.94: டில்லியில் மத்திய சமூக நலஅமைச்சர் மற்றும் தேசிய முன்னணித் தலைவர்கள் சந்திப்பு.

17.8.94: உச்சநீதிமன்றத்தின் தவறான ஆணை.

(50 சதவிகித அடிப்படையில் இடஒதுக்கீடு இருந்தால் திறந்த போட்டியில் எத்தனை இடங்கள் கிடைக்க வேண்டுமோ அத்தனை இடங்களைக் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்ற ஆணை).

22.8.94: சென்னையில் பொதுச் செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தல், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களிலும், இடஒதுக்கீடு அடிப்படையில் நீதிபதிகள் நியமனஅவசியத்தை வலியுறுத்துதல்.

23.8.94: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு சென்னை சிறப்புக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் கண்டனம்.

24.8.94: 25.8.94: மாநிலங்களவையிலும், மக்களவையிலும் 9ஆவது அட்டவணையில் சேர்க்கை.

13.7.2010: தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு தொடரலாம் உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் தீர்ப்பு.

-------------- விடுதலை (17-7-2010) ஞாயிறுமலரில் மின்சாரம் எழுதிய கட்டுரையில் இருந்து



Thursday, March 11, 2010

பெண்களுக்கு 33 விழுக்காடு தினமணி விதண்டாவாதம் பேசுகிறது.

முதல் நாள் அணு உலை பேராபயம் என மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பேரபாயம் என்றது . தமிழர்கள் இன்னும் அறிவுக்குருடர்கள் என்று நினைத்து தலையங்கம் எழுதியது பூணூல் தினமணி. அனால் எங்களுக்கு பெரியாரும் அதன்வழி வந்த ஆசிரியரும் ஊட்டிய அறிவு இருக்கிறது அதனை கொண்டு இந்த தலையங்கத்தை படிக்கும் போதே இந்த R.S.S நாளேடாக மாறிவரும் தினமணி என்ன சொல்ல வருகிறது என புரிந்து கொண்டு நான் போட்ட பதிவு தான் "இடஒதுக்கீடு....தினமணி (பூணூல்) கூறும் பேர​பா​யம". அடுத்த ரெண்டு நாளும் தினமணி புரிந்து கொண்டு இனி மறைமுக மாக சொல்ல தேவை இல்லை நேரடியாவே எதிர்ப்பு எழுதலாம் என்று அதன் R.S.S பாணியில் அடுத்த ரெண்டு நாள் தலையங்கம் எழுதியது. இது அனைத்துக்கும் சேர்த்து இன்று விடுதலை தலையங்கம் தோலுரித்து காமித்து விட்டது. இதோ விடுதலை (11.03.2010) தலையங்கம் படியுங்கள்..அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்-றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதா கடந்த 14 ஆண்டு-காலமாக நிலுவையில் உள்ளது. சமூகநீதியில் அக்கறை உள்ள கட்சிகள் உள்ஒதுக்கீடுக்குப் பச்சைக் கொடி காட்டியிருந்தால் முன்பேகூட இம்மசோதா நிறைவேறியிருக்கும்.


முதலில் கணக்குத் திறக்கப்படட்டும்; பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்ற சமா-தானத்துடன் இந்தச் சட்டம் மாநிலங்கள-வையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. மக்களவையில் நிறைவேற்றப்படவேண்டிய காலகட்டத்தில் தடங்கலுக்கு வருந்துகிறோம் என்ற நிலையில் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது.

இந்தச் சட்டம் அரசியல் கட்சிகளிடையே பல பிளவுகளை ஏற்படுத்திவிட்டது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளன.

அய்க்கிய ஜனதா தளத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனிக்கட்சித் தொடங்கப் போகிறார் என்ற அளவுக்கு செய்திகள் வெளிவந்துள்ளன.

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதி எண்ணிக்கையில் உள்ள பெண்-களுக்கு வெறும் 33 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பதில் இவ்வளவுத் தடைகளா? முட்டுக்கட்டைகளா? என்று எண்ணுகிற-போது சமத்துவச் சிந்தனையில் நாடு பின்-தங்கியிருக்கிறது. ஆண் _ பெண் சமத்து-வத்தை ஏற்றுக்கொள்வதில் பெரும் தயக்கம் இருக்கிறது என்றுதான் கருதவேண்டி-யுள்ளது.

இதற்கிடையில் சந்தடிச் சாக்கில் கந்தப் பொடி தூவுவதுபோல இந்தியன் எக்ஸ்-பிரசும், தினமணியும், துக்ளக்கும் இந்தச் சட்டமே தேவையில்லாத ஒன்று என்னும் மனுதர்ம மனப்பான்மையை பொந்தில் இருந்து கிளம்பும் பாம்புபோல தலையை நீட்டிச் சீறுகிறது.

சட்டம் வந்தால்தான் பெண்களுக்கு நியாயம் கிடைக்குமா என்று தினமணி விதண்டாவாதம் பேசுகிறது.

இதே கேள்வியை எந்தப் பிரச்சினைக்கும் எழுப்பலாமே! பெண்களுக்கான பிரச்சினை-கள் ஒன்றா, இரண்டா? ஏராளம் இருக்-கின்றன. அவர்களின் உரிமைகளை ஆண்களின் பாதுகாப்பில் விட்டுவிட முடியுமா?
நோயுள்ளவர்கள்தான் மருந்து சாப்பிட-வேண்டும்; அவர்களுக்காக மற்றவர்கள் மருந்துண்பார்களா?

பொதுவாக இந்துத்துவாவாதிகளுக்கு பெண்ணுரிமை என்கிறபோது குமட்டிக் கொண்டு-தான் வரும். ஒரு பெண் பால்யத்தில் தந்தையின் ஆக்ஞையிலும், வாலிபத்தில் கணவனின் ஆக்ஞையிலும், வயோதிகத்தில் மகனின் ஆக்ஞையிலும் கட்டுப்பட்டு இருக்கவேண்டியவர். எந்தக் காரணத்தை முன்னிட்டும் தன்னிச்சையாக சிந்திக்க அருகதையற்றவர் என்பதுதுன் மனுதர்மம்.

சோ ராமசாமியும், குருமூர்த்திகள் ஆதிக்கம் செலுத்தும் தினமணியும், இந்தி-யன் எக்ஸ்பிரசும் இந்தக் கண்ணோட்டத்தில் கருத்துத் தெரிவிப்பதில் ஆச்சரியம் ஏதும் இருக்கமுடியாது.

அதேநேரத்தில், இந்த 2010 ஆம் ஆண்டிலும் ஒரு கூட்டம் பெண்களை அடிமை கொள்ளும் நஞ்சை தனது சிந்தனைப் பையில் ஒளித்து வைத்திருக்கிறது என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?
பெண்களுக்கு 33 சதவிகிதம் மட்டுமல்ல; 50 சதவிகிதம் கண்டிப்பாகத் தேவை என்-பதைத்தான் மேலும் இது வலியுறுத்துகிறது. இந்த மனுதர்மவாதிகளை பெண்கள் நன்கு அடையாளம் காண்பார்களாக!

Monday, March 08, 2010

இடஒதுக்கீடு....தினமணி (பூணூல்) கூறும் பேர​பா​யம்.

அய்யா மதிப்பிற்குரிய தினமணி வைத்தியநாத அய்யர் அவர்கள், இன்றைய (09 .03 .2010 ) தினமணியில் தலையங்கம் செய்தி ஆரம்பிக்கும் போதே

"அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை."

அதாவது மகளிர் நலன் கருதி இட ஒதிக்கீடு வரவில்லை என்று ஆரம்பிக்கீறார். முடிக்கும் பொது எப்படி சொல்லுகிறது தினமணி பூணூல் "நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்." நாம் என்றல் யாரு என்று தெரியவில்லை இந்த இடத்தில. ஒரு வேலை பி.ஜே.பி ஆதரவை மறைமுகமாக சொல்லுகிறார்களோ என்னவோ.

தினமணி உண்மையிலேயே பேராபத்து ஏற்படும் அணு உலை பற்றி என்ற நோக்கத்தில் தான் என்றல் நாம் அதனை எந்த வெறுப்பு இன்றி ஏற்றுக்கொள்ளலாம். அனால் அவர் கூறும் பேர​பா​யம் உண்மையிலேயே அணு உலை பற்றி இல்லை என்பது நமக்கு மிக தெளிவாக தெரிகிறது. அவா கூறும் பேர​பா​யம் முதலில் இட ஒதிக்கீடு அப்புறம் உள் ஒதிக்கீடு என்ற திராவிட கட்சிகளின் நிலை பற்றி. இப்படி வர இட ஒதிகீடுல கூட பார்பனர்களுக்கு முழுமையாக அனுபவிக்க கொடுக்க மட்டேன்குரங்கலேன்னு ஒரே கவலை தினமணிக்கு. இந்த பேர​பா​யம் சொல்லத்தான் அணு உலை என்கிற உவமையை கையில் எடுத்துகொண்டு தினமணி விளையாடி இருக்கிறது. அது ஒன்று தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் அணு உலை மட்டும் பற்றிய பேர​பா​யம் மாக தோன்றலாம். ஈரோட்டு கண்ணாடி போட்டு அய்யா அவர்களின் வழியில் உற்று நோக்கினால் நன்றாக விளங்கும் என்ன சொல்ல வருகிறது தினமணி என்று.

இட ஒதுக்கீடு என்றாலே பார்பனர்களும் பார்பன பத்திரிக்கைகளும் அய்யா காலத்திலிருந்து இன்று வரை எப்பொழுதும் எதிர்ப்புதான் முன்னெரெல்லாம் நேரடியாக சொல்லி எதிர்பார்கள் இன்று 1000 அடி பள்ளத்தில் பார்பனியத்தை குழி தோண்டி புதைததனால் கொஞ்சம் இல்லை மறை காயாக எதிர்ப்பு கண்பிகிறர்கள். அது இன்றளவும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது எவளவு பெரிய அவலம். தமிழர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்.

Tamil 10 top sites [www.tamil10 .com ]