வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, August 31, 2011

ஒரு கடவுளுக்குப் பல பிறப்பா? விநாயகன் கதைகளைக் கேளீர்!

1. முரண்பட்ட வரலாறு

பிள்ளையார்பற்றிய கதையை விளக்க வேண்டியது அவசியம். இந்த உண்மையை உணர்ந்தபின் பிள்ளையார் கடவுள்தானா? பிள்ளையார் பொம் மையை உடைத்ததனால் பெரியார் அவர் கள் என்ன அடாத செயலைச் செய்து விட்டார் என்பதைத் தெளிவாக உணர முடியும்.

புராணக் கதைகளில் கணபதியின் பிறப்பே பல்வேறு விதமாகக் கூறப்பட் டுள்ளது. எது உண்மை என்பதை யாரும் கூற முடியாது. ஆனால், ஒன்று தெளிவு. கற்பனையின் விளைவே கணபதி. கீழ்க்கண்ட பல்வேறு கதைகள் இதைத் தெளிவாக நிரூபிக்கின்றன.
கணபதி, பெண் இல்லாமல் ஆணுக் குப் பிறந்தவர் என்றும், இதற்கு நேர் மாறாக ஆண் இல்லாமல் பெண்ணுக்குப் பிறந்தவர் என்றும் கூறப்படுகின்றன. புராணக் கதையில் கணபதியின் பிறப்பு அசிங்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பார்வதி, தன் உடல் அழுக்கை உருண் டையாக்கி விளையாடிக் கொண்டி ருந்தாளாம். அந்த உருண்டையின் மீது அவள் அன்பு சொரிய அதற்கு உயிர் கொடுத்து அதைத் தன் மகன் என்று அழைத்தாளாம்.

மற்றொரு கதை: கணபதியின் பிறப்பை வேறு விதமாகச் சித்தரிக்கிறது. பார்வதி, தன் உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்கா நதியின் முகத்துவாரத் தில் உள்ள யானைத் தலை இராட்சசி மாலினியைக் குடிக்க வைத்தாளாம். இதன் விளைவாக மாலினி கர்ப்பம் தரித்த பிறகு ஒரு குழந்தையைப் பெற்றாளாம். அக்குழந்தையைப் பார்வதி எடுத்துச் சென்றுவிட்டாளாம்.

மேற்கூறிய கதைகள் அனைத்தும் கணபதிக்கு யானைத் தலை ஏன் வந்தது என்பதைத் தெளிவுபடுத்த வில்லை. பிரம்ம வர்த்த புராணத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது. கணபதி பிறந்த நேரத்தில் சனிப் பார்வை தோஷத்தால் தலை இல்லாமல் பிறந்தானாம். கணபதியின் தாய் தன் குழந்தைக்குத் தலை இல்லையே என்று தேம்பித் தேம்பி அழ, விஷ்ணு பகவான் ஒரு யானைத் தலையை ஒட்ட வைத் தானாம். ஆனால், ஸ்கந்த புராணம் இதை மறுக்கிறது. கணபதி தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்தூரா என்ற இராட்சசி வயிற்றினுள் புகுந்து குழந்தை யின் தலையைக் கடித்து தின்று விட்டா ளாம். பிறந்த குழந்தைக்குத் தலை இல்லாமல் போகவே, அக்குழந்தை யானைத் தலை கொண்ட கஜாசுரன் என்ற இராட்சசன் தலையை வெட்டி தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டதாம். தலையும், கண்ணும் இல்லாத இக் குழந்தை தனக்குத் தலை இல்லையென் பதை எங்ஙனம் உணர்ந்தது? கஜாசுரனின் தலையை எப்படி வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக்கொண்டது என்பதை ஸ்கந்த புராணம் தெளிவுபடுத்தவில்லை.

சுப்ரபேத ஆகமம் என்ற நூல் கூறுவதாவது:

சிவனும், பார்வதியும் யானைகளைப் போல் சம்போகம் செய்தார்களாம். இதன் விளைவாகப் பிறந்தது யானைத் தலைக் குழந்தையாம்.

(ஏ.எஸ்.கே. அய்யங்கார் எழுதிய பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா. என்ற நூலில் பக்கம், 365, 40, 41, 42)

2. விநாயகன் இடைக்கால வரவே!

அறிஞர்கள் சிலர் சங்க இலக்கியத்தில் விநாயகனைப்பற்றிய குறிப்பு காணப் படாததால் இடைக்காலத்தில் வந்த வழிபாடே விநாயகன் வணக்கம் என்பர். முதலாம் நரசிம்மவர்மனின், தானைத் தலைவனாகிய பரஞ்சோதியார் என்னும் சிவத்தொண்டன் இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலைநகராகிய வாதாபியி லிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலையைத் திருச்செங்காட் டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இது உண்மைதான்.

ஞானசம்பந்தரும், பொடி நுகரும் சிறுத் தொண்டர்க் கருள் செய்யும் பொருட்டாகக் கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே என்று பாடுகிறார்.

(டாக்டர் சோ. ந. கந்தசாமி, தமிழ்த் துணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஞான விநாயகர் என்னும் கட்டுரையில், பக்கம் 20)

3. பண்டை இலக்கியத்தில் விநாயகன் இல்லை

நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயகன் வழிபாடு சொல் லப்படவில்லை. திருஞானசம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகன் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். உமையம்மை பெண் யானையின் வடிவு கொள்ளச் சிவபிரான் ஆண் யானை வடிவு கொண்டு யானை முகத்தை உடைய கணபதியைத் தோற்று வித்தான் என்கிறார். சிறுத்தொண்டர் பரஞ்சோதி என்ற பெயரோடு வட பகுதி யில் வாதாபி என்ற நகர்மேல் படை எடுத்துச் சென்று அந்நகரை அழித்து வெற்றி கொண்டு வந்தபோது, அங்கு சிறப்பாகக் காணப்பட்ட கணபதியின் படிமத்தையும் கொண்டுவந்து தம்மூரில் கணபதீச்சுரம் செய்து வழிபட்டார் என் பதும், வாதாபியிலிருந்து கொணர்ந்த மையால் வாதாபி கணபதி எனப் பெயர் பெற்றார் என்பதும் இங்கு நினைவு கூர்தல் வேண்டும்.

(தமிழாகரர் வித்துவான் செ. வெங் கடராமச் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தன்னை நினையத் தருகிறான் என்ற கட்டுரையில், பக்கம் 17)

(மேல் இரு கருத்துகட்கும் ஆதார நூல்: சிதம்பரம் முக்குறுணி விநாயகர் திருக்குட முழுக்கு விழா மலர், 8.9.1978)

4. சிவனுக்குப் புதிய உறவு

பாடல் பெற்ற கோயில்களில், நாயன் மார் காலத்தில் விநாயகனை வைத்து வழிபட்டதாகத் தெரியவில்லை. விநாயகன் தமிழகத்துத் தெய்வம் அல்லர். முருகன் சங்க நூல்களில் இடம்பெற்றிருப்பதுபோல, விநாயகன் இடம்பெறவில்லை. விநாய கன் வழிபாடு பம்பாய் மாகாணத் தில்தான் மிகுதியாகக் காணப் படுகிறது. அம் மாகாணம் பல்லவர் காலத்தில் பண் டைச் சாளுக்கியரால் ஆளப்பட்டு வந் தது. சிறுத்தொண்ட நாயனார் சாளுக்கிய நாட்டுத் தலை நகரான வாதாபியைக் கைபற்றியபோது இப்புதிய கடவுளை அங்குக் கண்டார். தாம் முன்னர் கண்டறியாத அத் திருவுருவத் தைக் கண்டதும் வியப்புற்று அதனை எடுத்துவந்து தம் ஊரில் சீராளதேவன் கோயிலில் வைத்து வழிபடலானார். அதுமுதல் சீராளன் கோயில் கணபதீச் சுரம் எனப் பெயர் பெற்றது என்பது தெரிகிறது. இக் கணபதீச்சுரமே சம்பந்தர் பாடல்களிலும் இடம்பெற்றது. பின்னர் நாளடைவில் இப்புதிய கடவுளுக்கும், சிவபெரு மானுக்கும் உறவு முறை கற்பிக்கப் பட்டது. அதன் பயனாக விநாயகன் சிவபெருமானுக்கு முதல் திருமகனாகக் கருதப்பட்டான். இவ் விநாயகன், வாதாபியிலிருந்து குடி யேறிய தெய்வம் என்பதை வாதாபி கணபதி பஜேம் பஜேம் என்னும் ஸ்தோத்திரத்தாலும் நன்குணரலாம்.

(சைவப் பெரும்புலவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய சைவ சமயம் என்ற நூலில், பக்கம் 62)

---தொகுப்பு: குடந்தய் வய்.மு. கும்பலிங்கன், விடுதலை 31-08-2011

 


Tuesday, August 30, 2011

பூதக் கணபதியே எங்கும் கலவரத்தைத் தா!


நாளை மறுநாள் பிள்ளையார் சதுர்தியாம்..பாவாம் அந்த பிள்ளையார், பெரியார் தூக்கிபோட்டு உடைக்கும்போது கூட பயப்படல..சாமியே இல்லையென்று சொல்லும்போதும் பயப்படல...ஆனா ஆர்.எஸ்.எஸ்,இந்துமுன்னனி அண்ணன்மார்களை கண்டால் தொடை நடுன்குதான்...வருஷ வருஷம் யுத்த வேஷம் போட்டு ரெத்தவெரிய தூண்டி விடுரானுகலாம் அதனால் அவர்களை கண்டால் கையும் காலும் நடுன்குதான் பிள்ளையாருக்கு.

வாளும் வடிவேலும் வாய்த்த வெடிகுண்டும்
நாளும் உயிர் குடிக்க நான் தருவேன் - நீளும்கை
பொங்கும் எரிமுகத்துப் பூதக் கணபதியே
எங்கும் கலவரத்தைத் தா!


Monday, August 29, 2011

கருணை காட்ட விரும்பாத ஜெயலலிதா சட்டமன்றத்தில் தி.மு.கவை நோக்கி திசை திருப்பும் பேச்சு.

மரணதண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் ஒருவரான நளினிக்கு தூக்குதண்டனையை கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கபட்டதற்கு காரணம் கலைஞரால் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பது உண்மை அதற்காக இன்றும் அவரை பாராட்டவேண்டும் அவருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும்.

அன்று ஒருவருக்கு வழங்கப்பட்ட கருணையே இன்று மற்ற மூவருக்கும் வழங்குங்கள் என்று கேட்பதற்கு முகாந்திரத்தை வழங்கி இருக்கிறது.

ஒருவேளை அன்று நால்வருக்கு அதே அமைச்சரவை கருணை காட்ட பரிந்துரை செய்திருந்தால், நால்வருக்கும் சேர்ந்து அந்த கோரிக்கை மறுக்கபடுவதற்கு வாய்ப்பிருந்தது.

நால்வருக்கும் தண்டனை குறைப்புக்கு பரிந்துரை செய்திருந்தால், மறுக்கபடுவதோடு மட்டுமல்லாமல், தி.மு.க ராஜீவை கொன்றது அதுவே அந்த குற்றவாளிகளை தப்பிக்கவைக்கிறது என்று கூசாமல் ஜெயலலிதா பேசியிருப்பார்.

ஜெயலலிதா இந்த மூவருக்கும் கருனைகாட்டமாட்டார் அவர் குணம் அப்படித்தான் என்பது உண்மையான திராவிட இனஉணர்வாளர்கள், அரசியலை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியும்.

ஈவு இரக்கமற்ற அந்த பெண்மணியின் அறிக்கை 23.10.2008 அன்று நமது எம்ஜியாரில் வெளிடப்பட்டது.

நளினிக்கு கலைஞரால் கருணை காட்டப்பட்டது என்ற உண்மை தெரியாத ஜெயலலிதா அந்த அறிக்கையின் ஒருபகுதியில் கூறியிருப்பதாவது....

“ ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உய்ரநீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான சோனியா காந்தி. மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்கிறார். இப்படி பொய் பார்க்கலாமா? எது அடுக்குமா? இப்போது நளினி ஏதோ உரிமைக்காக போராடுவதுபோல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது! இது சோனியா மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்த பிரச்சனை அல்ல. அவர்களுடைய குடும்ப பிரச்சனை அல்ல. எது ஒரு நட்டு பிரச்சனை. ஒரு முன்னாள் பாரத பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை. இப்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன்.

தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற அசட்டு தைரியத்தில் சிலர் பகிரங்கமாக தேச விரோத கருத்துக்களை பேச ஆறஅம்பித்துவிட்டனர். POTA இல்லாவிட்டாலும், தற்போதுள்ள சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் விடுதலைபுலிகள் அமைப்புக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.” இவ்வாறு செல்கிறது அறிக்கை.

கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன் என்ற கருணையற்ற எண்ணம் கொண்ட ஜெயலலிதா இன்று சட்டமன்றத்தில் தி.மு.கவை கைகாட்டும் உச்சிகுடுமி சானக்கியதனத்தை காட்டியிருக்கிறார். தனது அரசால் முடியாது என்று சட்டவிதிகளை சுட்டிக்காட்டும் ஜெயலலிதா, குறைந்த பட்சம் ஒரு கட்சியின் தலைவியாக தார்மீக அடிப்படையில் இந்த மரணதண்டனைக்கு எதிராக கருத்தை கருணையோடு தெரிவிப்பதற்குமா சட்டவிதிகள் தடுக்கின்றன???!!!

இத்தனைக்கும் பிறகு அந்த பரிதாபத்திற்குரிய தாயார் அற்புதம் அம்மையார்.”அம்மா என் மகனை காப்பாற்றுங்கள்” என்று மன்றாடுகிறார். இளைஞர்கள் இன உணர்வாளர்கள் போராடுகிறார்கள், ஒருவர் தன் இன்னுயிரை இழந்திருக்கிறார், தமிழக மக்கள் அனைவரும் அவர்களை விடுதலை செய்தால் என்ன ஆகிவிட போகிறது என முனுமுனுக்கிறார்கள்.

இன்னமும் கூலிக்கு மாரடிப்பவராய், ஜெயலலிதாவின் கொள்கை பரப்பு துறையை குத்தகை எடுத்தவராய், சீமான் கலைஞரை குற்றம் சாட்டி அறிக்கை விடுகிறார். ஜெயலலிதா சீமான் இருவரின் நோக்கங்களை இந்த கட்டுரை தகர்க்கும் என்று நம்புகிறேன்.

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. நேரு உட்பட பலர் காந்தியை சந்தித்து மூவரையும் விடுதலை செய்ய ஆங்கிலேய அரசிடம் கோரிக்கை வைக்க சொன்னபோது, அவர்கள் அகிம்ஸா தர்மத்திற்கு எதிரானவர்கள் என்று கூறி மறுத்துவிட்டார். உயிரை காக்கும் வாய்பிருந்தும் சொந்த புகழை காக்க முயன்ற காந்தி, ஆங்கிலேய அரசோடு சேர்ந்து குற்றம் சாட்டபடவேண்டியவர் விடுதலை பெற்ற இந்தியாவில். அதுபோன்ற வரலாற்று தவறை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செய்துவிடக்கூடாது.

இந்த கட்டுரையை ஒரு வேகத்தில் எழுதினாலும்.........


ஒரு தமிழனாய் என் மாநில முதலமைச்சரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்....தமிழர்கள்...பெரும்பான்மையினோர் விருப்பத்தை...வேதனையை உணர்ந்து தயவுசெய்து இந்த மூவரையும் மரணதண்டனையிலிருந்து காப்பாற்ற உங்களால் ஆன அனைத்து முயற்சியையும் எடுங்கள்...உங்கள் ஆதரவை தாருங்கள் என மீண்டும் மீண்டும் தாழ்மையுடன் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.... இதற்கு உங்களுக்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை...கருணை உள்ளம் மட்டும் இருந்தால் போதும் தாயே....

- திராவிடப் புரட்சி முகநூல் பகுதியில் எழுதிய கட்டுரை


Wednesday, August 24, 2011

இரட்டை வேடம் ஏன் தினமணியே?

நல்ல சட்டமாகத் தான், சத்தமாகத்தான் பேசுகிறார் தினமணி ஆசிரியர் திருவாளர் வைத்தியநாதய்யர்வாள்.

திண்டிவனத்துக்கு அடுத்த மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமி கள் தமிழ், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மிகவும் வக்கனையாகவே பேசியுள்ளார்.

தமிழ் வேறு, சைவம் வேறு என்று பிரித்துப் பார்க்க வேண்டிய அவசி யம் இல்லை. இரண்டும் ஒன்றோடு பிணைந்து நிற்பவை. தமிழையும், சைவத்தையும் வளர்ப்பதற் காக ஏற்பட்டவைதான் சைவத் திருமடங்கள். தமிழ் மட்டுமே ஒரு கட வுள் மொழி என்று தமிழ் மொழிக்கு ஒரு தனிச் சிறப்புண்டு.

இறைவனைக் கடவுள் என்று குறிப்பிட்டு ஆண்ட வனுக்குக் காரணப் பெயர் சூட்டிப் போற்றிய மொழி நமது தமிழ் மொழி மட்டுமே. ஆழ்வார்களும், நாயன்மார் களும் தமிழை வளர்த் தார்கள்

என்று சாங்கோ பாங்க மாகப் பேசி இருக்கிறார் தினமணி ஆசிரியர்வாள் (தினமணி 20.8.2011, பக்கம் 6)

இதே தினமணியில் இரண்டு நாள்கள் கழித்து (22.8.2011) கருத்துக் களத்தில் எதை இடம் பெறச் செய்துள்ளார்? சென்னை அண்ணாநகர் கிழக்கு என்ற முகவரியோடு லா.சு. ரங்கராஜ அய்யர்வாள் என்ன எழுதியிருக்கிறார்?

தமிழில்தான் அர்ச்சனை, யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்பது போன்ற விதண்டாவாதக் கொள்கைகளும் மறுபரிசீலனைக் குரியவை - என்று
எழுதி இருக்கிறார்.

தமிழ் மட்டுமே கடவுள் மொழி என்று தினமணி ஆசிரியர் கூறிய கூற்று 20 ஆம் தேதியதினமணியில் இடம் பெறுகிறது - அப் படிக் கூறுவது விதண்டா வாதம் என்று 22 ஆம் தேதி தினமணி கூறுகிறது.

ஏனிந்த இரட்டை வேடம்? யாரை ஏமாற்ற இந்த இரட்டை வேடம்?

தமிழும் கடவுளும் ஒன்றே என்று ஆகிவிட்ட பிறகு அந்தத் தமிழில் வழிபாடு நடத்தக் கூடாதா? அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண் மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார் என்று சேக்கிழார் எழுதி இருப்பதெல்லாம் பிரமாதம்தான்.

ஆனால் அது ஏட்டுச் சுரைக்காய்தானா? தமிழில் அர்ச்சனை என்பது விதண்டாவாதம் என்று தினமணி கூறுகிறதே.

சிதம்பரம் நடராசன் கோயில் சைவக் கோயில் தானே? சைவமும், தமிழும் வேறு வேறு அல்ல என்று கூறும் திருவாளர் வைத்திய நாதய்யர்வாளே!

திருவாசகத்துக்கு உருகாதார் வேறு எதற்கும் உருகார் என்று சொல்லப் படும் அந்தத் திருவாசகத் தைத்தானே ஓதுவார் ஆறுமுகசாமி என்ற பக்தர் - முதியவர் சிதம்பரம் சிற்றம்பலத்தில் பாடினார்?

அவருக்குக் கிடைத்த பரிசு என்ன? அடி உதை தானே! ஒரு முறையா, இருமுறையா? பலமுறை உதைபட்டுள்ளாரே!

அந்தத் தில்லைக் கூத் தாடிதான் ஓடி வந்து தடுத் தாரா? அல்லது இந்தத் தினமணிதான் கண்டித்து எழுதிற்றா?

தினமணி  ஆசிரிய ரின் குருநாதர் திருவாளர் சோ ராமசாமி அய்யரும் என்ன எழுதினார்?

மொழி ஆர்வமா? மத துவேஷமா? என்ற தலைப் பில்  துக்ளக்கில் (18-11-1998) தலையங்கமே தீட்டித் தள்ளினாரே.

நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ் கிருதத்தில் மொழி பெயர்த் தால் அர்த்தம் இருக்கும். அருள் இருக்காது. ரிஷிகளும், பக்த சீலர்களும் இயற்றிய ஸம்ஸ்கிருதத் துதிகளை தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும். புனிதம் இருக் காது. அதாவது இங்கே முக்கியத்துவம் மொழிக்கு அல்ல, ஒலிக்கு என்று எழுதவில்லையா?

அர்ச்சனை செய்ய ஸம்ஸ்கிருதத்திலிருந்து தான் மொழி பெயர்க்க வேண்டும் என்று யார் சொன்னார்? தமிழில் அர்ச் சனைப் பாட்டு இல்லையா? அர்ச்சனைப் பாட்டேயாகும் என்று சேக்கிழார் எழுதி யுள்ளதன் அர்த்தம் என்ன?

ஒலிக்குத்தான் முக்கி யத்துவமாம். இது கடவு ளையே கொச்சைப்படுத்து வது ஆகாதா?

அப்படிப் பார்க்கப் போனால் ஸம்ஸ்கிருத மொழியின் ஒலியைவிட தமிழின் ஒலி இசை அருவி போன்றதல்லவா?

அடி வயிற்றிலிருந்து மாரிக்காலத் தவளை போல கத்துவதுதானே ஸம்ஸ் கிருதம்?

அருட்பா பாடிய வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் என்ன கூறு கிறார்?

இடம் பத்தையும், ஆர வாரத்தையும், பிரயாசத்தையும் பெருமறைப்பையும் உண்டு பண்ணுகிற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது. பயிலுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய், சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள்  வளத்தாற் கிடைத்த தென்மொழி யொன்ற விடத்தே மனம் பற்றச் செய்து அத்தென் மொழிகளாற் பலவகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித் தருளுவீர்

என்கிறார் வடலூரார்.

(திருவருட்பா 6 ஆம் திருமுறை - வசன பாகத் தில் சத்தியப் பெருவிண் ணப்பம் என்ற தலைப் பின் கீழ் வருவது)

இரட்டை வேடம் ஏன் தினமணியே?

----விடுதலை, 24-12-2011

 


Monday, August 22, 2011

ஊழல் ஒழிப்பு ஒரு சீசன் சினிமா போல ஆகிவிடக் கூடாது

மக்களிடம் ஊழல் என்றால் பெரும் கொந்தளிப்பு இருப்பதை உணர்ந்துகொண்டு உள்நோக்கத்தோடு செயல்படும் ஹசாரே போன்ற வழிபோக்கர்களுக்கு அதரவு என்பது அவர் பின் இருந்துகொண்டு செயல்படும் ஆர்.எஸ்.எஸ். ,பி.ஜி.பி காவி கும்பலுக்கு கொடுக்கும் ஆதரவுதான்........70 வயது ஆனா இந்த ஹசாரே இவளவு நாள் எங்கிருந்தார்?. 1969 ல் சட்ட முன்வரைவு பெற்ற லோக்பால் மசோதா பல காரணங்களால் கடந்த காலத்தில் தடைபட்டபோது இந்த ஹசாரே எங்கிருந்தார்? இப்பொழுது திடீர் என்று எங்கிருந்து போந்துகொண்டு வந்தது ஊழல் ஒழிப்பு ஆவேசம்? ....இந்த உண்மைகளை ஆழ்ந்து நோக்கினால் இவர் உண்ணாநோன்பின் உள்நோக்கம் புரியும்......இவர் யோகிதை சொன்னால் நேரம் பத்தாது.
திருட்டை ஒழிக்கிறேன் என்று திருடன் சொன்னால் அவர் பின்னாலும் போகவேண்டுமோ? அப்படித்தான் இந்த ஹசாரே.....கடந்த கால உண்ணாவிரத போராட்டத்தில் அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்துக்கு மட்டும் ரூ.50 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நிதி உதவி செய்தவர்கள் யார்? யார்? இதற்காக ரூ.82 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. 4 நாள் உண்ணாவிரதத்துக்கு இவ்வளவு செலவு தேவையா? 4 நாள் உண்ணாவிரதத்துக்கு ரூ.50 லட்சம் செலவு செய்துள்ள இவர் ஊழலை ஒழிப்பேன் என்பது எப்படி?...உண்ணாவிரதம் என்பது சண்டித்தனம் என்று பெரியார் சொன்னது எவளவு உண்மை என்பது இந்த ஆசாமியின் மிரட்டல் மூலம் தெரிகிறதே....

இரு தினங்களுக்கு முன்பு நந்தன் நீல்கனி தனது பேட்டியில் மிக அருமையான ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்...சமூக அளவில் முதலில் ஊழலை ஒழிக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான மக்களின் வேதனைகள், விரக்திகள், கோபங்களை நான் அங்கீகரிக்கிறேன், மதிக்கிறேன். அதேசமயம், புற்றுநோயாக மாறியுள்ள ஊழலை ஒழிக்க ஒரு சட்டம் போதுமானது என்று கருதுவது தவறானது.அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் மசோதாவும் சரி, அன்னா ஹஸாரே குழுவினர் கூறும் ஜன் லோக்பால் மசோதாவும் சரி, ஊழலை ஒழிக்கும் ஒரே ஆயுதம் அல்ல. இந்த சட்டம் வந்தால் ஊழல் ஒழிந்து விடும் என்று நினைப்பது கற்பனைக்கு சரி வருமே தவிர நிஜத்தில் சாத்தியமில்லாதது... இதில் உள்ள உண்மை புரிந்தால் இந்த ஹசாரே ஆசாமியை நாங்கள் ஏன் குறைகூறுகிறோம் என்பது தெள்ளதெளிவாக தெரியும்.
ஊழலை ஒழிப்பது என்பது ஏதோ ஒரு போராட்டத்தினால் முடிவுக்கு வருவது அல்ல....திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல சமுகத்தில் உள்ள ஒவ்வொருவரும் இதனை ஒழிக்க அவர்கள் முதலில் திருந்தவேண்டும்....அதோடு மட்டுமல்லமால் அரசும் சில நடவடிக்களை சமுகத்தின் அடித்தளத்தில் இருந்து எடுக்கவேண்டும்..... ஊழலை ஒழிக்க நடவடிக்கை என்று நினைக்கும் போது ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொடுத்த அறிக்கையின் சில பகுதி நினைவு வருகிறது...

ஊழல் ஒழிப்பு என்பது வெறும் சட்டப் பிரச் சினைதானா? அல்ல, அது ஒரு சமூகப் பிரச்சினை; வேரைத் தேடிச் சென்று வேரோடும் வேரடி மண்ணோடும் அதனைக் களைய முன்வர வேண்டும்.

(1) தேர்தல் முறைகளில் அடிப்படை மாற்றம் - பல விதிமுறைகளில் மாற்றம்.

(2) போலீஸ் - கிரிமினல் - சட்ட நடவடிக்கைகளில் திருத்தம்.

(3) நீதித்துறையில் தாமதம் - ஏழைகளால் வழக்கு மன்றத்திற்கே போக முடியாத சூழ்நிலை - இவை எல்லாம் மாற்றப்படல் வேண்டும்.

(4) குடியரசுத் தலைவரின் சம்பளமே 10 ஆயிரம் என்ற விதி இப்போது காணாமற்போயிற்றே! நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பெறும் ஊதியம் முதல், பலூன் போல ஊதிய உச்சவரம்பற்ற சம்பளம் (தனியார்துறை உட்பட) இவைகளில் துணிந்து கை வைத்து மாற்றம் செய்தால் ஒழிய ஊழலை ஒழித்துக் கட்டவே முடியாது!

இப்போது வரப் போகும் சட்டம் மலையைக் கிள்ளி எலியைப் பிடிக்கும் தன்மையைப் போன்றது தான்.

பனிப்பாறையின் முனையைக் (Tip of the Ice berg) கண்டே எல்லாம் முடிந்து விடும் என்று கருதி ஏமாறக் கூடாது; பனிப் பாறைகளை உடைக்கும் சப்மெரின்களாக சட்டங்களும், சமுதாய விழிப்புணர்வுகளும் தேவை!

ஊழல்பற்றி பேசும் பலரில் எத்தனைப் பேர் தங்கள் உண்மை வருமானத்தின்படி வருமான வரி செலுத்தும் உத்தமர்கள் என்பதை அவர்களையே கேட்டுக் கொண்டால் மிஞ்சுபவர் எவர்? எத்தனை பேர்? ஓட்டுக்குப் பணம் வாங்கிட மறுப்பவர்கள் எத்தனை பேர்?

ஊழல் ஒழிப்பு ஒரு சீசன் சினிமா போல ஆகிவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தோடு, பகுத்தறிவுடன் நோய் நாடி நோய் முதல் நாடினால் ஒழிய அது ஒழியாது!


அன்னாஹசாரே - பொது மக்களே ஏமாந்து விடாதீர்கள்!


அன்னாஹசாரே என்பவரை மய்யப்படுத்தி - ஊழலுக்கு எதிர்ப்பாக அரங்கேற்றப்பட்டுள்ள பட்டினிப் போராட்டம் திட்டமிட்ட ஒரு நாடகம் என்பதில் அய்யமில்லை. அடுத்த மக்களவைத் தேர்தலை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் ஒத்திகையாகும்.

பாரதிய ஜனதா என்னும் ஆர்.எஸ்.எஸின் முகமூடியை அதிகார பீடத்தில் அமர்த்துவதற்கான ஏற்பாடு. பாரதிய ஜனதா கட்சிக்குள் முட்டல் - மோதல்கள் ஆயிரம் ஆயிரம்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் மக்கள் விரோதத்தால் முற்றுகையிடப்பட்டுள்ளன. குறிப்பாக கருநாடக மாநிலத்தில் அக்கட்சியின் ஆட்சி எந்தக் கதிக்கு ஆளானது என்பது யாருக்குத் தெரியாது.

ஊழல் குற்றச்சாற்றுக்குப் பெரிய அளவுக்கு ஆளான அம்மாநில முதல் அமைச்சர் எடியூரப்பாவை வெளியேற்றுவதற்குள் பா.ஜ.க. தலைமை பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.

ஆனாலும் பெயரளவில் எடியூரப்பா வெளியேறி னாலும் அவருடைய பினாமிதான் முதல் அமைச்சராகப் பதவியேற்கும் நிலைமை கேலிக்குரியது.

ஒரு மாநில முதல் அமைச்சரிடம் பாரதிய ஜனதாவின் தலைமை எந்த அளவுக்குச் சரணாகதி அடைந்திருக்கிறது என்பதற்கு இது ஒன்றே போதும்.

கொக்கு ஒட்டகத்தைப் பழித்த கதையாக இந்தப் பா.ஜ.க. நரி அய்க்கிய முற்போக்குக் கூட்டணியைப் பார்த்து ஊழல் ஊழல் என்று ஊளையிடுகிறது.

பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் சவப் பெட்டியில் கூட ஊழல் நடந்ததே! கட்சியின் தலைவர் பங்காரு லட்சுமணன் கத்தை கத்தையாகப் பணத்தைப் பெற்றுக் கொண்டதை தெகல்கா அம்பலப்படுத்த வில்லையா?

13 நாள் பிரதமராக வாஜ்பேயி அந்தக் குறுகிய கால கட்டத்தில்கூட என்ரான் ஒப்பந்தம் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது?

அன்னாஹசாரே என்ற முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியரின் பின்திரையில் பா.ஜ.க., குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

தேசியக் கொடியிலோ பா.ஜ.க.வின் தாமரை பறந்து கொண்டிருக்கிறது. காலிகள் நடமாட்டம் அதிகம்.

ஆர்.எஸ்.எஸின் அபிமான பாடலான முஸ்லிம் களைச் சிறுமைப்படுத்தும் வந்தே மாதரம் பாடல் பட்டினிப் போராட்டம் வளாகத்தில் கலக்கிக் கொண்டு இருக்கிறது.


ஊழலை முன்னிறுத்தி அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைப் பலகீனப்படுத்தி - அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை பி.ஜே.பி. அனுபவிப்பது அல்லது பயன்படுத்திக் கொள்வது என்பதுதான் இதற்குள் புதைந்திருக்கும் மெகா திட்டமாகும்.

ஊழலைவிட மகாமோசமான மதவாதத்தை எதிர்த்து இந்த ஹசாரேக்கள் எப்பொழுதாவது குரல் கொடுத்ததுண்டா?

பாபா மசூதி இடிக்கப்பட்டபோது நாட்டில் நடைபெற்ற கலவரங்களால் எத்தனை மக்கள் கொல்லப்பட்டார்கள்? அப்பொழுதெல்லாம் இந்த ஆசாமிகள் எந்தப் பொந்துக்குள் பதுங்கி இருந்தனர்?

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் துணைப் பிரதமராக, உள்துறை அமைச்சராக, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கக் கூடாது என்று குறைந்த ஒரு கருத்தாவது தெரிவித்ததுண்டா?


ஊழல் என்று எடுத்துக் கொண்டாலும் எடியூரப் பாவுக்கு எதிர்ப்பாகப் பேசியதுண்டா? இலஞ்சம், ஊழலுக்கு எதிராகப் பேசப்பட்டால் வெகு மக்கள் பெரும்பாலும் ஈர்க்கப்படுவார்கள் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

மதச் சார்பின்மைக்கும், சமூகநீதிக்கும் எதிரான அணி அடுத்த மக்களவைத் தேர்தலை மனதிற் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியை - சூழ்ச்சியை - அரசியல் தெரிந்தவர்கள் என்று கருதப்படும் இடதுசாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். பி.ஜே.பி.யோடு கைகோத்து போராட்டத்தில் ஈடுபடுவதால் ஏற்படும் விளைவு யாருக்குச் சாதகமானது?

நான் உமி கொண்டு வருகிறேன் நீ அரிசி கொண்டு வா ஊதி ஊதி சாப்பிடுவோம் என்கிறது பி.ஜே.பி. இதில் இடதுசாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா?

சீசரின் மனைவி சந்தகத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்பார்கள்; பட்டினிப் போராட்டத் தலைவர் அன்னா ஹசாரே சந்தகத்துக்கு அப்பாற் பட்டவரா? இல்லை இல்லை என்பதற்கு ஆதாரங்கள் இருக்கவே செய்கின்றன.

பொது மக்களே ஏமாந்து விடாதீர்கள்!

----விடுதலை தலையங்கம், 22-08-2011


Saturday, August 20, 2011

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (7) ...முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் முப்புரிகள்

தீண்டாமை ஒழிப்பு, இளம் விதவைகள் மறுமணம், கலப்புத் திருமணம், மது ஒழிப்பு, ஹரிஜன ஆலயப் பிரவேசம், தேவதாசி முறை ஒழிப்பு, ஆலயங்களில் ஆடு, மாடு, கோழி முதலியவற்றைப் பலியிடும் கொடுமைக்கு எதிர்ப்பு என்று பல சமுதாயச் சீர்திருத்தங்களை அன்றைய காங்கிரஸ் மகாசபை இந்தியா முழுவதும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது. எனவே, ஈ.வெ.ரா. காங்கிரசில் இருந்து கொண்டே சீர்திருத்தப் பிரச்சாரம் செய்திருக்கலாம்

அன்றைய காங்கிரஸ் மகாசபையில் கடவுள் நம்பிக்கையற்ற சிலரும் உறுப்பினர்களாக இருந்தார்கள். நேருஜி ஒரு நாத்திகர் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆகவே, கடவுள் மறுப்புக் கொள்கையைப் பின்பற்றிக் கொண்டே காங்கிரசில் தொடர்ந்து ஈ.வெ.ரா. பிரச்சாரம் புரிந்திருக்கலாம். எனினும், பகுத்தறிவுக்குப் பொருந்தக் கூடிய எந்த வித காரணமும் இல்லாமல் காங்கிர சிலிருந்து -ஈ.வெ.ரா. வெளியேறி விட்டார்

-என்று குற்றப் பத்திரிகை படிக்கிறார் திருவாளர் கே.சி. லட்சுமிநாராயணன் (துக்ளக் 20--7-2011) வைக்கம் போராட்டம், சேரன் மாதேவி குருகுலப் போராட்டத்தை எல்லாம் காங்கிரசில் இருந்து கொண்டே காங்கிரஸ் பார்ப்பனர்களின் எதிர்ப்பையும் முறியடித்துத்தான் தந்தை பெரியார் வெற்றி பெற்றார்.

தீண்டாமையை எதிர்த்து வைக்கத்தில் தந்தை பெரியார் போராடி வெற்றி பெற்றாரென்றால் தமிழ்நாடு காங்கிரசின் ஒத்துழைப்பால் அல்ல. இன்னும் சொல்லப் போனால் காந்தியாரின் விருப்பத்துக்கு எதிராகவே நடத்தப்பட்ட போராட்டம் அது என்பதுதான் உண்மை.

இதுபற்றி தந்தை பெரியார் அவர்கள் தெரிவித்துள்ள தகவல்கள் மிகவும் முக்கியமானவை. கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், இரணியல் ஆகிய ஊர்களில் ஆற்றிய உரை - தீண்டாமையை ஒழித்தது யார்? (திராவிடர் கழக வெளியீடு - முதற்பதிப்பு 1961) என்ற தலைப்பில் வெளியாகியுள் ளது. அதில் குறிப்பிட்டு இருப்பதாவது:


திரு. ராஜகோபாலாச்சாரியார் எனக்குக் கடிதம் எழுதினார். நீ ஏன் நம்நாட்டை விட்டு இன்னொரு நாட்டிலே  (கேரளா வைக்கத்தில்)  ரகளை செய்கிறாய்? அது சரியல்ல, அதை விட்டுவிட்டு நீ இங்கு வந்து,  விட்டுச் சென்ற வேலைகளைக் கவனி என்று எழுதினார். அப்போது இருந்த எஸ். சீனிவாச அய்யங்காரும் இப்படித்தான் என்னை வைக்கத்திற்கு வந்தே அழைத்தார்; வரச்சொன்னார். அதே மாதிரி பத்திரிகையிலேயும் எழுதினார்கள். ஆனால் இதற்குள் சத்தியாகிரக ஆசிரமத்தில் ஆயிரம் பேருக்கு மேல் சேர்ந்தார்கள். தினமும் ஊர் முழுவதும் சத்தியாக்கிரக பஜனையும் தொண்டர்கள் ஊர்வலமும் நடந்தது; உணர்ச்சி வலுத்துவிட்டது.

பஞ்சாபில் சுவாமி சிரத்தானந்தா என்பவர் ஒரு அப்பீல் போட்டார். அதன் பிரகாரம் பஞ்சாபிலேயிருந்து சீக்கியர்கள் 20, -30 ஆட்களையும், இரண்டாயிரம் ரூபாயும் கையிலெடுத் துக் கொண்டு நேரே வைக்கத்துக்கு வந்தார்கள். தாங்கள் சாப்பாட்டுச் செலவை ஏற்றுக் கொள்ளும் ஆதர வைத் தருவதற்காக.  உடனே இங்கிருந்த பார்ப்பனர்கள் எல்லாம் சீக்கியர்கள் வந்து இந்து மதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கிறார்கள் என்றெல்லாம் காந்திக்கு எழுதினார்கள்.

உடனே அதன் பேரில் காந்தியார் சாயபு, கிறிஸ்துவன், சீக்கியன் ஆகிய பிறமதக்காரன் எவனும் இதில் கலந்து கொள்ளக்கூடாது என்று எழுதி விட்டார்கள்.

காந்தி எழுதினவுடனே இதில் கலந்திருந்த சீக்கியன், சாயபு, கிருஸ் துவன் எல்லாம் போய்விட்டார்கள். அதுபோலவே தீவிரமாக இதில் ஈடுபட்டு முன்னோடியாக உழைத்த காலஞ்சென்ற ஜோசஃப் ஜார்ஜுக்கும், ராஜ கோபாலாச்சாரியார் கடிதம் எழுதினார். இந்து மதச் சார்புள்ள இந்தக் காரியத்தில் நீ சேர்ந்திருப்பது தப்பு என்றார்.

அதை ஜோசஃப் ஜார்ஜ் அவர்கள் லட்சியம் பண்ணாமல் திருப்பி எழுதினார்: நான் என் சுய மரியா தையை விட்டுவிட்டு இருக்கமாட் டேன். வேண்டுமானால் என்னை விலக்கிவிடுங்கள் என்றார். தற்போதைய நாகர்கோவில் பயோனீர் டிரான்ஸ் போர்ட்டைச் சேர்ந்த சேவு என்பவரும், அண்மையில் காலஞ்சென்ற டாக்டம் எம்.இ.நாயுடு (திரு எம்.எம்.பெருமாள் நாயுடு அவர்கள் இந்தப் பேச்சுக்கு முதல்நாள் இரவு நாகர்கோவிலில் காலமானார். பிறகு தந்தை பெரியார் சென்று துக்கம் விசாரித்தார் என்பதை வாசகர்கட்கு நினைவூட்டுகிறோம்.) அவர்களும் என்னுடனேயே இருந்து தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்தார்கள். அவர்கள் இதை விட்டுப் போகமாட்டேன் என்று உறுதியாகத் தெரிவித்து விட்டார்கள். என்றாலும், காந்தி சத்தியாக்கிரகத்திற்கு விரோத மாக எழுதி பணத்தையும் ஆளையும் தடுத்துவிடுவாரோ என்று சிலர் பயப்பட்டார்கள்.

 


அந்த சமயம் சாமி சித்தானந்தா அவர்கள் வைக்கம் வந்து, தான் பணத் திற்கு வகை செய்வதாகச் சொன்னார். பிறகு காந்தி கட்டளைக்கு விரோத மாகவே சத்தியக்கிரகம் நடந்து வந்தது.

இதற்கிடையிலே நடந்த ஒரு நிகழ்ச்சியும் கவனிக்கத் தக்கது. எங்கள் போராட்டத்திற்கு பெரிய மரியாதை யையும், செல்வாக்கையும் தேடிக் கொடுத்துவிட்டது, இந்த காந்தி கட்டளை. இந்த சமயத்தில் என்னை மறுபடியும் பிடித்து 6 மாதக் கடினக் காவல் விதித்து சிறையில் போட்டு விட்டார்கள். பிறகு சத்தியாக்கிரகத்தை நிறுத்துவதற்காகவும், எங்களை அழிப்பதற்காகவும் என்று நான் ஜெயிலிலே இருக்கிற சமயத்தில் இந்த நம்பூதிரி பார்ப்பனர்களும் சில வைதீகர்களும் சேர்ந்து கொண்டு சத்ருசங்கார யாகம் என்ற ஒன்றை வெகு தடபுடலாக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து நடத்தினார்கள். ஒரு நாள் நடுச்சாமத்தில் தொடர்ந்து வேட்டு சத்தம் கேட்டது. நான் ஜெயிலில் விழித்துக் கொண்டிருந்தேன். ரோந்து வந்தவனைப் பார்த்துக் கேட்டேன், என்ன சேதி இப்படி வெடிச் சத்தம் கேட்கிறது? என்று கேட்டேன். இந்தப் பக்கம் ஏதாவது பெரிய திருவிழா நடக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு அவன் சொன் னான்: மகாராஜாவுக்கு உடம்பு சவுக் கியம் இல்லாமல் இருந்து மகாராஜா நேற்று ராத்திரி திருநாடு எழுந்து விட்டார் என்றான்.

அதாவது ராஜா செத்துப் போனார் என்று சொன்னான். அவ்வளவுதான். மகாராஜா செத்தார் என்றவுடன் எங்களுக்கு சிறைக்குள்ளாகவே ரொம்ப பெருமை வந்துவிட்டது. அவர்கள் பண்ணிய யாகம் அங்கேயே திருப்பி மகாராஜாவைக் கொன்று விட்டது என்றும் அந்த யாகம் சத்தியாக் கிரக்காரர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் மக்களிடையே இது ஒரு தனி மதிப்பை ஏற்படுத்தி விட்டது. அதன் பிறகு அரசாங்கம் எங்களையெல்லாம் ராஜாவின் கருமாதியை முன்னிட்டு விடுதலை செய்தனர். எதிரிகள் குரலும் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வர ஆரம்பித்தது.

ராணியின் ராஜி முயற்சியும், பார்ப்பனர் சூழ்ச்சியும்

ராணியும் கூப்பிட்டு எங்களோடு ராஜி பண்ணி ஒரு உடன்பாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்தவுடன் அப்போது சமஸ்தானத்தில் திவானாக இருந்த ஒரு பார்ப்பான் என்னிடத்தில் நேரே ராணி பேசக்கூடாது என்று கருதி திரு. ராசகோபாலாச்சாரிக்கு கடிதம் எழுதினான். ராச கோபாலாச்சாரியும் எங்கே என்னிடத்தில் ராணி பேசி உடன்பாட்டிற்கு வந்தால் எனக்கு மரியாதையும் புகழும் வந்து விடுமே! அந்த மாதிரி வரக்கூடாது என்று கருதி, காந்தியாருக்கே அந்த வாய்ப்பையளித்து காந்தியின் மூலமே காரியம் நடந்ததாக உலகுக்குக் காட்ட வேண்டும் என்று தந்திரம் செய்து காந்திக்கு கடிதம் எழுதினார். எப்படியாவது காரியம் வெற்றியானால் போதும்; நமக்குப் பேரும் புகழும் வருவது முக்கியமல்ல என்ற கருத்தில் நானும் ஒப்புக் கொண்டேன்.
காந்தியும் புறப்பட்டு வந்தார். ராணியோடு காந்தி பேசினார். (இப்படி இந்த சத்தியாக்கிரகம் நல்லபடி வேரூன்றி வெற்றி நிலைக்கு வந்தவுடன் பார்ப்பனர்கள் காந்தியை இதில் புகுத்தினார்கள்.)

ராணி, காந்தியோடு பேசும்போது  தெரிவித்தார்கள்:    நாங்கள், ரோடுகளைத் திறந்து விட்டு விடுகிறோம். ஆனால் அதை விட்டவுடன் நாயக்கர் கோயிலுக்குள் போக உரிமை வேண்டும் என்று கேட்டு ரகளை செய்தால் என்ன செய்வது? அதுதான் தயங்குகிறோம் என்றார்கள். உடனே காந்தி, டீபியில் தங்கி இருந்த என்னிடத்தில் வந்து ராணி சொன்னதைச் சொல்லி என்ன சொல்லுகிறாய்? இதை ஒப்புக் கொண்டுவிடுவது நல்லது என்றார். நான் சொன்னேன்: ரோடு திறந்து விடுவது சரி; ஆனால் அதை வைத்துக் கொண்டு கோயிலைத் திறந்துவிடும்படி கேட்க மாட்டோம் என்று எப்படி நாம் உறுதியளிப்பது? கோயில் பிரவேசம் என்பது காங்கிரசின் லட்சியமாக இல்லாவிட்டாலும், எனது லட்சியம் அதுதானே? (கோயில் நுழைவு) அதை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? வேண்டுமானால் ராணிக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கள். இப் போதைக்கு இம்மாதிரி கிளர்ச்சி எதுவுமிருக்காது. கொஞ்சநாள் அது பற்றி மக்களுக்கு விளங்கும்படி பிரச் சாரம் செய்து கலவரத்திற்கு இடமிருக் காது என்று கண்டால்தான் கிளர்ச்சி  ஆரம்பிக்கப்படலாம் என்று சொல் லுங்கள் என்று சொன்னேன்.

போராட்ட வெற்றி

அதை காந்தி, ராணியிடம் சொன்னவுடன் ராணியார், ரோடில் யார் வேண்டுமானாலும் நடந்து செல்லலாம் என்று சொல்லி பொது ரோடாக ஆக்கினார்கள் என்று தந்தை பெரியார் பேசியுள்ளார்.
தீண்டாமை ஒழிப்பில் காங்கிரசின் லட்சணம், காந்தியின் பங்கு இதுதான். இவற்றையெல்லாம் மீறிதான் தந்தை பெரியார் வெற்றி பெற்றார். அவரை வைக்கம் வீரர் என்று திரு.வி.க. எழுதி யது காங்கிரஸ் ஏடான நவசக்தியில் தான் என்பது நினைவிருக்கட்டும்.
சேரன்மாதேவியில் நடத்தப்பட்ட குருகுலத்திலும் அதன் பொறுப்பாள ரான வ.வே.சு. அய்யர் பார்ப்பன மாணவர்களுக்கு தனிப் பந்தி; பார்ப் பனர் அல்லாதாருக்கு வேறு பந்தி; உணவிலும் வேறுபாடு என்று நடத் தியதை எதிர்த்துத் தந்தை பெரியார் போராடி ஒழித்தார்.

இது தொடர்பாக 29.-4.-1925 அன்று திருச்சிராப் பள்ளியில் டாக்டர் வரத ராசலு நாயுடு அவர்கள் தலைமையில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டத் தில் எம்.கே.ஆச்சார்யா என்ற பார்ப் பனர் என்ன சொன்னார் தெரியுமா?

ஒரு பிராமணச் சிறுவன், ஒரு பிரா மணரல்லாத சிறுவனுடன் உட்கார்ந்து சாப்பிட்டதாகக் கேள்வியுற்றால் நான் இதற்காகப் பத்து நாட்கள் பட்டினிக் கிடப்பேன் என்று சொன்னாரென்றால் பார்ப்பனர்கள் கூறும் தேசியமும் சுய ராஜ்யம் கோரும் உணர்வும் எந்த டிகிரி யில் இருந்தன என்பதை அறியலாம்.

வைக்கம் போராட்டமும் சரி, சேரன் மாதேவி குருகுலப் போராட்டமும் சரி-  அவற்றில் தந்தை பெரியார் பெற்ற வெற்றி என்பது சாதாரண முயற்சியல்ல.

பார்ப்பனர்களையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மக்களின் செல் வாக்கும் பெற்றிருந்த காந்தியாரையும் எதிர்த்துத் தாண்டிதான் வெற்றி பெற்றார் என்றால், அந்த தன்மையின் பரிணாமத்தைப் புரிந்து கொள்ளலாமே!

இந்து ஏட்டிலிருந்து (12-_3-_1925) இதற்கான ஆதாரத்தை எடுத்துக் காட்ட முடியும்.
இதோ இந்து ஏடு பேசுகிறது:

Walls Round Vaikom Road

(From our Special Correspondent)
Quilon, March 12, 1925

“Mr.V.V.S.Iyer of the Tamil Gurukulam at Shermadevi was at Vaikom for the past two days and had a long interview with Mahatmaji on the question of interdining the Vidyalaya. It is understood that Mahatmaji did not wish that there should be any compulsion in the matter, and if any peopil hadscruples such scruples had to be respected, Mahatmaji was also against the levelling down of the caste system,because it was a necessary implication of the Hinduism.

“Devasam Commissioner Mr. Raja Raja Varma also interviewed Mahatmaji yesterday with orthodox pundits and discussed the situation at Vaikom. It appears that the Devasom authorities contemplating raising another wall to cover the temple roads on the four sides thus effectively preventing not only untouchables but also Christians and Mohammodans from entering the prakarams.”

கிலான் மார்ச் 12 (1925)

வைக்கத்தில் தங்கியிருந்த காந்தி யாரை திரு.வ.வே.சு. அய்யர் சந்தித்து சேரன்மாதேவி குருகுலத்தில் சமபந்தி போஜனம் நடைபெற்றாக வேண்டும் என்று ஒரு சாரார் வற்புறுத்தி வருவதைப் பற்றி கருத்துக் கேட்டார். அதற்குக் காந்தியார், சமபந்தி போஜனம் என்பது வற்புறுத்தலின் அடிப்படையில் நடக்கக்கூடாது. ஒரு சாரார் மற்றவர் களோடு கலந்து அமர்ந்து சமபந்தி போஜனம் செய்ய விரும்பவில்லை என்றால் அவர்களின் அந்த உணர்வு மதிக்கப்பட்டாக வேண்டும் என்றார். சாதி என்பது ஒழிக்கப்பட்டு சரிசமமாக ஆக்கப்பட வேண்டும் என்பதை மகாத்மாஜி விரும்பவில்லை. ஜாதி அமைப்பு என்பது இந்திய சமூகத்தின் முக்கிய அம்சம். இதுதான் காந்தியாரின் ஜாதி வர்ணாசிரமப் பார்வை!

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

வைக்கம் தேவஸ்தான கமிஷனர் திரு ராஜவர்மா சில வைதீகப் பண்டிதர் களுடன் சென்று மகாத்மாவைச் சந்தித்து வைக்கத்தில் நிலவி வரும் சூழ்நிலையை விவரித்தார்

விவாதத்திற்குப் பின்பு தேவஸ்தான அதிபதிகள் தீண்டத்தகாதவர்கள் மட்டுமல்ல, கிருஸ்தவர்கள், முஸ்லிம் களும் கூட கோயில் பிரகார வீதிகளில் நுழையா வண்ணம் கோயிலைச் சுற்றி நான்கு புறங்களிலும் மற்றொரு சுவரை எழுப்புவது பற்றி ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. என்று இந்து ஏடு கூறுகிறது.

வைக்கத்தில் காந்தியார் சாதித்தது ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் கதைதான்!
சேரன்மாதேவி பிரச்சினையிலும் காந்தியார் பார்ப்பனர்கள் பக்கமே - ஜாதியின் பக்கமே நின்றார் என்பதையும் இந்து செய்தி தெரிவிக்கிறதே! இவர் களை எல்லாம் எதிர்கொண்டே பெரி யார் வென்றார் என்றால் அத்தகை மையை - திடத்தை -ஆசாபாசமின்றி எடை போட்டுப் பார்க்கட்டும்-அறிவாளிகள் எனப்படுவோர்.

தந்தை பெரியாரை எப்படி நடத்தினார்கள்?

தாழ்த்தப்பட்டவர்களைப் பார்ப்பனர்கள் நடத்தியது ஒரு புறம் இருக்கட்டும். தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றிய பெரும் புகழ் ஓச்சிக் கொண்டிருந்த பெரியாரையே எப்படி நடத்தினார்கள் இந்தப்பார்ப்பனர்கள்? இதோ பெரியார் எழுத்தாலேயே அதனைத் தெரிந்து கொள்ளலாமே!

காங்கிரஸ் அங்கத்தினரில் ஜாதி வித்தியாசம் பாராட்டப்பட்டதில்லை என்று ஒரு நண்பர் சொன்னார். என்னுடைய சொந்த அனுபோகத்தை இங்கு எடுத்துச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். அதாவது நானும் உயர்திரு எஸ். சீனுவாச அய்யங்காரும் காங்கிரஸ் பிரச்சார விஷயமாய்த் திண்டுக்கல்லுக்குப் போனபோது ஒரு பார்ப்பனர் வீட்டுக்குப் போயிருந்தோம். அந்தக் காலத்தில் நான் வேறாக வைத்தே சாப்பாடு போடப்பட்டேன். ஆனாலும் பகலில் சாப்பிட்ட இவை அப்படியே இருக்க அதன் பக்கத்தில் தான் இரவும் இலை போடப்பட்டுச் சாப்பிட்டேன்.

மற்றொரு சமயம் நானும், தஞ்சை திருவேங்கடசாமிப் பிள்ளையும் காங் கிரஸ் பிரச்சாரமாகப் பெரியகுளத் திற்குப் போனபோதும் ஒரு காங்கிரஸ் பார்ப்பனர் வீட்டில் இறக்கப் பட் டோம். அப்போது காலைப் பலகாரம் சாப்பிட்ட எச்சில் இலைக்குப் பக்கத் தில் பகல் சாப்பாடும், பகல் சாப்பாடு, காலை பலகாரம் சாப்பிட்ட எச்சில் இலைக்குப்பக்கத்தில் இராத்திரி சாப்பாட்டுக்கும் இலை போடப்பட்டு எறும்புகளும், பூச்சிகளும், ஈக்களும் மொய்த்துக் கொண்டிருக்கவே சாப் பிட்டு வந்தோம். (குடிஅரசு _ 10_1-_1948) இதுதான் காங்கிரஸ் பார்ப்பனர் களின் சீர்திருத்த உணர்வோ! எந்தத் தைரியத்தில் எழுதுகிறார் ஸ்ரீமான் லட்சுமிநாராயண அய்யர்?
குழந்தைகள் திருமணத் தடுப்பிலும் கூட அன்றைய காங்கிரஸ் பார்ப் பனர்கள் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டனர். 8 வயதுப்பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் சுவர்க்க வாசத்தையும், 9 வயதுப் பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் வைகுண்டத்தையும், 10 வயதுப் பெண்ணை விவாகம் செய்து கொடுப் பவன் பிரம்ம லோகத்தையும்  அடை கிறான். அதற்கு மேற்பட்டு பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் நகரத்தையே அடைகின்றான் என்று பராசர் சொல்லியிருக்கிறார் என்று கூச்சல் போட்டார்கள்.

ஆஜ்மீர் - மெர்வாராத் தொகுதியில் இருந்து டில்லி சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான ராவ் சாகிப் ஹரி விலாஸ் சாரதா என் னும் அறிஞர் 1-_2_-1927 இல் இந்துக் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் திருமண வயதுச் சீர்திருத்த மசோ தாவை முன்மொழிந்தார்.  ஏழரை மாதங்களுக்குப் பிறகு (5_-9_-1927) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட் டது. பெண்களின் திருமண வயது 13 என்று ஆக்கப்பட்டது. காங்கிரஸ்கார ரான எம்.கே. ஆச்சாரியார் என்ற பார்ப் பனர் என்ன சொன்னார் தெரியுமா?

பால்மணம் இல்லாவிட்டால் உண்மையான கற்பு என்பது சாத்திய மில்லை. பெண்களின் வாழ்க்கை நரக மாகி விடும். குடும்ப வாழ்க்கை துக்கமய மாக ஆகி சதா ஆபத்துக்குள்ளாகி இருக்கும் . புருஷர்களுக்குச் சிறைத் தண் டனை அளித்துவிடுவதால் பெண்கள் நடத்தையும் அதிகக் கேவலமாக ஆகிவிடும். எனவே பால்மணம் இருந்தாலொழிய வாழ்க்கையில் உண்மையான ஒழுக்கம் ஏற்படுவது அசாத்தியம்! என்று அவிழ்த்துப் போட்டு ஆடாத குறையாகச் சத்தம் போட்டார். இன்னொரு தேசியத் திலகம்  இருக்கவே இருக்கிறாரே - வாயாடி  சத்தியமூர்த்தி அய்யர். அந்தப் பெருமான் என்ன முழங்கினார்?

அரசாங்கம் இந்துக்களுடைய விவாகத்தில் தலையிட்டால் இந்துச் சமூகமே கெட்டு, இந்து மதமே பாழாகிவிடும். பெண்களுக்கு 10, 12 வயதுக்கு முன்னமேயே திருமணம் செய்து விட வேண்டும்,  இல்லையேல் பாவம் வந்துசூழும் என்று பராசரர் எழுதியிருக்கிறார். நாங்கள் பாவத் திற்குப்  பயப்படுவோமா? அல்லது உங்கள் சட்டத்திற்குப் பயப்படுவோமா? என்று சம்மத வயதுக் கமிட்டியின் முன்பு வாதிட்டார்.

இந்தச் சட்டம் வருவதற்கு முன்பு இருந்த நிலை என்ன? ராமகிருஷ்ண பரமஹம்சரே 5 வயதுப் பெண்ணைத் தானே திருமணம் செய்து கொண்டார். காந்தியார் திருமணம் செய்து கொண்ட போது அவருக்கு வயது 13 கஸ்தூரி பாவுக்கு வயது ஏழு.

தங்களுக்குப் பயன்படாத நேரத்தில் வெள்ளைக்காரனை மிலேச்சர்கள் என்பார்கள் பார்ப்பனர்கள்.  ஆனால் அவன்தான் குழந்தைகள் திரும ணத்தையும், கணவன் இறந்தால் அவ னோடு அவன் மனைவியையும் தீயில் தள்ளி எரிக்கும் உடன்கட்டை என்னும் சதியையும் ஒழித்துக் கட்டினான் என்பதை மறுக்க முடியுமா?

காங்கிரஸ்காரர்களின் சீர்திருத்த உணர்வுகள் இந்தக் கேடு கெட்ட நிலையில் இருக்க, காங்கிரசில் இருந்து கொண்டே பெரியார் சீர்திருத்தங்களைச் செய்து கொண்டிருக்கலாம் என்றும் பகுத்தறிவிற்குப் பொருந்தக் கூடிய எவ்விதக் காரணமும் இல்லாமல் காங்கிரசிலிருந்து  ஈ.வெ.ரா. வெளியேறி விட்டார் என்றும் துக்ளக்கில் திருவாளர் கே.சி. லட்சுமி நாராயண அய்யர்வாள் எழுதியிருப்பது எவ்வள வுப் பெரிய பிதற்றல்! - பொய்யிலே திளைத்த  புழு போன்றது என்பதை இவற்றின் மூலம் அறியலாமே!

(இன்னும் உண்டு)

---------- கலி.பூங்குன்றன், விடுதலை ஞாயிறு மலர், 20-08-2011


Friday, August 19, 2011

ஜோசப் இடமருகு எழுதிய “பகவத் கீதை ஓர் ஆய்வு” மற்றும் “பிராமணமதம் தோற்றமும் வளர்ச்சியும்” ஒரு பார்வை...

இந்தியாவில் பகுத்தறிவு வாதத்தை ஒழிக்கவும் வஞ்சனையில் ஊறிய ஒரு சமூக நிலையை உருவாக்கவும் புரோகித வர்க்கம் உருவாக்கிய ஏராளமான மத நூல்களில் ஒன்றே பகவத் கீதை என்கிறார் ஜோசப் இடமருகு. அதுமட்டுமின்றி மானசீக அடிப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் மனிதனை வஞ்சிப்பதற்கான பல தந் திரங்களும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது போன்ற பல மாற் றுச் சிந்தனைகளை முன்வைக்கிறது அவரது “பகவத் கீதை ஓர் ஆய்வு” என்ற நூல்.

தமிழகத்தில் சமணர்களைக் கழுவேற்றிய சைவ சமயக் கொடுஞ் செயல்போல கேரளாவிலும் ஆட்சியாளர்களைப் பயன்படுத்தி பிராமணமதத்தினர் பவுத்தர்களின் நாவை அறுத்த அவச்செயலை “பிராமணமதம் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார் ஜோசப் இடமருகு.

(இலங்கையில் உள்ள) ஸ்ரீராம பாலம் முதல் இமயம் வரை புத்த மதத்தினரைக் கொல்லத் தயங்குகின்றவர்களை, அவர்கள் வயதானவர்களானாலும் இளைஞர்களானாலும் கொன்று விட வேண்டும் என்று குமரிலப்பட்டர் காலத்தில் உத்தரவிடப்பட்டதையும் இந்த நூலில் எழுதியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது.

வேதங்களில் உன்னதமான தத்துவங்கள் அடங்கியிருப்பதாக சிலர் தேவையற்று வாதிக்கின்றனர். பழங்கால மனிதனின் சிந்த னைகளும் நம்பிக்கைகளும் மாயத் தோற்றங்களும் பயமும் எல்லாம் சேர்ந்த ஒரு கலவையே வேதங்கள் என்று முடிந்த முடிவான ஆய்வையும் அவர் முன்வைக்கிறார்.

‘வேதங்கள் ஓர் ஆய்வு’ என்ற அவரது நூல் சனாதனங்களை அம்பலப்படுத்துவதாக உள்ளது. அதே சமயம் வேதத்தின் மனோக ரமான இலக்கிய போதம் தலை சிறந்தது. மொழியையும் வரலாற்றையும் படிக்கின்ற மாணவர்கள் வேதங்களைப் படிப்பது நல்லது என்ற நேர்மையான கருத்தையும் அவர் பதிவு செய்கிறார்.

இந்த மூன்று நூல்களும் இரண்டாம் பதிப்பு கண்டிருப்பதே இவற் றின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

“பகவத் கீதை ஓர் ஆய்வு”
பக். 152 ரூ. 80

“பிராமணமதம் தோற்றமும் வளர்ச்சியும்”
பக். 200 ரூ. 100

“வேதங்கள் ஓர் ஆய்வு”
பக். 120 ரூ. 60

3 நூல்களையும் எழுதியவர் ஜோசப் இடமருகு,
தமிழில் த. அமலா
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்
4/9, 4வது முதன்மைச் சாலை,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம், சென்னை - 600024
தொ.பேசி: 044- 24815474
----------- நன்றி தீக்கதிர்


Thursday, August 18, 2011

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (6) குளவிக் கூட்டில் கை வைக்காதீர்!ரௌலட் சட்ட எதிர்ப்பு (1919), ஜாலியன் வாலாபாக் படுகொலை எதிர்ப்புக் கிளர்ச்சி (1919), ஒத்துழை யாமை இயக்கம் (1920), பிரிட்டிஷ் அரசு பரம்பரையின் கன்னாட் கோமகன் இந்திய வருகை பகிஷ்கரிப்புப் போராட் டம் (1921), வேல்ஸ் இளவரசர் வருகை பகிஷ்கரிப்புக் கிளர்ச்சி (1921), நாகபுரி கொடிப் போர் (1923), வைக்கம் சத்தியாக்கிரகம் (1924), நீலன் சிலையை அகற்றக்கோரி நடந்த வீரப் போராட்டம் (1927), சைமன் கமிஷன் எதிர்ப்புக் கிளர்ச்சி (1928), ஈடு இணையற்ற உப்புச் சத்தியாக்கிரகம் (1930), பிரிட்டனின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் வெள்ளி விழாக் கொண் டாட்ட பகிஷ்கரிப்பு (1934), தனி நபர் சத்தியாக்கிரகம் (1940), ஆகஸ்ட் இயக்கம் (1942) ஆகிய விடுதலைப் போரின் கிளர்ச்சிகளையும், சத்தியாக் கிரகங்களையும் ஜஸ்டீஸ் கட்சியினர் எதிர்த்து ரகளை செய்தார்கள். அவற் றுக்குப் பல வகைகளிலும் இடையூறு களை விளைவித்தார்கள்.

இவை துக்ளக்கின் குற்றச்சாற்றுகள் (13_-7_-2011) இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை நடைபெற்றுக் கொண்டி ருந்த காலகட்டம். முக்கியமான துறைகள் எல்லாம் வெள்ளைக்காரர் களின் வசம்தான். சில குறிப்பிட்ட துறைகள் மட்டும்தான் தேர்ந்தெடுக் கப்பட்ட சட்ட சபைக்கு.

இதில் இரண்டையும் போட்டுக் குழப்பி நீதிக்கட்சியின் மீது அபாண்ட பழி சுமத்துவதுதான் வேடிக்கை போக்கிரித்தனம்கூட!

1922 ஆம் ஆண்டு தலைச்சேரி சப்_டிவிஷன் மாஜிஸ்டிரேட் டாட் வெல் அய்.சி.எஸ். என்ற வெள்ளைக் காரர் எல்.எஸ். பிரபு என்ற பெண்ணை காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை குறித்த வழக்கில் விசாரித்தார். நீதிபதி அந்தப் பெண்ணுக்கு அபராதம் விதித்தார். அந்தப் பெண் அபராதம் செலுத்த மறுத்தார். உடனே நீதிபதி அந்தப் பெண்ணின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த சங்கிலியை அகற்றுமாறு உத்தரவிட்டார்.

அது தாலி என்று கூட வெள்ளைக்கார நீதிபதிக்குத் தெரிய வில்லை. இதற்கும் நீதிக்கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையவே கிடையாது.

நீதிக்கட்சி ஆட்சி நடந்து கொண்டிருந்தது என்பதை சாக்காக வைத்து, தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆற்காடு இராமசாமி முதலியாரை பார்த்து திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் தாலி அறுத்த இராமசாமி முதலியாருக்கா ஓட்டு? என்று பிரச்சாரம் செய்தார் என்றால், அந்த சத்தியமூர்த்தியின் பரம்பரையின் வால் இன்னும் நீண்டு கொண்டு இருக் கத்தான் செய்கிறது என்பதற்கு அடை யாளம்தான் இத்தகு குற்றச்சாற்று.

தேர்தலில் சத்தியமூர்த்தி அய்யர் எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்தார் என்றால்,  இன்றைக்கு நிலவும் அரசியல்   எல்லாம்அவரிடம் பிச்சை வாங்க வேண்டும்.

எனக்கு வாக்களிப்பவர்களின் செருப்புக்கு என் முதுகுத் தோலைத் தந்து உதவுவேன்! பகீரதனைப் போல் வானத்துக் கங்கையைக் கொண்டு வருவேன்! நீதிக்கட்சியினர் ஆள்வதால் தான் நாட்டில் மழை பெய்யவில்லை என்கிற பாணியில் சகட்டு மேனிக்கு வார்த்தைகளை அள்ளிக் கொட்டும் ஆசாமி அவர்.

உண்மைக்கும் அவருக்கும் உறவு கிடையாது.

இந்தச் சத்தியமூர்த்தி, எப்படிப்பட்ட யோக்கியர் தெரியுமா? இதோ பாரத தேவி (8.12.1943) கூறுகிறது - கேண்மின்!

சத்தியமூர்த்தி லஞ்சம் வாங்கு கிறாராமே என்று போகிறபோக்கில் சிலர் சொல்லிவிட்டுப் போய்விடு வார்கள். இதை அவரிடமே நேரில் ஒரு தரம் சொன்னேன். அவர் கொஞ்சம் கூட என்மீது கோபப்படவில்லை. நிதானமாக பதிலளித்தார்.

நாள் பூராவும் வேலை செய்ய வேண்டும். எங்கேயாவது பஞ்சாயத்து தேர்தலென்றால்கூட அதற்கு மேளம் வாசிப்பதற்கு சத்தியமூர்த்தி வர வேண்டும். நான் பணக்காரனில்லை. நான் எப்படிச் சாப்பிடுவது? இந்த நாட்டில் அரசியல்வாதிகளுக்காக கார்னீஜி நிதியா வைத்திருக்கிறார்கள்? தேர்தல் தம்பட்ட மடித்து விட்டு நானும், என் கடும்பத்தினரும் வாயு பக்ஷணம் செய்ய முடியுமா? லஞ்சம் யாரிடம் வாங்குகிறேன்? வெள்ளைக் காரனிடம் பணம் வாங்கிக் கொண்டு, அல்லது பட்டம், பதவி வாங்கிக் கொண்டு என் தேசத்தைக் காட்டிக் கொடுத்து விட்டேனா? யாராவது ஒரு பணக்காரனுக்கு அசெம்பளியில் ஒரு கேள்வி கேட்க வேண்டியிருக்கும். அவனிடம் பணம் இருக்கிறது. என்னிடம் கேள்வி கேட்கும் திறமை இருக்கிறது. எப்பொழுதாவது இதைச் செய்தால், இது லஞ்சமாகுமா? என்று சத்திய மூர்த்தி பதில் சொன்னார்.
(பாரததேவி 8.12.1943)

இலஞ்சம் வாங்குவதற்குப் பச்சை யாக நியாயம் கற்பிக்கும் இந்தப் பார்ப்பனர்கள்தான் மற்றவர்களைப்பற்றி விரலை நீட்டுகிறார்கள்.

அதே பாணியில்தான் குற்றச்சாற்று களை துக்ளக்கில் அள்ளி விட்டிக் கிறார் திருவாளர் லட்சுமி நாராயண அய்யர்.

பகிஷ்கரிப்புப் பட்டியலில் வைக்கம் சத்தியாக்கிரகத்தையும் இணைத்துள் ளார்களே.  என்ன நிதானமாகத்தான் எழுதுகிறார்களா?

காங்கிரசில் இருந்தபோதே தந்தை பெரியார் தலைமை தாங்கி  வைக்கம் சத்யாக்கிரகப் போராட்டம் நடை பெற்றது -திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கத்தில். இதில் நீதிக்கட்சி எங்கேயிருந்து வந்து குதித்தது?

வெள்ளைக்கார கவர்னர்களை, இளவரசர்களை யெல்லாம் காங்கிரஸ் புறக்கணித்தது போலவும், நீதிக் கட்சியினர் ஆலிங்கனம் செய்து வரவேற்றது போலவும் கதைத் துள்ளனரே -

உண்மை என்ன?

1898 ஆம் ஆண்டு சென்னையில் 14 ஆவது காங்கிரசில் லார்டு கர்சனை வரவேற்றுத் தீர்மானம் நிறைவேற்றப் படவில்லையா?

1901 இல் கல்கத்தாவில் நடந்த 17 ஆவது காங்கிரஸ் மாநாட்டில் 7 ஆவது எட்வர்ட் மன்னர் மகுடம் சூட்டிக் கொண்டமைக்கு மகிழ்ச்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட வில்லையா?

1905 இல் 21 ஆவது காங்கிரஸ் மாநாட்டில் எட்வர்ட் இளவரசர் இந்தியா வருவதை வரவேற்றுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மறைப்பது ஏன்?

1910 இல் அலகாபாத்தில் கூட்டப் பெற்ற 25 ஆவது காங்கிரஸ் மாநாட்டில் அய்ந்தாம் ஜார்ஜ் மன்னர் முடி சூட்டிக் கொள்வதற்கு ராஜபக்தி ஜொலிக்கும் தீர்மானத் தீவட்டியைத் தூக்கி நின்றது காங்கிரஸ் அல்லவா?

1914 இல் சென்னையில் நடைபெற்ற 29 ஆவது காங்கிரஸ் மாநாட்டுக்கு சென்னை கவர்னரே விஜயம் செய்தாரே. முதலில் ஒரு ராஜபக்தித் தீர்மானம்;- கவர்னர் வந்த பிறகு மறுபடியும் இன்னொரு முறை தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னர் கர்சானுக்குச் சோப்புப் போட்டவர்கள் யார்?

1917 _ -33ஆவது காங்கிரஸ் மாநாட் டின் கதை என்ன? மாண்டேகுவை வரவேற்று விளக்குப் பிடித்தவர்கள் யார்?

எதற்கெடுத்தாலும் ம.பொ.சி. - ம.பொ.சி. என்று துணைக்கழைத்துக் கொள்கிறதே துக்ளக் அந்த ம.பொ.சியை விட்டே அதே நூலான விடுதலை போரில் தமிழகம் என்பதிலிருந்தே, எடுத்து மொத்தினால் தானே சரியாக இருக்கும்.

வடநாட்டு மாநிலங்கள் அனைத்துமே தீவிரவாதிகள் என்ற பெயரால் காங்கிரஸ் தலைவர்கள் பலர்மீது பொய் வழக்குப்போட்டு, அவர்களை அரசாங்கம் சிறையில் அடைத்துவிட்ட நிலையில், எங்களால் வடமாநிலம் எதிலும் மாநாடு நடத்த இயலாது என்று மறுத்து விட்டார்கள்.

சென்னை மாகாணத்து மிதவாதிகள் கூட்டம் நாங்கள் நடத்துகிறோம் என்று சொல்லி 29ஆவது காங்கிரஸ் மாநாட்டை சென்னையில் நடத்த முன் வந்தார்கள். இதுகுறித்து ம.பொ.சி. என்ன எழுதுகிறார்?

காங்கிரஸ் மகாசபை கூடினால் ராஜ வாழ்த்துடன் நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் அல்லவா? மகாசபை கூடும் மாகாணத்து கவர்னரிடம் வாழ்த்துச் செய்தி பெற்று அதைப் பயப்பக்தியுடன் மகாசபையின் பிரதிநிதிகள் அனைவரும் எழுந்து நின்று கேட்கும் நிலையில் படிக்கவும் வேண்டுமல்லவா?

சக தேசபக்தர்கள் அந்நிய ஆட்சியின் அடக்குமுறைகளை அனுப வித்து வரும் நேரத்திலே, இந்தத் தன்மானமற்ற சடங்குகளோடு மகா சபை நடத்த வடபுலத்து மாநிலங் களுக்குத் துணிவு இல்லை.

சென்னை மாகாணத்துக்குத் தான் இருந்தது.

இங்கும் மயிலாப்பூர் வக்கீல் கூட்டத் திற்குத்தான் இருந்தது. அவர்களிலும் திரு கிருஷ்ணசாமி அய்யருக்குத்தான் இருந்தது என்று லட்சுமி நாராய ணய்யர்வாளுக்கு வேண்டப்பட்டவ ரான ம.பொ.சி.யே கேலியும் கிண் டலுமாக சென்னை பார்ப்பனக் கும்பலை  தன்மான மற்றவர்கள் என்று சாடியதற்குப் பிறகும் -_ நீதிக்கட்சி வெள்ளையர்களுக்கு அடி பணிந்தது என்று எழுதிட யோக்கியதை உண்டா?

1918இல் வேல்ஸ் இளவரசர் வந் தாரே. அப்பொழுது நடைபெற்ற மாநாட்டில் வருக! வருக! கொடி பிடித்த கூட்டம் எது?

அந்த வேல்ஸ் இளவரசருக்கு யதாஸ்து கூறி வரவேற்றுக் கவிதை எழுதியவர்தானே இவாளின் திருவாளர் சுப்பிரமணிய பாரதியார்?

இப்படியெல்லாம் லாலி பாடி வெள்ளைக்காரர்களின் வாலும் காலும் பிடித்த ஒரு கூட்டம் பேனாவைப் பிடித்துச் சிலம்பம் ஆட ஆசைப் படலாமா?

1929 பிப்ரவரி 17,18 ஆகிய நாட்களில் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரி யாதை முதல் மாகாண மாநாட்டுக்கு யார் யாரை எல்லாம் அழைத்தார் தந்தை பெரியார்? தனிப்பட்ட ஸ்திரீகளும் தங்களை விதவைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக் கொண்டிருப்ப வர்களும் அவசியம் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம் என்றாரே, (குடிஅரசு 30.1.1929) இன்னொரு கூடுதல் தகவல் என்ன தெரியுமா? மாநாட்டில் விருதுநகர் நாடார் சமையல் என்ற அறிவிப்பு - ஏன் தெரியுமா? அந்தக் கால கட்டத்தில் நாடார்கள் என்றால் தாழ்வானவர்கள் என்ற மனப்பான்மை; தாழ்த்தப்பட்டவர்களைப் போலவே அவர்களும் கோயிலுக்குப் போகக் முடியாத நிலை, அப்படிப்பட்ட நிலையில் சுயமரியாதை மாநாட்டு விளம்பரத்தை இப்படிசெய்கிறார்! ஆனால் காங்கிரஸ் மாநாட்டிலே ஆச்சாரம், ஜாதி பார்த்து தனி இடங்கள் ஏற்பாடாம்! புரிந்து கொள்ள வேண்டாமா பூணூல் கூட்டத்தின் பூர்வோத்திரத்தை? நீடாமங்கலம் காங்கிரஸ் மாநாட்டில் பந்தியில் தாழ்த்தப்பட்டோர் சாப்பிட் டனர் என்பதற்காக அவர்களைக்  கட்டி வைத்து அடித்து மொட்டை யடித்து அவமானப்படுத்தவில்லையா? 1885 இல் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் 1929 ஆம் ஆண்டில்தான் பூரண சுதந்திரம் என்ற தீர்மானத்திற்கு வந்தது.

1942 ஆகஸ்டுப் போராட்டம் தோல்வி அடைந்த நிலையில் காங்கிரஸ் மீண்டும் எந்த முடிவுக்கு வந்தது?

முழு சுதந்திரம் வேண்டாம். சிவில் நிருவாகம் கொண்ட தேசிய நிருவாகம் போதும் என்று பிளேட்டைத் திருப்பிப் போடவில்லையா?

ஆகஸ்டு 15 _- 1947 இல் பெறப்பட்ட சுதந்திரம் கூட டொமினியன் அந்தஸ்து தானே தவிர முழு சுதந்திரம் அல்லவே!

ஒரு கால கட்டத்தில் அயர்லாந்து மாதான அன்னிபெசண்ட் தான் காங் கிரஸ் கட்சியின் மாதா! அக்கிரகாரத் தில் செல்லப் பெண்மணி! அவர் கேட்டது என்ன? தனி சுயராஜ்ஜியமா?.
பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு உட் பட்ட சுயாட்சி அந்தஸ்து இந்தியா வுக்கு வழங்கப்பட வேண்டும் (25.9.1915) என்றுதானே கேட்டுக் கொண்டார். ஜாலியன்வாலா படுகொலையை வெள்ளைக்காரர் சார்பில் ஆதரித் தவர்தானே இவர்? மறுக்க முடியுமா?

இந்திய மந்திரியின் நேர்ப் பார்வை யின்கீழ் திராவிட நாடு ஒரு தனி நாடா கப் பிரிக்கப்பட வேண்டும் என்று நீதிக் கட்சி கோரினால் அது குற்றம்; அதே கோரிக்கையை வேறு வார்த்தைகளில் காங்கிரஸ் கோரினால் அது சிலாக் கியமா? மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி என்கிற நீசத்தனம் தானே இது!

1916 இல் தொடங்கப்பட்ட நீதிக் கட்சி 1940 ஆகஸ்டு நான்கில் திருவாரூ ரில் நடைபெற்ற 15 ஆவது மாகாண மாநாட்டில், திராவிடர்களுக்கான கலை, நாகரிகம், பொருளாதாரம் ஆகி யவைகள் முன்னேற்றமடைவதற்கு, பாதுகாப்பதற்கு, திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் இந்திய மந்திரியின் நேர் பார்வையின் கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்படவேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டது உண்மை தான்.

1944 ஆகஸ்டு 27 இல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு திருச்சி புத்தூர் மைதானத்தில் (29-5-1945) நடைபெற்ற 17 ஆவது மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறைத்து எழுதுவது ஏன்?

1 (அ) திராவிட நாடு (சென்னை மாகாணம்) சமுதாயம், பொருளாதாரம், தொழில் துறை, வியாபாரம் ஆகிய வற்றில் பூரண சுதந்திரமும் ஆதிக்கமும் பெறவேண்டும்.

(ஆ) திராவிட நாடும், திராவிட நாட்டு மக்களும், திராவிட நாட்ட வரல்லாத அந்நியர்களின் எந்தவிதமான சுரண்டல்களிலிருந்தும் ஆதிக்கத்தி லிருந்தும் விடுவிக்கப் பட்டுக் காப்பாற் றப்பட வேண்டும்.

(2) திராவிட நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஜாதி, வகுப்பு, அவை சம்பந்த மான உயர்வு, தாழ்வு இல்லாமல் சமு தாயத்திலும், சட்டத்திலும் சம உரிமை யும், சம சந்தர்ப்பமும் பெற்று சம வாழ்வு வாழச் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மறைத்து எழுதினால்தான் மறைய வர்களின் பிழைப்பு நடக்குமோ!

அதே நேரத்தில் காங்கிரஸ் மாநாட்டின் யோக்கியதை என்ன? 1900_த்துக்குப் பின்னாலே நடந்த பல காங்கிரஸ் மாநாடுகளில் இந்து மகாசபை மாநாட்டையும் அதே காங்கிரஸ் மாநாட்டுப் பந்தலிலேயே நடத்தினார்களே! இதன் பொருள்  என்ன? காங்கிரஸ் என்பது குறிப்பிட்ட மதத்தின், குறிப்பிட்ட உயர் ஜாதிப் பார்ப்பனர்களின் நலனுக்காக, வளமைக்காக நடத்தப்பட்டது என்பது விளங்கவில்லையா?

காங்கிரசின் போக்கு இந்து மகா சபையை அண்டி இருப்பதைப் பார்த்த பிறகும், முஸ்லிம்கள் தங்களுக்கென்று தனி அமைப்பைத் தோற்றுவித்தது எப்படி தவறாகும்?

அந்த ஜாதி அபிமானத்துடன்தான் துக்ளக்கும், லட்சுமி நாராயணன்களும் நீதிக்கட்சியைத் தூற்றியும், அன்றைய காங்கிரசின் கால் பிடித்தும் எழுது கின்றனர். பஞ்சாபைப் பொருத்தவரை இந்து மகாசபைக்கு யார் தலைவரோ அவரேதான் காங்கிரசுக்கும் தலைவர்!
கல்கத்தாவில் முதல் காங்கிரஸ் மாநாடு. பம்பாயில் இரண்டாவது மாநாடு, மூன்றாவது மாநாடோ சென்னையில். இம் மாநாடு பற்றி சுதேசமித்திரனில் வெளிவந்த விளம்பரம் என்ன தெரியுமா?

இவ்வருஷத்துக் காங்கிரஸ் சபையில் ஒரு முக்கியமான புது அம்சம். சாதி, ஆச்சாரம் பார்க்கும் பிரதிநிதிகளுக்குப் பிரத்தியேகமாக ஒரு பங்களாவை அவர்களுடைய சாதி, ஆச்சாரங்களுக்கு ஏற்றபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருக்கின்றன - என்பதுதான் சுயஜாதி மித்திரனின் அறிவிப்பு.

இந்த யோக்கியதையில் இவர்கள் கதை ஊளை நாற்றம் எடுக்கிறது. அதே நேரத்தில் நீதிக்கட்சியின் கோட்பாடு என்ன?

வெள்ளுடை வேந்தர் நீதிக்கட்சியின் தோற்றுநர்களில் ஒருவரான பிட்டி தியாகராயர் என்ன சொல்லுகிறார்?

பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று; திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத்துதித்தோம் யாம் என்று பெருமை பேசினாரில்லை; பிறப்பினால் ஏற்றத் தாழ்வு கற்பித்தோரும், நால்வகை சாதி இந் நாட்டில் நாட்டினோரும் ஆரியரே! அவ் வருணாசிரமக் கோட்டையை இடித்தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்தர் முயன்றார்; முடியவில்லை. பின்னர் வந்த பற்பல சீர்திருத்தவாதிகள் முயன் றனர்; தோற்றனர்.

இராமானுஜரும், புரோகிதர் கொடுமைகளைக் களைந் தெறிய ஒல்லும் வழி முயன்றார்; தோல் வியே கண்டார். பார்ப்பனர் பிடி மேலும் மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண் டாமை - அண்டாமை - பாராமை முதலிய சமுதாயச் சீர்கேடுகளும் படிப்படியே பரவிப் பெருகலாயின. அத்தகைய பலம் பொருந் திய சாதிக் கோட்டையைத் தகர்த்தெறிய இதுவே தக்க காலம்; இதுவே தக்க வாய்ப்பு -(1917-_இல் நடை பெற்ற சென்னை மாகாண முதலாவது ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டு உரையில் பேசியது.)

காங்கிரஸ் மாநாட்டுப் பந்தலிலேயே இந்து மகா சபை மாநாடு நடத்திய பார்ப்பன காங்கிரஸ் எங்கே ? சமத்துவ சங்கநாதம் செய்யும் இந்த நீதிக்கட்சி எங்கே?

காங்கிரஸ் மாநாட்டில் ஆச்சாரம் பேணும் அவர்களுக்கு தனி பங்களா ஏற்பாடு செய்யும் போக்கு எங்கே? ஜாதியைக் களைந்து சமத்துவப் பயிர் வளர்க்கும் பெருமகனார்களின் நீதிக் கட்சி எங்கே?

திருநெல்வேலியில் காங்கிரஸ் சார்பிலே தீண்டாமை ஒழிப்பு மாநாடு மதியம் தடபுடலான விருந்து பிரபல தேசப்பக்தரான விருதுநகரைச் சேர்ந்த கோவிந்தசாமி நாடார் சாப்பாட்டுப் பந்தலுக்குள் நுழைந்தார். அப்பொழுது அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் சொன்னார்கள். நாடாரே! உங்களுக்கு சாப்பாடு இங்கு இல்லை; அங்கே போங்கள் என்றார்கள்.

அதற்கு அவர் நானும் சைவம்தானே என்றார். சைவத்திற்கு இல்லை; நீங்கள் அங்கே போங்கள் என்று உரக்கச் சத்தம் போட்டுச் சொன்னார்கள் பார்ப் பனர்கள்.

கோவிந்தசாமி நாடாருக்கோ ஆத்திரம்! மாநாட்டை விட்டு வெளி யேறி தான் அணிந்திருந்த கதர்ச் சட் டையை நடுத் தெருவிலே கொளுத் தினார்.(Genisis of the Self - Respect Movement page 53) இவ்வளவுக்கும் அது தீண் டாமை ஒழிப்பு மாநாடே! இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள் நீதிக்கட்சிபற்றியும் சுயமரியாதை இயக்கத்தை பற்றியும் நாக்கூசாமல் உளறலாமா?

1927ஆம் ஆண்டு மதுரையில் நெல்லை எஸ். குமாரசாமி ரெட்டியார் தலைமையில் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில் சென்னை மாநில கவர்னர்மீது நம்பிக்கை இல்லை என்று தீர்மானம் போட்டார்களே பார்ப்பனக் காங்கிரசு அப்பொழுது நினைத்தும் பார்க்க முடியுமா?

இன்றைய ஆக்ஷி ஏன் ஒழிய வேண்டும் என்று குடிஅரசு இதழில் (29.10.1933 பக்கம் 10,11) எழுதியதற்காக பிரிட்டீஷ் அரசால் அரசு வெறுப்புக் குற்றஞ்சாட்டப் பெற்று, தந்தை பெரியாருக்கு ஒன்பது மாத தண்டனை, ரூ.300 அபராதம் செலுத்தாவிடில் மேலும் ஒரு மாதம் தண்டனை குடிஅரசின் பதிப்பாளர் என்கிற வகையில் தந்தை பெரியார் அவர்களின் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாள் அவர்களுக்கும் 6 மாதத் தண்டனை ரூ.300 அபராதம், கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதத் தண்டனை என்கிற வரலாறு எல்லாம் தெரியாமல் வாய்ப் புளித்ததோ மாங் காய் புளித்ததோ என்று பார்ப்பனர்கள் கிறுக்கலாமா?

சென்னை மாநாட்டில் சென்னை யிலிருந்து கூடிய பிரதிநிதிகள் 361 என்றால், அதில் பார்ப்பனர்கள் மட்டும் 138 என்றால், அந்தக் காலத்தில் அது அவாள் காங்கிரசாகவே இருந்தது என்பதற்கு வேறு அத்தாட்சியும் தேவையோ?

இந்த மாநாட்டில் கும்பகோணம் சங்கரமடத்துப் பிரதிநிதியும் கலந்து கொண்டார் என்றால் அந்த மாநாடு அசல் அக்கிரகாரத்து உக்கிராணம் தானே! இப்படிப்பட்ட காங்கிரசைப் பார்ப்பனர்கள் அந்தக் காலத்தில் கட்டிக் கொண்டு அழுததில் ஆச்சரியம் ஏது? அசல் அக்கிரகார அந்த கால கட்டக் காங்கிரசை இந்த 2011லும் துக்ளக் தூக்கிச் சுமக்க ஆசைப்படு வதன் சூட்சமமும் இதுதான்!

பாலகங்காதர திலகர் மறைந்த போது காந்தியார் அங்கு சென்றார் (1-8-1920). திலகரின் பாடையைத் தூக்குவதற்குக் காந்தியார் சென்றபோது அங்கிருந்த பார்ப்பனர்கள் நீ வைசியன்; இந்தப் பாடையைத் தொடக் கூடாது என்று கூறினார்களே! காந்தியாருக்கே அப்பேர்ப்பட்ட அவமரியாதை வருணாசிரமத்தின் பெயரில்!

இந்த நிலையில் பூணூல் தைரி யத்தில்  இடக்கு மடக்காக எழுதினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.

1907 ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் ராஷ் பிகாரி கோஷ் என்பவர். அந்தக் கூட்டத்தை நடத்த விடாமல் மேடை மீது செருப்புகளை வீசியக் கூட்டத்திற்குத் தலைமை வகித் தவர் தான் இந்த பாலகங்காதர திலகர்.

காரணம் மகாசபைக்குத் தலைமை வகிப்பவர் பார்ப்பனர் அல்லாதவர் என்பதுதான். இந்த நிகழ்ச்சியை பல பொதுக்கூட்டங்களிலும் விரிவாக எடுத்துச் சொன்னார் தந்தை பெரியார்.

இந்தத் திலகர்தான் அரசியலில் இந்து மத நஞ்சை வெகுவாகத் திணித்தவர்.

ஆர்.எஸ்.எஸ்.சின் முன் னோடிப் பிதாமகர். விநாயகக் கடவுளை முன்நிறுத்தி அரசியலை மாசுபடுத்திய முதல் குற்றவாளி. விநாயகர் ஊர்வலம் என்ற நோய் நாடெங்கும் பரவச் செய்து அதன் மூலம் பார்ப்பனீய இந்து மத ஆதிக்கத்தினைத் தூக்கி நிறுத்தியவர்.

புனேயில் பிளேக் நோய் மூண்டது. அதற்குக் காரணம் எலிகள்தானே? அவற்றை வேட்டையாடியது வெள்ளை அரசாங்கம். அப்பொழுது திலகர் என்ன செய்தார் தெரியுமா?

அநியாயம்! அநியாயம்!! வெள்ளைக் காரன் நமது விநாயகரின் வாகனமான எலிகளைக் கொல்லுகிறான்; நமது கலாச்சாரத்தில் தலையிடுகிறான் என்று வெறியைக் கிளப்பி விட்டார். அதன் விளைவு இரு வெள்ளைக்கார அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில், இந்தத் தேசப் பக்தித் திலகத்துக்குப் பதினெட்டு மாதம் தண்டனை! அசிங்கத்துக்குப் பொட்டு வைத்த கதையல்லவா இது?

எவ்வளவு ஜாதி வெறி பிடித்தவர் என்பதற்கு எடுத்துக் காட்டுகள் உண்டு.

சென்னை மாநிலத்தில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான நீதிக்கட்சி தலை தூக்கிய கால கட்டம். பார்ப்பனர் அல்லாதாரும் சட்டமன்றம் செல்லத் தீர்மானித்த அந்தப் பொழுதில்  திலகர் என்ன சொன்னார் தெரியுமா?

இப்பொழுது எல்லோரும் சட்டசபைக்குப் போக வேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள். எதற்காக செருப்பு தைக்கிறவனும், எண்ணெய்ச் செக்கு ஆட்டுபவனும், சிறு கடைக் காரனும், (The Cobblers, The Oil Mongers, and petty-traders) சட்டசபைக்குச் செல்ல வேண்டுமென்று முயற்சி செய் கிறார்கள்? யார் யார் எது எதற்குப் போக வேண்டுமென்ற வரைமுறை கிடையாதா? என்று பேசினாரே!

இதுகுறித்து டாக்டர் அம்பேத்கர், காந்தியும், காங்கிரசும் தாழ்த்தப்பட்ட வர்களுக்குச் செய்தது என்ன? (What Gandhi and Congress have done to untouchables) என்ற நூலில் குறிப்பிட்டுக் கண்டனம் தெரிவித்துள்ளாரே!
குளவிக் கூட்டில் கைவைக்கும் வேலையில் பார்ப்பனர்கள் இறங்கினால் அதன் வீச்சை, விளைவைச் சந்தித்துத் தான் ஆகவேண்டும்.

துக்ளக் மூலம், லட்சுமி நாராயண அய்யர் பார்ப்பன நச்சுத் தலையைக் காட்டுவதும் ஒரு வகையில் நல்லதுதான்.

அப்பொழுதுதானே பார்ப்பனர் அல்லாத நல்லிளஞ் சிங்கங்கள் அடையாளம் காணமுடியும்!

--------------- - கலி.பூங்குன்றன் (மீண்டும் சந்திப்போம்), விடுதலை ஞாயிறு மலர், 13-08-2011


Wednesday, August 10, 2011

தகுதி, திறமை என்று பல்லவி பாடும் பண்டாரங்களே... எது தகுதி? எது திறமை?

கேள்வி: எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப் படும் என்று இந்திய மருத் துவக் கவுன்சில் அறிவித் துள்ளதே?
பதில்: அறிவுத்திறன் அடிப்படையில் அய்.அய்.டி; கேட் (Cat) தேர்வுகள் போல் நடத்தி, ஆரோக்கிய மருத் துவ உலகை அமைப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது. சாதிய கட்சிகளின் குறுகிய லாப நோக்கத்தைக் கடந்து இது செயல்படுத்தப்பட வேண்டும். மனித உயிர்களை மலிவாகக் கருதக் கூடாது.

(கல்கி 14.8.2011 பக்கம் 82)

பார்ப்பனர்கள் வழக்க மாகப் பாடும் பல்லவியைத் தான் இப்பொழுதும் பாடுபடு கிறார்கள்.

+2 தேர்வில் பெற்ற மதிப் பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்தால் தகுதி செத்துப் போய்விடும். அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தினால் தகுதி உயிர் பிழைக்கும் என்று யார் சொன்னது?

இவர்களாகவே ஒரு முடிவை எடுப்பது. அதுதான் தகுதிக்கும் திறமைக்கும் அடையாளம் என்று அவர் கள் நமது காதுகளில் பூ சுற்றப் பார்க்கிறார்கள்.

நுழைவுத் தேர்வுக்காக ஆயிரக்கணக்கில் பணம் கட்டி அங்கு அவர்கள் கொடுக்கும் கேள்வி - பதில்களை மனதில் பதிவு செய்து - நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது தான் தகுதி - திறமை யென்றால் - இந்த வசதிக் கெல்லாம் கிராமத்துப் பையன் எங்கே போவது?

உச்சநீதிமன்றத்தில் டில்லி பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சேர்க்கைக் கான கட்.ஆஃப் மார்க் பிரச்சினையில் நீதிபதி ஆர். இரவிந்திரன் ஒரு வினா வைத் தொடுத்தாரே!

அம்பேத்கர் வெறும் 37 மதிப்பெண்தான் பெற்றிருந் தார். அதன் காரணமாக அவருக்குக் கல்லூரியில் இடம் மறுக்கப்பட்டு இருந் தால் இந்தியாவுக்கு ஓர் அரசியல் சாசனம் கிடைத் திருக்குமா என்று நாக்கைப் பிடுங்கக் கேட்டாரே மூத்த வழக்கறிஞர் பிபிராவ் (பார்ப் பனர்) தான் பதில் சொல்ல முடியாமல் திண்டாடினார் என்றால் கல்கியோ அவர் களின் வட்டாரத்துக்கு ஆலோசகராக இருக்கும் குருமூர்த்தி, சோ ராமசாமி போன்றவர்களாவது பதில் சொல்லுவார்களா?

இந்த ஆண்டு தமிழ் நாட்டில் மருத்துவக் கல்லூரி யில் சேர்க்கைக்கான கட் ஆஃப் மார்க் என்ன தெரி யுமா?

திறந்த போட்டி 196.25
பிற்படுத்தப்பட்டோர் - 196.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (முசுலிம்) 193.75
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 194.
தாழ்த்தப்பட்டோர் - 187
தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) 177.25
மலைவாழ் மக்கள் - 169.25

இப்படி மதிப்பெண் பெற் றவர்கள்தான் மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை கல்கி வகையறாக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதெல்லாம் தகுதி யில்லை - அகில இந்திய நுழைவுத் தேர்வுதான் தகுதி என்பதில் ஆரிய சூழ்ச்சி இருக்கிறது என்பது வெளிப்படையே!

மருத்துவரிடம் செல்லக் கூடிய நோயாளிகள், மருத் துவர் தங்கப் பதக்கம் பெற்றவரா என்று தெரிந்து கொண்டு செல்வதில்லை. மருத்துவர்களின் தகுதி திறமையை உண்மையில் எடை போடுபவர்கள் திரு வாளர் பொது மக்கள்தான்!

- மயிலாடன், விடுதலை,09-aug-2011


Monday, August 08, 2011

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்....அப்படின்னா?


கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

இஃது உலகநீதிச் செய்யுள்களில் ஒன்று. இதன் பொருள் வருமாறு:-

கோயில் - அரசியல்;
இல்ல - இல்லாத ஒழுங்குமுறையமையாத ஊரில்
ஊரிலே குடியிருக்க வேண்டாம் - குடியிருக்க கூடாது என்பது பொருள்

கோயில் என்பது அரசன்; அரண்மனை, அரசியல் என்று பொருள் தருவதை பழம் தமிழ் நூற்கள் நன்றாக விளக்கும்.

"மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்
அறத்துறை விளங்கிய அந்தணர் பள்ளியும்"

என்ற சிலப்பதிகார அடிகளை நோக்குக!

அரசியல் அமைந்த இடம் என்றால் என்ன?

அகது அமையாத இடம் என்றால் என்ன என்பதை ஆராய வேண்டும்.
பண்டைத் தமிழ்நாட்டில் துறவிகள் ஒழுங்குமுறை வகுத்தார்கள். அதைத்தான் மன்னன் தன் ஆட்சிமுறைக்கு அடிப்படையாக வைத்து ஆண்டு வந்தான்.

இவ்வாறு ஒழுங்கு முறை வகுக்கபடாத காலம் ஒன்றிருந்திருக்கும். அக்காலத்து வாழ்ந்த மக்கள் காட்டுமிராண்டிகளாக இருந்திருப்பர். அதைத்தான் அரசியல் அற்ற இடம் என்பது.

அத்தகைய இடத்தில் மக்களின் வாழ்வு நல்லபடி நடக்கவே முடியாது.
ஆதலால்தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்றருளிச் செய்யப்பட்டது.
                                                                        --- பாரதிதாசன் கட்டுரை, குயில், 18-10-1960

இப்படி ஒரு அர்த்தத்தில் சொன்ன உலகநீதி செய்யுளை நம்ம ஆட்கள் கடவுளை, மதத்தை பரப்ப பயன்டுத்தி கொண்டிருக்கிறார்கள்...ஏதும் அறியாத அப்பாவி மக்கள் கடவுள் என்று சொன்னாலே கண்ணை மூடிக்கொண்டு நம்புவதால் இப்படி எத்தனை புளுகுகள் புராணத்தில், வரலாற்றில் புதைத்து வைத்திருக்கிறார்களோ?

சிந்தியுங்கள் மக்களே!


Sunday, August 07, 2011

தினமலரின் "புது எழுச்சி!"....எது எழுச்சி? எது ஏமாத்து?நவம்பர் 2, 2000 அன்று, மணிப்பூரிலுள்ள மாலோம் எனும் இடத்தில் பத்து குடிமக்களை, இந்திய இராணுவம் படுகொலை செய்ததைக் கண்டித்து, கவிஞர் ஐரோம் சர்மிளா தனது உண்ணாவிரதத்தைத் துவங்கினார். இந்தியக் குற்றவியல் சட்டம் 307-ன் படி அவர் தற்கொலை செய்ய முயன்றார் என நான்கு நாட்களில் அவரை கைது செய்தது இந்திய அரசு. இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்தது. அவர் சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க மறுத்து விட்டார்....கடந்த நவம்பர் 2, 2010 அன்றோடு மணிப்பூரைச் சேர்ந்த கவிஞரும், செயல் வீரருமான ஐரோம் சர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டத்தின் பத்தாவது ஆண்டு முடிவடைந்து போராட்டத்தை அவர் முடித்துகொள்வதாயில்லை...

நவம்பர் 21, 2000 அன்று, அவரது மூக்கில் பிளாஸ்டிக் குழாய் சொருகப்பட்டு, அவரது உடலில் திரவ உணவு வலுக்கட்டாயமாக செலுத்தப்பட்டது. கடந்தப் பத்தாண்டுகளாக இந்தத் திரவ உணவின் மூலமாகவும், உச்சகட்ட பாதுகாப்புடன் தனிமைச் சிறையில் வைத்து அவரது உயிரை இந்திய அரசு கையில் பிடித்து வைத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் அவர் விடுதலை செய்யப்படுவதும், உடனடியாக மீண்டும் கைது செய்யப்படுவதும் என தொடர் நிகழ்வாகியுள்ளது.....இன்னும் பதினோராவது ஆண்டாக அவரது போராட்டம் தொடர்கிறது...2004 ல் தேசத்தையே உலுக்கிய ஒரு சம்பவத்தை மணிப்பூர் பெண்கள் மிக நூதனமான எதிர்கொண்டார்கள் அரசியல் போராளி மனோரமா பாதுகாப்பு படையால் பாலியல் பலாத்காரத்துக்கு பின் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளித்தது என்றால், மணிப்பூர் பெண்கள் பொங்கி எழுந்து தங்களது கோபத்தை வெளிப்படுத்திய விதம் அதைவிட அதிக அதிர்ச்சி அளித்தது. மணிப்பூரின் தலைநகரமான இம்பாலில் காங்களா கோட்டைக்கு முன்னால் அணிவகுத்து கூட்டமாக நின்றார்கள். ராணுவ வீரர்கள் அவர்களை அடக்கப்பார்க்கையில் தீடீரென ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நின்றார்கள். இந்தாருங்கள் எங்கள் உடலை எடுத்துகொள்ளுங்கள் என்று கத்தினார்கள். வீரர்கள் விக்கித்து போய் பேயைக் கண்டது போல இடத்தை விட்டு ஓடினார்கள்.அப்படிப்பட்ட பின்புலத்தில் இருந்து பூத்த மலர் தான் இந்த சர்மிளா. இன்னமும் அவர் உறுதி தளரவில்லை. அவரது தாய் பத்து ஆண்டுகளாக மகளை சந்திக்க செல்லவே இல்லை. நேரில் தாயை பார்த்ததும் உறுதி குலைந்துவிடுமோ என்கிற பயமாம்! எங்கு கண்டிருக்கிறோம் இத்தகைய பெண்களை.

இப்படி ராணுவப் படையினரின் சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெற கடந்த பத்து ஆண்டுக்கு மேல் உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் சர்மிள ஏன் ஊடகங்களின் கண்ணில் படவில்லை....விளம்பர பிரியர்கள் ரம்தேவ்கள், ஹசாறேக்கள் என்றால் வரிந்துகட்டி கொண்டு எழுது ஊடகங்கள் இந்த போராளியின் போராட்டம் பற்றி  கண்டுகொள்ளாதது ஏன்? அதற்க்கு மேல் மத்தியஅரசும் ஏனோதானோ என்று இருப்பது ஏன்? மக்களை ஏமாற்றும் ஹசாரே, ராம்தேவ் என்றால் தலைப்புசெய்தி, தலையங்கம் தீட்டும் புண்ணாக்கு பத்திரிகைகள் இந்த செய்தி தெரியாது ஏன்?

"புது எழுச்சி!" ஊழலுக்கு எதிராக மக்கள் ஆதரவு அதிகரிப்பு : திருப்புமுனையை ஏற்படுத்துவாரா அன்னா ஹசாரே ? (----தினமல(ம்)ர், 07-08-2011)  என்று ஏதோ பெரிய சமூகசேவை நோக்கத்தில் தலைப்பு செய்தி வெளியிடும் வெங்காயங்கள் இதுக்கு என்ன பதில் சொல்லுவார்கள்?

எது எழுச்சி? எது ஏமாத்து? என்று வாசிப்பவர்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்...

குறிப்பு: இந்த பதிவு "மகளிர் சிந்தனை" மாத இதழ் கட்டுரையில் இருந்து எடுத்து எழுதப்பட்டது.


Saturday, August 06, 2011

பெண்களை இழிவுபடுத்துவதே பஃபூனாக இருக்கும் துக்ளக் சோவுக்கு வேலையாகிவிட்டது

கேள்வி:  பெண்களுக்கு ஏழு மணி நேரத் தூக்கம் அவசியம் என்று ஒரு ஆய்வு கூறுகிறதே?

பதில்: பெண்களுக்கு வேண்டாத வர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு ஆய்வை நடத்தி, இந்த முடிவை வெளியிட்டு இருக்கிறார்கள். நியாய மாகப் பார்த்தால், மூன்று வேளை சாப்பாட்டிற்கு சுமார் ஒன்றரை மணி நேரம், மேக்கப் பெய்து கொள்வதற்கு சுமார் இரண்டு மணி நேரம், வம்பு தும்புகளை  அறிந்து கொள்வதற்கு சுமார் ஒரு மணி நேரம், ஏதாவது வீட்டு வேலை இருந்தால், அதைக் கவனிக்க  அரை மணி நேரம் போக - 19 மணி நேரம் பெண்களுக்கு தூக்கம் அவ சியம் என்று ஒரு ஆய்வு கூறினால், அது ஏற்கத்தக்கதாக இருக்கும். ஆண் களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.   (துக்ளக் 3-.8.-2011)

இது மாதிரி எந்த வீட்டில் நடக் கிறதோ இல்லையோ துக்ளக் சோ ராமசாமி வீட்டில் இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. எல்லாம் அனுபவம்தானே!

19 மணி நேரம் அவாள் வீட்டில் பெண்கள் தூங்குவதால் பாத்திரங்கள் கழுவுவது, வீடு கூட்டுவது, துணிகளைத் துவைப்பது, சமைப்பது, இத்தியாதி காரியங்களை திருவாளர் சோ ராமசாமியே அவர் வீட்டில் செய்து அதன் மூலம் பெண்களுக்கு மரியாதை செய்து கொண்டிருக்கிறார் என்று நம்புவோமாக! போதும் போதாதற்கு அவர்களின் லோகக் குரு ஜெயேந்திர சரஸ்வதியாருடன் மணிக் கணக்கில் பேசும் பெண்களும் அக்ரகாரத்தில்தானே இருக்கிறார்கள்.

அவையெல்லாம் சோவுக்குத் தெரியாதா என்ன? சும்மா சொல்லக்கூடாது.

இவற்றையெல்லாம் நேரில் அறிந்து வைத்திருப்பதால்தான் அவரால் இப்படி எல்லாம் எழுத முடிகிறது

கேள்வி: தேர்தலில் தோல்வி என்பது சகஜம்; போட்டிருக்கும் சட்டை கிழிந்து விடுவது போல என்கிறாரே,  பேராசிரியர் அன்பழகன்?

பதில்: இந்த மாதிரியெல்லாம் தி.மு.க. தலைவர்கள் பேசினால் அவர் கள் சட்டையைக் கிழித்துக் கொண்டு நிற்பது போலத்தான் இருக்கும். ஒரு தேர்தல் தோல்விக்காகச் சட்டையைக் கிழித்துக் கொள்ளும் நிலைமைக்கு பகுத்தறிவுவாதிகள் தள்ளப்பட்டிருப்பது, அவர்களை பஃபூன்களின் அந்தஸ் திற்கு உயர்த்தி இருக்கிறது.

(இதுவும் துக்ளக்கில்தான் 3.-8.-2011)

சட்டை கிழிவது போல தேர்தலில் தோல்வி என்பதும் சகஜம்தான் என்ற தி.மு.க. பொதுச் செயலாளர் பேரா சிரியர் அவர்கள் கூறியதற்கு இப்படி வியாக்கியானம் செய்கிறார் சோ.

கிழிந்ததற்கும் கிழிப்பதற்கும் உள்ள வித்தியாசம்கூடத் தெரியாத கீழ்ப் பாக்கங்கள் ஏடுகளை நடத்திக் கொண்டு இருக்கின்றன.
தேர்தலில் தோற்றதால் அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்கிறேன்,- இனி பொதுவாழ்வில் ஈடுபடமாட்டேன் என்று  பேராசிரியர் சொல்லவில்லையே!

1967 தேர்தலில் தமிழ்நாட்டில் தோற்றபோது, காலம் எல்லாம் பதவியில் ஒட்டிக் கொண்டு சுகம் அனுப வித்த திருவாளர் ஆர்.வெங்கட் ராமய்யர் என்ன சொன்னார்?

கட்சியை வளர்க்கப்போகிறேன் - களப்பணி ஆற்றப் போகிறேன் என்றா சொன்னார்? சங்கீதம் கேட்கப் போகிறேன் என்றுதானே சொன்னார். அந்த மாதிரி சொல்லவில்லையே தி.மு.க. பொதுச் செயலாளர்.

வாழ்நாளில் காங்கிரஸ் கட்சியில் ஈடுபட்டுப் பணியாற்றியதும் இல்லை; சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது மில்லை. ஆனாலும் டாக்டர் இராதா கிருஷ்ணன் துணைக் குடியரசுத் தலை வராகவும், பிரமோஷனில் குடியரசுத் தலைவராகவும் ஆகவில்லையா?

பேராசிரியர் அன்பழகன் அப்படி அல்லவே! மாணவர் பருவத்தில் இருந்தே திராவிடர் கழகத்தில் ஈடுபட்டு பிரச்சார கராக விளங்கி, தி.மு.க.விலும் தொடக்க முதல் இருந்து உழைத்து போராட்டங்களைச் சந்தித்துச் சிறைச் சாலைத் தண்டனைகளையும் அனுப வித்தவராயிற்றே! 90 அகவையில், 70 ஆண்டுகளுக்கு மேலான பொதுப் பணிக்குச் சொந்தக்காரராயிற்றே! பதவி என்பது கிழிந்துபோன சட்டை என்று அவர் சொல்லுவது அவரின் சிறப்பைக் காட்டக் கூடியது தான்.

உண்மையிலேயே பஃபூனாக இருக்கக் கூடிய ஒரு ஆள் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரைப் பார்த்து பஃபூன் என்று எழுதுவது எல்லாம் அவாளின் யோக்கியதையைத்தான் புலப்படுத்தும்.

-----------விடுதலை (06-08-2011), ஞாயிறு மலர்


துக்களக் கூட்டத்தின் புளுகுணி புராணம்! ....துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (5)

புளுகுணி சித்தர்களின் புராணம்!


நீதிக் கட்சியைப் பற்றி நிதான மின்றித் தூற்றித் திரியும் கும்பலுக்குத் தீர்க்கமான பதில்கள் நிச்சயம் உண்டு.

இன்று பார்ப்பனர் அல்லாதார் - குறிப்பாகத் தாழ்த்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் தலை நிமிர்ந்து முன்னேற்றத் திசையில் அழுத்தமான அடிகளை எடுத்து வைக்கின்றனர் என் றால் அதற்கான அடித்தளத்தை உரு வாக்கிய  பெரும்  சரிதம் அதற்குண்டு.

அன்றைக்கு 1610 இல் மதுரையில் படித்த  10 ஆயிரம் மாணவர்களும் பார்ப்பனர்களே என்று ராபர்டி நொபிலி எழுதிய கடிதம் கூறுகிறது.

இன்றைக்குச் சென்னைப் பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் படிக்கும் பார்ப்பனர் அல்லாத மாணவ, மாணவிகள் 1,45,450 (89 விழுக்காடு) என்று சென்னை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் திருவாசகம் அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழாவில் (20-11-2010) குறிப் பிட்டாரே!

இந்தச் சாதனைக்கு முஷ்டியை உயர்த்தி உரிமை கொண்டாடும் உரிமை, பெருமை நீதிக்கட்சிக்கு உண்டே!

தனது ஆதிக்கத்தில் மண் விழுந்த தற்குத் மண் வெட்டியைத் தூக்கியது இந்த நீதிக்கட்சியல்லவா என்கிற ஆத்திரத்தில்தான் இன்றைக்குக் கூட துக்ளக் வட்டாரம் வாயிலும் வயிற் றிலும் அடித்துக் கொண்டு மண்ணை வாரித் தூற்றக் கிளம்பியுள்ளது!

நீதிக் கட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டால் அது பல தொகுதி களாக விரிவடையும் என்றாலும் சில முக்கிய சாதனைகளை பட்டியலிட வேண்டியது அவசியமே!

முதல் அமைச்சரவையின் சாதனையை (1920-1923) ஆணை எண் 116 வாயிலாக நீதிக்கட்சியே வெளி யிட்டுள்ளது.

* பொதுத் துறையில் தாழ்த்தப் பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன

* துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியவர்களுக் காகக் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற் படுத்தப்பட்டன.

* தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப்பட்டன.

* தாழ்த்தப்பட்டோர்க்கு வீட்டு மனைகள், குடியிருப்புகள் அமைத்துத் தரப்பட்டன. சாலைகள் போடப்பட் டன. அவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

* தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப் பட்டனர். பின்னர் தனி அலுவலர் என் பதை லேபர் கமிஷனர் என்று மாற்றினர்.

* தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என் னென்ன சாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி மேற்கொள்ளப் பட்டது. * குறவர்களை எல்லா வகையிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன.

* கோவை மாவட்டத்திலுள்ள வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு 25 - நிதி உதவிகள் (ஸ்காலர்ஷிப்புகள்) அளிக்கப்பட்டன.

* ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு அதனைப் பயன்படுத்த மூலதனம், பிற சாதியினரிடமிருந்து பாதுகாப்பு -_ அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை இன்னும் பிற தொல் லைகளிலிருந்து மீட்பு என உதவிகள் செய்யப்பட்டன. * தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டு மனை வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தரப்பட்டது.

* ஆதி திராவிடர்களுக்கு விவசாயத் திற்காக நிலங்களை ஒதுக்குகிற போது மரங்களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.

* அருப்புக் கோட்டையில் குறவர் பையன்களுக்குப் படுக்கை வசதி கொண்ட மன்றம் கட்டித்தர அளிக்கப் பட்ட தொகையை  உயர்த்தித் தர உத்தரவு இடப்பட்டுள்ளது.

* மீனவர் நலன் காப்பதற்காக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டார்.

* கள்ளர் சமுதாய முன்னேற்றத் திற்காகப் புதிதாக லேபர் கமிஷனர் நிய மிக்கப்பட்டு அவர் சில வழிமுறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்தனர்.

* நிலத்தில் கட்டடத்தைக் கட்டிக் கொண்டு நில வாடகை செலுத்து வோர்க்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச் சட்டப்படி நில உரிமையாளர்களால் அப்புறப்படுத்தப்படுவோம் எனும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.

* பி. அண்டு சி வேலை நிறுத்தத்தின் விளைவுகளால் ஏற்பட்ட பாதிப்பு களுக்கு உதவிகள் செய்யப்பட்டன.

* தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அய்ந்து பள்ளி களைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப்பட்டது.

* ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத் திற்காகப் பொது மக்களின் உதவியையும் உறவையும் பலப்படுத்த அரசு வேண்டு கோள்களை அரசு ஆணையாகப் பிறப்பித்தது.

* குடிப் பழக்கம் உள்ளவர்களின் பழக்கத்தை மாற்ற மக்களை நெறிப் படுத்த ஆணை வெளியிடுதல்.

* ஆதி ஆந்திரர்களுக்கு சந்தை விலையில் நிலங்களை அளித்தல்.

* தஞ்சாவூர் கள்ளர் பள்ளிகளின் நடைமுறை செலவுகளை ஏற்றல்; சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளு தல், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்தல்.

* மலபார் மாவட்டத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப் பட்டன.

* சென்னை நடுக்குப்பத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.

* கிழக்குக் கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறக்கப்பட் டன. மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.

* உள்ளாட்சி மன்றங்களில் தகுதியான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடைக்கும்போது அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு இடப்பட்டு இருந்தது.

* மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உதவி நிதி (ஷிவீஜீமீஸீபீ) பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப் பட்டது.

* அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டப்பட ஆண்டு தோறும் அறிக்கைகள் வெளியிடப்பட பொதுத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டது.

* தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. தடைகள் ஏதாவது செய்யப்படுமானால் உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

* சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ். எல்.சி. தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

* கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் படிக்கும் பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.

* தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த் தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.

அரசு ஆணைகளின் தொகுப்பு:

1. பெண்களுக்கு வாக்குரிமை அர சாணை எண். 108 நாள்: 10-_05_-1921

2. பஞ்சமர் என்ற சொல் நீக்கப் பெறல் - ஆதிதிராவிடர் என அழைக்கப் பெறல். அரசாணை எண். 817 நாள் 25_-3_-1922

3. கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க குழுக்கள் அமைத்தல். அரசாணை எண். 536 நாள் 20-5-1922.

4. கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த பார்ப்பனரல்லாத பிள்ளைகள் தொடக் கப் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் அரசாணை எண். 849 நாள் 21-6-1923.

5. தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர் களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாக சேர்க்க வேண்டும். அரசாணை எண். (அ) 205 நாள்: 11_-2_-1924; (ஆ) 1825 நாள்: 24-_9-_1924.

6. இந்து சமய அறநிலையச் சட்டம் அரசாணை எண். 29 நாள். 27_-01_-1925.

7. சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களைச் சேர்ப்பது குறித்த ஆணை அரசாணை எண். (அ) 636 நாள்: 2_0-5_-1922. (ஆ) 1880 நாள் 15-_9-_1928

8. வகுப்புரிமைக்காகப் பிறப்பிக்கப் பட்ட ஆணை அரசாணை எண்.226 நாள் 27-_2-_1929

9. சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷனை உருவாக்கல் அரசாணை எண். 484 நாள் 18-_10_-1929. பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர் களுக்கு நீதிக் கட்சியில் அலை அலையாக நன்மைகள் நடந்தேறியிருக்க நீதிக் கட்சி ஆட்சியைத் தலித் மக்கள் புறக்கணிப்பு என்று (துக்ளக் 13_-7_-2011) தலைப்புக் கொடுத்து எழுதுகிறது என்றால் இவர்களின் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளலாம்.

நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவையின் காலம் (1923_-1926). இந்தக் கால கட்டத்தில் நிறைவேற்றப் பட்ட இரு சட்டங்கள் முத்து முத் தானவை.

ஒன்று அறநிலையப் பாதுகாப்பு சட்டம் ஆகும்.

ஆண்டாண்டு காலமாகப் பார்ப் பனர்களின் அடுப்பங்கரையாக கோயில் கள் இருந்தன. கோயில் அர்ச்சகர்களைக் கோயில் பூனைகள் என்று கூறி ஒரு நூலையே எழுதியுள்ளார் கோவை கிழார். (1945).

கோயில் கொள்ளையைக் கட்டுப் படுத்தக் கொண்டு வரப்பட்டதுதான் இந்தச் சட்டம்.

பார்ப்பனர்கள் தலையில் அல்லவா கை வைத்து விட்டனர். விடுவார்களா? அதற்கு மேல் வாயை அகலப்படுத்த முடியாத அளவுக்கு அலறினார்கள்.

நீதிக்கட்சியினர் பார்ப்பனர்களை மட்டும் எதிர்க்க வில்லை. கடவுளையும் எதிர்க்கக் கிளம்பி விட்டார்கள். மதத்தை அழிக்க முனைந்துவிட்டார்கள். ஆண்ட வனையே சட்டம் போட்டுக் கட்டுப் படுத்தும் அடாத செயலை எவரும் ஆதரிக்க மாட்டார்கள். மதத்தின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் இம் மசோதாவை ஜாதி, மத வித்தியாசமின்றி, கட்சிப் பாகுபாடின்றி ஒருமனதாக எதிர்க்க வேண்டும்

- இப்படி பேசியவர் யார் தெரியுமா? பார்ப்பனர் குலத் திலகம் வாயாடி சத்தியமூர்த்தி அய்யர்வாள்தான்.

சட்டசபையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்ட போது ஒவ்வொரு பார்ப்பன மெம்பரும் தொண்டை கிழிய கத்தினர் -_ நா வறண்டு போகும் அளவிற்குப் பேசித் தீர்த்தனர். சிலர் சாபமிடவும், சபிக்கவும் செய்தனர். சத்தியமூர்த்தி அய்யர் இட்ட கூச்சல் ஒரே காட்டுக் கூச்சல்தான். ஆங்கி லத்தில் பேசியும், கத்தியும் போதாது என்று சமஸ்கிருதத்திலும் பேசினார் - கத்தினார்.

சமஸ்கிருதத்தில் பேசியதும், கதறியதும் பலன் அளிக்க வில்லை என்று சமஸ்கிருதத்திலேயே பாடவும் செய்தனர்.

(கே.குமாரசாமி எழுதிய திராவிடர் தலைவர் டாக்டர் நடேசனார் வாழ்வும் தொண்டும் பக்கம் 73)

இதனையும் மீறி சட்டம் நிறை வேற்றப்பட்டது.

பார்ப்பனர்களாலேயே ராஜதந்திரி என்று ஒப்புக் கொள்ளப்பட்ட பனகல் அரசர் ( ராமராயநிங்கர்) மிகச் சாதுரிய மாகக் காயை நகர்த்தி பார்ப்பனர் களுக்கு அல்வா கொடுத்துவிட்டார்.

அம்மசோதாவை நிறைவேற்றுவ தற்காக சிறப்பு உறுப்பினராக யாரை நியமித்தார் தெரியுமா? என்.கோபால் சாமி அய்யங்காரை. அந்தப்பதவிக்கான பெயர் எக்ஸ்பர்ட் மெம்பர் என்பதாகும். அடுத்துப் பாருங்கள்.

அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்தத் துறையின் தலைவராக யாரை நியமித்தார் தெரியுமா? ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதாசிவ அய்யரை.

உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி மாதிரி பார்ப்பனர்கள் நெளிந்தனர். கோபால்சாமியை விஞ்சி விட்டாரே எக்ஸ்பர்ட் பனகல் அரசர்!

இத்தகைய சட்டத்தின் அவசியம் எத்தகையது என்பதற்கு சிதம்பரம் நடராசர் கோயில் சமாச்சாரத்தைத் தெரிந்து கொண்டால் போதுமே.

அந்தக் கோயில் தீட்சதர்களின் உடைமை என்றும் இந்து அறநிலை யத்துறையின் கீழ் வராது என்றும் சாதித்து வந்தனர்.

மாநில அரசு எவ்வளவோ முயன்றும் நீதிமன்றம் சென்று தடை ஆணை வாங்கி விடுவார்கள் தீட்சதர்கள்.

2006 இல் மானமிகு கலைஞர் அவர் கள் முதலமைச்சராக வந்தபோதுதான் சிதம்பரம் கோயிலை வகையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார். (இப்பொழுது கூட அதனை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில்தான் உள்ளது? விடுவார்களா ருசி கண்ட பூனைகள்)

தீட்சதர்கள் கையிருப்பில் சிதம்பரம் கோயில் இருந்த போது அவர்கள் நீதிமன்றத்தில் காட்டிய கணக்கு என்ன தெரியுமா? ஆண்டு ஒன்றுக்கு வரவு ரூ 33,199 ; செலவு ரூ.33 ஆயிரம் மிச்சம் ரூ.199 என்று பேட்டா செருப்பு விலை போல சொன்னார்கள்.
அதே கோயில் இந்து அறநிலையத் துறையின் கீழ் வந்த நிலையில் அதன் வருமானம் என்ன தெரியுமா? கோயிலின் நிருவாகத்தை ஏற்றுக் கொண்ட 18 மாதங்களில் நிதி வருவாய் 25 லட்சத்து 12 ஆயிரத்து485ரூபாய். (இதில் டாலர்கள், தங்கம், வெள்ளி காணிக்கைகள் அடங்காது.)

இப்படி எவ்வளவு காலமாகவோ கொள்ளை அடித்துக் கொண்டு உல்லாச வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த கூட்டத்தின் குரல் வளையை நெருக்கிய சட்டத்தை நீதிக் கட்சிதான் கொண்டு வந்தது. பார்ப்பனர்களுக்கு உள்ளபடியே கடவுளிடத்தில் பக்தி இருக்குமானால் கோயில் கொள்ளையர்களிடமிருந்து கோயில் சொத்துக்களை மீட்ட நீதிக்கட்சிக்கு ஒரு நெடும் சரணம் போட வேண்டுமே - போடுவார்களா?

தேவதாசி ஒழிப்புச் சட்டம்

குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்களை கோயிலுக்குப் பொட்டுக் கட்டிவிட்டு தேவரடியார் (தேவடியாள் என்றுதான் வழக்கில் சொல்லுவார்கள்) என்று முத்திரை குத்தும் கேவலமான முறை ஒழித்துக்கட்டப் பட்டதும் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான்!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியார் அம்மையார்தான் இதற்கான மசோ தாவை முன்மொழிந்தார். அதற்கும் பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு! - அதிலும் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் வாள்தான் அண்டங்காக்கைக் கூச்சல்.

தாசிகுலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டு வருகிறது. பலருக்கும் இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது. இப்படிக் கூறுவதால் என்னைத் தாசிக் கள்ளன் என்று கூடக் கூறலாம்.  அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை.

சமூகத்திற்கு தாசிகள் தேவை என்பதைத் திரும்பச் செல்ல விரும்பு கிறேன். தாசிகள் கோயில் பணிக் கென்று படைக்கப்பட்டவர்கள். அது சாஸ்திர சம்மதமானது. தாசிகளை ஒழித்துவிட்டால் பரதநாட்டியக் கலை அழிந்து விடும். ஆண்டவன் கட்ட ளையை மீறுவது அடாத செயலாகும். அநியாயம் ஆகும்! - என்று ஆகாயத்துக்கும், பூமிக்கும் தாவினார்.

தந்தை பெரியார் சவுக்கடி கொடுத் தது போல பதிலடி கொடுத்தார்.

ஒரு குலத்தில் மட்டும்தான் தாசிகள் தோன்ற வேண்டுமா? இதுதான் ஆண்டவன் கட்டளையா? மற்றக் குலத்துப் பெண்களும் மாறி மாறிப் பொட்டுக் கட்டிக் கொள்ளக் கூடாதா? என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் படிக் கேட்டார்.

சட்டமன்றத்தில் ஒரு பெண்ணாக இருந்த டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் சத்தியமூர்த்தி அய்யரை நோக்கிப் போட்டார் கிடுக்கிப்பிடி! ரோஷம் இருந்தால் மனுஷன் தூக்கு மாட்டிக் கொண்டு சாகலாம்தான்!

தொன்றுதொட்டு உள்ள இந்த வழக்கத்திற்கு இது காறும் இருந்து வந்த எங்கள் குலப் பெண்கள் செய்தது போதும்; இனி உங்கள் குலப் பெண்கள் தேவர்க்கு அடியார்களாக இருந்து மோட்சப் பிராப்தி பெறலாமே! என்றாரே பார்க்கலாம். வாயாடி சத்தியமூர்த்தி, வாயைப் பொத்தி மவுன சாமியார் ஆகிவிட்டார்.

திருவாளர் சத்தியமூர்த்தி, இந்த மசோதாவை எதிர்த்துப் பேசும் போது சொன்ன ஒரு கருத்து மிகவும் கவனிக்கத் தக்கது. பார்ப்பனர்கள் எந்த அளவிற்கு எச்சரிக்கையாக இருக்கக்கூடியவர்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு இது.

இன்று தேவதாசி தொழிலை நிறுத்தினால் ராமசாமி நாயக்கர் நாளை அர்ச்சகர் தொழிலை நிறுத்த சட்டம் செய்ய வந்து விடுவாரே! என்று ஆத்திரப்பட்டுப் பேசியிருக்கிறார். (அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம், கலைஞர் ஆட்சியில் அதற்கான சட்டம் - அதனைத் தொடர்ந்தது.

69 சதவிகித அடிப்படையில் அனைத்து ஜாதியினருக்குமான அர்ச்சகர் பயிற்சி _ உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நடைமுறைப் படுத்தப்படாமை - இவற்றையும் நினைவில் கொள்க!) சத்தியமூர்த்தி அய்யரின் கணக்கு சரிதானே!

வகுப்புரிமைச் சட்டம்

நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் பி.சுப்பராயன் முதல் அமைச்சராக இருந்த போதுதான் ( 4-12-1926 - 27-10-1930) எஸ். முத்தையா முதலியார் அவர்களின் முயற்சியால் முதல் இடஒதுக்கீட்டுச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

தொடக்கத்தில் சுயராஜ்யக் கட்சி (காங்கிரசின்) ஆதரவுடன்தான் டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையை அமைத்தார். இந்த அமைச்சரவையில் ஆரோக்கியசாமி முதலியார், ரங்கநாத முதலியார் ஆகியோர் இரு அமைச் சர்கள்.

சைமன் கமிஷனை வரவேற்பதா, கூடாதா என்ற பிரச்சினையில் சுயராஜ்யக் கட்சிக்கும், முதல் அமைச்சர் டாக்டர் சுப்பராயனுக்கும் கருத்து வேற்றுமை வெடிக்க, அமைச்சரவை யிலிருந்த இரு அமைச்சர்களும் பதவி விலகினர்.

அந்தச் சந்தர்ப்பத்தில் நீதிக்கட்சி டாக்டர் சுப்பராயனுக்கு ஆதரவு தந்த தால் ஆட்சி கவிழாமல் காப்பாற்றப் பட்டது. எஸ். முத்தையா முதலியாரும், எம்.ஆர். சேதுரத்தின அய்யரும் அமைச்சரவையில் இடம் பெற்றனர். ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் ஆளும் கட்சியின் கொறாடாவானார். இந்த அமைச்சரவை பதவி ஏற்ற நாள் 1928 மார்ச் 16.

நீதிக்கட்சி ஆதரவு பெற்ற இந்த அமைச்சரவையில் தான் எஸ். முத்தையா முதலியார் அவர்களின் சிறப்பான முயற்சியால் முதல் இட ஒதுக்கீடு உத் தரவு (Communal G.O.) நிறைவேற்றப்பட் டது. நிறைவேற்றப்பட்ட நாள்              13_-9_-1928 (அரசு ஆணை எண். பொது 744).

உண்மை இவ்வாறு இருக்க துக்ளக்கில் (13.-7-.2011) கம்யூனல் ஜி.ஓ. என்ற தலைப்பில் திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்த பேனாவைத் தூக்கிக் கொண்டு கிளம்பி உள்ள திருவாளர் லட்சுமி நாராயண அய்யர் அண்டப் புளுகு, ஆகாசப் புளுகாக காங்கிரசின் ஆதரவு பெற்ற சுப்பராயன் அமைச் சரவைதான் கம்யூனல் ஜி.ஓ. ஆணையை நிறைவேற்றியது என்று கொஞ்சம் கூடக் கூச்ச நாச்சமில்லாமல் புளுகின்றார் என்றால், இந்தப் புளுகினிச் சித்தர் களைப் பற்றி என்ன எடை போட?
பொய்யும், புனைசுருட்டும் செய்தாவது நீதிக் கட்சியை - பார்ப்பனர் அல்லாத அமைப்பை, திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்திக் காட்ட வேண்டும் என்கிற மூர்க்கத் தனம்தானே இதன் பின்னணியில் இருக்கின்றது.
இதற்கும் ம.பொ.சி.யைத் வேறு துணைக்கழைத்துக் கொள்கிறார். ம.பொ.சி எழுதும் சரக்கின் பொய்மை யும் இதன் மூலம் அம்பலமாகிவிட்டது.

பனகல் அரசர் ஆட்சியின் சாதனைகளைப் பாரீர்!

கல்லூரி முதல்வர்கள் எல்லாம் பார்ப்பனர்களாகவே இருந்த நிலையில் பார்ப்பனர் அல்லாத மாணவர் சேர்க்கைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டு இருந்த கால கட்டம் அது; பனகல் அரசர் என்ன செய்தார்? ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்குக் குழுக்கள் அமைக்க உத்தரவிட்டார். (ராஜாஜி அவர்கள் 1937 இல் ஆட்சிக்கு வந்த போது இந்த முறையை நீக்கினார் என்பதைக் கவனித்துக் கொள்க!)

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற பார்ப்பன சூழ்ச்சியைத் தவிடு பொடியாக்கினார் பனகல் அரசர்.

சென்னை மாநிலக் கல்லூரி சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாத சம்பளம் ரூ. 300, தமிழ்ப் பேராசிரியர் கா. நமசிவாய னாருக்கு மாதச் சம்பளம் ரூ.81  - இந்த பேதத்தை நீக்கியது இவ்வாட்சியே.

1922 ஆம் ஆண்டு மார்ச்சு 25 முதல் பழந்தமிழ்க் குடிகளைப் பறையர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் அழைக் கப்படுவதை மாற்றி  ஆதிதிராவிடர் என்று அழைக்கப்படவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
 
1923 இல் புதிய பல்கலைக் கழகம் காண சட்டம் இயற்றப்பட்டது. பின்னா ளில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாக இது காரணமாயிற்று.

ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த மருத்துவத் துறையை இந்திய மயமாக்கிய பெருமையும் நீதிக்கட்சி முதல் அமைச்சர் பனகல் அரசரையே சாரும். அய்ரோப்பிய உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கிடையேதான் இந்தச் சட்டம் நிறைவேறியது.

வெள்ளைக்காரர்களுக்கு வால் பிடித்தவர்கள் ஜஸ்டிஸ் கட்சியினர் என்று சொல்பவர்களின் பற்களை உடைக்கும் இந்தச் சட்டம்.  முதன் முதலில் சென்னையில் இந்திய மருத் துவக் கல்லூரியும் இப்பொழுதுதான் ஏற்படுத்தப் பட்டது.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதம் படிப்பதற்குத்தான் வழி இருந்ததே தவிர தமிழ்ப் படிக்கக் கதவு அடைக்கப்பட்டது. சென்னை பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு தமிழைக் கட்டாய பாடமாக்க மறுத்தது.

இதனை எதிர்த்து நீதிக் கட்சியைச் சேர்ந்த இராஜரத்தின முதலியார் தீர்மானம் நிறைவேற்றிக் கண்டனம் தெரிவித்தார்.

நீதிக்கட்சி பிரமுகர்கள் ஆர். வெங் கடரத்தினம் நாயுடு, டி.என்.சிவஞானம் பிள்ளை, எஸ்.முத்தையா முதலியார், டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார் போன்ற தலைவர்கள் போராடிப் போராடிதான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி கற்பிக்கப் படுவதற்கு வழி வகுத்தனர். (தமிழ் நாட்டிலேயே இப்படி ஒரு நிலை!)

வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான் 1921 இல் பள்ளிகளில் இலவச நண்பகல் உணவு அளித்தார். இதற்காக சென்னை மாநகராட்சி பணம் செலவழிப்பதை நகராட்சி சட்டத்தைத் திருத்தி மாநில அரசே ஏற்றுக் கொண்டது. (அரசாணை எண். 1008 (L & M) நாள்:7-6-1922.

இதன் காரணமாக பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதி கரித்தது.
 
இன்னும் ஒரு குறிப்பிடத் தகுந்த தகவல் உண்டு. இலவச இரவுப் பள்ளிகள் நடத்த முன்வந்தால், மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலைப்பாடுதான் அது. பகல் பொழுதில் பணியாற்றச் செல்வோர் இரவில் படிக்கும் ஒரு வாய்ப்புக்குத் கதவைத் திறந்துவிட்டவர் நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி. தியாகராயர்தான்.
தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அரசினர் கல்லூரி சமஸ்கிருதக் கல்வி நிலையமாக இருந்ததை மாற்றி, தமிழும் சொல்லிக் கொடுக்கப்பட ஆவன செய்தார் ஜில்லா போர்டு தலைவராக இருந்த நீதிக்கட்சித் தலைவர் ஏ.டி.பன்னீர் செல்வம்.

பார்ப்பனர்களுக்கு மட்டும் வடித்துக் கொட்டப்பட்டுக் கொண்டிருந்த ராஜா மடம், உரத்தநாடு விடுதிகளை மற்றவருக்கும் திறந்து விட்ட தகைமையும் அவரையே சாரும்.

இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக இருந்த ஊ.பு.அ. சவுந் தரபாண்டியன், பேருந்துகளில் தாழ்த் தப்பட்டவர்களை அனுமதிக்கா விட்டால் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஆணையிட்டார்.

தாழ்த்தப்பட்டவர்களைப் பள்ளிகளில் சேர்க்காத பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்படும் என்று ஆணையிட்டவர் தாலுகா போர்டு தலைவராக இருந்த நீதிக் கட்சி முன்னணித் தலைவர்களுள் ஒருவரான சிவகங்கை எஸ்.இராமச்சந்திரனார்.

நீதிக்கட்சியின் நேர்மையும், நீதிநெறியும், தொண்டுள்ளமும், நிர்வாகத் திறனும் வரலாற்றில் விஞ்சி நிற்கக்கூடியவை.

வெளிநாடுகளிலிருந்து வரும் பார்லிமெண்டரியன்கள் சென்னைக்கு வந்து நீதிக்கட்சி நடத்தும் சட்டப் பேரவை நிகழ்ச்சிகளைக்கண்டு வியந் தும் பாராட்டியும் உள்ளனர்.

இத்தகைய இயக்கத்தின் மீது சேறு வாரி இறைக்க முண்டாசு கட்டி முன் வருகின்றனர் என்றால் அது அவர்கள் நேர்மையற்ற- தன்னல வெறியுடைய ஆரியத் தன்மையைத்தான் அடை யாளம் காட்டும்.

(வளரும்)

----- விடுதலை (06-08-2011), ஞாயிறு மலர்Friday, August 05, 2011

அதென்ன வரலட்சுமி நோன்பு? வேறன்ன பார்ப்பனத் தந்திரம்....


வருகிற 12 ஆம் தேதி ஆகஸ்ட் வரலட்சுமி நோன்பாம்.....ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. பெரும்பாலும் 3வது ஆடி வெள்ளியன்றோ அல்லது 4வது ஆடி வெள்ளி அன்றோவரும். சுமங்கலிகள் அனுஷ் டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப் பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர்....

சரி ஒரு விவாதத்துக்கு இந்த நோன்பு பெண்கள் இருந்தாலும், ஏன் 25 வயது உள்ள கணவனை இழந்து ஒரு பெண் இருந்தால் அவள் இந்த விரதம் இருக்ககூடாதா? அயோக்கிய பசங்க....

இப்படி பாகுபாடு உள்ள கடவுளின் பேரால் கயவாளித்தனம் பண்ணும் பார்ப்பனர்களுக்கு சாதகமான நிகழ்ச்சியை பெண்கள் குறிப்பாக நல்ல பணம் மித மிஞ்சி உள்ள மேல்தட்டு பெண்கள் பெரிய ஒரு நிகழ்ச்சி போல பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி என்ன இருக்கிறது? சரி கடவுளை வைத்து வயிறு வளர்க்கும் பாப்பாத்திகள் அவா ஆத்து அம்புடயான் இன்னும் தொந்தி வளர்க்க உதவுமே என்று இந்த வரலட்சுமி நோன்பை வரவேற்ப்பார்கள்....இதனை பார்ப்பனர் அல்லாத நம் வீட்டு பெண்களும் வரவேற்ப்பது எந்தவிதத்தில் நியாம்?

அஷ்டலட்சுமிகள் என்று பல-ராலும் சொல்லப்படும் ஒரு கடவுளுக்கே எட்டு உருவங்கள் உள்ளன. தன-லட்சுமி, தான்யலட்சுமி வீரலட்சுமி, ராஜ-லட்சுமி, சந்தானலட்சுமி, ஆதி-லட்சுமி, வித்யாலட்சுமி, விஜயலட்சுமி என்பவைதான். வரலட்சுமி என்று ஒரு பெயர் இல்லை இவர்களில் யார் வர-லட்சுமி? சிவன் பார்வதிக்கு வரலட்சுமி விரதம் பற்றிச் சொன்னானாம். பார்வதி பூஜிக்கப் போகிறாளா? ஒரு பெண் தன் கனவில் மகாலட்சுமி வந்து விரதம் இருக்கச் சொன்னதாக எல்லோரிடமும் சொல்லி இந்த விரதம் வந்ததாம். அதற்குச் சொல்லப்பட்ட பாடல் மகாலட்சுமியைப் பற்றியதே. முதல் கூட்டம் பூஜை செய்த முறைக்கும் தற்போதுள்ளதற்கும் மாறுதல் உள்ளது. அது அவரவர் வசதியும் இஷ்டமும் போலும். ஓர் ஆண்டு விரதம் இருந்தால் தான் எல்லா செல்வங்களும் கிடைத்துவிடுமே. பின் ஏன் ஆண்டுக்கு ஆண்டு செய்ய வேண்-டும்? சொல்லப்பட்டுள்ள தோத்தி-ரங்கள் எல்லாம் வடமொழியே. கலசத் தேங்காயை அடுத்த வாரமே பயன்-படுத்தச் சொல்கிறாள். ஒரு ஆண்டு வைத்திரு என்று சொல்லவில்லை, இதில் ஆண்களும் விரதம் இருந்-தார்கள் என்ற ஒரு கதை. கலசத்தை அரிசிப் பானையில் வைக்க வேண்டும் என்றால் குடத்தை எப்படி அரிசிப் பானையில் வைக்க முடியும்? அன்ன-லட்சுமிக்குப் பஞ்சம் கிடையாதாம். யார் இவள்? இந்த விரதம் இருப்பதால் பல நலன்கள் கிடைக்கும் என்ற ஆசையைத் தூண்டி, பெண்கள் மாறாமல் இருக்கவே இந்தக் கதை. இந்த சரித்திரத்தைக் கேட்டவர்களும், பிறருக்குப் புரியும்படிச் சொன்னவர்-களும் பல நலன்கள் பெறுவராம். ஒரு கடவுளச்சிக்கு எட்டுப் பெயர்களுடன் எட்டு உருவங்கள் சொல்லி இன்னும் பல பெயர்கள் கூறப்படுகின்றன. மக்கள் என்றும் அறிவு பெறக்கூடாது என்பதே பார்ப்பனத் தந்திரம். சிந்திப்பீர்! (விடுதலை ,20.03.2010)
சரி வரலட்சுமி நோன்பு என்று என்ன புளுகுகிறார்கள், கடவுளின் பெயரை சொல்லி குண்டி வளர்க்கும் இந்த பார்ப்பனர்கள் என்று தாத்தாச்சரியார் வேறு ஒரு மாதிரியாக சொல்லுகிறார்.

கன்னிப் பெண்கள் தங்களது எதிர்காலக் கணவன் நன்றாக இருக்கவேண்டும். நல்ல கணவனாக வாய்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வரலட்சுமி விரதம் இருக்கிறார்கள். அதாவது அன்று முழுவதும் வயிற்றுக்கு சாப்பாடு போடாமல், எதிர்கால வாழ்க்கைக்கு நல்ல சாப்பாடு கிடைக்க வேண்டும் என வேண்டுகிறார்கள்.

கல்யாணம் ஆன குடும்பப் பெண்கள்... தீர்க்கசுமங்கலியாக தன் தாலி குங்குமம் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக வரலட்சுமி விரதம் இருந்து தன்னைப் போல குடும்பப் பெண்களுக்கு ரவிக்கை துணிகளையும் லஞ்சமாக கொடுக்கிறார்கள். இது வரலட்சுமி விரதம்....

'நா°தி ஸ்தீரீனாம்பரத் யக்ஞயஹாநவ வ்ரதம்நாப உபோஷனம்'

அதனுடைய அர்த்தம் என்னவென்றால் விரதம் இருக்கலாம் ஆனால்... சூத்ரச்சிகளாகவே கருதப்படும் அனைத்துப் பெண்களும், சூத்ரர்களும் விரதம் இருக்கக்கூடாது... என தனது ஆணையை நிறுவுகிறார் மநு.

மேற்சொன்ன அந்த செய்தி தாத்தாச்சரியாரின் இந்து மதம் எங்கே போகிறது என்கிற நூலில் மிகவும் தெளிவாக விளக்கம் கொடுக்கிறார்.....வரலட்சுமி நோன்பு என்ற ஏமாத்து வேலை ஆரியர் கொள்கை என்றும் அதில் திராவிடர் இன பெண்களுக்கு கொஞ்சம் கூட தொடர்பு இல்லை என்றும் சொல்லுகிறார்....

இப்படி அவா மனு அவர்களை விரதம் இருக்க சொல்லுகிறது....உழைக்காமல் ஏமாத்தி திங்க வழி இருக்கா என்று திமிர் தனமான வேலைகளை செய்ய சொல்லுகிறது....ஏமாத்தி குண்டி வளர்க்கும் ஆரிய கலாச்சாரம் நம் மக்களுக்கு எதற்கு? அவா அவர்கள் வேதப்படி நடக்கிறாள் நாமும் நம் பெண்களும் அப்படி நடந்துகொள்கிரோமா?

குறிப்பு: இந்த பார்ப்பனர்கள் கல்வியாளராக இருக்கும் பள்ளிகள் அனைத்தும் அன்று விடுமுறை..யார் இவர்களுக்கு இந்த அதிகாரம் கொடுத்தது?.....அனால் அம்பேத்கர் பிறந்த நாள் அன்று அரசே விடுமுறை விட்டாலும் இவர்கள் பள்ளியில் வந்து உட்கார்ந்து கொண்டு பாடம் நடுத்துவார்கள். எப்படி இருக்கு யோகிதை?


Tamil 10 top sites [www.tamil10 .com ]