அன்று ஒருவருக்கு வழங்கப்பட்ட கருணையே இன்று மற்ற மூவருக்கும் வழங்குங்கள் என்று கேட்பதற்கு முகாந்திரத்தை வழங்கி இருக்கிறது.
ஒருவேளை அன்று நால்வருக்கு அதே அமைச்சரவை கருணை காட்ட பரிந்துரை செய்திருந்தால், நால்வருக்கும் சேர்ந்து அந்த கோரிக்கை மறுக்கபடுவதற்கு வாய்ப்பிருந்தது.
நளினிக்கு கலைஞரால் கருணை காட்டப்பட்டது என்ற உண்மை தெரியாத ஜெயலலிதா அந்த அறிக்கையின் ஒருபகுதியில் கூறியிருப்பதாவது....
தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற அசட்டு தைரியத்தில் சிலர் பகிரங்கமாக தேச விரோத கருத்துக்களை பேச ஆறஅம்பித்துவிட்டனர். POTA இல்லாவிட்டாலும், தற்போதுள்ள சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் விடுதலைபுலிகள் அமைப்புக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.” இவ்வாறு செல்கிறது அறிக்கை.
கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன் என்ற கருணையற்ற எண்ணம் கொண்ட ஜெயலலிதா இன்று சட்டமன்றத்தில் தி.மு.கவை கைகாட்டும் உச்சிகுடுமி சானக்கியதனத்தை காட்டியிருக்கிறார். தனது அரசால் முடியாது என்று சட்டவிதிகளை சுட்டிக்காட்டும் ஜெயலலிதா, குறைந்த பட்சம் ஒரு கட்சியின் தலைவியாக தார்மீக அடிப்படையில் இந்த மரணதண்டனைக்கு எதிராக கருத்தை கருணையோடு தெரிவிப்பதற்குமா சட்டவிதிகள் தடுக்கின்றன???!!!
இத்தனைக்கும் பிறகு அந்த பரிதாபத்திற்குரிய தாயார் அற்புதம் அம்மையார்.”அம்மா என் மகனை காப்பாற்றுங்கள்” என்று மன்றாடுகிறார். இளைஞர்கள் இன உணர்வாளர்கள் போராடுகிறார்கள், ஒருவர் தன் இன்னுயிரை இழந்திருக்கிறார், தமிழக மக்கள் அனைவரும் அவர்களை விடுதலை செய்தால் என்ன ஆகிவிட போகிறது என முனுமுனுக்கிறார்கள்.
இன்னமும் கூலிக்கு மாரடிப்பவராய், ஜெயலலிதாவின் கொள்கை பரப்பு துறையை குத்தகை எடுத்தவராய், சீமான் கலைஞரை குற்றம் சாட்டி அறிக்கை விடுகிறார். ஜெயலலிதா சீமான் இருவரின் நோக்கங்களை இந்த கட்டுரை தகர்க்கும் என்று நம்புகிறேன்.
பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. நேரு உட்பட பலர் காந்தியை சந்தித்து மூவரையும் விடுதலை செய்ய ஆங்கிலேய அரசிடம் கோரிக்கை வைக்க சொன்னபோது, அவர்கள் அகிம்ஸா தர்மத்திற்கு எதிரானவர்கள் என்று கூறி மறுத்துவிட்டார். உயிரை காக்கும் வாய்பிருந்தும் சொந்த புகழை காக்க முயன்ற காந்தி, ஆங்கிலேய அரசோடு சேர்ந்து குற்றம் சாட்டபடவேண்டியவர் விடுதலை பெற்ற இந்தியாவில். அதுபோன்ற வரலாற்று தவறை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செய்துவிடக்கூடாது.
இந்த கட்டுரையை ஒரு வேகத்தில் எழுதினாலும்.........
ஒரு தமிழனாய் என் மாநில முதலமைச்சரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்....தமிழர்கள்...பெரும்பான்மையினோர் விருப்பத்தை...வேதனையை உணர்ந்து தயவுசெய்து இந்த மூவரையும் மரணதண்டனையிலிருந்து காப்பாற்ற உங்களால் ஆன அனைத்து முயற்சியையும் எடுங்கள்...உங்கள் ஆதரவை தாருங்கள் என மீண்டும் மீண்டும் தாழ்மையுடன் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.... இதற்கு உங்களுக்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை...கருணை உள்ளம் மட்டும் இருந்தால் போதும் தாயே....
No comments:
Post a Comment