வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, August 19, 2011

ஜோசப் இடமருகு எழுதிய “பகவத் கீதை ஓர் ஆய்வு” மற்றும் “பிராமணமதம் தோற்றமும் வளர்ச்சியும்” ஒரு பார்வை...

இந்தியாவில் பகுத்தறிவு வாதத்தை ஒழிக்கவும் வஞ்சனையில் ஊறிய ஒரு சமூக நிலையை உருவாக்கவும் புரோகித வர்க்கம் உருவாக்கிய ஏராளமான மத நூல்களில் ஒன்றே பகவத் கீதை என்கிறார் ஜோசப் இடமருகு. அதுமட்டுமின்றி மானசீக அடிப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் மனிதனை வஞ்சிப்பதற்கான பல தந் திரங்களும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது போன்ற பல மாற் றுச் சிந்தனைகளை முன்வைக்கிறது அவரது “பகவத் கீதை ஓர் ஆய்வு” என்ற நூல்.

தமிழகத்தில் சமணர்களைக் கழுவேற்றிய சைவ சமயக் கொடுஞ் செயல்போல கேரளாவிலும் ஆட்சியாளர்களைப் பயன்படுத்தி பிராமணமதத்தினர் பவுத்தர்களின் நாவை அறுத்த அவச்செயலை “பிராமணமதம் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார் ஜோசப் இடமருகு.

(இலங்கையில் உள்ள) ஸ்ரீராம பாலம் முதல் இமயம் வரை புத்த மதத்தினரைக் கொல்லத் தயங்குகின்றவர்களை, அவர்கள் வயதானவர்களானாலும் இளைஞர்களானாலும் கொன்று விட வேண்டும் என்று குமரிலப்பட்டர் காலத்தில் உத்தரவிடப்பட்டதையும் இந்த நூலில் எழுதியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது.

வேதங்களில் உன்னதமான தத்துவங்கள் அடங்கியிருப்பதாக சிலர் தேவையற்று வாதிக்கின்றனர். பழங்கால மனிதனின் சிந்த னைகளும் நம்பிக்கைகளும் மாயத் தோற்றங்களும் பயமும் எல்லாம் சேர்ந்த ஒரு கலவையே வேதங்கள் என்று முடிந்த முடிவான ஆய்வையும் அவர் முன்வைக்கிறார்.

‘வேதங்கள் ஓர் ஆய்வு’ என்ற அவரது நூல் சனாதனங்களை அம்பலப்படுத்துவதாக உள்ளது. அதே சமயம் வேதத்தின் மனோக ரமான இலக்கிய போதம் தலை சிறந்தது. மொழியையும் வரலாற்றையும் படிக்கின்ற மாணவர்கள் வேதங்களைப் படிப்பது நல்லது என்ற நேர்மையான கருத்தையும் அவர் பதிவு செய்கிறார்.

இந்த மூன்று நூல்களும் இரண்டாம் பதிப்பு கண்டிருப்பதே இவற் றின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

“பகவத் கீதை ஓர் ஆய்வு”
பக். 152 ரூ. 80

“பிராமணமதம் தோற்றமும் வளர்ச்சியும்”
பக். 200 ரூ. 100

“வேதங்கள் ஓர் ஆய்வு”
பக். 120 ரூ. 60

3 நூல்களையும் எழுதியவர் ஜோசப் இடமருகு,
தமிழில் த. அமலா
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்
4/9, 4வது முதன்மைச் சாலை,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம், சென்னை - 600024
தொ.பேசி: 044- 24815474
----------- நன்றி தீக்கதிர்


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]