நவம்பர் 2, 2000 அன்று, மணிப்பூரிலுள்ள மாலோம் எனும் இடத்தில் பத்து குடிமக்களை, இந்திய இராணுவம் படுகொலை செய்ததைக் கண்டித்து, கவிஞர் ஐரோம் சர்மிளா தனது உண்ணாவிரதத்தைத் துவங்கினார். இந்தியக் குற்றவியல் சட்டம் 307-ன் படி அவர் தற்கொலை செய்ய முயன்றார் என நான்கு நாட்களில் அவரை கைது செய்தது இந்திய அரசு. இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்தது. அவர் சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க மறுத்து விட்டார்....கடந்த நவம்பர் 2, 2010 அன்றோடு மணிப்பூரைச் சேர்ந்த கவிஞரும், செயல் வீரருமான ஐரோம் சர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டத்தின் பத்தாவது ஆண்டு முடிவடைந்து போராட்டத்தை அவர் முடித்துகொள்வதாயில்லை...
நவம்பர் 21, 2000 அன்று, அவரது மூக்கில் பிளாஸ்டிக் குழாய் சொருகப்பட்டு, அவரது உடலில் திரவ உணவு வலுக்கட்டாயமாக செலுத்தப்பட்டது. கடந்தப் பத்தாண்டுகளாக இந்தத் திரவ உணவின் மூலமாகவும், உச்சகட்ட பாதுகாப்புடன் தனிமைச் சிறையில் வைத்து அவரது உயிரை இந்திய அரசு கையில் பிடித்து வைத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் அவர் விடுதலை செய்யப்படுவதும், உடனடியாக மீண்டும் கைது செய்யப்படுவதும் என தொடர் நிகழ்வாகியுள்ளது.....இன்னும் பதினோராவது ஆண்டாக அவரது போராட்டம் தொடர்கிறது...
2004 ல் தேசத்தையே உலுக்கிய ஒரு சம்பவத்தை மணிப்பூர் பெண்கள் மிக நூதனமான எதிர்கொண்டார்கள் அரசியல் போராளி மனோரமா பாதுகாப்பு படையால் பாலியல் பலாத்காரத்துக்கு பின் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளித்தது என்றால், மணிப்பூர் பெண்கள் பொங்கி எழுந்து தங்களது கோபத்தை வெளிப்படுத்திய விதம் அதைவிட அதிக அதிர்ச்சி அளித்தது. மணிப்பூரின் தலைநகரமான இம்பாலில் காங்களா கோட்டைக்கு முன்னால் அணிவகுத்து கூட்டமாக நின்றார்கள். ராணுவ வீரர்கள் அவர்களை அடக்கப்பார்க்கையில் தீடீரென ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நின்றார்கள். இந்தாருங்கள் எங்கள் உடலை எடுத்துகொள்ளுங்கள் என்று கத்தினார்கள். வீரர்கள் விக்கித்து போய் பேயைக் கண்டது போல இடத்தை விட்டு ஓடினார்கள்.அப்படிப்பட்ட பின்புலத்தில் இருந்து பூத்த மலர் தான் இந்த சர்மிளா. இன்னமும் அவர் உறுதி தளரவில்லை. அவரது தாய் பத்து ஆண்டுகளாக மகளை சந்திக்க செல்லவே இல்லை. நேரில் தாயை பார்த்ததும் உறுதி குலைந்துவிடுமோ என்கிற பயமாம்! எங்கு கண்டிருக்கிறோம் இத்தகைய பெண்களை.
இப்படி ராணுவப் படையினரின் சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெற கடந்த பத்து ஆண்டுக்கு மேல் உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் சர்மிள ஏன் ஊடகங்களின் கண்ணில் படவில்லை....விளம்பர பிரியர்கள் ரம்தேவ்கள், ஹசாறேக்கள் என்றால் வரிந்துகட்டி கொண்டு எழுது ஊடகங்கள் இந்த போராளியின் போராட்டம் பற்றி கண்டுகொள்ளாதது ஏன்? அதற்க்கு மேல் மத்தியஅரசும் ஏனோதானோ என்று இருப்பது ஏன்? மக்களை ஏமாற்றும் ஹசாரே, ராம்தேவ் என்றால் தலைப்புசெய்தி, தலையங்கம் தீட்டும் புண்ணாக்கு பத்திரிகைகள் இந்த செய்தி தெரியாது ஏன்?
"புது எழுச்சி!" ஊழலுக்கு எதிராக மக்கள் ஆதரவு அதிகரிப்பு : திருப்புமுனையை ஏற்படுத்துவாரா அன்னா ஹசாரே ? (----தினமல(ம்)ர், 07-08-2011) என்று ஏதோ பெரிய சமூகசேவை நோக்கத்தில் தலைப்பு செய்தி வெளியிடும் வெங்காயங்கள் இதுக்கு என்ன பதில் சொல்லுவார்கள்?
எது எழுச்சி? எது ஏமாத்து? என்று வாசிப்பவர்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்...
குறிப்பு: இந்த பதிவு "மகளிர் சிந்தனை" மாத இதழ் கட்டுரையில் இருந்து எடுத்து எழுதப்பட்டது.
No comments:
Post a Comment