இஃது உலகநீதிச் செய்யுள்களில் ஒன்று. இதன் பொருள் வருமாறு:-
கோயில் - அரசியல்;
இல்ல - இல்லாத ஒழுங்குமுறையமையாத ஊரில்
ஊரிலே குடியிருக்க வேண்டாம் - குடியிருக்க கூடாது என்பது பொருள்
கோயில் என்பது அரசன்; அரண்மனை, அரசியல் என்று பொருள் தருவதை பழம் தமிழ் நூற்கள் நன்றாக விளக்கும்.
"மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்
அறத்துறை விளங்கிய அந்தணர் பள்ளியும்"
என்ற சிலப்பதிகார அடிகளை நோக்குக!
அரசியல் அமைந்த இடம் என்றால் என்ன?
அகது அமையாத இடம் என்றால் என்ன என்பதை ஆராய வேண்டும்.
பண்டைத் தமிழ்நாட்டில் துறவிகள் ஒழுங்குமுறை வகுத்தார்கள். அதைத்தான் மன்னன் தன் ஆட்சிமுறைக்கு அடிப்படையாக வைத்து ஆண்டு வந்தான்.
இவ்வாறு ஒழுங்கு முறை வகுக்கபடாத காலம் ஒன்றிருந்திருக்கும். அக்காலத்து வாழ்ந்த மக்கள் காட்டுமிராண்டிகளாக இருந்திருப்பர். அதைத்தான் அரசியல் அற்ற இடம் என்பது.
அத்தகைய இடத்தில் மக்களின் வாழ்வு நல்லபடி நடக்கவே முடியாது.
ஆதலால்தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்றருளிச் செய்யப்பட்டது.
--- பாரதிதாசன் கட்டுரை, குயில், 18-10-1960
இப்படி ஒரு அர்த்தத்தில் சொன்ன உலகநீதி செய்யுளை நம்ம ஆட்கள் கடவுளை, மதத்தை பரப்ப பயன்டுத்தி கொண்டிருக்கிறார்கள்...ஏதும் அறியாத அப்பாவி மக்கள் கடவுள் என்று சொன்னாலே கண்ணை மூடிக்கொண்டு நம்புவதால் இப்படி எத்தனை புளுகுகள் புராணத்தில், வரலாற்றில் புதைத்து வைத்திருக்கிறார்களோ?
சிந்தியுங்கள் மக்களே!
No comments:
Post a Comment