வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, July 01, 2010

இந்திய அரசை, இலங்கைச் சுண்டைக்காய் அரசு கிஞ்சிற்றும் மதிப்பதில்லை

தமிழர்கள் என்றாலே சிங்களர்களுக்கு, இலங்கை சிங்கள அரசுக்கு ஒரு இனம் தெரியாத வெறுப்புதான். ஈழத் தமிழர்கள்மீது மட்டுமல்ல; தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் அவர்கள் எப்படி நடந்துகொண்டு வருகிறார்கள் என்பது உலகறிந்த ரகசியமாகும்.

சிங்களக் கடற்படை எத்தனை எத்தனை முறை தமிழக மீனவர்களைத் தாக்கி இருக்கிறது? சுட்டுக் கொன்று இருக்கிறது? கணக்கில் வந்ததும், வராததும் கொஞ்சம் நஞ்சமல்ல.

நேற்று மாலை ஏடுகளில் வெளிவந்துள்ள தகவல்கள் _ இந்திய அரசை, இலங்கைச் சுண்டைக்காய் அரசு கிஞ்சிற்றும் மதிப்பதில்லை என்பதைப் பச்சையாகவே அறிவிக்கக்கூடியதே.

ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்குத் தெரிவிப்பதும், மத்திய அரசு அதுபற்றிக் கவலை தெரிவிப்பது என்பதும் ஒரு சடங்காச்சாரமாகவே ஆகிவிட்டது. கேட்டுக் கேட்டுப் புளித்தும் போய்விட்டது.

இராமேசுவரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்களை 6 படகுகளில் வந்த சிங்கள கடற்-படையினர் தாக்கி இருக்கின்றனர். வலைகளை அறுத்தெறிந்துள்ளனர். விலை உயர்ந்த மீன்களைப் பறிமுதல் செய்திருக்கின்றனர். உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் தமிழக மீனவர்கள் தப்பியோடி வந்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் உளப்-பூர்வமான ஈடுபாடு இந்திய அரசுக்கு இருக்கு-மேயானால், சிங்களக் கடற்படை தமிழக மீன-வர்களிடம் வாலாட்டிப் பார்க்க ஆசைப்படுமா?

தமிழ்நாட்டுத் தமிழர்களை ஏமாற்றுவதற்காக அவ்வப்போது வார்த்தை ஜாலங்கள் காட்டுவதைத் தவிர இந்திய அரசு உருப்படியான முறையில் தமிழர்களுக்குச் செய்தது ஒன்றுமே இல்லை.

விடுதலைப்புலிகள்மீது உள்ள கோபத்தால் ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா இப்படி எல்லாம் நடந்துகொள்கிறது என்று சிலர் சொல்லலாம். அந்தக் கோபத்தில் நியாயம் இருக்கிறதா என்பது வேறு பிரச்சினை.

தமிழக மீனவர்களைத் தொடர்ந்து சிங்களக் கடற்படை சுட்டுக் கொன்று வருகிறதே _ தமிழக மீனவர்கள் மீன் பிடித் தொழிலை நிம்மதியாகச் செய்யவிடாமல் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறதே _ இதனைத் தடுக்க முடியாதா?

தமிழ்நாட்டு மக்களை தேசிய நீரோட்டப் பார்வையில் இந்திய மக்கள்தான் என்ற எண்ணம் இந்திய அரசுக்கு இருக்குமேயானால், சிங்களக் கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்கி அழிக்கும்போது கண்களைக் கருந்துணியால் மூடிக் கொள்ளுமா?

இறையாண்மை உள்ள ஒரு நாட்டில் நம் நிலைப்பாட்டைத் திணிக்க முடியாது என்று நாடா-ளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி முழங்கிய-துண்டே _ சிங்களக் கடற்படை, இறையாண்மை-யுள்ள ஒரு நாட்டுக்குச் சொந்தக்காரர்களான இந்தியத் தமிழர்களான மீனவர்களைத் தாக்குகிறார்களே _ சுட்டுக் கொல்லுகிறார்களே _ அவர்களின் பாரம்பரியமான தொழிலைச் செய்யவிடாமல் தடுக்கிறார்களே அப்பொழுது எங்கே போயிற்று இறையாண்மைப் பார்வை?

இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரிவினை மனப்பான்மை உரு-வாவதற்கே காரணம் இந்திய அரசின் கொள்-கையும், அணுகுமுறையும்தான் என்பதை மறுக்க முடியுமா?

பல்வேறு இனம், மொழி, பண்பாடு கொண்ட ஒரு துணைக் கண்டம்தான் இந்தியா!

இந்தியாவில் தங்கள் இனத்துக்கு, மொழிக்கு, பண்பாட்டுக்கு உரிய பாதுகாப்பு கிடையாது என்று நினைக்க ஆரம்பித்தால், இந்தியா என்ன ஆகும் என்று இந்திய அரசு பொறுப்புடன் சிந்திக்கவேண்டாமா? செயல்படவேண்டாமா?

இந்திய அரசின் ராஜ தந்திரத்துக்காக எம்மக்கள் பலி பீடத்தில் நிறுத்தப்படவேண்டுமா? பிரிவினையைக் கைவிட்டு விட்டோம்; அதே-நேரத்தில் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று அறிஞர் அண்ணா சொன்னதைத் தமிழர்கள் மறந்துவிடவில்லை.

இந்தியா, தன் மக்களைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்தவேண்டும் என்பதே நமது பொறுப்பான வேண்டுகோள்!

--------- விடுதலை தலையங்கம் (30.06.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]