வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label பகுத்தறிவு. Show all posts
Showing posts with label பகுத்தறிவு. Show all posts

Saturday, January 23, 2010

அர்ச்சகப் பார்ப்பனர்கள் இவரை எப்படி அவமதித்தனர்...

அர்ச்சகப் பார்ப்பனர்கள் இவரை எப்படி அவமதித்தனர் அவரே எழுதியிருக்கிறார், படியுங்கள்.


சென்னை அண்ணாசாலையில் விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டி-டியூட் என்கிற கலைப்பொருள் விற்பனை நிலையம் இருக்கிறது. இந்தியா முழுவதும் இருந்து தயாராகும் அற்புதமான கலைப்பொருட்களை விற்பனை செய்வதற்காக அரசு நடத்-துகிற நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள பூம்புகார் கலைக்கூடம் போன்ற அரிய இந்திய கலை அம்சங்களைத் தெரிந்து-கொள்ள வெளிநாட்டவர்கள் அங்கு விரும்பி வருவார்கள். தமது கலைஞர்-களின் படைப்புகளையும் அங்கே விற்பனை செய்வார்கள்.

அழகான ஓவியங்களை வரைந்து பிரேம் போட்டு கொண்டுபோய் அங்கு வைத்து விட்டு வந்தால் யாரா-வது வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படி விற்பனையானால் அந்த நிறுவனத்துக்கு 15 சதவிகிதம் கமிஷன் எடுத்துக்கொள்வார்கள். மீதித் தொகை முழுவதும் உரிய கலைஞர்களுக்கு கிடைத்து-விடும். நமது கோவில் ஓவியங்கள் வெளிநாட்டினரின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் எனக்கு இயல்பாகவே அதில் ஆர்வம் மிகுதியாக இருந்ததால், என் படைப்புகளை அங்கு விற்பனைக்கு வைப்பேன் .அப்படி வைப்பதற்காக உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை வரைய தஞ்சாவூருக்கே புறப்பட்டேன். ரெயிலில் இருந்து இறங்கி ரொம்ப தூரம் ஊருக்குள்ளே நடந்தேன். ரெயிலடிக்குப் பக்கத்தில் இருக்கும் லாட்ஜுகளில் கட்டணம் அதிகமாக இருக்கும் என்பதால் கொஞ்சம் உள்ளே போனதும் மங்களாம்பிகா லாட்ஜ் என மங்கிய பெயர் பலகை ஒன்று இருந்தது. அந்த விடுதி உள்ளே சென்று மானேஜரிடம் அறை வாடகையை விசாரித்தேன் ஒரு நாளைக்கு எட்டு ரூபாய் என்றார் அவர்,

நான், அதைவிட குறைவான தொகைக்கு அறை எதுவும் இல்லையா? என்று கேட்டேன். என்னை மேலும் கீழுமாக நோட்டமிட்ட அவர், நாலு ரூபாய்க்கு ஒரு ரூம் இருக்கு. ஆனா, அது கொஞ்சம் மோசமா இருக்கும் என்று சொன்னார்.

அதைவிட குறைவான வாடகைக்கு அறை இருக்கிறதா? என்று நான் மீண்டும் கேட்க அவருக்கு சுள்ளென்று கோபம் வந்துவிட்டது ஏதோ விளையாடுகிறேன் என்று நினைத்து ஒரு மாதிரியாக பார்த்தார்.

அதை விட குறைச்சல்னா பாத்ரூம் தான் இருக்கு பரவாயில்லையா-? என்று அவர் கேட்டதும் அதை ரெண்டு ரூபாய்க்கு தருவீங்களா? எனக்கு பாத்ரூம் போதும். குளிக்க, டாய்லட் போக ஒரு இடம். ராத்திரி ஏதாவது திண்ணையில் கூட படுத்துக்குவேன் என்று சொன்ன பிறகே என் உண்மை-யான நிலைமை அவருக்குப் புரிந்தது. நாலு ரூபாய் அறையை எடுத்துக்கோ உன்னால என்ன முடியுதோ அதைக் கொடுப்பா என்று சொல்லி விட்டார். அப்போதைக்கு அவர் ஆபத்பாந்தவ-னாகவே என் கண்களுக்னுகுத் தெரிந்தார். ஓவியம் வரைய காலை ஏழு மணிக்-கெல்லாம் கோவிலில் இருந்தால்தான் கோபுரத்தின் லைட்டிங் நன்றாக இருக்கும். மாலை வரை ஒரே அமர்வில் வரைந்து முடிக்கவேண்டும். காலையில் ஆறரை மணிக்கு இரண்டு இட்லி, ஒரு வடையை அவசரமாக சாப்பிட்டுவிட்டு வரைய கிளம்பினால் மாலை ஆறு மணிக்குத்தான் கோவிலைவிட்டு வருவேன். மதிய உணவிற்கு நேரமும் இல்லை.... கையில் காசும் இல்லை!

இரண்டாவது நாள் மாலை ஆறு மணிக்கு ஓட்டலுக்கு சென்று உருளைக்கிழங்கு போண்டா கேட்-டேன். ஆனால், மசால்தோசையை கொண்டுவந்து வைத்தார் சர்வர். நான் சாப்பிடவில்லை. வேறு யாருக்கோ சொன்னது இங்கே வந்திருக்கு. நான் போண்டாதான் கேட்டேன் என்று சொன்னேன். அவரோ, பரவா-யில்லை சாப்பிடுங்க என்றார்.

எனக்கு தோசை வேண்டாம் போண்டாவே போதும் என்றேன் மீண்டும். ஏன் ஒரு மசால் தோசை சாப்பிடவா வயித்துல இடமில்லை-? சும்மா சாப்பிடுங்க என்றார் சர்வர், பிடிவாதமாக ! எனக்கு கோபம் வந்து-விட்டது. அஞ்சு மசால் தோசைகூட சாப்பிடுவேன். என்கிட்ட இப்ப இருக்-கிற காசுக்கு என்ன சாப்பிடணும்னு எனக்குத் தெரியும். போண்டா தர-முடியுமா .... இல்லைன்னா நான் கிளம்-பட்டுமா? என்று ஆத்திரத்தோடே எழுந்தேன். அவரோ, சின்ன முதலாளி என்று அவசரமாக பதறி என்னை தடுத்தார். நான் திகைப்பாக பார்த்தேன். என்னை அடையாளம் தெரியலையா சின்ன முதலாளி? பொள்ளாச்சியில உங்க மாமா ஓட்டல்ல வேலை பார்த்திட்-டிருந்தேன். நீங்க கல்லாவுல வந்து உட்-காருவீங்க. அப்புறம் படிக்க பட்டணத்-துக்கு போயிட்டதா சொன்னாங்க.

நான் இப்ப தஞ்சாவூர்ல இந்த ஓட்டல்லதான் வேலை பார்க்கறேன். பிரியத்துலதான் உங்கள சாப்பிட-சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க என்று நெகிழ்ச்சியோடு சொல்லி, என்னை பிடிவாதமாக உட்கார வைத்தார். எனக்கு சிலிர்த்துப் போய்விட்டது. தர்மம் தலைகாக்கும் என்பார்களே, அது மெத்தவும் சரிதான்! என்று தோன்றியது. நான் மறுக்க முடியாமல், அவர் வைத்த மசால்தோசையை சாப்பிட்டு முடித்தேன்.

திருச்சி மலைக்கோட்டை

நான் எப்பவும் ஒரு ரெயில் என்ஜின் மாதிரி தனித்து இயங்குவேன். என்-னோடு எத்தனை ரெயில் பெட்டிகள் வேண்டுமானாலும் இணைத்துக்-கொள்ள-லாம். பெட்டிகள் இல்லை-யென்றாலும் என்ஜின் தனியாக பய-ணம் செய்வதுபோல் நானும் என் பயணங்களில் யாருக்காகவும் காத்-திருக்கமாட்டேன்.

திருச்சி மலைக்கோட்டையை ஓவியமாக வரைய சில நண்பர்கள் வருவதாக இருந்தார்கள். கடைசி நேரத்-தில் அவர்கள் வரமுடியாமல் போனது. என் பயணத்தைத் தள்ளிவைக்க சொன்னார்கள். ஆனால் அதற்கு நியாய-மான காரணம் எதுவும் இல்-லாததால், நான் மறுத்துவிட்டேன். தனியாகவே திருச்சிக்கு கிளம்பினேன்.

அங்கே அலைந்து திரிந்து கிருஷ்ண பவன் லாட்ஜ் என்கிற தங்கும் விடுதியைக் கண்டுபிடித்தேன். அங்கு தான் திருச்சியிலேயே இரண்டரை ரூபாய்க்கு அறை வாடகைக்குக் கிடைத்தது.

பல இடங்களில் உட்கார்ந்து மலைக்கோட்டையை வரைந்து பார்த்-தேன். எங்கும் சரியான கோணம் (ஆங்கிள்) கிடைக்கவில்லை. மெயின் கார்டு கேட் அருகில் இருந்த கல்வி அதிகாரி (டி.இ.ஓ) அலுவலகத்தில் இருந்து சரியான ஆங்கிள் கிடைக்கும் என்று எனக்கு மனதில் தோன்றியது. அங்கே போனேன். மே மாத உச்சி வெயில் கொளுத்தி எடுத்தது. அந்த அதிகாரியிடம் அனுமதி வாங்கிக்கொண்டு மொட்டை மாடிக்கு போனால். தீக்குழியில் மிதித்தது போல தரை கொதித்தது. ஒதுங்குவதற்கு மருந்துக்கும் கூட நிழலே இல்லை. காலை பத்துமணிக்கு போனவன் தொடர்ந்து மூன்று மணி நேரமாக தகிக்கும் வெயிலில் நின்றபடியே மலைக்கோட்டையை ஓவியமாக வரைந்துகொண்டு திரும்பிய போது அந்த அதிகாரிக்கு நன்றி சொல்லப் போனேன். தம்பி... நீ யாருப்பா? என்று கேட்டார். காலையில உங்ககிட்ட அனுமதிகேட்டுவிட்டு ஓவியம் வரைய மாடிக்குப் போனேனே, அந்தப் பையன்தான் சார் என்றேன், அவர் பதறிவிட்டார்.

வெள்ளை வெளேர்னு பிரிட்ஜில வெச்சிருந்த ஆப்பிள் பழம் மாதிரி மாடிக்கு போன பையனா நீ? இப்படி முகமெல்லாம் வாடி வதங்கி வந்திருக்-கியேப்பா... ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டு வெயில்ல நிக்கணும்? எங்கிட்ட கெட்-டிருந்தா மலைக்கோட்டை போட்டோ வையே தந்திருப்பேனே-? என்று ஆதங்கப்பட்டார். சாமியை நேர்ல பார்க்கிறது நல்லதா-? போட்டோவுல பார்க்கிறது நல்லதா?ன்னு நான் சிரித்துக் கொண்டே கேட்டேன். அவர் நீ நல்லா பேச வேற கத்திருக்கே. யார் பெத்த புள்ளையோ.. உடம்பைப் பார்த்துக்கப்பா என்று அன்பாக அறிவுரையும் வழங்கினார். எனக்கு அதிக வியப்பாக இருந்தது.

ஸ்ரீரங்கத்தில் அவமதிப்பு

அடுத்தோ எனக்கு அவமதிப்பு காத்திருந்தது. ஸ்ரீரங்கம் கோபுரத்தை-யும் ஓவியமாக வரைய நினைத்து, புஷ்கரணி தெப்பக்குளம் பக்கம் போனேன். கோபுரத்தில் சூரிய வெளிச்-சம் நேரடியாக படுகிற கோணம் அங்கிருந்துதான் கிடைத்தது. ஆனால் கோவில் வளாகத்தில் பிரகாரத்திற்கு அருகிலேயே நின்று வரைய வேண்-டியது இருந்தது. அப்போது கோவில் அர்ச்கர் ஒருவர் வந்தார். என்னிடம் குலம் _ கோத்திரங்களை விசாரித்தார். என் பேச்சு, உடை, முக பாவனை-களை வைத்து நான் பிராமணப் பையனில்லை என்று தெளிவாகத் தெரிந்ததும் அவரின் முகம் போன போக்கே சரியில்லை. முறையா அனுமதி எதுவும் வாங்காம கோவிலுக்குள்ள படமெல்லாம் வரையக்கூடாது என்று கடிந்தபடி சொன்னார்.

நான் ஓவியக் கல்லூரி மாணவன். படம் வரைவதைத்தவிர வேறொன்-றும் செய்யப்போவதில்லை என்று பவ்வியமாக சொன்னேன், கெஞ்சிப் பார்த்தேன். அவர் சம்மதிக்கவில்லை.

இத்தனை சொன்ன பிறகும் நீங்கள் கோபப்படுவது நியாயமில்லை என்று பணிவாக பேசிப் பார்த்தேன். அவர் காதிலேயே வாங்கவில்லை; மாறாக அவரது கோபம் கூடியது. ஓ... நீ நியாய தர்மம் வேற பேசுறீயா? இரு வர்றேன் என்று ஆவேசமாக உள்ளே போனவர் வேறு சில அர்ச்சகர்களுடன் வந்தார்.

என்னை அடித்து விரட்டாத குறைதான்! அத்தனை அவமதிப்பு அவர்-களிடம் முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டு ஏமாற்றத்தோடு அங்-கிருந்து கிளம்பினேன். கோவிலை-விட்டு வெளியேறி தெருவில் அமர்ந்து கோபு-ரத்தை படமாக வரைந்து முடிந்தேன்.

பெரியார்மீது மதிப்பு

தந்தை பெரியார் மீது எனக்கு அப்போதுதான் பெரிய மரியாதை வந்தது. அவர் ஏன் இவர் மாதிரியான பிராமணர்களை வெறுத்தார் என்பதன் அர்த்தமும் எனக்கு அனுபவப்-பூர்வமாக விளங்கியது.

அந்தக் கோவிலையும், ஆண்ட-வனையும் அவர்கள் அனுமதியின்றி யாரும் நினைக்கக்கூடாது என்று கருதிய அந்த அர்ச்சகரின் போக்கு என்னைக் கடுமையாகப் பாதித்தது. படிப்பறிவு இல்லாத சாதாரண கிரா-மத்து பாமர மக்கள் கூட எனக்கு படங்-கள் வரைய இடம் தந்து, உண-வளித்து, உபசரித்து அனுப்பிய எத்-தனையோ சம்பவங்கள் உண்டு. ஆனால், மெத்தப் படித்து தமிழ் மண்ணின் முக்கிய கோவிலில் அர்ச்-சகராக இருந்த அவர் தீண்டாமை நோக்கத்தோடு என்னிடம் அப்படி நடந்து கொண்டது புதிய புதிரான அனுபவமாகவே எனக்கு இருந்தது. அதை நினைத்தால் இப்போதும் நெஞ்-சம் கனக்கத்தான் செய்கிறது.

நன்றி:
ராணி 24.1.2010

Friday, January 22, 2010

பலே, பலே! கட-வு-ளுக்கே அய்.எஸ்.ஓ. 9001_2008 அங்கீகாரம்!

கோவை காந்தி-புரத்தில் சித்தி விநாயகர் என்ற ஒரு கோயில்; திருவாச்சி, பார்வை தகடு, மூஷிக வாகனத்துக்கு தங்கக் கவசம் அணியும் பணி நிறைவுறும் நிலை-யில் உள்ளது.


இந்து அறநிலையத்-துறையின் கட்டுப்பாட்-டில் உள்ள இந்தக் கோயிலுக்கு இதுவரை எந்த கோயிலுக்கும் இல்லாத அய்.எஸ்.ஓ. 9001_2008 (International Standard Organisation) தரச்சான்று அளிக்கப்-பட்டுள்ளதாம்.

பலே, பலே! கட-வு-ளுக்கே ஓர் அமைப்-பின் அங்கீகாரம் தேவைப்-படு-கிறது என்-பது நினைத்து நினைத்து நகைக்கவேண்-டிய படு ஜோக்!

தரம் என்றால் அதற்கு விளக்கம் என்னவோ! இந்த சித்தி விநாயகரிடம் எது கேட்-டாலும் அது கறாராகக் கிடைத்துவிடும் என்ற உத்திரவாதமோ! அல்-லது பக்தர்கள் கேட்பதைச் சித்தி விநாயகர் கண்டிப்-பாக கொடுத்தே தீர-வேண்டும் என்ற கட்ட-ளையா? அப்-படி கொடுத்து அரு-ளாவிட்-டால் சித்தி விநா-யகர் மீது ஒழுங்கு நட-வடிக்கை (Discipilinary Action) எடுக்கப்படும் என்ற நிபந்தனையா?

இந்த நிபந்தனை-களுக்கு சித்தி விநாயகர் கட்டுப்படாவிட்டாலோ அல்லது கடமை தவறும் பட்சத்திலோ கொடுத்த அங்கீகாரத்தை ரத்து செய்யும் நிலைப்பாடா?

இவற்றைப்பற்றியெல் லாம் விளக்கினால் நல்லது.

சரி... கோவை காந்தி நகர் சித்தி விநாயகருக்கு இந்த அந்தஸ்து அளிக்-கப்பட்டால் மற்ற கோயில்கள், கடவுள்-களின் நிலை என்ன?

இவையெல்லாம் தரச் சான்றுக்கு லாயக்கு இல்லாத மட்டக் கிளாஸ் கோயில்களா _ கடவுள்-களா? பக்தர்கள் இந்த வகை-யில் சிந்திக்கத்-தானே வேண்டும்.

உலக மயம் என்ற ஒரு விஷயம் வந்தாலும் வந்தது _ கோயில்கள், கடவுள்கள்வரை இது-போன்ற சமாச்சாரங்கள் நுகர்வோர் கலாச்-சா-ரத்தின்கீழ் வரவேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டு விட்டது.

எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர் கடவுள்; அவரை எந்த சக்தி-யாலும் கட்டுப்படுத்த முடி-யாது என்பதெல்-லாம் பழைய கதை.

இனிமேல் எந்தக் கோயில் அய்.எஸ்.ஓ. முத்திரை பெற்றுள்ளதோ, அந்தக் கோயிலுக்குத்-தான் செல்லுவது என்ற நிலை ஏற்பட்டால், ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடவுளைக் கேலி செய்யும் இந்த முறை கூடாது என்று எந்தக் கடவுளிடம் போய் பக்-தர்கள் முறையிடுவார்-களோ தெரியவில்லை.

பக்தி, ஒரு பிசினஸ் என்று சொன்ன பெரிய-வாளின்பெரிய வாய்க்கு ஒரு கட்டுக் கரும்பைக் கொடுத்துத் தின்ன சொல்லலாம், பலே! பலே!!

-விடுதலை (22.01.2010) மயிலாடன்

Wednesday, January 20, 2010

முட்-டாள்கள் என்ன இந்தியாவுக்கு மட்-டுமே சொந்தமா, என்ன?

அவினாசி மற்றும் திருமுருகன்பூண்டி சிற்பக் கூடங்களில் உருவாக்கப்-பட்ட அர்த்த நாரீஸ்வரர் சிலை லண்டனுக்கும், பிரித்யங்கரா தேவி சிலை தூத்துக்குடிக்கும் அனுப்-பப்படுகின்றன என்றும், இந்தியாவில் தயாரிக்கப்-படும் சாமி சிலைகள் பல நாடுகளுக்கும் அனுப்பப்-படுகின்றன என்றும் படங்-களோடு சாங்கோபாங்க-மாக ஒரு நாளேடு செய்தி வெளியிட்டுக் கூத்தாடு-கிறது.


கடவுள் இல்லை, இல்லவேயில்லை என்று நீங்கள் என்னதான் கரடி-யாகக் கத்தினாலும் வெளி-நாடுகளுக்குக்கூட இங்கி-ருந்து கடவுள் சிலைகள் அனுப்பி வைக்கப்படுகின்-றன என்று குத்திக்காட்டு-வதுதான் இப்படி செய்தி-களை வெளியிடுவதன் நோக்கமாகும்.

தந்தை பெரியார் அவர்-கள் ஒருமுறை சொன்னது-போல, முட்-டாள்கள் என்ன இந்தியாவுக்கு மட்-டுமே சொந்தமா, என்ன?

ஒன்றை இந்த இடத்-தில் சுட்டிக்காட்டியாக-வேண்டும். இந்தச் சிலை-கள் கலைவண்ணத்துடன் உயரிய திறனுடன் உரு-வாக்கப்பட்டுள்ளன என்பது-தான் உண்மையே தவிர, இந்தச் சிலைகளுக்-குச் சக்தியுண்டு; இவை வெறும் உலோகங்கள் அல்ல _ கடவுள்கள்தான் என்று சத்தியம் செய்வார்-கள் பக்தக்கோடிகள்.

இதுபற்றி பிரபல சிற்பி கணபதி ஸ்தபதி என்ன கூறுகிறார் என்று பார்க்க-லாமா? குமரிமுனையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையை உருவாக்கிக் கொடுத்த மேதையவர் _ அத்தகையவரே என்ன சொல்லுகிறார்?

ஒரு கடவுள் சிலையை வடிவமைக்கிற-துன்னா சும்மாவா? யார் பார்த்திருக்காங்க கட வுளை? அவர் எப்படி யிருப்பார்னு யாருக்குத் தெரியும்? எங்களால் மட்-டும் எப்படி அத்தனைத் தத்ரூபமா ஒரு கல்லுல அவரைக் கொண்டுவர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனைப் பரவசப்-படறீங்க?

நீங்க அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டு வரணும்னா ஒரு கல்லு, சிலையா மாற-ணும். அந்தக் கல்லுக்கு உயிர் வரணும். அப்பத்-தான் கையைக் கூப்பி வணங்க முடியும். அந்த உயிரை யாரு கொடுக்-குறாங்க? நாங்கதானே? எங்ககிட்ட அப்படி என்ன-தான் வித்தை இருக்-குன்னு தெரிஞ்சுக்கவேண்-டாமா?

(கல்கி பேட்டி, 11.6.2006).

இதன் பொருள் என்ன?

ஒரு கல்லை சிலை-யாக்கி, அதில், தன்னிடம் உள்ள கலைத் திறனால் ஈர்ப்புக் கவர்ச்சியை ஏற்-படுத்துபவர் சிற்பி _ அவ்-வளவுதானே தவிர, அதில் கடவுள் சக்தியாவது _ வெங்காயமாவது! எதுவும் கிடையாது என்பது இப்-பொழுதாவது விளங்கு-கிறதா? இல்லையா?

ஆக, கடவுளை க(ல்)-பித்தவர் சிற்பிதானே _ மனிதன்தானே!

- மயிலாடன் விடுதலை (20.01.10)

Monday, January 18, 2010

கடவுள்கள் எப்படி தோன்றினார்கள்...

மக்களின் மனதில் தெய்வங்களை பற்றியும் , பேய் பிசாசுகளை பற்றியும் எழும் எண்ணங்களுக்கு காரணம் என்ன என்பதை நம்மால் அறிய முடியும். அதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. அவைகளை உண்டு பண்ணியவன் மனிதன். தன்னை சுற்றிலும் சூள்ந்துள்ளவைகலையே தான் படைத்த கடவுளுக்கு மனிதன் அமைத்திருக்கிறான். மனிதன் தனக்கு இருக்கும் கை,கால்களை போலவே ,தான் படைத்த கடவுளுக்கும் அமைத்தான் . கண்,காது,மூக்கு முதலியவைகளையும் வைத்திருக்கிறான்.அந்தந்த நாட்டினர் அவரவர்கள் படைத்த கடவுள்களுக்கு அவர்கள் பேசும் மொழியையே கற்பித்தனர். அந்த நாட்டிற்கு எந்த அளவு பூலோக சரித்திரம் தெரியுமோ, எந்த அளவுக்கு வான சாஸ்திரம் திரியுமோ, அந்த அளவுக்குத்தான் அந்தக் கடவுள்களும்,பிசாசுகளும் தெரிந்து கொள்ளமுடிந்தது. எந்த கடவுளும் தன்னைப் படைத்த மனிதனைவிடச் சற்று அதிகமான புதியுள்ளவர்களாய் இருக்கவில்லை.


ஆபிரிக்காவில் நீக்ரோக்கள் தங்கள் கடவுள்களுக்கு தங்களை போலவே கருத்த உடலும், சுருண்ட மயிரும், வைத்து உண்டாக்கினார்கள். மஞ்சள் நிற உடம்புடன், கருமையான பாதம் பருப்பு போன்ற கண்களுடன், மங்கோலியர்கள் தங்கள் கடவுள்களை படைத்தது கொண்டனர். யூதர்கள் தங்கள் கடவுள்களுக்கு உருவம் உண்டாக்க கூடாது என்று எண்ணம் கொண்டார்கள். அப்படி அவர்களுக்கு எண்ணம் இல்லாவிட்டால் அவர்களும், அவர்களது கடவுளான யேகோவாவிற்கு நீண்டு தொங்கும் தாடியும், நீண்ட முகமும் கதியை போன்ற மூக்கும் உண்டக்கியிருப்பர்கள். பாவம்! கிரக்கர்களின் பெரும்தெய்வம் ஜீவ்ஸ். இதை பற்றி நான் சொல்லி தெரிந்து கொள்ளும் நிலைமையில் நீங்கள் இருக்கமாடிர்கள். எவோ - இந்தக் கடவுள் ரோமாபுரியின் சட்டசபையில் ஓர் உறுப்பினர்.

எகிப்பது நாட்டு கடவுள்கள் அந்த நாட்டு அன்பு மக்களை போலவே குளிர்ச்சியான முகமும், அமைதி நிறைந்த பார்வயுமுடயவனவாக விளங்கின. குளிர் பிரதேசமான வடக்கிலோ தங்கள் கடவுள்களுக்கு கம்பளிகளை போர்த்து வைத்தனர். உஷ்ண பிரதேசங்களில் கடவுள்கள் நிர்வாணமாய் நின்றன.இந்திய தெய்வங்கள் யானைகளின் மேல் அமர்ந்து கொண்டு பவனி வரும். தீவுகளில் உள்ள தெய்வங்கள் நீஞ்சலில் தேர்ந்தவைகள்.

இந்த கடவுள்களை அந்தந்த நாட்டினர் செதுக்கியும் , எழுதியும் வைத்திருக்கின்றனர். இந்த பொம்மைகளை பாமர மக்கள் கடவுள் என சொல்லி வழிபடுகின்றனர். அதனாலே தான் இந்த பொம்மை கடவுள்களுக்கு தங்கள் பலிகளையும், வணக்க வழிபாட்டையும் செலுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு நாட்டினரும் தாங்கள் படைத்த கடவுள்களுக்கும் தங்களுடைய குனதிசயன்களே கற்பித்தனர். இதிலிருந்து கடவுள்கள் எப்படி தோன்றினார்கள் என்பதை எளிதாக அறிந்துகொள்ளமுடிகிறது.

-- இங்கர்சால் (கடவுள்கள் கோவில்கள் நூலிலிருந்து)

Thursday, January 07, 2010

வெறுக்கத்தக்கதே பார்பனியம் (பார்ப்பனப் ப்ரோகிதன் கூறும் மந்திரம் என்ன? ) - 2


மணமகளை பார்த்து பார்ப்பனப் ப்ரோகிதன் கூறும் மந்திரம் என்ன?

"ஸோம :ப்ரதமோ விவித
கந்தர்வோ விவித
உத்தர :த்ருதீயோ அக்ஞிஷ் டேபதி;
துரியஸ்தே மனுஷ்யஜா "

இதன் பொருள்

"சோமன் முதலில் இவளை அடைந்தான் பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான்.உன்னுடைய மூன்றாவது கணவன் அக்னி.உன்னுடைய நான்காவது கணவன் மனித சாதியில் பிறந்தவன்."

ப்ரோகித கல்யாணத்தில் ஒரு பெண் விபசாரியாகப்படுகிறாள் என்பதற்கு இது ஒன்று போதாதா.?ஆரிய கலாசாரத்தில் ஐவர்க்கும் தேவி அழியாத பத்தினி என்பது வேறு கதை!அதை தமிழர்கள் ஏற்கமுடியுமா ?

புரோகித பார்பான் சொல்லும் மந்திரத்துக்கு பொருளாவது புரியுமா?

பன்மொழிப் புலவர் நாவலர் சோமசுந்தர பாரதியார் பங்கேற்ற ஒரு புரோகித திருமணத்தில் புரோகித பார்ப்பன் கருமாதி மந்திரத்தை சொல்லி கொண்டிருக்க -அதே இடத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் குரல் கொடுத்து தடுத்த நிகழ்ச்சிகள் எல்லாம் உண்டே!

ஆரிய கலாசாரத்தில் பிரமம்,பிரசபதியம்,அருஷம்,தெய்வம்,காந்தர்வம்,ஆசுரம் இராக்கதம்,பைசாசம் என்று திருமணங்கள் எட்டு வகைப்படும்.

இந்த எண்வகை திருமணத்துப் பெண்ணுக்கென்று எந்தவித மான உரிமையும் கிடையாது .பெண் என்பவர் ஒரு ஜடப் பொருள்.

அதிலும் பைசாசம் மணம் என்பது ஒரு கன்னிகை தூங்கும் பொது ,மது மயக்கத்தால் மயங்கி இருக்கும்போதும்,அல்லது புத்தி சுவாதினம் இல்லாமலிருக்கும்போதும் ,அவளை மனச் சம்மதம் இல்லாமலே வலுவில் புணர்ச்சிசெய்வதுதானாம்.

(நூல்:வெறுக்கத்தக்க பிராமணியம்-கி.வீரமணி-பக்கம் 84)

யன்மேமாத பிப்ர மமாத

யச் சாரான்னுவ் ரதம்;
தன்மே ரேத பிதாவ்ருஞ்க்த
மாபூரன் யோப பதய தாம்:
பித்ருப்ய ஸ்வதா விப்ய: ஸ்வதா

இதன் பொருள்:-

"எனது தாய் பதிவிரதா தருமங்களை முழுவதுமாக அனுச்டிக்காமல் அதன் காரணமாக நான் பிறந்திருந்தால், இந்த நெருப்பில் நான் இடும் பிண்டத்திற்கு உரிமை கோரி எனது சொந்த தகப்பனார் வருவார். அப்படி அவர் வராமல் தடுத்து நான் எந்த தகபனாருக்கு இந்த சிரார்த்தத்தை செயிகிறேனோ அவர் அதாவது எந்த தாயின் கணவர் இந்த பிண்டத்தை பெறவேண்டும்"

தந்தைக்கு மகன் சிரார்த்தத்தை செய்யும்போது தாயை விபச்சாரி யாக்கும் இந்த பார்பனியம் வெறுக்கத்தக்கதா - இல்லையா? அறிவுடையோர் சிந்திக்கட்டும்.

வெறுக்கத்தக்கதே பார்பனியம்.....

பெரியார் அவர்களுக்கு அரணாக இருந்து எதிரிகளைப் பந்த்தாடியவர்



பணம், காசைப்பற்றியோ தண்டனைகளைப் பற்றியோ, துன்பம் தொல்லைகளைப்-பற்றியோ சிறிதும் கவலை கொள்ளாமல் தலைவரால் எந்த உத்தரவு பிறப்பிக்கப்-படுகிறதோ அதற்கு இசை-யவே படையை நடத்திய தளபதி என்று குடிஅரசு இதழால் பாராட்டு வழங்கப்-பட்ட மாயவரம் சி. நடராசன் அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (1902).


பள்ளிப் படிப்பு அதிகம் கிடையாது. அவர் சென்-னையில் ஒரு ஆங்கிலோ இந்தியன் வீட்டில் தங்க நேரிட்ட சூழ்நிலையில் சரளமாக ஆங்கிலம் பேசக் கூடியவர். ஆங்கிலத்திலி-ருந்து மொழி பெயர்த்து கட்டு-ரைகளை குடிஅரசுக்-குத் தந்தவர்.

அவர் தொண்டின் தனித் தன்மை என்ன? பட்டுக்-கோட்-டையில் தந்தை பெரியார் பொதுக்கூட்டம். அங்கு மாயவரம் நடராசன் வந்திருந்தார். அவரைப் பார்த்து அஞ்சாநெஞ்சன் அழகிரி எதற்காக இவ்-வளவு தூரம் வந்துள்ளீர்-கள்? என்று வினா தொடுக்க, பெரியார் கூட்டம் என்றால் நான் வந்து விடு-வதுதானே வழக்கம் என்று கூறிட, மற்ற ஊர்களில் பெரி-யார் பாதுகாப்புக்காக வரு-வது சரி, பட்டுக்கோட்டை-யில் பெரியாரை எதிர்ப்ப-வர்-களுக்குத்தான் பாதுகாப்புத் தேவைப்படும் என்று அழகிரி சொன்னார் என்பதி-லிருந்து மாயவரம் நடராசன் அவர்களின் பணி எத்தகை-யது என்பதைத் தெரிந்து கொள்ளலாமே!

அந்தக் காலத்தில் தந்தை பெரியார் பேசுகிறார் என்றால், எதிரிகள் பல கல-வரங்களில் ஈடுபடுவார்கள்; அந்த நேரத்தில், எல்லாம் மாயவரம் சி. நடராசன் அவர்-கள் தந்தை பெரியார் அவர்களுக்கு அரணாக இருந்து எதிரிகளைப் பந்-தாடுவார். நாகைமணி, திரு-வாரூர் தண்டவாளம் அரங்-கராசு என்ற ஒரு படையே அவ்வாறு இருந்ததுண்டு.

சர்க்கஸ் கம்பெனியில் ஓராண்டுகாலம் சாசகங்கள் புரிந்து, பின் இராணுவத்-துக்குச் சென்று, நாடு திரும்பி, காங்கிரசிலும் சேர்ந்து, தந்தை பெரியார் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டை விட்டு வெளி-யேறியதையொட்டி தந்தை பெரியாருடன் நடந்தவர் மாயவரம் நடராசன்.

வெற்றி முரசு என்ற ஏட்டையும் நடத்தியுள்ளார். மாயவரத்தில் இம்பீரியல் பிரஸ் இவருக்குச் சொந்த-மானது.

தந்தை பெரியார் அய்-ரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்த நிலையில், அன்னை நாகம்மையார் உடல்நலவுற்ற நிலையில், அவர்களை மாயவரம் அழைத்து வந்து தம் வீட்-டில் தங்க வைத்து வைத்திய உதவிகளைச் செய்தவர்.

மகன் லெனின், மகள் மங்கையர்க்கரசி, துணைவர் மீனாம்பாள்.

மகன் சென்னையில் பிர-பல ஆடிட்டராகப் பணி-யாற்-றிக் கொண்டு இருக்கிறவர்.

35 வயதிலேயே தந்தை பெரியார் அவர்களின் மெய்க்-காப்பாளராக நம்பிக்கை நாயகனாகவும் விளங்கிய மாயவரம் நடராசன் ஒரு தலைவருக்கு ஒரு தொண்-டர் எப்படி என்பதற்கான இலக்கணத்தைச் சமைத்துக் கொடுத்த மாவீரர் ஆவார்! வாழ்க நடராசனார்!

- விடுதலை (07-01.2010) மயிலாடன்

குறிப்பு: மயிலாடுதுறையில் (9.3.2002), மாயவரம் நட-ராசன் அவர்களின் நூற்-றாண்டு விழா தமிழர் தலை-வர் தலைமையில் வெகு-சிறப்பாக திராவிடர் கழகத்-தின் சார்பில் கொண்டாடப்-பட்டது.

Wednesday, January 06, 2010

இராமகோபாலன்-கள் காட்டுக் கூச்சல் போடுகிறார்

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் 2010 ஜூன் மாதம் நடைபெற உள்ளது. தமிழர்கள் என்று தங்களை உண்மையில் கருதிக் கொள்வோர் இதனை ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்-கின்றனர்.


இதன்மூலம் உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்கள் மத்தியில் இனவுணர்வும், தமிழ் உணர்வும், தமிழ் பண்பாட்டு உணர்வும் மேலும் சிறப்பாக மலர்ந்து மணம் வீசும் வாய்ப்பு ஏற்படும்.

தமிழைக் கால வளர்ச்சிக்கு ஏற்ப மேலால் எடுத்துச் செல்ல ஆக்க ரீதியான முடிவுகள் மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது. தமிழ் எழுத்துக்களை மேலும் எண்-ணிக்கையில் குறைக்கும் சீர்திருத்தம் குறித்தெல்லாம் சிந்திக்க முடியும். தமிழ்நாட்டுக்குள்ளும், வெளிநாடு-களில் வாழும் தமிழர்களிடையும் தமிழைத் தவிர்த்து வாழும் ஒரு மனப்பான்மை ஏற்பட்டு வருகிறது. நுகர்வுக் கலாச்சாரம் என்ற ஒன்று நெட்டி முறித்து எழுந்து அடிப்படை உணர்வுகளை மழுங்கடித்து வருகிறது.

தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்கு ஊடகங்கள், பொழுதையே போக்கடிக்கும்_ காவு கொள்ளும் இயந்திரங்களாக மாறிவிட்டன.

இவையெல்லாம் அடிப்படை உணர்வுகளைக் காயடிக்கும் தன்மை கொண்டவைகளாக இருக்கின்றன.

இந்த ஊடகங்கள் தமிழ் உணர்வுக்கும், முற்போக்குச் சிந்தனைக்கும் திருப்பி விடப்பட்டாகவேண்டும்; இதற்கான முயற்சிகளும்கூட செம்மொழி மாநாட்டில் மேற்-கொள்ளப்படவேண்டும். அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் அறிவியல் தமிழாக வார்த்து எடுக்கப்படவேண்டும்.

தமிழ்மீது அக்கறை உள்ளவர்கள் இந்தக் கோணத்-தில் சிந்தித்து செயல்படக் காத்துக் கொண்டிருக்கும்-போது, கிடந்தது கிடக்கட்டும்; கிழவனைத் தூக்கி மனை-யில் வை என்பதுபோல இந்து முன்னணிப் பிரமுகர் திருவாளர் இராம. கோபாலன் காட்டுக் கூச்சல் போடுகிறார்.

கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஒரு குறிப்பிட்ட கட்சி சார்ந்த-தாகவோ, பிரச்சாரம் செய்வதாகவோ இருக்கக்கூடாது. தமிழின் வளர்ச்சியையும், ஆன்மிகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஆற்றிய தமிழ்த் தொண்டை யாராலும் மறந்துவிட முடியாது. எனவே, செம்மொழி மாநாட்டில் சமய சான்றோர்கள் மற்றும் மடாதிபதிகள் ஆகியோரையும் கலந்து-கொள்ளச் செய்யவேண்டும். மேலும் இந்து இயக்-கங்களின் பிரதிநிதிகள் மாநாட்டுக்கு அழைக்கப்பட-வேண்டும் என்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்பட ஆன்மிகத் தலைவர்கள் அழைக்கப்பட்டுதானிருக்கிறார்கள். திராவிட இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் ஏராளமாகக் குழுவில் இடம்பெற்றிருக்கின்றனர்.

திருவாளர் இராமகோபாலன் தன்னை அழைக்க-வேண்டும் என்று நேரிடையாகச் சொல்லியிருக்கலாம்; இதற்கு ஏன் சுற்றி வளைத்து மூக்கைத் தொட ஆசைப்படவேண்டும்?

செம்மொழி மாநாடு திராவிட இயக்கக் கருத்துகளைப் பிரச்சாரம் செய்வதாக இருக்கக் கூடாது என்றும் புலம்பியிருக்கிறார்.

இதுவரை திராவிட இயக்க ஆட்சிகள்தான் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தியிருக்கின்றன. அப்பொழு-தெல்லாம் என்ன நடந்துவிட்டன?

உண்மையைச் சொல்லப்போனால், மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில்தான் பார்ப்பன அம்மையார் பத்மா சுப்பிரமணியம் என்பவர் தேவையில்லாமல் சமஸ்கிருதத்தை உயர்த்தித் தமிழைச் சீண்டினார். அதனால் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

கலைஞர் முன்னின்று உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்துகிறார் என்றவுடன் திராவிட இயக்கம்-பற்றியெல்லாம் குறை சொல்லும் இதே இராமகோபாலன்-கள், காஞ்சி சங்கராச்சரியார் சொல்லித்தான் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினேன் என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சொன்னாரே, அப்பொழுது மட்டும் அவாளுக்கு உச்சிக்குளிர்ந்ததோ!

கலைஞர் என்றதும், ஒரு கூட்டத்துக்குப் பச்சை மிளகாயைக் கடித்ததுபோல் இருப்பானேன்? திராவிட இயக்கம் என்றால் பஞ்சமா பாதகத்தில் ஒன்றா? திராவிட இயக்கம் தமிழுக்குத் தொண்டு செய்யாத கட்சியா? திராவிட இயக்க எழுத்தாளர்கள் தமிழுக்குச் செய்யாத தொண்டா? அவர்களின் படைப்புகள் காலத்தை வென்று நிற்கவில்லையா?

புரட்சிக்கவிஞர் யார்? அறிஞர் அண்ணா யார்? புலவர் குழந்தை யார்? திரைப்பட உலகம் மறுமலர்ச்சி பெற்றதற்கு அண்ணாவும், கலைஞரும் காரணகர்த்-தாக்-கள் அல்லவா! நமஸ்காரம் போய் வணக்கம் வந்ததும், அக்ராசனர் போய் தலைவர் வந்ததும், வந்தனோபசாரம் போய் நன்றி வந்ததும் எந்த இயக்கத்தால்?

மேடைத் தமிழ் மேன்மை பெற்றது எந்தக் கால-கட்டத்தில்? தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்டும் உந்துதலுக்கு யார் காரணம்?

எழுத்துச் சீர்திருத்தம் யார் சொன்னது? செம்மொழி தகுதி வந்தது எந்த ஆட்சிக் காலத்தில்?

பூசை காலத்தில் நீஷ பாஷையில் (தமிழில்) சங்கராச்சாரியார் பேசமாட்டார் என்றும், கோயிலுக்குள் தமிழ் வழிபாட்டு மொழியானால், தமிழ் தீட்டுப் பட்டு-விடும் என்றும் கூறும் கூட்டம்; தமிழுக்கு ஒரு மேன்மை, சிறப்பு வருகிறபோது, உள்ளொன்று வைத்து வெளியில் இன்னொன்று பேசும் கூட்டத்தின் கூச்-சலையெல்லாம் முதலமைச்சர் பொருட்படுத்தவேண்டாம் என்பதுதான் உண்மையான தமிழர்களின் எதிர்பார்ப்பு, மாநாட்டு வெற்றியின்மீது கவனம் செலுத்தவேண்டுமே தவிர, திசை திருப்பும் கோணல் மாணல்கள் பக்கம் கவனம் சிதறத் தேவையில்லை.

விடுதலை தலையங்கம் (05.01.10)

Monday, January 04, 2010

மார்க்சிஸ்ட் அரசுக்கு ஏற்புடையதா?

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் செல்லும் பருவம் (ஷிமீணீஷீஸீ) தொடங்கப்பட்டு விட்டது. கேரள மாநிலத்தில் உள்ள இக்கோயிலுக்குத் தமிழ்-நாட்டிலிருந்து செல்லும் பக்தர்களே அதிகம். இப்பொழுது இந்த வியாதி இலங்கைவரைக்கும் பரவி அங்கிருந்தும் வரத் தலைப்பட்டுள்ளனர். 400 பேர் கப்பல்மூலம் சென்னைக்கு வந்து இறங்கியுள்ளனர்.

பொங்கலையொட்டி மகர ஜோதி பிரதானமாக பெரிதாகப் பேசப்படும். அய்யப்பன் கோயில் விஷயத்தில் இந்த மகரஜோதி என்பதே மிகப் பிரதானமான ஒன்றாகும்.

ஆனால், இந்த மகரஜோதி உண்மையானதல்ல _ மோசடியானது. கேரள அரசாங்கமே தமது அதி-காரத்தின்கீழ் பணியாற்றும் மின்சாரத் துறை ஊழியர்-களைப் பயன்படுத்தி செயற்கையாகக் காட்டப்படும் தீபம் என்பது கேரளப் பகுத்தறிவாளர்களால் 1973, 1980, 1982 ஆகிய ஆண்டுகளில் நிரூபிக்கப்பட்டு-விட்டது. கேரளப் பகுத்தறிவாளர்களின் இந்தச் செயல்பாடு குறித்து மும்பையிலிருந்து வெளிவந்த பிளிட்ஸ் ஏடு (16.1.1982) படங்களுடன் வெளியிட்டு அம்பலப்படுத்தி விட்டது. இது குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படவேண்டும் என்று கேரள மாநில அரசுக்கு அம்மாநிலப் பகுத்தறிவாளர்கள் ஒரு வேண்டு-கோளை வைத்தனர்; அரசு அசைந்து கொடுக்கவில்லை.

கேரள மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜோசப் எடமருகு கேரள மாநில முதலமைச்சர் ஈ.கே. நயினார் அவர்களைச் சந்தித்துச் சொன்ன-போது, உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்; அதே நேரத்தில் அதனைத் தடை செய்ய முடியாது என்றும் கூறிவிட்டார்.

இப்பொழுது அடுத்தடுத்து பல தரப்புகளிலிருந்தும் உண்மைகள் ஒப்புக்கொள்ளப்பட்டு வெளிச்சத்திற்கு வந்துவிட்டன. தெகல்கா ஆங்கில இதழ் (21.6.2008) சில உண்மைகளை வெளி உலகுக்குக் கொண்டு வந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி மகர விளக்கு தானாகத் தெரியும் என்றனர். சபரிமலைக் கோயிலின் காப்பாளர் பந்தளம் மகாராஜா குடும்பம் இக்குடும்பத்தின் பி. ரவிக்குமார் சொல்லுகிறார்: எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மூன்று தடவை கொளுத்தவேண்டும் என்று கூறி ஆள்களை அனுப்புவார்கள் என்று ஒப்புக்கொண்டார்.

இந்தியா விடுதலை பெற்ற பிறகுதான் காட்டு இலா-காவும், மின்சாரத் துறையும் சேர்ந்து மோசடி-யைத் தொடங்கினர். கற்பூரத்தை மூட்டை மூட்டை-யாகக் கொட்டி கொளுத்தி மகர விளக்கு என்று காட்டுவார்கள். இதற்கான சைகை மாலை 6.30 மணிக்குக் கோயிலிலிருந்து அனுப்பப்படுகிறது.

பொன்னம்பலமேடு, மோசடியை அம்பலப்படுத்-திடப் பகுத்தறிவாளர்கள் முயன்றனர். 1973 இல் 24 பேர்கள் கொல்லத்திலிருந்து பொன்னம்பலமேட்டுக்கு வந்து குறிப்பிட்ட நாளில் பட்டாசுகளை வெடித்து பக்தர்களின் குழப்பத்தைத் தெளிவிக்க முயற்சித்தனர். கைது செய்து வழக்குத் தொடுத்தது கேரள மாநில அரசு. இந்தியக் குற்றச் சட்டப்படி எந்தக் குற்றமும் பகுத்தறிவாளர்கள் செய்யவில்லை என்று வழக்-கினைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

1980 ஆம் ஆண்டிலும் திருச்சூரிலிருந்து பொன்னம்-பலமேடு வந்து வழக்கமான திசைக்கு எதிர்த்-திசையில் விளக்கைக் கொளுத்திக் காட்டி அம்பலப்படுத்தினர் பகுத்தறிவாளர்கள்.

இப்போது அய்யப்பன் கோயில் தலைமைப் பூசாரி கண்டரேறு மகேஸ்வரரு மகர விளக்கை மனிதன்-தான் இயக்குகிறான் என்று ஒப்புக் கொண்டுள்ளார். தேவஸம் போர்டு தலைவர் சி.கே. குப்தனும் இதனை ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதற்கு மேலாக அற-நிலையத்துறை அமைச்சர் ஜி. சுதாகரன் அவர்களும் மோசடி உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டு விட்டார் என்று தெகல்கா வெளியிட்டது.

இதற்குமேலும் என்ன ஆதாரம் வேண்டும் அய்யப்பனின் மகரஜோதி மோசடி என்பதற்கு? மோசடி என்று தெரிந்த பிறகும் ஓர் அரசு இதனை அனுமதிக்கிறது என்றால், அரசே மோசடிக் குற்றத்திற்கு ஆளாகிவிட்டது என்றுதானே பொருள்?

மதம், கடவுள், பக்தி என்ற பெயரால் கண்ணுக்குத் தெரிந்த ஒரு மோசடியை அனுமதிப்பது என்பது மக்கள் மத்தியில் எத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தும்?

சாமியார்களும், அர்ச்சகர்களும் மோசடி வேலை-களில் ஈடுபடுவதும், ஆபாச லீலைகளில் ஈடுபடுவதும் இந்த அடிப்படையில்தானே! காவி கட்டிக்கொண்டு எந்த காலித்தனத்தில் ஈடுபட்டாலும் அரசாங்கமோ, நீதித்துறையோ கிட்டே நெருங்காது என்ற தைரியத்தில்தானே இவ்வளவு அயோக்கியத்தனமான செயல்களில் துணிந்து ஈடுபடுகின்றனர்?

மோசடி என்று தெரிந்திருந்தும் ஒரு அரசு (அது-வும் மார்க்சிஸ்ட் அரசு) இப்படி நடந்துகொள்வது மிகவும் தரந்தாழ்ந்தது; தலைகுனியத் தக்கது _ நிரு-வாகம், சட்டம், நீதியைக் குழிவெட்டிப் புதைப்பதாகும்.

பகுத்தறிவாளர்கள் இந்த நிலையை ஒவ்வொரு மனிதரிடத்திலும் கொண்டு செல்வதை ஒரு கடமை-யாகக் கருதவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

விடுதலை தலையங்கம் (04.1.10)

Saturday, January 02, 2010

எங்கள் சாமி எவ்வளவு சக்தி வாய்ந்த சாமி பார்த்தீரா

1.வைணவர்களின் புண்ணியதலமான திருவரங்கத்தில் வாழ்ந்த தீவிர வைணவர் ஒருவர் இயற்கை கடன் கழிபதற்க்கு ,அருகில் உள்ள சைவர்களின் புண்ணிய தளமான திருவானைக்கா கோவில் மதிற்சுவரின் அமர்வது வழக்கம் .இதன் மூலம் சைவ சமயத்தை பழி தீர்ப்பதாக அவர் எண்ணினார்.ஒரு நாள் வழக்கம் போல் மதிற்சுவரின் அருகில் அவர் இயற்கை கடன் கழித்து கொண்டிருந்த போது தலையில் ஒரு சிறு கல் வேகமாக வந்து தாக்கியது .வலியுடனும் கோபத்துடனும் அவர் அண்ணார்ந்து பார்த்தார்.கோவி மதிற்சுவரை காக்கை ஒன்று காலால் பிராண்டி கொண்டிருந்தது கண்ணில் பட்டது .உடனே வழியை மறந்து ''அப்படி இடி மதிலை ' என்றாராம்.


2.சைவரும் வைணவரும் ஒன்ற இயற்கை கடன் கழிப்பதற்க்காக ஊருக்கு வெளியே சென்றார்கள்.ஒரு குறிப்பிட இடத்தில சைவர் உட்கார முயன்ற போது ,வைணவர் அதை தடுத்து வேறு பகுதிக்கு இழுத்து சென்றார்.இதற்க்கான காரணத்தை சைவர் கேட்டபோது தனது பெருமாள் சாமிக்குரிய துளசி செடி மிகுதியாக வளர்ந்திருப்பதால் அப்பகுதியை தாம் அசுத்தமாக்க விரும்பவில்லை என்றார்."அப்படியா " என்று கூறிய சைவர் துளசி செடியால் தன் ஆசன வாயை துடைத்து கொண்டார்.வைணவருக்கு ஒரே ஆத்திரம். ஆனால் அதை வெளிக்காட்டாமல் 'ஒங்க சாமிக்கு எந்த செடி பிடிக்கும் ' என்று கேட்டார் .சைவர் ஒரு குறிப்பிட்ட பகுதியை காட்டி அங்கு வளர்ந்துள்ள செடி சிவபெருமானுக்கு உகந்த செடி என்றார்.உடனே வைணவர் அதை அவசரமாக பிடுங்கி சைவர் துளசி செடியை பயன் படுத்தியது போல் பயன் படுத்தினர்.ஆத்திரம் மிகுதியா சற்று அழுத்தமாகவே தேய்த்தார் .சில நிமிடங்களில் வேதனை தாங்க முடியாமல் குய்யோ முறையோ கத்தினார்.பாவம்! சைவர் காட்டிய செடி "'செந்தட்டி' (காஞ்சிரங்காய் ) செடியாகும்.(இதை காஞ்சிராணி என்றும் கிராமங்களில் கூறுவார்).சைவரோ 'எங்கள் சாமி எவ்வளவு சக்தி வாய்ந்த சாமி பார்த்தீரா'என்று கூறி நமட்டு சிரிப்பு சிறிது கொண்டார்.

இக்கதைகளில் இடம் பெற்றுள்ள சமய வெறி கொண்ட சைவ வைணவர்களை போன்று கிருத்தவ,இஸ்லாமிய சமயங்களிலும் சமய வெறி கொண்டவர்கள் உண்டு.இத்தகைய மட்டு மீறிய உணர்வு உடையவர்கள் பிற சமயத்தினருடன் இணக்கமாக வாழ முடியாதென்றாலும் மிகபெரிய அளவில் வகுப்பு மோதல்களை தோற்று விப்பதில்லை.அதே நேரத்தில் இவர்களை மிக எளிதில் வகுப்பு வாதிகளாக மாற்ற முடியும்.இதனால்தான் மத அடிப்படை வாத இயக்கங்கள் முதலில் தீவிரமான சமய உணர்வை தூண்டி விடுகின்றன.

வகுப்புவாத அதிகாரத்துக்கான ஒரு கருவி என்று பார்பவர்கள் சமயங்களை பின்பற்றுவோரிடையே பகை உணர்வை உருவாக்கி ,வளர்த்து வகுப்பு மோதல்களுக்கு வித்திடுகின்றன.கே.எம்.பணிக்கர் குறிபிடுவது போல் இத்தகையவர்களுக்கு,வகுப்பு வாதம் என்பது அடிபடியில் ஆட்சியை பிடிபதற்க்கான ஒரு தந்திரமேயாகும்.

இத் தந்திரத்தின் வெளிப்பாடகவே பிள்ளையார் ஊர்வலம் தமிழ் நாட்டில் அறிமுகப்படுதபட்டுள்ளது.

- பிள்ளையார் அரசியல் என்ற நூலில் இருந்து.....

Monday, December 28, 2009

‘சொர்க்கவாசல்’ ...சொர்க்-கத்துக்குப் போகவில்-லையா?


நாடு முழுவதும் 108 வைணவக் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்-கள் அனைத்திலும் இன்று இரவு கண் விழித்து ஏகாதசி விரதம் இருந்து விடியற்காலை சொர்க்க-வாசல் திறப்பு.


ஸ்ரீரங்கநாதன் ஸ்தோத்-திரத்தை 1008 முறை சொல்-பவர்களுக்கு இப்பிறவி-யில் எல்லா க்ஷேமங்-களும் பேஷாகக் கிடைக்-குமாம்.

மத்திய, மாநில அரசு-கள் எதற்காக தேவை-யில்லாமல் கோடிக்கணக்-கில் பணத்தைக் கொட்டி திட்டங்களை வகுக்கின்-றன என்று தெரிய-வில்லை. அய்ந்தாண்டு திட்டங்கள் எல்லாம் எதற்காக?

பேசாமல் இந்தியா-வின் குடியரசுத் தலை-வரும், பிரதமரும் இன்று இரவு ஸ்ரீரங்கநாதர் ஸ்தோத்திரத்தை 1008 முறை சொன்னால் தீர்ந்-தது கதை. 110 கோடி மக்-களுக்காக ஒரு இரவு கண் விழித்து இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்லவேண்டியதுதானே!

பக்தியின் பெயரால் மக்களை எந்த அளவுக்கு முடமாக்கி வைத்திருந்-தால் இந்த 2009 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற தெருப் புழுதிக் கூத்து-களை அரங்கேற்றுவார்-கள்?

இந்த ஸ்ரீரங்கநாதன் ஸ்தோத்திரத்தில் ஒரே ஒரு பாடல்; ஒரு பானை சோற்-றுக்கு ஒரு பருக்கை-தானே பதம்?

‘தேவேந்திரனின் அமர லோகத்தில் வாசம் செய்து தேவாமிர்தத்தைப் பருகும் பாக்கியம் எனக்கு வேண்-டாம் ஸ்ரீரங்கநாதா! உம் பட்டணத்து வீதியில் திரியும் நாயாகப் பிறக்-கும் பாக்கியம் எனக்குக் கொடுப்பீராக!’ எப்படிப்-பட்ட சுலோகம்!

அரிது அரிது மானிட-ராகப் பிறப்பது அரிது என்ற கருத்தையும் படித்-திருக்கிறோம். இப்படி நாயாகப் பிறக்கவேண்-டும் என்று கூறுவதையும் படிக்கும்பொழுது ஆறறி-வுள்ள ஒரு மனிதனின் புத்தியை எப்படியெல்லாம் நாசமாக்கி விட்டனர்! நாயாகப் பிறக்கவேண்டும் என்று ஒரு வேண்டு-கோளை ஒரு கல் சிலைக்கு முன் வைக்கும் அளவுக்கு அறிவின் தரத்தை பக்தி என்னும் ஆபாசக் குழியில் தள்ளி மிதித்து அசிங்கப்படுத்தி விட்டனரே!

பக்தி வந்தால் புத்தி போகும் என்ற தந்தை பெரியாரின் அறிவு மொழி, ஆகா, எவ்வளவு வானளாவியது! வையத்து அறிவுக் கண்ணின் ஊற்-றைத் திறக்கக் கூடியது!

கடைசியில் ஒன்று:

இன்று இரவு கண் விழித்து ஸ்ரீரங்கநாதர் ஸ்தோத்திரங்களை 1008 முறை ஓதி, விடியற்-காலையில் கோயிலில் டிக்கெட்டும் வாங்கிக் கொண்டு சொர்க்க வாசல் நுழைந்த பக்தர்களே, மீண்டும் வீட்டுக்குத் திரும்-புகிறீர்களே, சொர்க்-கத்துக்குப் போகவில்-லையா? (சாகவில்லையா) இது என்ன நியாயம்? வடலூர் இராமலிங்கனார் சொன்னதுபோல இது என்ன பிள்ளை விளை-யாட்டு!

யாரை ஏமாற்றுகிறீர்-கள்? அல்லது உங்க-ளையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளவில்லையா!

-விடுதலை (28.12.09) மயிலாடன்

Sunday, December 27, 2009

பார்ப்பனர்களுக்குப் போகும் பிச்சைக் காசை ஒழிப்பது பிராமணீயத்தை ஒழிப்பது ஆகாது



கும்பகோணத்து பிராமணனின் லஜ்ஜையும் சீற்றமும்


பிராமணீயத்தை ஒழிப்பது என்பதில் பார்ப்பனர்-களை ஒழிப்பது என்பதும் அவர்களுக்குப் போகும் பிச்சைக் காசையும் பிச்சைச் சாமான்களையும் நிறுத்து-வதும் என்பதே நமது கருத்து என்பதாகப் பலர் அபிப்பிராயப் படுவதாகக் கற்பனை செய்து கொண்டு பார்ப்பனரினால் வயிறு வளர்க்கும் சில பார்ப்பனரல்லாதாரும், சில பார்ப்பனரும், பார்ப்பனப் பத்திரிகைகளும், பிராமணன் என்கிற பார்ப்பன வருணாசிரம தர்ம பத்திரிகையும் கூச்சல் போடு-கின்றதுகள். பிராமணீயத்தை ஒழிப்பது என்பதை நாம் எந்தக் கருத்தின் பேரில் தொடங்கினோம் என்றால் நம்மைவிடப் பார்ப்பனன் உயர்ந்தவன் என்று எண்ணுவதும், அவன் பிழைப்புக்காக ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கும் வஞ்சக சாஸ்திரங்களையும், பொய்ச் சுருதிகளையும், புரட்டு ஆகமங்களையும் நம்புகிற மூடநம்பிக்கையையும் நமது மனதை விட்டு அகற்றுவதும், நம்மை விடப் பஞ்சமன் என்பவன் தாழ்ந்தவன் என்று எண்ணுவதை ஒழிப்பதுமாகிய தத்துவத்தைத்தான் முதன்மையாகக் கருதித் தொடங்கினோமேயல்லாமல் வேறல்ல.

உதாரணமாகப் பார்ப்பனனை நாம் ஏன் சுவாமி என்று கூப்பிட வேண்டும்? அவனைக் கண்டால் நாம்தான் முதலில் கும்பிட வேண்டும் என்கிற மனப்பான்மை நம்மிடத்தில் ஏன் இருக்க வேண்டும்? பார்ப்பனரும் ஏன் அதை எதிர்பார்க்க வேண்டும்? அவனுக்குப் பணம் கொடுப்பதும் சாப்பாடு போடுவதும் புண்ணியம் என்று ஏன் நாம் நினைக்க வேண்டும்? இது போன்ற பல உயர்வுகள் நம் போன்ற நம்மிலும் பல வழிகளில் தாழ்ந்தவான-யிருக்-கிறவனுக்கு பார்ப்பனனாகப் பிறந்தான் என்கிற காரணத்திற்காக ஏன் கொடுக்க வேண்டும்? அல்லா-மலும் நம்மை விட எந்த விதத்திலும் தாழ்மை-யில்லாதவனையும் நம்மிலும் பல விதத்தில் உயர்குணங்கள் கொண்டவனையும் போலிப் பிறவிக் காரணமாக நாம் ஏன் தாழ்ந்தவன் என்று சொல்ல வேண்டும்? அவன் நம்மைக் கும்பிடும்படி ஏன் நாம் எதிர்பார்க்க வேண்டும்? ஒருவனை நாம் தொட்டால் தோஷம் என்று நாம் ஏன்நினைக்க வேண்டும்? ஆகிய இப்பேர்ப்பட்டதான அஞ்-ஞானத்தை, மூட நம்பிக்கையை, கொடுமையை, அகம்பாவத்தை, கொலை பாதகத்தை, வஞ்கத் தத்துவத்தை ஒழிப்பதல்லாமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர் மேல் துவேஷங் கொண்டு செய்வதல்ல என்பதை உறுதியாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம். உதாரணமாக, பார்ப்பனனுக்குப் பிச்சைக் கொடுப்பதை நாம் வேண்டாமென்று சொல்ல வரவில்லை.


ஆனால் அவனுக்குக் கொடுப்பது புண்ணியம்; மோட்சத்திற்குக் கொடுக்கும் விலை என்கிற மூடநம்பிக்கையின் பேரில் கொடுத்து ஏமாறாதீர்கள் என்றுதான் சொல்லுகிறோம். கஞ்சிக்கில்லாமல் கஷ்டப்படுகிறான், பாடுபட்டுத் தின்பதற்கு யோக்கியதை இல்லா நிலையில் இருக்கிறான் என்று காணப்பட்டால் கண்டிப்பாய் அவனுக்கு உதவ வேண்டியது மனித தர்மமென்றே சொல்லுவோம். இந்நிலை பிராமணனிடம் கண்டாலும் சரி பஞ்சமனிடம் கண்டாலும் சரி உடனே உதவ வேண்டியது மனிதனின் ஆண்மையிலும் சுயமரியாதையிலும் பட்டதென்று கூடச் சொல்லுவோம். உப்பற்ற கஞ்சி கண்டு 8 நாள் ஆன மனிதன் தெருவில் உயிர் போகுந் தருவாயில் இருக்கும் போது பாயாசத்திற்கு குங்குமப்பூ போதவில்லை; அக்கார-வடிசிலுக்குப் பச்சைக் கற்பூரம் போதவில்லை என்ன சமாராதனை செய்து விட்டான் உலோபிப் பயல் என்று சொல்லுகிற காளைத் தடியர்களுக்கு சாப்பாடு போடுவது தர்மம் என்று எண்ணுகிற முட்டாள்தனத்தை விட வேண்டும் என்பதையும்தான் பிராமணீயத்தில் இருந்து விடுபட்டதென்று சொல்லுகிறோம்.

பிராமணன் என்கிற ஒரு பத்திரிகை பஞ்சாங்கப் பிராமணர்களை உண்மைப் பிராமணர்கள் தாழ்வாய்க் கருதுவதாவும் அவர்களுக்கு அவ்விழிதொழில் கூடாதென்றும், அவர்கள் வேறு தொழிலில் பிரவேசிக்க வேண்டுமெனறே தான் விரும்புவதாகவும் ஜம்பமாய் எழுதிவிட்டுப் பார்ப்பனர் இவ்விழிதொழில் செய்வதற்குப் பார்ப்பனரல்லாதார் காரணதராயிருக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளும் தமிழ்நாடு பத்திரிகை மீது சீறி விழுவதன் காரணம் இன்னதென்று தெரியவில்லை.

தவிர பார்ப்பனர்களில் இவ்விழி தொழிலில் ஜீவித்து வருபவர்கள் பதினாயிரத்தி லொருவர்கூட இல்லை என்றும், மற்றவர்கள் எல்லாம் கவுரவமான தொழிலில் வாழ்கிறார்கள் என்றும் ஜம்பம் பேசிக் கொள்ளுகிறது. ஆனால் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளோ ஏதோ பதினாயிரத்தில் ஒருவர்தான் உத்தியோகம், காப்பி ஓட்டல் முதலிய இழி தொழில்களில் இருக்கிறார்கள்; மற்றவர்கள் எல்லாம் மகா பரிசுத்த பிராமணீயத் தொழிலாகிய பஞ்சாங்கத் தொழிலில் இருக்கிறார்கள்; அவர்களிடத்தில் பார்ப்பனரல்லாதாருக்குத் துவேஷம் ஏன் இருக்க வேண்டும்? என்று பேசியிருக்கிறார். ஆதலால், உத்தமமான தொழில் இன்னது, இழி தொழில் இன்னது என்பவைகளிலேயே இவ்விரு பார்ப்பனர்-களுக்கும் வித்தியாசமிருப்பதால் நாம் இதில் கலந்து கொள்ள இஷ்டமில்லை. ஆனாலும் பதினாயிரத்தில் ஒருவன்தான் பஞ்சாங்கப் பிராமணன் என்பதை மாத்திரம் நாம் மறுக்கிறோம்.

இன்றைய தினம் உத்தியோக முறையில் உயர்ந்த ஸ்தானம் வகித்தும், மாதம் பதினாயிரம் இருபதினாயிரம் சம்பாதித்து வரும் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவரான ஸ்ரீமான்கள் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள், நரசிம்மேஸ்வர சர்மா அவர்கள், சி.பி.இராமசாமி அய்யர் அவர்கள், எ.சீனிவாசய்யங்கார் அவர்கள், டி.ஆர்.வெங்கிட்டராம சாஸ்திரிகள், மகாமகாகனம் பட்டம் பெற்ற ஸ்ரீனிவாச சாஸ்திரிகள், சர்.சிவசாமி அய்யர் அவர்கள் முதலியவர்கள் உட்பட அநேக சாதாரண உத்தியோகப் பிராமணர்களும், அரசியல் பிராமணர்களும், சன்னிதானங்கள், மடாதிபதிகள், மகந்துகள் என்று சொல்லத்தகுந்த பல வைதீகப் பிராமணர்களும், சிலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் சந்ததிகள், சிலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் பிள்ளைகள், பலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் சகோதரர்கள், பலர் உத்தியோகத்திலும். வைதீகத்திலும், பஞ்சாங்கத்திலுமாக மூன்றிலும் வயிறு வளர்க்கிறவர்கள் என்பதை மாத்திரம் தெரியப்படுத்திக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

பிராமணன் உண்மையிலேயே இந்த இழி தொழிலாகிய பஞ்சாங்கத் தொழிலைச் செய்வதிலிருந்தும் மூட நம்பிக்கையில் பார்ப்பன ரல்லாத மக்களை இறக்கி அவர்களால் வயிறு வளர்க்கும் தொழிலிலிருந்தும் பிராமணர்களைக் கடைத் தேற்றி பிராமணன் சொல்லுகிறபடி அவர்களை கவுரவமான வாழ்க்கையில் நடக்கும்படிச் செய்யும் பிரச்சாரத்திற்கு நம்மையும் அழைத்தால் நாமும் ஒத்துழைக்கத் தயாராயிருக்-கிறோம்.

நாம் பிராமணீயத்தை விட்டவர்கள் பெயர்-களைப் போட்டு வருவது போலவே பஞ்சாங்கத் தொழிலாகிய இழிதொழிலை விட்ட பிராமணர் பெயர்களையும், வாரா வாரம் பிராமணன் பத்திரிகை கொண்டு வெளி வருவானானால் நாம் பிராமணனை மிகுதியும் போற்றுவோம். அதில்லாமல் எழுத்தில் மாத்திரம் காட்டுவதில் என்ன பயன்? தாசிகளைக் கேட்டால்-கூட அவர்கள் தங்கள் தொழில் இழி தொழிலென்று ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால் இருட்டான-வுடன் தெருவில் நடப்பவனைப் பார்த்துக் கண்ணடிப்பதில் பின் வாங்குவதில்லை. வக்கீல்களும் அது போலவே தங்கள் தொழிலை இழி தொழில் என்று ஒப்புக் கொள்ளுகிறார்கள்.

ஆனால் தாசிகள் புருஷர்களைத் தேடுவது போல் வாயிற்படியிலும் ரயில்வே பிளாட்பாரத்திலும் காத்திருந்து கட்சிக்காரர்களைத் தேடுவதில் குறைவில்லை. அதுபோல பிராமணனும் பஞ்சாங்கத் தொழில் இழி தொழில் என்று வாயில் ஒப்புக் கொண்டதைப் பற்றி நாம் மிகுதியும் சந்தோஷப்பட முடியவில்லை. அது காரியத்தில் காட்டி தனது சமூகத்தாருக்கு அத்தொழில் இல்லாமல் செய்ய பிரயத்தனப் படுவானானால் அத்தொழிலின் பலனாய் மூட நம்பிக்கையில் ஈடுபட்டுச் சுயமரியாதை இன்றிக் கிடக்கும் கோடிக் கணக்கான பார்ப்பனரல்லாத மக்களுக்குச் சுயமரியாதைக்கு வழிகாட்டின பலன் பார்ப்பனர்களுக்குக் கிடைக்குமென்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- ‘குடிஅரசு’. கட்டுரை, 19.09.1926

Saturday, December 26, 2009

அய்யப்பன் கோயில் பஞ்சாமிர்தம்.....




அய்யப்பனும் தெய்வமா? மகர சோதியும் உண்மையா? என்ற துண் டறிக்கை வினியோகித்ததாகவும், அதைப் பெற்றுக் கொண்ட வக்கீல் நாகராசன் என்பவர் மனம் புண்பட்டு இதைப் பற்றிக் கேட்டதாகவும் அதில் தள்ளு முள்ளு ஏற்பட்டதாகவும், எனக்கெதிராக வழக்கொன்று பதிவு செய்தார். அந்த வழக்கு கடந்த மூன் றாண்டாக எந்தவித முன்னேற்றமும் இன்றி அப்படியே இருக்கிறது.


குற்றப் பத்திரிகை தரவோ, சாட்சி விசாரணையோ ஏதுமின்றி வழக்குத் தள்ளிப் போடப்பட்டுவருகிறது. வாய்தாவிற்கு வாதி பல நாட்கள் வருவதில்லை. அதனாலேயே வாய்தா மாற்றி வைக்கப்பட்டு, வருடங்கள் போய்க் கொண்டே இருக்கின்றன. இவ்வழக்கில் பிரதிக்கு தண்டனை கிடைக்காது, அவரை நீதிமன்றத்திற்கு அலைய விடுவதுதான் தண்டனை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவென் றால், துண்டறிக்கை வினியோகம் செய்ததாகச் சொல்லப்பட்ட நாளில், பகுத்தறிவாளர் கழக மாநாட்டிற்காக சென்னைக்கு நான் இரயிலில் சென்று கொண்டிருந்தேன்.

அய்யப்பப் பக்தரும் வக்கீலுமான ஒருவர் பொய் வழக்குப் போட்டுள் ளார். இதில் ஆச்சரியப்பட ஒன்று மில்லை. ஏனெனில் அவர் குமரி மாவட்ட இந்து முன்னணி பொறுப் பாளர்களில் ஒருவர்.

வாய்தாக்களுக்கு நீதிமன்றத்திற்கு அலைய வைப்பது தான் தண்டனை என அவர் எண்ணிக் கொண்டிருக் கிறார். ஆனால் நானோ வாய்தா நாள்களில் நீதிமன்ற வளாகத்தில், கருப்புச் சட்டைத் தோழர்களுடன் கொள்கை பரப்பும் துண்டறிக்கை வினியோகம், பத்திரிகை சந்தா சேர்த்தல், புத்தக விற்பனை போன் றவற்றை செய்து வருகிறோம். அவர் தண்டனை என்று எண்ணுவதைப் பயனுள்ளதாக மாற்றிவிடுகிறோம் வாழ்வியல் சிந்தனை பயின்று வரும் கழகத் தோழர்கள்.

சென்ற வாய்தாவிற்கு நீதிமன்ற அறையின் முன் நின்று கொண்டி ருந்தபோது எனக்குத் தெரிந்த அன்பர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். நீதிமன்றம் வருபவர்கள் வயதான வரானாலும், நோயாளியானாலும் நிற்கத்தான் வேண்டும். பெண்களெல் லாம் நிழல் உள்ள தரை, படிக்கட்டு களில் அமர்ந்திருப்பதைக் காண வருத்தமாயிருக்-கும்.

அன்பர், மிகவும் நல்ல மாதிரி, வம்பு தும்பு எதற்கும் செல்வதில்லை. அவருண்டு அவரது வியாபாரமுண்டு என்றிருப்பவர். அவரிடம் மெதுவாக, ‘என்ன இங்கு நிற்கிறீர்களே?’ என்று கேட்டேன். அவர், அய்யோ! அதை ஏன் கேட்கிறீர்கள்? என் கடையி லிருந்து மிட்டாய்களை, சுகாதாரத் துறையினர் எடுத்துச் சென்றனர். “சோதனைக்கு பின் அதில் செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்டுள்ளது என்று குறிப் பிடப்படவில்லை என வழக்குத் தொடர்ந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அலைந்து கொண்டி ருக்கிறேன். இது வியாபாரம் நன்கு நடைபெறுகிற நேரம். இங்கு காத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது என வருத்தப்பட்டார்.

மிட்டாய் கம்பெனிகளிலிருந்து வாங்கி, அய்ந்து அல்லது பத்து லாபத் திற்கு விற்கும் கடைக்காரர் மீது வழக் குத் தொடர்வது என்ன நியாயமோ தெரியவில்லை.

இது மாதிரி வழக்குகள் கோயில் பிரசாதத்திற்கு பொருந்தாது போலும். பல கோயில்களில் தின்பண்டங்கள் பிரசாதம் என்ற பெயரில் டின்களில் அடைத்து விற்கப்படுகின்றன. அவற் றில் எதுவுமே குறிப்பிடப்படுவ தில்லை. சுகாதாரத் துறையும் அதனை கண்டு கொள்வதில்லை. கடவுள் மீதுள்ள பக்தியினாலா? பயத்தி னாலா? என்பது தெரியவில்லை.

எனக்குத் தெரிந்தவர் ஒருவர் வங்கியில் பணி புரிந்து வருகிறார். அவர் சபரிமலைக்கு, உண்டியல். பணம் எண்ணுவதற்காக அனுப்பப் பட்டுள்ளார். அவருக்கு அங்கு ஒரு வாரம் பணி. அதை முடித்து விட்டு வரும்போது அய்யப்பன் பிரசாதம் வாங்கி வந்துள்ளார். அதில் ஒரு டப்பா எங்களுக்கும் தந்தார். அதில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, சரணம் அய்யப்பா, சபரிமலை தேவவஸ்வம் அரவணை பிரசாதம் 250 என டப்பாவின் இரு பக்கங் களிலும் அய்யப்பன் படத்துடன் கூடிய அச்சடித்த தாள் ஒட்டப்பட்டி ருந்தது. அந்த டப்பாவின் பக்கங்கள் மேல் கீழ் என டப்பாவைச் சுழற்றி சுழற்றி பார்த்தேன். ஒரு இடத்தில் கூட தயாரிக்கப்பட்ட நாளோ முடிவுறும் காலமோ, எண்களோ, சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களின் பெயர்களோ எதுவும் இல்லை, எந்த சுகாதாரத்துறை அதிகாரிக்கும் சோதிக்கத் தோன்ற வில்லையே.

பக்தர்களைப் பாதுகாக்க சுகா தாரத் துறை பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. காவல்துறை வேறு கண்ணும் கருத்துமாய் செயல்படுகிறது. ஆனால் தேவஸ்வம் போர்டு விற்பனை செய்யும் தின் பண்டங்கள் பற்றி யாரும் எண்ணிப் பார்க்க வில்லையே.

அய்யப்பப் பக்தர்களை நோய் நொடிகளிலிருந்தும், திருடர்களிட மிருந்தும் விபத்துக்களிலிருந்தும் காப்பாற்ற பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ள அரசு, உணவுப் பண்டங் கள் விற்பனையில் கவனம் செலுத்த வேண்டாமா? ஏற்கெனவே அய்யப் பன் பிரசாதத்தில் ஈ., கரப்பான் பூச்சி கள் கிடந்ததாக குற்றச்சாற்றுகள் உண்டே!

 -விடுதலை ஞாயிறு மலர் 26.12.09 ப.சங்கரநாராயணன் தலைவர், திராவிடர்கழகம்,
கன்னியாகுமரிமாவட்டம் அவர்கள் எழுதியது

Thursday, December 24, 2009

தாழ்த்தப்பட்டவர்களும் இந்துக்கள்தான்...

தந்தை பெரியாரின் தமிழ் மண்ணில்_- 21 ஆம் நூற்றாண்டில் 10 ஆண்டுகள் காலடி எடுத்து வைக்கப்-பட்ட இந்தக் கால கட்டத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களின் தெருக்களில் தேரோட்டம் நடத்தலாமா? நடத்தக்கூடாதா? என்ற கேள்வி எழுந்திருப்பது வெட்கப்-படத் தக்கதாகும்.


தாழ்த்தப்பட்டவர்கள் பொது வீதிகளில் நடக்கக்கூடாது, உணவு விடுதிகளில் நுழையக் கூடாது, பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது; பேருந்துகளில் பயணம் செய்யக்கூடாது; பள்ளிகளில் அமர்ந்து படிக்கக்கூடாது; கோயிலுக்குள் செல்லக்கூடாது என்கின்ற தடைகள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டு, சட்ட ரீதியாகவே இந்த உரிமைகள் எல்லாம் அனைவருக்கும் உண்டு என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. தந்தை பெரியாராலும், நமது இயக்கத்தாலும், கோயில் கருவறைக்குள் சென்று தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட அனைவருக்கும் அர்ச்சனை செய்ய உரிமை உண்டு என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதற்காகப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு, அனைத்து ஜாதி-யினருக்கும் அர்ச்சகர் உரிமை கிடைத்திட்ட ஒரு கால கட்டம் இது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பொட்டைக்காடு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பு வீதிகளில் கோயில் தேர் சென்றிட கோயில் நிருவாகிகள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்பது - எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றாகும். இதுவும் ஒரு வகையான தீண்டாமைக் கண்ணோட்டம் என்பதால், தடை செய்பவர்களைத் தீண்டாமை ஒழிப்புக் குற்றத்தின் கீழ் தண்டிக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது.

அந்த நிலையை எட்டுவதற்கு முன் மாவட்ட வருவாய் அதிகாரி இரு தரப்பிலும் பேசி ஒரு சுமுகமான சூழலை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் ஜாதி ஆணவக்காரர்களுக்கு, கோயில் நிருவாகிகளுக்கு உயர்நீதிமன்றம் வாய்ப்பு ஒன்றை தாராளமாகக் கொடுத்திருக்கிறது என்றே கருதவேண்டும். இந்த வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால் அவர்களுக்கும் நல்லது; - ஊரின் பொது அமைதிக்கும் உகந்தது.

வேறு சில ஊர்களில் இது போன்ற பிரச்-சினைகள் எழுந்ததுண்டு; பிறகு சமாதானமான முறையில் காரியங்கள் நடைபெற்றதும் உண்டு.

இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று அடிக்கடி அழைக்கும் இந்து முன்னணிக்காரர்களும், ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகளும் இந்த இடத்திற்கு வராமல் எங்கு போய் ஒளிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.

தாழ்த்தப்பட்டவர்களும் இந்துக்கள்தான். அவர்கள் குடியிருக்கும் பகுதியில் கண்டிப்பாகத் தேரோட்டம் நடைபெறவேண்டும் என்று குரல் கொடுக்க ஏன் முன்வரவில்லை? இல்லாவிட்டால் அவர்களுக்கு கைவந்த யாகங்களை நடத்தி, ஆண்டவன் அனைவருக்கும் நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்று இறைவனிடம் இறைஞ்சலாமே! அந்த வகையிலும் ஏன் அவர்கள் முயற்சிக்கவில்லை என்ற இரண்டாவது கேள்வியும் எழுகிறது.

இந்து மதம் 2010 பிறக்கும் தருணத்திலும் தன்னுடைய நஞ்சு உமிழ்தலை நிறுத்தவில்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

இதற்கு மேலும் மூல காரணத்தை இந்த இடத்தில் ஆராய்வது அவசியமாகும். கிராமங்களில் இன்றும் இரு பகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒன்று தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதி; இன்னொன்று மேல்-ஜாதி என்று கருதப்படுவோர் வாழும் பகுதியாகும். இந்தத் தனித்தனி இருப்பிடங்கள் என்ற நிலை மாற்றப்பட வேண்டும். இந்தத் தனித்தனி முறை என்பது பழைய சமூக அமைப்பை நிலை நிறுத்தும் அடையாளங்களாகும். இதில் இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால், சேரியில் வாழும் மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும், வேறு இடத்தில் வாழும் மக்கள் குடியானவர்கள் என்றும் அழைக்-கப்படுவதாகும். அப்படியென்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் குடி மக்கள் இல்லையா? எவ்வளவு ஆழ-மாக, பேதங்கள் என்ற காயங்கள் ஊடுருவியி-ருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

வேறு எப்பொழுதும் சிந்திக்க மறந்தாலும், தந்தை பெரியார் அவர்கள் நினைவு நாளான இன்று இது குறித்து சிந்திக்கவேண்டும். சேரிகளும் கூடாது; மேட்டுக் குடியிருப்புகளும் கூடாது. இரு கூறுப் பகுதிகள் கூடவே கூடாது.

இந்த அடையாளங்கள் மிச்சசொச்சமின்றி முற்றிலும் அழிக்கப்பட்டாக வேண்டும். சமநிலைக் குடியிருப்புகளை அரசே முன்னின்று உருவாக்க வேண்-டும். இந்த வகையில் தீர்வு காணப்படாத வரை பொட்டைக் கிராமங்கள் விழுந்து விழுந்து முளைத்துக் கொண்டேதானிருக்கும்.

மூல பலத்தை நோக்கிப் போர் புரிவதுதான் தந்தை பெரியார் முறை என்றார் அறிஞர் அண்ணா. அது இந்த நாளில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நல்ல சிந்தனையாகும்.

விடுதலை தலையங்கம் (24.12.2009)

Wednesday, December 23, 2009

சிவனைப் பூஜிப்-பதன் மூலம் கடன் தொல்லை நீங்கும்...

நாளிதழ்கள் வாரந்-தோறும் ஆன்மிகச் சிறப்பு இதழ்களைப் போட்டி போட்டுக்-கொண்டு வெளியிடுகின்-றன. பண்டிகைகள் வந்து-விட்டால் அவற்றின் பெய-ராலும் சிறப்பிதழ்கள் வந்துவிடும். புத்தாண்டு பிறக்கிறதா? உடனே “புத்-தாண்டுப் பலன்கள்’’ என்ற தலைப்பில் தலை-காட்டும்.


இதில் என்ன வேடிக்கை என்றால், ஆங்-கிலப் புத்-தாண்டுக்கும்கூட இது-போன்ற சிறப்பிதழ்கள்; ஆங்கிலப் புத்தாண்டுக்-கும், இந்து மத ராசி பலன்-களுக்கும் என்ன சம்பந்தம்?

சங்கராச்சாரியார்கள்கூட சொல்லிப் பார்த்தார்கள் ஆங்கிலப் புத்தாண்டுக்-காக கோயில் நடையைத் திறக்காதீர்கள்; இரவில் இந்து மதக் கோயில்-களைத் திறந்து வைப்பது, சாஸ்திர விரோதம் -_ ஆகம விரோதம் என்று அவர்கள் கத்திப் பார்த்து என்ன பிரயோசனம்?

கோயில் நடைகள் திறக்கப்பட்டன; பட்டர்-களுக்கும், பார்ப்பனர்-களுக்-கும் வருவாய்க் குவியல்; சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடுவார்-களா, என்ன?

ஆன்மிக இதழில் கை சரக்குகளை அவிழ்த்துக் கொட்டுபவர்கள் சர்வ ஜாக்-கிரதையாக சில வார்த்-தைகளைப் பயன்படுத்து-வதைக் கவனிக்கவேண்-டும்.

மக்கள் நம்பிக்கை; .... என்பது புராணம்; ..... என்பது அய்திகம்; .... என்பது புராணம் என்று கழுவும் மீனில் நழுவும் மீனாக வார்த்தைகளைக் கையாளுவார்கள்.

இவர்கள் எழுதுவதை நம்பி பக்தர்கள் கடை-பிடித்து காரியம் ஆகா-விட்டால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாமே _ அல்-லது ‘நீ வெளியிட்டதை நம்பித் தானே இந்தக் காரியத்தில் இறங்கினேன்; கடைசியில் காரியம் கெட்டுப் போய்விட்டதே’ என்று பக்தர்கள் சண்-டைக்கு வந்தால் என்ன செய்-வது? அதற்காகத்தான் இத்தகைய ஏமாற்று வார்த்தைகள்.

ஒரு மாலை ஏட்டின் புத்தாண்டு சிறப்பிதழில் ஒரு செய்தி:

கடன் வாங்கி திரும்-பக் கொடுக்க முடியாமல் தவிப்பவர்களுக்கென்றே தஞ்சை மாவட்டம் திருச்-சேறையில் சாரபரமேஸ்-வர் கோயில் உள்ளது. இவர் ரண ருண ஈஸ்வரர் என்று அழைக்கப்படு-கிறார். ரணம் என்றால் நோய், ருணம் என்றால் கடன் என்று பொருள்.

இந்த சிவனைப் பூஜிப்-பதன் மூலம் கடன் தொல்லை நீங்கும் என்-பது பக்தர்களின் நம்-பிக்கை.

இப்படியாக எழுது-கிறது அந்த இதழ்.

கடன் தொல்லை எப்படி நீங்கும்? கடன் கொடுத்தவன் கேட்கமாட்-டானா? அல்லது கடன் வாங்கியவன் திருப்பிச் செலுத்த அவன் பீரோவுக்-குள் நோட்டுக் கத்தை-களை கொண்டு வந்து சிவன் திணித்துவிட்டுப் போய்விடுவாரா? (சிவன், கள்ள நோட்டு அடிப்-பாரோ!).

இன்னொரு வகையில் பார்த்தால், துணிந்து கடனை வாங்கிக்கொண்டு, திருப்பிச் செலுத்த வேண்-டியதில்லை; சிவன் பார்த்-துக் கொள்வான் என்கிற மோசடி எண்ணத்தைத்-தானே இந்த ஆன்மிகம் கற்றுக் கொடுக்கிறது? மக்-களை மோசடி செய்யத் தூண்டும் இதுபோன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்படவேண்டாமா?

- விடுதலை (23.12.09) மயிலாடன்

Sunday, December 20, 2009

பகுத்தறிவாளர் கழகத்தில் பார்ப்பானைச் சேர்க்காதீர் என்று கூறுவது ஏன்?



வெற்றி பெற்றவர்களைப் பாராட்டுவதோடு வெற்றி பெற ஓட்டளித்த வாக்காளர் பெரு-மக்களையும் பாராட்ட வேண்-டும். இத்தேர்தலில் பார்ப்-பனர்களின் பெரும் எதிர்ப்புக்--கிடையே அவற்றை எல்லாம் இலட்சியம் செய்-யாமல் ஓட்ட-ளித்து வெற்றிபெறச் செய்தது பாராட்டிற்-குரியதாகும். இத்-தேர்தலில் மட்டுமல்ல; எல்லா தேர்தல்-களிலுமே பார்ப்பனர்-கள் நமக்கு எதிராகவே பாடு-பட்டு வந்திருக்கின்றனர். இந்த நாட்டில் பறையனாக, சூத்தி-ரனாக இருப்பதைவிட துலுக்-கன் நாட்டில் வாழ்வதில் பெரு-மைப்படுகின்றேன். கிறிஸ்தவன் நாட்டில் வாழ்வதில் பெரு-மைப்-படுகிறேன்.
 சுதந்திரநாடு என்றால் அங்கு பார்ப்பான், பறையன், சூத்திரன், மற்ற எந்த ஜாதி-யுமே இருக்கக் கூடாது. மனி-தன் தான் இருக்க வேண்டும். எப்படிக் கடவுளும், மதமும், கோயிலும் நம்மை மடையர்-களாக்கி இழிமக்-களாக்கி வைத்திருக்கிறதோ, அது போன்று தான் சுய-ராஜ்யம், சுதந்திரம், ஜனநாயகம் என்பது நம்மை இழிவு-படுத்தி வைத்தி-ருக்கிறது. இதனை நான் சாதா-ரணமாகச் சொல்லவில்லை, 50 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டே சொல்கிறேன். உங்களிடம் மட்டும் சொல்ல-வில்லை. காந்தி, நேரு ஆகிய-வர்களிடமே சொல்லி இருக்-கின்றேன். அவர்கள் உணர ஆரம்பித்தது மிக மிகப் பின்னாலேயே ஆகும்.

கடவுள், மதம், ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் என்பவை யாவும் மனிதனை மடையன் ஆக்கு-வ-தற்காகப் பார்ப்பானால் கற்-பிக்கப்பட்டவையே ஆகும். கடவுள் நம்பிக்கையுள்ள முஸ்-லிம்கள் 50 கோடிக்கு மேலிருக்-கிறார்கள், அவர்கள் கடவு-ளுக்கு உருவ-மில்லை. அதே-போல் 100 கோடி கிறிஸ்த-வர்கள் இருக்கிறார்கள். அவர்-கள் கடவுளுக்கும் உருவ-மில்லை; அவர்கள் கடவுளை வணங்குவது நம்மைப்போல் காட்டு-மிராண்டித்தனமாக அல்ல. மனத்தால் நினைப்ப-தோடு சரி. நம்மைப் போல் பூசை- படையல்கள் செய்வது கிடையாது.

இந்த உலகில் சுமார் 20 கோடி மக்களாகிய இந்-துக்கள் என்று சொல்லப்படுகிற நம் மக்கள் தான் கடவு-ளுக்கு உருவம் செய்து அதற்கு 6 கால பூசை, திரு-மணம், திருவிழா என்று சொல்லி விழாக்கள் கொண்-டாடி மக்களை மடை-யர்களாக்கிக் கொண்டிருக்-கிறார்கள்.

நமது கடவுள்கள், புராணங்-கள், அவதாரங்கள் என்பவை யாவும் நம் மக்களைக் கொல்-வதற்காக ஏற்பாடு செய்யப்பட்-டவையே ஆகும். நம் கடவுள் கதைகளும், பெருமைகளும் எத்தனை கோடி பேரைக் கொன்றது என்பதில் தானிருக்-கிறது. கொன்றதை விழாவாகக் கொண்-டாடுகிறார்கள், கதா காலட்சேபம் செய்கிறார்கள். கடவுள் அவதாரங்கள், அழித்-தது எல்லாம் நம் மக்களையே என்-பதற்குப் பலஆதாரங்கள் இருக்கின்றன. பல அறிஞர்-கள் ஆராய்ச்சி செய்து எழுதியுள்-ளனர். நேருவே தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் இராமாய-ணம் என்பது தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெற்ற போராட்-டமே ஆகும் என எழுதி இருக்கிறார்.

கடவுள், மதம், ஜாதி, புராணம், ஆகிய இக்கற்பனை-கள் அனைத்தும் பார்ப்பான் மேல் ஜாதியாக இருப்-பதற்கும், நாம் கீழ் ஜாதியாக இருப்ப-தற்கும் கற்பிக்கப்-பட்டவையே ஆகும். இதை எல்லாம் நாங்-கள் ஒழிக்க வேண்டும் என்பது திமிரினால் அல்ல. இவை தான் நம்மை இழி மக்களாக, சூத்-திரர்களாக ஆக்கி வைத்திருக்-கின்றன. அதனால் தான் நம் இழிவைப் போக்க இவற்றை ஒழிக்க வேண்டும் என்கின்-றோம்.

இந்த நாட்டில் நாங்கள் ஒருவர் தான் பார்ப்பானைப் பார்ப்பான் என்றழைக்கின்-றோம். மற்றவன் பார்ப்பா-னைப் பிராமணன் என்று தான் கூப்பிடுகின்றான்? ஒருவனைப் பிராமணன் என்றால் மற்றவன் யார்? சூத்திரன் தானே! ஒரு பெண் இன்னொருத்தியைப் பார்த்து பதிவிரதை என்று சொன்னால் அவள் யார்? பதிவிரதைத் தன்மையற்ற விப-சாரி என்று தானே பொருள்.

நம் மந்திரிகள் கூட பார்ப்-பானைப் பார்ப்பான் என்று சொல்லத் தயங்குகின்றார்கள். மடாதிபதிகள் முதல் பார்ப்-பான் என்று சொல்ல தயங்கு-கிறார்கள்.

கடவுளை ஒழித்த கோயில்-களை, இடித்த பார்ப்பனர்-களை (கடவுள் பிரசாரகர்களை, மதப் பிரசாரகர்களை) எல்லாம் வெட்டி வீழ்த்திய நாடுகள் பல இருக்கின்றன. அந்நாடுகளில் எல்லா மனிதர்களும் சம அந்தஸ்துள்ளவர்களாக இருக்கி-றார்கள். பணக்காரன் ஏழை என்கின்ற பேதமில்லை.

முதலாளி, தொழிலாளி என்கின்ற பேதமில்லை. அந்த நாட்டில் போலீஸ் அய்.ஜி.க்குள்ள மதிப்பு சாதாரண கான்ஸ்-டேபிளுக்கும் உண்டு. கலக்டெரும், பியூனும் ஒரே மதிப்புடையவர்கள் என்கின்ற மதிப்போடு வாழ்-கின்றார்கள். எந்தப் பேதமும் அவர்களுக்-கிடையில் இல்லை. இவ்வள-வுக்கும் காரணம் அந்த நாட்-டில் கடவுள் இல்லாததா-லேயே ஆகும்.

நம் நாட்டில் பேதங்களிருப்-பதற்குக் காரணம் கட-வுளே-யாகும். இந்தப் பேதங்கள் ஒழிய இன்று கடவுளைச் செருப்பால் அடிக்கின்றோம். இவற்றில் மாறவில்லை என்றால் நாளைக்கு மனிதர்களையே கொல்ல நேரலாம். சமுதாய மாற்றம் என்றால் கொலை, கொள்ளை, தீவைப்பு, நாசம் யாவும் நடந்து தான் தீரும்.

இன்று நாம் எல்லாம் சூத்தி-ரர்களாக பறையன், சக்-கிலி-களாக இருப்பதற்குக் காரணம் கொலை. சித்திரவதை, கழு-வேற்றல் முதலிய காரியங்-களைச் செய்து தான் ஆகும். இதிலிருந்து மாற நாமும் இக்காரியங்களைக் கையாள வேண்டியது தான். அறிவான காலமாக இருப்-பதால் அடிப்-படையிலிருந்து ஆரம்பித்து இருக்கிறோம். அதாவது கட-வுளைச் செருப்பால் அடிப்பதி-லிருந்து துவக்குகின்றோம். இது வளர்ந்து நாளை அவர்கள் செய்த காரியத்தை நாமும் செய்யும் படி நேரலாம்.

இன்றைக்கு இருப்பதை விட மோசமான நிலை 2500 ஆண்டுகளுக்கு மேலிருந்து அப்போது ஒரே ஒரு மனிதன் சித்தார்த்தன் என்பவன் தோன்றி, தற்போது நாம் செய்வது போன்று அறிவுப் பிரசாரம் செய்த மக்கள் யாவ-ரையும் மாற்றிவிட்டான். வேதங்களை எல்லாம் நெருப்-பில் இட்டுக் கொளுத்தினான். அவன் கொள்கை நாடு முழு-வதும் பரவி மக்கள் எல்லாம் அவன் கொள்-கையைப் பின்-பற்ற ஆரம்பித்தனர். பார்ப்ப-னர்களை எல்லாம் கொலை செய்ய ஆரம்பித்தனர்.

இதைக் கண்டு பார்ப்பான் புத்த கொள்கையை ஏற்றவன் போல் நடித்து, அதில் சேர்ந்து பிரசாரகனாகி புத்த மடங்-களை எல்லாம் கொளுத்தி-னார்கள். பவுத்த கொள்கை-களை ஏற்றவர்களை எல்லாம் நாசம் செய்து அக்கொள்கை-களைத் தடுத்து விட்டனர். அதனால் தான் இன்றைக்குப் பார்ப்பானை பகுத்தறிவாளர் கழகத்தில் சேர்க்கக் கூடாது என்று சொல்கிறேன். அவனைச் சேர்த்-தால் புத்த இயக்கத்தில் சேர்ந்து புத்த கொள்கையைப் பரவவிடாமல் தடுத்தது போல் தடுத்து விடுவான். எனவே நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பார்ப்பானை நுழையவிடவே கூடாது.

பார்ப்பான் எந்த விதமான பாதகமும், அக்கிரமும் செய்-வான். அதற்கு அவன் சாஸ்தி-ரத்தில் அவனுக்கு இடமிருக்-கிறது. பார்ப்பான் தன் தரு-மத்தைக் காப்பாற்றிக் கொள்ள எந்த விதமான அக்கிரமும் செய்யலாம், அது பாவமல்ல என்பது சாஸ்திரமாகும். எனவே பார்ப்பான் நம்மை ஒழிக்க எந்தப் பலாத்காரமான காரியத்திலும் ஈடுபடலாம். அதற்கு எல்லாம் நாம் தயா-ராகத்தான் இருக்க வேண்டும். நம்மில் சிலர் உயிர் விட நேர-லாம். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் போராட வேண்டியதுதான்.

இப்போதைய காலம் மிகவும் பகுத்தறிவுக் காலம். உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டு போகிறது. உல-கில் நாம் ஒருவர் தான் இன்னமும் முட்டாள் தன-மாக, மூடநம்பிக்-கைக்காரர்களாக இருக்கின்-றோம். இதி-லிருந்து நாம் விடுதலை பெற்று மற்ற உலக மக்களைப் போன்று இழி-வற்று, அறிவு பெற்று வாழ வேண்டும். இனி நீங்கள் எந்தக் காரியத்தையும் நடுநிலையிலி-ருந்து சிந்திக்க வேண்டும்.

(`விடுதலை’, 22.5.1971) (12.5.1971 அன்று அரூரில் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் ஆற்றிய சொற் பொழிவு)

Saturday, December 19, 2009

கடவுள் - நம்பிக்கையற்றவன் பார்வையில்



கடவுளின் படைப்பு


ஒரு நல்ல தகப்பன், தன் வீட்டுப் புறவடையில் ஒரு கிணற்றை வெட்டி, அதற்குக் கைப்பிடிச் சுவர் கட்டாமல் தன் குழ்ந்தை - புத்தி இருந்தால் சாக்கிரதையாய் நடக்கட்டும் இல்லாவிட்டால் விழுந்து சாகட்டும் என்று சொல்லுவானா? அதுபோலவே, ஒரு நல்ல கடவுள், சாத்தானை (தீமைகளை) உண்டாக்கி விட்டுத் தனது பிள்ளைகளான குழந்தைகள் - புத்தி இருந்தால் சாத்தானுக்குத் தப்பிப் பிழைக்கட்டும், இல்லாவிட்டால் சாத்தானால் நரகத்தில் வீழட்டும் என்று சொல்லுவானா?

கடவுள் அறிவுத் தெளிவு இல்லாத இடத்திலிருந்தே தோற்றுவிக்கப்படுகிற ஒரு யூகப் பொருளாகவே - அதாவது முடிந்த முடிவாய் இல்லாமல் நினைத்துக் கொள்கிற பொருஆகவே - கண்டு பிடித்தவனாகிறான். இதனாலேயே எந்த மனிதனும் தனது சாதாரண அறிவுக்கும், காரணம் தெரிய முடியாத விசயங்களுக்கும் மேற்கொண்டு ஆராய்ச்சி அறிவைப் பயன்படுத்த அவசியமில்லாதவனாகிச் சவுகரியமான முடிவுக்கு வர வசதி கிடைத்துவிட்டபடியால் மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கும் ஆராய்ச்சி முயற்சிக்கும் அவசியமில்லாமல் போய் மனிதரில் பெரும்பாலானவர்களின் அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சி முயற்ச்சியும் தடைப்பட்டு விட்டது.

கடவுட் கோட்பாட்டில் உள்ள அடிப்படைக் கோளாறு

உலகிலே பாழாய்ப் போன எந்தக் கடவுளும்; உலகத்தில் மக்களுக்குக் கேடு செய்த எப்படிப்பட்ட அயோக்கியனையும் மன்னிக்கவும், மன்னிக்க முடியாவிட்டால், கேடு செய்தவனைத் தண்டிக்கவும் தான் தகுதி உடைய கடவுளாக இருக்கின்றனவே தவிர, எவனையும் எந்த ஜந்துவையும் மற்ற மனிதனுக்கு மற்ற ஜந்துவுக்குக் கேடு செய்யாமல் துன்பம் செய்யாமல் இருக்கும்படியான சக்தி இல்லாதவைகளாகத்தானே இருக்கின்றன!

மற்ற நாட்டில் கடவுளைச் சிருட்டித்தவன் கடவுளுக்கு நல்ல குணங்களைச் சிருட்டித்தான். நம நாட்டில் கடவுளைச் சிருட்டித்தவன் மனிதனையே தான் கடவுளாகச் சிருட்டித்தான். அதுவும் நல்ல மனிதனை அல்ல. கெட்ட மனிதனுடைய குணங்களையே கடவுளுக்கு ஏற்றிச் சிருட்டித்தான். மினதன் மாதிரியே சோறு, சாறு வேண்டும். வைப்பாட்டி வேண்டும் என்று இப்படியாகப் பித்தலாட்டமாகத்தான் உண்டு பண்ணினான். மக்களும் இதுவெல்லாம் கடவுள் செயல் என்று தான் எண்ணிக் கும்பிடுகின்றனரே ஒழிய கடவுளுக்கு ஒழுக்கம் இருக்க வேண்டும் என்று கருதவே இல்லை.

கடவுளை நம்புவோரின் சிந்தனையற்ற தன்மை

கோயிலில் குழவுக்கல்லில் போய் முட்டிக் கொள்ளுகின்றானே, எவனாவது அது கல் என்று உணருகின்றானா? உண்மையில் அதற்குக் கடவுள் சக்தி இருக்குமானால் ராத்திரியில் திருடன் சாரியைக் குப்புறத்தள்ளி அதன் பெண்டாட்டியின் தாலியையும் சீலையையும் அறுத்துக் கொண்டு போகின்றானே, எந்தச் சாமியாவது ஏண்டா அப்படி என் மனைவியின் தாலியையும் துணியையும் அவிழ்த்துக் கொண்டு போகின்றாய் என்று கேட்கின்றதா? அப்படித் தன் மனைவியின் சேலையையும் தாலியையும் காப்பாற்றாத கடவுள் மனிதனுக்கு என்ன செய்ய முடியும்? இதை எவனாவது எண்ணிப் பார்க்கின்றானா?

கடவுட் கோட்பாட்டில் காணப்படும் சிக்கல்

கடவுளை உண்டாக்கினவன் என்ன சொல்லி உண்டாக்கினான்? கடவுள் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு உருவமில்லை. அவன், உன் கண், காது, மூக்கு, செவி, மெய் என்கின்ற அய்ம்புலன்களுக்கும் எட்டாதவன்; ஆனால் அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. அவனால் தான் இந்த உலகமே நடக்கிறது என்கிறான். மனம், வாக்கு, காயங்களுக்கு எட்டாதவன், அவன் மனத்திற்கு மட்டும் எப்படி எட்டியது? சர்வவல்லமையுள்ளவனுக்குத் தான் இருப்பதை ஏன் தன்னால் காட்டிக் கொள்ள முடியவில்லை.

கடவுள் நன்மை செய்தவனுக்கு நன்மை செய்வார்; கடவுள் தீமை செய்தவனுக்குத் தீமை செய்வார்’ என்று கடவுள் பிரச்சாரகர்கள் சொல்லுகிறார்கள். அப்படியானால் மனிதனை நன்மை செய்யச் செய்தவன் யார்? தீமை செய்யச்செய்தவன் யார்? ஒரு மனிதனைத் தீமை செய்யாமல் இர்க்கச் செய்ய முடிய வில்லையானால் கடவுள் எப்படி சர்வசக்தி உள்ளவராவார்?

‘கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்து விட்டார்; அந்த அறிவைப் பயன்படுத்துவதில் தீமை ஏற்பட்டால் கடவுள் தண்ட்க்கிறார்’ என்றால் கடவுளுக்குப் புத்தியிருக்க வேண்டாமா? இவனுக்கு அறிவைக் கொடுத்தால் தீமை செய்வான். ஆதலால் இவனுக்கு அறிவும் சுதந்திரமும் கொடுக்கக்கூடாது என்று அறிவுள்ள கடவுள் சிந்திக்க வேண்டாமா?

கடவுளின் இருப்பு

உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தான் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது? பஞ்சேந்திரியங்களுக்கும், மனதுக்கும் எட்டாமல் ஒரு கடவுள் ஏன் பயந்து கொண்டு மறைந்து கொண்டு இருக்க வேண்டும்? சர்வசக்தி உள்ள கடவுள் என்று சொல்லி உற்பத்தி செய்துவிட்டு, அது நமக்கு விளங்கும்படிச் செய்யாவிட்டால் அது எப்படு சர்வ சக்தி உடையதாகும்.

பிரார்த்தனை

கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் இழிவு நீங்காது. நீங்கி விடும் என்று நினைப்பது முட்டாள் தனம். அது இவனுடைய முயற்சியைத்தான் தடை செய்யும்; பிரார்த்தனை செய்வ தென்பதை பெரிய முட்டாள் தனம். பெரிய அக்கிரமத்தைச் செய்து விட்டுப் பிரார்த்தனை செய்து விட்டால் போதுமென்று எவனும் துணிவுடன் அக்கிரமம் செய்ய ஆரம்பித்துவிடுகிறான். பிரார்த்தனையில் உள்ள நம்பிக்கையால் கொலை பாதகனும் கூடத்தான் கடவுளைப் பிரார்த்தித்து விட்டுக் கொலை செய்யச் செல்கிறான். பிரார்த்தனை எங்காவது அவனது கொலை பாதகத்திற்குப் பரிகாரம் ஆகிவிடுமா? பிரார்த்தனையால் ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்ள முடியுமானால், தகுதியும், அறிவும் தேவையே இல்லையே! ஆகவே பிரார்த்தனையின் மூலம் நீங்கள் முட்டாள் ஆவதோடு கடவுளையும் முட்டாளாக்கி விட்டவர்களாகிறீர்கள்

நன்றி: பெரியார் இணையத்தளம்

காஞ்சிபுரத்து அர்ச்சகர்...சிரியாய் சிரிக்கிறது


காஞ்சிபுரத்து அர்ச்சகர்

கதைதான்
சிரியாய் சிரிக்கிறது

அவனின்றி ஓர்
அணுவும் அசையாது என்றான்
தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான் என்றான்
கொட்டிக் கொடு கோயிலுக்கு
என்றான்
கட்டிக்கொடு கோயிலை
என்றான்
கட்டி விடு பொட்டுக்கு
பொட்டைப்பிள்ளையை என்றான்
உங்கள் வீட்டுப்பிள்ளைகளை
கொஞ்ச நாள்
பொட்டுக்கட்ட அனுப்புங்கடா
என்றவுடன் அம்முறையே
வேண்டாம் என்றான்
கடவுள் பற்றி
எத்தனை கதை சென்னான்
பார்ப்பான்
உன்னிடமும்
என்னிடமும்
ஒன்றுமில்லை என்பதை
அவனே நிரூபித்து விட்டானே
அனைத்து சாதியினரும்
அர்ச்சகர் ஆனால்
கோவிலின் புனிதம்
கெட்டுவிடுமாம்
கோவிலுக்கு வரும்
அனைவருக்கும்
புண்ணியம் கிட்டாதாம்
பெண்கள் அர்ச்சகர்
ஆனால் தீட்டால்
தீட்டாகி விடுமாம்
எத்தனை கதை சென்னான்?
உன்னிடமும்
என்னிடமும்
ஒன்றுமில்லை என்பதை
அவனே நிரூபித்து விட்டானே


தமிழில் பாடினால்
தீட்டாம்! கோயிலை
எட்டு நாள் கழுவணுமாம்
தமிழன் தெட்டால்
தீட்டாம் ! கோயிலை
பத்து நாள் கழுவணுமாம்
இவ்வளவு நாறியபின்பும்
கோயிலைக் கழுவிவிடத்
தோணலையே !
கேட்டாரே கவிஞர்
‘‘விடுதலை’’யில்!


கடவுளுக்கு முன்னால்
காமம் செய்தால்
சொர்க்கத்துக்கு நேரடி
டிக்கெட்டாம்
எல்லாம் அர்ச்சகர்
தேவநாதன் உபயம்
பிரச்சார உத்தியாய்
மதம் பரப்ப
மற்றவரும்
பயன்படுத்தலாம்


ஒரு பார்ப்பான்
செய்யும் தவறுக்கு
அர்ச்சகர்
அனைவரையும் பழிப்பதா ?
பால்குடி பாலகர்கள்போல்
அப்பாவியாய் சில
பார்ப்பனர்கள் எழுதுகிறார்கள் !
அனைத்து ஜாதியினரும்
அர்ச்சகர் ஆகலாம் என்று
எத்தனை பார்ப்பனர்கள்
எழுதுகோலை எடுத்தார்கள் ?
எந்தெந்த பார்ப்பன ஏடுகள்
எழுதின ?
புனிதம் கெட்டுவிடும்
புராணம்தானே
பத்திரிகைகள்முதல்
நீதிமன்றம்வரை
எங்கள் கேள்வி


தெள்ளத்தெளிவாய்!
அனைத்தும் அறிந்தவன்
ஆண்டவன் என்றாயே?
அர்ச்சகன்
தேவநாதன் செய்த
செயலெல்லாம்
ஆண்டவனுக்குத்
தெரிந்து நடந்ததா?
தெரிந்தே நடந்தால்
தண்டனை அர்ச்சகருக்கு
மட்டும்தானா?
அல்லது
அங்கு அமைதியாய்
இருந்து நீலப்படம் பார்த்த
ஆண்டவனுக்கும்
சேர்த்துத்தானா ?


தெரியாமல் நடந்தது
என்றால்
அவனின்றி
ஓர் அணுவும் அசையாதென்பது
பொய்தானே?
தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான்
என்பது பொய்தானே?
பார்ப்பனர்கள்
தீர்மானம் போடலாமா?
அவனின்றி அசையுமென்று
நாங்கள் சொல்லிவைத்தவை
அனைத்தும்
அபத்தக் குப்பைகள்
என்று!

வா.நேரு எழுதியது விடுதலை ஞாயிறு மலர் 19.12.09

தினமணி வைத்தியநாதய்யர் என்ற -‘சோ’ தயாரிப்புப் பானம்


திருவாளர் வைத்தியநாதய்யர் என்ற _ -‘சோ’ தயாரிப்புப் பானம் _ - ஆர்.எஸ்.எஸ். பேர் வழி “தினமணி”யின் ஆசிரியராக வந்த நிலையில், பார்ப்-பனியப் பாம்பு ஆயிரந்தலைகளைக் கடன் வாங்கித் தமிழர்களைக் கொத்தித் தீர்க்கிறது!

27.11.2009 நாளிட்ட “தினமணி”யின் வெள்ளி மணி தமிழர்களைக் கொச்-சைப்படுத்தும் வெறிமணியாக ஒலிக்-கிறது.
“அருமறையின் உட்பொருளே அண்ணாமலை’’ என்ற கட்டுரை ஒரு முழுப்பக்கத்திற்கு வெளியிடப்பட்-டுள்ளது.

தமிழர்களின் சமய வழிபாடு மற்றும் தமிழகத்திருமுறைகள் மூலம் வழிபாடு நடத்தும் தமிழர்களுக்கு அக்கட்டுரை பல நாம கரணங்களைச் சூட்டியி-ருக்கிறது:

நவீன பண்டிதர்
துன்மார்க்கர்
கீழோர்
பொறாமைக்காரர்
குரு துரோகி
மரண தண்டனைபெறுவர்
நரகம் போவார்கள்

கோபமும், சாபமும் கொந்தளிக்கிறது. மரத்துப் போன தோலை உடைய தமிழர்களுக்கும்கூட கொஞ்சம் சொரணையை ஊட்டும் தார்க்குச்சிகள் அவை.

பக்திப் போதை ஏறிக் கிடப்பவர்கள்-தானே _ இந்தச் சூத்திரஆசாமிகள் _ எப்படி எழுதினால் என்ன? ஏறி மிதித்தால் என்ன ‘ரோஷம்’ பொத்துக் கொண்டா கிளம்பப் போகிறது என்கிற பொல்லா நினைப்பு இந்தப் புரோகிதக் கூட்டத்துக்கு!

அதனால்தான் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டே தமிழ்மீது சாணி வாரி இறைக்கிறார்கள்.

வேதத்தின் இருகண்கள் சைவம், வைணவம் என்று நிலை நிறுத்த வருகின்றனர். எல்லாவற்றிற்கும் மூலம் வேதம் என்பதுதான் இவர்கள் நிரூபிக்க முயலும் விவகாரம்.

சிவன்தான் எல்லோருக்கும் மூலக்-கடவுள் _ அந்த வேதக்கடவுள்தான் திருமுறைகள் கூறும் சிவனும் என்று சாதிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம். தமிழ்க் கடல் மறைமலை அடி-களார் போன்றவர்கள் கால்களால் இடறித் தள்ளிய குப்பையைக் கும்பத்-தில் வைத்துகும்பிடச் சொல்லுகிறது இந்தக் குடுமிகள் கூட்டம்.

தாருகாவனத்து ரிஷிப் பத்தினிப் பெண்களின் கற்பைச் சூறையாடினான் சிவன் என்று ஆரியம் கூறும் அந்த வேதியச் சரக்கை, வேதத்தின்மூலத்தை சைவம் ஏற்றுக் கொள்கிறதா?

“நம்முடைய சநாதன தருமத்துக்கு வேதங்களே அடிப்படை. இன்று நவீனப் பண்டிதர்களாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் சிலர், ‘மறைகளே தேவை யில்லை’ என்று கூறிக் கொண்டு, ஆனால் வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள சில கிரியை களை சைவத் திருமுறைகளின் மூலம் ஆற்றி, அதன் மூலம் வாழ்ந்து வருகின்றனர். இது சைவ சமயக் குரவர்கள் நால்வரும், ஏனைய சைவப் பெரியோர்களும் காட்டி யருளாததால் துன்மார்க்கம்’’ என்று இவ்வளவு பச்சையாகச் சாடுகின்றது அந்தக் கட்டுரை.

சைவ சமயக் குரவர்களும் சேர்த்துத்-தான் சாடப்பட்டுள்ளனர்.

நமது தமிழன்பர்கள், சைவப் பெருமக்கள், சைவப் பக்தர்கள், நமது ஆதீன கர்த்தர்கள் “சிவசிவ’’ என்று கூறி, தீயவற்றைக் கேட்கக் கூடாது என்று கண்களை மூடிக் கொள்ளப் போகி-றார்களா என்று தெரியவில்லை.

மூலம் என்று இவர்கள் சொல்லுகிற வேதங்களின் யோக்கியதை என்ன? தந்தை பெரியாரும் திராவிடர் இயக்-கமும் அவற்றை நார் நாராகக் கிழித்து எறிந்திருக்கின்றனவே!

சோமபானம் குடித்து கும்மாளம் போடும் தேவர்கள், தேவாதி தேவனான இந்திரன் -_ இவர்களின் யோக்கியதை-களை வேதங்கள் நிர்வாணமாகக் காட்டவில்லையா?

“அக்னியே! ஒரு தேரிலோ அல்லது பல தேர்களிலோ ஏறி எங்கள் முன்னே வரவும், உன் குதிரைகள் மிக்க ஆற்றல் உள்ளவை. வேள்வியில் சமைத்த சமையல் உணவுக்காக முப்பத்து முக்கோடி தேவர்களுடனும், அவர் களுடைய மனைவியர்களுடனும் நேரில் வரவும். சோமபானத்தால் முப்பத்து முக்கோடி தேவர்களையும், அவர்களின் மனைவி களையும் போதை ஏற்றவும்’’_ (ரிக் வேதம்: 2515)

இந்திரனே, குதிரைகளின் தலைவனே!, இதைக் குடி, அன்றும் சரி, இன்றும் சரி, சோமக்குடிக்கு முதன்மையான ஆதர வாளன்தானே! உனது உணவே சோம ரசந்தானே’’-_ (ரிக் வேதம்: 4737)

வேதத்தின் யோக்கியதைக்கு வேறு என்ன எடுத்துக்காட்டு தேவை?

எப்படி பசுக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணிகளை சந்தோஷப்படுத்துகிறதோ, அப்படியே நல்ல ஸ்திரீகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும், மற்ற ஆண்களையும் சந்தோஷப்படுத்து வார்களாக! _ (யஜுர்வேதம்: 17 _ -3)

ஆடு, மாடு போல உறவுகளைப் பற்றிக்கூட கவலைப்படாமல், கலவி விஷயத்தில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டுமாம். தங்கள் கணவன்களை மாத்திரம் அல்ல; எந்த ஆண்களையும் சந்தோஷப்படுத்த வேண்டுமாம். அப்படி சந்தோஷப்பமித்துகிற பெண்கள்தாம் நல்ல பெண்களாம் (ஸ்திரீகள்)

இந்த யோக்கியதையில் உள்ள வேதத்தை அடேயப்பா, ‘தினமணி’ எப்படி எல்லாம் உச்சிமோந்து சப்புக் கொட்டுகிறது.

ஆரிய மொழி தமிழகக் கோயில்-களில் குடி புகுந்தது எப்போது? ராஜராஜசோழன் காலத்தில்தானே! அது பத்து நூற்றாண்டுகளுக்கு முன்புதானே! அதற்குமுன் தமிழ்நாட்-டில் கோயில்கள் இல்லையா? வழிபாடு கிடையாதா? அந்த வழிபாடு தமிழில்-தானே நடந்தது? வேதம் வந்துதான் கிழித்தது என்பதெல்லாம் யார் காதில் பூ சுற்ற?

தமிழ்மொழி என்றாலே பார்ப்-பனர்களுக்கு ஒரு “இனம் தெரியாத’’ வெறுப்பு. ‘‘தமிழை நீசப் பாஷை’’ என்று சொன்னவர்தானே சங்கராச்சாரியார் _ பூஜை வேலைகளில் இப்பொழுதுகூட அவர்கள் தமிழில் பேசுவது கிடையாதே!

“சது மறை ஆரியம் வருமுன்
சகம் முழுதும்
நின தாயின்,
முதுமொழி நீ அநாதி என
மொழிவதும் ஓர் வியப்பாமோ!’’

என்று தமிழைப் பற்றிக் கூறுகிறார் மனோன்மணீயம் சுந்தரனார்.

அவரையும் “தினமணி”யின் வெள்ளி-மணி துன்மார்க்கர் பட்டியலில் சேர்த்து விட்டதே!

வெள்ளிமணி கட்டுரையில் சிவனைத் தூக்கி வைத்துக் கூத்தாட வேண்டும் என்பதற்காக வைணவத்-தையும் வம்புக்கு இழுத்துள்ளது.

பஸ்ம ஜாபால உபநிடதத்தில் காசியின் பெருமையைக் கூறும் சிவபொருளாகிய விசுவநாதர், “இம் மாநகரில் கிழக்கில் கூப்பிய கரங்களோடு அல்லும் பகலும் பிரம்மா என்னைத் தியானிக்கின்றார். மேற்கில் இந்திரன் என்னை வழிபட்டுக் கொண் டிருக்கிறார்! தெற்கில் தலையின்மீது தனது கரங்களைக் கூப்பிய வண்ணம் திருமால் “என்னைத் தியானம் செய்து கொண்டிருக் கிறார்’’ என்று விளக்கியருளியுள்ளார் என்கிறது “தினமணி’’க் கட்டுரை.

இதன் மூலம் பிர்ம்மா, விஷ்ணு இவர்களுக்கு மேலாக உயர்ந்த பீடத்தில் உள்ள கடவுள் சிவபெருமானே என்பதுதான் “தினமணி’யின் கருத்து

ஒரு 17ஆண்டு 8 மாதங்களுக்கு முன் பயணம் செய்வோம். ‘கல்கி’ இதழை (11.4.1982) கொஞ்சம் புரட்டுவோம்.

அகோபில மடத்து ஜீயரின் (இவர்தான் வைஷ்ணவர்களுக்கான மடாதிபதி _ஸ்மார்த்தர்களுக்கு சங்கராச்சாரியார்போல) பேட்டி ஒன்று அதில் வெளியாகியிருக்கிறது.

“நான்சிவன் கோயில்களுக்கு உதவி செய்ய மாட்டேன். ஏன்னு கேட்டா.. ஸ்ரீமத் நாராயணன் தான் (திருமால் என்னும் விஷ்ணுதான்) எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம். பிரம்மாவை நாராயணன் (விஷ்ணு) தன் நாபியிலிருந்து (தொப்பூழ்) படைத்தான். அந்தப் பிரம்மா சங்கரனைப் (சிவனை) படைத்தான். என்ற கதை இருக்கு. அதுபடி பார்த்தா சங்கரனுக்கு (சிவனுக்கு) நாரா யணன் பாட்டன் ஆகிறார். பிரம்மா பிள்ளைஆகணும். அவங்களும் தெய்வம் தான். தபஸ்பண்ணி தெய்வத்தன்மைக்கு உயர்ந்தவர்கள். ஆனால் நாராயணன் எப்போதும் உள்ளவர். பாக்கிப் பேருக்கு பலன் கொடுக்கிறவர். அவரை வழிபடற நாங்கள் வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம். நாராயணனைத் தெய்வமாகக் கொண்டு வழிபட்டு மோட்சத்துக்கு போக வழி செய்து கொண்டவர்கள், நான்தான் தெய்வம் என்று சொல்லிக் கொள்கிற வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது. அப்படி எங்களுக்குச் சட்டம் இருக்கு. ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும். அதனாலே சிவன் கோயில் திருப்பணிக்கு பணம் இருந்தாலும் தர மாட்டோம்’’ என்று ஜீயர் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக வெட்டித் தள்ளிவிட்டார்.

“தினமணி’’ வெள்ளிமணி கட்டுரை-யாளரைவிட அகோபிலமட ஜீயர் தகுதி குறைந்தவராக இருக்க முடியாது.

தலையின்மீது திருமாலாகிய விஷ்ணு கரங்களைக் கூப்பிய வண்ணம் சிவனைத் தியானித்துக் கொண்டு இருப்பதாக தினமணி கூறுகிறது ஜீயரோ, சிவனா? அவன் பொடியன்; எங்கள் விஷ்ணுவுக்குப் பேரன்; அவனைக் கும்பிட்டால் புத்தி கெட்டுப் போகும் என்கிறார்.

‘தினமணி’யார் ‘கல்கி’யாருக்குப் பதில் சொல்லிவிட்டு எங்கள் தமிழர்மீது, தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்று கூறுகிற சைவ அன்பர்கள்மீது ஆக்ரோசமாகப் பாயட்டும்!

அதுசரி, தமிழர்கள் என்ற முறையில் நாத்திகர்களாகிய நாங்கள் தமிழர்கள்-மீது விழுந்து பிராண்டும் தினமணிக்குச் சூடு கொடுக்கிறோம்.

சைவ மெய்யன்பர்களே, தமிழ்க் கீர்த்திகளே, சைவ மடாதிபதிகளே! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

விடுதலை ஞாயிறு மலர் 19.12.09

Friday, December 18, 2009

ஜோதிடப் பட்டயமாம்! பா.ஜ.க ஆறாண்டு காலம் ஆண்டதன் விளை-வாகப்....

பாரதீய ஜனதா கட்சி ஆறாண்டு காலம் ஆண்டதன் விளை-வாகப் பலவித மூடத்தனங்கள் வளர்க்கப்பட்டன. ஜோசியம் ஒரு அறிவியல் எனக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டது. அது எப்படி அறிவியல் ஆகும் என்கிற கேள்வி நாட்டின் பலதரப்பு-களாலும் கேட்கப்பட்டதால், மந்திரி முரளி மனோகர் ஜோஷி அதனை ஒரு கலை என்ற அளவில் கற்றுக் கொடுக்கப்போகிறேன் என்று அறிவித்தார். இதனைப் பாடமாக வைத்தால் 5 கோடி ரூபாய் நிதி அளிக்கப்படும் என்றெல்லாம் கூட ஆசை காட்டினார். மய்ய அரசின் புதுவைப் பல்கலைக் கழகத்தில் அது பாடமாக உள்ளது.

மதுரையில் ஒரு பல்கலைக் கழகத்தில் அது பட்டயப் படிப்பாகக் கற்றுத் தரப்படுகிறது. இந்த ஆண்டு முதல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டயப்படிப்பு சொல்லித் தரப் போகிறார்களாம். விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்

பார் கெடுக்கும் எண்ணமுடன் பார்ப்பனர்.
அறிவற்ற ஜோதிடத்தைப் போற்றி
வேரில் வெந்நீர் வார்த்தனர், அய்யா.
செறிவுற்ற கருத்தால் அதை ஒழித்தார்.
பார் இன்றைய நிலை பாடமாம் அது.
பட்டமாம் பட்டயமாம் ஜோதிடத்தில்!

என்று நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லையா?

ஜோசியனுக்கு ஜெயில்

1930_க்கு முன் நம் நாட்டில் நடந்த உண்மைச் சம்பவம் இது. நூற்றுக் கணக்கான சமஸ்தானங்களில், கபுர்தலா சமஸ்தானமும் ஒன்று. இதன் மன்னர் ஜகத்சிங். இவரின் மகன் இளவரசர் பரம்ஜித்-சிங். அவரின் மனைவி ஜப்பால் சமஸ்தான இளவரசி பிருந்தா. இவர்களுக்கு மூன்றும் பெண் பிள்ளைகள். தனக்குப் பிறகு தன் மகன், அவருக்குப் பிறகு ஆள்வதற்கு ஆண் வாரிசு இல்லையே என்கிற குறை மகாராஜாவுக்கு இருந்தது.

அரண்மனை ஆஸ்தான ஜோசியர் சிறீராம் பண்டிதர் மாமன்-னரிடம் அடித்துச் சொன்னார் - இளவரசரின் நான்காம் குழந்தை மகன் என்று! மாமன்னர் மகிழ்ந்தார். அவரின் மகனுக்கு நான்காம் குழந்தையை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். குழந்தை பிறக்கும் நாள் நெருங்கியது. அரச குடும்பத்தினரைத் தவிர்த்து, அரசாங்க அதிகாரிகள் மத்தியிலும் பெருத்த எதிர்பார்ப்பு, பிறக்கப்-போவது நாட்டின் எதிர்கால மன்னராயிற்றே!

குழந்தை பிறந்தவுடன் அரச மரியாதை அளித்து வரவேற்றிட வேண்டும் என்று தளபதி பக்சி பூரன் சிங் பகதூருக்குக் கட்டளை. அரண்மனை, ஊர் முழுவதும் வண்ண விளக்கு அலங்காரங்கள். பட்டாசு வகைகளை கல்கத்தா நகரத்திலிருந்து வரவழைத்துத் தயாராக வைத்திருந்தனர். 101 குண்டுகள் முழக்கத்துடன் குழந்தை பிறந்ததை நாட்டு மக்களுக்கு அறிவித்திட அனைத்தும் தயார். எல்லா வகைச் செலவுகளுக்காகவும் 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப் பட்டது அந்தக் காலத்திலேயே!

1926 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி, விடியற்காலை 3.30 மணிக்கு பிருந்தாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. லேடி டாக்டர் பெனாரா குழந்தை பிறந்த சேதியைக் கண்களில் நீர் வழிய அறிவித்தார். எதிர்கால மன்னர் பிறக்கவில்லையே என்கிற வருத்தம் வெள்ளைக்கார டாக்டர் அம்மணிக்கும் இருந்தது.

ஆஸ்தான ஜோசியர் சிறீராம் பண்டிதர் எவ்வித விசாரணையும் இல்லாமல் 9 ஆண்டு காலச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளே தள்ளப்பட்டார். திவான் ஜர்மனிதாஸ் என்பார் எழுதிய மகாராஜா என்ற நூலில் எழுதப்பட்டிருக்கும் செய்தி இது! இதுதான் ஜோசியத்தின் யோக்தை! சிறீராம் பண்டிதரை சிறைக்குள் தள்ளிய கபுர்தலா மகாராஜாவைப் போல, இன்றைய அரசுகள் இருந்தால் இத்தகைய மோசடிகள்நடக்குமா?

- சு.அறிவுகரசு கட்டுரை விடுதலையில் (18.12.09) எழுதியது

புராணங்கள் புகட்-டப்படும் வரை நாடு முன்-னேறுமா? சிந்திப்பீர்!


குருவாயூர் கிருஷ்-ணன் கோயிலில் குசேலர் தினம் கொண்டாடப்பட்ட-தாம். நைவேத்தியத்துக்காக மட்டும் ரூ.2 லட்சம் செலவு செய்யப்பட்டதாம்.


பிரசாதத்தைப் பெற சிறப்பு ஏற்பாடுகள் (சிஷீuஸீtமீக்ஷீ) உண்டாம். நீண்ட வரிசையில் நின்று இதற்-கான சீட்டுகளைப் பணம் கொடுத்துப் பக்தர்கள் பெற்றார்களாம்.

எதற்காக இந்தக் குசேலர் விழாவாம்? வறு-மையில் வாழ்ந்த குசேலர். தனது வறுமையைப் போக்க பால்ய நண்ப-னான கிருஷ்ணனைத் தரி-சிக்க துவாரகை சென்றா-னாம். கிருஷ்ணன் தன் நண்-பன் குலேசனின் வறு-மையைத் தீர்க்க ஆவன செய்தானாம்!  
இந்தக் குசேலர் கதையை நினைத்தால் ஒரு பக்கம் சினமும், இன்-னொரு பக்கம் சிரிப்பும்-தான் வருகிறது. இது-குறித்து தந்தை பெரியார் குறிப்பிடுவது மிகவும் சிந்-திக்கத் தக்கதாகும். இதோ பெரியார் பேசுகிறார்:

‘‘குசேலர் கதையில் குசேலருக்கு 27 பிள்ளை-கள் என்றும், 27 பிள்ளை-கள் பெற்று குசேலர் தரித்-திரத்தில் துன்பப்பட்டு, 27 பிள்ளைகளை அழைத்துக்-கொண்டு கிருஷ்ணன் (கடவுள்) இடத்தில் சென்று பிச்சை கேட்டதாக-வும், கடவுள் ஏராளமாகச் செல்வம் கொடுத்ததாக-வும் கதை சித்தரித்த ஆசி-ரியர் சிறிதுகூடப் பகுத்-தறிவைப் பயன்படுத்த-வில்லை. ஒருவனுக்கு 27 குழந்தைகள் இருந்தால், அவன் வருஷத்துக்கு ஒரு குழந்தை பெற்றிருந்-தால், இருபது வயதும், அதற்கு மேற்பட்ட வய-தும் நிறைந்த குழந்தைகள் எட்டாக இருக்கவேண்-டும். இந்தக் குழந்தை-களும் சோம்பேறித் தடி-யன்கள்போல் ஒரு வேலைக்கும் இலாயக்கில்-லாத மாமிசப் பிண்டங்-களாகவா இருந்திருக்கக் கூடும்? இப்படி 20 வய-துக்கு மேற்பட்ட மக்-களை வீட்டில் வைத்துக்-கொண்டு ஒருவன் பிச்சைக்குப் போயிருந்தால், அந்த நாட்டில் மற்றவர்களும் இதுபோல் இருந்திருக்க-வேண்டாமா? அப்படியி-ருந்-தால் அந்த நாடு எப்படி உருப்படியாகி இருக்கும்? இப்படிப்பட்ட சோம்பேறித் தடியன்க-ளுக்கு கடவுள் செல்வம் கொடுக்கலாமா?

இப்படி ஒரு கூட்டம் நம்மிடம் வந்து பிச்சை கேட்டால், நாம் என்ன சொல்லுவோம் என்பதைச் சிந்தியாது, இவ்வளவு முட்-டாள்தனத்தை கடவுள் மீது ஏற்றிய ஆசிரியர் எவ்வளவு அறிவற்றவராக இருக்கவேண்டும்?’’ என்று வினாக்களை அடுக்கிக்-கொண்டே போகிறார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

குலேசன் தினத்தைக் கோயிலில் ஆண்டு-தோறும் கொண்டாடு-வதன் தாத்பரியம் என்ன?

சோம்பேறியாகக் கிடந்தாலும் கடவுளிடத்-தில் சென்றால் சோறு கிடைக்கும், செல்வம் கிடைக்கும் என்றுதானே சொல்ல வருகிறார்கள்? அதாவது உண்மையா? கடவுளிடம் சென்றால் கிருஷ்ணன், குலேசனுக்-குக் கொடுத்ததுபோல், இப்-பொழுதும் கொடுப்பானா? அப்படி ஒரு நிலை ஏற்-படின் நாட்டில் அரசுகள் எதற்கு? திட்டங்கள் எதற்கு? இந்தப் புராணங்கள் புகட்-டப்படும் வரை நாடு முன்-னேறுமா? சிந்திப்பீர்!

- விடுதலை 18.12.09 மயிலாடன்

Tamil 10 top sites [www.tamil10 .com ]