Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts
Sunday, January 10, 2010
நமது நிலைமையும், பார்ப்பனர் நிலைமையும்
பார்ப்பன ஜாதியில் எண்ணிக்கையற்ற உட்பிரிவுகள் எவ்வளவோ இருக்கின்றன. பார்ப்பன சமூகம் மேன்மையாக இருப்பதற்கு அவற்றிற்கான எல்லா உட்பிரிவுகளும் ஒற்றுமை-யாகச் சேர்ந்து கொண்டு எப்படி மேன்மை கொண்டிருப்பது என்பதைப்பற்றி ஆலோசித்தும் கடைசியாக மூன்று வித தீர்மானங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதாவது ராஜ்ய ஸ்தாபனங்களில் இருக்கும் பார்ப்பனரல்லாத தலைவர்களை விலக்கி, எல்லா ஸ்தாபனங்-களையும் கைப்பற்றுவது. 2ஆவது, தமது ஜாலவித்தையினால் பார்ப்பனரல்லாத மக்களை மூடர்களாக்கி, பஞ்சாங்கம், தர்ப்பை புல்லை வைத்துக்கொண்டு, இறந்துபோன பெற்றோர்களை வைத்துக்கொண்டு இந்த இரண்டு பலமான ஆயுதங்களால், நரகத்திலிருந்து மோட்சத்துக்கு அனுப்புவது. 3ஆவது, பார்ப்பனரல்லாத மக்களால் நிருமானிக்கப்பட்ட தெய்வ ஸ்தலங்-களில் இருக்கும் பார்ப்பனரல்லாத தலைவர்களை விலக்கி சமஸ்கிருத பாஷையில் உயிர் இருப்பதாகக் காட்டி அபகரித்துக்கொள்வது. இந்த மூன்று தீர்மானங்களையும் பலமான ஆயுதமாக வைத்துக்கொண்டு காரியம் செய்ய ஆரம்பித்தார்கள். கொஞ்ச காலத்தில் பார்ப்பனரின் எண்ணத்தின்படி எல்லாக் காரியங்களும் சாதித்துக்கொண்டார்கள். அதன் பயனாக பார்ப்பன சமூகம் உலகத்தில் சீரும் சிறப்புடன் வளர்ந்து வருவதும் அல்லாமல் பார்ப்பன சமூகத்துக்கு ஆதிக்கம் வலுக்கவோ, ராஜ்ய ஸ்தாபனங்களில் இருக்கும் பார்ப்பனர்கள் அவர்கள் படித்த சட்டத்தைக் காட்டி, பார்ப்ப-ன-ரல்லாத மக்களிடத்தில் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்துக்கொள்கிறார்கள். பஞ்சாங்கம், தர்ப்பைப்புல் என இரண்டு பலமான ஆயுதங்கள் வைத்துக்கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் நமது மக்களிடம் பயமுறுத்தி பெற்றோர்களுக்கு மோட்சம், நரகம் என்கிற வார்த்தையினால் நமது மக்களிடத்தில் கோடிக்கணக்கான பணத்தை வரி வசூல் செய்து கொள்கின்றார்கள். சுவாமி கோவிலிலிருக்கும் பார்ப்பனர்களும், லோக குருக்களும் சாமி கோவிலுக்கு வரும் கோடிக்கணக்கான மக்-களிடத்தில், சுவாமி பேரால் மோட்சம் கிடைக்கு-மென்று சொல்லி அர்ச்சனை, அபிஷேகம், சமாராதனை இன்னும் எவ்வளவோ காரியங்களைக் செய்யச் சொல்லியும், நமது மக்களிடத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூல்செய்து கொள்கிறார்கள். அல்லாமலும் அவர்களை நாம் சுவாமி என்று கும்பிடும்படியாகவும் செய்து-விட்டார்கள். தவிரவும் நமது மக்களைத் சூத்திரன், வேசி-மகன், தீண்டாதவன், சண்டாளன், அடிமையிலும் அடிமை இன்னும் எவ்வளவோ சொல்லத்தகாதவை சொல்லி பார்ப்பனர்கள் சட்டமும் செய்து கொண்டார்கள். பார்ப்பனர்கள் இட்டதே சட்டம் என்று நமது மக்கள், அவர்கள் சொல்வதை-யெல்லாம் நம்பி அடிமைப்பட்டு, சுயமரியாதை-யின்றிக் கேவலமாக வாழ்கின்றோம். இப்போது நமது சமூகம் அடிமை சமூகமாகப் பார்ப்பனர்களுக்கு வேலைசெய்து கொண்டு வருகின்றோம். அந்தோ பரிதாபம்! என் மனம் துடிக்கின்றது. கையும் நடுங்குகின்றது. நமது பதிவிரதா ரத்னங்கள், காலையில் பார்ப்பனர்கள் வீட்டுக்குப்போய் வாசல் பெருக்குவதும், சாணம் போடுவதும், பாத்திரங்களைத் தேய்ப்பதும் மலஜலமான துணிகளைத் துவைப்பதும் இன்னும் சொல்லமுடியாத வேலைகள் செய்கின்றார்கள். இவர்களுக்கு சம்பளமோ மாதம் ஒரு ரூபாய்தான். இன்னும் சில நமது பெண்மணிகள், வயல்களுக்கும் தோட்டங்களுக்கும் காடுகளுக்கும் காலையில் போய் சாயங்காலம் வரைக்கும் குனிந்த வண்ணமாகவே வேலை செய்துவிட்டு வரும்போது 3 அனா கூலி வாங்கிக்கொண்டு கிடைக்கும் குருணை அரிசி வாங்கிக்கொண்டு வீடுபோய்ச் சேருகின்றார்கள். ஒரு ஏழைப் பார்ப்பனப் பெண்ணாவது வேலைக்கு போய் வருவது யாராவது பார்த்திருக்கின்றீர்களா? இன்னும் சந்தைக்கூட்டங்களிலும், மார்க்கட்டு-களிலும் வியாபாரம் செய்யவோ வாங்கவோ நமது பெண்மணிகளும் ஆண்மக்களும்தான் அவதிப்-படுகின்றார்கள். இந்தக் கூட்டங்களிலாவது பார்ப்பனப் பெண்ணாவது ஆண்மகனாவது கூலிவேலைசெய்வதைப் பார்க்க முடியுமா?
இன்னும் இயந்திரசாலைகளிலும், காப்பி தோட்டங்களிலும், ரப்பர் தோட்டங்களிலும் கப்பல் துறைமுகத்திலும், சிங்கப்பூர், பினாங்கு, கொழும்பு, மலேயா நாடுகளிலும் எங்கு பார்த்தாலும் நமது ஆண்மக்களும் பெண்மக்களுமே அல்லாமல் இக்-கூட்டத்திலாவது ஒரு பார்ப்பனப் பெண்ணை-யாவது, ஆணையாவது பார்க்க முடியுமா? நமது வருமானம், சராசரி 5 ரூபாய்தான். இதில் நாலுரூபாயைப் பலவழிகளிலும் பார்ப்-பனர்களுக்கு கொடுத்துவிட்டு மீதி ரூபாயில்தான் நாம் காலம் கழிக்கவேண்டும். இதன் பலனாக நமது மக்களுக்குச் சொல்லமுடியாத கஷ்டங்கள் ஏற்படு-கின்றன.
நம்மை ஆளும் இங்கிலீஷ்காரர்கள் என்ன செய்கின்றார்கள். திரேக கஷ்டத்தினாலும், அறி-வினாலும் புதுப் புது கருவிகள் கண்டுபிடித்து அந்தக் கருவிகளின் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். தொழில் செய்யாமல் பார்ப்பனர்களைப் போல் மனிதரிடத்திலிருந்து ஏமாற்றிப் பணம் கொள்ளை அடிக்கமாட்டார்கள். ஆகையால் பார்ப்பனர்-களைவிட இங்கிலீஷ்காரர்கள் எவ்வளவோ நல்லவர்கள். எம்பெருமான் காந்தியடிகளால் சிருஷ்டிக்கப்பட்ட கதரென்னும் குழந்தையை நமது மக்கள் தான் உயிர் கொடுத்து ஆதரிக்கின்றார்கள். கைராட்டையினால் நூல் நூற்பவர்கள் நமது மக்கள்தான் உயிர் கொடுத்து ஆதரிக்கின்றர்கள். கைராட்டையினால் நூல் நூற்பவர்கள் நமது பெண்மணிகளே. நமது ஜில்லாவில் பெருவாரியான கதர் உற்பத்தி செய்யாத நமது பதிவிரதாரத்தினங்-களே ஏது. திருப்பூரில் இருக்கும் கதர் கடைக்-காரருக்கு நூல் நூற்று கொடுப்பது நமது பெண்களே. மேற்படி கடைக்காரருக்கு ஒரு பார்ப்பனப் பெண்ணாவது நூல் நூற்றுக்கொண்டுவந்து கொடுத்து பஞ்சும், கூலியும் வாங்கிக்கொண்டு போகின்றாளா அல்லது ஓர் பார்ப்பனராவது கைத்தறியினால் நெசவு செய்து கதர் துணிகள் உற்பத்தி செய்-கின்றாரா? இல்லவே இல்லை. பார்ப்பனருக்கும் அவர்கள் பெண்களுக்கும் வேலைதான் என்ன? வாய்க்காலுக்கும், ஆறு குளங்களுக்கும் போய் குளித்துவிட்டு வருவதும் நம்மை ஏமாற்றி வயிறு-புடைக்க உண்பதும் தான் வேலை. இதுகளை எல்லாம் பார்த்துதான் நமது தலைவர் வைக்கம் வீரர் சத்தியாக்கிரகி, மனம் பொறுக்-காமல் பார்ப்பன சமூகம் தொழில் செய்யாமல் சும்மா இருந்து கொண்டு சாப்பிடுவதோடு நமது மக்களை ஏமாற்றி அடிமையாகக் நடத்து-கின்றார்கள், என்பதை தெரிந்து எம்பெருமான் காந்தியடிகளால் சிருஷ்டிக்கப்பட்ட ஒத்துழை-யாமை என்னும் சுயமரியதையை பார்ப்பனர்கள் சின்னாபின்னப்படுத்தியும், அதற்கு உயிர் கொடுத்து குடிஅரசின் மூலமாக நமது மக்-களுக்கு ஞானப்பால், ஊட்டிக்கொண்டு வருகிறார். சுயமரியாதை என்னும் குழந்தை நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக குடிஅரசில் சீரும் சிறப்புடன் வளர்ந்து வரு-வதைக்கண்டு பார்ப்பன வலையில் சிக்குண்டு கிடக்கும் பாவலர், நாவலர்களைப்போல் இருக்கும் சில ஆசாமிகள் குடிஅரசைக் கொன்றுவிடுவதற்கு பாடுபடுகின்றார்கள். இதை எல்லாம் பொருட்படுத்தாமல் குடிஅரசு வீர கர்ஜனை செய்து நமது சமூகத்துக்கு இருக்கும் அடிமைத்தனத்தை விலக்கி சுயமரியாதை என்னும் சுயராஜ்ஜியத்திற்காகப் பாடுபடுகிறது. -குடிஅரசு, 28.11.1926

Thursday, January 07, 2010
வெறுக்கத்தக்கதே பார்பனியம் (பார்ப்பனப் ப்ரோகிதன் கூறும் மந்திரம் என்ன? ) - 2
மணமகளை பார்த்து பார்ப்பனப் ப்ரோகிதன் கூறும் மந்திரம் என்ன?
"ஸோம :ப்ரதமோ விவித
கந்தர்வோ விவித
உத்தர :த்ருதீயோ அக்ஞிஷ் டேபதி;
துரியஸ்தே மனுஷ்யஜா "
இதன் பொருள்
"சோமன் முதலில் இவளை அடைந்தான் பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான்.உன்னுடைய மூன்றாவது கணவன் அக்னி.உன்னுடைய நான்காவது கணவன் மனித சாதியில் பிறந்தவன்."
ப்ரோகித கல்யாணத்தில் ஒரு பெண் விபசாரியாகப்படுகிறாள் என்பதற்கு இது ஒன்று போதாதா.?ஆரிய கலாசாரத்தில் ஐவர்க்கும் தேவி அழியாத பத்தினி என்பது வேறு கதை!அதை தமிழர்கள் ஏற்கமுடியுமா ?
புரோகித பார்பான் சொல்லும் மந்திரத்துக்கு பொருளாவது புரியுமா?
பன்மொழிப் புலவர் நாவலர் சோமசுந்தர பாரதியார் பங்கேற்ற ஒரு புரோகித திருமணத்தில் புரோகித பார்ப்பன் கருமாதி மந்திரத்தை சொல்லி கொண்டிருக்க -அதே இடத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் குரல் கொடுத்து தடுத்த நிகழ்ச்சிகள் எல்லாம் உண்டே!
ஆரிய கலாசாரத்தில் பிரமம்,பிரசபதியம்,அருஷம்,தெய்வம்,காந்தர்வம்,ஆசுரம் இராக்கதம்,பைசாசம் என்று திருமணங்கள் எட்டு வகைப்படும்.
இந்த எண்வகை திருமணத்துப் பெண்ணுக்கென்று எந்தவித மான உரிமையும் கிடையாது .பெண் என்பவர் ஒரு ஜடப் பொருள்.
அதிலும் பைசாசம் மணம் என்பது ஒரு கன்னிகை தூங்கும் பொது ,மது மயக்கத்தால் மயங்கி இருக்கும்போதும்,அல்லது புத்தி சுவாதினம் இல்லாமலிருக்கும்போதும் ,அவளை மனச் சம்மதம் இல்லாமலே வலுவில் புணர்ச்சிசெய்வதுதானாம்.
(நூல்:வெறுக்கத்தக்க பிராமணியம்-கி.வீரமணி-பக்கம் 84)
யன்மேமாத பிப்ர மமாத
யச் சாரான்னுவ் ரதம்;
தன்மே ரேத பிதாவ்ருஞ்க்த
மாபூரன் யோப பதய தாம்:
பித்ருப்ய ஸ்வதா விப்ய: ஸ்வதா
இதன் பொருள்:-
"எனது தாய் பதிவிரதா தருமங்களை முழுவதுமாக அனுச்டிக்காமல் அதன் காரணமாக நான் பிறந்திருந்தால், இந்த நெருப்பில் நான் இடும் பிண்டத்திற்கு உரிமை கோரி எனது சொந்த தகப்பனார் வருவார். அப்படி அவர் வராமல் தடுத்து நான் எந்த தகபனாருக்கு இந்த சிரார்த்தத்தை செயிகிறேனோ அவர் அதாவது எந்த தாயின் கணவர் இந்த பிண்டத்தை பெறவேண்டும்"
தந்தைக்கு மகன் சிரார்த்தத்தை செய்யும்போது தாயை விபச்சாரி யாக்கும் இந்த பார்பனியம் வெறுக்கத்தக்கதா - இல்லையா? அறிவுடையோர் சிந்திக்கட்டும்.
வெறுக்கத்தக்கதே பார்பனியம்.....

பெரியார் அவர்களுக்கு அரணாக இருந்து எதிரிகளைப் பந்த்தாடியவர்
பள்ளிப் படிப்பு அதிகம் கிடையாது. அவர் சென்-னையில் ஒரு ஆங்கிலோ இந்தியன் வீட்டில் தங்க நேரிட்ட சூழ்நிலையில் சரளமாக ஆங்கிலம் பேசக் கூடியவர். ஆங்கிலத்திலி-ருந்து மொழி பெயர்த்து கட்டு-ரைகளை குடிஅரசுக்-குத் தந்தவர்.
அவர் தொண்டின் தனித் தன்மை என்ன? பட்டுக்-கோட்-டையில் தந்தை பெரியார் பொதுக்கூட்டம். அங்கு மாயவரம் நடராசன் வந்திருந்தார். அவரைப் பார்த்து அஞ்சாநெஞ்சன் அழகிரி எதற்காக இவ்-வளவு தூரம் வந்துள்ளீர்-கள்? என்று வினா தொடுக்க, பெரியார் கூட்டம் என்றால் நான் வந்து விடு-வதுதானே வழக்கம் என்று கூறிட, மற்ற ஊர்களில் பெரி-யார் பாதுகாப்புக்காக வரு-வது சரி, பட்டுக்கோட்டை-யில் பெரியாரை எதிர்ப்ப-வர்-களுக்குத்தான் பாதுகாப்புத் தேவைப்படும் என்று அழகிரி சொன்னார் என்பதி-லிருந்து மாயவரம் நடராசன் அவர்களின் பணி எத்தகை-யது என்பதைத் தெரிந்து கொள்ளலாமே!
அந்தக் காலத்தில் தந்தை பெரியார் பேசுகிறார் என்றால், எதிரிகள் பல கல-வரங்களில் ஈடுபடுவார்கள்; அந்த நேரத்தில், எல்லாம் மாயவரம் சி. நடராசன் அவர்-கள் தந்தை பெரியார் அவர்களுக்கு அரணாக இருந்து எதிரிகளைப் பந்-தாடுவார். நாகைமணி, திரு-வாரூர் தண்டவாளம் அரங்-கராசு என்ற ஒரு படையே அவ்வாறு இருந்ததுண்டு.
சர்க்கஸ் கம்பெனியில் ஓராண்டுகாலம் சாசகங்கள் புரிந்து, பின் இராணுவத்-துக்குச் சென்று, நாடு திரும்பி, காங்கிரசிலும் சேர்ந்து, தந்தை பெரியார் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டை விட்டு வெளி-யேறியதையொட்டி தந்தை பெரியாருடன் நடந்தவர் மாயவரம் நடராசன்.
வெற்றி முரசு என்ற ஏட்டையும் நடத்தியுள்ளார். மாயவரத்தில் இம்பீரியல் பிரஸ் இவருக்குச் சொந்த-மானது.
தந்தை பெரியார் அய்-ரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்த நிலையில், அன்னை நாகம்மையார் உடல்நலவுற்ற நிலையில், அவர்களை மாயவரம் அழைத்து வந்து தம் வீட்-டில் தங்க வைத்து வைத்திய உதவிகளைச் செய்தவர்.
மகன் லெனின், மகள் மங்கையர்க்கரசி, துணைவர் மீனாம்பாள்.
மகன் சென்னையில் பிர-பல ஆடிட்டராகப் பணி-யாற்-றிக் கொண்டு இருக்கிறவர்.
35 வயதிலேயே தந்தை பெரியார் அவர்களின் மெய்க்-காப்பாளராக நம்பிக்கை நாயகனாகவும் விளங்கிய மாயவரம் நடராசன் ஒரு தலைவருக்கு ஒரு தொண்-டர் எப்படி என்பதற்கான இலக்கணத்தைச் சமைத்துக் கொடுத்த மாவீரர் ஆவார்! வாழ்க நடராசனார்!
- விடுதலை (07-01.2010) மயிலாடன்
குறிப்பு: மயிலாடுதுறையில் (9.3.2002), மாயவரம் நட-ராசன் அவர்களின் நூற்-றாண்டு விழா தமிழர் தலை-வர் தலைமையில் வெகு-சிறப்பாக திராவிடர் கழகத்-தின் சார்பில் கொண்டாடப்-பட்டது.
Subscribe to:
Posts (Atom)