வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label தந்தை பெரியார். Show all posts
Showing posts with label தந்தை பெரியார். Show all posts

Friday, February 19, 2010

இல.கணேசன்கள் ஏற்றுக்கொள்வார்களா?

மூடநம்பிக்கைகளை எதிர்ப்பது தமிழகத்தின் ஒரு சாராருக்கு மட்டும் உரித்-தானது அல்ல_என்று சொல்-லியிருப்பவர் ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்று அதன்பின் பா.ஜ.க.-விற்குச் சென்ற தமிழக பா.ஜ.க.-வின் முன்னாள் தலைவர் திரு இல.கணேசன் என்பார் (கல்கி 21.2.2010 பக்கம் 90,91).


அவர் யாரை, எந்த இயக்-கத்தை நினைத்துக் கொண்டு இப்படிச் சொல்லியிருக்கிறார் என்பது வெளிப்படை.

பரவாயில்லை, காலந்தாழ்ந்-தாவது மூடநம்பிக்கைகள் நாட்டில் இருப்பதை ஒப்புக்-கொண்டு அவை ஒழிக்கப்-படத்தான் வேண்டும் என்ற நினைப்பது கூட _ ஒரு அடி முன்னேற்றம்தான்_பாராட்டுகள்

அந்த மூடநம்பிக்கை-களை எதிர்த்தவர்களுள் பாரதியார் இல்லையா? கல்கி கிருஷ்ணமூர்த்தி இல்லையா? விவேகானந்தர் இல்லையா என்று எடுத்துக்காட்டியும் உள்ளார்.

அப்படிதான் சிந்திக்க வேண்டும். சிந்திக்கும் வேளை-யில் அவர்கள் எவற்றையெல்-லாம் மூடநம்பிக்கைகள் என்று கூறியிருக்கிறார்களோ அவற்றையெல்லாம் முண்டா தட்டித் தூக்கி எறிவதுதானே புத்தி சாலித்தனம்?

பாரதியாரையே எடுத்துக்-கொள்ளலாம்.

கடலினைத்தாவும் குரங்-கும்_ வெங்
கனலிற் பிறந்ததோர்
செவ்விதழ்ப் பெண்ணும்
என்று ஆரம்பித்து கடைசி-யில் எப்படி முடிக்கிறார்?
கவிதை மிக நல்லதேனும்
அக்கதைகள் பொய்-யென்று
தெளிவுறக் கண்டோம்

_என்று பாடியிருக்கிறாரே பாரதியார்.

இராமாயணத்தில் குரங்கு கடலைத் தாண்டியதாகவும், பாலம் கட்டியதாகவும் கூறி, ராமன் பாலத்தை இடிக்காதே என்று போர்க்கொடி தூக்குவது ஏன் இல.கணேசன்கள்?
எந்த பாரதியார் மூடநம்-பிக்கைகளை எதிர்த்தவர் என்று பெருமையாகப் பேசு-கிறாரோ அந்தப் பாரதியார் மூடநம்பிக்கை என்று சொல்-லுவதைக் கட்டியழுவது ஏன்?
இரண்டாவதாக கல்கி கிருஷ்ணமூர்த்தி மூடநம்பிக்-கைகளை எதிர்த்தவர் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு கல்கியிலிருந்தே (4.10.2009) எடுத்துக்காட்டி கேள்வி கேட்க முடியும்.

இராகு காலம் பார்ப்பது, அலகு குத்திக்கொள்வது, தீ மிதிப்பது போன்றவை கல்-கிக்குப் பிடிக்காது என்று கூறிவிட்டு, இறை உணர்வு என்பது வேறு, மதம் என்பது வேறு, பகுத்தறிவு என்பது வேறு, இவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் குழப்பிக் கொள்ளக்கூடாது. இதேபோல அறநெறி நூல்கள் வேறு, இதிகாசங்கள் வேறு, புராணக்கதைகள் என்பன வேறு என்று கல்கியிலேயே வெளிவந்துள்ளது. (4.10.2009),

இதையாவது இல.கணே-சன்கள் ஏற்றுக்கொள்வார்-களா? இறை உணர்வு வேறு, மத உணர்வு வேறு என்று பிரித்துக் கூறியுள்ளாரே! இவர்கள் மதவுணர்வை மட்டுமல்ல, வெறியையல்லவா தீமூட்டிக் குளிர்காய்கிறார்கள்? அறநெறி நூல்கள் வேறு, இதிகாசங்கள் வேறு என்று சொல்லும்போது இதிகாசமான இராமாயணம் புறந்தள்ளப்பட்-டுள்ளதே! அந்த இராமாயண ராமனைப் பிடித்துக்கொண்டு தானே இல.கணேசன் கூட்டம் தொங்கிக்கொண்டிருக்கிறது!. மூடநம்பிக்கைகளை எதிர்ப்-பது ஒரு சாராருக்கு மட்டும் உரித்தானதல்ல என்று உரிமை முழக்கம் இடும் இவாள் எடுத்துக்காட்டும், பிர--முகர்கள் எடுத்துக்காட்டும் மூடநம்பிக்கைகளை விடத் தயாரா?

- விடுதலை (19.02.2010) மயிலாடன்

Wednesday, January 27, 2010

ஏன் நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக்கொள்கிறோம்....

நாம் யாருக்கும் மேலல்ல! யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் ஐயர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது, தாயையும் ஆகாது, சேரியும் கூடாது, அக்ரகாரமும் ஆகாது, யோக யாக புரட்டுகள், புரோகித பித்தலாட்டம், மனுக்கொடுமை வேண்டாம். மனிதர் யாவரும் சரி நிகர் சமமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படி தம்மை இந்து என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித்தான் மனம் இடம் தரும்? எப்படித்தான் துணியும்? இந்து மதம் என்பதிலே உள்ளக் கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதைமுறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப்பார்த்த பிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் இந்து என்று கூறிக்கொள்ள மனம் இடம் தரும்? பாம்பை எடுத்து படுக்கையில் விட்டுக்கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக் குப்பையை வீட்டுக்குள் கொண்டுபோய்ச் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களைவிட்டு மதிகெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீளாமார்க்கம் தேடுவதைவிட்டு, மாளவழி தேடிக் கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்ப மிடுவரா? கண் தெரியும்போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு, திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் இந்து மார்கத்தில் போய்ச் சேர இசைவாரா? வீரத்திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கிப் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!!


ஆள் நடமாட ஓர் உலகம். ஆவி உலவ மற்றோர் உலகம். இந்திரன் இருக்க ஓர் உலகம். நான் தங்க ஓர் உலகம், மேலே ஏழு, கீழே ஏழு, எனப் பதினான்கு உலகங்களாம். அதல, விதல,சுதல தராதல, இராசாதல, மகாதல பாதாளம் என ஏழாம்! பூலோக, மகாலோக, சத்யலோக என மேல் உலகம் ஏழாம்! இத்தனை உலகங்கள் இந்துவுக்கு உண்டாம், ஓட்டிலே, நமக்கு இவை வேண்டாம் நாமிருக்கும் நாடு நமக்கு இருந்தால் போதும் நான் செய்யும், புன் செய்யும், சாலையும், சோலையும், வாவியும், நதியும் மக்களுக்கு சுபீட்சமும் இருக்கட்டும். காமதேனும், கற்பக விருட்சமும் ரம்பையும், ஊர்வசியும் உலவும் உலாம் வேண்டாம். நாமிருக்கும் நாட்டிலே நாம் கீழ் ஜாதி என்ற கொடுமை இன்றி நாமார்க்கும் குடியல்லோம் என்று நாம் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்திலேதான், நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக்கொள்கிறோம்.

(ஆரிய மாயை - கட்டுரை - 26.04.1943)

Thursday, January 07, 2010

பெரியார் அவர்களுக்கு அரணாக இருந்து எதிரிகளைப் பந்த்தாடியவர்



பணம், காசைப்பற்றியோ தண்டனைகளைப் பற்றியோ, துன்பம் தொல்லைகளைப்-பற்றியோ சிறிதும் கவலை கொள்ளாமல் தலைவரால் எந்த உத்தரவு பிறப்பிக்கப்-படுகிறதோ அதற்கு இசை-யவே படையை நடத்திய தளபதி என்று குடிஅரசு இதழால் பாராட்டு வழங்கப்-பட்ட மாயவரம் சி. நடராசன் அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (1902).


பள்ளிப் படிப்பு அதிகம் கிடையாது. அவர் சென்-னையில் ஒரு ஆங்கிலோ இந்தியன் வீட்டில் தங்க நேரிட்ட சூழ்நிலையில் சரளமாக ஆங்கிலம் பேசக் கூடியவர். ஆங்கிலத்திலி-ருந்து மொழி பெயர்த்து கட்டு-ரைகளை குடிஅரசுக்-குத் தந்தவர்.

அவர் தொண்டின் தனித் தன்மை என்ன? பட்டுக்-கோட்-டையில் தந்தை பெரியார் பொதுக்கூட்டம். அங்கு மாயவரம் நடராசன் வந்திருந்தார். அவரைப் பார்த்து அஞ்சாநெஞ்சன் அழகிரி எதற்காக இவ்-வளவு தூரம் வந்துள்ளீர்-கள்? என்று வினா தொடுக்க, பெரியார் கூட்டம் என்றால் நான் வந்து விடு-வதுதானே வழக்கம் என்று கூறிட, மற்ற ஊர்களில் பெரி-யார் பாதுகாப்புக்காக வரு-வது சரி, பட்டுக்கோட்டை-யில் பெரியாரை எதிர்ப்ப-வர்-களுக்குத்தான் பாதுகாப்புத் தேவைப்படும் என்று அழகிரி சொன்னார் என்பதி-லிருந்து மாயவரம் நடராசன் அவர்களின் பணி எத்தகை-யது என்பதைத் தெரிந்து கொள்ளலாமே!

அந்தக் காலத்தில் தந்தை பெரியார் பேசுகிறார் என்றால், எதிரிகள் பல கல-வரங்களில் ஈடுபடுவார்கள்; அந்த நேரத்தில், எல்லாம் மாயவரம் சி. நடராசன் அவர்-கள் தந்தை பெரியார் அவர்களுக்கு அரணாக இருந்து எதிரிகளைப் பந்-தாடுவார். நாகைமணி, திரு-வாரூர் தண்டவாளம் அரங்-கராசு என்ற ஒரு படையே அவ்வாறு இருந்ததுண்டு.

சர்க்கஸ் கம்பெனியில் ஓராண்டுகாலம் சாசகங்கள் புரிந்து, பின் இராணுவத்-துக்குச் சென்று, நாடு திரும்பி, காங்கிரசிலும் சேர்ந்து, தந்தை பெரியார் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டை விட்டு வெளி-யேறியதையொட்டி தந்தை பெரியாருடன் நடந்தவர் மாயவரம் நடராசன்.

வெற்றி முரசு என்ற ஏட்டையும் நடத்தியுள்ளார். மாயவரத்தில் இம்பீரியல் பிரஸ் இவருக்குச் சொந்த-மானது.

தந்தை பெரியார் அய்-ரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்த நிலையில், அன்னை நாகம்மையார் உடல்நலவுற்ற நிலையில், அவர்களை மாயவரம் அழைத்து வந்து தம் வீட்-டில் தங்க வைத்து வைத்திய உதவிகளைச் செய்தவர்.

மகன் லெனின், மகள் மங்கையர்க்கரசி, துணைவர் மீனாம்பாள்.

மகன் சென்னையில் பிர-பல ஆடிட்டராகப் பணி-யாற்-றிக் கொண்டு இருக்கிறவர்.

35 வயதிலேயே தந்தை பெரியார் அவர்களின் மெய்க்-காப்பாளராக நம்பிக்கை நாயகனாகவும் விளங்கிய மாயவரம் நடராசன் ஒரு தலைவருக்கு ஒரு தொண்-டர் எப்படி என்பதற்கான இலக்கணத்தைச் சமைத்துக் கொடுத்த மாவீரர் ஆவார்! வாழ்க நடராசனார்!

- விடுதலை (07-01.2010) மயிலாடன்

குறிப்பு: மயிலாடுதுறையில் (9.3.2002), மாயவரம் நட-ராசன் அவர்களின் நூற்-றாண்டு விழா தமிழர் தலை-வர் தலைமையில் வெகு-சிறப்பாக திராவிடர் கழகத்-தின் சார்பில் கொண்டாடப்-பட்டது.

Friday, January 01, 2010

தந்தை பெரியார் மதித்ததும், போற்றியதும் மானுடம்.



ஒரு பகுத்தறிவாளன் என்கிற எனக்கு மதப் பற்றோ, கடவுள் பற்றோ, இலக்கியப் பற்றோ, மொழிப்பற்றோ எதுவும் கிடையாது. அறிவிற்கு ஏற்றது, மக்களுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளர்ச்சி அடையச் செய்வது எதுவோ அதைப் பற்றியே பேசுவேன். (விடுதலை,- 20.4.1965)

என்கிறார் தந்தை பெரியார். மனிதப் பற்றுதான் தந்தை பெரியாருக்கு உரிய-தாகும். மானுடத்தைத் தந்தை பெரியார் மதித்ததும், போற்றியதும் மானுடம் தந்தை பெரியாரைப் போற்றியதும் இந்தத் தன்மையில்தான்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்-டாளி, கூலி, ஏழை மக்கள்தான் எனக்-குக் கண் வலியாய் இருப்பவர்கள். அவர்களைச் சம மனிதர்களாக ஆக்குவதுதான் என் கண்ணோய்க்குப் பரிகாரம்) (விடுதலை,- 15.10.1967)

பிறவியிலேயே பெரும்பான்மை மக்கள், பிறவித் தொழிலாளர்களாக இருக்கிறார்களே என்பதை எண்ணி-னால் எனக்கு ரத்தக் கொதிப்பாக இருக்கிறது என்றும் செல்லுகிறார்.

தன் உடலுக்கு ஏற்பட்டுள்ள உபா-தைகளை நோய் என்று கருதவில்லை அந்த மானுடத் தந்தை; மாறாக குறிப்பிடத்தக்க மக்கள் பகுதியினருக்கு இழைக்கப்பட்டுள்ள தீங்குகளை, உரிமை மறுப்புகளைக் கண்டு கொதிக்கிறார். அந்தத் தீங்குகளை அகற்றி, சமத்துவம் உள்ளவர்களாக மாற்றி அமைப்பதைத்தான் தனது தொண்டறமாகக் கருதுகிறார்.

மனிதன் தானாகப் பிறக்கவில்லை. எனவே தனக்காக வாழக் கூடாதவன் என்னும் அவரின் கூற்றிலே பொதிந்து கிடக்கும் மானுடப்பற்று மகத்தானது.

மானிடத்தின் சமத்துவத்துக்காகத்-தான் தந்தை பெரியார் கடவுள் முதல், ஜாதி, மத, கோத்திரங்கள் வரைக் கடுமையாக எதிர்த்தார்.

1927 குடிஅரசு மே முதல் தேதி இதழில் தந்தை பெரியார் கூறியதைப் படிக்கும் தொறும் படிக்கும் தொறும் மிகவும் மலைப்பாக இருக்கிறது. இதோ அந்த எழுத்துகள்.

பொதுவாக நமது பிரசங்கத்தினா-லும், குடிஅரசுவினாலும் நான் செய்து வந்த பிரச்சாரத்தில் அரசியல் இயக்-கங்கள் என்பவற்றைக் கண்டித்தேன். மதம் என்பதைக் கண்டித்தேன். மதத் தலைவர்கள் என்பவர்களைக் கண்-டித்தேன். மதச் சடங்கு என்பவற்றைக் கண்டித்திருக்கின்றேன். வேதம்என்று சொல்லுவதைக் கண்டித்திருக்கின்றேன். சாத்திரம் என்பதைக் கண்டித்திருக்கின்-றேன். புராணம் என்பதைக் கண்டித்-திருக்கின்றேன். ஜாதி என்பதனைக் கண்டித்திருக்கின்றேன். அரசாங்கம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். உத்தியோகம் என்பதைக் கண்டித்திருக்-கின்றேன். நியாயாதிபதி என்பவர்-களைக் கண்டித்திருக்கின்றேன். நீதி ஸ்தலம் என்பதைக் கண்டித்திருக்கின்-றேன். ஜனப் பிரநிதித்துவம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். தேர்தல் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். கல்வி என்பதைக் கண்டித்திருக்கின்-றேன். சுயராச்சியம் என்பதைக் கண்-டித்திருக்கின்றேன். ஒரே துறையில் வேலை செய்து வந்த நண்பர்களைக் கண்டித்திருக்கின்றேன். இன்னும் என்-னென்னவற்றையோ,- யார் யாரையோ கண்டித்திருக்கின்றேன். கோபம் வரும்படி வைதும் இருக்கின்றேன்.

எதைக் கண்டித்திருக்கின்றேன் ; எதைக் கண்டிக்கவில்லை என்பது எனக்கு ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கிறது. இன்னமும் ஏதாவது எழுத-லாமென்று பேனாவை எடுத்தாலும், பேசலாமென்று வாயைத் திறந்தாலும் கண்டிக்கவும் - வையவும்_- துக்கப்பட-வுமான நிலைமை ஏற்படுகிறதே ஒழிய வேறில்லை. கண்டிக்கத் தகாத இயக்கமோ, திட்டமோ, அபிப்-பிரா-யமோ என் கண்களுக்குப்படமாட்டேன் என்கிறது என்கிறார். விரக்தியின் மேலீட்டால் தந்தை பெரியார் இப்படி எழுதவில்லை. மானுடத்தின் நேர்த்திக்-காக, சமத்துவத்துக்காக, ஏற்றத் தாழ்வு-களைத் தரை மட்டம் ஆக்குவதற்காக, மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கும் பெண்களின் உரிமைக்காகப் போராடும்போது, தொண்டாற்றும்போது யாரெல்லாம் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் என்பதை ஒரு வகையில் பட்டியலிட்டுக் காட்டுகிறார் என்றே கருதவேண்டும். இவர்களை, இவைகளை எதிர்த்துத்தான் தீர-வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்.

ஒரே ஒரு எடுத்துக்காட்டு: சிதம்-பரத்தில் சகஜானந்தாவின் பள்ளியில் ஆண்டு விழா. அதற்குப் பெரியார் அழைக்கப்பட்டார். அந்தப் பள்ளி நிருவாகிகளுக்கும், உள்ளூர் சனாதனி-களுக்கும் பகைமை உண்டு. அதுவும் பெரியார் வருகிறார் என்றவுடன் அது பல மடங்காகப் பெருகியது. பெரியார் வந்தால் கலகம் செய்வது - தாக்குவது என்று முடிவு. அடியாட்கள் தயாரிக்-கப்பட்டனர். கையில் ஆயுதங்களுடன் கூடினர். பெரியார் ரயிலில் வர இருந்-தார். அந்த நிகழ்ச்சிக்குப் போயிருந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நிலை-மைகளை நேரில் பார்த்து அறிந்தார். பெரியாரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் செய்வதே நல்லது என்று முடிவு செய்து, ரயில்வண்டி நிலை-யத்துக்கு விரைந்தார்.

அங்கு என்ன நடந்தது? அதைப் புரட்சிக் கவிஞரின் வாயாலேயே கேட்போம்.

பெரியார் வண்டியில் வந்திறங்-கினார். அங்குள்ள நிலைமையைக் கூறினோம். கேட்டுக் கொண்டே விடுவிடு என்று ஊருக்குப் போனார். போக வேண்டாம் ஆபத்து, ஆபத்து என்று கூறக் கூறக் கேட்டுக் கொண்டே போனார். எந்த வழியில் போகக் கூடாது என்று நினைத்தோமோ அந்த வழியிலேயே போனார். போய் டக் என்று நின்றார். அதுவும் எந்த இடம்? எந்த இடத்தில் நிற்கக்கூடாது என்று பயந்தோமோ, அதேஇடம்! காலிகளின் கூட்டம் எதிர்ப்பை ஆரம்பித்து விட்டது. காலிகளின் ஆயுதம் தாங்கிய கரங்கள் உயர்ந்து விட்டன. இன்று என்ன செய்யப்போகிறோம்? என்று எங்கள் கூட்டில் உயிர் இல்லை.

இந்த நிலையில் பேசவும் ஆரம்-பித்துவிட்டார் பெரியார். எப்படிப்பட்ட பேச்சு? பாமரர் முதல் அனைவருக்கும் புரியும் முறையில் அழகாக உள்ளம் கவரும் விதத்தில்
பேசினார்.

உங்கள் பையன் ஒருவன் படித்திருக்-கிறான், உயர்சாதிப் பையன் ஒருவன் படித்திருக்கிறான். நீங்கள் என்ன விரும்புவீர்கள்? உங்கள் பையனுக்கு வேலை கிடைக்க வேண்டுமென்று-தானே? ஆனால் இன்றைய ஆதிக்க நிலையில் யாருக்குக் கிடைக்கும்?-இதைத்தானே நான் கூறுகிறேன் என்று ஆரம்பித்தார். அவர்கள் மத்தியிலே கருத்து மழை பொழிந்தார். அந்த நேரத்தில் அந்தக் கூட்டம் பெரியார் எதைச் சொன்னாலும் அதைச் செய்யத் துடித்தது; எதிரிகள் மீதுஅதை எளிதாகத் திருப்பி விட்டிருக்கவும் முடியும். அதைப் பெரியார் செய்ய-வில்லை. சாகடிக்கப்படவிருந்த பெரியார், சாவடிக்க வந்தவர்களையே கருத்தால் மாற்றிவிட்டார் என்று புரட்சிக்கவிஞர் கூறுகிறார்.

மக்களுக்குத் தொண்டாற்றுவது, அதுவும் சமூகப் புரட்சியை மேற்-கொள்வது என்பது உயிரைப் பணயம் வைப்பதாகும். இத்தகைய தொண்-டைத்தான் தந்தை பெரியார் செய்தார்.

தந்தை பெரியார் மானுடக் குடும்-பத்தில் தனித் தன்மையானவர், தனி வழி காட்டிய தத்துவ ஒளி விளக்கு!

வழக்கத்தால், செக்கு சுற்றி வந்த மந்தையில் தனிப்பாதையைக் காட்டி தலைகளைத் தூக்க வைத்து, முதுகு எலும்புகளை நிமிர வைத்து, கண்-களைத் திறந்து வைத்து, கால்களுக்கு வலுவூட்டி, மூளை இயந்திரத்தை முடுக்கிவிட்டு கைநீட்டிக் கம்பீரமாக நடக்க வைத்த தன்மான- பகுத்தறிவு மூலிகைத் தோட்டம் அவர்.

அவர்களின் ஒவ்வொரு எழுத்-திலும், சொல்லிலும், அசைவு இயக்-கத்திலும் பகுத்தறிவு மணம் இருக்கும்! தன்மான வெடி இருக்கும்; மனித நேயத் தேன் சுரக்கும்; மனித உரிமைப் பாளை வெடிக்கும்!

அதிர்ச்சி தருகிறதே - ஆபத்தாக முடியுமோ? திடுக்கிட வைப்பதாக இருக்கிறதே - தீங்கு விளையுமோ? நம்பிக்கைகளைத் தகர்க்கப் பார்க்கிறதே - நாசம் விளையுமோ? - என்றுதான் அவரின் புரட்சிக் கருத்துகளை, புதுமை முழக்கங்களைக் கேட்டவர்கள், படித்தவர்கள் அதிர்ந்து போவார்கள். ஆனால் அவையனைத்தும் மானு-டத்தை வாழ வைக்கும் மீட்சிப் படகுகள், முன்னே கசந்து பின்னே இனிக்கும் முது நெல்லிக் கனிகள் என்பதைப் பின்னர் உணர்ந்தனர். வசை-பாடிய வாய்கள் வாழ்க முழக்க-மிட்டன. வாழ்விக்க வந்த தந்தையே என்று வாழ்த்துப் பாடின! கற்களைத் தூக்கியடித்த கரங்கள் கனத்த மாலை-களைத் தூக்கி வந்து அந்த மனித குலச் சிற்பிக்குச் சூட்டி மகிழ்ச்சியில் திளைத்தன!

ஆனால் தந்தை பெரியார் அவற்றை எல்லாம் எப்படிப் பார்த்-தார்? ஆண்டு முழுவதும் அய்யா அவர்களுக்குப் பிறந்த நாள் விழா நடக்கும். இந்த அதிசயம் அய்யா அவர்களுக்கு மட்டும்தான் தமிழ் நாட்டில். ஏராளமான பரிசுப் பொருள்-களைக் கொண்டு வந்து குவிப்பார்கள். அவற்றை எல்லாம் பெற்றுக் கொண்ட அறிவுத் தந்தை கூறுவார் :

இவ்வளவு பரிசுப் பொருள்களை எனக்குக் கொடுத்தீர்கள். இதே ஊரில் இதே இடத்தில் 50, 60 ஆண்டு-களுக்கு முன் வந்து பேசி இருக்கி-றேன். அப்பொழுதெல்லாம் கடும் எதிர்ப்பு! கற்களை வீசுவார்கள்; பன்றிகளை, பாம்புகளைக் கூட்டத்தில் விட்டுப் பொது மக்களைக் கலைப்-பார்கள். இப்பொழுது அதே ஊருக்கு அதே மனிதனாகிய நான் வந்திருக்-கிறேன். அதே மனிதருக்கு இவ்வளவு வரவேற்பு - அன்பளிப்பு என்றால் என்-னவோ நம்ப முடியவில்லை. நான் ஏதாவது மாறிவிட்டேனா? கொள்-கையில் பல்டி அடித்துவிட்டோனா? அல்லது பொது மக்களாகிய நீங்கள்தான் மாறிவிட்டீர்களா? என்று யோசித்துப் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை என் கொள்கையில் மேலும் மேலும் தீவிரத் தன்மை கொண்டுதான் பணியாற்றி வந்திருக்-கின்-றேன். எதிலும் நான் பின் வாங்கி-விடவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

உங்களிடம்தான் மாறுதல் வந்திருப்ப-தாகக் கருதுகிறேன். உங்களை அன்று அழுகிய முட்டைகளைக் கொண்டு வீசிய நாங்கள் இப்பொழுது திருந்தி-விட்டோம். எங்களுக்குப் புத்தி வந்து-விட்டது என்று காட்டிக் கொள்-வதற்-காகத்தான் இந்தப் பரிசுகளை எனக்கு அளிக்கிறீர்கள் என்று கூறுவார்.

தனக்குப் பரிசுகளை அள்ளிக் குவித்த பொது மக்களைப் பார்த்து இப்படிக் கூறும் துணிவு நாட்டில் எவருக்கு வரும்?

தந்தை பெரியாருக்கு அப்போது 40 ஆவது வயது. நாக்கில் புற்றுநோய் ஏற்-பட்டது. தந்தை பெரியார் மருத்துவராகிய டாக்டர் பி.எம்.சுந்தரவதனத்திடம் காட்-டினார். அட சனியனே, உங்களுக்கா இது வரவேண்டும், என்று கூறி சம்-பந்தப்பட்ட மருத்துவரிடம் அனுப்பி வைத்-தார். அந்த நோயும் குணப்படுத்-தப்பட்டது. இதைப் பற்றி தந்தை பெரியார் கூறுவதுதான் முக்கியம்.

நான் கவலைப்பட்டது நாக்கில் புற்று நோய் வந்ததால் சாகப் போகிறோம் என்றல்ல! இந்தப் பாவி கடவுளை, மதத்தைத் திட்டினான், அதனால்தான் நாக்கில் புற்று வந்து செத்தான் என்று என் கருத்துக்கு எதிர்ப்பானவர்கள் அவதூறு பரப்பிவிடுவார்களே. . . அதனால் நமக்குப் பின்னும்இந்த வேலைக்கு எவனும்துணிந்து வரமாட்-டானே - என்ற கவலைதான் எனக்கு என்று பெரியார் கூறுகிறார்.

தனக்கு நோய் வந்தது என்பதை விட, அதனால் கொள்கைக்குக் குந்தகம் ஏற்பட்டுவிடுமோ என்கிற நோக்கும் சிந்தனையும்தான் அவர்களுக்கு! பொதுவாக நோய் வயப்படும் மனிதன் பலகீனமடைவான். ஆனால் அந்த நேரத்திலும் கொள்கைக்கு முன்னிடம் கொடுத்துச் சிந்தித்த மன உறுதிக்குப் பெயர்தான் பெரியார். அந்த நோயை வென்று காட்டியதன் வாயிலாகவும் தந்தை பெரியார் தமக்கு எதிர்ப்பான சக்திகளை முறியடித்து விட்டார்!

அதனால்தான் உடலால் அவர் மறைந்திருந்தாலும் அன்றாடம் பெரியார் பேசப்படுகிறார், போற்றப்படுகிறார்.

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஆம், அவர் மண்டைச் சுரப்பான சிந்தனைகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய அவர் வழி வந்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீமணி அவர்கள் பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் சிகாகோ நகரைத் தலைமை யிடமாகக் கொண்டு பெரியார் பன்னாட்டு மய்யம் உருவாக்கப்பட்டுள்-ளது. லண்டன், பிரான்சு, சிங்கப்பூர், மியான்மா நாடுகளில் எல்லாம் இவைகளைப் பரப்பி செயல்பட்டு வருகிறார்.

சோதனைக் குழாய்க் குழந்தையைப் பற்றி 1938 ஆம் ஆண்டிலேயே தொலை நோக்குப் பார்வையோடு கூறியவரும் அவரே!

அந்த இனி வரும் உலகம் என்ற நூல் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்-கப்பட்டு, பாரிசில் வெளி-யிடப்பட்டுள்ளது. டெல்லியில் பெரியார் மய்யம் - பெரியார் அறக்கட்டளையின் சார்-பில் எழுப்பப்-பட்டுள்ளது. உலகம் முழு-வதும் பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவனின் கருத்துக் கதிர்களை ஊடுருவச் செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

பெரியார் காணும் உலகைக் காண்போம்! வாழ்க பெரியார்!

கவிஞர் கலி.பூங்குன்றன் தந்தை பெரியார் நினைவு நாளான (24.12.2009) அன்று நிகழ்த்திய வானொலி நிலைய உரை

Monday, December 21, 2009

மார்கழி மாதத்தில்..வைகுண்ட ஏகாதசி உற்சவம் ...


சிறீரங்கத்தில் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி என்கின்ற ஒரு உற்சவம் ஆண்டுதோறும் நடக்கிறது.


அதற்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் சென்று, உற்சவத்தில் கலந்து சொர்க்கவாசல் புகுந்து, மோகினி அவதாரத்தைக் கண்டு களித்து, தங்கள் பாவத்தைத் தொலைத்துவிட்டுத் திரும்புவது என்பது வெகுகாலமாய் நடந்து வரும் காரியமாகும். இந்த ஏகாதசி என்பது 15 நாள்களுக்கு ஒரு முறை வரும் நாளாகும்.

இப்படிப்பட்ட ஏகாதசி ஒரு ஆண்டில் மாதத்துக்கு 2 வீதம் 12 மாதங்களுக்கு வரும் 24 ஏகாதசிகளில் மார்-கழி மாதத்தில் வரும் இரண்டு ஏகாதசிகளில் ஒன்றுக்குப் பெயர் வைகுண்ட ஏகாதசி என்பது. இது வைண-வர்களுக்கு ஒரு முக்கிய நாள். அதாவது சைவர்-களுக்கு சிவராத்திரி வருவது போன்ற ஒரு நாள்.

இந்த ஏகாதசியை ஒரு உற்சவமாக ஆக்கி அதற்கு பகல் பத்து, இராப் பத்து என்று இருபது நாட்களை ஒதுக்கி தினம் ஒரு சடங்கு போல் உற்சவம் கொண்-டாடுவார்கள். இந்த வைகுண்ட ஏகாதசி அன்று மக்கள் நாள் முழுவதும் பட்டினி கிடக்கவேண்டும். அதற்கு ஏகாதசி விரதம் என்று பெயர். அடுத்த நாளைக்குப் பெயர் துவாதசி என்பது.

ஏகாதசி என்றால் 11 ஆவது திதி; துவாதசி என்றால் 12 ஆவது திதி என்பது பொருள். 11 ஆவது நாள் முழுவதும் பட்டினி கிடந்து 12 ஆவது நாள் பாரணை என்னும் பெயரால் வயிறு புடைக்கச் சாப்பிடுவதுதான் இந்த ஏகாதசி, துவாதசி சடங்கு.

இதில் மற்றொரு விஷயம்என்னவென்றால், இந்த ஏகாதசி நாள் முழுவதும் பட்டினி கிடப்பது மாத்திர-மல்லாமல் அன்று இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்துக் கொண்டு இருக்க வேண்டும். தூங்கினால் ஏகாதசி விரதத்தின் பலன் வீணாகிவிடும். அதாவது பலன் இல்லாமல் போகும்!

அறிவுக்கு ஒவ்வாத சடங்குகள்

இந்த ஏகாதசி நாள் உற்சவங்கள் தமிழ் நாட்டில் சீரங்கத்தில்தான், பலமாக, ஆடம்பரமாக, ஆயிரம், பதி-னா-யிரம் மக்கள் வந்து கூடும்படியாக மிகப் பிரபலமாய் நடக்கும். 20 நாள்களுக்கு பல சடங்குகள், சாமி ஊர்-வலங்கள் முதலியவை நடக்கும்.

ஏகாதசி உற்சவங்களுக்கு சீரங்கம் போனவர்கள்

1. சுவர்க்கவாசல் புகவேண்டும்.
2. மோகினி அவதார தரிசனம் பார்க்கவேண்டும்.
3. முத்தங்கி சேவை பார்க்க வேண்டும்.

சுவர்க்கவாசல் புகுவது என்பது கோயிலில் மற்ற நாளெல்லாம் மூடிக் கிடந்து ஏகாதசி அன்று காலையில் திறக்கப்பட்ட வாசல் வழியில் முட்டி அடித்துக் கொண்டு புகுந்து வெளியில் வருவதுதான்.

மோகினி அவதாரம் என்பது சீரங்கம் கடவுளை பெண் வேஷம் போட்டு -பெண்ணாகச் சிங்காரித்துக் காட்டுவதுதான்.

முத்தங்கி சேவை என்பது சீரங்கம் கடவுளுக்கு முத்துக் கோத்துத் தைத்த ஒரு சட்டையைப் போட்டுக் காட்டுவதுதான்.

இதுதான் ஏகாதசி உற்சவத்தின் காட்சி!

இந்தக் காட்சியினால் மக்களுக்கு என்ன பயன் ஏற்படும்?

பெரும்பாலும் அங்கு செல்கிற மக்களின் கருத்-தெல்லாம் பெரிய ஜனக் கூட்டத்தைப் பார்க்கலாம் என்-பது-தான். செல்பவர்களில் 100_க்கு 90 ஆண், பெண்-களின் கருத்தாகும். அறிவு கெடுவதே உற்சவ பலன்

மக்களுக்கு சினிமா பார்ப்பதில் உள்ள ஆர்வம், உணர்ச்சி, பயன் என்னவோ அதுதான் இந்த உற்சவங்-களைக் காண்பதிலும் இருந்து வருகிறது. சினிமா வந்த-பிறகு உற்சவங்களின் பெருமை மோகம் நல்ல அள-வுக்குக் குறைந்துவிட்டது. என்றாலும், அதைப் பழைய-படி ஆக்க பார்ப்பனர்களும், அரசாங்கமும் இப்போது அதிகமுயற்சி செய்கிறார்கள்! சினிமாவால் ஒழுக்கம் கெடும்; உற்சவத்தால் அறிவே கெடும்! இதுதான் பலன்.

(‘விடுதலை’, 8.1.1966)

Tamil 10 top sites [www.tamil10 .com ]