Thursday, August 12, 2010
சடங்கே உனக்கொரு நாள் இறுதி சடங்கு செய்ய மாட்டோமா?
அக்னி கோத்திரம் ராமானுஜ தாத்தாசாரியார் ஒரு பார்ப்பனர்.நான்கு வேதங்களும் இவரக்கு அத்துபடி.நேரு,காந்தி போன்றவர்களோடு பழகியவர்.மறைந்த காஞ்சிமட தலைவர் சந்திரசேகரரின் நெருங்கிய நண்பர் ஆலோசர்கரும் கூட.இவர் நக்கிரனலில் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது என்ற தொடரில் இந்து மதத்தின் விலா எலும்பை முறித்தவர்.அதனுடைய தொடர்ச்சியாக 2 ஆம் பாகமாக "சடங்குகளின் கதை" என்ற இந்த நூல் வெளி வந்து இருக்கிறது .
---------------------------------------------------------------------------------------------
இந்தநூலின் இறுதியில் அதாவது 149,150,151,,ஆகிய பக்கங்களில் உள்ள செய்தியை அப்படியே கீழே தருகிறேன்
-------------------------------------------------------------------------------------------------
ஒரு மகன் ஒரு தாயை இழந்து தவிக்கிறான் .தனக்கு பால் ஊடியவருக்கே ..பால் ஊற்றும் நிலைமைக்கு வந்து விட்டோமே என கண்கள் அழுது அழுது பெருகுகிறது .
இதயம் உடைந்து அம்மா அம்மா என கதறுகிறது .எல்லாருக்குமே வாழ்க்கை என்பது அவர்களின் அம்மா போட்ட பிச்சை அம்மாவின் புடவையில் காட்டிய தூளியின் கட்டில்தான் சின்ன குழந்தையில் நாம் தூங்கி இருப்போம் .
நாம் வளர வளர அதைபார்த்து மலர்கிறவள் தாய் மட்டும் தான்.
"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோனென கேட்ட தாய்."
என வள்ளுவரே தாய்மையின் உயர்வை ..மகனை வைத்து சொல்கிறார் .
தாய்தான் உலகத்தின் ஆதாரம் .பெருமாளின் மனைவியை கூட "தாயார் தாயார் ' என மரியாதையாக அழைப்பவர்கள் நாம்..அப்படிப்பட்டவள் தாய்.இன்றும் பூமியில் எக்கச்சக்க அழுக்குகள் இருந்தாலும் ..ஒவ்வொரு தாய் உருவாகும்போதும் மீண்டும் மீண்டும் புனிதமாகிகொண்டே வருகிறது பூமி .
அப்பேற்பட்ட தாயை இழப்பதே எவளவு பெரிய துன்பம் ?அந்த துன்பத்தை தனித்து கொள்வதற்காக ...தாய்க்கு திவசம் செய்ய போகிறான் ஒரு பாமரன் .
அப்போது ப்ரோகிதன் சொல்கிறான்
----------------------------------------------------
"என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா
பிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்ய நாம..."
------------------------------------------------------------
"எங்க அம்மா ராத்திரி வேலைகள்ல யார்கிட்ட படுத்துக்கொண்டு என்னை பெற்றாலோ தெரியாது.ஆனால் ...நான் ஒரு உத்தேச நம்பிக்கையில் தான் அவளை என் அப்பாவின் மனைவியாக கருதுகிறேன் .அவளுக்கு என் சிரார்த்ததை செய்கிறேன் ..."
என்பது தான் அந்த மந்திரத்தின் அர்த்தம் .உன் தாயை நடத்தை கெட்டவள் என சொல்வது தான் ..அதையும் உன்னை வைத்தே மறுபடி உச்சரிக்க வைப்பதுதான் இந்த மந்திரத்தின் நோக்கம்.இப்படிப்பட்டதுதான் இறுதி சடங்கு.
நேருஜி இறந்த பொது கவி சக்கரவர்த்தி கண்ணதாசன் "சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதா?.. தீயே உனக்கொரு நாள் தீமூட்டி பாரோமோ .. என்று கேட்டான் .
அதே போல் அம்மாக்களை இழிவு படுத்தும் இறுதி சடங்கே உனக்கொரு நாள் இறுதி சடங்கு செய்ய மாட்டோமா?
------------------------------இவ்வாறு முடித்திருக்கிறார் தாத்தாசாரியார்

Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தோழர்!
ப்ரோகிதர் மேற்சொன்ன மந்திரம் சூத்திர பயல்களுக்கு மட்டுந்தான் ...பாப்பனர் பார்ப்பனருக்கு பண்ணும் போது இந்த மந்திரத்தை அவர்களுக்கு சொல்ல மாட்டார்கள்... அவங்கெல்லாம் யோக்கியமாம் . அவர்கள் யோக்கியமாக இருப்பதில் மகிழ்ச்சி தான். பிறரை ஏன் இழிவு படுத்த வேண்டும்? அதுவும் துக்க வீட்டில் கூட வெளிப்படும் வன்மத்தைஎன்னவென்று சொல்ல ?
Post a Comment