Showing posts with label பொன்னியின் செல்வன்-கல்கி-தினமணி. Show all posts
Showing posts with label பொன்னியின் செல்வன்-கல்கி-தினமணி. Show all posts
Wednesday, August 11, 2010
பொன்னியின் செல்வன் பள்ளிகளில் துணைப் பாடம் ஆகணுமாம்..தினமணி சொலுகிறது
தஞ்சை பெரிய கோவிலின் 1000 ஆண்டு நிறைவை ஒட்டி கல்கி
எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை பள்ளிகளில் துணை பாட நூலக வைக்க
வேண்டுமாம். இன்றைய (12.08.2010) தினமணி தலையங்கம் தீட்டி உள்ளது. தினமணி அடிக்கடி
தன் ஆர்.எஸ்.எஸ் பாணியை நமக்கு நினைவு படுத்தும். அதுபோல இதுவும் ஒன்று. இன்னும்
கொஞ்சம் நாளில், ஜெயந்திரனின் 100 வது விழா வரும்போது மகா பெரியவாளின் "தெய்வத்தின்
குரல்" நூலினையும் துணைப் பாடமாக வைக்க சொல்லி அரசுக்கு பரிந்துரை
செய்து தலையங்கம் எழுதினாலும் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு மாணவர்களுக்கு
அறிவியலை வளர்க்க வேண்டும் பகுத்தறிவை புகட்ட வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம்
சொல்லுகிறது. இதெல்லாம் தினமணிக்கு தெரியாதோ? தெரிந்தாலும் அவாளின் பூணூல் பாசம்
இப்படி தலையங்கம் எழுத சொல்லுகிறது. அந்த தலையங்கம் நடுவே பாருங்க, 1000 ஆண்டு நிறைவு விழா தஞ்சை பெரிய கோவில் என்றதும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லையாம். அதே தாஜ்மகால் என்றால் அப்படி இருக்குமா? என்று ஒரு கேள்வி. ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர் தான் இப்படி சிந்திக்க முடியும்.
பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி அப்படியே பக்கத்துக்கு பக்கம் பகுத்தறிவை உதிர்த்து வைத்திருக்கிறார். அதனை மாணவர்களுக்கு புகட்ட வேண்டும். என்ன கொடுமை. இதெல்லாம் கேட்பார் யாரும் இல்லை என்ற நினைப்போ? இதெல்லாம் ஒரு பொது பத்திரிகை என்று தமிழன்
நம்பி ஏமாற்றம் அடைகிறானே? அவனை என்ன சொல்ல. தமிழா இன உணர்வு கொள்.
Subscribe to:
Posts (Atom)