வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label வேளுக்குடி கிருஷ்ணன். Show all posts
Showing posts with label வேளுக்குடி கிருஷ்ணன். Show all posts

Sunday, August 15, 2010

இந்துத்துவ வெறியரான வேளுக்குடி கிருஷ்ணன் பேச்சும் பார்பனர்களின் குதி ஆட்டமும்...

சென்னையில் நடந்த “போர்வாளும் பூவிதழும்’ என்ற நாட்டிய நாடக விழா மியூசிக் அகடமி அரங்கத்தில் ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் நடந்தது. இதில் இந்துத்துவ வெறியரான பார்ப்பனர் திரு.வேளுக்குடி கிருஷ்ணன் உரையாற்றினரோ இல்லையோ தமிழ் நாட்டுப் பார்பனர்கள் குதி ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டர்கள்.

தினமலரில் வெளிவந்துள்ள செய்தியின்படி “முதல்வர் விழாவில் வெளுத்துக்கட்டிய வேளுக்குடி கிருஷ்ணன்” என்று தினமலம் செய்தி வெளியிடுகிறது. மற்றும் சில பார்பனர்கள் அவர் பேசிய ஆடியோவை எல்லோரிடமும் கொடுத்து "தமிழை வளர்த்தவர்கள் பார்ப்பனர்கள்தான்" என்று புலன்காயிதம் பாடுகிறார்கள். பார்பனர்கள் என்றுமே வெட்கம் இல்லாதவர்கள் என்பதற்கு இது போன்ற பல நிகழ்சிகள் உதாரணமாக சொல்லலாம். பூணூல் கூட்டம் அடிக்கடி இப்படி ஆட்டம் போடுவது வழக்கம் தானே. சங்கர மடத்தினால் வீழ்ந்த மானத்தை என்ன பண்ணினாலும் தூக்கி நிறுத்த முடியாது என்பது மட்டும் ஏனோ பார்ப்பனியத்துக்கு புரியவே மாட்டேங்குது.

பார்பனர்கள் தமிழை வளர்த்த விதம் பற்றி தான் நமக்கு நன்றாக தெரியுமே..தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் கொண்டு வரும்போது முட்டுக்கட்டையாக இருந்தது யார்? பார்ப்பனர் ராஜாஜி. நாடு என்று வராமல் பார்த்துக்கொள்ளுங்களேன் என்று அறிவுரை வேறு. ஆரிய மாயை கண்ட அறிஞர் அண்ணாவிடம் பழிக்குமா...அய்யாவின் சீடர்.. நாடு கேட்டு இயக்கத்திற்கு வந்தவர்... தமிழனனின் தன்மானம் காத்து தமிழ்நாடு என்று பெயர் வைத்தார்...அங்கு தான் திராவிடத்தின் வெற்றி முதன் முதலில் தமிழுக்காக உன்றப்பட்டது....இதில் பார்ப்பான் எங்கே வந்தார்கள்.

பார்பனர்கள் தமிழை வாழவைத்த விதம் தான் தெரியுமே...தியாகய்யர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் இவர்கள் தான் ஆதி மும்மூர்த்திகள் என்று பார்பனர்கள் சொல்லுவார்கள். ஆனால் உண்மை வரலாறு மறைக்கப்பட்ட வரலாறாக இருந்தது. முத்துத்-தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசல கவிராயர் ஆகிய தமிழிசை முன்னோடிகளின் வரலாறு வந்திருக்கிறதா? வரலாறு மறைந்தி-ருக்கிறதா? இதுதான் பார்ப்பான் தமிழை வளர்த்த லட்சணம்.



இதோ பார்ப்பன பாரதி....சுதேசமித்திரனின் 1906ல் “எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்” என்ற தலைப்பில் தமிழை வளர்த்தம் விதம் பாருங்கள்,

“ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே

--- --- --- --- --------------------------
வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய்ப்
பேதக் கதைகள் பிதற்றுவாரிந் நாட்டினிலே” (2)

எனக் கூறி, இங்கு “ஆரியர்கள் வாழ்ந்த நாடு அற்புத நாடென்றும், அவர் எழுதிய வேத உபநிடதங்களெல்லாம் மறைந்து போயினவே” என்றும் மிகவும் வருத்தப்படுகிறார். பார்பனர்கள் தமிழ் வளர்த்த லட்சணம் இப்படித்தான். எங்கு போனாலும் தன் இனப்பற்று ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ள பார்பனர்கள்.. தமிழ், தமிழன் என்பது பிழைப்பு நடத்ததான் என்பதை நம்மவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


“செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே

--- --- --- --- ---

வேதம் நிறைந்த தமிழ்நாடு-உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு”

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்” (6)

என்று தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் புகழ்ந்து பாடியுள்ளார் பாரதியார். இப்பாடல்களை இயல்பான தன்னுணர்ச்சியுடன் பாரதி பாடவிலை என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

1915இல் சுதேசமித்திரனில் ‘தமிழ், தமிழ்நாடு’ முதலியவற்றின் சிறப்பைக் குறித்து, எழுதும் சிறந்த கவிதைக்கு மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பில் பரிசளிக்கப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இதைப் பாரதியார் பார்த்தும் பார்க்காததுபோல் விட்டுவிட்டார். ஆனால் இதைப் பார்த்த பாரதியின் புதுவை நண்பரான வாத்தியார் சுப்பிரமணி அய்யரும் மற்றும் சில நண்பர்களும் விளம்பரத்தைக் கூறி, கவிதை எழுதும்படி வேண்டினர். அவர்களின் கட்டாயத்தின் பேரிலேயே இப்பாடல்களைப் பாரதியார் எழுதியதாக பாரதியின் நண்பர் எஸ்.ஜி.இராமானுஜலு நாயுடு கூறியுள்ளார். (7)

இதே கருத்தைப் பாரதிதாசன் அவர்களும் கூறியுள்ளார்.

“தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப் பாக்கள் தந்தால்
அமைவான பாட்டுக் களிப்போம் பரிசென்று
சான்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் உரைத்தார்
தேன்போற் கவியொன்று செப்புகநீர் என்றுபல
நண்பர் வந்து பாரதியாரை நலமாகக் கேட்டார்

--- --- --- --- ---

செந்தமிழ் நாடெனும் போதினிலே யின்பத்
தேன்வந்து பாயுது காதினிலே என்றெழுதித்
தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால் எழுதி முடித்தார்” (8)

என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறுகிறார். இவ்வாறாகப் பாரதி நண்பர்களுடைய வேண்டுதலாலும், கட்டாயத்தாலும் தான், “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலையும், “யாமறிந்த மொழிகளிலே” என்ற பாடலையும் எழுதினார். இந்தப் பாடல்களுக்காக அவருக்கு மதுரைத் தமிழ்ச் சங்கம் பரிசாக ரூ.100 அளித்தது. (9) (பாரதியார் பற்றிய இந்த செய்தி உதவி கீற்று இணையத்தளம்)



பார்ப்பன பாரதி இப்படி என்றால் வேளுக்குடி கிருஷ்ணன் என்ன வெண்டக்காய். செந்நாயின் நிறம் மாறினாலும் மாறுமே தவிர பார்ப்பனரின் பிறவி புத்தி மாறவே மாறாது என்று அறிஞர் அண்ணா சொன்னதை இங்கு நினைவு கூறவேண்டும்..


புதுவைக் குயில் பாவேந்தர் பாடிய வரிகள் தான் நினைவுக்கு வருகிறது 

வீட்டிலே தூத்தம் என்பார். 

வெளியிலே தண்ணீர் என்பார் பிழைப்புக்காக.
உன் போல் கிள்ளாய்!


அடடா! வைர வரிகள்; ஒவ்வொரு எழுத்தும் கோடி பெறும்...

அண்ணாவே சொன்னாரே - தமிழ் பேசுவோரெல்லாம் தமிழராக முடியாது!

சரி இது இப்படி என்றால் பார்ப்பனர்களின் தலைமை பீடமாகிய  காஞ்சி மடம் தமிழை எப்படி ஏசுகிறது. தமிழ் நீசபாசை என்று தானே சொல்லுகிறது. இதோ "இந்து மதம் எங்கே போகிறது" என்ற நூலில் ராமானுச தாத்தாச்சாரி என்ன சொல்லுகிறார் பாருங்கள்..


"அந்த நாளுக்கான மாலை நேர பூஜைக்கான மடம் தயாராகி கொண்டிருந்ததது. மகா பெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால் கூட 'மடி' அதாவது ஆச்சாரம் போய் விடும். மறுபடியும் குளித்தாக வேண்டும். அந்த வகையில்..குளித்து முடித்துவிடிருந்தார் மகா பெரியவர்.
  
அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தே தீருவது, அருளாசி பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில்..நாட்டுக்கோட்டை செட்டிநாட்டிலிருந்து வந்திருந்த அருணாச்சலம் என்ற பக்தர்..மகா பெரியவரை பார்த்து அவரிடம் அருள் மொழிகள் வாங்கி விட்டுதான் போவது என்ற உறுதியோடு இருந்தார்

அந்த நேரம் நானும் மடத்தில் இருந்ததால், அருணா சலத்திடம் சொன்னேன்... 'இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகா பெரியவரை பார்க்க முடியாது. நாளை வாயேன்' என்றேன்.

'இல்லை சாமி இப்பவே அவரை பார்க்கணும்' - என்றார் பக்தர்

எங்கள் பேச்சு சத்தத்தை கேட்ட சிலர்..விஷயத்தை மகா பெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத்தார்

போனேன் கேட்டார்.சொன்னேன். 'இதோ பாரு தாத்தாச்சாரி அவரை பார்க்குறத்துக்கு நேக்கு ஒண்ணுமில்லை..பார்த்தால் எதாவது கேட்ப்பார், பதிலுக்கு நான் தமிழில் பேசவேண்டி வரும் நோக்குதான் தெரியுமே..தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணனும். பூஜைக்கு நேரமயிடுத்துல்லையோ..அதனால் நான் மௌனம் அனுச்டிக்கிறேன் என்று சொல்லி அனுப்பிச்சிடுங்கோ' 

என என்னோடு சம்ஸ்கிருத சம்பாசனை நிகழ்த்தினார் "


பார்த்தீர்களா பார்ப்பான் தமிழை வளர்த்த விதம். இதனை நான் சொல்லவில்லை எல்லா வேதங்களும் நன்கு படித்த, சங்கர மட மற்றும் மகா பெரியவர் என்று சொல்லுவார்களே அவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த தாத்தாச்சாரியார் சொல்லுகிறார்.


இதுல வெங்காய வேளுக்குடி கிருஷ்ணன் என்ன வேறுபடவா போகிறார்?.


வேளுக்குடி கிருஷ்ணனோ வெங்காயமோ... சவால் விட்டு கேக்கிறோம் கீதையை புறந்த்தள்ளி திருக்குறளை பொது நூலாக ஏற்க தயாரா? பார்ப்பனக் காவிக் கூட்டம். அதுதான் தமிழை வளர்ப்பது. ஏதோ இந்து வெறியர் திரு. வேளுக்குடி கிருஷ்ணன் தமிழ் மொழி பற்றி பேசினாராம் அதனை எடுத்து போட்டுகொண்டு நாங்களும் தமிழர்.. நாங்களும் தமிழர்...(நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்....பார்துகங்கோ) என்று கூச்சல் போட்டால் தமிழன் ஆகிவிட முடியுமா? இந்த பார்பனர்கள் விஷமம் புரிந்து தானே அறிவு ஆசான் அய்யா தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் என்று வைத்தார். பார்பனர்களே நீங்கள் என்ன குதி ஆட்டம் போட்டலும் உங்கள் விஷமம் பலிக்காது.

குறிப்பு: தேவைப்பட்டால் பார்ப்பான் தமிழ் வளர்த்த விதம் பற்றி மேலும் எழுத நேரிடும். சரக்கு நிறைய இருக்கு.                                                                                                                                                              

Tamil 10 top sites [www.tamil10 .com ]