வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label துக்ளக் பார்ப்பனர்-தினமலர் -திருவள்ளுவர்-டவுட் தனபாலு. Show all posts
Showing posts with label துக்ளக் பார்ப்பனர்-தினமலர் -திருவள்ளுவர்-டவுட் தனபாலு. Show all posts

Thursday, January 20, 2011

தினமலர் அய்யருக்கு டவுட் தனபாலுக்குப் புரிந்தால் சரி!

தினமலர் செவ்வாயன்று ஒரு டவுட் தனபாலைப் பேச வைத்தது. நேற்றும் பேச வைத்துள்ளது. இரண்டுமே கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்களைப் பற்றிதான்  -சுற்றிதான்!

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: தமிழகத்தில் தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை, பெரும் பாலும் வீட்டுக்கு வீடு சாமிகளும், கடவுள்களுக்கு கோவில்களும் உள்ளன. திருவிழாக்களுக்குப் பஞ்ச மில்லை. குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையாவது, குறிப்பிட்ட ஊர்களில் பக்தி வியாபாரம், கடவுளின் பெயரால் சுரண்டல், பிசின்ஸ் செழிப்பாக நடக்கிறது.

டவுட் தனபாலு: ஐயாவுக்கு அதுல என்ன வருத்தமோ...! திரா விடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகப் பொதுக் கூட்டங்கள்ல உண்டி யல் வசூல், துண்டு வசூல் நடத்தியும் ஒண்ணும் தேற மாட்டேங்குது.. கோவில்கள்ல மட்டும் கோடி கோடியா நிறையதேங்கிற வயித்தெரிச்சலோ..!

இதுதான் தினமலரின் டவுட் - கப்சா.

தி.க.வும், தி.மு.க.வும் உண்டி யல் வசூல் பண்ணுவது கூட்டம் நடத்துவது என்பது மக்களிடத்தில் பிரச்சாரம் செய்யத்தான். அந்தப் பிரச்சாரங்கள்தான், சிதம்பரம் கோயில் நிருவாகத்திலிருந்து ஆதிக் கத்திலிருந்து தீட்சதர்ப் பார்ப்பனர் களை வெளியேற்றியது.

பார்ப்பனச் சுரண்டல்களை சந்தி சிரிக்க வைத்துக் கொண்டும் இருக் கிறது. ஆனால் தினமலரின் டவுட் தனபால் எடுத்துக் காட்டியுள்ள - திராவிடர் கழகத் தலைவர் சுட்டிக் காட்டிய அந்தக் கோயில் சமாச் சாரங்கள் என்ன?

சிதம்பரம் கோயில் தீட்சதப் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கோயிலின் ஆண்டு வருமானம் ரூ.37,199 என்றும், செலவு ரூ.37 ஆயிரம் மீதி ரூ.199 என்றும் நீதிமன்றத்திலேயே கூறி னார்களா - இல்லையா?

அதே சிதம்பரம் கோயில், திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறை யின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ள நிலையில் அக்கோயிலின் உண்டி யல் வசூல் மட்டும் என்ன தெரியுமா? 15 மாதங்களுக்கான வருமானம் ரூ.25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய். அப்படியென்றால் எத்தனை நூற்றாண்டு காலமாக எவ்வளவுக் கொள்ளை அடித்திருக்கும் - இந்தத் தீட்சதப் பார்ப்பனக் கூட்டம்?

அது மட்டுமல்ல; இந்து அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சிதம்பரம் கோயில் சென்று விட்ட நிலையில் கோயிலில் உள்ள உண்டியல்களில் நெய்யை ஊற்றி ரூபாய் நோட்டுகளை நாசப்படுத்தும் கைங்கரியத்தையும் செய்தவர்கள் இதே தீட்சதர்ப் பார்ப்பனர்கள் தாம்.

தங்களுக்குப் பயன்படாதது எதுவாக இருந்தாலும் அது நாசமாகப் போக வேண்டும் என்பதுதானே பார்ப்பனர்களின் கல்யாணக் குணங்களும், பரந்த உள்ளமும்!

பக்தி வியாபாரம் கடவுளின் பெயரால் சுரண்டல் பிசினஸ் செழிப்பாக நடக்கிறது என்று திரா விடர் கழகத் தலைவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை காலங் கடந்தாவது இப்பொழுதாவது தினமலர் அய்யருக்கு டவுட் தனபாலுக்குப் புரிந்தால் சரி!\
- கருஞ்சட்டை,விடுதலை,20-01-2011


Saturday, August 07, 2010

குடுமிகளின் நையாண்டி தர்பார்!

கேள்வி: பெங்க ளூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவ தன் மூலம் கன்னடர் தமிழர் இடையே நல் லுறவு, நல்லிணக்கம் ஏற்படும் என்று கரு நாடக முதல் வர் எடியூ ரப்பா கூறியுள் ளாரே?

பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான். யாரா வது கன்னட வெறியர் கள் ஒரு சமயம் பார்த்து, அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தாலே போதுமே!
துக்ளக், 19.8.2009, பக்கம் 9

இது பதிலா? கன்னட வெறியர்களைத் தூண்டிவிடும் பூணூல் தனமா?
துக்ளக் பார்ப்பனர் ஏடு இப்படி தூபம் போடு கிறது என்றால், தினமலர் சிண்டு விரைத்துக் கொண்டு கீழ்க்கண்டவாறு எழுதுகிறது.

தமிழக பொதுப் பணித்துறைச் செயலாளர் ராமசுந்தரம் தமிழகத்திற்கு கருநாடகா ஆண்டுக்கு 201 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும். மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். கருநாடக அரசு, குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடாததால், இந்த ஆண்டு தாமதமாக கடந்த 7 ஆம் தேதிதான் திறந்துவிட்டோம்.

டவுட் தனபாலு: அதனால் என்னங்க... பெங்களூருவுல திருவள்ளுவர் சிலை திறந்து விட்டோமே இல்லையா? அதுக்கப்புறம் டெல்டா பகுதிகள்ல முப்போகம் விளையாதா என்ன...?
(தினமலர், 18.8.2009)

எது எதையும் முடிச்சுப் போடுகிறார்கள் பார்த்தீர்களா இந்த முப்புரிக்கும்பல்?
திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதால் இரு மாநிலங்களுக்கும் நல்லுறவு ஏற்படும் என்று கருநாடக மாநில முதலமைச்சர் கூறுகிறார். இவ்வளவுக்கும் திருவாளர் சோ விழுந்து விழுந்து ஆதரிக்கும் பி.ஜே.பி.யின் முதலமைச்சர்தான் அவர்.
அதையும் தாண்டி திருவள்ளுவர்மீது அவாளுக்கு இருக்கும் எரிச்சல் பொத்துக் கொண்டு கிளம்புகிறதே!

தினமலரோ திருவள்ளுவர் சிலை திறந்தாச்சு தமிழ்நாட்டில் டெல்டா முப்போகம் விளையாதா என்ன என்று கிண்டல் கேலி செய்கிறது.
யாருக்கு எதன்மீது என்ன அபிப்ராயம் இருக்கிறதோ, அந்தப் பாணியில்தானே புத்தி மேயப் போகும்?

கும்பமேளா நடந்துவிட்டதோ இல்லையோ, இனி பாருங்கோ இந்தியாவில் பாலும், தேனும் பெருக்கெடுத்து ஓடப் போகுது.

காஞ்சி ஜெயேந்திரருக்கு பவள விழா நிறைவு ஜெயந்தி நடக்கிறதோ இல்லையோ, நீங்க பாக்கத்தான் போறீங்க கங்கையும், காவிரியும் யாருடைய சிரமும் இல்லாமல் ஒன்றாக இணையப் போகின்றன.

அழகர் பச்சை உடை உடுத்தி ஆற்றில் இறங்கினாரோ இல்லியோ, வைகையில் கரைபுரண்டு ஓடப்போகும் காட்சியை மதுரை மக்கள் பார்த்து மகிழ்ச்சிக் கூத்து ஆடத்தான் போகிறார்கள் என்று கும்மாங்குத்து நம்மால் கொடுக்க முடியாதா?
மூன்று சதவிகித உச்சிக்குடுமிகள் தமிழ் நாட்டில் உட்கார்ந்துகொண்டு தமிழ்ச் செம்மொழி என்றால் கிண்டல் வள்ளுவர் சிலை திறப்பு என்றால் ஒரு சீண்டல்; உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்றால், நையாண்டி செய்கிறார்கள் என்றால்...
தமிழர்களின் சுரணையைச் சீண்டுகிறார்கள் சூடு கிளப்புகிறார்கள் என்று தானே பொருள்!
தமிழா தன்மானங் கொள்! என்று சூளுரைத்துக் கிளம்பத்தான் வேண்டுமோ!

----- நன்றி விடுதலை நாளிதழ்
                                                                                                                                                               


Tamil 10 top sites [www.tamil10 .com ]