Showing posts with label ஆஸ்திகம்-நாஸ்திகம்-அண்ணா-பெரியார். Show all posts

Thursday, August 19, 2010
அறிவு ஆசான் பெரியாரை என்றும் நினைவில் வைத்திருக்கும் பார்ப்பனர்கள்
அய்யா தந்தை பெரியாரின் பார்ப்பனிய வேரருப்பினால் தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் குய்யோ முறையோ என்று அந்தகாலம் தொட்டு இந்தக்காலம் வரை அய்யாவை நினைவில் வைத்துகொண்டுள்ளர்கள். அது முதல் மகிழ்ச்சி. தமிழ் நாட்டில் பிறந்த பார்ப்பனர் வீட்டில் பெரியார் படம் இருக்கோ இல்லையோ அவர்கள் உள் மனதில் அவர் நினைவு நீண்டுகொண்டுதான் இருக்கிறது என்பது மட்டும் நன்கு விளங்குகிறது.அவர்கள் மூச்சுக்கு 32 தடவை ராமசாமி..ராமசாமி என்று கூறும்போதே..அய்யாவின் தாக்கத்தை நன்கு உணரமுடிகிறது. அய்யாவை என்றும் நினைவில் வைத்திருக்கும் பார்ப்பனர்களுக்கு பாராட்டுகள்....அறிவு ஆசானின் அடி எப்பேர்பட்ட அடி....அய்யாவை மறக்ககூடாது பார்பனர்கள்.... சரி ஆஸ்திகம் நாஸ்திகம் பற்றி அண்ணா என்ன கூறியுள்ளார் என்பதை பார்ப்போம்....
1. ஆஸ்திகம் என்று உண்டானதோ, அன்றே நாஸ்தீகமும் உண்டாயிற்று.
2. ஆஸ்திகம் அறியாமை, பயம், சுயநலம் இவற்றில் முளைத்து; நாஸ்திகம் அறிவின் விசாரணைகளில் முளைத்தது.
3. ஆஸ்திகம் அறிவைப் பாழ்படுத்துகிறது. நாஸ்திகம் அறிவை ஓங்கச் செய்கிறது.
4. ஆஸ்திகம் உலகை மிருகநிலைக்கு அழைத்துச் செல்கிறது; நாஸ்திகம் அதை நாகரிக நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
5. ஆஸ்திகம் மக்களை அவமதிக்கிறது. நாஸ்திகம் மக்களை மேன்மைப்படுத்துகிறது.
6. ஆஸ்திகம் மக்களை அழியவைக்கும் நாஸ்திகம் மக்களை வாழவைக்கும்.
7. ஆஸ்திகத்தால் வறுமை, பிணி முதலியன ஓங்கும் நாஸ்திகத்தால் அவை அழியும்.
8. ஆஸ்திகமும நாஸ்திகமும் என்றும் தீராப்பகை கொண்டன.
9. ஆஸ்திகத்திற்கு அறியாமையும் அரசாங்கமும், முதலாளித்வமும் துணை. நாஸ்திகத்திற்குப் பகுத்தறிவே (விஞ்ஞானம்) துணை.
10. ஆஸ்திகம் அழியக் கூடியது நாஸ்திகம் என்றும் அழியாதது.
11. ஆஸ்திகம் சில சமயம் சாஸ்திகத்தைப் புறம்பே அழிக்கும் ஆனால், நாஸ்திகமோ ஆஸ்திகத்தை உள்ளும் புறமும் அழிக்கவல்லது.
12. ஆஸ்திகத்தின் வெற்றி தற்காலிக வெற்றியாகும் நாஸ்திகத்தின் வெற்றியோ நிலைபெற்ற வெற்றியாகும்.
13. ஆஸ்திக நாஸ்திகப் போராட்டத்தின் லாப நஷ்டக் கணக்கு. ஆஸ்திகத்திற்குத் தோல்வியும், நாஸ்திகத்திற்கு வெற்றியும் சரித்திர முறைப்படி இதுவரை உண்டு, இனியும் உண்டு.
14. ஒரு மதத்தின்படி அதனை நம்பாத மற்ற மதங்கள் நாஸ்திகமானபடியால், எல்லா மதத்தையும் நம்பாத முழு நாஸ்திகமோ நன்மையளிக்கும் பெருமையளிக்கும், ஆகையால், அம்முழு நாஸ்திகமே எங்கும் பரவுக! ஓங்குக!! (--------அறிஞர் அண்ணா, திராவிட நாடு 31.10.1943)

Subscribe to:
Posts (Atom)