வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Wednesday, February 17, 2010

ஈழத் தமிழர் பிரச்சினை: தமிழர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடாதா?

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை வேண்டி திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையில் நேற்று (16.2.2010) திராவிடர் கழகத் தலைமையில் ஆர்ப்பாட்டம் வெகு எழுச்சியுடன் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெரிவித்த கருத்துகள் மிக முக்கியமானவை.
தீவிரவாதத்தினை எதிர்ப்பதுதான் எங்களின் நோக்கமே தவிர, ஈழத் தமிழர்களை சங்கடப்-படுத்தும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது என்று ராஜபக்சே சொன்னாரே_ அது உண்மை-யென்றால், அவர்களின் கூற்றுப்படியே - தீவிர-வாதிகளைத்தான் ஒழித்துக் கட்டிவிட்டார்களே. அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, போரி-னால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான நலத் திட்டங்-களை மேற்கொண்டிருக்க வேண்டாமா?
முள்வேலி முகாமுக்குள் சிறை வைக்கப்பட்ட தமிழர்-களை அவர்களின் சொந்த வாழ்விடங்-களில் மீள் குடியேற்றம் செய்திருக்க வேண்-டாமா?
இராணுவத் தீர்வுக்குப் பின் அரசியல் தீர்வை நோக்கி அடியெடுத்து வைத்திருக்க வேண்டாமா?
உலகம் பூராவும் போர் நடந்து முடிந்தவுடன், மக்களின் சுமூக வாழ்க்கைக்கான முயற்சிகளில், நலத் திட்டங்களில்தானே எந்த அரசும் ஈடுபடும். ஆனால் இலங்கையில் நடப்பது என்ன? போர் முடிந்தும் அம் மக்களைப் பழிவாங்கும் வேலை-யில்-தானே அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழர்களில் இளைஞர்களாக இருக்கக் கூடிய-வர்களை விடுதலைப் புலிகள் என்று முத்திரை குத்தி, அவர்களை யுத்த நெறிமுறைகளுக்கு மாறாக நிர்வாணப்படுத்தி சுட்டுக் கொல்லுவது எந்த நியாயத்தில் ஏற்றுக் கொள்வது?
இரண்டாவதாக இந்தப் பிரச்சினையில் இந்திய அரசின் கடமை என்ன? அரசியல் தீர்வு காண வேண்டும் என்று வெறும் வார்த்தையளவில் இந்திய அரசு சொன்னால் போதுமா? போதுமான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டாமா?
சீனா அளிக்கும் தைரியத்தில், பாகிஸ்தானின் பக்க பலத்தில் இந்திய அரசின் குரலை, இலங்கை அரசு கேட்கத் தயாராக இல்லை என்பதையாவது இந்தியா காலந்தாழ்ந்தாவது உணருமா?
இலங்கைக்கு இந்திய அரசைவிட அதிக உதவி செய்தவர்கள் வேறு யார்? எவ்வளவு ஆயு-தங்களை இந்திய கொடுத்து உதவியது? இவ்வளவும் கொடுத்து உதவிய நாடு என்ற முறையில், இலங்கையை வற்புறுத்த இந்தியாவுக்கு உரிமை இருக்கிறதே.
ஏன் வலியுறுத்தவில்லை? இந்தியாவுக்கு மனமில்லை என்ற முடிவுக்குதானே தமிழர்கள் முன்வருவார்கள்?
அப்படியானால் இந்தியாவின் தென்கோடியில் உள்ள தங்களின் தொப்புள்கொடி உறவு கொண்ட ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற இந்திய அரசுக்கு விருப்பம் இல்லை என்று பொருள்படாதா?
இந்தியா என்றால் அங்கு தமிழர்களுக்குப் பாதுகாப்பு கிடையாது என்ற எண்ணம் தமிழர்-களிடத்தில் உருவாக இடம் கொடுப்பது புத்தி-சாலித்தனம்தானா?
மற்ற மற்ற நாடுகள் ஈழத் தமிழர் பிரச்சினை-யில் காட்டும் அக்கறை கூட இந்தியா காட்டு-வ-தில்லையே,- ஏன்?
போர் முடிந்த பிறகு கூட அந்த மக்களின் அடிப்-படை வாழ்வுரிமை பற்றி இந்தியாவுக்கு அக்-கறை பிறக்கவில்லை என்பது கண்டனத்திற்கு உரியதாகும். இந்த வகையில் தமிழர்களின் உணர்வு-களை இந்திய அரசுக்கு உணர்த்தவே இந்த ஆர்ப்பாட்டம்.

தமிழர்கள் மத்தியில் ஈழப்பிரச்சினை என்பது கூட அரசியலாக்கப்படுவது வேதனைக்குரிய-தாகும். அதனால்தான் வேண்டாம், -வேண்டாம்_ -அரசியல் வேண்டாம்;- ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசியல் வேண்டாம் என்ற முழக்கம் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டது.
இந்த அரசியலும் கூட ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டதற்கான காரணங்களுள் முக்கிய-மானது என்பதை ஒதுக்கி விடமுடியாது.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படு-கொலைக்கு ஆளான பிறகும் கூட, இன்னும் நமக்குத் தமிழர்கள் என்ற இனவுணர்வு, - பொறுப்-புணர்வு வரவில்லை என்றால் _ அதிலும் அர-சியல்-தான் என்றால், தமிழர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடாதா? இந்த ஆர்ப்பாட்டத்-தின் மூலம் தமிழர்களின் சிந்தனைக்கு திராவிடர் கழகம் இந்த வினாக்களை முன்வைக்கிறது.

- விடுதலை (17.02.10) தலையங்கம்

Friday, February 12, 2010

நமது கர்ச்சனைகள் கடலைத் தாண்டி எதிரொலிக்கட்டும்!

இலங்கைத் தீவிலே ஈழத் தமிழர்களின் மறு வாழ்வு சீரமைக்கப்படும் என்ற நம்பிக்கையின் முனை-கூடத் தெரியவில்லை. அதுபற்றிய ஒரு சிந்தனைப் போக்கு அதிபர் ராஜபக்சேவுக்கு இருப்பதற்கான அறிகுறியும் தென்படவில்லை.


நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, அடுத்து நாடாளுமன்றத் தேர்தலையும் சந்தித்து, ஏக-போகமாகக் கொடியேற்றி சர்வாதிகாரத் தாண்டவம் போடுவதில்தான் அவர் குறியாயிருப்பதாகத் தெரிகிறது.

அதற்குத் தடையாக பொன்சேகா இருப்பார்; அதிபர் தேர்தலில் கணிசமாக வாக்குகளையும் பெற்றுள்ள அவரை வெளியில் நடமாடவிட்டுத் தேர்தலைச் சந்திப்பது புத்திசாலித்தனமல்ல என்று கணக்கு போட்டு, தமது ஆட்சியின்போது இராணுவத் தளபதி என்ற உயர்ந்த பீடத்தில் இருந்தவரை நாயை அடித்து இழுத்துச் செல்வது போல கைது செய்து இழுத்துச் சென்றுள்ளனர்.

ராஜபக்சேயின் நாகரிகமும், அணுகுமுறையும் எந்தத் தரத்தில் உள்ளன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டுதான். உலகம் முழுவதிலும் இதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அய்.நா. செயலாளரும் ராஜபக்சேயுடன் இது குறித்து பேசியுள்ளார்; தமது அதிருப்தியையும் தெரி-வித்துள்ளார். விரைவில் அய்.நா.வின் அரசியல் பிரிவு தலைவர் வெய்ன் போஸ்கா இலங்கை சென்று நிலைமைகளை நேரில் ஆய்-வார் என்றும் அய்.நா. பொதுச்செயலாளர் பான் கீ முன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் எச்சரித்துள்ளது. இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரசாத் தெரிவித்துள்ள கருத்தும் கவனிக்கத் தக்கதாகும். சரத் பொன்-சேகா மீதான குற்றச்சாற்றுகள் குறித்து சட்டப்-பூர்வமான விசாரணை நடைபெற வேண்டும் என்ற கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

அதிபர் ராஜபக்சே இவற்றுக்கொல்லாம் நாகரிகமான முறையில் செவி கொடுத்து, ஜனநாயக முறையில், சட்ட ரீதியான ஒழுங்குடன் நடந்து கொள்வார் என்று எதிர்பார்ப்பது கடினமே.

தமிழர்களை அழிப்பதில் ராஜபக்சேவும், பொன்-சேகாவும் போட்டிபோட்டுக் கொண்டு செயல்-பட்டவர்கள் என்பதை அறிந்தவர்கள்தான் நாம். என்றாலும் பொன்சேகா மாறுபாடான கருத்து-களைக் கூறத் தொடங்கிவிட்டார் என்று தெரிந்த-வுடன் கண்மூடித்தனமான தாக்குதலை தொடுக்க தொடங்கி விட்டார் ராஜபக்சே.

ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும், மீள் குடியமர்த்தம் நடைபெறும் என்று சொன்னதெல்லாம் உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவத்தான் என்பது தெரிகிறது.

அதிபர் தேர்தலில் கூட தமிழர்களின் பகுதி-களில் அதிக வாக்குகள் பதிவாகிவிடக்கூடாது என்பதற்காக வாக்குப் பதிவு அன்று குண்டு வெடிப்புகளை நடத்திய கொடூரன்தான் ராஜபக்சே.

மழைவிட்டும் தூவானம் நிற்கவில்லை என்பது போன்ற நிலைதான். நேற்று மாலை ஏடுகளில் வெளிவந்த ஒரு செய்தி நம் குருதியை உறையச் செய்கிறது.

சிங்கள ராணுவத் தாக்குதலில் உடல் ஊனமுற்ற யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒரு-வரும், மாணவி ஒருவரும் இடுபாலைப் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டனர் என்ற செய்தி எதைக் காட்டுகிறது?

ஊனமுற்ற நிலையில் நாம் படித்துதான் என்ன செய்யப்போகிறோம்? நம் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் என்ன? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காமல், அப்படியொரு முடிவை மேற்கொண்டனர் என்றே கருதவேண்டும்.

இரு மாணவர் தற்கொலை செய்து கொண்-டனர்; தற்கொலை செய்து கொள்ளாத தமிழர்-களும் கிட்டத்தட்ட இந்த எண்ணத்தில்தான் தத்தளித்துக் கொண்டுள்ளனர்.

30 கல் தொலைவில் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பத்தைத் துடைத்திட தமிழர்களே, தமிழர்களே! நாம் வீறுகொண்டு எழ வேண்டாமா?

தமிழ்நாட்டு மண்ணில் கொந்தளிக்கும் உணர்வை வெளிப்படுத்த தமிழர் தலைவர் அறிவித்துள்ள ஆர்ப்பாட்டம்தான் பிப்ரவரி 16 ஆம் தேதி மாலை சென்னையில் நடைபெற இருப்பதாகும்.

கழகப் பொறுப்பாளர்களே, முனைப்புக் காட்டுங்கள். நமது கர்ச்சனைகள் கடலைத் தாண்டி எதிரொலிக்கட்டும்!

ஆயத்தமாவீர்! ஆயத்தமாவீர்!!

விடுதலை தலையங்கம் (12.02.2010)

Friday, December 04, 2009

ஈழத் தமிழர் பிரச்சினை....‘‘அம்மா’’வுக்குப் பயந்து முடிவுகளை மாற்றியவர்கள் யார்?



நானும் பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் சென்னையில் பெரியார் திடலில் ஆசிரியர் அவர்களைச் சந்தித்தோம். ஈழத் தமிழர்களுக்காக ஒரு பொது-வான இயக்கத்தை உருவாக்கலாம் என்று முடிவெடுத்தோம்.


சனவரி 10ஆம் தேதி (2009) பெரியார் திடலில் அதற்கான ஒரு கூட்டத்தைக் கூட்டிட ஆசிரியர் அவர்களே அனைவருக்கும் கடிதம் எழுதினார்.

அங்கு நடந்தால் சிறப்பாக இருக்கும் என்பது தான் எங்களின் எண்ணமாகவும் இருந்தது. ஆனால் பெரியார் திடலில் வேண்டாம் என்று சில தலைவர்கள் நினைத்தார்கள். பெரியார் திடலில் கூட்டம் நடத்துவதில் என்ன சிக்கல்? எல்லோருக்கும் பொதுவான இடம் பெரியார் திடல்தானே என்று மருத்துவரிடம் நான் கேட்டேன்.

சிலர் அப்படி நினைக்கிறார்கள்_ சரி, எங்கு நடந்தால் என்ன? நமக்குக் காரியம்தான் முக்கியம் என்றார்.

பெரியார் திடலில் கூட்டம் என்று அறிவித்துவிட்டு அதனை ரத்து செய்வது சங்கடமான ஒன்று. ஆசி-ரியரைச் சந்தித்து சமாதானம் சொல்-லுவோம் வாருங்கள் என்று டாக்டர் அவர்களை அழைத்துக் கொண்டு பெரியார் திடலுக்குச் சென்றோம்.


தமிழர் தலைவரின் பெருந்தன்மை

ஆசிரியர் அவர்கள் மிகவும் பெருந்-தன்மையாகவே நடந்து கொண்டார். அதே நேரத்தில் சகோதரர் வைகோ-வுக்கோ, தோழர் தா.பாண்டியனுக்கோ, நண்பர் நெடுமாறனுக்கோ பெரியார் திடலுக்கு வருவதற்கு என்ன சங்கடம் _ தயக்கம்? அவர்கள் எல்லாம் இங்கு வருபவர்கள்தானே என்ற கேள்வி-யைக் கேட்டார். நியாயமான கேள்வி அது என்பதில் அய்யமில்லை.


பெரியார் திடலில் நடத்தக்கூடாது என்பதற்குக் காரணம், அங்கு நடந்-தால் அம்மா கோபித்துக் கொள்வார் என்பதுதானாம். தமிழர்கள் ஒன்றுபட முடியாத சிக்கல் எங்கே இருக்கிறது என்று இதன்மூலம் தெரிகிறது.


12ஆம் தேதி வேறு ஓரிடத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்துக்கு நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று டாக்டர் அவர்களும், நானும் ஆசிரி-யரிடம் மிகவும் வற்புறுத்தினோம். ஈழத் தமிழர் நலன் கருதி ஆசிரியர் அவர்களும் மிகவும் பெருந்தன்மை-யோடு கூட்டத்தில் பங்கேற்க ஒப்புதல் தந்தார். பிரச்சினைமீது அக்கறை என்பதால் அந்தப் பெருந்-தன்மையை தமிழர் தலைவரிடம் காணமுடிந்தது.

முதலமைச்சருடன் சந்திப்பு

இதற்கிடையே ஆசிரியர் அவர்கள் ஒரு கருத்தினை எங்களிடம் கூறினார். ஈழப் பிரச்சினை என்பது எப்படியாக இருந்தாலும் அரசு மூலம் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. நாம் வீதிகளில் என்னதான் கத்தினாலும், நாம் கோரிக்கை வைப்பதும் அரசிடத்தில்-தான். எனவே 12ஆம் தேதி கூட்-டத்துக்கு முன் முதலமைச்சரிடம் இதுகுறித்து பேசுவோம் என்றார் தமிழர் தலைவர். அது சரியாகத்தான் பட்டது. பா.ம.க. தலைவர் கோ.க.மணி முதல்வரைச் சந்திக்க நேரத்தையும் பெற்றார். அதன்படி 12 ஆம் தேதி காலை 9 மணிக்கு முதல-மைச்சர் அவர்களை சந்தித்தோம். நாற்பது நிமிடங்கள் பேசினோம். எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தாகி விட்டது. வேண்டுமானால் நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்றார் முதலமைச்சர்.

உங்கள் வயதுக்கு உண்ணாவிரதம் என்பதெல்லாம் தவறு. அதுவும் கொள்கைக்கு முரண்பாடானது என்று கூறினார் ஆசிரியர்.


அம்மா வருத்தப்படுவார்களாம்!


அதன்பின் ஒரு தகவல் வருகிறது. அன்று மாலை நடக்க இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்று அறிவித்தார்கள். என்ன காரணமாம்? மருத்துவர் ராமதாசு அவர்களைச் சந்தித்துக் கேட்டபோது அவர் கூறினார், முதலமைச்சரைச் சந்தித்து-விட்டு வந்தால் அம்மா வருத்தப்படு-வார்கள் என்கிறார்கள் என்று கூறினார்.




ஈழம் போய் இலங்கை வந்தது ஏன்?


சில நாள்கள் கழித்து தோழர் தா.பாண்டியன் அவர்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அது பொங்கு தமிழர் அறக்கட்டளை அலுவலகத்தில் நடக்க இருந்தது. எனக்கு அழைப்பு இல்லை. இருந்-தாலும் பிரச்சினையின் முக்கியத்-துவத்தைக் கருதி மருத்துவர் ராமதாசு அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டேன்.

சிறிது நேரம் கழித்துத் தொடர்பு கொள்வதாகக் கூறினார். பிறகு சரி, நீங்கள் கூட்டத்துக்கு வாருங்கள் என்றார். நானும் கூட்டத்துக்குச் சென்-றேன். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒன்று உருவாக்கப்-பட்டது. ஈழம் போய் இலங்கை வந்தது எப்படி என்று கேட்டதற்கு கம்யூனிஸ்ட்களுக்கு ஈழம் என்பதில் உடன்பாடில்லையாம்.

இத்தனை லட்சம் ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட்ட பிறகு கம்யூனிஸ்ட்-களின் நிலைப்பாடு சிங்களர்களின் ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழர்களுக்-கான உரிமை என்பதுதானாம்.

ஈழத் தமிழர் பிரச்சினையில், ஈழத் தமிழர்களுக்கும், விடுதலைப்புலி-களுக்கும் எதிர்நிலையில் இருந்து வரும் செல்வி ஜெயலலிதா அம்மா-வின் விருப்பம் _ கோபதாபம் இவற்-றைப் பொறுத்து முடிவு எடுக்கும் நிலையில் யார் யார் இருந்தார்கள் என்பதை தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் இருந்தாலும் ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்த வரையில் கலைஞர் அவர்-களுக்கு எதிரான அணியினரிடம் உறவு வைத்துக் கொண்டிருந்தேன்.

இந்தப் பிரச்சினைக்காக திமுக கூட்டணியிலிருந்து என்னை வெளி-யேற்றினாலும் சரி, அது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு வரை கூட எதிர் அணியில் தானிருந்தேன்.

இரண்டு சீட்டுக்காக திருமாவள-வன் காங்கிரசுக்கு அடிமையாகி விட்டான் என்றெல்லாம் அவதூறு செய்தனர். எங்களைப் பொறுத்தவரை திமுகவோடு தான் கூட்டு என்பதில் தெளிவாகவேயிருந்தோம்.

கொள்கை ரீதியான கூட்டு

முதலமைச்சர் கலைஞரிடம் செய்-தியாளர்கள் கேட்டனர், விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இருக்கிறார்களா என்று கேட்டனர். விடுதலைச் சிறுத்தைகளுடன் திமு-வுக்கும் உள்ள உறவு வெறும் தேர்தல் கூட்டணி உறவல்ல _ கொள்கை உறவு _ பெரியாரியல் சிந்தனை என்ற அடிப்படையிலும், ஜாதி ஒழிப்புக் கொள்கை அடிப்படையிலும் உள்ள கொள்கை உணர்வு என முதல-மைச்சர் பதிலளித்தார்.

இது விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைக்குக் கிடைத்த அங்கீகார-மாகும். தேர்தல் கூட்டணியைக் கொள்-கைக் கூட்டணி என்று அறிவித்தது விடுதலைச் சிறுத்தை-களுக்கு மட்டுமே என்பது பெருமைக்-குரிய ஒன்றாகும்.

ஈழத் தமிழர் பிரச்சினை போன்ற-வற்றில் திராவிடர் கழகத்தையோ, தமிழர் தலைவர் வீரமணி அவர்-களையோ முன்னிலைப்படுத்தாமல் வேறு யாரை முன்னிலைப்படுத்த முடியும்?

கலைஞர் அவர்களுடன் திராவிடர் கழகத்துக்கு நெருக்கமான உறவு இருந்தாலும், காங்கிரசைக் கண்டிப்-பதிலோ, எதிர்ப்பதிலோ, போராட்-டம் நடத்துவதிலோ தமிழர் தலைவர் பின்வாங்குவதில்லையே!

பொதுப் பிரச்சினையிலும், தமி-ழர்கள் மத்தியிலே ஏற்பட வேண்டிய நல்லிணக்கம் என்பதிலும் தமிழர் தலைவர் மேற்கொள்ளும் அணுகு-முறை என்பது மிகவும் சிறப்பான-தாகும்.

- சென்னை மந்தவெளி பொதுக் கூட்டத்தில் தொல்.திருமாவளவன், 2.12.2009

Sunday, November 15, 2009

இலங்கையின் இருண்ட வரலாறு....

எனது நண்பரின் கவிதையை கொடுத்துள்ளேன். வாசித்து நீங்களும் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தாய் வசிக்கிறாள் தாய்லாந்து நாட்டில்....!
தந்தையோ அகதியாய்
தமிழ்த்திருநாட்டில்...!!
கணவன் ஊனமாய்
கனடா நாட்டில் ..!
கட்டிய மனைவியோ கள்ளி காட்டில் ....!
ஈழத்து கள்ளிக்காட்டில்...!!!
உறவை இழந்த மக்கள் ...!
ஊரை இழந்த மக்கள் ..!
உறுப்பை இழந்த மக்கள் ..!!
ஆனாலும் இவர்கள் இன
உணர்வை இழக்காத மக்கள் ..!!
தமிழன் கறி விற்கின்றது
கசாப்பு கடை .!
தமிழச்சி மானம் பறிக்கிறது
சிங்களப்படை ..!!
வீடுகளை இடிக்கின்றது
விமானப்படை ..!
வீதியில் நிற்பதுதான் இனி
தமிழனின் நிலை ..!!
உலகத்தின்
எல்லா தேசத்திலும்
சுடுகாடு உள்ளது
ஆனால்
இந்த தேசம் மட்டும்தான்
சுடுகாட்டில் உள்ளது .!
கைத்தொழில் தொடங்கி
கனரக தொழில் வரை
சிங்கள இராணுவம்
சீரழித்து விட்டது ..!!
இனி இந்த தேசத்தில்
சவப்பெட்டிகளுக்குதன்
சரியான தொழில் வளமும்
சந்தை வளமும் இருக்க போகிறது .!!
சவப்பெடிகள்
அதிகம் விற்பனையாகும்
ஆசிய நாடு என்னும் பெருமை
இலங்கை தேசத்துக்கு மட்டுமே
இருக்க முடியும் ..!!
பல்லாங்குழி ஆடும் வயதில்
பதுங்கு குழி தேடும்
பரிதாப நிலையில்
பாவப்பட்டவர்களாய்
பாவையர் கூட்டம்.!!!
மக்களுக்கு பகவனை விட
பதுங்கு குழிகள்தான்
பாதுகாப்புக்கு தருகிறது .!!
மரணத்தின் பிடியில் தவிக்கும்
மனிதாபிமானம் ..!
சிங்களச் சிப்பாய்களின்
தூப்பாக்கி கத்திகள்தான்
தமிழ் பெண்களுக்கு
கருவறை கிழித்து
பிரசவம் பார்க்கிறதாம்..!!
என்ன பாவம் செய்தார்கள்
எங்கள் தமிழச்சிகள் ?
நினைவு நாட்களும்
இழவு நாட்களும் மட்டுமே
தமிழர் வீடுகளில்
தினம் தினம் நிகழும் திருவிழா ..!
கணவன் கண் முன்னே
கற்பழிக்கும் கொடுமை .!
தந்தையை பார்க்க வைத்து
தகாத உறவு .!!
சிறுமிகளை துரத்தி
சிற்றின்பம் .!!!
இவற்றில் தான்
சிங்கள இராணுவம்
பெற்றுள்ளது
சிறப்பு பயிற்சி ..!!
அநேகமாய்
அடுத்த நூற்றாண்டில்
இலங்கை தமிழனின்
எலும்பு கூடுகள் தான்
எஞ்சி இருக்க கூடும் .!
நேற்று
புத்த பூமி ..!
இன்று
யுத்த பூமி ..!
நாளை
தமிழன் செத்த பூமி .!!!
இவைதான் இனி
இலங்கை தேசத்தின்
இருண்ட வரலாறு .!!!


கவிதை ஆக்கம்:
சுய. சரவணன்
44, மேலத்தெரு,
மேலவாசல் (அ)
மன்னார்குடி (வ)
திருவாரூர் மாவட்டம்.
தமிழ்நாடு - 614001

Wednesday, September 30, 2009

வன்னி அகதிகள் சிறைவைப்புக்கு சமாதானம் கூறும் காரணங்கள்

வன்னியில் இடம்பெயர்ந்து முகாம்களுக்குள் சிறைவைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் அப்பாவித் தமிழர்களையும் அங்கு தொடர்ந்து முடக்கி வைத்திருப் பதில் அவர்களை விடுவிப்பதில்லை என்பதில் கொழும்பு மிகமிக உறுதியாக இருக்கின்றது.
தன்னுடைய இந்தப் பிடிவாதப் போக்கை நியாயப்படுத்துவதற்காக எந்தவித காரணங்களையும் விளக் கங்களையும் தருவதற்கு அது பின்நிற்பதில்லை.
"வன்னி நிலப்பரப்பு எங்கும் அங்குலம் அங்குல மாகக் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் புதைக்கப்பட்டி ருக்கின்றன. இந்த மக்களைத் தற்போதைய முகாம்க ளில் இருந்து விடுவித்து அந்தக் கண்ணிவெடிகள் மீது தள்ளிவிட நாம் தயாரில்லை. அரசியலை விட மக்களின் உயிர்களே எமக்கு முக்கியம்.'' என்று முழங்கியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
ஆஹா, இந்த வன்னி மக்கள் மீதும் அவர்களின் உயிர்கள் மற்றும் பாதுகாப்பு மீதும் ஜனாதிபதிக்கு எத்துணை கரிசனை.........!
இதே மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் இருந்த சமயம் அவர்களின் உயிருக்கு வழங்கப்பட்ட மதிப்பும், அவர்களின் பாதுகாப்புக்கும், அவர்களுக்கான அத்தியாவசிய சேவைகளை அப்பிர தேசத்துக்கு எடுத்துச் செல்வதற்கும் வழங்கப்பட்ட முன்னுரிமையும் தமிழ்ச் சமுதாயம் எளிதில் மறக்கற்பாலவையல்ல. இப்போது கரிசனை பொத்துக்கொண்டு வந் துள்ளது போலும்...
வன்னி இறுதி யுத்தத்தின் போது இந்த மக்களின் பாதுகாப்புக் குறித்துக் காட்டப்பட்ட கரிசனையுடன் ஒப் பிடும்போது இப்போது வன்னியில் புதைக்கப்பட் டுள்ளவை என்று கூறப்படும் கண்ணிவெடிகள், மிதி வெடிகள் ஏற்படுத்தக்கூடிய ஆபத்து ஒன்றும் அப்படி மோசமானதல்ல. இத்தகைய கண்ணிவெடி புதை யுண்ட பிரதேசத்துக்குள் வாழ்ந்துகாட்டி மீண்டவர்கள் தான் இந்த மக்கள் என்பதும் மறைக்கக் கூடியதல்ல.
நல்லது. ஜனாதிபதியும் அவரது அரசும் கூறுவது போல கண்ணிவெடிகள் இருப்பதால் இந்த மக்களை வன்னிப் பிரதேசத்துக்குள் மீளக் குடியேற்ற அனுமதிக்க முடியாது என்பதை ஒரு பேச்சுக்கு ஏற்றுக் கொள்வோம். அதற்காக அந்த மக்களை வவுனியாப் பகுதியில் ஒரு சிறு பிரதேசத்துக்குள் அரசு அமைத்துக் கொடுத்த கொட்டகைக்குள் முடங்கிக் கிடக்கவேண்டும் என்று உத்தரவிட்டு சிறைவைக்கவேண்டும் என்பதல்ல. அப் படி சிறை வைக்கப்படுவதற்கான தவறு ஏதும் இழைத் தவர்களும் அல்லர் அவர்கள்.
அவர்களும் இலங்கைப் பிரஜைகள்தான் என அரசு கூறுவது உண்மை என்றால் ஏனைய இலங்கைப் பிரஜைகளுக்கு உள்ள உரிமை போல அவர்களும் நாட்டின் ஏனைய எந்த இடத்துக்கும் செல்லவும், வதி யவும் அவர்களுக்கு உரிமை உள்ளது.
எனவே, அவர்கள் விரும்பினால் யாழ்.குடாநாட் டுக்கோ, அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட ஏனைய தமிழர் தாயகப் பகுதி களுக்கோ, தென்னிலங்கைக்கோ செல்லத் தடையோ, கட்டுப்பாடோ விதிக்கக்கூடாது. வெளிநாடுகளுக்குச் செல்ல வசதியும், வாய்ப்பும் உள்ளவர்கள் விரும்பினால் தம் இச்சையின் அடிப்படையில் அவ்வாறு வெளிநாடு செல்லவும் அவர்களுக்கு உரிமையுண்டு.
வன்னிப் பெருநிலப்பரப்பில் கண்ணிவெடி, மிதி வெடி புதைக்கப்பட்டிருப்பதால் அங்கு சென்று மீளக் குடியேறவிடாமல் தடுப்பது வேறு. அதற்காகப் பிற இடங்களுக்கோ, பிற தேசங்களுக்கோ செல்லவிடாமல் வவுனியாவில் நலன்புரி மையங்கள் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட முகாம்களுக்குள் வெளியேறவிடாது சிறைவைப்பது வேறு.
இந்த அகதிகளைத் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதியுங்கள் என்றால் அங்கு நிலக்கண்ணி வெடி எனப் பூச்சாண்டி காட்டுகின்றார்கள். சரி. தடுப்பு முகாம் சிறைவைப்பிலிருந்து பிற இடங்களுக்கு வெளி யேற விடுங்கள் என்றால், அவர்களுடன் புலிகளும் கலந்திருக்கின்றாகள். எனவே அவர்களை அங்கிருந்து வெளியே விடமுடியாது என்று அடம்பிடிக்கின்றார்கள் அரசின் தலைவர்கள்.
இப்படி இரண்டு பக்கத்தாலும் விளக்கம், வியாக்கியா னம் கூறி, இந்த மக்களை சிறைவைத்திருக்கின்றமை அந்த சிறைவைப்பைத் தொடர்ந்து இழுத்தடித்தபடி அதற்கு அபத்தமான விளக்கங்களையும், காரணங் களையும் கூறுகின்றமை இறுதியில் இந்த விவகாரத்தை விபரீதத்தை நோக்கியே இட்டுச் செல்லும்.
இந்த அகதிகள் சிறைவைப்புத் தொடர்பில் அதி கரித்து வரும் சர்வதேச அழுத்தங்களின் தாற்பரியங் களைக் கொழும்பு புரிந்ததாக இல்லை.
இவ்விடயத்தில் "மொட்டந் தலைக்கும் முழங் காலுக்கும் முடிச்சுப் போடும் விதத்தில்' கொழும்பு அரசு கூறி வரும் விளக்கங்களை சர்வதேச சமூகம் இனியும் ஏற்றுக்கொண்டு பொறுத்திருக்குமா என்பது சந்தேகமே:
இவ்விடயத்தை ஒட்டி சர்வதேச தரப்புகளால் பிரதி பலிக்கப்பட்டுவரும் கருத்துகள் அத்தகைய உணர் வைத்தான் வெளிப்படுத்தி நிற்கின்றன.
ஐ.நா.செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளமை போல கசப்புணர்வு வளரவும், நாட்டின் ஐக்கியத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தவுமே இத்தகைய கெடுபிடிப் போக்கு வழிவகுக்கும

நன்றி :உதயம் தலையங்கம்

Tamil 10 top sites [www.tamil10 .com ]