வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, December 05, 2009

சமச்சீர் கல்வித் திட்டம்: இந்துத்துவா வெறியர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தவேண்டாம்!

சமச்சீர் கல்வித் திட்டத்தில் இடம்பெறும் புதிய பாடப் பகுதிகளை எதிர்த்து இந்துத்துவா சக்திகள் கூச்சலிடுவதைக் கண்டித்தும், புதிய பாடத் திட்டத்தில் புராணங்களுக்கு இடம் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்து-வதற்கான அவசர சட்டத்தை ஆளுநர் பிறப்பித்-துள்-ளார். சமச்சீர் கல்வி வரும் 2010 ஆம் கல்வியாண்டில் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் அறிமுகமாகிறது. 2011 இல் 2 ஆம் வகுப்பு மற்றும் 7 ஆம் வகுப்பிலும், 2012 இல் 10 ஆம் வகுப்புவரை சமச்சீர் கல்வி நடை-முறைக்கு வரும்.

மாநிலக் கல்வித் திட்டம், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக்-குலேஷன், ஓரியண்டல் ஆகிய நான்கு வகை யான கல்வி முறைகளை ஒருங்கிணைத்து மாநிலப் பொதுப் பள்ளிக் கல்வி வாரியம் தொடங்கப்படும் என்றும், அதேபோல ஒரே மாதிரியான பொதுப் பாடத் திட்டமும் கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுப் பாடத் திட்ட வரைவு இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

வீண் கூச்சல் போடும் கூட்டம்

முழுமையான அளவு எதையும் தெரிந்துகொள்-ளாமல் அரைவேக்காட்டுத் தனத்துடன் இந்து முன்னணி இராம. கோபாலன் வகையறாக்கள் கூச்சல் போட ஆரம்பித்துவிட்டனர்.

‘‘ஈ.வெ.ராவின் இந்து விரோதக் கொள்கையைத் தூக்கிப் பிடிக்க முதல்வர் முயல்கிறார், நாத்திகத்தை மாணவர்களிடம், திணிக்க சதி நடக்கிறது, இந்து மதத்-தைக் கேவலப்படுத்தும் பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

மறுமலர்ச்சிப் பாடங்கள், விழிப்புணர்வுப் பாடங்கள், மூட நம்பிக்கை எதிர்ப்பு இவையெல்லாம் இடம் பெற்றுள்ளன. இவை எல்லாம்தான் சமச்சீர் கல்வியா? எந்தத் தைரியத்தில் இப்படி ஒரு வரைவுத் திட்டத்தை வைத்தார்கள்? அரசின் பிடியில் கல்வித் துறை சிக்கி சின்னா பின்னமாகிறது’’ என்றெல்லாம் திருவாளர் இராம.கோபாலன் ஒப்பாரி வைத்துள்ளார்!

கல்வி என்பது பழைமையின் குப்பைத் தொட்டியா?

மிக நீண்ட காலமாக நம் நாட்டுக் கல்வி என்பதில் பழைமையின் குப்பைத் தொட்டியாக, அரைத்த மாவையே அரைத்த பத்தாம் பசலித்தனமான, முரண்-பாடுகள் நிறைந்த பாடத் திட்டங்கள்தான் இடம்பெற்றி-ருந்தன. இவையெல்லாம் பெரும்பாலும் பார்ப்பனிய சிந்தனையின் தாக்கமாகவே நெடியேறிக் கிடந்தன.

கால வளர்ச்சிக்கு ஏற்றதாகவோ, மாணவர்களின் ஆற்றலை வெளிக் கொணரும் தன்மை உடைய-தாகவோ இருந்ததில்லை. பெரும்பாலும் மனப்பாடம், நெட்டுரு என்பதுதான் கல்விக்கான தகுதியாகவும், திறமையாகவும் கருதவும்பட்டன.

இதில் ஒரு மாற்றம் வரும்போது ஆதிக்கக்காரர்-களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மையாகும்.

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கச் சொல்லுகிறது இந்திய அரசமைப்புச் சட்டம்; மந்திரங்களை அர்த்தம் புரியாமல் உருப்போட்டு ஒப்பித்த பரம்பரையல்லவா _ அதில் மாற்றம் என்றால் குமுறத்தான் செய்யும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்னும் பகுதியில் ‘51ஏ’ உள்பிரிவு ‘எச்’ என்ன கூறுகிறது?

மக்களிடையே விஞ்ஞான மனப்பான்மையைத் தூண்டிட வேண்டும், ஆய்வு மனப்பான்மை, மனிதாபி-மானம், சீர்திருத்த உணர்வுகள் ஊட்டப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளதே!

இது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், அதனைத் தொடக்கப் பள்ளியில் இருந்துதானே விதைத்து வளர்த்து மேலே கொண்டு வரவேண்டும், கல்வித் திட்டம் இந்தத் திசையில்தானே அமையவேண்டும்?

இதை விட்டுவிட்டு இன்னும் “பித்தா பிறைசூடி பெருமானே!’’ என்று செய்யுளை மனப்பாடம் செய்யச் சொன்னால், மாணவர்கள் மத்தியிலே எப்படி விஞ்ஞான மனப்பான்மை வளர முடியும்?

சந்திரயான் யுகத்தில் பித்தா பிறைசூடியா?

‘சந்திரயான்’ யுகத்திலே சிவபெருமானின் தலையில் சந்திரன் இருக்கிறான், பிறையைச் சூடிக் கொண்டி-ருக்கிறான் என்று சொல்லிக் கொடுக்கலாமா? மதச் சார்பற்ற அரசின் பாடத் திட்டத்தில் கடவுள் வாழ்த்துத் தேவையில்லைதான். அப்படியே வைத்தாலும் எந்த மதத்தைச் சார்ந்த வாழ்த்தை வைப்பது?

பள்ளிக்குச் செல்லுவது உண்மையையும், அறிவியலையும் கற்றுக் கொள்வதற்கா? மூடத்தனங்-களை மூளைக்குள் திணித்துக் கொள்வதற்கா? கல்வியில் மதம் கலக்கவே கூடாது; தேவையானால், தனியே படிக்கட்டும்!

பகுத்தறிவு என்றாலே ஒவ்வாமை என்று கருதும் கூட்டத்தின் கூக்குரலையெல்லாம் அரசு பொருட்படுத்தத் தேவையில்லை. எந்த ஒரு மாற்றத்தையும், வளர்ச்சியை-யும் விரும்பாத ஒரு கூட்டம் எப்பொழுதும் இருந்து-கொண்டுதானிருக்கும்.

பெரியாரைப்பற்றிச் சொல்லிக் கொடுக்காமல், சங்கராச்சாரியாரைப்பற்றியா சொல்லிக் கொடுக்க முடியும்? சமூகப் புரட்சி வரலாற்றில், சமூகநீதி வரலாற்றில் பெண்ணுரிமைப் பிரச்சினையில் தந்தை பெரியார் அவர்களைப்பற்றிச் சொல்லிக் கொடுக்காமல், ‘‘தீண்டாமை க்ஷேமகரமானது’’ என்று கூறும் சங்கராச்-சாரி-யார்களைப்பற்றியா பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க முடியும்?

தெரசாவைப்பற்றி பாடம் என்றால் உடனே ஒரு கூட்-டத்திற்கு நினைப்பெல்லாம், அவர் கிறிஸ்துவர் என்-பது-தான்; அவர் ஆற்றிய மனிதத் தொண்டறம்பற்றி-யெல்லாம் அவர்களின் கவனத்துக்கு வராது. அவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டபோதுகூட அது ஒரு கிறிஸ்துவ சதி என்று சொன்னவர்களிடம் வேறு எந்த விரிந்த பார்வையை எதிர்பார்க்க முடியும்?

பொதுவாக கல்வி வளர்ச்சி அடைவதில் பார்ப்-பனர்-களுக்கு எப்பொழுதுமே நல்ல எண்ணம் கிடையாது. சூத்-திர-னுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்-காதே என்பது தானே அவர்களின் மனுதர்மம்.

குலக்கல்வித் திட்டம்தான் வேண்டுமா?

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இரண்டு முறை ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளார். 1937_39 இல் ஒரு-முறையும், 1952_54 இல் இன்னொரு முறையும்; அந்த இரண்டு முறையும்கூட இருந்த பள்ளிக் கூடங்களை இழுத்து மூடியவர்தானே அவர்? 1937 இல் 2500 ஆரம்பப் பள்ளிகளையும், 1952 இல் 6000 ஆரம்பப் பள்ளிகளையும் இழுத்து மூடிய ‘மகானா’யிற்றே!

1952 இல் குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்து அப்பன் தொழிலை மகனும் படிக்கவேண்டும் என்று சட்டம் போட்டவராயிற்றே!

தந்தை பெரியார் தலைமையில் வெகுண்டெழுந்த தமிழினம் ஆச்சாரியாரைப் பதவியை விட்டு ஓடச் செய்யவில்லையா?

இன்னும் அந்த மிச்ச சொச்சங்கள் நாட்டில் இருக்-கின்றன என்பதற்கு அடையாளம்தான் சமச்சீர் கல்விக்கு எதிரான கூச்சல்கள். இதற்கெல்லாம் தமிழக அரசு செவி கொடுக்கவேண்டிய அவசியமில்லை. இன்னும் சொல்லப்போனால், இத்தகையவர்களின் எதிர்ப்புதான் இந்தக் கல்வித் திட்டம் மிகச் சரியாகவே இருக்கிறது என்பதற்கான அளவுகோல்கூட!

வேத கணிதம் கற்கச் சொன்னவர்கள்தானே?

சமச்சீர் கல்வித் திட்டத்தைக் குறை கூறும் இவர்கள் யார்? பல்கலைக் கழகங்களில் வேத கணிதத்தையும், போலி விஞ்ஞானமான சோதிடத்தையும், புரோகித மந்-திரங்களையும் பாடத் திட்டங்களில் வைத்தவர்கள்-தானே? இந்திய வரலாற்றுக் கழகத்தில் கே.எம். பணிக்கர், சுமித் சர்க்கார் போன்ற புகழ்பெற்ற வரலாற்று ஆசி-ரியர்களையெல்லாம் நீக்கிவிட்டு அந்த இடங்களில் எல்-லாம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களாகத் தட்டிப் பார்த்து நிய-மனம் செய்தவர்கள்தானே!

உத்தரப்பிரதேசத்தில் இவர்கள் வகுத்த பாடத் திட்டங்கள் எல்லாம் என்ன?

“பாபர் மசூதியை இடிக்கும் முயற்சிகள் நடந்தபோது முலாயம் சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர்? (‘அவுட் லுக்’, 10.5.1999).

இந்த யோக்கியர்கள்தான் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பாடத் திட்டங்களின் இந்து மத எதிர்ப்புக் கருத்துத் திணிக்கப்படுவதாகப் புலம்புகிறார்கள். ஒட்டகம் ஓணானைப் பார்த்துப் பாடம் படிப்பதா?

புராணங்கள் தேவையில்லை

நமது கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில்-கூட, திருவாசகம், தேவாரம், நாலாயிர திவ்விய பிரபந்தம், பெரிய புராணம் மற்றும் கம்ப இராமாயணம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். புரா-ணங்கள் வரலாறு அல்ல _ மூடக் குப்பைகள்! அதுவே நமக்கு உடன்பாடில்லாதவைதான்.

இந்தப் பழங்குப்பைகள் எல்லாம் தேவையில்லை என்பது நமது அழுத்தமான கருத்தாகும். இவை ஜாதி உணர்வையும், மதமாச்சரியங்களையும், மூட நம்பிக்கைகளையும் தூண்டக் கூடியவை _ கட்டிக் காக்கக் கூடியவை!

மகனைக் கொன்று கறி சமைத்து சிவனடியார்க்கு விருந்தளித்த இயற்பகை நாயனாரின் கதைகள் (பெரிய புராணம்) தேவைதானா? மூடத்தனமும், கொலைப் பாதகமும் கொண்டதல்லவா இது?

வெறுப்போடு சமணர் முண்டர் என்று தொடங்கும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பாடல் என்ன சொல்-லுகிறது? சமணர்களின் தலையை ஆங்கே அறுப்பதே தரு-மங்கண்டாய், அரங்கமா நகருள்ளானே என்பதெல்-லாம் தேவைதானா?

முதலையுண்ட பாலகனை மீட்டதெல்லாம் நம்பக்கூடியதுதானா?

தேவாரம் மட்டுமென்ன? அதிலும் சமண, பவுத்-தர்களின் அழகிய பெண்களைக் கற்பழிக்க அருள்-புரி-வாயாக என்று ஆண்டவனிடம் மனுப்போட-வில்லையா?

முதலையுண்ட பாலகனை உயிர்ப் பிழைக்க வைத்ததாகக் கூறுவதும், எலும்பாகி போன பெண்ணுக்கு உயிர் கொடுத்ததெல்லாம் நம்பத் தகுந்ததுதானா? அறிவுக்குப் பொருந்தக்கூடியவைதானா?

பகுத்தறிவுவாதிகளின் பார்வையில்...

நியாயமாக பகுத்தறிவுவாதிகள் எதிர்க்கவேண்டிய பகுதிகள் இருக்கின்றன என்பதுதான் உண்மை. மாறாக, ஒன்றிரண்டு முற்போக்கான புதிய பகுதிகள் இடம்பெறுகின்றன என்பதற்காக எதிர்ப்பது, மிரட்டுவது என்றால், அவற்றைச் சந்திக்க நாங்களும் தயார்தான்! அரசு தன் கடமையைச் செய்யட்டும்! இந்த உருட்டல், மிரட்டல் பேர்வழிகளைச் சந்திப்பதற்குப் பகுத்தறிவுப் பட்டாளம் தயாராகவே இருக்கிறது; ஏன், தமிழ் மக்களே இருக்கிறார்கள். கவலையில்லாமல் பயணம் தொடர்க! தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தை எக்காரணம் கொண்டும் பின்வாங்கக் கூடாது.

விடுதலை 05.12.2009

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]