வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, March 18, 2010

தீர்மானம்! பெண்கள் தனியாக வந்தால் அவர்களுக்குத் துறவிகள், சாமியார்கள் தரிசனம் கொடுக்கக்கூடது

இனி பெண்கள் தனியாக வந்தால் அவர்களுக்குத் துறவிகள், சாமியார்கள் தரிசனம் கொடுக்கக்கூடது என்று துறவிகளின் கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.


இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி-யுள்ள-தன் மூலம் துறவிகள், சாமியார்கள் என்றாலே காம வெறியர்கள், பெண்களைப் போகப் பொருளாகக் கருதும் மிருகங்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் என்றுதானே பொருள்?

சாமியார்கள், - துறவிகளின் யோக்கியதை இவ்-வளவு கீழ்த்தரமானது என்று தெரிந்து கொண்டதற்குப் பிறகு ஆண் துணையுடன்தான் பெண்கள் எதற்காக அவர்களிடம் செல்ல-வேண்டும்? அதுதானே ஒழுக்கத்தை முன்-னிறுத்தும் சிந்தனையாகவும் இருக்க முடியும்?

கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவர்_ எல்லா-வற்றையும் அவர் கவனித்துக் கொள்வார் என்கிற நம்பிக்கை பக்தர்களுக்கு இருக்குமேயானால், எதற்காக காவி உடையில் பதுங்கி இருக்கும் இந்த வேட்டை மிருகங்களை நாடிச் சென்றிட வேண்டும்?

கடவுள், மதம், பக்தி என்றாலே குழப்பம்_- குழப்பத்துக்குமேல் படுகுழப்பம்தான்_ முரண்பாடுகளின் மொத்தமாகத் திரண்ட சாக்கடைதான்!

கடவுள் இல்லை என்று சொல்லும் நம்மைத்-தான் நாத்திகர்கள் என்று சொல்கிறார்களே தவிர, ஒரு மதக்காரர் இன்னொரு மதக்காரருடைய கடவுளை ஏற்பதில்லையே, நம்புவதில்லையே_ அதற்கு என்ன பெயராம்? அது மட்டும் ஒரு மதக்காரர் இன்னொரு மதக்காரரின் பார்வையில் நாத்திகர் இல்லையோ!

நாம் நல்லது செய்தால் கடவுள் நமக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்குமானால், கோயிலுக்கு எதற்காகச் செல்லவேண்டும்? பூஜைகள் ஏன் செய்யவேண்டும்? காணிக்கைகள் ஏன் கொடுக்க வேண்டும்? விரதங்கள் ஏன் மேற்கொள்ளப்பட வேண்டும்?

கோயில் என்பதும், வழிபாடு என்பதும் வியா-பார ரீதியாக உருவாக்கப்பட்டதன் விளைவுதான் இவ்வளவு பித்தலாட்டங்களுக்கும், சுரண்ட-லுக்கும் இடம் கொடுத்துவிட்டன என்பதை மரியாதையாக ஒப்புக் கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் சங்கராச்சாரியார்களும், வாரியார் போன்றவர்களும், பக்தி என்பது பிசினஸ் ஆகிவிட்டது என்று கூறியிருந்தாலும், அதனை விளம்பரமாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதில்லை. காரணம், கோயில் அமைப்பு முறை என்பதே அடிபட்டுப் போனால் சங்கராச்சாரியார்களின் ஜாதியைச் சேர்ந்தவர்-களுக்கான உயர்ஜாதி அந்தஸ்தும், பிழைப்பும் நாறிப்போய்விடுமே.

சரி, சாமியார்கள், துறவிகள் தனியாகச் சென்று பெண்களை ஆசீர்வதிக்கக்கூடாது; அவர்களும் தனியாக வரும் பெண்களுக்கு தரிசனம் கொடுக்கக்கூடாது என்று தீர்மானம் செய்து விட்டார்கள். அது ஒருபுறம் இருக்கட்டும்.

கோயிலுக்குச் செல்லும் பக்தைகளைப் பற்றி ஏன் தீர்மானம் போடவில்லை?
சங்கர மடத்திற்குச் செல்லும் பக்தைகள்பற்றி ஏன் தீர்மானிக்கவில்லை?

காஞ்சிபுரம் மச்சேந்திரநாதர் கோயில் குருக்கள் பார்ப்பனர் தேவநாதன், கோயிலுக்கு வழிபாடு செய்ய வந்த பெண்களை கர்ப்பக்கிருகத்துக்-குள்ளேயே உறவு கொண்டான். - அர்ச்சகர் தொழிலைவிட இந்தத் தொழிலில்தான் அதிகக் கவனமாக இருந்தான் என்று தெரிந்துவிட்ட பிறகு, - இது குறித்து விளக்கமான - அழுத்தமான தீர்மானத்தை கோயில் அர்ச்சகர்கள்_ குருக்கள் கூடி தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டாமா?

தனியாகப் பெண்கள் கோயிலுக்குப் போகக் கூடாது, கூட்டமாகப் போகவேண்டும்; அல்லது ஆண்கள் துணையோடு போகவேண்டும்; கோயில் அர்ச்சகர்களும் தனியாக வரும் பெண்களுக்காக அர்ச்சனை செய்யக்கூடாது என்று கறாராக ஓர் ஏற்பாட்டைச் செய்திட வேண்டாமா? இந்து அறநிலையத்துறையாவது பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டினைச் செய்து தரவேண்டாமா?

எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளை மற, மனிதனை நினை, சுயமரியாதை வாழ்வே சுக-வாழ்வு என்ற முடிவிற்குப் பக்தர்கள் வருவார்க-ளேயானால் அறிவுக்கு அறிவும் மிச்சம்; ஒழுக்-கத்திற்கு ஒழுக்கமும் மிச்சம்; - பணத்துக்குப் பணமும் மிச்சம்_ சிந்திப்பார்களா?

--------- நன்றி விடுதலை தலையங்கம் (18.03.2010)

2 comments:

Unknown said...

திரிபு வாதம். நெல்லில் இருக்கும் பதரை நீக்க அவர்கள் வழி தேடினால் , பானைச் சோற்றுக்கு பதம் பார்க்ககிறீர்கள். அதே கண்ணாடியைக் கொண்டு உங்கள் சுய மரியாதை / பகுத்தறிவு பாசறை சீடர்களை/வாரிசுகளை நோக்கி சுய விமர்சனம் செய்யலாமே!

நம்பி said...

//rammy said...

திரிபு வாதம். நெல்லில் இருக்கும் பதரை நீக்க அவர்கள் வழி தேடினால் , பானைச் சோற்றுக்கு பதம் பார்க்ககிறீர்கள். அதே கண்ணாடியைக் கொண்டு உங்கள் சுய மரியாதை / பகுத்தறிவு பாசறை சீடர்களை/வாரிசுகளை நோக்கி சுய விமர்சனம் செய்யலாமே!
2:34 AM //

....எதற்கு...?

அந்த விஷம விமர்சன வேலையை செய்வதற்குத் தான்...ஆரிய பார்ப்பன கூட்டம் இருக்கிறதே...அது செவ்வனே வேலை செய்து கொண்டேயிருக்கும்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]