வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, March 05, 2010

ஹாக்கி வீரர்கள் சம்பளம்...எவ்வளவு பெரிய வெட்கக்கேடு!

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி; ஒரு காலத்தில் உலக அளவில் இந்திய ஹாக்கி கொடி கட்டிப் பறந்ததுண்டு.


இடையில் கிரிக்கெட் என்ற ஒட்டகம் உள்ளே புகுந்தது. அவ்வளவுதான் ஹாக்கி மூட்டை கட்டி பரண்மீது தூக்கி எறியப்-பட்டது.

ஹாக்கி வீரர்கள் தொழிற்சங்கத் தொழிலா-ளர்கள்போல் சம்பளம் கேட்டுப் போராடும் நிலைக்-குத் தள்ளப்பட்டு விட்டனர். சம்பள நிலுவைக்காகவும் ஹாக்கி வீரர்கள் போராடி-னார்கள் என்றால், எவ்-வளவு பெரிய வெட்கக்கேடு!

இப்பொழுதுதான் போனால் போகிறது என்று அவர்களுக்குச் சம்பளம் நிச்சயம் செய்துள்ளார்களாம்.

எவ்வளவு தெரியுமா?

உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பவர்-களுக்கு பத்தாயிரம் ரூபா-யாம். அடுத்துவரும் ஆசி-யப் போட்டி, காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும்-போது ரூபாய் அய்யாயிர-மாம்!

கிரிக்கெட் விளையாட்-டுக்காரர்களோடு ஒப்பிடும்-போது இது ஒரு பிச்சைக் காசு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்குச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அதில் ஏ, பி, சி என்று மூன்று வகையாகப் பிரிக்-கப்படுகின்றனர். ஏ பிரிவைச் சேர்ந்த கிரிக்கெட் விளை-யாட்டுக்காரர்களுக்கு ஆண்டு சம்பளம் ரூபாய் 50 லட்சம் (8 பேர்கள்). பி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.35 லட்சம் (7 பேர்கள்). சி பிரிவைச் சேர்ந்தவர்-களுக்கு ரூ.20 லட்சம். இது அல்லாமல் உள்நாட்டில் டெஸ்ட் ஆட்டம் ஆடி-னால் ரூ.2 லட்சம்; வெளி-நாடுகளில் ஆடினால் ரூ.2.40 லட்சம்; உள்நாட்டில் ஒரு நாள் ஆட்டத்துக்கு ரூ.1.60 லட்சம்; வெளிநாட்-டில் ஆடினால் ரூ.1.85 லட்சம்.

இவை அல்லாமல் ஏகப்பட்ட பரிசு மழைகள். இந்தப் புள்ளிவிவரம்கூட 2004 ஆம் ஆண்டுக்-குரியது-தான். இந்த ஆறு ஆண்டுகளில் பல மடங்கு பெருகியிருக்கும்.

இவ்வளவுக்கும் கிரிக்-கெட் என்பது சொகுசான ஒன்று. ஹாக்கி, கால்பந்து போன்ற போட்டிகளில் பங்குகொள்ளும் அத்த-னைப் பேர்களும் ஒவ்வொரு நொடியும் சுறுசுறுப்பாகவும், ஓடியும், ஆடியும் களைத்துப் போகும் நிலை.

கிரிக்கெட் அப்படியல்ல; ஒருவர் பந்து வீசுவார், இன்னொருவர் அடிப்பார்; ஒரு சிலர் பந்தை விரட்டிக்-கொண்டு ஓடுவார்கள்; மற்றவர்கள் பார்வையா-ளர்களின் ஆட்டோ கிராஃ-பில் கையொப்பம் போட்டுக் கொடுத்துக்கொண்டு இருப்-பார்கள்.

விளையாட்டில்கூட இந்தப் பிராமண _ சூத்திர வருணாசிரம பிரிவு இருக்-கிறதே என்ன செய்ய?

கிரிக்கெட்டில் அனேக-மாகப் பார்ப்பனர்கள்; ஹாக்-கி-யில் அனேகமாக சூத்தி-ரர்கள்தாம்!

- விடுதலை (05.03.2010) மயிலாடன்

1 comment:

muthukumar said...

உங்க பார்பனர் சூத்தி-ரர் பிரச்னையை விளையாட்டில் மட்டும் விட்டு வெய்து இருந்திர்கள் .
இப்போது அதையும் சேர்துவிட்டேர்கள் .

உங்க திராவிடர் கட்சிகளின் ஆட்சி தான ஐயா கடந்த நாற்பது வருடங்களாக இருக்கிறது . சூத்தி-ரர்
விளையாட்டை என் ஐயா ஊக்குவிக்கவில்லை . என் உங்க மானமிகு கருணாநிதி ஹாக்கி என் பண்ணினார்

வாழ்க

நேர்மையுடன்
முத்துக்குமார்

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]