வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, March 12, 2010

தாளமுத்து-நடராசன் நினைவு...ஆரியச் செருக்குடன் பதில் கூறிய ஆச்சாரியார்

1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம், திராவிடர் இயக்க வரலாற்றில் மட்டு-மல்ல, தமிழினத்தின் வர-லாற்-றில்  தமிழர்களை ஒரு குடையின்கீழ் கொண்டு-வந்து நிறுத்திய மிகப்பெரிய கலாச்-சார மாற்றத்திற்கு வித்திட்ட எழுச்சிப் போராட்ட-மாகும்.


ஆரியப் பண்பாட்டின் சின்னமான சமஸ்கிருதம் போட்ட குட்டியான இந்தி-யைத் தமிழர்கள் மீது திணித்-தார் பிரதமர் ஆச்சாரியார் அன்று. சமஸ்கிருதத்தைப் படிப்படியாக புகுத்தவே முதலில் இந்தியைக் கொண்டு வந்தேன் என்று சென்னை லயோலா கல்லூரியில் வெளிப்படையாகவே பேசி-னார் அவர்.

தந்தை பெரியார் தலை-மையில் தமிழர்கள் ஓரணி-யில் சேர்ந்தனர். எங்கும் போராட்டம் எங்கும் பேரணி எங்கும் எழுச்சிப் பொதுக்கூட்டங்கள் கல்வி நிறுவனங்களை மாணவர்கள் புறக்கணிப்பு.

திருச்சியிலிருந்து தமிழர் பெரும்படை புறப்பாடு என்று தமிழ்நாடே போராட்ட உணர்-வின் கந்தக மலையாகத் தகித்தது. தந்தை பெரியார் அழைப்பை ஏற்று தோழர்-கள், தாய்மார்கள் (கைக்குழந்-தைகளுடன்கூட) சிறைக்-கோட்டம் ஏகினார்கள்.

அவ்வாறு சிறைக்கோட்டம் ஏகிய நடராசனும் (சென்னை) தாளமுத்துவும் (குடந்தை) சிறையிலே பலியானார்கள்.
நடராசன் என்ற தாழ்த்-தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர் முதலில் (15.1.1939) பலி-யானார். தாளமுத்து என்ற நாடார் சமூகத்தைச் சேர்ந்த தோழர் இரண்டாவது பலி இந்நாளில்தான் (12.3.1939).

கலாச்சாரப் போரில் காளையர்களைப் பலி கொடுத்து தமிழினம் கண்-ணீர்க் கடலில் மிதந்தது.

ஆனால், அந்த நேரத்தில் ஆச்சாரியார் சட்டமன்-றத்தில் என்ன சொன்னார் தெரி-யுமா? நடராஜன் என்பவர் படிப்பு வாசனை அறியாத அரி-ஜன். தன் தாய்-மொழியி-லும்கூட நடராஜ-னுக்கு எழுதத் தெரியாது என்றார்.

படிப்பு வாசனையற்ற காரணத்தால்தான் நடராஜனுக்கு மரணம் நேர்ந்தது என்று அமைச்சர் கருதுகி-றாரா? என்று அப்துல் அமீத்-கான் சுடச்சுட கேள்வி எழுப்பினார். படிப்பில்லாத-தால்-தான் அந்தக் கைதி மறியல் செய்ய நேர்ந்தது. சிறை-யில் அவர் இறந்து போனார் என்று ஆரியச் செருக்குடன் பதில் கூறினார்.

இந்த மாவீரர்களின் இறுதி ஊர்வலம் சென்னை மாநகரையே கலக்கியது. நடராசன் உடல் புதைக்கப்-பட்ட இடத்தின் அருகி-லேயே தாளமுத்துவின் உடலும் புதைக்கப்பட்டது. கூட்டத்தில் உரையாற்றிய அண்ணா அவர்கள் கூறினார்:

இரண்டு மணிகளை இழந்தோம். தமிழர் ஆட்சி ஏற்படும்போது இவ்விரு வீரர்களின் தியாகத்தை அடிப்படையாகக் கொண்டே அது எழுப்பப்படும். வருங்-காலத்தில் விடுதலை பெற்ற தமிழகத்தில் தலைவர் பெரியாரை நடுவில் வைத்து இறந்த இரு மணிகளையும், பக்கத்தில் வைத்து உருவச்-சிலை எழுப்பவேண்டும். ஏன் பெரியார் தளர்ச்சி அடைந்த காலத்திலெல்லாம் இந்த இரண்டு சமூகங்கள்-தான் அதாவது நாடார் ஆதிதிராவிடர் சமூகங்கள்-தான் அவருக்கு உதவி செய்து வந்திருக்கின்றன என்றார் அறிஞர் அண்ணா. இதில் மிகவும் மதிக்கத்தக்க ஓர் தகவல் உண்டு. தாளமுத்-து-வைப் பறிகொடுத்த மனைவி குருவம்மாள், முடங்கிவிடாமல், கணவன் பயணித்த பாதையில் இந்தி எதிர்ப்புக் களத்தில் குதித்து ஆறு மாத கடுந்தண்ட-னையை சிரித்த முகத்துடன் ஏற்றார்!

குறிப்பு: அண்ணா அவர்-கள் 50 ஆண்டுகளுக்கு-முன் சொன்ன கருத்திற்கு ஏதோ ஒரு வகையில் உருவம் கொடுப்பதுபோல, சென்-னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (எம்.எம்.டி.ஏ.) பிரம்மாண்டமான கட்டடத்-திற்கு தாளமுத்து  நடராசன் என்று பெயர் சூட்டினார் முதல்வர் கலைஞர் (14.4.1989)

- விடுதலை மயிலாடன் (12.03.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]