Thursday, March 11, 2010
பெண்களுக்கு 33 விழுக்காடு தினமணி விதண்டாவாதம் பேசுகிறது.
முதல் நாள் அணு உலை பேராபயம் என மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பேரபாயம் என்றது . தமிழர்கள் இன்னும் அறிவுக்குருடர்கள் என்று நினைத்து தலையங்கம் எழுதியது பூணூல் தினமணி. அனால் எங்களுக்கு பெரியாரும் அதன்வழி வந்த ஆசிரியரும் ஊட்டிய அறிவு இருக்கிறது அதனை கொண்டு இந்த தலையங்கத்தை படிக்கும் போதே இந்த R.S.S நாளேடாக மாறிவரும் தினமணி என்ன சொல்ல வருகிறது என புரிந்து கொண்டு நான் போட்ட பதிவு தான் "இடஒதுக்கீடு....தினமணி (பூணூல்) கூறும் பேரபாயம". அடுத்த ரெண்டு நாளும் தினமணி புரிந்து கொண்டு இனி மறைமுக மாக சொல்ல தேவை இல்லை நேரடியாவே எதிர்ப்பு எழுதலாம் என்று அதன் R.S.S பாணியில் அடுத்த ரெண்டு நாள் தலையங்கம் எழுதியது. இது அனைத்துக்கும் சேர்த்து இன்று விடுதலை தலையங்கம் தோலுரித்து காமித்து விட்டது. இதோ விடுதலை (11.03.2010) தலையங்கம் படியுங்கள்..அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்-றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதா கடந்த 14 ஆண்டு-காலமாக நிலுவையில் உள்ளது. சமூகநீதியில் அக்கறை உள்ள கட்சிகள் உள்ஒதுக்கீடுக்குப் பச்சைக் கொடி காட்டியிருந்தால் முன்பேகூட இம்மசோதா நிறைவேறியிருக்கும்.
முதலில் கணக்குத் திறக்கப்படட்டும்; பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்ற சமா-தானத்துடன் இந்தச் சட்டம் மாநிலங்கள-வையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. மக்களவையில் நிறைவேற்றப்படவேண்டிய காலகட்டத்தில் தடங்கலுக்கு வருந்துகிறோம் என்ற நிலையில் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது.
இந்தச் சட்டம் அரசியல் கட்சிகளிடையே பல பிளவுகளை ஏற்படுத்திவிட்டது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளன.
அய்க்கிய ஜனதா தளத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனிக்கட்சித் தொடங்கப் போகிறார் என்ற அளவுக்கு செய்திகள் வெளிவந்துள்ளன.
மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதி எண்ணிக்கையில் உள்ள பெண்-களுக்கு வெறும் 33 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பதில் இவ்வளவுத் தடைகளா? முட்டுக்கட்டைகளா? என்று எண்ணுகிற-போது சமத்துவச் சிந்தனையில் நாடு பின்-தங்கியிருக்கிறது. ஆண் _ பெண் சமத்து-வத்தை ஏற்றுக்கொள்வதில் பெரும் தயக்கம் இருக்கிறது என்றுதான் கருதவேண்டி-யுள்ளது.
இதற்கிடையில் சந்தடிச் சாக்கில் கந்தப் பொடி தூவுவதுபோல இந்தியன் எக்ஸ்-பிரசும், தினமணியும், துக்ளக்கும் இந்தச் சட்டமே தேவையில்லாத ஒன்று என்னும் மனுதர்ம மனப்பான்மையை பொந்தில் இருந்து கிளம்பும் பாம்புபோல தலையை நீட்டிச் சீறுகிறது.
சட்டம் வந்தால்தான் பெண்களுக்கு நியாயம் கிடைக்குமா என்று தினமணி விதண்டாவாதம் பேசுகிறது.
இதே கேள்வியை எந்தப் பிரச்சினைக்கும் எழுப்பலாமே! பெண்களுக்கான பிரச்சினை-கள் ஒன்றா, இரண்டா? ஏராளம் இருக்-கின்றன. அவர்களின் உரிமைகளை ஆண்களின் பாதுகாப்பில் விட்டுவிட முடியுமா?
நோயுள்ளவர்கள்தான் மருந்து சாப்பிட-வேண்டும்; அவர்களுக்காக மற்றவர்கள் மருந்துண்பார்களா?
பொதுவாக இந்துத்துவாவாதிகளுக்கு பெண்ணுரிமை என்கிறபோது குமட்டிக் கொண்டு-தான் வரும். ஒரு பெண் பால்யத்தில் தந்தையின் ஆக்ஞையிலும், வாலிபத்தில் கணவனின் ஆக்ஞையிலும், வயோதிகத்தில் மகனின் ஆக்ஞையிலும் கட்டுப்பட்டு இருக்கவேண்டியவர். எந்தக் காரணத்தை முன்னிட்டும் தன்னிச்சையாக சிந்திக்க அருகதையற்றவர் என்பதுதுன் மனுதர்மம்.
சோ ராமசாமியும், குருமூர்த்திகள் ஆதிக்கம் செலுத்தும் தினமணியும், இந்தி-யன் எக்ஸ்பிரசும் இந்தக் கண்ணோட்டத்தில் கருத்துத் தெரிவிப்பதில் ஆச்சரியம் ஏதும் இருக்கமுடியாது.
அதேநேரத்தில், இந்த 2010 ஆம் ஆண்டிலும் ஒரு கூட்டம் பெண்களை அடிமை கொள்ளும் நஞ்சை தனது சிந்தனைப் பையில் ஒளித்து வைத்திருக்கிறது என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?
பெண்களுக்கு 33 சதவிகிதம் மட்டுமல்ல; 50 சதவிகிதம் கண்டிப்பாகத் தேவை என்-பதைத்தான் மேலும் இது வலியுறுத்துகிறது. இந்த மனுதர்மவாதிகளை பெண்கள் நன்கு அடையாளம் காண்பார்களாக!

Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//சட்டம் வந்தால்தான் பெண்களுக்கு நியாயம் கிடைக்குமா என்று தினமணி விதண்டாவாதம் பேசுகிறது.//
நீங்கள் புரிந்துகொண்டது எப்படியோ! அவர்கள் சொல்லவந்தது வேறு!!
http://sangeymuzangu.blogspot.com/2010/03/33.html
Post a Comment