வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, March 13, 2010

மகளீர் இடஒதுக்கீடு - விதைத்தது நீதிக்கட்சி! வளர்த்தது சுயமரியாதை இயக்கம்!

சட்டமன்றத்தில் மகளிர்க்கு இட ஒதுக்கீடு - விதைத்தது நீதிக்கட்சி! வளர்த்தது சுயமரியாதை இயக்கம்!


அறுவடை செய்வது இன்றைய டில்லி ஆட்சி!
 
பழங்கதை

பழந்தமிழ் இலக்கியங்கள் பெண்-ணின் பெருமையைப் பேசுகின்றன. அவர்களைப் போற்றுகின்றன. கணவன் மனைவி இருவரையும் வாழ்க்கைத் துணைவர்கள் என வள்ளுவர் அழைத்தார். வாழ்க்கைத் துணைநலம் என்ற தலைப்பில் பத்துப் பாக்கள் அமைத்தார்_ பெண்ணின் பெருமை-யைக் குறித்திட .

இதன்பின்னர் இந்நாட்டுக்குள் ஆரியர் நுழைந்தனர். வர்ணாசிரம தர்மிகளான இவர்கள் பெண்களையும் இழிவுபடுத்தி எழுதினர், நடத்தினர்.

பெண் புத்தி பின்புத்தி,சேலைகட்டிய மாதரை நம்பாதே, தையல் சொல் கேளேல் என்ற இழி மொழிகளை-யெல்லாம் வந்தேறி ஆரியப் பார்ப்பனர் நடமாடவிட்டனர்.

ஆங்கிலேயர் வந்தபின் இங்கு நிலைமைகள் மாறத் தொடங்கின. வாழ்வின் பல துறைகளிலும் பார்ப்-பனரால் அமிழ்த்தி வைக்கப்பட்டிருந்த திராவிட மக்களை உயர்த்த நீதிக்கட்சி 1916 ஆம் ஆண்டு உருவாயிற்று. இந்-தியாவில் சட்டமன்றங்கள் உருவாகிய காலம் அது.

நீதிக்கட்சி ஆட்சி

சட்டமன்றங்கள் உருவான பின்னர் நீதிக் கட்சியின் ஆட்சியில் 10.-5-.1921 நாளிட்ட அரசு ஆணை 108 சட்டம் (லெஜிஸ்லேஷன்) இல் பெண்களுக்கு சட்ட மன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை அளித்தது. இந்த ஒழுங்குமுறை (The Madras Electoral Sex Disqualification Removal Regulation)- எனக் குறிப்பிடப்பட்டது. இவ்வாணை சென்னைச் சட்ட மன்றத்திற்குரிய எத்தொகுதிக்கும் உரிய வாக்காளர் பட்டியலிலும் பெண் என்ற காரணத்திற்காகத் தகுதி உடையவரல்லர் எனப்படக் கூடாது என்கிற விதி ஏற்பட்டது.

தேர்தலில் நிற்கத் தடைநீக்கப்பட்டது

1926 ஆகஸ்ட் 5 ஆம் நாளிட்ட அரசு ஆணை 309, பெண்கள் சட்ட-மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் படவாவது நியமனம் செய்யப்படவாவது கூடாது என்ற நிலையை நீக்கியது. நீதிக்-கட்சி அரசின் இவ்விரு சட்டங்கள் காரணமாகப் பெண்கள் தேர்தலில் வாக்களிக்கவும், வேட்பாளர்களாக நிற்கவும், நியமனம் செய்யப்படவும் உரிமை பெற்றார்கள்.

திராவிடன் ஏடு

பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கைச் சட்டமன்றத்தில் சர்.பி. இராமநாதன் பேசியதைக் கண்டித்து நீதிக் கட்சியின் திராவிடன் ஏடு நவம்பர் 20, 1928 இல் பெண்கள் அடிமையா? என்ற தலைப்பில் தலை-யங்கம் எழுதிற்று. இந்தியா முழுவதும் பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்-கப்பட்டிருப்பதை இலங்கைவாசிகள் அறியமாட்டார்களா? எனத் திராவிடன் நவம்பர் 26,1928 இதழில் தலையங்கம் எழுதிற்று.

1929 இல் செங்கற்பட்டில் சவுந்தரபாண்டியன் தலைமையில் மாநாடு, 1930 இல் ஈரோட்டில் எம்.ஆர். ஜெயகர் தலைமையில் நடந்த இரண்டாம் மாநாடு, 1931 இல் ஆர்.கே. சண்முகம் தலைமையில் நடைபெற்ற மூன்றாம் மாநாடு ஆகியவற்றில் பெண் உரிமை முழக்கங்கள் விண்ணதிர எழுந்தன. சமுதாய மாற்றத்திற்கு இவை வழி வகுத்தன.

மொத்தத்தில்

நீதிக்கட்சி இத்துறையில் பெண்கள் முன்னேற்றத்திற்கு அடித்தளம் இட்டது. சுயமரியாதை இயக்கம் இக்கருத்தை வலுப்படுத்திச் செயல் முறைக்குக் கொணர வழிகாட்டியது.

இதன் விளைவே டெல்லி நாடாளு-மன்றத்தில் மாநிலங்கள் அவையில் பெண்கட்கு 33 விழுக்காடு இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற மசோதா 2010 மார்ச் 9 இல் நிறைவேறியது.

இக்கொள்கைக்குஅடித்தளமிட்ட நீதிக் கட்சி வாழ்க!

அதனைச் செயல்வடிவத்திற்குக் கொணரப் பாடுபட்ட சுயமரியாதை இயக்கம் வாழ்க!

33 சதவிகித இட ஒதுக்கீட்டுத் தீர்-மானத்தை 9-.3-.2010 அன்று நிறை-வேற்றிய இந்திய நாடாளுமன்ற மாநிலங்-களவை உறுப்பினர்கள் வாழ்க!

நன்றி - பேராசிரியர் டாக்டர் பு.இராசதுரை , விடுதலை (13.03.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]