வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, March 25, 2010

பசுவதைத் தடுப்புச் சட்டமாம்...காளை, எருமை மாட்டுக் கறியைச் சாப்பிடலாம்

தென்னகத்தில் கருநாடக மாநிலம், சங்பரிவார்க் கும்பலின் பரிசோதனைக் களமாக ஆக்கப்பட்டு வருகிறது.


ஸ்ரீராம் சேனா என்ற ஒரு வானரப்படை கிளம்பி அட்டூழியங்களைச் செய்து வந்தது _ வருகிறது.

அகில இந்திய அளவில் நரேந்திர மோடியை விஞ்சவேண்டுமா என்று கருநாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா கிளம்பிவிட்டார்.

கருநாடக மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸின் 2400 ஷாகாக்கள் நடைபெறுகின்றன என்றால், இதன் பொருள் _ சிறுபான்மையினருக்கு எதிராக வேட்-டைக்கு ஆட்கள் தயாரிக்கப்படுகின்றனர் என்று பொருள்படும்.

கருநாடக மாநிலத் தேர்தலுக்கு முன்னதாகவே ஒகேனக்கல் கருநாடகத்துக்கே சொந்தம் என்று கூறி, தமிழ்நாட்டின் எல்லைக்குள் வந்து, சற்றும் நாகரிகமின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள்தான் இந்த இடையூரப்பா!

2008 ஆம் ஆண்டில் மங்களூரில் பஜ்ரங் தள் தொண்டர்களால் கிறிஸ்துவ ஆலயம் தாக்கப்-பட்டதைக் கண்டித்து எழுதியதற்காக மங்களூரி-லிருந்து வெளிவரும் காவலி அலே ஏடு பலமுறை தாக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் சீதாராம் கைவிலங்கு போடப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் இழுத்துச் செல்லப்பட்டார். சர்வதேச பத்திரிகையாளர் சங்கமும், இந்தியப் பத்திரிகையாளர் சங்கமும் கடுமையாக தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தின.

மங்களூரில் விடுதி ஒன்றைத் தாக்கி அங்-கிருந்த பெண்களையும் அடித்துத் துன்புறுத்தினர்.

கல்லூரி மாணவர்கள், மாணவிகள் ஒரே பேருந்து சுற்றுலா சென்றனர் என்று கூறி, அந்தப் பேருந்தை இடைமறித்துத் தாக்கினர். இந்து மாணவர்களும், பிற மத மாணவர்களும், மாணவி-களும் எப்படி பயணம் செய்யலாம் என்பதுதான் அந்தக் கும்பலின் சினத்துக்குக் காரணமாம்.

மதச் சார்பற்ற இந்திய நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின்மீது சத்தியம் செய்து பதவி ஏற்ற பா.ஜ.க. ஆட்சி எந்தத் தரத்தில் நடைபோடுகிறது என்பது கவனிக்கத்தக்கதாகும்.

இப்பொழுது அம்மாநில அரசு ஒரு சட்டத்தைக் கொண்டுவரப் போகிறதாம். பசுவதைத் தடுப்புச் சட்டமாம். உணவுக்காகக் கூட பசு மாமிசம் பயன்படுத்தக் கூடாதாம்.

ஒரு தனி மனிதனின் உணவு விஷயத்தில் தலையிட ஓர் அரசுக்கு உரிமை உண்டா?

உலகம் முழுவதும் மாட்டுக்கறி என்பதுதான் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இந்தியாவில் ஏழை, எளிய மக்களுக்கு ஓரளவு குறைந்த விலையில் கிடைப்பதும் மாட்டுக்கறிதான். அதில் கை வைப்பதன்மூலம் வெகுஜன எதிர்ப்புக்கு கருநாடக அரசு ஆளாகும் என்று எச்சரிக்கின்றோம்.

பசு மாட்டுக் கறியை மட்டும் உண்ணக்கூடாது, காளை மாட்டுக் கறியை சாப்பிடலாம்; எருமை மாட்டுக் கறியைச் சாப்பிடலாம் என்பதில் என்ன அறிவார்ந்த கருத்து வலிமை உள்ளது?

கோமாதா எங்கள் குலமாதா என்னும் இந்துத்துவா வெறித்தனம்தானே இதன் உள்ளடக்கம்? கருநாடக மாநிலம் இந்து ராஜ்ஜியமாக மாறிவிட்டதா?

அப்படியே பார்க்கப் போனாலும் இந்து மத சாஸ்திரங்களின்படி பசு மாமிசம் தடை செய்யப்பட்ட ஒன்றா?

இவர்களின் மகாபாரதம் என்ன கூறுகிறது?

அரசர்களின் மாளிகைகளில் பார்ப்பனர் களுக்கு விருந்து படைப்பதற்காக 2000 சமையற்காரர்கள் இருந்தனர். நாள் ஒன்றுக்கு 2000 பசுக்கள் வீதம் கொல்லப்பட்டன என்று மகாபாரதத்தில் துரோணபர்வம் (67_1_2) கூறுகிறதே!

இதற்கு நேர்மையான பதில் என்ன? ஒருவன் ஒரு மிருகத்தை உண்ணும்போது, அது தனக்கு உரிய உணவாகக் கருதுவானேயானால், அவன் பாவம் செய்தவன் ஆவான் என்று மனுதர்மம் கூறுவது குறித்து சி. இலட்சுமண அய்யர் என்ற பார்ப்பனரின் கடிதம் மெயில் ஏட்டில் (20.11.1966) வெளிவந்ததே!

அனைவருக்கும் உணவு, வீடு, உடை, அடிப்படைக் கல்வி இவற்றைக் கொடுப்பதில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் கவனம் செலுத்தட்டும். தேவையின்றி தனி மனிதனின் உணவு விஷயத்தில் மூக்கை நுழைத்து உடைபட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.

---------- நன்றி விடுதலை தலையங்கம் (25.03.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]