வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, March 28, 2010

அஞ்சா-நெஞ்சன் அழகிரியும் பெரியாரும்

அஞ்சா நெஞ்சன் என்கிற அடைமொழி கழகத்தில் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி அவர்-களுக்கு மட்டுமே கிடைத்த அரிய பட்டம்.


முன்னாள் இராணுவ வீரரான அவர் தன்மான இயக்கக் காலந்தொட்டு தந்தை பெரியார் அவர்-களின் படைவரிசையில் தன்னிகரில்லாச் சிப்பாய்.

அவர் மறைந்தபோது (28-3-1949) அவரைப் பற்றி தந்தை பெரியார் வெளிப்-படுத்திய கருத்துகள் - அஞ்சா நெஞ்சன் புகழ் உடலில் என்-றைக்குமே தங்கி ஒளி-விடும் பதக்கங்களாகும்.

தோழர் அழகிரி நல்ல பேச்சாளர். மக்களின், சிறப் பாக இளைஞரின் அபி மானம் பெற்றவர். அவர் நல்ல செலவாளி. தனக் கென ஒரு காசும் சேர்த்துக் கொண்டவர் அல்லர். என்னைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதை தனது பெரும் பணியாகக் கொண்டி ருந்தார்.

அவரைப் பல முறை கண்டித்திருக்கிறேன்; கோபித்திருக்கிறேன். அவர் முன்கோபி. ஆனால் என் னிடத்தில் எந்நிலையிலும் கருத்து வேறுபாடு கொண் டது கிடையாது. அவருக்கு அடிக்கடி பணக் கஷ்டங்கள் வருவது சகஜம். அதனால் அதில் அவருக்கு எவ்வித தொல்லைகள் ஏற்பட்ட போதிலும், தன் கருத் தையோ, கொள்கை யையோ, லட்சியத்தையோ, தொண்டையோ கொஞ்சம் கூட மாற்றிக் கொண்டது கிடையாது. பிடிவாதமான கட்சிப் பற்றுடன் நடந்து கொண்டார். அவரை விலைக்கு வாங்கிவிடலாம் என்று எண்ணிய எதிரி களை ஏமாற்றியிருப்பாரே யொழிய, அவர்களின் வலையில் ஒரு நாளும் சிக்கியவர் அல்லர்

நேற்று வரை கூறி வந்த கருத்துக்கு மாறுபாடான ஒரு கருத்தை எங்கோ ஒரு இடத்தில் நான் கூறினால், அதற்காக என்னிடம் எவ் வித விளக்கமோ, சமா தானமோ எதிர்பார்க்காமல், அக்கருத்தைப் பின் பற்றியே தமது பிரச்சாரத்தை ஆரம் பித்து விடுவார் என்று தந்தை பெரி-யார், அழகிரி பற்றிக் கூறி-னார் என்றால், இது தந்தை பெரியார், அஞ்சாநெஞ்சன் அழகிரியோடு மட்டுமே சம்பந்தப்பட்ட கருத்தல்ல. ஒரு இயக்கம், தலைமை, பின்பற்றுவோர்க்கிடையே இருக்க வேண்டிய பாலத்-தின் இலக்கணம் இது.

தமிழர்களிடையே உள்ள பெருங்குறை - ஸ்தா-பன ரீதியாகத் தொடர்ந்து பணியாற்றிடப் பழகிடாத, பக்குவப்படாத குணமாகும்.

அழகிரி பற்றி அய்யா கூறிய இந்தக் கருத்தை தொண்டர்கள் வாசிப்பது மட்டுமல்ல. சுவாசிப்பதும் முக்கிய-மாகும். கலைஞருக்கு கழகத்தில் ஒரு முன்மாதிரி அஞ்சா நெஞ்சன் அழகி-ரியே! அவர் நினைவாகத்-தான் தன் மகனுக்கு அப்-பெயரைச் சூட்டினார். நடிகவேள் எம்.ஆர்.ராதா-வுக்கு நடிகவேள் என்ற பட்டம் அளித்ததும் அஞ்சா-நெஞ்சன் அழகிரியே!

அஞ்சாநெஞ்சன் மறைந்த நாளில் அவர் நிலைக்க வைத்துச் சென்ற உணர்வுகளை உள்வாங்கிக் கொள்வோம்! வீறு நடை-போடுவோம்!!

வாழ்க பெரியார்! தொடர்க அழகிரியின்பாட்டை!!

----- விடுதலை (28.03.2010) மயிலாடன்

3 comments:

Madurai Saravanan said...

அருமையான தகவல். மதுரையிலும் ஒரு அஞ்சா நெஞ்சன் இருக்கிறார். அது பற்றி இடுகை என நினைத்து ஏமாந்து விடும் பலரும் உள்ளனர். வாழ்த்துக்கள்

ttpian said...

Madhurai Azhakiri?
haa,haa?

நம்பி said...

தொடர்ச்சி...3

அணைகளை வாய்க்காலில் அண்டை கட்டி நீர் பாய்ச்சுவதோடு ஒப்பிட்டு பார்க்கவேண்டும்...

ஒவ்வொரு விவசாயியும்..அண்டை கட்டும் பொழுதும் நீர் தடுக்கப்படும் நீர் மெலெழும்பி அதிக ஒட்டத்துடன் அவரது வயலுக்கு பாயும்...ஆனால் அண்டை கட்டிய இடத்தை தாண்டி கால்வாயில், வாய்காலில், கம்மாவில் நீர் மெதுவாக பாயும். இந்த நீர் அடுத்த வயலுக்குரிய விவாசாயிக்கு உபரியாகத்தான் வரும். இதனால் அவர் நிலம் முழு நீரை பெறுவதற்கு தாமதமாகும். இதனால் பல விவாசாயிகள் ஒருவருக்கொருவர் வாய்க்கால் சண்டைகளாகப் போட்டுக்கொள்வர்.

(சில நேரங்களில் இது ஒற்றுமையுடன் பகிர்ந்து கொண்டும் நடைபெறுகிறது...நீ ஒரு மணிநேரம், நான் ஒரு மணிநேரம் என்று...முழுவதும் அண்டைக்கட்டக் கூடாது..கால் வாசிதான் அண்டைக்கட்டவேண்டும்...இப்படியெல்லாம் நிறைய இருக்கிறது...)

இது தான் பஞ்சாயத்தாக வுரும். சமயத்தில் இது பெரிய வெட்டுக் குத்து கொலையில் கூட முடியும். செய்திகளில் காணலாம். இப்படி அண்டைக் கட்டக் கூடாது. இது அரசு விதி....

அது போன்ற நிலை தான் தமிழக அணைகளின் நிலையும். ஏற்கனவே அங்கேயே (மற்ற மாநிலங்களில்) அணைகள் அதிகம் கட்டி நீரை மடக்கியாச்சு இருக்கின்ற உபரி நீருக்கு எத்தனை அணைகள் கட்டமுடியும். அணை தான் விவசாயப் பொருட்களின் உற்பத்தி பற்றாக்குறைக் காரணம் என்று மக்கள் நினைத்திருந்தால் கோரிக்கை வைத்திருப்பார்கள் அரசு எப்போதே செய்திருக்கும். அப்படி எந்த இடத்திலும் இல்லை....தெரிந்தவரை..

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]