வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, March 22, 2010

பா.ஜ.க.வின் அடையாளம் இதுதான்!

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு _ பரவலாக எதிர்பார்க்கப்படக் கூடிய சமூகநீதிச் சித்தாந்தம் ஆகும்.


மக்கள் தொகுதியில் கிட்டத்தட்ட சரி பகுதியாக இருக்கக்கூடியவர்களுக்கு அனைத்துத் தடத்திலும் உரிய பிரதிநிதித்துவம், உரிமை தேவை என்று எதிர்பார்ப்பது இயல்பான ஒன்றே!

சமூக அமைப்பில் ஆண் ஆதிக்கம் என்பது நங்கூரம் பாய்ச்சி இருப்பதால், இதற்குப் பெரும்பாலும் முட்டுக்கட்டையாகவே இருந்து வருகின்றனர். குடும்ப அமைப்பிலிருந்து நாடு வரை இந்த நிலைதான் கோலோச்சி நிற்கிறது.

சமூக மாற்றங்கள் வேகமாக நடந்துவரும் ஒரு காலகட்டத்தில் இந்தப் பிரச்சினையிலும் புரட்சி ஏற்பட்டு வருவது தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகும்.

காலத்தின் இந்தப் பார்வையை உணராதவர்கள் யாராக இருந்தாலும், ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படுவார்கள்.

பெண்கள் வளர்ச்சி என்பது படிப்படியாக பல்வேறு எதிர்ப்பு முனைகளைச் சந்தித்து நடந்துகொண்டுதானிருக்கிறது. இந்துச் சட்டத் திருத்தம் என்ற கட்டம் வந்தபோது எவ்வளவு பெரிய எதிர்ப்பு ஏற்பட்டது. கொள்கைக் காரணமாக அண்ணல் அம்பேத்கர், சட்ட அமைச்சர் பதவியையே தூக்கி எறிந்துவிட்டு வெளியில் வரவில்லையா?

பெண்களுக்குத் திருமண வயது உயர்த்தப்பட-வேண்டும் என்ற நியாயமான _ அறிவியல் ரீதியான குரலுக்குக்கூட எவ்வளவு பெரிய எதிர்ப்புப் புயல்கள் எல்லாம் தலைதூக்கி நின்றன.

33 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற அண்-மைக்கால கோரிக்கையால் அரசியல் கட்சிகளும், ஆண்களும் நடந்துகொண்டுவரும் போக்கை உணர்ந்தவர்களுக்கு உண்மை விளங்காமற் போகாது.

இன்றுவரை ஆதிக்கம் என்ற அகந்தை ஆண்களைவிட்டு அகலவில்லை என்பதுதான் அது.

இந்தியா முழுமையும் 28 மாநில சட்டப்-பேரவைகளில் 4030 உறுப்பினர்கள் இருக்கி-றார்கள் என்றால், அதில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 311 மட்டும்தான்.

60 உறுப்பினர்களைக் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவையில் பெண் உறுப்பினர் ஒருவரும் இல்லை.

பெண்கள் 10 விழுக்காடு உள்ள சட்டமன்-றங்கள் இந்தியாவில் வெறும் எட்டு மட்டுமே. இந்த நிலையில், எதிர்ப்பின் காரணமாக 33 சத-விகிதத்தைக் குறைக்கலாமா என்ற ஒரு கருத்துக்-கூட சன்னமாக நுழைக்கப்படுகிறது.

பெண்கள் இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் ஆதரவு அளிப்பதாகக் காட்டிக்கொண்ட பாரதீய ஜனதா, உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டால் அதனை எதிர்க்கப் போவதாக இப்பொழுது சொல்கிறது. கோணிப்பைக்குள் இருந்த பூனை இதன்மூலம் வெளியில் வந்துவிட்டது.

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு என்பது மத ரீதியானது. எனவே, எதிர்க்கிறோம் என்று கூற ஆரம்பித்துள்ளனர்.

உள் ஒதுக்கீட்டால் சிறுபான்மையினர் மட்டும்தானா பயன் அனுபவிக்கப் போகிறார்கள்? மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் பலன் அனுபவிப்பார்களே! அப்படியென்றால், தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்-கும் இட ஒதுக்கீடு கூடாது என்பதுதானே பாரதீய ஜனதாவின் நிலைப்பாடு? இதன்மூலம் பாரதீய ஜனதாவின் உயர்ஜாதி சிந்தனைப் போக்கு வெளியில் வந்துவிட்டதே!

பாரதீய ஜனதாவில் சுஷ்மா சுவராஜ்களுக்கு இடம் உண்டே தவிர, உமாபாரதிகளுக்கு இடம் கிடையாதே!

இப்பொழுது நாடாளுமன்றத்தில் 59 பெண் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால், இதில் 45 பெண்கள் உயர்ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்தாம்! இந்த அறிகுறியை அடையாளம் காண-வேண்டாமா?

1990 இல் மண்டல் குழுப் பரிந்துரையின் ஒரு பகுதியான_ வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு கணக்குத் திறக்கப்பட்டது. கல்வியில், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. அதன் விளைவு என்ன? 20 ஆண்டுகளுக்குப் பிறகும்-கூட இன்னும் நடைமுறைக்கு வர முடியாத ஒரு தேக்க நிலைதானே!

அனுபவம் தந்த இந்தப் பாடத்தை தயவு செய்து அனைத்துத் தரப்பினரும் கவனத்தில் கொள்வார்களாக!

-------- விடுதலை தலையங்கம் (22.03.2010)

3 comments:

Anonymous said...

பெண்கள் இட ஒதுக்கீடை எதிர்த்த மற்றவர்களை ஏன் விட்டுட்டீங்க...

பரணீதரன் said...

மதேவங்களெல்லாம் உள் ஓதிக்கீடுடன் கூடிய மகளீர் மசோதா வேண்டும் என்று புறக்கநிப்பவர்வால் ..புரியாதவர்கள்.....

KANTHANAAR said...

அய்யா.. இது ஒரு புறம் இருக்கட்டும்.. மனிதனுக்கு மதம் தேவையா... பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியதை பற்றியும் மேலும் திராவிட இயக்கத்தை தற்போது கிண்டல் அடிப்பதைப் பற்றியும் (தனக்கு மிரட்டல் விடுக்கும் பெரியார் திராவிட கழகத்தினருக்கு தனக்கேயுரிய பாணியில் பதிலளித்தார். நாத்திகம் பரப்பிய போது தன் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சியதாகவும் - தூய இஸ்லாத்தை ஏற்றவுடன் தான் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரைப்பற்றியும் அஞ்சுவதில்லை என்றார்.ஆதாரம் http://neetheinkural.blogspot.com/2010/03/blog-post_2834.html) என்ன நினைக்கிறீர்கள்... மௌனத்தை சற்று கலைக்க முடியுமா...?

கந்தசாமி

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]