வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, March 31, 2010

தினமலமும் குமுதம் ரி(ரீல்)ப்போர்ட்டரும் கிளப்பிவிடும் மூடநம்பிக்கைகள்

ஏடுகளிலும் இதழ்களிலும்தான் எத்-தனை எத்தனை செய்திகள், தகவல்கள், ஒப்பனைகள்!


ஏதாவது ஒரு துரும்பு கிடைத்தால் அதைத் தூணாக்கிக் காட்டினால்தான் மக்கள் மயங்குவார்கள்; அற்ப விட்டில் பூச்சிகளாக தங்களால் விரிக்கப்பட்ட வலையில் வீழ்வார்கள் என்கிற தந்தி-ரத்தை ஏடு நடத்தும் வியாபாரிகள் கண்டு-பிடித்துள்ள தொழில் நுட்பம்.

காது, மூக்கு வைத்து கதை கட்டினால்-தான் மக்கள் வாய் பிளப்பார்கள் என்ற இரகசியத்தைத் தெரிந்து கொண்டு விட்டார்கள்.

திடீர் என்று ஒரு தகவல்: வேப்ப மரத்தில் பால் வடிகிறது _ பக்தர்கள் கூட்-டம்! (இது எதனால் வருகிறது என்று தாவர இயல் அறிஞர்கள் தெளிவுபடுத்திய பிறகும்கூட, தங்களின் வியாபாரத் தந்திரத்தை கைவிடுவதாக இல்லை).

காளைமாட்டின் கண்ணில் எம்.ஜி.ஆர். உருவம் என்று இன்னும் சில நாள்கள் கழித்து அவிழ்த்து விடுவார்கள்.

அதற்குப்பிறகு அம்மன் கண்கள் திறந்தன_ அதில் கண்ணீர் வடிந்தது என்று கட்டி விடுவார்கள்.

இப்படி குறிப்பிட்ட காலத்திற்கொரு-முறை மாயாஜால வித்தைகளைக் கட்டுரைகளாக்கி மக்களின் பர்சுகளைக் காலி செய்து விடுவர்கள்.

இப்பொழுது கரூர் பக்கத்திலிருந்து ஒரு தகவல்_ குமுதம் ரிப்போர்ட்டர் (1.4.2010) கட்டிக் கொண்ட புண்ணியம்!

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகாவில் உள்ள தரகம்பட்டியருகில் உள்ளது சந்தனத்தான் மேடாம்.

இரவு நேரங்களில் நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறதாம்.. யாரோ சொன்னார்களாம். இது ஒன்று போதாதா? தொலைக்காட்சி-களும், ஊடக செய்தியாளர்களும் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

சில பெரிசுகளை சந்தித்துப் பேட்டிகள். டி.வி.யில் முகம் தெரியும் என்ற ஆசை பெரிசுகளுக்குக்கூட பீறிட்டு விட்ட கால கட்டம் இது. அவரவர்களும் மனம் போன வாக்கில் அவிழ்த்துவிட ஆரம்பித்து விட்டனர். இந்த ஆவி, பிசாசு, முனீஸ்வரன், கொள்ளிவாய்ப் பிசாசு என்கிற சமாச்-ரங்கள் எல்லாம் பெரும்பாலும் நம் நாட்டுக் கிராமத்துப் பெண்களிடத்தில்தான் ஸ்பரிசம் அதிகம்.

கருப்பாய் வாந்தி எடுத்தான் என்று ஆரம்பித்து கடைசியில் குடை குடை-யாய் வாந்தி எடுத்தான்; காக்கா காக்-காயாய் வாந்தி எடுத்தான் என்கிற-வரை வால் நீண்டு கொண்டு போகுமே!

அந்தப் பகுதியில் பார்ப்பனர்கள் ராஜாக்களிடமிருந்து பெற்ற தங்கக் காசுகளைப் புதைத்து வைத்திருந்தன-ராம். அதைக் கேள்விப்பட்ட கொள்-ளையர்கள் அந்தப் பகுதிக்குச் சென்ற-போது, புதைத்து வைத்த இடத்தைப் பார்ப்பனர்கள். சொல்ல மறுத்து விட்டனராம்.

கொள்ளையர்கள் அந்தப் பார்ப்பனர்களைக் கொன்று போட்டுச் சென்று விட்டனராம். அந்தத் தங்கக் காசுகளை யாரும் எடுத்துப் போய் விடக் கூடாது என்று கொலை செய்யப்பட்ட பார்ப்பனர்களின் ஆவி இரவு நேரங்களில் நெருப்பாய்க் கொதிக்கின்றனவாம்!

இன்னொரு தகவல்:

ராஜா ஒருவர் நடனப் பெண்ணிடம் தவறாக நடந்து வந்ததாகவும், அந்த நடனப் பெண் அரண்மனைக்குள் தீக்-குளித்து பலியானதாகவும், அந்தப் பெண்ணின் ஆவிதான் தீயாக எரிகிறது என்றும் இன்னொருவர் கதைத்துள்ளார்.

அடேயப்பா, இவர்களெல்லாம் சினிமா கதை மற்றும் வசனம் எழுதக் கிளம்பினால், எழுத்தாளர்கள் எல்-லாம் வீட்டுக்குப் போகவேண்டியது-தான்!

அந்த இடத்திற்குச் சென்றவர்கள் ஆவி அடித்து செத்துப் போய் விட்டார்களாம்.

அந்த இடத்துக்குச் சென்ற ஒரு பெண் கிணத்தில் விழுந்து செத்துப் போச்சாம் ஆனால் காலில் செருப்புடனும், கையில் கொடு வாளுடனும் சென்ற-வரை அந்த ஆவியால் ஒன்றும் செய்ய முடியவில்லையாம்!

அப்படியென்றால் ஆவியின் சக்தியைவிட செருப்புக்கு அதிக சக்தி உண்டு என்று தானே அர்த்தம்?

இவ்வளவையும் ஒண்ணே முக்-கால் பக்கம் எழுதித் தள்ளிவிட்டு கடைசி ஒரு பத்தியில், இதுகுறித்து கரூர் அரசு கல்லூரி வேதியியல் பேரா-சிரியர் ஜஸ்வந்த் தெரிவித்த கருத்-தினை வெளியிட்டுள்ளது.

பாழடைந்த கிணறுகளில் தேங்கி நிற்கும் கழிவுகளால் மீத்தேன் என்கிற விஷவாயு உருவாகித் தீப்பந்துபோல் எரியும். அதேபோல சில இடங்களில் புதையுண்ட மரங்கள் மக்கிப் போய் பீட் (றிமீணீ) வகை கரிகள் உருவாகும். இப்படி மாஸ்கேஸ், பீட் ஃபார்மேஷன் ஆகிய இருவகை செயல்பாடுகளால் மட்டுமே இந்தப் பகுதியில் நெருப்பு உருவாகலாம். அந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்ட பெரிய குழி இருந்து, அது காலப் போக்கில் மூடப்படும்போது அதனடியில் பெரிய வெற்றிடம் உருவாகும். அதனால்தான் கல்லைத் தூக்கிப் போடும்போது சத்தம் வருகிறது. உள்ளே இருக்கும் மக்கிய பொருள்கள் பகலில் அடிக்கிற வெயிலை உள்ளே கிரகித்துக் கொள்வதால், இரவு நேரங்களில் சூடான வாயுவாக வெளியேறும்போது, ஜுவாலையாகத் தோன்றவும் வாய்ப்புள்ளது என்றார்.

குமுதம் ரிப்போர்ட்டர்,1.4.2010 பக்கம்!)
கடைசியாக என்ன எழுதுகிறது இந்த ரிப்போர்ட்டர்? என்னவாக இருந்தால் என்ன? சந்தனத்தான் மேட்டில் தீயோடு தினந்-தோறும் அந்த நடனக் கதையும், புதுப்-பொலிவு பெற்றுக் கொண்டிருக்கிறது _ சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் என்கிறது இந்த இதழ்:
இப்படி ஒரு கட்டுரை குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த இதே கால கட்டத்தில் திருவில்லிப்புத்தூரையடுத்த தைலாபுரம் ஊரணியிலிருந்து ஒரு தகவலை தினமலர் (28.3.2010) வெளி-யிட்டுள்ளது.
அந்தத் தகவல் இதோ: ஊரணியில் தீப்பொறி பாதிப்பு ஏற்படாது: கனிமவளத் துறை ஆய்வில் தகவல் விருதுநகர் மாவட்டம் திருவில்லி-புத்தூரை அடுத்த அழகாபுரி அருகே இலந்தைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட தைலாபுரம் ஊரணியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆழப்படுத்தும் பணி நடந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை அப்-பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கிரிக்-கெட் விளையாட, ஸ்டெம்ப் நடு-வதற்காக மண்ணை தோண்டியுள்-ளனர். அப்போது திடீரென வெள்ளை புகை வந்து தீப்-பொறி வந்துள்ளது. இதையடுத்து,ஏற்பட்ட பரபரப்பால் ஊரணியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கனிம வளத்-துறை அதிகாரிகள் வந்து மண்ணை பரிசோதனை செய்தனர். அத்துறையை சேர்ந்த விஜயகுமார் கூறியதாவது: ஊரணி மண்ணில் சுண்ணாம்பு படிவம் உள்ளது. இப்படிவம் உள்ள இடத்தில் மண்ணை வெயில் நேரத்தில் தோண்டி-னால், புகையோ, தீயோ ஏற்படாது. இரவு நேரத்தில் பகலில் அடிக்கும் வெயிலை சுண்ணாம்பு படிவம் ஈர்த்து வைத்துக் கொள்ளும். இரவில் சுண்ணாம்பு படி-வத்தை கடப்பாரை கொண்டு தோண்டும் போது புகை, தீப்பொறி வரும். நாங்கள் பகல் நேரத்தில் பரிசோதித்ததில் எந்த வித புகையோ, தீயோ ஏற்படவில்லை. இருந்தும் இரவிலும் பரிசோதனை செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க-வுள்ளோம். மற்றபடி மீத்தேன் போன்ற விஷ வாயுக்களோ, எரிமலையோ இல்லை. இது குறித்து மக்கள் பீதி-யடைய வேண்டாம், என்றார்.
ஒரு முட்டாள்தனமான_ அறிவுக்குப் பொருத்தமற்ற ஒன்றை, மூடநம்பிக்கை-யில் மூழ்கிப் போன மக்களின் வாயி-லிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பீதியைக் கிளப்பும் வகையில் இதழ்கள் வெளியிடுகின்ற-னவே_ அறிவியல் கண்டுபிடித்த கருவி-களைக் கொண்டு அச்சிட்டு களேபரம் செய்கிறார்களே!
இதுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் குடிமக்களின் அடிப்-படைக் கடமையா?
மக்களிடம் விஞ்ஞான மணப்பான்-மையை ஒவ்வொரு குடிமகனும் பரப்ப, வளர்க்கப் பாடுபட வேண்டும் என்பது, ஏடுகளுக்கும், இதழ்களுக்கும், ஊடகங்-களுக்கும் பொருந்தாதா?
லண்டன் தொலைக்காட்சியில் உத்திராட்சக் கொட்டையின் மகிமையை ஒளிபரப்பிய நிலையில், அரசு உடனடி-யாக அதனை மேலும் ஒளிபரப்ப விடாமல் தடை செய்ததே! அது நாடா _ இது நாடா?
நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது?
- கருஞ்சட்டை விடுதலை (31.03.2010)

3 comments:

கண்மணி/kanmani said...

தினமலர் ரிப்போர்ட்டர் மட்டுமில்லங்க
நடந்தது என்ன?
நிஜம்
என்ற பேரில் விஜய்யும் சன்னும் போட்டி போட்டு தினம் ஒரு கதை விட்டுக் கொண்டிருக்கிறது.
இன்னைக்கு காற்றாய் தொடரும் பேய்
யானை வடிவில் கருப்பு

Raghu said...

இன்னுமா இதுக‌ளையெல்லாம் ப‌டிக்க‌றீங்க‌?!

Sivamjothi said...

There are many things which science had not explored in this world. There are MANY things in world that can't be analyzed by mind(PAGUTHU ARIVU). Who is doing? What is reason for it?

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]