வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, March 20, 2010

மகாபாரதம் யோக்கியதை...சொன்னால் மானம் போகிறதாம்!

2009ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அளிக்-கும் விழா 16.10.2010 மாலை டில்லி சாகித்ய அகாடமியின்


காமினி அரங்கத்தில் நடை-பெற்றது. தெலுங்கு மொழியில் யர்லகட்ட லட்சுமி பிரசாத் என்ப-வருக்கு விருது அளிக்கப்பட்டது.

திரவுபதி என்னும் தெலுங்கு நூலை எழுதியதற்காக அந்த விருது வழங்கப்பட்டது.

அந்த நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களைச் சேர்ந்த பத்து பேர்கள் திடீரென்று மேடைக்கு ஓடிச் சென்று, விருது பெற்ற-வருக்கு எதிராகக் குரல் எழுப்பி, அவர் கையில் இருந்த விழா மலரையும் பறித்து வீசி எறிந்தனர். எதிர்பாரா விதமாக நடைபெற்ற இந்த அநாகரிக அவலத்தைக் கண்டு பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இவ்வளவுக்கும் விருது பெற்-றவர் சாதாரணமானவர் அல்லர். ஆந்திர மாநில இந்தி அகாடமி-யின் தலைவர், ஆந்திரப் பல்-கலைக் கழகம் விசாகப்பட்டினத்-தில் இந்தித் துறையின் தலைவ-ராகவும் இருந்தவர். மகாபார-தத்தை அடிப்படையாகக் கொண்டு திரவுபதைபற்றி எழுதிய அவரின் நூலுக்குத்தான் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

திரவுபதையை இழிவுபடுத்தி அந்த நூலில் எழுதப்பட்டதாகக் குற்றச்சாற்று.

அறிவுத்துறை வேலை செய்-திருந்தால் அந்த நூலுக்கு மறுப்பு எழுதி இருந்தாலும் கண்ணியம் கடுகு அளவுக்கும் அவர்களிடம் இருந்திருந்தால் வேறு வகைகளில் எதிர்ப்பைக் காட்டியிருக்கலாம்.

இரண்டும் இல்லாதவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பதால் அவர்களுக்கே .உரித்தான தனித்-தன்மையான காலாடித்தனத்தில் இறங்கி இருக்கின்றனர்.

இந்தத் தகவலை விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு நேரில் சென்ற தோழர் அருள்பேரொளி (சென்னை -_ வேளச்சேரி) என்பவர் நமக்குத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்து மதத்தின் இதி-காசங்கள் என்று கூறப்படும் இராமாயணம் மகாபாரதம் மற்றும் கீதையை அக்குவேர் ஆணி வேராக அலசி எடுத்து வந்திருக்-கிறோம் _ வருகிறோம் _ அவற்றை பல நேரங்-களில் எரியூட்டவும் செய்திருக்கிறோம்.

இராவண லீலாவே நடத்தி இராமன், சீதை, இலட்சுமணன் உருவங்களை பல லட்சம் மக்கள் முன் எரித்தும் காட்டியுள்-ளோம்! ஆனால் வேறு மாநிலத்தில் வேறு வகை-யாக நடக்கிறது என்றால் அதன் காரணம் என்ன?

அங்கு ஒரு பெரியார் இல்லை; அங்கு ஒரு மணியம்மையார் இல்லை; அங்கு ஒரு வீரமணி இல்லை; அங்கு ஒரு திராவிடர் கழகம் இல்லை; அங்கு கருஞ்சட்டைத் தொண்-டர்கள் இல்லை என்றுதான் பொருள்.

யார் இந்த திரவுபதி?

5 கணவன்கள் போதாது என்று கருதி ஆறா-வது ஆசாமியாகிய கர்ணன் மீதும் காமம் கொண்டவள் தானே? இல்லை என்று மறுக்க முடியுமா? அதற்கு அந்தத் திரவுபதி கூறும் காரணம் என்னவாம்?

தருமன் -_ சதா வேதாந்தம் படிப்-பவன்; பீமன் -_ உடல் பெரியவன், குண்டன், சதா சாப்பிட்டுக் கொண்டே இருப்பவன்; அர்ச்சுனன் _ ஏகப்பட்ட மனைவி-களுக்குச் சொந்தக்காரன், ஆற்று மணலை எண்ணினாலும் அர்ச்-சுனன் மனை-வியை எண்ண முடியாதாம்! நான்-காவது கண-வனான நகுலனும், 5ஆவது கணவ-னான சகாதேவனும் எனது பிள்-ளைகள் போன்றவர்கள். அதனால்-தான் கர்ணன் மீது காமம் கொண்-டதாக ஒருத்தி சொல்கிறாள் என்றால், அந்தப் பெண்ணின் யோக்கியதையை தெரிந்து கொள்ள வேண்டாமா?

அய்ந்து பேருக்கும் தேவி அழியாத பத்தினி என்று இந்துமதம் இத்தகைய பெண்ணைப் போற்று-கிறது; கடவுளாகத் தொழுகிறது என்றால் இந்த மதத்தின் யோக்-கியதை எத்தகையது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாமே!

இந்து மதத்தில் அழியாத பத்தினியாக ஒருத்தி இருக்கவேண்டு-மானால் ஒரே நேரத்தில் பல கணவன்மார்கள் இருக்க வேண்டும் என்று தானே பொருள்? உண்மையைச் சொன்னால் உடல் எரிவானேன்? அறிவார்ந்த ஓர் அவையின் மேடையில் ஏறிக் காலித்தனத்தில் இறங்குவானேன்?

மகாபாரதத்தில் விபச்சாரத்தில் பிறக்காத ஒரே ஒரு ஆள் உண்டா? பந்தயம் கட்டிக் கேட்கிறேன் என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கேட்டாரே, எந்த பாரதப் பிரசங்கி இதுவரை பதில் சொல்லி-யிருக்கிறார்? மகாபாரதத்தின் யோக்கியதைக்கு வேறு எங்கும் தேடிப் போக வேண்-டாம்.

தொலைக்காட்சியில் மகாபாரதம் ஒளிபரப்பப்பட்டபோது நேயர் ஒருவர் இந்து ஏட்டில் (18.12.1988) எழுதிய கடிதம் ஒன்று போதுமே! கடிதம் எழுதியவர் சென்னையைச் சேர்ந்த டி.ஆர். சுந்தரம். கடிதம் இதோ: தர்மபுத்திரா (யுத்திஸ்த்ரா), வாயுபுத்ரா (பீமா) ஆசியோடு குந்திக்கு, தருமர் ஆகியோர் பிறக்கிறார்கள். தொலைக்காட்சியில் வாயுவைக் காட்டும்போது, உடனே குழந்தைகள். அந்த பிறப்புபற்றி சில கேள்விகளைக் கேட்கத் துவங்கி விடுகிறார்கள். பெற்றோர்களால் அந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. அது தெய்வீக சம்பந்தப்பட்டது; எனவே அதுபற்றி எல்லாம் குழந்தைகள் கேள்வி கேட்கக் கூடாது என்றுதான் பெற்றோர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்போது மேலும் தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன. பாண்டவர்களும், கவுரவர்களும் சூதாடுவது, பாண்டவர்கள் தோற்பது, மனைவியை வைத்தே சூதாடுவது, திரவுபதையைத் துகில் உரிவது ஆகிய காட்சிகள் எல்லாம் வர இருக்கின்றன. இவைகளை குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படிப் பார்க்க முடியும்?

நாம் நமது குழந்தைகளிடம் திரவுபதி 5 ஆன்மிக சக்திகளின் சின்னம்; எனவே 5 பேரை மணந்து கொண்டார் என்று கூறினால், அவர்கள் திருப்தி அடைந்து விடுவார்களா? அல்லது கட்டிய மனைவியை, மற்றவன் துகில் உரிவதைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் புருஷலட்சணம் என்று அவர்களிடம் கூற முடியுமா? நமது காலத்தைவிட இக்காலக் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். 3000, 5000 ஆண்டு-களுக்குமுன் நடந்ததை இப்போது அவர்களிடம் விவரித்து, குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. எல்லாவற்றுக்கும் தெய்வீக முத்திரையைக் குத்தி, நாம் குழந்தைகளிடம் வியாக்யானம் செய்து கொண்டிருக்க முடியாது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாபாரதத் தொடர் வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக் கூடியதாகும். எனவே நள்ளிரவு சினிமாக்களை ஒளி-பரப்பும் நேரத்தில், இதை ஒளிபரப்புவது நல்லது _ இவ்வாறு அந்த வாசகர் தமது கடிதத்தில் எழுதியிருக்கிறார்.

இந்த யோக்கியதையில் உள்ளது-தான் மகாபாரதம். இதைச் சொன்னால் மானம் போகிறதாம்! அப்படியென்றால் இவர்களின் மான உணர்வின் யோக்-கியதைதான் என்ன?

---------------- நன்றி விடுதலை மின்சாரம் எழுதியது  (20.03.2010)

13 comments:

காரணம் ஆயிரம்™ said...

ரொம்ப பழைய தமிழ் கலாச்சாரத்தில், ஒரே பெண்ணுக்கு நிறைய கணவர்கள் இருந்ததாக எங்கோ படித்ததுண்டு. நாகரிகம் வளர வளரத்தான் ’ஒருவனுக்கு ஒருத்தி’ கலாச்சாரம் வந்தது. இந்தக்காலத்தில் இதை எப்படி சொல்வது என்றெண்ணிகூட வேறுமாதிரி சொல்லியிருக்கலாம்.

ஐந்து கணவர்களை மணந்திருந்தாலும் திரொளபதி எவ்வாறு பத்தினி என்று ஆராய்ந்தால், அதற்கும் ஒரு பதில் கிடைக்கும்.

//தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாபாரதத் தொடர் வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக் கூடியதாகும்.

இது நிஜம்தான்.அட்லீஸ்ட் அந்த துகிலுரியும் காட்சியாவது!

அன்புடன்,
கார்த்திகேயன்.

Unknown said...

நாத்திக்கமும் இந்து மதத்தின் ஒரு அங்கமே. நாத்திகம் இல்லை எனில் ஆத்திகம் தழைக்காது. மஹா பாரதம் துரோகிகளின் கதை. பல்வேறு காலங்களில் சொல்வழி, எழுத்து வழி இடைச்செருகல்கள் அதில் உண்டு. அதனால் தான் உங்கள் தல வீரமணி அவர்கள், ஐயாவின் எழுத்துக்களின் உரிமையை தன்னிடமே வைத்துள்ளார்.

Muthukumara Rajan said...

rammy leave them .. they are half baked.

பரணீதரன் said...

முத்துக்குமார் சொல்லிட்டார் ..சிந்தித்தல் உங்கள் மூடநம்பிக்கை போய்விடும் என்று.......உசாரா இருங்க அவரு சொல்லுறத கேட்டு...

தேடுதல் said...

மகா பாரதம் நம்மைப் போன்றே எல்லா பலவீனங்களையும் கொண்ட மனிதர்களின் கதை. வாழ்வின் சிக்கல்களையும் அதில் எழும் அறச்சிக்கல்களையும் பேசிப் பார்க்கும் கதை. அதை அவ்வாறே பார்த்து நம் இன்று சந்திக்கும் அறச்சிக்கல்களை ஒப்பு நோக்க அது பல்லாயிரம் வருடங்களாக நமக்கு உதவுகிறது. அந்த வகையில் மகா பாரதம் மிகப் பெரிய வெற்றியே.

நீங்கள் கூறியது போன்ற பார்வை உங்களுக்கு இருப்பதில் மிக வருத்தமே.

உங்களைப் போன்றவர்களின் பல தலைமுறைகளைக் கடந்தும் இன்றும் மகாபாரதம் நிலைத்தே இருக்கிறது. மக்கள் இனியும் மகாபாரதத்தில் வாழ்வின் அறச் சந்தர்ப்பங்களை தேடவே செய்வார்கள். நீங்கள் கண்டிப்பாக சிலவற்றை தவறவிட்டவர்களாகவே இருப்பீர்கள்.

பரணீதரன் said...

மக்கள் இனியும் மகாபாரதத்தில் வாழ்வின் அறச் சந்தர்ப்பங்களை தேடவே செய்வார்கள்.
ஏன் தோழரே நீங்கள் மலத்தில் அரிசி பொறுக்க ஆசைபடுகீர்கள்.

/* நீங்கள் கண்டிப்பாக சிலவற்றை தவறவிட்டவர்களாகவே இருப்பீர்கள்.*/

நாங்க எங்க தவற விட்டோம் ...திராவிடர் கழகத்திடம் இருந்து எதுவும் தப்பிக்க முடியாது. எல்லா சமய நூல்களும் படித்து அப்புறம் தான் அதில் உள்ள கருத்தை விமர்சனம் செய்யவோம் தோழரே. அப்படி வந்ததுதான்
--- அறிவு ஆசன அய்யா தந்தை பெரியாரின் "மகாபாரத புரட்டுகள் "
--- அன்னை மணியம்மையாரின் "கந்த புராணமும் கம்ப ராமாயணமும் ஒன்றே"
---- அடுக்கு மொழி அறிங்கர் அண்ணாவின் "கம்ப ரசம்"
--- இன்றைய திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் வீரமணியின் "கீதையின் மறுபக்கம்"

இப்படி ஏராளம். எல்லாம் இந்த புராண குப்பையை கிளற போயி உருவானதுதான். இவைகளையும் படியுங்கள்....அப்புறம் எடை போடுங்கள்.....அதனால நாங்க எதையும் தவற விடமாட்டோம்..இன்றைக்கும் பெரியார் திடலில் இருக்கும் நூலகத்தில் சமய நூல்கள் என்று ஒரு பிரிவு உண்டு. அதில் நீங்க சொல்லுற மகாபாரதம்,இன்னும் என்ன என்ன ராமயனமோ இருக்கு. போயாவது படிங்க அந்த ராமாயணத்தை.

தேடுதல் said...

***ஏன் தோழரே நீங்கள் மலத்தில் அரிசி பொறுக்க ஆசைபடுகீர்கள்.****

அதே மலத்தில் ஆழ்ந்து பொறுக்கி நீங்கள் இவைகளை கண்டடையும் போது. எனக்கு அரிசி கிடைக்காமலா போய்விடும். :D

ராஜேஷ் said...

ஹாய் சங்கமித்ரன்
மனிதனுக்கு பகுத்தறிவை வழங்கிய உங்கள்
பகுத்தறிவு கடவுள் ஈ.வெ ராமசாமிக்கு
பிறமதங்களை பற்றி ஆராயும் அறிவு அல்லது துணிவு இல்லமல்
போனது துரதிஷ்டமே
அதைவிட உங்களின் திராவிட பற்று மெய்சிலிர்க்கவைக்கின்றது
அங்கு ஈழம் எரியும்போது உங்கள் கோழைமணி
கொழைங்கருக்கு கடிதம் எழுத அதை அவர் சூனியக்காரிக்கு அனுப்பி 2 மணி நேர உண்ணாவிரதம் இருக்க
என்னா கூத்து முடியலப்பா
என்னைபொருத்த வரை அனைத்து மதங்களும்
நல்ல கருத்துக்களையும் மூடநம்பிக்கைளையும்
கொண்டதே ஆனால் உங்கள் பகுத்தறிவு
இந்து மதத்தை
மட்டும் வம்புக்கு இழுப்பது
பகுத்தறிவு அல்ல கோழைத்தனம்
இப்படிக்கு பார்பனன் அல்லாத
இந்து தமிழன்

(கடந்தகாலம் ஒரு பார்வை)
சிரியார்:இங்கு நாங்கள் மொழிக்காபோறடும்போது
உயிருக்கு போராடும் உங்களுக்கு உதவ முடியாது

பரணீதரன் said...

@தேடுதல் தோழரே, உங்கள் பதில் சரிதான்.....அந்த மாறி பொருகின அரிசியை பொங்கி சாப்பிட்டதால் வந்த விளைவுதான் சமுகத்தில் இவளவு ஏற்றத்தாழ்வு நோய்கள் (சரி செய்ய கலைஞர் காப்பிட்டு திட்டத்தில் சிகிச்சை எடுத்துகொள்ளுங்கள்)

அதனாலே தான் சொல்லுகிறோம் பொருகின அரிசியை எடுத்து எங்களை மாறி ஆராச்சி செய்யுங்கள் உங்கள் பகுத்தறிவானது சானைபிடிக்கப்படும் தோழரே.

பரணீதரன் said...

@ராஜேஷ் ............நீங்கள் அறிவு ஆசானை இல்லாத ஒன்றுடன் ஒப்பிடுவதே நீங்கள் ஆராயாமல் பதில் அளித்துள்ளது தெரிகிறது. கடவுள் ஒரு பொய் நம்பிக்கை என்ற நூலினை வாங்கி படியுங்கள் கிருத்துவம் எவ்வாறு தாக்கப்பட்டுள்ளது என்பது புரியும். அதற்காக வேதான் ஆசிரியர் அவர்கள் அதனை மொழி பெயர்த்துள்ளார். மேலும் திராவிடர் கழகம் மற்ற மதங்களை சாடவில்லை என்பதனை எதனை வைத்து கூறுகிறீர்கள். இப்பொழுது நடந்த திராவிடர் மாணவரணி மாநாட்டில் கூட சித்தார்த்தன் குழுவினரின் வீதிநாடகத்தில் கிருத்துவ தேவாலயமாகிய வேளாங்கன்னியில் மற்றும் நாகூர் தர்காவில் என்ன கொடுமை நடக்கிறது என்று புரசைவாக்கமே அதிரும் படி தோலுரித்து காண்பிக்கப்பட்டது. எனவே விமர்சனம் செய்யும் முன் கொஞ்சம் விமர்சிப்பவர்களை உற்றுநோக்குன்கள் தோழரே. அதிகம் மூடநம்பிக்கை குப்பைகளை உடையது இந்து மதம் என்று சொல்லக்கூடிய பார்ப்பனீயம். எனவே தான் அதில் உள்ளவற்றை எடுத்கூர அதிகம் எடுத் கொள்ளவேண்டியுள்ளது. மற்றபடி என்ன ஆசையா....எங்களுக்கு.

நம்பி said...

//தேடுதல் said...

மகா பாரதம் நம்மைப் போன்றே எல்லா பலவீனங்களையும் கொண்ட மனிதர்களின் கதை. வாழ்வின் சிக்கல்களையும் அதில் எழும் அறச்சிக்கல்களையும் பேசிப் பார்க்கும் கதை. அதை அவ்வாறே பார்த்து நம் இன்று சந்திக்கும் அறச்சிக்கல்களை ஒப்பு நோக்க அது பல்லாயிரம் வருடங்களாக நமக்கு உதவுகிறது. அந்த வகையில் மகா பாரதம் மிகப் பெரிய வெற்றியே.

நீங்கள் கூறியது போன்ற பார்வை உங்களுக்கு இருப்பதில் மிக வருத்தமே.

உங்களைப் போன்றவர்களின் பல தலைமுறைகளைக் கடந்தும் இன்றும் மகாபாரதம் நிலைத்தே இருக்கிறது. மக்கள் இனியும் மகாபாரதத்தில் வாழ்வின் அறச் சந்தர்ப்பங்களை தேடவே செய்வார்கள். நீங்கள் கண்டிப்பாக சிலவற்றை தவறவிட்டவர்களாகவே இருப்பீர்கள்.
1:42 AM //

இதை விட நல்ல இலக்கியத்தரமான கதைகளை நிறைய எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர்...இன்னும எழுதியும் வருகின்றனர்....ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைகள் வெவ்வேறு கதாபாத்திரங்களை கொண்டவை ஒரே மாதிரியான கதையெல்லாம் கிடையாது.

எழுத்தாளரின் பெயர் குறிப்பிட்ட கதைகள்...கதைகளை பற்றிய விமர்சனத்தை எழுத்தாளரை நோக்கியே வைக்கலாம்...வேறு யாரையும் குறிப்பிடாது. போதாக்குறைக்கு அவரும் நல்லக் கதைகளை எழுத ஆரம்பிப்பார். வேண்டுமானால் வழக்கு கூட போடலாம். எல்லாமே சமகாலத்தியவை அல்லது சரித்திரக் கதைகளாக கூட இருக்கும்.

நல்ல சமூக சிந்தனையுள்ள கதைகள், நாவல்களை தின்ந்தோறும் எழுதுகின்றனர்...இன்னும் பல நல்ல கதைகள் திரைப்படமாகக் கூட வந்துள்ளன. அவற்றையெல்லாம் ஒன்றைக்கூட தவறவிடுவதில்லை. ஒருவேளை அந்த கதைகளையெல்லாம் படிக்காததினால் இந்த கதை பெரிய விஷயமாகத் தெரிகிறதோ என்னவோ?

அதையெல்லாம் ஒருமுறை படித்தால்..திரைப்படத்தை பார்த்தால்.நல்ல சமூக சிந்தனை வளரும்...சுயமரியாதையுணர்வு வளரும்...முக்கியமாக மனிதநேயம் வளரும்..தனிமனித சுதந்திரம் என்பது பற்றியெல்லாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். ஏற்றத்தாழ்வுகளை அகற்றிக்கொள்ளமுடியும். தாய்மைபற்றி அறிந்து கொள்ளமுடியும். பெண்ணியம் போற்றமுடியும். இந்த மாதிரி கதைகளை நாம் என்றுமே தவறவிடக்கூடாது.

குறிப்பாக பகுத்தறிவாளர்கள், பொதுவுடமைவாதிகளின் கதைகளையும், சமூக சிந்தனையாளர்களின் கதைகளையும் படித்தால் இந்த கதையைத் தூக்கி ஒரம் போட்டு விடலாம். இல்லை கொளுத்திப்போடலாம்.

இந்த மாதிரி கதைகளை நிறைய திரைப்படங்களாக வந்திருக்கின்றன..இன்னும் நிறைய வரும். இன்று பல இளைஞர்கள் அம்மாதிரி கதைகளையே விரும்புகின்றனர்.

இதை வெறுக்கின்றனர். இவ்வளவு மோசமானாதா, இவ்வளவு ஆபாசமானாதா? வேணாடம் எங்கம்மாவை அசிங்கப்படுத்தும் இந்த கதை வேண்டாம் என்று தூக்கிப்போட்டுவிட்டனர். என் நண்பனை அசிங்கப்படுத்தும் கதை எனக்கு வேண்டாம் என்று தூக்கி எரிந்துவிட்டனர்.

இது எதற்கு? என்று கேட்கின்றனர். நாம் இன்னும் பழமைவாதியாக இருந்தால் நாம் புதிய தலைமுறைகள் நம்மை ஒதுக்கிவிட்டு ஓடிவிடும், ஏன் கண்டுகொள்ளமல் கூட விட்டு விடும். ஓதுக்கப்பட்டவர்கள் லிஸ்ட்டில் சேர்த்துவிடும்...மனிதநேயமற்றவர்கள் என்று கூட ஓதுக்கிவிடும்...அந்த நிலைக்கு நாம் ஏன் ஆகவேண்டும்?

நம்பி said...

//rammy said...

நாத்திக்கமும் இந்து மதத்தின் ஒரு அங்கமே. நாத்திகம் இல்லை எனில் ஆத்திகம் தழைக்காது. மஹா பாரதம் துரோகிகளின் கதை. பல்வேறு காலங்களில் சொல்வழி, எழுத்து வழி இடைச்செருகல்கள் அதில் உண்டு. அதனால் தான் உங்கள் தல வீரமணி அவர்கள், ஐயாவின் எழுத்துக்களின் உரிமையை தன்னிடமே வைத்துள்ளார்.
11:54 AM //

ஆரிய பார்ப்பன துரோகிகளின் கதை...துரோகியால் துரோக கதை தான் எழுத முடியும்.

இந்து மதமே நாத்திகம் தான், பார்ப்பனனின் நாத்திக எண்ணத்தால் உருவானது....பயமிருந்தால் தானே...கடவுள் மேலே பார்ப்பனனுக்கு பயம் கிடையாது...அது கல் பேசாது!...தண்டிக்காது! என்பது தீர்க்கமாக தெரியும்.

அவன் உருவாக்கிய கதை மேல் அவனுக்கு எதுக்கு பயம்.?...அதுல சொருவனது... எடுத்தது...எல்லாம் அவன் தான்.

அது திராவிடர்களை பயமுறுத்துவதற்காக எழுதப்பட்டது. அதனால் அது நாத்திகம் தான்.


பாரதம் சமுதாயத்தின் பங்கம்.

Loganathan said...

Dear Mr. SM. I have read your views on Mahabharatham. First and Foremost, you should understand that Hinduism is not confined to MB or Ramayana or Temples or vedas. It is a chronology of events. However, I am not here to disown them nor incapable of defending. First and foremost, you need to look at things as a whole. Even you are respected as a whole person. If I have to isolate your hair or the dirt in your system and say because I found a piece of dirt or inferior organ in you, the entire you is dirt. Such is your bias nature. Honestly MB and Ramayana both teach people to be truthful and Honest and Human hearted, irrespective of their birth, status etc. The people who read them do so in search of enhancement of such qualities and not indulge in unwanted arguments or contemplation(like a girl wanting to have multiple husbands etc). It is of course true that there has been some misdeeds done by notorious people in the name of religion. But Hinduism has nothing to do with it. The following example will make you understand it. If a Doctor fails in his diagnosis and/or treatment, it is not the failure or the Medical Science, rather it is his personal failure. It is wiser to look at other options rather than condemning the Science. Though I have limited knowledge, but with my unlimited faith I am sure that I can answer all your doubts. Praise be to the Almighty.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]