வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, March 15, 2010

பார்பனர்கள் திருந்திவிட்டார்களா? பட்டப்பகலில் சூரியனுக்கு விலாசமா தேவை?

கேள்வி: பெண்களைப் பற்றி உங்களின் உண்மையான அபிப்பிராயம் தான் என்ன?


பதில்: உயர்ந்தவர்கள். அப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்கள். (18-.3.-2009)

கேள்வி: பெண்களுக்கு சமஉரிமை என்றால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?

பதில்: யார் இப்படியெல்லாம் என்னைப் பற்றி புரளி கிளப்பி விடுகிறார்களோ, தெரியவில்லையே! பெண்களுக்குச் சம உரிமை தேவை-தான். மாமியார், மருமகள் ஆகி-யோருக்குச் சம உரிமை வந்தால், அது வரவேற்கத் தக்கதுதான். (22-.-4.-2009)

கேள்வி: பெண்களிடம் எதைக் கற்றுக் கொள்ள வேண்டும்?

பதில்: என்ன தவறு செய்தாலும், அந்தத் தவறை தான் செய்யாதது போலவும், மற்றவர்கள்தான் அதற்குக் காரணம் என்பது போலவும் நடந்து கொள்கிற திறமை, அதைக் கற்றுக் கொண்டால் ஆண்களும் கூட நிம்மதியாக இருக்கலாமே? (20-.5.-2009)

கேள்வி: மத்திய அமைச்சரவையில் பெண் அமைச்சராக தமிழகத்திலிருந்து ஒருவர் கூட நியமிக்கப்படவில்லையே?

பதில்: தப்பித் தவறி ஏதாவது நல்லது நடக்கிற மாதிரி தெரிந்தால் போதும் _ உங்களைப் போல் பலருக்கு ஆட்சேபம் வந்துவிடுகிறது. யார் கண்டது? உங்கள் குறை தீராது என்று சொல்லிவிட முடியுமா என்ன? குடும்பத்தில் சமநீதி காண்பதற்கு வழி பிறந்தால், உங்கள் குறை நீங்கிவிடலாமே! (17-.6-.2009)

கேள்வி: மக்களவையில் மகளிருக்காக இட ஒதுக்கீடு மசோதா நூறு நாள்-களுக்குள் நிறைவேற்றப்படும் என்று குடியரசுத் தலைவர் தனது உரையில் கூறியுள்-ளாரே?

பதில்: சில தண்டனைகள் சொன்ன-படி நடப்பதில்லை. அஃப்ஸல் தூக்குத் தண்-டனை _ அப்படியே பெண்-டிங் ஆக இருக்கிறதே? அந்த மாதிரி இதுவும் தொங்கலில் விடப்பட்டால்தான் உண்டு. (24-.6.-2009)

கேள்வி: மக்களவை சபா-நாயகர் பெண் என்றால் இனி அமளியின்றி சபை நடைபெறுமா?

பதில்: ஒரு வீட்டில் பெண்கள் அதிகாரம் ஓங்கி இருந்தால், அந்த வீட்டில் அமளி, துமளி இல்லாமல் போய்விடுமா? அந்த மாதிரிதான் இதுவும். (1-.7.-2009)

கேள்வி: இந்தியாவில் உள்ள 617 ஹைகோர்ட் நீதிபதிகளில் 45 பேர்-தான் பெண் நீதிபதிகளாக உள்ளனர். மேலும் 6 ஹைகோர்ட் நீதிபதிகளில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை. அதே போல் சுப்ரீம் கோர்ட்டிலும் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை. இது குறித்து தங்கள் கருத்து என்ன? (டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3.-8.-2009)

பதில்: நாடு சுதந்திரம் அடைந்த-போதும், அதைத் தொடர்ந்து சில வருடங்களிலும் பெண் நீதிபதிகளே இருந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இப்பொழுது 45, 61 என்றெல்லாம் கணக்கு வருகிறது. சரி, சுதந்திரம் அடைந்தபோதும், அதைத் தொடர்ந்து சில ஆண்டுகளிலும், நீதித் துறையிடம் மக்களுக்கு இருந்த நம்பிக்கை இப்பொழுது இருக்கிறதா? நீதித் துறையில் பெண்களின் எண்ணிக்கை வளர்ந்து என்ன முன்னேற்றம் காணப் பட்டது? அந்த எண்ணிக்கையை அதிகமாக்குவதால், மேலும் என்ன முன்னேற்றம் வந்து விடும்? (2-.9-.2009)

கேள்வி: பெண்கள் சிறப்பு ரயில் திட்டம் பெண்கள் இட ஒதுக்கீட்டுக்-கான அச்சாரம் - என்று ப.சிதம்பரம் கூறுகிறாரே?

பதில்: அப்படியானால் சிறப்பு ரயில் ஓட்டாமலேயே, இத்தனை காலமாக பெண்கள் பலர் எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளைப் பெற்றிருக்-கிறார்களே, அதெல்லாம் என்ன? கள்ளப் பயணம் மாதிரி, அதுவும் கள்ளப் பதவிகளா? (2-.9.-2009)

கேள்வி: பெண்களால் ரகசியத்தைக் காப்பாற்றவே முடியாது என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளதே?

பதில்: பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே, மஹாபாரதத்தில், இது மிகத் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது. அது ஆண் ஆதிக்கத் தீர்ப்பு; இன்று சொல்லப்பட்டிருப்பது, ஆராய்ச்சியின் முடிவு. அதை ஏற்காத-வன் மூடநம்பிக்கையில் உழல்பவன். (14.-10.-2009)

கேள்வி: பெண்கள் நாட்டின் கண்கள் என்பதை ஏற்றுக் கொள்-கிறீர்களா?

பதில்: இருக்கலாம். அந்தக் கண்-களின் பார்வையைச் சரி செய்கிற மூக்-குக் கண்ணாடிகள்தான் ஆண்-கள் என்-பதும் சரியாக இருக்கலாமே! (4-.11.-2009)

கேள்வி: கருநாடகாவில், ஷோபா-வின் அமைச்சர் பதவி தியாகத்தாலும், பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் செய்து வைத்த சமரசத்-தாலும் கருநாடக பா.ஜ.க. அமைச்-சரவையின் சிக்கல் தீர்ந்துள்ளதே? பெண்களின் பெருமை இப்போதாவது தங்களுக்குப் புரிந்திருக்குமே?

பதில்: புரிகிறதே! ஒரு பெண்மணி தன் பதவியைவிட்டு விலகுவதாலும், மற்றொரு பெண்மணி தனக்கு எந்தப் பதவியையும் நாடாமல் சமரசம் தேடிய-தாலும் பிரச்சினை தீர்ந்திருக்-கிறது. அதாவது பெண்களில் பத-வியை நாடா-மல் இருக்கிற வரை பிரச்சினைகள் தீர வழியுண்டு. இதைத்-தானே நீங்கள் சுட்-டிக் காட்டுகிறீர்கள். புரிகிறது. (2-1.2.-2009)

மேற்கண்ட கேள்வி பதில்கள் எல்லாம் இடம் பெற்ற பத்திரிகை எதுவாக இருக்க முடியும்?

21 ஆம் நூற்றாண்டின் மனுவின் தத்துப் புத்திரனாக இருக்கக்கூடிய திருவாளர் சோ ராமசாமியின் துக்ளக்-கில் எழுதப்பட்டவைதான் இவை.

இவை ஒவ்வொன்றிற்கும் தனியே பதவுரை, பொழிப்புரை, கருத்துரை தேவைப்படாது.

பட்டப்பகலில் சூரியனுக்கு விலாசமா தேவை?

பார்ப்பனர்களா?

பழைய காலமெல்லாம் மாறிவிட்டது இன்றைக்கு எவ்வளவோ மாற்றம்
எவன் அவுட்டுத்திரி வைத்திருக்கிறான்?

எவன் பஞ்சகச்சம் வைத்துக் கட்டுகிறான்?

காலமாற்றம் அவர்களையும் விட்டு வைக்கவில்லை என்று அவாளுக்காக வக்காலத்து வாங்கும் ஆசாமிகள் நம்மவாளிடத்திலே உண்டு.

மாற்றமா? அது வெளிப்புறத்தில்-தான்.தோற்றத்திலும் மாற்றம் இருக்-கிறது. மறுக்கவில்லை.

ஆனால் உள்ளத்தில் மாற்றம் உண்டா? எண்ணத்தில் ஏற்பட்டு-விட்டதா மாற்றம்? சிந்தனையில் சிறிதாவது முன்னேற்றம் உண்டா என்றால் இல்லை - இல்லவே இல்லை என்பதற்கு ஆணி அடித்தாற் போன்ற எடுத்துக் காட்டுதான் மேலே எடுத்துக் காட்டப்பட்டவை.

எந்த ஓர் இடத்திலாவது பெண்கள் என்றால் அவர்களுக்கு மனிதக் கூறுதான் என்று ஏற்றுக் கொள்ள இடம் இருக்கிறதா?

பெண்கள் உயர்ந்தவர்கள்தானாம். ஆனால் இப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்களாம்.

உயர்ந்தவர்களாக இருக்க விருப்பம் இல்லாதவர்கள் எப்படி உயர்ந்தவர்-களாக இருக்க முடியும்?

இப்படி ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் அந்தர் பல்டி அடிக்கும் ஆசாமி-கள்தான் அவாள் அகராதியில் அறிவாளியோ அறிவாளி!

ஒரு முறை பின்பொறியால் சிரித்துத் தொலையுங்கள்.இதில் ஒரு வெட்கக்கேடு என்ன தெரியுமா?

இவ்வளவு இழிவாகப் பெண்களை இந்தப் பார்ப்பான் விமர்சித்திருந்தாலும், கொச்சைப் படுத்திக் கூவினாலும், முற்போக்கு முத்திரை குத்தி அலையும் எந்தப் பெண்கள் அமைப்பும் அது பற்றியெல்லாம் மூச்சு விடுவதில்லை. ஒரு கண்டன அறிக்கைகூட கொடுப்ப-தில்லை.

திராவிடர் கழகம்தான் தீயாக எழவேண்டும். விடுதலைதான் வேங்-கைப் புலியாக பாயவேண்டும்.

எழுத்துக்கு எழுத்து செம்மையாகக் கொடுக்கும் சாட்டை பெரியார் திடலில்-தான் இருக்கிறது. கருஞ்சட்டைக்காரரின் கையில்தான் அது சுழன்று கொண்டே இருக்கிறது.

பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்-கீடு பற்றிய பிரச்சினையில் இருவேறு கருத்துகள் உண்டு. ஒன்று உள் ஒதுக்கீடு இல்லாத இட ஒதுக்கீடு; இன்னொன்று உள்ஒதுக்கீடு இருந்தே தீரவேண்டும் என்கிற வற்புறுத்தல்.

மூன்றாவது ஒரு கூட்டம் இருக்கிறது. அதுதான் சோ போன்ற மனுதர்ம மலத்தை மடியில் கட்டிக் கொண்டு அலையும் கூட்டம்.

தினமணி என்ற பெயர் இருக்கும்; இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற நாமம் இருக்கும்; கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளையான குருமூர்த்தி வடிவத்திலும் இருக்கும்.

பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடவே கூடாதாம். அது வீண் வேலையாம். இந்தச் சட்டம் வருவதால் பெண்களுக்-குப் புதிதாக ஆகப் போவது ஒன்றும் கிடையாதாம்; - வெறும் கண்துடைப்பு-தானாம்.

பெண்கள் மீதான அக்கறை காரண-மாகச் சொல்லப்படுவதா இவை? அல்ல, அல்ல. பெண்கள் மீதான வக்கிரக் குணத்-துடன் வடிகட்டி எழுதப்படும் வருணாசிரமவாதிகளின் குமட்டல்கள் இவை.

டெக்கான் கிரானிக்கல் (9-.3-.2010) ஆங்கில நாளேட்டில் (பக்கம் 2 இல்) திருவாளர் சோ ராமசாமியின் பேட்டி வெளிவந்துள்ளது.

அப்பட்டமான மனுதர்மத்தின் அசல் அக்மார்க் முத்திரையுடன் கருத்துச் சொல்லியிருக்கிறார்.

சட்டமன்றங்களும், நாடாளுமன்ற-மும் பெண்களுக்கான சட்டங்களை இயற்றவில்லையா? பின் எதற்காக பெண்-களுக்கென்று தனி ஒதுக்கீடு? அதனால் என்ன பலன் ஏற்பட்டு விடப் போகிறது?

பெண்களுக்கான தொகுதிகள் ஒதுக்கப் பட்டால் அந்த இடத்தில் யார் நிறுத்தி வைக்கப்படுவார்கள்? ஏற்கெ-னவே சட்ட மற்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்-பவர்களின் மனைவிமார்களோ மகள்-களோதான் நிறுத்தி வைக்கப்படுவார்-கள்?

தேர்ந்தெடுக்கப்படும் இந்தப் பெண்-கள் ஆண்களின் பினாமியாகத் தானி-ருப்பார்கள் என்று மூக்கால் அழுகிறார்.

உள்ளாட்சித் தேர்தலில் பெண்-களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட பொழுதும் இதே கூட்டம் இந்த வகை-யில்தான் மண்ணை வாரி இறைத்தது.

உள்ளாட்சிகளில் பெண்கள் போய் உட்கார்ந்ததால் என்ன கெட்டுப் போய்-விட்டது? எதில் தோல்வி அடைந்து-விட்டார்கள்?

வாய்ப்புக் கொடுப்பதற்கு முன்பே வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வது ஆற்றாமையின் வெளிப்பாடு. மனுதர்ம குயுக்தியின் கோணல் புத்தி!

543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் குறைந்த பட்சம் 181 பெண்கள் வீற்றிருக்கப் போகிறார்களே - பொறுக்குமா இந்தப் பூதேவர்களுக்கு? வீங்கி வெடித்திட மாட்டார்களா?

தங்கள் உரிமைகளுக்காக இன்னொரு-வரிடம் கையேந்தி நின்ற காலத்திற்குக் கல்தா கொடுக்கப் பட்டுவிட்டதே!

ஆண்களுக்கு உள்ள ஒவ்வொரு உரிமையும் தங்களுக்கும் வேண்டும் என்று ஓங்கிக்குரல் கொடுப்பார்களே _ அது இன்னொரு வகையில் இந்த ஈரோட்டுக் கிழவனாரின் கொள்கைக்கு அல்லவா வெற்றியாக முடியும்?

தமிழ்நாட்டைப் பீடித்த பெரியார் சரக்கு டில்லிப் பட்டணம் வரை அம்-பலம் ஏறிவிட்டதே என்ற ஆத்திரத்தில் அம்மிக் குழவியை எடுத்து வயிற்றில் குத்திக் கொள்கிறது சோ கூட்டம்.

33 சதவிகிதத்துக்காகப் போராடும் பெண்களின் கவனம் இந்த மனுவாதி-களின் பக்கமும் திரும்பும் நாள் எந்-நாளோ!

---------  நன்றி விடுதலை (13.03.2010)

7 comments:

அப்பாதுரை said...

அதிர்ச்சியாக இருக்கிறது, சோவின் பகிரங்கப் பேச்சு. தனக்கு இயல்பான sarcasmடன் பதில் சொல்லியிருக்கிறாரா இல்லை உண்மையிலேயே இந்த ஆசாமி ignorantஆ என்பது புரியவில்லை. தெளிவான சிந்தனை, அறிவு முதிர்ச்சி, மற்றும் சம உரிமை அடிப்படையிலான முன்னேற்றத்துக்கான அறிகுறிகளான இட ஒதுக்கீடு (பெண்கள், வசதி குறைந்தவர்கள், ஜாதி அடிப்படையில் நெடுங்காலமாக ஒதுக்கப்பட்டவர்கள்... எப்படிப்பட்ட காரணமானாலும்) போன்றவற்றை பொறுப்பில்லாமல் கிண்டல் செய்வது - அதுவும் பொதுப் பார்வையில் அதிகம் தென்படுபவர்கள் இப்படிப் பேசினால் தவறு தான். அறிவுள்ள மனிதர் என்று நான் நினைத்திருந்தவர் இப்படிப் பேசியதில் வருத்தமடைகிறேன். Chauvinist.

அதற்காகப் பார்ப்பனரென்று ஒரு சமூகத்தையே சாடுகிறீர்களே? நானும் பார்ப்பனன் தான். உங்களைப் போல் இல்லாவிட்டாலும் ஓரளவுக்குப் பெரியாரைப் புரிந்தவன் தான். தனிப்பட்ட மனிதரின் எண்ணங்களை வைத்து ஒரு சமூகத்தையே சாடுவது பெரியாரின் கொள்கைக்கு முரணாகப் படவில்லையா? பார்ப்பனர் கிறுஸ்துவர் ஆரியர் திராவிடர் தமிழர் இஸ்லாம் இன்னபிறத்தவர் எல்லாம்... பிறவியின் சுமை. தெரிந்தா பிறக்கிறோம் ஒரு குடியில்? முற்போக்குச் சிந்தனை என்பது ஒரு சமூகத்தைச் சாடுவதல்ல. பின் தங்கிய எண்ணைத்தையும் செயலையும் - அது எங்கிருந்து வந்தாலும், எவரிடத்திலிருந்து வந்தாலும் - சாடுவது தான் முற்போக்கு. பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு பார்ப்பான் தமிழன் என்று பாகுபடுத்தி, உண்மையான சிக்கலை அவிழ்க்காமலிருக்கிறோமே இன்னும்!

Unknown said...

Those are his views.Who cares about them.Women are least bothered about him.There are mullahs who oppose reservation for women and they want women to wear purdah and do not work outside home. They have right to express their views.
Brahmins are least bothered about DK or Cho.They mind their business. Dr.Zakir Naik addressed meetings recently near Chennai.His views on women are similar to that of CHO.Were was Veeramani then. Was he fast asleep. Did Viduthalai write anything condemning him.
What will Veeramani do- organize a protest opposite to Memorial Hall.

Unknown said...

திரும்ப திரும்ப உரைக்கிறேன். எதிர் கருத்துக்களை பதியும்போது அவரின் சாதியை இழுக்காதீர். உங்கள் பாசறை தாசன் ஆன்மீக பாதை சென்றதை விமர்சனம் செய்வீர்கள் என்று காத்திருக்கிறேன். விடுதலை குதிரையின் சீனிக்கண்ணாடி போன்றது. அதற்கு பார்ப்பன எதிர்ப்பு ஒன்றே பிழைக்கும் வழி. தொலைக்காட்சியும், வெகுஜன பத்திரிக்கைகளும் சினிமாவை நம்புவதைப் போல. தங்கள் பார்வையை விசாலமாக்கிக் கொள்ள கிருஷ்ண விஜயம் மற்றும் விதுர நீதி வலைப்பூவை நுகரவும்.
http://kuselans.blogspot.com/2010/03/17.html

Unknown said...

பெரியாரியல் என்ற பொரியலை உண்டு வளர்ந்த தாசனின் பரிணாம வளர் சிதை மாற்றம் தான் அவரின் மட(த)மாற்றம்.பெரியாரியல் அவரின் அடிமையாலேயே தோற்கடிக்கப் பட்டுள்ளது.மஞ்சளுக்கும் பச்சைக்கும் எக்காலத்திலும் கருப்பு அடிமையே.விடுதைலயின் விளக்கம் என்ன?

பரணீதரன் said...

ரம்மி நீங்கதான் பெரியாரியலை சரியாய் புரிஞ்சுகள.......நல்லா திரும்ப திரும்ப படிங்க பெரியாரியலை, திராவிடர் கழக கொள்கைகளை அப்புறம் புரியும் ....பார்ப்பனீயம் என்ன என்று .....நீங்களும் ஒரு பார்பனர் தான் அதனால் பார்ப்பனியத்தை பற்றி நிறைய சொல்ல தேவை இல்லை. பெரியாருக்கு பேப்பர் வித்து பொழைக்க வந்தவர் அல்லர் அவருடைய தொண்டர்களும் அப்படிதான்....பார்பான் அப்படின்னு எழுதுன பேப்பர் நல்லா விக்குமா? எந்த ஊருல? உங்க ஊருலய? ...நல்லா யோசிங்க...ஸ்பூன் பீட் தேவை இல்லை....

Unknown said...

ஆஹா அற்புதம் சங்கமித்ரன்! உங்கள் கருத்தை எதிர்ப்பவர்களுக்கு தாங்கள் தரும் பார்ப்பன பட்டம். ஏன் நடுநிலையாளர்கள் உங்களை விமர்சிக்கக்கூடாதா? உங்கள் பார்ப்பன எதிர்ப்பு அறுவறுக்கும் நிலைக்கு செல்லாது என்று நம்புகிறேன். நான் எழுப்பிய எந்த வினாவுக்கும் தங்களிடம் பதில் இல்லையோ?

நம்பி said...

//rammy said...

ஆஹா அற்புதம் சங்கமித்ரன்! உங்கள் கருத்தை எதிர்ப்பவர்களுக்கு தாங்கள் தரும் பார்ப்பன பட்டம். ஏன் நடுநிலையாளர்கள் உங்களை விமர்சிக்கக்கூடாதா? உங்கள் பார்ப்பன எதிர்ப்பு அறுவறுக்கும் நிலைக்கு செல்லாது என்று நம்புகிறேன். நான் எழுப்பிய எந்த வினாவுக்கும் தங்களிடம் பதில் இல்லையோ?//
8:56 PM

நடுநிலையாளர்களா? இதை யார் வழங்கியது?...இதுவும் பார்ப்பன அமைப்பேவா..?

....நடுநிலை என்பதற்கு மறுபெயர் திராவிடத்திற்கு எதிரான தாக்குதல்....?

...பார்ப்பனர்கள் கண்டுபிடித்த ரொம்ப பழைய ஆயுதம்....

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]