வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, March 06, 2010

சோ... கல்வியாளனும், செருப்பைப் பாதுகாக்கிறவனும் ஒரு நிலைக்கு வந்துவிட்ட பிறகு இந்த நாடு என்னவாகும்?

தமிழர்களின் மரியாதைக்குரிய தலைவர்களை தரங்-குறைந்த சாக்கடை வார்த்தைகளால் தாக்கும் ஒரு வேலை நடந்து கொண்டிருக்கிறது.


பார்ப்பனத் தலைவர்களான சங்கராச்சாரியார் போன்றவர்கள், சாமியார்களின் கீழ்த்தரமான நட-வடிக்கைகளால் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்ட பார்ப்பன வட்டாரம் அந்த ஆத்திரத்தை சகிக்க முடி-யாமல் தமிழர்களையும், தமிழ்நாட்டின் தலைவர்-களை-யும் தரந்தாழ்த்தித் தாக்கும் தொழிலில் இறங்கியுள்ளது.

இராமாயண காலத்திலிருந்து நேரிடையாகவே பார்ப்பனர்கள் மோதமாட்டார்களே, தமிழகத்தில் மிகவும் மலிவாக விபீடணர்கள், தாசானுதாசர்கள் கிடைக்கத்-தானே செய்வார்கள். எழுத்துக் கூலிகளும் தமிழர்-களில் உண்டல்லவா? அத்தகையவர்களைத் தட்டிப் பார்த்துத் தேர்ந்தெடுத்து தாதா வேலைக்குச் சூ காட்டு-கிறது ஒரு பார்ப்பன இதழ்.

இன்றைக்கு கருணாநிதி போன்ற தலைவர்கள் இளைஞர்களை பொது வாழ்க்கைக்கு அழைக் கிறார்கள்! நாட்டில் உள்ள அயோக்கியர்கள் எல்லாம், தலைவர் நம்மைத்தான் அழைக்கிறார் என்று உள்ளே வந்துவிட்டார்கள். நாட்டில் உள்ள யோக்கியன் எல்லாம் இந்த அழைப்பு நமக்கு இல்லை என்று ஒதுங்கிக்கொண்டான். அழைப்ப வர்கள் யாரோ அவரைப் பொறுத்து பின்பற்று பவர்களின் தகுதி இருக்கிறது.

காந்தி அழைத்தபோது, தேவர் சமூகத்திலிருந்து முத்துராமலிங்கத் தேவர் வந்தார். நாடார் சமூகத்தி-லிருந்து காமராஜர் வந்தார். பிராமண சமூகத்திலிருந்து ராஜாஜி வந்தார். தாழ்த்தப்பட்டோர் சமூகத்திலிருந்து கக்கன் வந்தார். ரெட்டியார் சமூகத்திலிருந்து ஓ.பி. ராம-சாமி ரெட்டியார் வந்தார். ராஜுக்கள் சமூகத்தி-லி-ருந்து குமாரசாமி ராஜா வந்தார். இப்படி காந்தி அழைத்த-போது, ஒவ்வொரு சமூகமும் தன்னிடமிருந்த சிறந்த உத்தமமான மனிதர்களை பொது வாழ்க்கைக்கு அளித்தது.

இன்றைக்கும் அதே சமூகங்கள் இருக்கின்றன. எல்லா சமூகங்களும் தங்கள் பங்கிற்கு மந்திரி சபைக்கு ஆளை அனுப்புகின்றன. ஆனால் அந்த மந்திரி சபையில் ஒரு யோக்கியன் உண்டா?

காந்தியார் காலத்தில் அயோக்கியர்கள் எல்லாம் வெளியே தெரியவில்லை; கருணாநிதி காலத்தில் யோக்கியர்கள் எல்லாம் வெளியே தெரியவில்லை.

மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் செருப்பு குத்தகைக்கு எடுக்கிறவனுக்கும், சென்னை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

செருப்பு குத்தகை எடுக்கிறவனும், துணை வேந்-தரும் ஒரு நிலைக்கு வந்துவிட்ட பிறகு, கல்வியா-ள-னும், செருப்பைப் பாதுகாக்கிறவனும் ஒரு நிலைக்கு வந்துவிட்ட பிறகு இந்த நாடு என்னவாகும்?

இப்படியெல்லாம் ஒருவர் பேசியிருக்கிறார். இது இவ்வார துக்ளக் இதழில் (10.3.2010) சாங்கோ பாங்கமாக வெளியிடப்பட்டுள்ளது.

இப்படிப் பேசியவரை திருவாளர் சோ ராமசாமி ஓகோ என்று பாராட்டிப் பேசியிருக்கிறார். அந்தப் பேச்சும் இவ்விதழில் வெளிவந்துள்ளது.

விபீடணத் தமிழரின் உரையும், அதனை வழி மொழிந்து ஆதரித்த திருவாளர் சோவும் இதன்மூலம் என்ன தெரிவிக்கின்றன?

இன்றைக்குக் கலைஞரிடம் இருப்பவர்கள் எல்லாம் அயோக்கியர்கள்.

இன்றைக்கு கலைஞர் தலைமையிலான அமைச்-சர்கள், அத்தனை பேரும் யோக்கியமற்றவர்கள்.

கலைஞர் அமைச்சரவையில் இருக்கும் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் அந்த ஜாதிகளில் உள்ள அயோக்கியர்கள்தான்.

சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்த-ருக்-கும், கோயிலில் செருப்பு குத்தகைக்கு எடுப்பவனுக்கும் வித்தியாசம் இல்லை. இவ்வாறு வெளிப்படையாகப் பேசப்பட்ட பேச்சு துக்ளக்கிலும் வெளிவந்துவிட்டது.

பார்ப்பான் நேரிடையாக எழுதவில்லைதான். பார்ப்-பானின் பாதக் குறடுகள் இப்படியெல்லாம் எழுது-கின்றன.

தனிப்பட்ட யாரோ ஒருவரைத் தாக்கவில்லை. ஒட்டு மொத்த தமிழர்கள் அனைவரையும், பல தரப்பி-னரை-யும், அயோக்கியர்கள் என்றும் இந்த 2010 ஆம் ஆண்டில் எழுத முடிகிறது.

இவற்றை அனுமதிக்கலாமா? தமிழர்கள் எல்லாம் தன்மானமற்றவர்களா? அயோக்கியர்களா?

தி.மு.க.வில் உள்ளவர்கள் அத்தனைப் பேரும் அயோக்கியர்களா?

யாரோ ஒரு நடிகர், நடிகை தமிழர்களைக் கொச்-சைப்-படுத்தயதற்கெல்லாம் ஆவேசப் போர்க் கோலம் பூண்ட தமிழர்களே, சிந்திப்பீர்!

- கருஞ்சட்டை விடுதலை (05.03.2010 )

4 comments:

Muthukumara Rajan said...

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ கருணாநிதி(உங்க கலைஞர்) அமைச்சரவையில் இருக்கும் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் அந்த ஜாதிகளில் உள்ள அயோக்கியர்கள்தான்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த உண்மை ஊருக்கே தெரியும் உங்கள் மன சாட்சிக்கும் தெரியும் .
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்த-ருக்-கும், கோயிலில் செருப்பு குத்தகைக்கு எடுப்பவனுக்கும் வித்தியாசம் இல்லை. இவ்வாறு வெளிப்படையாகப் பேசப்பட்ட பேச்சு துக்ளக்கிலும் வெளிவந்துவிட்டது
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அது போல் தானே தற்போது நிகழ்வுகள் இருக்கிறது. செய்திடல்கள் படிப்பது இல்லையா .
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------தனிப்பட்ட யாரோ ஒருவரைத் தாக்கவில்லை. ஒட்டு மொத்த தமிழர்கள் அனைவரையும், பல தரப்பி-னரை-யும், அயோக்கியர்கள் என்றும் இந்த 2010 ஆம் ஆண்டில் எழுத முடிகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒட்டு மொத்த தமிழர்கள் சொல்லவில்லையே . உங்களுக்கு தமிழ் படிக்கச் தெரியாதா . நீகள் எழுதிய கட்டுரையை நீங்களே மறுமுறை படியுங்கள் . நல்லவர்கள் அரசியலுக்கு வருவதில்லை என்பதே செய்தி .
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Thamizhan said...

தமிழால் எழுதி, தமிழர்களிடம் உஞ்ச விருத்தி செய்யும் இந்தப் பார்ப்பன சோமாரி இப்படி எழுதுவது தமிழினத் தலைவர்களின் பொறுப்பற்ற பொறுமை காட்டுவதால் தான் நடை பெறுகிறது.
பார்ப்பன பத்திரிக்கை பலத்திற்குப் பயந்த காலம் மலையேறி விட்டது.
கடந்த தேர்தல்களில் முமூர்த்திகள் சோமாரி,நரசிம்ம ராம்,குருமூர்த்தியின் கூட்டு முயற்சிகள் படு தோல்வி அடைந்து விட்டது.
இனியும் அவர்களுக்கு ஒரு ஆதரவு இருப்பதாக நம்பிக் கொண்டு அவர்களை எதிர்க்காமல் இருப்பது தமிழினத்திற்கே செய்யும் துரோகமாகும்.
இனியும் பார்ப்பனர்களின் ஆதரவு தேவையென்று இந்தப் பார்ப்பன்க் கும்பலுக்குச் செம்மொழி மாநாட்டிற்கு விழுந்து விழுந்து அழைப்பதும், மரியாதை தருவதும் விரும்பத் தக்கது அல்ல.

இந்தப் பார்ப்பன் அடிவருடிகளிடம் அடகு போய் சோமாரி, கிழக்குப் பதிப்பகம்,தினமலம் போன்ற தமிழின எதிரிகளை உஞ்ச விருத்தி செய்ய வைப்பது தமிழினத்திற்கே செய்யும் பெருந் துரோகமாகும்.

Muthukumara Rajan said...

நல்லதொரு மொழிநடை
தமிழ் கலாச்சாரத்தை வெளிக்கொணரும் அருமையான சொற்கள்
முக்கியமாக 'சோமாரி' வார்த்தை மிக அருமை
எவ்வளவு அற்புதமான நாகரிகம்

இதுதான் பெரியார் கொடுத்த பகுத்தரிவு போல...

எப்படிப்பட்ட
நாத்திக பகுத்தரிவலானாக இருப்பதை விட நான் ஆத்திக பகுத்தரிவலானாக இருப்பதை பெருமையாக நினைக்கிறன் .


நேர்மையுடன்
முத்துக்குமார்

நம்பி said...

//muthukumar said...

கருணாநிதி(உங்க கலைஞர்) அமைச்சரவையில் இருக்கும் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் அந்த ஜாதிகளில் உள்ள அயோக்கியர்கள்தான்
இந்த உண்மை ஊருக்கே தெரியும் உங்கள் மன சாட்சிக்கும் தெரியும் //

இதை எந்த ஜாதி அயோக்கியர் சொன்னது?...பார்ப்பன அயோக்கியரைத் தவிர வேறொருவரும் சொல்லமுடியாதே..

இந்த உண்மை எல்லா நல்லவருக்கும் தெரியும்.

muthukumar said...
//சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்த-ருக்-கும், கோயிலில் செருப்பு குத்தகைக்கு எடுப்பவனுக்கும் வித்தியாசம் இல்லை. இவ்வாறு வெளிப்படையாகப் பேசப்பட்ட பேச்சு துக்ளக்கிலும் வெளிவந்துவிட்டது//

இல்லையே! பார்ப்பனனுக்கும் மனிதத்துக்கும் சம்பந்தமில்லையே...காட்டிமிராண்டித் தனத்துக்கும் அவனுக்கும் தானே சம்பந்தம்...இதுவும் வெளிப்படையாக பேசியப் பேச்சு ஆனால் இது பார்ப்பன சோ துக்ளக்கில் வராது.
muthukumar said...
//எப்படிப்பட்ட
நாத்திக பகுத்தரிவலானாக இருப்பதை விட நான் ஆத்திக பகுத்தரிவலானாக இருப்பதை பெருமையாக நினைக்கிறன் .//

கண்டிப்பாக பார்ப்பனன் "பகுத்தரிவாலனாக" மட்டுமே இருக்க முடியும். அதை பார்ப்பனனால் மட்டுமே பெருமையாக எடுத்துக்கொள்ளமுடியும்.

ஆனால் நிச்சயமாக "பகுத்தறிவாளனாக" எப்போதுமே ஆகமுடியாது. அது திராவிடர்களால் மட்டுமே முடியும்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]