வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, December 16, 2009

ராமன் பாலத்தால் (புராண புளுகினால்) தடைபடும் பொன்னான திட்டம்

ஒன்றரை நூற்றாண்டுக்கு மேலாக எதிர்-பார்க்கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் இதோ நிறைவேற்றப்பட இருக்கிறது என்கிற ஆர்வம் தமிழ்நாடு மக்கள் மத்தியிலே பொங்கிப் பிரவாகித்தது.


மத்தியில் தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் டி.ஆர். பாலு அவர்கள் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், இத்-திட்டத்தினை நிறைவேற்றிட அவர் காட்டிய ஆர்வம் தமிழர்கள் மத்தியிலே உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

ரூபாய் 2000 கோடி முதலீட்டில் தீட்டப்படும் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் அந்நிய செலாவணியைத் திரட்டித் தரும் என்று கூறப்பட்டது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், 36 மணிநேரக் கடல் பயணம் மிச்சம்; சுமார் 555 கி.மீட்டர் தூரம் மிச்சம்; எரிபொருள் மிச்சம்; அந்நியச் செலாவணி மிச்சம்; தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி விரைவாக வந்து சேரும்; இதனால் தமிழ்நாட்டு மின் வாரியத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.24 கோடி மிச்சம்; ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு ரூ.700 கோடி மிச்சம்.

சென்னை, தூத்துக்குடி, குளச்சல், நாகப்பட்டினம் துறைமுகங்கள் பன்னாட்டுத் துறைமுகங்களாகும். எண்ணூர் முதல் குளச்சல் வரை உள்ள பெருந்-துறைமுகங்கள், சிறுதுறைமுகங்கள் வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு ஏற்படும். புதிதாகவும் சிறு துறைமுகங்களும், மீன் பிடி துறைமுகங்களும் உண்டாகும். கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், தொண்டி, கோடியக்கரை, இராமேசுவரம், தனுஷ்கோடி, குளச்சல் ஆகிய இடங்களில் மீன் பிடி துறைமுகங்கள் விரிவாக்கம் பெற வழி பிறக்கும். துறைமுகங்களை முக்கியமாகக் கொண்டு சிறிய, பெரிய தொழிற்சாலைகள் வளரும். இதன் காரணமாக, ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புக் கிட்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட திட்டம் இது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் குறைந்தபட்சத் திட்டத்திலும் இது இடம்பெற்றது. குடியரசுத் தலைவர் உரையிலும்கூட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இவ்வளவுக்கும் பிறகு இந்தத் திட்டம் முடக்கப்பட்டுக் கிடக்கிறது என்றால், இதன் பொருள் என்ன?

தமிழர்களுக்கு நல்லது நடந்துவிடக்கூடாது என்றே இந்த நாட்டில் ஒரு கூட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் பார்ப்பனர்கள் கூட்டம்; சுப்பிரமணியசாமி, சோ. ராமசாமி போன்றவர்கள் கண்களுக்குத் தென்பட்டாலும், ஒட்டுமொத்தமாக எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தமிழர் முன்னேற்றத்திற்கு மறைமுகமாகவேனும் முட்டுக்கட்டை போடுபவர்களே!

ரூபாய் 2000 கோடியில் உருவாகும் ஒரு விஞ்ஞானபூர்வமான திட்டத்தை 17 லட்சத்து 25,000 ஆண்டுகளுக்குமுன் ராமன் கட்டிய பாலம் என்ற ஒரு புராண புளுகு மூட்டையைக் கொண்டு வந்து இந்த நாட்டில் முடக்கப்படுகிறது என்றால், 21 ஆம் நூற்றாண்டில்தான் இந்தியா இருக்கிறதா என்கிற கேள்விக்குறிதான் எழும்.

அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.

ஆனால், இராமன் என்ற புராணக் கற்பனைப் பாத்திரத்தைக் காட்டி தடைகோரும் ஒரு மனுவை இந்தியாவின் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இடைக்காலத் தடையும் விதிக்கிறது என்றால், இந்த நாட்டில் அரசியல்வாதிகளும், நீதிமன்றமும் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கக் கூடியவர்கள்தானா என்ற கேள்வி எழாமல் போகாது.

ஏற்கெனவே பல நிபுணர் குழுக்களின் அறிக்கைகள் பெறப்பட்டுதான் ஆறாவது தடத்தில் கால்வாய் வெட்டும் பணி தொடங்கப்பட்டது.

இப்பொழுது உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதுக்கரடி ஒன்றை அவிழ்த்துவிட்டுள்ளது. சுற்றுச்சூழல்பற்றி ஆய்வு நடத்திட மேற்கொண்டு 18 மாதங்கள் தேவைப்படும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சொல்கிறது என்றால், இதன் பொருள் என்ன?

சு.சாமி, ஜெயலலிதா, சோ. ராமசாமி வகை-யறாக்களுக்கு ஏதோ ஒரு வகையில் மத்திய அரசு துணை போகிறது என்றுதான் கருதவேண்டியுள்ளது.

உரிமைப் பிரச்சினை என்று வருகிறபோது பக்கத்தில் உள்ள ஆந்திர மாநிலத்தைப் பார்த்தாவது தமிழர்களுக்குப் புத்தி வரவேண்டாமா? மயிலே, மயிலே என்றால் இறகு போடாது என்பது அனுபவ உண்மை. தமிழர்கள் உரத்த முறையில் சிந்திப்-பார்களாக!

விடுதலை தலையங்கம் 16.12.2009

Tuesday, December 15, 2009

கடவுள் பெயர்ச்சொல்தான்; வினைச்சொல் அல்ல!



கடவுளைப்பற்றி மக்கள் அறிய நேர்ந்தது சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் 5000 ஆண்டுக்குள் இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். நீங்களும் இதில் ஒரு 1000 அல்லது 500 ஆண்டுகள் வித்தியாசமாய்க் காணலாம். எப்படி ஆனாலும் அந்த 3000 ஆண்டுக்கு மேற்பட்ட காலம் பொதுவாக மக்கள் பக்குவப்படாத(காட்டுமிராண்டி) காலம் என்பதை நீங்கள் மறுக்கமுடியாது.

அந்தக் காலத்தில் மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட நடந்து கொண்டு வந்த, பயன்படுத்திக்கொண்டு வந்த , எண்ணிக்கொண்டு- நம்பிக்கொண்டு வந்தவைகளில் இன்று மனிதன் உணவு-உறக்கம் என்பதைத்தவிர வேறு எதைப் பின்பற்றி வருகிறான்; பயன்படுத்தி அனுபவித்துக்கொண்டு வருகிறான் என்ற சிந்திப்போமேயானால் , அவையெல்லாம் மாற்றப்படவேண்டிய, கைவிடப்படவேண்டிய, மறுக்கப்படவேண்டிய காரியங்களாகவே இருந்து இருக்கின்றன.

ஆகையால், கடவுள் என்பது ஒரு பொருள் அல்லது ஒரு சாதி என்று சொல்லப்பட்டாலும், அது பெயர்ச்சொல்லே ஒழிய வினைச் சொல் அல்ல. பெயர்ச்சொல் ஆன பொருளுக்கு-வஸ்துவுக்கு-வஸ்து நிச்சயத்திற்கு கண்டிப்பாக செய்முறை-கூட்டுப்பொருள் தன்மை ஃபார்முலா இருந்தே ஆகவேண்டும் ; அது இல்லாதது வஸ்துவே

ஆகமாட்டாது. ஆதலால் கடவுளைப் பற்றிப்பேசுபவர்கள் முட்டாள் களானால் அவர்களிடம் இந்த விளக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டியவனாகத்தானே இருக்க முடியும்?

"இங்ஙனமிருக்க கடவுள் என்றால் விளக்கங் கேட்க வேண்டாம்"

கடவுள் என்றால் ஆராய்ச்சி செய்ய வேண்டாம்"
"அது உனக்குப்புரியக் கூடியதல்ல"
"அதை எவனாலும் அறிந்துகொள்ள முடியாது."
"அது மனோ வாக்கு காயங்களுக்கு எட்டாத பொருள்"

"கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நம்பிக்கொள்ள வேண்டியது தான் கடவுள் என்பதற்கு விளக்கம்"  என்று சொல்லப்படுவதனால் இந்த முறைப்படி (ஃபார்முலாபடி) கடவுளை நம்புகிறவன் அவன் எவ்வளவு அறிவு மேதாவியானாலும் அவன் மனிதக் கூட்டில் சேர்க்கப்பட வேண்டிய வனாவானா?

"சர்வ சக்தி உள்ள ஒரு பொருள் என்பது பகுத்தறிவுள்ள ஒரு மனிதனால் புரிந்துகொள்ள முடியாததாய் இருக்கவேண்டிய அவசியமென்ன?" என்பதைப்பற்றி மனிதன் சிந்திக்க வேண்டாமா?

-தந்தை பெரியார்

திராவிட இயக்கம் என்பது சமூகநீதியின் தாய் வீடு...

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் அடிப்படையான ஆவணம் ஜாதிச் சான்றிதழாகும்.


முன்பெல்லாம் இதனைப் பெறுவது மிகவும் கடுமையானதாக இருந்தது. கிராமக் கணக்கர் முதலில் கையொப்பமிடவேண்டும். பெரும்பாலும் இந்த இடத்தில், தமிழ்நாட்டில் இருந்தவர்கள் (கர்ணம் என்று பெயர்) எல்லாம் இட ஒதுக்-கீடுக்கு எதிரானவர்களே;

தாழ் ஜாதிக்காரர்கள் உயர்ஜாதிக்காரர்களான அந்த கணக்கப் பிள்ளைகளின் (கர்ணம்களை) வீட்டுக்குச் சென்று நேரில் சந்திப்பதே என்பது-கூட எளிதான காரியமல்ல; கர்ணம் கையொப்பம் போட்டவுடன் பட்டாமணியர் மேல் கையொப்பம் போடவேண்டும் இவர்களோ மிட்டாமிராசுதார்களாக இருப்பார்கள்.

இவற்றையெல்லாம் கடந்துதான் வட்டாட்சி-யரிடம் கையொப்பம் வாங்கவேண்டும். இந்தச் சங்கடங்கள் எல்லாம் அகற்றப்பட்டு, நடை-முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன என்பது உண்மை-தான் என்றாலும், குறிப்பிட்ட சில பகுதி-களில் இன்னும் சிக்கல்கள் இருந்து கொண்டு-தானி-ருக்கின்றன. ஊர்விட்டு ஊர் வந்து குடி-யேறிய-வர்களும் இந்தச் சூழலில் சிக்கித் தவிக்கின்றனர்.

முன்பைவிட படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இப்பொழுது கிளர்ந்து எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்த அடிப்படை ஜாதிச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் இருக்கக் கூடாது என்பது தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அக்கறையாக உள்ளார்.

முக்குலத்தோர்க்கு ஜாதிச் சான்றிதழ் கிடைப்பதில் உள்ள இடர்ப்பாட்டை அந்தச் சங்கத்தின் நிருவாகிகள் சுட்டிக்காட்டியபோது, முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அந்தந்த பகுதியிலேயே ஜாதிச் சான்றிதழ் வழங்கிட ஆவன செய்துள்ளார். அதற்கு நன்றி காட்டும் வகையில் கடந்த ஞாயிறன்று மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தியுள்ளனர்.

‘இது ஜாதிச் சான்றிதழ் அல்ல _ உங்களுக்கு இது உரிமைச் சீட்டு _ உரிமைக் கேடயம்’ என்று முதலமைச்சர் கூறியது மிகச் சரியான உண்மை-யாகும்.

எந்த ஜாதி _ கல்வி கற்க உரிமையை மறுத்ததோ, அந்த நஞ்சை மருந்தாக மாற்றிக் கொடுப்பதுதான் இட ஒதுக்கீடு என்னும் சமூகநீதி.

திராவிட இயக்கம் என்பது சமூகநீதியின் தாய் வீடு _ அதன் மரபில் வந்த தி.மு.க. ஆட்சியில் இந்தப் பிரச்சினையில் அக்கறை செலுத்துவது என்பது இயல்பானதே!

தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் சமூகநீதிக்காகப் பாடுபட்ட வரலாற்றையும் மறக்-காமல் அவ்விழாவில் முதலமைச்சர் அவர்கள் வரலாற்று ரீதியாக எடுத்துரைத்திருப்பது _ அவருக்கே உரித்தான இலாவகமும், தனித்-தன்மையும் ஆகும்.

ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் இன்னும் சில இடங்களில் சில சிக்கல்கள் உள்ளன. பிற்படுத்தப்-பட்டவரா, தாழ்த்தப்பட்டவரா என்பதை நிருணயிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் அது.

குறிப்பாக கிருட்டினகிரி மாவட்டத்தில் பன்னியாண்டி மக்கள் பரம்பரை பரம்பரையாகப் பன்றிகளை வளர்த்து, மேய்த்துவரும் மக்களுக்கு, தாழ்த்தப்பட்டோருக்கான ஜாதிச் சான்றிதழ் வழங்குவது மறுக்கப்பட்டு வருகிறது. இடைக்காலத்தில் யாராலோ ஏற்பட்ட தவறுக்கு இந்த மக்கள் பலியாகக் கூடாது என்பதே நமது வற்புறுத்தல் ஆகும்.

மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று களப் பணி செய்து உண்மை நிலையை அறிய முயற்சிப்பது நல்லது. முதல் தலைமுறையாகப் படிக்க ஆசைப்படும் அம்மக்களின் ஆர்வத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடக் கூடாது.

இன்னும் ஒரு முக்கிய குறிப்பு: ஜாதிச் சான்றிதழ் வாங்கிக் கொடுக்க இடைத்தரகர்கள் இருப்பதாகவும், தவறான வகையில் உண்மைக்கு மாறாக ஜாதிச் சான்றிதழ்களை அவர்கள் பெற்றுத் தருவதாகவும் சில புகார்கள் ஏடுகளில் வெளிவந்துள்ளன.

அத்தகையவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி இடைத்தரகர்கள், அவர்களைப் பயன்படுத்து-வோருக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.    நன்றி: விடுதலை 15.12.09

Monday, December 14, 2009

சங்கராச்சாரிகளும் சந்நிதானங்களும் ஒழுக்கமாக வாழ்கிறார்களா?

எங்களைப் பார்த்து முன்பு எல்லோரும் தேசத் துரோகிகள், நாசகாரர்கள் என்று சொன்னார்கள். இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. அவ்வளவு சேவை செய்திருக்கிறோம். இப்பொழுது நாங்கள் கேட்கிறோம்: பறையனுக்கும், சக்கிலிக்கும் எங்கிருக்கிறது சுயராஜ்யம்? ஆகவே முதலில் சாதி ஒழிய வேண்டும் என்று கூறி, சாதியை ஒழிக்கும் வேலையில் ஈடுபடும் பொழுதுதான், எங்களை நாத்திகர் என்று கூறுகிறார்கள். இந்த வேலையை இப்பொழுது மந்திரிகள், நீதிபதிகள், பார்ப்பனப் பத்திரிகைகள் அனைவரும் செய்து வருகின்றனர். இதைப் பற்றிய கவலை எங்களுக்கில்லை. சாதியைக் காப்பாற்ற கடவுள் எதற்கு?
ஏழைப் பிள்ளைகளைப் படிக்க வைக்க பணமில்லை என்று கூறுகிறார்கள். கோயில்களில் ஆயிரக்கணக்கில் நிலங்களும் நகைகளும் இருக்கின்றனவே, அதை யார் வயிற்றில் வைத்து அழுவது? இந்த நாட்டு மக்களின் கல்வியைப் பற்றிக் கவலையில்லாமல் சாதியைக் காப்பாற்ற கோயில் கட்ட வேண்டும் என்றும், கோயில்களை ‘ரிப்பேர்' செய்ய வேண்டுமென்றும் கூறுகிறாய். நேற்றுகூட பழனியாண்டவர் கோயிலுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்யப் போவதாகச் சொன்னார்கள். இந்தப் பணத்திற்கு எத்தனை கல்லூரிகள் கட்டலாம். வருடத்திற்கு கோயில்கள் மூலம் 45 லட்ச ரூபாய் வருகிறதே, எப்படி வருகிறது? 1956ஆம் வருடத்திலும் இந்த அக்கிரமமா?

யாராவது சொல்லட்டுமே, எனக்குக் கடவுள் பக்தி இருக்கிறதென்று! நான் கடவுள் யோக்கியதையைப் பார்த்துக் கொண்டுதானே வருகிறேன். நானும் கடவுள் பெயரைச் சொல்லி பல செயல்களைச் செய்தவன்தான். புராண காலட்சேபம் செய்து யார் ஒழுக்கமாக வாழ்கிறார்கள்? சங்கராச்சாரி வாழ்கிறாரா? சந்நிதானங்கள் யாராவது வாழ்கிறார்களா?

கடவுள் பக்தி வேண்டும் என்றும், ஆத்மா இருக்கிறதென்றும் நீதிபதி முதல் மந்திரிகள் வரையில் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த நாட்டில் பக்தி இல்லையா? எவராவது பக்தி இல்லையென்று சொல்ல முடியுமா? தமிழ் நாட்டில் ஏறக்குறைய இருபதினாயிரம் கைதிகளுக்குமேல் இருப்பார்கள். அவர்கள் காலையில் எழுந்த உடனே பட்டை பட்டையாக அடித்துக் கொள்வார்கள். ஏண்டா என்றால், சீக்கிரம் விடுதலையாக வேண்டும் சாமி என்று கூறுவான். யாராவது ராசா, மந்திரி சாகமாட்டானா, நான் விடுதலையாக மாட்டேனா என்று வேண்டிக் கொள்வான்.

இப்பொழுது திருடாமல், பொய் பேசாமல் யார் இருக்கிறார்கள்? இனிமேலாவது மக்கள் ஒழுக்கத்தை அனுசரிக்க வேண்டும்; அன்பைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்படியே எல்லோரையும் ஏய்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தால் மிருகமாவது தவிர வேறு என்ன? உயர்தர நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி எத்தனைக் கொலைகாரர்களைப் பார்க்கிறார்; எவ்வளவு திருடர்களைப் பார்க்கிறார். அவருக்குத் தெரியாதா, பக்தியில்லாமல் திருடுகிறானா, பக்தியிலிருந்து கொலை செய்கிறானா என்று?

அவர்களைப் பார்த்துவிட்ட பிறகு, மக்களிடம் பக்தியிருந்தும் ஒழுக்கமில்லை என்றல்லவா சொல்ல வேண்டும்? ஆகவே, மக்களை ஒழுக்கத்தின் பக்கம் திருப்ப வேண்டும். இன்னும் ஒழுங்கீனமாக நடக்கக் கூடாது. எவ்வளவு ஒழுங்கீனமாக நடந்து கொள்ள முடியுமோ அவ்வளவும் நடந்து விட்டோம். ஆகவே, கோயில் கட்டுவதானாலும், உற்சவம் கொண்டாடுவதானாலும் பயனில்லை. லாபமில்லை.

லட்சக்கணக்கான மக்கள் மாமாங்கத்திற்காகக் கூடினார்கள். அது, முட்டாள்தனத்தைக் காட்டுவதைத் தவிர வேறு என்ன? அங்கு போய் அழுக்குத் தண்ணீரில்தானே குளிக்கிறார்கள். குளத்தில் இருக்கும் மேல்தண்ணீரை இரைத்து விடுகிறார்கள். அழுக்குத் தண்ணீர் இருக்கிறது. எல்லோரும் இறங்கினால் தண்ணீர் உயரம் அதிகமாகிறது. யாரும் இல்லாதபொழுது கணுக்காலில் இருக்கும் தண்ணீர், எல்லோரும் இறங்கிய பிறகு கழுத்தளவுவரை வருவதில் ஆச்சரியமென்ன? குளத்தில் இறங்கி விட்ட பிறகு சிறுநீர் வந்தால் எங்கே போவது? அதைக் குளத்திலேயே ஒவ்வொருவரும் விட்டால் நுரை பொங்குகிறது. இதைப் பார்த்த நம் பைத்தியக்கார மக்கள் "பார் சிவன் தண்ணீர் விடுகிறான், நுரை பொங்குகிறது பார்' என்று சொல்லுகிறார்கள். சொல்லுவதோடு மட்டுமல்லாமல் அந்தத் தண்ணீரைத் தலையில் தடவிக் கொள்கிறார்கள்.

வட நாட்டில் கும்பமேளா நடந்தது. சுமார் எண்ணூறு சாமியார்கள் நிர்வாணமாக அங்கு வந்தார்களாம். அவர்களைப் பார்க்கப் போய் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தார்கள். புண்ணிய ஷேத்திரத்திற்கு நிர்வாணமாகத்தான் போக வேண்டுமா? இதை வெளிநாட்டான் கேள்விப்பட்டால் என்ன நினைப்பான்? இன்னும் நீ இப்படியே நுரை பொங்குகிறதென்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறாயா? எந்தப் பார்ப்பானாவது காவடி எடுத்து ஆடியிருப்பதைப் பார்த்திருக்கிறாயா? எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதி வெங்கடேசா, கோவிந்தா என்று தெருவில் புரண்டு பிச்சையெடுப்பதைப் பார்த்திருக்கிறாயா? இதைக் கண்ட பிறகாவது திருந்த வேண்டாமா நம் மக்கள்?

26.8.1956இல் ஆம்பூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி ‘விடுதலை' 10.9.1956

Saturday, December 12, 2009

அய்.ஏ.எஸ். தேர்வு...பொறுக்குமா ஆதிக்கபுரியினருக்கு?

உயர்ஜாதி ஆதிக்கக்காரர்களின் சூழ்ச்சியைப் புரிந்து-கொள்வது எளிதானதல்ல; அது சன்னமாக வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவது போலிருக்கும்.

இட ஒதுக்கீடு என்று வந்துவிட்டால், என்ன சொல்லு-வார்கள்_ ஏழைகளுக்கு உதவவேண்டாமா? என்ற கேள்வியைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். கேட்-ப-வர்களுக்கும் ‘இது நியாயந்தானே!’ என்று நினைக்கத் தோன்றும். ‘தகுதிக்கு முன்னுரிமை வேண்-டாமா?’ என்று இன்னொரு கேள்வியையும் எழுப்பு-வார்கள்.

‘அதுவும் நியாயந்தானே?’ நல்லா படிக்கிற மாண-வர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கத்தானே வேண்டும் என்று பாதிப்புக்கு ஆளானவர்களையே பேச வைப்-பார்கள்.
இந்தக் கண்ணி வெடிகளையெல்லாம் தாண்டி இப்-பொழுதுதான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும் கொஞ்சம் படிக்க ஆரம்பித்துள்ளனர். உத்தியோகப் படிக்-கட்டுகளையும் மிதிக்கத் தொடங்கியுள்ளனர்.
பொறுக்குமா ஆதிக்கபுரியினருக்கு? இதோ ஒரு சதித் திட்டப் பின்னல்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (ஹிறிஷிசி) என்று ஒன்று இருக்கிறது _ மாநிலத்தில் தேர்வாணையம் இருப்பதுபோல.
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்றவற்றிற்கு, சிவில் பதவிகளுக்கு இந்த ஆணையத்தால் தான் தேர்ந்தெடுக்-கப்பட்டு வருகின்றனர். இரண்டு தேர்வுகளை நடத்து-வார்கள். முதல் நிலைத் தேர்வு அதற்கடுத்து முதன்-மைத் (மெயின்) தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெற்ற-வர்களுக்கு இறுதியாக நேர்முகத் தேர்வும் நடைபெறும்.
இப்பொழுது இந்த முறையில் ஒரு முக்கிய மாற்றத்-தைக் கொண்டு வந்துள்ளனர். முதல்நிலைத் தேர்வில் இரு தாள்கள் உண்டு. பொதுப்பாடம் மற்றும் விருப்பப் பாடம் என்பவைதாம் இவை.

முதல் தாள் அனைவருக்கும் பொதுவானவையே! இரண்டாவது தாள் விருப்பப்பாடமாகும். இப்பொழுது இந்த இரண்டாவது தாளான விருப்பப்பாடம் என்பதை நீக்கிவிட்டு செயல்திறன் தேர்வு (கிஜீtவீtuபீமீ ஜிமீst) என்ற ஒன்றைக் கொண்டுவரத் திட்டமிட்டு அதற்கான கருத்துருவை மத்திய அரசிடம் அளித்துள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்புகூட இப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு கடும் எதிர்ப்பின் காரணமாக அது பின்வாங்கிக் கொள்ளப்பட்டது.

இந்தச் செயல்திறன் தேர்வு என்பது பொதுவாக வங்-கிப் பணிகளுக்குத்தான் வைக்கப்படுவது வழக்க-மாகும்.

இதனை ஏன் இந்த அய்.ஏ.எஸ். தேர்வுக்குள் புகுத்து-கின்றனர்? சும்மா ஆடுமா பார்ப்பனக் குடுமி? விருப்பப்-பாடம் _ இரண்டாம் தாளில் கிராமப்புற மாணவர்கள் உள்பட சிறப்பாக மதிப்பெண் பெற்று விடுகிறார்கள். தமிழ் இலக்கியம் உள்பட தேர்வு செய்துகொள்ளலாம். இந்த வாய்ப்புக் காரணமாக கிராமப்புற மாணவர்கள், ஒடுக்கப்பட்ட மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறும் வாய்ப்பு இருக்கிறது.

இதனைப் பொறுத்துக் கொள்ள முடியுமா? இதனை முறியடிப்பதுதானே உயர்ஜாதி ஆதிக்கவாதிகளின் எண்ணமும், செயல்பாடும்?
நேரிடையாக இதனைத் தெரிவிக்கவும் முடியாதே! இதனைக் கொல்லைப்புற வழியாக முறியடித்தாக வேண்டுமே! அந்த அடிப்படையில் எழுந்ததுதான் _ விருப்பப்பாடம் என்பதை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக செயல்திறன் தேர்வு என்பதாகும்.
தேர்வாணையத்தின் தலைவராக இருக்கக்கூடிய டி.பி. அகர்வால் கூறியிருப்பதைக் கவனிக்கவேண்டும்.

“அய்.ஏ.எஸ்., மற்றும் அய்.பி.எஸ். உள்ளிட்ட மிக உயரிய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் முக்கியமான மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்பதை யுபிஎஸ்சி ஒப்புக்கொள்கிறது. தற்போதுள்ள தொடக்கக் கட்டத் தேர்வுக்குப் பதிலாக செயல்திறன் தேர்வைக் (Aptitude) கொண்டுவரவேண்டும் என்று பரிந்-துரை செய்துள்ளோம். அளிக்கப்படும் வாய்ப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார் (14.11.2009).

கோணிப் பைக்குள்ளிருந்த பூனை வெளியில் வந்து-விட்டது என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்-காட்டாகும்.

பொதுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு Forward Community) நான்கு முறைகளும், பிற்படுத்தப்பட்-டோருக்கு ஏழு வாய்ப்புகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு வாய்ப்புக்கான வரம்பு இன்றியும் தேர்வு எழுதும் நிலை இப்பொழுது உள்ளது.

இதனைக் குறைக்கப் போவதாக அகர்வால் கூறுவது ஏன்?

கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறும் வாய்ப்புக்குக் கதவடைப்பதுதான் இதில் உள்ள சூழ்ச்சிப் பொறியாகும்.
சன்னமாக நடைபெறும் இத்தகைய சூழ்ச்சிகள் வெளிச்சத்துக்கு வராமலே வெற்றி பெற்றுவிடும். இதனை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.
நாடாளுமன்றத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்-படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இது-குறித்து கடுமையான எதிர்ப்புப் புயலைக் கிளப்ப-வேண்-டும். மக்கள் மத்தியில் நாம் கொண்டு செல்லுவோம்.

Friday, December 11, 2009

ஆணை போடுகிறார் ‘சிவசேனா’ தலைவர் பால்தாக்கரே!

இஸ்லாமியர் ஒருவர் இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டுமானால், முசு-லிம் சமுதாயத்து மக்-கள் பொது சிவில் சட்டம் இயற்ற ஆதரவு தர-வேண்டும்; குடும்ப நலத் திட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும்; வந்தே மாதரம் பாடலை ஏற்க-வேண்டும்; எல்லாவற்றிற்-கும் மேலாக அயோத்தி-யில் ராமன் கோயில் கட்ட ஒப்புக்கொள்ள-வேண்டும்’ என்று ஆணை போடுகிறார் ‘சிவசேனா’ தலைவர் பால்தாக்கரே!

அதைச் சொல்ல இவர் யார் என்று தெரிய-வில்லை. இந்தியாவின் சர்வாதிகாரியாக இவர் எந்தத் தேதியிலிருந்து பொறுப்பு ஏற்றுக்கொண்-டார் என்றும் தெரிய-வில்லை.

இந்தியாவில் பிறக்கும் எல்லோரும் சமமானவர்-கள்தாம்; சம உரிமை படைத்தவர்கள்தாம். இதில் வேறுபாடு காட்டப்-படக்கூடாது என்பதை ஒப்புக்கொண்டு இந்து மதத்தில் உள்ள ஜாதியை ஒழிக்க ஒப்புக்கொள்ள-வேண்டும்; உயர்ஜாதி ஆணவச் சின்னமான பூணூலை அகற்றவேண்-டும் என்ற நிபந்தனை-களை சிவசேனா, சங் பரிவார் வகையறாக்கள் ஒப்புக்கொள்வார்களா?

இந்தச் சமத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள்தாம் இந்தியாவின் குடிமக்க-ளாக இருக்கவேண்டும் என்கிற நியாயமான, அறி-வார்ந்த, மனித உணர்வை மதிக்கும் குரலை ஏற்றுக்-கொள்வார்களா இவர்கள்?

இன்னொரு மதத்தைச் சார்ந்தவர்கள் இப்படி-யெல்-லாம் நடந்துகொள்ள-வேண்டும் என்று வலி-யுறுத்த இவர்கள் யார்?

ஆர்.எஸ்.எஸின் முன்-னாள் தலைவர் சுதர்சன் இப்படித்தான் ஒருமுறை சொன்னார். முசுலிம்கள் தங்கள் மதத்தை இந்திய மயமாக்கிக் கொள்ள-வேண்டும். ராமன், கிருஷ்-ணன் கடவுள்களை வழி-படவேண்டும் என்று கூறினார். ‘சிவசேனா’ தலை-வரோ, இதே கருத்தை வேறு சொற்களில் சொல்-கிறார் என்பதுதான் இதன் பொருள்.

இன்னொரு முக்கிய கேள்வி: இந்து மதத்தின் பிரதிநிதிகளாக இவர்களை யார் ஏற்றுக்கொண்-டார்-கள்?

இந்து மதத்தில் ஒரு பிரிவுதான் இருக்கிறதா? ஒரு பிரிவு இன்னொரு பிரிவை ஏற்றுக்கொள்-கிறதா? ‘வைத்தியரே, முத-லில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்-ளுங்-கள்!’ என்பதுதான் நமது முதலாவது வேண்டு-கோள்!

‘இந்து’ மதம் என்ற பெயர் அதற்கு உண்டா? என்பதற்கு முதலில் அவர்-கள் பதில் சொல்லட்டும்; மற்றவற்றை பிறகு பேசிக் கொள்ளலாம்.

- விடுதலை 11.12.2009 மயிலாடன்

Thursday, December 10, 2009

அம்பேத்கரையே கரு-வேப்பிலையாகப் பயன்-படுத்தி தூக்கியெறிந்து விடவில்லையா?


அலிகார் பல்கலைக்-கழகத்தில் ராகுல்காந்தி எம்.பி. தெரிவித்த கருத்தி-னைக் குறித்து சமாஜ்-வாடி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அமர்சிங் குறிப்பிட்டுள்ளார்.


‘‘தகுதியும், திறமையும் இருந்தால் முசுலிம்களில் ஒருவர் இந்தியாவில் பிரத-மர் ஆகலாம்; அதை யாராலும் தடுக்க முடி-யாது’’ என்று ராகுல்காந்தி பேசிய பேச்சை சுற்றிதான் அவர் பேசினார்.

“அப்படியானால், காங்கிரஸ் கட்சியில் இது-வரை தகுதியான முஸ்-லிம்களே கிடையாதா? காங்கிரசில் பக்ருதீன் அலி உள்ளிட்ட பல தலைவர்கள் ஜனாதிபதி பதவிக்கு மட்டும்தான் லாயக்கா? பிரதமர் பத-விக்கு மட்டும் அவரைப் போன்ற தலைவர்களிடம் தகுதியில்லாமல் போய்-விட்டதா?’’ என்ற வினா-வைத் தொடுத்தார் அமர்-சிங்.

பேசிய இடம் தெரு-முனையல்ல; மாநிலங்க-ளவையில். இதற்குச் சரி-யான விடை பொறுப்பான காங்கிரஸ் தலைவர்களிட-மிருந்து வரவில்லை.

இப்பொழுதெல்லாம் ‘தகுதி’ ‘திறமை’ பற்றிப் பேசுவதெல்லாம் ஒரு நாகரிகமாகவே போய்-விட்டது.

இந்தியாவில் பிரதமர்-கள் எல்லாம் எந்த அடிப்-படையில் வந்தார்கள் என்-பது எளிய பாமர மனி-தருக்கும் தெரிந்த உண்மை-தான். அப்படி வந்த பிரத-மர்கள் எந்தத் தகுதியின் அடிப்படையில் வந்தார்-கள் என்பதும் அனை-வருக்குமே தெரியும்.

பேசிய இடம் முசுலிம்-களின் அலிகார் பல்-கலைக்கழகம் என்பதால், திருவாளர் ராகுல் காந்தி அப்படியொரு ‘யுத்த அனு-சாரத்தோடு’ பேசியி-ருக்கக்கூடும்.

முசுலிம்கள் ஒருபுறம் இருக்கட்டும்; இந்துக்-களில் மட்டும் என்ன வாழ்-கிறது? தாழ்த்தப்பட்ட ஒருவர் பிரதமராக அவ்-வளவு சுலபத்தில் வந்து-விட முடியுமா?

பாபு ஜெகஜீவன் ராமைவிட தியாகத்திலும், அரசியல் அனுபவத்திலும், நிருவாகத்திலும் திறமை-யுள்ள ஒருவரைக் காண முடியுமா?அவரே மனம் வெதும்-பிக் கூறினாரே, ‘தாழ்த்-தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியா-வில் பிரதமராக வருவ-தற்கு இன்னும் நூறு ஆண்-டுகள் தேவைப்-படும்!’ என்று சொன்னாரே, அந்த மூத்த தலைவரின் கருத்தையும் இந்த இளை-ஞர் ராகுலின் தகவலை-யும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

அறிவுலக மேதை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி அண்-ணல் அம்பேத்கரையே கரு-வேப்பிலையாகப் பயன்-படுத்தி, அதற்குப் பின்னர் தூக்கியெறிந்து விடவில்லையா?

வார்த்தைகளைக் கொட்டுவதற்குமுன் வள-மான சிந்தனை தேவை! பொதுவாக ராகுல் காந்தி ‘தகுதி’, ‘திறமை’பற்றி அதி-கம் பேசுகிறார் _ உண்மை-யான ‘தகுதி’ ‘திறமை’ என்பது வேறாகவே இருக்கிறது.

- விடுதலை (10.12.2009) மயிலாடன்

Wednesday, December 09, 2009

பானைக்குள்ளே யானை ஒளிந்துள்ளது என்று கூறினால் சிரிக்கமாட்டீர்களா?


கடவுள் பக்தர்களே, நீங்கள் கடவுள் மறுப்பாளர்களான சுயமரியாதை, நாத்திக, பகுத்தறிவாளர்களை வெறுக்-கிறீர்களே நியாயந்தானா?


எதையும் காரண காரியத்துடன் சிந்தித்து நம்ப வேண்டியவைகளை நம்புவதும், நம்ப வேண்டாதவைகளை_ மூடநம்பிக்கைகள் என்று மூளையில் சேர்ந்துள்ள குப்பைகளை அங்கேயே வைத்துக் கொண்டு அவதியுறாதீர்கள்; அறிவு விடுதலை பெற்று, முழு சுதந்திர அறிவுள்ள, தன்னம்பிக்கையாளர்களாக வாழுங்கள் என்று அவர்கள் கூறுவது தவறா? குற்றமா?

1. பானைக்குள்ளே யானை ஒளிந்துள்ளது என்று கூறினால் சிரிக்கமாட்டீர்களா?

இருப்பது உண்மை; அஞ்ஞானிகள் கண்ணுக்கு அது தெரியாது, கண்ணால் பார்க்க முடியாது, உடம்பால் உணர முடியாது, உள்ளத்தாலும் அறிய முடி-யாது -‘மனோ’, வாக்கு, காயங்களுக்கு அப்பாற்பட்டவன் என்று சொல்லி நம்ப வைப்பதும், பானைக்குள் யானை இருக்-கிறது என்று கூறுவதும் ஒன்றுதானே? பானைக்குள் பூனை இருக்கிறது என்றால் நம்பலாம்; ஆனால் யானை இருக்கிறது என்றால் அது இல்லாத ஒன்றுதானே?

2. காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் சந்-நிதியில் பூஜை செய்த ஒரு காமாந்-தகாரனின் காமலீலைகள் அதுவும் கரு-வறையில் ஒரு நாள் அல்ல, பல நாள்; ஒரு பெண்ணோடு மட்டுமல்ல, பல பெண்களுடன் சல்லாபித்து, உல்லாச-மாக இருந்ததோடு, அவற்றை செல்-போன் கேமிராமூலம் படம் பிடித்தும் உள்ள அந்த அர்ச்சகப் பார்ப்பானின் செயல்கண்டு, ஆத்திரப்படும் பக்தை-களே, பக்தர்களே, உங்கள் கோபம் அந்த காமாந்தகாரன்மீது பாய்வதற்கு-முன் இதுபற்றிக் கவலையே இல்லாத சாமியும் சாட்சியாக மாறிவிட்டதன்-மூலம் என்ன புரிய வேண்டும் உங்-களுக்கு? கோயில் உள்ளே, கருவறை உள்ளே இருப்பது எல்லாம்வல்ல கடவுள் அல்ல; அது ‘வெறும் கல்’தான் என்று புரிந்து கொண்டிருக்க வேண்டுமே!

அர்ச்சகப் பார்ப்பனன் மீது பாய்-வதை (விளக்குமாறு, பழஞ்செருப்பு) -விட அங்குள்ள கடவுள் மீது அல்-லவா பாய வேண்டும்_ ‘‘கடவுள் இல்லை; இல்லவே இல்லை’’ என்று கூறிடும் எங்களுடன் அல்லவா வந்து சேரவேண்டும்?

3. அதே காஞ்சிபுரத்தில், காஞ்சி மடத்தின் முன்னாள் மேலாளர் சங்கர-ராமன் ரத்தம் வழிய வழியப் படு-கொலை செய்யப்பட்டாரே, அதனைத் தூண்டியவர்கள் என்று குற்றம்சாற்றி காஞ்சி மடத்தின் தலைவர்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் என்பவர்-கள் மீது கொலை வழக்கு நடைபெறு-கிறதே, அதை காஞ்சி வரதராஜபெரு-மாள் வேடிக்கைதானே பார்த்தார்? தடுத்-தாரா? அல்லது கொலையாளிகளின் கொடூர செயலைக் கண்டு அவர்களை ‘கண்ணவித்து’ விட்டாரா? எதுவும் இல்லையே! ஏன்? அது ‘வெறும் கல்’ என்பதுதானே!

4. திருட்டு நடந்துவிட்டாலே, அலட்சியமாக இருந்த காவலாளியை நீக்குகிறீர்களே, அதுபோல வேடிக்கை பார்த்த சாமிகளை மீண்டும் வழிபட அந்தக் கோயிலுக்குச் செல்லலாமா? யோசியுங்கள்.

‘கோயில்கள் விபச்சார விடுதிகள்’ என்றார் ‘தேசபிதா’ அண்ணல் காந்தி-யார். அதற்கு காஞ்சிபுரம் சம்பவம்போல் வேறு பொருத்தமானது உண்டா?

இதுபோலவே அய்யப்பன் கோயில் அர்ச்சகர்கள் கதையும். அதைப் பற்-றியே கவலைப்படாமல், மீண்டும் ‘‘கன்னி சாமிகளாக’’, ‘‘குருசாமிகளாக’’, ‘‘பெரிய சாமிகளாக’’ அங்கு சென்று பொருளையும், அறிவையும் (ஏன் சிலர் உயிரையும் பறிகொடுக்கின்றனர்) இழந்து திரும்புகிறீர்களே_- அதைவிட வேறு கொடுமை பரிதாபத்திற்குரிய அசிங்கம் வேறு உண்டா?

5. எல்லாக் கோயில்களின் நுழைவு வாயில்களில் ‘‘மெட்டல் டிடெக்டர்கள்’’ வைத்து, பரிசோதித்த பின்பே, பக்தர்களாகிய உங்களை கோயிலுக்குள் காவல்துறையின் கண்காணிப்புக்கு உட்-படுத்தப்பட்டு அனுப்புகிறார்களே, அதிலிருந்து தெரிய வேண்டிய ஓர் உண்மை_ மனிதனை கடவுள் பாது-காக்கவில்லை; கடவுளை, கடவுளச்சி-களை மனிதர்கள்தான், அதுவும் 47 துப்பாக்கி முனையில், தீவிரவாதிகளிட-மிருந்து கடவுளையும் காவல்துறை-தானே பாதுகாக்கிறது என்பதுதானே!

6. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் இனிமேல் தேங்காய் உடைக்க அனுமதி இல்லை. ஏனெனில், தேங்காய்களுக்குள் ‘குண்டு’ வைத்திருக்க சாத்தியக் கூறு உண்டு என்று கூறுகிறார்களே; அப்படியானால் கடவுளுக்கு ‘‘சர்வசக்தி’’ என்பது இல்லாத ஒன்று என்பதுதானே! தனக்கு வரும் தோங்காய்க்குள் மறைந்திருக்கும் ‘‘குண்டினைக்’’ கண்டுபிடிக்க கடவுளால், கடவுளச்சிகளால் முடியாதா? முடியாது என்றால் அந்தக் கடவுளை நம்பி, கைப்பொருளை இழப்பதனால் யாருக்-கென்ன லாபம் என்று யோசித்தீர்களா?

7. திருப்பதி கோயில் அருகில், ‘‘திருமலை மேல் செல்போன் அனுமதி இல்லை’’ என்பது தீவிரவாத பயத்-தால்தானே? அங்கிருப்பது ‘‘நட்டகல்’’ என்று கூறினாரே திருமூலர்? அது சரிதானே?

பக்தி வந்தால் புத்தி போகும்;
புத்தி வந்தால் பக்தி போகும்

என்ற தந்தை பெரியார் அறிவுரை எவ்வளவு உண்மை என்பதை உணருங்கள்.

‘‘மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும்’’ என்பது போல் சிந்திக்காமல், வழக்கம் என்ற பெயரால் கோயிலுக்குச் செல்லலாமா?

8. கோயில்கள் ஆதியில் இல்லை; பாதியில் வந்தது; அது அரசனுக்கு வரு-வாய் தேட என்று கவுடில்யரின் (சாணக்-கியர்) அர்த்த சாஸ்திரம் கூறு-கிறது. திருக்குறளில் கோயில் இல்லை. தமிழர்களே, வள்ளுவத்தைப் பாராட்டி-விட்டு கோயிலுக்குச் செல்லலாமா?

- விடுதலை 09-12-2009 ஆசிரியர் கி.வீரமணியின் கட்டுரை

‘பிச்சைக்காரத்-தன-மும்’ ஒழிந்து போய்-விடுமே!


கடந்த மூன்று ஆண்டு-களில் வாராக்கடன் ரூ.25 ஆயிரம் கோடி என்று வங்-கிகள் அறிவித்துள்ளன. 2007இல் ரூ. 9400 கோடி, 2008இல் ரூ.9300 கோடி, 2009 இல் ரூ.11000 கோடி.


இப்படி கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காதவர்-கள் காந்தியார் கூற்றுப்படி ‘‘தரித்திர நாராயணர்கள்’’ அல்லர். மிகப் பெரிய பணக்காரர்கள், தொழில் அதி-பர்கள் என்ற நிலை-யில் உள்ளவர்கள்தாம்.

இதில் ஒரு கெட்டிக்-கா-ரத்-தனமும், சூழ்ச்சியும் குத்துக்கல்லாக நிற்கின்றன.

வாராக்கடன்களை வசூலிக்க முடியாத நிலை-யில், ஒரே நேரத்தில் தீர்வு (ONE TIME SETTLEMENT) என்ற ஒரே தவணையில் கடனை அளிக்க சலுகைத் திட்டம் அறிவிக்கப்படு-கிறது. இதில் குறிப்பிட்ட சதவிகிதக் கடன் பாக்கி தள்ளுபடியும் செய்யப்படு-கிறது.

பல பணத் திமிங்கிலங்-கள் இந்தச் சலுகை சந்-தர்ப்பம் வரை காத்திருந்து பகுதித் தொகைக்கு மேல் ‘‘சுவாகா’’ செய்யும் தந்திர-சாலிகளாக, சூழ்ச்சிக்காரர்-களாக, ஏமாற்றுக்காரர்-களாக இருக்கிறார்கள்.

இதில் ஒழுங்காக வட்-டி-யும் முதலுமாகக் கட்டிய நேர்மையானவர்கள் ஏமாளி-களாகி, ‘பைத்தியக்-காரர்களாகக்’ கருதப்படு-கிறார்கள் என்பது தானே உண்மை. இத்தகைய நாண-யமானவர்கள் மத்தி-யில்கூட மாற்று எண்-ணம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதே!

ஏழை எளிய மக்கள் கடன் வாங்கினால் அவர்-களை அச்சுறுத்தி எப்படி-யும் கடனை மீட்டு விடு-கின்றனர். கடனாளியால் செலுத்த இயலாவிட்டால் அவருக்காக பொறுப்புறுதி (SECURITY) கையொப்பம் போட்டவர்களிடமிருந்து வசூலித்து விடுவார்கள்.

ஆனால் பணத்திமிங்-கிலங்களோ, சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து ‘டிமிக்கி’ கொடுத்து விடுகின்றனர்.

இந்தியா ஏழைநாடு என்று சொல்லிக் கொள்-ளலாம்; உண்மையில் ஏழைநாடல்ல. இயற்கை வளங்களுக்கும் பஞ்ச-மில்லை.

திருப்பதிகோயிலில் நகை-களின் மதிப்பு மட்டும் 35,000 கோடி ரூபாய். இந்தியக் குடிமக்கள் சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ளவை மட்டும். ரூ.108 லட்சத்து 75 ஆயி-ரம் கோடியாகும். இந்தி-யாவில் அயல்நாட்டுக்-கடன் ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் கோடி என்று ஒரு பக்கத்தில் புள்ளி விவரம் காட்டுகிறது.

இந்தியாவில் உள்ள கருப்புப்பணம் ரூ.75 லட்-சம் கோடியாகும். இந்தக் கருப்புப்பணம், பதுக்கல்-பணம், வாராக்கடன் பணம் இவ்வளவையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தால் இந்தியா பெரும் பணக்கார நாடாகத்தான் கருதப்படும். இந்தியாவில் 77 சதவிகித மக்களின் நாள் வருமானம் ரூ.20 என்கிற ‘பிச்சைக்காரத்-தன-மும்’ ஒழிந்து போய்-விடுமே!



- விடுதலை மயிலாடன் (09.12.2009)

Tuesday, December 08, 2009

வீண் வம்பை விலைக்கு வாங்க-வேண்டாமே!

சென்னை கடற்கரை_ வேளச்சேரி, சென்னை கடற்கரை _ தாம்பரம் மற்-றும் அரக்கோணம் புற-நகர் பகுதிகளில் காலை, மாலை மிக முக்கிய நேரங்-களில் “மகளிர் மட்டும்’’ மின் தொடர்வண்டி (ரயில்) இயக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 12 முதல் மேற்-கொள்ளப்பட்ட இந்த சேவை பொதுமக்கள் மத்தியில் நல்ல அளவு வரவேற்பினைப் பெற்றுள்-ளது.


“மகளிர் மட்டும்’’ என்று நல்ல தமிழில் அனைத்துப் பெட்டிக-ளி-லும் பளிச்சென்று பொறிக்-கப்பட்டுள்ளது, மகிழ்ச்சி!

இப்பொழுது இதில் இன்னொரு இடைச்செரு-கல் “மாத்ரி பூமி’’ என்ற இந்தி வாசகம் அடங்கிய தகடு பொறிக்கப்பட உள்ள-தாம்.

தமிழ்நாட்டுக்குள் குறிப்-பிட்ட சில இடங்-களில் மட்டும் ஓடும் மின் தொடர்வண்டியில் (லிஷீநீணீறீ ஜிக்ஷீணீவீஸீs) இந்த இந்தி எழுத்து தேவைப்படுவ-தன் அவசியம் என்ன?

பொதுமக்கள் யாரே-னும் முறையிட்டார்களா? தமிழில் எழுதி இருப்ப-தால் எங்களுக்கு ஒன்-றுமே புரியவில்லை _ கண்-களைக் கட்டி காட்-டில் விட்டதுபோல இருக்-கிறது; இந்தியில் எழுதா-விட்டால் எங்கள் கதி என்-னாவது என்று மக்கள் மறியல் செய்தார்களா? நாளொன்றுக்கு இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டபெண்கள் ஆயி-ரக்கணக்கில் இவற்றில் பயணம் செய்கிறார்களா?

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லாத நிலை-யில், இந்த வீண் வேலை ஏன் இரயில்வே துறைக்கு?

சில ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்-சாலை-யில் எல்லைக் கற்களில் தேவையில்லா-மல் இந்தியைத் திணித்து, நன்கு வாங்கிக் கட்டிக்-கொண்டனர். ‘விடுதலை’ படத்துடன் செய்தி வெளி-யிட்டது, உடனடியாக அது அகற்றவும்பட்டது.

1990 ஜனவரி 25 ஆம் நாள் ஓர் அறிவிப்பு வெளி-வருகிறது. சென்னைத் தொலைக்-காட்சி-யில் இரவு 8.40 மணிக்கு இந்திச் செய்தி அறிக்கை இடம்பெறும் என்பதுதான் அந்த அறி-விப்பு. முதலமைச்சர் கலை-ஞர் அவர்களிடம் உடனே தொடர்பு-கொண்டு இதனைத் தெரி-வித்தார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி. எதையும் விரைந்து செய்-யும் திறன் வாய்ந்த முத-லமைச்சர் கலைஞர் அவர்-கள், அன்றைய மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் உபேந்திரா-வுடன் தொடர்புகொண்டு, அதனை முறியடித்தார்.

எதையும் முளையில் கிள்ளும் துடிப்பு என்பது திராவிடர் கழகத்திற்கு உண்டு.

இந்தக் காலகட்டத்தில் தமிழர்கள் எப்படி இருக்-கின்றனர் என்று மத்திய அரசு வாலை விட்டு (Feeler)ப் பார்ப்பதாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் ரயில்வே துறை செய்ய-வேண்டிய பணிகள் ஏரா-ளம் உள்ளன. வீண் வம்பை விலைக்கு வாங்க-வேண்டாமே!

-விடுதலை (08.12.09) மயிலாடன்

Monday, December 07, 2009

தினமலர் கூறும் பரபரப்பு...

சிதம்பரம் நடராஜன் கோயிலில் பூஜை செய்-யும் தீட்சிதர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டும் என்று இந்து அறநிலையத்-துறை சார்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு-உள்ளது.


2009 பிப்ரவரி 2 ஆம் தேதிமுதல் அதுவரை தீட்-சிதர்ப் பார்ப்பனர்களின் ஏக-போக ஆதிக்கத்தில் இருந்த இந்தக் கோயில் இந்து அறநிலையத்துறை-யின் கட்டுப்பாட்டுக்குக் கீழ்வந்துவிட்டது.

உண்டியல், பிரசாதக் கடை வருமானம் எல்-லாம் இனி இந்து அற-நிலையத் துறைக்குத்தான்.

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் தங்கள் பெயர்-களை இந்து அறநிலையத்-துறை செயல் அலுவலகத்-தில் பதிவு செய்துகொள்ள-வேண்டும் என்கிற அறி-விப்பு, தீட்சிதர்கள் மத்தி-யில் பரபரப்பை ஏற்படுத்தி-யுள்ளதாக ‘தினமலர்’ (7.12.2009) கூறுகிறது.

இதில் பரபரப்புக்கு என்ன வேலை என்று நினைக்-கலாம். இருக்கிறது, நிறையவே இருக்கிறது.இதற்கு எடுத்துக்காட்டு திருவரங்கம் ரெங்கநாதன் கோயில். இக்கோயிலில் அர்ச்சகர்களாகப் பணி-யாற்றுவதாகப் பட்டியலில் உள்ள பல பார்ப்பனர்கள் இந்தியாவிலேயே இல்லை; அமெரிக்காவில் இருக்கின்-றனர் _ இன்னும் சில பார்ப்பனர்கள் திருவெறும்-பூர் ‘பெல்’ நிறுவனத்தில் பணி-யாற்றிக் கொண்டிருக்-கின்றனர். கோயில் பக்கம் தலைவைத்துப் படுக்காத இந்த அர்ச்சகப் பார்ப்பனர்-களுக்கு மாத சம்பளம் மட்-டும் கறாராகக் கிடைத்து-விடும்.

குறிப்பிட்ட வயது-வரை தான் அர்ச்சகராகப் பணியாற்றவேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கின்றன. அதைப்-பற்றி-யெல்லாம் கவலைப்-படாமல், 80 வயதைத் தாண்-டியவர்கள்கூட சம்-பளப் பட்டியலில் உள்ள-னர்.

திருவரங்கம் கோயி-லில் உதவி ஆணையராக வந்த கவிதா என்ற அம்-மையார், இந்த முறைகேடு-களையெல்லாம் கண்டு-பிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து நட-வடிக்கை எடுத்தார் என்ப-தற்காக, கோயில் பார்ப்ப-னர்கள் அவருக்குக் கொடுத்த தொல்லைகள் கொஞ்சநஞ்சமல்ல!

கடவுளின் பக்கத்தில் இருந்துகொண்டு பூஜை செய்பவர்கள், கருவறை-யைக் காமக் களியாட்டத்-துக்குப் பயன்படுத்துவதும், சம்பளம் பெற வேண்டும் என்பதற்காகப் பொய்யான தகவல்களைக் கொடுப்-பதும், கோயில், பக்தி சமாச்-சாரங்களின் மோசடி-களை விளக்கப் போது-மானவையல்லவா!

- மயிலாடன்

Sunday, December 06, 2009

திராவிடர் கழகமும்-வி.பி. சிங்கும்...ஒருவரலாற்றுப்பார்வை


இந்தியச் சமுதாயம் - பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்-படுத்தப்-பட்ட சமுதாயம் என்றென்றும் நினைவில் நிலைத்திருக்குமாறு கொள்ள வேண்டிய மறக்கக் கூடாத மகத்தான பெயர்; - மன்னர் குடும்பத்தில் பிறந்து மக்க-ளோடு, மக்களாக உழவர்களோடு உழவராக வாழ்ந்து உயர்ந்து, சமூக நீதிக்காக - இந்தியத் திருநாட்டின் உயர் பதவியாம் தலைமை அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியேறிய மாவீரர் வி.பி.சிங்.

அந்த மாவீரர் மறைந்து ஓராண்டு உருண்டோடி விட்டது. அவருக்கு- அவருடைய மறைவிற்கு - மறைந்த 26.10.2008 இல் தலைவர் கலைஞர், தமிழர் தலைவர் வீரமணி ஆகியோர் வீரவணக்கம் செலுத்தினர். அன்று மட்டுமில்லை. அவர் மறைந்த அடுத்த ஆண்டாம் இந்த ஆண்டிலும் வீர வணக்கம்- இனி எதிர்வரும் ஆண்டுகளிலும் வீர வணக்கம் செலுத்துவேன்.

எப்போதெல்லாம் சமூக அநீதி துடைக்கப் பெற்று சமூக நீதி எழுகிறதோ அப்போதெல்லாம் வீர வணக்கம். சமீபத்தில் நடைபெற்ற மருத்துவக் கல்லூரிச் சேர்க்கை-யில், 425 பேரில் 50 பேர் மட்டும் உயர் ஜாதியினர் என்று கேள்விப்படுகையில் நம் பிற்படுத்தப்பட்ட பெற்ற சமூகம் ஏற்றம் பெற்று வருகிறது என்று கேள்விப்-படுகையில், தந்தை பெரியாரை நினைக்கிறோம், பேரறிஞர் அண்ணாவை நினைக்கிறோம், தலைவர் கலைஞரை நினைக்கிறோம், தமிழர் தலைவர் வீரமணி அவர்களை நினைக்கிறோம்.

நம் நெஞ்ச நினைவுகள் எனும் தேரின் உருளைகள் அத்தோடு நின்று விடுவதில்லை. வி.பி.சிங் எனும் மாமனி-தரை_ வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு வழங்கியவர்_- கல்வியிலும் அதைத் தொடர முடியாமல் - அப்பாவி மாணவர்களைத் தூண்டி விட்டு ஆரியம் தடைக் கற்கள் பாவியதை எண்ணு-கையில் வி.பி.சிங்கின் வீர உரைகளை எண்ணுகிறோம்.

கடந்த ஆண்டு வீர வணக்க நாளில் தமிழர் தலை-வர் குறிப்பிட்டதை இங்கே மீண்டும் நினைவலை அடித்துச் சென்றுவிடாமல் வி.பி. சிங்கின் இந்த வீரவணக்கத்தில் சுட்டிக் காட்டுவோம்.

ஆயிரம் முறை பிரதமர் பதவியை இழக்கத் தயார்

இந்தக் காலத்திலே ஒரு சாதாரண பஞ்சாயத்து போர்டு பதவியைக் கூடப் பிறர் இழக்கத் தயாராக இல்லை. ஆனால் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த பொழுது இட ஒதுக்கீட்டுக்காக மண்டல் பரிந்துரையை அமல்படுத்துவேன் என்று அறிவித்ததற்காக ஒரு கொள்கைக்காகத் தம்முடைய பதவியை இழந்தவர் அவர். அது மட்டுமல்ல; அவர் சொன்னார், இந்த மண்டல் கமிசனுக்காக, சமூக நீதித் தத்துவத்திற்காக நான் ஒரு முறை அல்ல, ஆயிரம் முறை பதவியை இழக்கத் தயார் என்று அன்றைக்கு மாபெரும் அறிவிப்பைச் செய்து பதவியைத் துறந்த ஒரு கொள்கை வீரர் அவர்.

ஒரு நல்ல பொருளை வாங்கவேண்டுமா? அதற்கு ஒரு நல்ல விலை கொடுக்க வேண்டும். நான் நல்ல பொருளை வாங்குதற்காக நல்ல விலை கொடுத்-திருக்கிறேன் என்று துணிச்சலுடன் சொன்னார்.

டாக்டர் வி.பி. சிங்கிற்குத் திராவிடர் கழகம் பிடித்தது, தி.மு.கழகம் பிடித்தது, தலைவர் கலைஞர் அவர்களைப் பிடித்தது, தமிழர் தலைவர் வீரமணி அவர்களைப் பிடித்-தது. ஆனால் பிடிக்காத ஒருவராக விளங்கியவர் யார் தெரியுமா? சாட்சாத் ஜெயலலிதா அம்மையார்.

ஏன் துரோகக் கும்பலுக்குத் தலைமை வகித்து - சந்திரசேகர் அவர்களுடன் சேர்ந்து வி.பி.சிங் அரசுக்கு எதிராக வாக்களித்தாரே, அந்தத் துரோகம் - வி.பி.சிங்கிற்கு எதிரான துரோகம் என்பதால், அல்ல, மண்டல் கமிஷனுக்கு எதிரான துரோகம் என்பதால், - நல்லாட்சி புரிந்து பெண்களுக்குப் பரம்பரைச் சொத்தில் உரிமை பெறச் சட்டம் இயற்றிய நம் கலைஞர் அரசைக் கலைக்-கத் துரோகத் துணை போனதால்,- அம்மையார் வேம்-பாகக் கசந்தது அவருக்கு என்று கேள்வியுறுகையில் நாம் அவருக்கு வீர வணக்கம் தவறாமல் செலுத்தத்தான் வேண்டும்.

திராவிடர் கழகம் வி.பி.சிங் ஆற்றிய அரும் பணி-களை அகிலம் அறிந்திடச் செய்ய திராவிடர் கழகத்தின் சார்பிலே அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதற்காக நம்முடைய முதல்வர், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களை அழைத்து, வி.பி.சிங் என்று அவர் தமிழிலேயே கையெழுத்திட்ட படத்தினைத் திறந்து வைத்திடச் செய்தார் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள்.

வி.பி.சிங்கிற்கு வீரவணக்கம் என்று தந்தை பெரியாரைப் பார்க்காமலே தந்தை
பெரியாரின் கொள்கையைத் தம் கொள்கையாக ஏற்ற காரணத்தினால்.மண்டல் கமிஷன் பற்றி நாடாளுமன்றத்திலே வி.பி.சிங் பேசும்போது இட ஒதுக்கீட்டிற்காகப் பாடுபட்ட சமூக நீதித் தலைவர்களான தந்தை பெரியார் அவர்-களையும், அண்ணல் அம்பேத்கர் அவர்களையும், ராம்-மனோகர் லோகியா ஆகியோர்களுடைய பெருமை-களையும், அவர்களுடைய தொண்டுகளையும் பாராட்டிப் பதிவு செய்தார்கள். அப்படிப்பட்ட பெரும் புரட்சியாளர் என்பதால் அவருக்கு வீரவணக்கம்.

1980 இல் காங்கிரசுத் தலைமை அமைச்சரான இந்திரா காந்தியிடத்திலே அறிக்கை அளிக்கப்பட்டது என்றாலும் மண்டல் குழு பரிந்துரைகளை நடை-முறைப்படுத்தும் பணியிலே இறங்காமல் அதை ஓர் ஆண்டு, ஈராண்டு அல்ல பத்து ஆண்டுகள் கிடப்பிலே போட்டு வைத்தார்கள். 1990 ஆம் ஆண்டு வாக்கில் வி.பி.சிங் அவர்கள் மண்டல் குழுவின்பரிந்துரைகளை வெளியிட்டு ஆணை பிறப்பித்து இதை நாடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியபோது எத்தனை கிளர்ச்சிகள் தூண்டுதலால் நடைபெற்றன, எத்தனை பேர் அறியாமையில் தீக்குளித்தார்கள்_- கலைஞர் அவர்கள் கூறியது போல், தீக்குளிக்க வைக்கப்பட்டார்கள். இந்த கிளர்ச்சிகளின் விளைவாகப் பதவியைத் துச்சமாகக் கருதி தூக்கி எறிந்துவிட்டு வெளியேற்றப்பட்ட வி.பி.-சிங்கிற்குச் சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்து அவரை வரவேற்று அன்றே வீரவணக்கம் செய்து-விட்டது தலைவர் கலைஞர் தலைமையில் அமைந்த திராவிடர் முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கம்.

தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னது போல் அவர் அதில் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே அது சாதாரணமானது அல்ல. அவர்கள் சென்னைக்கு விமானத்திலே வந்து இறங்கியபோதும் சரி, பிறகு தமிழ்நாடு முழுவதும் அவரோடு கழகத்தவர் இணைந்து தூத்துக்குடி வரையில், கன்னியாகுமரியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிகள் பாராட்டு நிகழ்ச்சிகள் தமிழகத்தின் மூலை முடுக்குகளிளெல்லாம் பட்டிதொட்டி பட்டணக்-கரையெல்லாம் நடத்தியபோது நெகிழ்ந்து போய்விட்டார்.

அதிகாலையில் மூன்று மணிக்குப் பொதுக் கூட்டம் _அதிலே பேசும்போது வி.பி.சிங் அவர்கள் சொன்-னார்கள். மண்டல் கமிஷன் ஆணை பிறப்பிக்கப்பட்டு அதனுடைய விளைவாக நான் பதவியை இழந்தபிறகு என்னோடு இருந்தவர்களை யெல்லாம் திரும்பிப் பார்க்கிறேன். யாரையும் காணவில்லை. ஆனால் என்னோடு இருந்தால் இப்படிப்பட்ட ஆபத்து வரும், ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் என்னோடு இருப்பவர் கருணாநிதி ஒருவர்தான்.

அவர் சொன்னது போல் ஆபத்து வந்தது. ஆனால் அதைப் பற்றிக் கவலை கொள்ளாது மண்டல் கமிஷன்ஆணையைக் கலைஞர் ஆதரித்தார், கலைஞர் அரசு ஆதரித்தது - எங்களுக்குக் கோட்டையோ, கொலு-மண்டபமோ அல்ல - கோலோச்சுவது அல்ல பெரிது. கொள்கைதான் பெரிது என்று அண்ணா வழியிலே அண்ணாவின் அன்புத் தம்பியாம் கலைஞர் அறிவித்தார்.

அண்ணா அவர்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் சொன்னார்கள் - அண்ணாதுரையின் ஆட்சிக்கு ஆபத்து என்று சொல்கிறார்கள். என்னுடைய அரசு நிறை-வேற்றியுள்ள சுயமரியதைத் திருமணம் செல்லும் எனும் சட்டம், தமிழகத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர், இந்தி ஆதிக்கத்தை நுழைய விடாது இருமொழிக் கொள்கை ஆகியவற்றை எந்தக் கொம்பனாலும் என்றும் மாற்ற முடியாது. அண்ணாதுரையின் ஆட்சி போனாலும் அண்ணாதுரை வாழ்வான். எவ்வளவு உறுதியான உயர்ந்த மொழிகள். இந்த மொழிகளின் சாயலைக் கலைஞரிடத்து மேலே கண்டோம். அதையேதான் வி.பி. சிங் அவர்களிடத்தும் கண்டோம்.

கவிஞன் வாக்குப் பொய்க்காது என்பார்கள். நம் தமிழினத் தலைவர் தமிழக முதல்வர் கவிஞர் ஆவார். அது போல் இந்தியத் தலைமை அமைச்சர் வி.பி.சிங்கும் கவிஞர்.அந்தக் கவிஞரை நம் கவிஞர் - முதல்வர், தம் கவிதை வரிகளால் அழகுற மாலை சூட்டி ஆராதிக்கிறார்.



தேடக்கிடைக்காத தெள்ளமுதாய்த்
தேமதுரக் கீத இசையாய்த்
தேன்பாகும் தினைமாவும் இணைந்ததொரு
தெவிட்டாத சுவை விருந்தாய்த்
திக்கற்ற மக்களுக்குத் திசை காட்டும் நிலவொளியாய்
வாய்த்திட்ட நற்பேறு
வாராது வந்த மாமணி வி.பி.சிங்
வகுப்புவாரி விகிதாச்சாரம் - பிற்படுத்தப்பட்டோர்
வாழ்வுக்கு ஒரு வரப்பிரசாதம்

என்று பாடிய கவிஞர் கலைஞர் கூற்று இவை:

ஆட்சி வரும் போகும்! நிலையன்று
அய்யா அண்ணா வகுத்த கொள்கை
போகாது வாழும்! நிலையாக! எனவே
ஆட்சியில் இருப்பினும் இல்லாதிருப்பினும்
தன்மானம் உயிரென மதிப்போம்!
தமிழர் இனமானம் என்றுமே காப்போம்!

வி.பி.சிங் அவர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்திலே பிறந்திருந்தாலும் கூட, அவர் தமிழ் நாட்டை, தமிழ் நாட்டு மக்களைத்தான் நேசித்தார். ஏன்?

வி.பி.சிங்கிற்கு - அவருடைய கொள்கைக்கு இங்கே பெரியாரின் இயக்கமும், பெரியாரின் இயக்க வழி ஆட்சி நடத்தும் கலைஞரும் ஆதரவு. ஏன் என்றால் அவர் இந்த நாட்டில் 80 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட மக்களைக் கைதூக்கி விட வந்த காவலர் என்பதை இந்தியத் திரு-நாட்டிலேயே தமிழ் நாட்டிலே வாழ்ந்த மக்கள்தான் உணர்ந்தனர்.

சிறுநீரகக் கோளாறினால் பத்து ஆண்டுகள் டயாலிசிசில் இருந்த அவருக்கு சிறுநீரகத்தைக் கொடை-யாக அளிக்க முன் வருபவர்கள் உள்ளனரா என்று தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்தபோது நான், நீ என்று போட்டி போட்டுத் திராவிடர் கழகத் தொண்டர்கள் முன் வந்த போது உள்ளபடியே நெகிழ்ந்து போன அவர் தமிழ் மக்களை நேசித்த அவர் மேலும் மேலும் தமிழர் அன்பைத் தம் இதயச் சிறையில் பூட்டிக் கொண்டார்.

கவிஞர் வி.பி.சிங்கின் கவிதை உள்ளத்திற்குக் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், கவிஞர் தலைமை அமைச்சர் வி.பி.சிங்கிற்குக் கவிதை-யால் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வரிகள் இவை:

பெரியாருக்குள்ள சிறப்பு - நேரில்
அறியாதவரையும் ஆட்கொள்வார்
காற்றுக்கு எல்லை ஏது?
பெரியார் கூற்றுக்குத்தான் தேசம் ஏது?
சரியானஎடுத்துக்காட்டு நீயன்றோ?
மன்னர் குடும்பத்தில் மலர்ந்தாய்
மண்குடிசை மக்களிடத்தே குடியிருந்தாய்
உன் சிறுநீரகம் பழுதடைந்து
கருஞ்சட்டைக் கண்மணிகள் ‘நான்’ ‘நீ’ என்று
தான் கொடுக்க முன் வந்தனரே
நீ நெகிழ்ந்து போனாய்; நினைத்தாலும்
நெக்குருகிப் போகின்றோமே
தன் குடும்பத்து இழப்பாகக்
கருஞ்சட்டையெல்லாம் கலங்குகின்றது
நாடே அழுகிறது எங்கள்
நாகம்மை இல்லமும் கதறுகிறது

கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் கவிதை வரிகள் காணும் நாடே அழுகிறது, எங்கள் நாகம்மை இல்லமும் கதறுகிறது என்பதில் ஒரு வரலாற்று உண்மை இருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களை நேசித்த வி.பி.சிங் சிறந்த கவிஞர், சிறந்த ஓவியர். அவர் எழுதிய கவிதை நூலினை - அப்படியே தமிழில் மொழி பெயர்த்து திருச்சி-யில், திராவிடர் கழகம் சார்பில் வெளியிட்டனர்.

அந்நூலின் பெயர்தான் ‘‘ஒரு துளி பூமி ஒரு துளி வானம்’’ அவர் கவிதையில் பகுத்தறிவுக் கருத்து-களும் மிளிர்கின்றன. அந்த நூலின் விற்பனையில் கிடைக்கும் தொகையை நாகம்மையார் சிறுவர் விடுதிக்கு வழங்கியவர் அவர்.

தம்முடைய நூலைச் சென்னைக்கு வந்து கலைஞர் அவர்களுடைய கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து அவரிடம் வழங்கினார்.வி.பி.சிங் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களிடம் காட்டிய பேரன்பும், பெருமரியாதையும், திராவிடர் கழகத்திடமும் அது நடத்தும் கல்வி நிலையங்கள் மீதும், தமிழர் தலைவர் வீரமணி அவர்களிடமும் காட்டிய வற்றாத மதிப்பும், பாசமும் என்றும் மறக்கமுடியாதவை. டில்லி பெரியார் மய்யம் இடிக்கப்பட்டதைக் கேட்டு மருத்-துவமனையில் இருந்த அவர் துடியாய்த் துடித்த-தோடு சென்னையில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில், தந்தை பெரியாரை நேரில் பார்த்திராத, அவருடைய கொள்கையால் மட்டுமே ஈர்க்கப்பட்ட அந்த மாபெரும் தலைவர் இவ்வாறு முழங்கினார். ‘‘நான் அன்று அங்கிருந்திருந்தால் புல்டோசரின் முன்னே நின்று என் உயிரையும் தந்து தடுத்திருப்பேன் என்று கூறியதோடு அமையாமல், இன்றைக்கு டெல்லியிலே முதன்மையான இடத்திலே அமைந்து வடபுலத்திலும் பெரியாரின் நிலைத்த பெருமை கூறும் பெரியார் மய்யம் உருவாக வி.பி.சிங் அப்போதைய தலைமை அமைச்சர் வாஜ்-பேயிடம் பேசிப் பெற்றுத் தந்ததை திராவிடர்கள் மறக்க-முடியுமா?

காலமெல்லாம் ஊழலை ஒழிக்கப் போராடியஅவர் காலமானதையும் ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை என்பதோடு, ஓராண்டு நிறைவு நாளைக் குறித்து ஒரு வரி கூடச் சொல்லாதது, நன்றி மறந்த சிலரின் செயல்கள் என்ற போதிலும், திராவிடர் கழகம் வி.பி.சிங்கிற்கு வீர வணக்கம் செலுத்தியது போற்றப்பெற வேண்டிய ஒன்று.

வி.பி.சிங் மண்டல் கமிஷன் சாதனையாளர் மட்டு-மல்லர். தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழினத் தலைவர் அவர்கள் தம் இரங்கலுரையில் குறிப்பிட்டது போல் வழங்கிய கொடைகள் வரலாற்றுச் சிறப்புடையவை.

கருநாடகத்தில் அவருடைய ஜனதாதளம் ஆட்சியில் இருந்த போதிலும், காவிரி நடுவர் மன்றம் அமைத்-ததையும் நன்றியோடு தமிழகம் நினைவு கூர வேண்டும்.

சென்னை மீனம்பாக்கத்திலுள்ள வெளிநாட்டு விமான தளத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரும், ஏழைப் பங்காளர் காமராஜர் பெயரும் சூட்ட வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். அதனை விழா மேடையிலேயே வி.பி.சிங் சிவப்பு நாடா முறையோ, சாக்குப் போக்கோ சொல்லாமல் அறிவித்தார் என்பது மறக்கக் கூடியதா?

1989 இல் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது முறையாகத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று 27.1.1989 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பதவிப் பிரமாண உறுதி மொழி எடுத்துக் கொண்ட மாபெரும் விழாவில் வி.பி.சிங் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அன்று மாலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரி-விக்கும் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் கலந்து வாழ்த்தினார்.

வி.பி.சிங் தலைமை அமைச்சராகப் பதவிப் பொறுப்பை ஏற்றதற்குப் பின்னர், தலைவர் கலைஞரின் அழைப்பின் பேரில் சென்னைக்கு 1990 பிப்ரவரித் திங்கள் வந்தபோது, தமது நிகழ்ச்சி நிரலையே மாற்றி தலைவர் கலைஞரின் இல்லத்திற்கு வந்து தலைவர் கலைஞரைப் பெருமைப்படுத்தினார்.

கொட்டும் மழையிலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் டில்லி சென்று வி.பி.சிங் உட-லுக்குக் கண்ணீர் மல்க மலர் வளையம் வைத்து அவ-ருடைய துணைவியார், மகன்களுக்கு ஆறுதல் கூறித் திரும்பி கழகம் தன் நன்றியறிதலை நன்கு பதிவு செய்தது.

வி.பி.சிங் அவர்களுக்கும், தலைவர் கலைஞர் அவர்களுக்கும் உள்ள தொடர்புகள், உறவுகள், நட்பின் ஆழம் ஆகியன உலகம் அறிந்ததே.

12.12.2008 இல் சென்னை பிட்டி தியாகராயர் கலை அரங்கில் வி.பி.சிங்கின் படத்தைத் திறந்து வைத்து தலைவர் கலைஞர் புகழுரை ஆற்றினார்.

இவ்விழாவிற்குத் தலைமை வகித்து உரையாற்றிய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தம் உரையை நிறைவு செய்தபோது, வி.பி.சிங் அவர்களுக்கு ஒரு நினை-வுச் சின்னம், என்றென்றும் தமிழ்நாட்டு மக்க-ளுடைய நெஞ்சிலே நிலைக்கக் கூடிய சின்னம் அமைத்-திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதற்குப் பதில் அளித்த தலைவர் கலைஞர், ‘‘தந்தை பெரியாரின் வழி நின்று உழைக்கின்ற ஓர் அருமைத் தொண்டர். அவருடைய மாணவர், என்னுடைய நண்பர் என்பதால் மட்டுமல்ல, தந்தை பெரியாருக்கு, அவருடைய கொள்கைகளை, எண்ணங்களை இன்றைக்கும் காப்பாற்றி வருகின்ற அவருடைய உண்மையான வழித்தோன்றல் என்கிற முறையில் இந்த ஆணையை எனக்குப் பிறப்பித்திருக்கின்றார்’’ என்று குறிப்பிட்டார்.

மேலும் தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டது:

 ‘‘இதை நான் இங்கேயே அறிவிப்பது, என்னைப் பொறுத்த வரையில் ஒரு விளம்பரமாகத்தான் ஆகும் என்பதால் அல்ல. நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடன் கலந்து பேசி, அந்த நினைவுச் சின்னம் எப்படி அமையவேண்டும், எங்கே அமைய வேண்டும், எத்தகைய நினைவுச் சின்னமாக அது இருத்தல் வேண்டும் என்பது பற்றி விரைவில் அறி-விப்பேன் என்பதை_- மன்னிக்கவும், விரைவில் அறிவிப்-போம் என்பதை இந்த நிகழ்ச்சியிலேயே நான் கூறிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.’’

கலைஞர் அரசின் கொள்கையே சொல்வதைச் செய்-வோம், செய்வதைச் சொல்வோம் என்பது மட்டுமல்லாது, சொல்லாத பயன்களையும் செய்பவர். அது போல் கலைஞர் அவர்கள் யாருக்கு எதை எப்படி வழங்க வேண்டும் என்பதை உணர்ந்து தெளிந்தவர் என்பதன் பயனாகத்தான் தமிழர் தலைவருக்கு முரசொலியிலிருந்து ‘தந்தை பெரியார் விருது’ வழங்கிச் சிறப்பித்தார்.

எனவே, தலைவர் கலைஞருக்கு யாரும் நினைவூட்ட வேண்டிய நிலையில் இல்லாத மாபெரும் தலைவர் அவர் என்பதை அறிவோம். கலைஞரின் மன உலையில் தயாராகிக் கொண்டிருக்கும் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கிற்குத் தக்க நினைவுச் சின்னம் நிச்சயம் காலம் காலமாக நினைத்துப் போற்றத்தக்கதாக அமையும்.

ஏன் என்றால், எவரையும் விட சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களை உணர்ந்து தெளிந்து உள்ள நினைகளைப் போற்றுபவர். அதனாலேதான், அவரிடம் ஒரு முறை உங்களுக்குப் பிடித்த தலைமை அமைச்சர் யார் என்று வினா தொடுக்கப்பட்ட போது,

இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் அமைதிப் புறா நேருவையோ, உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்று போற்றிய பெண் தலைமை அமைச்சர் இந்திராவையோ, ஜெய்கிசான் என்று முழங்கிய சாஸ்திரியையோ சுட்டிக் காட்டவில்லை. அப்பழுக்கில்லாத மனிதர் சமூக நீதிக் காவலர் என்ற சொற்றொடருக்குப் பொருத்தமானவர், ஜாதிமுறை திறமைக்கு எதிரானது. திறமை வெளிப்-படுவதற்கு உரிய இடத்தை அது சுருக்கி விடுகிறது. இந்த இடத்தை விரிவாக்கும்பொழுது நாடு முழு-மைக்கும் மறைந்துள்ள திறமை வெளிப்படுவதற்கான வாய்ப்பைத் திறந்து விட்டவர்கள் ஆகிறோம். மக்களில் 20 விழுக்காட்டினர் இந்தஅளவுக்கு சாதிக்க முடியும் என்றால் 100 விழுக்காட்டினர் பங்கேற்பதால் உருவாகும் வளர்ச்சியை எண்ணிப் பாருங்கள். இட ஒதுக்கீடு திறமைக்கு எதிரானது அல்ல. திறமையை வெளியில் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சிதான் அது (‘தி இந்து’, 15.7.2006) என்று பெரியார் வழியில் தகுதி, திறமைக்கு விளக்கம் அளித்திட்ட,

‘‘இந்த நாட்டிலே இருக்கக் கூடிய தாழ்த்தப்பட்ட மக்களை, சூத்திரன் என்று சொல்லப்படுகின்ற பிற்-படுத்தப்பட்ட மக்களை, வருணம் என்று சொல்லக் கூடிய சாத் என்கிற அமைப்பு அவர்களுடைய உள்ளங்-களிலே விலங்கை மாட்டி, அவர்களை வெறும் எந்திர மனிதர்களாக்கியது. அதனால்தான் தந்தை பெரியார், சுயமரியாதை என்ற ஆணியை, அந்த ஜாதி அமைப்பின் தலையைப் பார்த்து மிகச் சரியாக அடித்தார்கள்’’ என்று உரைத்திட்ட,

‘‘அரசியலிலேயே என்னுடைய தோழர் ராம் விலாஸ் பஸ்வானிடமிருந்து நான் உணர்ச்சியைப் பெறுகிறேன். அதே போல் சமுதாயப் பணியில் நண்பர் வீரமணி அவர்களே, உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியைப் பெறுகிறேன்’’

என்று உரைத்திட்ட, அரசியல் உலகில் பண்பட்ட, மும்பையில் நடந்த கலவரத்தைக் கண்டிக்கும் வகையில் உண்மையாகவே தண்ணீர் கூட அருந்தாமல், சிறுநீரகப் பாதிப்புக்கு ஆளான,

வாரம் இரு முறை ரத்த சுத்திகரிப்பு செய்து கொண்டு அதே நேரத்தில் பொதுத் தொண்டையும் தொய்வின்றி மேற்கொண்டு வந்த,

அன்னை மணியம்மையார் சிலையைத் திறந்து வைத்த,
நடிகவேள் ராதா மன்றத்தைத் திறந்திட்ட,டில்லி பெரியார் மய்யம் இடிக்கப்பட்ட போது எதிர்த்து இடி முழக்கம் செய்திட்ட,மாண்புமிகு வி.பி.சிங்தான் தனக்குப் பிடித்த தலைமை அமைச்சர் என்று ஏழரை கோடி மக்களின் இதய நாயகர் கலைஞர் எடுத்துரைத்தார்.

தாம் போற்றிய, தாம் மதித்துப் போற்றிய, தாம் என்றும் தன் உள்ளத்தின் அடித்தளத்தில் வைத்தி-ருக்கும் மாபெரும் மனிதர் வி.பி. சிங் அவர்களைக் குறித்துப் பெருமை பொங்கக் கூறுவதை எடுத்துக் கூறி, வி.பி.சிங் அவர்களுக்கு நாமும் நம் வீர வணக்கத்தைச் செலுத்துவோம்.

சமூக நீதிக் காவலர் என்ற இந்தச் சொற்றொடர் இந்தியாவிலே இன்றைக்கு ஒருவருக்குப் பொருந்தும் என்றால், அவர் வி.பி.சிங் அவர்கள்தான். நான் அதைச் செல்வதற்குக் காரணம், அவர் ஒரு சாதாரண மனிதராக இருந்து பதவிப் பொறுப்புகளிலே இல்லாதவராக இருந்து, தன்னுடைய தியாகத்தால், உழைப்-பால், ஆற்றலால், சமூக நீதிக்குப் பாடுபட்டிருப்பாரே யானால், அது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல; போற்றப்-படத்தக்க ஒன்றாக இருக்கலாம். ஆனால் இது ஆச்-சரியப்படத்தக்கதும், போற்றப்படத் தக்கதுமான இரண்டு காரணங்களுக்காக அவருக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.      - தலைவர் கலைஞர் உரை 12.12.2008

-விடுதலை(06.12.2009) தொகுப்பு முனைவர் ந.க.மங்களமுருகேசன்.

சிறைப்பறவை சிரித்துக் கொண்டே பெல்லாரி சிறைக்-குச் சென்றது


‘1938 டிசம்பர் 5,6 ஆகிய நாள்கள் தமிழ்நாட்-டின் வரலாற்றில் குறிப்பிடத்-தகுந்த நாள்கள்! ஆம். இந்-நாளில்தான் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்-புக்காக நீதிமன்-றத்தில் தோன்றி வழக்கு-களைச் சந்தித்தார்.


நவம்பர் 13-_இல் சென்-னையில் பெண்கள் மாநாடு கூட்டி “பெரியார்” என்ற பட்-டத்தை வழங்கி _ வரலாற்-றில் இடம் பெற்றனர் மாதர் குல மாணிக்கங்கள். இந்தி எதிர்ப்-புக்களத்தில் பெண்-களை மறியல் செய்யத் தூண்டினார் என்ற குற்றச்-சாற்றின் பேரில் தந்தை பெரியார்மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

1938டிசம்பர் 5,6 நாள்-களில் சென்னையில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு நடை-பெற்றது. சர். ஏ.டி. பன்னீர்-செல்வம், ராஜா சர். முத்தையா செட்டியார் போன்ற வர்கள் எதிர் வழக்காட வேண்டும் என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டும் தந்தை பெரியார் மறுத்து விட்டார். எழுத்து மூலம் நீதிபதியிடம் ஓர் அறிக்கை கொடுத்ததோடு தமது கடமையை முடித்துக் கொண்டார். அது வாக்கு மூலமா? தண்டனையைக் கொடுக்-கச் சொல்லித் தூண்-டக்கூடிய சொற்றொடர்களா? இதோ தந்தை பெரியார் பேசுகிறார்.

“”இந்தக் கோர்ட் காங்-கிரஸ் மந்திரிகள் நிர்வாகத்-திற்கு உட்பட்டது.

நீதிபதியாகிய தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்-தவர்கள்; இவை தவிர, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் மந்திரிகள், அதி தீவிர உணர்ச்சி கொண்டி-ருக்-கிறார்கள். அது விஷயத்-தில் நியாயம், அநியாயம் பார்க்க வேண்டியதில்லை-யென்-றும், கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து உப-யோகித்து ஒழித்தாக வேண்-டுமென்றும், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை திடீரென்று வந்து புகுந்த திருடர்களுக்கு ஒப்பிட்டு கனம் முதல் மந்திரியார் இந்தி எதிர்ப்பு விஷயமாய் மந்திரி-கள் எடுத்துக் கொள்ளும் நட-வடிக்கைகள் அடக்கு-முறையே என்பது எனது கருத்து. அடக்கு முறைக் காலத்தில் இம்மாதிரி கோர்ட்-டுகளில் நியாயத்தை எதிர்-பார்ப்பது பைத்தியக்காரத்-தனம்.

ஆகவே கோர்ட்டார் அவர்கள் தாங்கள் திருப்தி அடையும் வண்ணம் எவ்-வளவு அதிக தண்டனை கொடுக்க முடியுமோ, அவை-களையும், பழி வாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும், எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து, இவ்-வழக்கு விசாரணை நாட-கத்தை முடித்து வைக்கும்-படி வணக்கமாகக் கேட்டுக் கொள்-கிறேன். எவ்வளவு நியா-யமான லட்சியத்தை அடைய வேண்-டு-மானாலும் அதற்காகக் கஷ்ட நஷ்டங்-களடைதல் என்னும் விலை கொடுக்க வேண்டுமா-தலால் அவ்வளவு வேண்டிக் கொள்கிறேன்” என்றார். தந்தை பெரியார்.

நீதிமன்றத்தில் இப்படி-யெல்-லாம் கூறிய தலைவர் தந்தை பெரியாரன்றி வேறு ஒரு வரும் உண்டோ!

நீதிபதி தீர்ப்புக் கூறினார்:

செய்த குற்றங்கள் இரண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோராண்டு கடுங்காவல், ஒவ்வோராயிரம் ரூபாய் அபராதம், அபராதம் செலுத்-தாவிடில் மீண்டும் அவ்வாறு மாதம் தண்டனை; இரண்டு தண்டனைகளையும் தனித்-தனி காலத்தில் அடைய வேண்டும்.

சிறைப்பறவை சிரித்துக் கொண்டே பெல்லாரி சிறைக்-குச் சென்றது.

-விடுதலை  மயிலாடன் 06.12.09

Saturday, December 05, 2009

சமச்சீர் கல்வித் திட்டம்: இந்துத்துவா வெறியர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தவேண்டாம்!

சமச்சீர் கல்வித் திட்டத்தில் இடம்பெறும் புதிய பாடப் பகுதிகளை எதிர்த்து இந்துத்துவா சக்திகள் கூச்சலிடுவதைக் கண்டித்தும், புதிய பாடத் திட்டத்தில் புராணங்களுக்கு இடம் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்து-வதற்கான அவசர சட்டத்தை ஆளுநர் பிறப்பித்-துள்-ளார். சமச்சீர் கல்வி வரும் 2010 ஆம் கல்வியாண்டில் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் அறிமுகமாகிறது. 2011 இல் 2 ஆம் வகுப்பு மற்றும் 7 ஆம் வகுப்பிலும், 2012 இல் 10 ஆம் வகுப்புவரை சமச்சீர் கல்வி நடை-முறைக்கு வரும்.

மாநிலக் கல்வித் திட்டம், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக்-குலேஷன், ஓரியண்டல் ஆகிய நான்கு வகை யான கல்வி முறைகளை ஒருங்கிணைத்து மாநிலப் பொதுப் பள்ளிக் கல்வி வாரியம் தொடங்கப்படும் என்றும், அதேபோல ஒரே மாதிரியான பொதுப் பாடத் திட்டமும் கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுப் பாடத் திட்ட வரைவு இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

வீண் கூச்சல் போடும் கூட்டம்

முழுமையான அளவு எதையும் தெரிந்துகொள்-ளாமல் அரைவேக்காட்டுத் தனத்துடன் இந்து முன்னணி இராம. கோபாலன் வகையறாக்கள் கூச்சல் போட ஆரம்பித்துவிட்டனர்.

‘‘ஈ.வெ.ராவின் இந்து விரோதக் கொள்கையைத் தூக்கிப் பிடிக்க முதல்வர் முயல்கிறார், நாத்திகத்தை மாணவர்களிடம், திணிக்க சதி நடக்கிறது, இந்து மதத்-தைக் கேவலப்படுத்தும் பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

மறுமலர்ச்சிப் பாடங்கள், விழிப்புணர்வுப் பாடங்கள், மூட நம்பிக்கை எதிர்ப்பு இவையெல்லாம் இடம் பெற்றுள்ளன. இவை எல்லாம்தான் சமச்சீர் கல்வியா? எந்தத் தைரியத்தில் இப்படி ஒரு வரைவுத் திட்டத்தை வைத்தார்கள்? அரசின் பிடியில் கல்வித் துறை சிக்கி சின்னா பின்னமாகிறது’’ என்றெல்லாம் திருவாளர் இராம.கோபாலன் ஒப்பாரி வைத்துள்ளார்!

கல்வி என்பது பழைமையின் குப்பைத் தொட்டியா?

மிக நீண்ட காலமாக நம் நாட்டுக் கல்வி என்பதில் பழைமையின் குப்பைத் தொட்டியாக, அரைத்த மாவையே அரைத்த பத்தாம் பசலித்தனமான, முரண்-பாடுகள் நிறைந்த பாடத் திட்டங்கள்தான் இடம்பெற்றி-ருந்தன. இவையெல்லாம் பெரும்பாலும் பார்ப்பனிய சிந்தனையின் தாக்கமாகவே நெடியேறிக் கிடந்தன.

கால வளர்ச்சிக்கு ஏற்றதாகவோ, மாணவர்களின் ஆற்றலை வெளிக் கொணரும் தன்மை உடைய-தாகவோ இருந்ததில்லை. பெரும்பாலும் மனப்பாடம், நெட்டுரு என்பதுதான் கல்விக்கான தகுதியாகவும், திறமையாகவும் கருதவும்பட்டன.

இதில் ஒரு மாற்றம் வரும்போது ஆதிக்கக்காரர்-களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மையாகும்.

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கச் சொல்லுகிறது இந்திய அரசமைப்புச் சட்டம்; மந்திரங்களை அர்த்தம் புரியாமல் உருப்போட்டு ஒப்பித்த பரம்பரையல்லவா _ அதில் மாற்றம் என்றால் குமுறத்தான் செய்யும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்னும் பகுதியில் ‘51ஏ’ உள்பிரிவு ‘எச்’ என்ன கூறுகிறது?

மக்களிடையே விஞ்ஞான மனப்பான்மையைத் தூண்டிட வேண்டும், ஆய்வு மனப்பான்மை, மனிதாபி-மானம், சீர்திருத்த உணர்வுகள் ஊட்டப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளதே!

இது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், அதனைத் தொடக்கப் பள்ளியில் இருந்துதானே விதைத்து வளர்த்து மேலே கொண்டு வரவேண்டும், கல்வித் திட்டம் இந்தத் திசையில்தானே அமையவேண்டும்?

இதை விட்டுவிட்டு இன்னும் “பித்தா பிறைசூடி பெருமானே!’’ என்று செய்யுளை மனப்பாடம் செய்யச் சொன்னால், மாணவர்கள் மத்தியிலே எப்படி விஞ்ஞான மனப்பான்மை வளர முடியும்?

சந்திரயான் யுகத்தில் பித்தா பிறைசூடியா?

‘சந்திரயான்’ யுகத்திலே சிவபெருமானின் தலையில் சந்திரன் இருக்கிறான், பிறையைச் சூடிக் கொண்டி-ருக்கிறான் என்று சொல்லிக் கொடுக்கலாமா? மதச் சார்பற்ற அரசின் பாடத் திட்டத்தில் கடவுள் வாழ்த்துத் தேவையில்லைதான். அப்படியே வைத்தாலும் எந்த மதத்தைச் சார்ந்த வாழ்த்தை வைப்பது?

பள்ளிக்குச் செல்லுவது உண்மையையும், அறிவியலையும் கற்றுக் கொள்வதற்கா? மூடத்தனங்-களை மூளைக்குள் திணித்துக் கொள்வதற்கா? கல்வியில் மதம் கலக்கவே கூடாது; தேவையானால், தனியே படிக்கட்டும்!

பகுத்தறிவு என்றாலே ஒவ்வாமை என்று கருதும் கூட்டத்தின் கூக்குரலையெல்லாம் அரசு பொருட்படுத்தத் தேவையில்லை. எந்த ஒரு மாற்றத்தையும், வளர்ச்சியை-யும் விரும்பாத ஒரு கூட்டம் எப்பொழுதும் இருந்து-கொண்டுதானிருக்கும்.

பெரியாரைப்பற்றிச் சொல்லிக் கொடுக்காமல், சங்கராச்சாரியாரைப்பற்றியா சொல்லிக் கொடுக்க முடியும்? சமூகப் புரட்சி வரலாற்றில், சமூகநீதி வரலாற்றில் பெண்ணுரிமைப் பிரச்சினையில் தந்தை பெரியார் அவர்களைப்பற்றிச் சொல்லிக் கொடுக்காமல், ‘‘தீண்டாமை க்ஷேமகரமானது’’ என்று கூறும் சங்கராச்-சாரி-யார்களைப்பற்றியா பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க முடியும்?

தெரசாவைப்பற்றி பாடம் என்றால் உடனே ஒரு கூட்-டத்திற்கு நினைப்பெல்லாம், அவர் கிறிஸ்துவர் என்-பது-தான்; அவர் ஆற்றிய மனிதத் தொண்டறம்பற்றி-யெல்லாம் அவர்களின் கவனத்துக்கு வராது. அவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டபோதுகூட அது ஒரு கிறிஸ்துவ சதி என்று சொன்னவர்களிடம் வேறு எந்த விரிந்த பார்வையை எதிர்பார்க்க முடியும்?

பொதுவாக கல்வி வளர்ச்சி அடைவதில் பார்ப்-பனர்-களுக்கு எப்பொழுதுமே நல்ல எண்ணம் கிடையாது. சூத்-திர-னுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்-காதே என்பது தானே அவர்களின் மனுதர்மம்.

குலக்கல்வித் திட்டம்தான் வேண்டுமா?

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இரண்டு முறை ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளார். 1937_39 இல் ஒரு-முறையும், 1952_54 இல் இன்னொரு முறையும்; அந்த இரண்டு முறையும்கூட இருந்த பள்ளிக் கூடங்களை இழுத்து மூடியவர்தானே அவர்? 1937 இல் 2500 ஆரம்பப் பள்ளிகளையும், 1952 இல் 6000 ஆரம்பப் பள்ளிகளையும் இழுத்து மூடிய ‘மகானா’யிற்றே!

1952 இல் குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்து அப்பன் தொழிலை மகனும் படிக்கவேண்டும் என்று சட்டம் போட்டவராயிற்றே!

தந்தை பெரியார் தலைமையில் வெகுண்டெழுந்த தமிழினம் ஆச்சாரியாரைப் பதவியை விட்டு ஓடச் செய்யவில்லையா?

இன்னும் அந்த மிச்ச சொச்சங்கள் நாட்டில் இருக்-கின்றன என்பதற்கு அடையாளம்தான் சமச்சீர் கல்விக்கு எதிரான கூச்சல்கள். இதற்கெல்லாம் தமிழக அரசு செவி கொடுக்கவேண்டிய அவசியமில்லை. இன்னும் சொல்லப்போனால், இத்தகையவர்களின் எதிர்ப்புதான் இந்தக் கல்வித் திட்டம் மிகச் சரியாகவே இருக்கிறது என்பதற்கான அளவுகோல்கூட!

வேத கணிதம் கற்கச் சொன்னவர்கள்தானே?

சமச்சீர் கல்வித் திட்டத்தைக் குறை கூறும் இவர்கள் யார்? பல்கலைக் கழகங்களில் வேத கணிதத்தையும், போலி விஞ்ஞானமான சோதிடத்தையும், புரோகித மந்-திரங்களையும் பாடத் திட்டங்களில் வைத்தவர்கள்-தானே? இந்திய வரலாற்றுக் கழகத்தில் கே.எம். பணிக்கர், சுமித் சர்க்கார் போன்ற புகழ்பெற்ற வரலாற்று ஆசி-ரியர்களையெல்லாம் நீக்கிவிட்டு அந்த இடங்களில் எல்-லாம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களாகத் தட்டிப் பார்த்து நிய-மனம் செய்தவர்கள்தானே!

உத்தரப்பிரதேசத்தில் இவர்கள் வகுத்த பாடத் திட்டங்கள் எல்லாம் என்ன?

“பாபர் மசூதியை இடிக்கும் முயற்சிகள் நடந்தபோது முலாயம் சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர்? (‘அவுட் லுக்’, 10.5.1999).

இந்த யோக்கியர்கள்தான் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பாடத் திட்டங்களின் இந்து மத எதிர்ப்புக் கருத்துத் திணிக்கப்படுவதாகப் புலம்புகிறார்கள். ஒட்டகம் ஓணானைப் பார்த்துப் பாடம் படிப்பதா?

புராணங்கள் தேவையில்லை

நமது கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில்-கூட, திருவாசகம், தேவாரம், நாலாயிர திவ்விய பிரபந்தம், பெரிய புராணம் மற்றும் கம்ப இராமாயணம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். புரா-ணங்கள் வரலாறு அல்ல _ மூடக் குப்பைகள்! அதுவே நமக்கு உடன்பாடில்லாதவைதான்.

இந்தப் பழங்குப்பைகள் எல்லாம் தேவையில்லை என்பது நமது அழுத்தமான கருத்தாகும். இவை ஜாதி உணர்வையும், மதமாச்சரியங்களையும், மூட நம்பிக்கைகளையும் தூண்டக் கூடியவை _ கட்டிக் காக்கக் கூடியவை!

மகனைக் கொன்று கறி சமைத்து சிவனடியார்க்கு விருந்தளித்த இயற்பகை நாயனாரின் கதைகள் (பெரிய புராணம்) தேவைதானா? மூடத்தனமும், கொலைப் பாதகமும் கொண்டதல்லவா இது?

வெறுப்போடு சமணர் முண்டர் என்று தொடங்கும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பாடல் என்ன சொல்-லுகிறது? சமணர்களின் தலையை ஆங்கே அறுப்பதே தரு-மங்கண்டாய், அரங்கமா நகருள்ளானே என்பதெல்-லாம் தேவைதானா?

முதலையுண்ட பாலகனை மீட்டதெல்லாம் நம்பக்கூடியதுதானா?

தேவாரம் மட்டுமென்ன? அதிலும் சமண, பவுத்-தர்களின் அழகிய பெண்களைக் கற்பழிக்க அருள்-புரி-வாயாக என்று ஆண்டவனிடம் மனுப்போட-வில்லையா?

முதலையுண்ட பாலகனை உயிர்ப் பிழைக்க வைத்ததாகக் கூறுவதும், எலும்பாகி போன பெண்ணுக்கு உயிர் கொடுத்ததெல்லாம் நம்பத் தகுந்ததுதானா? அறிவுக்குப் பொருந்தக்கூடியவைதானா?

பகுத்தறிவுவாதிகளின் பார்வையில்...

நியாயமாக பகுத்தறிவுவாதிகள் எதிர்க்கவேண்டிய பகுதிகள் இருக்கின்றன என்பதுதான் உண்மை. மாறாக, ஒன்றிரண்டு முற்போக்கான புதிய பகுதிகள் இடம்பெறுகின்றன என்பதற்காக எதிர்ப்பது, மிரட்டுவது என்றால், அவற்றைச் சந்திக்க நாங்களும் தயார்தான்! அரசு தன் கடமையைச் செய்யட்டும்! இந்த உருட்டல், மிரட்டல் பேர்வழிகளைச் சந்திப்பதற்குப் பகுத்தறிவுப் பட்டாளம் தயாராகவே இருக்கிறது; ஏன், தமிழ் மக்களே இருக்கிறார்கள். கவலையில்லாமல் பயணம் தொடர்க! தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தை எக்காரணம் கொண்டும் பின்வாங்கக் கூடாது.

விடுதலை 05.12.2009

சாதி இழிவிற்குக் காரணம்......


பேசும் சக்தியோடும் கை, கால், கண், மூக்கு, வாய்களான பஞ்சேந்திரியங்களோடும் காணப்படும் மக்கள் யாவருமே மனிதர்கள்தான். இவர்களைக் கடவுள் என்றாலும், தேவர் என்றாலும், ராட்சதர் என்றாலும், மனிதர் என்றாலும், பேய் பிசாசு என்றாலும் மற்றும் வேறு எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும் இப்படிப்பட்ட எல்லோருமே மனிதர்கள்தான்; மனிதப் பிறவிதான்; மனிதச் சுபாவ கணம் உள்ளவர்கள் தான். இப்படிப்பட்ட இவர்களிடம் எந்தவித்ப பேதங்களும், உயர்வு தாழ்வுகளும் கிடையாது. கண்டிப்பாய்க் கிடையாது. இருக்கிற தென்றால் அது வேத, சாத்திர, புராண, இதிகாச கற்பனைப் புரட்டுகள் தான். இது வாய்மை, மெய்ம்மை, உண்மை, சத்தியம், தத்துவம் ஆகும். நம்புங்கள்!


சூத்திரன் நிலை

1. பிராமணன் கூலி கொடுத்தும் கூலி கொடுக்காமலும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம். (மனு; அதி.8. விதி 43)

2. பிராமணனால் கூலி கொடுக்கப்படாவிட்டாலும் வேலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டாலும் சூத்திரன் தான் வேலை செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து நீங்கியவனாக மாட்டான். (மனு ; அதி. 8. விதி 414)

3. சூத்திரன் பொருள்கள் எதுவாய் இருந்தாலும் அது பிராமணனுக்கே சொந்தமானதாகும். (மனு. அதி. 8. விதி 416)

4. சூத்திரனின் பொருள்கள் யாவற்றையும் பிராமணன் சிறிதும் தயக்கமின்றிப் பலாத்காரமாகக் கைப்பற்றிக் கொள்ளலாம். சூத்திரர்களுக்குத் தொண்டுதான் சொந்தமே ஒழிய பொருள்களுக்குக் கொஞ்சமும் அவன் உரிமைக்காரன் அல்ல (மனு அதி 8. விதி 417)

5. சூத்திரனைப் பிராமணனுக்கே தொண்டு செய்யும் படி அரசன் கட்டளையிட வேண்டும். (மனு. அதி 8 விதி 418)

பறையர்கள் என்ற பட்டம் மாறி. ஆதித் திராவிடர்கள் ஆகி இப்போது அரிசனங்கள் என்கின்ற பட்டம் வந்தது போல் வேறு ஏதாவது ஒரு பெயர் ஏற்படலாமே ஒழியக் குறையும் இழிவும் நீங்கிவிடாது. விபச்சாரிகளுக்கும், குச்சிக்காரிகளுக்கும், தேவதாசி, தேவ அடியாள் என்கின்ற பெயர்கள் இருப்பதால் அவர்களுக்குச் சமூகத்தில் இழிவு இல்லாமல் போய்விடவில்லை.

அரசனும் செல்வந்தனும் சாதி வித்தியாசத்தை ஆதரிக்க வேண்டியவர்களாகின்றார்கள். ஏனெனில், பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்றால் பணத்திலும் உயர்வு, தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று பணக்காரன் பயப்படுகிறான்.

சாதி இருப்பதனால் தான் நீ இந்து; உன் மதம் இந்து மதம்; உனது சாத்திரம் மனுதர்மம், உஉபநிடதம் என்று இருக்கிறது. இவைகளை யெல்லாம் ஏற்றுக் கொண்டுவிட்டுப் பிறகு நான் எப்படிச் சூத்திரன் என்றால் உலகத்தார் சிரிக்க மாட்டார்களா? சூத்திரன் என்பதை உள்ளபடியே நீ வெறுப்பதானால் இந்து மதத்தைவிட்டு வெளியேற வேண்டாமா?

இந்தச் சாதி இழிவிற்குக் காரணம் கடவுள்தான் என்று உங்களுக்குத் தோன்றினால் அந்தக் கடவுளுக்கு உடனே நோட்டீசு கொடுங்கள். “கடவுளே, நாங்கள்தான் உனக்கும், உன்னைக் குளிப்பாட்டிவரும் உனது அர்ச்சகனுக்கும் அன்றாடம் படி அளந்து வருகிறோம். பாடுபடாத உன்னையும், பாடுபடுகிற என்னையும் ஏமாற்றுகிற அவனை உயர் சாதியாக்கி விட்டாய். ஆகவே ஒன்று இனி மக்களில் உயர்வு தாழ்வு இல்லை என்றாவது கூறு; அல்லது நீ யல்ல அதற்குக் காரணம் என்றாவது ஒப்புக் கொண்டுவிடு. இந்த நோட்டீசு விண்ணப்பத்தை அறிந்து இரண்டு வாரத்திற்குள் நீ ஏதாவது ஒரு முடிவான பதில் தெரிவிக்காவிட்டால் உன் கோயிலை இடித்துவிடுவோம்” என்று எச்சரிக்கை செய்யுங்கள். கடவுள் என்று ஒன்று அந்தக் குழவிக் கல்லில் அடைந்திருக்குமானால் அது வாய் திறந்து பேசட்டும்! இன்றேல் அதை உதறித் தள்ளுங்கள்.

தங்களுக்குள் சாதி பேதம் இல்லை என்று வாயில் சொல்லுவார்கள். கபிலர் சொன்ன வாக்கும், சித்தர்கள் - ஞானிகள் சொன்ன வாக்குகளும் பேச்சளவில் மாத்திரம் போற்றப்படுகின்றன. ஆனால் காரியத்தில் சிறிதுகூட லட்சியம் செய்யப்படுவதில்லை. இந்நிலையில் எப்படிச் சாதி ஒழியும் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.

உண்மைச் சுய ஆட்சி வரவில்லை; இன்று வந்திருப்பது இடைக்கால வர்ணாசிரம ராச்சியந்தான். உண்மைச் சுய ஆட்சியில் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் இருக்க முடியாது; இருப்பதைச் சுய ஆட்சி என்று கூற முடியுமா?

நாம் பிறக்கும் போது இந்துச் சம்பிரதாயப்படிக் கீழ்ச் சாதியாய்ப் பிறந்தது என்னமோ உண்மைதான். அந்த இழிவுக்கு நாம் பொறுப்பாளியல்ல. அதை மாற்றிக் கொண்டு பிறக்கவும் நம்மிடம் யாதொரு சக்தியும் இருந்ததில்லை. ஆனால், நாம் சாகும்போது இழிவான சாதியாய் இல்லாமலும் நம் பின்சந்ததி இழிவான பிறப்பாய்க் கருத்ப்படாமலும் இருக்கும்படியாக நடந்துகொள்ளத் தக்க சக்தி நம்மிடம் இருக்கிறது. அதை நாம் செய்யாவிட்டால் நாம் இழிவை நீக்கிக் கொள்ள ஆசைப்பட்டவர்களாவோமா?

உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாத்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத்தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம்தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீதி இருந்தாலும் சாதி உண்மையாலேயே ஒழிந்ததாக ஆகாது.

- பெரியாரின் சொற்பொழிவு தொகுப்பு (நன்றி: தந்தைபெரியார் இணையம்)

Friday, December 04, 2009

விடுதலைப்புலிகளை முதலில் அடையாளம் காட்டியவர் ஆசிரியர்!


திராவிடர் கழகத் தலைவரின் 77 ஆம் பிறந்த நாளினையொட்டி சென்னை, மந்தைவெளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் தொல். திருமாவளவன் எம்.பி., சுப. வீரபாண்டியன் மற்றும் கவிஞர் கலி. பூங்குன்றன், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோருக்கு விழாக்குழுவினர் நினைவுப் பரிசினை வழங்கினர் (2.12.2009).
தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களை அவரின் 77ஆம் ஆண்டு பிறந்தநாளில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளும் வாய்ப்பு இன்று கிடைக்கா-விட்டாலும் இந்த எழுச்சி மிக்க பொதுக்கூட்டத்தின் மூலம் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் நாட்டில் பரவிட, வெற்றி பெற தமிழ்த் தேசிய உணர்வு நாட்டில் செழித்-தோங்க தந்தை பெரியார் போல நோய் நொடி-யின்றி நீடு வாழ்க வாழ்க என விடுதலைச் சிறுத்தை-கள் அமைப்பின் சார்பில் வாழ்த்துகின்றோம்.

பெரியார் திடல்தான் நான் வளர்ந்த இடம்

எந்த மேடையிலும் நெஞ்சுயர்த்தி நான் சொல்-வேன். எனக்கு சமூக, அரசியல் மேடை போட்-டுக் கொடுத்த இடம் பெரியார் திடல்தான். எத்தனை எத்தனை மாநாடுகள், எத்-தனை எத்தனைக் கருத்-தரங்குகள், போராட்டங்-கள், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் அறி-வார்ந்த உரைகள் _ இவை எல்லாம் என்னை வார்த்து வளர்த்து எடுத்தன. இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த இடத்திலும் சொல்வதில் பெருமைப்படுகிறேன்.

உலகில் எங்கு சென்றா-லும் நான் பெரியம்மாவின் பிள்ளை என்பது எப்படி உண்மையோ, அது போன்-றது தான் பொதுவாழ்வில் தன்மானக் கொள்கையில் நான் பெரியாரின் பிள்ளை ஆவேன்.

பெரியாரின் கொள்கை வாரிசு ஆசிரியர்

தந்தை பெரியாரின் கொள்கையால் அடை-காக்கப்பட்டு அவரின் கொள்கை வாரிசாக விளங்-குபவர் நம் ஆசிரியர்.

கொள்கை உறுதிப்-பாட்டுக்குச் சாட்சியாக விளங்குபவர் அவர். இடையில் எத்தனைக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், மானமிகு கலைஞர் அவர்களால் வாழ்த்தப்படுபவர், பாராட்-டப்படுபவர் வீர-மணி ஒருவர் தான்.

நான் வியந்து போகி-றேன் _ நமது தமிழர் தலை-வருக்கு வயது 77 என்-பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஒருநாள் கூட ஓய்வில்லாமல் தமிழ்-நாட்டைச்
சுற்றி சுற்றி வருகிறார். பெரியார் கருத்துகளைப் பரப்பி வருகிறார்.

நாட்டைச் சுற்றி வரு-வதிலும், உழைப்பதிலும் கூட தந்தை பெரியார் அவர்களுக்குச் சரியான வாரிசு இவர்.

எனக்கு ஊக்கம் அளித்த தலைவர்

எனக்கு இந்த 47 வய-திலேயே கசப்புணர்வும், சோர்வும் பல நேரங்களில் ஏற்படுவதுண்டு. குறிப்பாக இவ்வாண்டு மே 17ஆம் நாள் நான் அதிர்ந்தே போனேன். என்ன செய்-வது என்று திகைத்துப்-போனேன். ஈழத்தில் ஓர் இனம் அழிக்கப்பட்டு-விட்டது. பிரபாகரன் இல்லாமல் போய் விட்-டார் என்றெல்லாம் கொக்-கரித்தார்கள். என்னை அறியாமலேயே கூட தடுமாறினேன். சோர்ந்தி-ருந்த அந்த நேரத்தில் ஓர் இளைஞனைப் போல என்னைத் தட்டிக் கொடுத்து தடுமாற்றத்தி-லி-ருந்து என்னை மீட்டவர் ஆசிரியர் அவர்கள். சோர்ந்த போன என்னை தட்டிக்கொடுத்து, பொது வாழ்வில் போராட்டக் களத்தில் இவையெல்லாம் சகஜம் என்று ஆற்றுப்-படுத்தினார்.

விடுதலைப்புலிகள் விசயத்தில் எப்பொழுதும் உறுதியாக இருப்பவர் தமிழர் தலைவர். அவர் துடித்திருக்கின்றார், வேதனைப்பட்டிருக்கின்றார். நான் அறிவேன். என்றா-லும் ஒரு போதும் அவர் சோர்ந்து போய்விடு-வில்லை.

இன்றைக்கும் பிரபாக-ரனைப் பற்றியும், விடு-தலைப்புலிகள் பற்றியும் பலரும் உரிமை கொண்-டா-டலாம். யாரும் நினைத்துப் பார்க்காத கால கட்டத்திலே விடு-தலை புலிகளையும், அதன் நிகரற்ற தலைவர் மேதகு பிரபாகரனையும் நமக்-கெல்லாம், தமிழருக்கெல்-லாம் உறுதியாக அடை-யாளம் காட்டிய தலைவர் நமது ஆசிரியர் வீரமணி அவர்கள். நான் மாண-வனாக இருந்தபோதே அந்த உணர்வை என்னி-டம் விதைத்தவரும் ஆசி-ரியரே! (http://www.youtube.com/watch?v=fSHTC1ambno&feature=player_embedded#at=77)

எனது முக்கியமான நேரங்கள்

தேர்தல் நேரம்_பிரச்-சாரப் பணியில் என்னால் ஈடுபட முடியவில்லை. அந்த நேரத்தில்கூட ஆசிரியர் அவர்கள் எனக்கு தெம்பைக் கொடுத்தார். இந்த நேரத்தில் தேர்தலில் இறங்குவது என்று முடி-வாகிவிட்டது. இந்த நேரத்தில் வேறு சிந்தனை-களைக் கொண்டு பார்த்து குழப்பிக்கொள்ளக் கூடாது. தேர்தலும் ஒரு களம்தான் என்று ஆகி-விட்ட பிறகு அதில் தயக்-கம் கூடாது, வெற்றிக்காக உழைக்க வேண்டும், திட்ட-மிட வேண்டும் என்று என்னை வழிநடத்தினார். இவையெல்லாம் எனக்கு மிகவும் முக்கியமான நேரங்கள். ஒருமுறை முதலமைச்சர் கலைஞர் அவர்களை கோபால-புரத்தில் சந்தித்தேன். அப்பொழுது ஈழத்தில் மிகவும் நெருக்கடியான நேரம். பிரபாகரன் உயி-ருக்கு ஆபத்து நெருங்கு-கிறது. அவரைக் காப்-பாற்ற வேண்டும். ஏதா-வது செய்யுங்கள் என்று உணர்ச்சி வயப்பட்டு கேட்டுக்கொண்டேன். என் கண்கள் கலங்கின. முதலமைச்சரும் அந்த நிலைக்கு ஆளானார்.

சற்று சமாளித்துக்-கொண்டு கலைஞர் சொன்-னார், பிரபாகரன் மாவீரன். அவன் தோற்க மாட்டான். பிரபாகரன் உறுதியையும், வீரத்தையும் கண்டு ராஜீவ்காந்தியே வியந்து போனதை நான் அறிவேன் என்று கலை-ஞர் சொன்னார்.

கலைஞர் அவர்களும் சரி, நமது ஆசிரியர் ஆனாலும் சரி, எப்பொ-ழுதும் தைரியத்தை இழக்க மாட்டார்கள். அடிப்-படை சிந்தனை-யில் மாற்-றம் இல்லாத-வர்கள். அத-னால்தான் இடையிடையே சில நேரங்களில் உரசல்-கள் காணப்பட்டாலும், எப்-பொழுதும் நெருக்க-மாகவே அவர்கள் இருக்-கின்றார்கள் என்பதை புரிந்து கொண்டேன். நல்-லிணக்கத்தையும் பேணி வளர்ப்பது எப்படி என்-பதையும் அவர்கள் மூலம் தெரிந்து கொண்டிருக்-கிறேன்.

(சென்னை மந்தைவெளி தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் 2.12.2009)
நன்றி: விடுதலை 04.12.09

ஈழத் தமிழர் பிரச்சினை....‘‘அம்மா’’வுக்குப் பயந்து முடிவுகளை மாற்றியவர்கள் யார்?



நானும் பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் சென்னையில் பெரியார் திடலில் ஆசிரியர் அவர்களைச் சந்தித்தோம். ஈழத் தமிழர்களுக்காக ஒரு பொது-வான இயக்கத்தை உருவாக்கலாம் என்று முடிவெடுத்தோம்.


சனவரி 10ஆம் தேதி (2009) பெரியார் திடலில் அதற்கான ஒரு கூட்டத்தைக் கூட்டிட ஆசிரியர் அவர்களே அனைவருக்கும் கடிதம் எழுதினார்.

அங்கு நடந்தால் சிறப்பாக இருக்கும் என்பது தான் எங்களின் எண்ணமாகவும் இருந்தது. ஆனால் பெரியார் திடலில் வேண்டாம் என்று சில தலைவர்கள் நினைத்தார்கள். பெரியார் திடலில் கூட்டம் நடத்துவதில் என்ன சிக்கல்? எல்லோருக்கும் பொதுவான இடம் பெரியார் திடல்தானே என்று மருத்துவரிடம் நான் கேட்டேன்.

சிலர் அப்படி நினைக்கிறார்கள்_ சரி, எங்கு நடந்தால் என்ன? நமக்குக் காரியம்தான் முக்கியம் என்றார்.

பெரியார் திடலில் கூட்டம் என்று அறிவித்துவிட்டு அதனை ரத்து செய்வது சங்கடமான ஒன்று. ஆசி-ரியரைச் சந்தித்து சமாதானம் சொல்-லுவோம் வாருங்கள் என்று டாக்டர் அவர்களை அழைத்துக் கொண்டு பெரியார் திடலுக்குச் சென்றோம்.


தமிழர் தலைவரின் பெருந்தன்மை

ஆசிரியர் அவர்கள் மிகவும் பெருந்-தன்மையாகவே நடந்து கொண்டார். அதே நேரத்தில் சகோதரர் வைகோ-வுக்கோ, தோழர் தா.பாண்டியனுக்கோ, நண்பர் நெடுமாறனுக்கோ பெரியார் திடலுக்கு வருவதற்கு என்ன சங்கடம் _ தயக்கம்? அவர்கள் எல்லாம் இங்கு வருபவர்கள்தானே என்ற கேள்வி-யைக் கேட்டார். நியாயமான கேள்வி அது என்பதில் அய்யமில்லை.


பெரியார் திடலில் நடத்தக்கூடாது என்பதற்குக் காரணம், அங்கு நடந்-தால் அம்மா கோபித்துக் கொள்வார் என்பதுதானாம். தமிழர்கள் ஒன்றுபட முடியாத சிக்கல் எங்கே இருக்கிறது என்று இதன்மூலம் தெரிகிறது.


12ஆம் தேதி வேறு ஓரிடத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்துக்கு நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று டாக்டர் அவர்களும், நானும் ஆசிரி-யரிடம் மிகவும் வற்புறுத்தினோம். ஈழத் தமிழர் நலன் கருதி ஆசிரியர் அவர்களும் மிகவும் பெருந்தன்மை-யோடு கூட்டத்தில் பங்கேற்க ஒப்புதல் தந்தார். பிரச்சினைமீது அக்கறை என்பதால் அந்தப் பெருந்-தன்மையை தமிழர் தலைவரிடம் காணமுடிந்தது.

முதலமைச்சருடன் சந்திப்பு

இதற்கிடையே ஆசிரியர் அவர்கள் ஒரு கருத்தினை எங்களிடம் கூறினார். ஈழப் பிரச்சினை என்பது எப்படியாக இருந்தாலும் அரசு மூலம் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. நாம் வீதிகளில் என்னதான் கத்தினாலும், நாம் கோரிக்கை வைப்பதும் அரசிடத்தில்-தான். எனவே 12ஆம் தேதி கூட்-டத்துக்கு முன் முதலமைச்சரிடம் இதுகுறித்து பேசுவோம் என்றார் தமிழர் தலைவர். அது சரியாகத்தான் பட்டது. பா.ம.க. தலைவர் கோ.க.மணி முதல்வரைச் சந்திக்க நேரத்தையும் பெற்றார். அதன்படி 12 ஆம் தேதி காலை 9 மணிக்கு முதல-மைச்சர் அவர்களை சந்தித்தோம். நாற்பது நிமிடங்கள் பேசினோம். எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தாகி விட்டது. வேண்டுமானால் நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்றார் முதலமைச்சர்.

உங்கள் வயதுக்கு உண்ணாவிரதம் என்பதெல்லாம் தவறு. அதுவும் கொள்கைக்கு முரண்பாடானது என்று கூறினார் ஆசிரியர்.


அம்மா வருத்தப்படுவார்களாம்!


அதன்பின் ஒரு தகவல் வருகிறது. அன்று மாலை நடக்க இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்று அறிவித்தார்கள். என்ன காரணமாம்? மருத்துவர் ராமதாசு அவர்களைச் சந்தித்துக் கேட்டபோது அவர் கூறினார், முதலமைச்சரைச் சந்தித்து-விட்டு வந்தால் அம்மா வருத்தப்படு-வார்கள் என்கிறார்கள் என்று கூறினார்.




ஈழம் போய் இலங்கை வந்தது ஏன்?


சில நாள்கள் கழித்து தோழர் தா.பாண்டியன் அவர்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அது பொங்கு தமிழர் அறக்கட்டளை அலுவலகத்தில் நடக்க இருந்தது. எனக்கு அழைப்பு இல்லை. இருந்-தாலும் பிரச்சினையின் முக்கியத்-துவத்தைக் கருதி மருத்துவர் ராமதாசு அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டேன்.

சிறிது நேரம் கழித்துத் தொடர்பு கொள்வதாகக் கூறினார். பிறகு சரி, நீங்கள் கூட்டத்துக்கு வாருங்கள் என்றார். நானும் கூட்டத்துக்குச் சென்-றேன். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒன்று உருவாக்கப்-பட்டது. ஈழம் போய் இலங்கை வந்தது எப்படி என்று கேட்டதற்கு கம்யூனிஸ்ட்களுக்கு ஈழம் என்பதில் உடன்பாடில்லையாம்.

இத்தனை லட்சம் ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட்ட பிறகு கம்யூனிஸ்ட்-களின் நிலைப்பாடு சிங்களர்களின் ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழர்களுக்-கான உரிமை என்பதுதானாம்.

ஈழத் தமிழர் பிரச்சினையில், ஈழத் தமிழர்களுக்கும், விடுதலைப்புலி-களுக்கும் எதிர்நிலையில் இருந்து வரும் செல்வி ஜெயலலிதா அம்மா-வின் விருப்பம் _ கோபதாபம் இவற்-றைப் பொறுத்து முடிவு எடுக்கும் நிலையில் யார் யார் இருந்தார்கள் என்பதை தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் இருந்தாலும் ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்த வரையில் கலைஞர் அவர்-களுக்கு எதிரான அணியினரிடம் உறவு வைத்துக் கொண்டிருந்தேன்.

இந்தப் பிரச்சினைக்காக திமுக கூட்டணியிலிருந்து என்னை வெளி-யேற்றினாலும் சரி, அது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு வரை கூட எதிர் அணியில் தானிருந்தேன்.

இரண்டு சீட்டுக்காக திருமாவள-வன் காங்கிரசுக்கு அடிமையாகி விட்டான் என்றெல்லாம் அவதூறு செய்தனர். எங்களைப் பொறுத்தவரை திமுகவோடு தான் கூட்டு என்பதில் தெளிவாகவேயிருந்தோம்.

கொள்கை ரீதியான கூட்டு

முதலமைச்சர் கலைஞரிடம் செய்-தியாளர்கள் கேட்டனர், விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இருக்கிறார்களா என்று கேட்டனர். விடுதலைச் சிறுத்தைகளுடன் திமு-வுக்கும் உள்ள உறவு வெறும் தேர்தல் கூட்டணி உறவல்ல _ கொள்கை உறவு _ பெரியாரியல் சிந்தனை என்ற அடிப்படையிலும், ஜாதி ஒழிப்புக் கொள்கை அடிப்படையிலும் உள்ள கொள்கை உணர்வு என முதல-மைச்சர் பதிலளித்தார்.

இது விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைக்குக் கிடைத்த அங்கீகார-மாகும். தேர்தல் கூட்டணியைக் கொள்-கைக் கூட்டணி என்று அறிவித்தது விடுதலைச் சிறுத்தை-களுக்கு மட்டுமே என்பது பெருமைக்-குரிய ஒன்றாகும்.

ஈழத் தமிழர் பிரச்சினை போன்ற-வற்றில் திராவிடர் கழகத்தையோ, தமிழர் தலைவர் வீரமணி அவர்-களையோ முன்னிலைப்படுத்தாமல் வேறு யாரை முன்னிலைப்படுத்த முடியும்?

கலைஞர் அவர்களுடன் திராவிடர் கழகத்துக்கு நெருக்கமான உறவு இருந்தாலும், காங்கிரசைக் கண்டிப்-பதிலோ, எதிர்ப்பதிலோ, போராட்-டம் நடத்துவதிலோ தமிழர் தலைவர் பின்வாங்குவதில்லையே!

பொதுப் பிரச்சினையிலும், தமி-ழர்கள் மத்தியிலே ஏற்பட வேண்டிய நல்லிணக்கம் என்பதிலும் தமிழர் தலைவர் மேற்கொள்ளும் அணுகு-முறை என்பது மிகவும் சிறப்பான-தாகும்.

- சென்னை மந்தவெளி பொதுக் கூட்டத்தில் தொல்.திருமாவளவன், 2.12.2009

Thursday, December 03, 2009

சமூகநீதிக்குச் சாவுமணியா?



முனைவர் பட்டப் படிப்பில் (பிஎச்.டி.) அண்ணா பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு கிடையாது என்று ஓர் அறிவிப்பினைக் கொடுத்-துள்ளார் அப்பல்கலைக் கழகத் துணை-வேந்தர் மன்னர் ஜவஹர். அதே நாளில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டப் படிப்புச் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் துணைவேந்தர் முனைவர் திருவாசகம்.


பல்கலைக்கழக மானியக் குழு இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்று கூறியிருக்-கிறது என்றாலும், அண்ணா பல்கலைக்-கழகத்தில் அதனைப் பின்பற்றப் போவதில்லை என்றும் அப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் கூறியுள்ளது, அதிர்ச்சி தரக்கூடியதாகும்.

அதுவும் அண்ணாவின் பெயரால் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில், சமூகநீதிக்குச் சாவுமணியா? என்ற கேள்வி இப்பொழுது எழுந்திருக்கிறது.


எல்லாப் பிரிவுகளிலும் இட ஒதுக்கீடு உண்டு; முனைவர் பட்டத்திற்கு மட்டும் கிடை-யாது என்று சொல்லுவது எந்த அடிப்படை-யில்? அந்தப் பகுதி மட்டும் நெய்யில் பொரிக்கப்பட்டுள்ளதா?

மத்திய அரசுக்கு உட்பட்ட கல்வி நிறு-வனங்களில்கூட (அய்.அய்.டி., அய்.அய்.எம்., எய்ம்ஸ் போன்றவற்றில்) இட ஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது; மத்திய அரசு புதிய சட்டமே இயற்றியிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட-வர்களுக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு ஆண்-டுக்கு 9 விழுக்காடு வீதம் மூன்று ஆண்டு-களில் நிறைவேற்றப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அத்தகையதோர் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் கொள்கை இட ஒதுக்கீட்டுப் பிரச்-சினையில் என்பதை நன்கு தெரிந்தவர்தான் அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர். இருந்தும் இப்படி ஓர் அறிவிப்பு என்பது கண்-டிக்கத்தக்கதாகும்.

முனைவர் பட்டம் பெற தாழ்த்தப்-பட்ட-வர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் தகுதியற்றவர்கள் என்று முடிவுக்கு வந்துவிட்டாரா, அப்-பல்கலைக்கழகத் துணைவேந்தர்?

இட ஒதுக்கீட்டில் தகுதி, திறமை போய்-விடும் என்று ஒரு கூட்டம் ஒரு பக்கத்தில் கூக்குரல் போட்டுக் கொண்டிருக்கிறது. அந்தக் குரலையெல்லாம் புறக்கணித்துவிட்டு, இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதால் என்ன தகுதி, திறமை போய்விட்டது?

இன்றைக்குப் பிரபல மருத்துவர்களாக, பொறியாளர்களாக, நிருவாகிகளாக, விஞ்-ஞானிகளாகப் பலரும் இட ஒதுக்கீடு பெற்ற-வர்கள் மத்தியிலிருந்து முகிழ்த்துக் கிளம்ப-வில்லையா? வாய்ப்புக் கொடுக்காமலேயே கதவடைத்து-விட்டு, தகுதி, திறமைபற்றி மதிப்பிடலாமா? ஓர் ஆராய்ச்சி நிறுவனம் ஏன் இத்தகைய ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை?

கரண்ட் சயின்ஸ் என்னும் இதழில் கீழ்க்-கண்ட புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.

சிறந்த அறிவியலாளர் விருது வழங்கப்-பட்டதில் மேற்கு வங்காளத்தில் உள்ள 32 பேர்-களில் 26 பேர் கல்கத்தா நகரத்தைச் சேர்ந்த-வர்கள் என்றும், தமிழகத்தில் உள்ள 41 பேர்களில் 10 பேர்கள் மட்டுமே சென்-னையைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்-பிடப்பட்டுள்ளது. புறநகர்ப் பகுதிகளில் மேற்கு வங்கத்தில் 19 விழுக்காட்டினரும், தமிழ்நாட்-டில் 75 விழுக்காட்டினரும் விருது பெற்றுள்-ள-னர் என்ற தகவலையும் அந்த இதழ் தெரி-வித்துள்ளது.

இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள தமிழ்-நாட்டின் நிலையையும், இட ஒதுக்கீடு அளிக்-கப்படாத மேற்கு வங்க நிலையையும் ஒப்-பிட்டுப் பார்த்தால் இட ஒதுக்கீட்டின் தாக்கமும், செல்வாக்கும் எத்தகையது என்பதை இதன்மூலம் எளிதிற் புரிந்துகொள்ளலாம்.

பல்கலைக்கழக மானியக் குழு அறி-வித்திருந்தும், அதனைப் பின்பற்றப் போவ-தில்லை என்று அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் அறிவித்திருப்பது முறை-யானது-தானா? இதுகுறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்கள் தலையிடுவார் என்று எதிர்பார்க்-கிறோம். சமூகநீதி, இட ஒதுக்கீடு பிரச்சினையில் அத்துபடியானவர் அவர் என்பதால், இந்தக் கோரிக்கையை
அவர் முன் வைக்கிறோம்.       --விடுதலை தலையங்கம் 3.12.2009

திருப்பதி ஏழுமலையான் என்னும் கல் முதலாளி.....

கையில் காசில்லாதவன் கடவுளேயானாலும் கதவை சாத்தடி என்ற ஒரு பாடல் வரி இந்த நேரத்தில் நினை-வுக்கு வந்து தொலைகிறது.

திருப்பதி ஏழுமலையான் என்னும் கல் முதலாளியை உடனடியாக தரிசிக்க வேண்டுமா? நீங்கள் கோடீஸ்வரராக இருக்க-வேண்டும். வெறும் கோடீசு-வரராக இருந்தும் பய-னில்லை. ஏழுமலையானுக்கு ரூ.100 கோடி நன்கொடை _ மன்னிக்கவேண்டும்; லஞ்சம் கொடுப்பவராக இருக்கவேண்டும்.
துண்டு துக்கடா _ கிச்சு கிச்சு மூட்டும் தகவல் இல்லை இது. திருப்பதி தேவஸ்தானம் அறிவித்-துள்ளது.
திருமலைக்குப் பக்தர்-கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாள் கணக்கில் காத்திருந்துதான் ஏழுமலையானைத் தரிசிக்க முடிகிறது. இதனால் முக்கிய பிரமுகர்களுக்கு மகாதுவார தரிசன ஏற்பாடுகளை திருப்-பதி தேவஸ்தானம் செய்-துள்ளது.
இந்த வசதிமூலம் முக்கிய பிரமுகர்கள் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் மகாதுவாரம் வழியாக மிக அருகில் இருந்து தரிசனம் செய்யலாம். திருப்பதி ஏழு-மலையானுக்கு ரூ.100 கோடி நன்கொடை வழங்க முன்-வருபவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை (குடும்ப உறுப்-பினர் நான்கு பேர்களையும் சேர்த்து) அனுமதிக்கப்-படு-வார்கள்.
இந்தத் தரிசனத்தின்-போது ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படுகிற பட்டு வஸ்திரம் குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கும், பத்மாவதி தாயாருக்கு அணிவிக்கப்பட்ட பட்டு-சேலை அந்தக் குடும்பத்-தைச் சேர்ந்த பெண்களுக்-கும் அன்பளிப்பாக வழங்-கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்-துள்ளது.
அரசன் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்குக் கோயில் கட்டவேண்டும் என்று அர்த்தசாஸ்திரம் எழுதிய கவுடில்யன் கூறி-யுள்ளான் _ அதனைக் கறா-ராக திருப்பதி தேவஸ்தானத்-தவர்கள் கடைபிடிக்கிறார்-கள் போலும்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், திருப்பதி தேவஸ்தானத்தில் இந்த ஏற்பாட்டை அர்ச்சகர்களும், பக்தர்களும் எதிர்க்கிறார்-களாம். இது ஆகம விதி-களுக்கு முரணானது என்று குரல் கொடுத்துள்ளனராம். ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தால் ஏழுமலையா-னைத் தொடுவதற்கு அனு-மதிப்பார்களோ என்றும் கேட்கிறார்களாம் _ பரவா-யில்லை, பக்தர்களுக்குக்கூட கொஞ்சம் பகுத்தறிவு வேலை செய்கிறது போலி-ருக்கிறது.

அறிஞர் அண்ணா அன்று எழுதினார்:

கள்ளக் கையொப்பக்-காரன் கரம் கூப்புகிறான். விபச்சாரி விசேஷ அபி-ஷேகம் செய்கிறாள். குடி-கெடுப்பவன் கும்பாபிஷேகம் செய்கிறான். கொள்ளை லாபம் அடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கி-றான். ஒழுக்கக் குறைவு உள்ளோர், அழுக்கு மனம் படைத்தோர், இழுக்கான வழி செய்பவர்கள் ஆல-யங்-களிலே நுழைய முடியாத தடை உண்டா? இல்லை. ஆனால், ஆதிதிராவிடர் மட்டும் ஆலயத்துக்கு வரக்-கூடாது என்று தடுக்கிறோம், நியாயமா? (நூல்: தீண்-டாமை, 1948).

இந்த நூறு கோடி ரூபாய் நன்கொடையாளர்கள் பட்டியலில் எத்தனைக் கள்ளமார்க்கெட்காரர்களோ!

இதற்கு மேலும் விளக்க-மும் தேவையோ!

- விடுதலை 03.12.09

Wednesday, December 02, 2009

ஆசிரியரின் பிறந்தநாள் அவரின் ஆசிரியருடன்.........


தமிழர் தலைவர் பிறந்த இதே நாளில் பிறந்தவர் அவரின் குருநாதரான ஆ. திராவிடமணி (1914).


சிறுவன் சாரங்கபாணி, வீரமணியானதற்கும், தலை-சிறந்த சொற்பொழிவாளராக உருப்பெற்றதற்கும் தந்தை பெரியார் அவர்களின் கரங்-களைப் பற்றியதற்கும், திரா-விடர் கழகப் பொதுச்செய-லாளராக, தலைவராக, தமிழர் தலைவராக பரிணாமம் பெற்றதற்கும் அடித்தளமிட்ட அவரின் ஆசிரியர் ஆ. திரா-விடமணி அவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் வணக்-கங்-களையும், நன்றியினை-யும் பெருமிதத்தோடு தெரி-வித்துக் கொள்வோம் இந்நாளில்.

அவரின் சொந்த ஊர் பொன்னேரியை அடுத்த ஆசான் புதூராகும். அந்தக் காலத்திலேயே பி.ஏ. பட்ட-தாரி என்பது சாதாரண-மானதல்ல. தொடக்கத்தில் கடலூரில் இஸ்லாமியர்களால் நடத்தப்-பட்ட இடைநிலைப் பள்ளியில் தலைமை ஆசி-ரியராகப் பணி-யாற்றி, அதன்பின் மணிலா மார்க்-கெட்டிங் சொசைட்டியில் அலுவலைத் தொடர்ந்தார். அப்போது அவரின் சக எழுத்தர்தான் பிற்காலத்தில் தமிழக அமைச்சராக வந்த திரு. ஏ. கோவிந்தசாமி ஆவார்கள்.

ஆசிரியர் திராவிடமணி தங்கியிருந்த இடம் இராம-லிங்க பக்த ஜனசபையாகும். மாலை நேரத்தில் மாணவர்-களுக்குத் தனியே பாடம் (டியூசன்) சொல்லிக் கொடுப்-பார். பள்ளிப் பாடங்களோடு, தந்தை பெரியார் அவர்-களின் பகுத்தறிவுக் கருத்து-களையும் குழைத்துக் கொடுப்பார். குடிஅரசு, திராவிட நாடு இதழ்களை-யும் கொடுத்துப் படிக்கச் செய்வார். அந்தப் பட்டறை-யில் தயாரிக்கப்பட்ட போர்-வாள்தான் நமது ஆசிரியர் கி. வீரமணி. அவ-ரின் இயற்பெயர் சுப்பிரமணி-யம் _ தன்னிடத்தில் பாடம் பயின்ற மாணவர்களின் பெயர்களையெல்லாம் நல்ல தமிழில் மாற்றம் செய்தார்.

ஆசிரியர் திராவிட-மணி என்னை ஒரு வளர்ப்புப் பிள்-ளைபோல கருதி பகுத்-தறிவையும், பாட அறிவையும், கல்வியையும் அளித்து வருகிறார் என்ப-தால், என் தந்தையார் அவ-ரிடமே, என்னை முழுமை-யாக ஒப்-படைத்ததுபோல் ஆக்கிவிட்-டார் என்று கூறு-கிறார் நமது ஆசிரியர் வீர-மணி அவர்கள். (ஆதாரம்: அய்யாவின் அடிச்சுவட்-டில் பக்கம் 29).

ஆசிரியர் திராவிட மணி-யைச் சுற்றி 20, 30 மாணவ சீடர்கள் எப்பொழு-தும் சூழ்ந்து கொண்டே இருப்பார்-கள். வாங்கும் சம்பளத்தில் பெரும்பகுதி கட்சிப் பணிக்கே!

குடும்பம் ஒரு பக்கம், இவர் இன்னொரு பக்கம்!

வெளியூர்ப் பேச்சாளர்-களை வரவழைப்பது, வழிச் செலவுக்குப் பணம் கொடுப்-பது, தங்க வைப்பது, உண-வளிப்பது எல்லாமே அவர் செலவுதானாம்!

அவர் எழுதிக் கொடுத்-ததை மனப்பாடம் செய்து மேசைமீது ஏற்றப்பட்டு பேச ஆரம்பித்தவர்தான் _ இன்-றைய நாடறிந்த தலைசிறந்த சொற்பொழிவாளரான நம் தலைவர் வீரமணி. அப்படி சிறுவன் வீரமணி பேசிய பேச்-சைக் கேட்டுத்தான் திராவிடர் கழகத்தின் திரு-ஞான சம்பந்தர் என்று அறி-ஞர் அண்ணா (29.7.1944, திருப்பாதிரிப்புலியூர்) பாராட்டினார். ஆ. திராவிட-மணி அவர்கள் திராவிடர் கழகத்தின் கூட்டுப் பொதுச்-செயலாளராகவும் பிற்-காலத்தில் இருந்திருக்கிறார் என்பது முக்கியமான வரலாற்றுக் குறிப்பாகும்.

ஆசான் திராவிடமணி-யை-யும், அவர்தம் சீடர் மான-மிகு வீரமணியையும் ஒரே பிறந்த தேதியில் சந்திப்பதும், சிந்திப்பதும் எவ்வளவுப் பொருத்தமானது, விசித்திர-மானது!

வாழ்க திராவிடமணி!

- மயிலாடன் விடுதலை (2.12.2009)

அய்யப்பனும் - அயோக்கியத்தனமும்!

அய்யப்பனுக்கு அபார சக்தியிருக்கிறது என்றும், அய்யப்பனுக்காக விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை சென்று வந்தால் தீராத நோய்-கள் எல்லாம் தீருமென்றும், தீவினைகள் எல்-லாம் அகலும் என்றும், சதா பிரச்சாரம் செய்தும் குறுந்தகடுகளை வெளியிட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.


ஆனால், நடப்பது என்ன? அய்யப்பப் பக்தர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி மரணம் என்கிற பரிதாப செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மாரடைப்பு ஏற்பட்டு பக்தர்கள் சபரிமலையிலேயே மரணம் என்றும் ஏடுகள் செய்திகளைப் போடுகின்றன. போதும் போதாதற்கு அய்யப்பன் கோயிலில், பிரத்தி-யேகமாக உள்ள மருத்துவர்கள் இப்பொழுது அறிக்கையினைக் கொடுத்துள்ளனர்.

இதய நோயாளிகள், ரத்த அழுத்தம், கொழுப்பு (கொலஸ்ட்ரால்) பாரம்பரிய இதய-நோய் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், 55 வயதுக்குமேல் ஆனவர்கள், சபரிமலை ஏறும்-போது தேவையான முன்னெச்சரிக்கை நட-வடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

பயணத்திற்குமுன் மருத்துவரிடம் பரி-சோத-னை-கள் மேற்கொள்ளவேண்டும். இத-யத்--தின் செயல்பாட்டைத் தெரிந்து-கொண்ட பின்னரே பயணம்பற்றி முடிவெடுக்கவேண்டும்.

அவ்வாறு வரும்போது, வியாதிபற்றிய குறிப்பு--களும், சாப்பிடும் மருந்துபற்றிய குறிப்பு-களும் டைரியில் எழுதிக்கொண்டு வர-வேண்டும்.

மலை ஏறுவதற்கு முன்னர் பம்பையில் அதிக உணவு சாப்பிடக் கூடாது. லேசாக சாப்பிட்டு-விட்டு மலையேறவேண்டும். வயிறு நிறைய சாப்பிட்டால் இதயத்தின் வேலைப் பளு-வும் கூடும். மலை ஏறும்போது நெஞ்சு வலியோ, மூச்சுத் திணறலோ, அசாதாரண நிலையோ ஏற்பட்டால், உடனடியாக மலை ஏறு-வதை நிறுத்தி, மருத்துவர்களின் ஆலோ-சனைகளைப் பெற-வேண்டும். ஏறும்போது நாடித் துடிப்பு நிமிடத்துக்கு 140_க்குமேல் இருக்கக்கூடாது.

மலையேறும்போது அய்கோர்டின் மாத்தி-ரையை அதிகமாக நாக்குக்கு அடியில் வைப்ப--தால் ரத்த அழுத்தம் குறைந்து தலை சுற்றல் போன்றவை ஏற்படும்.

மேலும் வழக்கமாக மருந்து சாப்பிடுபவர்-கள் மலையேறும்போது ரத்தத்தில் சர்க்கரை குறைந்து உடல் தளர்ச்சி ஏற்படலாம். இதற்-காக அவர்கள் கையில் குளுகோஸ் வைத்துக் கொள்ள-வேண்டும்!

இவ்வாறு அய்யப்பன் கோயில் சன்னிதான மருத்துவர் ஹரீந்திரபாபு கூறியுள்ளதாக தினமலரே (1.12.2009) கூறியுள்ளது.

இது முழுக்க முழுக்க அய்யப்பன் சக்தியைக் கேலி செய்வதாக இல்லையா? தன்னை நாடிவரும் பக்தர்களின் உயிரைக் கூடக் காப்பாற்ற முடியாத கடவுள் அய்யப்பன், சக்தி வாய்ந்தவன் என்றும், பக்தர்களின் குறைகளை, கஷ்டங்களை, நோய் நொடிகளை, பாவங்களைப் போக்குபவன் என்றும் சொல்லுவதெல்லாம் பச்சையான பித்தலாட்டம் அல்லவா?

வில்லாளி வீரனே
வீரமணி கண்டனே,
தாங்கி விடப்பா
ஏந்தி விடப்பா
தூக்கி விடப்பா
ஏற்றி விடப்பா

என்று அய்யப்ப சரணம் பாடிச் செல்லும் பக்தர்-களைக் காப்பாற்றும் சக்தி அய்யப்பனுக்கு இல்லை என்பதைத்தானே சன்னிதான மருத்து-வரின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

எந்தப் பக்தராவது _ இது கடவுளை அவ-மதிக்கும் செயல் என்று சொல்லவில்லையே, ஏன்?

இவற்றையெல்லாம்விட மிகக் கேவலமானது _ அய்யப்பன் பெயரால் நடத்தும் மகரஜோதி பித்தலாட்டம்!

கேரள மின் வாரியத்தைச் சேர்ந்த ஊழியர்கள் செயற்கையாக சூடத்தைக் கொளுத்திக் காட்டு-கின்றனர் என்பதை கேரள மாநில முதலமைச்சர், இந்து அறநிலையத் துறை அமைச்சர், அறக்-கட்ட-ளைத் தலைவர், கோயில் தலைமை அர்ச்-சகர் வரை ஒப்புக்கொண்ட பிறகும் மகர-ஜோதியை அனுமதிப்பது எந்த வகையில் சரி?

பக்தியின் பெயரால் எந்தப் பித்தலாட்டத்தை-யும் அரசு அங்கீகாரத்தோடு அரங்கேற்றலாம் என்-றால், பக்தியின் யோக்கிய-தையையும், அரசின் தன்மையையும் தெரிந்துகொள்ளவேண்-டாமா?

கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் என்று தந்தை பெரியார் ஏன் சொன்னார் என்பது இப்பொழுது விளங்குகிறதா?

விடுதலை தலையங்கம் 02.12.2009

Tuesday, December 01, 2009

கார்த்திகைத் தீபம்..சிந்தித்துப்பாருங்கள்!


கார்த்திகைத் தீபப்பண்டிகை ஒரு தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கார்த்திகை நட்சத்திரத் தினத்தை "சுப்பிரமணியன்" என்னும் சாமிக்கு உகந்த நாளாகக் கருதி, பக்தர்கள் என்பவர்கள் பூசைகளும், விரதங்களும் மேற்கொள்கின்றார்கள். இதில் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப் படுகின்றது. இந்தச் சமயத்தில் சுப்பிரமணியனின் 6 வகையான ஊர்கள் என்று புராணம் கூறும் ஊர்களுக்கு மக்கள் பிரயாணம் செய்து, ரொக்கப்பணத்தைச் செலவு செய்வதோடு, காடு, மேடு, குப்பை கூளங் களில் எண்ணற்ற விளக்குகளை வைப்பதன் மூலம் ஆகும் எண்ணெய், நெய் செலவு, சொக்கப்பானை கட்டி நெருப்பு வைப்பதற்கு ஆகும் செலவு போன்றவற்றுடன், இதனால் மக்களுக்கு உண்டாகும் மூடநம்பிக்கையும், அதனால் உண்டாகும் மூடப் பழக்கவழக்கங்களும் பற்றி கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்!


இந்த மூடப்பண்டிகைக்கு 2 கதைகள் உள்ளன. முதலாவது, ஒரு சமயம் அக்னிதேவன் என்னும் கடவுள் சப்த ரிஷிகளின் மனைவி மார்களைப் பார்த்து மோகங்கொண்டானாம். அதனை அறிந்து அவனது மனைவி சுவாகாதேவி என்பவள், அவர்களுடன் தன் கணவன் மோகங் கொண்டதால், சப்த ரிஷிகள் சபித்துவிடுவார்கள் என்று எண்ணிப் பயந்து, அதனால் தானே வசிஷ்டரின் மனைவி அருந்ததியை விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவி மார்களைப் போல் உருவம் கொண்டு, தன் கணவன் ஆவலை நிறைவேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்று பெயராம். இவைகள் தாம் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படு பவையாம். இந்த நட்சத்திரப் பெண்கள் தான் சுப்பிரமணியன் என்ற கடவுள் குழந்தையாக இருந்த போது அதை எடுத்து வளர்த்தார்களாம்!

அடுத்து, இதன் மூலம் அறிவது, பிறர் மனைவிமேல் ஆசைப்படுவது, விபச்சாரம் செய்வது குற்றம் இல்லை. தன் கணவன் எந்தக் காரியத்தை விரும்பினாலும் அதைப் பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைகளாக மனைவி இருக்க வேண்டும் என்பது.

இவ்வாறு நம் மக்களுக்கு கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள் அடுத்த கதை.

ஒரு சமயம் பிரம்மா , விஷ்ணு ஆகிய இரண்டு கடவுள்கள் ஒவ்வொருவரும் முழுமுதற்கடவுள் தாம், தாமே என்று கூறிக் கொண்டதனால், இருவருக்கம் வாய்ச்சண்டை ஏற்பட்டு பிறகு அடி பிடிச்சண்டை ஆகிவிட்டதாம் . இதைக் கண்ட பரமசிவன் எனும் கடவுள், வானத்திற்கும் பூமிக்கும் ஆக ஒரு பெரிய ஜோதி உருவில் அவர்கள் இருவருக்கும் இடையில் நின்றானாம். சண்டை போட்டுக் கொண்டு இருந்த இருவரும் திகைத்து நிற்க உடனே பரமசிவன் தோன்றி பிஇந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வருகின்றார்களோ அவர் தான் பெரியவர்' என்றானாம்.

உடனே விஷ்ணு பன்றி உருவம் கொண்டு பூமிக்குள் துளைத்துக் கொண்டு வெகுதூரம் சென்று காணமுடியாமல் திரும்பிவிட்டானாம்.

பிரம்மன் அன்னப்பறவை வடிவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணாமல் மேலே பறந்து சென்று கொண்டு இருக்கையில், கீழ் நோக்கி ஒரு பிதாழம்பூ வந்துகொண்டு இருந்ததாம். அதைக் கண்டு பிரம்மன், பிதாழம்பூவே எங்கிருந்து எவ்வளவு காலமாய் வருகின்றாய்பி என்று கேட்கவும் பிநான் பரமசிவன் முடியில் இருந்து கோடிக்கணக்கான வருஷங்களாக வந்துகொண்டு இருக்கிறேன்பி என்றதாம். உடனே பிரம்மன். பிநான் சிவன் முடியைப் பார்த்து விட்டதாக சாட்சி கூறுகின்றாயா? என்று கெஞ்சினானாம் . அதற்குத் தாழம்பூ சம்மதித்ததாம். இதைக்கண்ட சிவன்கோபங்கொண்டு பிபொய்சொன்னதற்காக பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமல் போகக்கடவது' என்றும் சாபமிட்டாராம்.

உடனே பிரம்மாவும் விஷ்ணுவும் வருந்தி திருந்தி சிவன் தான் பெரியவன் என்பதை உணர்ந்து , மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தங்கள் வழக்கை தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக புஇம்மலையின் மேல் ஒரு ஜோதி உருவாகி இருக்க வேண்டும்பூ என்று கேட்க அதற்குச் சிவனும் சம்மதம் தெரிவித்து, மாதத்தில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை, கார்த்திகைப் பண்டிகையில் இந்த மலையில் ஜோதியாய்க் காணப்படுவேன் என்று சொன்னானாம் . இது தான் திருவண்ணாமலைப் புராணமாகிய அருணாசலப் புராணத்தில் கூறப்படும் கார்த்திகைத் தீபப்பண்டிகையாகும்.

இவ்வாறு முரண்பட்ட வேடிக்கையான இந்த இரண்டு கார்த்திகைப் பண்டிகைகளால் நமது மக்கள் மனத்தில் குருட்டுப் பக்தியும், மூடநம்பிக்கையும், முட்டாள்தனமும் அதிகப்படும் என்பதைத் தவிர, வேறு சந்தேகம் உண்டா? மேலும் நமது நாட்டில் பொருட்செலவும், வறுமையும், மூடநம்பிக்கையும், வீண்காலப் போக்கும் கொண்டவர்களுக்கு எடுத்துக்கூறத் தொடங்குபவர்களுக்கு உடனே பகுத்தறிவு அற்ற வைதீக மூடர்கள், தேசத்துரோகி , மதத் துரோகி வகுப்புவாதி, நாத்திகள் என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றார்கள் . சிறிதாவது பொறுமைகொண்டு , நாம் சொல்லும் பகுத்தறிவால் ஆராய்ந்து பார்ப்பவர்கள் இல்லை.


- கார்த்திகை தீபம் பற்றி தந்தை பெரியார் அவர்கள் கட்டுரை

Tamil 10 top sites [www.tamil10 .com ]