வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, December 13, 2010

நம்பித் தொலையுங்கள்..நரேந்திர மோடிக்கும் குஜராத் கலவரத்துக்கும் சம்பந்தா சம்பந்தமே இல்லை!

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் (27.2.2002) தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினரான முசுலிம் மக்கள்மீது நடத்தப்பட்ட படுகொலைகளை இன்று நினைத்தாலும் குலையே நடுநடுங்குகிறது.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்-டோர் படுகொலை செய்யப்பட்டனர். ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீடுகள் தரை-மட்டமாக்கப்பட்டன. 230 தர்க்காக்கள் இருந்த இடம் தெரியவில்லை. சிறுபான்மை மக்களின் 4000 கார்கள், 20 ஆயிரம் இரு சக்கர வண்டிகள் சாம்பலாக்கப்பட்டன. ஆயிரம் உணவு விடுதிகளைக் காணோம். 3800 கோடி ரூபாய் நட்டம் சிறுபான்மையினருக்கு என்று தகவல்கள் வெளிவந்தன.

இந்தச் சிறுபான்மையினரை இல்-லாமல் செய்வதற்காகக் களத்தில் இறக்கப்பட்டவர்கள் 12 லட்சம் பேர்-களாம். நடோரா _பாட்டியா என்னும் இடத்தில் மட்டும் கொல்லப்பட்ட சிறுபான்மையினர் 58 முஸ்லிம்கள், பெண்கள், பச்சிளம் குழந்தைகள் உட்பட!

பெயரளவிற்கு இந்தக் கொலை-யாளிகள்மீது பதியப்பட்ட குற்றப் பத்திரிகை என்ன சொல்லுகிறது? கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்கிற வன்முறைக்குப் பதில் தரும் வகையில் இந்த வன்முறை நடந்திருக்-கிறது என்று காவல் நிலையமே குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டது மூலம் _ அந்தக் காகிதத்திலேயே தீர்ப்பையும் வழங்கி விட்டது என்று தானே பொருள்?

குஜராத்தில் வதேரா என்னும் நகரம். முசுலிம் ஒருவருக்குச் சொந்தமான பெஸ்ட் பேக்கரி. அங்குப் பணிபுரிந்த 14 பேர் கொல்லப்பட்டனர் எப்படி தெரி-யுமா? மனிதர்களை விறகுக் கட்டைகளாக்கி _ பேக்கரி அடுப்பில் வேகவைத்து _ வேடிக்கை காட்டினர்.

இந்தப் பிரச்சினை மாநிலத்தையும் தாண்டி மக்கள் மத்தியில் கோபாவேசத்-தைத் தூண்டியது என்றவுடன், உலகத்தார் கண்களில் மண்ணைத் தூவ வழக்கு ஒன்றைப் பதிவு செய்தனர். 21 பேர்மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தீர்ப்பில் 21 பேர்களும் விடுதலை செய்யப்பட்டனர் என்றால், அந்தக் குற்றப் பத்திரிகை என்பது காகிதத்தில் எழுதப்பட்ட சுரைக்காய், அவ்வளவுதான் கறிக்கு உதவவில்லை.

21 பேர்களையும் விடுதலை செய்த நீதிபதி எச்.யூ. மகிதாவுக்கு வெகுமதி என்ன தெரியுமா? குஜராத் மாநில மின்வாரியத்தின் ஆலோசகர்; மாத சம்பளம் ரூபாய் 30 ஆயிரம், பங்களா, கார், தொலைபேசி, உதவியாளர் இத்தியாதி இத்தியாதி வசதிகள். குஜராத் கலவரத்தின் போது 4252 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன; இறுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்-பட்ட வழக்குகள் விலக்கிக் கொள்ளப்-பட்டன.

உச்சநீதிமன்றமோ, விலக்கிக் கொள்-ளப்பட்ட வழக்குகளையும் சேர்த்து அனைத்தையும் புதிதாக விசாரிக்க வேண்டும் என்று ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. (17.8.2004)

மோடி அமைச்சரவையில் உயர்கல்வி அமைச்சராக இருந்தவர் மாயாபென்-கோட் நானி என்னும் பெண் அமைச்-சர்; பாட்டியா மாவட்டம் நரோடா என்னும் கிராமத்தில் 108 முசுலிம்கள் கொல்லப்பட்டதில் இந்தப் பெண் அமைச்சருக்கு முக்கிய பங்கு உண்டு. கொஞ்ச காலம் தலைமறைவானார்.

முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குஜராத் கலவரம் உலகம் முழுவதும் இந்தியாவை மீண்டும் ஒரு முறை தலைகுனிய வைத்தது.

பிரதமர் வாஜ்பேயி இதனை மனதிற் கொண்டு எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாடு செல்லுவேன் என்று புலம்பியதுண்டு.

குஜராத் மாநில காங்கிரசின் முன்னணித் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான இஹ்சான் ஜாப்ரி இந்து மதவெறியர்களால் குரூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். டயரைக் கொளுத்தி ஜாப்ரியின் கழுத்தில் மாட்டினார்கள்; கொடு-வாளால் நெஞ்சைப் பிளந்தார்கள்; பின்னர் பெட்ரோலை ஊற்றிக் கொளுத்தினார்கள்.

இஹ்சான் ஜாப்ரியின் மனைவியான ஜாக்சியா காவல்துறையிடம் புகார் கொடுத்தார். மோடி ஆட்சியில் காவல்-துறை தன்னிச்சையாகச் செயல்பட முடியுமா? அடுத்த கட்டமாக உச்சநீதி-மன்றத்திற்குச் சென்றார் அந்தப் பெண்மணி. உச்சநீதிமன்றம் வழக்கை ஏற்றுக் கொண்டு முன்னாள் சி.பி.அய். இயக்குநர் ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்ய ஆணை பிறப்பித்தது.

11 மணி நேரம் மோடியை விசாரித்-தது. இந்த விசாரணைக் குழுவின் அறிக்கை உச்சநீதிமன்றத்திலும் அளிக்-கப்-பட்ட நிலையில் பல தகவல்கள் வெளியில் கசிந்துள்ளன.

குடியரசுத் தலைவரிடம் அளிக்கும் தணிக்கையாளர் அறிக்கையாக, இருந்-தாலும் சரி, உச்சநீதிமன்றத்தில் சீல் வைத்து அளிக்கப்பட்ட ராகவன் அறிக்-கையாக இருந்தாலும் சரி, அவை எப்படி கசிகின்றன? இதற்கே ஒரு விசாரணை ஆணையம் வைக்கப்பட வேண்டும் என்பதுபோல் தோன்றுகிறது.

மோடிக்கும் குஜராத் கலவரத்துக்கும் சம்பந்தா சம்பந்தமே இல்லையாம். அவர் கலவரத்தைத் தூண்டவே இல்லையாம். ஜாதி பேதமின்றி அனைத்து மக்களின் உயிருக்கும் அசல் பாதுகாவலராக அவர் நடந்து கொண்டாராம். சரி, அவர் உத்தமப் புத்திரராகவே இருக்கட்டும்; 2000-க்கு மேல் படுகொலை நடந்திருக்கிறதே குஜராத் மாநிலத்தில் அதற்கு யார்தான் பொறுப்பு?

நரேந்திர மோடியே உத்தமப்-புத்திரன் குற்றவாளி அல்ல என்றால், இந்த நாட்டில் யார் நல்ல மனிதர்? யார் குற்றவாளி என்று நினைப்பதற்கே தலையைச் சுற்றுகிறது. இந்த விசாரணை எந்தத் தரத்தில் நடந்திருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு போதுமானது.

குஜராத்தில் சிறுபான்மை மக்கள் வேட்டையாடப்பட்ட நேரத்தில் காவல்துறைத் தலைவராக இருந்தவர் ஸ்ரீகுமார், இராகவன் தலைமையிலான விசாரணைக் குழுவுக்கு 35 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றினைத் தந்துள்ளார். 2002இல் குஜராத்தில் நடந்த கலவரம் குறித்து விரிவாக அதில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை கொடுத்தவர் சாதாரணமானவர் அல்லர். குஜராத் மாநிலத்தின் காவல்துறை முன்னாள் தலைவர்.

அந்த அறிக்கைக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா? அதனைக் கண்டு கொள்ளவே-யில்லை _ புலனாய்வு செய்தவர்கள் என்றால், இந்தக் குழுவினர் அறிக்கை எந்தத் தரத்தைச் சேர்ந்தது என்பது சொல்லாமலேயே விளங்கும்.

சிறப்புப் புலனாய்வுக் குழு குஜராத் மாநிலக் காவல்துறையின் இரண்டா-வது அணியாகச் செயல்பட்டது என்று ஸ்ரீகுமார் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மோடியின் ஏவலுக்குக் கட்டுப்பட்ட நிலையிலேயே விசாரணை நடந்திருப்-பதாக ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.

இனிமேல் என்ன? ஒரு நாகரிகமான நாட்டில் தான் நாம் இருக்கிறோமா? நிருவாகமும், சட்டமும், நீதியும் உயிர் வாழும் நாட்டில்தான் நாம் குடிமகனாக இருக்கிறோமா என்று நமது உடம்பை நாமே கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆமாம், நம்புங்கள் _ நம்பித் தொலையுங்கள் _ நரேந்திரமோடிக்கும் குஜராத் கலவரத்துக்கும் சம்பந்தா சம்பந்தமேயில்லை என்று நம்பித் தொலையுங்கள். பாம்பு தின்னும் ஊருக்குச் சென்-றால், நடுக் கண்டம் எனக்கு என்று-தான் தின்று உயிர் வாழ வேண்டும் _- அப்படித்தானே!

 ---- நன்றி விடுதலை மலர் (11-12-2010)No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]