வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, December 13, 2010

கண்ணதாசனுக்கு கண்ணதாசன் பதில்!

மதம் மக்களுக்கு போதைதரும் அபினைப் போன்றது என்றான் மார்க்ஸ்.

மனிதனுக்கு அந்தப் போதை வந்தபோது புத்தி யில்லையே என்பதை நினைக்கும்போது நமக்கு வேடிக்கை-யாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

மதம் பிடித்த கண்ணதாசனுக்கு மதம் பிடிக்காத கண்ணதாசனின் பதில்களைக் கீழே தருகிறோம். படித்து ரசியுங்கள்.

1. பற்றற்றான் பற்றினையே பற்றிய அந்தத் துறவிகளின் எண்ணிக்கை விரல்-விட்டு எண்ணக்கூடியதே அத்தகைய துறவிகளைப் பரதகண்டம் முழுவதுமே அடையாளம் கண்டுகொண்டிருக்கிறது.

அத்தகைய துறவிகள் இருவரைப் பெற்றிருப்பதற்காகத் தமிழ்நாடு பெருமை கொள்ளலாம்.

ஒருவர் காஞ்சிப் பெரியவர்கள்: இன்-னொருவர் புதுப் பெரியவர்கள். இவர்-கள் இருவரும் சமநிலையடைந்த ஞானத்-துறவிகள்.

அவர் (புதுப் பெரியவர்) இந்து தர்மத்தின் ஜீவசக்தி நடமாடும் தெய்வம், வேத ஆகமங்களின் பிரதிபலிப்பு, காஞ்சி காமாட்சியின் இன்றையத் தலைமகன். இந்தத் தர்ம பூமி மேலும் தழைத்-தோங்க இந்த ஞான குருவே வழிகாட்டி.

_ சுகமான சிந்தனைகள் பக்கம் 86 _ 88

இன்றைய தினம் சங்கராச்சாரியாரின் காலில் விழும் கண்ணதாசனுக்கு, பழைய கண்ணதாசன் பதில் கூறுகிறார்; கேளுங்கள்.

அறிவியல் வளர்ந்த பின்பும்

அணுவையும் துளைத்து மேவும்

பொறியியல் மிகுந்த பின்பும்

புதுமைகள் நிறைந்த வீர

நெறிபல கண்ட பின்பும்

நிகரிலாத் தலைவ னென்றே

துறவியைக் காட்டும் வீணர்

தொலைந்தன ரிலையே தோழா!

சங்கராச்சாரியார்தான்

தலைவராம் உலக மாந்தர்

பொங்கியாச் சாரி காலில்

போய் விழல் தரும வாழ்வாம்!

இங்குளர் இளித்த வாயர்

என்பதால் துறவி யான

சங்கராச் சாரி யாரை (த்)

தாங்குவோர் உளரே இன்னும்!

வகுத்ததோர் உலகின் வாழ்க்கை

வழியறி யாத மாந்தர்

பகுத்தறி விழந்து போனார்!

பண்பினை மறக்கலானார்!

தொகுத் தறியாத தாலே

துறவிகளானோர் பாதம்

வழித் தெறிகின்றார்! அந்தோ வாழுமோ தமிழர் பூமி!

(கண்ணதாசன் கவிதைகள் -_ முதல் இரண்டு தொகுதிகள்) பக்கம், 247 _ 248)

2. சமூக நீதிகளுக்காக பழைய சாதி முறை தேவைப்படுகின்றது என்று நான் கருதுகிறேன்.

கண்ணதாசன் மாத இதழ் டிசம்பர் 1977

இதற்கும் இதோ பதில்:

சாதியெனும் பகை உணர்ச்சி வாழு-மட்டும் தமிழ் நாட்டின் முன்னேற்றம் கானல் நீரே! நீதிமுதல் நெறிமுறைகள் பிறர்க்கும் தந்து நிலைத்திருந்த பெருமை எல்லாம் மண்ணிற் சாயும் சாதியினால் நிம்மதியும் அழிந்தே போகும். தலை-முறைகள் பலங்குன்றிச் சாயும்! அந்தச் சாதியினைத் தவிர்த்தொன்றும் வாழ்வ-தில்லை தமிழகமே! இனி உனக்கு மீட்சி இல்லை -_ கண்ணதாசன் கவிதைகள் -_ பக்கம் 259

தற்போது மொழி பற்றியும் பல அற்புத-மான கருத்துகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார். அந்தக் கருத்துகளும் அதற்கு அவருடைய பதில்களும் தந்திருக்கிறோம். படியுங்கள். வடமொழி, ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த ஒரு பொக்கிஷம். தமிழைப்-போலவே தோன்றிய காலம் தெரியாத அந்த மொழியில் எவ்வளவு அற்புதங்கள் நிறைந்திருக்கின்றன _ கல்கி 5.6.77 இதழில் கண்ணதாசன் பதில்:

தமிழனுக்குச் சூடில்லை/சொரணை-யில்லை/ தன்முன்னோர் வகுத்த வழி நினைவு மில்லை/ அமிழ்தென்பான் தன்மொழியை! அடுத்த நேரம் அழகுமொழி சமஸ்கிருதம் அதையும் கற்றால் கமிழ்ந்திடுமே தமிழ் என்பான்! இந்தி வந்தால் தனித்தமிழே வாழ்வு பெறும் என்பான்! தானும் தமிழனுக்கே பிறந்தவ னென் றுரைப்பான்! சுற்றம்

தலைகுனிய வேறென்ன வார்த்தை வேண்டும்!!

_கண்ணதாசன் கவிதைகள் -_ பக்கம் 119

தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி இருக்கிறது. அவர்களுக்கு வட மொழிப் பயிற்சியும் இருக்குமானால் மற்றவர்-களைத் திகைக்க வைக்கலாம். சபையில் நிமிர்ந்து நிற்கலாம்.

_ கல்கி 5.6.77 இதழில் கண்ணதாசன் பதில்:

தென்னவர் இந்தி கற்கச்

செப்புவோன் தமிழ னல்லன்

அன்னையை வடவர்கூடி

ஆக்கிய கருவே அன்னான்

கண்ணதாசன் கவிதைகள் பக்கம் 237.

இன்றைய இளைஞன் உடனடியாக வடமொழி கற்கவேண்டும். ஆங்கிலம் காப்பாற்றாத அளவுக்கு வடமொழி காப்பாற்றும்.

கல்கி 5.6.77 இதழில் கண்ணதாசன் பதில்:

தமிழகத்து மக்களுக்குத்

தலை யெலும்பைத் தவிர்த்தவர்கள்

உடலிலே ஓர் எலும்பும்

உறுதியாய் இல்லை! பலர்

காட்டிக் கொடுக்கின்றார்!

காசுக்குச் செந்தமிழைக் கூட்டிக் கொடுக்கின்றார்

.................................

சாப்பாடு போட்டால்

தமிழ னெல்லாம் இப்பொழுது

என்ன செயச் சொன்னாலும்

செயகின்றான்!! எழில் நாட்டைத்

திரு வோடாய் மாற்றித் தெரு வெல்லாம் கையேந்தி

வாழ்கின்றான்.

_ கண்ணதாசன் கவிதைகள் பக்கம் 104

அர்த்தமுள்ள இந்து மதம் பற்றி இன்று வால்யூம், வால்யூம்களாக வரைந்து தள்ளுகின்ற கண்ணதாசன் அந்த மதம் புகுந்த வரலாறு கூறுகிறார் கேளுங்கள்:

ஆடுமாடுகள் முன் நடந்திட ஆரணங்குகள் பின் தொடர்ந்திட

காடு யாவையும் கடந்து சிற்சிலர்

கன்னித் தாயாக எல்லை தொட்டனர்:

மஞ்சள் மேனியும் வஞ்ச நெஞ்சமும்

மான மென்னும் ஓர் எண்ணம் இன்மையும்

கொஞ்சும் வார்த்தையும் கொண்டவர் தமிழ்க்

கோட்டை வாசற் படியை மிதித்தனர்:

சொந்தமாக ஒரு நாடி லாதவர்

தொட்ட பூமியில் சூழ்ந்து வாழ்பவர்

எந்த நாடுமதம் சொந்த நாடென ஏற்று மாந்தரை மாற்றி ஆள்பவர்

சொத்து என்பதோ தர்ப்பை ஒன்றுதான்

தூய்மை என்பதோ துணியும் இன்மையாம்

வித்தை யாவையும் சூழ்ச்சிப் பள்ளியில்

விரும்பிக் கற்றதாம்; வேறு என் சொல!

நச்சரவுகள் மனித மேனியில்

நடமிடும் கதை இவர்கள் கதையாம்

அச்சம் மிக்கவர் கோழையர்; ஆயினும்

அடுத்து வீழ்த்திடும் திறமை மிக்கவர்!

அடியெடுத்து வைத்ததும், கண்ணெதிர் அங்கு நின்றவோர் தமிழனைப்பார்த்து,

இப்படி அமர்ந்திடும் பண்புடை தென்னவ!

பாரில் உம்புகழ் பரவக் காண்கிறோம்!

மிடிமை இல்லதாம் உங்கள் தாயகம்!

வீரர் தேயமாம்! கேள்வி யுற்றனம்!

எனில் உமக்கொரு தெய்வம் இல்லை-யாம் என்ன மோசம், இஃதாண்டவன் ஏற்பரோ!

என்றதும் தமிழ் ஏறுகூறுவன்; ஏன் இலை! கதிரோன் ஒரு தெய்வமாம்!

எழில் நிலாவும் யாம் போற்றிடு தெய்வமாம்

என்று கூற அவ்வீணர்கள் யாவரும் எழுபதாயிரம் கடவுள்கள் கூறி, அக் கடவுள் யாவரும் வானில் உண்டெனக் கதைய ளந்தனர் கற்பனை பொங்கிட! பொய்ய லால்சிறு மெய்யுமி லாமலே

புவியில் வாழும் திறம்மிகு ஆரியர்

சொன்ன யாவையும் தமிழன் ஏற்றனன்!

சூழ்ச்சி வென்றது! நாடு சாய்ந்ததே!

கடவுள் வாசலை காத்தனர் ஆரியர்!

கன்னியர் விழிக் கடலைக் காட்டினர்!

வீரம் முற்றும் ஒழிந்தது ஏட்டிலே!

தீரம் மாண்டு ஆரியர் சாத்திரத்

தீக்குழி யிடைச் சாய்ந்தனர் தென்னவர்!

_ கண்ணதாசன் கவிதைகள்- _பக்கம் 162,163

---- நன்றி விடுதலை மலர் (11-12-2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]