வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, December 04, 2010

பா.ஜ.க.வின்மீது சோவுக்கு இருக்கும் பாசம்..

                                   பிகாரும் - பார்ப்பனர்களும்!

இன்றைக்கு அனேமாக பார்ப்பனர்களுக்கு அதிகாரப் பூர்வமற்ற தலைவர் திருவாளர் சோ ராமசாமிதான். அந்த அளவுக்குப் பார்ப்பனர்களின் தகுதி கீழிறக்கத்திற்கு ஆளாகிவிட்டது.

சு.சாமி போலவே அரசியல் தரகராகச் செயல்படக் கூடியவர்தான் இவர் என்பது எல்லோருக்கும் தெரியும். வேறு எந்தத் தனிப்பட்டவர் வீட்டுக்கும் செல்லாத ஜெய லலிதா சோ வீட்டுக்கு மட்டும் போவார்; விருந்துண்பார்; கலகலப்பாக சோ குடும்பத்தாருடன் கலந்து உறவாடுவார்.

இதற்கு என்ன காரணம்? அரசியலா? கொள்கைக் கோட்பாடுகளா? இனப் பாசத்தைத் தவிர இதில் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.

அ.தி.மு.க. மீது அதிருப்தி தரும் பிரச்சினைகள் வரும்போதுகூட செல்லமாக சுட்டிக்காட்டி இப்படி நடந்து கொள்ளவேண்டும் என்னும் அறிவுரைதான்; மக்களவைத் தேர்தலின்போது திடீரென்று ஈழத் தமிழர்கள் மீது பாசம் கொட்டி கருத்து மழையை ஜெயலலிதா பெய்தபோது அப்படித்தான் நடந்துகொண்டார் சோ.

பா.ஜ.க.வின்மீது சோவுக்கு இருக்கும் பாசம்கூட பார்ப்பன ஜனதா என்ற பாசவெள்ளம்தான்.

கருநாடக மாநிலத்தில் எடியூரப்பா விசயத்தில் பா.ஜ.க. நடந்துகொள்வது பெருமைக்குரியதல்ல - அவ்வளவுதான் பா.ஜ.க.பற்றி சோவின் விமர்சனம் (துக்ளக், 8.12.2010).

ஊழலுக்குத் துணை போகும் இந்த பா.ஜ.க. பிகாரில் பா.ஜ.க.வுக்கு 91 இடங்கள் கிடைத்துவிட்டன என்றதும் தலைகால் புரியவில்லை.

அய்க்கிய ஜனதா தளத்துடன் கூட்டு சேர்ந்து பா.ஜ.க. வெற்றி பெற்ற நிலையில், பார்ப்பனர்களுக்கே உரித்தான விஷமத்தனத்துடன், அய்க்கிய ஜனதா தளத்துக்குக் கிடைத்த வாக்குகளின் சதவிகிதம் 81 தான்; அதேநேரத்தில் பா.ஜ.க.வுக்குக் கிடைத்த சதவிகித வாக்குகள் 90 என்று எழுதுகிறார். நிதிஷ்குமார் போன்றவர்கள் இந்த இடத்தைக் கவனமாகக் கருத்தில் கொள்வது நல்லது.

இந்த வார துக்ளக் தலையங்கத்தில் (8.12.2010) அவர் என்ன சொல்கிறார் - முசுலிம்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித் துள்ளனர் என்கிறார். நரேந்திர மோடியை நிதிஷ்குமார் தேர்தல் கூட்டங்களுக்கு அழைக்காததால்தான் முசுலிம்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தார்கள் என்பது தவறு; அத்வானி குஜராத் தேர்தலில் நரேந்திர மோடியைப்பற்றிப் புகழ்ந்து பேசியிருக்கிறார். அப்படியிருக்கும்பொழுது நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு வராததால்தான் முசுலிம்கள் அய்க்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணிக்கு வாக் களித்தனர் என்று எப்படிக் கூற முடியும் என்று வாதாட முயற்சி செய்கிறார்.

சென்னையிலிருந்து பிகார் தேர்தல் பிரச்சினையை அலசுபவரைவிட, நேரிடையாக களத்தில் உள்ளவர் - ஆட்சியில் இருப்பவர் நிதிஷ்குமார். நரேந்திர மோடியை ஏன் அழைக்கக் கூடாது என்பதற்கு, அவருக்கு நேரிடையாகத் தெரிந்ததைவிட இந்த சோக்குத் தெரியும் என்று எதிர் பார்ப்பது அசல் சிறுபிள்ளைத்தனம்.

நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமர் என்று ஆசைப்படும் சோ வேறு விதமாக எழுதுவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இந்தியாவுக்குப் பிரதமராக வரவேண்டும் என்றால், ஆயிரக்கணக்கான முசுலிம்களை தனது காவல்துறையைத் துணைக்கு அனுப்பி, சங் பரிவார்கள் மற்றும் கூலிகளின் கைகளில் கொலைகார ஆயுதங்களைக் கொடுத்துக் கொன்று முடிக்கவேண்டும்; அவர்களின் வீடுகளையும் வியாபார நிறுவனங்களையும் தீயிட்டுக் கொளுத்தி முடிக்கவேண்டும்.

கருவுற்ற பெண்ணின் வயிற்றைக் கிழித்து அந்த சிசுவை எரியும் தீயில் தூக்கி எறிந்து குதியாட்டம் போடவேண்டும்.

இப்படிப்பட்டவர் பிரதமராக வந்தால்தான் குஜராத்தில் மட்டும் நடந்தது இந்தியா முழுமையும் நடக்கும்; அதன் மூலம்தான் சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்க முடியும்; இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக; பூணூல் ராஜ்ஜியமாக ஆக்க முடியும் - இதுதான் சோ பார்ப்பனரின் அந்தரங் கத்தில் துள்ளிக் குதிக்கும் ஆசை வெறி!

அது ஒருபுறம் இருக்கட்டும்; நரேந்திர மோடியின் செல்வாக்கு என்பது - குஜராத்துக்குள்தான் - வெளியில் செல்லுபடியாகாது என்று சொன்னவர் காங்கிரஸ் கட்சிக் காரர் அல்ல - பா.ஜ.க.வின் முன்னணித் தலைவர் - மக்க ளவையில் பா.ஜ.க.வின் தலைவர் - எதிர்க்கட்சித் தலைவர். இதற்கு என்ன பதில் இருக்கிறது இந்த சோ கூட்டத்திடம்?

சோ போன்றவர்கள் இப்படித் துள்ளிக் குதிப்பதற்கு காங்கிரஸ் செய்த தவறுதான் காரணம். பிகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், ராம்விலாஸ் பஸ் வானின் லோக் ஜனசக்தி இவற்றுடன் கூட்டணி வைத்தி ருந்தால் பா.ஜ.க. கூடாரம் காலியாகி இருக்கும். தேர்தல் முடிவுகளின் வாக்குகள் பற்றிக் கண்ணோட்டம் செலுத்தும் போது இந்த நிலை மிகவும் தெளிவாகவே தெரிகிறது.

உ.பி.யில் பாடம் படித்ததற்குப் பிறகாவது காங்கிரஸ் புத்தி கொள்முதல் பெற்றிருக்கவேண்டும்.

காங்கிரசின் அணுகுமுறை குறைபாட்டால் பிகாரில் தேர்தல் முடிவு இந்த நிலைக்கு ஆளானது என்பது சோவுக்கும் அவர் வகையறாக்களுக்கும் நன்கு தெரியும். என்றாலும், பா.ஜ.க.வுக்கு எப்படியும் முட்டுக்கொடுத்துத் தூக்கி நிறுத்தவேண்டுமே - அதற்காக இந்தச் சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.

பிகார் தோல்விக்குப் பிறகாவது காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி தலைவர்கள் தங்கள் அணுகுமுறையில் மாற்றம் காண்பார்களாக!

-------- நன்றி விடுதலை (04-11-2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]